Search This Blog

5.4.14

யாருக்கு வாக்களிக்கக் கூடாது? யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

யாருக்கு வாக்களிக்கக் கூடாது? யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

 

I. பிஜேபிக்கு ஏன் வாக்கு அளிக்கக் கூடாது

1) இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியத்தை உண்டாக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில்(Pre amble) உறுதிப்படுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மையை இதன் மூலம் உடைத்துச் சிதற அடிக்கிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் குஜராத் மாநிலத்தில் நரேந்திர பாய் தாமோதர தாஸ் மோடி முதல் அமைச்சராக இருந்த கால  கட்டத்தில் (2002) சிறுபான்மை மக்கள் வேட்டையாடிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் திட்டமிட்டு அரங்கேற்றப்படும்.

1992 டிசம்பரில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தார்களே அந்த நிலை இந்தியா முழுமையும் தொடரப்படும்.

2) சமூக நீதி ஒழித்துக் கட்டப்படும். (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பி.ஜே.பி.யினர் என்பதை இந்த இடத்தில் நினைவு கொள்க)

பி.ஜே.பியின் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான, சஞ்சய் பஸ்வான், பிஜேபி ஆட்சிக்கு வந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு திருத்தி அமைக்கப்படும்(The Economic Times - 26.2.2014)என்று அறிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்தல்ல - பிஜேபியின் முடிவு என்றும் அறிவித்து விட்டார்.

3) இந்தியாவில் ஆட்சி மொழியாக இந்தி - சமஸ்கிருதம் ஆக்கப்படும்.

4) மாநிலங்கள் என்ற அமைப்புக்குப் பதிலாக, இந்தியா என்பது ஒரே நாடாக அறிவிக்கப்படும்; ஒரே நாடு - பாரத நாடு ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம் - ஹிந்துக் கலாச்சாரம் என்பதுதான் பிஜேபியின் கோட்பாடு.
5) பெண்ணடிமை கட்டிக் காக்கப்படும் (ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்: திருமணம் என்பது கணவன் மனைவிக்கு இடையேயான ஒப்பந்தம் திருமணத்தின்போது, நீ வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டால், உன் தேவை களை நான் கவனித்துக் கொள்வேன். உன்னையும் பாதுகாப்பேன்! எனக் கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும்போது வேறு வழியின்றி மனைவியைக் கணவன் கை விடுகிறான்  - (தினமலர் 7.1.2013 பக்கம் 12)

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் மோடியின் குஜராத் ஆட்சியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது).

பாடத் திட்டங்களை இந்துத்துவா அடிப்படையில் பள்ளிகளில் போதிப் பார்கள். பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சோதிடம் பல்கலைக் கழகங் களில் போதிக்கப்பட வழி செய்யப்பட்டது - ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து கோடி கோடியாகப் பணம் கொட்டிச் செலவழிக்கப்பட்டது.
6) சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வருண ஆதிக்கம் - கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும்தான் - பிஜேபி ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கும்
பி.ஜே.பி.யை ஆதரிக்கக் கூடாது என்ப தற்கு இன்னும் ஏராளம் உண்டென்றாலும் இந்தக் காரணங்களே போதுமானவைதான்.

 

II. அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிக்கக் கூடாது  ஏன்?

1) பெரியார் -அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே, திராவிடர் இயக்கப் போர்வையில் பார்ப்பனீயச் சிந்தனைப் போக்குக் கொண்டது. பகுத்தறிவுக் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்து யாகம் நடத்துவது, மண்சோறு சாப்பிடுவது வரை சென்று விட்டது.

2) பி.ஜே.பி.யின் இந்துத்துவா கொள் கையை ஏற்றுக்  கொண்டது. (ராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய்க் கட்டுவது?  என்று கேள்வி கேட்டவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா). ராமன் பாலத்தை உடைத்து ஹிந்துக்களின் உணர்வைப் புண்படுத்தக் கூடாது  என்று கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, தமிழர் களின் 150 ஆண்டு கால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று சொல்பவர் ஜெயலலிதா.

3) இடஒதுக்கீட்டின்அடிப்படையைத் தகர்க்கிறது. அ.இ.அ.தி.மு.க. இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையி லேயே (பக்கம் 20) கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்கிற அரசமைப்புச் சட்டத்தின் அணுகு முறைக்கு விரோதமாக சமூகநீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு என்ற வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

4) தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் - தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப் பட்டவை என்பதற்காக அவற்றைச் செயல் படுத்த மறுத்து முட்டுக்கட்டை போட்டு வரு கிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி அதிகம்.

5) தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஜே.பி.யை விமர்சிக்க மறுக்கிறது - தேர்தலுக்குப் பிறகு பிஜேபியோடு கைகோக்க திட்டமிட் டுள்ளது.

6) சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கூறுகிறது, முஸ்லிம்களுக்குக் கொடுத்தால் மற்றவர் களும் கேட்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா.

7) ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இரட்டை வேடம் - சந்தர்ப்பவாதம்!
இன்னும் காரணங்கள் மிகவுண்டு என் றாலும், மேற்கண்டவையே போதுமானவை - இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்கு.

III. தே.மு.தி.க. பா.ம.க. - ம.தி.மு.க வுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது

1) ஒரே வரியிலேயே சொல்லி முடித்து விடலாம். இவர்கள் பி.ஜே.பி. கூட்டணியில் இருக்கிறார்களே இது ஒன்று போதாதா இவர்களைப் புறக்கணிப்பதற்கு?

பெரியார் பார்ப்பனர் அல்லாத மக்களை ஒன்று திரட்டினார் - பா.ம.க.வோ தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் (பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு) அணியைத் திரட்டி பிற்போக்குத்தனத்தின்  எல்லைக்கே சென்று விட்டார் - இவரின் பெரியார் வேடம் அம்பலமாகி விட்டது.

தமிழக மீனவர் பிரச்சினையாக இருந்தாலும், ஈழத் தமிழ்ர் பிரச்சினையாக இருந்தாலும் காங்கிரசுக்கும் பி.ஜே.பி.க்கும் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது.

IV. காங்கிரசை ஏன் நிராகரிக்க வேண்டும்?

1) மதச் சார்பின்மைக் கொள்கைளைத் தவிர, மற்றபடி பி.ஜே.பி.க்கும், காங்கிரசுக் கும் அதிக வேறுபாடு கிடையாது.

2) ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தமிழர்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தமிழக மீனவர்களின் உரிமைகளைக் காக்கத் தவறி வருகிறது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கப்பற்படையினரால் தாக்கப்படுகின்றனர், சிறைப் பிடிக்கவும் படுகின்றனர்.

காவிரி நீர், முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினைகளில் தமிழ்நாட்டுக் குரிய உரிமைகளைப் பெறுவதில் நேர்மை யாக நடந்து கொள்வதில்லை.

V. திமுக கூட்டணியை ஏன் (ஜன நாயக முற்போக்குக் கூட்டணியை) ஆதரிக்க வேண்டும்?

1) இந்த அணிக்குத்தான் பொருளா தாரத்தையும் தாண்டி சமூக ரீதியான கொள்கைகள் உண்டு.

2) மதச் சார்பின்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. சிறுபான்மை மக்களின் அரணாகத் திகழ்கிறது.

3) சமூகநீதியில் அழுத்தமான நம் பிக்கையும், செயல்பாடும் எப்பொழுதுமே உண்டு. தனியார்த் துறைகளிலும் இடஒதுக் கீட்டை வலியுறுத்துகிறது.
4) பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் காட்டியது திமுக ஆட்சி.

5) தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தது.

6) தமிழர் பண்பாட்டுத் தளத்தில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என்று சட்டம் இயற்றியது.

7) பெரியார் நினைவு சமத்துவப்புரங் களை உண்டாக்கி இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்பு தத்துவத்துக்கு அடித்தளம் அமைத் தது மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சியே.

8) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற - தந்தை பெரியார் அவர்களின் புரட்சிக் கொள்கையைச் செயல்படுத்த சட்டம் இயற்றியது தி.மு.க. ஆட்சியே!

9) ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க டெசோ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆக்க ரீதியாகச் செயல்பட்டு வருகிறது.

இன்னும் ஏராளம் உண்டு என்றாலும் இவை மட்டுமே போதும் - இந்த அணியை ஆதரித்தே தீர வேண்டும் என்பதற்கு.

மத வெறியை மாய்த்து மனிதநேயம் காக்க - சமூகநீதிக் கொடி  பட்டொளி வீசிப் பறக்க - பெண்ணுரிமை பேணிக் காக்கப்பட - ஜாதி - தீண்டாமை ஒழிப்பை முன்னெ டுத்துச் செல்ல - வறுமையை ஒழித்து வள மையை ஏற்படுத்திட - நாடே சமத்துவபுர மாக பரிணமிக்க - தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் உரிமைகள் காப்பாற்றப்பட - உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க - சமதர்ம - சமத்துவக் காற்று தங்கு தடை யின்றி வீசிட - வருணபேதமற்ற வர்க்கப் பேதமற்ற ஒப்புரவுச் சமூகம் பூத்துக் குலுங்க - இந்தியாவுக்குத் தமிழ்நாடே முன்னின்று வழிகாட்டிட - தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை நூறு சதவீதம் வெற்றி அடையச் செய்து அதன் மூலம் முழுப் பலனைத் துய்க்க முன்வாரீர் - தமிழினப் பெரு மக்களே!

------------------------ கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 5-4-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய  வினா-விடை
Read more: http://viduthalai.in/page-1/78158.html#ixzz2y1ZmN0Vb

19 comments:

தமிழ் ஓவியா said...

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிடென்ட் திருவாளர் ராவ்பகதூர் சீத்தாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறை வேற்றப்பட்டுவிட்டதாக தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர்.

ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதை பிரச்சாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவை பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கி யும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்குகூட வொட் டாமல் செய்தவர்.

முயற்சி செய்தவர்களையும், பொறுப் பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்கர் கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலது கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.

அய்யோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் கண்மூடி கண் திறப்பதற் குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடிவிட்டது. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு, என்கின்ற பெரியோர் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஒன்றும் முழுகிப் போக வில்லை, குறைந்தபட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கை யில்லா தீர்மானமே அனுகூலமான பயனைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீத்தாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில தலதாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3x6nUdu

தமிழ் ஓவியா said...

ஓர் விஞ்ஞானம்

செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலி யார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், நாமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கி விட்டவர்களின் ஜாபிதாவையும் இனி குடிஅரசுப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித்திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர் களும்,

மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப் படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின் றோம். நிற்க இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெய ரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின் னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டு கின்றோம்.

குடிஅரசு - அறிவிப்பு - 24-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3xDeTMs

தமிழ் ஓவியா said...


இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்


மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாத்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

கூட்டத்திலிருந்த வர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிஸ்தவ மதமோ ஆண்டவனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்ப தனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார் களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங் களைப் பின் வாங்கிக் கொண்டு தாம் சொன்ன மகாபாதக மான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண் களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங் களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்கு மென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xmnlch

தமிழ் ஓவியா said...

திரு.சாமி வெளியாக்கப்பட்டார்

சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி. வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார், பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையாயிருந்த வரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் தலைவர், தலைவர்! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான், கம்பெனியார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது.

கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடி பேசியதுதானாம். பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதற்கு ஏதாவது உள் ரகசியம் இருக்கலாம்.

அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பொறுத்திருக் கும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் எப்படி ஆனாலும் திரு. சாமி வெளியாக்கப்பட்டுவிட்டார்.

திரு. வரதராஜுலுவும் காங்கிர கமிட்டியில் ராஜினாமா கொடுத்துவிட்டு இந்த 2, 3, நாள்களாகப் பார்ப்பனர்களைத் திட்டுவது போல் வேஷம் போடுகின்றார். இதன் ரகசியம் இன்னது என்பதும் தெரியவில்லை. ஒரு சமயம் ராஜினாமா அனாமத்தில் வைக்கப்பட்டு சைமன் கமிஷன் சென்னையை விட்டுப்போன பிறகு. திரும்பி வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழக்கம் போல் மறுபடியும் திருவாளர் நாயுடு மெம்பரானாலும் ஆகலாம்.

சென்ற ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் காங்கிரசைக் குறை கூறி விட்டுக் காங்கிரசை விட்டு ஓடிய திரு. கல்யாணசுந்தர முதலியாரும் காங்கிரசை ஆதரிப்பதுடன், செத்துப்போன ஜில்லா, தாலுகா காங்கிர கமிட்டிகளை உயிர்ப்பித்து கிராமப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார். இதன் ரகசியம் விளங்கவில்லை.

ஒரு சமயம், ஒரு அய்யங்காரிடம் வியாபாரம் பேசவோ என்பதும் புலப்படவில்லை! நம்முடைய பார்ப்பனர் களுடைய வாழ்க்கைக்குத் தக்கபடி அவர்களை விட்டு ஒருவர் போனால் மற்றொருவர் வந்து வலிய விண்ணப்பம் போட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 10-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xuDMOi

தமிழ் ஓவியா said...


கரூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ம.சின்னச்சாமியை ஆதரித்து மணப்பாறையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

மணப்பாறை, ஏப். 5- கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் ம.சின்னச்சாமியை ஆதரித்து மணப்பாறையில் தமிழர் தலைவர் அவர்கள் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்கள்.

கரூர் - ம.சின்னச்சாமி

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொகுதி திமுக வேட்பாளர் ம.சின்னச்சாமி ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் 4.4.2014 அன்று மாலை 6.30 மணியளவில் மணப்பாறை தந்தை பெரி யார் சிலை அருகில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் வெகு எழுச்சியோடு நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் தலைமை வகித்தார்.

மணப்பாறை நகர திமுக செயலாளர் கீதா மைக்கேல் ராஜ், திராவிட முன்னேற்றக் கழக பேச்சாளர் துரை.காசி நாதன், துரை.அழகிரி, மணப் பாறை நகர திராவிடர் கழகத் தலைவர் பிச்சை ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பேச்சா ளர் முனைவர் க.அன்பழகன் தேர்தல் பிரச்சார தொடக்க வுரையாற்றினார். தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைமைக்கழகப் பேச்சாளர் முகமது ரபீக், திமுக பேச்சா ளர் துரை.காசிநாதன் ஆகி யோர் உரையாற்றினர்

அடுத்ததாக, திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றி னார் அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

இன்றைக்கு பிரதமராக பாஜக வேட்பாளராக நிறுத் தப்பட்டுள்ள மோடி பிகாரில் என்ன சொல்லியிருக்கிறார். மாடு மேய்க்க மானியம் தரு கிறேன் என்று சொல்கிறார். அவர் மக்களை பழங்காலத் திற்கு அழைத்துச் செல்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. ஏனென்றால் நம்ம கடவுள் ஏசு கிறிஸ்து, இராமன் எல் லாம் மாடு மேய்த்தவர்கள் தானே. படிக்க கல்வியை கொடுக்காமல் மாடுமேய்க்க மானியம் தருகிறேன் என்று சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனுதர் மத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார் மோடி.

பால் கொடுக்கும் பசுவை (மாடுகளை) கொல்லக் கூடாது என்கிறர். மாடு அடி மாடாக இருக்கும்போது தானே கொல்கிறார்கள். அதன் இறைச்சியை விற்கிறார்கள். உலகத்திலே தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக் கிறது இந்தியா, இரண்டாவது இடம் இத்தாலி. தோலை விற்கக்கூடாது. மாட்டை கொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறார். இந்தியாவிற்கு நல்ல வருமானம் வருகிறது. இதை தடுக்க நினைக்கிறார் மோடி என்று பல செய்தி களை எடுத்துக் கூறினார்.
திருச்சியிலிருந்து மணப் பாறை கூட்டம் நடக்கும் (தந்தை பெரியார் திடல்) மேடைக்கு சரியாக இரவு 8.15 மணிக்கு வருகை தந்தார்கள். அங்கு திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் மற்றக் கட்சியினரும் வரவேற்றனர்.

தமிழர் தலைவருக்கு திருச்சி மாவட்ட திராவிட கழகத்தலைவர் மு.சேகர், கரூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.க.இராஜ சேகரன், திமுக பேச்சாளர் துரை.காசிநாதன், நகர திமுக செயலாளர் கீதா மைக்கேல் ராஜ், மருங்காபுரி ஒன்றிய திமுக செயலாளர் செல்வ ராஜ், புதிய தமிழகம் தொகுதி பொறுப்பாளர் முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பி னர் இராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பாளர்கள், ஜன நாயக முற்போக்கு கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள் சால்வை அணி வித்து சிறப்பு செய்தனர்.

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் கரூர் நாடாளுமன்ற தொகுதி ஜன நாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ம.சின்னச் சாமியை ஆதரித்து வாக்க ளிக்க வேண்டி தேர்தல் பரப் புரை, சிறப்புரை நிகழ்த்தினார்.

Read more: http://viduthalai.in/page-4/78222.html#ixzz2y4Bo3oaU

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் பொருளாதாரக் கொள்கை என்பது என்ன

தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி என்று சொல்லப்படுவது சம்பிரதாயமானது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி. எங்கே இருக்கிறது? நடைமுறை உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் தேமுதிக தலைமையில் அமைந்த கூட்டணியில் பிஜேபியும் உள்ளது;

அதுவும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதுதானே உண்மை!

இந்தக் கட்சிகளின் ஒரே குரல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை அகற்றி விட்டு, அந்த இடத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டு வந்து வைப்பதுதான்.

அதற்காக இக்கட்சியினரால் சொல்லப்படும் காரணங்கள்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை.

பொருளாதாரப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இரு கட்சிகளுமே போட்டிப் போடக் கூடியவைதான். இதன் காரணமாக சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, அவற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.

அரசுத் துறைகளைத் தனியார்க்குத் தாரை வார்ப்பதில் காங்கிரசை விஞ்சி நிற்பது பிஜேபியே! இந்தத் தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தைக் கூட நடத்தலாம்.

பி.ஜே.பி. ஆட்சியில் அரசுத் துறைகளைத் தனியார்க்கு அளிப்பதற்கென்றே ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டது (Ministry of Disinvestment) அதற்கு அருண்ஷோரி அவர்கள் மத்திய அமைச்சராகவே இருந்தார் என்பதை நினைவூட்டுகிறோம்.

பால்கோ என்ற நிறுவனம் அதன் உபரிநிதி ரூ.4600 கோடி. 2000ஆம் ஆண்டில் அதன் லாபம் ரூ.110 கோடி. சொத்து மதிப்போ ரூ.5000 கோடி. அதனை 551 கோடி ரூபாய்க்கு அடி மாட்டு விலையில் ஸ்டெர்லைட் கம்பெனிக்கு விற்றது வாஜ்பேயி அரசு. பாலக்காட்டில் இன்ஸ்ட்ரூமென்ட்டேசன் என்ற நிறுவனம் அதன் சொத்து மதிப்பு ரூ.175 கோடி; ரூ.19 கோடிக்கு ஃபிஷர் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றதும் வாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. அரசே!

பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில்தான் பெப்சி, நெஸ்லே, கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற் குள் காலடி எடுத்து வைத்து உள் நாட்டில் உற்பத்தி யான குளிர் பானங்களை எல்லாம் காலி செய்தன.

வருடத்துக்கு ஒரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியில் 347 ஆலைகள் மூடப்பட்டு 6,46,379 பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்! இதுதான் வாஜ்பேயி அரசின் நிகர லாபம்.

அமெரிக்காவின் டெர்மினேட்டர் விதைகள் (மலட்டு விதைகள்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டதும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான்!

இந்தியாவில் உள்ள விவசாயிகள் அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை விதை நெல்லாகச் சேகரித்து வைப்பார்கள். இந்த மலட்டு விதை அறிமுகப் படுத்தப்பட ஆரம்பித்து விட்டால், பன்னாட்டு விதை விற்பனை நிறுவனங்களிடமிருந்துதான் விதைகளை வாங்கித் தீர வேண்டும் என்ற கட்டாய நிலை. இந்தக் கேடு கெட்டவற்றிற்கெல்லாம் முகூர்த்தக் கால் நட்டது பிஜேபி ஆட்சியே!

நியூயார்க் பன்னாட்டு பொது விவகாரக் கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் வார்டுமோர் ஹௌஸ் என்பவர் இந்தியாவிற்கு வந்தபோது சொன்னார். (ஏப்ரல் 1999).

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் மான் சாண்ட்டோவுக்கும் (மலட்டு விதைக்கு) பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி சந்தேகத்துக்கு உரியது. அதனை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கப் பேராசிரி யரே கூறியும்கூட பிஜேபி அரசு பொருட் படுத்தவில்லையே!

(இந்த நேரத்தில் இதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை நினைவு கூர்வோமாக!)

1998 ஜூலையில் 1308 பொருள்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை பிஜேபி அரசு முழுமையாக அகற்றியது. இது உள்நாட்டு உற்பத்தியின் முதுகெலும்பை முறித்த அபாயகரமான செயல் பாடாகும்.காப்பீடு, மருந்து உற்பத்தி, ஓட்டல்கள், சுற்றுலா, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்ததும் வாஜ்பேயி தலைமையிலான பிஜேபி ஆட்சியே!

இந்த நிலையில் நரேந்திரமோடி தலைமையில் பிஜேபி புரட்சியைச் செய்யப் போகிறது என்பதெல்லாம் யாரை ஏமாற்றிட? பிஜேபி மட்டுமல்ல - இதற்குத் துணைப் போகும் கட்சிகளும் இந்த மோசடிக்குப் பொறுப்பாகும் என்று எச்சரிக்கிறோம்.

வாஜ்பேயியின் அளவுக்கு அதிகமான அமெரிக்கச் சார்பைக் கண்டித்தும், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது யார் தெரியுமா?

மதன்லால் குரானா உள்ளிட்ட 7 பேர்களாகும். இந்த ஏழு பேர்களும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் வேடிக்கை!

மதவாதம் என்றாலும் நாட்டுப் பொருளாதாரம் என்றாலும் எந்த வகையில் பி.ஜே.பி. சிறந்தது - நாட்டு மக்களுக்கு நலன் விளைவிக்கக் கூடியது?

சிந்திப்பீர்! வாக்காளர்களே, செயல்படுவீர்!!

Read more: http://viduthalai.in/page-2/78212.html#ixzz2y4Cj1wSx

தமிழ் ஓவியா said...


நாட்டில் மோடி அலை இல்லை சீதாராம் யெச்சூரி பேட்டி


கொச்சி, ஏப். 5- நாட் டில் மோடி அலை வீச வில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணாகுளத்தில் பத்திரிகை யாளர் கூட்டத்தில் தெரி வித்தார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணா குளத்தில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:

நாட்டில் மோடி அலை வீசுகிறது என்றால், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி வாரணாசியில் மட்டும் போட்டியிட வேண் டியது தானே, ஏன் பாது காப்பான தொகுதியை தேடிச் சென்று 2 தொகுதி களில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜ அல்லாத ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து, 3ஆவது அணி அமைக்க இடதுசாரி கடு மையாக பாடுபடும். மூன் றாவது அணி உருவாகி ஆட்சி அமைக்கும் பட்சத் தில் அதில் சேர்வது குறித்து கட்சியின் மத்தியக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்றதைப் போல இப்போதும் இடது சாரிகள் வெல்வார்கள் என் றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/78197.html#ixzz2y4D8dxKl

தமிழ் ஓவியா said...


இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா? வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்


இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா?
வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்

திராவிடர் கழகத் தலைவர் கருத்து

மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை அறிக்கை!

1) 16ஆவது மக்களவைத் தேர்தலில் வன்முறை தலை தூக்காது ஜனநாயக உரிமைகளைக் காக்கும் வகையில், தேர்தலை நடத்தி முடிப்பது மிக மிக அவசியமாகும்.

டெல்லியிலேயே வன்முறை

தலைநகர் டெல்லியில் பரப்புரை செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த நேரத்தில் தட்சண்புரி என்ற பகுதியில், அவரது வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது, (அங்கே இம்மாதம் 10ஆம் தேதி தேர்தல்) ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்து முகத்தில் குத்து விட்டுள்ளார். டில்லியிலே இப்படி ஒரு நிகழ்வு என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

கட்சித் தலைவர்களுக்குக்கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பில்லை; தலைவர்களுக்கு, வேட்பாளர் களுக்கு அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும் - போதிய பாதுகாப்புத் தர வேண்டும் என்பது குறைந்தபட்ச தேர்தல் அடிப்படைக் கடமை அல்லவா?

இதில் தேர்தல் ஆணையம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, வன்முறைச் சம்பவங்கள் நிகழாது, உயிர், உடைமைப் பாதுகாப்புக்கும் அமைதியாக தேர்தல் நடைபெறவதற்கும் வழிவகை செய்தல் தலையாய கடமையாகும்.

பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடா?

2) தமிழக தேர்தல் ஆணையர் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தத் தடை என்பது தானேயொழிய, தனித் தனியே வீடுகளுக்கு சென்று ஓட்டுக் கேட்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளதன் மூலம், இது வீட்டில் பணி செய்து, முடித்து, உறங்கி, எழுந்து, அடுத்த நாள் வேலைக்குச் செல்வோர்க்கும், தேர்வுக்காகப் படிக்கும் மாணவர்களுக்கும், இது மிகப் பெரிய இடையூறாக அமையக் கூடும்.

எனவே, உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்து இந்த முறையைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

இரவில் வாக்குச் சேகரிக்கிறார்களா? அல்லது பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை விலை பேசி வாங்கு கிறார்களா என்பது தெரியாமல் ஆங்காங்கே மற்ற எதிர் அணியினர் திரண்டு நின்று அமைதியைக் குலைத்து, வீண் கலவரங்கள் நிகழத்தான் வாய்ப்பு ஏற்படக் கூடும். சந்தேகங்களுக்கும் இடம் அளிக்கும்.

எனவே, இந்த முறை உடனே கைவிடப்பட்டாக வேண்டும்; இரவில் அமைதியோடு மக்கள் ஒய்வெடுத்தலே நல்லது. பகலில் பணிகள் நடைபெறட்டும்; இன்றேல் வன்முறைகள் நாட்கள் நெருங்க நெருங்க பெருகிடும் அபாயம் ஏற்படும்.

எனவே, சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் முடியும் வரை போதிய பாதுகாப்புத் தர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு

ஆளுங் கட்சிக்காக மட்டும்தானா காவல்துறை என்பது போன்ற கேள்வி எழா வண்ணம், வரு முன்னர் காக்கும் வகையில், தேர்தல் ஆணையம் கண்காணிக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் பொது ஒழுக்கம், அமைதி காப்பாற்றப்படக் கூடும்.கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

5.4.2014

முகாம்: மதுரை

Read more: http://viduthalai.in/e-paper/78202.html#ixzz2y4DGnpZz

தமிழ் ஓவியா said...


இசையும் வசையும்!


கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டு வழங்கப்பட்டு விட்டது. அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள் ளது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த அறிக் கைகளைப் படித்துப் பார்த் தாலே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூற வேண்டு மானால் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் குறிப் பிட்டதைப் போல திமுக வின் தேர்தல் அறிக்கை இசை அதிமுகவின் தேர்தல் அறிக்கை வசை

- கலைஞர் அறிக்கையிலிருந்து முரசொலி 5.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78203.html#ixzz2y4DOpOD4

தமிழ் ஓவியா said...பணபட்டு வாடா!

ஒலி பெருக்கியின்றி நள்ளிரவிலும் பிரச்சாரம் செய்யலாம், வீட்டுக்கு வீடு செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பணப்பட்டுவாடா செய்ய வழி வகுக்கும் என்று இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் குரல் கொடுப்பாராம்!

மதுரை அவனியாபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய விஜயகாந்த், எங்கள் கூட்டணி வேட்பாளரை ஆதரித்தால் சட்டமன்றத்தில் நமக்காகக் குரல் கொடுப்பார் என்று பேசியுள்ளார். (நடக்கவிருப்பது சட்டமன்றத் தேர்தலா - மக்களவைத் தேர்தலா என்று கூடத் தெரியாமல் வீராவேசமாகப் பேசுகிறார் விஜயகாந்த்)

வேலியே...

தயவு செய்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடாதீங்க! என்று மின்வாரிய அதிகாரிகள் கெஞ்ச ஆரம்பித்து விட்டனர். முதல் அமைச்சர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கே அவ்வாறு மின்சாரம் எடுக்கப்பட்டது குறித்துத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கதாகும். (வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது!).

அப்படிப் போடுங்க!

அஇஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் மின் வெட்டா தமிழ்நாட்டிலா? எங்கே இருக்கிறது! என்று சொன் னாரே பார்க்கலாம் (தினமலர் 4.4.2014) இவர் தனி இருட்டு உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரோ!

இந்தக் காலத்தில் இப்படி... யா?

அருணாசலப் பிரதேசத்தில் டோபோவா என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டுமானால் 46 கி.மீ. நடந்தே சென்றாக வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தையும் தூக்கிக் கொண்டு போக வேண்டுமாம் இந்த 2014லும் இப்படியா?....தேய்ந்து கட்டெறும்பாக

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? 1998 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 6.86 சதவிதம் (கூட்டணி உள்பட)
1999 இல் பெற்றது 7.14 சதவிகிதம். 2004இல் பெற்றது 5.07 சதவிகிதம் 2009இல் (கூட்டணி இல்லை) 2.3 சதவிகிதம்.

இந்த லட்சணத்தில் பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளதாம்! ஹி... ஹி....

Read more: http://viduthalai.in/e-paper/78210.html#ixzz2y4DZ3qWa

தமிழ் ஓவியா said...


ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஏப்.5- ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்ற புது முழக்கத்தை திமுக தலைவர் கலைஞர் தொடங்கி வைத்துள்ளார்.

திமுகவின் உறுப்பினர்கள் வாக்களிப்பது டன், அவர்கள் ஒருவரை வாக்களிக்கச் செய்தால் திமுக எளிதில் வெற்றிபெறும் என்றும் கலை ஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று (4.4.2014) அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திமுகவில் ஏதாவது சிறு சம்பவம் எங்கே யாவது தோன்றினால் போதும், அதை உடனே பெரிதுபடுத்தி பத்திரிகைகள் வெளியிடுகின்றன. திராவிட இயக்கத்தின் இனம், மொழி போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. திமுகவி னரிடையே இருக்கும் உற்சாகத்தைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இப் படிப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றனர்.

நம்மை நாமே சரியாகத் தயார்படுத்திக் கொண்டு விட்டால், மற்றவர்களால் திமுகவில் எவ்வாறு பூசலை ஏற்படுத்த முடியும்?

நீர் இடித்து நீர் விலகாது. ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அடுத்தமுறை அவருக்குப் பரிசீலிக்கப்படும் என்ற நிலைதான் திமுகவில் இருக்கிறது. இதனால் போட்டியிடும் வேட்பா ளருக்கு ஆதரவாகத்தான் அனைவரும் செயல் படுகின்றனர்.

ஏனென்றால், ஒரு தொகுதியில் போட்டியிடு வது யாரோ ஒரு வேட்பாளர் இல்லை. திமுகதான் போட்டியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நேரத்தில் திமுகவின் சட்டதிட்ட குழு உறுப்பினரான சி.இறைவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் திமுகவில் உறுப்பினர் களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர். அவர்கள் எல்லாம் மக்களவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தேர்தலில் தவறா மல் வாக்களிப்பதுடன், ஒவ்வொருவரை வாக்களிக்கவும் செய்தால், 1.60 கோடி பேர் திமுகவுக்கு வாக்களிக்கக்கூடிய நிலைவரும். இதன்மூலம் மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் என்று கூறியுள்ளார். இறைவன் எழுதி யுள்ள கணக்கு சரியான கணக்காகவே எனக்குத் தோன்றுகிறது.

எனவே ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதை மறவாமல் திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78189.html#ixzz2y4DoIR2b

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி., ஆர்.எஸ்.எசுக்குள் அந்தரங்கத் திட்டம்! ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குக் கடன் உதவியாம்

புதுடில்லி, ஏப்.5- தற் போது அரசியல், பதவி, அதிகாரம் இவை குறித்த சிந்தனை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே ஏற் பட்டுவிட்டால் சித்தாந் தத்தை மய்யமாகக் கொண்ட செயல்கள் குறைந்து, பாழா கிவிடும் என்று ஆர்.எஸ்.எஸ். மதத் தலைவர்கள் கருது கின்றனர்.

இதனால், அமைப் பின் தொண்டர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்ட அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் தொண்டர் களுக்கு கடன் வசதி செய்து தரும் திட்டம் உதயமாகி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் ஆதரவுடன் அரசு அமையும்போது, அமைப் பின் கருத்துக்களுடன் அழுத் தங்களை உருவாக்கி, மூத்த தலைவர்கள் அரசின் கடி வாளத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.

தேர்தல் அரசியலில் பங் கேற்காமல், தியாகத்துடன் உள்ள பொறுப்பாளர்கள் பாஜகவின் பல்வேறு நிலை களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு கட்சியைப் பலப் படுத்துவார்கள். அரசின் சுமைகளை, அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தடத்திலிருந்து நழுவிச்செல்லாமல் பரா மரித்து திறமையாக பாது காக்கும் பணியை மேற் கொள்வார்கள்.

பிஜேபிக்குள் நுழைந்த ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறும்போது, இது ஒரு நீண்ட காலத்திட்டம். இத் திட்டத்தை கருவாகக் கொண்டு பாஜகவில் நுழைந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்வரை செயல் படுத்தினாலும், அய்ந்து ஆண்டுகளுக்கு இதுபோன்ற பணிகளை மேற்கொள்வார் கள். கட்சி தொடங்கிய போதே இந்தத் திட்டம் இடம்பெற்று, அதன்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கட்சிக்குள் நுழைந்துள்ள னர். உத்தரப்பிரதேசத்தில் இதேபோல ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் 3 பேர் பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.

உணர்ச்சிகரமான நிலை யில் கடந்த இரண்டு வாரங் களில் மட்டுமே லக்னோ வில் ரத்னாகர் பாண்டே, வார ணாசியில் சந்திரசேகர், ராய் பரேலியில் பவானி சிங் ஆகி யோர் பணியமர்த்தப்பட் டுள்ளனர். இதேபோல், மற்ற மாநிலங்களிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படும். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து மின்னஞ் சலில் அவருடைய கருத் தைக் கேட்டபோது, அவரி டமிருந்து பதில் இல்லை.

ஆர்.எஸ்.எஸ். தொடர் பாளர் மன்மோகன் வைத்யா கூறும்போது, சங்கத்தின் உறுப்பினர்கள் பாஜகவுக் குள் இணைந்து செயல் படுவது என்பது இயற்கை யான செயலாகும். நாட்டில் சங்கத்தினர் அனைவருமே தேச நலனைக்கருதி, 2014 தேர்தலில் மட்டுமே கவ னம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளனர். மற்றவை எல்லாம் தேர்தலுக்குப்பின்தான் எடுத்துக்கொள்ளப்படும். பாஜகவுக்குள் சங்கத்தினர் நுழைவு என்பது தேவை யின் பொருட்டே நடை பெறுகிறது.

பிஜேபி நலிவடைந்து விடக் கூடாதாம்!

உண்மையாகக் கூறுவதா னால், பாஜகவுக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைந்து பணியாற்றுவது என்பது இது முதல்முறை அன்று. ஏற்கெனவே, 1988-89இல் மதுக்கர் தத்தாச்சார்யா பாலா சாஹெப் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தபோது, நரேந்திர மோடி, கே.என். கோவிந்தாச்சார்யா, சேஷாத்ரி சாரி, இல.கணேசன் ஆகி யோரை பாஜகவுக்கு அனுப் பினார். மற்ற சங்கத்தினரும் அதைப் பின்பற்றினர்.

சாரி இதுகுறித்து சொல் லும்போது, பாஜக மிகவும் நலிந்து, உயிர்ப்புடன் இருப் பதால் அவசரத் தேவை என்கிற நிலையில் இருந்த காலக்கட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலி ருந்து பாஜகவுக்கு அனுப் பப்பட்டார்கள்.

கட்சியில் உள்ள அனைவரும் அரசில் இடம்பெறவேண்டும் என்று ஆர்.எஸ் .எஸ் நினைப் பதில்லை. எந்த நேரத்திலும் கட்சியைப் புறக்கணிக்கவும் கூடாது. பாஜக அமைப்பு நலிவுறக்கூடாது என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதை உறுதிசெய்து கொள் வார்கள் என்றார்.

- தி எகானமிக் டைம்ஸ் 2.4.2014 டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/page-8/78178.html#ixzz2y4Dwa6mT

தமிழ் ஓவியா said...


சர்க்கரையே பெரிய வில்லன்!

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராம். அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24 கிராம். ஆனால் இதைத் தாண்டுவதால் ஏராளமான பிரச்சினைகள், குறிப்பாக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள்தான் பெரிதும் ஆபத்து தருகின்றன. ஒரு மருத்துவ நிறுவனம் எடுத்த கணக்கின்படி, சர்க்கரை சேர்த்த குளிர்பானங்களுக்கு 20 சதவீதம் அதிக வரி விதித்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு கோடியே 12 லட்சம் பேர் அதிக எடை கூடுவதைத் தடுக்கலாம்; 4 லட்சம் புதிய சர்க்கரை நோயாளிகளைத் தவிர்க்கலாம். விலை அதிகம் என்பதால் வாங்கிக் குடுக்காமல் நோய்களை இப்படி தவிர்ப்பார்கள் என்கிறது அந்த புள்ளி விவரம்.

Read more: http://viduthalai.in/page2/78160.html#ixzz2y4EKoEdq

தமிழ் ஓவியா said...


இந்திய ஆண்கள் வேலை பார்க்கும் நேரம்

இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்கிறார்களா என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் இந்தியாவில் பெண் களே குடும்ப பொறுப்புக்களை அதிக அளவில் சுமப்பதாக தெரிய வந்துள்ளது.

பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் வீட்டு வேலைகள் எதையும் சுத்த மாக செய்வதே இல்லை என்ற தகவலும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் சராசரியாக 19 நிமிடங்கள் மட்டுமே தினமும் வீட்டு வேலை செய்கிறார்களாம்.

அதுவும் வீட்டில் அவர்கள் தொடர் புடைய வேலைகளுக்குத்தான் அந்த 19 நிமிடங்களை செலவிடுகிறார்களாம். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண்களில் 90 சதவீதம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.

வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றும் ஆண்களும், பெண்களுக்கு உதவும் வகையில் எந்த வேலையும் செய்து கொடுப்பது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வெளியில் இருக்கும் ஆண்கள் தினமும் 11 மணி நேரத்தை தங்கள் வேலை மற்றும் தங்கள் பொழுது போக்குக்கே செலவிடுகிறார்களாம்.

50 சதவீத ஆண்களுக்கு தூங்குவது, சாப்பிடுவது, அரட்டையடிப்பது, மது குடிப்பது போன்ற வகைகளில் தினசரி நேரம் கழிந்து விடுகிறதாம். இந்தியாவில் ஆண்கள் இப்படி இருப்பது சமூக கலாச் சாரமாக ஆழமாக வேருன்றி இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் இப்படி சுய நலத்துடன் இருக்கும் நிலையில் பெண்கள்தான் பொறுப்புடன் குடும்ப சுமையை சுமப்ப தாக தெரிய வந்துள்ளது. சமையல், துணி துவைப்பது, வீட்டை ஒழுங்குப்படுத்து வதை பெண்கள் மட்டுமே செய்வதாக கருத்து கணிப்பு சொல்கிறது.

இத்தனை வேலைகளை செய்து விட்டு குழந்தைகளை கவனிப்பதும் பெண்கள் வேலையாக உள்ளது. நகர்ப் பகுதிகளை விட கிராமங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக ஆய்வில் கூறப்பட் டுள்ளது.

ஜப்பானில் ஆண்கள் தினமும் 24 நிமிடமும், கொரியாவில் 21 நிமிடமும், சீனாவில் 48 நிமிடமும் வீட்டு வேலை செய்கிறார்கள்.

உலகிலேயே ஆண்கள் அதிக நேரம் வீட்டு வேலை செய்வது ஸ்லோவேனியா நாட்டில்தான். அந்நாட்டு ஆண்கள் தினமும் 114 நிமிடம் வீட்டு வேலை செய்கிறார்கள்.

டென்மார்க், எஸ்தோனியா நாட்டு ஆண்களும் பெண்களுக்கு உதவும் வகை யில் வீட்டு வேலைகள் செய்து கொடுக் கிறார்களாம். மற்ற நாடுகளில் பெரும் பாலும் வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டியதுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/78171.html#ixzz2y4Gwo39O

தமிழ் ஓவியா said...


கின்னஸ் சாதனை 48 ஆண்டுகளுக்குப்பின் நிரபராதி என விடுதலை

அய்வாஓஹகமடா இவர் தற்போது 48 ஆண்டுகள் சிறையில் வாடிய ஆயுட் தண்டனைக் கைதி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை ஆர்வலர் களின் தொடர்ச்சி யான போராட் டங்களுக்கிடையே டி.என்.ஏ. பரிசோதனைகளுக்குப்பிறகு கொலை வழக்கில் அவரைக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்துள்ளது ஷிசுகோ நீதிமன் றம். உலகிலேயே அதிக வாழ்நாள்களை சிறையில் கழித்தவர் அய்வாஓ ஹகமடா என்கிற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 1966இல் மத்திய ஜப்பானில் இரு குழந் தைகள், மனைவியுடன் நிறுவன மேலாளர் வீட்டில் தீவைத்துக் கொல்லப்பட்ட தாக வழக்கில் அய்வாஓ ஹகமடா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். விசா ரணையில் தனக்கு அச்சம்பவத்தில் எவ் விதத் தொடர்பும் இல்லை என்று மறுத் துள்ளார். ஆனாலும், காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். குத்துச் சண்டை வீரரான இவர் பணிபுரிந்த நிறு வனத்தின் மத்திய ஜப்பானில் மேலாளரை யும், அவர் குடும்பத்தினரையும் வீட்டில் தீவைத்துக் கொன்றதாக மரண தண்டனை 1968இல் மரண தண்டனை விதிக்கப்பட் டவர். உச்ச நீதிமன்றத்தால் 1980இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இரண் டாம் உலகப்போருக்குப்பின் மரண தண்டனை வழக்கில் விசாரணை நிலுவை யிலிருந்த 6 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.

அவருடைய வழக்கறிஞர்கள் மரபணு பரிசோதனை கோரியதால் விசாரணைக்குழு விடம் ஆதாரங்களை மரபணு பரிசோத னைக்குட்படுத்த உத்தரவிட்டதோடு, நீதி மன்றத்தில் அவ்வழக்கில் மறு விசார ணைக்கும் நீதிபதி ஹிரோகி முரயாமா உத்தரவிட்டார். நீதிபதி கூறும்போது, மரபணு சோதனையில் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியதோடு, இதற்கு மேலும் அவர் சிறையில் தொடர்ந்து இருப்பது நீதிக்கு எதிரானதாகும் என்று விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நீண்ட கால தனிமைச்சிறையில் ஆயுட் தண்டனைக் கைதியாக பல தலைமுறை களை செலவிட்டுள்ளார் என்று அம்னிஸ்டி இன்டர் நேஷனல் என்கிற சர்வதேச மன் னிப்பு அமைப்பு இவர் விடு தலை குறித் துக் கூறுகிறது. விடுதலை செய்யப்பட்டவ ருக்கு தற்போது வயது 78 ஆகிறது.

Read more: http://viduthalai.in/page7/78168.html#ixzz2y4HRiIsI

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பட்டபாடு


சன் டி.வி., செய்தியாளர் விழுப்புரத்தில் கைது

29.6.2001இல் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களைக் கைது செய்துவேப்பேரி காவல் நிலையத்தில் அடைப்பு.

12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதா கிருட்டிணன் சாலை விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டு பத்திரிகை யாளர்களை கண்மூடித் தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து புகைப்படக்காரர் மூர்த்தி, தினமணி புகைப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. புகைப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்பட்டன.

ஜெவுக்கு எதிராக எழுதியதற்காக இந்து பதிப்பாசிரியர் சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகியோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.

இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளி யிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.

சந்தன வீரப்பன் சம்பந்தமான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக்கழித்துக் கொடுமைப்படுத் தினார்கள்.

இந்து ஏட்டின்மீது 17 வழக்குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.

130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத் திரிகையாளர்கள்மீது தொடரப்பட்டன.

இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகை களில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டப்பட்டிருக் கிறது. காரணம், இரத்தம் தண்ணீரை விட கெட்டி யானது கடந்த மாதம் காஞ்சீபுரத்திலே, செய்தியாளர், தொலைக்காட்சியினர் தாக்கப்பட்டது (19.3.2014) ஜனநாயகத்தின் நான்காவது தூணே ஜெயலலிதா ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளானது.

இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/78274.html#ixzz2y9akTw32

தமிழ் ஓவியா said...

எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!

தமிழக பிஜேபி துணைத் தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளருமான எச். ராஜா என்பவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவதூறா கச் பேசியதற்காகவும் கிறித்த வர், முஸ்லீம்கள்மீது வெறுப் பைத் தூண்டும் வகையில் பேசியதாலும் அவர்மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை மது ரைக் கிளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78279.html#ixzz2y9bHYte1

தமிழ் ஓவியா said...


மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள்


யோகா குரு பாபா ராம் தேவ், பிஜேபி யின் ஆதரவாளர் என்பதும், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பர் என்பதும், அனைவருக்கும் தெரியும். அவரது யோகா வகுப்புகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை. (இவற்றை YOUTUBEல் காணலாம்.)

பாபாராம் தேவ் அரசியலில் முக்கியப் பங்கு ஆற்ற விரும்புகிறார். நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகிறார். அதனால் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஊழலை ஒழிக்க இவர் தரும் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள்: (02.04.2014, The Financial Express - பார்க்கவும்) சுங்க வரியைத் (Customs Duty) தவிர, மற்ற வரிகளான, வருமான வரி, கலால் வரி (Excise Duty) போன்றவற்றை ரத்து செய்துவிடலாம். 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க லாம். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர முடியும் என்று இவர் நம்புகிறார்.

இந்த வரிகளுக்குப் பதிலாக BTT (Banking Transaction Tax), என்ற வரியை, அதாவது, வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு 2% முதல் 15% வரை வரி விதிக்கலாம். மேலும் நோட்டுகளுக்குப் பதிலாக மின் பணம் ((Electronic Money) பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் கறுப்புச் சந்தை (Black Market) ஒழியும் என்று இவர் கருதுகிறார். பிரேசில் நாட்டில் இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.

இவர் தனது பொருளாதாரச் சீர்திருத் தங்களை, அரசியல் வாதிகள், பொருளாதார நிபணர்கள், (Chartered Accountants) ஆகி யோர் அடங்கிய குழுவில் விவாதித்திருக் கிறார்கள். நமது நாட்டில் தற்போது 17% வணிகம் தான் வங்கி வழியே நடப்பதாகவும் மீதி 83% வணிகம் வங்கிகளுக்கு வெளியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பாபா ராம்தேவின் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால், அரசின் கடைநிலை ஊழியர் அதிக வரி கட்ட நேரிடும். அதே சமயம் கோடிக்கணக்கில் வருமானம் பெரும் பணக்காரக் கம்பெனிகளும், முத லாளிகளும் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்ள வழி கிடைக்கும்.

மேலும் வருமான வரி, கலால் வரி போன்றவை தான் மத்திய அரசின் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். (இதில் ஒரு பகுதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தருகிறது) இவற்றை ரத்து செய்துவிட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிய பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்குக்கூட போதிய பணம் இருக்காது. அரசின் அன்றாடப் பணிகள் கூட முடங்கும் நிலை ஏற்படலாம்.

எப்படி இருப்பினும், தனது வரி விதிப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் வேட்பாளர் மோடியும், பிஜேபியும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பாபா ராம்தேவ் நம்புகிறார்.

- பேராசிரியர் சி. ஜம்புநாதன், சென்னை

Read more: http://viduthalai.in/page-2/78268.html#ixzz2y9bnXXup

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை நிறைவேற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தாரீர்! கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வேண்டுகோள்


கோவை, ஏப்.6- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கட்டளைகளை நிறைவேற்றிட அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருமாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டார்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த கோவைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் பேசிய தாவது:-

இந்த இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல; இந்த இயக்கத்தினுடைய குறிக்கோள், நாடி நரம்பு களைத் தொட்டுப் பார்த்தால், அதில் ஏற்படுகின்ற துடிப்பு, இந்த இனத்தை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக - பெருந்தலைவர்கள், இடஒதுக்கீடு கோரிய சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், சர் ஏ..டி. பன்னீர் செல்வம் போன்ற பெருந்தலைவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடு பட்டார்கள் என்றால், அவர் களுடைய சுயநலத்திற்காக அல்ல, நம்முடைய எதிர்கால வாழ்வுக்காகத்தான் அவர்கள் பாடுபட் டார்கள், பணியாற்றினார்கள்.

நான் இங்கே உரையாற்றுவதற்கு முன்பு எனக்கு முன்னால் பேசிய தம்பி ஒருவர், 91 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதி என்று குறிப்பிட்டார். எனக்கு 91 வயது என்பதை வெளியிலே சொல்லிக்கொள்ள விருப்பமில்லை. அதிலும் என்னு டைய துணைவியாரை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னுடைய வயது 91 என்பதை உரக்கச் சொல்வதிலே கொஞ்சம் கூச்சம்தான்.

ஆனால், 91 வயதில், தள்ளாடும் பருவத்தில் நான் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்). என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்) என்னுடைய சுயமரியாதை உணர்வுக்கு தள்ளாட்டம் ஏற்படக் கூடாது (பலத்த கைதட்டல்) என்பதிலே நான் தந்தை பெரியார் வழியிலே, அண்ணா வழியில் சிந்தித்து அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கின்றேன். (பலத்த கைதட்டல்).

திராவிட முன்னேற்றக் கழகம் நான் தொடக்கத் திலே குறிப்பிட்டதைப்போல, ஒரு இன எழுச்சி இயக்கம். நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளைய அண்ணன் பேராசிரியர் அன் பழகனார் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தி லெல்லாம், இந்த இயக்கம் தொடங்கியது அதிகாரங் களைப் பெற அல்ல.

இந்த இயக்கம் தொடங்கியது தமிழர்களைக் காப்பாற்ற, தமிழகத்தைக் காப்பாற்ற பல கருவூலங்களை அகழ்ந்து எடுப்பதற்காகத்தான் இந்த இயக்கம் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல நீங்களும் கேட்டிருக் கிறீர்கள். நானும் கேட் டிருக்கிறேன்.

அந்த உரையை ஏடுகளிலே படித்தும் இருக் கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இன்றைக்கு உங் களை யெல்லாம் நான் நாடியிருப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் வளர்க்க வேண்டும், தேர்தலிலே நான்கு பேரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும், நாம் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியா வினுடைய பிரதமராக வேண்டும் என்றெல்லாம் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.

தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும், தமிழன் என்றால் அவன் யாரையும் தலை தாழ்த்த மாட்டான், அவனும் தலை தாழ மாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற் காகத்தான் இந்த இயக்கம் அன்றுதொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது, பணியாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட அந்த இயக்கத்திற்கு தலைவராக கிடைத்த - தளபதியாகவும் விளங்கிய நம்முடைய அருமை அண்ணா, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைந்த பிறகும் அவர் ஏற்றி வைத்த அந்தச் சுடர் விளக்கு அணை யாமல் காப்பாற்றுகின்ற அந்தப் பெரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்றால், என்னை மாத்திரம் நம்பி அல்ல, என் உயிரினும் மேலான உடன்பிறப் புக்களே (பலத்த கைதட்டல்) உங்களையெல்லாம் நம்பித்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.

அப்படிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுகின்ற ஒரு கட்டம். இந்த மக்களுக்கான ஒரு ஆட்சியை நல்லாட்சியை தர வேண்டிய ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில் எந்த சிரமங்களும் இல்லாமல், எந்தத் தடையும் இல்லாமல் பணியாற்றுகின்ற இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற அந்த வல்லமையை பெரியார் வழங்கினார், பேரறிஞர் அண்ணா கட்டிக் காத்தார்,

இன்றைக்கு பெரு வெள்ளமாகத் திரண்டிருக்கின்ற நீங்கள் எனக்கு அரவணைப்பாக இருந்து என்னோடு சேர்ந்து இந்த இயக்கத்தைக் காக்க முன் வருகிறீர்கள். அதற்காக நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/78266.html#ixzz2y9cFwmfV