Search This Blog

22.6.10

கலிலியோவும் மத மூடநம்பிக்கையும்


கலீலியோ

கலீலியோ (1564-1642) விஞ்ஞானி, பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை அறிவியல் ரீதியாகச் சொன்னவர்.

பூமி தட்டையானது என்ற கருத்துடைய பைபிளுக்கு விரோதமானது இந்தக் கருத்து என்று கத்தோலிக்க சபை விஞ்ஞானி கலீலியோவுக்கு வீட்டுக் காவல் தண்டனையை அளித்து (அந்நாள்தான் இந்நாள் 1633). சாகும் வரை அந்தத் தண்டனையை அனுபவித்தார்.

விஞ்ஞானி புரூனோவை எரித்தது போல கலீலியோவை எரிக்கவில்லை. அதுவரை வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாம்.

மதம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்பதற்கு இந்தத் தண்டனை ஒன்றே போதும். இது மட்டுமல்ல, நோய் என்பது மனிதன் செய்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை என்பது கத்தோலிக்கர்களின் அசைக்கமுடியாத கருத்து. அதனால்தான் அம்மைக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த ஜென்னர் எதிர்க்கப்பட்டார்.

ஜென்னரின் கண்டுபிடிப்புக்கு ஆதரவாக இருந்தார் ஒரு மருத்துவர் என்பதற்காக அவரைக் கொலைக் குற்றத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்றனர் மதக் குருமார்கள்.

ரோஜர் பேக்கன் என்ற விஞ்ஞானி (1214_-1294) தொலை நோக்காடி, வெடி மருந்து, கடிகாரம், நீராவியின் சக்தி முதலியவற்றைக் கண்டுபிடித்தார். இது கடவுளுக்கு விரோதமான நாத்திகம் என்று கண்டிக்கப்பட்டது. இவருக்கு உரிய இடம் வெளிச்ச உலகம் அல்ல -என்று கூறி, சாகும் வரை 14 ஆண்டுகள் சிறைப்படுத்தினர்.

காலம் மாறியது; கருத்துக்களும் மாற ஆரம்பித்தன. கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாட்டிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப் - 360 ஆண்டுகளுக்குப் பிறகு கலீலியோவுக்கு தண்டனை கொடுத்தது தவறு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

வாடிகன் நகரில் முக்கியமானவர்களும், விஞ்ஞானிகளும், நோபல் பரிசு பெற்றவர்களும் நிறைந்திருந்த கூட்டத்தில்தான் பகிரங்கமாக போப் இதனை ஒப்புக்கொண்டார் (31.10.1992)

இப்போது விஞ்ஞானிகள் செயற்கை உயிரையே கண்டுபிடித்து-விட்டார்கள் - இதன் மூலம் எல்லா மதங்களுமே மரணக் குழியில் வீழ்ந்துவிட வில்லையா?

------------------- மயிலாடன் அவர்கள் 22-6-2010 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

3 comments:

Vincent said...

அன்பு நண்பருக்கு,

பூமி தட்டையானது என்று பைபிள் எந்த இடத்திலும் சொல்லவிலலை. மாறாக உருண்டையானது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

"பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறார்" - ஏசாயா 40:22

தவறான கருத்துக்களை தயவு செய்து வெளியிட வேண்டாம்.

கலிலியோவை சிறையிலிட்டு மனிதர்கள் செய்த தவறுக்கு வேதம் ஒரு போதும் பொறுப்பாகாது.

நன்றி.

Vincent said...

அன்பு நண்பருக்கு,

பைபிளில் எந்த இடத்திலும் பூமி தட்டையானது என்று சொல்லப்படவில்லை. மாறாக உருண்டையானது என்றுதான் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

"பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்" - ஏசாயா 40:22

கலிலியோவை தண்டித்து மனிதர்கள் செய்த தவறுக்கு வேதமோ தெய்வமோ ஒருபோதும் பொறுப்பாகாது. அவர்கள் கிறிஸ்தவர்களே ஆனாலும் வேதத்தை அறியவில்லை என்பது இதிலிருந்து தெளிவு.

தயவு செய்து தவறான தகவல்களை தர வேண்டாம்.

நன்றி.

நம்பி said...

//Blogger வின்சென்ட் said...

அன்பு நண்பருக்கு,

பைபிளில் எந்த இடத்திலும் பூமி தட்டையானது என்று சொல்லப்படவில்லை. மாறாக உருண்டையானது என்றுதான் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

"பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்" - ஏசாயா 40:22

கலிலியோவை தண்டித்து மனிதர்கள் செய்த தவறுக்கு வேதமோ தெய்வமோ ஒருபோதும் பொறுப்பாகாது. அவர்கள் கிறிஸ்தவர்களே ஆனாலும் வேதத்தை அறியவில்லை என்பது இதிலிருந்து தெளிவு.

தயவு செய்து தவறான தகவல்களை தர வேண்டாம்.

நன்றி.

June 23, 2010 10:34 AM//
பைபிலே சாமான்யர்கள் பயன்பாட்டிற்கு ஒரு 400, 500 வருடங்களுக்கு முன் தான் வந்தது...அது எபிரேய மொழியில் எழுதப்பட்டது...அதை பெரிய மதகுருமார்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தான் இருந்துவந்தது..மொழிமாற்றம் செய்து வருவதற்கே நாளானது...அச்சுக்கலை வந்து தாளில் அச்சடிக்கப்பட்ட பின்பு தான் சமான்யர்களின் பயன்பாட்டுக்கு வந்தது...இதில் யூதாஸ் பெயரிலும் பைபில் உள்ளது...ஆகையால் நீங்கள் குறிப்பிடும் பைபில் போப்பாண்டவர் வைத்திருக்கும் பைபிலும்,இரண்டும் ஒன்றா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் இதிலேயே பல பிரிவுகள்...ரோமன் கத்தோலிக்கம்...பெந்தகொஸ்தே..புரோட்டஸ்தாந்து (இதன் மதருமார் மார்ட்டின் லூதர் கிங்)...என்று ஒவ்வொருவருக்கும் பல கோட்பாடுகள்...இதற்காக பல திருத்தங்களை பைபிளில் அவரவர்கள் மேற்கொண்டுவிட்டனர். இது கூட வரலாற்றை தவறாக குறிப்பிடுவது தான்.

இன்றுள்ள மனிதர்களை பற்றி வேண்டுமானால் தத்துவம் பேசிக்கொள்ளலாம்...அன்று நடந்ததற்கு தத்துவம் பேசமுடியாது...அன்று அது தான் சரி...இன்றைய நிலையில் இருந்து அன்றைய மக்களின் நிலையை பார்க்கமுடியாது. அதற்கு சப்பைக்கட்டு கட்டவும் முடியாது. அது நிகழ்வு என்றால் நிகழ்வு தான். இல்லையென்றால் ஏன் போப்ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.?

இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது இந்த மதம் எங்கே இருந்தது.?..இந்த தத்துவம் எங்கே போனது...?

கொலம்பசுக்கே பூமி உருண்டையானது என்ற விஷயம் தெரியாது...அவர் இந்தியா என்று நினைத்து தான் அமெரிக்கா என்ற தீவுக்குள் வழிதவறி சென்றதாக வரலாறு கூறுகிறது. (அதில் பல முண்பட்ட தகவல்களும் உள்ளது, வெவ்வேறு விதமாகவும் கூறப்படுகிறது..) அதே போன்று அந்த தீவில் (தீவு என்று தெரியாமல் இந்தியா என்ற நினைப்பில்) கண்ட மக்களை சிவப்பாக இருந்ததால் சிவப்பிந்தியர்கள் என்றும் பெய்ர் வைத்தார் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று அவர் தவறுதலாக கண்டுபிடித்த அமெரிக்கத் தீவை சுற்றியுள்ள தீவுகளுக்கு மேற்கிந்திய தீவுகள் எனவும் பெயர்வைத்தார். அதுவும் அவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான்.

பைபிளில் குறிப்பிடப்பட்டது என்றால் கொலம்பசுக்கு பூமி உருண்டை என்று தெரியாமல் போனது ஏன்? முன்னாடி நடந்த விஷயங்களை உண்மைகளை நாம இருந்த மாதிரியெல்லாம், கண்டது மாதிரியெல்லாம் கூறமுடியாது. ஆய்வாளர்கள் சொன்ன தகவல்களை வைத்துதான் கூறமுடியும். அப்புறம் போப்பாண்டவரையே சந்தேகப்பட்டது மாதிரியாகிவிடும்.