Search This Blog

26.4.14

நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....பெரியார்இன்றையத் தினம் உண்மையிலேயே நமக்கெல்லாம் பண்டிகை நாள் போன்றதாகும் என்றாலும், இதற்காக அவர் எடுத்திருக்கிற முயற்சியும், செய்திருக்கின்ற பெரிய ஏற்பாடும், செலவும் தான் பயமாக இருக்கிறது. நண்பர் முத்து அவர்கள் ஒரு காசு செலவு இல்லாமல் பெரிய வீரராகி விட்டார். தன்னுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் நடத்தி, அதன்பின் பல பெருமைகளை எல்லாம் பெற்று, அதைத் தன் பெண்ணும் அடைய வேண்டுமென்று அவளுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து - காலம் பார்த்து, நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமைப்படும்படியான அளவிற்கு அவர் வீரராகி விட்டார். நேரம், காலம், பொருத்தம் எல்லாம் பார்த்துத் தான் கண்ணகி - சீதை - சந்திரமதி - திரவுபதை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றன என்றாலும், இவற்றில் ஒழுக்கமாக நாணயமாக நடந்து கொள்ளவில்லை.

தமிழனுக்கு இதுபோன்ற ஒரு முறையே கிடையாது. இந்தக் கட்டுப்பாடு முறை எப்போது வந்தது என்றால், பார்ப்பான் வந்த பின் ஏற்பட்டது தானாகும். பார்ப்பான் இங்கு வரும்போது தேவையான பெண்களோடு வரவில்லை. இங்குள்ளவர்களைச் சரி செய்து கொண்டு வாழ்ந்தனர்.

இவர்கள் சரி செய்து கொண்ட பெண்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடையே ஒழுக்கக் கேடுகள் ஏற்பட்டன. அதனால் பார்ப்பான் தனக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பெண்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். எப்படி அரசாங்கமானது நெருக்கடி நேரும்போது சட்டம் இயற்றிக் கொண்டு சமாளித்திருக்கிறதோ, அதுபோன்று பார்ப்பான் (சட்டம்) கட்டுப்பாடு ஏற்படுத்தினான். இதை நான் சொல்லவில்லை. தமிழனின் மிகச் சிறந்த இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் எழுதி இருக்கிறான். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்று. அய்யர் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடும் சொல் அல்ல. அக்காலப் பெரியவர்களை, அறிவில் சிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று சில தமிழ்ப் புலவர்கள் கூறுவார்கள். இது சரியல்ல என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்று. பார்ப்பனர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழேரான சூத்திரர்களுக்கும் ஆயிற்று என்று குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து அய்யர் என்ற சொல் பார்ப்பானையே குறிப்பதாகும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்.


நானும் 100-வருடத்திற்கு இருந்து அவர்களும் (தி.மு.க அரசும்) 100- வருஷமிருந்தால் இத்திருமணத்தைக் கிரிமினலாக்கி விடுவார்கள். ஆண்கள், என்று அயோக்கியராயினரோ அன்றே பெண்களை அடிமையாக்கி விட்டான். நம் நாட்டிலே மட்டுமல்ல - உலகமே இப்படித்தான் இருக்கிறது. நம் நாட்டிலாவது நாகம்மாள், ராஜம்மாள் என்று பெண்கள் பெயரைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், வெள்ளைக்காரன் நாட்டில் எல்லாம் மிஸஸ் தான். பெண்ணிற்கு உரிமையில்லை. எனவே, பெண்ணடிமையைப் பற்றி எவனுமே கவலைப்படவில்லை. இந்தியாவிலேயே இதற்காகப் பாடுபடக் கூறயவர்கள் நாங்கள் ஒருவர் தான்.

பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடையவளாக இருக்க வேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான் - அவ்வை சொல்கிறாள். மற்ற எல்லா புலவனும் இதைத்தான் சொல்கிறான். இரண்டு பேர்களும் சமம் என்று இம்முறையில் இருவரிடமும் உறுதி வாங்குகிறோம். அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ, இல்லையோ. ஆனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்குகிறோம். அவர்களும் நடந்து கொள்வதாக உறுதியளிக்கின்றார்கள்.


வழக்கம் என்பது காட்டுமிராண்டி காலத்ததும், சாஸ்திரம் என்பது மிருகப் பிராயத்ததும் ஆகும்.

பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பதும், ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது இவை யாவும் முட்டாள்தனமானது. மூட நம்பிக்கையானது. பெரிய பி.ஏ., எம்.ஏ., படித்தவனெல்லாம் மேதாவி, அறிவாளி எல்லாம் இதைப் பார்த்துத் தான் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வளவு மூட நம்பிக்கை படிந்திருக்கிறது. அறிவு வளர்ச்சி இல்லை.

இப்போது நடைபெற்ற இத்திருமணமானது 68-ஆம் வருஷ மாடல் ஆகும். 1967-ஆம் வருட மாடல் - இத்திருமணம் செல்லாதென்றிருந்தது. 1968-ஆம் வருடத்தில் சட்டப்படிச் செல்லும் என்றாகி இருக்கிறது. நாளை 1969-இல் இத்திருமண முறை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கடங்கி செலவு செய்ய வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. பிறர் கண்டு பொறாமைப்படும்படியாக வாழாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களின் குடும்பத்தை மட்டும் நினைக்காமல் நம் சமுதாயத்தையே நினைக்க வேண்டும். நம் இனத்திற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மோட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கவலையற்ற தன்மையாகும். பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் வரவிற்கு மேல் செலவிடாமலிருப்பதும், மனிதனுக்குக் கவலையற்ற வாழ்வாகும், மோட்சமாகும். சிலர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றார்கள். அறிவுள்ள பிள்ளையைப் பெற வேண்டுமானால் எந்தக் கடையிலே போய்ச் சாமான் வாங்குவது? பிள்ளை பிறந்த பின்தானே அதை அறிவுள்ளதாக்க நாம் தானே மாரடிக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே - பெறும் போதே எப்படி அறிவுள்ளதாகப் பெற முடியும்?


------------------------ 12.07.1968 அன்று நடைபெற்ற பெருமாள் - இலங்கனி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை",- 12.08.1968

27 comments:

தமிழ் ஓவியா said...


மோடி பிற்படுத்தப்பட்டவரா? இல்லை என்கிறார் அய்க்கிய ஜனதா தள தலைவர்


மேகசனா(குஜராத்), ஏப்.25- மோடி பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்று அய்க்கிய ஜனதா தளம் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் மோடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

குஜராத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அய்க்கிய ஜனதா தளம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. கடந்த 10 நாட்களாக மோடியின் திருமணம் குறித்த சர்ச்சை நிலவுகிறது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அவரது ஜாதி பற்றிய சர்ச்சை எழுந்து இருக்கிறது. பாஜக உயர் மட்ட ஜாதிகளுக்கு மட்டும் உரிய கட்சி அல்ல என்று உறுதிபடுத்தும்வகையில் மோடி தனது ஜாதி பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் 120கோடி மக்களை ஏமாற்றி வரு கிறார் என அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் கோவிந்த பாய் யாதவ் தெரிவித் துள்ளார்.கடந்த 1975ம்ஆண்டு பக்ஷி கமிஷன், மோடி சார்ந்துள்ள ஜாதிப்பிரிவை இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவில்லை. அந்த கமிஷனை பாபு பாய் ஜாய்பாய் படேல் அமைத் திருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79227.html#ixzz2zwf6i8BW

தமிழ் ஓவியா said...


நாடெங்கும்எதிர்ப்புஅலைகள்!


வாரணாசியிலே மோடியை எதிர்க்கின்றனர் பல்கலைக் கழக மாணவர்கள்!

வாரணாசி ஏப்.25- மோடிக்கு வாரணாசியி லேயே மாணவர்கள் மத் தியில் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.

வாரணாசியிலேயே மாணவர்கள் மோடிக்கு எதிர்ப்பு!

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக இம் மாதம் 28, 29 ஆகிய தேதி களில் பிரச்சாரம் செய்ய டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அச் சங்கத்தின் தலைவர் அக்பர் செத்ரி கூறுகையில், தேர்தல் வர லாற்றில் முதல் முறையாக நாளேடு, இணையதளம் ஆகிய ஊடகங்களில் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி யின் பிரச்சாரம் இடம் பிடித் துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மாயத் தோற் றம் ஏற்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலையை எடுத் துக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, சங்கம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் மாற்று ஜனநாயகக் கொள் கைகளின் அடிப்படையில், அவருக்கு எதிராக மாண வர்கள் குழு வாராணாசியில் பிரச்சாரம் செய்யவுள்ளது என்றார்.

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை: மன்மோகன் சிங் பேட்டி

பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவரது வீடு கவுகாத்தி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சருமட் டோரியா பகுதியில் அமைந் துள்ளது. இந்த தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது.

தேர்தலில் ஓட்டு போடு வதற்காக பிரதமர் மன் மோகன் சிங் தனது மனைவி குர்சரண் கவுருடன் நேற்று டில்லியில் இருந்து விமானப் படை சிறப்பு விமானத்தில் கவுகாத்தி சென்றார். பின் னர் அங்கிருந்து விமானப் படை ஹெலிகாப்டரில் கனப்பாரா பகுதிக்கு அவர் கள் சென்றனர். அவர்களை மாநில முதல் அமைச்சர் தருண் கோகாய் மற்றும் காங்கிரஸ் தலைவர் புவ னேஷ்வர் கலிட்டா ஆகி யோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து திஸ்பூருக்கு சென்ற அவர்கள், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர்.

ஓட்டளித்துவிட்டு வெளியே வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் கூறு கையில், 'நாட்டில் எந்த மோடி அலையும் வீசுவ தாக நான் நினைக்க வில்லை. இது வெறும் ஊடகங் களால் உருவாக் கப்பட்டது. நாட்டில் எங் கேயும், எந்த மோடி அலை யின் தாக்க மும் இல்லை என்றார்.

அவர் மேலும் கூறும் போது, 'காங்கிரசுக்கு இறங்குமுகமாக இருப்ப தாக நான் நினைக்க வில்லை. தேர்தல் முடிவு களுக்காக மே 16-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள். நாங்கள் பெரும்பாலான இடங் களில் வெற்றி பெறு வோம்' என்று தெரிவித்தார். மேலும், நாட்டின் ஜன நாயக நடை முறையில் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், தேர்தலில் அனைத்து வாக்காளர் களும் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி யுடன் தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். மோடிமீது வழக்கு பதிவு செய்க: காங்கிரஸ் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திரமோடி, வார ணாசி தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய் தார். அதையும், அதற்கு முந் தைய அவரது வாகன ஊர் வலத்தையும் தொலைக் காட்சியில் ஒளி பரப்பியது, அப்பட்ட மான தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா கூறினார்.

அதாவது, நேற்று தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளிலும் தொலைக்காட்சிகளில் இந் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட் டது, விதிமீறல் ஆகும் என்று அவர் கூறினார். எனவே, மோடி மற்றும் இதில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத் துக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

நன்கு திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மனு தாக்கலுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79223.html#ixzz2zwfIZC2B

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்
தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவான மய்யங்களில் தேர்தல் பார்வை யாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப் பதிவு மய்யங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.

- பீரவீன்குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் மோடி அலையோ, லேடி அலையோ இல்லை!
- தொல். திருமாவளவன்

தே.மு.தி.க. தலைவர் மின்னணு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்தபோது, அவரின் மனைவி பிரேமலதா உதவி செய்துள்ளார். இது அப்பட்டமான விதி மீறல் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தியிருந்த போது, நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதே மோடி நேற்று உ.பி. வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1.65 என்று காணப்படுகிறது. 15 நாள்களில் திடீரென்று மோடிக்கு ரூ.14.34 லட்சம் எகிறியது எப்படி? என்ற வினா இப்பொழுது எழுந்துள்ளது. மோடி என்றாலே சிக்கல் நாயகர் தானோ!

பணபட்டுவாடா நடந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. -ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர்

தருமபுரியில் பணபட்டுவாடா செய்தவர்களை விரட்டிக் கொண்டு ஒடிய இளைஞர் காவல் படைவீரர் வினோத் கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

வாக்காளர்களுக்கு அஇஅதிமுக முன் பணம் கொடுத்துள்ளதே - அதைப் பற்றிக் கேட்க மாட் டீர்களா? - செய்தியாளர்களிடம் விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் 750 கைதிகள் அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


Read more: http://viduthalai.in/e-paper/79228.html#ixzz2zwfSoEK9

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page-2/79230.html#ixzz2zwfw7wV2

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும்.

ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page-7/79231.html#ixzz2zwh9Plig

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது. - பக்ஸ்டன்

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhX0aKa

தமிழ் ஓவியா said...

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு: கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது.

அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்: தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத் துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhdtosA

தமிழ் ஓவியா said...


பெருமாள் போய் பெத்த பெருமாளா?


பெருமாள் என்ற பெயர் நன்றாக இல்லை என்று சொல்லி, பெத்த பெருமாள் என்று பெயர் வைத்துக் கொண்டதைப்போல - நரேந்திர மோடியின் சொத்துக் கணக்கு வதேரா தொகுதிக்கும், வாரணாசிக்கும் இடையில் ரூ.14.31 லட்சம் வேறுபட்டது ஏன் என்ற கேள்விக்கு, பி.ஜே.பி. புதிய கதையை ஜோடித்துள்ளது.

மோடியின் வங்கிக் கணக்கிற்குக் கட்சியிலிருந்து மாற்றப்பட்ட தொகையால் இது நடந்தது என்று கூறப்படுகிறது.

கட்சியிலிருந்து எப்படி இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்? அப்படி மாற்றப்பட்டதற் கான ஆதாரம் என்ன என்பது போன்ற வினாக்கள் எழுந்துள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/79306.html#ixzz302Sktloq

தமிழ் ஓவியா said...


நம்பாதவன் நாத்திகனாம்


இப்பொழுது மத சம்பந்தமாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால், நம்பாதவன் நாத்திகன் என்பதுவே. - (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/79325.html#ixzz302SzSwh7

தமிழ் ஓவியா said...


ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட கொடுமை!

மாண்டியா, ஏப்.26- கருநாடகா மாண்டியா மாவட்டத்தில் மானவள்ளி வட்டத்தை அடுத்த கண்ணஹள்ளிப் பகுதியில் இளம்பெண் ஜாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் அவர் உறவினரால் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டார். மைசூரை அடுத்த மெட்டஹள்ளி பைரவேசுவரா நகரைச் சேர்ந்த முருகேஷ்-மங்கலம்மா ஆகியோரின் மகள் ஷில்பா(19). கடந்த ஜனவரியில் இவர் சொந்த ஊரான நேலம கண்ணஹள்ளியைச் சேர்ந்த அபிஜித் என்பவரைத் திரு மணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த புதனன்று அபிஜித்தின் உற வினர்களான பட்டுசாமி-பிரமிளா இணையர் இருவரும் ஷில்பாவை ஒரு விழாவுக்கு அழைத்துள்ளனர். வியாழ னன்று முதுகுத்தூரில் ஒரு விழாவுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் ஷில் பாவை தனியாக அழைத்துச்சென்று கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ய முயற்சித்தனர். ஷில்பா தப்பிக்க முயன்ற போது, பெட்ரோலை அவர்மீது ஊற்றித் தீவைத்துள்ளனர். ஷில்பாவின் கதறல் கேட்டு கிராமத்தினர் திரண்டு வந்த போது, அவ்விணையர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

கடுமையான தீக்காயங் களுடன் ஷில்பாவை மீட்டு மாளவள்ளி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்கு மாண்டியாவில் உள்ள விம்ஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். வியா ழக்கிழமை பிற்பகலில் சிகிச்சை பல னின்றி மருத்துவமனையிலேயே ஷில்பா இறந்துவிட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் பூஷன் போரோஸ் இதுகுறித்து கூறும் போது, தப்பி ஓடிய இருவரில் பிரமிளா வைக் கைது செய்துள்ளதாகவும், தலை மறைவாகி உள்ள பட்டுசாமியைத் தேடி வருவதாகவும் கூறினார். மேலும், ஷில் பாவின் கணவனான அபிஜித் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண் டுள்ளதாகவும் கூறினார்.

ஷில்பாவின் தாய் மங்கலம்மா மாளவள்ளி காவல்நிலையத்தில் அளித் துள்ள புகாரில்,
அவர் மகள் ஷில்பாவை அவளின் கணவனின் உறவினர்கள் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, என் கணவர் தமிழ்நாட்டில் பிழைப்புக்கு சென்றுள்ளார். என் மகளின் இறுதி மரி யாதையை நடத்தக்கூட பணம் இல் லாமல் அரசிடம் கேட்டுள்ளோம்.

சமூக நல நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன. மாண்டியாவின் பொறுப்பு வட்டாட்சியரும், மத்தூர் வட்டாட்சியருமாகிய மஞ்சே கவுடா அப்பெண்ணின் தாயார் மனு கொடுத்த பிறகுதான் அதுபற்றி முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.

மாநில அரசு மாநில மகளிர் ஆணை யத்துக்கு தாமாகவே இதுகுறித்து புகாரைப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மாநில அமைச்சர் உமாசிறீ பெங் களூருவில் கூறும்போது, கலாச்சாரத் துறை சார்பில் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் உறுதி யாக செய்து குற்றவாளிகளை சட்டத் தின்முன் நிறுத்துவோம் என்றார்

Read more: http://viduthalai.in/page-2/79328.html#ixzz302T7sLH3

தமிழ் ஓவியா said...


மோடி அலை: கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சாரம்: புத்ததேவ் பட்டாச்சார்யா


கொல்கத்தா, ஏப். 26- மோடி அலை வீசுகிறது என் பது இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களின் பிரச்சாரம் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒரு வரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

இது பற்றி செய்தியாளர் களிடம் புத்ததேவ் பட்டாச் சார்யா கூறியதாவது: மோடி அலை என்று எதுவும் இல் லை. மோடி அலை என்று கூறப்படும் விஷயம் இந்தி யாவின் மிகப்பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களின் பிரச் சாரம்.

கார்ப்பரேட் நிறுவனங் களின் முதலாளிகளால், ஒரு விஷயத்தை உருவாக்கவும், ஒரு விஷயத்தைக் கெடுக் கவும் முடிகின்றது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த கார்ப்பரேட் நிறுவ னங்கள் பெரிய மீடியாக் களுக்கு பெரும் தொகை கொடுத்து, மோடி பிரச்சாரம் செய்யச் செய்கின்றன.

கடந்த சில மாதங்களாக வே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகின்றேன். எந்த மாவட்டத்திலும் மோடி அலை என்று எதுவும் தெரிய வில்லை. சில மீடியாக்கள் மோடி அலை வீசுவதாக செய்திகள் வெளியிடுகின் றன. நாடு முழுவதும் பல் வேறு பகுதிகளில் தேர்தல் நடக்கும்போது, மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை தொலைக் காட்சிகள் காட்டுகின்றன. இதுவும் ஒருவகையான பிரச்சாரம்தான். இது மக்கள் மத்தியில் தாக்கத்தை எற் படுத்தும். இது குறித்து தேர்தல் ஆணையத்தைன் கவனத்துக்கு எடுத்துச் செல் லப்பட்டாலும், அந்த விஷ யம் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்கள் எதிர் காலத்தில் நடக்காது என்று நம்புகிறேன்.

இது தவிர பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் குஜ ராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டத்தை மட்டுமே பேசு கிறது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங் களின் வளர்ச்சித் திட்டம் இருப்பினும், இந்த மோ அலை மூலமாக மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக வுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அப்படி ஒன்று நடக்காது. இந்த மா நிலத்தில் உள்ள மக்கள், தனிப் பட்ட சமூகத்திற்கு அப்பாற் பட்ட வகையில் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு இந்த மாநில மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/79313.html#ixzz302VpL12C

தமிழ் ஓவியா said...


பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசய்யங்காரும்


திரு.எ. சீனிவாசய்யங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும்விட தீவிரமாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத்தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப்படுத்திக் கொண்டார்.

கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபா சந்திரபோசும் சமீபத்தில் ருஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவஹர்லால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள்.

ஆனால் திரு.சீனிவாசய்யங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்கு முறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.

இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை ஏமாற்ற ஏதாவது ஒரு புரட்டு வேண்டியிருப்பதால் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு கொள்கையை வெளிப்படுத்துவார்.

ஏனென்றால் சீனிவாசய்யங்கார் கூப்பிட்டபோது ஓடவும் வேண்டுமென்று கூப்பிட்டவுடன் ஓடிவரவும் அய்யங்கார் வார்த்தையை வேதவாக்காகக் கொண்டு பிரச்சாரம் செய்யவும் தமிழ் நாட்டில் இந்த இரண்டு கனவான்கள் தான் உண்டு, மற்றபடி, இப்போது அய்யங்கார் கூட இருக்கும் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் அய்யங்காரை விட்டு பிரிந்து மறுபடியும் அவருடன் சேருவதானால், மானம் ஈனம் சுயமரியாதை என்பவைகளைப் பற்றி சற்றாவது யோசித்துப் பார்ப்பார்கள் ஆனால், மேல்கண்ட இரண்டு கனவான்களுக்கும் இந்த விஷயங்களில் சிறிது கூட கவலை கிடையாது. ஏனென்றால் முற்றுந்துறந்த ஞானியிடம் மானம் ஈனம் இருக்க இடமேது?

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 26-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dgWQyn

தமிழ் ஓவியா said...

வரதராஜூலுவின் விஷமப் பிரச்சாரம்

தமிழ்நாடு பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சல் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வே.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டு விட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத்தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு, அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார்.

திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும், முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும், நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும், தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

எனவே இதனால் தமிழ்நாடு பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரியையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதைத் தவிர, வேறு எவ்வித நஷ்டமும் உண்டாகிவிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தவிர அம்மாதிரி ஏதாவது, ஒரு சமயம் தேவஸ் தானக் கமிட்டியார் அத்தீர்மானத்தை ரத்து செய்வார்களானால் கண்டிப்பாய் திரு. ஈ.வெ.ராமசாமியார், கமிட்டி வைஸ் பிரசிடெண்ட் தானத்தையும், மெம்பர் தானத்தையும் ராஜினாமாக் கொடுத்துவிட்டு அத்தீர்மானத்தின் தத்துவத்தைச் சட்டத்தின் மூலமோ, சுயமரியாதை சத்தியாக்கிரகத்தின் மூலமோ, அமலில் கொண்டுவரும் வேலையில் இறங்குபவரே ஒழிய உடம்புக்குச் சவுகரியமில்லை என்று சாக்குச் சொல்லிக் கொண்டு புறமுதுகு காட்டி ஓடிவிடமாட்டார் என்பதைத் திரு.வரதராஜுலுவுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dqEl2E

தமிழ் ஓவியா said...


நாஸ்திகத்திற்கு முதல் வெற்றி


நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும் பல கூலிகளை விட்டு விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்தில் தேர்தல் பிரச்சாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்கும் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும்.

இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன் பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரிட்சை நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் தானம், அதாவது சுதேசமித்திரன் இந்து ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் தானம் காலாவதி ஆனதும் அந்த தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டு விட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா, சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர் களாயிருந்தும் ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும், அவரது சகபாடிகளும், திரு.புர்ரா. அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம்,

சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப்பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரச்சாரம் செய்தும் கடைசியாய் திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்ப ரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே, திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள்.

இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது, கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர் களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண் டிருக்கவும்,

அதாவது ஐஸ்டிஸ் கட்சியின் ஜீவநாடி என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, செனட் தொகுதி யில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல் லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் நாஸ்திகத்திற்கு, (அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத் திற்கு) முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப்பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 07-04-1929

Read more: http://viduthalai.in/page-7/79298.html#ixzz302e2e2rr

தமிழ் ஓவியா said...


புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்றுநோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

உயிர்க்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தைத் தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பகப் புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி இரத்த அணுக்களைச் சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது. இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதைத் தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.

இவர்களின் பல ஆண்டுக் கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித இரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித நானோ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதி சயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாகக் குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

Read more: http://viduthalai.in/page2/79267.html#ixzz302fIyZoP

தமிழ் ஓவியா said...


பாட்டுச்சூரியன்!


- கவிஞர் கண்ணிமை

தமிழகத்தின் கடல் சார்ந்த நெய்தலில்
பொங்கிப் பெருக்கெடுக்க வந்த
தமிழ் நுரை!

அணுத்துகள்களில்
எழுத்துக்கள் பிசைந்து
அச்சுப் பலகையில் ஊற்றிஅடித்த
காரமும் இனிப்பும்
கலந்த கவிதை!

இறையருள் அர்ச்சனை ஒன்று
செய்யுங்கள் கோர்த்தவொரு காலத்தில்
மொழியையும் மனிதனையும்
முகப்பில் வரைந்து வெளியிட்ட
ஈரோட்டுப் புத்தகத்தின்
புதிய வார்ப்பு!

பெரியாரின் வெப்ப மண்டலத்தில்
கொப்பரையில் காய்ச்சி வடித்த
ஆவி பறக்கும் அனல்.
பனிப்படலங்களும்
மாயப்புகைத் தோற்றங்களும்
பயணத்தை மறித்து நிறைபோது
தெளிந்த காட்சிப் புலங்களை
அறிவுறுத்திய
மின்னல் கொடி தவழ்ந்த மேகம்!
பாசி படர்ந்து அழுக்கு அப்பிய
நெஞ்சில்
அமிலம் ஊற்றிக் கழுவிப்
பளிச்சிட வைத்த பகுத்தறிவுப் பாத்தி

உப்புக் கரிக்கும் எழுத்துகளில்
நஞ்சு தடவிய சொற்களில்
கொடுங்கோலாய் நடந்த
ஆட்சிபீடத்தை
கந்தகம் வெடிக்கும் பாக்களால்
தகர்த்துத் தூளாக்கிச்
சரிய வைத்த
புதுவையின் வலிய போர்ப்பரணி

கோயில் குளத்தில் படித்துறைகளில்
வரையறுக்கப்பட்ட
கருவறை நின்ற புகை மண்டபங்களில்
மதில் சுற்றிய
வீதிக் குடியிருப்புகளில்
அழுக்கு மண்டிய
பட்டுப் பீதாம்பரங்களில்
இழித்தும் பழித்தும்
பேசும் உரைகளில்
சாதிக்கவசம் அணிந்த சாத்திரங்களின்
மூடி கழற்றிய முடைநாற்றம் போக்கி
தூசு தட்டித் துடைத்து
மெல்லப் புதுக்கி மெருகிட்டு
ஆதித் தலைமுறையின்
அறிவார்ந்த ஏடுகளின்
வீரமும் காதலும் விளைந்து நின்ற
தமிழன்நீ! என்று
தகதகத்துப் பாடினான்!
குகை திறந்து புறப்பட்ட
கொடுவரிப்புலி!
கனன்று கொழுந்துவிட்டு எரிந்த
காட்டு நெருப்பு
விலங்கை அறுத்து விடுவித்த
புரட்சிபரவும் புதுக்கவிதை
பாவேந்தன் என்னும்
பாட்டுச்சூரியன்!

Read more: http://viduthalai.in/page3/79269.html#ixzz302fYozAU

தமிழ் ஓவியா said...


மூடப்பக்திக்கு அளவேயில்லையா?


மத்தியப் பிரதேசம் மொரனா மாவட் டத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தை ஒருவர் தன் நாக்கையறுத்துக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தியுள்ளார். கடவுளுக்கு நாக்கைக் காணிக்கையாக்கினால் எல்லா நோய்களும் தீரும் என்று யாரோ சொன்னார்களாம். அதை நம்பிய பக்தை இந்த விபரீதத்தைச் செய் துள்ளார்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இதைவிட
வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை!

Read more: http://viduthalai.in/page3/79271.html#ixzz302fhEZnt

தமிழ் ஓவியா said...


3500 ஆண்டுகள் பழமையான வானிலை அறிக்கை


வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வெட்டு 18ஆவது பரோ வம்சத்தை சேர்ந்த அமோஸ் வாழ்ந்த காலத்தை சேர்ந்தது. ஆறு அடி உயரம் கொண்ட சுண்ணாம்புக் கல்வெட்டு 'டெம்பஸ்ட் ஸ்டெலா' என்று அழைக்கப்படும் அதில் மழை, கருமேகம் உள்ளிட்ட மாறுபட்ட காலநிலை அமைப்புகள் பற்றி 40 வரிகள் அடங்கிய குறிப்பு காணப்படுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்லியல்துறை பேராசியர்கள் ராபர்ட் ரிட்னர் மற்றும் நாடின் மோயல்லர் ஆகியோர் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில் எகிப்தின் தெரா பகுதியில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ப் போவதாக, அந்த கல்வெட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு குறிப்புகளில் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர். அதுவே இன்றைய மெடிடீரியனின் கடலில் சான்ரொனி தீவாக காட்சியளிப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த கல்வெட்டில் கிடைத்துள்ள புதிய ஆதாரங்களை வைத்து அதன் காலவரிசை முறையை கணக்கிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page4/79273.html#ixzz302g9BGWH

தமிழ் ஓவியா said...மதம் படுத்தும் பாடு

12 பேரின் காலைக் கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு என்கிற பெயரால் வாடிகனில் வழக்கத்துக்கு மாறாக நான்கு பெண்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி போப் முத்த மிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து, தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர், அவர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணி யாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டதன் அடிப்படை யில் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான வியாழனை புனித வியாழன் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறதாம்.

வாடிகனில் நடைபெற்ற புனித வியாழன் வழிபாடு நிகழ்ச்சியில் போப் தலைமை தாங்கி வழிபாடு நடத்தினார். அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ரும் மற்றும் பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

அப்போது போப் ஆண்ட வர் பேசுகையில், பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக, நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக, வகுப்பு அறைகளாக திகழ வேண்டும் என்று கூறினார். மாலையில் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மய்யத்துக்கு சென்றார், அங்கு தங்கியிருக்கும் 12 பேரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். 16 முதல் 86 வயதுவரை உள்ளவர்கள் ஆவர். அவர்களில் நான்கு பெண்கள், ஹமீது (75) என்ற முஸ்லீம் பெரியவரும் அடக்கம். இதற்கு முன்பெல்லாம், இந்நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ் தவ தேவாலயத்தில் தான் நடைபெறும்.

வழக்கமாக 12 பாதிரியார்களின் கால்களை போப் ஆண்டவர் கழுவி சுத்தம் செய்வார். ஆனால், புதிய போப்பாக பதவியேற் றுள்ள பிரான்சிஸ் அதன் மரபை மாற்றி மறுவாழ்வு மய்யத்துக்குச் சென்றுள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/79275.html#ixzz302gmKikq

தமிழ் ஓவியா said...


என்னே பொருத்தம்...?


என்னே பொருத்தம்...?

அய்யர் வீட்டில்
அய்யங் காரும்...
அய்யங்கார் வீட்டில்
அய்யரும்..
குடியிருக்க
மாட்டாங்களாம்...!
குடிக்குள் குடியாக!
இஃதே போகப் போக
கொள்வனை, கொடுப்பனவும்
இருவருமே
இனத்தில் ஆரியம்!
இந்த மதம்
இந்து மதம்??


குறும்பா!

மொய் யெழுதும்போது
மெய் யெழுது!
பொய்யெழுதாதே
இரு நூற்றை
ஒரு நூறு என்று...!
தபால் வோட்டுகளாம்
கவர் பாளங்களை...
களவாடாதே!

***

இது....
சுதந்தரக் காற்றை
சுவாசிக்க முடியாது
சுதந்தர நாடு!
குடியிருப்புக்கு
இலாயக்கில்லா
குடியரசு நாடு!!

- கோ. கலியபெருமாள்,
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page5/79277.html#ixzz302gvNMfF

தமிழ் ஓவியா said...


வாசகர் கடிதம்


வாசகர் கடிதம்

விடுதலை 5.4.2014 சென்னை சனிக்கிழமை ஞாயிறு மலர் படித்தேன்.

ஆகா என்ன அருமை! தி.மு.க. கூட்டணியைச் சமூக ரீதியான கொள்கை இருப்பதால் ஆதரி.

சிறுபான்மை மக்களுக்காக ஆதரவு கொடு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மறுபடியும் வேண்டுமா? வாக்களி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகணுமா? வெற்றி அடையச் செய். பக்தி மடத்தில் பாழடைந்த பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது பாரீர்!

பிரம்மகத்தி கடவுள் நம்பிக்கை இல்லாதவரைப் பிடிக்கப் பயமோ? வரகுணபாண்டியனைப் பிடித்த பிரம்மகத்தி நீங்கிட, அவன் பார்ப்பானுக்கு உணவளிக்க வேண்டும். அரச மரத்தை வலம் வா. இப்படிப் பல.

விமோசனம் இல்லை. பிரம்மகத்தி இஸ்ட்ராங்கோ? அதனால் இன்னும் இதைச் செய். மதுரை சோமசுந்தரப் பெருமானை ஒவ்வொரு நாளும் 1008 முறை வலம் வா. பின் சரியாயிற்று.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் சுயமரியாதையுடன்,

- க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/79279.html#ixzz302hG1TtU

தமிழ் ஓவியா said...


இப்படியும் நடந்திருக்கிறது எச்சரிக்கை!
எனதுஉறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நடந்தது. வரவேற்பு, உபசரிப்புக்கு பிறகு மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அழைத்துக் கொண்டு போனார்கள். மாப்பிள்ளை, பெண்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்திருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறார் என்று குழம்பிய புதுபபெண் மாமியாரிடம், உங்கள் மகன் ஏன் என்னிடம் எதுவும் பேசாமல் இருக்கிறார் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அவர், நீ பேசினால் அவன் பேசுவான் என்று பதில் சொல்லி இருக்கிறார். பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நாள் மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்தார்கள். அங்கு மாப்பிள்ளையின் நடத்தையை கவனித்து பார்த்தபோது தான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற விவரம் தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாப்பிள்ளை வந்திருக்கிறார். அதனால் மாப்பிள்ளையை யாரும் கவனித்து பார்க்கவில்லை. வெளிநாட்டில் வேலை பார்க்கிறாரே என்று சரியாக விசாரிக்காமல் பெண் வீட்டார் திருமணத்தை நடத்தி விட்டார்கள். பின்பு இரு வீட்டாருக்கு இடையே விரிசல் ஏற்பட்டு பெண்ணும், மாப்பிள்ளையும் பிரிந்து விட்டார்கள்.

- அ. அசீதாபேகம், அறந்தாங்கி,

(நன்றி: தினந்தந்தி குடும்ப மலர் 13.4.2014)

Read more: http://viduthalai.in/page6/79280.html#ixzz302hOjevi

தமிழ் ஓவியா said...


பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்!


பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்!
புத்தகம் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கை மாறும்

புத்தகர் விருது வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை

புத்தகர் விருது பெற்ற பெருமக்கள் : சென்னை புத்தகச் சங்கமத்தில் தமிழர் தலைவர் அவர்கள் புத்தகர் விருதை பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோருக்கு வழங்கி பாராட்டி சிறப்பித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மேலாளர் த.க. நடராசன், விழிகள் பதிப்பகம் தி வேணுகோபால் உள்ளனர் (இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 26.4.2014).


சென்னை, ஏப்.27- பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம். புத்தகம் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கை மாறும் என்று சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருதுகளை புத்தகச் செம்மல்களுக்கு தமிழர் தலைவர் வழங்கி சிறப்பித்து பாராட்டுரை வழங்கினார்.

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் உலகப் புத்தக நாள் பெரு விழா சென்னை இராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

நேற்று (26.4.2014) மாலை 6.30 மணியளவில் நடந்த இப்பெரு விழாவில் முதன்மை நிகழ்வாக நினைவில் வாழும் கலைமாமணி முத்துக்கூத்தன் அவர்களின் மகன் கலைவாணன் ஏற்பாடு செய்திருந்த கலை அறப்பேரவை தென்றல் குழந்தைகள் மன்றம் வழங்கிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூர் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற இக்கலை நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ வைத்து சிந்திக்கவும் வைத்தது.

புத்தகர் விருது வழங்கி சிறப்பிப்பு

இதைத் தொடர்ந்து புத்தகர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் விழாவிற்குத் தலைமை யேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் புத்தகர் விருது பெரும் மக்களான பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோரின் தன் குறிப்புகள் மேடையில் வாசிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி. வீரமணி அவர்கள், அப்பெரும் மக்களுக்கு பயனாடை அணிவித்து புத்தகர் விருது வழங்கி சிறப்பித்து பேசுகையில்:-

புத்தகர் விருது பெறும் பெருமக்களான பொள்ளாச்சி நசன், பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோரின் தன் விளக்க குறிப்புகளை கேட்டு அறிந்தவுடன் வியந்து போனேன். கைமாறு கருதாத அவர்கள் செய்த தொண்டானது புத்தக வாசிப்பிற்காக அவர்கள் மேற்கொண்ட பணிகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் இவர்களை அழைத்து சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். புத்தகம் வாசிப்பது அறிவை வளர்க்கும் செயலாகும் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் புத்தகங்களைக் கொடுப்பது அறிவைப் பரப்பும் தொண்டறச் செயலாகும்.

பூஜையறையல்ல முக்கியம்!

வீட்டில் பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்! அங்கிருக்கும் புத்தகங்களைப் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றம் காணலாம். இங்கு புத்தகர் விருது பெரும் பெரு மக்கள் புத்தகத் தொண்டர்களாக விளங்குகிறார்கள் அவர்களை பாராட்டி சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் தமிழர் தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/79374.html#ixzz308IVOKJ4

தமிழ் ஓவியா said...


குறுஞ் செய்திகள்


தமிழ்நாட்டில் ஆண் களைவிட பெண்களே அதிகமாக வாக்களித் துள்ளனர். ஆண்கள் சதவிகிதம் 73.49, பெண் கள் சதவிகிதம் 73.85.

தமிழ்நாட்டில் 1967 தேர்தலுக்கு அடுத்து 2014இல் நடைபெற்ற தேர்தலில் தான் வாக்குப் பதிவு அதிகம். 1967- 76.09 2014இல் 73.67 சதவிகிதம்.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆறுமுக சாமி அவர்கள் இன்று ஓய்வு பெறுவதால் நீதி பதிகளின் எண்ணிக்கை - 44 ஆகக் குறைந்தது (மொத்த நீதிபதிகள் 60).

மே 16ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்கு எண் ணிக்கை நடைபெறும். முதல் சுற்று முடிவு காலை 9 மணிக்கே தெரிய வரும்.

ஆரோக்கியம் என் பது மனித உரிமை; அந்த வுரிமையைப் பாதுகாப் பதில் இந்திய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று நீதிபதி கே.என். பாஷா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு மே இறுதியில் நடைபெறும்.

காஞ்சீபுரம் மாவட் டத்தில் செங்கற்பட்டு, திருப்போரூர், திருக்கழுக் குன்றம், மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் காடுகளில் உள்ள வன விலங்குகள் வறட்சியின் காரணமாகத் தண்ணீர் குடிக்க காடுகளைவிட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க 20 தண்ணீர்த் தொட்டிகளைத்திறக்க வனத்துறை ஏற்பாடு செய்கிறது.

தமிழ்நாட்டில் அதிக பட்சமாக சனியன்று வெப்பநிலை - திருச்சியில் 107.24 டிகிரி.

பி.ஜே.பி. நயவஞ்சக மதவாதக் கட்சி. அதனைப் புறக்கணிப்பீர்! -அகிலேஷ்யாதவ் உ.பி. முதல் அமைச்சர்.

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த்வரதராசன் பலியா னார் என்பது சோகச் செய்தியாகும்.

இரயில் வழித்தடங் களில் அதிக தொலைவு மின்மயமாக்கும் பணியில் சென்னை இரயில்வே மின்மயமாக்கல் திட்ட அலுவலகத்திற்கு சிறந்த விருது அளிக்கப்படுகிறது.

போதுமான பராம ரிப்பு இன்றி நாய் ஒன்று இறந்ததால் சிங்கப்பூர் நீதிமன்றம் நாயின் உரிமை யாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் ஆயிரம் ஆண்டு பழமையான கிராமத் தினை அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது.

புரியுதா?

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முதல் அமைச் சருமான செல்வி ஜெ. ஜெய லலிதா தேர்தல் பிரச்சாரத் தின் கடைசி நாளான ஏப்ரல் 22ஆம் தேதியன்று பிரச் சாரம் செய்யாமல் முதல் நாளே முடித்துக் கொண்ட தற்குக் காரணம் 22ஆம் தேதி அஷ்டமி திதியாம்! வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/e-paper/79384.html#ixzz308JeRrHD

தமிழ் ஓவியா said...


ஜோதிடம் பார்க்க வந்த இடத்தில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சாமி யார்?


ஜோதிடம் பார்க்க வந்த இடத்தில்
பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சாமி யார்?

பெங்களூர், ஏப்.27-பெங்களூரில் பிரபல சாமியா ராக வலம் வரும் தேவிசிறீ குருஜி என்பவர் பெண் பக்தர் களிடம் நெருக்கமாக இருந்த கேமரா காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளி யானதால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

பெங்களூர் எச்.எஸ். ஆர்.லே அவுட் பகுதியில் திவ்யாசிறீ ஜோதிட ஆலயம் என்ற பெயரில் மடம் நடத்தி வருபவர் ராமசாமி தேவிசிறீ குருஜி, பலரின் ஜாதகங்களை கணித்து கொடுத்து பல அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமாகி பிரபலமானார். இவரைத் தேடி குடும்ப பிரச்சினை, திருமண தடை, குழந்தையின்மைக்குத் தீர்வு, வியாபார வளர்ச்சி உள்பட பல குறைகளுக்குத் தீர்வு தேடி மக்கள் கூட்டம் அலைமோதியதாம். குறிப்பாக, பெண்கள் இவர் மீது அதிக நம்பிக்கை வைத்து ஜோதிடம் பார்த்துச் செல்வார்களாம்!

தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. தன்னை தேடி வந்த பெண் பக்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. குடும்ப பிரச் சினைக்காக ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவ ருக்கு தனது அலுவலகத்தில் வேலை போட்டு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், அவர் கர்ப்பம் அடைந்தபின் மூலிகை மருந்து கொடுத்து கர்ப்பத்தை கலைத்தாக வும் புகார் வந்துள்ளது. இந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பானதால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், பொதுமக்கள் சுவாமியின் திவ்யாசிறீ ஜோதிட ஆலயத்தை நேற்று சூறையாடினர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அவரது படத்தைக் கிழித்தனர். கன்னட அமைப்பினர் அங்கு கூடி அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தேவிசிறீ மீது எழுந்துள்ள புகார் தொடர் பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/79368.html#ixzz308Js3Bje

தமிழ் ஓவியா said...

தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடும் மோடி
மம்தா காட்டம்

கொல்கத்தா, ஏப்.27-திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி வங்காள மொழி செய்தி சேன லுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பெரும்பான்மையான அரசியல்வாதிகளிடையே வெளிப்படையான தன்மை இல்லை. மக்களின் நம்பகத்துக்கு உகந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதில்லை. குஜராத்தில் ஒரு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்திலும் மோடி ஏன் போட்டியிட வேண்டும்?

இதில் இருந்து வெற்றி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. அவர் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றாலும், ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் தன்னை வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு அவர் நீதி செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

அப்படி இருக்கையில், வெளிப்படைத் தன்மை யும், நம்பகத் தன்மையும் எங்கே இருக்கிறது? மோடி பெருமை அடித்த குஜராத் மாடலை நாடு முழுவதும் உருவாக்கிவிட முடியாது. அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலம் எவ்வளவோ நன்றாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மற்றும் மனித வளர்ச்சி அளவுகோலின்படி, மேற்கு வங்காளத்தை விட குஜ ராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. கலவரத்தின் முகமோ, கலவரக்காரர்களின் கட்சியோ அதிகாரத் துக்கு வருவதை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/79368.html#ixzz308K3967A

தமிழ் ஓவியா said...


மேற்குவங்கத்தைவிட குஜராத் பின்தங்கியே இருக்கிறது


புதுடில்லி, ஏப். 27- சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வறிக்கையின்படி தொழில்உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களையும்விட மேற்கு வங்கமே முதலாவதாக உள்ளது என்பதும், இதில்குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேற்படி தேசிய மாதிரி சர்வேயின்படி தெரியவரும் உண்மைகள் வருமாறு:

2004ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector)நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் மேற்குவங்கத்தில் முந்தைய இடது முன்னணிஆட்சி புரிந்த சமயத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் நாடுமுழுவதும் 58.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற் சாலைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், 24 லட்சம் வேலைவாய்ப்புகள் மேற்குவங்கத்தில் மட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பாஜக ஆளும் குஜராத்தில் இதே கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது 14.9 லட்சம் வேலைவாய்ப்புகள்தான். மேற்குவங்கத்தில் சிங்கூரில் டாட்டாவின் நானோ தொழிற்சாலை அமைக்கப்படுவதைப் பலவிதங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டுதடுத்து நிறுத்திய பின்னரும்கூட தொழில் வளர்ச்சியில் மேற்குவங்க இடது முன்னணிஅரசு சாதனை படைத்திருப்பதையே தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு 2007-2008இல்கட்டவிழ்த்துவிட்ட, தொழில்வளர்ச்சிக்கு எதிரான துஷ்பிரச்சாரத்தையும் மீறி, மேற்கு வங்கஇடது முன்னணி அரசு 12 சதவீதம் தொழில் வளர்ச்சியை அடைந்திருந்தது என்று அப்போது மேற்கு வங்க மாநில நிதி அமைச்சராக இருந்த அசிம் தாஸ் குப்தா கூறுகிறார்.சமீபத்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் உற்பத்தித்துறையில், வேலை வாய்ப்புகளில் நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம் என்றும் குஜராத் மாடல் என்றும் நரேந்திரமோடி சரடு விட்டுக் கொண்டி ருக்கக்கூடிய நிலையில், தேசியமாதிரி சர்வே இந்த ஆய் வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ஆட்சியிலிருந்த கடைசி ஆண்டான 2010-2011ஆம் ஆண்டில் கூட சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருந்தோம் என்று அசிம் தாஸ் குப்தா கூறினார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணிக்குக் கிடைத்த வெற்றி, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தொழில்மய முன்னேற்றத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுவிரிவான முறையில் மக்களால் அறியப்பட்டது, என்றுஇடதுமுன்னணி தலைவர்களில் ஒருவர் கூறினார். சிறிய அளவிலான உற்பத்திப் பிரிவுகள் அதிக அளவில் இருப்பது மேற்கு வங்கத்தில்தான் என்றும் அசிம் தாஸ் குப்தா கூறினார். 1991-க்கும் 2011-க்கும் இடையேயான ஆண்டுகளில், தோழர் ஜோதிபாசு தலைமையின்கீழ் நாங்கள் எங்கள் தொழில் கொள்கையைத் திருத்தி அமைத்தபோது, புதிதாக 2,531 பெரிய மற்றும் நடுத்தர உற்பத்திப்பிரிவுகளை அமைத்தோம் என்றும் அசிம்தாஸ் குப்தா கூறினார்.

1960-களுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் மயம் மிகவும் சிறப்பாக இருந்தது 2004-2011ஆம்ஆண்டுகளில்தான் என்றும்,சிங்கூரில் திரிணாமுல் காங்கிரசும் மாவோயிஸ்ட்டுகளும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முன்னர் அக்கால கட்டத்தில் 1,872 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். நன்றி: தீக்கதிர் (26.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/79360.html#ixzz308KGO6ID