Search This Blog

12.6.10

பக்தி வந்துவிட்டால் நாயின் மலம் கூட மணக்கிறதே!


புத்தி போகும்!

கடவுளுக்காகத் தொடுக்கப்பட்ட பூவை நுகர்ந்த ராணியின் கையை வெட்டிய சுழற்சிங்கர் பற்றி நேற்று பார்த்தோம்.

வரகுணபாண்டியன் என்ற ஒரு மன்னன் கி.பி. 792 முதல் 835 வரை பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்.

சிவபக்தி என்றால் அப்படி ஒரு பக்தி: இவனைப்பற்றி பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் குறிப்பிட்டுள்ளார். அதில் காணப்படும் தகவல்கள் இதோ!

கோவில் சாமியின் நகை முதலிய பொருள்களைக் களவாடிய அர்ச்சகன் ஒருவனைக் கையில் விலங்கிட்டு வரகுணபாண்டியனின் அரசவையில் கொண்டு வந்து நிறுத்தினர் காவலாளிகள்.

அந்தக் கள்வனின் உடலெல்லாம் பட்டைப் பட்டையாக திருநீறு கழுத்திலோ உருத்திராட்சை. பார்த்தான் மன்னன், அரியணையிலிருந்து இறங்கி ஓடோடி வந்து திருடனின் கைவிலங்கை அகற்றிவிட்டு அவன் காலில் தண்டனிட்டு விழுந்து வணங்கினான்.

காரணம் திருட்டுப் பயலின் சிவக்கோலம்!

இது இருக்கட்டும். இன்னொரு சேதியைக் கேளுங்கள்.

வைகைக் கரையில் இரவில் நரிகள் ஊளையிட்டதைக் கேட்டு, ஆகா! இந்த நரிகள் அரனை (சிவனை) அல்லவா பாடுகின்றன என்று கூறி நரிகளுக்குப் படாம் போர்த்தச் சொன்னானாம்.

அத்தோடு போயிற்றா?- இன்னும் கதையைக் கேளுங்கள்.

குவளைப் பூக்கள் பூத்த குளம் ஒன்றில் தவளைகள் கத்திக் கொண்டிருந்தன. அந்தத் தவளைகளின் கத்தல் சத்தம் இந்த வரகுணபாண்டிய மன்னனுக்கு எப்படி இருந்ததாம்? அரகரா அரகரா என்று சிவனை ஏற்றி போற்றி தவளைகள் பாடுவதாக அவனுக்குப் பட்டதாம். அப்புறம் என்ன?- மன்னன் அல்லவா-? கருவூலத்தில் இருந்த பொற்காசுகளைக் கொண்டு வந்து அந்தக் குளத்தில் வாரி இறைக்கச் செய்தானாம்.

திருக்கூத்து இன்னும் இருக்கிறது, படியுங்கள், படியுங்கள்.

கோவிலில் ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எள்ளினை கோயில் பெருச்சாளியான அர்ச்சகன் வாரி வாரித் தின்னக் கண்ட கோவில் அதிகாரி, கையும் களவுமாகப் பிடித்து அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினாராம்.

அரசன் முன் அந்தத் திருட்டு அர்ச்சகன் சொன்னானாம்: மன்னர் மன்னா. இப்புவியில் நற்பிறப்பு மீண்டும் அடையவேதான் ஆண்டவனுக்கு வைக்கப்பட்ட எள்ளைத் தின்றேன்! என்றானாம்.

இதைக் கேட்ட வரகுணபாண்டியன் அவனை இடித்துக் கொண்டு ஓடி அவன் தின்னும்போது உதிர்ந்து சிந்திய எச்சில் எள்ளைப் பொறுக்கித் தின்றானாம்!

கோயில் முற்றத்தில் நாய் மலம் கிடந்ததைக் கண்ட வேலையாள் துடைப்பத்தால் அப்புறப்படுத்த முயன்றான். அதனைக் கண்ட மன்னன் அவனை வெகுண்டு, கோயில் முற்றத்தில் கிடப்பதால் நாய் மலமும் புனிதத் தன்மையுடையது என்று கூறி தன் இரு கைகளாலும் நாயின் மலத்தை அள்ளி எடுத்தானாம்.

பட்டினத்தார் பாடலில் கண்ட இந்தப் பக்தியின் கிறுக்குத்தனங்களை மறைந்த மானமிகு புலவர் கோ. இமயவரம்பன் விரித்து எழுதியுள்ளார். பக்தி என்று வந்துவிட்டால் நாயின் மலம் கூட மணக்கிறதே! பக்தி வந்தால் புத்தி போகும் என்றாரே தந்தை பெரியார். இப்பொழுது புரிகிறதா?

----------------------------- மயிலாடன் அவர்கள் 11-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

6 comments:

Unknown said...

நாத்திகனை விட நாய் மேலானது!நாயையும் நாத்திகனையும் பார்த்தால், நாயைக் கும்பிடு!நாத்திகனை துப்பிடு!
அது சரி வாத்தியாரே! தீர்ப்பை பார்த்தீர்களா? கூத்தாடி ரெண்டு பட்டால், ஊருக்கு கொண்டாட்டம்!

AkashSankar said...

நல்ல பதிவு...

Thamizhan said...

நாயைக் கும்பிடும் இரண்டு கால் அய்ந்தறிவிற்கு,

உலக நாத்திக அறிஞர்கள் பட்டியலைப் பார்த்து பின் எச்சலை மிச்சப் படுத்திக் கொள்ளவும்.அல்லது தங்கள் மூஞ்சியிலேயே விழுந்து விடும்.

ரம்மிக்கு மேலே கொஞ்சம் கம்மி போல!
பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பார்ப்பானை அடி என்பது வடமொழி கிராமியப் பழமொழி.

Unknown said...

சரியாக புரிந்து கொண்டீர் தமிழன் அவர்களே! உங்கள் கும்பலின் நாறும் கோஷத்தை வைத்தே, என் கோஷம் அமைந்தது! நீங்கள் பத்தறிவு வாதிகள் தான்! பத்தறிவு யாதெனில் நடுத்தரப் பிறவிகள்! அந்நிய மதங்களை சாடத் துப்பில்லா போலி பத்தறிவுகள்! ஆம் ஐயா! இந்து மதம் இப்படித்தான் இருக்கும்!உம்மை யார் கேட்டார்கள்! சிலை வழிபாட்டை எதிர்க்கும் பெரியாரின் சிலையை என்னதுக்காக திறக்கிறீர்கள்! அதற்கு எதற்கு போலிஸ் பாதுகாப்பு?
அநாகரீக பதிவுகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் பதில் அழிக்க எமக்கும் தெரியும்!உம் தரத்திற்கு தாழ என்னை அழைக்காதீர்! பரம்பரை நாத்திகனெல்லாம் மஞ்சள் அணியும் காலமிது! மூப்பு வரின், மூத்திர சந்து அடைபடின் வரும் ஐய்யா உமக்கு முருகனின் நினைப்பு!

Unknown said...

திருமங்கை தமிழன்! உலக நாத்தனும், ஊர் நாத்தனும் அறிஞன் என்று சொன்னவன் ஒரு ஊத்தன்!தனி மனித வழிபாடு நடத்தும் உம்முடைய பழக்கம், தரம் குறைந்த செயல்கள்,எழுத்துக்கள்! இந்து மதத்தை திட்டி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்! எவனாது எதிர்த்தால் அவனையும் திட்டலாம்! எனும் நினைப்பை விடுங்கள்!உமக்கு மட்டுமல்ல! தரம் தாழ்த்தி எழுத அனைவருக்கும் தெரியும்!

நம்பி said...

//Blogger ரம்மி said...

நாத்திகனை விட நாய் மேலானது!நாயையும் நாத்திகனையும் பார்த்தால், நாயைக் கும்பிடு!நாத்திகனை துப்பிடு!//

அவா திருப்பி திருப்பி பார்ப்பானைத்தானே சொல்றா....நாத்திகன் யார் பார்ப்பனன் தானே...அவன் தானே இந்த கற்பனையை கண்டுபிடித்தான்...அந்த கற்பனை மேலே அவனுக்கு பயமே கிடையாது...மத்தவனை பயப்படவைக்கறதுக்குத்தானே இதல்லாம்...அன்பே சிவம் என்று எழுதுவான்...ஹே ராம் ஹே ராம் என்று இங்கே கச்சடாவா எழுதுவான்...பகுத்தறிவு என்று எழுதுவான் இங்கே வந்து நம்பிக்கையாளரும் காரி முழிகிற அளவுக்கு எழுதுவான்...இங்கே தான் நேரிடையாக அடையாளம் காட்டிக்கிறானே...நான் இந்த ஜாதியை சேர்ந்தவன், நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று...அவனாலே ஜாதியை விட்டுக்கொடுக்க முடியாது....ஆனால் இடஓதுக்கீட்டை கிண்டல் பண்ணுவான். நம்ம டப்பா இனிமேல் டேன்சாடப்போகுதே என்ற பயம் அவனுக்கு..ஏற்கனவே ஆடியாச்சு...முற்றிலும் ஆடிடுமே என்ற பயம்....நாம கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச கற்பனையெல்லாம் வெளுத்துவிடுகிறதே என்ற பயம் அவனுக்கு. அவனவன் பயம் அவனவனுக்கு...

அவன் அந்த கற்பனை முன்னாடியே காம இச்சையெல்லாம் தீர்த்துக்கொள்கிறானே....கொலை, கொள்ளை எல்லாம் பண்ணுகிறானே...கற்பனை கல் முன்னாடியே லஞ்சம் வாங்குகிறானே...மனிதனை கீழ்த்தரமாக மனிதநேயமற்று நடத்துகிறானே...எல்லாம் எழவையும் செய்யும் பார்ப்பானைத்தானே சொல்றா...நம்ப சொல்ல வேண்டியதை அவாளே பெருந்தன்மையுடன் சொல்றா...மல்லாந்து காரி முழிஞ்சா மார்மேலேயே விழும் என்று பார்ப்பான் அப்புறமா சொல்லுவான்.

பார்ப்பானை விட நாய் ...மேலானது...என்ற நல்ல கருத்து தானே...இதை பாராட்டத்தானே வேண்டும்.