Search This Blog

14.4.14

பெரியார் அம்பேத்கருக்கு கொடுத்த தந்தி

[புரட்சியாளர் அம்பேதர் பிறந்த நாள் ஏப்ரல் 14, 1891  நினைவாக  இக்கட்டுரை பதிவிடப்படுகிறது. தென்னாட்டின் அம்பேத்கர்- பெரியார்; வடநாட்டின் பெரியார்-அம்பேத்கர் என்று போற்றப்படும் அளவுக்கு இருபெரும் தலைவர்களும் ஒத்த சிந்தனையாளர்கள்.  படியுங்கள்.பரப்புங்கள். தமிழ் ஓவியா வலைப்பூ அனைவருக்கும் அம்பேத்கர் பிறந்தாள் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது-நன்றி]தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை
இப்போதுதான் புத்தி வருகிறது

தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ளவர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார். அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும் 6 கோடி மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும் ஒன்றையும் லசயம் செய்யாமல் தங்களை சிலர் மதித்து அழைத்து கெஞ்சிப் பேசுகிறார்கள் என்கின்ற மமதையில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டு தங்கள் உரிமையைப் பறிகொடுத்து விட்டார்கள்.

வாதாடி உரிமை வாங்கிக் கொடுப்பது ஒரு கூட்டம், அதை தட்டிவிட்டு வாயில் போட்டுக்கொண்டு போவது மற்றொரு கூட்டம் என்பதாக ஆகிவிட்டது. இதிலிருந்து இன்றுள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரத்தோடு வாழ தகுதி அற்றவர்கள் என்பதும் அவர்கள் இன்னும் இரண்டு கோடி அதிகமாய் இருந்தாலும் அரசாங்கத்தின் பாதுகாவலில் இருக்கத்தான் தகுதி உடையவர்கள் என்றும் விளங்குகிறது. அவ்வகுப்பில் புத்திசாலிகள் முன் யோசனைக்காரர்கள் ஒருவர் கூட இல்லை என்பதாக விஷயங்கள் வெளியாகிவருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து விட்டார்கள். தோழர்கள் அம்பத்கார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் முதலியவர்கள் எல்லோருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழுக ஆரம்பித்து விட்டார். ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது.

தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் கவனமாய் படிக்க விரும்புகிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

அதாவது,

"காங்கிரஸ் கேட்கும் உறுதி மொழியைக் கொடுப்பதானது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்ற சிறுபான்மை வகுப்பாரையும் கொடுமைப்படுத்த காங்கிரஸ்காரருக்கு சர்க்கார் காட்டிக் கொடுத்ததாகும்."

"ஷெடியூல் வகுப்பாரின் (தாழ்த்தப்பட்ட மக்களின்) கல்வியில்லாத் தன்மையையும் ஏழ்மைத் தன்மையையும் காங்கிரசார் தங்களுக்கு சாதகமாய் உபயோகித்துக் கொண்டு 30 ஸ்தானங்களில் 26 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள்."

"காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கப்படும் என்று சொல்லி மிராசுதாரர்களை சுவாதீனம் செய்துகொண்டு அவர்கள் மூலமாகவும் தொண்டர்கள் மூலமாகவும் மிரட்டி பயமுறுத்தி ஓட்டு வாங்கி விட்டார்கள்."

"இந்த அயோக்கியத்தனங்களை போலீசு, கிராம உத்தியோகஸ்தர்கள், மற்ற அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை."
"பூனா ஒப்பந்தத்தை கவுரவிப்பதற்குப் பதிலாக அதை மோசம் செய்து விட்டார்கள்".

"தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலை எடுத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் பல தொல்லை விளைவித்து விட்டார்கள்."
"சில உபாத்தியாயர்கள் வெகு தூரம் மாற்றப்பட்டார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சில குடிசைகள் கொளுத்தப்பட்டன. சிலர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப் பட்டனர். சிலரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் நிறுத்தப்பட்டன. மற்றும் அளவற்ற கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள்." "கூட்டுத் தொகுதி வேண்டியதில்லை. தனித்தொகுதி மூலம் 18 ஸ்தானமே போதுமானது." "பெருத்த கிளர்ச்சி செய்து சீக்கிரத்தில் கூட்டுத்தொகுதி முறையை ஒழிக்க வேண்டும்." "காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி ஏற்காமல் செய்ததற்கு கவர்னருக்கு நன்றி செலுத்துகிறேன்" என்றும் இன்னும் இதுபோன்ற முக்கிய விஷயங்களும் தோழர் ஆர். சீனிவாசன் அவர்கள் அறிக்கையில் மலிந்து கிடக்கின்றன.

இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு காங்கிரஸ்காரர்கள் இதுவரை யாதொரு பதிலும் சொல்லவில்லை.

எனவே தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் தலைவர்களும் இனியும் ஏமாந்துவிடாமலும் ஒரு துண்டுரொட்டிக்கு மானத்தை விற்றது போல் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக மானங்கெட்டு மதிகெட்டு இழிவடைந்து காங்கிரஸ்காரர்களின் கால்களை நக்கிக்கொண்டு திரியாமலும் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

------------------ தந்தைபெரியார் - “குடி அரசு” - துணைத் தலையங்கம் - 09.05.1937

19 comments:

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளி வந்த நிலையில் வாக்காளர்களின் மனப்பான்மையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பாரக்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பி.ஜே.பி. வெளியிட்டு இருப்பது மக்களிடம் வாக்குறுதி கொடுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாகத் தெரிய வில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நெடு நாளாகக் கூறி வந்துள்ள ஹிந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பதற் கான அதிகாரப் பூர்வ அறிவிப்பாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையை நினைக்க வேண்டும்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அதற்குப் பதிலாக ஹிந்து ராஜ்ஜியத்தின் சட்ட திட்டங்களை அறிவித்துள்ளார்கள். எந்த இடத்திலும் மதச் சார்பற்ற தன்மையைக் காப்போம் என்ற உறுதி மொழி இல்லை.

அதே நேரத்தில், மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரான செயல் திட்டங்களைப் பதிவு செய்துள்ளனர். ராமன் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள தனி சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் 370ஆம் பிரிவு நீக்கம், பசுவதைத் தடுப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்துக் களுக்குப் பாதுகாப்பு (அதற்கென்றே தனித்துறை), வடகிழக்கு மாகாணத்தில் கடைப்பிடிக்கப்படும் பிரத்தி யேக வாய்ப்புகள் பறிப்பு (அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்!) இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஹிந்துத்துவா செயல் திட்டங்களே!

இவற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் பிஜேபியை எதிர்த்தால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது; மதச் சார்பின்மையைத் தகர்க்கும் ஓர் அரசியல் சட்டம் மக்களை மிகப் பெரிய அளவில் செங்குத்தாகப் பிளந்து எறிந்து விடும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மதமாச்சரிய நெருப்பை ஊதிவிட்டு கலகம் விளைவிப்பதை கலையாகக் கருதும் ஓர் மனப்பான்மை வந்து குதித்து விடும். சமூக அமைதி என்பது மயானத் தில் மட்டும்தான் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும்.

இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற கருத்துக்கு இடமில்லாமல் ஒட்டு மொத்தமான சமுதாயமே அமைதியைத் தொலைத்து விடக் கூடிய அபாயம் தலைக்கு மேல் வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகள் மோடியைப் பிரதமராக் குவதற்கு சுயநலவெறி காரணமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சமுதாயத்தை மத ரீதியாகக் கூறு போட்டு மக்களின் வளர்ச்சிப் போக்குக்கு மரண குழி வெட்டும் வேலை! பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பிஜேபி கூறும் ஹிந்துத்துவாவை ஏற்கிறார்களா என்பது பிரச்சினையல்ல; பிஜேபி ஆட்சி அமைக்குமானால் அந்தப் பெரும்பான்மை மக்களின் சகல வாழ்வும் சுக்கு நூறாகி விடும் என்பதை மறந்து விடக் கூடாது பெரும்பான்மை என்ற போர்வையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் கைதான் ஓங்கும் - மீண்டும் மனுதர்மமே கோலோச்சத் தொடங்கும். இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததைத் தெரிந்துகொண்டால் இந்தச் சூட்சுமத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதியிலே அக்கறை உள்ளவர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மோடியின் தலைமை யில் அணி வகுத்து நிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையே (என்.டி.ஏ.) ஒட்டு மொத்தமாக வீழ்த்திட முனைய வேண்டும். விவரம் தெரியாமல் வழக்கம் போல வந்து போகும் ஒரு பொதுத் தேர்தல் என்று மேம்போக்காகக் கருதிக் கொண்டு, கோட்டை விட்டால், சமூகநீதியின் அஸ்திவாரமே கலைந்து போய் விடும் எச்சரிக்கை!!

சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை, மாச்சரியங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, இப்பொழுது தேவை ஒட்டு மொத்தமான சமூக நீதி, மதச் சார்பின்மை என்பதை மனதிற் கொண்டு, ஒரு மூச்சுப் பிடித்து பிற்போக்கு அணியை ஊதித் தள்ளிட வேண்டும். நம்மில் சில மனிதர்கள், அமைப்புகள் பதவிப் பசி எடுத்து வித்தாரம் பேசுவார்கள் நீட்டி முழங்குவார்கள்; அந்த மத்தாப்பு வெளிச்சத்தில் மனதைப் பறி கொடுத்து அஸ்திவாரத்திற்குத் தங்களுக் குத் தாங்களே வேட்டு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் வேண்டுகிறது - அதன் தலைவர் குரல் கொடுக்கிறார்.

திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை என்பதை நினைவிற் கொள்வீர்!

Read more: http://viduthalai.in/page-2/78680.html#ixzz2yufpIX3Z

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும். - விடுதலை, 22.9.1972

Read more: http://viduthalai.in/page-2/78679.html#ixzz2yug2fqcF

தமிழ் ஓவியா said...


குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!


நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை முரளி மனோகர் முண்டா தட்டுகிறார்

புதுடில்லி, ஏப்.14-நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலை வர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன் னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர் தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட் டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பார தீய ஜனதாவின் பிரதிநிதி யாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரி விக்கிறார்கள். நாடு முழுவ தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசு கிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாகக் கருத முடியாது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அபிவிருத்தியில் எந் தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்ற னவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட் டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சி யின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதல்அமைச்சரால் எடுக் கப்பட்ட முடிவு. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

அவர் இவ்வாறு கூறி இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78674.html#ixzz2yugpLe00

தமிழ் ஓவியா said...

புதுமாப்பிள்ளை போல பிரதமராவதற்கு அவசரப்படும் மோடி: சரத் பவார் காட்டம்

மும்பை, ஏப்.14- பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராவதற்கு புதுமாப்பிள்ளை போல அவசரப்படுகிறார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் அருகே காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானேயின் மகன் நிலேஷ் ரானேயை ஆதரித்து பிரச்சாரம் செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:- புதுமாப்பிள்ளை எப்படி திருமணம் செய்து கொள்ள அவசரப்படுவாரோ அதைப் போன்று பிரதமராவதற்கு நரேந்திர மோடி அவசரப்படுகிறார். குஜராத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் பலர் மோடியை விட நன்றாக ஆட்சி செய்திருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் பொரு ளாதாரம் 18 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந் துள்ளது. குஜராத் மக்களின் கடின உழைப்பிற்கான பலனையும், பெருமையையும் மோடி எடுத்துக் கொண்டு விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuh2di74

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா

சிம்லா, ஏப். 14- நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை. பா.ஜ.க. ஊடகங்களின் விளம்பரம் மூலம் மோடி அலை இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா இன்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், நாட்டில் பாதியளவில் கூட பா.ஜ.க. இல்லை. மோடி அலையை உருவாக் கும் ஊடக விளம்பரங்கள் கிராமப்புறங்களில் சென் றடைய வில்லை. ஏனென்றால் களத்தில் உண்மை நிலவ ரங்கள் வேறுபட்டுள்ளன.

அறிக்கைகளின் படி, பா.ஜ.க. ஊடக பிரச்சார விளம்பரங்களுக்காக பல கோடிகளைச் செலவு செய் துள்ளது. ஆனால் காங்கிரஸ், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே வாக்குகளை கேட்கும். இமாசல பிரதேசத்தின் 4 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். என்றார்.

மேலும், பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தன்னுடைய புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்த அவர், அது முற்றிலும் கற்பனையானது, உண்மையான தகவல்களின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதப்படவில்லை. வணிக லாபத்திற் காகவே அது எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளி யிட்டிருந்தாலும், சஞ்சய பாரு தேர்தல் நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது கேள்விக் குரியது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhAC5n5

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது: மம்தா

கொல்கத்தா, ஏப். 14-தேர்தல் கருத்துக் கணிப் புகள் பிரதமர் பதவிக்கான போட்டியில் நரேந்திர மோடி முன்னிலையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது, அரசியலமைப்பில் அது போன்ற ஒன்றே கிடையாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் அவர் தெரிவித்ததாவது:- பிரதமர் வேட்பாளர் என்பது கற்பனையான கருத்து, அது போன்ற எதுவும் அரசியலமைப் பிலேயே கிடையாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்கள் நாடாளுமன்ற பிரதிநிதி களைத் தேர்வு செய்கின்றனர். அந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் பிரதமரை தேர்வு செய்கின்றனர்.

ஊழல், குடும்ப அரசியல், மதவாதம், ஆகிய வற்றை எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. ஆனால் இதனை செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தவறிவிட்டது. காங்கிரஸ் நாட்டை ஆட்சி செய்வ தற்கு தேவையான நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நன்னடத்தை ஆகிய அனைத்தையும் இழந்து விட்டது. மீண்டும் நம்மால் ஊழல் மிகுந்த அர சையோ, மதக்கலவரங்களை தன்னுடைய முகமாக கொண்டிருக்கும் அரசையோ ஆட்சிக்குக் கொண்டு வர முடியாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டு கட்சிகள் வெல்லும் இடங்களை கூட்டினால் 273 இடங் களுக்கு கீழேயே இருக்கும். இதுதான் இன்றைய அரசியல் உண்மை. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் இந்தியாவை விற்பதற்கான அரசையே அமைக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. மாற் றுக்கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhGf5jk

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒன்றைச் சொல்லிக் கொண்டு வருகிறார். தி.மு.க.வினரை விரட்டி அடியுங்கள் - விரட்டி அடியுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பொது மக்கள் அப்படியே அட்சரம் பிறழாமல் செய்கிறார்கள்.

தேனியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மக்கள் விரட்டியடித்தனர். கரூரில் தம்பித்துரையை விரட்டியடித்தனர். சொன்னவர் முதல் அமைச்சர் அல்லவா? குடி மக்கள் கேட்க வேண்டாமா? - (பொது மக்கள் கைதட்டி சிரித்தனர்). அதைத்தானே குடி மக்கள் செய்கிறார்கள்!

- ஆற்காடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/78676.html#ixzz2yuhMvMhQ

தமிழ் ஓவியா said...

நீலகிரி தொகுதியில் - அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு

12.4.2014 அன்று மாலையில் வந்த பத்திரிகை. பா.ஜ.க. கூட்டணியை உருவாக்குகிறேன் என்று ஒருவர் சொன்னார் - தமிழருவி மணியன். அவர் போகாத கட்சியே இல்லை. ஏராளமான கட்சிகளுக்கு ஒரு ரவுண்ட் போய்விட்டார். இனிமேல் போவதற்குக் கட்சியில்லை என்பதால் அவரே ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்.

அவர் சொல்கிறார்:

நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்குத்தான் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு என்று சொல்கிறார்.

ஆகவே, இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரியார் சொல்வதைப்போன்று பூனைக்குட்டி வெளியே வந்தது. கோணிப்பையில் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்தது.
பா.ஜ.க. அறிவிப்பா?

இது பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பா? என்று கேட்கலாம். இவர் (தமிழருவி மணியன்) தானே முன்னே நிற்கிறார். இதை இல்லை என்று அவர்கள் மறுக்கப்பட்டுமே! அவர் சொன்னது சொந்தக் கருத்து என்று மறுக்கவேண்டுமே! இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கிறோம். இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு பேரும் ஒன்றுதான். முன்பாகம், பின்பாகம். முன்பாகம் நாயக்கர் குதிரை; பின்பாகம் ராவுத்தர் குதிரை அவ்வளவுதான். குதிரை ஒன்றுதான்; நீங்கள் தடுமாறக் கூடாது.

இரண்டு பேரிடமும் அதே மதவாதம். ராமர் கோவில் திட்டம். ஒரே பிரச்சினை இருவரிடமும். ஆகவே, இவர்கள் வேறு திட்டம் போட்டிருப்பதை எண்ணி கவலைப்படவேண்டாம்.

Read more: http://viduthalai.in/page-4/78693.html#ixzz2yuiHx75W

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்து வதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகப் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். வாழைத் தண்டுக்கு சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவ டையும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulSPSj4

தமிழ் ஓவியா said...


மூலிகைகளால் நமக்கு ஏற்படும் மருத்துவப் பயன்கள்

மிளகையும், வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல், நீர்க்கோவை ஆகியவை குண மாகும். சீரகத்தையும், கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

நான்கு மிளகையும், இரு கிராம் பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றி லையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குண மாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஒதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெய்யை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரியையும், திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து, தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து, டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங் காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டை யும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்சவேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulde500

தமிழ் ஓவியா said...


மோடி பற்றி கலைஞர் கருத்து

சென்னை, ஏப்.15- திமுக - அதிமுக பற்றி மோடி தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:

செய்தியாளர்: நேற்றைய தினம் மோடி ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததைப் பற்றி, ரஜினிகாந்த் அவரை நல்ல நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ நோ கமெண்ட்ஸ், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்: இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?

கலைஞர்: நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.

செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?

கலைஞர்: அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகி விட்டது. ஆகவே எங்களைச் சாடுகிறார்கள்.

செய்தியாளர்: முதன் முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சி களுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: தமிழ்நாட்டில் முதன் முதலாக பிரச் சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன் முதலாக வெளியிட் டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78726.html#ixzz2z0KhxsRx

தமிழ் ஓவியா said...


சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீது பவார் தாக்கு!

டில்லி.ஏப்.15- மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவ ருமாகிய சரத் பவார் சமூக வலைதளமான டிவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அப்பதி வில் சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப் பிட்டு, சிலர் ஹிட்லராக வருவதற்கு கனவு காணு கிறார்கள் என்று தாக்கி உள்ளார்.

காங்கிரசே இல்லாத நாடாக இந்தியா வரும் என்று மோடி கூறியிருந்தார். பவார் அதைக்கண்டித்துக் கூறும்போது, மனநல மருத் துவமனையில் இருக்க வேண் டியவர் என்று சாடினார்.

தற்போது சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஹிட்லராக உருவாக கனவு காண்கிறார் கள். அப்படிப்பட்ட சக்தி களை வெற்றிபெற அனும திக்கக் கூடாது. அப்படிப் பட்டவரின் முயற்சிகளை நசுக்கிட வேண்டும் என் றார். மராட்டிய மாநிலத்தில் விதர்பாவில் தொடர்ச்சி யான இரு கூட்டங்களில் மோடி பேசும்போது, விவ சாயிகளைப் பாதுகாக்க வில்லை என்று பவார்மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.

அதற்குப் பதிலடியாக பவார், நாம் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்று கூறுகிறோம். ஆனால், பாஜக தலைவர் கள் தனிப்பட்ட முறையில் பெண்களை கேலிப் பொரு ளாக்குகிறார்கள். நாட்டை எப்படி அவர்கள் நடத்து வார்கள்? என்று கேட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை, காங்கிரசு தேர்தல் அறிக் கையிலும் நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மோடியின் வரலாறு குறித் தும், அறிவு குறித்தும் கேலி செய்துள்ளார். காந்தி ஒத் துழையாமை இயக்கத்தை அகமதாபாத்திலிருந்து தொடங்கியதாக கூறாமல், வார்தாவிலிருந்து தொடங் கினார் என்றாரே என்று கேலி செய்துள்ளார். பவார் கட்சியான தேசியவாதக் காங்கிரசுக் கட்சி கடந்த பத்து ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணியான காங்கிரசு அணியில் 1999லி ருந்து அங்கம் வகித்து வருகிறது.
-ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14-4-2014, டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78727.html#ixzz2z0L42SVv

தமிழ் ஓவியா said...


இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின் குரல்!

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இடையில் எட்டு நாள்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இயற்கைத் தட்ப வெப்ப நிலையோடு போட்டிப் போட்டுக் கொண்டு அனல் பறக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர். தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று இரு கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் திரண்டு அவர் உரையைக் கேட்கிறார்கள்.

இவருடைய கருத்தும், உரையும் வித்தியாசமாகவே இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலின் தனித் தன்மை என்ன? என்பது குறித்துத் தமக்கே உரித்தான ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

ஒரு காலத்தில் ஜன சங்கமாக இருந்த அமைப்புதான் இன்றைய பாரதீய ஜனதா கட்சி; இதற்கு முன் தனது இந்துத்துவா திட்டத்தை இலை மறை காயாகத் தான் வைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற அவர்களின் தாய் நிறுவனம் பின்புலத்தில் இருந்தது. நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அது முன்னுக்கு வந்து, பிஜேபியைக் கட்டளையிடும் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கி விடும். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷியே அந்த உண்மையைப் பட்டாங்கமாய் ஒப்புக் கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் ஆலோசனைகளின்படிதான் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.

அதன் காரணமாக ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் இவை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதனையும் தாண்டி ஆர்.எஸ்.எஸின் முக்கிய கோட்பாடான பசுவதைத் தடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பசு பாதுகாப்புக்கென்று தனித் துறையே உருவாக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கென்றுள்ள சிறப்புச் சலுகைகளும் மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியம் என்கிற ஆர்.எஸ்.எஸின் அடிநாதக் கொள்கை என்பதை அரங்கேற்றக் கூடிய ஒரு திட்டத்தோடு தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்தக் கோணத்தில் தான் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் வழக்கம் போல வந்து போகும் தேர்தல் அல்ல; நமது தலை முறையைப் பாதிக்கச் செய்யக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைத்து இந்தத் தேர்தலைப் பார்க்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நாட்டில் மதக் கலவரங்களைத் திட்டமிட்டு அது நடத்தி வந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் மதக் கலவரங்களின் பின்னணியில் சங்பரிவார் இருந்திருக்கிறது என்பதை இந்தியாவின் உள் துறையே சொல்லியிருக்கிறது. காவி பயங்கரவாதம் என்ற ஒரு சொலவடையையே கூட உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் சொன்ன துண்டு.

மாலேகான் குண்டுவெடிப்பைக் கவனித்தால் சங்பரிவார்க் கும்பல் இந்திய இராணுவம் வரை ஊடுருவி இருப்பதை அறிய முடிகிறது. இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி மருந்தை இவர்கள் கையாண்டுள்ளனர். இது சாதாரணமானதல்ல; மிகப் பெரிய சதித் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே மிகப் பெரிய சதித் திட்டத்தை வகுத்து நாட்டில் கலவரத்தைச் செய்துள்ளது மதவெறிப் பிடித்த ஒரு கும்பல் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் எப்படி யெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸின் பாடத் திட்டங்கள் இடம் பெற்று விட்டன. மனு தர்மத்தைப் பாடமாக வைக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அரசு நிருவாகத் துறைகளிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி விட்டன. இராணுவத் துறையிலும் பெரும் அளவுக்கு ஊடுருவி விட்டதாக கப்பல் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் கூறியுள்ளார்.

ஏதோ வாக்குச் சாவடிக்குள் சென்று ஒரு பொத்தானை அழுத்துகிறோம் என்ற சம்பிரதாயக் கடமை என்று நினைக்காமல், இந்தியாவின் எதிர் காலத்தையே அச்சுறுத்தும், குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைக்கும், சமூக நீதிக்கும் எதிரான சக்திதான் பிஜேபி என்பதை மனதிற் கொண்டு அதனையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சி களையும் அடையாளம் கண்டு, ஒரே கல்லால் பல காய்களை வீழ்த்தும் வாக்களிப்புக் கடமையைச் செய்ய வேண்டும்; திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பிரச்சாரம், வேண்டுகோள் தமிழ்நாட்டு அளவில் இருந்தாலும் - இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படுவதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78730.html#ixzz2z0LO7v7r

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

- (விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78728.html#ixzz2z0LfXMr2

தமிழ் ஓவியா said...


சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய சுதந்திரப் போர்க்களத்தில் சுதேசி சிந்தனை யுடன் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய வீரர்கள் அநேகம்பேர். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! காரணம் தம் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்க, அம்மண்ணின் மைந்தர்கள் போராடுவது இயல்பானதும் யாராலும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.

ஆனால், வேற்று நாட்டில் பிறந்து, இந்த மண்ணுக்கு வந்து, இந்தியா என் தாய்நாடு என்று உள்ளத்தால் ஒன்றிப்போய், இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தார் ஓர் அன்னிய நாட்டுப் பெண்மணி, என்றால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும். ஆம். அப்படி ஒருவர்தான் புகழ்பெற்ற ஹோம்ரூல் இயக்கம் தொடங்கிய அய்ரிஷ் பெண்மணியான அன்னிபெசன்ட் அம்மையார்.

அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்ட அன்னிவுட் பிறந்தது லண்டனில். 1847 அக்டோபர் முதல் தேதி பிறந்தவர் அன்னிவுட். அவருடைய தந்தை டாக்டர் வில்லியம் பேஜ்வுட் என்பவர். தாயார் பெயர் எமிலி என்பது. எமிலியின் முன்னோர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அன்னியின் தந்தை மருத்துவ வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மேதையாகவும் திகழ்ந்தார். அரசியல் மற்றும் சமூக எண்ணம் கொண்டிருந்த அன்னிபெசன்ட் 1913 இல் நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1918 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரே தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இப்படி காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றார் அன்னி பெசன்ட் அம்மையார். 1917 இல் மாதர் சங்கம் அமைத்தார். அதன்மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வுகளைப் பரப்பினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடப்பதால், அவர்களில் பெரும்பாலோர் இளவயதிலேயே விதவைகளாக ஆகி விடும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து பால்ய விவாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார். இறுதியில் அவர் 1933 செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தம் 86 ஆம் வயதில் இறந்தார்.

Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0N2CJML

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட போராடிய பெண்

பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.

1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக் காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.

1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத் தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.

1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற் சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர் களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென போராடினர்.

1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கவுரவம் குலைக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினார். 1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சம உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வா றெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0NDX5gj

தமிழ் ஓவியா said...

முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்

சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம் பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர். நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம்.

எங்கள் வீட்டுக்கு நான் 8ஆவது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன்.

அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார். பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.

முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.

ஆனால், பார்வையற்றவர் களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராதாபாய்.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NVA32r

தமிழ் ஓவியா said...


மாட்டு வண்டியில் பயணித்து ரிசர்வ் வங்கியின் நிர்வாகசபை வரை சென்றடைந்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தமிழர் ஆர்.காந்தி


காந்தி என்ற பெயரைச் சொன்னதும் நெல் விளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவநல்லூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் என்பது மட்டுமே சிலருக்கு தோன்றலாம்; ஆனால், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி பழகுவதற்கு இனிமை யானவர்; நேசிக்கத்தக்கவராகவும் விளங்குகிறார் என்பது அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்குப் புரியும்.

அரசுத் துறையில் பதவி உயர்வு என்பது ஓர் புதிர் போல நிலைமை என்ற அளவில், காந்தி அவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்கு தேர்வானது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல; ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வங்கியில் சிறந்த முறையில் சேவையும், நுண்ணறிவும் பெற்ற ஒருவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பணிமூப்பு அடிப்படையில் ஜி.கோபாலகிருஷ்ணா விற்கு இந்த வாய்ப்பு வராத நிலையில், பி. மொஹாபத்ரா அல்லது பி.விஜய் பாஸ்கர், இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நேரத்தில், பள்ளிக்கு மாட்டு வண்டியில் சென்ற ஓர் விவசாயி மகன் காந்தி, வெற்றிக் குதிரையாக, இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த பதவியில், வங்கி நடைமுறை மற்றும் மேம்பாடு பற்றிய துறையை அவர் கவனிப்பார். ரிசர்வ் வங்கியின் முக்கிய மாற்றங்களில், காந்தியின் பங்கு மகத்தானது. செபி எனும் பங்கு பரிமாற்றம் குறித்த கட்டுப்பாடு நிறுவனத்தில், காந்தியின் முன்னாள் தலைவர் டாக்டர் மேத்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, செபியின் நடவடிக்கைகளை மேம்படுத்திட அரும்பணி ஆற்றியவர்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்த எஸ். வெங்கிடரமணன், சி.ரங்கராஜன் இருவரது நம்பிக் கையும் பெற்று, அவர்களுக்கு செயல் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்.காந்தி. அதனால் தான், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த டாக்டர் மேத்தா, செபி நிருவனத்தில் பொறுப் பேற்ற போது, காந்தியையும் உடன் அழைத்துச் சென்றார். எளிமையானவர்; நல்ல மனிதர் என அவருடன் பணிபுரியும் சக பணியாளர்களாலும், நண்பர்களாலும் பாராட்டப்படுவர் ஆர்.காந்தி.

அவர் தனது வாழ்க்கையில் இன்னும் அதிக முன்னேற்றத்தைக்கூட அடைந்திருக்க முடியும்; ஆனால், அவரது சமூக சூழ்நிலையில், தந்தையின் கட்டளைப்படி, ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பொதுக்காப்பீட்டு கழகம், பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி என மூன்று நிறுவனங்களிலிருந்தும் ஆர்.காந்திக்கு அதிகாரி பதவி வழங்கியபோது, தந்தை யின் விருப்பப்படி, ரிசர்வ் வங்கியை தேர்ந்தெடுத்தார் என அவரை நன்கு அறிந்த அவரது நண்பர் கூறினார்.

களக்காடு க.அ.மொ.பீ.மீரானியா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பையும், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் புதுமுக வகுப்பும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பட்டப்படிப்பும் மேற்கொண்டவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் பல்வேறு பொறுப்புகள் பெற்று, துணை ஆளுநராக உயர்ந்திருக்கிறார் ஆர்.காந்தி. சிறிய கிராமத்தில் பிறந்த காந்திக்கு, பணி செய்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளவர்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் காந்தியின் இரண்டு மகன்களும், ரெய்கி எனும் ஜப்பானிய புத்த மார்க்கத்தின் ஓர் முறையை பயன்படுத்தி வருகிறார் கள். காந்தியும் அவரது துணைவியாரும், இந்த முறையை பயன்படுத்தி குணப்படுத்தும் முறையில் சிறந்த பயிற்சியாளர்களாகவும் உள்ளார்கள்.

வங்கியில் ஆர்.காந்தியின் மிகச்சிறந்த செயல்பாடு என்பது இன்றைக்கு பண வர்த்தகத்தை நாடு முழு வதும் வங்கிகள் செயல்படுத்தும், ஆன்லைன் மூல மாக பணத்தை ஒரு வங்கியின் கணக்கிலிருந்து எந்தவொரு வங்கியின் கணக்கிற்கும், துரிதமாக அனுப்பும் முறையை செயல்படுத்தியது.

இந்த முறையினால், பண வர்த்தகம், பல நாட்கள் கழித்து கணக்கில் சென்றடையும் நிலையை மாற்றி, சில நிமிடங்களில் சென்றடைந்து, வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய நன்மையை உண்டாக்கி உள்ளது. காந்தியின் வெற்றி தொப்பியில் மேலும் ஓர் இறகு இந்த ஆர்டிஜிஎஸ் எனும் பண வர்த்தக முறையை அமுல்படுத்தியதாகும்.

செபியில் பணியாற்றிய காலத்திலும், நிறுவனங்கள் பொய்யான வருமானத்தையும், லாபத்தையும் காட்டி, மக்களை ஏமாற்றி தங்களது பங்குகளை அதிக விலைக்கு விற்கும் மோசடித்தனத்தை, கட்டுப்படுத்தி அதனை நெறிப்படுத்தியதில் ஆர்.காந்தியின் பங்கு மகத்தானது. காந்தி ஓர் மக்கள் மனிதர் என்கிறார், செபி நிறு வனத்தின் முன்னாள் அதிகாரியும், சட்ட ஆலோசக ருமான பி.ஆர்.ரமேஷ்.

ஆம், மக்கள் மனிதர் ஆர்.காந்தி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பேற்பதில் நமது மகிழ்ச்சி யையும், வாழ்த்தையும் தெரிவிப்போம்.

Read more: http://viduthalai.in/page-7/78736.html#ixzz2z0NttKPA

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரங்கள்பற்றிய கடிதங்கள்: மோடிக்குப் புது சிக்கல்


புதுடில்லி, ஏப்.15- குஜ ராத் கலவரத்தின்போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடனான கடிதப் போக்குவரத்து விவரங் களை வெளியிடுவது குறித்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி யின் கருத்தை பிரதமர் அலு வலகம் கேட்டுள்ளது.

இதுதொடர்பான விவ ரங்களை கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஅய்) பிரதமர் அலு வலகத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், அந்த விவரங்களை அளித் தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, மனுவை பிரதமர் அலு வலக பொதுத் தகவல் அலு வலர் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக இயக் குநருக்கு மேல்முறையீடு செய்யப் பட்டது.

அதில், சரியான காரணம் தெரி விக்காமல், மனுவை பொதுத் தகவல் அலுவலர் தள்ளுபடி செய்துள்ளதாக வும், 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம் பவம் தொடர்பான விவ ரங்களையே கேட்டுள்ள தாகவும், அதனை அளிப்ப தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் வாதிடப்பட்டுள்ளது.

அதையடுத்து, மனு தாரர் கேட்டுள்ள விவரங் களை 15 நாள்களுக்குள் அளிக்கும்படி பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியா ளர்களிடம் பொதுத் தகவல் அலுவலர் எஸ்.வி. ரிஸ்வி கூறுகையில், தகவல் உரிமைச் சட்டத்தின் 11 (1) பிரிவின்படி, மூன்றாவது நபர் குறித்த தகவல்களைக் கேட்டு யாரேனும் விண் ணப்பித்தால், அந்த விவ ரங்களைத் தருவதற்கு முன் அந்த மூன்றாவது நபரின் கருத்து கேட்கப்பட வேண் டும்.

இதேபோன்ற வேறொரு கோரிக்கை தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கருத்து கேட் கப்பட்டுள்ளது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் 11 (1) பிரிவில் கூறப்பட் டுள்ள நடைமுறைகளுக் குப் பிறகு, மனுதாரர் கேட் டுள்ள விவரங்கள் அளிக் கப்படும் என்றார்.

தகவல் உரிமைச் சட் டத்தின் 11ஆவது பிரிவின் படி, கருத்து கேட்கப்படும் 3ஆவது நபர் தனது பதிலை 5 நாள்களில் தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போன்று கால அளவு எதை யும் நிர்ணயித்து மோடிக்கு பொதுத் தகவல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பவில்லை.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது ஏரா ளமானோர் பலியாகினர். இந்த சம்பவத்தின் போது நரேந்திர மோடிக்கும் பிர தமர் அலுவலகத்துக்கும் இடையே 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மற்றும் அதே ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இடையே பரஸ்பரம் அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களின் நகல்களை யும் கேட்டு, தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத் தில் மனு அளிக்கப்பட் டுள்ளது.

அதில் குஜராத் கலவரத் தின்போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும், மோடிக்கும் இடையே பரஸ்பரம் அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page-8/78723.html#ixzz2z0O8Eo4X