Search This Blog

9.4.14

மோடி அலை வீசுவது உண்மையா? பெரியாரின் குட்டிக்கதை --கி.வீரமணி

காந்தியாரைக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்றதும் ஆர்.எஸ்.எஸ். மோடி பயிற்சி பெற்றதும் ஆர்.எஸ்.எஸ்-அடையாளம் காண்பீர்! பரமக்குடியில் தமிழர் தலைவர் உரை
பரமக்குடி, ஏப். 8- காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே பயிற்சி பெற்ற இடமும், நரேந்திர மோடி பயிற்சி பெற்ற இடமும் ஆர்.எஸ்.எஸ் தான். இவர்களை அடை யாளம் காண்பீர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் (5.4.2014) உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:- நம்நாட்டின் எதிர்காலம் இருண்ட காலமாக ஆகிவிட்டது.

மதவெறி ஆட்சி மத்தியில் வந்துவிடக்கூடாது. ஜாதி வெறியும், சமய வெறியும் இல்லாமல் அனைவருக்கும் அனைத்தும் என்பதே கலைஞர் தலைமையில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி.

தனிமரம் - தோப்பாகாது

கம்யூனிஸ்டுகளைக் கழற்றிவிட்டு தனியாக இருக் கிறார்கள். தனிமரம் தோப்பாகாது. தோப்புதான் தனியாக இருக்கும் அதுவும் விஷத்தோப்பு. ஆனால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள் ஒத்த கனிகள் போன்று வெற்றியை பறிக்கக்கூடிய கூட்டணி.

கலைஞர் அவர்கள் காட்சிக்கு எளியவர். கடுஞ்சொல்லர் அல்லர். எளிமையாக அவரைப்பார்க்கலாம். ஆனால் மற்றவர்களை எப்படி பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியும்.

பறந்து வருகிறார்களா?

சில பேர் மோடி வித்தை காட்ட வடக்கே இருந்து வந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் அது செல்லுபடியாகாது.

சிலபேர் மேலிருந்து உருவாவார்கள். சிலர்தான் கீழே இருந்து மேலே உயர்வார்கள். மற்ற சிலர் பறந்து வருகிற தலைவர்கள். நாம்தான் நடந்து வருகிறவர்கள் - தேவைப் படும்போது காரில் வருகின்றவர்கள். நம்மை எப்போதும் பார்க்கலாம் சிலர் தேர்தல் நேரங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

பெரியாரின் குட்டிக்கதை

மோடி அலை வீசுவது உண்மையென்றால் அவர் ஏன் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்? பெரியார் தான் ஒருகுட்டிக்கதை சொல்வார்.

ஒரு அம்மா வீட்டில் தனியாக இருக்கின்றபோது, ஒரு பிச்சைக்காரர் சாமியார் வேடமணிந்து அந்த அம்மாவிடம் ஒதாயே பசியால் வாடுகிறேன். பசியா வரம் தருகிறவன் பழைய சோறு இருந்தால் போடு என்றான். இந்த அம்மாவுக்கு அதிக ஆசை.

பிரச்சினையே பசியினால் தானே! நம்ம பெண்கள் தான் சாமியாரைப் பார்த்து ஏமாந்து விடுவார்களே! அந்த அம்மா என்ன வேண்டும் சொல்லுங்க சாமி என்கிறார். அவர் ஒன்றும் வேண்டாம்மா. கொஞ்சம் பழைய சோறு இருந்தால் போடு தாயே! என்றான். உடனே வீட்டில் உள்ளதே பழைய சோறுதான்.சாதாரண ஏழைக் குடிசை வீடு. உடனே அந்த அம்மா உணவைப் போட்டார்கள். போயிட்டு வருகிறேன் தாயே! உனக்கு வரம் கொடுத்துவிட்டேன் என்றான் பிச்சைக்கார சாமியார்.

கொஞ்ச நேரத்திலே வேலைக்கு போயிட்டு வந்த கணவர் (வீட்டுக்காரன்). பசியாக இருக்கிறது சாப்பாடு எடுத்து வை என்றார். பசிக்குது கஞ்சி குடிக்கணும் எடுத்து வை அம்மா என்றார்.

இல்லைங்க! ஒருசாமியார் வந்தார். சாமியார் பசியா வரம் தருகிறேன் என்று சொன்னார் என்றார் அந்தத்தாய். அப்படியா? என்ன சாப்பிட்டான் என்று கேட்டான் கணவன். வேறு ஒன்றுமில்லைங்க கொஞ்சம் பழைய சோறு போடுங்க என்று கேட்டார். அதைப் போட்டுவிட்டேன் என்றாள்  மனைவி. அட புத்திக்கெட்டபெண்ணே!

அவன் பசியா வரம் தருகிறேன் என்று சொன்னது உண்மை என்றால் உன்னிடம் வந்து ஏன் பிச்சை கேட்க வேண்டும்? அவனே சாப்பாடு இல்லாமல் தானே உன்னிடம் வருகிறான்.  பழைய சோறு கேட்கிறான்? இப்ப இருந்ததை போட்டு விட்டாயே! பசி கிள்ளுதே என்று சத்தம் போட்டான்.

இந்தப்பசியா வரம் தருகிறவன் மாதிரி, மோடி வருகிறார் ஊழல் சரியாகிவிடும். மோடி வந்தால் எப்போதுமே மின்சாரம் இருக்கும் என்று பாவம் இங்கே உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

அவர்கள் அணிக்கும், கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அடுத்தது கேட்டால் என்ன பேசினார் என்றே அவருக்கு தெரியாது, கேட்டால் ஞாபகம் இருக்காது பசியா வரம் கொடுத்த கதைதான் மோடி அலை.

ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி

காந்தியார் கொலை செய்யப்படக் காரணம் கோட்சே! அவர் பயிற்சி எடுத்த இடம் ஆர்.எஸ்.எஸ். மோடி பயிற்சி எடுத்த இடம் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று உண்மை!

காமராஜரை பட்டப்பகலிலே, பசுவதை, தடுப்பு என்ற பெயராலே. காமராசர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது வீட்டையே கொளுத்தினர், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காமராசர் அவர்களுக்கு போன் செய்து, வெளியில் கலாட்டா பிரச்சினை நடக்கிறது.

உள்ளேயே இருங்கள் என்று சொல்லி அன்றைக்கு அவர் உயிரைக் காப்பாற்றியது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன். இப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி நாட்டையே காப்பாற்ற போகிறோம் என்கின் றார்கள்.

மத்தியில் அந்த மதவெறி ஆட்சி அமைய இங்கே (தமிழ்நாட்டில்) உள்ளவர்கள் சிலர் துணைபோகிறார்கள், காரணம் என்ன வென்றால் இது கூட்டணி அல்ல, சீட்டணி, எத்தனை சீட்டு யாருக்கு என்று சண்டை போடுகிறவர்கள்  சண்டை இன்னும் முடிந்த பாடில்லை. இன்னும் அவர் களுக்குள் சண்டை தீர்ந்த பாடில்லை. அநேகமாக  25-ஆம் தேதி சண்டை முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.

பாண்டிச்சேரியில் நிற்க முடியாது

பாண்டிச்சேரியில் நிற்க முடியாது நின்று கொண்டு பேச முடியாது நின்றால்தானே பேச முடியும்.

கலைஞரின் நகைச்சுவை

கலைஞரிடம் நெருக்கமாக இருந்தவர் ஒருவர் கேட்பார் (பெயர் சொல்ல விரும்பவில்லை)

பாண்டிச்சேரியில் போய் நிற்க போகிறேன். என்றிருக்கிறார். கலைஞர் அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் சொன்னார். யோவ் பாண்டிச்சேரியில் நிற்க முடியாதய்யா? அவசியம் நிற்கணும் அய்யா என்று அந்த நண்பர் சொல்ல, கலைஞர் உன்னால் அங்கே நிற்கவே முடியாது என்று திருப்பியும் சொன்னார் கலைஞர்.

பாண்டிச்சேரிக்கு ஒரு தத்துவம், தமிழ்நாட்டுக்கு ஒரு தத்துவமா பெரியார் தான் கேட்பார்கள். தலைக்கு ஒரு சீயக்காய் தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று கேட்பார்கள்.

அங்கே பார்த்தீர்கள் என்றால் கூட்டணியில் வித்தியாசம் சுருதி பேதம் அத்தனையும் உண்டு. இங்கே சின்ன கீறல் உண்டா? ஆகவே 24 ஆம் தேதிக்கு பிறகு, 2004 தேர்தலில் எப்படி மாறுதல் ஏற்பட்டதோ வெற்றிப் பெற்றார்களோ, அதே போன்று இந்த முறையும் வெற்றி பெறப்போகும் அணி, இந்த அணி தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தான்.

இருக்கிறதை விட்டுவிட்டு பறக்கிறதை பிடிக்கமுடியாது

அம்மா நேராக மேலிருந்து வருகிறார்கள் டப்புன்னு இறங்குறாங்க மேலே பறக்கிறாங்க! ஆனால் நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க முடியாது

பறக்கிறதை யாரும் பிடிக்க முடியாது இதுதான் அந்த அணி. இந்த அணியை (திமுக) பிடித்து கொள்ளுங்கள். பறக்கிறதை பிடிக்கிறேன் என்று ஏமாந்து விடாதீர்கள். அது பயன்படாது நிச்சயம் வெற்றிப்பெற போவது நாம தான்.

ஈழம் - இலை மாறுமா?

ஈழப்பிரச்சினையில் அந்த அம்மையார் சொல்வார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும். இலை மலராது. அது சருகாகும், உதிரும் ஒரு போதும் மலராது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
 ஞாபகம் வருகிறதே! ஞாபகம் வருகிறதே!

பரமக்குடிக்கு அம்மா ஆட்சியில் என்ன நடந்தது? ஞாபகம் வருகிறதே!
ஞாபகம் வருகிறதே! துப்பாக்கிச்சூடு, துப்பாக்கி சூடு, நாடகம் வருகிறதா? இல்லையா! விசாரணை கமிஷன் போட்டு நடத்தினார்களே! இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்களே துப்பாகி சூடு நடக்குது. தாழ்த்தப்பட்டவர்கள் சாகிறார்கள். அவர்கள் உயிர் போனதே! இதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?

               -----------------------------"விடுதலை” 8-4-2014

30 comments:

தமிழ் ஓவியா said...


உலக சுகாதார தினத்தில் சுகாதாரம் பேணுவது குறித்து தீர்மானம்


சென்னை, ஏப். 8- உலக சுகாதார நிறுவன அமைப்பின் (who) தோற்றுவிக்கப்பட்ட தினத்தை உலக சுகாதார தினமான ஏப்ரல் - 7 கொண் டாடப்படுகிறது.

இன்றைய உலகில், உடல் பருமன் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. 2008 இல் உலக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் மிகை எடை உள்ளவர்களாகவும் மற்றும் 11 சதவீதம் பேர் உடல்பருமன் உள்ளவர்களாகவும் இருந்தனர்.

இதுகுறித்து இன்டெஜிம் மற்றும் பைலேட்ஸ் எக்ஸ்பர்ட் என்ற உடற்பயிற்சி நிறுவன உரிமையாளர் மாதுரி ருயியா கூறியிருப்பதாவது:-

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான உடல் நலப்பிரச்சினைகள் வரு கின்றன. எனவே இந்நாளில் ஆரோக்கியமாக இருப் பதற்கும், ஆரோக்கியமான உணவு உண்பதற்கும் மற்றும் ஆரோக்கியமானவற்றை சிந்திப்பதற்கும் நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் பசியாக இருக்கும்போது ஒரு பை நிறைய சிப்ஸ் உண்பதற்குப் பதிலாக ஒரு கை நிறைய பாதாம் பருப்பு எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம் பருப்புகளில் உள்ள பெரும்பாலான கொழுப்புகள், இதயத்தைப் பாதுகாப்பதற்கு உதவக்கூடிய ஒற்றை நிறைவுறா கொழுப்புகளாகும்.

சோடாக்கள் மற்றும் வீறியம் நிறைந்த இதர பானங்களுக்குப் பதிலாக ஒரு கப் பச்சை தேநீர் பருகுவது நல்லது. சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்கள், உலக அளவில் பரவியிருக்கும் உடல் பருமன் தொற்று ஏற்படுவதற்கு பங்களிக்கக்கூடிய துடன், இதய இரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் மற்றும் சில புற்று நோய்கள் ஏற்படுவதற்குரிய அபாயத்தை மக்களுக்கு உருவாக்கக்கூடும்.

எனவே தாகம் ஏற்படும் போதெல்லாம் சோடா அருந்துவதை தவிர்த்து அதற்குப்பதிலாக ஒரு கப் பச்சை தேநீர் அருந்தவும், பச்சை தேநீரில், உயிர் வளியேற்ற சேதத்தை எதிர்க்கக்கூடிய உடலிலுள்ள அணுக்களை பாதுகாப்பதற்கு உதவக்கூடிய உயிர் வளியேற்ற எதிர்ப்புகள் நிறைய உள்ளன. பல்வேறு வாழ்க்கை முறை நோய்களிலிருந்து பச்சை தேநீர் பாதுகாப்பளிப்பதாக நம்பப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/78341.html#ixzz2yL8H8OXy

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன? - கி.வீரமணி


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி

ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;

நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.

பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?

தமிழ் ஓவியா said...

இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.

2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.

3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)

இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?

இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.

1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.

எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!

கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?

இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்

இ) பொது சிவில் சட்டம்.

இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?

வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!

3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?

வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


8.4.2014முகாம்: கோவை

Read more: http://viduthalai.in/e-paper/78340.html#ixzz2yL8S4pb7

தமிழ் ஓவியா said...


தேர்தல் களம்


தி.மு.க. தலைமைக் கழகம் எச்சரிக்கை

தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று உளவுத்துறை சொன்ன நிலையில் 10ஆம் தேதிக்குப் பின் பணப்பட்டுவாடா செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது என்றும், கழகத் தோழர்களும், வேட்பாளர்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் திமுக தலைமைக் கழகம் எச்சரித்துள்ளது.

ம.பி. யில் பிஜேபி ஓட்டுக்கு ரூ.500 பணமாம்!

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக பாகிரத பிரசாத் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கட்சி டிக்கெட் வழங்கிய 24 மணி நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அவரும் அந்த தொகுதியைச் சேர்ந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. அரவிந்த் படோரி யாவும் அட்டெர் என்ற பகுதியில் பிரச்சாரம் செய்தனர். அப்போது இருவரும் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வீதம் பணம் கொடுத்தனர். இதை அங்கிருந்த காங்கிரசார் பார்த்து வீடியோ எடுத்து விட்டனர். இதே போல் கத்ஜோர் என்ற நிறுவனம் சார்பில் பா.ஜனதா மறைமுகமாக அதன் உறுப்பினர்களுக்கு தேர்தலையொட்டி பணம் கொடுத்தது. இதையும் காங்கிரசார் வீடியோ எடுத்தனர்.

இந்த வீடியோ ஆதாரங்களை போபாலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யதேவ் கதாரே போபாலில் செய்தியாளர்களிடம் போட்டு காண்பித்தார். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. வீடியோ ஆதாரங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறும் போது, இந்த புகார் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அனுப் பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால் பா.ஜனதா வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெட்டும் - குத்தும்

மின்வெட்டுப் பிரச்சினை காரணமாக அதிமுக வெற்றியைப் பாதிக்காது.

- சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

ஆமாம் திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறையென்றால் அது வெட்டு!

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்றால் - இரட்டை இலையில் குத்து!

ஆகா என்னே வெட்டு - என்னே குத்து!

இது போதுமா?

2013ஆம் ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் இந்த அமைப்புகளால் நாட்டில் நிகழ்ந்த மதக் கலவரங்கள் 828; படுகொலைகள் 133.

இது போதுமா? ஆட்சியைப் பிடித்து, கொலை கொள்ளைகளைத் தேசிய மயமாக்கத்தான் துடிக்கிறது பி.ஜே.பி.! அதிமுகவும் கூட்டுச் சேர்ந்தால் தமிழ்நாட்டில் நடக்கும் படுகொலைகள், கொள்ளைகளையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ளலாம்.

இரகசியம் இல்லை

பா.ஜ.க.வுக்கும் - அதிமுகவுக்கும் இடையில் எவ்வித இரகசிய உடன்பாடும் இல்லை.

- பொன்.இராதாகிருஷ்ணன், தலைவர், தமிழ்நாடு பிஜேபி.

உண்மைதானே! இதில் இரகசியம் என்ன வேண்டி யிருக்கிறது? பிஜேபியைக் குறை கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பேசுவதில்லை; அதேபோல ஜெயலலிதாவைக் குறைகூறி பி.ஜே.பி., தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுவதில்லை. இதற்கு என்ன பொருள்? வெளிப்படையாகவே அதிமுக பிஜேபி கூட்டு இருக்கிறது என்பது தானே!

புதுச்சேரி மயக்கம்!

பி.ஜே.பி.யோடு என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியில் கூட்டு வைத்துக் கொண்டு இருந்தாலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை இந்தக் கூட் டணியில் உள்ள பா.ம.க., என்.ஆர். காங்கிரசை எதிர்த்துப் போட்டிப் போடுகிறது. இதனை கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் ஆதரிக்கின்றன. என்ன கூட்டோ - வறுவலோ! புடலங்காயோ! புதுச்சேரி என்றாலே எல்லாம் மயக்கம் தானோ!

காலதாமதம் காம்ரேட்!

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து ஒதுக்கப்பட்டோம்!

- சுதாகர்ரெட்டி சி.பி.அய். இந்திய பொதுச் செயலாளர்

ஒருவரை புரிந்து கொள்ள இடதுசாரிகளுக்கு இவ்வளவுக் காலம் தேவைப்பட்டுள்ளதா? பேஷ்! பேஷ்!!



அச்சுறுத்தலோ!

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட இம்ரான் மசூத் நரேந்திரமோடியைத் துண்டு துண்டாக வெட்டுவோம் என்று பேசியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது - அவர் கைது செய்யவும் பட்டார்.

இது குறித்து ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேர்தல் முடிந்த பின் யார் யாரை வெட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று பேசியுள்ளார். தேர்தலா - கசாப்புக் கடையா என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/78350.html#ixzz2yL92wTZh

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை


பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை -_ தமிழனுக்குப் போகக்கூடாது; - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/78351.html#ixzz2yL9GDlWH

தமிழ் ஓவியா said...

அன்றே சொன்னார் தமிழர் தலைவர்

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது. இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது. நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தவர்; ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத்துவா கொள் கையை அப்பட்ட மாகக் கடைப்பிடிப்பதில் சற்றும் கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் - இணைய தளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப் தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மை யான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத் துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படை யாகவே இறங்கி விட்டது!

17.2.2014 விடுதலை அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தினார். இன்று அதன் உண்மை உணரப் படுகிறது. அன்று பி.ஜே.பி.யின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று முன்வரிசைக்கு, பி.ஜே.பி.க்குக் கட்டளையிடும் இடத்திற்கு வந்து விட்டது.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டவர் தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

மோடி பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் அவரை ஏன் முன்னிறுத்தியுள்ளது? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதா என்ற கருத்து மக்கள் மத்தியிலே தெரிந்த ஒன்று. (இதற்கு முன்பேகூட பா.ஜ.க.வில் உள்ள உமா பாரதியும், கல்யாண்சிங்கும், (உ.பி.) பங்காரு லட்சுமணனும் (பி.ஜே.பி. தலைவராகவே இருந்தவர்) தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதியும் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளனர்.)

இந்த முத்திரை பா.ஜ.க.மீது விழுகின்ற காரணத்தால் அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஒரு பிற்படுத்தப் பட்டவரான மோடியைத் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தியுள்ளது.

மோடி யார் என்பதற்கும் பெரிய விளக்கம் தேவைப் படாது! அவர் குஜராத்து மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள்மீது அரசப் பயங்கரவாத மாக மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டத்தை ஏவி, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

எனவே சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதார் கிடைத்தால் அதனைத் தக்க முறையில் பயன்படுத்திட பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தவறிடுமா?

நிஜப்புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாகவே குதிக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சிந்தித்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோடியை ஆர்.எஸ்.எஸ். தனக்குக் கிடைத்த போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் இரகசியம் என்ன என்பது எளிதில் விளங்குமே!

சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனம் ஒன்றில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆற்றிய உரையை DNA - Daily News and Analysis வெளி யிட்டதுண்டு. Brahmins kept Indian Culture Alive என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது.

“Bramins are custodians of Indian Culture and shastras. The Brahmin Community has helped preserved Indian Culture. If our culture is still thriving it is because of Brahmins he said that a Social system can be created by the Methods by the gun of Shastras”

இந்தியக் கலாச்சாரம் உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்ற தலைப்பில் வெளிவந்த அந்தச் செய்தியில் நரேந்திரமோடி பேசினார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம் சாஸ்திரங்கள் இவற்றின் பாதுகாவலர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் பார்ப்பனர்களே ஆவார்கள்!

நமது கலாச்சாரம் உயிரோடு இன்று வரை இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பார்ப்பனர்களே!

ஒரு ஒழுங்கு முறையான சமூக அமைப்பு முறையை சாஸ்திரங்கள் என்ற துப்பாக்கியால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்னவர் தான் இந்த நரேந்திரமோடி.

அப்படி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த நரேந்திரமோடியைத்தானே கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்திட முன்வரும். பார்ப்பனர்களுக்கு நல்ல அடிமையாகக் கிடைத்தவர்தான் இந்த மோடி!

இந்த மோடி ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள் கையைப் பாதுகாப்பதில் நிகர் அற்றவர். மலம் அள்ளும் தொழில் என்பது அவர்களின் கர்மப் பலன் அந்தப் பணி ஒரு தெய்வப் பணி என்று சொன்னவர் (மோடியின் கர்மயோக நூலில்)

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (11.2.2007) நடத்தியதுண்டு.

குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தண்ணீர்த் தொட்டியில் உயர் ஜாதிக் காரர்களுக்கு ஒரு நேரம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு வேறொரு நேரம் என்று எழுதி வைத்துள்ளனர். என்றால் - இதன் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான நகர சுத்தித் தொழிலாளர்கள் அங்கு சமீபத்தில் போராடினார்களே!

ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள்கையின் பாதாரவிந்தங்களைத் தழுவிடக் கூடியவர் மோடி என்பது விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் கொள்கையால் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் - வரும் தேர்தலில் இதற்கொரு பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/78355.html#ixzz2yL9X726t

தமிழ் ஓவியா said...

அதேவதோதராதான்


நரேந்திர மோடி உ.பி மாநிலத்தில் வாரணாசியிலும், குஜராத் மாநிலத்தில் வதோதரா நகரிலும் போட்டி போடுகிறார் அல்லவா? அந்த வதோதராவில் மோடி ஆடிய ஆட்டம் என்ன? படியுங்கள் புரியும்.

2002 மார்ச்சு முதல் தேதி இரவு குஜராத் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் கூடக் கரும்புள்ளி நாள்தான்.

குஜராத் மதக்கலவரத்திலேயே மிகச் கொடூரமானது வதோதரா நகரில் இருந்த பெஸ்ட் பேக்கரி என்னும் நிறுவனத்தில் சங்பரிவார்க் கும்பல் அரங்கேற்றிய கொலை வெறியாட்டம்!

பேக்கரியின் உரிமையாளர் ஹபி புல்லா ஷேக் உள்பட 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கை கால்களைக் கட்டி தீக்கு இரையாக்கப்பட்டனர்.

குடும்பத்தலைவி செஹ்ருன்னிசா, மூத்த மகன் நஃபி துல்லா, மகள் ஜாஹிரா ஷேக், மருமகள் மற்றும் இரு பேரக் குழந் தைகள் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்ததால் தப்பித்தனர்.

இந்தக் கொடூரக் கொலையினை நேரில் பார்த்த சாட்சி ஜாஹிரா
மறுநாள் காவல்துறை பெயரளவில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.

21 கொலையாளிகள் மீது புகார் கொடுத்தார் ஜாஹிரா. தொடர்ந்து சங்பரி வார், பா.ஜ.க கும்பலின் அச்சுறுத்தல் அவருக்கு இருந்து வந்தது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவத்சவா என்பவர் இந்தப் பெண்ணை அச்சுறுத்தி வந்தார். அதன் காரணமாக நீதிமன்றத்தில் அப்பொழுது ஒரு முறை பல்டி அடித்தார். விளைவு வழக்குத் தள்ளுபடியானது; குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட் டனர். (27-6-2003)

இதனை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் அழுத்தமான குரல் கொடுத்த நிலையில் வேறு வழியின்றி குஜராத் பாஜக அரசு (நரேந்திர மோடி முதல் அமைச்சர்) உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 5 மாதங்களுக் குப்பின் உயர்நீதிமன்றம் மேல் முறையீட் டைத் தள்ளுபடி செய்தது (16-12-2003).

இதற்கிடையே விரைவு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்த 10 நாள் இடைவெளியில் மும்பையில் ஜாஹி ராஷேக் செய்தியாளர்களிடம் அதிர்ச்சி தரும் உண்மைகளைப் போட்டு உடைத் தார்.

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் தன் னையும் எஞ்சியுள்ள குடும்பத்தினரையும் அச்சுறுத்தினார். நீதிமன்றத்தில் உண்மை யைச் சொன்னால் குடும்பம் தீ வைத்துக் கொளுத்தப்படும் என்று எச்சரித்ததால் நீதிமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாகக் கூறினேன் என்றார்.

நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழு என்னும் அமைப்பை நடத்தி வரு பவர் டீஸ்டா செடல்வாட் - நீதிபதியின் மகளாவார் இவர்.

ஜாஹிரா குடும்பத்தினர் கொல்லப் பட்ட வழக்கினை கையில் எடுத்துக் கொண்டார் இவர். உச்சநீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்தார்.

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜூ, அரிஜித் பசாயத் ஆகிய இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் விரைவு நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் இரண்டையும் கடுமையாகச் சாடினார்கள்.

அவர்கள் பிறப்பித்த ஆணையின் சாரம்...

அது சட்டத்தின் பார்வையில் விடு தலையே அல்ல. தீர்ப்புரை என்ற பெய ரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவையல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.

மாகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப் படுத்தும் படியான அளவிற்கு சிலர் போய் விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராள மான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது இந்த சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானமாகும்.

பாதுகாப்பற்ற பெண்கள், அப்பாவிக் குழந்தைகளை எரித்துக் கொன்றார்கள். மனிதநேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்து தான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப் போய் விட்டதோ? ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான வீடுகளில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்?

குஜராத் உயர்நீதிமன்றத்தின் அணுகு முறையே சரியல்ல, அதன் தீர்ப்பில் குறை பாடுகளும், ஓரவஞ்சகமும் ஒருதலைப் பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப் பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு.

நீதி வழங்கும் நெறிமுறைகள் உதா சீனப்படுத்தப்பட்டுள்ளன. பழிக்கப்பட் டுள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள் ளன. தான் விரும்பியதை செய்யும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் புலனாய்வோ கடன்காரத் தனமாக, ஏனோ தானோ எனச் செய்யப் பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையிலோ, செய்யப்படவில்லை. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை.

குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பகுதி நீக்கப்பட்டது

ஜாஹிரா ஷேக் தரப்பின் நியாயத்தை தன்னலமற்ற சமூக சேவகி டீஸ்டா, செடல் வாட் எடுத்துக்கூறினார். இது குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஜாஹிரா அச்சுறுத்தப்பட்டதால் விரைவு நீதிமன்றத்தில் உண்மையை சொல்ல முடியவில்லை என செடல்வாட் வாதிட்டது, அவர் மீது கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. மற்றவர்களை களங்கப்படுத்தவே அவர் ஜாஹிராவைத் தவறாக பயன்படுத்தினார் என உயர் நீதிமன்றம் கூறிய வாசகத்தை அந்தத் தீர்ப்பிலிருந்தே நீக்கிவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது.

இந்தப் புகழ் பெற்ற தீர்ப்பில்தான் குஜ ராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி நீரோ மன்னனுக்கு ஒப்பிடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

வழக்கைப் புதிதாக நடத்த வேண்டும் என்றும், அதுவும் குஜராத் மாநிலத்திற்கு வெளியே மும்பையில் நடத்தவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. 2004 அக்டோபர் 4-ஆம் தேதி மும் பையில் விசாரணையும் தொடங்கப் பட்டது.

இந்த வழக்கை நாடே ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்; அரசியலில் எதிரொலிகள் கிளம்பும். அனேகமாக நரேந்திரமோடி ஆட்சிக்கு வேட்டும் வைக்கப்படும் என்ற கருத்து பரவலாகக் கிளம்பிக் கொண்டிருக்கும் ஒரு தரு ணத்தில், முக்கிய சாட்சியான ஜாஹிரா ஷேக் பல்டி அடித்தார் என்கிற செய்தி எளிதாக நம்பமுடியாததுதான்; ஆனாலும் அவர் பல்டியடித்தார் என்பது மட்டும் உண்மையே!

யார் இந்தக் குடும்பத்துக்காகத் தொடக்க முதல் ஆதரவுக்கரம் நீட்டி மனித நேயத்துடன் தோள் கொடுத்தாரோ அந்தச்சமூகச் சேவகி டீஸ்டா தன்னையும், தம் குடும்பத்தையும் மும்பைக்குக் கடத்திக் கொண்டு வந்ததாகவும் உண்மைக்கு மாறாகப் பொய்யான தகவல்களைச் சொல்லச் சொன்னதாகவும் வதோதரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.

நவம்பர் 3-ஆம் தேதி மும்பையில் தனி நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லி யிருக்க வேண்டிய ஜாஹிரா, மும்பையை விட்டு தப்பித்துச் சென்று விட்டார். இவரின் அண்ணனும் அவ்வாறே சாட்சியம் சொல்லாமல் தப்பிவிட்டார்.

தமிழ் ஓவியா said...

இந்தித் திடீர் பல்டி இந்தியாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரத மர் மன்மோகன் சிங்கே இந்த நிலை கண்டு தன் அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளார். இந்த பல்டியின் பின்னணியில் நரேந்திரமோடியும் அவரின் ஆட்களும், அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதில் அய்யமில்லை.

ஜாஹிரா உண்மையைச் சொன்னால் தங்கள் சகாப்தம் அக்கணமே முடிந்து விடும் என்று அவர்களுக்கு மிக நன்றா கவே தெரியும் - அதற்காக எந்த விலை யையும் கொடுக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்களா? அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு இது எளிதான வேலையும் ஆயிற்றே!

உச்சநீதிமன்றத்தில் கடும் குட்டு வாங்கிய பிறகும் நரேந்திர மோடி என்கிற நீரோவின் நச்சுக்கைகள் நீண்டு கொண்டேதான் போகின்றன.

சமூக நலச்சேவகி தூண்டுதலால்தான் பொய்ச் சொன்னேன் என்று இப்பொழுது கூறும் ஜாஹிரா அன்று பெஸ்ட் பேக் கரியில் தன் தந்தையும், தன் குடும்பத் தினரும் படுகொலை செய்யப்பட்டதற்கு மறுநாள் (2.3.2002) காவல் துறையிடம் 21 பேர்கள் மீது புகார் கொடுத்தாரே - அப்பொழுது அவரைத் தூண்டியவர்கள் யார்? டீஸ்டா அப்பொழுது அடிபடாத பெயராயிற்றே!

மாறி மாறிப் பேசுவது என்பது ஜாஹிரா அம்மையாருக்கு வாடிக்கையாகப் போய் விடவில்லையா? வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...

எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சோ ராமசாமியும், எஸ்.குரு மூர்த்தியும் மனித உரிமை அமைப்புகள் மீதும் சமூகக் சேகவர்கள் மீதும், நாலு கால் பாய்ச்சல் பாய ஆரம்பித்து விட்டனர். டீஸ்டா அம்மையார் மீது கணை தொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இது தான் சந்தர்ப்பம் என்று மனித உரிமை அமைப்புகளே மோசம் என்று அவதூறு மழையைப் பொழிந்து தள்ளியுள்ளனர். (துக்ளக் 17.11.2004) ஜாஹிரா ஷேக்கின் அந்தர் பல்டி களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தயாராகவும் இல்லை.

அவர்களுக்கு வேண்டியது இப்பொ ழுது கிடைத்துவிட்டதே! அதைப்பற்றி யெல்லாம் நடு நிலையோடு அவர்களால் எப்படி சிந்திக்க முடியும்?

ஜாஹிராஷேக் பல்டி அடித்து விட்ட தால் பெஸ்ட் பேக்கரி படுகொலையை நியாயம் என்று காட்டப்போகிறார்களா? நரேந்திர மோடி அரசு குற்றமற்றது என்று கோபுரத்தின் மீது ஏறிக் கூவப் போகி றார்களா? அவர்கள் அப்படி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பாஜக, சங்பரிவார்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் ரத்தபாசம் உண்மை களைக் காலில் - போட்டு மிதிக்கச் செய்து விடுமே.

என்னதான் ஜாஹிராக்கள் அந்தர் பல்டி, ஆகாயப்பல்டி அடித்தாலும் அவ ரையும் அவரது அண்ணன் நஃபிதுல்லா வையும் தாண்டிய இன்னொரு கண் கண்ட சாட்சி இருக்கத்தான் செய்கிறது.

தாபெல் அகமது அபிபுல்லாவின் சாட்சி இருக்கவே இருக்கிறது. அவர் பெஸ்ட் பேக்கரியில் வேலை செய்தவர்.

கொலைகளை நேரில் கண்ட சாட்சி அவர்.

எப்படி எப்படி எல்லாம் சங்பரிவார் வன்முறைக் கும்பல் அந்தக் குடும் பத்தைக் கொலை செய்தது என்பதை தனி நீதிமன்றத்தில் விளக்கமாகவே கூறியுள் ளார் (27.10.2004)

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட குற்ற வாளிகளில் 7 பேர்களை அடையாளம் காட்டினார் அகம்மது அபிபில்லா.

பெஸ்ட் பேக்கரியில் இருந்த 14 பேர் களையும் கை கால்களைக் கட்டி பேக் கரிக்குள் தள்ளி தீ வைத்துக் கொளுத்திய கொலையை அப்படியே எடுத்துத்துரைத் துள்ளார் தனி நீதிமன்றத்தில்.

அந்தச் சாட்சியையும் வளைக்க பாசி சக்கும்பல் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் தான் செய்யும். ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதை போல மனித உரிமைக்காக இந்தப் பிரச் சினையில் பாடுபட முன்வந்த டீஸ்டா வையே கைது செய்ய யூகம் வகுக்கப் படும் நிலையில், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்,

குற்றவாளிகள் கோலோச்சினால் இந்தக் குளறுபடிகளும், கொடுமைகளும் பட்டொளி வீசிப் பறக்கத்தானே செய்யும்!

இந்த வதோதராவில் தான் இப்பொ ழுது மோடி போட்டிப் போடுகிறார்.

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-2/78358.html#ixzz2yLA4qXFA

தமிழ் ஓவியா said...


கொள்கை அமலாக்கத்தில் குஜராத் பெரும் சரிவு


சிக்கிம்,கோவா, மிசோரம், பஞ்சாப், தில்லி ஆகியவை இந்திய மாநிலங்களில் மிகவும் சிறிய மாநிலங்களில் சில . ஆனால் இவை கொள்கை களை அமலாக்குவதில் சிறந்தவைகளாக இருக்கின்றன. ஆனால் குஜராத் போல் இந்தியாவும் வளர்ச்சி பெற வேண்டுமானால், மோடியைப் பிரதமராக தேர்ந்தெடுங்கள் என்று பக்கவாத்தியங் களுடன் பாட்டுப்பாடி வரும் பாஜகவினர், கொள்கை அமலாக்கத்தில் குஜராத் அடைந்துள்ள சரிவினை மக்களிடம் இருந்து மறைத்து விடுகின்றனர். இவர் களுக்கு பயன்படாதவற்றை மறந்து விடும் மறதி என்ற வியாதி வந்து விட்டது போலும். கடந்த பத்தாண்டுகளில் குஜராத் கொள்கை அமலாக்கத்தில் 16ஆம் இடத் துக்கு சரிந்துள்ளது. காங்கிரஸ் ஆளும் கேரளா 21ஆம்இடத்துக்கு வீழ்ந்துள்ளது என்று ஒரு செய்தித்தகவல் கூறுகிறது. சோன்பட்டில் இருந்து செயல்படும் ஓ.பி.ஜிண்டால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தஜிண்டால் அரசு மற்றும் பொதுக் கொள்கை கல்விக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்துடன் இணைந்து தயாரித்த இந்தியா பொதுக்கொள்கை அறிக்கை, 2014 அண்மையில் வெளியிடப்பட்டது.


தமிழ் ஓவியா said...

அதில் இத்தகவல் இடம் பெற்றுள் ளது. இந்தஅறிக்கை பிழைக்கும் வாய்ப் புகள், சமூக வாய்ப்புகள்(கல்வி, சுகாதாரம், வருமானம் உள்ளிட்டவை), சட்டத்தின் ஆட்சி (காவல்துறை போதுமானம், குற்ற விகிதம், நீதிமன்ற தீர்ப்புகள் விகிதம்), பௌதீக கட்டமைப்பு மேம்பாடு (கழிவறைகள் அருகாமை, மின்சாரம், குடிநீர், சாலை, வீட்டு வசதி) ஆகியவை களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத் தப்பட்டது. குஜராத் இந்த காரணிகளின் அடிப்படையில் மிகப் பெரும் சரிவைக் கண்டுள்ளது. 1981ஆம்ஆண்டில் 7ஆம் இடம், 1991ஆம் ஆண்டில் 13ஆம் இடம், 2001ஆம் ஆண்டில் 11ஆம் இடம், 2011ஆம் ஆண்டில் 16ஆம் இடம் நோக்கி சரிந்துள்ளது என்று ஆய்வாளர்கள் ராஜீவ் மல்கோத்ரா, பார்த்தா சாஹா மற்றும் கீதிகா ராஹீ ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். குஜராத்தின் பிழைப்பு வழிகள் மற்றும் சமூக காரணிகள் சற்று முன்னேறியுள்ள போதிலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் வாழ்நிலை காரணிகள் பெரிதும் சரிந்துள் ளன. வாழ்நிலை, சட்டத்தின் ஆட்சி, பௌதீக கட்டமைப்பு ஆகியவற்றில் கேரளா மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள் ளது. தேசிய சராசரியை விட மோசமாக உள்ளது. சமூக வாய்ப்பு காரணிகள் மட்டும் வலுவாக உள்ளது.

பெரிய மாநிலங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவை குஜராத்தை விடசிறப்பான நிலையில் உள்ளன. மேற்கு வங்காளம், அசாம், மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும்ஒடிசா ஆகியவை அடிமட்டத்தில் உள்ளன. தேசிய அளவில் கொள்கை அமலாக்க குறியீடு ஓரளவு உயர்ந்துள்ளது. இது பிழைப்புக்கான வாய்ப்புகள் விரிவாக்கத் தில் தேக்கம், சட்டம் ஒழுங்கு மோச மடைதல், நீதிமன்றத்தீர்வுகள் கிடைக்கும் சூழல் ஆகியவற்றில் சரிவு ஆகிய காரணி களில் சமரசம் செய்து கொள்ளப்படு கிறது. 2001ம் ஆண்டுக்குப் பின்பு பௌதீக கட்டமைப்பு மேம்பாடு, சமூக வாய்ப் புகள் ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிக மாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் வறுமை பூகோள ரீதியாக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய சில குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதலாகக் குவிந்து வருகிறது. கிராமப்புறம், நகர்ப் புறம் என்ற வித்தியாசமின்றி பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய சாதியப்பிரிவு மக்களிடத்தில் ஏராளமாகக் காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் முஸ்லீம்களிடமும், கிராமப்புறங்களில் கிறிஸ்தவர்களிடமும் வறுமைபெருமளவு நிலவுகிறது. அத்துடன், சொத்தில்லாத கூலிகள் மற்றும் பெண்களிடத்திலும் வறுமை தாண்டவமாடுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Read more: http://viduthalai.in/page-2/78362.html#ixzz2yLASmV7j

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர்


இணைந்த சமூக நீதி அணி - கலைஞர் தலைமையிலான அணி
இதன் வெற்றி மே 16இல் தெரியும் - தமிழர் தலைவர் ஆணித்தரம்

திருப்புவனம், ஏப். 8- ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்த இந்த அணி தான் சமூக நீதி அணி - கலைஞர் தலைமையிலான அணி அதன் வெற்றி உறுதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். திருப்புவனத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேசுகையில் அவர் கூறியதாவது:-

பலமான அணி

நேற்று பெய்த மழையில் முளைத்தது அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம்! இந்த அணியைப் (ஜனநாயக முற் போக்கு கூட்டணி) போன்று பலமான அணி, தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே கிடையாது. மே 16ஆம் தேதி தேர்தல் முடிவில் தெரியும்! இந்த அணிதான் அதிக இடங்களைப் பெற்று வெற்றிப் பெறப்போகும் அணி என்று தெளிவாக தெரியும்.

சமுதாய கூட்டணி என்றால் என்ன?

ஒடுக்கப்பட்ட மக்கள் இதுவரை தனித்தனியாக இருந்தார்கள். அவர்களுக்குள் பிரிவு இருந்தது. அந்த பிரிவை ஒன்றாக்கியவர் டாக்டர் கலைஞர். சிறுபான்மையினரும் சேர்ந்துள்ள அணி இதுவே! நல்ல ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு அடையாளம் சிறுபான்மையினருக்கு வாய்ப் பளிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஆள வேண்டும். சிறுபான்மையினர் வாழவேண்டும். இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம்.

திராவிடர் இயக்கம் பிறப்பே சமூக நீதி வளர்க்கத்தான். இன்றைக்கு, அந்த சமூகநீதியை நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும் அணி இந்தக் கூட்டணிதான். இது அரசியல் கூட்டணி என்று யாரும் எண்ண வேண்டாம்!

பத்திரிகைக்கும் - உண்மைக்கும் தொடர்புண்டா?

நம் நாட்டுப் பத்திரிகைக்கும், உண்மைக்கும் சம்பந்தம் (தொடர்பு) கிடையாது. செத்துப்போன கோயபல்ஸ் உயிர் ஊட்டினால் எப்படி இருப்பான்? அதுபோலத்தான். நம் நாட்டு ஊடகங்கள் எல்லாமே! ஏனென்றால், உண்மைக்கு மாறாக எழுதுகிறவர்கள்.


தமிழ் ஓவியா said...

இந்தியாவின் கதாநாயகன்

போனமுறை, திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இந்தியாவின் கதாநாயகன் என்று பெயர். இன்னொரு பெயர் என்னவென்றால், சொல்வதையே செய்வார்கள்! செய்வதையே சொல்வார்கள்! இதுதான் இந்த அணிக்குப் பெருமை. ஆனால், அந்த அணிக்கு (அதிமுக) என்ன பெயர் என்றால், இரட்டை வாக்கு, இரட்டை நாக்கு, இரட்டை இலை!

பேசு நா இரண்டுடையாய் போற்றி! போற்றி! என்று அறிஞர் அண்ணா அவர்கள் சிறப்பாக சொல்வார்கள். அதுபோல, இந்த அம்மையாருக்கு இரட்டைப் பேச்சு, இரட்டை நாக்கு எல்லாமே இரட்டை.

வடக்கே வேண்டுமானால், இதுமாதிரி நடக்கலாம். பெரியார் பிறந்த இந்த மண்ணிலே நடக்க முடியாது. பெரியார் பிறந்த மண் மட்டுமல்ல. அண்ணா ஆண்ட மண், கலைஞர் ஆண்ட மண், மீண்டும் ஆளப்போகும் மண். இந்த மண்ணிலே மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் தான் ஏமாறப் போகிறார்கள்.

இங்கே அணு உலை எதிர்ப்பு! அங்கே கையெழுத்தா?

இங்கே (தமிழ்நாட்டில்) பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நண்பர்கள் அணு உலையை எதிர்க்கிறார்கள். ஒரு அணு உலைக்கு எதிர்ப்பு, அங்கே மோடி பிரதம வேட்பாளராக அறி விக்கப்பட்ட பிறகு ஒன்பது அணு உலைக்கு கையெழுத்து போட்டுள்ளார். இதிலிருந்தே தெரிகிறதல்லவா? இது முரண்பட்ட கூட்டணி என்று.

தமிழ்நாட்டில் செல்லாது...

இங்கே (தமிழ்நாட்டில்) மதவாதம் செல்லாது என்று புரிந்த பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., இங்கே ஆளக்கூடிய அம்மையாருடன் மறைமுக திட்டத்திலும் கூட்டு, அது ஒரு தனி அணி. நம்முடைய நண்பர்கள் கம்யூனிஸ்ட் நண்பர்கள் பாவம். நம்பிக்கையுடன் இருந்து சகிப்புத் தன்மையின் எல்லைக்கே சென்று விட்டார்கள். இதுதான் நம்ப வைத்துக் கழுத்தை அறுப்பதா? பா.ஜ.க. நேரிடையாக உள்ள கூட்டணி தனி. அவர்கள் வேறுபட்டவர்கள்.

மோடி - சர்வரோக நிவாரணியா?

நம் நாட்டிலே (தமிழ்நாட்டிலே) சீட்டணிக்காக கூட்டணி யில் இருக்கிறார்கள். நம்ம நடிகர் அவர் சொல்கிறார். மக்களே! மக்களே! என்று மக்களைப் பார்த்து, உங்களுக்கு மின்சாரம் இல்லையா? மோடிக்கு ஓட்டுப் போடுங்க! அரிசி இல்லையா - மோடிக்கு ஓட்டுப் போடுங்க? ஊழல் ஒழிய வேண்டுமா? மோடிக்கு போடுங்கள் மோடி என்ன சர்வரோக நிவாரணியா? நம் ஊரில் சொல்லுவார்கள் பாருங்க! முப்பது நோய்க்கு ஒரே நிவாரணி, ஒரே மாத்திரை. இதைச் சாப்பிட்டால் அனைத்து நோயும் போய்விடும் என்பார்களே. அதுபோல, மக்களே! மக்களே! என்று சொல்கிறாரே ஒழிய, எதிரிலே இருக்கிறவரையே அவருக்குத் தெரியாது. அரசியலே தெரியாது; அது வேறு செய்தி. நம்மிடமே மோடி வித்தை காண்பிக்கிறார்கள். அது நம் நாட்டு மக்களிடம் செல்லுபடியாகுமா?

மோடி அவதாரம்!

மோடி ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு அவதாரம் எடுப்பார்.

இங்கே! தமிழ்நாட்டில் வந்தால், தமிழக சகோதர, சகோ தரிகளே! தமிழ் எங்கள் உயிர் என்று எழுதிக் கொடுத்ததைப் பேசுவார். அங்கே போனவுடன் குஜராத்துக்கு (மற்ற இடங்களுக்கு) போனால் யாதவப் பெருமக்களே நீங்கள் தான் பசுவைத் தெய்வமாகக் கும்பிடுகிறீர்கள். நீங்களே மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்கிறீர்களே! அது நியாயமா? பசுவைக் கொல்வது பாவம் இல்லையா? எவ்வளவு கொடுமை! செய்யலாமா? செய்யலாமா? என்பார். ஆனால் இந்தியா உலக நாடுகளில் தோல் ஏற்றுமதியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில், முதலிடம் வகிக்கிறது எண்ணிப் பாருங்கள் அதில் முதலிடம் வகிப்பது மோடியின் குஜராத் மாநிலமே!

தலைக்கு - 8, வாலுக்கு - 14?

பதவி வெறிக்காக சீட்டணியைப் பாருங்க! கூட்டணியில் தலைமை தாங்குகிறது பா.ஜ-க. அதுக்கு இடம் 8, அதில் அங்கம் வகுப்போருக்கு இடம் 14. எது தலை? எது வால்? என்ற வித்தியாசமே இல்லாமல் வால் பகுதியைக் காட்டி இதுதான் தலை என்றால், இவங்க ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லமாட்டோமா? நம்மை ஏமாற்றுகிறார்கள். இதுதான் இதற்கு அர்த்தம்! இதிலிருந்தே தெரிகிறதல்லவா? இது முரண்பட்ட கூட்டணி என்று தெளிவாகிறதே!

ஜெவுக்கு எதிரி கொசு...!

இங்கே மின்வெட்டு பற்றிப் பேசவேண்டாம். ஏனென்றால், அது தினம், தினம், வந்துபோகும்! நாம் இங்கே (மேடையில்) உட்கார்ந்து இருக்கிறோம்! போயிட்டு, போயிட்டு (நின்று, நின்று) மின்சாரம் வருகிறது. அம்மையார் ஆட்சியில் - மூன்றே மாதங்களில் மின்சாரம் சரி செய்யப்படும், மின்வெட்டு இருக்காது! என்று தேர்தல் வாக்குறுதி அளித் தாரே! - செய்தாரா? மூன்றாண்டுகள் ஆகிறதே! அந்த அம்மா ரொம்ப தைரியமானவர்கள். நீங்கள் மின்சாரத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன் என் கிறாரே! கவலைப்படுவது நாங்கள்தானே! மக்கள் தானே!

அம்மையார் ஆட்சிக்கு நாங்கள் எதிரி அல்ல! கொசுதான் எதிரி! எங்கு பார்த்தாலும் கொசுக்கடி தாங்க முடியவில் லையே! மக்கள் விழித்துக் கொள்கிறார்களே! தூங்க முடிய வில்லையே!

இப்போது உங்களுக்கு எதிராகவும் மக்கள் விழித்துக் கொண்டார்கள். அது மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் முடிவில் தெரியும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/78374.html#ixzz2yLAuLc1Z

தமிழ் ஓவியா said...


திமுக ஆட்சியை ஒரு கணம் நினைத்துப்பாரீர்! திமுக ஆட்சியில் திருப்திகர நிதிநிலைமை தி இந்து ஏடு பாராட்டு


தி இந்து ஆங்கில நாளேடு 25.10.2010 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்:

பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வரும் நிலையில்; அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் நிதியாண்டு நடுவில் அதிகரிப்பு ஆகியவை களுக்கு மத்தியில்; மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்று அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கு வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கான இலக்கு களை அடைவதற்கு ஏதுவாக நிதிநிலை இருக் கிறது என்று வலியுறுத்துகிறார், நிதித்துறை முதன் மைச் செயலாளர் கே.சண்முகம்.

வருவாய் பற்றாக் குறைக்கும் மொத்த வருவாய் வரவுகளுக்கும் இடையிலான விகிதம் 5.38 சதவிகிதமாகவும்; நிதி பற்றாக்குறைக்கும் ஒட்டுமொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகி தம் 3.72 சதவிகிதமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

சமீபத்திய நெறிமுறைகளின்படி, அடுத்த நிதியாண்டில்தான் (2011-2012) வருவாய் பற்றாக் குறை குறைக்கப்பட்டு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நிதிப்பற்றாக்குறை மூன்று சதவிகித மாகக் குறைக்கப்பட வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, நமது வருவாய் வரவு ஏறத்தாழ கூடுதலாக ரூ. 3000 கோடி அளவுக்கு உயரும். மத்திய அரசிலி ருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வரி வருவாய் பங்கீடு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்ட ணங்கள் மூலம் வருவாய் பெருமளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது ஏற்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் மீது மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வருவாய் உயர்வின் காரணமாக கூடுதல் வரி வருவாய் பங் கீடு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விதிப்பு மூலம் வருவாயானது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான அள வைக் காட்டிலும் இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் மின்சார மானியம், முதியோர் ஓய்வூதியத்தொகை, சத்துணவுத் திட்டம் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட சில நல்வாழ்வுத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு அரசுக்கு ரூ. 12,200 கோடி செலவாகும்.

இந்தப் பட்டியலில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக் கீடான ரூ. 2,250 கோடி மற்றும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்துக்கு மாநிலத்தின் பங்கான ரூ. 425 கோடி ஆகியவையும் அடங்கும்.

செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அக விலைப்படி உயர்வினால், அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 2190 கோடி செலவாகும்.

வருவாய் வரவுகளில் திருத்தப்பட்ட உயர்வு, கூடுதல் வருவாய் செலவினங்களான ரூ. 3000 கோடியில் ஈடு கட்டப்பட்டுவிடும்என்று சண் முகம் குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வருவாய் வரவுகளில், விற்பனை வரித்தொகை, மாநில சுங்க வரி, முத்திரைத்தாள், பதிவுக்கட்ட ணம் ஆகியவை மூலம் ஆண்டு முழுவதற் குமான ரூ. 41,438 கோடியில், சுமார் 17,345 கோடி வசூலாகியுள்ளது என்று அவர் தெரிவிக்கிறார் .

இந்த ஆண்டு இதுவரை, மத்திய வரிகளில் பங்கீடாக மத்திய அரசிடமிருந்து ரூ.3715 கோடியும், உதவி மானியமாக ரூ. 2,568 கோடியும் மாநிலத்தால் பெறப்பட்டுள்ளது.

அந்தத் திமுக ஆட்சி எங்கே! இன்றைய அஇஅதிமுக ஆட்சி எங்கே?

Read more: http://viduthalai.in/page-8/78372.html#ixzz2yLBGW2FB

தமிழ் ஓவியா said...


மோடிபற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

குஜராத் - வதோதரா என் னும் இடத்தில் பெஸ்ட் பேக் கரி என்ற நிறுவனம் முஸ் லிம்களால் நடத்தப்பட்டது. கோத்ரா நிகழ்வை மய்யப் படுத்தி 14 பேர்களைக் குடும் பத்தோடு பேக்கரியில் வைத் துக் கொளுத்தினார்கள். இது தொடர்பான வழக்கினை தேசிய மனித உரிமை ஆணை யம் கையில் எடுத்துக்கொண் டது; நீதிமன்ற தீர்ப்பின் நகலைக் கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், நகலைக் கொடுக்க வில்லை. பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தொடுத்தது. நீதிபதிகள் வி.என்.காரே, ஜி.எஸ்.குமார், எஸ்.பி.சின்கா ஆகியோர்முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி காரே என்ன சொன்னார் தெரியுமா?

குஜராத் மாநில அரசு நியாயமாக, நேர்மை யாக நடந்துகொள்ளவில்லை. குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையென்றால் முதலமைச்சர் மோடி பதவி விலகட்டும் என் றாரே நினைவிருக்கிறதா? உச்சநீதிமன்ற நீதிபதியின் கட்டளையை ஏற்று பதவி விலகினாரா மோடி?

உங்களுக்குத் தெரியுமா?

வாஜ்பேயி பிரதமராக (பி.ஜே.பி.) இருந்தார் அல்லவா! மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதற் காக பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மறுத்ததால், மக்களவையில் பெரும் கொந்தளிப்பு (செய்தி, 6.2.2004). வெடித்ததே!

இவர்கள்தான் ஊழலைப்பற்றிப் பேசுகிறார்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/78386.html#ixzz2yRJHXjfm

தமிழ் ஓவியா said...


வாக்குச் சாவடிக்குள் ஆர்.எஸ்.எஸ்.: எச்சரிக்கை! எச்சரிக்கை!! டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பு



புதுடில்லி.ஏப்.9- வாக்குப் பதிவன்று வாக்குச் சாவடி களில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் திட்டம் குறித்து டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் முன்னாள் பிரச்சாரக் ஹிந்துத்து வாவின் அடையாளமாக உள்ள மோடி தேசத்தின் மிக உயரிய பதவியை அடைய துடித்துக்கொண்டு செயல் பட்டு வருகின்றார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் செயலில் குதித்துள்ளது.

அன்றாட அரசியலிலிருந்து விலகி இருப்பதாக கருதப்பட்டுவந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது மோடிக்காகப் பிரச்சாரம் செய்துவருவதோடு, முதன்முதலாக நேரிடை யாக வாக்குச்சாவடிகளில் நுழைந்து செயல்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன், டில்லி சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளருமாவார். டில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய கொஞ்சம்கூட வெற்றியிலிருந்து நழுவ விடா மல் இருப்பதை உறுதிசெய்ய மூத்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். 2009 இல் டில்லியில் ஒரு இடம்கூட பாஜக வெற்றிபெற வில்லை. அனைத்துமே காங்கிரசுக்கே சென்றது.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறிப்பாக சுயம்சேவக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினருடன் தோள்கொடுத்து எல்லா செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். வாக்குச்சாவடிகளிலும் நுழைந்து நெருக்கடியான நேரத்திலும் முக்கியப் பங் காற்றிட உள்ளனர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ்சில் நடை பெற்ற பிரதிநிதி சபா பயிற்சியில் சுயம்சேவக்குகளான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு முக்கியமான பயிற்சி களை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78389.html#ixzz2yRJerz6T

தமிழ் ஓவியா said...


உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.

- (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/78390.html#ixzz2yRJtkzfw

தமிழ் ஓவியா said...


சமமற்ற சமுதாயத்தில் சம வாய்ப்பு என்ற முழக்கம்?


பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை; அ

தற்கு மாற்றாக, கல்வி, மருத்துவம், பிழைப்பு அனைத்திலும் சூழ் நிலைக்கு ஏற்ற சம வாய்ப்பை உருவாக்குவார் களாம்.

இது நாள் வரை, மற்றவர்கள் செய்த இட ஒதுக்கீடு முறை வெறும் சம்பிரதாயமான ஒரு முறையாகத் தான் இருந்ததாம்.

அதனால், இந்த சம வாய்ப்பு முறையை அறிவிக்கிறது பாஜக.

சென்ற 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதே பாஜக இட ஒதுக்கீடு குறித்து தனது 2009 தேர்தல் அறிக்கையில் என்ன கூறியது?

கல்வி, வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தற்போதுள்ள இட ஒதுக்கீடு தொடரும்; அத்துடன் இல்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறியிருந்தது.

2009 இல் இட ஒதுக்கீடு தொடரும் என்று சொன்ன பாஜக, 2014 தேர்தல் அறிக்கையில் அதற்கு முற்றிலும் மாறாக, சம வாய்ப்பு தருவோம் என பார்ப்பன குரலை எதிரொலிக்க என்ன காரணம்?

ஒரு பக்கம் மோடி பிற்படுத்தப்பட்டவர்; முதன் முதலாக ஒரு பிற்படுத்தப்பட்டவரை பிரதமராக பாஜக முயன்றுள்ளது என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம், இட ஒதுக்கீட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு பிரச்சினையை, பெரும்பான்மை மக்களை இழிவு படுத்தி, சூத்திரர் என்றும், பஞ்சமர் என்றும் கூறி, அவர்களுக்கு கல்வி மறுத்து, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சமுதாயத்திற்கு, ஓரளவு முன்னேறிட வாய்ப்பாக அமைந்த இட ஒதுக்கீட் டில் கை வைக்க முயல்கிறது பாஜக.

அம்பேத்கரும், பெரியாரும் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை, சம வாய்ப்பு என்கிற பெயரில் பறித்திட தூண்டில் வீசுகிறது பாஜக.

இன்றைக்கு பாஜகவிற்கு தமிழ் நாட்டில் ஆலவட்டம் போடும் சீட்டணி கட்சியினர் இதற் கும் மவுனம் காப்பார்களா?

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படை யில் சமூக நீதி காவலர் வி.பி.சிங், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்ப்பன கூட்டத்திற்கு கன்னத்தில் அறைந்தாற் போல், அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன் சொன்னாரே; சமமற்ற சமுதா யத்தில் சம வாய்ப்பு என்பது தவறு என தீர்ப்பில் கூறியுள்ளாரே;

சிறுபான்மை மக்களுக்கு எதிரான விஷயங்களை, பாஜக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளது; சமூக நீதி விஷயத்திலும், பாஜக, அரசியல் சட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

பின் எந்த விஷயத்திற்காக மோடி பிரதமராக வேண்டும்; பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண் டும் என இங்குள்ள பாஜக சீட்டணியில் உள்ள வர்கள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். பல ஊர் களில், தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சி யினரும், வேட்பாளர்களும், பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுவதாக ஊடகச் செய்திகள் வருகின்றன.

சமூக நீதி விஷயத்தில், பாஜகவின் நிலைப் பாட்டை ஆதரிக்கும் கட்சிகளுக்கும், தமிழ் நாட்டில் அந்த நிலைமை கட்டாயம் வரும்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78396.html#ixzz2yRKQUyzH

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி கன்னட எழுத்தாளர்கள் கடும் கண்டனம்

பெங்களூரு, ஏப். 9-கர்நாட கத்தில் மக்களின் அன்பைப் பெற்ற பிரபல கன்னட எழுத் தாளர்கள், பாரதீய ஜனதா கட்சியின் மதவெறிக்கும், அதை ஊட்டி வளர்க்கத் திட்டமிட்டுள்ள அவர்களது பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடிக்கும் எதிராக களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக ஞானபீட விருதுபெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தியும், பிரபல திரைப் பட மற்றும் நாடக கலைஞ ரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் ஆகியோர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி யுள்ளனர்.பாஜக தனது பிரத மர் வேட்பாளராக முன்னி றுத்தியுள்ள நரேந்திர மோடி, இந்திய நாகரிகத்திற்கு ஏற் பட்டுள்ள மிகப்பெரும் அச் சுறுத்தல் என்றும், இந்தியா வின் பன்முக கலாச்சாரத் திற்கு விடப்பட்டுள்ள சவால் என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை, இன்னும் கடுமையான வார்த்தைகளில் சாடியுள்ள எழுத்தாளர் அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப் பிட்டுள்ளார்.இதே கடுமை யுடன் எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், நரேந்திர மோடி யையும் பாஜகவையும் விமர் சித்துள்ளார். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, மோடி பிரதமராக இருக்கும் நாட்டில் நான் வாழ விரும்ப மாட்டேன் என்று எழுத் தாளர் அனந்த மூர்த்தி கூறி யிருந்தார்.

அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், மீண்டும் அதே கருத்தை வெளியிட்டுள்ள அவர், மோடிக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறு தியாக இருப்பதாக தெரிவித் துள்ளார். இந்நிலையில், மதவெறிக்கு எதிராக குரல் கொடுத் துள்ள கர்நாடகத்தின் இரண்டு பிரபல எழுத்தாளர்க ளுக்கும் இதர எழுத்தாளர் களான வசுந்தரா பூபதி, மரு ளாசிதப்பா, ஜி.கே.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/78401.html#ixzz2yRLHMfqb

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை:

ராமர் பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது வளர்ச்சிக்கு எதிரானது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப். 9- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது அறிவியலுக் கும், பகுத்தறிவுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புதிய மொந்தை யில் பழைய கள் என்பதாகக் கூட இல்லை. பழைய மொந் தையில் பழைய கள் என்ப தாகவே அமைந்துள்ளது. மோடி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களால் சிறுபான்மை மக்கள் கூட கவரப்பட்டுள் ளதாகவும், அவர்கள் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருப் பதாகவும் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த பார தீய ஜனதா கட்சி தலைமை முயற்சித்து வந்தது.

ஆனால் அவர்களது தேர் தல் அறிக்கை வகுப்புவா தத்தை முன்வைப்பதோடு, தாராளமய பொருளாதார கொள்கையை வலியுறுத் தும் கட்சிதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் கோவில் கட்டுவோம், ஜம்மு-காஷ் மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் அரசி யல் சட்டப்பிரிவு 370அய் ரத்து செய்வோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரு வோம், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்ற ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அனைத்து செயல்திட்டங்க ளையும் உள்ளடக்கியதா கவே பாரதீய ஜனதா கட்சி யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முற்றாக முடக்குவோம் என்று கூறு வதும், ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவதும் முற்றிலும் அறிவியலுக்கும், பகுத்தறி வுக்கும், வளர்ச்சிக்கும் எதி ரானது.

காங்கிரசுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சி பொரு ளாதாரத்துறையில் அதே காங்கிரசின் தாராள மயமாக் கல் கொள்கையைத்தான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் மாறாது, மாறவும் முடியாது என் பதை அவர்களது தேர்தல் அறிக்கையே தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78400.html#ixzz2yRLQ07RM

தமிழ் ஓவியா said...


ஊழல் ஊழல் என்று ஊளையிடும் நரிகளே! இதற்கு என்ன பதில்?


போரில் இறந்த வித வைகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகளைத் தங்களது கட்சி ஆதரவாளர் களுக்கு ஒதுக்கி பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றது வாஜ்பாய் தலை மையில் ஆன பாஜக தானே. ஊழல் செய்வதில் காங் கிரஸ் கட்சி, பாஜக இரண் டும் போட்டி போட்டுக் கொண்டு தான் ஊழல் செய்தன.

இதோ போரில் இறந்த இராணுவத்தினரின் மனைவி மற்றும் குடும்பத் தார்களுக்கு வழங்கப்பட வேண்டிய பெட்ரோல் பங்க் எந்த எந்த பாஜக தலைவர்களின் கைவசம் உள்ளது என்ற பட்டியல்-

பா.ஜ.க. ஆட்சிக் காலத் தில் ஒதுக்கீடு செய்யப்பட பெட்ரோல் பங்குகளிலும் ஊழல் செய்தனர். பெரும் பாலான பெட்ரோல் பங்க் உரிமங்கள் பா.ஜ.க. ஆதர வாளர்களுக்கே கொடுக்கப் பட்டன. வாஜ்பாயியின் உறவினரான ராஜ்மிஸ்ரா வின் மனைவி அபர்னா மிஸ்ராவுக்கு உரிமம் வழங் கப்பட்டது. உத்தரபிரதேசத் தில் ஹாப்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி ரமேஸ் சந்திர தாமரின் மகன் விகாஸ்தோமர் சின்னாள் பா.ஜ.க. எம்.பி.; வர்மா பூர் ணிமா பா.ஜ.க. எம்.எல்.ஏ., சோட்டேலால் வர்மாவின் மகன் பால்சந்தரா; உ.பி. கூட்டுறவுத்துறை அமைச் சர் ராம்பிரகாஷ் திரிபாதி யின் மருமகள் பிரதிபா திரிபாதி; பாடுபங்கி பா.ஜ.க. எம்.பி.; பாஜ்நாத் ராவத் , மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்க புண்ட்கரின் மனைவி கனிதா புண்ட்கர்; மும்பை பா.ஜ.க.அலுவலகச் செய லர் முகுந்த் குல்கர்னி; சிவசேனை எம்.பி சந்திர காந்த் கைரேயின் சகிதரன் சூரியகாந் கையிரே; சிவ சேனை ஹிமாச்சல் பா.ஜ.க. முதல்வர் பி.கே. துமாலின் மகன் அனுராக்சிங் தாகூர் மற்றும் அண்ணன் மகன் அரவிந்த் துமால்; லூதி யானா பா.ஜ.க. எம்.பி. யின் மருமகன் அனில்தம்மன்; இன்னும் பல பா.ஜ.க. வின் முக்கிய புள்ளிகளுக்கு இந்த உரிமங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டனவே!

Read more: http://viduthalai.in/e-paper/78488.html#ixzz2yXDOdlnB

தமிழ் ஓவியா said...


குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா?


இது குற்றவியல் நீதி மன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா? என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டு களாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாள்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாள்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

- கலைஞர் கடிதத்திலிருந்து முரசொலி (10.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78487.html#ixzz2yXDZdG6n

தமிழ் ஓவியா said...


நடுநிலை தவறும் மோடி இந்தியாவின் பிரதமருக்குத் தகுதியானவர் அல்ல!


அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்

வாஷிங்டன் ஏப்.10- இந் தியா போன்ற பல மொழி, பல இனம், பல மதம் கொண்ட ஒரு நாட்டிற்கு ஒரு சார்புப் போக்குடைய நரேந் திரமோடி பிரதமருக்கான தகுதியான ஒருவராக இருக்க முடியாது ன்று அமெரிக் காவிலிருந்து வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது. முக்கிய விவரங்கள் வருமாறு:

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வின் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. உல கமே இதை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது, காரணம் இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் உலக அரங்கில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெளியுற வுத்துறையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக திகழும். ஆகையால் இந்தியா வின் தலைமைப்பதவிக்கு நடுநிலையான உலக நாட் டின் போக்குகளை நன்கு அறிந்து ஈடுகொடுப்பவராக இருக்கவேண்டும், அதே நேரத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமன் செய்யும் நோக்கோடு உறுதி யான திட்டங்களை வகிப் பவராக இருக்கவேண்டும் என அய்ரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்க மற்றும் கீழை நாடுகளும் ஆர்வம் கொண்டு கவனித்து வருகின்றன. தற்போதைய அரசியல்களத்தில் இருக்கும் நரேந்திரமோடிதான் இந்தி யாவின் பிரதமர் என்ற ஒரு மாயையை ஊடகங்கள் மூலம் மக்களிடையே ஏற் படுத்திவிட்டார்கள்.

வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்

இது குறித்து வாஷிங் டன் போஸ்ட் தனது தலை யங்கத்தில் குறிப்பிட்டுள் ளதாவது: நரேந்திர மோடியை பிரதமராக முன் னிறுத்தும் பாரதீய ஜனதா கட்சி மூன்றில் ஒரு பங்கு இடத்தை பிடித்து ஆட்சிக்கு வரும் என்று இந்திய ஊட கங்கள் கூறிக்கொண்டு இருக் கின்றன. இது உண்மையா பொய்யா என்று இன்னும் 5 வாரங்களில் தெரிந்துவிடும். பிரதமராக முன்னிறுத் தப்படும் நரேந்திரமோடி தற்போது ஆட்சியில் இருக் கும் குஜராத மாடல் குறித்து பேசிவருகிறார். இதை மாதிரியாகக் கொண்டு இந் தியா முழுவதும் செயல் படுவேன் என்று கூறுகிறார். தன்னுடைய பேச்சால் மக்களைக் கவருகிறார். ஆனால் முதலீட்டாளர்களை எந்த அளவு ஈர்ப்பார் என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தின் மாநிலத்தின் வளர்ச்சி ஒரு சதவீதமே வளர்ந்திருக் கிறது. இது அந்த அரசாங் கத்தின் புள்ளி விவரங்களில் இருந்தே தெரிகிறது, குஜ ராத்தை சர்வதேச சந்தை களுக்கு நிகரான ஒரு மாநி லமாக மாற்றியதாக கூறி வருகிறார். இது இந்தி யாவில் உள்ள சுமார் 80 கோடி வாக்களர்களை எப் படி சென்றடையும் என்று தெரியவில்லை.

குஜராத்தோடு ஒப்பிடுவது சரியல்ல!

இந்தியா போன்ற பல கலாச்சாரங்களைக் கொண்ட மாநிலங்களில் அனைத்து மாநிலத்திலும் வெவ்வேறு பிரச்சனைகள்; இவற்றை குஜராத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்பேசுவது எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும்? மோடியின் மீதான மதச்சாயத்தை முதலில் நீக்க வேண்டும், இந்தியாவின் பெருவாரியான வணிகம் சார்ந்த இஸ்லாமியர்களின் மன நிலையில் மாற்றம் ஏறப்பட்டால் அங்கு மோடி போன்றோர் ஆட்சிக்கு வரமுடியும்.ஆனால் மோடி பெரும்பான்மையான இந்துக்களை கணக்கில் கொண்டு பல்லாயிரக்கணக் கான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த 2002 மதக்கலவரம் பற்றி இன்று வரை தெளிவான ஒரு நிலையை மக்களிடம் வைக்கவில்லை. இது குறித்து பத்திரி கையாளர்களிடமோ அல் லது தனது மேடைப் பேச்சுக்களில் கூட எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. மோடி தலைமையில் ஆட்சி நடந்த போது தான் குஜராத் இனக்கலவரம் நடந்தது. குஜராத்தில் நடந்த கலவரத் தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சரியான அளவில் நிவாரணங்கள் சென்று சேர்ந்ததா என்று கூட அவ ரால் பதிலளிக்க முடிய வில்லை.

மோடியின் ஒரு பக்கச் சார்பு!

1998-ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பல நடுநிலையாளர்கள் கவலை கொண்டனர். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அப்போதைய தலைமை யும் மென்மையான போக்கை கடைபிடித்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் ஒரு பக்கச்சார்பு நடவடிக்கைகள் போன்று தான் தெரிகிறதே தவிர, பொதுவான ஒரு முற் போக்குத் திட்டம் என்று ஒன்றும் தெரியவில்லை, இந்தியா போன்ற நாட்டிற்கு தலைமைப்பதவி வகிப் பவர் பொருளாதாரம், நாட் டின் வளர்ச்சி, தொழில் துறை பெருக்கம், எல்லை நாடுகளுக்குள்ளான அமைதிப்போக்கு மற்றும் உலக நாடுகளுக்குள்ளான நல்ல நட்பான சூழல் கொண்ட திட்டமொன் றைத்தான் தனது நிலைப் பாடாக கொள்ளவேண்டும். நரேந்திரமோடியின் வெற்றி இதில் தான் இருக்கிறது, ஆனால் தற்போது அவர் அதிகமாக நடுநிலை தவறிய பேச்சுக்களையே (Prejudicial rhetoric) பேசிக் கொண்டு வருகிறார். இது இந்தியா போன்ற நாடு களுக்கு நல்லதாக அமை யாது.

(அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் (9.4.2014) தலையங்கம்)

Read more: http://viduthalai.in/e-paper/78484.html#ixzz2yXDu1rEa

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/78473.html#ixzz2yXEK2BXL

தமிழ் ஓவியா said...


நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி சில உறுதிகளைத் தந்துள்ளார். ஒன்று. தனக்காக எதுவும் செய்யமாட்டேன்; எந்த கெட்ட எண்ணத்திலும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

குஜராத்தில் மூன்றாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, இந்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதமாக அங்கே நடந்து கொண்டாரா?

மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா மீது போலி கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தான் தற்போது உ.பி.யின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்; அவர் பொறுப் பேற்றதும்தான், உ.பி.யில் முசாபர் நகரில் கலவரம் வெடித்து, இஸ்லாமி யர்கள் இன்றும் முகாம்களில் இருக் கும் சூழ் நிலை ஏற்பட்டது. அண்மை யில், ஜாட் மக்களிடம், நீங்கள் பழிவாங்கும் நேரம் வந்து விட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர் அமீத் ஷா, இவர் மோடியின் வலது கரம்.

குஜராத்தில், மோடியின் அமைச் சரவையில் பாபு போகாரியா, புரு ஷோத்தம் சோலங்கி என்ற இரண்டு அமைச்சர்கள் மீதும், சுரங்கம் மற்றும் மீன் துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. போகாரியா மீது ரூ.54 கோடி ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாண்டு தண்டனை விதித்தது போர்பந்தர் நீதி மன்றம். இன்றும் அவர்கள் அமைச் சர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மாயா கோட்னானி. இவரும் மோடியின் அமைச்சரவையில் இருந் தவர்; 2002 குஜராத் கலவரத்தில் நேரடி யாக ஈடுபட்டு 29 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்றதனால், அமைச்சர் பதவி இழந்தவர்;

மத்திய அரசின் தணிக்கை அலு வலக அறிக்கையின்படி, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் டோப்ரோ போன்ற மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தவறான முறையில் சலுகைகள் தந்து அரசுக்கு ரூ.1275 கோடி இழப்பு 2011-12-ல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஏழை விவசாயிகளின் நிலங்களை, அச்சுறுத்தி, குறைந்த விலையில் அதானி போன்ற பெரும் நிறுவனங் களுக்கு, தாரை வார்த்துக் கொடுத் துள்ளது.

அதானி, அம்பானி நிறுவனங்கள், மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு, அவர் இத்தகைய சலுகைகளை அள்ளி வீசுவதால் தான் என கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடியோ, அவரது பாஜகவோ, பதில் ஏதும் சொல்லவில்லை.

மோடியை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்திற்கு, இதுவரை ரூ.10000 கோடி கருப்புப்பணம் செலவிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறிய குற்றச்சாட் டுக்கும் பதில் இல்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் கொண்ட மோடி சொல்கிறார்; எனக் காக நான் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று.

மோடி அவர்களே! நீங்கள் கூறிய வசனத்தை நாங்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனவே கேட்டிருக்கிறோம். எனக்கு என்று எந்த தேவையும் இல்லை; நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறுகிறேன் என்று சொன்னவர் மீது தான், இன் றைக்கு பெங்களூர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர், வரிசையாக பட்டிய லிட்டு, எந்தெந்த ஊர்களில் எத்தனை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள் ளது; அவற்றின் இன்றைய மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் என கூறி யுள்ளார். தமிழ் நாட்டில் ஓர் வழக்கு மொழி உள்ளது. யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று

நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78482.html#ixzz2yXEUQEK9

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது!


இதோ என்னுடைய கையிலே நான் வைத்துக் கொண்டு இருப்பது, பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யா ஆகியோரின் படங்கள் போட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதைவிட மதவெறி கொண்ட கட்சி இருக்க முடியாது என்பதற்கு இதுவே அடையாளம். இதுவரை மறைந்து இருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. அதுமட்டுமல்ல அதில் இன்னும் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் உள் அட்டையில் ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, உபாத்யாய படங்கள் இடம்பெற்றுள்ளது குறித்து நான் பேசியதற்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனை நான் எப்போதும் மதிப்பவன், தலைவர் கலைஞரும் அவரை மதிப்பவர்.

அப்படிப்பட்டவர் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை நான் படிக்கவில்லை, பார்க்கவில்லை, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை அவரே பார்க்காமல் இருக் கிறாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. தெரியாமல் சொல்கிறாரா அல்லது தெரிந்து சொல்கிறாரா எனப் புரியவில்லை.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனது கையிலும் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை அதை சரியாகப் பார்க்கவேண்டும் என அவரை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

- தருமபுரி தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்

Read more: http://viduthalai.in/page-8/78451.html#ixzz2yXJLi8N4

தமிழ் ஓவியா said...


தேர்தல் களம்!


தன் மனைவிபற்றி முதன்முதலாக மோடி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தன்னை திருமண மானவர். தனது மனைவி பெயர் ஜஷோ டபென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித் துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜன தாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ.பி.யில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திரு மணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோ டபென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மனைவியின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்குத் தெரியாது என மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தமக்குத் திருமணமானதாக குறிப் பிடுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. 2001, 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது திருமணம் பற்றி குறிப்பிடாமலே வந்தார் மோடி.

இதனால் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் மோடி தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மோடியின் மனைவி ஜஷோட பென், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அவர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

இது தனி நபர் பிரச்சினை என்றாலும், ஒரு பிரதமருக்கான வேட்பாளர் தன் குடும்ப வாழ்க் கையில் பெண்ணை எந்த அளவுக்கு ஒதுக்கு கிறார் - ஒடுக்குகிறார் - நடத்துகிறார் என்பதை யும் அலட்சியப்படுத்த முடியாதே!

வாக்காளர்களாகிய பெண்கள்தான் இதனைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்; முடிவு செய்யவேண்டும்.

வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் 845 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 42 பேர்களும், குறைந்த பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேர்களும் போட்டியிடுகின்றனர். ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 14 பேர் போட்டியிடுகின் றனர்.

வேட்பாளர்கள் ஏப்ரல் 24 ஆம் தேதிக் குள் மூன்றுமுறை தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலில் ஈடுபடும் கட்சி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வுள்ளது.

வாக்காளர் பட்டியல்

2014 ஜனவரிக்குப் பிறகு புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட விண்ணப்பித்தோர் உள்ளிட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்டங்களில் வெளி யிடப்படுகிறது. அதன்படி இப்போது தமிழ் நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை அய்ந்த ரைக் கோடியாகும்.

ஏ.பி.பரதன்

எங்கள் கட்சிக்கு மட்டுமல்ல; இந்தியா வுக்கே முக்கியமான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு 100-க்கும் குறைவாகவும், பி.ஜே.பி.,க்கு 170-க்கு மிகாமலும் இடம் கிடைக் கும். இந்த நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத கட்சிகளின் பங்களிப்பு முக்கியமான தாக இருக்கும் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்.

விசித்திர அரியானா

அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. இந்த நிலையில், எங்களுக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், உங்களுக்கு வாக்குகள் என்று இளைஞர்கள் கூறு கின்றார்களாம்.

Read more: http://viduthalai.in/page-8/78453.html#ixzz2yXJTsmyl