Search This Blog

14.6.10

நித்யானந்தா பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது ஏன்? எதற்காக?

சாமி-யார்?

மக்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நாள்தோறும் காமக் களியாட்ட சொர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நித்யானந்தா என்ற ஆசாமி சிறை என்னும் நரகத்தில் வாசஞ் செய்து இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கேட்டு, அவரின் வழக்குரைஞர் பி.வி. ஆச்சாரியார் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது அவருடைய பக்தர்களின் மனதைக் காயப்படுத்தாதா? என்று நீதிபதி சுபாஷ் கேட்டார்.

அதற்கு நித்யானந்தாவின் வழக்குரைஞர் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப் போடச் செய்தது. இந்தக் காவி வேட்டிகளின் கபடத்தனத்தையும் ஒரு வகையில் தோலுரித்தும் காட்டியது.

அப்படி என்னதான் சொன்னார் நித்யானந்தாவின் வழக்குரைஞர்?

நித்யானந்தா சாமியார் அல்ல. அவர் தன்னை ஒருபோதும் சாமியார் என்று சொல்லிக் கொண்டதும் கிடையாது. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இதுவரை நித்யானந்தாவை ஆண்டவனிடத்தில் வைத்துப் பார்த்தனர் அவர் சாதாரண மனுஷன்தான் என்று அவரது வழக்குரைஞரே முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டார்.

பக்தி சமாச்சாரங்கள் இந்த யோக்கியதையில்தான் உள்ளன என்று பக்தர்கள் என்றுதான் புத்தியைப் பயன்-படுத்தி உணரப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஏதோ நித்யானந்தாதான் இப்படி என்று இல்லை. ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று பூதாகரப்படுத்துகிறார்களோ, அந்தப் பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமா?

தொடக்கத்தில் முற்றும் துறந்த முனிவர்போல, பற்றற்றவர்போல காட்டிக்கொண்ட இந்த வெங்கட ரமண பார்ப்பனருக்குச் சொத்துக்கள் குவியக் குவிய சொந்த பந்தங்களும் சுற்றி வந்து சூழ்ந்துவிட்டன.

கடைசியில் என்ன செய்தார்? தன் தம்பிக்குச் சொத்துக்களை எழுதி வைத்து-விட்டார்.

ரமண ரிஷியின் அந்தரங்கச் சீடராகவிருந்த பெருமாள்சாமி என்பார் நீதிமன்றம் சென்றார்.

நித்யானந்தாவின் வழக்குரைஞர் நித்யானந்தா சாமியாரே இல்லை என்று சொன்னதுபோல ரமண ரிஷியின் விஷயத்திலும் நடந்தது.

நீங்கள் சந்நியாசியாயிற்றே, எப்படி அண்ணன், தம்பி பாசமெல்லாம்? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியபோது, நான் எப்பொழுது சந்நியாசம் வாங்கினேன்? என்று எதிர்க்கேள்வியைப் போட்டாரே பார்க்கலாம், இதுதான் சாமியார்களின், ரிஷிகளின் யோக்கியதை!

பூரி சங்கராச்சாரியார் மனைவி மக்களுடன் குடும்பம் நடத்துகிறாரே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட அதிகாரப்பூர்வமாகக் குடும்பம் நடத்தாவிட்டாலும், ஏராளான வைப்புகளை வைத்துக்கொண்டு சல்லாபம் செய்யவில்லையா? சிறைக் கம்பிகளை எண்ணி ஜாமீனில் நடமாடவில்லையா?


சாமியார்களில் காமியார்கள் என்ற பெயரில் ஒரு சங்கத்தைக் கூட ஆரம்பிக்கலாமே!

இதற்கு மேலும் பக்தியா? ஆன்மீகமா? வெண்டைக்காயா?

---------------- மயிலாடன் அவர்கள் 14-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

gvsivam said...

நித்யாநந்தா ஒரு சன்யாசி அல்ல.அது எனக்கே தெரியும்போது அனைத்தயும் நோன்டி நொங்கெடுக்கும் உங்களுக்கு தெரியாதது வெக்கக்கேடு.காஞ்சி சங்கராச்சாரியாருக்கு வைப்பாட்டி இருப்பதாக உங்களால் ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியுமா?அப்படி செய்தால் சங்கர மடத்துக்கு எதிராக நானே கோஷம் போட தயார்.எதையும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாமல் ஆதாரத்தோடு நிரூபித்தால் கண்டிப்பாக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன்

தமிழ்மணி said...

//Venkatesan ,vridhachalam

ஓ நீங்க சிலவருடங்களுக்கு முன்பு நடந்த சங்கரர் கைதின் பூத்து இந்த நாட்டில் இல்லையா ?
சிறந்த பெண் எழுத்தாளர், சமிபத்தில் அந்த தாய் இயற்கை எய்தினர், அவர்கள் சங்கராசாரியார் பற்றி கூறியவைகளை கொஞ்சம் பழைய பேப்பர் கடையல் வாங்கி படிங்கள் .......
"சங்கராச்சாரியாருக்கு வைப்பாட்டி வைத்திருப்பதற்கு ஆதாரம் இல்லை , அனால் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு நிறைய ஆதாரம் உண்டு"

நிஜாம் கான் said...

//காஞ்சி சங்கராச்சாரியாருக்கு வைப்பாட்டி இருப்பதாக உங்களால் ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியுமா?//

ஆஹா! அனுராதா ரமண‌ன் இறந்து விட்டாரே! அவர் இருந்தால் மீண்டும் வந்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர் கொடுத்த பேட்டிகள் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றன. சங்கர ராமனைத் தான் போட்டு விட்டார்கள் ஆனால் அவர் எழுதிய கடிதம் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறது.இதுல கவனிக்க வேண்டிய சிறப்பம்சம் அனுராதா ரமணனும், சங்க‌ரராமனும் ஒரு பிராமனர் தான். இதற்கும் ஏதாவது பதில் இருக்கிறதா?

easyjobs said...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3867

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.

வெண்ணிற இரவுகள்....! said...

ஹிந்து சமூகம் ஒன்றே ...மக்களை தொட்டால் தீட்டு என்று சொல்லக்கூடியவர்கள் , அதுவும் தன் மதத்துக்கு உள்ளேயே ...... பார்பனன் யாரையும் தொட மாட்டான் ........இதற்க்கு
என்ன சொல்கிறீகள் இவன் யார்

நம்பி said...

//Venkatesan ,vridhachalam. said...

நித்யாநந்தா ஒரு சன்யாசி அல்ல.அது எனக்கே தெரியும்போது அனைத்தயும் நோன்டி நொங்கெடுக்கும் உங்களுக்கு தெரியாதது வெக்கக்கேடு.காஞ்சி சங்கராச்சாரியாருக்கு வைப்பாட்டி இருப்பதாக உங்களால் ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியுமா?அப்படி செய்தால் சங்கர மடத்துக்கு எதிராக நானே கோஷம் போட தயார்.எதையும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாமல் ஆதாரத்தோடு நிரூபித்தால் கண்டிப்பாக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன்
June 14, 2010 5:38 PM //

ஏன் அனுராத ரமணன் கடிதம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதே..இணையத்திலேயும் உள்ளது...ஓஓ வீடியோ பண்ணலியா என்று கேட்கப்படுகிறதா...? எல்லாத்தையுமா வீடியோ பண்ண முடியும்...? இதுக்குண்ணே ஒரு பிரிவு தனியா செயல்படணும் போலிருக்குது....வீடியோ கடைக்கராங்களுக்கு நல்ல வேட்டை தான்...அப்ப வேற செல் போனெல்லாம் அந்தளவுக்கு வசதியா வரல....வந்திருந்தா எடுத்திருக்கலாம்...அதை வேற டிவி இல போட்டாங்கன்னா என்ன பன்றது...எல்லோரும் கண்ணை குத்திப்பாங்க...நித்யானந்தாவது தறிகெட்டுப்போன கிளு கிளு சின்னப்பையன்.....இந்த கிழட்ஸ்ஐ எல்லாம் டீவில பாத்தாங்கன்னா எல்லாம் கண்ணை குத்திகிட்டாலும் குத்திப்பாங்க....கன்றாவி என்று...இப்படித்தான் மக்கள் பேசிக்கிட்டாங்க.

லெனின் கருப்பனும், நக்கீரன் குழுவையும் செட் பண்ணியிருந்தா அதை வீடியோ பண்ணியிருக்கலாம்..முதல்ல அவங்களை உள்ளேயே விட்டிருக்கமாட்டாங்க....இப்ப யாராவது ஒரு பார்ப்பனன் தான் துணிந்து எடுக்கவேண்டும்...துணிந்தவரைத்தான் போட்டுத் தள்ளிட்டாரே...ஜெயந்திரர்ரர...

அதுக்குத்தான் ஆதாரம் இருக்குதே அதை மட்டும் நைசா கழட்டி விட்டுட்டீங்களே...வைப்பாட்டி வைக்கறதை விட, கொலை குத்தத்துக்குதான் அதிக தண்டனை... தூக்கு தண்டனை...அந்த ஆதாரத்தை வைத்து தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாமே..