Search This Blog

20.4.14

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?-பெரியார்இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும், நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமை விளை விக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது.

அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே-பெரிதும் செல்வவான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே-சிலரை செல்வவான் களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள்-ஏழை மக்கள் ஆகிய வர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்கு போய் சேர்ந்து விடு கின்றது. அந்த வரிகள் பெரிதும் சம்பளமாகவே செலவாகி விடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடிகளுக்கு என்ன விதமான பலன்கள் ஏற்படவேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட ஏற்படாமல் இருந்து வருகின்றன.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷ கால மாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர் கள் படிக்கத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும், பெரிதும் பணக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களுமே என்றால் இந்த நிர்வாக மானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப் பணத்தைச் செலவு செய்து இருக்கின்றது என்று சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.

ஆனால் அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

நமக்குத் தெரியவே இந்தியவருமானம், வருஷம் ஒன்றுக்கு 75 கோடி ரூபாயாக இருந்தது இன்று வருஷம் 1-க்கு 175கோடி ரூபாயாக ஆகி யிருக் கின்றது.

இராணுவச் செலவுக்கு வருஷம் 20 கோடி ரூபாயாக இருந்தது 7 கோடியாகி, இன்று 60 கோடியாக இருந்து வருகின்றது.

மற்ற அநேக துறைகளிலும் உத்தியோகச் செலவுகள் இதுபோலவே உயர்வாகி வருகின்றது.

உதாரணமாக கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் கல்விஇலாக்கா உத்தியோகச் செலவுகள் இதுபோலவே வளர்ந்திருக்கிறது. ஆனால் கல்விப் பெருக்கத்தில் மாத்திரம் சென்ற 10-வது வருஷத்திற்குமுன் 100-க்கு 7 பேரா யிருந்த கல்விவான்கள் இன்று 100-க்கு 8 பேராகத்தான் ஆகி இருக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் ஏழை மக்களுக்கும், பொது மக்களுக்கும் அனுகூலமானது என்று எப்படிச் சொல்லமுடியும்? ரூ. ஒன்றுக்கு பட்டணம் படியால் 6 படி 7 படி சில இடங்களில் 8 படி அரிசிவீதமும் கிடைக்கக்கூடிய இந்தக் காலத்தில்- க்ஷ.ஹ.ஆ.ஹ. படித்த மக்கள் மாதம் 15ரூ 20ரூ. சம்பளம் கூட வெளியில் கிடைக்காமல் திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களில் ஏராளமான ஆட்களை நியமித்துக்கொண்டு அவர் களுக்கு மாதம் 100, 200, 500, 1000, 5000 வீதம் சம்பளங்களை அள்ளிக் கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், அரசாங்க நிர்வாக உத்தி யோகங்களும் இந்திய பாமர ஏழை குடி மக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம் என்று சொல்லவேண்டியதா? அல்லவா? என்று கேட்கின்றோம்.

இன்றைய ஆட்சியானது அழிக்கப்படவேண்டியது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம். ஆட்சி நிர்வாகம் என்பது சுத்த விளையாட்டுத்தனமாகவும், யோக்கியப் பொருப்பற்ற தனமாகவும் இருந்து வருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். சென்னை மாகாணமானது சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு 2-மந்திரிகளாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததாகும். ஆனால் இப்பொழுது 7-மந்திரிகளால் நிர்வாகம் செய்யப் பட்டு வருகின்றது. இதன் பயனாய் மக்கள் அடைந்த பயன் என்ன என்பதை கவனித்தோமா னால் மேலே கூறியபடி 2-மந்திரிகள் இருக்கும்போது 100-க்கு 7-பேர் படித்த வர்களாய் இருந்தது இப்போது கல்விக்காக என்று ஒரு தனி மந்திரி மாதம் 5000 ரூ. சம்பளத்தில் ஏற்படுத்தி அந்த இலாக்காவில் 20-வருஷங்களுக்கு முன் இருந்ததைவிட 100-க்கு 200-பங்கு பணம் அதிகம் செலவழித்தும் இன்றும் 100-க்கு 8-பேர் படித்தவர்களாய் இருக்கிறார் கள் என்கின்ற அளவில் தான் அபிவிருத்தி காட்டப்படுகின்றது. ஆனால் இந்த மந்திரிப் பதவிகள் இந்தப்படி 100-க்கு 350-பங்கு வளர்ந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போமானால் ஆட்சிமுறையை ஒரு திருட்டு தனம்போலவும் மந்திரிப் பதவிக்காரர்கள் அந்த திருட்டில் தங்களுக்கு ஒரு பாகம் கூட்டு கொடுக்காவிட்டால் அத்திருட்டைக் காட்டிக் கொடுத்து விடு வோம் என்று மிரட்டி பங்கு பெற்றது போலவும்தான் ஆகி இருக்கின்றதே தவிர வேறு ஒன்றுமே இல்லை.

இப்படி 100-க்கு 8-வீதமான கல்வி என்பதும் செல்வவான் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாத்திரம் கிடைக்கும்படியாகவேதான் கல்வியின் தத்துவ மும், கல்வி இலாக்காவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக ஒரு பையன் ளு.ளு.டு.ஊ., படித்து வெளிவர வேண்டுமா னால் மாதம் 1-க்கு 5-4-0 ரூ. சம்பளம் கொடுக்கவேண்டும். அவன் புத்தகம் முதலியவைகளுக்கு மாதம் 2-ரூ வீதம் செல்லும். ஆக மாதம் 7-4-0 ரூ. வீதம் ஒரு மாணவனுடைய படிப்புக்கு வேண்டி இருக்கிறது. இந்த தொகை யான மாதம் 7-4-0 ரூ. கூட 4,5 பேர்களைக்கொண்ட ஒரு குடும்பத்திற்கு வரும்படி இல்லாத மக்கள் நம் நாட்டில் 100-க்கு 60,70 பேர்கள் இருப்பார்கள் என்றால் இவர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்கமுடியும் என்பதை யோசித்துப் பார்த்தால் கல்வி தத்துவத்தின் புரட்டும், அயோக்கியத் தனமும், சுலபத்தில் விளங்காமல்போகாது. மேற்கண்ட கல்விச் செலவானது மாதம் 7-4-0 ரூ. என்பது பட்டணத்துப் பிள்ளைகளுக்குத்தானே ஒழிய, கிராமாந்திர பிள்ளைகளுக்குப் பட்டினங்களுக்குச் சென்றுபடிக்க மாதம் 17-4-0 ரூ. ஆகிவிடுமென்பதை நினைத்துப்பார்த்தால் 100-ல் 1 பிள்ளையாவது குறைந்த யோக்கியதா பக்ஷப்படிப்பு என்னும் ளு.ளு.டு.ஊ., படிப்பு படிக்க முடி யுமா என்று கேட்கின்றோம். மக்கள் நிலை இந்தப்படி இருக்கும்போது இந்தப்படிப்பு சொல்லிக்கொடுக்கும் உபாத்தியாயர்களுக்கு மாதம் 75 முதல் 350 ரூ. வரை சம்பளம் கொடுப்பது என்றால் இது எவ்வளவு கொடுங் கோன்மையான நிர்வாகம் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். மாதம் ஒன்றுக்கு 30-ரூ. 35-ரூ. சம்பளத்தில் வேலைக்கு வருவதற்கு 100 க் கணக்கான பி.ஏ., எல்.டி., கள் இன்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப்படி பலர் அமர்ந்தும்இருக்கிறார்கள். அதுமாத்திரமல்லாமல் பி.ஏ., எல்.டி., படிப்பையும் பரீட்சையையும், வஞ்சகமில்லாமல் இன்னம் சிறிது தாராளமாய் விட்டால் மாதம் ஒன்றுக்கு 20 ரூபாயிலும் 25 ரூபாயிலும் கிடைக் கும்படியாக ஆயிரக் கணக்கான பி.ஏ.,எல்.டி., உபாத்தியாயர்களைக் காண லாம். அப்படிக்கெல்லாம் இருக்க படிப்புக்காக மக்களிடம் இருந்துவசூலிக் கும் வரியையும் அபாரமாக்கி தனிப்பட்ட முறையில் படிப்புக்காக பெற் றோர்கள் செய்யவேண்டிய செலவையும் அபாரமாக்கி அவ்வளவையும், உபாத்தியாயர்களுக்கும் படிப்பு இலாகா நிர்வாக உத்தியோகஸ்தர்கள் என்ப வர்களும் வீணாய் கொட்டிக் கொடுத்து அந்தக் கூட்டத்தைச் செல்வான் களாகவும் ராஜபோகக்காரராகவும் ஆக்குவதல்லாமல் அந்தப்படிப்பால் மக்களுக்கு பலனும் இல்லாமல் செய்து மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 92-பேர்களை கையெழுத்துக்கூடப் போடத் தெரியாமல் தற்குறிகளாய் வைக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்த அக்கிரமங்களை மக்கள் எப்படித் தான் சகித்துக்கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட கொடுமைகளையும் அயோக்கியத்தனங்களையும் மக்கள் என்றென்றும் தெரிந்துகொள்ளாமலும், தெரிந்தாலும் சகித்துக் கொண்டும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குக் கடவுள்செயல் பிரசாரத்தையும் ராஜ பக்தி பிரசாரத்தையும் கொண்ட புஸ்தகமும் படிப்பும் கற்பிக்கப்படுகின்றது என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஆயிரம் சமாதானம் சொன்ன போதிலும் இன்றைய ஆக்ஷி முறை யும் நிர்வாக முறையும் முதலாளித் தன்மை கொண்டது என்பதிலும், இவை ஏழைமக்களுக்கு விஷம்போன்றது என்பதிலும், கண்டிப்பாக இவை அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதிலும் நமக்குச் சிறிதும் சந்தேகமோ தயவோ தாக்ஷண்யமோ தோன்றவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழ்ச்சி ஆக்ஷித் தன்மைக்கு இந்தியாவில் இன்று தூண்கள் போல் இருந்து வரு பவை முதலாளித்தன்மையும் புரோகிதத்தன்மையுமே பிரதானமாகும். அதற்கேற்ற முறையிலேயே காங்கிரசும்-காந்தீயமும் வேலை செய்து கொண்டு வந்திருக்கின்றது என்பதுடன் அதில் இருந்தால் தங்களுக்குப் பதவி கிடைக்காது எனக்கருதி வெளிவந்து அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் மற்ற அரசியல் ஸ்தாபனங்களுமே நடுத்தூண்களாய் இருந்து வருகின்றன.

இந்தக் காரணத்தால் தான் நாம் காங்கிரசை அழித்தாகவேண்டும் என்றும் காந்தீயத்தை ஒழித்தாக வேண்டும் என்றும் அதே தத்துவம் கொண்ட, மற்ற அரசியல் கிளர்ச்சிகளையும் ஒழிக்கவேண்டும் என்றும் புரோகித சம்மந்தமான எந்த உணர்ச்சியையும் அடியோடு புதைத்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போடுகின்றோம்.

இக்கூப்பாட்டைக் கண்டு முதலாளிகளும் முதலாளிகளின் கூலி களும் உத்தியோக வர்க்கங்களும் உருமுவதில் நமக்கு அதிசயமொன்று மில்லை. ஆனால் ஏழைமக்கள் தொழிலாளிகள் சரீரத்தால் சதாகாலமும் பாடுபட்டு துன்பப்படும் கூலிமக்கள், முதலாளிகளுக்கும் முதலாளிகள் கூலி களுக்கும் ஆதரவளிப்பதும் அவர்களை அண்டுவதும் நமக்கு அதிசய மாய் இருக்கின்றது.

ஆகையால் வரப்போகும் தேர்தல்களில் ஏழை மக்கள் தொழிலாளி கள் ஆகியவர்கள் இவற்றை உணர்ந்து ஏமாந்து போகாமல் நடந்து கொள் வார்களாக.

--------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 29.10.1933

75 comments:

தமிழ் ஓவியா said...


மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!


மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க
ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!

மயிலாடுதுறையில் தமிழர் தலைவர் முழக்கம்!

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது

மயிலாடுதுறை, ஏப்.19- 1992இல் அயோத்தியிலும் 2002இல் குஜராத்திலும் நடந்த மதக்கலவரங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

மயிலாடுதுறை சின்னக் கடைத்தெருவில் நேற்று (18.4.2014) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட் டத்தில் மனித நேயக் கட்சி யின் வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து உரையாற் றுகையில் பேசியதாவது:

இந்த பொதுதேர்தல் இதற்கு முன் நடந்த தேர்தலுக்கும் தற்போது நடைபெற இருக்க கூடிய 16ஆவது மக்களவை தேர்தலுக்கும் இடையே இருக்கிற ஒரு மகத்தான வேறுபாடு என்னவென்று அருள்கூர்ந்து நீங்கள் உணர்ந்து கொண்டால் திராவிடர் கழகத்திற்கு ஏன் இவ்வளவு அக்கறை இந்தத் தேர்தலில் என்பதை மிக நன்றாக அறிவீர்கள், காரணம் என்னவென்றால் மற்ற கூட்டணி கட்சி யினை போல அங்குள்ள சகோதரர்கள் போல நாங் கள் அரசியல் கட்சிக் காரர்கள் அல்லர்; அல்லது நேரடியாக அரசியலில் சென்று பங்கேற்க கூடிய வர்கள் அல்லர்; ஆனால் அப்படிபட்ட எங்களுக்கு மற்றவர்களை விட அதி களவு கவலை இந்த தேர் தல் முடிவுகளை பொறுத்து இருக்கிறது, காரணம் என்னவென்றால் தற்போது நடைபெற கூடிய 16ஆவது மக்களவைத் தேர்தல் வெறும் அரசியல் மாற்றத் திற்கான தேர்தல் அல்ல, இதைத் தான் அனைவரும் அருள்கூர்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்,

வருங்கால இந்திய சமுதாயம் தமிழகம் மட்டு மல்ல இந்தியா முழுவதும் அமைதிவாய்ந்த வளத்தை நோக்கிய உண்மையான வளர்ச்சியை மய்யப்படுத் திக்கொண்டு வளர்வதா அல்லது மத வெறியர் களுடைய கையில் சிக்கி பாசிசத்தின் பிடியிலே அகப்பட்டுக்கொண்டு மிகப் பெரிய அளவிற்கு சமுதாயத்தில் இருக்க கூடிய சிறுபான்மை சமுதா யத்தை கூட வாழவிட முடி யாமல் ஆக்கி, பெரும் பான்மையாக இருக்கிற மக்களிடையே கூட குல தர்மத்தையும், மனுதர்மத் தையும் நிலைநாட்டி அந்த கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று மறை முகமாக கூட அல்ல வெளிப் படையாகவே மதவாத சக்திகள் வெளியேவந்து விட்ட நேரத்தில், தேர்தலே ஒரு சமுதாய போராட்ட மாக ஒரு இன போராட்ட மாக தான் நடந்து கொண்டு இருக்கிறது; எனவேதான் உங்களுக்கு தெளிவாக எடுத்து சொல்வதற்காக நாங்கள் பல்வேறு நிகழ்வு களைச் சுட்டிக் காட்ட கடமைபட்டிருக்கிறோம்.

அருமை நண்பர்களே, நீங்கள் நன்றாக எண்ணிப் பாருங்கள்! இன்னும் 5 நாள்களிலே தேர்தல் நடைபெற இருக்கிறது, இந்த தேர்தலிலே பல அணிகள் இருக்கலாம், பலர் போட்டியிடுகிறார்கள்: அது இந்த நாட்டின் ஜனநாயகத் தின் அடையாளம், ஆனால் அதே நேரத்திலே இங் குள்ள மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக வும், கலைஞரின் ஆதரவு பெற்றவராகவும் ஹைதர் அலி உள்ளார், இந்த கூட் டணி ஏன் வெற்றி பெற வேண்டும் இந்த கூட்டணி தான் உன்மையான மக்கள் கூட்டணி என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.

மக்கள் கூட்டணி என்றால் இங்கேதான் ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் கைகோத்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்த கூட்டணி தான் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் சிந்தா மல் சிதறாமல் ஒருங்கிணைந்திருக்கக் கூடிய ஒரு அற்புதமான கூட்டணியே இந்த கூட்டணிதான்! தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில் இரண்டே வார்த் தையிலே தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தின் கொள் கைத் தத்துவம் என்ன என்பதை விளக்கினார்கள், அந்த சொற் கள் என்னவென்றால் அனைவருக்கும் அனைத்தும், இதை வைத்து தான் புரட்சிக்கவிஞர் தன் கவிதை வரியில் எல்லாருக் கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று அமைத்தார், எனவே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமா ?

இன்னாருக்கு மட்டும்தான் இது தேவை, நாங்கள்தான் இந்த நாட்டின் எஜமானராக சர்வாதிகாரிகளாக என்றென்றும் பழமையை தூக்கிக்கொன்டு இருப்போம்; மற்றவர்களெல் லாம் எங்களுக்கு அடிமைகளாக இருந்தால் இருங்கள்; இல் லையென்றால் மூட்டை கட்டுங்கள் என்று வெளிப்படையாக சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருக்கிற கூட்டம்தான் தேர்தலில் மோடியை முன்னிறுத்துகிறது.


தமிழ் ஓவியா said...

மோடி வித்தை

புதிய வாக்காளர்களான 18வயது நிரம்பியவர்கள் கேள் விப்படாத பெயர்.... ஆனால் வயதானவர்களுக்கு தெரியும் மோடி என்ற பழைய பெயர், அதுதான் மோடி, மோடி வித்தை, மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் சிலர் பில்லி சூன்யம் எடுக்கிறேன் என்று சொல்லி, அதன் மூலம் பேய், பிசாசு என்று சொல்லி, இந்தத் தாயத்து வாங்கிக் கொள்ளுங்கள் அதன்மூலம் உங்களுக்கு எந்த நோய்நொடியும் வராது என்று சொல்லி கூட்டம் கூட்டிக்கொண்டு, வித்தைகாட்டி செல்வார் கள், ஆக இந்த வித்தைகாட்ட கூடியதற்கு மோடி வித்தை என்று பெயர், அந்த வித்தை ரொம்ப வேடிக்கையாக இருக் கும், அதில் ஒரு தாயத்து கொடுத்து இதை கட்டிக்கொண்டால் நோய்நொடி வராது என்று கூறி இதன்விலை 200 ரூபாய் என்று கூறி வியாபாரம் செய்வார், அதை அவசர அவசரமாக 10பேர் பணம் கொடுத்து வாங்குவார்கள் ... அது வேறுயாரும் அல்ல அது அவர்களுடைய ஆள்கள் தான், பணம் கொடுத்து வரவழைத்த ஆள்கள், அதைப்பார்த்து மற்றவர்களும் வாங் கலாமே என்று கூறி வாங்குவார்கள் இது தான் மறைந்து போன மோடி வித்தை, அதுபோல் இப்போது புதிதாக ஒரு மோடி வந்திருக்கிறார்.

தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கக் கூடிய கூட்டணி தான் மக்கள்பலம் கொண்ட கூட்டணி; கொள்கை பலம் கொண்ட கூட்டணி; இதுதான் சமுகநீதியை வலியுறுத்தக் கூடிய கூட்டணி; இந்த கூட்டணியில் இருக்க கூடிய மனித நேயமக்கள் கட்சியாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும், முஸ்லீம் லீக் கட்சியாக இருந்தாலும், புதிய தமிழகம் கட்சியாக இருந்தாலும் எங்களுக்குள் சிறிய ஸ்ருதி அளவாவது கொள்கையில் வேறுபாடு இருக்கிறதா? கிடையவே கிடையாது.

தமிழ் ஓவியா said...

குல தர்மக் கொடியை இறக்கிடுவீர்!

குல தர்மக் கொடியை இறக்கி, சம தர்ம நாடாக எல்லோ ருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கருத்திலே யாருக் கும் மாறுபட்ட கருத்துக் கிடையாது, ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமை பாதுகாக்கப் பட வேண்டும், அது போல இங் குள்ள தமிழர்கள் மானத்தோடும், மரியாதையோடும், சுதந் திரத்தோடும் , சமத்துவத்தோடும் வாழவேண்டும், என்று சொல்லக் கூடிய கொள்கையிலே இந்தகூட்டணியில் உள்ள வர்களில் யாருக்காவது மாறுபட்ட கருத்து உண்டா? ஆங்கில நாளேட்டில் கூட கட்டுரை வெளி வந்துள்ளது, அதில் பிஜேபி மற்றும் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளில் மிக முக்கிய மான இடஓதுக்கிடு சமூகநீதி பற்றி தெளிவாக எதுவும் சொல்ல வில்லை என்ற ஆய்வை ஓரு பேராசிரியர் அம்மையார் ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார், நம்மை பொறுத்த வரையிலே இந்த நாட்டில் உள்ளவர்களெல்லாம் சகோதரர்களாக அனை வரும் கைகோத்துகொண்டு வாழ வேண்டும், மதத்தால் அவர் கள் மாறுபட்டாலும் மனதால் ஒன்றுபடவேண்டும், ஜாதி யால் பிளவுபட்டிருந்தாலும் அவர்கள் சகோதரத்துவத்தால் ஒன்றுபட வேண்டும், மதவெறியை மாய்த்து மனிதநேயத் தைக் காக்க வேண்டும். இதுதான் நம்முடைய பொது குறிக் கோள். ஆனால், மற்ற கட்சிகளைப் பாருங்கள். இங்கே மோடியை அழைத்துக்கொண்டு வந்து வித்தை காட்டுகிறார்கள். மோடி நேற்று கன்னியாகுமரியிலே இருந்தார். இன்று பஞ்சாப்பிலே இருக்கிறார். ஊடகத்தால் விளம்பரத்தால் ஊதி ஊதி பெரிது படுத்திக் கூறுகிறார்கள் மோடி அலை வீசுகிறது என்கிறார்கள். நாங்கள் கேட்கிறோம்; மோடி அலை வீசினால் மோடி ஏன் இப்படி அலைந்து கொண்டிருக்க வேண்டும்? காலையிலே வடகிழக்கிலே இருக்கிறார். மாலையில் வண்டலூரில் இருக்கிறார், அடுத்து பஞ்சாப்பிலே இருக்கிறார், அடுத்த நாள் கேரளாவிற்கு போகிறார், இதைப்பார்க்கும்போது மோடி அலைகிறாரே தவிர மோடி அலை வீசவில்லை என்பது விளங்கும்.

தமிழ் ஓவியா said...

ஊடகத்தின் விளம்பரத்தால், அந்நியக் கம்பெனிகளால், கார்ப்பரேட், பன்னாட்டு முதலாளிகள், பல்லாயிரக்கணக் கான கோடிகளை தங்கள்வசம் சுரண்டி வைத்திருக்கிற திமிங்கிலங்கள் இருக்கிறார்களே, அவர்கள் இவர்களை எப்படியாவது கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும், அப்போது தான் தங்களுடைய முதலாளித்துவ ஆட்சி இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய மேல் ஜாதி ஆதிக்கத்திற்காக இவர் ஒரு கருவியாக பயன்படுவார் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. 1980இல் பா.ஜ.க. என்பது ஆர்.எஸ். எஸ். உருவாக்கிய ஒரு அரசியல் பிரிவு அவ்வளவுதான், இது வரை ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.கவிற்கு பின்னாலே இருந்தது. ஆனால் தற்போது மோடியை முன்னிறுத்தி, இந்து மதக் கொள்கையை முன்னிறுத்தி பாசிசக் கொள்கையை நடை முறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்கே தான் மிகபெரிய ஆபத்து பதுங்கி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு இந்தியாவிலே மூன்று முறை தடை செய்யபட்டுள்ள அமைப்பு. அது தான் அதன் பெருமை, அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்காக போரா டுகிற ஈழத்தமிழர்களையெல்லாம் பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்திய அமைப்பு, இந்த நாட்டிற்குப் போராடி சுதந்திரம் வாங்கி தந்த அண்ணல் காந்தி அடிகளுடைய கொலையை நடத்தியது யார்? கோட்சே என்ற மராத்தி பார்ப்பனர், ஆனால் அதை திசை திருப்பி இஸ்லாமியர்கள் என்று சொன்ன நேரத்திலே அவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்தப் படுகொலை 1948 ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. அந்த நேரத்திலே தந்தை பெரியார்தான் வேண்டுகோள் விடுத்தார். அதுதான் அன்றைக்கு இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தியது, யாராக இருந்தாலும் அமைதிகாக்க வேண்டும் யார்மீதும் ஆத்திரம் காட்டக் கூடாது. ஏன் என்றால் துப்பாக்கி மீது யாரும் கோபப்படக் கூடாது. துப்பாக்கி பிடித்த கை யாரென பார்க்கவேண்டும். அது யார் என்று பார்த்தால் அது தான் மத வெறி! அந்த மதவெறிக்கு இடமில்லாமல் செய்ய வேண்டும் என்று மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் கூறினார்.

அந்தப் பொறுப்புணர்ச்சிதான் இன்று என்னைப்போல் இருக்கக் கூடியவர்கள் இப்படி பிரச்சாரம் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சின் பயிற்சி பெற்றவர்தான் கோட்சே! பச்சைத் தமிழர் காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் டெல்லியில் பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயராலே நிர்வாண சாமியார் களையெல்லாம் தூண்டிவிட்டு மிகப்பெரிய அளவிலே பட்டப் பகலிலே காமராஜரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டம் தான், ஆர்.எஸ்.எஸ். சந்தேகம் இருந்தால் காமராஜர் கொலைமுயற்சி சரித்திரம் ஒரு வரலாற்று குறிப்பு என்கிற தந்தை பெரியாரால் வெளியிடபட்ட நூலைப் படியுங்கள்.

தமிழ் ஓவியா said...

குறிப்பாக, இளைஞர்கள் இன்றைக்கு உள்ளது தான் என்றைக்கும் உள்ளதென தவறான மாயையில் இருக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஏன் மோடியை முன்னி றுத்துகிறார்கள்?
இராணுவத்திலிருந்து துப்பாக்கி, வெடிமருந்தையெல் லாம் இவர்கள் கொண்டுவந்து அவர்களே குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். சி.பி.அய். மற்ற விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல் ஆர்.எஸ்.எஸ். 60 பெயர்களில் அமைப்பு வைத்துள்ளார்கள். அதில் ஒன்று அபிநவப் பாரத் என்னும் சாமியார் அணி! அதில் உள்ள பிரக்யா சிங் தாக்கூர் என்ற அம்மையாரே வெடிவைத்து ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்தார், இப்படிப்பட்ட வழக்குகள் அவர்களை நெருக்குகிற நேரத்தில் உள்ளது, 1992இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டு அமைதியாக இருந்த இந்தியாவிலே ரத்த ஆறு ஓடச் செய்து அந்த வழக்குகள் எத்தனை ஆண்டுகளாக விசாரணை யில் இருக்கிறது? அதில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அத் வானியிலிருந்து அவர்கள் அமைப்பில் தேர்தலில் போட்டி யிடும் அத்தனைப் பேர் மீதும் இருக்கிறது, லிபரான் கமிஷன் என்று போட்டு அது எல்லோருக்கும் மறந்தே போய்விட்டது, தற்போது எல்லோரும் குற்றவாளிக் கூண்டில் இருக்கிறார்கள், இதையெல்லாம் கணக்கில் கொண்டு இனி வேறு யாரையும் ஆட்சி அமைக்க விடக் கூடாது, இதுதான் சரியான சந்தர்ப்பம்; மதசார்பற்ற அமைப்பு இனி தேவையில்லை, பன்மதங்கள், பலமொழிகள், பல கலாச்சாரங்கள் இருக்கிற நாட்டில், பெரும்பான்மை மதம் நாம் தான்! ஆகவே நம் மதம் மட்டுமே ஆள வேண்டும், சிறுபான்மை சமூகத்திற்கு இடமில்லாமல் ஆக்க வேண்டும், அதற்கு இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணிதான் இறங்கி இருக்கிறார்கள். எனவேதான், ஆழ்ந்த கவலையோடு நம்முடைய நாட் டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க கூடியவர்களாக நாம் இருக் கிறோம், 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகி விட்டன; ஆக, புதிய வாக்காளர்களே, 18 வயதாக கூடிய இண் டர்நெட் இளைஞர்களுக்கு கூற கடமைப்பட்டிருக்கிறோம், 22 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எப்படிப்பட்ட நிகழ்வு நடந்தது எப்படிப்பட்ட ரத்த ஆறு ஓடியது? மாநிலங்களே கலங்கிப்போய் இருந்தன, 3000க்கும் மேற்பட்டவர்கள் கொலை; கொள்ளை நிகழ்ந்தது. அந்த நேரத்திலே அமைதிப் பூங்காவாய் இருந்த ஒரே மாநிலம்தான், ஒரு சிறு கலவரம் கூட நிகழாமல் இருந்தது என்றால் அந்த மாநிலம்தான் தமிழ்நாடு.

அதற்கு மூல காரணம் என்னவென்றால் தந்தைபெரியார் இந்த மண்ணை பக்குவப்படுத்தி இருக்கிறார் இங்கு சிறு பான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு கிடையாது, அனை வரும் சகோதரர்களாக கைகுலுக்கி கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்தியா முழுவதும் கலவரபூமியாக இருந்த போது கூட இங்கே அமைதி!

தமிழ் ஓவியா said...

நீங்கள் 2004இல் கலைஞர் வகுத்த யூகத்தின்படி 40க்கு 40 என்ற தீர்ப்பு கொடுத்தீர்கள். அதனுடைய விளைவுதான் 10 ஆண்டு கால காவி ஆட்சி கீழே இறக்கப்பட்டது, அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் சேதுசமுத்திரதிட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை போன்ற அத்துணையும் வந்தது இந்த வாய்ப்புகள் உங்களால் ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பு, உங்கள் தெளிவான தீர்ப்பின் மூலம் விளைந்த விளைவு. அந்தத் தீர்ப்பை மீண்டும் தாருங்கள். வரலாற்றை திருப்பிப் பாருங்கள் இளைஞர்களே!! சரித்திரம் என்றால் பழமையும் இன்றைய நிகழ்வும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது.

தமிழ் ஓவியா said...

1992ஆம் ஆண்டைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் கழித்து அடுத்த சம்பவம் குஜராத் 2002இல் இனப்படுகொலை! நம் காலத்தில் நடந்த மிக பயங்கர நிகழ்வு, 2000க்கும் மேற்பட்ட இஸ்லா மியர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். இன அழிப்பு வேலை ஆங்கிலத்திலே என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இலங்கையிலே ராஜபக்சே ஆட்சியிலே தமிழர்கள் எப்படி அழிக்கப்பட்டார்களோ, அதேபோல் அதற்கு நிகராக குஜராத் திலே சிறுபான்மை சமூகத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப் பட்டனர். இதேபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழவேண்டும் என்றால் மற்றவர்களுக்கு வாக்களியுங்கள். வேண்டாம் என்றால் அமைதிதான் நிலைநாட்டபட வேண்டும் என்றால் ஹைதர் அலிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களியுங்கள், அதன் மூலம் அரசியல் மாற்றத்தின் ஒரு தெளிந்த நிலையை உண்டாக்க முடியும்.

மோடி அலைவீசினால், பாவம்! அவர் ஏன் நடிகர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்? நடிகர்களுடன் போய் ஏன் டீ சாப்பிட போகிறார்? அடுத்தடுத்து நடிகர்களை சந்திக்கிறார். அவரென்ன சினிமா தயாரிக்கப் போகிறாரா? ஆட்சிக்கு போகப் போகிறாரா? அவருக்கு என்ன தேவை? அவர்கள் அங்கு பல வீனமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படியாவது ஓட்டு வேண்டும்; அதையெல்லாம் சொல்லாமல் அவர்கள் கையை காட்டினால் போதுமென்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்க ளெல்லாம் அவ்வளவு சுலபமாக ஏமாந்து விட மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒப்புதல்

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸின் தலைமை அமைப்பு நாகபுரியில் உள்ளது. அதிலே தெளிவாக மோடியை ஏன் வேட்பாளராக முன் நிறுத்துகிறீர்கள் என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் கேட்கிறார்கள். 18 -OCT-2013 THE HINDU நாளிதழில் why now selected narendra modi? என்று கேட்டவுடன் modi changed the system இருப்பதை மாற்றி அமைக்க போகிறார், என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
உடனே பலர் நினைப்பார்கள்; ஊழலை ஒழிக்கப் போகிறார், மின்சாரத்தை வாரி வாரி வழங்கப் போகிறார், தண்ணிர் வழங்க போகிறார் என்று! அப்படி நினைக்காதீர்கள்! ஆர்.எஸ்.எஸ். ஏன் மோடியை முன்னிறுத்துகிறது. தற்போது இருக்கக் கூடிய சிறுபான்மை சமூகத்தை தாஜா செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள். அதற்காக சில சலுகைகளை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஏன் இவரை தேர்ந்தெடுத்தோம் என்றால் இவர் வந்தால்தான் அதற்கு ஒரு முடிவுகட்டுவார். மோடி 3முறை முதல்வராக வந்திருக்கிறார். ஒரு ஒரு முஸ்லீமைக் கூட எம்.எல்.ஏ., வாக ஆக்கவில்லை? இதுபோலதான் நாடு முழுவதும் ஆக்க வேண்டும், வாக் காளப் பெருமக்களே! இதுதான் சமவாய்ப்பா? சமூக நல் லிணக்கமா? ஜனநாயகத்திலே அவர்களுக்கு வாக்குரிமை இல்லையா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், இந்த குஜராத் சம்பவத்திற்காக அவர் சிறு வருத்தத்தையாவது தெரிவித்திருக்கிறாரா?

இந்த படுகொலை பற்றி கேட்ட நேரத்திலே அவர் கூறியது: நான் காரில் பின் சீட்டிலே உட் கார்ந்திருக்கிறேன்; என் காரில் ஒரு நாய் குட்டி அடிபட்டால் என்ன வருத்தம் ஏற்படுமோ அந்த வருத்தம் தான் என் மனதில் ஏற்பட்டது. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று கேட்டார். சொன்னாரா இல்லையா? ஒரு பிரதம வேட் பாளராக நிறுத்தப்பட்டிருக்கும்போது கூட மன்னிப்புக் கேட்க தயாராக இல்லை. நெருக்கடி காலத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு இந்திரா காந்தியே பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லையா? அந்த மனப்பான்மை மோடிக்கு உண்டா? அவர் ஏதாவது வருத்தம் தெரிவித்திருக்கிறாரா? கிடையாது. இந்தியாவில் உ.பி.யில் இருந்து 80 வேட்பாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். அதில் 78 தொகுதிகளுக்கு பா.ஜ.க வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. அதாவது ஆர்.எஸ்.எஸ். நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.கவின் முக மூடி ஆர்.எஸ்.எஸ். என்பதே உண்மை. இந்த 78 பேரில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. உ.பி.யில் பார்ப்பனர்கள் 12% அவர்களுக்கு 80ல் 16 வேட்பாளர்கள் 20% க்குமேல் 5இல் ஒரு பாகம் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் 17% மக்கள் தொகை யில் இருக்கின்ற இஸ்லாமியர்களுக்கு ஒரு இடத்தைக் கூட ஒதுக்கத் தயாராக இல்லை என்றால் வரக்கூடிய எதிர்காலம் இவர்களால் ஆளப்படக்கூடியது என்றால் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - அகமதாபாத் முக்கிய மான நகரம். அந்த பெயரிலே அகமது என்று இஸ்லாமிய பெயர் இருப்பதால் இவர்கள் வந்த பிறகு அதை அமதாபாத் என்று மாற்ற சொல்லி திருத்தம் செய்தனர்.

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில்...

பா.ஜ.க தேர்தல் அறிக்கை 7ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தேதிக்குப்பின் சட்ட விரோதமாய் வழங்கப்பட்டுள்ளது. 7ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் வடகிழக்கில் தொடங்கிவிட்டது, தேர்தல் விதிப்படி தேர்தல் நடைபெறும் போது தேர்தல் அறிக்கை கொடுக்கக் கூடாது. அதையும் மீறி வெளியிட்டுள்ள னர், இந்த தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான செய்திகளை மிக ஆழமாக புதைத்து வைத்திருக்கிறார்கள், அதில் முதலில் அயோத்தியில் பகவான் ராமனுக்கு கோயில் கட்டு வதற்கான எல்லா முயற்சியையும் கட்சி மீண்டும் உறுதிப் படுத்தியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கு 2% ஓட்டு கூட கிடையாது என்று தெரிந்தவுடன் மற்றவர்களைப் பிடித்து ஏறி தன் உயரத்தை காட்ட முயற்சி செய்கிறார்கள். இந்த அறிக்கையை யெல்லாம் கூட்டணிக் கட்சிகாரர்கள் ஒப்பு கொள்கிறார்களா?

இரண்டாவது, 370ஆவது சட்டத்தை நீக்குவோம் காஷ் மீருக்கு தனி அந்தஸ்து கூடாது என்பவர்கள் யார்? இவர்கள் அல்லவா! மூன்றாவதாக சிறுபான்மை மக்களை வம்பிழுப் பதற்காகவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள், இந்த மூன்றும் தான் அவசரமான பிரச்சினையா?

இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் நலனுக்கான ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? அமெரிக்கா கூட அதைக் கண்டித்து அறிக்கை வெளியிடுகிறது. இங்கே இருக்கக் கூடிய மோடிக்கு கவலையில்லை. இவர்கள் இரட்டை வேடத்தை வாக்காளர்களே புரிந்து கொள்ளுங்கள்.

மீனவர்கள் பிரச்சினைபற்றி ஏதாவது எழுதியிருக்கிறார் களா? கச்சத்தீவை காங்கிரஸ் கொடுத்தது தவறு என இங்கே வந் தால் பேசுகிறார்கள் ஏதாவது, இதில் சுட்டிக் காட்டி இருக் கிறார்களா? கன்னியாகுமரி கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சி னையைத் தீர்ப்போம் என மோடி பேசுகிறார். ஒருவார்த்தை கூட தேர்தல் அறிக்கையில் மூச்சுவிட வில்லை.

தமிழ் ஓவியா said...

கூட்டணிக் கட்சியில், பாவம் ஒரு நடிகர் அவருக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேலை வைத்துள்ளார்.

ஒரு நடிகரின் உளறல்!

நான் முன்ன பேசுறத பின்ன பேசுபவன்; பின்ன பேசுறத முன்ன பேசுபவன்; நீங்களே அதை சரிபண்ணி எழுதிக்குங்க என்பார். மீண்டும் 1992 மதக்கலவரபூமியாக ஆகிவிடகூடாது என்ற கவலைதான் குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் வேறு எங்கும் நடைபெறக்கூடாது.

பறவைக் காய்ச்சல் எங்கோ உருவானது. எங்கும் பரவுகிறது. பன்றிக்காய்ச்சல் எங்கோ உருவானது உலகம் பூரா பரவுகிறது. அதைவிட பதவிகாய்ச்சல் அதிகமாகவே பரவிக்கொன்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் அவர்கள் 2003ல் குஜராத் தில் ஏற்பட்ட கலவரத்தால் மனம் நொந்து அவர் ஓரு புத்தகமே எழுதியுள்ளார். அந்த புத்தகம் தான் இந்தியா அழிந்துவிடும் என ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர் எழுதினார், அனைவருக்கும் இருந்த அவநம்பிக் கையை மாற்றியது நீங்கள் தான்!

கலைஞர் வகுத்த வியூகம் காரணமாகத்தான்!

இங்கு உள்ளவர்கள் மோடிக்கு மார்க்கெட்டிங் பண்ணிக் கிட்டு இருக்கிறார்கள். என்ன பிரச்சனை? தண்ணீரா, மோடி பாத்துக்குவாரு, தண்ணி கொண்டுவந்து கொடுத்துடு வாரு, முதலில் குஜராத்திலே குடிக்க குடிநீர் கிடையாது. குஜராத் தில் பதினேழு மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித் தாடுகிறது.

அங்குள்ள நகரங்களுக்கு ஒருநாள்விட்டு ஒருநாள் தான் தண்ணீர் அதுவும் இரண்டு மணிநேரம்தான் கிடைக்கிறது. குஜராத்தில் தலைநகரான காந்திநகரில் குடிநீர் பஞ்சம்! அகம தாபாத், வதோதரா, பாருச், ஆனந்த் போன்ற எல்லா மாவட் டங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, ராஜ்காட் மைதானத்தில் 16லட்சம்பேருக்கு இருபது நாளுக்கொரு முறை 20 நிமிடங்கள்தான் தண்ணீர் வருகிறது, அகமதாபாத் நகரில் 840 மில்லியன் தண்ணீர் தேவைபடுவதால் அங்கு தண்ணீர் லாரி மூலம் விலைக்கு பெறப்படுகிறது, இதையெல் லாம் ஏன் சொல்கிறேன் என்றால் உண்மைகளையெல்லாம் தீர்த்து கட்டி ஏதோ சகல நிவாரண சஞ்சீவி இருக்கிறது எனக் கூறுவதைப் போல மோடி வித்தை காட்டிகொண்டிருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


இரகசிய ஒப்பந்தம்!

இது ஒரு புறம் இருக்க, தான் தனியே ஆட்சிக்கு வரமுடி யாது என்று தெரிந்து, அதற்கு முன்னதாகவே ஒரு ஏற்பாடு செய்து கொண்டார்கள். என்னவென்றால் தெளிவான ஒரு ரகசிய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் தோழர்களையெல்லாம் வெளியேற்றி விட்டார்கள் இதை நாங்கள் சொல்லவில்லை பரிதாபத்திற்குரிய, கடைசிவரை எதிர்பார்த்து காத்திருந்த, கம்யூனிஸ்ட் தோழர்கள் தான் கூறினார்கள் முழுக்க முழுக்க பா.ஜ.க. வுடன் ரகசிய ஒப்பந்தம் உள்ளது அதான் எங்களை வெளியேற்றிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

செய்தியாளர்கள் மூலமாக பலநாள்களாக ஒரு கேள் வியை முன்வைத்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு அம்மையார் பதில் சொல்லட்டும்!

உங்களுக்கு பா.ஜ.க.வோடு எந்த ரகசிய உறவும் இல்லை என சொன்னால் அவர்கள் 3 திட்டங்களை அறிவித்திருக்கிறார் களே, இராமன் கோவில் கட்டுவது, 370 சட்டத்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவது, அதில் உங்கள் நிலை என்ன? இந்த மூன்றையும் ஆதரிக்கிறீர்களாக? எதிர்க்கிறீர்களா? தாங்கள் அங்கம் வைக்கும் இடமென்றால் யார் என்பதை குறிப்பிடுங்கள்! எந்தக் கொள்கை உடையவர்களிடம் அங்கம் வைக்க போகிறீர்கள்? தற்போது புதியதாக ஜெயலலிதா கூறக்கூடியது அமைதி, வளம் வளர்ச்சி இந்த மோடி வந்தால் அமைதி போய்விடும். நிலையான ஆட்சியைவிட நிம்மதியான ஆட்சியே தேவை. அதுதான் முக்கியம். நீதியான ஆட்சியே தேவை!

தமிழகம் வளர்கிறதா?

தமிழகத்தின் குற்றங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறினார், ஆனால் புள்ளிவிவரங்கள் கூறுவது வேறுமாதிரி இருக்கின்றது, தேசிய குற்ற ஆவணங்கள் படி 2011இல் 627 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்ட்டுள்ளன, 2013 ல் 923ஆக உயர்ந்துவிட்டது, இப்படிதான் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதா?

விவசாயத்தில் 12% இடம் உற்பத்தித்துறையில் 1.3% வீழ்ச்சியை ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாக திட்ட கமிஷன் கூறுகிறது, தொழில்வளர்ச்சியில் தி,மு,க ஆட்சியில் 4ஆவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 14ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது, இது தான் வளம் வளர்ச் சியா? 14ஆவது இடத்திற்கு கீழே ஒரு மாநிலம் இருக்கிறது அதுதான்மோடி ஆள்கிற குஜராத்.

ஆகவே, வரும் 24ஆம் தேதி நமது ஜனநாயக கடமையான வாக்குரிமையைப் பயன்படுத்தி ஹைதர்அலி அவர்களுக்கு மெழுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், மெழுகு வர்த்தி இடம் பெற்றிருக்கும் பொத்தானை பார்த்து நிதான மாக அழுத்துங்கள். பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும்! வெளிச்சம் தெரியும்! அந்த விளக்கெரிந்தால், உங்கள் வீட்டின் விளக்கெரியும்! நாட்டின் விளக்கெரியும்! சமுதாயத் தில் இருக்கக் கூடிய அனைவருக்கும் இருட்டு அகலக்கூடிய வாய்ப்பு ஏற்படும்! எதிர்காலத்தில் நாம் அச்சத்தோடும் அமைதியின்மை வந்துவிடுமோ என்ற பயத்தோடும் வாழத் தேவையில்லை! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Read more: http://viduthalai.in/e-paper/78946.html#ixzz2zNwSc4wF

தமிழ் ஓவியா said...


மதிமுக பொதுச் செயலாளர் கொள்கையும் பேசுகிறார்ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்குக் கொள்கை ஞானோதயம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ஏற்பட்டு விட்டது.

என்ன புதிர் என்கிறீர்களா? பாரதீய ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொன்னாரே பார்க்கலாம்.

அப்படியென்றால் ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறாரா? அதைப்பற்றி மூச்சுவிடவில்லையே - ஏன்?

வெளி நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட் டால் அவர்களுக்கு உதவுவோம் என்று பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் கூறப்பட் டுள்ளதே - அதைப்பற்றி மதிமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவைச் சேர்ந்த இந்து அல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பா.ஜ.க. முகத்தைத் திருப்பிக் கொள்ளுமா?

பசுவதை பற்றி பா.ஜ.க. கூறுவதுபற்றி என்ன கருத்து?

பச்சையான இந்துத்துவா தேர்தல் அறிக்கையை முன் வைத்து பா.ஜ.க. இந்தத் தேர்தலைச் சந்திக்க வந்து விட்டது. இதற்கு நடைபாவாடை விரிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; திராவிட இயக்க த்தைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் பொல்லா நிலைக்குக் காலா காலத் திற்கும் மதிமுகவும், பாமகவும் பதில் சொல்லி யாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/78947.html#ixzz2zNxc6A9I

தமிழ் ஓவியா said...ராம்தேவ் மீதான புகார் எதிரொலி:
யோகா முகாம்கள் நடத்த தடை

புதுடில்லி, ஏப். 19- யோகா குரு ராம்தேவ் மீதான புகாரின் எதிரொலியாக, யோகா உள்ளிட்ட அரசியல் சார்பற்ற முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ், வாழும் கலை நிறுவனர் சிறீசிறீரவி சங்கர் ஆகியோர் பயிற்சி முகாம் என்ற பெயரில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பொது மக்களிடம் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், யோகா உள்ளிட்ட அரசியல் அல்லாத அமைப்புகள் முகாம்கள் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், சில அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறுகள் நடக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலோ, ஏற்கெனவே அளித்த அனுமதியை தவறாக பயன்படுத்திய அமைப்புகளாக இருந்தாலோ அவர்கள் யோகா போன்ற முகாம்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம். இதுபோன்ற விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுபற்றியும் ஆணையத் துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தை ஊழல் பிரதேசம் என்று கூறலாம் : சோனியா

நீமச், ஏப். 19- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் தொகுதியின் தற்போதைய எம்பியும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான மீனாட்சி நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறு கையில், சமீப காலமாக குஜராத் மாநிலம்தான் வளர்ச் சியின் மாதிரி என்று பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அம்மாநி லத்தில் அங்கு 40 விழுக்காடு மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் உள்ள தலித் இனத்தை சேர்ந்த 27000பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்னமும் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான காலியிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கினார்.

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்தியப்பிரதேச மாநில ஊழல்களை பட்டியலிட்டு பேசிய சோனியா இங்கு நடைபெற்ற தேர்வுவாரியத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு தகுதியில்லாதவர்களுக்கு அம்மாநில அரசு வாய்ப்பளித் திருக்கிறது. இம்மாநிலத்தை மத்தியபிரதே சம் என்று கூறுவதை விட ஊழல்பிரதேசம் என்று கூறலாம். அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78953.html#ixzz2zNxoMRvi

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/78937.html#ixzz2zNy4kc00

தமிழ் ஓவியா said...


குஜராத் பொய்யால் மூடி மறைக்கப்படும் உண்மைகள்

மோடியின் குஜராத் 2014 தேர்தலில் அனைவராலும் வியப்புடன் பார்க்கும் ஒரு மாநிலமாக மாறி விட்டது. காரணம்? அந்த மாநிலம் உண்மையிலேயே இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமா? அப்படி என்றால் அதற்கான சான்றுகள் எங்கே? இந்தியாவிலேயே முன்மாதிரி யான மாநிலம் என்றால் அதன் அருகில் உள்ள மாநிலங்களில் அதன் தாக்கம் இருக்க வேண்டுமே, மராட்டியம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலம். ராஜஸ்தான் ராஜபுத்திரர்கள் காலம் முதல் முகலாயர்கள் ஆங்கிலேயர் கள் என பலர் வந்து சென்றும் இன்றும் எந்த ஒரு தொழில் துறையிலும் முன்னே றாத மாநிலமாக உள்ளது. மத்தியப் பிரதேசம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் முதலிடம். அப்படி என்றால் இதன் மத்தியில் இருக்கும் குஜராத்தின் தாக்கம் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏன் ஏற்படவில்லை.

பதில் கூற வலுவிழந்த எதிர்க்கட்சிகள் கொண்ட மாநிலத்தின் ஆளும் முதல் வருக்கு நன்கு தெரியும் தான் கூறும் பொய்களை எதிர்த்துக்கூற யாருக்கும் துணிச்சல் வராது. அதே போல் ஊடகங் களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் மிகவும் எளிதான பொய்களை பரப்பி விடலாம். இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி குஜராத் பற்றிய பல பொய்களை மேடைக்கு மேடை கூறிவர அந்த பொய்களின் பின்னே உண்மை மறைந்து விட்டது.

குஜராத் வளர்ச்சி என்ற மிகைப்படுத் தப்பட்ட பொய்யின் பின்னால் மறைக் கப்படும் உண்மைகள், முதலாவதாக, 2002 குஜராத் மதக் கலவரம், அதன் பிறகு தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்ட சவுராஷ்டிரப் பகுதி விவசாயிகள், தென் மேற்கு குஜராத்தில் தொழில் நிறுவனங் களுக்கு தங்களின் நிலங்களை இழந்து தற்போது நகரங்களில் குடிசைப்பகுதியில் தஞ்சமடைந்திருக்கும் பெருவாரியான மக்கள், பள்ளிகள், சுகாதார மய்யங்கள், பொது விநியோக நிலையங்கள், குடிநீர் பங்கீடு என அனைத்து பகுதிகளிலும் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடு மைகள் என பல உண்மைகள்.

பெருவாரியான இந்துத்துவா சக்தி களின் கைகளில் முழுமையான குஜராத்தும் சென்றுவிட்டது. தனிமனித சுதந்திரம் என்பது குஜராத்தில் கேள்விக் குறியாகி விட்ட நிலைதான். காரணம் குஜராத் பற்றி ஒரு மாநில முதல்வர் இந்தியாவெங்கும் மேடைக்கு மேடை பொய் சொல்லி முழங்குகிறார்.

அதுகுறித்து பாதிக்கப்பட்ட சவுராஷ் டிரா விவசாயியோ முதலாளிகளிடம் தங்களது வாழ்விடங்களை இழந்த தென்மேற்கு குஜராத் குடிமகனோ வாய் திறக்கவில்லை.


தமிழ் ஓவியா said...

அரசியல் கட்சிகள் பார்வையில் குஜராத்

மோடி தலைமையிலான குஜராத் பாஜக குஜராத்தை முன்மாதிரி மாநிலமாக ஆக்கியது போல் இந்தியாவையும் மோடி மாற்றி விடுவார். ஆகையால் மோடியைப் பிரதமராக அமர வாய்ப்பு தாருங்கள் என் கிறது. ஆனால், மோடி எல்லா மேடைகளி லும் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று சொல்கிறாரே தவிர எந்த விதத்தில் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறுவதே கிடையாது. உண்மையில் சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து மாநில முமே தங்கள் பகுதி தொழில் வளர்ச்சி மற்றும் மனித உழைப்பிற்கு ஏற்ப வளர்ச்சி யடைந்து கொண்டு தான் இருக்கிறது. அரசுகளின் சரியான ஆளுமைத்திறன் மற்றும் பலவீனமான திட்டங்கள் இருந்தும் மக்களின் நிலை சிறிது சிறிது மாற்றமடைந்து கொண்டுதான் வருகிறது.

அப்படிப் பார்க்கப் போனால் மோடி கூறும் குஜராத் வளர்ச்சி என்பது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பானதாக ஒன்றும்படவில்லை.

தமிழ் ஓவியா said...


முக்கியமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குஜராத்தில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலைதான், இடதுசாரி கட்சிகளின் நிலை காங்கிரசைவிட மோசமாகவே உள்ளது. கடந்த ஒன்றரை வருடமாக மோடி கூறிவந்த பொய்கள் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த கேஜரிவால் தலைமையில் சென்று பல இடங்களை நேரடிபடம் பிடித்து காண்பித்த உடன் தான் பல உண்மைகள் வெளிவருகிறது.

இதில் ஒன்று விவசாயிகள் தற் கொலை, முன்மாதிரியான ஒரு மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்போதே மோடியின் பொய்கள் புலப்படும்.

அதாவது குஜராத் மாநில உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி 2012-13ஆம் ஆண்டில் சுமார் 60 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 10 வருடங்களில் 17 லட்சம் குடும்பங்கள் வறட்சியின் காரணமாக பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டு விட்டு நகரங்களின் கூலி வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டனர். மேலும் பல வணிகப் பயிர் செய்யும் விவசாயிகளின் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்து விடப்பட்டன. இதனால் தலை முறை தலைமுறையாக வணிகப் பயிர் மூலம் நன்கு வருவாய் பார்த்து வந்த மக்களும் இன்று வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வதாரத்தை இழந்து விட்டனர்.

இதுபோன்ற உண்மைகளை வெளிக் கொண்டு வர எந்த ஒரு எதிர்க்கட்சி களுக்கும் துணிச்சல் இல்லாத நிலையில் தான் மோடியின் குஜராத் வளர்ச்சி என்ற பொய் இந்தியா முழுவதும் பூதகரமாக மாறி விட்டது.

எது குஜராத் மாடல்?

குஜராத் மாடல் என்பது என்ன? ஒரு ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சியை தன்னகத்தே கொண்ட மாநிலம் என்பதா!

சமீபத்தில் ஆய்வுகள் அனைத்து குஜராத்தில் சிறு தொழில்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நலித்து அழிந்து விடும் சூழலில் உள்ளது. குஜராத் பூகம்பத்திற்கு பிறகு இன்று வரை வைரத் தொழில் முன்னேற்றம் காணவே இல்லை. அதே போல் இன்றும் புகழ் பெற்று இருக்கும் சூரத் ஆயத்த ஆடை தொழில்கள் ஒரு அடையாளமாக இயங்கிக் கொண்டு இருக்கிறதே தவிர வருமானம் ஈட்டும் தொழிலாக முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. குஜராத்தில்கூட பல பெரிய ஆயத்த ஆடை விற்பனை மய்யங்கள் பங்காள தேஷில் இருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டன.

90களுக்கு முன்பு இருந்த தானிய சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பருத்தி ஆலைகள் பல இழுத்து மூடப்பட்டு தற்போது பாழடைந்து போய்விட்டது. இதில் பணிபுரிந்து வந்த இலட்சக் கணக்கான மக்கள் தற்போது எங்கே என்றால் அவர்கள் நகரத்தில் கிடைக்கும் கூலித் தொழிலுக்காக காலை முதல் மாலை வரை சாலை ஓரங்களில் காத்துக் கிடக்கின்றனர்.

சிறுதொழில் நடுத்தரத் தொழில் பாரம்பரியமிக்க தொழில் என குஜராத் தின் முதுகெலும்பே பலவீனமாகி விட்ட நிலையில் எது குஜராத்தின் மாடல் என்று இந்தியா முழுவதும் பரப்பி வருகிறார் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/78942.html#ixzz2zNyEIq3i

தமிழ் ஓவியா said...


தூக்கிலிட்டால், அதையும் நாங்கள் தான் எதிர்ப்போம், மோடி

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், 2002 குஜராத் கலவரத்தில், ஒரு தவறு தன்மீது நிருபிக்கப்பட்டாலும், தன்னை நடுத்தெருவில் வைத்துத் தூக்கிலிடலாம் என்றார் திருவாளர், மனித நேயர் மோடி.

இதைக் கேட்டதும், இங்கே உள்ள சில அல்லக்கைகள், ஆகா, பார், பார், மோடி எவ்வளவு யோக்கியர். எப்படி பேசுகிறார் பாருங்கள் என்கிறார்கள். அவர்களுக்காக வரலாற்றை சற்று ஞாபகப்படுத்துவோம்.

நரோடா பாட்டியா என்கிற ஊர், குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், அகமதாபாத் திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர்., அந்த நரோடா பாட்டி யாவில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர் அப்போது பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்.மாயா கோட்னானி. இவர் ஒரு பெண்மணி. இவரும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியும் இணைந்து ஏறத்தாழ 5000 பாஜக, பஜ்ரங்தள் கலவரக்காரர்கள் துணையோடு, அந்தப் பகுதியில் கலவரத்தை இஸ்லா மியர்களுக்கு எதிராக நடத்தினர். 28.2.2002 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து பத்து மணி நேரம் அந்த கலவரம் நடந்தது. 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மசூதிகளையும், முஸ்லீம் மக்கள் வாழும் வீடுகளையும், எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து, தரை மட்டமாக்கினர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இத்தனையும், பாஜக பெண் எம்.எல்.ஏ. மருத்துவர் மாயா கோட்னானி முன்னிலையில் நடந்தது. இந்தப் பெண்மணி, கலவரக்காரர்களுக்கு, முஸ்லீம்களை கொல்ல, அரிவாளை தந்தும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கலவரம் நடந்தது 28.2.2002-இல். அப்போது அவர் எம்.எல்.ஏ. ஒரே இடத்தில் 97 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது இந்தியாவிலேயே, நரோடா பாட்டியாவில் தான். அத்தகைய கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈனச் செயல் அதுவும் ஒரு பெண்மணி தலை மையில் நடைபெற்றது.

அவரது வழக்கை, மோடி அரசு, வேண்டுமென்றே இழுத்தடித்த நிலை யில்தான், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, சிறப்பு விசாரணை மன்றம் 2008-இல் அமைக்கப்பட்டு, மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 60 பேருக்கு மேல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. 29.8.2012 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தீர்ப்பு?

நரோடா பாட்டியாவில் 97 முஸ் லீம்கள் கொல்லப்பட்டதில் மாயா கோட்னானிக்கு தொடர்பு உள்ளது; ஆகவே அவருக்கு 28 ஆண்டு கால இரட்டை ஆயுள் தண்டனையும், பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், இவர்களோடு சேர்த்து, உடனிருந்த 30 பேருக்கு 14 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.

மாயா கோட்னானி எம்.எல்.ஏ.ஆக இருந்து கலவரம் நடத்தியது 28.2.2002. அவர் மீது கொடூரமான குற்றச்சாட்டு இருக்கிறது என மோடிக்குத் தெரியும். அது தெரிந்தும் 2007-இல் தனது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மாயா கோட்னானியை நியமித்தார் மோடி.

ஆகஸ்டு, 2012-இல் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே, மோடி, இப்போது, நாடகம் நடத்துவது போல், அப்போதும், மாயா கோட்னானிக்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் மனு தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி, மாயா கோட்னானி மீது தூக்குத்தண்டனை கோரும் முடிவை மாற்றிக்கொண்டது.

ஆனால், இப்போது, மோடி சொல்கிறார். தான் குற்றம் செய்திருந்தால், முச்சந்தியில் வைத்து அவரை தூக்கிலிடலாம் என்கிறார்.

கொலையாளியை தெரிந்தே தனது அமைச்சரவையில் சேர்த்தவர்; இரட்டை ஆயுள் தண்டனை தந்த நேரத்திலும் தனக்கு அதில் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்கிற ஓர் எண்ணம் இல்லாதவர், இப்போது தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் பெரிதாகப் பேசப்படுவதால், தூக்கு தண்டனை ஏற்கத்தயார் என நாடகம் ஆடுகிறார்.

அவ்வாறு, மோடிக்கு இந்த நாட்டிலே தூக்குத்தண்டனை என விதிக்கப்பட்டால், அது ரத்து செய்யப் பட வேண்டும் என போராடுபவர் களும் நாங்களாகத் தான் இருப்போம்.

ஆகவே,மோடி ஜி, பயமில்லாமல் பொய் சொல்லுங்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78943.html#ixzz2zNyOM4x6

தமிழ் ஓவியா said...


பத்மநாபசுவாமி கோயிலில் செல்வங்கள் கடத்தல்


உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம், ஏப். 19-திருவ னந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து மன்னர் குடும்பத்தினரும் சில ஊழியர்களும் செல்வங்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையி லான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்வங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளை திறந்து செல்வங்களை மதிப்பிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப் பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கியிருந்து பத்மநாபபுரம் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஊழியர்கள் ராஜ குடும்பத்தினர் உள்பட பலரை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத் தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு: ஹீ பத்மநாபசுவாமி கோயில் ஒரு பொது சொத்தாகும். ஆனால் கோயிலை யும், கோயிலுக்கு சொந்தமான சொத்துக் களையும் தங்களுக்கு சொந்தமான சொத் துக்களாக கருதி மன்னர் குடும்பத்தினர் சில செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹீ மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுக தொடர்புகள் உள் ளன. இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து செல்வங்களை கடத்தியிருக்க லாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* இந்த சந்தேகத்தை உறுதிப்படுத் தும் வகையில் கோயிலுக்குள் வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹீ ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்கமுலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹீ பல ஆயிரம் கோடி மதிப்புள்ள செல்வங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள செல்வங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹீ ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும்.

* கோயில் நட்டத்தில் இயங்கு வது போல் பொய் கணக்கு காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்கு களை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

* கோயில் விவகாரங்களில் இனி மேல் மன்னர் குடும்பம் தலையிடக் கூடாது.

* கோயில் நிர்வாகத்தை கவனிக்க புதிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். ஹீ மன்னர் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும்.

*இந்தியா குடியரசு நாடாகி பல வரு டங்கள் ஆகின்றன. ஆனாலும் திருவனந்த புரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மன்னர் ஆட்சியும் நடப்பது போல் உள்ளது. ஒரு குழுவாக சேர்ந்து கோயிலில் இருந்து செல்வங் களை கடத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* இந்த கடத்தலை தடுத்த சில ஊழியர்களுக்கு எதிராக கொலைமுயற்சி சம்பவமும் நடந்துள்ளன. சமீபத்தில் ஒரு ஊழியர் மீது அமிலம் வீசப்பட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தவிர சமீபத்தில் கோயில் குளத்தில் சந்தேக மான முறையில் ஒரு ஆண் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறை முறையாக விசாரிக்க வில்லை. ஹீ பத்மநாபசுவாமி கோயில் விவ காரத்தில் கேரள அரசும் மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளது.

* கோயில் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படையை நியமிக்க வேண்டும். இதுதவிர கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை கோயிலுக்குள் பாலி யல் வன்கொடுமை முயற்சி நடந் துள்ளது. இது போல் பல மோசமான சம் பவங்கள் கோயிலுக்குள் நடந்துள்ளன.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது வரும் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/78944.html#ixzz2zNykJ5Aw

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கியது


பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் - நேஷனல் புக் டிரஸ்ட் உலகப் புத்தக நாள் பெருவிழா - சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கியது

சென்னை.ஏப்.19- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், மத்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்டின் ஆதரவுடன் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள் பலர் பங்கேற்கும் உலகப் புத்தகத் திருநாள் பெருவிழா - சென்னை புத்தகச் சங்கமத்தின் மாபெரும் புத்தக கண்காட்சி நேற்று (18.4.2014) மாலை சென்னை இராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங் கியது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சர்வதேசத் தரத்தில் புத்தகக் கண்காட்சி நேர்த்தியாக அமைக்கப்பட்டு, களப் பணியாளர்களைக் கொண்டு கண்காட்சி அரங்கில் விழாக்குழுவினரால் ஒருங்கிணைப்பு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது கண்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழி காட்டும் வகையில் பதிப்பகத்தாருடன் இணைக்கும் பாலமாக தகவல் தொடர்பாளர்கள் இடைவெளி இன்றி இணைப்பிலேயே இருந்தனர்.

கோடையைக் குளிரச் செய்யும் அரங்குகள்

கோடையைக் குளிரச் செய்யும் வகையில் கண்காட்சி வளாகம், கனிந்த உள்ளங்களுடன் பார்வையாளர்களுக்கான வழிகாட்டிகளாக விழாக்குழுவினரின் அணுகுமுறை, எந்த நேரத்திலும் விழிப்பாக, திட்டமிடப்பட்ட செயல்கள்மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர்.

குறை ஒன்றும் இல்லை என்று பாடும் வகையில் அமைப்பாளர்களின் திட்டமிடல் இருந்தது. கண்காட்சிக்கு வருகைதரும் அனை வரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின் விளக்குகள், கண்காட்சி அரங்குகளில் எந்த துறைக்கான புத்தகங்கள் எங்குள்ளது என்று தேடாமல், எந்த பதிப்பகம் எந்த அரங்கில் என்கிற பட்டியல் அரங்கினுள் நுழையும்போதே பார்வையில் படும்படி அமைக்கப்பட்டு, புத்த கங்களைத் தேர்வு செய்வோருக்கு நெரிசலின்றி காற்றோட்டத்துடன் அனைத்து காட்சியகங் களுக்கும் சென்று பார்வையிட அகலமான பாதைகள், புன்னகையுடன் பணியாற்றும் குழுவினர் எந்த நேரத்திலும் உதவி செய்யும் கடமை உணர்வுடன் சுழன்று பணியாற்றும் நேர்த்தி.

பார்வையாளர்களுக்கான வசதிகள்

அவ்வப்போது பெரியவர்களுக்கும், குழந் தைகளுக்கும் ஏற்ற தேநீர், சிற்றுண்டி, நொறுக்குத் தீனிகள் என்று வளாகத்தில் அங்காடிகளும் உள்ளன. சுத்தம், சுகாதாரம், பாலியல் பேதமின்றி அனைவரின் சங்கமம் என்று அனைத்தும் முறையான பராமரிப்பும், பாதுகாப்பும் என்று குடும்பங்களின் சங்கமமாகவே சென்னை புத்தக சங்கமம் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

மக்கள் வெள்ளத்தில் தொடக்க விழா அரங்கம்

சென்னை மக்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்த சென்னை புத்தக சங்கமத் தொடக்க விழா (18-4-2014) நேற்று மாலை புத்தர் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு பறை இசையுடன் தொடங்கியது.

வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் விழா விற்கு தலைமை ஏற்க, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர் கண்காட்சி யைத் தொடங்கி வைத்தார்.

பறை இசையில் அதிர்ந்த அரங்கு

இந்த மாபெரும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியாக மகிழினி மணிமாறனின் புத்தர் கலைக்குழு வழங்கிய பறை இசைக்கு கண்காட்சி வளாகமே அதிர்ந்தது. அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. பார்வை யாளர்கள் வரிசையிலிருந்த எல்லோருடைய கால்களையும் உற்சாக மிகுதியில் தாளமிட வைத்தது. அன்பான


தமிழ் ஓவியா said...

வரவேற்புரை

பார்வையாளர்களை இசையில் கட்டிவைத்த புத்தர் பறை இசைக்குழு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வீ.அன்புராஜ் அனைவரையும் அன்புடன் வரவேற்றுப் பேசினார். அவர் வரவேற்புரையின் போது, இளைய தலைமுறையினருக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த சென்னை புத்தக சங்கமம் கடந்த ஆண்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. திரு. சிக்கந்தர் அவர்களை அணுகியதுமே வருவதற்கு ஒப்புக்கொண்டு வாய்ப்பு அளித்துள்ளார். சிக்கந்தர் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னையில் புத்தக சங்கமம் நடத்த ஊக்கப்படுத்திய அவருக்கு ஊக்கம் கொடுத்ததற்கு அவருக்கு நன்றிகூறி மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறேன். வரியியல் வல்லுநர் ச.இராஜரத்தினம் அவர்கள்தான் எங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக் கும் நிதி ஆலோசகர். கிராமங்கள்தோறும் புத்தக சந்தையை நடத்த ஊக்கப்படுத்தியவர். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இளமையிலிருந்தே எங்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர் பேராசிரியர் முனைவர் மா.நன்னன் அவர்களை வரவேற் பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். பதிப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், ஒளிவண்ணன், விழிகள் பதிப் பகம் வேணுகோபால், நன்றி கூறும் பெரிகாம் பப்ளிகேசன் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய பத்து நாட்களில் முடிந்தவரை தினமும் பங்கேற்க வருகைதந்து பயன்பெற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

அறிஞர் பெருமக்களின் குடும்ப விழா

விழாவில் முன்னணி தமிழ், ஆங்கில நூல்களின் பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்கள், நூல் ஆசிரியர்கள், வாசகர்கள் என்று பலதரப்பட்ட அறிஞர் பெருமக்கள் என்று ஏராள மானோர் பெருந்திரளாகப் பங்கேற்றனர். பெண் கள், குழந்தைகளுடன் குடும்ப விழாபோன்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். வயதில் முதியவர் களாக, எண்ணங்களால் என்றும் இளைஞர்களாக புத்தகங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்த வண்ணம் இருந்தனர். இளைஞர்கள், மாணவ, மாணவியர் பலரும் தங்களுக்கேற்ற நூல்களைத் தேடி குவிந்தனர்.

தமிழ் ஓவியா said...

படிக்கும் பழக்கம் வேண்டும்

வரியியல்வல்லுநர் ச.இராசரத்தினம் தலை மை உரையாற்றும்போது:- இங்கு பறை இசை வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த இசைக்கு தங்களையே இளைஞர்கள் ஒப்படைத்துக் கொண்டுள்ளனர். பறை இசை ஒரு புராதனக் கலையாகும். என்பிஎச் பொது சேவை செய்ய அரசு நிறுவனம் இருப்பது ஆச்சரியம் அளிக் கிறது. ஏனென்றால், அரசுப்பணி என்றாலே அப் படித்தான். நானும் அரசுப்பணியில் இருந்தவன் தான். புத்தகங்கள் வாசிப்பு கேரளாவில் அதிகம். தமிழ்நாட்டில் அதிகமில்லை. பெரியார் சுய மரியாதைப்பிரச்சார நிறுவனம் சென்னை, திருச்சி, மொபைல் புத்தக சந்தை ஆங்காங்கு விற்பனை உள்ளது. பதிப்பாளர்களை உற்சாகப்படுத்தப்பட வேண்டும். கருப்புப்பணம் குறைவாக இருக்கும் தொழில் இந்த பிரசுரத் தொழிலில்தான். நல்ல புத்தகங்களும் இருக்கின்றன, பல குப்பைகளும் இருக்கின்றன என்று நன்னன் கூறுவார். உச்சரிப்புக்கு என்றுகூட புத்தகங்கள் பல மொழி களில் உள்ளன. முதலில் படிக்கத் தொடங்க வேண்டும். படிக்கும் பழக்கத்தைத் தொடங்கி விட்டால் தாமாகவே நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்பார்கள். பல மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு வர வேண்டும். தமிழிலிருந்தும் பிற மொழிகளுக்கு செல்ல வேண்டும். பதிப் பகத்தாருக்கு புத்தகங்களை விற்பனை செய்வதற்கு இந்த புத்தக சங்கமம்மூலம் வாய்ப்பு ஏற்படும். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள வீ.அன்புராஜ் உள்ளிட்ட அனைவரின் பணிகளும் பாராட்டுக்குரியது என்று பேசினார்.

தமிழ் ஓவியா said...

தொடக்க உரை

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர் விழாத் தொடக்க உரையாற்றும் போது:- தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த நான் 30ஆண்டுகளாக டில்லிக்குப் போய்விட்டேன். தமிழில்தான் பேசப்போகிறேன். எனக்கு 9 மொழிகள் தெரியும். வயிற்றுப்பாட்டுக்கு எத்த னை மொழிகள் தெரிந்திருந்தாலும், தாய்மொழி தமிழில் பேசுவதுபோல் வருமா? என் பணி குறித்து அவருக்குத் தெரியாது. என் தம்பி பேராசிரியர். மற்றொருவர் பட்டறைவைத்து நடத்தி வருகிறார். என் தாய் சொல்வார் உள்ளூரில் விலைபோகாத சரக்கு என்பதால் வெளியே சென்றுவிட்டதாகக் கூறுவார். இன்று அன்புராஜ் செய்யக்கூடிய பணி சாதாரணமானதல்ல. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின் இதன் அருமை, பெருமை தெரியும். இந்த புத்தக சங்கமம் ஒரு விதை. இது மரமாகும். குழந்தை களுக்கு கிடைத்த வாய்ப்பு. இது அனைவருக்கும் கிட்டும்வகையில் செல்ல வேண்டும். என்பிஎச் மூலம் கடந்த 5ஆண்டுகளில் தமிழில் புத்தகங்கள் இல்லை. நான் பணிக்கு சென்றபிறகு ஏன் தமிழில் இல்லை என்று கேட்டபோது, தமிழில் என்ன இருக்கிறது என்றார்கள். நான் பணி ஏற்ற மூன்று ஆண்டுகளில் 50-க்கும் மேல் தமிழில் புத்தகங்கள் வந்துள்ளன. புத்தகத் திருவிழா கேரளாவில் அரசு இன்றி தொண்டு நிறுவனங்கள் போல் நடத்து கின்றன. புத்தகங்கள் பரவ சொசையிட்டிபோல் கூட்டுமுயற்சியில் படித்தவர்கள் முன்வந்து செய்தால் நாட்டுக்கு, மக்களுக்கு, குழந்தை களுக்கு நல்லது. அப்பா, அம்மாவுக்கு என்ன தெரியும் என்று கேட்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் புத்தக சங்கமத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்த அன்புராஜிக்கு நன்றி. இது போன்ற புத்தக சங்கமம்மூலம் பட்டி மன்றம் போல் எழுத்தாளர்களிடையே இன்டர்ஆக்ஷன் (கலந்துறவாடுதல்) வேண்டும். வணிக நோக்க மின்றி, சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு, உங்களுக்கு, நாட்டுக்கு நன்மை ஏற்படும் என்று தொடக்க உரையில் சிக்கந்தர் பேசினார்.

கண்டிப்புடன் கனிவான அறிவுரையாக சிறப்புரை

தொடக்க விழா சிறப்புப் பேருரையாக பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர். மா.நன்னன் எதைப் படிப்பது? என்கிற தலைப்பில் பல்வேறு கருத்துக்களில் செறிவாக அனைவரையும் கவரும்வண்ணம் சுவைபட விளக்கி உரையாற்றினார். அவர் உரை வருமாறு:

தமிழ் ஓவியா said...


வணக்கம் செய்வதை தப்பு என்பேன். வாழ்க எங்கோ! என்று இலக்கியத்தில் வருகிறது. வணக்கம் இல்லாமல் வாழ்த்தலாம். நமஸ்காரம் என்பது ஆரிய வழக்கம். என்னைப்போல் யாரோ அதற்கு தமிழ்ப்படுத்துவதாக எண்ணி வணக்கம் என்று ஆரம்பித்துவிட்டனர். ஒருவரை ஏன் வணங்க வேண்டும். வணக்கம் தமிழருக் குரியதன்று. பேசுபவர்களுக்கு புத்தகம் கொடுக்க வேண்டும். அண்ணா கைத்தறிக்காரன் பிழைக்க கொண்டுவந்தார். பறை இசை ஏற்கெனவே பெரியார் திடலில் நடந்திருக்கிறது. நான் இப்போதுதான் பார்த்தேன். பறை என்கிற சொல் பல பொருளில் வருகிறது. பறை என்றால் சொல் என்பது மலையாளத்தில் உயிரோடு உள்ளது. பறை இசை செய்தியைச் சொல்லுவது. பார்ப்ப னர்களின் மந்திரங்கள் என்கிற பெயரால் தமிழனுக்கு மானக்கேடு ஏற்பட்டது. உயர்திணை என்பவை மக்கள் சுட்டே! என்று தொல்காப்பியம் சொல்கிறது.பறை சாதாரண இசை இல்லை. ஆட்டமும் இருக்கு.

புத்தகக்காட்சி, சங்கமம் தமிழ் இல்லை. கூடல் என்பது வேறு. சங்கமம் என்றால் ஆறு கடலில் சங்கமிக்கிறது என்று பொருள். இங்கே புத்தகம் கடல் ஆகும். வாங்குபவர், பார்ப்பவர் ஆறு போல் உள்ளனர். புத்தகம் என்றால் அது தொடர் பில் உள்ளவர்கள். அச்சிடுபவர், எழுதுபவர் என்று எல்லோரும் வருவர். சங்கமம் ஆகுபவர் படிப்பவர். பதிப்பகம் அதற்கு உதவி செய்பவர்.

தமிழ் ஓவியா said...

எழுதுபவரிடமிருந்து சிறிதுதான் புத்தகத்திற்கு வருகிறது. நான் எழுதுகிறேன். இன்னும் பத் தாண்டுகள் எழுதுவேன். ஆறுகளாக படிப்ப வர்கள் உள்ளனர்.

வால்மீகி இராமாயணத்தில் ராமன் குடிகாரன். அப்படியே இருந்தால் குடிகாரனைப்பற்றிய நூலா என்று விட்டிருப்போம். கம்பன் தமிழருக்கு ஏற்ப மாற்றி எழுதினான். பாய்க்கு கீழ் நுழைந்தால் கோலத்தின்கீழ் நுழைபவர்களாக பதிப்பகத்தார் இருக்கிறீர்கள். காதலனுக்கும், காதலிக்கும் இடையே உள்ள உறவுபோல், நூலாசிரியருக்கும் படிப்பவருக்கும் உறவு இருக்கும். காலத்தால் செய்ய வேண்டிய பணியை நன்றாக செய்துள்ளீர்கள். படிப்பவன், எழுது பவன் இதில் யாருக்கு முக்கியத்துவம்? 1945-46இல் தூரன் வெளியிட்ட கோவையில், வெரைட்டி ஆங்கில, தமிழ் மொழியில் ஒரே பெயரில் வெளியானது. அப்போதே ஒரு கட்டுரைக்கு அய்ந்து ரூபாய் பெற்றேன். நன்கு எழுதுபவரை ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல எழுத்தாளனை விட்டுவிட்டால் குப்பைகள்தான் வந்துசேரும். படிப்பவர்கள் முதலில் உங்களைப் படியுங்கள். நீ யார்? உன் அறிவு எப்படி இருக்கு? என்ன படிக்கிறாய்? என்ன தொழில் செய்கிறாய்? என்பதிலிருந்து உனக்கானதைத் தேடிக்கொள்.

தமிழ் ஓவியா said...

புத்தகம் ஒவ்வொன்றிலும் என்ன இருக்கு என்று தெரிந்துகொள்ள ரூ.200 செலவு செய்ய வேண்டும். புத்தகத்துக்கு பதிப்புரை இருக்க வேண்டும். அதையே நூலாசிரியரை எழுத சொல்பவர்களும் இருக்கின்றனர். புத்தகத்தின் நோக்கம் ஒரு பக்கத்திற்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் புத்தகம் தேர்ந்தெடுப்பதில் முடிவு எடுக்க முடியும். இலக்கணம், அறிவியல் நூல்கள் என்று பிரித்துப் போடுங்கள். விலைப் பட்டி போடும்போது சரக்கு இருக்க வேண் டாமா? பதிப்புத் தொழிலுக்கு ஒன்றும் தெரியாதவர்கள்கூட வந்து விடுகிறார்கள். தனக்குத்தெரியாததைத் தெரிந்தவன் பேரறிஞன். ஓர் எழுத்தாளன் தனக்கு சரி என்று பட்டதை எழுத வேண்டும். படிப்பவர்கள் தாங்களே தேர்ந் தெடுத்துப் படிக்க வேண்டும். படிப்பவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு பதிப்பகத்தார் உதவிட வேண்டும். மனிதன் மனிதனாக இருப்பதற்கு யார் புத்தகம் எழுதுகிறார்? நீதிஅரசர்கள், மருத்துவர்கள், மதக் குருமார்கள், வழக்கறிஞர்கள் என்று எல்லோரும் தப்பு செய்கிறார்கள். வழக்கறிஞர் குறித்து பெரியார் குட்டிக்கதை சொல்லுவார்கள். இன்றைய மருத்துவர்களிடம் செல்லும்போது நோயே பரவாயில்லை என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். எழுதுகிறவனுக்கு சூடு, சொரணை இல்லை. விளம்பரத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எழுதிவிடுகிறான். அரசு என்ன செய்கிறது? அறிவு, ஆராய்ச்சிக்கு ஒதுக்குங்கள். பாரதிதாசன் கூறுவதுபோல் நூலைப்படி. உடலைக் காப்பாற்றிக் கொள்வது போல், மூளையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். போனஸ் வாழ்க்கை என்பார் பெரியார். சான்றோர்களைக்கண்டு அரசனே பயந்தான். அறிவை மதிக்கிற நிலை வேண்டும். மனிதனை மனிதனாக ஆக்க சமயம் உதவாது. இளைஞர்களே விழித்தெழுங்கள்! இதுபோன்ற அமைப்புகள்மூலம் மனிதனை மனிதனாக் குங்கள். முதலில் தமிழனை தமிழனாக்குங்கள்.

-இவ்வாறு முனைவர் மா.நன்னன் பேசினார். விழா நிறைவாக முடிவில் பெரிகாம் பதிப்பகம் க.ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கலந்து கொண்டோர்

சென்னை புத்தகச் சங்கமம் தொடக்க விழாவில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, திராவிடன் நலநிதி தலைவர் டி.கே.நடராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண்ணன், சென்னை புத்தகச் சங்கம் மேலாளர் ப.சீத்தாராமன், விடுதலை அச்சக மேலாளர் சரவணன், பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், மற்றும் ஏராளமான கழகத் தோழர் - தோழியர்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் இதழாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் என பெரும் திரளானோர் இப்புத்தகச் சங்கமம் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/78929.html#ixzz2zNzBqFHl

தமிழ் ஓவியா said...


மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது தொல்.திருமாவளவன்

சிதம்பரம், ஏப். 19- விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி யின் சிதம்பரம் நாடாளு மன்றத் தொகுதியின் வேட் பாளருமான திருமாவள வன் ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற் பதிந்த நல்லூர், நாயகனைப் பிரியாள், சிங்கராயபுரம், பாண்டிபஜார், அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார் பேட்டை, ஆதிச்சனூர், நத் தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள் மொழி, மற்றும் தா.பழூர் உள்ளிட்ட அய்ம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஓட்டு கேட்டார். சிலால் என்னுமிடத்தில் பிரச்சா ரத்தை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதா வது:

இந்தத் தேர்தல் மதவா தத்திற்கும், ஜனநாயகத்திற் கும் இடையே நடக்கின்ற போர். தி.மு.க. தலைவர் கலைஞர் மதவாதத்திலி ருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார் மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது, ஆட்சி சிக்கிக் கொள்ளக்கூடாது.

நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமா னால் சமூகநீதியை காப் பாற்ற வேண்டுமானால், இட ஒதுக்கீட்டுக் கொள் கையை காப்பாற்ற வேண் டுமானால், இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூ கத்தைப் பாதுகாக்க வேண் டுமானால் மதவாதிகளிட மிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற அக் கறை தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்ட தலை வர் கலைஞர் அவர்கள் அடுத்த பிரதமரை தீர்மா னிக்க வேண்டும். அவர் அடுத்த பிரதமரை தீர்மா னிக்க வேண்டுமானால் அவருடைய கரத்தை வலுப் படுத்த வேண்டும். அவரு டைய கரத்தை வலுப்படுத் துவதற்கு நீங்கள் மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தலைவர் கலைஞர் மட் டும்தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்கு கிறார்.

- இவ்வாறு தொல். திருமாவளவன் உரையாற் றினார்.

Read more: http://viduthalai.in/page-5/78940.html#ixzz2zNzvcXN2

தமிழ் ஓவியா said...


சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக் கண்காட்சி
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்குப் பாராட்டு

10 ஆண்டுகளில் இதன் அருமை தெரியப் போகிறது! நேஷனல் புக் டிரஸ்ட் இயக்குநர் சிக்கந்தர் கருத்து

செய்தியாளர்களிடையே உரையாற்றினார் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர். உடன் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், வீ.அன்புராஜ் ஆகியோர் உள்ளனர் (சென்னை, 18.4.2014).

சென்னை, ஏப்.19- சென்னை புத்தகச் சங்கமத்தின் தொடக்க விழா சென்னை- இராயப் பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் நேற்று (18.4.2014) மாலை தொடங் கியது. கண்காட்சியை நேஷ னல் புக் டிரஸ்ட் ஆப் இந் தியா இயக்குநர் எம்.ஏ. சிக்கந்தர் துவக்கி வைத்தார்.

சென்னை புத்தகச் சங்க மத்தின் தொடக்க விழா விற்குமுன் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு நடைபெற் றது. இதில் நேசனல் என்.பி.டி. இந்தியா இயக்கு நர் எம்.என் சிக்கந்தர் மற் றும் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில், வீ.அன் புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பின்போது எம்.ஏ.சிக்கந்தர் கூறியதா வது:

நேசனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. இதன் முக்கிய நோக் கமே இந்தியா முழுவதும் புத்தகம் வாசிக்கும் ஆர் வத்தைப் பெருக்குவதும், படிப்பறிவை ஊக்குவிப் பது ஆகும்.

இந்தியா முழுவதும் பல சமூகத் தொண்டு நிறு வனம் மற்றும் பதிப்பகங் களின் துணையுடன் புத்த கக் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். இந்தியா மட்டுமின்றி நமது கலாச்சார அடை யாளமான புத்தகங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பீஜிங் ஃப்ரங்புரூட் மற்றும் பிற நாடுகளில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சிகளில் பங்குபெற்றும் இந்தியா வின் சிறந்த பதிப்பகம் மற்றும் தலை சிறந்த எழுத் தாளர்களின் நூல்களை உலக அரங்கில் அறிமுகப் படுத்தி வைக்கும் பணி யையும் செய்துவருகிறது.

நல்ல வரவேற்பு

இந்தியாவைப் பொறுத்தவரை பெருநக ரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களில்கூட எங்களின் புத்தகக் கண்காட்சி நடை பெற்றுள்ளது. மீன் வாசம் மாத்திரமே பழக்கமாக கொண்ட இராமநாதபுரத் திலும் புத்தகங்களைக் கொண்டு சேர்த்தோம்.

தமிழ் ஓவியா said...


கன் னியாகுமரி மற்றும் தமிழ கத்தில் பல சிற்றூர்களில் எங்களின் புத்தகக் கண்காட் சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாசிக்கும் ஆர்வம் எல்லா மக்களிடமும் உண்டு!

பொதுவாக கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் மாத்திரமே புத்தகக் கண் காட்சிகளில் அதிகம் மக்கள் வருவார்கள் என்ற ஒரு மனப்பான்மையை மாற்றி இந்தியாவெங்கும் உள்ள நகரங்களில் எங்களின் புத் தகக் கண்காட்சி அதிக வர வேற்பை பெற்றுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் மற்றும் அஸ்ஸாமில் எங் கள் புத்தகக் கண்காட்சி பெரிய அளவில் நட்த்தப் பட்டு. அந்த மாநில மக் களின் வரவேற்பைப் பெற் றது! வாசிக்கும் ஆர்வம் எல்லா மக்களிடமும் உண்டு என்பதை நாங்கள் கண்டுக் கொண்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அய்அய்எம் பெங்களூரில் நடந்த ஒரு 10 நாள் கருத்தரங்களில் கலந்து கொள்ள அயல்நாடுகளைச் சேர்ந்த பலர் வந்திருந்த னர்.

அதில் நானும் ஒரு வனாக கலந்துகொண்டேன். அயல்நாட்டில் இருந்து வந்த அனைவரிடமும் வாசிக்கும் பழக்கம் அதீத மாக இருந்ததைக் கண்டு வியப்புற்றேன.

அவுட்சோர்சிங் முறையில்...

தற்போது இந்தியா பதிப்பக துறையில் சீனா வுடன் போட்டிப் போட் டுக் கொண்டு இருக்கிறது. சீனாவில் ஆங்கிலம் அறிவு குறைவாக உள்ளது - இந் தியாவிற்கு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. பெங் களூர் மற்றும் சென்னை யில் பல்வேறு அயல்நாட் டுப் பதிப்பகத்தார்கள் அவுட்சோர்சிங் முறையில் தங்களது பதிப்புகளை கொடுத்து வருகின்றன்ர்.

தமிழ் ஓவியா said...

இதனால் உலக அளவில் பதிப்பகத்துறையில் இந் தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக் கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் பெருகும் ஒரு துறையாக வும் மாறிவருகிறது.

சிறப்புச் சான்றிதழ் வகுப்பு

இந்த ஆண்டு புத்தகச் சங்கம நிகழ்வில் பதிப்ப கம் மற்றும் எழுத்துத் துறை குறித்த சிறப்புச் சான்றிதழ் வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்தப் பயிற்சி வகுப் பில் கலந்துகொள்ள 500 ரூபாய் கட்டணமாக வசூ லிக்கப்படும். திங்கள் முதல் தொடங்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் எழுத்தாளர்கள், நன்கு அனுபவம் உள்ள பதிப்பகத்தார் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பக வியாபார தொழில் நுட்ப வல்லுநர்கள் மற் றும் பலர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிரவுள்ளனர். இதில் இளைஞர்களும், பதிப்பக வணிகத்தில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன்.

கடந்தாண்டு பெரிதும் வரவேற்பு கிடைத்தது

கடந்த ஆண்டு பெரி யார் சுயமரியாதை நிறுவ னத்தில் இருந்து வீ.அன்பு ராஜ் அவர்கள் சென்னை யில் கோடை விடுமுறை காலத்தில் புத்தகக் கண் காட்சி ஒன்றை நடத்தப் போவது குறித்தும், அதற்கு புக் டிரஸ்ட் ஆப் இந்தியா ஒத்துழைப்பு தருமாறும் கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் என்ற சிறப்பான பெயருடன் 10 நாள்கள் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை நகரத்தில் மட் டுமல்ல அருகில் உள்ள மாவட்டங்களில் இருந் தும் பெரிதும் வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து இந்த ஆண்டு மேலும் சிறப்பூட்டும் வகையில் சென்னையின் மய்யப் பகுதியான ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்த முடிவு செய்யப் பட்டு இன்று (18.04.2014) தொடக்கவிழா நடத்தப் படுகிறது,

தங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்வார்கள்!

இந்த ஆண்டு 200 நூல் அரங்குகளுடன் பிரம் மாண்டமான ஒரு புத்தகக் கண்காட்சியாக நடை பெறவிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியின் தாக்கம் இன்னும் 10 ஆண்டு களில் அதீதமான மக்களி டம் வாசிக்கும் பழக்கத் தினை கொண்டு செல்லும் பணியை பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறு வனம் செய்துவருகிறது.

இதன் பணி மேலும் சிறக்க வரும் ஆண்டுகளில் மேலும் பெரிய அளவில் புத்தகக் கண்காட்சியை நடத்தி பலரும் பயன்பெறுமாறு தங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்வார்கள் என நேசனல் புக் டிஸ்ட் இயக் குநர் சிக்கந்தர் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/78950.html#ixzz2zO08jg7Q

தமிழ் ஓவியா said...

பகிஷ்காரத்தின் இரகசியமும் தலைவர்களின் யோக்கியதையும்


சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம், அடிவிழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும்,

அதனால் சில பார்ப்பனர்கள் ஊரைவிட்டே ஓடவேண்டியதாய் நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எ.சீனிவாசய்யங்கார் முதலிய வர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள்.

அதாவது பகிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளு கின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது. என்றும் இந்தப் பட்டணத்திலேயே இருந்து பகிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரைவிட்டுப் போய்விடுவதா? என்று கோபத்துடன் கேட்டார்கள்.

அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும் சர்க்கார் உத்திரவில்லாமல் தெருவில் தலைகாட்டுவதில்லை என்றும் மற்ற பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததுடன் சர்க்காருக்கும் போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவித்துவிட்டுப் பொதுமக்களை ஏமாற்ற வேண்டி சைமன் கமிஷன் நடக்காத ஏதாவது ஒரு தெருவில் சில குறிப்பிட்ட நபர்களுடன் ஊர்வலம் செல்ல மாத்திரம் அனுமதி கேட்டுக் கொண்டார்கள்.

போலீஸ் கமிஷனர் சைமன் கமிஷன் வரும் வீதியில் வேண்டுமானாலும் நீங்கள் ஊர்வலம் போகலாம்; நான் பந்தோபது கொடுக்கின்றேன் என்று சொல்லியும் கண்டிப்பாய்க் கமிஷன் போகாத வீதியிலேயே ஊர்வலம் போக உத்திரவு பெற்றதோடு அதற்கும் பந்தோபஸ்தும் பெற்றுக் கொண்டார்கள். இதை அறிந்த ஆந்திர தேசத்துப் பார்ப்பனர்கள் போலீஸ் கமிஷனரோடு சென்னை பார்ப்பனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்து தாங்கள் நேரில் பகிஷ்காரம் நடத்துவதால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

சர்க்கார் அவர்களைப் பிடித்து அரடு செய்தவுடன் அவர்களும் தங்களை வெளியில்விட்டால் உடனே ஊருக்குப் போய் விடுகின்றோம் என்கின்றதாக வாக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும், சென்னை பார்ப்பனர்களும் ஆந்திரப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளுக்கு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய சேதிகளிலேயே அறியக் கிடக்கின்றது.

பகிஷ்காரத்தின் யோக்கியதை இப்படி இருக்க வேறு பல பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் பேரால் தாராளமாய் சைமன் கமிஷனிடம் சென்று தங்கள் சமூக நன்மைக்குத் தேவையான காரியங்களை எடுத்துச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை அடுத்த வாரம் வெளிப்படுத்துவோம்.

பொதுவாகச் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தங்கள் சங்கதியை அவர்களிடம் எடுத்துச் சொல்லாதவர்கள் யார் என்பதும், சைமன் கமிஷனர்கள் உத்தேசித்து வந்த காரியங்களில் எது தடைபட்டுப்போய் விட்டது என்பதும் முக்கியமாக யோசித்து பார்க்க வேண்டியதோடு காங்கிரஸ் மகாசபை என்பதின் யோக்கியதை எப்படிப்பட்டது, அதை மக்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் நமது நாட்டில் ஏற்பட்ட அந்த நிமிஷம் முதலே இக்கூச்சல் வடநாட்டில் மகமதியர்களுக்கு விரோதமாக அவர்களுடைய வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ உரிமையை பிடுங்கிக் கொள்ளவும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் சிறப்பாக தீண்டப்படாதார் என்று கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைத் தலையெடுக்க வொட்டாமல், செய்வதற்காகவும், செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்று நாம் எழுதியும் பேசியும் வந்ததோடு, மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கண்டிப்பாய்த் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் அவசியம் கமிஷன் முன் சொல்லியே ஆக வேண்டுமென்று வற்புறுத்தியும் வந்தோம்.

அந்தப்படியே விஷயங்கள் நடந்ததோடு முக்கியமாய்த் தீண்டப்படாதவர்கள் எனப்பட்டவர்கள் இமயம் முதல் குமரிவரையில் ஒரே மாதிரியாகத் தங்கள் நிலைமையையும், தேவைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது குறித்தும் அவற்றைக் கமிஷனர் கனவான்கள் நன்றாய் உணர்ந்து வேண்டியது செய்வ தாய் வாக்குறுதி கொடுத்திருப்பதைக் குறித்தும் நாம் அளவில்லா மகிழ்ச்சி அடை கின்றோம். இந்தக் கமிஷன் அறிக்கையின் மீது வழங்கப்படும் சீர்திருத்தம் என்பது எத்தன்மையதுவாக இருப்பினும் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை.

ஏனெனில் அச்சீர்திருத்தம் என்பதில் இப்போது தெரிவிக்கப்பட்ட குறைகள் நீங்கும் படியான மார்க்கங்கள் இல்லாதிருக்குமானால் இந்தச் சர்க்காரின் கண்களில் கோலை விட்டு ஆட்டக்கூடிய நிலைமையைச் சாதாரணமாக வெகு சுலபத்தில் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடிய சவுகரியங்கள் தாராளமாக கிடைத்துவிடும், என்கின்ற உறுதிதான் - ஆதலால் சைமன் கமிஷன் விஷயத்தில் நாம் நமது கடமையைச் செய்து விட்டோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78956.html#ixzz2zO0QlTkg

தமிழ் ஓவியா said...


நம்பிக்கையில்லாத் தீர்மானம்


தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிடென்ட் திருவாளர் ராவ்பகதூர் சீத்தாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறைவேற்றப் பட்டுவிட்டதாக தெரிய வருகின்றது.

திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர். ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதை பிரச்சாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவை பாதுகாத்து வந்தவர்.

கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கியும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்குகூட வொட்டாமல் செய்தவர். முயற்சி செய்தவர்களையும், பொறுப்பற்றவர்கள் என்று சொன்னவர்.

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்கர் கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலது கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.

அய்யோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் கண்மூடி கண் திறப்பதற்குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடிவிட்டது. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப்போனாலும் போச்சு, என்கின்ற பெரியோர் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது.

ஆனாலும் ஒன்றும் முழுகிப் போகவில்லை, குறைந்தபட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானமே அனுகூலமான பயனைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீத்தாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில தலதாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78955.html#ixzz2zO0resKP

தமிழ் ஓவியா said...


இனியாவது புத்தி வருமா? இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்


சுதேசமித்திரன் இந்து பத்திரிகைகளின் பத்திராதிபரும் தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிர காரியதரிசியாயிருந்தவரும் இந்தியாவின் 33-கோடி பொதுமக்களுக்கு சுயராஜியம் வாங்கிக் கொடுக்க உயிர் விட்டுக் கொண்டு பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ.ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம்!

அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்பு வாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்டவிரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்திரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம்,

இதற்குப் பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. சண்முகம்) தவிர மற்ற எல்லோரும் பார்ப்பனர்களானதால் யாரும் ஒன்றும் பேசாமல் கேள்விக்கு அனுகூலமாயிருந்தார்களாம்.

அரசாங்க மெம்பர் பதில் சொல்லுகையில் இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும் சென்னை அரசாங்கத்தை விவரம் கேட்டுப் பதில் சொல்லுவதாயும் சொல்லிக் கொண்டிருக்கும் போது திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் எழுந்து அதைப்பற்றி சர்க்கார் மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்றும் மேலும் அநேகருக்குத் திருப்தி என்றும் சொன்னாராம் உடனே திரு.எ.ரங்கசாமி அய்யங்கார் இது உண்மையல்ல என்றாராம்.

உடனே திரு.சண்முகம் எழுந்து சென்னை சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் கிளப்பி அங்கத்தினர்கள் எல்லோராலும் வகுப்புவாரி உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டும் அநேக பொதுக்கூட்டங்களில் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் ஆதரித்தும் பாராட்டியும் தீர்மானங்களும் செய்யப்பட்டும் இருக்கின்றது என்று சொன்னாராம். இந்த சமயம் அரசாங்க மெம்பரும் சட்டசபை மெம்பர்களும் அய்யங்கார் முகத்தைப் பார்த்தார்களாம்.

அய்யங்கார் முகம் பூமியை பார்த்ததாம். உடனே அரசாங்க மெம்பர் எழுந்து நல்ல சமயத்தில் தனக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்ததற்காக திரு. சண்முகத்திற்கு வந்தனம் செலுத்து வதாய்ச் சொன்னாராம். இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் கைத்தட்டினார்களாம்.

இவற்றை அசோசியட்பிரஸ், பிரீபிரஸ் பிரதிநிதியும் பார்த்து கொண்டே இருந்தும் கூட இதை எந்தப் பத்திரிகைக்கும் தெரியப்படுத்தவேயில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கம் பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்புவதில் எவ்வளவு அயோக்கியத் தனம் செய்கின்றது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

அன்றியும் இந்திய சட்டசபை தானங்களை பெரிதும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இருப்பதால் அவர்களால் நமக்கு எவ்வளவு துரோகங்கள் நடைபெறுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இனியாவது இந்திய சட்டசபை ஓட்டர்களுக்கு புத்திவருமா?

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 31-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO17d2oR

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடச் சமுதாயத்திற்கு மானம், அறிவு, மனிதத் தன்மை என்பவை இல்லாமல் போக - அடியோடு இல்லாமல் போக ஆரியர்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் அந்த வெற்றியை அழித்து நாம் மனிதத் தன்மை பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்றே சொல்லுவோம். இதில் இறங்குவது, மிக்க யோசனை செய்து செய்யவேண்டிய காரியம் என்றும் சொல்லுவோம்.

பார்ப்பனருக்கு ஆயுதம் பஞ்சாங்கமும், தர்ப்பைப் புல்லும்தான். நமக்கு ஆயுதம் நம்முள் ஒற்றுமையும் நமது மான அபிமானமுந்தான்.

நம் இருவர் நிலைமையைப் பற்றிச் சிந்தித்தோமானால் ஒரு பார்ப்பனராவது பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் தன்மையிலிருந்து ஒரு சிறிதும் தவறி நடந்து கொள்ள மாட்டார்கள்; விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலோர், தன்தன் சுயநலத்திற்கு இரண்டையும் விலை கூறி விற்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO1GI1KN

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் திட்டம் தொடங்கப்பட்டது எந்த ஆட்சியில்? - கலைஞர் விளக்கம்


சென்னை, ஏப்.19- ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான் என்று உண்மைக்கு மாறாகக் கூறும் முதல்வர் அவர்களுக்கு மறுப்புக் கூறி, இது திமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப் பட்டது என்று ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். விவரம் வருமாறு:-

கேள்வி :- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப் பட்டது என்று முதலமைச்சர் ஜெயலலிதா தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது, ஏதாவது ஒரு கற்பனைக் கதையை அவிழ்த்து விட்டு வருவதும், அதற்கு நாம் பல்வேறு ஆதாரங்களுடன் மறுப்புத் தெரிவித்ததும், அந்தப் பிரச்சினையை அப்படியே விட்டு விட்டு வேறொரு பிரச்சினை பற்றிப் பொய் கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது என்று சொல்லி யிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா; எந்தத் தேதியில் அந்தத் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்கள் என்று அறிவிக்கத் தயாரா?

1986ஆம் ஆண்டு 120 கோடி ரூபாய்ச் செலவில் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போது திட்ட அறிக்கை தயாரிக் கப்பட்டது என்றும், எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவினை அடுத்து, இந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது என்றும் ஜெயலலிதா தர்மபுரியில் பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர். மறைவினை அடுத்து, இவர்தானே தமிழகத்தின் முதலமைச் சராகப் பொறுப் பேற்றார். அந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது என்றால், அதற்குக் காரணம் இவர்தானே?

1994ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும், மத்திய அரசின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது என்றும் ஜெயலலிதா பேசி யிருக்கிறார். எப்படியோ, ஏதோ ஒரு காரணத்தால், அவரு டைய ஆட்சிக் காலத்தில் அதனை நிறைவேற்றவில்லை என்பது உண்மையாகிறதா இல்லையா?

மேலும் ஜெயலலிதாவின் பேச்சில், 1998இல் மத்திய நீர்வளத் துறை அமைச்சகச் செயலாளர் முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அரசால் ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். 1998இல் நடைபெற்ற ஆட்சி யாருடையது? தி.மு.கழக ஆட்சிதானே 1998இல் நடைபெற்றது. ஜெயலலிதாவின் பேச்சின் மூலமாகவே தி.மு.கழக ஆட்சியில்தான் கர்நாடக அரசு ஒப்புதல் தந்தது என்பதும் நிரூபணம் ஆகிறதல்லவா?

தொடர்ந்து ஜெயலலிதா பேசும்போது, மீண்டும் அவர் முதலமைச்சரான போது 2003இல் இந்தத் திட்டத்தை எடுத்துக் கொண்டதாகவும், 18-8-2005 அன்று இத்திட்டத்திற்கான கருத்துருவை மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் சொல்லி யிருக்கிறார். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆனது 2001ஆம் ஆண்டு.

2001ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா இந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவருடைய பேச்சிலிருந்தே தெளிவாகிறதா இல்லையா? சரி, 2003ஆம் ஆண்டு திட்டத்தை எடுத்துக் கொண்ட ஜெயலலிதா, 18-8-2005 வரை இத்திட்டத் திற்கான கருத்துருவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தாமதம் செய்திருக்கிறார் என்ற உண்மை அவரது பேச்சி லேயிருந்தே வெளிப்படுகிறதா இல்லையா? 2006 ஆம் ஆண்டு கழக அரசு அமைந்த பிறகு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல் படுத்திட மத்திய அரசு மூலம் முயற்சி செய்தது.

11.8.2006 அன்று தமிழகச் சட்டப்பேரவை யில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தினை ஒட்டி காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக் கப்பட்டது. 27.1.2007 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றியபொழுது, ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவி கோரப் பட்டுள்ளது.

இந்த வாரம்தான் ஜப்பான் நாட்டு நிபுணர்கள் தர்மபுரி மாவட்டம் சென்று திட்ட ஆய்வை மேற் கொண்டுள்ளார்கள். மய்ய அரசு இந்தத் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதியுதவியைப் பெற மிகுந்த முன்னுரிமை அளித்து ஜப்பான் அரசுக்குத் தெரிவித்துள்ளது.

ஜப்பான் அரசுக்குத் தெரிவித்துள்ள இந்தச் செய்தி, ஜப்பான் நாட்டு நிதியுதவி கிடைக்க வாய்ப்புகளை அதிகமாக்கி இருக்கிறது. எனினும், ஜப்பான் நிதியுதவி ஏதேனும் ஒரு காரணத்தால் கிடைக்காவிட்டால் அரசு வேறு நிதி ஆதாரம் பெற்று இத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, அந்தத் துறை யின் அமைச்சராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகள் குழுவுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் செயல் இயக்குநர் திரு. டிசியோகுசி அவர்களை 6.2.2008 அன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் விளைவாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய 1330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்று வதற்கு நிதியுதவி அளிப்பதாக ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா 26.2.2008 அன்று கழக ஆட்சியில் நடைபெற்றது.

இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு ஜெயலலிதா தர்மபுரியில் போய், அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப் பட்டது என்று சொன்னால், அந்தத் தொகுதியிலே உள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-8/78954.html#ixzz2zO1Rci4N

தமிழ் ஓவியா said...


தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் தமிழர் தலைவரின் அய்யாவின் அடிச்சுவட்டில் (நான்காம் பாகம்)


- முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்

வரலாற்றை வரைவோர் சார்ந்திருப் பது இருவகை ஆதாரங்களை. ஒன்று பிரைமரி சோர்சஸ் என்னும் அடிப்படை ஆதாரங்கள் மற்றொன்று செகண்டரி சோர்சஸ் என்னும் இரண்டாம் நிலை ஆதாரங்கள்.

முதல்நிலை ஆதாரங்கள் ஆவணங்கள் வாழ்க்கைக் குறிப்புகள். இரண்டாம் நிலை ஆதாரங்கள் செய்தித்தாள்கள், நூல்கள் முதலியன.

ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் இருண்ட காலம் என்று ஒரு காலம் இருக் கும். சரியான முறையான ஆதாரங்கள் இல்லையெனில் எளிதாக அவற்றை இருண்டகாலம் என்பர் அல்லது மக்கள் வாழ்வில் ஆபத்து, தொல்லை, துயர் விளைவித்த காலம் என்றாலும் அதனை இருண்டகாலம் என்று சரியாகவே - உத் தேசமாகக் கூட அல்ல - கற்பனையாகக் கூட அல்ல குறிப்பிடுவர்.

இந்திய வரலாற்றில் தலைமை அமைச்சராக விளங்கிய இந்திராகாந்தி அம்மையார் போற்றத்தகு, பாராட்டத்தகு சாதனைகளாக வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பு எனப்புரட்சித் திட்டங்களைச் செய்தாலும் சுற்றி நில்லாதே போ பகையே என்று பாரதி முழங்கிய வழியில் பகையான அண்டை நாடுகளுக்கும் பக்கத்து நாடுகளுக்கும் பாடம், புகட்டியதாலும், வறுமையை ஒழித்திட கரீபி ஹடாவோ (வறுமையே ஓடிப்போ என்று முயன்றதினாலும் பெருமை பெற்றாலும் அவருடைய ஆட்சியின் கரும்புள்ளி. ஙிறீணீநீளீ ஷிஜீஷீ நெருக்கடிநிலை அறிவிப்பு, அதற்கு மேற் கொண்ட முஸ்தீபுகள், அதன் விளைவாகத் திராவிட மாநிலத்தில் ஆரியக்கூத்து ஆடவிட்டது அவருடைய ஆட்சிக் காலத்தின் இருண்ட காலம் தான்.

அக்கால அநியாயங்களை அங்கொன் றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஏடுகள் எடுத்துக் காட்டியிருந்தாலும் நாம் முதலில் குறிப்பிட்டது போல் அதற்கான சான்று, ஆதாரம் எல்லாம் இரண்டாம் நிலையினை எப்படி நம்புவது? என்ற வினாவிற்கு இடமளிப்பவை.
ஆனால் நெருக்கடி நெருப்பாற்றில் நீந்தி வெளிவந்து இன்றும் வாழும் கி.வீரமணி அவர்கள் போன்றோர் தரும் ஆதாரங்கள் தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல் அடிபட்டவருக்குத்தான் அதன் வலி தெரியும். அப்பாவியான ஆசிரியர் எவ்விதக் குற்றமும், பிழையும், தவறும், அரசியல் மோசடியும் செய்யாமல் அவதிக்கு உள்ளான கொடுமையை அவர் மட்டுமே கூற இயலும்.

அதை மட்டுமல்லாது - எண்பதாண் டுக் கால வாழ்வில் 70 ஆண்டுகளை இயக்கத்தோடு கழித்த மனிதர் உண்டு என்றால் ஆசிரியர் வீரமணி அவர்களை யும், 92 ஆண்டுகால வாழ்வில் இந்திப் பெண்ணே ஓடிப்போ என்று கொடி பிடித்த காலம் முதல் இன்று வரை அரசி யல் களமே தன் வாழ்வுத் தளமாகக் கொண்ட தலைவர் கலைஞரையும் சுட்டிக்காட்ட இயலும்.

பெரியார், அண்ணாவின் அடிச்சுவட் டில் கலைஞர் நடை போட்டது நெஞ்சுக்கு நீதியாய் வரலாறு கூறுகிறது.

அதுபோல ஆசிரியர் அவர்களின் அய்யாவின் அடிச்சுவட்டில் அய்யாவின் அடிச்சுவட்டில் மட்டுமல்லாது, அன்னை மணியம்மையாரின் செல்லப்பிள்ளை யாய், பெற்றெடுக்காவிட்டாலும் வளர்ப் புத் தாயாய் வழி நடத்திய வரலாற்றையும் கூறுகிறது.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்னும் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் அடக்கத் தோடு அதன் ஆசிரியரே குறிப்பிடும் அய்யாவின் அடிச்சுவட்டில் நடந்து வரும் ஓர் எளிய பெரியார் தொண்டனின், பெரியார் தம் வாழ்நாள் மாணவன் ஒருவனின் பல்வேறு அலுவல்களின் தொகுப்பு பதிவு. ஒப்பனைகளோ கற் பனைகளோ இடம் பெறாத உண்மை நிகழ்வுகள் என்பதால் தான் தொடக்கத் திலேயே இது இரண்டாம் நிலை ஆதாரம் அன்று அடிப்படை ஆதாரம் என்று குறிப்பிட்டோம்.

திராவிடர் இயக்கத் தலைவரான பெரியாரின் வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள் உண்டு. அரசியல் வாழ்க்கைக்கு வருவதற்கு முன் வாழ்ந்த ஒளிவு மறைவு இல்லாத தனி வாழ்க்கை.

பெரியார் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி அரசியல் வாழ்க்கை. அது அப்பழுக்கில்லாத ஒளிவு மறைவில்லாத உயர்ந்த ஒழுக்க வாழ்க்கை. இதில் எந்தத் தலைவனையும் பெரியாருக்கு ஒப்பிட்டுச் சொல்ல இயலாத தனிமனித ஒழுக்க வாழ்க்கை.


தமிழ் ஓவியா said...

ஆசிரியரை, இயக்கமும், தலைமையும், கொள்கைக் குடும்பமும், கொள்கைத் தாலாட்டுப் பாடியே வளரச் செய்தமை யால், அய்யாவின் வழியில் நாணயம், ஒழுக்கம், நேர்மை இவைகளையே அணி கலன்களாக அணிந்துள்ளவர் என்பதால் எவரும் விரல் நீட்டிப்பழுது சொல்ல முடியாத நாணயம், ஒழுக்கம் மிக்கத் தலைவர் அவர்.

அய்யாவின் அடிச்சுவட்டில் நான்காம் பகுதியில் என்ன இருக்கிறது அதை ஆசிரியரே தெளிவு படக்கூறுகிறார். அய்யாவின் கொள்கை தத்துவங்களை மூச்சுக் காற்றாகக் கொண்ட எனக்கு பெற்ற தாயின் அன்பு கிட்டாத குழந்தைப் பருவக்குறைபாட்டை மாணவப்பருவத் தில் நிறைவு செய்து, பெற்றதாயினும் அதிகமாக சாலப்பரிந்து என்னை தந்தை செதுக்கினார் என்றால், இந்தத் தாய்தான் அன்னை மணியம்மையார் தான் என்னைச் செதுக்கி மேலும் இயக்கத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்குப் பயன்படும் வண்ணம் என்னை உருவாக்கினார். இயக்கமும், அன்பையும், ஆற்றலையும் தரும் வகை யில் வாய்ப்புகள் அமையக் காரணமானார்.

1973 முதல் 1978 வரை உள்ள கால கட்டம் திராவிடர் கழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம்.

தந்தை பெரியாரின் மறைவு என்பது ஆசிரியர் குறிப்பிட்டது போன்று இம யத்தை இழந்தது போன்ற ஈடுசெய்ய முடியாத நிலையில் அன்னை மணியம் மையார் அந்த இடத்தில் ஏற்பட்ட வெறு மையைத் திராவிடர் கழகக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத் திற்கே ஏற்படாமல் தலைமை ஏற்று இயக்கத்தின் தனித்தன்மையைக் குன்ற விடாமல் குன்றின் மேலிட்ட விளக்காய் இயக்கத்தைப் பல்வேறு சோதனைகள் ஏற்பட்ட நிலையில் எப்படிக் கட்டிக் காப்பாற்றினார் என்று வரலாறு கூறும் கால கட்டம் தான் 1973 முதல் 1978 வரையிலான காலம்.

இந்தியத்துணைக்கண்ட வரலாற்றில் மட்டுமல்லாது, உலக வரலாற்றிலேயே, எத்தனையோ இயக்கங்களுக்கும், நாடு களுக்கும் பெண்டிர் தலைமையேற்று இருக்கின்றனர். ஆனால் ஒரு புரட்சிகர மான சுயமரியாதை இயக்கத்திற்கு அதன் நிறுவனத்தலைவர் மறைந்த பிறகு அடுத்து ஆற்றலுடன் அதற்கு ஏற்பட்ட அறை கூவல்களைச் சந்தித்து, சிறிதும் தொய்வுபடாமல் போராட்டக் களங் களையும் வகுத்துச் சரித்திரச் சாதனை படைத்தவர், நிலையான புகழுக்கும், பெருமைக்கும் உரியவர் என்பதோடு எளிமையின் இலக்கணமாய் வாழ்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் ஒருவரே தான் அவர் அன்னை மணியம்மையார். அய்யா காலத்திலேயே அன்னை மணியம்மை யார் எப்படிப்பட்ட பேருள்ளத்திற்குப் பண்பாட்டு உள்ளத்திற்கு, பக்குவப்பட்ட மனநிலைக்குச் சொந்தக்காரர் என்பதை மெய்ப்பித்து இருக்கிறார். அதற்கான நிகழ்வுகளில் ஒன்றுதான் 1967 இல் திமுகழகம் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது நடைபெற்ற நிகழ்வு என்பதை ஆசிரியரே சுட்டிக்காட்டி யிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

திருச்சியிலே திராவிட முன்னனேற்றக் கழகத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா வின் தலைமையிலே வெற்றி பெற்று முதல் நாள் மாலை வரை தங்களை இகழ்ந்துரைத்த தந்தை பெரியாரிடம் தாங்கள் பெற்ற அரசைக் காணிக்கையாக ஒப்படைக்கக் காத்திருக்கிறார்கள், வந்து சந்திக்கிறார்கள். மணப்பெண் போல் வெட்கித் தலைகுனிந்து இருக்கிறார் பெரி யார் அவரே அதனைக் குறிப்பிட்டவாறு.

ஆனால் 1949 இல் கழகம் பிளவு பட்டபோது எத்தனை, எத்தனை ஏச் சுக்கள், வசவு மொழிகள், தலைவர்கள் பேசாவிட்டாலும் இரண்டாம் மூன்றாம் நிலையிலிருந்தவர்கள் சந்து முனைகளில் மேடைகளில் இழித்துக்கூறியவை, பழித் துக் கூறியவை சாதாரணப் பெண்மணி எவராலும் எப்பொழுதும் மறக்க இய லாதவை, மன்னிக்க இயலாதவை என்று தான் கூறுவர். அன்னையாரோ பேருள்ளத் தோடு அதைச் சிறிது கூட முகத்தில் காட்டாதவாறு மட்டுமல்லாது மனத்தின் எந்த ஓரத்திலும் இல்லாதவாறு துடைத்து விட்டு, வந்தவர்களை உபசரித்தாரே.

அதைவிடத் தனிமையிலே நள்ளிரவில் அண்ணாவை அலுவல் நிமித்தமாக சந்திக்கச் சென்ற ஆசிரியர், உடன் சென்ற வர்களிடம் அண்ணாவே மனந்திறந்து பெரியாரை 95 ஆண்டு வரை வாழ வைத்தவர் என்று பாராட்டினாரே அவையெல்லாம் அய்யா இருக்கும்போது நடைபெற்றவை.

அன்னை மணியம்மையார், பெண்பால ருக்குள்ள ஆற்றல், தலைமைப்பண்பு, ஆண் வர்க்கத்திற்குச் சற்றும் குறைந்த தில்லை எனும் அறிவார்ந்த உண்மையை தன் துவளாத தொண்டறத்தால் துணிவால், தெளிவால் உலகுக்கே நிரூபித்து அய்யா எனும் மேருமலை சாய்ந்த பின்னர் தந்தை பெரியாருக்குத் தன் இளமையைத் துறந்து பெரியாரைக் காக்க தம் வாழ்வையே தந்த அன்னையார், பெரியார் ஒப்படைத்துச் சென்ற இயக்கத்துக்காக உழைத்து, அய்யாவின் வாரிசுகள், உரிமையால் கிடைத்த சொத்துக்களையும் மக்களுக் காகத் தொண்டால் பணிகளுக்காக விட்டுச்சென்ற ஒப்பில்லாத வீரமங்கை அவரின் அய்ந்தாண்டு காலத் தலைமை, நிகழ்வுகள் அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் நான்கினால் வெளிச்சத்துக்கு வந்து ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை.

அதனால் தான் ஆசிரியர் தம் முன்னு ரையில் அவர் காலத்து நிகழ்வுகள் தான் இத்தொகுப்பு அவை இயக்கச் சாதனை களை பற்றிய அரிய காலத்தை வென்ற வரலாற்றுச் சுவடுகளும் ஆகும் என்கிறார்.

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் நான்கினைக் கையிலெடுப்போர் பசி நோக் கார், கண்துஞ்சார், படித்து முடிக்கையில் மட்டுமல்லாது படிக்கையில் பல இடங்களில் கண்கள் தாமாகப் பனிக்கக் காண்பர். இந்நூலைச் சர்க்கரைக்கட்டி, வெல்லக்கட்டி என்று கூறமுடியாது.

ஏனென்றால் வேதனைச் சுவடுகள் ஆங்காங்கே காணப்பெறுவது நம் மனதைப் பிசையும். சில இடங்களில் அன்னையாரின் துணிவு, இயக்கத்தை நடத்திச் சென்ற பாங்கு பெருமை சேர்க்கும்.

268 பக்கங்களும் வரலாறு கூறும் வாழ்வியல் கூறும் பக்கங்கள் அய்யா மறைந்து விட்டார் என்று கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நாள்களில் 74 ஆம் ஆண்டு பிறக்கிறது. திரும்பி வருகிறேன் என்று 4-மிமி - 74 இல் அன்னை யாரின் அறிக்கை வந்தபோது துடைத்துக் கொண்ட நம் கண்ணீர் மீண்டும் அவசர நிலைப்பிரகடனம் நடந்தது என்ன என்று பக்கம் 139 முதல் 166 வரை எடுத்துச் சொல்கையில் பொங்கி வழிகிறது. அதோடு நம் கண்ணீர் திவலைகள் மறைந்து விடவில்லை.

தமிழ் ஓவியா said...

அய்யாவைப் போல் நீண்ட காலம் வாழ்ந்து வீரமங்கையாய், வெற்றி மங் கையாய், வைர மங்கையாய் அய்யாவின் பணி முடிப்போம் என்ற நம் அன்னையார் 1978 மார்ச் 16 ஆம் நாள் பிற்பகல் 1.05 மணிக்குத் துயரச் செய்தியாய் மீண்டும் நம்மை அழ வைக்கிறார்.

பெரியார் மறைவுக்குப் பின் அவர் போட்டுத்தந்த பாதையில், விட்டுச் சென்ற கழகத்தை எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் கட்டிக்காத்த அன்னை, அய்யாவுடனேயே நினைவகத்தில் நிழ லாய் மறைந்தார்கள். ஆசிரியரின் எழுத்துப் பால் தலைப்புகளில் இனிக்கிறது. ஒவ்வொரு பக்கத்தையும் தொட்டுத் தொட்டு விட்டு விடாமல் தொடர்ந்து புரட்டச் செய்கிறது.

ஒவ்வொரு தலைப்பும் உள் வரலாற் றுக்குக் கட்டியம் கூறுகிறது. அம்மா தலைவரானார் என்று தொடங்குகிறது. அதன் பிறகு அன்னையார் மறைவு சென்னைக் கடற்கரையில் வரலாறு படைத்தது. அதனைச் சென்னை கடற் கரை படைத்த சரித்திரம் கூறுகிறது. 29 தலைப்புகள், 260 பக்கம் ஓர் அய்ந்தாண்டு கால வரலாறு.

திராவிடர் கழகத்தின் வரலாறாக இல்லாமல் கி.வீரமணி அவர்களின் வரலாறாக இல்லாமல் தமிழகத்தின் நவீன கால வரலாற்றின் ஒரு கால கட்டத்தைக் காண்கிறோம்.

1957 இல் அய்யா இருந்தபோது, சிறைப்பட்ட வேளையில் - இராமசாமி, வெள்ளைச்சாமி என்ற இரு தியாகச் செம்மல்களின் உடலைப் பெற சிலிர்ந்த பெண் சிங்கத்தை, இராவண லீலா நடத்திய போது காண்கிறோம்.

இங்கே வீரம் மட்டும் இருக்க வில்லை. விவேகமும் இருந்தது என்று காட்டுகிறார். இராவண லீலா நடை பெற்றபோது, நடைபெற்றதோ கலைஞர் ஆட்சி. காவலர்களை அனுப்பி பக்குவ மாக நிலைமையைக் கையாண்டார் கலைஞர்.

இராவணலீலா பெற்ற பரிசு ஆறு மாத கடுங்காவல் தண்டனை. அதை உடைத்து வெளியேறிய பெருமையும், துணிவும் இந்நூலைப் படித்து அறிய வேண் டியவை.

இந்திரா காந்தி அம்மையாருக்குக் கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தின் போது கைத்தடி கொண்டு அடிக்கவந்த காவலர் மீது காட்டிய பொறுமை எல்லாம் படித்து அறிய வேண்டியவை.

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் நான்கு என்றும் பேசப்படப்போகிற நூல் என்பதால் நூலாசிரியர் தமிழர் தலை வருக்கு வாழ்த்துக்கள்.

Read more: http://viduthalai.in/page2/78910.html#ixzz2zO1vkg4a

தமிழ் ஓவியா said...


பிராண வாயுவை மட்டும் உணவாக உட்கொள்ளும் உயிர்!டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹன்சிராய் என்பவர் விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார். வடக்கு பசிபிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி இந்த ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒரு வகை பாக்டீரியா உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாக்டீரியாக்கள் 8 கோடியே 60 இலட்சம் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுக்குப் பதிலாக ஆக்சிஜனை மட்டும் சுவாசித்து இவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் மூலம் அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பாக்டீரியா பற்றி மேலும் விரிவான ஆய்வு நடந்து வருவதாக ஹன்சிராய் கூறியுள்ளார். இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்துக்கு கீழே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page2/78911.html#ixzz2zO2HSP5i

தமிழ் ஓவியா said...


தகவல் அறியும் உரிமை 7 ஆண்டுகளுக்குப் பின் தகவல்


மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் கை ரிக்ஷாக்கள் உள்ளன. கை ரிக்ஷாக்கள் கொல்கத்தாவில் எத்தனை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சபீர் அகமது என்பவர் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அன்று கொல்கத்தா மாநகராட்சியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுள்ளார். பொதுவாக தகவல்பெறும் சட்டம் 2005ன்கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றுஅச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கைரிக்ஷாத் தொழிலாளிகளை அடை யாளம் கண்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்காக, அவர்களின் எண் ணிக்கை குறித்து மாநகராட்சியிடம் கேட்கப்பட்டதாக சபீர் அகமது தெரி வித்துள்ளார்.

ஏழு ஆண்டுகள் கழித்து சபீர் அகமது மற்றும் கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையத்தின் சார்பில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கான விசாரணைக்கு அழைப்பு வந்தபோது, ஏழாண்டுகளுக்குப் பின்னர் வந்த அழைப்பால் சபீர் அகமது மிகவும் ஆச்சரியப்பட்டார். கொல்கத்தா மாநாகராட்சி அலு வலர்கள் 2005 ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று உள்ளபடி கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளிகள் 870பேர் உள்ளதாகவும், அவர்கள் மறுவாழ்வுக்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் ஏழாண்டுகளுக்குப் பின்னர் பதில் அளித்துள்ளனர்.

மேற்கு வங்கத்திற்கான தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையர் சுஜித் சர்க்கார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் தகவல்களுடன் 15 நாட்களில் வருமாறு கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட் டார்.

மனுதாரரான சபீர் அகமது கூறும் போது, மாநகராட்சி அலுவலர்களிடமி ருந்து குறித்த நேரத்தில் பதில் கிடைத் திருந்தால், ஏழைத் தொழிலாளிகள் நலனுக்குப் பயன்பட்டிருக்கும். தாமதிக் கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது போல், தாமதிக்கப்பட்ட தகவல் மறுக்கப் பட்ட தகவலாகவே உள்ளது என்றார். கைரிக்ஷா முறை மனிதத்தன்மை இல்லாததால் அவற்றை உடனடியாக அகற்ற அரசு முடிவு எடுத்துள்ளது என்று 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் அப்போதைய முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்திருந்தார். கொல்கத்தா ஹக்கினி-கேரியேஜ் சட்டம் 1919இல் கை ரிக்ஷா முறையை நீக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறி மசோதா சட்டசபையில் அறிமுகப்படுத் தப்பட்டது.

இந்த அறிவிப்பு ரிக்ஷா தொழி லாளிகளின் மறுவாழ்வு குறித்து கூறி உள்ளது என்றும் மனுதாரராகிய சபீர் அகமது கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page4/78914.html#ixzz2zO2xraxi

தமிழ் ஓவியா said...


மதம் பிடிக்க வேண்டாமே! .


அலைபேசியில் குறுஞ்செய்திமூலம் மதத்துக்கு எதிரான கருத்தை வெளி யிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட இணையர்மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, விசாரணையின் முடிவில் பாகிஸ் தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் கோஜ்ரா நகரில் ஷப்கத் இம்மானுவேல் என்பவர், அவருடைய மனைவி ஷாகுப்தா கவுசர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று இவருடைய அலைபேசி யிலிருந்து இசுலாத்தில் புனிதராகக் கூறப்படும் முகமதுவை விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பி, இசுலாமிய மதத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக அவர்மீது புகார் எழுப்பப்பட்டது. மவுல்வி முகம்மத் உசேன் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கணவனுடன் அவர் மனைவியையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 40முதல் 50 வயதுடைய இருவரும் வறுமையில் உள்ளவர்கள். வழக்கை நடத்தவே வாய்ப்பற்றவர்கள். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய பொரு ளான அலைபேசியும் முன்னதாகவே தொலைந்து போனதாகவும் தெரிவித் துள்ளனர். தோபா தேக்சிங் நகரில் உள்ள நீதி மன்றம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்தது. தற்போது நீதிபதி மியான் ஆமிர் ஹபீப் விசாரணை செய்து முடிவில் தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில் அவ் விருவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தரப்பு வழக் குரைஞர் நதீம் ஹசன் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி உள்ளார்.

இதேபோல், 2009-இல் இதே குஜ்ரா பகுதியில் குர்ரானை இழிவுபடுத்தியதாக ஏற்பட்ட வதந்தியில் ஒரு கும்பல் வன் முறையில் ஈடுபட்டு கிறித்துவர்கள் வாழ்கின்ற அப்பகுதியில் சுமார் 77 வீடுகள் தீக்கிரையாகின. சுமார் ஏழு பேர் அக் கலவரத்தில் உயிரிழந்தனர். அதேபோல் லாகூரில் ஜோசப் காலனியில் தனிப்பட்ட வர்களிடையே, பேச்சுவாக்கில் பேசிய பேச்சுகூட புகாராக பதிவாகி சவான் மாசிக் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாகிஸ் தானில் அங்குள்ள சிறுபான் மையினரை தனிப்பட்ட வகையிலான தகராறுகளுக்குக் கூட இந்த சட்டத்தை துணையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்கப் படும் கொடுமை நிகழ்கிறது.

180 மில்லியன் மக்கட்தொகையில் 97விழுக்காட்டினர் இசுலாமியராக உள் ளனர். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் மூலம்கூட சிறுபான்மையினர் பாதிக்கப் படுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page4/78916.html#ixzz2zO3L0l9W

தமிழ் ஓவியா said...


பகவத்சிங் நினைவைப் போற்ற நாத்திகர்கள் அணி வகுப்பு


விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாத்திகர்கள் குவிந் தனர். 250-க்கும் மேற்பட்ட நாத்திகர்கள் மும்பையில் பகத்சிங் நினைவுநாளில் திரண்டனர். அந்நிகழ்வில், மத சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டித்து ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். கடந்த ஆகஸ்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவரும், ஆதிக்க சக்திகளை எதிர்த்து வந்தவரு மாகிய டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல்துறை உண்மை தகவல்களின்பேரில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தின் புறநகர் கலினா வளாகத்தில் நடைபெற்ற நிகழ் வின் அமைப்பாளர் சஞ்சய் சவார்க்கார் கூறும்போது, எல்லோரும் ஒன்று சேர்வதன் நோக்கம் என்னவென்றால், ஒரே சிந்தனையுள்ளவர்கள் ஓர் அமைப்பாக இணைந்து, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதே. அதே போல், நாத்திகராக இருப்பதில் நீதிக்குப் புறம்பாக ஏதுமில்லை என்கிற செய்தியை சமுதாயத்துக்கு தெரிவிப்பதுமாகும். மத சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை உரு வாகும்போது, பரந்த சிந்தனையாளர்கள் ஒன்று சேர்வது முக்கியமான தேவை யாகும். நான் ஏன் நாத்திகன் என்கிற பகத் சிங் கட்டுரை அனைவரும் அறிந்ததே. அவருடைய நினைவுக்காகவே இந்நிகழ்வு இங்கே நடைபெறுகிறது என்றார்.

எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வல்லுநருமாகிய அச்யுத் கோட்புலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் (Federation of Rationalist’s Association of India)
நரேந்திர நாயக் மற்றும் பலர் பங்கேற்று உரை ஆற்றினர்.

நரேந்திர நாயக் பேசும்போது, கடவுளிடம் உங்களுக்கு பயம் உண்டா? என்று என்னிடம் கேட்பார்கள். நான் எப்போதுமே சொல்வேன்: கடவுளின் முகவர்களால்தான் அச்சம் ஏற்படும் என்பேன். அதேபோல் ஏராளமான நாத்திகர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்கள் பெருமிதத்துடன் வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.

எழுத்தாளர் பவார் பேசும்போது மிகுந்த கவலையுடன் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல் துறை போதுமான அக்கறையுடன் முன் னெடுத்துச் செல்லவில்லை. விசாரணையில் வேகம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

- (டி.என்.ஏ. ஆங்கில நாளிதழ் 24-3-2014)

Read more: http://viduthalai.in/page5/78917.html#ixzz2zO3fVEZk

தமிழ் ஓவியா said...


புதிய எழுத்தாளர்களை ஏன் தேடுகிறீர்கள்?


நூல்களை பற்றி விவாதிக்க விரும்பு கிறீர்களா? நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நாடகங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஒலிவடிவில் உள்ள நூல்கள் என்று பல உள்ளன. அனைத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும் என்பதில்லை. அமர்ந்து விவாதியுங்கள்.

புதிய எழுத்தாளர்களின் நூல்களைத் தேடியபோது, நூல் விரும்பிகள் அல்லது நண்பர்கள் குழு மூலம் நூல்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றபின்னர்தான் விருப் பமான நல்ல நூல்களை தெரிவுசெய்து வாசிக்கவும், தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளவும் முடிந்தது.

பலநேரங்களில், ஓர் எழுத்தாளரின் நூல் தொகுப்பை கால வரிசையாக படித்திட முயற்சி செய்துவந்துள்ளேன். புதிய எழுத் தாளர்களின் நூல்களைப்போலவே பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்களையும் படிப்பதில் மகிழ்வதோடு, என்னை வளர்த்துக்கொள்ளவும் முடிந்தது.

நூல் விற்பனையகத்துக்கு செல்லும் போதும், நூலகத்துக்குச் செல்லும்போதும் அங்கு பணிபுரிபவர்கள் எடுத்துக்கூறும் புதிய நூல்களை அதன் அறைகளிலிருந்து எடுத்துக்கொள்வேன். புதிய வரவுகளாக என் கவனத்தை ஈர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து கொள்வேன். அதேபோல், நூல் விற்பனை நிலையமானாலும், நூலகமானா லும் விற்பனைக்கு என்று உள்ளவற்றை கவனத்தில் கொள்வேன்.

நூல்களின் பட்டியலைப் பெற்று கற்பனைக் காவியங்களையும், அறிவியல், கற்பனை மற்றும் மர்மக் கதைகளை தெரிவு செய்து அதிலும் புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பெற முயற்சி செய்வேன்.

சிலர் கூறுவதுபோல், இணையத்தில் உள்ள நூல்களின் குறிப்புகளை, சில பக்கங்களை முதலில் படித்துப்பார்த்து விட்டு பிறகு இணைய தளம்மூலமே பெற்றுக் கொள்வேன்.

பார்னே & நோபிள் இணையதளம் நூல்களின் முன்னோட்ட வாசிப்புக்கு சில பக்கங்களை அளிக்கிறது. அதை பல நேரங்களில் மறந்துவிடுகிறேன்.

சில நேரங்களில் விமர்சனங்களைப் படிப்பதன் மூலமும், கவரும் அட்டைகள் மூலமூம், ஒரு நூலில் மற்ற நூல்குறித்து குறிப்பிடப்படுவதைப் பார்த்தும், பார்லே & நோபிள் நூல்களில் ஒரே நேரத்தில் அல்லது ஒரே தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் குறித்தும் நூல்கள் பெறுவதில் என்னை இணைத்துக் கொள்கிறேன். கடந்த வாரம் கூறியதுபோல், நல்ல படங்களிலிருந்தும், சில நேரங்களில் நூல்களைப்பற்றி அறிந்துகொள்வேன். பிஹைண்ட் தி லைன்ஸ் (Behind the Lines) என்கிற படத்தைப் பார்த்தபோது டாக்டர் ரிவர்ஸ், சீக்ஃப்ரெய்ட் சாசூன் குறித்து அறிந்துகொள்ள பட் பார்க்கர் எழுதிய ரீஜெனரேஷன் (Regeneration) என்கிற நூலைப்படிக்க முடிவு செய்தேன். அந் நூலைப் படித்த பின்னர் மீண்டும் அப் படத்தை பார்த்தபோதுதான் அது எப் பேர்ப்பட்ட படம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பலரும் நல்ல வாசிப்பாளர் பட்டியலில் உள்ளனர். விருப்பமான எழுத்தாளரின் அடுத்த நூலுக்காகக் காத்திருக்கும்போது சிறிதே சலிப்பும் ஏற்படும். அப்போது, புதிய எழுத்தாளருக்கான தேவை ஏற்படுகிறது. சில நூல்கள் மூன்று தலைப்புகளில் ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நூல்களை இடைவெளிவிடாமல் படித்து விடுவேன். நூல் தேடுதலில் முதலில் தேடிய நூலைக்காட்டிலும், அடுத்த நூல் நன்றாக இருப்பின் அந்நூலை எடுத்துக்கொள்வேன். அதன்பிறகும், நூலைத் தேடுவதில் மகிழ்வே அடைவேன். அதுவும் பல நாட்டு நூல்களைத் தேடுவதில் பெரிதும் மகிழ்ந் துள்ளேன்.

நீங்கள் எப்படி? நூலகத்தில் ஒரு நல்ல நூலைக்கண்டால் அதை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்களா? நீங்கள் படித்த நூல்களைக் காட்டிலும், எல்லோர் பாராட்டையும் பெற்றநூல்களைக்காட்டிலும் உங்களாலும் எழுதமுடியும் என்று முயற்சி செய்துள்ளீர்களா? முயற்சி செய்யுங்கள்.

-டெய்லிகோஸ்.காம் இணையத்தில் சி.எஃப்.கே.

Read more: http://viduthalai.in/page5/78918.html#ixzz2zO3s7v5f

தமிழ் ஓவியா said...

சிந்தனைத்திரட்டு

திராவிட மாநாடு ஏன்?

தோழர்களே!

சிறிது காலம் வரையில் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு, தமிழர் மாநாடு
சுயமரியாதை மாநாடு

என்பதாகப் பெருங்கூட்டங்கள் கூட்டி நமது கருத்துகளைச் சொல்லி வந்தோம்.
ஆனால் இப்போது திராவிட (இளை ஞர்) மாநாடு என்பதாக இம்மாநாட்டைக் கூட்டி இருக்கிறோம்.

ஏன்?

நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாய் இருந்தும், சமுதாயத்தில் இழிந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம்.

இதை மாற்ற வேண்டிய முயற்சிகள் பல நடந்து வந்தும், நம் நிலையிலே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை.

காரணமென்ன என்று யோசித்தோம். முன்னேற்றமடைந்துள்ள நாட்டாரைப் பார்த்தோம்.
அதன்படி எந்த நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண் டுமானால் அந்த மக்களுக்கு அல்லது அந்தச் சமுதாயத்தவருக்கு பொது உணர்ச் சியையும், ஒற்றுமை மனப்பான்மை யையும் உண்டாக்கக்கூடிய லட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது.

அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது,

இந்து இந்தியர் இந்தியா என்று நமக்குப் புரியாத சொற்களை, நமக்கு சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக் கொண்டு வந்தோமே தவிர உண்மையான ஒற்றுமை ஏற்படத்தக்க (குடிஅரசு தொகுதி 31 - பக்கம் 192)

நம் நாட்டிற்கு கேடு ஆசிரியர்கள்

நம் மக்களை வளர விடாமல் செய்தவர்கள் ஆசிரியர்கள். அவர்களை அப்படிச் செய்தது அரசாங்கமாகும்.

படித்தவனா என்று ஒருவனைக் கேட் கிறோமென்றால், அவன் அறிவாளியா என்பது தான் பொருள்.

நம்நாட்டில் படிப்பிற்கும், அறிவிற் கும் சம்பந்தமில்லாத வகையில் படிப்பு முறையானது வகுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அறிவாளியாக இருந்தால் அல்லவா மாணவர்களை அறிவாளி களாக்குவார்கள்.

மூட நம்பிக்கைக்காரர்களை ஆசிரியர்களாக்குவதால் அவர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற மாணவர்கள் முட்டாள்களாகின்றார்கள். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பகுத்தறிவுவாதி யாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

- (பெரியார் களஞ்சியம் தொகுதி 35 - பக்கம் 103)

நாம் மடையர்களாகத்தான் இருந்திருப்போம்

நம் நாட்டில் நம் மக்களின் அறிவு வளர்ச்சியை தடை செய்வதற்கென்றே ஒரு ஜாதி இருக்கிறது. அதுதான் பார்ப்பன ஜாதி. அந்த ஜாதி நம்மைச் சூத்திரனாக்கி, மடையனாக்கி வைத்திருக்கின்றது. இழி மகனாக வைத்திருக்கின்றது. தர்ம சாஸ்திரம் சொல்வதெல்லாம் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக்கூடாது என்ப தாகும். இந்தச் சாஸ்திரப்படிதான் நம் அரசர்கள் என்பவர்கள் யாவரும் நமக்கு அறிவு கொடுக்காமல் ஆட்சி செய்தார்கள்.

தமிழ் ஓவியா said...


வெள்ளைக்காரன் இந்நாட்டில் சில காலம் ஆட்சி செய்ய நேர்ந்ததன் காரண மாகத்தான் நம்மில் ஒரு சிலரை படித்தவர் களாக்கினான். அறிவுடையவர்களாக்கினான்.
அவன் ஆட்சி மட்டும் இல்லாதிருந் தால், இன்றைக்கும் நாம் மடையர் களாகத்தான் இருந்திருப்போம். (பெரியார் களஞ்சியம் தொகுதி 35 - பக்கம் 97)

பகுத்தறிவாளன் தர்மம் செய்யமாட்டானா?

தர்மம் செய்வது என்பது மதவாதி களினால் - ஆஸ்திகர்களினால் மட்டுமே இயலும். கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் தர்மம் செய்ய மாட்டார்கள் என்று ஒரு போலி வாதத்தை நாம் அடிக்கடி சந்தித்து வருகிறோம்.

கோயில் காரியம் என்றாலே தர்மம் என்றுதான் அதற்கு மறுபெயர். தர்மகர்த்தா என்னும் சொல் இதைத்தானே குறிக்கிறது.

இந்து மதம் மற்றும் அறக்கட்டளை என்றுதானே கோயில்களை நிர்வகிக்கும் இலாகாவுக்கே பெயர் சூட்டியிருக்கிறது நமது அரசு. தர்ம சத்திரம் என்ற அமைப் புகள் கோயில்களைச் சுற்றி காளான் போல முளைத்திருப்பது நமக்கு நன்கு தெரிந்த விசயமாயிற்றே.

தர்மம் செய்யக்கூடிய இடம் - பிச்சைக் காரர்களைக் காணக்கூடிய இடம் கோயில் வாசல் தானே! இந்து மதம் மட் டும் தான் இப்படி தர்மத்தையும், ஈகையை யும், ஒப்புரவையும் தனக்கே உரிய லட்சணங் களாக வரித்துக் கொள் கிறது என்பதில்லை. எல்லா மதங்களுமே இப் படித்தான் தர்மத்தைத் தங்களது ஏகபோக விசயமாகப் பெருமை பாராட்டுகின்றன.

இந்தப் பொய் வரலாற்றை உடைத்து நொறுக்கி கடவுள் நம்பிக்கையற்றவர் களும் கூட தர்மம் செய்வதில் தன்னிகர் இல்லாதவர்களாகத் திகழ முடியும் என்று சாதித்துக் காட்டிய பெருமை ஆண்ட்ரூ கார்னகி என்பவரையே சாரும். (உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் தொகுதி 1 - பக்கம் 209)

மாணவர்களும் பொதுநலத் தொண்டும்

தோழர்களே!

இப்போது நம் நாட்டில் எங்கு பார்த் தாலும் மாணவர் மாநாடு கூட்டப்பட்டு வருகிறது. அப்படிக் கூடுவதில் ஆரியர்கள் முயற்சியில் ஆரியர்கள் ஆதிக்கத்தில், ஆரிய மாணவர்களால் கூட்டப்படும் மாணவர் மாநாடு என்பதாகச் சிலவும், ஆரிய முயற்சியே, ஆரிய ஆதிக்கமோ, ஆரிய மாணவர் கலப்போ சிறிதும் இல்லாமல் திராவிட மாணவர்களாலேயே கூட்டப்படுவன பலவுமாக இருந்து வருவதைக் காண்கின்றோம்.
ஆரிய ஆதிக்க, ஆரிய மாணவர் பெரி தும் கொண்ட முதல் கூறப்பட்ட மாநாடு களின் நடவடிக்கைகள் தேசியம் என்கின்ற ஆரியச் சூழ்ச்சியை அடிப் படையாய் வைத்து இந்நாட்டில் என்றும் திராவிடர் கள் மீது ஆரிய ஆதிக்கமும், சுரண்டலும் நிலைத்து வருவதற்கே பாதுகாப்பாக நடந்து வந்ததையும் - வருவதையும் காண்கின்றோம்.

மேலும் அந்த ஆரிய ஆதிக்க மாணவர் மாநாட்டில் திராவிட மாணவர்கள் சிலர் கலந்திருந்தாலும் அவர்களுக்கு (அத் திராவிட மாணவர்களுக்கு) தங்கள் (திராவிட) நாட்டைப் பற்றியோ, தங்கள் (திராவிட) இனத்தைப் பற்றியோ கவலை இல்லாததும், அவைகளைப்பற்றி அம்மா நாட்டில் சிறிதும் பேசக்கூடாத நிபந்த னைக்குள் அடக்கியதும் ஆன ஆரியக்கூலி, ஆரிய அடிவருடி, திராவிடத் தன்மான மற்ற தன்மை கொண்ட யோக்கியதைதான் யோக்யதாம்சமாக இருந்து வருகிறது.

பின்னவர்களுக்கு என்றாலோ நாட்டுப் பற்றும், திராவிட இனப்பற்றும், தன்மான மும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட யோக்கியதாம்சம் இருந்து வருகிறது. (குடிஅரசு தொகுதி 33 - பக்கம் 73)

ஏற்பட்ட கெடுதி

அதாவது திராவிடர் என்ற நினை வில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால் தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழைகளாய் வாழ்க்கை யிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட வர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம்.
இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம் நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம்.
நாம் நம்மைத் திராவிடர் என்று கருதி னால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன?
தன்மை என்ன?
நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும்.
ஏன் எனில் நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறிய இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில் ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல் லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு எந்த நாட்டிலும் இல்லை.
இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர் வாழ்வாயும் மற்றொரு சமுதாயம் அதாவது நாம் திராவிடர் பிறவி இழி மக்களாயும்...
(குடிஅரசு தொகுதி 34 - பக்கம் 19)
க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page7/78922.html#ixzz2zO4Wve3U

தமிழ் ஓவியா said...


இப்படிக்கு வாசிப்பது தினமலர்! அய்ந்து மணி நேரம் வெயிலில் வாடிய குழந்தைகள்

ஆலந்தூர் கோர்ட் அருகே, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெ. பிரச்சாரம் செய்வதாக, அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மாலை 5 மணிக்கு தான் வந்தார். மதியம் ஒரு மணி முதல், வேன்களில் அழைத்து வரப்பட்ட பெண்கள், மேடையருகே கொளுத்தும் வெயிலில், கைக்குழந்தைகளுடன் காத்திருந்தார்கள்.

வெயிலின் தாக்கத்தால் பாலுக்காகவும், குடி நீருக்காகவும் கைக்குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. பெண்கள், கேரள செண்டை மேளத்தையும், கொக்கலிக் கட்டை மனிதர்களையும், ஜெ., புகழ், நடனத்தையும் காட்டி குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வெறுப்படைந்த குழந்தைகள் வீட்டுக்கு செல்ல அடம் பிடித்தன, இருக்கும் இடத்தில் இருந்து திரும்ப முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். வயதானவர்கள், மிகவும் சோர்வடைந்தனர். பிற்பகல் 3 மணி முதல், காவல் துறையினர் கூட்டம் கூட்டமாக, சாலையில் நின்று கொண் டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbCOvmk

தமிழ் ஓவியா said...

முதல்வர் வருகையால் சாலைகளுக்கு விமோசனம்

முதல்வர் ஜெயலலிதா, இன்று (20ஆம் தேதி) வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய் கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் வரை பல ஆண்டுகளாக, வாகன ஒட்டிகளை அச்சுறுத்திய பல்லாங்குழிகளாக இருந்த சாலைகளில், தார் கலவை கொட்டி, ஒட்டு வேலை பகல், இரவாக நடக்கிறது.

அதேபோல், எரியாத மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. எம்.பி.எம்., சாலை, மூர்த்திங்கர் சாலை, மணலி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்கள் சீர் செய் யப்பட்டன. இதுவரை போக்குவரத்து காவல் துறையினரின் கண்ணுக்கு தெரியாமல் இருந்த, எம்.கே.பி.நகர் மேற்கு நிழற்சாலை உள்ளிட்ட பல சாலைகளில், வேகத்தடைகள் எல்லாம் வாகன ஓட்டி களுக்கு தெரியும் வகையில் வண்ணம் பூசப்பட்டது. சாலை யோரம் குவிந்திருந்த மணற் குவியல் அகற்றப்பட்டது.

(தினமலர் 20.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbKewKu

தமிழ் ஓவியா said...


இப்பொழுதேஆரம்பித்து விட்டனர் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும்!

மதவெறி நஞ்சைக் கக்குகிறார் பிஜேபி வேட்பாளர் கூட்டணிக் கட்சிகள் கொட்டாவி விடுகின்றனவா?

தியோகர், ஏப்.20- பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தி யாவில் இடமில்லை. அவர் கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அக்கட்சி வேட்பாளர் கிரி ராஜ் சிங் கூறினார். அவரது இப்பேச்சு அரசியல் வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு கட்சிக ளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், ஜார்க் கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பீஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது நரேந்திர மோடியை பிரதமராகவிடா மல் தடுப்பவர்கள், பாகிஸ் தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர் சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இட மில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும் என்றார்.

இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற் றிருந்தனர். கிரிராஜின் கருத் துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடியின் தீவிர ஆதர வாளரான கிரிராஜ் சிங், பீஹாரின் நவாடா தொகு தியில் தற்போது போட்டி யிடுகிறார். இவர், 2005 முதல் 2013 வரை பீஹார் மாநில அமைச்சராக பதவி வகித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78979.html#ixzz2zTbRPbPY

தமிழ் ஓவியா said...


திருவனந்தபுரம் கோயிலில் கொள்ளையோ கொள்ளை!


திருவனந்தபுரம், ஏப்.20- பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தப்பட்டதாக வும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமை யாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரை யிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப் புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.

இந்நிலையில், கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை தெரிவிக்க, கோபால கிருஷ்ணன் என் பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் கடந்த 2 மாதங்களாக கோயிலில் ஆய்வு நடத்தி, சில தினங் களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக் கல் செய்தார்.

அதில், மன்னர் குடும்பத்தினரும் கோயில் ஊழியர்களும் சேர்ந்து கோயில் பொக் கிஷங்களை கடத்தி இருக் கலாம் என பரபரப்பு குற் றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தி சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமையாளர் களுக்கு இது கொடுக்கப் பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட் டுள்ள விவரம்: பத்மநாப சுவாமி கோயில் நகைகளை பாலிஷ் செய்வதற்காக தஞ் சாவூரை சேர்ந்த சில நகைக்கடைகளுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். பல கட்டங்களாக இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட் டனர்.

அப்போது கோயிலில் இருந்து கிலோ கணக்கில் நகைகளை மணலில் கலந்து இவர்கள் கடத்திச் சென்றுள் ளனர். பின்னர், இவர்கள் தவறை உணர்ந்தும் பயந் தும் சிறிது நகைகளை உண் டியலில் போட்டுள்ளனர். நகை பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜு என்பவருக்கு மட்டும் 3 கிலோ எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

கோயிலில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என் பதை கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்த பொக்கிஷம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தவிர கோயில் உண்டியலில் ஏராளமான அளவில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ளன.

இவற்றை யும் பலர் சுருட்டியுள்ள னர். ரகசிய அறையில் இருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாகவும் நகைகளை கடத்திச் சென் றிருக்கலாம். பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பின் னரும் ஏராளமான அளவில் நகைகள் கடத்தப்பட்டுள்ளன.

திருவிதாங்கூர் மன்ன ராக இருந்த மார்த்தாண்ட வர்மா, கோயில் ஊழியர்கள் பலருக்கு நகைகளை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு கோயில் ஊழியர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக் கும் கிலோ கணக்கில் தங்கம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் நேற்று (19.04.2014) அளித்த பேட்டி:கோயிலில் இருந்து நகைகள் கடத்தப்படுவது குறித்து எனக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான புகார்கள் வந் தன. இது குறித்து அப் போதே கேரள அரசிடம் தெரிவித்தேன். ஆனால், மன்னர் குடும்பத்தினருக்கு பயந்து கேரள அரசு விசா ரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தினமும் கோயிலுக்கு வந்து விட்டு செல்லும்போது பிரசாதம் கொண்டு செல்லும் பாயசம் வாளியில் நகைகள் கடத்திச் செல்வதாக நான் அப் போதே கூறினேன். அப் போது என்னை கேலி செய்தனர். இப்போது அது உண்மை என தெரிந்து விட்டது. இந்த கடத்தலுக்கு மன்னர் குடும்பத்தினரும், கேரள அரசும்தான் பொறுப் பேற்க வேண்டும். இவ் வாறு அச்சுதானந்தன் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78977.html#ixzz2zTbbsGMn

தமிழ் ஓவியா said...


அந்தப் பாட்டாளிச் சொந்தங்கள் யார்? பட்டியலிடுங்கள் பார்க்கலாம்


கேள்வி: வன்னியர்கள் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிறீர்கள். அப்புறம் அந்நியர்கள் ஓட்டு எப்படி வன்னியருக்கு விழும்?

பதில்: இது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி படையாச்சியார் இருந்தபோது சொல் லப்பட்டது. இப்போது யாரும் அப்படி சொல்வது இல்லை. பாமக என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் பாடுபடும் பாட்டாளிச் சொந்தங்களின் கட்சி. இதில் எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியில் பொதுச் செய லாளரே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

- பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இது (ஜூனியர் விகடன் 20.4.2014)

இந்தக் கூற்று உண்மையா? இப்பொழுது பா.ம.க சார்பில் எட்டு பேர் நிறுத்தப்பட்டுள்ளார்களே - இதில் சிதம்பரம் ரிசர்வ் தொகுதியைத் தவிர மீதியுள்ள 7 பேர்களில் வன்னியர்களைத் தவிர வேறு யாராவது உண்டா? இதற்கு முன்பும்கூட வன்னியர்களைத் தவிர வேறு எந்த பாட்டாளிச் சொந்தங்கள் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளனர்?

பட்டியலிருந்தால் வெளியிடட்டுமே, பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTbkbenS

தமிழ் ஓவியா said...

பால்ய விவாகமாம்

பா.ஜ.க.வுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் இப்பொழுதெல்லாம் வைகோ அவர்கள்தான்.

மோடியின் திருமணம் பிரச்சினையாகி விட்ட நிலையில் அவர் ஓடிவந்து மோடியைக் காப்பாற்றப் பார்க்கிறார் மோடிக்கு நடந்தது பால்ய விவாகமாம். அப்படியா? அது சட்டப்படி குற்றமாயிற்றே - இப்பொழுது யாரை உள்ளே தள்ளலாம்?

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTc3LNQJ

தமிழ் ஓவியா said...


மோடிக்கு மட்டும்தான் ஆதரவு பாஜக.,வுக்கு எதிர்ப்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ்தாக்கரே பேட்டி


மும்பை.ஏப்.20- டைம்ஸ் நவ் தனியார்த் தொலைக்காட்சிக்கு மகா ராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அளித்த பேட்டியில் மோடியை மட் டுமே ஆதரிப்பதாகவும், பாஜக, ராஜ்நாத் சிங்கை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியின் செய்தியாளர் அர்னாப் கோஸ் வாமி பாஜகவையும் அதன் தலைவர் ராஜ்நாத்சிங்கையும் எதிர்க்கும் அதேநேரத்தில் மோடியை ஆதரிப்பது ஏன்? என்று தொடர்ச்சியாகக் கேள் விகளை எழுப்பினார்.

அதற் குப் பதிலளித்த ராஜ்தாக்கரே, நான் தெளிவுபடுத்தி உள் ளேன். மோடியை அவரு டைய பணிகளுக்காக ஆதரித்து வருகிறேன். இதனால் நான் பாஜகவை ஆதரிப்பதாகப் பொருளில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எண்ணமே எனக்கு இல்லை. நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றுமட்டுமே விரும்புகிறேன் என்று மோடியை ஆதரிப்பதற்கான விளக்கங்களைக் கூறினார்.

ஆனால், செய்தியாளர் கோஸ்வாமி தொடர்ச்சியாக மோடிக்கும், தாக்கரேவுக் கும் இடையே வெளிமாநி லங்களிலிருந்து மும்பையில் பணிபுரிவோர்பற்றிய முரண்பாடுகள் குறித்துக் கேட்டபோது, இந்த விவ காரத்தில் நான் மோடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குஜராத்தில் வேண்டுமானால் சாதாரண வேலைகளைக்கூட செய்வ தற்கு ஆள் இல்லாமல் இருக் கலாம். ஆகவே, அவர் களுக்கு உத்தரப்பிரதேசத்தி லிருந்தும், பீகாரிலிருந்தும் ஆட்கள் தேவைப்படலாம். ஆனால், வேலை செய்யப் போதுமான ஆள்கள் எங் களிடம் இருக்கிறார்கள்.

பூனாவில் ராஜ்நாத்சிங் பேசும்போது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ஆதரவு குறித்து கூறும்போது, பாஜகவுக்கு நாங்கள் கேட் காமல் தாங்களாகவே ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறியுள் ளாரே என்று கேட்டபோது, நான் மோடியைத்தான் ஆதரிக்கிறேன். ராஜ்நாத்தை அல்ல. அவர் சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத நவநிர் மாண் தொண்டர் கூறும் போது, ராஜ் தாக்கரே கூறு வதுபோல் மோடியின் செயல்களையொட்டி மோடியை மட்டுமே ஆதரிக் கிறோம். ஆதரவு என்று வரும்போது, மோடி ஆதரவு நிலையைமட்டுமே வாக்கா ளர்களுக்கும் தெளிவாகவே கூறியுள்ளோம் என்றார்.

இதனிடையே தொடர்ச்சி யான கேள்விகளால் ஆவேச மடைந்த ராஜ்தாக்கரே, இது பேட்டிதானே தவிர, குறுக்கு விசாரணை அல்ல என்று மிரட்டல் தொனியில்கூறி பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014

Read more: http://viduthalai.in/e-paper/78974.html#ixzz2zTcALRZ3

தமிழ் ஓவியா said...


வைகோவின் பரிதாபம் ஈழமும் - பா.ஜ.க.வும்


மோடி பிரதமரானால் அவரைப் பயன்படுத்தி ஈழத்தை சாத்தியமாக்குவார் வைகோ என்கிறார்கள் நண்பர்கள். 2002 இல் அன்றைய துணைப் பிரதமர் அத்வானி அவர்கள் இலங் கையிடம் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகத் தேடப்படும் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆனையிரவுப் போர் என்பது புலிகளின் ஈழப் போரில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. வியக்கத்தக்க அளவு வெற்றிகரமாக முன் னேறிய புலிகள் யாழ்ப்பாணத்தை வசப்படுத்தி விடுகின்றனர். யாழ் நகரை வசப்படுத்திய அடுத்த கணம் அவர்கள் யாழ் கோட்டையை முற்றுகையிடுகின்றனர்.

யாழ் கோட்டையில் பதுங்கியிருந்த அல்லது தங்கியிருந்த ஏறத்தாழ 4000 இலங்கை ராணுவ வீரர்களுக்கும் புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற சூழல். இது நடந்தது 2002 இல்.

இது மட்டும் நடந்திருக்குமானால் ஒருக்கால் ஈழப் போரின் முகம் சற்று மாறியிருக்கக் கூடும். 4000 இலங்கை வீரர்கள் புலிகளிடம் சரணடைந்திருந்தால் அந்த 4000 வீரர்களையும் மீட்டெடுக்க வேறு வழியின்றி இலங்கையும் சற்று இறங்கி வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

4000 இலங்கை வீரர்களும் சிங்களவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். சிங்கள மக்கள் என்ன செய்தேனும் அவர்களை மீட்டெடுக்க அரசாங்கத்தை நெருக்கி இருப்பார்கள். சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும் இலங்கைக்கு.

அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்கள் தலையிட்டு அந்த நெருக்கடியிலிருந்து 4000. வீரர்களையும் மீட்டெடுக்க இலங்கைக்கு உதவினார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

எனில் ஈழ விஷயத்தில் வெண்ணெய் திரண்டு வந்தபோது தாழியை உடைத்தவர்கள் ஆகிறார்கள் பிஜேபியினர்.

மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல்வர் சிவ ராஜ்சிங் சௌஹான் சாஞ்சியில் கட்டப் பட்டுள்ள புத்தப் பல்கலைக் கழகத்தை துவக்கி வைக்க ராஜபக்ஷேவைத்தான் அழைத்தார். கறுப்புக் கொடி காட்டப் போன வைகோ அவர்களை கைது செய்து திறந்த வெளியில் இரவு பகலாக வைத்திருந்தது பி.ஜே.பி. அரசு. மட்டுமல்ல, இவர்களில் யாரேனும் ரயில் மார்க்கமாக வந்து விடக் கூடும் என பயந்த அவர்கள் அன்றைய தினம் போபால் மற்றும் விதிஷா இடையே எந்த ரயிலும் நிற்க அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு விண்ணப்பம் வைக்கிறது. 20.9.2012 அன்று 11 ரயில்கள் அந்த ரயில் நிலையங்களில் நிற்கவில்லை.

விண்ணப்பித்தது பி.ஜே.பி. ஒத்துழைத்தது காங்கிரஸ் ராஜ பக்ஷேவைக் காப்பாற்றவெனில் இருவரும் எப்போதும் கரம் கோக்கவே செய்வார்கள். 19.09.2012 அன்று பத்திரி கையாளர்களை சந்தித்தபோது ராஜபக்ஷே 2000 இந்து கோயில்களை இடித்து நாசப்படுத்தியவர் என்று கூட கட்காரியிடம் தான் சொல்லிப் பார்த்ததாகவும் ஆனாலும் அவர் இளகவில்லை என்றும் வைகோ சொன்னார்.

இரா. எட்வின்
(நன்றி: காக்கை சிறகினிலே ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page-2/78968.html#ixzz2zTcNDRIq

தமிழ் ஓவியா said...


அய்யோ பாவம் அதிமுக ஏடு!


தேர்தல் பயத்தில் ஜன்னிப் பிடித்து உளற ஆரம்பித்து விட்டது அண்ணா திமுகவின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.

உதய சூரியன் பொத்தானை அழுத்தினால் வீட்டின் விளக்கு எரியும்; நாட்டைப் பிடித்த இருள் அகலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம் (17.4.2014).

பொச பொச என்று எகிறிவிட்டது அந்த ஏட்டுக்கு. விவாதம் செய்யலாம் - வீரமணி அவர்கள் சொல்லுவது இந்தந்த வகையில் தவறு என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் வச்சுக்கிட்டா வஞ்சனை செய்கிறார்கள் - அவர்கள்? சரக்கு அவ் வளவுதான்! பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலைத்தானே அடிப்பார்கள் கையாலாகாதவர்கள்.

வசை மாரி பொழிந்து தள்ளுகிறது ஆனால் அவர்களை அறியாமலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஏற்கெனவே உதவாத உதயசூரிய னுக்கு ஓட்டுப் போட்டதற்கான பலனாக கருணாநிதி ஆட்சி இருட்டையும், திருட் டையும், விதைக்கும், மின் தடையைத் தந்து, தமிழகத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது - என்று குறிப்பிட்டுள்ளது (17.4.2014).

விவாதத்துக்காகவே ஒப்புக் கொள் வோம். கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின் வெட்டுக்கே இருட்டும் திருட்டும் என்றால், அம்மையார் ஆட்சி யில் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்தில் எத்தனை மடங்கு இருட்டும், திருட்டும் எகிறிக் குதிக்கும் - (அதுதானே இப்பொழுது நாட்டின் நிலைமை) பட்டப்பகலிலேயே கழுத்தை அறுத்துக் கொல்லும் புதிய கலாச் சாரத்தை அல்லவா அண்ணா திமுக ஆட்சி வளர்த்து விட்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இங்கு சொல்ல வேண்டும். எதையாவது நமது எம்.ஜி.ஆர். ஏடும் கிறுக்குகிறது; அதற்கு வட்டியும் முதலுமாக விடுதலை கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது. அதற்குமேல் எதையும் எழுத முடியாத அளவுக்கு மூச்சுத் திணறுவது,

இப்படியும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page-8/79000.html#ixzz2zTf0YPZ7

தமிழ் ஓவியா said...


சோ கூட்டத்தின் சுருதி குறைகிறது


சோ கூட்டத்தின் சுருதி குறைகிறது

துக்ளக் நிருபர்கள் சில ஆயிரக்கணக்கான மக்களை, சுமார் இருபத்தைந்து தொகுதிகளில் சந்தித்துப் பேசியதிலிருந்து, தி.மு.க. பல தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு கடும் போட்டியைத் தரக்கூடிய அளவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. தி.மு.க.வை வளர விடுவது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்ற என் கருத்தை நான் பல முறை துக்ளக்கிலும், ஆண்டு விழாக்களிலும் விளக்கியிருக்கிறேன். ஆனால், அந்த நிலை தோன்றவில்லை; தி.மு.க. கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கக் கூடிய அளவில் ஆதரவு உள்ள கட்சியாகத் தெரிகிறது. - துக்ளக் (23.4.2014) தலையங்கம்

திமுக அவ்வளவுதான்! கடைசி இடத்திற்கத் தள்ளப் பட்டு விட்டது என்று பிலாக்கணம் பாடிக் கொண்டிருந்த சோ கூட்டத்தின் சுருதி அடங்கி விட்டது என்பதைத் தான் இது காட்டுகிறது. அவசரப்பட வேண்டாம். இன் னும் இடையில் சில நாட்கள் முடியில்லாத சோ என்ன செய்வார்? சுவரில் முட்டிக் கொள்ள வேண்டியதுதான்!

நூறு ரூபாய்க்கு இவ்வளவு தூரம்தான்!

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக வேட்பாளர் கே.என். ராமச்சந்திரனுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார் அமைச்சர் சின்னையா. அவருடன் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூ வீலரில் கொடிகளைக் கட்டிக் கொண்டு சென்றனர். பாதி பிரச்சாரத்திலேயே பைக்கு களை நிறுத்தி விட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்கள். காரணம் கேட்டபோது, நூறு ரூபாய்க்குத்தான் பெட்ரோல் போட்டுக் கொடுத்தாங்க. அதுக்கு இவ்வளவு தூரம்தான் வர முடியும் என்று சொல்லியிருக் கிறார்கள்.

கடுப்பான சின்னையா, ஆட்களை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகியைக் காய்ச்சி எடுத்திருக்கிறார். பிறகு அனைத்து பைக்குகளுக்கும் தாராள பெட்ரோல் சப்ளை கிடைக்க... பிரச்சாரம் தொடர்ந்தது.

(ஜூனிடர் விகடன் 20.4.2014 பக்கம் 24)

கூலிக்கு மாரடிப்பு என்பது இதுதானோ!

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbBMpg9

தமிழ் ஓவியா said...

எஃப்.அய்.ஆர் பதிவு

பாட்னா, ஏப்.21:-தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்சைக்குரிய விதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தியோகர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் காவல் நிலையத்தில் எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜ சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கிரிராஜ் சிங் பேசும்போது, மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். இவர்கள் தேர்தல் முடிந்தவுடன், பாகிஸ்தானில் போய் குடியேறி விட வேண்டும் என்று சர்ச்சைக்கு உரிய வகையில் கூறியி ருந்தார். இதை காங்கிரஸ் மற்றும் அய்க்கிய ஜனதாதள கட்சிகள் கண்டித்து, தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவித்தன. இதையடுத்து, கிரிராஜின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையமும் ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தது. காங்கிரஸ் கோரிக்கை: முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.மிட்டல் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கிரிராஜ் சிங்கின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத் தில், மதம் மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடைய நினைக்கின்றனர். எனவே, எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருக்குமாறு தண்டனை வழங்க வேண்டும். என்று மிட்டல் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbJxsY2

தமிழ் ஓவியா said...

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


மோடியை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் ஓடுங்கள் என்றார் பிஜேபிக்காரர் ஒருவர்

இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்டுங்கள் என்கிறார் வி.எச்.பி. தலைவர் தொகாடியா!

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தவெறி என்றால் ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகும் - எச்சரிக்கை!

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!

இந்துக்கள் பகுதிகளில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளதை எடுத்துக்காட்டி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும் என்று எச்சரித்து, மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ்சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19ஆம் தேதி பேசும்போது.

நரேந்திரமோடியை பிரதமராக விடாமல் தடுப் பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்ல தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை அவர்கள் வசிக்க பாகிஸ்தானில் தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.

எஃப்.அய்.ஆர். மட்டும்

பிகாரின் நவாடா தொகுதியில் போட்டியிடும் இவர் மோடியின் தீவிர ஆதரவாளராம். 2005 முதல் 2013 வரை பிகார் மாநில அமைச்சராகவும் இருந்தவர்.

இந்த மேடையில் இவருடன் பா.ஜ.க.வின் முந்தைய தலைவரான நிதின் கட்காரியும் (ஆர்.எஸ்.எஸ்.) மேடையில் உடன் இருந்து அவர் முன்னிலையில்தான் இப்படி கிரிராஜ்சிங் பேசியுள்ளார்.

நிதின்கட்காரி இதை ஆட்சேபித்தோ, பிறகு மறுத்தோ பேசவே இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மையாகும்.

இவர்கள் இருவரின்மீது பிகார் தேர்தல் ஆணையர் இ.பி.கோ. மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எஃப்.அய்.ஆர். போட்டிருக்கிறாரே தவிர, அவர்களைக் கைது செய்யவில்லை இதுவரை!

இரண்டாவதாக, மோடி ஆளும் குஜராத்தில் (இன்று (21.4.2014) காலை வந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுச் செய்திப்படி) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரவாத அமைப்புக்களான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் வெறியூட்டும் வகையில் பேசியுள்ளனர். (இவர்களின் தலைவர்கள் எல்லாம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது). கல்லால் அடித்து விரட்டுங்கள்

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் பவந்தர் பகுதியில் முஸ்லீம் வியாபாரிகள் இந்துக்கள் வாழும் பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளனர். அவரது வீட்டிற்கு முன் பஜ்ரங்தளம் அலுவலகம்! என்று போர்டு மாட்ட வேண்டும்; அந்த வீட்டை நாம் ஆக்கிரமித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு குஜராத்தில் உள்ள சட்டப்படி இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் அசையா சொத்துக்கள் வாங்குவது சட்ட விரோதம் என்ற(Inter Community Sale of Immovable Property) மோடி அரசு சட்டப்படி (Disturbed Areas Act) தவறு என்று வலுக்கட்டாயமாக அதை இந்து அமைப்புக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்; 48 மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் கற்களை வீசுங்கள், டயரைக் கொளுத்தி எறியுங்கள் - தக்காளியை வீசுங்கள்! வழக்குப்பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி, இரவில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களையே தூக்கில் போடவில்லை; அதனால் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் வி.எச்.பி. தலைவர் தொகாடியா பேசியுள்ளார்.

தலைக்கொழுத்துப் பேசி பச்சையாக குஜராத்தில் வன்முறை வெறியாட்டத்தைத் துவக்கி மீண்டும் 1992 பாபர் மசூதி - 2002 குஜராத் கலவரங்களைப் புதுப்பிக்க அச்சாரப் பாட்டு பாடுகிறார்கள்!

மோடி பதவிக்கு வருவதற்கு முன்பே இப்படியா?

மோடி பதவிக்கு வரவில்லை; இப்போதே இப்படி இவர்கள் ஹிட்லர் மொழியில் பேசுகிறார்கள் என்றால் அதன் விளைவு என்னவாகும்? நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும்!

நரிக்கு நாட்டாண்மை என்றால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்! என்ற நிலை தானே ஏற்படும்?

வாக்காளர்களே சிந்தியுங்கள் - மதச் சார்பற்ற சக்திகள் விழித்தெழ வேண்டிய மிக முக்கியமான நேரம் இது! பி.ஜே.பி.க்குத் துணை போகக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும். மதச் சார்பின்மையைக் காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும், சமதர்ம அரசாக சமூக நீதி அரசாக, மத்திய அரசு அமையவும், மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கவும், சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கவும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாசிசத்திலிருந்தும், மதவெறிகளிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற முன் வாருங்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்21.4.2014
திருச்சி (முகாம்)

Read more: http://viduthalai.in/e-paper/79026.html#ixzz2zZbQ8OeB

தமிழ் ஓவியா said...


இந்துத்துவாவுக்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகள்!

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளி வந்ததும் - சில அலைகள் கிளம்பி விட்டன. மோடி அலை அலை என்று சொல்லி வந்தவர்களை புதிய எதிர்ப்பு அலை கிளம்பி அவர்களைத் துரத்திக் கொண்டுள்ளது.

தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் எங்களின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் இடம் பெறும் என்று பிஜேபியின் முக்கிய தலைவர்கள் வெளியிட்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத்தும் தெரிவித்து வந்ததும் உண்மை. இது குறித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை வெளியிட்டும் இருந்தார்.

பி.ஜே.பி.யோடு கூட்டுச் சேரும் எண்ணத்துடன் இருந்த தமிழ் நாட்டுக் கட்சிகள் அப்பொழுதாவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும் - இந்தக் கட்சி களுக்குக் கொள்கைகள் சித்தாந்தம் என்பது தங் களுக்கு உண்டு என்று நினைத்திருந்தால்,.. அப்பொ ழுதே பிஜேபி உயர் மட்டத் தலைவர்களோடு பேசியிருக்க வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் உங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமாயின் நாங் கள் கூட்டணியில் இடம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

கொள்கைகள், கோட்பாடுகள் மீது பிடிப்பு இருந் தால் அல்லவா அந்த மாதிரி சிந்திப்பார்கள்? இதில் வெட்கக்கேடு என்னவென்றால், எந்தவித நிபந்தனை களுமின்றி முதன் முதலில் பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொள்ள முதல் குரல் கொடுத்தது அடியேன் வைகோதான் என்று மார்தட்டுகிறார் என்றால் இந்தப் பிற்போக்குத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

ஊழல் ஊழல் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஊழலைவிட ஆபத்தானது மதவாதம் ஆயிற்றே! பாலில் தண்ணீர் கலப்பது ஊழல் என்றால் பாலில் நஞ்சு கலப்பது மதவாதம் ஆகும். (அப்படியே பார்த்தாலும் பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமப் புத்திரன் அல்ல - சவப் பெட்டியிலேயேகூட ஊழல் செய்ய முடியும் என்று சாதித்துக் காட்டியவர்களே!).

எந்த ஊழல் காரணமாக கருநாடகாவில் பி.எஸ். எடியூரப்பா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அந்த எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வுக்குப் பூர்ண கும்பம் கொடுத்து வரவழைக்கப்பட்டு விட்டாரே! பி.ஜே.பி. சார்பில் கருநாடகத்தில் போட்டியிடும் சிறீராமுலு யார்? சுரங்கத் தொழில் கொள்ளையில் அவர் பங்கு என்ன என்பது ஊர் சிரிக்கவில்லையா? ஊழல் என்ற பார்வையில் பார்த்தாலும் பி.ஜே.பி. யோடு கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் தயங்கியிருக்கவே வேண்டும்.

பிஜேபியின் இந்துத்துவா தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதனோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கட்சித் தலைவர்களை நோக்கி வினாக்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், மூச்சுத் திணறி, ஏதோ ஒரு பதிலைச் சொல்லித் தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர்.

எங்களிடையே கொள்கை வேறுபாடு உண்டு என்பது உண்மைதான். கொள்கை வேறுபாடு இல்லா விட்டால் ஏன் தனித்தனியே கட்சியாக இயங்குகின் றோம் என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜாலம் செய்து பார்க்கிறார்கள். ஒரு முக்கியமான கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். தேர்தலில் எதை முக்கியமாக வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்?

நாட்டில் மோடி அலை வீசுகிறது, மோடிதான் பிரதமர்! ஆகவே எங்கள் அணிக்கு வாக்களியுங்கள் என்று தானே வாக்குக் கேட்கிறார்கள்.

மோடிதான் பிரதமர் என்று சொன்னபிறகு மோடி பிரதமர் ஆசனத்தில் உட்கார்ந்தால், அவர்களுடைய தேர்தல் அறிக்கையின்படி ஆட்சி செய்யக் கடமைப் பட்டவர் ஆகி விடவில்லையா?

பிஜேபியின் தேர்தல் அறிக்கை வந்த பிறகாவது மோடிதான் பிரதமர் என்கிற பரப்புரையையாவது நிறுத்தினார்களா?

இந்த நிலையில், ஏதோ பிஜேபிதான் மதவாதக் கட்சி என்று நினைக்காமல், அதற்குத் துணை போகும் மதிமுகவும், பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஒரு வகையில் மதவாதக் கட்சிகளே என்ற முடிவுக்குத்தான் வாக்காளர் கள் உணர வேண்டும்.

பி.ஜே.பி.க்கு வாக்களித்தாலும், அதனுடன் கூட் டணி சேர்ந்துள்ள இந்தக் கட்சிகளுக்கு வாக்களித் தாலும் அடிப்படையில் ஒன்றுதான். இந்துத்துவா ஆட்சிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு வாக்களித்ததாகவே பொருள்படும். தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் - இதில் சம்பந்தப்பட்டவர்களை ஒருக்காலும், ஒருபோதும் மன்னிக்காது - மன்னிக்கவே மன்னிக்காது.

வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/79033.html#ixzz2zZcD8RkC

தமிழ் ஓவியா said...


பச்சை பதவி வெறி


2006-2007-ல் தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் சிறப்பு பொரு ளாதார மண்டலம் அமைத்திட திட் டங்கள் தீட்டப்பட்டது. இவற்றை பாமக நிறுவனர் கடுமையாக எதிர்த்தார். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட புளிச்சலூர் பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்திட, பாமக எதிர்ப்பு தெரிவித்தது. உடனே அனைத்துக் கட்சி கூட்டம் 22.5.2007-ல் கலைஞரால் கூட்டப்பட்டு, அதில் பங்கேற்ற பாமக, மதிமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று, புளிச்சலூர் பகுதியல் லாமல், மக்களை வெகுவாக பாதிக் காத பகுதிகளை கையகப்படுத்தி விமான நிலையம் அமைத்திட ஓர் ஒருமித்த கருத்தை உருவாக்கினார்.

இது கலைஞரின் அணுகுமுறை.

ஆனால், குஜராத்தில் நடப்பது என்ன?

பாமக, மதிமுக புகழும் மோடி யின் ஆட்சியில், கடலோரப்பகுதியில் அதானி குழுமத்திற்கு, ஒரு சதுர அடி ரூ.1500 உள்ள நிலங்கள், ரூ.1 முதல் ரூ.32-க்கு தொழிற்சாலை நடத்துவ தற்கு, மக்களின் ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், அதானி குழுமம், இந்த இடங்களில் பெரும்பான்மை யான நிலங்களை, வேறு நிறுவனங் களுக்கு, அதிக விலையில் விற்றுவிட் டார்கள்.

எஸ்ஸார் நிறுவனத்திற்கு, ஹஜிரா பகுதியில் 7,24,687 சதுர அடி நிலம், மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது. இதனால், குஜராத் அரசுக்கு ரூ.238.50 கோடி நஷ்டம்.

மகுவா பகுதில் விளை நிலங் களை, தரிசு நிலங்கள் என மோசடி யாக அறிவித்து, 15000 மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து, சிமெண்ட் தொழிற்சாலை அமைத் திட, 269 ஹெக்டேர் நிலத்தை நிர்மா நிறுவனத்திற்கு அளித்தவர் மோடி.

மேற்கு வங்கத்திலிருந்து டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற் சாலையை குஜராத்திற்கு கொண்டு வந்து 1100 ஏக்கர் நிலத்தை, ஒரு சதுர மீட்டர் ரூ.900 என்று விற்றவர் மோடி. இந்த நிலங்களின் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.10000. தமிழ் நாட்டில், கலைஞர், மற்ற கட்சிகளின் கருத்தை யும், மக்களையும் மதித்து, முடிவு எடுக்கிறார். அவர் ஒழிய வேண்டும்; திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது பாமகவும், மதிமுகவும்.

சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்காக, விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி, குறைந்த விலைக்கு வாங்கி, பல்லாயிரம் விவ சாயிகளின் வாழ்க்கையைச் சிதைத்து, சில முதலாளிகளுக்கு சாதகம் செய் யும் மோடி, எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியும் முடிவு எடுக்க வில்லை; ஏன், தனது அமைச்சரவை யைக்கூட்டி எந்த முடிவும் எடுப்ப தில்லை. அத்தகைய மோடி வெற்றி பெற வேண்டும் என இங்கே தொண் டையை உயர்த்தி முழக்கமிடுகிறது பாமக, மதிமுக.

ஆக, நோக்கம், பொருளாதார வளர்ச்சியும் இல்லை; ஒரு வெங்காயமும் இல்லை; பச்சை பதவி வெறி. இவர்களுக்கு தக்க பாடம் அளித்திட மக்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பு தான் ஏப்ரல் 24.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79037.html#ixzz2zZccxL13

தமிழ் ஓவியா said...மோடிமீது நீதிமன்றங்கள் வைத்த மொத்துகள்!

புதுடில்லி, பிப்.21 (2002)- குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட படுகொலைகளின்போது கொல் லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட, அடையாளம் தெரியாத 28 பேரின் உடல் களை தோண்டி எடுத்தது தொடர்பாக சமூக சேவகர் டீஸ் டா செட்டால்வாட் மீது விசா ரணைக்கு மாநில அரசு ஆணை யிட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது அவரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள போலியான வழக்குதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2002இல் மதவெறி சக்திகளால் சிறு பான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டது. அப்போது கான்பூர் வட்டத்தின் பாந்தர் வாடா உள்ளிட்ட கிராமங்களில் கொல்லப்பட்ட 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட வில்லை எனக்கூறி புதைக்கப் பட்டன. அந்தச் சடலங்களை அனுமதி பெறாமல் தோண்டி எடுத்ததாக ஷெட்டால்வாட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்ற வியல் சட்டத்தின் கீழ் அவர் மீது விசா ரணைக்கும் ஆணையிடப் பட்டது. இதை எதிர்த்து ஷெட்டால் வாட் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவின் மீது செவ்வாயன்று (பிப்.21) விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு, இது மனுதாரரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்டிருக்கிற 100 விழுக்காடு போலியான வழக்கு தான் என்று கூறியது. இது போன்ற வழக்குகள் மாநில அரசுக்குப் பெருமை சேர்க்காது, என்றும் நீதிபதிகள் கூறினர். மாநில அரசு இந்த விசாரணையைத் தொடர்வது முறையல்ல என்று கூறிய நீதிபதிகள், ஷெட்டால்வாட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரதீப் கோஷ் படித்துப்பார்த்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோ சனை கூற வேண்டும் என்று பணித்தனர். இதே போல், குஜராத் அரசின் வழக் கறிஞர் ஹேமன்டிகா வாஹி அந்த முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

***

புதுடில்லி ஜூன் 2 (2008)

பிரபல சமூகவியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆசிஷ் நந்தி 2007 குஜராத் தேர்தல் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் ஆட்சேபணைக்குரியவை எதுவும் இல்லையென்று உச்சநீதிமன்றம் மோடி அரசின் தலையில்குட்டு வைத் துள்ளது.

2007 குஜராத் சட்டமன்றத் தேர்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரை சமுதாயத்தின் இரு பிரிவு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டது என்றும் இதனால் மாநிலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் குஜராத் அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நந்தியின் கட்டுரை குறித்து வி.கே. சக்சேனா என்பவர் தொடுத்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத் துணை காவல் நிலையம் நந்தியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆசிஷ் நந்தி உச்சநீதிமன்றம் சென்றார்.

அவர் அப்படி என்ன எழுதி விட்டார் என்று வாரண்ட் பிறப் பித்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் ஜி.எஸ். சாங்கி ஆகிய இருவரும் கட்டுரையில் ஆட்சேபணைக்குரிய பகுதிகள் இல்லை என்று குறிப்பிட் டனர். மகாத்மாகாந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்தவர்களால் விமர்சனங் களை ஏன் தாங்கிக் கொள்ள முடிய வில்லை என்றும் அவர்கள் வினவினர்.

பலவீனமான இலக்கு

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவோர் போன்ற பலவீனமான இலக்குகளைத் தாக்குவதால் நாடு பயன் அடையாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். முதலில் ஒட்டு மொத்தமான விமர்சன மாக இருந்தபோதும் பின்னர் குஜராத் மாநில அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். தன் மனதில் பட்டதை கட்டுரையாளர்களால் எழுத முடிய வில்லை என்றால் அந்நிலை நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்றும் அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

குஜராத் மாநில அதிகாரிகள் ஆசிஷ் நந்தியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நந்திமீது பிறப்பிக்கப் பட்ட சம்மன்களும் தடை செய்யப் பட்டன. அவருக்கு இனிமேல் சம்மன் கள் அனுப்பக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

Read more: http://viduthalai.in/page-2/79036.html#ixzz2zZckEsos

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியம் தரும் தர்பூசணி பழம்


கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப் பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத் தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக் ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கொழுப்பை குறைக்கும்: கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யின் உதவியுடன் செயல்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.

இதய பாதுகாப்பு: தர்பூசணியில் அது போல் உள்ள `சீட்ரூலின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின்', அர்ஜினை னான' எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது.

அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜி னைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர் களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும்.

Read more: http://viduthalai.in/page-7/79040.html#ixzz2zZdtzJLF

தமிழ் ஓவியா said...


வரிவரியாய் ஒரு வைரம் பீர்க்கங்காய்


இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சொரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகிய வற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் செரிமானமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து.

இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்தத் துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி செரிமான சக்தியை அதிகமாக்கும். சிறிது வெப்பத்தையும் கொடுக்கும்.

ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeAvsDI

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

1. அச்சுறுத்தப்பட்டு அடங்கியொடுங்கிக் கிடப்போர் நியாயம் கேட்கமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அமைதி திரும்பும் என்று ஒரு முதலமைச்சரே பாதிக்கப்பட்ட மக்களை வானொலி உரைமூலம் அதிகாரப்பூர்வமாக அச்சுறுத்திய முதல்வர்பற்றி அறிந்ததுண்டோ?

இதோ இருக்கிறார் - குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - இவர்தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராம்!

2. கலவரம் நடந்துகொண்டிருந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று முதல் அமைச்சர் யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், அதனைத் தூசுபோல் தட்டிவிட்டு, பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப் பற்றிப் படித்ததுண்டா?

ஒருவர் இருக்கிறார் - அவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான குஜராத் முதல் அமைச்சர் மோடி.

3. தங்களுக்குப் பிடிக்காத மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களிடம் கைகுலுக்கி, உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்படு கிறீர்கள் என்று சொன்ன ஆட்சியாளரைக் கேள்விப்பட்டதுண்டா?

முதன்முதலாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம் - குஜராத் முதலமைச்சர் மோடிதான் - அவர் பி.ஜே.பி.யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராம்.

4. கார்ப்பரேட் பண முதலைகளும், மதவெறியர்களும் தாங்கிப் பிடிக்கும் ஒருவர்தான் ரோல்மாடல் என்று விளம்பரப்படுத்தப்படும் கேவலத்தை எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா? 2014 இல் நடக்கும் இந்தியத் தேர்தலில் நிறுத்தப்படும் மோடி என்பவர்தான் அத்தகையவர் என்பதை நாடே கண்டுகொண்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/79063.html#ixzz2zZeT0z9b

தமிழ் ஓவியா said...ஆண்மையின் ஆணவமா?

ஆண் நிர்வாணம்
கடவுள் ஆகிறது!
பெண் நிர்வாணம்
காட்சி ஆகிறது!

காட்சி ஆனதோ
கை தொழுகிறது.
கடவுள் ஆனதோ
காமம் கக்குகிறது!

முரண் பாடுகள்
காலங் காலமாய்
சமூகச் சிக்கலா?
ஜாதீய தீண்டலா?
ஆண்மையின் ஆணவமா?

காதல், கண்ணீர்
இன்பம், துன்பம்
உரிமை, உணர்ச்சி
இருவருக்கும் பொதுவென
இன்றளவும் உலகம் நினையாதது ஏனோ?

தன் குழந்தையின்
அம்மணத்திற்கு ஆடை
அடுத்தவர் குழந்தை
ஆடை விலக்கல்.

திருத்தப்பட வேண்டியது
ஆடையா, ஆணவமா?
மறைக்கப்பட வேண்டியது
காதலா காமமா?
மாற்றம் தேவை!

பெண்ணின் ஆடையிலா?
ஆணின் பார்வையிலா?
சமூகத்தின் பதில்நோக்கி
காத்திருக்கும் பெண்குலம்!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...

கருத்துரிமையை நெறிக்கும் சட்டம்

- சு.மதிமன்னன்

பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். பெங்குவின் பதிப்பகத்தின் நூல்கள் விற்கும் இடம். கூட்டம் கூச்சல் போட்டது. வென்டி டானிகர் ஹை! ஹை! என்று கூச்சல். போவோர், வருவோரையெல்லாம் கூச்சல் போடக் கூப்பிட்டனர் அந்த டஜன் நபர்கள். ஒருவரும் இவர்களோடு சேரவில்லை. இவர்கள் டர்ட்டி டஜன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?

வென்டி டானிகர் எழுதிய இந்துக்கள்_ மாற்று வரலாறு எனும் நூலைக் கண்டித்துக் கூச்சல். சிக்ஷா பச்சோ அந்தோலன் எனும் மதவெறிக் குழுவினரின் கூச்சல். அலட்சியப்படுத்திட வேண்டிய கூச்சல்.

ஆனால்....

பெங்குவின் பதிப்பகம் கூச்சலுக்குப் பயந்து பணிந்தது. அந்தப் புத்தகம் மொத்தத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியது. கூறியவாறு எழுதிக் கொடுத்தது. மதவெறிக் குழு சமாதானம் அடைந்தது. ஆனால், எழுத்தாளர்கள் நொந்து போயினர். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் என்ன? 125 கோடி மக்களை அச்சுறுத்த சிறு குழுவினர் போதுமே! அவர்களின் கையில் உள்ள ஆயுதம் அவ்வளவு வலுவானது! மத உணர்வு!

சாத்தானின் கவிதைகள் என்று ஒரு நூல். சல்மான் ருஷ்டி எழுதியது. மத உணர்வு என்று காரணம் காட்டி ஈரான் நாட்டு அதிபரே மரண தண்டனை விதித்தார். அந்த நூலை மொழிபெயர்த்தவர்கள்கூடக் கொல்லப்பட்டனர். ஆசிரியர் பிரிட்டனில் அடைக்கலம் பு-குந்தார். பத்தாண்டுகளுக்கு மேல் அவரைப் பாதுகாத்தது பிரிட்டன். ஆசிரியர் இன்றும் உயிருடன் உலவி வருகிறார்.

இந்த நூலைப் பதிப்பித்ததும் அதே பெங்குவின் பதிப்பகம்தான்! இப்போது மட்டும் ஏன் பெங்குவின் பின்வாங்கியது?

இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை பெற்றவர், திருபாய் அம்பானி. அவரது வரலாற்றை ஹமிஷ் மக்டனால்டு என்பவர் எழுதினார். தலைப்பு பாலியஸ்டர் இளவரசர்! இந்தியாவின் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் இந்நூலுக்குத் தடை வாங்கிவிட்டனர் 1998இல்! நூல் வரவே இல்லை!

நேரு _ காந்தி குடும்பம் பற்றி ஒரு நூல். குஷ்வந்த் சிங் எழுதினார். மேனகா காந்தி _ இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் _ வழக்குப் போட்டார். நூல் வெளி வருவதற்கு முன்பே தடை ஆணை வாங்கிவிட்டார்.

சட்ட விரோதமாகப் பொதுமக்களிடம் திரட்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன்படிச் செய்யாததால் உள்ளே தள்ளப்பட்ட சாஹரா அதிபர் சுப்ரதா ராய் பற்றி ஒரு நூல். சாஹரா: சொல்லப்படாத கதை என்று தலைப்பு. அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக வழக்குப் போட்டார் சுப்ரதா ராய். நூலுக்குத் தடை விதித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா: ஒரு படப்பிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நூல். வாசந்தி என்ற எழுத்தாளர் எழுதினார். 1-.4.2011இல் வெளியிடப்பட திட்டம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தடை. பதிப்பாளர் ஓராண்டுக் காலம் வழக்காடிப் பார்த்தார். 27.8.2012இல் சென்னை அமர்வு நீதிமன்றம் தடை ஆணையை நிரந்தரமாக்கிவிட்டது. பதிப்பாளர் உயர் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. இதன் பதிப்பாளரும் பெங்குவின்தான்!

சிறீ அரவிந்தரின் வாழ்க்கைகள் என்று ஒரு புத்தகம். பீட்டர் ஹீஹ்ஸ் என்பார் எழுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

மனது புண்ணாகிவிட்டது என்று இரண்டு பேர் வழக்குப் போட்டனர். ஒரிசாவில், கீழமை நீதிமன்றங்களில்! வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம். நூல் எழுதிய ஆசிரியரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்! வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நூலின் பதிப்பாளரும் பெங்குவின்தான்.

இப்படி இந்தியாவில் எழுத்துரிமையும் கருத்துரிமையும் படும்பாடுகள் பற்றி எவ்வளவோ எழுதலாம்!

எதனால் இது இங்கே மட்டும்? இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 295A தான் காரணம்! இச்சட்டம் எழுதப்பட்டது 1857இல்! இந்தியச் சிப்பாய்க் கலகம் நடந்ததற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அளித்த உறுதிமொழிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டம். கிறித்துவர்களான அன்றைய ஆட்சியாளர்கள் தம் நாட்டுக் குடிமக்களான இந்து, முசுலிம்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டனர் என்பதால்தான் சிப்பாய்க் கலகமே நடந்தது. அம்மாதிரி இனிமேல் நடக்காது என்ற உத்தரவாதத்தின் பேரில் சட்டம் எழுதப்பட்டது. இன்று அந்நியர் ஆட்சியும் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மக்களாட்சி(?) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 160 ஆண்டுகளாக மாறுதல் இல்லாமலே சட்டம் இருக்கிறது!

சட்டத்திற்காக மக்களும் அவர்தம் உரிமைகளும் காவு கொடுக்கப்படுகின்றன.

கருத்துரிமை கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா?

தமிழ் ஓவியா said...

எது அறிவியல்

நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும்.

எத்தனை தடவை 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் ? ஒராயிரம் முறை அல்ல, ஈராயிரம் முறை அல்ல, ஒரு லட்சம் முறையானாலும், ஒரு கோடி முறையானாலும், ஒறாயிரம் கோடி முறையானாலும் 100 டிகிரி வெப்பத்தை அடைந்தால்தான் நீர் கொதிக்கும்.

இதுதான் - இப்படிதான் என்று உறுதியாக கூறுவது அறிவியல்.

இந்த மாதிரியும் இருக்கலாம் - இப்படியும் இருக்கலாம் என்பது யூகம் யூகம் யூகம் மட்டும்தான்.

ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றால் - அறிவியல் மாதிரி இதுதான் இப்படிதான் என்று சொல்ல இயலுமா ?

இப்படி சொல்ல இயலவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் இவை எவையுமே கண்டிப்பாக அறிவியல் இல்லை!

அறிவியல் இல்லாத ஒன்றை யூகத்தின் அடிப்படையில் நம்புவது நம்பாதது அவரவர் விருப்பமாக இருக்கலாம் ?

ஆனால், அறிவியல் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு, எடுத்து காட்டுக்கு, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்றும், கேட்டய நட்சத்திரம் என்றும், வரப் போற மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம் அல்லாமல் வேறென்ன ? இதை விட அறிவுக்கு பூட்டு போடக் கூடிய செயல் இந்த லோகத்தில் தமிழகத்தை தவிர வேறெங்கே காண முடியும் ?

- - - _ ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து]

தமிழ் ஓவியா said...

மேதைமை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகளுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

தமிழ் ஓவியா said...

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.

நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான், என்றார்

எடிசன் அவரிடம் சொன்னார், நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...

ஆதமும் ஏவாளும்
சாப்பிட்ட பழம் என்ன?

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஆப்பிள் என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.

Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.’

அது என்ன நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருதது

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

அது இயேசுவும் அல்ல அது ஆப்பிளும் அல்ல

- மரியானோ ஆண்டோ புரூனோ மஸ்காரெனாஸ்

தமிழ் ஓவியா said...

மனுநீதிச் சோழன் நீதியின் அடையாளமா?


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.

இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?

இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

மோடியின் குஜராத் மாடல் எது?
மோடியின் குஜராத் மாடல் எது?
மனுஷ்யபுத்திரன் (தனது முகநூல் பக்கத்தில்)

ஒரு புத்தகம் பற்றி குருட்டுத்தனமான மோடி ஆதரவாளர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். குஜராத் கலவரங்கள் பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் குற்றமற்றவர் என்று அறிவித்ததன் மூலமாகத்தான் அவர் பிரதமர் வேட்பாளராக கம்பீரமாக வலம் வருகிறார். ஆனால் இந்தப் பரிசுத்தச் சீட்டு எப்படிப் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் இந்தப் புத்தகம் முன் வைக்கிறது.

பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய The Fiction of Fact-Finding: Modi & Godhra, a study of the Gujarat 2002 investigations என்ற இந்தப் புத்தகம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்த குளறுபடிகளுக்காக வர்மா கமிஷனால் கண்டிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகாரி ஆர்.கே ராகவன் பின்னால் சி.பி.அய் இயக்குனராக வாஜ்பாய் அரசாங்கத்தினால் மறு வாழ்வு அளிக்கப்பட்டார். அவர்தான் மோடிமீதான இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். கலவரம் நடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நிலவரம் பற்றி தொடந்து காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த மோடி குல்பர்க் சொசைட்டி படுகொலை பற்றி தனக்கு 5 மணிநேரம் கழித்தே தெரியும் என்று புளுகினார். அதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த வன்முறையில், மோடியின் பொறுப்பு பற்றி இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக முன் வைக்கிறது. ராகவன் போன்ற அதிகாரிகள் மோடிக்கு வழங்கிய இந்தப் பரிசுத்தச் சான்றிதழின் மூலம் எப்படி நமது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தார்கள் என்பதைப் பற்றி மனோஜ் மிட்டா ஆழமாக விவரிக்கிறார். மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியைப் பற்றியே ஒப்பாரி வைப்பவர்கள் அவரது குஜராத் மாடல் நீதியைப் பற்றி ஒரு கணம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

இந்தப் புத்தகம் பற்றி அவுட் லுக் இதழ் வெளியிட்ட அறிமுகம் ஃப்ர்ஸ்போஸ்ட்.

இணைய தளம் வெளியிட்ட மனோஜ் மிட்டாவின் பேட்டி ஆகியவற்றின் இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன்.

http://www.outlookindia.com/article.aspx?289455
http://www.firstpost.com/politics/sit-chiefs-history-made-him-unfit-to-lead-probe-new-book-on-
2002-riots-1458785.html