Search This Blog

29.4.14

மூடநம்பிக்கையைப் பரப்புவது குற்றம் என்று சடுதியில் தண்டிக்க வேண்டாமா?

மூடநம்பிக்கையைப் பரப்புவதற்கு எல்லையேயில்லையா?


ஏடுகள், இதழ்கள், ஊடகங்கள் மக்களுக்கு நல்லறிவைக் .கொளுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை மூடநம்பிக்கை இருளில் கொண்டு தள்ளுவதற்குப் பயன்படக் கூடாது; இன்னும் சொல்லப் போனால் அப்படிச் செய்வதற்கு அவற்றிற்கு எந்த வகையிலும் உரிமையும் கிடையாது.

மேலும் சொல்லப் போனால் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் அது விரோதமானதும்கூட! மக்களின் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வைத் தூண்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடி மகன் - மகளின் கடமை என்று அது வலியுறுத்துகிறது (51A-h).

அதற்கு மாறாகச் செயல்படுவது சட்ட விரோதம் தானே! இதில் விஷமம் என்ன தெரியுமா? அந்த மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அந்த ஏடுகளோ, இதழ்களோ அதன் உரிமையாளர்களோ அவற்றை நம்புவதில்லை, கடைப்பிடிப்பதும் இல்லை அதே நேரத்தில் மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நாசமாய்ப் போனால் என்ன? என்ற நினைப்புதான் அந்த ஊடகங்களுக்கு.

இன்னும் ஒரு மோசமானது என்ன தெரியுமா? மூடநம்பிக்கைகளால் நாசமாகப் போகும் அந்த மக்களிடத்தே இதழ்களை விற்றுக் காசாக்கும் கொடுமையாகும்.

ஒரு மாலை ஏடு ஒரு சிறப்பிதழை வெளியிட் டுள்ளது. மகப்பேறு அருளும் ஆலயங்கள் என்னும் தலைப்பில் 16 பக்கங்களைக் கொண்ட இணைப்பை வெளியிட்டுள்ளது.

பிள்ளை வரம் அருளும் உஜ்ஜீவனத் தாயார் (துறையூர்) புத்திரப் பேறு அருளும் நெல்லை ஸ்ரீ ராஜகோபால்சாமி, பாயசத்துக்கு அருள்புரியும் பால சுப்பிரமணியன் (தென்காசி ஆய்க்குடி) மகப்பேற்றுக்கு வாழைத் தார் காணிக்கை (திருச்சி) புலியூர் ஆனந்த வல்லி சமேத அகத்தீசுவரர் (திருநின்றவூர் அருகில்) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிள்ளைப் பேறு அருளும் வெண்டி முத்து கருப்பு (மதுரை - உசிலம்பட்டியையடுத்த பி. கள்ளப் பட்டி) காஞ்சிபுரத்தையடுத்த கீழம்பியில் உள்ள அம்பிகாபதீசுவரர் கோவில் இந்தக் கோயில்களின் பட்டியல் எதற்குத் தெரியுமா? இந்தக் கோவில்களில் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர் களுக்கு அந்தப் பேறு - சந்தானப் பாக்கியம் கிட்டுமாம்.

மேற்கண்ட கோவில்களுக்கு சென்று என்னென்ன செய்ய வேண்டும் என்ற சாங்கியங்கள் வேறு.

குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களில் குழந்தைகளுக்குப் பால் புகட்டும் பாலாடையைக் காணிக்கையாக அளித்தால் தொட்டில் கட்டித் தாலாட்டும் பேறு கிட்டுமாம்.

சில கோயில்களில் குழந்தை இல்லாத பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் வழங்கப்படுமாம். அதனைக் கொண்டு போய் வீட்டுப் பூஜை அறையில் வைத்து மூன்று நாள்கள் வழிபட்டு வந்தால் விட்டில் குவா குவா சத்தம் கேட்குமாம்.

நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் பாலசுப்பிர மணியம் கடவுள் - அவர் பாயசப் பிரியராம்.

பதினோர்படி பச்சரிசி, சிறு பருப்பு ஒருபடி, தேங்காய் 108, பசும்பால் 8 லிட்டர், சர்க்கரை 35 கிலோ,  நெய் கொண்டு பாயசம் செய்ய வேண்டும்.

கோவிலுக்குப் பக்கத்தில் அனுமான் நதி படித்துறை;  குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் அந்த ஆற்றில் குளித்தெழுந்து, அந்தப் பாயசத்தை படிக்கட்டுகளில் ஊற்றிக் கொண்டே போவார்கள். அப்படிச் செய்தால் அந்தப் பெண்ணுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

இவை ஏதாவது புரிகிறதா? இப்படி செய்வதற்கு ஏதாவது காரண காரியம் உண்டா? சாராயம் குடித்த பயித்தியக்காரன் போல எந்தக் காலத்திலோ எவனோ ஒருவன் கிறுக்கி வைத்தது எல்லாம் தலப்புராணங் களாகி, பேராசையும் பேரச்சமும் கொண்ட மக்கள் நம்பி மோசம் போகிறார்கள் என்பதெல்லாம் வேறு என்னவாம்?

ஒரு பெண் கருத்தரிக்கவில்லையென்றால் அதற்குப் பல்வேறு காரணம் உண்டு என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

குறைபாடு பெண்ணிடம்தான் இருக்கிறது என்று கூறுவதுகூட ஒரு வகை ஆண் ஆதிக்கப் புத்தி! உடற்கூறு ரீதியாக ஆணிடம் குறைபாடு இருந்தாலும் கருத்தரிப்பில் சிக்கல் வரலாம் அல்லவா!

இதுபற்றி எல்லாம் தெரியாத காலத்தில் ஏதோ கிறுக்கி வைத்தான் என்றால் அறிவியல் வளர்ந்த  - இன்னும் சொல்லப் போனால்  செயற்கை உயிர் செல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சகாப்தத்தில், கோயிலுக்குச் சென்று குழவிக் கல்லுக்குப் படையல் போட்டால் பெண் கருத்தரிப்பாள் என்று சொல்லலாமோ, நம்ப லாமா? பிரச்சாரம் செய்யலாமா? ஏடுகள் எழுதலாமா?

இவற்றை அரசுகள் தான் எப்படி அனுமதிக் கின்றன? தடை செய்ய வேண்டாமா? மூடநம்பிக்கையைப் பரப்புவது குற்றம் என்று சடுதியில் தண்டிக்க வேண்டாமா?

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை யும் ஒன்று என்று தந்தை பெரியார் சொன்ன அருமையைத் தான் நினைத்துப் பார்க்க வேண்டியுள் ளது. ஏடு நடத்தும் முதலாளிகளே, தயவு செய்து  மூட நம்பிக்கைகளைப் பரப்பி மக்களைப் பழி வாங்காதீர்! கேடு பயக்காதீர்!!

நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மை யும் வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!
                     ------------------------------"
Read more: http://viduthalai.in/page-2/79424.html#ixzz30EOKWsTL

24 comments:

தமிழ் ஓவியா said...


எப்படி சிரிப்பது?


நான் சொல்லலையா சார்? 144 தடை உத்தரவு, ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் அடைப்பு...ன்னு அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததன் மூலமா, தேர்தல் கமிஷன் மீது மக் களுக்கு ரொம்பவே மதிப்பு அதிகமாயி டுச்சுதுன்னு...! - கருத்துக் கார்ட்டூன் - (தினமணி 27.4.2014).

தேர்தல் ஆணையம் மீது வாக்கா ளர்களுக்குக் கோபம் - இல.கணேசன், பாஜக ( தினமணி 25.4.2014).

வாக்காளர்களுக்குப் பணம் பட்டு வாடா செய்ததை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கள் வேதனை அளிக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் (தினமணி 25.4.2014).

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுகிறது - தேமுதிக தலைவர் விஜயகாந்த் (தின மணி 20.4.2014).

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட் டுள்ள 144 தடை உத்தரவை உடன டியாக திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டுள்ளது. (புதிய தலைமுறை செய்தி 22.4.2014).

ஜனநாயகத்தைப் பணநாயகம் ஆக்கலாமா? நீதியை நிலை நிறுத்தும் தேர்தல் ஆணையம் கண்டும் காணா மல் இருக்கலாமா? என்று வினா எழுப் பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (விடுதலை - 23.4.2014).

ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - திமுக தலைவர் மு.கருணாநிதி (தினமணி 23.4.2014).

மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறு வதற்கு அரசியல் கட்சி களும், பொது மக்களும், தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - முதல்வர் ஜெயலலிதா (தினமணி 25.4.2014)

ஜெயலலிதாவைத் தவிர யாரும் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை பாராட்டி பேசவில்லை; தமிழகத்தின் ஆளுங்கட்சி தவிர்த்து, அனைத்து கட்சிகளும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் ஆளுங் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டின. இதையெல்லாம் மறைத்து விட்டு, தேர்தல் ஆணையத்திற்கு, மக் கள் சபாஷ் சொல்கின்றனர் என்கிறார், தினமணி வைத்திய நாத அய்யர். சூதாட் டத்தில் தனது மனைவியை பந்தயம் கட்டிய அயோக்கியன் பெயர் தருமன்;

தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்ச நடவடிக்கையைப் பாராட்டும் தினமணிக்கு நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற குறிக்கோளாம்.

எப்படி சிரிப்பது?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79430.html#ixzz30EPtYwsc

தமிழ் ஓவியா said...

இன்று தியாகராயர் நினைவு நாள்!


- முனைவர் மகா பாண்டியன்

நமது தியாகராயர் சென்னை மாநகரவைக்கு 1882 முதல் 1925 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக, தலைவராக இருந்து தொண்டாற்றியவர். இக்காலத்தில் மெட்ரோ டிரெயின் போல் அக்காலத்தில் டிராம் வண்டி மின் ஆற்றலில் சாலையில் செல்லும் ஊர்தி இருந்தது. இதனை பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தார். 1912 இல் தான் சென்னை நகருக்கு மின் விளக்கு வசதி வந்தது. அதைப் பெரிதும் விரிவாக்கம் செய்தார். பல மாநகரவை மகப்பேறு இல்லங்களைத் தோற்றுவித்தார்.

தன்னலம் கருதாது பிறர் நலம் பேணு கின்ற தியாக உணர்வோடு சமுதாயத்தில் மாற்றங்கள் உருவாக்கப் பாடுபடுகின்ற பெரியோர்களுள் தலை சிறந்தவர் நம் சர்.பிட்டி.தியாகராயர் அவர்கள்.

நீர் உயர வரப்புயரும்; வரப்புயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோன் உயரும். ஆக நீர்தான் உலகுக்கு இன்றியமையாதது. அதுபோல சமுதாயப் பயிர் செழித்து வளரத் தன்னை நீராக்கிக் கொண்டு சமநிலைச் சமுதா யத்தை வளர்க் கப் பாடுபட்டவர்கள் இந்த திராவிடத் திருநாட்டில் ஏராளமானவர் கள்; அவர்கட் கெல்லாம் முதன்மையர் நமது சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள்.

வள்ளலார் வடசென்னையில் வாழ்ந் தார். வள்ளலாருக்கு 25 வயது இருக் கும்போது அப்பகுதியில் பிறந்ததா லென்னவோ, தியாகராயர் வாரி வாரி வழங்கும் தியாகரானார்கள். அவர் வட சென்னையில் வடபகுதியான கொருக்குப் பேட்டையில் 27.4.1852 அன்று தோன் றினார்.

தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் திருவள்ளுவர். அக்குறளுக் கொப்ப கடையெழு வள்ளல்களும் ஒன்று கூடி ஓர் உரு ஆனதுபோல் தோன்றியவர் நம் தியாகராயர். பிட்டி என்னும் பெயருடைய தேவாங்க குலச்செம்மலான இவர் சமநிலைச் சமுதாயம் படைக்கப் பிறந்தார்.

ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும்
ஒருமை யுளராதல் வேண்டும்

என்னும் வள்ளலாரின் வாக்குக்கேற்ப 20.11.1916 இல் சென்னை வேப்பேரி வழக்கறிஞர் திரு.டி.எத்திராஜூலு முதலி யார் என்பவர் இல்லத்தில் நீதிக்கட்சி உதய மானது.

இதன் முப்பெரும் தலைவர்கள் டாக்டர் நடேச முதலியார், டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயர் ஆகியோராவர். கல்வியைப் பெறுவதிலும், அரசுப் பணி களில் தொழில் பெறுவதிலும் சாதிக் கொடுமை அக்காலத்தில் தலை விரித் தாடியது. இக்கொடுமைகள் ஒழிய திரா விட மக்களிடையே பகுத்தறிவை யும் சுயமரியாதையையும் வளர்க்கும் பணியை நீதிக்கட்சி செய்தது. இப் பணியைத் திறம்படச் செய்வதற்காக

1) ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளிதழும்

2) திராவிடன் என்ற தமிழ் நாளிதழும்

3) ஆந்திர பிரகாசிகா என்ற தெலுங்கு நாளிதழும் வெளியிடப்பட்டன. இவை திராவிடர்களின் கல்வி, அரசியல், சமு தாயம், பொருளாதார முன்னேற்றத் திற்கும், வளர்ச்சிக்கும், பாடுபடுவதைத் தன் கடமையெனக் கருதி இந்த இதழ்கள் செயலாற்றி வந்தன. தற்போது தகர்க்கப் பட்ட நிலையில் உள்ள மேலாதிக்க நிலைக்குக் காரணம் இவையே.

மேலும் நமது தியாகராயர் சென்னை மாநகரவைக்கு 1882 முதல் 1925 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக, தலைவராக இருந்து தொண்டாற்றியவர்.

இக்காலத்தில் மெட்ரோ டிரெயின் போல் அக்காலத்தில் டிராம் வண்டி மின் ஆற்றலில் சாலையில் செல்லும் ஊர்தி இருந்தது. இதனை பல்வேறு பகுதி களுக்கு விரிவாக்கம் செய்தார். 1912 இல் தான் சென்னை நகருக்கு மின் விளக்கு வசதி வந்தது. அதைப் பெரிதும் விரி வாக்கம் செய்தார். பல மாநகரவை மகப்பேறு இல்லங்களைத் தோற்று வித்தார். கூவம் ஆற்றில் நன்னீர் வருட முழுவதும் ஓடிடக் கனவு கண்டார். இனி அது நிறைவேற வேண்டும் நீதிக் கட்சியின் தலைவரான சர்.பிட்டி தியாகராயர் 17.12.1920 மற்றும் 13.11.1923 என இரு முறை அமைச்சரவை முதல்வர் பொறுப்பு. கிட்டிய போதும் மறுத் துரைத்தார் பதவி ஏற்றாரில்லை. பதவியை ஏற்காத பண்பாளர்.

அன்றைய கவர்னர் வெலிங்டன் பிரபு பெரும் வியப்பில் ஆழ்ந்தார். பெயருக் கேற்ப தியாக சீலரானார் நம் தியாகராயர்.

பெரியோர் தம் பாராட்டுரைகள்

1) தந்தை பெரியார் அவர்கள்: சென்னை நகர பரிபாலன சபையில் 40 ஆண்டுகள் அருந்தொண்டாற்றிய தியாக ராயர் யாவரா லும் மறக்கற்பாலரல்லர். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச் சங்கம் கண்டு அதில் முதல் முதலாக விசைத்தறி உபயோகிக்க முயற்சி செய்தவர்.

2) திரு.வி.கலியாண சுந்தரம் அவர்கள் (திரு.வி.க) தியாகத்திற்கு ராஜா - தியாக ராய செட்டியார்

3) திரு.நெ.து.சுந்தர வடிவேல் அவர்கள்: ஒப்பற்ற தமிழருக்கு நன்றி செலுத்துகிறேன். தியாராயர் இல்லை என்றால் நாங்கள் இல்லை. திரு.வி.க வின் எதிரி ஆவார். திரு.வி.க.வை ஆங்கில அரசு நாடு கடத்தத் திட்டமிட்டபோது அதை எதிர்த்தவர். என அனைவராலும் பாராட்டப்பட்ட நம் தியாகராயரின் நினைவு நாளான இன்று (28.4.2014) அவரை நினைவு கூர்ந்து அவர் வழி நடப்போமாக.

தமிழ் ஓவியா said...

பிட்டி தியாகராயர்

ஏப்.27 பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் (1852). செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே பி.ஏ.படித்தவர். 1882 முதல் 1923 வரை நாற்பத்தொன்றரை ஆண்டுகள் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்து சாதனை புரிந்தார். சென்னை மாநகரத்துக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவையாகும். துவக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்த அவர். பார்ப்பன ஆதிக்கத்தின் கொட்டத்தைச் சகிக்க முடியாத நிலையில் பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓர் அமைப்புத் தேவை என்று உறுதியான முடிவுக்கு வந்தார். டாக்டர் சி.நடேசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் இதற்கு இரு கை நீட்டினார்கள். அதன் தொடக்கம் தான் 1916 டிசம்பர் 20-இல் அவர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையாகும். பார்ப்பனர் அல்லாதார் மத்தியிலே எழுச்சியையும், உரிமை உணர்வையும் தட்டி எழுப்பிட ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழும், திராவிடன் என்ற தமிழ் இதழும், ஆந்திர பிரகாசிகா என்னும் தெலுங்கு இதழும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன.

1920-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையில் மொத்தம் உள்ள 65 பொதுத் தொகுதிகளில் 28 இடங்கள் பார்ப்பனரல்லாதா ருக்குப் போராடிப் பெறப்பட்டன. முதல் பொதுத்தேர்தலிலேயே நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இரு முறையும் கேட்டுக்கொள்ளப்பட்டும், பிட்டி தியாகராயர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர் எவ்வளவு பதவி ஆசையைத் துறந்த மாமனிதர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். அதேநேரத்தில் வெளியில் இருந்து நீதிக்கட்சி ஆட்சியை வெகு சிறப்பாக வழி நடத்தினார் என்பது தான் முக்கியமாகும். வெள்ளை உடை உடுத்தியதால் மட்டும் அவர் வெள்ளுடை வேந்தர் அல்லர். உயர்ந்த உள்ளமும், ஒழுக்கமுள்ள அவரின் கண்ணிய மான பொதுவாழ்வும் கூடத்தான் அது காரணப் பெயராக அமைந்து விட்டதோ!

- விடுதலை 27.4.2003

Read more: http://viduthalai.in/page-2/79425.html#ixzz30EQVUgTm

தமிழ் ஓவியா said...

இந்தியாவை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸின் திட்டம்


மோடியை ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பின்னணி என்ன? தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு படப்பிடிப்பு

மும்பை, ஏப்.28- மோடியை ஆர்.எஸ்.எஸ் ஏன் முன்னிறுத்துகிறது என்பது குறித்து தி எக்னா மிக் டைம்ஸ் தெளிவாகப் படம் பிடித்துள்ளது.

16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறப்பாக குறிப் பிடத்தக்கதாக சோனியாவின் தொலைக்காட்சிமூலம் ஏப்ரல் 14 அன்று அளித்த செய்தியாகும். தேர்தல் களத் தில் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடும் நிலை உள்ளது. பாரதீய, ஹிந்துஸ்தானியம் என்கிற பெயரில் அழிவை நோக்கி இட்டுச் செல்கி றார்கள் என்றார். இத்தேர்தல் கொள்கையைச்சார்ந்த போட்டியாக உள்ளது என்று பிரியங்காகாந்தி கோடிட் டுக்காட்டியதுடன் பாஜகவு டன் இணைத்துக் கொண் டுள்ள வருண்காந்தியை சாடியுள்ளார்.

இதுகுறித்து சி.பி. பாம்ப்ரி (Bhambhri) தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (28.4.2014) எழுதி இருப்பதாவது:

கொள்கைப்பூர்வமான போட்டி என்பது இந்தியா வில் பழமையானதும், மிகப் பெரிய சமுதாய, அரசியல் அமைப்பாக உள்ளதுமான காங்கிரசுக்கு ஒரே உண் மையான எதிரியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ் டிரிய சுயம் சேவக் சங் அமைப்பை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

பிஜேபியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.

1952 முதல் நடைபெற்று வரும் இந்தியாவின் மற்ற எந்த தேர்தலையும் விட, முடிவுடனும், ஒருவித வெறியுடனும், முழு சக்தியுடன் ஆர்.எஸ்.எஸ்சை வழிநடத்தும் மோகன் பகவத் குதித்துள்ளார். வெளிப்பார்வையில் கலாச் சார அமைப்பு என்கிற முக மூடியை அணிந்து கொண்டு, தேர்தல் காலங்களில் பாஜக மற்றும் ஜன சங்கத்தை ஆர்.எஸ்.எஸ். பின் இருக் கையில் இருந்துகொண்டு இயக்கி வரும். ஆனால், 2014இல் தேர்தல் அரசிய லில் ஆர்.எஸ்.எஸ். கொள் கையுடன் உள்ள அனைத்து ஆதரவு அமைப்புகளையும் நேரிடையாக ஈடுபடுத்தி யது. சங் பரிவாரங்கள் 1998இல் ஏற்பட்ட அனுப வத்திலிருந்து 2014இல் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் ஹிந்து ராஷ்டிரவாதம் அமைக்க முடியும் என்முடிவு செய்தது. அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு இந்தியாவில் உள்ள மாநி லங்களை ஹிந்துத்துவமாக் கும் கருத்துக்கு முன்னெ டுத்துச் சென்றதில் வெற்றி கண்டது. ஆனாலும், ஆட் சியதிகாரத்தை 2004இல் இழந்தது. பாஜகவின் இந்த தோல்வி சங்பரிவாரங்களின் தலைமையிடம் விழிப்பை ஏற்படுத்தியது. மோடியை முன்னிறுத்துவது ஏன்?

தமிழ் ஓவியா said...

ஆகவே, மோகன் பகவத் வாஜ்பேயி காலத்திய பாஜக தலைவர்களை அரசியலிலி ருந்து ஒதுக்கிவிட்டு, பிரத மருக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை நிய மித்தார். ஹிந்துத்துவாவுக் காக எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடத்தில் ராமன்கோவில் கட்டுவதாக யாத்திரை நடத்தியதைப் போன்றே, நரேந்திர மோடி யும் செயல்படுவார் என்கிற எதிர்பார்ப்பில் அவரை பிரதமருக்கான வேட்பாள ராக மோடியை ஆர்.எஸ். எஸ். நியமனம் செய்தது.

ஆர்.எஸ்.எஸ்சின் நிறுவனர் ஹெட்கேவர், தொடக்கக் கால ஒருங்கி ணைப்பாளர் எம்.எஸ். கோல்வால்கர் கட்டுப்ப டாக ஹிந்துத்துவாவைப் பரப்புபவர்களை உரு வாக்குவதற்கு மட்டுமின்றி பிரிட்டிஷ் காலனியாதிக் கத்தின் பாதையில், பல்வேறு சமயங்களால், பிரிந்து இருப் பவர்களிடம் ஹிந்து பிரா மணீயத்தின் ஆதிக்கத் தூணை நாட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ். பணியாற் றியது. 2014இல் ஆர்.எஸ்.எஸ் கூறும் ஹிந்து என்பதற்கு விளக்கமாக பொருள் கூறி உள்ளது. இந்தியாவுக்கான கொள்கை என்பதாக, ஆர். எஸ்.எஸ்சின் கொள்கையாக அதன்வழியில் உள்ள அமைப்புகள், மற்றும் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தெளி வாகவே கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸின் திட்டம்!

மத்தியிலோ, மாநிலத் திலோ பாஜக அல்லது ஆதரவு கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது, வணிகம் மற்றும் தொழில்களில் உள்ள சில முக்கிய தொழி லதிபர்கள் ஆர்.எஸ்.எஸ்சால் நியமிக்கப்படும் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண் டும். இந்தத் தேர்தல்களில் இலாபத்தை எதிர்நோக்கும் பெரும்பணக்காரர்கள் சங் பரிவாரங்களை வெளிப் படையாக ஆதரிக்க வேண் டும். ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளை ஏற்காத வர்கள், மேலோட்டமாக உள்ள நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் ஹிந்து மனப் பான்மையுடன் இருப்பவர் களிடம் பாஜகவை, மோடியை ஆதரிக்கும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.

ஹிந்துக்களில் ஆர்வ முள்ளவர்களைத் திரட்டி ஆர்.எஸ்.எஸ்சின் கொள் கைப் பயிற்சி அளித்து ஹிந்துத்துவக் கட்சிகளில் இணைக்க வேண்டும். தேச பக்தி, தியாக உணர்ச்சியை ஹிந்துக்கட்சியின் நிகழ்ச் சிகள் மற்றும் கொள்கை களில் எதிரொலிக்க வேண் டும். தேச நலனுக்கான கட்டுப்பாடுகள்மூலம் மில் லியன் கணக்கானவர்கள் பாஜகவை நோக்கி வர வேண்டும். ஆனால், இந்தி யாவின் கொள்கை ஹிந்து என்பதில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கணக்கில் கொள்ளப்படு கிறார்களா?

முசாபர்நகர் மற்றும ஷாம்லியில் முஸ்லீம்கள் மீதான கலவரத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். அவர்களை மக்களவைத் தேர்தலில் எவ் வித தயக்கமும் இல்லாமல் தேர்தலில் நியமிப்பதும், தேர்தல் பணிகளில் ஈடு படுத்துவதுமாக இருப் பதைப்பார்க்கும்போது, ஹிந்து இந்தியாவில் முஸ் லீம்கள் ஒருபொருட்டாக கருதப்பட வில்லை என் பதையே காட்டுகிறது. இரு வகை குடிமக்கள்

பாரத மாதா என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே முதல் தரக்குடி மகன்களாகவும், மற்ற மதத் தைச் சேர்ந்தவகுப்பினரை

இரண்டாம் தரக் குடிமகன்களாகவும் ஆக்கிவிட்டு எப்போதுமே அவர்கள் குறிவைக்கப்படும் நிலையும் ஏற்படும்.

இந்த சிறுபான்மையருக்கு எதிரான தகவல் ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற் கொண்டுள்ள அய்ம்பது அமைப்புகளுக் கும், நாடுமுழுவதும் உள்ள 44,982 ஷாகாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் பரவியுள்ளது. இதன்மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட மாட் டார்கள் என்பவர்களை ஆர்.எஸ்.எஸ். முட்டாளாக்கி உள்ளது.

சுருக்கமாகக் கூறவேண்டுமானால், இந்தியாவில் மே 16இல் இரு வேறு எதிர்ப்புக் கருத்துக்களை உடையவர்கள் வெளியில் வருவதே கடினமாகிவிடும். சமுதாயத்தில் குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக சிறு பான்மையரை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது. இதைத்தான் ஒரு சார்பற்ற வளர்ச்சியின் முன்னுதாரண மாக கூறுகிறார்கள் என்று சி.பி. பாம்ப்ரி எழுதியுள்ளது.

(‘The Economic Times - 28.4.2014 - page-12)

Read more: http://viduthalai.in/e-paper/79419.html#ixzz30EQissfV

தமிழ் ஓவியா said...கல்கிகளின் வக்காலத்து!

கேள்வி: மோடியைச் செங்கோட்டைக்கு அனுப் பினால் பெற்ற சுதந்திரம் வீணாகி விடும் என்கிறாரே தா. பாண்டியன்?

பதில்: சுதந்திரம் பறி போய் விடும் என்பதெல்லாம் தேவையற்ற பயம். இந்திய மக்களிடையே இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும் அரசியல் தெளிவும் அபரிதமானது. அவ்வளவு சீக்கிரத்தில் நம் சுதந்திர வேட்கையும், உணர்வும் மழுங்கி விடாது. பா.ஜ.க.வே ஆட்சிக்கு வந்தாலும் எந்தவிதமான அதீத நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அதற்கு அரசியல் சாசனம் இடம் தராது; மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காகச் சொல்லப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் அர்த்தமில்லை. குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி மிரட்டலாம். வாக்காளர்களை அல்ல! - கல்கி. 27.4.2014

பி.ஜே.பி.யைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தோழர் தா. பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து சரியானதே என்பது விளங்கும். மோடி முதல் அமைச்சராக இருந்த போது தானே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்டார்கள். முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தமேயில்லாது அது நடந்துவிட்டது என்றால், இதை விட மோடியின் நிர்வாகப் பலகீனத்துக்கு வேறு சான்று தேவையேயில்லை!

மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டார்கள் - ஏமாந்துவிட மாட்டார்கள் என்கிறது கல்கி, குஜ்ராத் கலவரத்துக்குப் பிறகு மோடி இருமுறை ஆட்சியைப் பிடித்தது என்பது மக்களின் விழிப்புணர்ச்சியாலா?

பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் தலைமையில் தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது!

கடப்பாறையைக் கொண்டு இடித்தபோது இது சட்ட விரோதம், நியாய விரோதம் என்று அந்தப் பெரும் தலைவர்களுக்குத் தெரியாதா?

சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவதாகச் சொல் லுகிறார்களே - இது என்ன கிச்சுக் கிச்சு விளையாட்டா?

கல்கிகளின் கபடம் நமக்குப் புரிகிறது! அனேகமாக ஒவ்வொரு பார்ப்பனரும் (சிறப்புப் புலனாய்வு காவல் துறை அதிகாரி இராகவன் உட்பட) மோடி தலைமையில் இங்கு ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு முறை கல்கி அறிவித்திருக்கிறது -அவ்வளவுதான்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30EQvZ0Eq

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு?

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு சேலம் வழியே மைசூர் செல்லும் விரைவு இரயில் வண்டியில் இரவு ஒரு மணி அளவில் (சனியன்று நடைபெற்று இருக்கிற கொள்ளை அதிர்ச்சியையூட்டுகிறது.

பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த பெண்களுக்கே இந்தக் கதியா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஓர் இரயிலுக்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காம்; இது ஏதோ சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, நடை முறையில் பயன் விளைவிக்கக் கூடியதாக இல்லையே!
சாலையில் பயணம் செய்தாலும் சரி, இரயிலில் பயணம் செய்தாலும் சரி பாதுகாப்பு குடி மக்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு இல்லை - இல்லை என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை!

இதற்கிடையே இன்னொரு செய்தி - சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இலஞ்சம் வாங்கினால் குண்டு வைப்போம் என்று இராயபுரம், ஆர்.கே. நகர், மயிலாப்பூர், இராயப்பேட்டை காவல் நிலையங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம்.

இலஞ்சம் உள்ளிட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக உள்ள காவல்துறைக்கே குண்டு வைப்போம் என்ற மிரட்டல் கடிதம் என்றால் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காவல் நிலையங்களில் இலஞ்சம் வாங்கப் படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் - காவல்துறையையே மிரட்டும் அளவுக்கு நாட்டு நிலைமை மோசமாகி விட்டதா என்பது இன்னொரு பக்கம்! போகிற போக்கை பார்த்தால் தற்காப்பு இல்லா விட்டால் நடமாட முடியாது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERCaUW1

தமிழ் ஓவியா said...

கூலி வேலை செய்கிறார் பாரத ரத்னா டெண்டுல்கர் - நம்புங்கள்!

நாட்டில் ஊழல்கள் கலர் கலராக நடக்க ஆரம்பித்து விட்டன. கோவாவில் பிஜேபி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.150. உள்ளூர்க் கட்சிக்காரர்கள் இதில் உள் குத்து வேலையில் ஈடுபட்டுகின்றனர். 150 ரூபாயைக் கொடுப்பதில்லை. 150 ரூபாய் கொடுத்ததாக கையொப்பம் வாங்கிக் கொள்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளி வருவதுண்டு.

ஆனால், பிஜேபி ஆளும் கோவாவில் நடந்துள்ளது கற்பனைக்கும் எட்டாத படுநாசமாக அல்லவா இருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலி வாங்கும் தொழிலாளிகள் யார் யார் தெரியுமா?

இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி ஆளும் நடிகர் அமிர்தாபச்சன், பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட்டுக் காரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. டெண்டுல்கரின் மனைவி உள்ளிட்டோராம்.

நாடு எந்த யோக்கியதையில், தராதரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? பிஜேபி ஆட்சியின் இலட்சணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERMekOx

தமிழ் ஓவியா said...


கழகத்தின் பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!


தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டன; அடுத்து...

பெரியார் உலகம் பணிகள், கழகத்தின்

பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!

தமிழர் தலைவர் அறிக்கை


மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

தேர்தலில் நமது கடமையை நிறைவேற்றி யுள்ளோம்; வெற்றி - தோல்விகள் பற்றி கவலை யில்லை; அடுத்து நமது கழகப் பணிகள் வேகமாக நடைபெறட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் கழகக் குடும்பத்தவர்களே, பொறுப்பாளர்களே,

கடந்த ஒரு திங்களுக்கு மேல் தேர்தல் பரப்புரை -பணிகளில் நாம் ஈடுபட்டோம் மும்முரமாக.

காரணம் நமக்கு அரசியல் ஆர்வம் அல்ல; மாறாக நம் கொள்கை, லட்சியங்களுக்கும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை அச்சுறுத்தும் அபாயங்களும் விளைவிக்கக் கூடிய சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது; அதன் மூலம் பழைய மனுதர்மமும், பாசீசமும், நாட்டையும், சமுதாயத்தையும் நாசமாக்கி விடக்கூடாது என்ற பொறுப்பணர்வு, கவலை காரணமாகவே.

தேர்தல் முடிந்தது - நமது பணிகள் தொடரட்டும்!

பற்பல நேரங்களில் தேர்தல் சூதாட்டமாகவே நடைபெறுவதால், முடிவுகள் எப்படியிருந்தாலும், வெற்றி வந்தாலும் துள்ளிக் குதிக்கப் போவதில்லை; எப்போதும் வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள் உண்டு

தோல்விகள் என்றும் அனாதைதான்

என்ற ஆங்கில முதுமொழியை மாற்றுகிறவர்கள் நாம்! தோல்வி வந்தாலும் துவண்டு போய் மூலையில் முடங்கி விடப் போவதில்லை; நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் முன்பு ஒரு முறை எழுதியது போல, தோல்வியைக்கூட, நம் கொள்கை வெற்றிக்குத் திருப்பி விடுவது எப்படி என்ற வித்தையும் விவேகமும் நமக்கு உண்டு. எனவே நமது வழக்கமான பிரச்சாரப்பணி, ஆக்கப்பணி, குறிப்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் திரட்டும் பணி, சமூகநீதிக்கான அடுத்த கட்ட - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு உட்பட பல் முனைப் பணிகள், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் அய்யாவின் ஆணையை நடைமுறைக்குக் கொணரவிருக்கும் தடைகளை உடைத்தெறியும் பணி, போன்றவைகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய உடனடியாகத் துவக்கி விடுங்கள்.

களப்பணி பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்!

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாம்கள், இளைஞர்கள் - மாணவர்களுக்கான பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், கிராமப்புறங்களில் தீவிர பிரச்சாரத் திட்டம், இளைஞர் அணி - கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறைப் பணிகள் இவைகளை மேலும் வேகமாக முடுக்கி, முழு மூச்சுடன் செயல்பட வைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உதவாதினி ஒரு தாமதம்!

தலைமைச் செயற்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைப்பாளர்களாக மேற்பார்வையிட்டு, தலை மைக்கு உடனடியாக அறிக்கை வழங்கிட வேண்டுகிறோம்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/79421.html#ixzz30ERVdoFs

தமிழ் ஓவியா said...


லாலுவின் நறுக்குப் பேட்டி பீகாரில் பிஜேபி களத்தில் இல்லை


மக்களவைத் தேர்தலில் உங்களுடைய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இங்கே போட்டி எங்கே இருக்கிறது? பொதுக்கூட்ட மைதானங்களில் என்னு டைய பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தின் முழு அளவையும் தொலைக் காட் சிகள் காட்டுவதே இல்லை. நரேந்திர மோடி சளைத்து விட்டார் என்றே நினைக்கி றேன். அவருடைய கூட்டங் களுக்கு மக்கள் இப்போது வருவதே இல்லை கூட்டம் குறைந்துகொண்டே வரு கிறது. அவருடைய கூட்டத் துக்குப் போகிறவர்கள் கூட ஒரு கலவரக்காரர் எப்படி இருப்பார் என்று நேரில் பார்க்கத்தான் போகின் றனர்.

உங்களுடைய முக்கிய அரசியல் எதிராளி யார் - மோடியா, நிதீஷ்குமாரா?

அட... இங்கே போட் டியே இல்லை என்கிறேன். ஒருதரப்புதான் கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அந்தத் தரப்பு நாங்கள் தான். பிஹாரில் உள்ள எல்லாத் தொகுதிகளுக்கும் செல்லுங்கள், மக்கள் என்னோடு இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

முதல் இரண்டு சுற்று வாக்குப் பதிவு எப்படி இருந்தது?

பாட்னாவில் இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக பாஜக நினைக்கிறது. அவர்களு டைய கனவெல்லாம் பலூன் போலக் காற்றில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது. அது பட்டென்று வெடித்தது தான் உண்மை, அவர்க ளுக்கு உறைக்கும். களத்தில் என்ன நடக்கிறது என்று செய்தி ஊடகங்களுக்கு எதுவும் தெரியாது. நான் மட் டும்தான் இந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவன். பேச்சைக் கேட்க மக்கள் வராதபோது கூட்டங்களை நடத்தி என்ன பயன்? பிஹாரில் இதுதான் நிலைமை மற்ற மாநிலங் களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.

மீண்டும் முஸ்லிம் - யாதவ் ஆதரவாளர்களை உங்கள் பக்கம் ஈர்த்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

முஸ்லிம்கள், யாதவர் கள் மட்டுமல்ல, மகா தலித் துகள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முற்பட்ட வகுப்பினர் கூடப் பெரும் எண்ணிக்கையில் வந்து என்னை ஆதரிக்கின்றனர், முற்பட்ட வகுப்பில் முற் போக்கானவர்கள் பலர், இருக்கின்றனர். அவர்கள் மோடி பித்துப்பிடித்து அலையவில்லை.

இந்தத் தேர்தலில் பிரச்சினை கள் என்ன? அடுத்துவரும் சுற்றுகளிலும் இப்படியேதான் இருக்குமா?

பாஜக ஏற்கெனவே நம் பிக்கையை இழந்துவிட் டது. கிரிராஜ் சிங்கும் நிதின் கட்காரியும் விரக்தி காரண மாக வசைபாடத் தொடங்கி விட்டனர். மோடியைச் சகித் துக் கொள்ள முடியாதவர் கள் பாகிஸ்தானுக்குப் போங் கள் என்கிறார் கிரிராஜ் சிங். பிஹாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின் கட்காரி. என்ன அரசியல் சிந்தனை இது? அவர்கள் தான் பாசிஸ்ட்டுகள், மத வாதிகள், இதைத் தெரிந்தே தான் சொல்கிறார்கள்; கடும் ஆட்சேபனைகள் வந்த பிறகு சொன்னதைத் திரும் பப் பெறுகின்றனர். இது தான் மோடியின் வேலைத் திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டுவிட்டது.

காங்கிரசுடனான கூட்டணி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?

மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அவசியம். இந்தக்கூட்டு நாட்டைக் காப்பதற்காக, அதன் மதச் சார்பற்ற அடித்தளத்தைக் காப்பதற்காக நாங்கள் திறந்த மனதுடன் செயல் படுகிறோம்.

1990-இல் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து நிறுத் தினீர்கள்; உங்களு டைய

அடுத்த லட்சியம் மோடியின் முயற்சியை...

விரட்டிவிட்டேன். ஒரே உதைதான், மோடி எங்கி ருந்து வந்தாரோ அங்கேயே ஓடிவிட்டார். ஆம் அவர் கதை முடிந்தது. இது மதச் சார்பற்ற நாடு. வகுப்புவாத சக்திகள் இங்கு வெற்றி பெறவே முடியாது. பெருந் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்; அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இளைஞர்கள்தான் பாழாய்ப் போவார்கள்.

யார் அடுத்த பிரதம அமைச்சராக வருவார்கள்? அடுத்த பிரதமரை நீங்கள் தான் தீர்மானிப்பீர்களா? தேர்தலுக்குப் பிறகு அர சியல் கட்சிகளிடையே புதிய அணி சேர்க்கை ஏற்படுமா?

இது எதுவும் என்னுடைய செயல் திட்டத்தில் இப்போ தைக்கு இல்லை. நான் இப் போது போர்க்களத்தில் இருக் கிறேன்.

Read more: http://viduthalai.in/page-3/79437.html#ixzz30ERnau9u

தமிழ் ஓவியா said...மன அழுத்தத்தை போக்க சில யோசனைகள்...

இந்த நூற்றாண்டு மனிதர்களிடம் உள்ள மிக முக்கியமான நோய், மன அழுத்தம். ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதிக்கு அடுத்த இடத்தை மன அழுத்தம் பிடித்துள்ளது. இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு நிம்மதி இல்லாத சூழ் நிலையையும் பல்வேறு நோய்களையும் தரும் இந்த மன அழுத்த நோயினால் உலகின் 69 சதவீத மக்கள் பாதிப் படைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்படுகிறது. ஒன்று நம்மை சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளாலும், மற்றொன்று நமது வாழ்க்கையில் நிகழும் சிந்தனைகள், ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலைப்பளு, அதிக சிரமத்தை சுமத்தல், குழப்பம், சுற்றுச் சூழல் மாசடைதல், எதிர்மறை சிந்தனைகள் நடைமுறை மாற்றங்கள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

இதுதவிர, பிறப்பு (பெண் குழந்தை, குறைபாடுடைய குழந்தை), இறப்பு, திருமணங்கள், விவாகரத்து, தொழில் பாதிப்பு, எதிலும் போட்டி சூழல், பதவிஇழத்தல், நல்ல பெயருக்கு ஏற்படும் பாதிப்பு, கடன் தொல்லை, தீராத நோய், வறுமை, தேர்வு பயம், போக்குவரத்து நெரிசல், கோபம், உறவு விரிசல், விரும்பத்தகாத மாற்றங்கள் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மனஅழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

மன அழுத்தத்தை குறைப்பதற்கு அதிகாலையில் சீக்கிரம் எழுந்து ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை தாமதம் செய்யாமல் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.

கடைசி நேரம் வரை தள்ளிப் போடாமல் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். அனைத்துக்குமே மாற்று யோசனை ஏதாவது ஒன்றை கைவசம் வைத்திருப்பது கடைசி நேர நெருக்கடியால் நிகழும் மன அழுத்தத்தை தீர்க்கும். சில தோல்விகள் ஏற்படும்போது, அத்தோடு எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்காமல் அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளுங்கள். தவறாக நடந்த விஷயத்தை பற்றியே எந்நேரமும் சிந்திக்காமல் நல்ல விஷயங்களை நினைத்து மகிழுங்கள். உடல் மற்றும் உள்ளத்திற்கு போதுமான ஓய்வை அளியுங்கள். எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். கருத்து ஒற்றுமையுடைய நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். நன்றாக அயர்ந்து தூங்குங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ESlgzxr

தமிழ் ஓவியா said...

உடற்பயிற்சி மூலம்
எடையை குறைக்க முடியுமா?
எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏற்கெனவே மூட்டுவலி இருப்பதால் நடைப் பயிற்சி செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வதும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. சின்னச் சின்ன உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா?

இதுகுறித்து பொது மருத்துவர் சுந்தர்ராமன் கூறியதாவது:- முதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100அய்க் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது மட்டுமே எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கும் சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றலாம். நடைப்பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி, சின்னச் சின்ன உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பருமனைக் கட்டுப்படுத்திவிடாது. உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

காலையில் தேவையான அளவு உணவு, மதியம் அளவான உணவு, இரவு வேளையில் பாதி வயிறு உணவு என எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி இருப்பதால் உங்களால் கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாது. பதிலாக வீட்டு வேலைகளை குனிந்து, நிமிர்ந்து செய்து பாருங்கள். எடை தானாகவே குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ET4binV

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக்கில் உணவு கொடுக்கலாமா?

பிளாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு. தரமானவற்றைப் பயன்படுத்துகிறோமா என்பதே முக்கியம். பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் 1, 2, 5 குறியீடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுப்பொருட்கள் வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட தரமான வகைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத் தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது... வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு ஆபத்தானது. இவற்றில் பொருட்களை வைத்தால், அதில் உள்ள விஷம் உணவுப்பொருளில் ஏறி ஆபத்தை விளைவிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETCNTjU

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடானால் காஷ்மீர் இணைந்திருக்காது பரூக் அப்துல்லா போர்க்கோலம்!சிறீநகர், ஏப்.28-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங் கேற்பதற்காக நேற்று சிறீ நகருக்கு வந்தார்.

காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. அதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அதன் பிறகு திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதைப்போன்ற தாகுதல்களுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட் டேன். இதைப்போல் இன் னும் ஆயிரம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி னாலும் பயந்து பின்வாங்கி ஓட மாட்டேன் என்று ஆவேசமாக கூறிய பரூக் அப்துல்லா இந்த கூட்டத் தில் பேசியதாவது:-

மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப் பாற்றி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல் லும்படி கடவுளை வேண் டிக் கொள்ளுங்கள். இந்தியா மதச்சார்பாகி விட முடி யாது. அது மதச்சார்பான நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் நீடித்து இருக்காது. காஷ்மீர் மக்கள் மதவா தத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.


மோடிக்கு ஓட்டு போடாத வர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று அவர்கள் (பா.ஜ.க.) சொல் கிறார்கள். ஆனால், மோடிக்கு ஓட்டு போடுபவர்கள் கட லில் மூழ்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79407.html#ixzz30ETsFmMd

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

தமிழ் ஓவியா said...


லாலு பேசும் மொழி!

இந்த பி.ஜே.பி. சங்பரிவாரக் கும்பலுக்குச் சரியான பதிலடி கொடுக்க ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்து தான் சரியானவராகத் தோன்றுகிறார். மட்டைக்கிரண்டு கீற்றாகத் தோலுரிப்பதில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார்.

1990இல் ரத யாத்திரை என்று கூறி அத்வானி ரத்த யாத்திரை நடத்தியபோது அவரைத் தைரியமாகக் கைது செய்த முதல் அமைச்சர் தான் லாலு பிரசாத். மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை முதன் முதலாக சமூக நீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அறிவித்தபோது, உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் தூண்டி விட்டுக் கலவரங்களை அரங்கேற்றிய நிலையில், அவர்களின் வாலை ஒட்ட நறுக்கியவர் பீகார் முதல் அமைச்சர் லாலுதான்.

உங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு உயர் ஜாதி பார்ப்பனர்களை அழைக்காதீர்கள் - நானே வருகிறேன் என்று சொன்னவரும்கூட அவர்தான்.

இந்தக் காரணங்களால்தான் பார்ப்பனர் உயர் ஜாதி ஊடகங்கள் அவரை மட்டம் தட்டி எழுதின. லாலு அவர்களின் ஜாதியைக் குறிக்கும் வண்ணம் மாடு கறப்பதுபோல கேலிச் சித்திரங்களை வெளியிட்டதுண்டு.

வி.பி.சிங், லாலு பிரசாத், வீரமணி என்றால் இன்று வரை கூட சோ போன்ற பார்ப்பனர்கள் ஆத்திர நெருப்பைக் கொட்டுவதைக் காண முடிகிறது.

அவர் இரயில்வே அமைச்சராக இருந்தபோது சாதனை முத்திரைகளைப் பொறித்தார்; ஏழை - எளிய நடுத்தர மக்களின் வாகனம் இரயில் என்பதை ஆக்கிக் காட்டியதோடு அல்லாமல், இரயில்வே துறையில் பெரிய அளவுக்கு இலாபத்தைக் குவித்துக் காட்டிய சாதனையாளர் அவர்.

ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்திற்கே சென்று வகுப்பு நடத்தி, தன் ஆற்றலைப் புலப்படுத்தி யிருக்கிறார். ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆகிக் காட்டுவேன் என்று கூட அவர் சூளுரைத்துச் சொன்னதும் உண்டு. அதற்கான நிருவாக ஆற்றல் உடையவர் அவர் என்பதில் அய்யமில்லை.

ஒரு கெட்ட வாய்ப்பு - பீகாரில் லாலு பிரசாத், நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான் போன்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று சேராமல் அரசியல் அடிப்படையில் பிரிந்து கிடப்பது தான். இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து கைகோத்து நின்றால் இந்தியாவின் அரசியல் வடிவமேகூட வேறு விதமாகத்தானிருக்கும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் - இவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்று சொல்லி அதன் அடிப்படையில்தான் பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார் கான்ஷிராம்; அந்த அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் கையில் கொண்டு வந்து சேர்த்தார். அவர் மறைவிற்குப் பிறகு செல்வி மாயாவதி, தடம் மாறி, பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொண்டு, கட்சி பிறந்ததன் நோக்கத்தையே சிதற அடித்து விட்டார்.

கான்ஷிராம் வகுத்துத் தந்த அந்த உ.பி. மாடல் தொடர்ந்திருந்தால், அது இந்தியா முழுமையும் வலிமை பெற்று இருக்கும்.

இந்து ஏட்டுக்கு லாலு பிரசாத் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கேள்வி: மீண்டும் முஸ்லிம், யாதவ் ஆதரவாளர் களை உங்கள் பக்கம் ஈர்த்து விட்டதாக நினைக் கிறீர்களா? லாலு பிரசாத் பதில்: முஸ்லிம்கள், யாதவர்கள் மட்டுமல்ல; மகா தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எங்களை ஆதரிக்கின்றனர் என்று குறிப் பிட்டுள்ளார்.

பி.ஜே.பியைப் பற்றிக் கேட்டபோது, கிரிராஜ் சிங்கும், நிதிஷ் கட்காரியும் விரக்தி காரணமாக வசைபாடத் தொடங்கி விட்டனர். மோடியைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்கிறார் கிரிராஜ்சிங். பிகாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின்கட்காரி; என்ன அரசியல் சிந்தனை இது! இவர்கள்தான் பாசிஸ்டுகள், மதவாதிகள்! இதைத் தெரிந்தே தான் சொல்கிறார்கள். கடும் ஆட்சேபனைகள் வந்தபிறகு சொன்னதைத் திரும்பப் பெறுகின்றனர். இதுதான் மோடியின் வேலைத் திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டு விட்டது என்று லாலு அறிவார்ந்த சாட்டையடி கொடுத்துள்ளார். இதுதான் இந்த சங்பரிவாரக் கும்பலுக்கான சரியான வைத்திய முறையாகும். புரிகிற மொழியில் பேசினால்தானே எதிரிகளுக்கும் புரிகிறது.

Read more: http://viduthalai.in/page-2/79444.html#ixzz30KNuy8xi

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம். - (விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/79443.html#ixzz30KONLc3v

தமிழ் ஓவியா said...


கடவுள் பெயரை சொல்லி தப்பிக்காதீர் ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் எச்சரிக்கை


நாமக்கல், ஏப்.29- மாவட்டத்தில் மழை பெய் யவில்லை என்பதற்காக, கடவுள் பெயரை சொல்லி அதிகாரிகள் தப்பிக்காதீர்கள், என மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி எச்சரித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில், நேற்று, கோடை வறட்சியில் குடிநீர் பிரச் சினை தீர்ப்பது தொடர்பான, பல்துறை அலுவலர்களுக் கான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, நகராட்சி, நகர பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம், குடிநீர் ஆதாரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, எனக் கேட்டார். அப்போது, கொல்லிமலை யூனியன் அதிகாரிகள், கொல்லிமலை மக்களுக்கு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. நீரா தாரங்கள் வறண்டு கிடப்ப தால், ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்சினை தீர்க்க, மலை மேல் வாய்ப் புகள் குறைவாக உள்ளது. எனவே, கடவுள் பார்த்து மழை பெய்ய வைத்தால், பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்தனர். அதே போல், ஒவ்வொரு அதிகாரிகளும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் உள்ள பிரச்சினை, நிதி, புதிய போர் வெல் அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட் டவை குறித்து பேசினர்.

அப்போது, ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பேசியதா வது:

அதிகாரிகள், குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறுவதை விட்டு விட்டு, கடவுள் பெய ரை சொல்லி தப்பிக்க வேண் டாம். குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து, மக்களிடம் இருந்து, குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண் டும். இன்னும், இரண்டு மாதங்களுக்கு, வாரம் ஒருநாள் குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அதில், முந் தைய கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது, கூட்ட ரங்கிலேயே சார்ஜ் மெமோ வழங்கப்படும். பழுதான போர்வெல்களை பழுது நீக்கி வைத்துக் கொள்ள வேண் டும். குடிநீர் பிரச்னை தீர்ப்ப தற்காக, பல்வேறு திட்டங் களில் இருந்தும் நிதி எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் வழங் கப்பட்டுள்ளது. நிதி இல்லை என்றால், என்னிடம் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று, குடிநீர் பிரச்னையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், பஞ்சாயத்து அளவில் இருந்தே, பிரச்சி னைகளை களைய முடியும். புதிய போர்வெல் அமைப் பது தேவையென்றால், உட னடி அனுமதி பெற்று, மக்களுக்கு குடிநீர் பிரச்சி னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-3/79495.html#ixzz30KOsTFNu

தமிழ் ஓவியா said...


பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனைப் பெண்கள்


உறவுகளுக்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக... என பன்முக பந்தமாக நம்முள் கலந்திருக்கும் பெண்களை சிறப் பிக்கும் மகளிர் தினம். இந்த வேளையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பற்றி அறிந்துகொள்வோம்.

தொழில்துறை: இந்திரா நூயி

சென்னையில் பிறந்த இந்திரா நூயி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.

முதன் முதலில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். உலக அளவில் அதிக சக்தி வாயந்த பெண்ணாகவும் நூயி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த மல்லிகா சீனிவாசன், தற்போது டாஃபே அமைப்பின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்த அவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார். கடந்த 25 ஆண்டுகளாக தரமான டிராக்டர் களை உற்பத்தி செய்து வரும் டாஃபே நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், வடிவமைப்பதிலும் மல்லிகா மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பிரபல கண் மருத்துவமனை அமைப்பான சங்கர நேத்ரால யாவுடனும், சென்னை புற்றுநோய் மருத்துவ மனையுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

விவசாயம்: சின்னப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் உள்ள புலிச்சேரி கிராமத்தில் பிறந்த அவர் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்கி விவசாயம் செழித்து விளங்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் தன் பவுண்டேஷன் அமைப்பின் களஞ்சியம் என்ற இயக்கத்தில் இணைந்து செயல்படத் துவங்கினார். இந்திய நாட்டில் உள்ள பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-7/79486.html#ixzz30KQGtGEg

தமிழ் ஓவியா said...


அப்படியே மின் தடையைப் போக்க யாகம் ஒன்றையும் நடத்தலாமே!


அண்ணாவுக்கு நாமம் போடும் அ.தி.மு.க அரசாங்கம், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில்களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து அறநிலையத்துறை நேற்று நடத்தியுள்ளது.

சரி, அப்படியே மின்சாரம் வேண்டியும் ஒரு பூஜை போடுங்க. மழை வேண்டும் என்று யாகம் செய்தால் பூணூல் காட்டில்தான் நல்ல மழை. வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்டு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் வந்து மக்கள் மாண்ட பொழுது அங்கு மழையை நிறுத்த இந்த பூணூல் விஞ்ஞானிகள் யாகம் செய்ய வேண்டியதுதானே!

மழையை உண்டாக்க முடியும் என்றால் மழையை நிறுத்தவும் முடியும் தானே! ஆனால் உண்மை என்னவென்றால் இதில் எதுவும் நடக்காது. யாகம் என்பதே பூணூல் கூட்டம் வயிறு வளர்க்கத்தானே. என்ன சொல்லுறது. சரிதானே?

Read more: http://viduthalai.in/page-8/79470.html#ixzz30KQWvxPd

தமிழ் ஓவியா said...


மோசடிக்காரர்கள்
மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page-2/79502.html#ixzz30QH9psMU

தமிழ் ஓவியா said...


சித்திரையில் மழையைத் தேடி...


பிற இதழிலிருந்து....
சித்திரையில் மழையைத் தேடி...

சித்திரை மாதம் 15 ஆம் நாள் தமிழ் நாடு முழுவதும்உள்ள முக்கிய கோவில் களில் மழை பெய்ய வேண்டிவருண ஜெப பூஜையை இந்து சமய அற நிலையத் துறை ஒரே நேரத்தில் நடத்தியுள்ளது. பூஜை, புனஸ்காரங்கள் செய்தது மட்டு மின்றி இசைக்கல்லூரி மாணவர்கள் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி ராகங்களைப் பாடி இசை ஆராதனை நடத் தினர் என்றும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தண்ணீரில் ஒரு மணி நேரம் நின்று சிவாச்சாரியார்கள் வருணபூஜை செய் தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இதுஒருபுறம், குடி தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மறுபுறம். பருவகால மழை யின் அளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. சராசரி மழை யளவான 912 செ.மீ. கடந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்துவிட்டது.

வெப்பமயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருவதால் வானிலை மாற்றம் மழையளவை கடுமையாகப் பாதிக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப்பருவமழை சரியாகப் பெய்யாமல் பொய்த்துவிட்டது.மழை பெய்வதற்கு ஆதாரமான மரங்கள், காடுகள், வனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிப் பதில்லை. அவற்றை அழிக்கும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப் பதில்லை. ரியல் எஸ்டேட் என்ற பெய ரிலும் அரசு அலுவலகங்கள் கட்டுதல் என்ற பெயரிலும்வயல்களும் நீர் நிலைகளும் அழிக்கப்படுகின்றன. காடு களை அழித்து கழனியாக்கினான்; குளங்களை வெட்டினான்; ஏரிகள் அமைத்தான்; அணைகள் கட்டினான் என்று அரசர்கள் வரலாற்றில் படித்தவை எல்லாம் மறந்து போய் விடுகின்றன. இருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங் கள், வாய்க்கால்கள், இதர நீர்நிலைகளை தூர்வாருதல், ஆழப்படுத்துதல், கரை களை உயர்த்துதல், மழைநீர் வீணாக் காமல் சேகரித்தல் என்ற ஆக்கப்பூர்வ பணிகளில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.

வைகையின் கரையை உயர்த்துவ தற்காக நடந்த வேலையில் ஈடுபட்ட இறைவன் சொக்கநாதன் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக மன்னனிடம் பிரம்படிபட்டான் என்பது திருவிளையாடல் புராணம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ ஏனோ தானோவென்று தூர்வாருதல் உள் ளிட்ட மராமத்துப்பணிகளை செய்வ தால் ஒப்பந்ததாரர்களுக்குப் பயன் கிடைக்கலாம்; மக்களுக்குப் பயன் கிடைப்பதில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்; விண்ணின் மழைத் துளி மண்ணின் உயிர்த்துளி என்றெல் லாம் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது நல்ல செயல்தான். ஆனால் காலத்தே செய்ய வேண்டிய மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு போன்றவற்றை உரிய காலத்தில் நிறைவேற்றாமல் இருந்துவிட்டு கடைசி காலத்தில் யாகம் நடத்துகிறோம்.

ஜெபம் செய்கிறோம் என்று கோடிக் கணக்கில் வீணடிப்பதால் என்ன பயன்? மழைக்கஞ்சி காய்ச்சுதல், கழுதை களுக்கு கல்யாணம் செய்தல் என்று பாமர மக்கள் செய்வதற்கும் அரசின் நிர்வாகத்துக்குட்பட்ட அறநிலையத் துறை வருண ஜெபம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்? சூழும் மழை மேகங்கள் மீது வெள்ளிப்பொடி உள் ளிட்ட ரசாயனப் பொருட்களைத் தூவி மழையைப் பொழிய வைத்ததும் அதே போல தேவையில்லை என்று நினைத்த போது விமானங்கள் மூலம் மேகங் களைக் கலைத்து மழை பெய் யாமல் நிறுத்தியதும் முந்தைய சோவியத் நாட்டில் நிகழ்த்தப்பட்டது என்பது வரலாறு. கோடையில் மழைவர வாடை யிலேயே பணிகளை துவக்கிட வேண் டும். அவ்வாறு வருமுன் காக்கும் வகை யில் செயல்படுவதே சிறந்த அரசாகும்.

நன்றி: தீக்கதிர், 30.4.2014

Read more: http://viduthalai.in/page-2/79504.html#ixzz30QHI3g6h

தமிழ் ஓவியா said...


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். இதுவரை 13 ஜனசபா என்ற மக்கள் அரங்க உரையை நிகழ்த்தியுள்ளார், இங்கு மக்கள் கேள்வி கேட்க இவர் பதில் அளிப்பார். இந்த 13 ஜனசபா மாத்திரமில்லாமல் பல்வேறு சாலைப் பிரச்சாரம் (ரோட் ஷோ) நடத்தியுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் லட்சக்கணக்கானோர் பங்குகொண்டனர். இந்தச் செய்தி யாருக்குப் பயம் உண்டாக்குகிறதோ, இல்லையோ- பாஜகவிற்கு பெரும் கிலியை உண்டாக்கிவிட்டது. காரணம் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் இவர்களின் ஓட்டுக்கள் தான் வெற் றியைத் தீர்மானிக்கும். இதுநாள்வரை நடந்த தேர்தல்களில் சரியான எதிரி வேட்பாளர் நிறுத்தப்படாததின் காரண மாகத்தான் சொற்ப வாக்குகளில் முரளி மனோகர் ஜோஷி வெற்றிபெற்று வந்தார். ஜோஷிக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை முரளிமனோகர் ஜோஷி பெற்ற வாக்குகளின் விழுக்காடு ஒன்றும் மிகப்பெரிய அளவில் இல்லை.

இம்முறை காங்கிரசும் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக கெஜ்ரி வாலை ஆதரிப்பதுபோல் தொகுதிக்கு அதிகமாக அறிமுகமில்லாத வேட் பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் காங் கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் வாரணாசிக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆகையால் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக் கும் என்று சொல்லமுடியாது. இந்த நிலையில் வெற்றிக்குக் காரண மான அனைத்து வாக்குகளும் கெஜ்ரி வாலுக்குச் செல்லும் சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வாரணாசி மக்களிடம் பாஜக கொஞ்சம் அதிக மாகவே கெட்டபெயர் வாங்கிக் கொண்டு வருகிறது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவானவர்களைத் தாக்குவது, பேனர்களை கிழிப்பது, பொது இடங் களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அசிங்க மான சொற்களை உபயோகப்படுத்துவது போன்றவைகளால் வாரணாசி மக்களி டையே பாஜகமீது வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதுபோல் கெஜ்ரிவால் தன்னை, யாரும் தரக்குறைவாகப் பேசினால் அவர்களுக்கு பூச்செண்டு களைப் பரிசாக அளியுங்கள் என்று கூற, வாரணாசியில் பல இடங்களில் பூச் செண்டுகளின் வியாபாரம் பெருகியுள் ளது. அதாவது பாஜகவினருக்கு எதிரான நிலை மக்களிடையே உருவாகி விட்டது. இன்னும் தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் பட்சத்தில் கெஜ்ரிவாலின் ரோட் ஷோ மிகவும் பிரபலமாகி வருவ தால், தங்களுக்கு விழும் வெற்றிக்கான வாக்குகளை கெஜ்ரிவால் பறித்துவிடு வாரோ என பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இறுதியாக மோடி ஒருமுறை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வாரணாசி பாஜக பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். மே 12 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசியில் நடைபெற உள்ளதால் மோடி எப்படியும் இரண்டு முறையாவது வாரணாசியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், அதற்கு முன்பு கெஜ்ரிவாலில் பிரச்சாரத்தில் குழப்பம் உண்டாக்கிவிடவேண்டும் என்றும் வாரணாசி பாஜக பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். மோடியின் ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் இல்லை கடந்த 24 ஆம் தேதி மோடி தனது வேட்பு மனு தாக்கலின் போது பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்திக் காண் பித்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாரணாசி மக்கள் பலர் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் இந்தியா வெங்கும் பலரை கொண்டுவந்து இறக்கியுள்ளனர். முக்கியமாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆட்சியாளும் மாநிலத்தில் இருந்து பெருவாரியான மக்கள் ரயில் மூலம் வாரணாசி வந்து இறங்கியுள்ளனர். ஊர்வலத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இது குறித்து வாரணாசிப்பதிப்பான ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வாரணாசி ரயில் நிலையம் கும்பமேளாவிற்கு வரும் கூட்டம் போல் நிறைந்துவிட்டது, நாடு முழுவதிலும் இருந்து பல ரயில்களில் பாஜக கட்சி யினர் வந்துகொண்டு இருந்தனர். வாரணாசி மக்கள் மோடியின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாஜகவி னரைப் பார்த்தாலே தெரியும் என்று எழுதியுள்ளது.
(ஹிந்துஸ்தான் இந்தி நாளிதழ், வாரணாசி)

Read more: http://viduthalai.in/page-2/79506.html#ixzz30QHPptlc