Search This Blog

13.6.10

திராவிடர் கழகம் பார்ப்பன எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்லும்
மானமிகு

1980 இதே நாளில்தான் (12.6.1980) குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மானமிகு என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.

கழகத் தோழர்கள் ஒருவருக்கொருவர் அழைக்கும்பொழுதும், கடிதம் எழுதும் போதும் இனி மானமிகு தோழர் என்று குறிப்பிடவேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அன்று மாலை திருவைகுண்டம் பொதுக்கூட்டத்திலும் அந்தச் சொல்லை வெளிப்படுத்தினார்.

அந்தச் சொல் இப்பொழுது உலகம் முழுவதும் பரவி தனி மதிப்புடன் சுடர் விடுகிறது.

தமிழர் தலைவர் தமிழுக்குக் கொடுத்த பல புதிய சொல்லாக்கங்களில் மானமிகு என்ற சொல்லும் தொண்டறம் என்ற சொல்லும் தனித்தன்மை வாய்ந்தவையாகும்.

1980 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றி பெற்ற நிலையில் கீழ்க்கண்ட சுவரொட்டி ஒன்று நாடெங்கும் ஒட்டப்பட்டது.

நசுக்கப்படும் சமுதாயத்தின் உற்ற துணைவன் நாடோடிகளின் மன்னன் வீரியத்துடன் ஆரியத்தை அரவணைக்கும் அண்ணாவின் தம்பி உன் வெற்றி வாழ்க! வளர்க!!

- - முத்து வெங்கடராமன் ஆரிய தலைவன்

ஏதோ தனி மனிதர் அச்சிட்டதாகக் கருதத் தேவையில்லை. இதன் பின்னணியில் பார்ப்பனர்கள் அவர்களின் சங்கம் பலமாகவே இருந்தது.

அந்த நிலையில்தான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், நாடெங்கும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டையும், அடுத்த கட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு மாநாடுகளையும் அதே திருநெல்வேலியில் தொடங்கி (12.7.1980) வேலூர் ஈறாக (24.4.1982) அலை அலையாக நடத்திக் காட்டினார்.

நெல்லை மாநாட்டையொட்டி பார்ப்பனர்கள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பல புகார்களைத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் செயலாளர் கார்த்திகேயன் விளக்கம் கேட்டு கடிதமும் எழுதியிருந்தார்.

அதற்கு அறிவார்ந்த முறையில் பதிலடி கொடுத்து எழுதினார் தமிழர் தலைவர். இந்தப் போலிக் கூப்பாடுகள் (False Alarm) புதிதான ஒன்றல்ல கடந்த காலங்களில் கழகம் சந்தித்தவைதான். திராவிடர் கழகம் பார்ப்பன எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்லும் என்று கறாராக எழுதினார்.

இந்த மானமிகு என்பதற்கு இவ்வளவு பின்னணி உண்டு; நமது மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள்கூட தன்னைப்பற்றி ஒரு வரியில் குறிப்பிடும்பொழுது மானமிகு சுயமரியாதைக்காரன் என்றே பெருமை பொங்கக் கூறினார். அதனையும் தாண்டி இந்த மானமிகு இல்லையேல் இந்த மாண்புமிகுவுக்கு அர்த்தம் இல்லை என்றும் சொன்னாரே!

(முரசொலி, 15.9.2006)

------------------- மயிலாடன் அவர்கள் 12-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Thamizhan said...

இன்னும் பார்ப்பன எதிர்ப்பு வேண்டுமா,
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் போன்ற கருத்துக்களைக் கூறும் "படித்த" பார்ப்பனரல்லாதார் எழுதும் போது சிரிப்பதா,அழுவதா என்றே தோன்றுகிறது.
பார்ப்பன்ச் சோவும், மேல்தாவி இந்து ராமும்,இன்னும் தமிழர்களைச் சவுண்டி அடித்து வாழும் தினமலமும்,ஏன் கலைஞரிடம் வந்து கூழைக் கும்பிடு போட்டு நிற்கும் பூணூல் சேகரும் மாறிவிட்டார்களா?
காஞ்சி சுப்புணிக்கு என்ன தனி மரியாதையும், சட்டத்தைத் தூக்கிக் குப்பையிலே போடு என்று சாட்சிகளை விலைக்கு வாங்கும் அப்பட்ட அநீதியும் இவர்கள் மூளைகளுக்கு எட்டாதா?
மூளையில் இட்ட விலங்குகளை ஒடித்து வெளி வந்து சென்னை ஐ ஐ டி ஆனந்தின் அநியாயங்களையாவது பார்க்க முடிகிறதா?

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.