Search This Blog

28.6.10

கருணாநிதியைப் பத்தி கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான்!

கலைஞரை பற்றி காமராசர் சொன்னது

ஸ்தாபனக் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தி.மு.கழகம் நெருக்கடி நிலையைக் கண்டித்த போதிலும், திமுக அரசு இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி மனக் கசப்புடன் பேசினார். கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். அதைக் கேட்டதும் காமராசுக்கு கோபம் வந்து விட்டது.

அட சும்மாக் கெடப்பா ரொம்பத் தெரிஞ்சவன் போல... இந்த நேரத்துலே எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் கருணாநிதி நடத்துக்கிட்டாரு. அது ஒம் மூளைக்கி எப்படி எட்டும்னேன்... சும்மா வீறாப்புக் காட்டினா ஆச்சா... அதுனால என்ன லாபங்கறேன்... அந்தம்மா டி.எம்.கே.கவர்மெண்டை டிஸ்மிஸ் பண்ணும், இப்ப இங்க மிஞ்சியிருக்கிற சுதந்திரமும் இல்லாமல் போகும். வேற என்ன நடக்கும்னேன்? இந்த நேரத்துக்கு இங்க கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிச்சுக்கிட்டு இருக்கறது ரொம்ப அவசியம். அதை மறந்துடாதே. பிரை மினிஸ்டரைப் பத்தி ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு உத்தரவு வருது. அங்கங்க இருக்கற சீப் மினிஸ்டரெல்லாம் அந்த உத்தரவிலேயே தன்னைப் பத்தியும் ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு சேர்த்துக்கறான். பார்க்கப்போனா இப்ப கருணாநிதியைப் பத்தித்தான் கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான். கருணாநிதி நினைச்சா இந்த உத்தரவைப் பயன்படுத்தி அதை தடுக்க முடியும். ஆனா அவரு அப்படிச் செய்யல அதை மறந்துடாதே. கருணாநிதி விரும்பினா ப்ரை மினிஸ்டரோட ஒத்துப் போயி நிம்மதியா இருந்துக்கிட்டிருக்க முடியும். அதையும் அவரு செய்யல. இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிட்டா ஆச்சா என பொரிந்து தள்ளினார் காமராசர். கொஞ்ச நேரத்துக்கு அறையில் ஒரே நிசப்தமாக இருந்தது.

------------------- மதுரைமணி, 2.6.2008

கொள்கையா? பதவியா?

இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்குத் தீ மூட்டும் போராட்டக் கட்டத்தில் மதுரையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறியது. (1986 டிசம்பர்)

ஒரு கொள்கைக்காக ஒரு கோட்பாட்டிற்காக - இந்த இயக்கத்தைப் பெரியார் உருவாக்கி, அது அரசியல் ரீதியிலும் மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்ற காரணத்தால் அண்ணா அவர்களால் தி.மு.கழகம் உருவாக்கப்பட்டு 18 ஆண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்து, 9 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து, அதற்குப் பிறகு ஆட்சி போய்விட்டதே என்ற ஏக்கப் பெருமூச்சு விடாமல், ஆட்சியில் இருந்தாலும் இதுதான் கொள்கை, இல்லா-விட்டாலும் இதுதான் கொள்கை என்றுதான் நம் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

சிலரோ, பதவிக்காகக் கொள்கைளை இழப்பார்கள், நாம் கொள்கைகளுக்காகப் பதவியை இழப்பவர்கள்; உயிரைக்கூட இழக்கத் துணிந்தவர்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் பதவிக்காக கொள்கையை இழந்தவர்களுக்கும் கொள்கைக்காகப் பதவியை இழந்தவர்களுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம்.


19 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

யார் எப்படி நல்லவராகவும் இருந்திருக்கலாம்!
அதில் மாற்றுக்கருத்தே இல்லை!
நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறார்களோ அதை வைத்துதான் மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிற அடிப்படை புரிந்துணர்வு கூட இந்த கட்டுரையாளருக்கு இல்லையா?
கட்டுரையாளர் சொல்வது போல் காமராஜர் ஒன்றும் புனித பிம்பம் அல்ல!


தலைப்பே பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல! பெரியாரே விரும்ப மாட்டார்!

தலைப்ப மாத்துங்க ஐயா!

தமிழ் ஓவியா said...

//தலைப்பே பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல! பெரியாரே விரும்ப மாட்டார்!

தலைப்ப மாத்துங்க ஐயா!//

உலகத்தில் யாரும் யாரைப் பற்ரியும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனத்தில் உண்மை,நேர்மை, ஆதாரம் இருக்க வேண்டும்.

அதே போல் ஒவ்வொரு மனிதனிடமும் நிறை குறை இருக்கும். குறைகளைச் சொல்லி சொல்லி கும்மி அடிக்காமல் நிறைகளை பாராட்டவும் கற்றுக் கொள்ள வேண்டும்

இந்தத் தலைப்புகூட ஆதாரம் இல்லாமல் பேசுபவர்களைத் தான் குறிக்கிறது அத்திவெட்டி ஜோதிபாரதி .

பரிமள ராசன் said...

வணக்கம் தோழர்,நீங்கள் எழுதியதில் முக்கால்வாசி சரிதான் உடன் படுகிறேன்.கருணாநிதியை பற்றி கண்டவனெல்லாம் எழுதுகிறான் என்பதே சரி.அவரை அப்போது கண்டவர்கள்,இப்போது காணுபவர்கள்,அவரின் நடத்தை இப்போது யாரை காப்பாற்ற,எதை காப்பாற்ற என்ற உண்மையை கண்டவர்கள் பேசுகிறார்கள்,எழுதுகிறார்கள்.இன்னும் எத்தனை காலத்திற்க்கு இவரை பற்றி அய்யா,அண்ணா,காமராஜ் இன்னும் பலர் அரை நூற்றாண்டுகளுக்கு முன் சொன்னதையே சொல்ல போகிறீர்கள்? இப்போதுதான் எல்லாம் வெளுத்துப்போனதே?உலக தமிழர் மத்தியில் அம்பல பட்டு போனாரே?கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்கு.கருணாநிதி புளுகு அவர் ஆயுசுக்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழ் ஓவியா said...
//தலைப்பே பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல! பெரியாரே விரும்ப மாட்டார்!

தலைப்ப மாத்துங்க ஐயா!//

உலகத்தில் யாரும் யாரைப் பற்ரியும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனத்தில் உண்மை,நேர்மை, ஆதாரம் இருக்க வேண்டும்.

அதே போல் ஒவ்வொரு மனிதனிடமும் நிறை குறை இருக்கும். குறைகளைச் சொல்லி சொல்லி கும்மி அடிக்காமல் நிறைகளை பாராட்டவும் கற்றுக் கொள்ள வேண்டும்

இந்தத் தலைப்புகூட ஆதாரம் இல்லாமல் பேசுபவர்களைத் தான் குறிக்கிறது அத்திவெட்டி ஜோதிபாரதி .
//

அன்பின் தமிழ் ஓவியா ஐயா,

விமர்சனம் வேறு அவன் இவன் என்று ஏக வசனம் பேசுவது வேறு. உங்களுக்குத் தெரியாதது இல்லை. பெரியார் சின்ன குழந்தையைக் கூட மதிப்பளித்து அன்புடன் அழைப்பார். அதன் தாக்கம் இப்போது பெரியார் இயக்கத்தை சேர்ந்த பலருக்கு இல்லையே ஏன்? பெரியாருக்கு பதில் வாழும் பெரியாராக தாங்கள் கருதும் கலைஞரின் பிரதிபலிப்பா? இல்லை அவருடைய தொண்டர்களின் பிரதிபலிப்பா?

கண்டிப்பாக பாராட்டலாம்.

ஆனால் ஒருவனின் உறவுகளை படுகொலை செய்ய ஆள் அனுப்பியவர்களுக்கு ஒரு வகையில் ஆதரவாகவும் தட்டிக்கேட்க்காமலும் இருந்தவர்களை அவன் எந்த வகையில் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்!

ஒவ்வொரு செயலுக்கும் பின்னுள்ள உள் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. அது பின்னர் உண்மையாக குட்டு உடைகிறபோது,
எதை எப்படிப் பாராட்டுவீர்கள்!

தலைப்பு உங்களுக்கு உவப்பானதாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள்!

அதற்கு முன் ஒரு கேள்வி,

செம்மொழி மாநாட்டை பாத்திருப்பீர்கள்,
பார்த்த இடங்களெல்லாம் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு,துணிகள்,பொருட்கள்,தோரனங்கள்,வாயில்கள்,மாநாட்டின் இலச்சினை கூட மஞ்சளாகவும் இருந்தது ஏன்?
துண்டை விடுங்கள்!

குழலி / Kuzhali said...

//உலகத்தில் யாரும் யாரைப் பற்ரியும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனத்தில் உண்மை,நேர்மை, ஆதாரம் இருக்க வேண்டும்.
//
இதென்ன ஒரு வழிப்பாதையா? உங்களுக்கு ஐ மீன் திராவிடர்ர்ர்ர்ர்ர்ர் கழகத்துக்கு இதெல்லாம் இல்லையா?

தமிழ் ஓவியா said...

//தலைப்பு உங்களுக்கு உவப்பானதாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள்!//

தோழர் அத்திவெட்டி ஜோதிபாரதி
இந்த தலைப்பு காமராசர் சொன்னதாக சொல்லப்பட்ட வாக்கியம் எனவே தான் அதை அப்படியே தலைப்பாக சுட்டியுள்ளேன்.

நான் டேசோ இயக்கம் முதல் கலைஞரின் செயல்பாடுகளை உற்று நோக்கியே வருகிறேன். இன்னும் கேட்டால் அதில் எல்லாம் பங்கெடுத்தவன், பல இன்னல்களை அனுபவித்தவன் என்ற முறையிலும் சொல்லுகிறேன்.

நமது உறவுகள் அழிந்ததுக்கு பல காரணங்கள் உண்டு.தமிழகத்தைப் பொறுத்தவரை அதில் முக்கியமாக கூட்டணிக்காக இங்குள்ள தலைவர்கள் அணி பிரிந்தது தான் காரணமே(இதுவும் ஒரு காரணம்) தவிர கலைஞர் மட்டுமே காரணமல்ல. அருள்கூர்ந்து அந்தக் காலகட்டத்தில் தலைவர்கள் நடந்து கொண்ட செயல்களை ஒரு முறை புரட்டிப் பாருங்கள் உண்மைகள் புரியும்


இது ஒரு சர்வதேச பிரச்சினை என்பது தங்களுக்கு தெரியாததல்ல.

கலைஞரிடம் குறை இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு கலைஞர் மட்டுமே காரணம் என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன் பாடில்லை

//செம்மொழி மாநாட்டை பாத்திருப்பீர்கள்,
பார்த்த இடங்களெல்லாம் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு,துணிகள்,பொருட்கள்,தோரனங்கள்,வாயில்கள்,மாநாட்டின் இலச்சினை கூட மஞ்சளாகவும் இருந்தது ஏன்?
துண்டை விடுங்கள்!//

ராஞாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் என்று கேள்விப் பட்டதில்லையா? அது போல் தான் இதுவும்.

தமிழ் ஓவியா said...

////உலகத்தில் யாரும் யாரைப் பற்ரியும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனத்தில் உண்மை,நேர்மை, ஆதாரம் இருக்க வேண்டும்.
//
இதென்ன ஒரு வழிப்பாதையா? உங்களுக்கு ஐ மீன் திராவிடர்ர்ர்ர்ர்ர்ர் கழகத்துக்கு இதெல்லாம் இல்லையா?//

எப்போதும்ஆதாரங்களுடன் பேசுபவன் திராவிடர் கழகத்துக்காரன்.

அதுஒருவழிப்பாதை அல்ல குழலி அதுதான் சரியான பாதை.

ஆமாம்
குழலி எப்போதிலிருந்து குழலிலிலிலிலிலிலிலிலிலி ஆனார்?

Muhunthan said...

அன்று அய்யா காமராஜர் சொன்ன அனைத்து பரிந்துரைகளையும் தற்போது செவ்வனே செய்துவிட்டார் போலும் கலைஞர்.
தங்களின் வரலாற்று பகிர்வுக்கு நன்றி.

Thamizhan said...

பெருந்தலைவர் காமராசர் பெரியார்,அறிஞர் அண்ணா,கலைஞர் இவர்களெல்லாம் உள்ளத்தால் தமிழ்ராக ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் கொண்டு வாழ்ந்தவர்கள்.
ஒருவருக்கு ஒன்று என்றால் உடனே துடித்தவர்கள்.காமராசர் தோற்றதும் கலங்கியவர் அண்ணா.அண்ணாவின் உடல் நலத்திற்காக அங்குள்ள மருத்துவர்களை என்ன முழிக்கிறீர்கள்.அமெரிக்கா கொண்டு செல்லுங்கள் என்று ஆணையிட்டவர் காமராசர்.மும்பையில் கவர்னர் ந்ள்ளிரவில் அண்ணாவை வழியனுப்ப வந்த போது கவர்னர் சொன்னாராம், காமராசரின் ஆணை.உங்களை நன்றாக வழியனுப்பச் சொன்னார்.அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டுமல்ல தமிழினத் தலைவர் என்று சொன்னார் என்றாராம்.
இன்று எதிரி ராஜபக்சே என்பதை உண்ர்ந்து செயல் படாமல்,கலைஞரை எதிரியாக நடத்தி விட்டு ஏமாந்தது ராஜபக்சேவிடமும்,நாரவாயன்,சிவ சங்கரனிடமும் என்ற உண்மைகள் வெளிவருகின்றன.பழைய புரியுதல் இல்லாமல் தலைவர்கள் மாடுகளாகப் பிரிந்ததால் நரிகள் ஊளையிட்டு விட்டன !
யார் முதல்வராக இருந்திருந்தாலும் புது டில்லியின் வக்கிரத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அனைத்துத் தமிழரும் ஒன்று கூடி யார் எதிரி என்பதை முதலில் உணர வேண்டும்.
அதுவரைப் பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் புது டில்லிக்கு வாலாட்டித்தான் வாழ வேண்டும்.
இந்தக் கசப்பான உண்மையை உணரும் நாள் விரைவில் வரட்டும்.

செல்வன் said...

தன்னை எதிர்த்த உறவுகளை பிரபாகரன் படுகொலை செய்த போது அவருக்கு கும்மி அடித்தவர்கள், இப்போ கலைஞரை குறை சொல்கிறார்களே! ஒன்றுமே புரியவில்லை!

அஹோரி said...

தமிழ் ஓவியா ,
எப்படி இருக்கீங்க ?

-அஹோரி

ராவணன் said...

//எப்போதும்ஆதாரங்களுடன் பேசுபவன் திராவிடர் கழகத்துக்காரன்.//

பெரியார் இருந்தவரைக்கும் திராவிட கழகத்துக்காரன் சரி..

இப்போ இருப்பது ஜால்ரா வீரமணி கும்பல்தானே..ஜெயலலிதாவின் முந்தானையில் தொங்கிய ஜால்ரா வீரமணியின் கும்பல் என்றால்...
அய்யோ பாவம் பெரியார்...

தமிழ் ஓவியா said...

ராவணன் என்று பெயர் வைத்துக் கொண்டு விபிசணனாக செயல்பட்டு வரும் உங்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது.
நீங்கள் தினமல(ம்)ர் கும்பல் போல்தான் செயல்படுகிறீர்கள்.

விபீசணர்கள் அதிகமாகி வருகிறார்கள் என்று பெரியார் அன்று வருத்தப்பட்டார். இன்று அது உண்மையாகி வருகிறது

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா

தமிழ் ஓவியா said...

//தமிழ் ஓவியா ,
எப்படி இருக்கீங்க ?

-அஹோரி//

நலம் விசாரிக்கிறீர்களே அஹோரி

என்ன திருந்திவிட்டீர்களா?

எப்படியிருப்பினும் நன்றி அஹோரி

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.

அஹோரி said...

//என்ன திருந்திவிட்டீர்களா?//
என்னங்க இப்படி கேக்குறீங்க ?
கருணாநிதி , வீரமணி மாதிரி அடுத்தவர் கொள்கையை வைத்து வியாபாரம் பண்ணுபவர்களிடம் இருந்து , உங்களை மாதிரி அப்பாவிகளை காப்பாற்ற வேண்டி , பின்னூட்டம் போடுவது குற்றமா ?

தமிழ் ஓவியா said...

அனைத்து மதங்களைப் பற்ரியும் தி.க. விமர்சித்துள்ளது . நூல்கள் வெளியிட்டுள்ளது. பல கட்டுரைகள் விடுதலை உண்மை இதழ்களில் வெளிவந்துள்ளது.
தமிழ் ஓவியா வலைப்பூவிலும் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளது.

நம்பி said...

//Blogger அஹோரி said...

//என்ன திருந்திவிட்டீர்களா?//
என்னங்க இப்படி கேக்குறீங்க ?
கருணாநிதி , வீரமணி மாதிரி அடுத்தவர் கொள்கையை வைத்து வியாபாரம் பண்ணுபவர்களிடம் இருந்து , உங்களை மாதிரி அப்பாவிகளை காப்பாற்ற வேண்டி , பின்னூட்டம் போடுவது குற்றமா ?

July 2, 2010 5:38 PM//

முதலைக்கண்ணீராக இருக்கிறதே....!