Search This Blog

15.4.14

மனுவும் சூத்திரர்களும்-அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் : ஏப்ரல் 14மனுவின் திட்டத்தின்படி சதுர்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள், சதுர்வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்கள் என இரண்டு முக்கியமான சமூகப் பிரிவுகள் உள்ளன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைய தீண்டப்படாதவர்கள் சதுர்வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்களின் நகல்தான். சதுர்வர்ணத்திற்கு உட்பட்டவர்கள் வெளியே உள்ளவர்களுக்கு நேர்மாறானவர்கள். அவர்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற நான்கு வேறுபட்ட வகுப்பினரைக் கொண்ட ஒரு கூட்டு அமைப்பு எனலாம்.

சமுதாயச் சிந்தனையை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு. அது, வகுப்பினர்களிடையே சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது.


எனவே தனி மனிதர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. தெளிவாகச் சொல்வதென்றால், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் அந்தியஜாஸ், (தீண்டப்படாதவர்கள்) என்ற வகுப்பினர்கள் எல்லோரும் சமநிலையில் அதாவது ஒரே மட்டத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் படிநிலையில் அதாவது ஒருவரைவிட ஒருவர் உயர்வான நிலையில் இருக்கிறார்கள். இந்தக் கூற்றை எந்த இந்துவும் மறுக்க மாட்டார். ஒவ்வொரு இந்துவுக்கும் இது நன்கு புரியும். இதைப்பற்றி ஏதாவது அய்யம் கொள்பவராக யாராவது இருப்பாராகில், அவர் வெளி நாட்டவராகத்தான் இருக்க முடியும். ஆனால் வெளிநாட்டவருக்கு ஏற்படும் அய்யப்பாடு இந்து சமூகத்தின் தலைமைச் சிற்பியான மனுவின் சட்டத்தைப் புரட்டிப் பார்த்தால் கரைந்துபோகும். அந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்து சமூகமே கட்டப்பட்டுள்ளது. அவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக, இந்து சமூகம் ஏற்றத்தாழ்வுக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, மனு ஸ்மிருதியிலிருந்து தேவையான வாசகங்களை எடுத்தெழுதுகிறேன்.
மனு ஸ்மிருதியில் மனுவால் விதிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுநிலை, வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உள்ள ஒரு நிகழ்வு என்று வாதிடக்கூடும். அது பழைய வரலாறு, மற்றும் இன்றைய இந்துக்களின் வாழ்க்கை நடைமுறையில், அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறலாம். இதைவிடப் பெரும் தவறு வேறு இருக்க முடியாது என்று நிச்சயமாகக் கருதுகிறேன். மனு நியதி என்பது ஒரு கடந்தகால நடைமுறையல்ல. தற்காலத்தின் இறந்தகாலத்தைவிட அது அதிகமெய்யானது. அது வாழ்ந்துவரும் கடந்தகாலம். எனவே எந்த நிகழ்காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விஷயந்தான்.

மனு நிர்ணயித்திருந்த ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்த நாட்டின் சட்டமாக இருந்தது என்பது பல வெளிநாட்டவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இதுதான் உண்மையான நிலை என்பதை சில விவரக் குறிப்புகளே தெளிவாகக் காட்டும்.
மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பிராமணரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்துத் தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும். இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. கன்று காலிகளும், நாய்களும் சுதந்திரமாக நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் சட்டப்படி தீண்டப்படாதவர்கள், தரையில் துப்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், அவர்கள் எச்சிலை ஓர் இந்து மிதித்தால் அவர் தீட்டுக்குள்ளாகக் கூடும். எனவே, எச்சிலைத் துப்புவதற்காக தீண்டப்படாதவர் தன் கழுத்தில் ஒரு பானையைக் கட்டிச் செல்ல வேண்டுமென்ற விதி இருந்தது. தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டுமென்றும் இருந்தது. ஒரு பிராமணன் வருவது தெரிந்தால் தீண்டப்படாதவன் தரையில் குப்புறப்படுத்து தனது நிழல் பிராமணன் மீது விழுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையும் இருந்தது.
ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கறுப்புக் கயிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராஷ்டிராவில் நிலவி வந்தது.
குஜராத்தில், தீண்டப்படாதவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டும் சின்னமாக, ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.
பஞ்சாபில் ஒரு தெருக் கூட்டுபவன் தெருவில் நடந்து செல்லும்போது தான் ஒரு துப்புரவுப் பணியாளன் என்பதை வெளியார் அறிந்துகொள்ள தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.
பம்பாயில், தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப்படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும்போது, அந்தத் துணிகளைக் கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.
மலபாரில் தீண்டப்படாதவர்கள் ஒரு மாடிக்கு அதிகமான மாடிகளுடன் வீடுகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இறந்தவர்களை எரியூட்டவும் அனுமதிக்கப்படவில்லை.
குடை எடுத்துச் செல்லவும், காலணிகள் அணியவும், நகைகள் அணியவும், பசுக்களிடமிருந்து பால் கறக்கவும், நாட்டில் சர்வசாதாரணமாகப் புழங்கும் மொழியை உபயோகிக்கவும் மலபாரிலுள்ள தீண்டப் படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தென் இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் இடுப்பிற்கு மேலே எந்தத் துணியும் அணியக் கூடாது என்று திட்டவட்டமான விதியிருந்தது. தீண்டப்படாத பெண்மக்களும் உடலின் மேற்பகுதியை மூட அனுமதிக்கப்படவில்லை. பம்பாய் மாகாணத்தில் சோனர்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேஷ்டியைத் தார்பாய்ச்சி உடுத்திக் கொள்ள அனுமதிக்கப் படவில்லை. ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கையில் நமஸ்காரம் என்ற வார்த்தையை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மராட்டியர்களின் ஆட்சியில் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை வெட்டிவிடும் தண்டனை வழக்கத்தில் இருந்ததால் சட்டத்தை மீறி வேதத்தை உச்சரித்த துணிச்சலுக்காக பேஷ்வாவின் ஆணையினால் பல சோனர்களின் நாக்குகள் வெட்டப்பட்டதாக அறிகிறோம்.
இந்தியா முழுவதும் பிராமணர்களுக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விலக்களிக்கப் பட்டிருந்தது. அவன் ஒரு கொலை செய்திருந்தாலும் தூக்குத் தண்டனை விதிக்க முடியாது.
பேஷ்வாக்களின் ஆட்சியில் குற்றவாளிக்கு அவர்களின் ஜாதியின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது. தீண்டப்படாதவர்களுக்கு எப்பொழுதும் மரண தண்டனையும், கடின உழைப்பும் தண்டனையாக அளிக்கப்பட்டு வந்தன.
பேஷ்வாக்களின் ஆட்சியில் பிராமண எழுத்தர்கள் வாங்கும் பண்டங்களுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களை ஓடங்களில் கொண்டுவருவதற்கு கூலி கிடையாது. பிராமண நிலக்கிழார்களின் நிலங்களுக்கு மற்ற வகுப்பினர்கள் செலுத்தவேண்டிய வரியைவிடக் குறைவாகவே விதிக்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் நிலத்திற்கான குத்தகை அதை அனுபவிப்பவரின் ஜாதியைப் பொறுத்திருந்தது. தீண்டப்படாதவர் அதிகமான குத்தகை கொடுக்க வேண்டியிருந்தது.
கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்போ மனு பிறந்திருந்தாலும், இந்த விவரங்கள் அவர் இன்னும் மடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்து அரசர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்துக்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே, தீண்டப்படாதவர்கள் மற்றும் தீண்டத்தக்கவர்களுக்கும் இடையேயான உறவுகள் மனுவின் சட்டப்படி தீர்மானிக்கப்பட்டன. அந்தச் சட்டம் வெளிப்படையாகவே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தது. இதைத்தான் மனுதர்மம் எடுத்துரைக்கிறது. அது மானவ தர்மம் என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய உள்ளார்ந்த சிறப்பினால் எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களுக்கும் அது பொருத்தமானது என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே அது வழக்கத்தில் இல்லாதது ஒரு சாபமா அல்லது வரமா என்பதை நான் ஆராயப்போவதில்லை. இந்த மானவ தர்மத்தின்படி பிராமணர்களுக்கு எல்லாச் சலுகைகளும் அளிக்கப் படுவதுடன் சூத்திரர்களுக்கு மனிதப் பிறவி என்ற உரிமைகூட வழங்கப்படவில்லை. பிராமணன் அவனது உயர்ந்த பிறவியின் காரணத்தினால் மட்டுமே, மற்ற எல்லோரையும்விட எல்லா விஷயத்திலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். சூத்திரன் எல்லோருக்கும் கடைசியில் தள்ளப்பட்டதுடன், அவனுடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அவனுக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடையாது.

இந்த மானவ தர்மத்தின் வெட்கம்கெட்ட தன்மையையும் இழிவையும் அம்பலப்படுத்துவதற்கு அதைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டுவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. இப்பணியை கல்வியாளரும், அரசியல்வாதியும் சமூகச் சீர்திருத்தவாதியுமான டாக்டர் ஆர்.பி.பராஞ்சபேயைவிட வேறு யாரும் சிறப்பாகச் செய்துவிடவில்லை எனத் துணிந்து கூறலாம். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளை முழுவதுமாக அளிப்பதில் மிக்க மனநிறைவு பெறுகிறேன்.

எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை
பம்பாய், சென்னை ராஜதானி மற்றும் மத்திய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த பிராமணர்கள் அல்லாத கட்சிகளுக்கு எதிராக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. அரசுப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு, வகுப்பினருக்கு மட்டும் ஏகபோகம் இருக்கக்கூடாது என்ற தெளிவான குறிக்கோளின் அடிப்படையில்தான் பிராமணர்கள் அல்லாதவர்களின் கட்சிகள் துவங்கப்பட்டன. இந்தியாவில் எல்லா மாகாணங்களிலும் சமஸ்தானத்தில் எல்லாத் துறைகளிலும் அரசுப் பணிகளில் அனேகமாக பிராமணர்களின் ஆதிக்கமே முற்றிலும் ஏகபோகமாக இருந்தது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று அறியப்பட்ட கொள்கையைப் பிராமணரல்லாத கட்சியினர் முன்வைத்தனர். அதாவது, குறைந்த தகுதியுடையவர்களை அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தும்போது பிராமண வகுப்பினரைச் சேர்ந்தவர்களைவிட பிராமணர்கள் அல்லாதவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற கோட்பாடுதான் அது. இந்தக் கொள்கையில் எந்தவிதத் தவறும் இருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட வகுப்பினரின் கைப்பிடியில், அந்த வகுப்பினர் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும், ஒரு நாட்டின் நிர்வாகத்தையே கொடுப்பது சந்தேகத்துக்கிடமின்றி தவறு என்று கூறலாம்.

ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது என்ற கருத்தைப் பிராமணர்கள் அல்லாதவர்களின் கட்சி கொண்டிருந்தது. ஆனால், இது சட்டமன்றத்துக்கும் ஆட்சித்துறைக்கும் மட்டுமே உரித்தான கொள்கையாக இருந்துவிடக் கூடாது. மாறாக, அது நிர்வாக விஷயங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வாகத்தின் மூலமே ஓர் அரசு மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. எந்த ஒரு நிர்வாகமும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்ய முடியாது. பிராமணர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்பட முடியாது. மற்ற பொதுமக்களைவிட தன்னை மேன்மையாகக் கருதுபவன் ஒரு பிராமணன்; மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியினர், சூத்திரர்கள் என்று இகழ்பவன், அவர்களுடைய விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, இயற்கையிலேயே தன் வகுப்பினருக்குச் சாதகமாகச் செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்குப் பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிராமணன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? மற்ற எந்த அன்னியர்களையும் போலவே அவனும்  இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே. இதற்கு மாறாக, சுத்த சுயம்புவான திறமையே எல்லாம் என்ற நிலையைப் பிராமணர்கள் எடுக்கிறார்கள். கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதன் காரணத்தால் இந்தத் துருப்புச் சீட்டைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். திறமை மட்டுமே அளவுகோலாக இருந்தால், அரசுப் பணிகளை இந்த அளவுக்கு ஏகபோகமாக வைத்திருக்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். திறமைதான் எல்லாவற்றையும்விட மிக முக்கியமானதென்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது துருக்கி நாட்டவரையோ, வேலைக்கு அமர்த்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இது இப்படியென்றால் பிராமணரல்லாத கட்சியினர், திறமை மட்டுமே எல்லாம் என்று மூடத்தனமாக அதைப் பின்பற்றக் கூடாது, அரசுப் பணிகளில் வகுப்புவாரி விகிதாசாரம் புகுத்தப்பட வேண்டும், நிர்வாகத்தில் எல்லா வகுப்பினரின், பிரிவினரின் கூட்டமைப்பும் இருந்தால்தான் அது ஒரு நல்ல நிர்வாகமாக அமையுமென்று அவர்கள் பதவியில் இருந்தபோது எண்ணினர். நிர்வாகத்தில் பிராமண ஆதிக்கத்தை நீக்கும் ஆர்வத்தில் இந்தக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவருவதில், அரசுப்பணிகளில் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதவர்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் குறைந்த அளவு திறமை என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் தங்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் மேற்கொண்ட கொள்கை பொதுமக்களின் நன்மைக்கு உகந்ததல்ல என்று இதற்கு அர்த்தமல்ல.

இந்தக் கொள்கை பிராமணர்களைப் பெருங்கோபத்திற்குள்ளாக்கியது. அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர். பிராமணர்கள் அல்லாத கட்சியினரின் கொள்கையைப் பற்றி டாக்டர் பரஞ்சிபே ஒரு மிகச் சிறந்த நையாண்டிச் சித்திரத்தை வெளியிட்டார். பிராமணர் அல்லாத கட்சியினரின் கொள்கைகளை அது பயங்கரமாக நையாண்டி செய்கிறது. அது வெளிவந்தபோது பல பிராமணரல்லாத தலைவர்கள் சினமுற்றதுடன் மௌனமாகிப் போயினர். டாக்டர் பரஞ்சிபே மீது எனது குற்றச்சாட்டு அதிலுள்ள நகைச்சுவையை அவர் பார்க்க மறுத்ததுதான்.
பிராமணரல்லாதவர்கள் கட்சி புதிதாக ஒன்றையும் செய்துவிடவில்லை. மனு ஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தைப் பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள். ஒருவன் பிராமணன் என்பதற்காகவே மனு அவனுக்குச் சலுகைகள் அளிக்கவில்லையா?

சூத்திரர்கள் உரிமைகள் பெறத் தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்ததால் அதைப் பற்றி, குறை கூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், இந்த விதிக்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான் அந்த உதாரணம். பிராமணர்கள் அல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும்? பிராமணர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால் மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மானவ தர்மத்தின் ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேயின் இந்தக் கட்டுரை. ஒரு சூத்திரனின் நிலையில் ஒரு பிராமணனை வைத்தால் அவன் எப்படி அதை எதிர்கொள்வான் என்பதை இதைவிட எதுவும் படம்பிடித்துக் காட்ட முடியாது.
இந்துக்கள் மட்டுந்தான் ஏற்றத்தாழ்வுக் கொள்கையைக் கொண்டிருந்தனர் என்று கூற முடியாது. மற்ற இடங்களிலும் இது நிலவியிருந்தது. இதுதான் சமுதாயத்தை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் சுதந்திரமானவர்கள் அடிமைகள் என்றும் பிளவுபடுத்தியது.

 -------------------------------டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் (நூல் தொகுப்பு: தொகுதி 25) என்ற நூலிலிருந்து.

14 comments:

J.Jeyaseelan said...

அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கர் இல்லையென்றால் ந்மது அரசியலமைப்பே முழுமை அடைந்திருக்காது... உண்மைத்தொண்டன் அம்பேத்கர் புகழ் ஓங்குக!!!

J.Jeyaseelan said...

அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கர் இல்லையென்றால் ந்மது அரசியலமைப்பே முழுமை அடைந்திருக்காது... உண்மைத்தொண்டன் அம்பேத்கர் புகழ் ஓங்குக!!!

தமிழ் ஓவியா said...


சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீது பவார் தாக்கு!

டில்லி.ஏப்.15- மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவ ருமாகிய சரத் பவார் சமூக வலைதளமான டிவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அப்பதி வில் சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப் பிட்டு, சிலர் ஹிட்லராக வருவதற்கு கனவு காணு கிறார்கள் என்று தாக்கி உள்ளார்.

காங்கிரசே இல்லாத நாடாக இந்தியா வரும் என்று மோடி கூறியிருந்தார். பவார் அதைக்கண்டித்துக் கூறும்போது, மனநல மருத் துவமனையில் இருக்க வேண் டியவர் என்று சாடினார்.

தற்போது சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஹிட்லராக உருவாக கனவு காண்கிறார் கள். அப்படிப்பட்ட சக்தி களை வெற்றிபெற அனும திக்கக் கூடாது. அப்படிப் பட்டவரின் முயற்சிகளை நசுக்கிட வேண்டும் என் றார். மராட்டிய மாநிலத்தில் விதர்பாவில் தொடர்ச்சி யான இரு கூட்டங்களில் மோடி பேசும்போது, விவ சாயிகளைப் பாதுகாக்க வில்லை என்று பவார்மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.

அதற்குப் பதிலடியாக பவார், நாம் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்று கூறுகிறோம். ஆனால், பாஜக தலைவர் கள் தனிப்பட்ட முறையில் பெண்களை கேலிப் பொரு ளாக்குகிறார்கள். நாட்டை எப்படி அவர்கள் நடத்து வார்கள்? என்று கேட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை, காங்கிரசு தேர்தல் அறிக் கையிலும் நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மோடியின் வரலாறு குறித் தும், அறிவு குறித்தும் கேலி செய்துள்ளார். காந்தி ஒத் துழையாமை இயக்கத்தை அகமதாபாத்திலிருந்து தொடங்கியதாக கூறாமல், வார்தாவிலிருந்து தொடங் கினார் என்றாரே என்று கேலி செய்துள்ளார். பவார் கட்சியான தேசியவாதக் காங்கிரசுக் கட்சி கடந்த பத்து ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணியான காங்கிரசு அணியில் 1999லி ருந்து அங்கம் வகித்து வருகிறது.
-ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14-4-2014, டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78727.html#ixzz2z0L42SVv

தமிழ் ஓவியா said...


இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின் குரல்!

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இடையில் எட்டு நாள்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இயற்கைத் தட்ப வெப்ப நிலையோடு போட்டிப் போட்டுக் கொண்டு அனல் பறக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர். தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று இரு கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் திரண்டு அவர் உரையைக் கேட்கிறார்கள்.

இவருடைய கருத்தும், உரையும் வித்தியாசமாகவே இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலின் தனித் தன்மை என்ன? என்பது குறித்துத் தமக்கே உரித்தான ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

ஒரு காலத்தில் ஜன சங்கமாக இருந்த அமைப்புதான் இன்றைய பாரதீய ஜனதா கட்சி; இதற்கு முன் தனது இந்துத்துவா திட்டத்தை இலை மறை காயாகத் தான் வைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற அவர்களின் தாய் நிறுவனம் பின்புலத்தில் இருந்தது. நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அது முன்னுக்கு வந்து, பிஜேபியைக் கட்டளையிடும் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கி விடும். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷியே அந்த உண்மையைப் பட்டாங்கமாய் ஒப்புக் கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் ஆலோசனைகளின்படிதான் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.

அதன் காரணமாக ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் இவை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதனையும் தாண்டி ஆர்.எஸ்.எஸின் முக்கிய கோட்பாடான பசுவதைத் தடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பசு பாதுகாப்புக்கென்று தனித் துறையே உருவாக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கென்றுள்ள சிறப்புச் சலுகைகளும் மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியம் என்கிற ஆர்.எஸ்.எஸின் அடிநாதக் கொள்கை என்பதை அரங்கேற்றக் கூடிய ஒரு திட்டத்தோடு தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்தக் கோணத்தில் தான் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் வழக்கம் போல வந்து போகும் தேர்தல் அல்ல; நமது தலை முறையைப் பாதிக்கச் செய்யக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைத்து இந்தத் தேர்தலைப் பார்க்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நாட்டில் மதக் கலவரங்களைத் திட்டமிட்டு அது நடத்தி வந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் மதக் கலவரங்களின் பின்னணியில் சங்பரிவார் இருந்திருக்கிறது என்பதை இந்தியாவின் உள் துறையே சொல்லியிருக்கிறது. காவி பயங்கரவாதம் என்ற ஒரு சொலவடையையே கூட உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் சொன்ன துண்டு.

மாலேகான் குண்டுவெடிப்பைக் கவனித்தால் சங்பரிவார்க் கும்பல் இந்திய இராணுவம் வரை ஊடுருவி இருப்பதை அறிய முடிகிறது. இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி மருந்தை இவர்கள் கையாண்டுள்ளனர். இது சாதாரணமானதல்ல; மிகப் பெரிய சதித் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே மிகப் பெரிய சதித் திட்டத்தை வகுத்து நாட்டில் கலவரத்தைச் செய்துள்ளது மதவெறிப் பிடித்த ஒரு கும்பல் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் எப்படி யெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸின் பாடத் திட்டங்கள் இடம் பெற்று விட்டன. மனு தர்மத்தைப் பாடமாக வைக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அரசு நிருவாகத் துறைகளிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி விட்டன. இராணுவத் துறையிலும் பெரும் அளவுக்கு ஊடுருவி விட்டதாக கப்பல் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் கூறியுள்ளார்.

ஏதோ வாக்குச் சாவடிக்குள் சென்று ஒரு பொத்தானை அழுத்துகிறோம் என்ற சம்பிரதாயக் கடமை என்று நினைக்காமல், இந்தியாவின் எதிர் காலத்தையே அச்சுறுத்தும், குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைக்கும், சமூக நீதிக்கும் எதிரான சக்திதான் பிஜேபி என்பதை மனதிற் கொண்டு அதனையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சி களையும் அடையாளம் கண்டு, ஒரே கல்லால் பல காய்களை வீழ்த்தும் வாக்களிப்புக் கடமையைச் செய்ய வேண்டும்; திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பிரச்சாரம், வேண்டுகோள் தமிழ்நாட்டு அளவில் இருந்தாலும் - இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படுவதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78730.html#ixzz2z0LO7v7r

தமிழ் ஓவியா said...


நிழல் யுத்தம்?


ஒரு வழியாக, ஜெயலலிதா பாஜகவை கண்டித்துவிட்டாராம்; ஓட்டு போடாதீர்கள் என்றும் சொல்லி விட்டாராம். கர்நாடகத்தில் காவிரி தண்ணீர் விடுவதற்கு, பாஜக, காங் கிரஸ் இரண்டுமே துரோகம் செய்து விட்டதை நேற்றுதான் கண்டுபிடித்தது போல எதிர்ப்பு காட்டுகிறார் ஜெயலலிதா. உடனே, மோடி சும்மா இருப்பாரா? ரஜினியை சந்தித்து டீ சாப்பிட்டுவிட்டு வந்தவர், தமிழ் நாட்டில் அதிமுக, திமுக இரண்டுமே அவர்களுக்குள் சண்டை போடுவதைத்தான் செய்கிறார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை என சொல்லிவிட்டார்.

எல்லோரும் சொன்னீங்களே. இருவரும் ஒருவரை ஒருவர் இது வரை தாக்கிப்பேசவில்லை என்று. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஜெய லலிதாவும் பாஜகவை கண்டித்து விட்டார்; மோடியும் அதிமுகவை கண்டித்து விட்டார்.

சரி; திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அதிமுக முடக்குகிறது என்பது ஊரறிந்த செய்தி. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக எப்போது முடக்கியது. அதிமுக புதிதாக ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை என்பதும் உண்மை. இரண்டையும் ஒரே தட்டில் வைத்து மோடி பேசு கிறார். இங்கே வைகோ, ராமதாஸ் இருவரும் கூறும் அதே கருத்தைத் தான் மோடியும் சொல்லி இருக்கிறார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

ஆட்சிக்கு வந்து மூன்றாண் டுகளில், ஜெயலலிதா ஒரு உருப்படி யான திட்டமும் கொண்டு வர வில்லை; சொத்துக்குவிப்பு வழக்கில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது அரசு வழக்கறிஞரால் ஆதாரத்துடன்;

முந்தைய பாஜகவின் ஆட்சிக்கு இடையில் ஆதரவை விலக்கியது என எதைப்பற்றியும் பேசாமல், திமுகவும், அதிமுகவும் ஒன்று என்பது போல போலியாக ஒரு அதட்டலை விட்டுச் சென்றுள்ளார் மோடி.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ராமர் கோவில், 370 பிரிவு, பொது சிவில் சட்டம் இதைப் பற்றி ஜெயலலிதாவின் நிலை என்ன? ஏற்றுக்கொள்கிறாரா அல்லது எதிர்க் கிறாரா? என்று சொல்லவில்லை.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி ஜெயலலிதா எதுவும் பேசவில்லை.

மாறாக, கர்நாடகத்தில் காவிரி தண்ணீர் பிரச்சினைப்பற்றி பாஜகவின் நிலைப்பாட்டைப்பற்றி இப்போது பேசுகிறார். கர்நாடகத்தில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான் என்று கூறும் ஜெயலலிதாவிற்கு ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும்.

இதே கர்நாடகத்தில் ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று எஸ்.ஆர். பொம்மை முதல்வராக இருக்கிறார். அதே ஜனதா தளத்தைச் சேர்ந்த வி.பி.சிங் மத்திய அரசில் பிரதமராக உள்ளார். தமிழ் நாட்டில் கலைஞர் முதல்வராக உள்ளார். கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, காவிரி நடுவர் மன்றம் அமைத்திட, எஸ்.ஆர். பொம்மை எதிர்ப்பையும் மீறி, வி.பி.சிங் அமைத்தார். அத்தகைய வி.பி.சிங் ஆட்சியை கண்டித்தவர் ஜெயலலிதா; வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது பாஜக ஆட்சி.

மோடியும், ஜெயலலிதாவும், இத்தகைய நிழல் யுத்தம் நடத்துவது தேர்தலுக்காகத்தான் என்பதுகூடவா தெரியாது மக்களுக்கு?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78733.html#ixzz2z0LY2t3D

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

- (விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78728.html#ixzz2z0LfXMr2

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட போராடிய பெண்

பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.

1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக் காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.

1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத் தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.

1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற் சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர் களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென போராடினர்.

1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கவுரவம் குலைக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினார். 1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சம உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வா றெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0NDX5gj

தமிழ் ஓவியா said...

முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்

சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம் பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர். நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம்.

எங்கள் வீட்டுக்கு நான் 8ஆவது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன்.

அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார். பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.

முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.

ஆனால், பார்வையற்றவர் களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராதாபாய்.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NVA32r

தமிழ் ஓவியா said...


அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் வழங்கியது பிஜேபி அரசாம் - மோடியின் பொய்யான தகவல்


இந்தியாவின் சட்ட மேதை பாபாசாகிப் அம் பேத்கரின் பிறந்த நாள் விழா வின் போது நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை கடு மையாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது: காங் கிரஸ் அரசு, அம்பேத்கர் வாதிகளையும், தலித்துக் களையும் அவமானப் படுத்தி அவர்களை அடி மைகளாக்கி வைத்துள்ளது என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் குஜராத் மாடல் அங்குள்ள தொழிலதிபர்களுக்குத்தான் அதிக லாபத்தை ஈட்டித் தந்திருக்கிறதே தவிர, அடிப்படை வசதிகள் கூட சாமானிய மக்களைச் சென்ற டையவில்லை, அங்குள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களின்நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது மோடி, தலித்மக்களை தேவை யற்ற குடிமகன்களாகவே கருதுகிறார், கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலித்துக்களின் நிலை மிக வும் மோசமானதாக மாறி விட்டது, என்று கூறினார்.

ராகுல்காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சந்தீப் சுரஜ்வாலா, மோடியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக் கும் போது கூறியதாவது இந்தியா முழுவதும் இத்தேசத்தின் அரசியல் சாசன தந்தையை கொண் டாடிக்கொண்டு இருக்கும் போது நரேந்திரமோடி, தலித் விரோத மனப்பான் மையை வெளிப்படுத்து கிறார்.

அவர் தலித்துகளை மனதால் பாதிக்கப்பட்டவர் கள் என்றும், தலித்துகளின் குணம் என்றும் மாறாத ஒன்று என்றும் பழித்துக் கூறுகிறார். மோடி எழுதிய கர்ம யோக் என்ற நூலைப் பற்றி சுரஜ்வாலா, மோடி தனது நூலில்(48, 49 ஆம் பக்கத்தில்) தூய்மைப் பணியாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தூய் மைப்பணியாளர்களின் முன்னோர்கள் மனித மலங்களை அள்ளுவதை கடவுளுக்குச்செய்யும் பணியாகக் கருதினார்கள், ஆகவே அவர்கள் முகம் சுழிக்காமல் தங்கள் பணி களை பயபக்தியுடன் செய்து வந்தனர். அவர்களின் நோக்கமே சமூகத்திற்கு ஆற் றும் தொண்டுதான், கட வுளுக்கு ஆற்றும் தொண்டு என்று கருதினர்.

ஆகவே இந்தத் தொழிலை நூற்றாண்டு களாக பயபக்தியுடன் செய்து வந்தனர். இந்தப் பணியை, ஆன்மீகப் பணியை விட மேன்மை யான பணி என்று கருதலாம். இந்த நிலையில் தூய்மைப்பணியாளர்களை வேறு ஒரு பணிக்கு அமர்த் துவதோ அல்லது அவர் களாக வேறு ஒரு பணியைத்தேர்ந்தெடுப்பதோ, கடவுளுக்குச் செய்யும் விரோதமான காரியமாகும் என்று எழுதியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிவிழாவில் கலந்துகொண்ட போது மோடி கூறியதாவது; மனவளர்ச்சி குன்றிய வர்கள், தலித்துகளைப்போன்றவர்கள், அவர்களுக்கும் உங்களைப்போன்று சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் கண்காணிப்பில் வைக்கப் படவேண்டியவர்கள், என்று கூறினார். மோடியின் இந்தப் பேச்சு எவ்வளவு கீழ்த்தரமானது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான எந்த ஒரு திட்ட வரைமுறையையும் முன்வைக்க வில்லை என்றார். மீண்டும் பொய்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது, வாஜ்பாய் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்கிறார் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியது, வி.பிசிங் தலைமையிலான அரசு. இது அனைவருக்கும் தெரிந்த பொதுவான செய்தியாகும்

Read more: http://viduthalai.in/e-paper/78763.html#ixzz2z6IgEwqO

தமிழ் ஓவியா said...


பாஜ ஆட்சியமைத்தால் மதக்கலவரம் வெடிக்கும்: ப. சிதம்பரம்


காரைக்குடி, ஏப். 16-பாஜ கையில் ஆட்சி சென்றால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்தார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்குகள் சேகரித்து காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள்பட பல்வேறு பகுதிகளில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய அரசை அமைக்கக்கூடிய சக்தி, வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. 1999இல் பாஜ ஆட்சி அமைத்து, இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி மீண்டும் தேர்தலை சந்தித்தது. ஆனால் தோல்வியையே சந்தித்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜ முகமூடியுடன் வருகிறது. இது மத, மொழி வெறியர்கள் நடத்தும் நச்சு இயக்கம். பாஜ சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆர்.எஸ்.எஸ். நினைத்தது எல்லாம் பாஜ தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் என்று கூறி தடுத்தவர்கள். இவர்கள் கையில் ஆட்சி சென்றால் மதக்கலவரம் ஏற்படும். பாஜ தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து சொல்லவில்லை. இவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.

இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

மோடியின் போலி வாக்குறுதிகளால் நல்லது நடக்காது: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர், ஏப். 16-''பா.ஜ.க.வின் போலியான வாக்குறுதிகள் நாட்டிற்கு எந்த நன்மையையும் அளிக் காது. ராகுல் காந்தியின் வளர்ச்சிக்கான பாதைகளும், திட்டங்களுமே நாட்டிற்கு நன்மையை வழங்கும்'' என முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மோடி இருவரும் வழங்கி வரும் போலியான வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவர்கள் தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனது பேச்சுக்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மோடி, போலி வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் பதவி நாற்காலியை அடைவதையே தனது குறிக் கோளாக கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான எந்த மாற்றுத் திட்டங்களும் அவரிடம் இல்லை. அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்.' என்றார்.

குஜராத்தில் பெண்களின்
தொலைபேசி ஒட்டு கேட்பு
மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புனே, ஏப்.16- பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பெண் அதிகாரம் பற்றி பேசி வரு கிறார். ஆனால், அங்கு பெண்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்று காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட் டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதமை ஆதரித்து நடந்த நேற்று பிரச்சாரக் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது: குஜராத் முதலமைச்சர் பெண்களின் தொலை பேசியை ஒட்டுக்கேட்கிறார். அம்மாநில காவல் துறையினர் பெண்களை வேவு பார்ப்பதற்காக அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளட்டும். அதன்பின்னர் அவர்கள் பெண் அதிகாரம் பற்றி பேசலாம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளன. ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் இது மிக, மிக குறைவாக உள்ளது. சட்டீஸ்கரில் 20,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

நரேந்திர மோடி தன்னுடைய ஒரு பொதுக் கூட்டத்துக்கு 10கோடி செலவழிக்கிறார். இதுதவிர கூட்டத்தை பிரபலப்படுத்த பத்திரி கைகளில் பெருமளவில் பணம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த பணம் முழுவதும் குஜராத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் மிட்டாயை போன்றதுதான். இதன் மூலம் ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைந் துள்ளனர் என்றார்

Read more: http://viduthalai.in/e-paper/78764.html#ixzz2z6Ixw200

தமிழ் ஓவியா said...


குழப்பத்தின் உச்சியில் முதல் அமைச்சர்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென்று சில புதிய சொற்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவரும் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தைத் தொடங்கியவர் அவர்.

அ.இ.அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும், பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரிலும், காங்கிரசும் போட்டியிட்டாலும் இதுவரை திமுக பற்றியும், காங்கிரஸ் பற்றியுமே காரசாரமாக எழுதிப் படித்து வந்தார். பிஜேபியைப் பற்றி ஏன் அவர் வாய்த் திறக்கவில்லை? மோடியைப்பற்றி ஏன் விமர்சிக்கவில்லை? என்ற வினா பல தரப்பிலும் எழுந்து வந்தது; ஏடுகளும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தன.

பிஜேபிக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையே மறைமுகமான கூட்டு இருப்பதுதான் இதற்குக் காரணம் என்ற நியாயமான விமர்சனங்கள் வெளி வர ஆரம்பித்தன.

மிகவும் காலந்தாழ்ந்து இப்பொழுதுதான் பிஜேபி யைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்ஜெயலலிதா. பிஜேபியுடன் மறைமுகக் கூட்டு என்ற கருத்து வெடித்துக் கிளம்பிய நிலையில், அது தமக்குப் பாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக பிஜேபியை எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். பி.ஜே.பி. காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று கூடக் கூறுகிறார். அதே நேரத்தில் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நரேந்திர மோடியும் முதன் முதலாக திமுகவோடு இணைத்து அஇஅதிமுக-வையும் சாடியுள்ளார் ஜெயலலிதாவும், மோடியும் சொல்லி வைத்துக் கொண்டு பேசுவதுபோல பேசி இருக்கிறார்கள்.

அது எப்படியோ போகட்டும்; அ.இ.அ.தி.மு.க, பொதுச் செயலாளர் என்ன காரணம் கூறி பி.ஜே.பியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறுகிறார்?

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் காவிரி நீர்ப் பற்றியோ, முல்லைப் பெரியாறு பிரச்சினைபற்றியோ, இலங்கைத் தமிழர் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ, கச்சத் தீவைப் பற்றியோ குறிப்பிடப்பட வில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பிஜேபியை எதிர்ப்பதாகக் கூறுகிறார் ஜெயலலிதா.

அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை தேர்தல் கூட்டங்களில் எழுப்பிய வினாவுக்கு அம்மையாரிட மிருந்து விடை இல்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இந்துத்துவா அஜண்டாபற்றி முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?

ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கென்று உள்ள சிறப்புத் தகுதிகளை உறுதிபடுத்தும் அரசமைப்புச் சட்டம் 370ஆவது நீக்கம் குறித்து ஜெயலலிதா அம்மையாரின் கருத்து என்ன? என்ற வினாவைத் தமிழர் தலைவர் எழுப்பியுள்ளார்.

இந்த முக்கியமான வினாவுக்கு விடையளிக்காமல், வேறு பிரச்சினைக்குச் செல்லுகிறார் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர். இதன் மூலம் பிஜேபியின் இந்துத்துவா கொள்கையோடு ஒத்துப் போகிறார் என்று பொருள். இந்த ஆபத்தான போக்கை தமிழக வாக்காளப் பெரு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் கணிப்புகள் சில நாட்களாக, அஇஅதி முகவுக்குப் பாதகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் பிஜேபியைப்பற்றி இந்த அளவுக்காவது பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

திடீரென்று காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளின் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த மூன்றாவது அணியைச் சுக்கல் நூறாக நொறுக்கிய அம்மையாரா அது குறித்துப் பேசுவது? இடதுசாரிகள் இப்பொழுது என்ன நினைப்பார்கள்?

இந்த அம்மாவுக்கு என்னாச்சு? மூன்றாவது அணிக்காகத் தானே இந்த அம்மையாரோடு கூட்டணி வைக்க முயற்சித்தோம், இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்துக் கொண்டவர் அஇஅதிமுக பொதுச் செயலாளர் தானே! இந்த நிலையில் மூன்றாவது அணியைப்பற்றிப் பேசுகிறாரே - இது என்ன குழப்பம்! இந்த அம்மாவுக்கு என்று தெளிவான திட்டவட்டமான சிந்தனை ஏதும் கிடையாதா? என்று இடதுசாரிகள் மட்டுமல்ல; விவரம் தெரிந்த எவரும் அவ்வாறு கருதவே செய்வார்கள்.

ஆக அம்மையார் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது; தோல்விப் பயம் காரணமாக நேற்று என்ன சொன்னோம், இன்று என்ன சொல்லுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட குழப்பவாதியை வெற்றியடையச் செய்தால் நாடுதான் குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்; முன்னுக்கு பின் முரணாகப் பேசும் அம்மையாருக்கு இந்தத் தேர்தலில், தக்க பாடத்தைப் போதிப்பது தமிழக வாக்காளர்களின் முக்கியக் கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78767.html#ixzz2z6JEic00

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78766.html#ixzz2z6JWkho4

தமிழ் ஓவியா said...


இந்து அலுவலகத்தில் மாமிச உணவு சாப்பிடக்கூடாதாம்!

தி ஹிந்து (பிரபல ஆங் கிலம் மற்றும் புதிதாக துவங் கப்பட்ட தமிழ் பத்திரிகை யின் தலைமையகமாக இருக் கும் சென்னை அலுவலகத் தின் கேண்டீனில் சாப்பிடுபவர்கள் பெரும்பான்மை யானவர்கள் சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களாம்; அவர் கள் பிற பணியாளர்கள் கொண்டுவரும் அசைவ உணவுவகைகளின் வாசனை யை சகித்துக் கொள்ள முடி யாத காரணத்தால் சங்கடத் திற்குள்ளாகின்றனராம்..

அதனால் மாமிச உணவு சாப்பிடும் தி ஹிந்து(அந்த பத்திரிகை பணியாளர்கள் எந்த காரணம் கொண்டும் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் மாமிச உண வை கேண்டீனுக்கு கொண்டு வராதீர்கள் என்று எச்சரித் திருக்கிறார்.

தி ஹிந்து பத்திரிகை அலுவலகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் துணைத்தலைவர் சிறீதரன்..

மாமிச உணவை தி ஹிந்து கேண்டீனுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஏற் கெனவே இருக்கும் தடையையும் அவர் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருக்கிறார் ஊருக்கெல்லாம் சமத்துவத்தையும், மதச்சார் பற்ற அரசியலையும் போ திக்கும் தி ஹிந்து அலுவலக கேண்டீனில் அசைவ சாப் பாட்டுக்கு இடமில்லை;

மாமிசம் சாப்பிட தடை இருக்கிறது அதை மீறாதீர்கள் என்று கடுமையாக எச்சரிக் கும் சுற்றறிக்கை அனுப்பு கிறார் அதன் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.

அப்படியானால்தி ஹிந்துவில் பணிபுரியும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான அசைவ சாப்பாட்டாளர்கள் தங்கள் உணவை எங்கே சாப்பிடுவது என்கிற நியாயமான கேள்விக்கு பெரும்பான்மை மரக்கறியாளர்களின் அசவுகரியம் பற்றி கவலைப்பட்ட சிறீதரன் பதில் சொல்ல வில்லை. ஒரு வேளை மாமிசம் சாப்பிடுபவர்கள் மனிதர் களே அல்ல என்று நினைத்து விட்டார்களோ!

Read more: http://viduthalai.in/page-2/78787.html#ixzz2z6KLh9Y8

தமிழ் ஓவியா said...


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து சலுகைகள் வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஏப்.16-திரு நங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட் டியலில் சேர்த்து அவர் களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருநங்கைகளை மூன் றாம் பாலினமாக அங்கீ கரித்து அவர்களுக்கு மற்ற வர்களைப் போல் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகை களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல் எஸ்ஏ) பொது நலன் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

ஆண், பெண் என்ற பாலினங்களுக்கு அடுத்த படியாக மூன்றாம் பாலின மாக திருநங்கைகளை பட்டி யலில் சேர்க்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களும் நாட்டின் குடி மக்கள்தான். அவர்களுக்கு மற்றவர்களை போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உட்பட அரசின் அனைத்து சலுகைகளை பெற சம உரிமை உண்டு. சமூகத்தில் முன்பு திருநங் கைகள் மதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் பிரிக்கப் பட்டு அவர்கள் தொந்தர வுக்கு ஆளாகின்றனர்.

இந்திய தண்டனை சட் டத்தின் 377 ஆவது பிரிவும் திருநங்கைகளுக்கு எதிராக காவல்துறையினரால் தவ றாக பயன்படுத்தப்படு கிறது. அவர்களின் சமூக பொருளாதார நிலை திருப்தி கரமாக இல்லை.

அவர்கள் சமூகத்தின் ஒரு பங்கு என் பதால், அவர்களுக்கும் வாக் காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரி மம் உள்ளிட்ட அனைத்து உரிமைகள், சலுகைகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவு திருநங்கைகளுக்கு மட் டுமே பொருந்தும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பொருந்தாது. - இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த உத்தரவை வர வேற்றுள்ள திருநங்கைகள் உரிமை அமைப்பை சேர்ந்த லட்சுமி நாராயண் திரிபாதி, மனித உரிமையை அடிப் படையாக வைத்துதான் நாட்டின் முன்னேற்றமே உள்ளது. எங்களுக்கு சம உரிமை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி ருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-5/78755.html#ixzz2z6Kcgvl9