Search This Blog

28.4.14

நாம் கும்பிடும் சாமிகளும் கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல்! வெறும்கல்!!

நான் அருகில் சென்றால் செத்துப் போகும் என்றால் அந்தச் சாமி எதற்கு?

சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண்டிற்குப் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும், தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும் கல்.

எனக்கு முன்பேசிய மூன்று கன வான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ் யம் தூரமாகி விடுகின்றது என்று சொன் னார்கள். நான் தலைவனல்ல; ஒரு தொண் டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக் கின்றது என்று சொன்னேனோ அதை யேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணா சிரம தர்மமும் ஒழிந்தாலல்லாது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டா மையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காகத் தனியாய் பிரச்சாரம் செய்கின் றேன். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின்றார்.
ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரி டம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணா சிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வ தோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத் தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.  இதைக் கேட்ட பிறகு அவரை மகாத்மா என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
உண்மையான விடுதலை
மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லி யிருக்கிறார்.
மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமூகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான்.
ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களில் சீர்திருத்தத்தைப்பற்றி பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களின் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென் றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலட்சியமாய் பேசினதற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்குப் பரிதாபப்படுகின் றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்க மாட்டேன். யார் என்னை என்ன சொன் னாலும் சரி, எனக்குக் கவலை யில்லை அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத் திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல் லுவேன்.

ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள் ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்பதையும் அதற்கு விரோத மாக மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண் டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த இடத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும். 

ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை - என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து நீங்கள் கல்லென்று சொன்னீர்களே இது சரியா? என்றார்.
உடனே ஸ்ரீமான் நாயக்கர், ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகின்றேன் என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.
மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாட னம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன் னார்.
நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ள தானால் இதோ - எதிரில் இருக்கும் சகோதர ருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா? என்றார்.
அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.
புதுமதம் தேவையா?
மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன்! ஆனால் நீங்களா வது ஒரு புது மதம் சொல்லுவது தானே என்றார்.
நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றா தீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.
அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்ப தானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண் டாமா? என்றார்.
நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக் கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே. அந்த துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதும், நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்!
அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத் துவம் பேசுகின்றீர்களே! உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட் டுக் கொடுக்கக் கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.
நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல் லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதா யிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகி றேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக - வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்தப் பிரசார செலவு சிலசமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந் தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.
ஒதுக்கிப் பொசுக்க வேண்டும்
அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத் திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தை தான் படிக்கின்றது.
நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந் தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல் லுகின்றேன் (என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்ன தாவது), இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த் திருக்கின்றேன். இதெல்லாம் அனுபவிப்பது எனக்குச் சகஜம் தான். எவ்வளவுக் கெவ் வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ் வளவுக் கெவ்வளவு எதிர்பிரச்சாரங்கள் ஏற்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு எனது வேலை சுலபமாகும், எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரி யம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக் கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாக வும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்யமாகவோ , பாண்டிய ராஜ்ய மாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட் டிருப்பேன் அல்லது கழுவேற்றப்பட்டி ருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது.

ஊன்றப்பட்டது சுயமரியாதை விதை!
சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாக வேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண் டிற்குள் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால் தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெ னில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல் லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும்கல். நமது தேசிய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவை வெறும் புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப் பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளி விடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டிய தில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள் ளப் போவதில்லை. உண்மையான கடவு ளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டு தான் இது என்று பேசி உட்கார்ந்திருந்தார்.
----------------------------------------25-02-1928 அன்று சிதம்பரத்தில் வக்கீல் இராமையா தலைமையில் நடந்த சுயமரி யாதைப் பொதுக்கூட்டத்தில் பல குறுக்குக் கேள்விகளுக்கு விடை  தந்து பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு
- குடிஅரசு - சொற்பொழிவு - 04.03.1928

29 comments:

தமிழ் ஓவியா said...


பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்!


பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்!
புத்தகம் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கை மாறும்

புத்தகர் விருது வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை

புத்தகர் விருது பெற்ற பெருமக்கள் : சென்னை புத்தகச் சங்கமத்தில் தமிழர் தலைவர் அவர்கள் புத்தகர் விருதை பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோருக்கு வழங்கி பாராட்டி சிறப்பித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மேலாளர் த.க. நடராசன், விழிகள் பதிப்பகம் தி வேணுகோபால் உள்ளனர் (இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 26.4.2014).


சென்னை, ஏப்.27- பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம். புத்தகம் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கை மாறும் என்று சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருதுகளை புத்தகச் செம்மல்களுக்கு தமிழர் தலைவர் வழங்கி சிறப்பித்து பாராட்டுரை வழங்கினார்.

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் உலகப் புத்தக நாள் பெரு விழா சென்னை இராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

நேற்று (26.4.2014) மாலை 6.30 மணியளவில் நடந்த இப்பெரு விழாவில் முதன்மை நிகழ்வாக நினைவில் வாழும் கலைமாமணி முத்துக்கூத்தன் அவர்களின் மகன் கலைவாணன் ஏற்பாடு செய்திருந்த கலை அறப்பேரவை தென்றல் குழந்தைகள் மன்றம் வழங்கிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூர் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற இக்கலை நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ வைத்து சிந்திக்கவும் வைத்தது.

புத்தகர் விருது வழங்கி சிறப்பிப்பு

இதைத் தொடர்ந்து புத்தகர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் விழாவிற்குத் தலைமை யேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் புத்தகர் விருது பெரும் மக்களான பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோரின் தன் குறிப்புகள் மேடையில் வாசிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி. வீரமணி அவர்கள், அப்பெரும் மக்களுக்கு பயனாடை அணிவித்து புத்தகர் விருது வழங்கி சிறப்பித்து பேசுகையில்:-

புத்தகர் விருது பெறும் பெருமக்களான பொள்ளாச்சி நசன், பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோரின் தன் விளக்க குறிப்புகளை கேட்டு அறிந்தவுடன் வியந்து போனேன். கைமாறு கருதாத அவர்கள் செய்த தொண்டானது புத்தக வாசிப்பிற்காக அவர்கள் மேற்கொண்ட பணிகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் இவர்களை அழைத்து சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். புத்தகம் வாசிப்பது அறிவை வளர்க்கும் செயலாகும் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் புத்தகங்களைக் கொடுப்பது அறிவைப் பரப்பும் தொண்டறச் செயலாகும்.

பூஜையறையல்ல முக்கியம்!

வீட்டில் பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்! அங்கிருக்கும் புத்தகங்களைப் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றம் காணலாம். இங்கு புத்தகர் விருது பெரும் பெரு மக்கள் புத்தகத் தொண்டர்களாக விளங்குகிறார்கள் அவர்களை பாராட்டி சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் தமிழர் தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/79374.html#ixzz308IVOKJ4

தமிழ் ஓவியா said...


குறுஞ் செய்திகள்


தமிழ்நாட்டில் ஆண் களைவிட பெண்களே அதிகமாக வாக்களித் துள்ளனர். ஆண்கள் சதவிகிதம் 73.49, பெண் கள் சதவிகிதம் 73.85.

தமிழ்நாட்டில் 1967 தேர்தலுக்கு அடுத்து 2014இல் நடைபெற்ற தேர்தலில் தான் வாக்குப் பதிவு அதிகம். 1967- 76.09 2014இல் 73.67 சதவிகிதம்.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆறுமுக சாமி அவர்கள் இன்று ஓய்வு பெறுவதால் நீதி பதிகளின் எண்ணிக்கை - 44 ஆகக் குறைந்தது (மொத்த நீதிபதிகள் 60).

மே 16ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்கு எண் ணிக்கை நடைபெறும். முதல் சுற்று முடிவு காலை 9 மணிக்கே தெரிய வரும்.

ஆரோக்கியம் என் பது மனித உரிமை; அந்த வுரிமையைப் பாதுகாப் பதில் இந்திய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று நீதிபதி கே.என். பாஷா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு மே இறுதியில் நடைபெறும்.

காஞ்சீபுரம் மாவட் டத்தில் செங்கற்பட்டு, திருப்போரூர், திருக்கழுக் குன்றம், மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் காடுகளில் உள்ள வன விலங்குகள் வறட்சியின் காரணமாகத் தண்ணீர் குடிக்க காடுகளைவிட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க 20 தண்ணீர்த் தொட்டிகளைத்திறக்க வனத்துறை ஏற்பாடு செய்கிறது.

தமிழ்நாட்டில் அதிக பட்சமாக சனியன்று வெப்பநிலை - திருச்சியில் 107.24 டிகிரி.

பி.ஜே.பி. நயவஞ்சக மதவாதக் கட்சி. அதனைப் புறக்கணிப்பீர்! -அகிலேஷ்யாதவ் உ.பி. முதல் அமைச்சர்.

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த்வரதராசன் பலியா னார் என்பது சோகச் செய்தியாகும்.

இரயில் வழித்தடங் களில் அதிக தொலைவு மின்மயமாக்கும் பணியில் சென்னை இரயில்வே மின்மயமாக்கல் திட்ட அலுவலகத்திற்கு சிறந்த விருது அளிக்கப்படுகிறது.

போதுமான பராம ரிப்பு இன்றி நாய் ஒன்று இறந்ததால் சிங்கப்பூர் நீதிமன்றம் நாயின் உரிமை யாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் ஆயிரம் ஆண்டு பழமையான கிராமத் தினை அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது.

புரியுதா?

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முதல் அமைச் சருமான செல்வி ஜெ. ஜெய லலிதா தேர்தல் பிரச்சாரத் தின் கடைசி நாளான ஏப்ரல் 22ஆம் தேதியன்று பிரச் சாரம் செய்யாமல் முதல் நாளே முடித்துக் கொண்ட தற்குக் காரணம் 22ஆம் தேதி அஷ்டமி திதியாம்! வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/e-paper/79384.html#ixzz308JeRrHD

தமிழ் ஓவியா said...


மேற்குவங்கத்தைவிட குஜராத் பின்தங்கியே இருக்கிறது


புதுடில்லி, ஏப். 27- சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வறிக்கையின்படி தொழில்உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களையும்விட மேற்கு வங்கமே முதலாவதாக உள்ளது என்பதும், இதில்குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேற்படி தேசிய மாதிரி சர்வேயின்படி தெரியவரும் உண்மைகள் வருமாறு:

2004ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector)நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் மேற்குவங்கத்தில் முந்தைய இடது முன்னணிஆட்சி புரிந்த சமயத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் நாடுமுழுவதும் 58.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற் சாலைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், 24 லட்சம் வேலைவாய்ப்புகள் மேற்குவங்கத்தில் மட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பாஜக ஆளும் குஜராத்தில் இதே கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது 14.9 லட்சம் வேலைவாய்ப்புகள்தான். மேற்குவங்கத்தில் சிங்கூரில் டாட்டாவின் நானோ தொழிற்சாலை அமைக்கப்படுவதைப் பலவிதங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டுதடுத்து நிறுத்திய பின்னரும்கூட தொழில் வளர்ச்சியில் மேற்குவங்க இடது முன்னணிஅரசு சாதனை படைத்திருப்பதையே தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு 2007-2008இல்கட்டவிழ்த்துவிட்ட, தொழில்வளர்ச்சிக்கு எதிரான துஷ்பிரச்சாரத்தையும் மீறி, மேற்கு வங்கஇடது முன்னணி அரசு 12 சதவீதம் தொழில் வளர்ச்சியை அடைந்திருந்தது என்று அப்போது மேற்கு வங்க மாநில நிதி அமைச்சராக இருந்த அசிம் தாஸ் குப்தா கூறுகிறார்.சமீபத்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் உற்பத்தித்துறையில், வேலை வாய்ப்புகளில் நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம் என்றும் குஜராத் மாடல் என்றும் நரேந்திரமோடி சரடு விட்டுக் கொண்டி ருக்கக்கூடிய நிலையில், தேசியமாதிரி சர்வே இந்த ஆய் வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ஆட்சியிலிருந்த கடைசி ஆண்டான 2010-2011ஆம் ஆண்டில் கூட சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருந்தோம் என்று அசிம் தாஸ் குப்தா கூறினார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணிக்குக் கிடைத்த வெற்றி, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தொழில்மய முன்னேற்றத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுவிரிவான முறையில் மக்களால் அறியப்பட்டது, என்றுஇடதுமுன்னணி தலைவர்களில் ஒருவர் கூறினார். சிறிய அளவிலான உற்பத்திப் பிரிவுகள் அதிக அளவில் இருப்பது மேற்கு வங்கத்தில்தான் என்றும் அசிம் தாஸ் குப்தா கூறினார். 1991-க்கும் 2011-க்கும் இடையேயான ஆண்டுகளில், தோழர் ஜோதிபாசு தலைமையின்கீழ் நாங்கள் எங்கள் தொழில் கொள்கையைத் திருத்தி அமைத்தபோது, புதிதாக 2,531 பெரிய மற்றும் நடுத்தர உற்பத்திப்பிரிவுகளை அமைத்தோம் என்றும் அசிம்தாஸ் குப்தா கூறினார்.

1960-களுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் மயம் மிகவும் சிறப்பாக இருந்தது 2004-2011ஆம்ஆண்டுகளில்தான் என்றும்,சிங்கூரில் திரிணாமுல் காங்கிரசும் மாவோயிஸ்ட்டுகளும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முன்னர் அக்கால கட்டத்தில் 1,872 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். நன்றி: தீக்கதிர் (26.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/79360.html#ixzz308KGO6ID

தமிழ் ஓவியா said...


புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் படித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள் சென்னை புத்தக சங்கமத்தில் தமிழர் தலைவர் உரை


சென்னை.ஏப். 27- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் சென்னை புத்தக சங்கமம் கடந்த 18ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதான வளாகத்தில் சிறப்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 200 அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வை யாளர்களைக் கவர்ந்திழுத்தன. கண்காட்சியின் ஓர் அங்கமாக அறிவியல் ஆய்வு செய்முறைக் கருவிகளுக்கான அரங்கு அமைக்கப்பட்டி ருந்தது. உலக கின்னஸ் சாதனைப் புத்தகத் தொகுப்புகள், திராவிடர் கழக வெளியீடுகளாக தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிறமொழி நூல்கள், சலுகை விலைகளிலும் பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவன வெளியீடுகள், பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் சலுகை விலைத் தொகுப்புகள், ஒரே எழுத்தாளரின் ஆங்கில மற்றும் தமிழாக்க நூல்கள் என்று சிந்தனைச் சிறகுகளுக்கு மொழி தடை இல்லை என்று பார்வையாளர்களைக்கவர்ந்தன. சென்னைப் புத்தக கண்காட்சிமூலம் வாசகர்கள் மட்டுமின்றி பதிப்பகத்தாரும் ஊக்கம் பெற்றுள்ளனர். சென்னைப் புத்தகக் காட்சி கடந்த ஆண்டைமிஞ்சும் வகையில் உலகத் தரத்திலான அரங்குகள், பாதுகாப்பு, வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் என்று முன்னேற்பாடுகளுடன் இருந்த தால், இனி ஆண்டுதோறும் நடைபெறும் என்கிற உத்தர வாதத்துடன் புத்தகக் காட்சிக்கு அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்கிற ஆர்வமும் அனைத்து தரப்பினரிடம் காணப்பட்டது. 18ஆம் தேதி தொடங்கிய சென்னைப் புத்தக சங்கமத்தில் எந்த ஒரு சலசலப்போ, சச்சரவுகளோ ஏதுமின்றி குடும்ப விழாவில் பங்கேற்ற உணர்வு வாசகர்கள், பதிப் பகத்தார் இருதரப்பினரிடையே ஏற்பட பாலமாக சென்னை புத்தகக் காட்சி அமைந்தது என்றால் மிகையாகாது.

26ஆம் தேதி நடைபெற்ற மாலை நேர நிகழ்வாக தென்றல் கலைக்குழுவினரின் நாட்டுப்புறப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. இசை, நாடகம் என்று எந்த வடிவம் ஆனாலும், பெண்ணுரிமை, பகுத்தறிவு எனத் தந்தைபெரியாரின் கருத்துக்களுக்கு கலைவடிவம் கொடுத்ததாகவே அமைந்திருந்தது.

எல்லாத்துறையிலும் ஊடுருவியவர் தந்தை பெரியார்!

விழாவின் தொடக்கத்தில் நடராசன் வரவேற்றார். எந்தத் துறையும் விட்டுவிடாமல் எல்லாத்துறையிலும் ஊடுருவி கருத்துக்களை சொன்னவர் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை உரையில் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது:


தமிழ் ஓவியா said...

பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து சென்னை புத்தக சங்கமம் நடை பெறுகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் வீ.அன்புராஜ், கே.எஸ். புகழேந்தி, கோ.ஒளிவண்ணன், வேணுகோபால் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். புத்தக சந்தை ஒரு யுக்தியாக, இந்தக் காலக் கட்டம் மக்கள் கவனம் ஒரு திருவிழாவில் சங்கமித்து இருந்தபோது நாம் சென்னை புத்தக சங்கமத்தில் இருக்கி றோம். கடந்த ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்றது. மேலும் பல பதிப்பகத் தாரும் சேர வேண்டும் என்று நகரின் மய்யமான இடத்தில் நடக்கிறது. எனக்கு அறிமுகமான பதிப்பகத்தார்களும் உள்ளனர். சென்னை புத்தக சங்க மத்தைத் தொடர்ந்து நடத்தினால் நல்ல விளைவு ஏற்படும் என்று கூறுகின்றனர். நூல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஆசிரியர் அவர்கள். தமிழ்நாட்டில் சகலத்துறைக ளிலும் ஈடுபட்டு சிந்தனை, கருத்து, தத்துவங்களை மக் ம் தந்தை பெரியார் நூல்கள்மூலம் கொண்டு சென்றார். பெரியாருக்கு இணை பெரியார்தான். ஈரோட்டில் பெரியார் பேசும்போது, அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நிதிதிரட்டுவதற்காக நடத்தப்பட்டது. அப்போது பேசிய தந்தைபெரியார், சினிமா, நாடகம் பார்க்கின்றவர் கழகம் என்று அமைப்பு வேண்டும் என்றார். மக்கள் மூடநம்பிக்கையிலிருந்தும், பிற்போக்குத்தனங்களிலிருந்தும் மீட்கப்பட வேண்டும் என்பதால் பலதுறைகளிலும் கருத்துக்கள் பரவ வேண்டும் என்று கருதினார். பெரியார் திடலில் ராதா மன்றம் என்று பெயர் வைத்தார். காரணம் கொள்கை பரவ எம்.ஆர்.இராதா பயன்பட்டார். அதேபோல், இசையை நுகருவோர் கழகம், பத்திரிகை படிப்போர் கழகம் என்று எல்லாத்துறையிலும் ஊடுருவிய தலைவர். கல்வி வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு எட்டாம் இடத்திலும், குஜராத் 13ஆம் இடத்திலும் உள்ளது. வாசிப்பு பெருக வேண்டும் என்பது சங்கமத்தின் நோக்கம். அப்போது தான் சிந்தனையை செதுக்க முடியும். முற்போக்கு சிந்த னையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்கே சென்னை புத்தக சங்கமம் நடைபெறுகிறது. ஒத்துழைப்பு நல்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் -இவ்வாறு கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி

விழாவின் முத்தாய்ப்பாக கலைநிகழ்ச்சிகளை வழங்கிய தென்றல் கலைக்குழுவினரையும், தென்றல் கலைக்குழு இயக்குநர் மு.கலைவாணனைப் பாராட்டியும் தமிழர் தலைவர் சான்றிதழ்களை அளித்துப் பாராட்டினார். புத்தகங் களை சேகரித்தும், மற்றவர்களுக்கு வழங்கும் தொண்டை செய்துவருபவர்களான பொள்ளாச்சி நசன், பழங்காசு சீனுவாசன், திருச்சி தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேலு ஆகியோருக்கு புத்தகர் விருது சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் வழங்கப்பட்டது. விருதை தமிழர் தலைவர் வழங்கி பாராட்டிப் பேசியதாவது:

தமிழ் ஓவியா said...

பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து சென்னை புத்தக சங்கமம் நடை பெறுகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் வீ.அன்புராஜ், கே.எஸ். புகழேந்தி, கோ.ஒளிவண்ணன், வேணுகோபால் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். புத்தக சந்தை ஒரு யுக்தியாக, இந்தக் காலக் கட்டம் மக்கள் கவனம் ஒரு திருவிழாவில் சங்கமித்து இருந்தபோது நாம் சென்னை புத்தக சங்கமத்தில் இருக்கி றோம். கடந்த ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்றது. மேலும் பல பதிப்பகத் தாரும் சேர வேண்டும் என்று நகரின் மய்யமான இடத்தில் நடக்கிறது. எனக்கு அறிமுகமான பதிப்பகத்தார்களும் உள்ளனர். சென்னை புத்தக சங்க மத்தைத் தொடர்ந்து நடத்தினால் நல்ல விளைவு ஏற்படும் என்று கூறுகின்றனர். நூல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஆசிரியர் அவர்கள். தமிழ்நாட்டில் சகலத்துறைக ளிலும் ஈடுபட்டு சிந்தனை, கருத்து, தத்துவங்களை மக் ம் தந்தை பெரியார் நூல்கள்மூலம் கொண்டு சென்றார். பெரியாருக்கு இணை பெரியார்தான். ஈரோட்டில் பெரியார் பேசும்போது, அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நிதிதிரட்டுவதற்காக நடத்தப்பட்டது. அப்போது பேசிய தந்தைபெரியார், சினிமா, நாடகம் பார்க்கின்றவர் கழகம் என்று அமைப்பு வேண்டும் என்றார். மக்கள் மூடநம்பிக்கையிலிருந்தும், பிற்போக்குத்தனங்களிலிருந்தும் மீட்கப்பட வேண்டும் என்பதால் பலதுறைகளிலும் கருத்துக்கள் பரவ வேண்டும் என்று கருதினார். பெரியார் திடலில் ராதா மன்றம் என்று பெயர் வைத்தார். காரணம் கொள்கை பரவ எம்.ஆர்.இராதா பயன்பட்டார். அதேபோல், இசையை நுகருவோர் கழகம், பத்திரிகை படிப்போர் கழகம் என்று எல்லாத்துறையிலும் ஊடுருவிய தலைவர். கல்வி வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு எட்டாம் இடத்திலும், குஜராத் 13ஆம் இடத்திலும் உள்ளது. வாசிப்பு பெருக வேண்டும் என்பது சங்கமத்தின் நோக்கம். அப்போது தான் சிந்தனையை செதுக்க முடியும். முற்போக்கு சிந்த னையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்கே சென்னை புத்தக சங்கமம் நடைபெறுகிறது. ஒத்துழைப்பு நல்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் -இவ்வாறு கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி

விழாவின் முத்தாய்ப்பாக கலைநிகழ்ச்சிகளை வழங்கிய தென்றல் கலைக்குழுவினரையும், தென்றல் கலைக்குழு இயக்குநர் மு.கலைவாணனைப் பாராட்டியும் தமிழர் தலைவர் சான்றிதழ்களை அளித்துப் பாராட்டினார். புத்தகங் களை சேகரித்தும், மற்றவர்களுக்கு வழங்கும் தொண்டை செய்துவருபவர்களான பொள்ளாச்சி நசன், பழங்காசு சீனுவாசன், திருச்சி தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேலு ஆகியோருக்கு புத்தகர் விருது சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் வழங்கப்பட்டது. விருதை தமிழர் தலைவர் வழங்கி பாராட்டிப் பேசியதாவது:

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பாராட்டுரை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இணைந்து கோடையில் குளிர்தரு தென்றலாக ஆரம்பித்து இரண்டாம் ஆண்டு முயற்சி புத்தகத் திருவிழா அற்புதமான விழாவாக நடந்துள்ளது. இங்கே புத்தகர் விருது வழங்கப் படுகிறது. வாழ்நாள் சாதனை விருது என்று யார்யாருக்கோ விருது கொடுக்கிறார்கள். இவர்களுக்குத்தான் விருது கொடுக்கப்பட வேண்டும். இங்கு விருது பெறுபவர்கள் அனைவருமே பொதுவுடைமை சிந்தனையாளர்கள். இங்கு ஜாதி, மதம், கட்சி என்று எந்த வேறுபாடுகளும் கிடையாது. தொண்டறமாக செய்பவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள். இங்கு பாராட்டினால் மட்டும் போதாது. பல்கலைக்கழகங்கள் பாராட்ட வேண்டும். எந்த பல்கலைக் கழகம் செய்கிறதோ இல்லையோ, பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் இவர்களுக்கு சிறப்பு செய்யும். யார் மக்களுக்குத் தொண்டு செய்பவர்களோ அவர்கள் பாராட்டப்பட வேண்டும். நான் கல்லூரியில் படிக்கும்போது, என்னுடைய விடுதி யில் என் அறையில் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத் திருப்பேன். அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று. க்ஷீமீணீபீவீஸீரீ ஷ்வீலீஷீ க்ஷீமீயீறீமீநீவீஸீரீ; மீணீவீஸீரீ ஷ்வீலீஷீ பீவீரீமீவீஸீரீ என்று எழுதி இருப்பேன். படித்தபின் அதன் கருத்தை யாராவது ஒருவரிடமாவதுப் பேசிட வேண்டும். விவாதித்திட வேண்டும். புத்தகத் தொண்டர்கள் குறித்துப் பேசும் போது எங்கள் கல்லூரியில்பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ. அவர்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார். அவர் புத்தகத்தின்மேல் அதிகம் பிரியம் உள்ளவர்கள் யார் என்றார். நகைச்சுவையுடன் பேசுபவர். அவர் பதிலாக கறையான்கள் என்றார். அவைதான் புத்தகக் காதல் உள்ளவை தீஷீஷீளீ றீஷீஸ்மீக்ஷீ என்பார். தேர்வு பயம் இல்லாததால் கறையான்கள் புத்தகங்களின் அனைத்து இடங்களுக்குள்ளும் செல்கின்றன என்பார். பொதுவாக நல்ல நூல்களைப் பாட நூல்களாக வைக்க வேண்டும் என்பார்கள். அறிஞர் பெர்னாட்ஷாவிடம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலிருந்து அவருடைய நூல்களை பாடத்திட்டத்தில் வைக்க அனுமதி கோரினர். மறுத்து விட்டார். ஷேக்ஸ் பியருக்கு நேர்ந்த கதி வேண்டாம் என்றார். பாடத்தில் வைக்கும்போது கேள்விக்காக படிக்க வேண்டியக் கட்டாயம் இருக்கும். விரும்பிப் படிப்பவர்கள் படிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

தமிழ் ஓவியா said...

இங்கே புத்தகர் விருது பெறுபவர்களான ஜீவாவை அடித்தளமாகக்கொண்டு தமிழ்த்தாத்தா சண்முக வேலு, புலவர் இராமநாதன் அளித்த பெரியாரியல் பட்டயப் பயிற்சியில் முதல் அணியின் மாணவரான பழங்காசு சீனுவாசன், தி.மா.சரவணன் உள்ளனர். புத்தகங்களைப் பாதுகாப்பது, படிப்பது, சிந்திப்பது முக்கியமானது. ஈதல் இசைபட வாழ்தல் என்று குறளில் கூறுவதுபோல், இவர்கள் செய்துவருகின்றனர். மாற்றி யோசிக்க வேண்டும். மாற்றி சிந்திக்க வேண்டும். ஈதல் என்றால் பணக்காரர்கள் செல்வத் திலிருந்து ஈதல் என்று நினைத்துவருகிறோம். ஈதல் தொண் டால், அறிவுச் செல்வம் வழங்குகின்றனர். இவர்களைப் பாராட்டுவதன்மூலம் அவர்களுக்குப் பெருமை என்பதை விட நாமும் உத்வேகம் பெறுகிறோம். ரொம்ப காலம் வாழவேண்டும் என்று சொல்லும்போது, தந்தை பெரியார் சொல்வார் முதுமையால் ஒருவரைப்பிடித்துக்கொண்டுதான் நடக்க முடிகிறது.

நீண்ட காலம் வாழவேண்டும் என்பதை விட உற்சாகத்துடன் வாழ வேண்டும். க்ஷிவீவீஷீஸீ, பார்வை, தோற்றம், இலக்கு முதலியவற்றைக் கருத்தில்கொண்டு உற்சாகத்துடன் வாழ வேண்டும். தம்மின்தம்மக்கள் அறிவுடைமை என்பதற்கேற்ப கலைமாமணி முத்துக்கூத்தன் மகன் மு.கலைவாணன் சிறப்பாக செய்துள்ளார். தேர்தல் நேரத்தில்மற்றவர்கள் எப்படி இருந்தாலும் சென்னை புத்தகச் சங்கமம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதே தேதி, நேரம் என்று அடுத்து வரும் ஆண்டுகளில் செய்திட இலக்கு வைத்து, குழு அமைத்து செய்ய வேண்டும். இதுபோல் கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். வீட்டில் பூஜை அறையைவிட புத்தக அறை இருக்க வேண்டும். அற்புதமான அறிவாயுதம். நாடே புத்தகர்கள் ஆக வேண்டும். பயணங்கள் அற்புதமாக இனிய பயணமாக ஆக வேண்டுமானால் புத்தகம்தான் நண்பனாக இருக்கும். ஒவ்வொருவரும் வருவாயில் ஒரு பகுதியை புத்தகம் வாங்குவதற்கு ஒதுக்குங்கள். வாங்குவதோடு படியுங்கள். படித்ததை மற்றவரிடம் பகிர்ந்துவிடுங்கள் அப்போதுதான் மறக்காமல் இருக்கும். -இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79350.html#ixzz308KXuGNX

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருது பெற்றவர்களின் தன்நிலை விளக்க குறிப்பு


பழங்காசு ப.சீனுவாசன்

இவருக்கு இந்த பெயர் அடைமொழியாய் வந்ததற்கு அது மட்டும் காரணமில்லை அவர் நடத்திய காலாண்டு இதழின் பெயர்தான் பழங்காசு.

63 வயதான பழங்காசு.சீனி வாசன் அவர்கள் கும்பகோணம் திருவிடை மருதூரைச் சேர்ந் தவர். திருச்சி பெல் நிறுவனத் தில் முதுநிலைக்கூடுதல் பொறி யாளராக இருந்து 2010-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். ஊதியம் தரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றாரே தவிர, புத்தகத்தேடல் பணியில் மேலும் உற்சாகமாய் ஈடுபட்டு வருகிறார். இவருடைய பாரதி ஆய்வு நூலகத்தில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம். காந்தியாரின் ஆங்கில நூல்கள் நூறு தொகுதிகள், தமிழ் தொகுதிகள் பதினேழு, புரட்சியாளர் லெனின் பற்றிய 47 தொகுதிகள், பொதுவுடமை சிற்பி காரல் மார்க்ஸ் நூல் 37 தொகுதிகள், இந்திய அரசியலைப்பு சட்டத்தந்தை டாக்டர் அம்பேத்கரின் 37 தொகுதிகள், புலவர் குழந்தையின் 17 தொகுதிகள், இராமலிங்க அடிகளார் திருவருட்பா பத்து தொகுதிகள், பாரதியாரின் பன்னிரெண்டு தொகுதிகள், ஜெயகாந்தனின் 12 தொகுதிகள், அயோத்திதாசப்பண்டிதரின் இரண்டு தொகுதிகள்,

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் களஞ்சியம் இன்றுவரை உள்ள அனைத்து தொகுதிகளும், இவரது நூலகத்தை அலங்கரித்து ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஆயுதங்களாய் விளங்குகின்றன. தமிழ், சமஸ்கிருதம், அய்ரீஷ், ஜெர்மன், மராட்டி என அத்தனை மொழிகளின் அகராதிகளும் இவரது நூலகத்தில் உள்ளன, விவிலியம் தொடர்பான அத்தனை தொகுப்புகளும் இவரிடம் உள்ளன.

சீதையின் கணவன் ராமன் என்கிற ராமாயணத்தில் இருந்து ராவணனின் மகள் சீதை என்ற இராமாயணம் வரை கற்பனையில் புனையப்பட்ட பர்மிய இராமாயணம், தாய்லாந்து இராமாயணம், ஜைன இராமாயணம் உள்ளிட்ட இராமாயணங்கள் இவரிடம் உள்ளன..

மேலும் இயற்கை, சித்த ஆயுர்வேத, யுனானி மற்றும் நவீன மருத்துவம் குறித்த அனைத்து நூலகளும் நூற்றாண் டிற்கும் பழமையான நூற்றுக்கணக்கான நூல்களை வைத் திருக்கின்றார். இவரிடமிருந்து இம் மாதிரியான வாங்கிக் கொண்டு போய் புதிய பதிப்புகளைக் கண்ட நூல்களும் உண்டு.

தற்போது தமிழ்ச்சொற்கள் உருவாக்கியவிதம் சீர்திருத்தம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவர் சுடுமண் ஏடாக நம்முடைய முன்னோர்கள் பிராமி எழுத்துக்களை வடித்த விதத்தையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக் கிறார். பழங்கால நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமுடைய இவர் இராஜ இராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த தங்க நாணயம் சேர, சோழ, பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பழமையான நாணயங்கள் உலகின் மிகப்பெரிய கரன்சியான ருஷ்யாவின் 100 ரூபாய் கரன்சி வரை இவரது நூலகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அக்கால ஓலைச்சுவடியில் இருந்து, இக்கால கணினியுகத் தில் பதிவிறக்கம் செய்த புத்தகங்கள் வரை தருவித்துக் புத்தகம் நுகர்வோருக்கு பயனளிக்கும் பழங்காசு சீனிவாசன் அவர்களின் சாதனைகளை பாராட்டி புத்தகர் விருது இப்புத்தகச் சங்கமத்தில் வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

புத்தகத் தாத்தா தோழர் இரா.சண்முகவேல்

தோழர் இரா.சண்முகவேல் அப்படி அல்ல, 73 வயதில் ஒரு நாளைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் ஏறத்தாழ 80 கி. மீட் டர் மிதிவண்டியில் கிராமம் கிராமமாக சுற்றி வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இவர் போய் நிற்கும் போது சிவப்புச்சட்டை தாத்தா வந்து விட்டார் என்று குழந்தைக ளும் பெரியவர்களும் அன்பு டன் வரவேற்பார்கள் எதற்கு தெரியுமா? இவர் கொண்டு வரும் புத்தகங்களை எதிர்பார்த்துத்தான். அந்த அளவிற்கு புத்தங்களோடு பிரிக்கமுடியாத உறவை ஏற்படுத்திக் கொண்டவர். யார் என்ன புத்தகங்கள் கேட்டாலும் அதை எப்படியா வது, எங்கிருந்தாவது வாங்கி போய் அவர்களிடம் சேர்க்கும் போது அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அதைக் காண்பதில் தான் இவருக்கு மகிழ்ச்சி. இவ்வளவு பெருமை மிக்க அய்யா சண்முகவேல் 1941-ஆம்- ஆண்டு குடும்பத்தில் தலைமகனாக நெல்லை சங்கரன் கோவில் அருகில் உள்ள பெரியசாமிபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தகப்பனார் பெயர் நீ.ராமசாமி தாயார் பெயர் சண்முகவடிவு.

இவருடன் உடன் பிறந்தோர் 4 ஆண்கள் 3 பெண்கள் சிறிய வயதில் நன்றாக படித்துக்கொண்டு இருந்தவர், ஆனால் குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்டது. வாழ்க்கையின் மேம்பாட் டிற்காக விவசாயத்தை வாழ்க்கையில் மேற்கொண்ட இவர், ஒரு கட்டத்தில் விவசாயத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட போது இனி என்ன் செய்வது என்று சிந்தித்த நேரத் தில் தன்னைப் போன்றே புத்தகங்களை நேசிப்பவர்க ளுக்கு புத்தகங்க ளைக் கொண்டு போய்ச்சேர்ப்பதையே தனது தொழிலாக மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடித் தார்.

தமிழ் ஓவியா said...


காலையில் 6.30 மணிக்கு மிதிவண்டியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பள்ளிக்கூடங் களுக்குச் செல்வார் அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் இவரை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.வந்தவுடன் தான் கேட்ட புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறாரா என்று ஒவ்வொருவரும் ஆவலாக தேடுவார்கள்.. அவரவர்கள் தான் கேட்ட புத்தகம் இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சி யைப்பார்த்து இன்னும் ஆர்வமாய் இவர் அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளியை நோக்கிச்செல்வார். அடுத்தடுத்த கிராமங்களுச் செல்லும்போது அந்த ஊர் மக்களே இவரைபோதும் என்கிற அளவிற்கு உபசரிப்பர். எல்லாம் புத்தகங்கள் செய்யும் வேலை. வெயிலோ மழையோ வியர்க்க விறுவிறுக்க மிதிவண் டியை மிதித்துக்கொண்டு தன்னுடைய புத்தகம் சுமக்கும் பயணத்தை எந்த வித மனச்சோர்வோ, உடல்சோர்வோ இல்லாமல் கிடைத்த இடங்களில் உண்டும், உறங்கியும் இன்று வரை எந்த வித தடையுமில்லாமல் தொடர்கின்றார்.

இவருடைய இளமைக்காலங்களில் பொதுவுடமைக் கொள்கையில் ஏற்பட்ட ஈர்ப்பால், அடிக்கடி மக்கள் நலன் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல் வதும் வாடிக்கையாகிவிட்டது. அப்போது அணியத் துவங்கிய சிவப்புச்சட்டைதான் இவரது அடையாளமாய் இன்றுவரை தொடர்கிறது.

தமிழ் ஓவியா said...

நெல்லை மாவட்டத்தில் கீழக்கலங்கல் என்னும் ஊரில் இவர் மிகவும் நேசித்த பொது உடைமைவாதி தோழர் ஜீவானந்தம் அவர்கள் பெயரில் ஜீவா படிப்பகம் என்ற ஒன்றை ஏற்படுத்தி 27 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகின்றார். அந்தப்பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பள்ளிகள், சிறந்த மாணவர்கள், சிறந்த கட்டுரை, நாவல், கவிதைகளுக்கு ஜீவாவின் பெயரிலேயே விருது வழங்கி மகிழ்வார். துவக்கப்பள்ளியில் இருந்து மேல் நிலைப் பள்ளி வரை அந்த பள்ளிகளுக்குச் சென்று புத்தகக் காட்சி நடத்தி வருகின்றார் . இவருடைய தொண்டறத்தைப் பாராட்டி நாளிதழிகளிலும், வார இதழ்களிலும் செய்திகள் பல வந்துள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட் டங்களுக்கும் மிதிவண்டியில் பயணம் செய்து இன்றுவரை புத்தகங்களை வழங்கிக்கொண்டு வருகிறார். புத்தகங்களைத்தேடி மற்றவர்களுக்கு உதவும் விதமாக மேற்கொள்ளும் பயணத்தில் இவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் உடன் நிற்கின்றனர். பார்த்து தாத்தா பத்திரமாக போய்ட்டுவாங்க என்று இவரிடம் புத்தகங்கலைப் பெற்றுக்கொண்டவர்கள் நன்றி கலந்த அன்புடன் சொல்வதைக்கேட்டு இன்னும் உற்சாக மாய் இந்த வயதிலும் மிதிவண்டியில் பயணம் செய்து மக்களுக்கு புத்தகங்களை கொடுப்பதே என் வாழ்நாள் பணி என்ற நல்லெண்ணம் கொண்டவர் தாத்தா சிவப்புச் சட்டை. இவ்வளவு சாதனைகளை தன்வசம் கொண்ட சிவப்புச் சட்டை புத்தகத்தாத்தா சண்முகவேல் அவர்க ளுக்கு புத்தகர் விருது புத்தகச் சங்கமத்தில் வழங்கப்பட்டது.

திருச்சி தி.மா.சரவணன்

இன்றைய கணினி யுகத்தில் எல்லோருக்கும் புத்தகங் கள் படிப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் இருப் பவர்களும்கூட படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர புத்தகங்களை பாதுகாத்து வைப்பதில்லை, ஆனால், தான் படித்ததோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்று நினைத்து நூல்கள், நாளிதழ்கள், மாத இதழ்கள் போன்றவற்றை சேகரித்துப் பாதுகாத்து இன்றுவரை எந்த வித சுணக்கமும் இல்லாமல் செய்து வருபவர்.

திருச்சியைச்சேர்ந்த தி.மா.சரவணன் 10.7.1963 அன்று பிறந்தவர். தன்முயற்சியாக கலை நிலா என்ற பெயரில் பதிப்பகம் மூலமாக பல நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இதழ்களின் பிரதிகளைக் கொண்ட கலை நிலா இதழகம் அமைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் 1. வரலாறு காட்டும் சீரிதழ்கள்- 2003, 2. தமிழ் சீரிதழ்கள் நோக்கும் போக்கும் 2006, 3. தமிழில் இதழியல் நூல்கள் நூலடைவு 2006, 4. சிறுவர் இதழ்கள் 2007, 5. குறள் நெறியில் தமிழ் இதழ்கள் 2009, இணைந்து எழுதிய நூல்கள், நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி, புலனாய்வு இதழ்கள், வர இருக்கின்ற நூல்கள் மா.பொ.சி திரைப்பட இதழ்கள். இவருடைய படைப்புகள் எண்ணற்ற தமிழ் இதழ்களில் வந்துள்ளன. இவர் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் நூல்களின் வரிசையில் ஜனவினோதினி 1883, பாரதியின் சக்கரவர்த்தினி (1905 ஆம் ஆண்டு), சுதந்திரச் சங்கு 1931, காந்தி 1934 தந்தைப்பெரியாரின் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை அண்ணாவின் திராவிட நாடு, காஞ்சி பாரதிதாசனின் குயில், முல்லை, கலைஞர் கருணாநிதியின் முரசொலி, நம்நாடு கண்ணதாசனின் தென்றல், முல்லை, இராமசாமியின் நாத்திகம், கி.ஆ.பெ. அவர்கள் நடத்திவந்த தமிழர் நாடு. பாலசுந்தரத்தின் தமிழ் அரசு, ம.பொ.சியின் தமிழ் முரசு, தமிழர் குரல் மித்திரன், நவசக்தி, ஜனதா கடிதம் கதிரவன் தமிழ் முரசு (பழையது) இதுமாட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த பல்துறை இதழ்கள் திரைப்படம் சார்ந்த இதழ்கள் தமிழகத்தை தாண்டியும் வேற்றுநாடுகளில் வெளியாகும் தமிழ் இதழ்களும் இவருடைய சேகரிப்பில் அடங்கும். மருத்துவம், விளையாட்டு, சிறுதொழில், கையெழுத்து, இதழ்கள், சினிமா, அறிவியல், வேளாண்மை, கவிதை உட்பட பலவகையான நூல்கள் இவரின் சேகரிப்பில் அடங்கும். பெற்ற விருதுகள்

படைப்பாளர் விருது, தமிழக சாதனையாளர்

சீரிதழ் பணிச்செல்வர் விருது சிற்றிதழ் தொகுப்பு இயக்க விருது பதிப்புச்செம்மல் விருது செந்தமிழ்த்தேனி விருது சிந்தனைப்பேரொளி விருது, குறள் நெறி அண்ணல் விருது, நூலக செம்மல் விருது போன்றவை இவரது நூல்சேகரிப்பு சாதனைகளைப் பாராட்டி வழங்கப்பட்ட விருதுகள் ஆகும்.

வெளிவந்த நேர்காணல்:- நாம், தாழம்பூ, நந்தவனம் மற்றும் பிரபல மாத வார தினசரி செய்த இதழ்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் இவருடைய நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சாதனைகளைக் கொண்ட தி.மா.சரவணனுக்கு புத்தகர் விருது புத்தகச் சங்கமத்தில் வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/79352.html#ixzz308LY6QF1

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியில் பெண் வேட்பாளர் இடம் பெறாதது ஏன்?


கேள்வி: எந்தத் தேர்தலுக்கும் இல்லாத வித்தியாசம் இந்தத் தேர்தலில் என்ன? - கு. வைஜெயந்தி, குன்னூர்

பதில்: (1) அகில இந்திய அளவில் பச்சையான வகையில் மதவெறிப் பேச்சு.
2) மாநில வகையில், ஆளுங் கட்சியால் பகிரங்கமாகவே பணப்பட்டுவாடா வாக்காளர்களுக்கு நடந்தது.

கேள்வி : மின்வெட்டுக்குக் காரணம் சதி என்கிறாரே முதல் அமைச்சர்? - மு.வே. ராசன், கே.கே. நகர் சென்னை

பதில்: சதி என்றால் கண்டுபிடிக்க வேண்டிய கடமை அவருடையதுதானே! சொல்லி பல நாள்கள் ஆகி விட்டதே! இதுவரை கண்டுபிடிக்காதது - ஏன்?

கேள்வி: வளர்ச்சி என்ற பெயரால் இந்துத்துவாவை அரங்கேற்றுவதுதான் பிஜேபியின் திட்டமா? - ம. சுரேஷ்குமார்,

பதில்: ஆமென்! ஆம் என்க!!

கேள்வி: கும்பகர்ணன் சதா தூங்கிக்கொண்டே இருப்பான் என்பதெல்லாம் அறிவுக்குப் பொருந்தக் கூடியதுதானா? - வா. மணிமாறன், வேடந்தாங்கல்

பதில்: தமிழர்களை - திராவிடர்களை இழிவுபடுத்த இப்படியெல்லாம் புராண, இதிகாசப் பாத்திரங்கள் பலவற்றிலும் செய்துள்ளார்கள்!

கேள்வி: வாசகர்களைக் குழப்புகிறேன் என்று சொல்லி திருவாளர் சோ ராமசாமி தலையங்கத்தில் குறிப்பிடுகிறாரே?

பதில்: குழப்பத்தின் மறுபெயர் தான் நண்பர் சோ என்ற ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்!

கேள்வி: அய்.நா. விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளதுபற்றி... - க. தமிழழகன், திட்டச்சேரி

பதில்: அய்.நா.வின் மூலம் அமெரிக்கா போனற நாடுகள் உலக நாடுகளில் இனப்படுகொலையை எதிர்த்து பொருளாதாரத் தடையை உருவாக்கிட முன் வர வேண்டும்; உலக நாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு சுண்டைக்காய் இலங்கை, சீனா, பாகிஸ்தானை நம்பியே வாழ்ந்துவிட முடியாது என்பதை உணர்த்த சர்வதேச நாடுகளும் அய்.நா.வும் உலகறியச் செய்ய வேண்டும்!

கேள்வி : தாங்கள் தேர்தல் பரப்புரையில் சொன்ன கி டீம் ஙி டீம் எல்லோர் வாயிலும் புகுந்து புறப்பட்டு வந்தது தங்களுக்குத் தெரியுமா? - அ.கோ. முகிலன், அடையாறு சென்னை-20

பதில்: மிக்க நன்றி; இரண்டும் இரண்டும் நான்கு என்பது யார் கூட்டினாலும் ஒரே விடை தானே! அதுபோலத்தான்!

கேள்வி : மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லாதபோது மதச்சார்பற்ற தன்மை என்று வருகிறபோது காங்கிரஸ்தானே அகில இந்திய ரீதியில் தலைமை தாங்க முடியும்? - அ. முபாரக், நீடூர்

பதில்: பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: பி.ஜே.பி. தலைமையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெண்களை வேட்பாளராக நிறுத்தவில்லையே? (சிதம்பரம் தொகுதி ஒரு விபத்து) - சீனு. வளர்மதி, திண்டிவனம்

பதில்: ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை அமுலாக்க முனைந்துள்ளது என்பதே உண்மை!

கேள்வி: மின்சாரம், குடிநீர் என்பவை அரசியல் பிரச்சினையாக்கப்படுவது சரியா? - வி. முரளி, சென்னை-40

பதில்: அரசியல் என்பது மக்களின் தேவை அத்தனையையும் உள்ளடக்கியது தானே! இவை இரண்டும் முக்கிய வாழ்வாதாரம் அல்லவா?

Read more: http://viduthalai.in/page8/79283.html#ixzz30B0flqFH

தமிழ் ஓவியா said...

பிட்டி தியாகராயர்

ஏப்.27 பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் (1852). செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே பி.ஏ.படித்தவர். 1882 முதல் 1923 வரை நாற்பத்தொன்றரை ஆண்டுகள் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்து சாதனை புரிந்தார். சென்னை மாநகரத்துக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவையாகும். துவக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்த அவர். பார்ப்பன ஆதிக்கத்தின் கொட்டத்தைச் சகிக்க முடியாத நிலையில் பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓர் அமைப்புத் தேவை என்று உறுதியான முடிவுக்கு வந்தார். டாக்டர் சி.நடேசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் இதற்கு இரு கை நீட்டினார்கள். அதன் தொடக்கம் தான் 1916 டிசம்பர் 20-இல் அவர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையாகும். பார்ப்பனர் அல்லாதார் மத்தியிலே எழுச்சியையும், உரிமை உணர்வையும் தட்டி எழுப்பிட ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழும், திராவிடன் என்ற தமிழ் இதழும், ஆந்திர பிரகாசிகா என்னும் தெலுங்கு இதழும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன.

1920-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையில் மொத்தம் உள்ள 65 பொதுத் தொகுதிகளில் 28 இடங்கள் பார்ப்பனரல்லாதா ருக்குப் போராடிப் பெறப்பட்டன. முதல் பொதுத்தேர்தலிலேயே நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இரு முறையும் கேட்டுக்கொள்ளப்பட்டும், பிட்டி தியாகராயர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர் எவ்வளவு பதவி ஆசையைத் துறந்த மாமனிதர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். அதேநேரத்தில் வெளியில் இருந்து நீதிக்கட்சி ஆட்சியை வெகு சிறப்பாக வழி நடத்தினார் என்பது தான் முக்கியமாகும். வெள்ளை உடை உடுத்தியதால் மட்டும் அவர் வெள்ளுடை வேந்தர் அல்லர். உயர்ந்த உள்ளமும், ஒழுக்கமுள்ள அவரின் கண்ணிய மான பொதுவாழ்வும் கூடத்தான் அது காரணப் பெயராக அமைந்து விட்டதோ!

- விடுதலை 27.4.2003

Read more: http://viduthalai.in/page-2/79425.html#ixzz30EQVUgTm

தமிழ் ஓவியா said...கல்கிகளின் வக்காலத்து!

கேள்வி: மோடியைச் செங்கோட்டைக்கு அனுப் பினால் பெற்ற சுதந்திரம் வீணாகி விடும் என்கிறாரே தா. பாண்டியன்?

பதில்: சுதந்திரம் பறி போய் விடும் என்பதெல்லாம் தேவையற்ற பயம். இந்திய மக்களிடையே இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும் அரசியல் தெளிவும் அபரிதமானது. அவ்வளவு சீக்கிரத்தில் நம் சுதந்திர வேட்கையும், உணர்வும் மழுங்கி விடாது. பா.ஜ.க.வே ஆட்சிக்கு வந்தாலும் எந்தவிதமான அதீத நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அதற்கு அரசியல் சாசனம் இடம் தராது; மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காகச் சொல்லப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் அர்த்தமில்லை. குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி மிரட்டலாம். வாக்காளர்களை அல்ல! - கல்கி. 27.4.2014

பி.ஜே.பி.யைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தோழர் தா. பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து சரியானதே என்பது விளங்கும். மோடி முதல் அமைச்சராக இருந்த போது தானே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்டார்கள். முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தமேயில்லாது அது நடந்துவிட்டது என்றால், இதை விட மோடியின் நிர்வாகப் பலகீனத்துக்கு வேறு சான்று தேவையேயில்லை!

மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டார்கள் - ஏமாந்துவிட மாட்டார்கள் என்கிறது கல்கி, குஜ்ராத் கலவரத்துக்குப் பிறகு மோடி இருமுறை ஆட்சியைப் பிடித்தது என்பது மக்களின் விழிப்புணர்ச்சியாலா?

பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் தலைமையில் தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது!

கடப்பாறையைக் கொண்டு இடித்தபோது இது சட்ட விரோதம், நியாய விரோதம் என்று அந்தப் பெரும் தலைவர்களுக்குத் தெரியாதா?

சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவதாகச் சொல் லுகிறார்களே - இது என்ன கிச்சுக் கிச்சு விளையாட்டா?

கல்கிகளின் கபடம் நமக்குப் புரிகிறது! அனேகமாக ஒவ்வொரு பார்ப்பனரும் (சிறப்புப் புலனாய்வு காவல் துறை அதிகாரி இராகவன் உட்பட) மோடி தலைமையில் இங்கு ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு முறை கல்கி அறிவித்திருக்கிறது -அவ்வளவுதான்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30EQvZ0Eq

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு?

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு சேலம் வழியே மைசூர் செல்லும் விரைவு இரயில் வண்டியில் இரவு ஒரு மணி அளவில் (சனியன்று நடைபெற்று இருக்கிற கொள்ளை அதிர்ச்சியையூட்டுகிறது.

பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த பெண்களுக்கே இந்தக் கதியா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஓர் இரயிலுக்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காம்; இது ஏதோ சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, நடை முறையில் பயன் விளைவிக்கக் கூடியதாக இல்லையே!
சாலையில் பயணம் செய்தாலும் சரி, இரயிலில் பயணம் செய்தாலும் சரி பாதுகாப்பு குடி மக்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு இல்லை - இல்லை என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை!

இதற்கிடையே இன்னொரு செய்தி - சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இலஞ்சம் வாங்கினால் குண்டு வைப்போம் என்று இராயபுரம், ஆர்.கே. நகர், மயிலாப்பூர், இராயப்பேட்டை காவல் நிலையங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம்.

இலஞ்சம் உள்ளிட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக உள்ள காவல்துறைக்கே குண்டு வைப்போம் என்ற மிரட்டல் கடிதம் என்றால் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காவல் நிலையங்களில் இலஞ்சம் வாங்கப் படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் - காவல்துறையையே மிரட்டும் அளவுக்கு நாட்டு நிலைமை மோசமாகி விட்டதா என்பது இன்னொரு பக்கம்! போகிற போக்கை பார்த்தால் தற்காப்பு இல்லா விட்டால் நடமாட முடியாது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERCaUW1

தமிழ் ஓவியா said...

கூலி வேலை செய்கிறார் பாரத ரத்னா டெண்டுல்கர் - நம்புங்கள்!

நாட்டில் ஊழல்கள் கலர் கலராக நடக்க ஆரம்பித்து விட்டன. கோவாவில் பிஜேபி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.150. உள்ளூர்க் கட்சிக்காரர்கள் இதில் உள் குத்து வேலையில் ஈடுபட்டுகின்றனர். 150 ரூபாயைக் கொடுப்பதில்லை. 150 ரூபாய் கொடுத்ததாக கையொப்பம் வாங்கிக் கொள்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளி வருவதுண்டு.

ஆனால், பிஜேபி ஆளும் கோவாவில் நடந்துள்ளது கற்பனைக்கும் எட்டாத படுநாசமாக அல்லவா இருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலி வாங்கும் தொழிலாளிகள் யார் யார் தெரியுமா?

இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி ஆளும் நடிகர் அமிர்தாபச்சன், பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட்டுக் காரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. டெண்டுல்கரின் மனைவி உள்ளிட்டோராம்.

நாடு எந்த யோக்கியதையில், தராதரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? பிஜேபி ஆட்சியின் இலட்சணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERMekOx

தமிழ் ஓவியா said...


கழகத்தின் பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!


தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டன; அடுத்து...

பெரியார் உலகம் பணிகள், கழகத்தின்

பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!

தமிழர் தலைவர் அறிக்கை


மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

தேர்தலில் நமது கடமையை நிறைவேற்றி யுள்ளோம்; வெற்றி - தோல்விகள் பற்றி கவலை யில்லை; அடுத்து நமது கழகப் பணிகள் வேகமாக நடைபெறட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் கழகக் குடும்பத்தவர்களே, பொறுப்பாளர்களே,

கடந்த ஒரு திங்களுக்கு மேல் தேர்தல் பரப்புரை -பணிகளில் நாம் ஈடுபட்டோம் மும்முரமாக.

காரணம் நமக்கு அரசியல் ஆர்வம் அல்ல; மாறாக நம் கொள்கை, லட்சியங்களுக்கும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை அச்சுறுத்தும் அபாயங்களும் விளைவிக்கக் கூடிய சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது; அதன் மூலம் பழைய மனுதர்மமும், பாசீசமும், நாட்டையும், சமுதாயத்தையும் நாசமாக்கி விடக்கூடாது என்ற பொறுப்பணர்வு, கவலை காரணமாகவே.

தேர்தல் முடிந்தது - நமது பணிகள் தொடரட்டும்!

பற்பல நேரங்களில் தேர்தல் சூதாட்டமாகவே நடைபெறுவதால், முடிவுகள் எப்படியிருந்தாலும், வெற்றி வந்தாலும் துள்ளிக் குதிக்கப் போவதில்லை; எப்போதும் வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள் உண்டு

தோல்விகள் என்றும் அனாதைதான்

என்ற ஆங்கில முதுமொழியை மாற்றுகிறவர்கள் நாம்! தோல்வி வந்தாலும் துவண்டு போய் மூலையில் முடங்கி விடப் போவதில்லை; நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் முன்பு ஒரு முறை எழுதியது போல, தோல்வியைக்கூட, நம் கொள்கை வெற்றிக்குத் திருப்பி விடுவது எப்படி என்ற வித்தையும் விவேகமும் நமக்கு உண்டு. எனவே நமது வழக்கமான பிரச்சாரப்பணி, ஆக்கப்பணி, குறிப்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் திரட்டும் பணி, சமூகநீதிக்கான அடுத்த கட்ட - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு உட்பட பல் முனைப் பணிகள், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் அய்யாவின் ஆணையை நடைமுறைக்குக் கொணரவிருக்கும் தடைகளை உடைத்தெறியும் பணி, போன்றவைகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய உடனடியாகத் துவக்கி விடுங்கள்.

களப்பணி பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்!

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாம்கள், இளைஞர்கள் - மாணவர்களுக்கான பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், கிராமப்புறங்களில் தீவிர பிரச்சாரத் திட்டம், இளைஞர் அணி - கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறைப் பணிகள் இவைகளை மேலும் வேகமாக முடுக்கி, முழு மூச்சுடன் செயல்பட வைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உதவாதினி ஒரு தாமதம்!

தலைமைச் செயற்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைப்பாளர்களாக மேற்பார்வையிட்டு, தலை மைக்கு உடனடியாக அறிக்கை வழங்கிட வேண்டுகிறோம்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/79421.html#ixzz30ERVdoFs

தமிழ் ஓவியா said...


லாலுவின் நறுக்குப் பேட்டி பீகாரில் பிஜேபி களத்தில் இல்லை


மக்களவைத் தேர்தலில் உங்களுடைய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இங்கே போட்டி எங்கே இருக்கிறது? பொதுக்கூட்ட மைதானங்களில் என்னு டைய பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தின் முழு அளவையும் தொலைக் காட் சிகள் காட்டுவதே இல்லை. நரேந்திர மோடி சளைத்து விட்டார் என்றே நினைக்கி றேன். அவருடைய கூட்டங் களுக்கு மக்கள் இப்போது வருவதே இல்லை கூட்டம் குறைந்துகொண்டே வரு கிறது. அவருடைய கூட்டத் துக்குப் போகிறவர்கள் கூட ஒரு கலவரக்காரர் எப்படி இருப்பார் என்று நேரில் பார்க்கத்தான் போகின் றனர்.

உங்களுடைய முக்கிய அரசியல் எதிராளி யார் - மோடியா, நிதீஷ்குமாரா?

அட... இங்கே போட் டியே இல்லை என்கிறேன். ஒருதரப்புதான் கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அந்தத் தரப்பு நாங்கள் தான். பிஹாரில் உள்ள எல்லாத் தொகுதிகளுக்கும் செல்லுங்கள், மக்கள் என்னோடு இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

முதல் இரண்டு சுற்று வாக்குப் பதிவு எப்படி இருந்தது?

பாட்னாவில் இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக பாஜக நினைக்கிறது. அவர்களு டைய கனவெல்லாம் பலூன் போலக் காற்றில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது. அது பட்டென்று வெடித்தது தான் உண்மை, அவர்க ளுக்கு உறைக்கும். களத்தில் என்ன நடக்கிறது என்று செய்தி ஊடகங்களுக்கு எதுவும் தெரியாது. நான் மட் டும்தான் இந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவன். பேச்சைக் கேட்க மக்கள் வராதபோது கூட்டங்களை நடத்தி என்ன பயன்? பிஹாரில் இதுதான் நிலைமை மற்ற மாநிலங் களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.

மீண்டும் முஸ்லிம் - யாதவ் ஆதரவாளர்களை உங்கள் பக்கம் ஈர்த்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

முஸ்லிம்கள், யாதவர் கள் மட்டுமல்ல, மகா தலித் துகள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முற்பட்ட வகுப்பினர் கூடப் பெரும் எண்ணிக்கையில் வந்து என்னை ஆதரிக்கின்றனர், முற்பட்ட வகுப்பில் முற் போக்கானவர்கள் பலர், இருக்கின்றனர். அவர்கள் மோடி பித்துப்பிடித்து அலையவில்லை.

இந்தத் தேர்தலில் பிரச்சினை கள் என்ன? அடுத்துவரும் சுற்றுகளிலும் இப்படியேதான் இருக்குமா?

பாஜக ஏற்கெனவே நம் பிக்கையை இழந்துவிட் டது. கிரிராஜ் சிங்கும் நிதின் கட்காரியும் விரக்தி காரண மாக வசைபாடத் தொடங்கி விட்டனர். மோடியைச் சகித் துக் கொள்ள முடியாதவர் கள் பாகிஸ்தானுக்குப் போங் கள் என்கிறார் கிரிராஜ் சிங். பிஹாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின் கட்காரி. என்ன அரசியல் சிந்தனை இது? அவர்கள் தான் பாசிஸ்ட்டுகள், மத வாதிகள், இதைத் தெரிந்தே தான் சொல்கிறார்கள்; கடும் ஆட்சேபனைகள் வந்த பிறகு சொன்னதைத் திரும் பப் பெறுகின்றனர். இது தான் மோடியின் வேலைத் திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டுவிட்டது.

காங்கிரசுடனான கூட்டணி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?

மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அவசியம். இந்தக்கூட்டு நாட்டைக் காப்பதற்காக, அதன் மதச் சார்பற்ற அடித்தளத்தைக் காப்பதற்காக நாங்கள் திறந்த மனதுடன் செயல் படுகிறோம்.

1990-இல் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து நிறுத் தினீர்கள்; உங்களு டைய

அடுத்த லட்சியம் மோடியின் முயற்சியை...

விரட்டிவிட்டேன். ஒரே உதைதான், மோடி எங்கி ருந்து வந்தாரோ அங்கேயே ஓடிவிட்டார். ஆம் அவர் கதை முடிந்தது. இது மதச் சார்பற்ற நாடு. வகுப்புவாத சக்திகள் இங்கு வெற்றி பெறவே முடியாது. பெருந் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்; அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இளைஞர்கள்தான் பாழாய்ப் போவார்கள்.

யார் அடுத்த பிரதம அமைச்சராக வருவார்கள்? அடுத்த பிரதமரை நீங்கள் தான் தீர்மானிப்பீர்களா? தேர்தலுக்குப் பிறகு அர சியல் கட்சிகளிடையே புதிய அணி சேர்க்கை ஏற்படுமா?

இது எதுவும் என்னுடைய செயல் திட்டத்தில் இப்போ தைக்கு இல்லை. நான் இப் போது போர்க்களத்தில் இருக் கிறேன்.

Read more: http://viduthalai.in/page-3/79437.html#ixzz30ERnau9u

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக்கில் உணவு கொடுக்கலாமா?

பிளாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு. தரமானவற்றைப் பயன்படுத்துகிறோமா என்பதே முக்கியம். பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் 1, 2, 5 குறியீடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுப்பொருட்கள் வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட தரமான வகைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத் தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது... வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு ஆபத்தானது. இவற்றில் பொருட்களை வைத்தால், அதில் உள்ள விஷம் உணவுப்பொருளில் ஏறி ஆபத்தை விளைவிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETCNTjU

தமிழ் ஓவியா said...

சிறுநீரக கற்களை கரைக்கும் அத்தி பழம்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத் தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்திப் பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறு வடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரதச் சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்புச் சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்திபழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப் படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்தி, செரிமானத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப் புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ வகைகளில் 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETOZkis

தமிழ் ஓவியா said...

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொய்யாகொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மா நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.

மருத்துவப் பயன்கள்: மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழ லாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை செரிமானத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற் படுத்துகின்றன. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய் யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க் கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETcoFqr

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடானால் காஷ்மீர் இணைந்திருக்காது பரூக் அப்துல்லா போர்க்கோலம்!சிறீநகர், ஏப்.28-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங் கேற்பதற்காக நேற்று சிறீ நகருக்கு வந்தார்.

காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. அதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அதன் பிறகு திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதைப்போன்ற தாகுதல்களுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட் டேன். இதைப்போல் இன் னும் ஆயிரம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி னாலும் பயந்து பின்வாங்கி ஓட மாட்டேன் என்று ஆவேசமாக கூறிய பரூக் அப்துல்லா இந்த கூட்டத் தில் பேசியதாவது:-

மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப் பாற்றி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல் லும்படி கடவுளை வேண் டிக் கொள்ளுங்கள். இந்தியா மதச்சார்பாகி விட முடி யாது. அது மதச்சார்பான நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் நீடித்து இருக்காது. காஷ்மீர் மக்கள் மதவா தத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.


மோடிக்கு ஓட்டு போடாத வர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று அவர்கள் (பா.ஜ.க.) சொல் கிறார்கள். ஆனால், மோடிக்கு ஓட்டு போடுபவர்கள் கட லில் மூழ்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79407.html#ixzz30ETsFmMd

தமிழ் ஓவியா said...


இந்து அறநிலையத்துறையின் வேலை மூடத்தனத்தைப் பரப்புவது தானா?


இந்து அறநிலையத்துறையின் வேலை
மூடத்தனத்தைப் பரப்புவது தானா?
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம்!

சென்னை, ஏப்.29- தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில் களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியது.
கடந்த ஆண்டு தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. இது மட்டு மின்றி, ஏரி கண்மாய், குளங்களும் தண்ணீரின்றி வறண்டுள்ளது.

கோடைக் காலங்களில் பெய்யும் மழை கூட பொய்த்ததால் பல இடங் களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந் நிலை யில் மழை வேண்டி தமி ழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வருண ஜெபம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஒரே நேரத் தில் இந்த பூஜை நடந்தது. இதில், சென்னையில் திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், வடபழனி முருகன் கோயில் உட்பட 28 முக்கிய கோயில்களில் வருண ஜெபம் நடந்ததாம்.

நேற்று காலை 5.05 மணியளவில் கணபதி ஹோ மத்துடன் வருண ஜெபம் தொடங்கியதாம். தொடர்ந்து சுவாமிக்கு சீதாள ரூபன ஏகாதச ருத்ரஜப பாரா யணம், வருண ஜெபம், வருண சூக்த பாராயணம், தீபாராதனை உட்பட பல் வேறு அபிஷேகங்கள் நடந் தன. மேலும், இசைக் கல் லூரி மாணவர்களும், மழை வேண்டி அமிர்தவர்ஷிணி, மேகவர்ஷிணி, கேதாரம், ஆனந்த பைரவி, ரூப கல்யாணி உள்ளிட்ட இசை ஆராதணை நடத்தினராம். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியிடம் மழைபொழிய வேண்டி வழிபாடு செய்தனராம். ரகசிய ஏற்பாட்டால் பக்தர் கள் கூட்டம் இல்லை.

இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் மழை வேண்டி வழிபாட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்தானாம். இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மழை வேண்டி வழிபாடு நடத்தப்பட்ட கோயில்களில் குறைவான பக்தர்களே கலந்து கொண் டனராம்.

Read more: http://viduthalai.in/e-paper/79451.html#ixzz30KN2KmWZ

தமிழ் ஓவியா said...


சிக்கினார் நரேந்திரமோடி ஹவாலா ஏஜெண்டுடன் நரேந்திரமோடி: குறுந்தகடை வெளியிட்டது காங்கிரஸ்


புதுடில்லி, ஏப்.29- ரூ.1000 கோடி அன்னிய செலவாணி பணத்துடன் பிடிப்பட்ட அப்ரோஸ் பட்டா, மோடியுடன் உள்ள புகைப்படம் அடங்கிய சிடியை காங்கிரஸ் வெளி யிட்டு பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. காங் கிரஸ் தலைவர் சோனியா காந் தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில பேரம் நடத் தியது தொடர்பான சிடியை பாஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. இது அரசியல் வட் டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜக பிர தமர் வேட்பாளர் மோடியு டன், ரூ.1000 கோடி ஹவாலா பணத்துடன் சிக்கிய பிரபல ஹவாலா ஏஜென்ட் அப் ரோஸ் உள்ள ஒளிப்படம் அடங்கிய சிடியை காங் கிரஸ் நேற்று வெளியிட்டது. இதனால், தேசிய அரசி யலில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

சிடியை வெளியிட்ட காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சந்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், அகம தாபாத், சூரத் நகரத்திலி ருந்து ஹவாலா பணத்தை கொண்டு செல்ல முயன்ற வழக்கில் பிடிப்பட்டவர் அப்ரோஸ் பட்டா. இவர் ரூ.1000 கோடி முதல் ரூ.5000 கோடி வரை ஹவாலா மோசடி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இப் பணம் நிழல் உலக தாதாக்களின் பணமாக இருக்கலாம் எனவும் சந் தேகிக்கப்படுகிறது. இப் படிப்பட்ட நபர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் மோடியின் சீடரும் கூட. இவருக்கும் குஜராத் முதல்வருக்கும் என்ன தொடர்பு? அரசு நிகழ்ச் சிகளில் ஹவாலா ஏஜென்ட் எப்படி கலந்து கொண்டார் என்பதை பாஜக தெளிவு படுத்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசா ரணைக்கு மோடி உத்தர விடுவாரா? தனக்கும் ஹவாலா ஏஜெண்ட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை தெளிவுபடுத்துவரா என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79452.html#ixzz30KNHZ29k

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம். - (விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/79443.html#ixzz30KONLc3v

தமிழ் ஓவியா said...


உலகை உலுக்கிய பெண்களின் புத்தகங்கள்


காலந்தோறும் பெண்களின் எழுத்து, ஒட்டுமொத்த உலகுக்கும் புத்துயிர் ஊட்டி வந்துள்ளது. பல புத்தகங்கள் உலகையே புரட்டிப் போட்டுள்ளன. உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23) கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில், பெண்கள் எழுதி உலகை உலுக்கியதாகக் கருதப்படும் நூல்கள் இங்கே நினைவுகூரப்படுகின்றன.

டேல்ஸ் ஆஃப் கெஞ்சி, 1021:

உலகின் முதல் நவீன நாவல் என்று கருதப்படும் இதை எழுதியவர் ஜப்பானியச் சீமாட்டி முரசாகி. ஒரு பேரரசனின் மகனுடைய வாழ்க்கை, காதலைப் பற்றிய கதை. அதேநேரம் வீழ்ச்சியடைந்துவரும் அரசாட்சியையும் இது பதிவு செய்துள்ளது. இந்தக் கதை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருந்தாலும், வரலாற்றை அறிந்துகொள்வதற்கான சிறந்த ஆதாரமாகத் திகழ்கிறது.

எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன், 1792

நவீனப் பெண் உரிமைச் சிந்தனைகளை முதலில் வெளிப்படுத்திய இந்த நூலை எழுதியவர் மேரி வோல்ஸ்டன்கிராஃப்ட். பெண்ணுக்கு உரிய சுதந்திரத் தையும், பெண்ணியத்தையும் உலகுக்கு உணர்த்திய நூல். பெண் என்பவள் முதலில் ஒரு சொத்து அல்ல, அவளும் மனுஷிதான்.

அவளுக்குக் கல்வி பெறவும், பொது வாழ்க் கைக்கு வரவும் உரிமை உண்டு என்று உரத்த குரலில் சொல்லி, ஆணாதிக்கச் சமூகத்துக்கு எழுத்து ரீதியில் சவால் விடுத்தது இந்தப் புத்தகம். இதனால் எரிச்சலடைந்த சிலர், மேரியைக் கழுதைப் புலி என்றெல்லாம் திட்டியிருக்கிறார்கள்.

அங்கிள் டாம்ஸ் காபின், 1852:

உலகுக்கெல்லாம் நீதி சொல்லும் அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வைத்திருந்த இனவெறி வன்கொடுமை பற்றி முதலில் பேசிய இந்த நாவலை எழுதியவர் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்.

முதலில் அமெரிக்காவையும் பிறகு உலகின் கண்களையும் இது திறந்தது. கறுப்பின அடிமை முறையை ஒழிக்க அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு இந்தப் புத்தகமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-7/79489.html#ixzz30KQ80WLH

தமிழ் ஓவியா said...


பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனைப் பெண்கள்


உறவுகளுக்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக... என பன்முக பந்தமாக நம்முள் கலந்திருக்கும் பெண்களை சிறப் பிக்கும் மகளிர் தினம். இந்த வேளையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பற்றி அறிந்துகொள்வோம்.

தொழில்துறை: இந்திரா நூயி

சென்னையில் பிறந்த இந்திரா நூயி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.

முதன் முதலில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். உலக அளவில் அதிக சக்தி வாயந்த பெண்ணாகவும் நூயி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த மல்லிகா சீனிவாசன், தற்போது டாஃபே அமைப்பின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்த அவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார். கடந்த 25 ஆண்டுகளாக தரமான டிராக்டர் களை உற்பத்தி செய்து வரும் டாஃபே நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், வடிவமைப்பதிலும் மல்லிகா மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பிரபல கண் மருத்துவமனை அமைப்பான சங்கர நேத்ரால யாவுடனும், சென்னை புற்றுநோய் மருத்துவ மனையுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

விவசாயம்: சின்னப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் உள்ள புலிச்சேரி கிராமத்தில் பிறந்த அவர் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்கி விவசாயம் செழித்து விளங்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் தன் பவுண்டேஷன் அமைப்பின் களஞ்சியம் என்ற இயக்கத்தில் இணைந்து செயல்படத் துவங்கினார். இந்திய நாட்டில் உள்ள பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-7/79486.html#ixzz30KQGtGEg

தமிழ் ஓவியா said...


அப்படியே மின் தடையைப் போக்க யாகம் ஒன்றையும் நடத்தலாமே!


அண்ணாவுக்கு நாமம் போடும் அ.தி.மு.க அரசாங்கம், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில்களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து அறநிலையத்துறை நேற்று நடத்தியுள்ளது.

சரி, அப்படியே மின்சாரம் வேண்டியும் ஒரு பூஜை போடுங்க. மழை வேண்டும் என்று யாகம் செய்தால் பூணூல் காட்டில்தான் நல்ல மழை. வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்டு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் வந்து மக்கள் மாண்ட பொழுது அங்கு மழையை நிறுத்த இந்த பூணூல் விஞ்ஞானிகள் யாகம் செய்ய வேண்டியதுதானே!

மழையை உண்டாக்க முடியும் என்றால் மழையை நிறுத்தவும் முடியும் தானே! ஆனால் உண்மை என்னவென்றால் இதில் எதுவும் நடக்காது. யாகம் என்பதே பூணூல் கூட்டம் வயிறு வளர்க்கத்தானே. என்ன சொல்லுறது. சரிதானே?

Read more: http://viduthalai.in/page-8/79470.html#ixzz30KQWvxPd