Search This Blog

7.4.14

வருணாச்சிரமமும் மதக்கொடுமையும் ஒழியவேண்டும்-பெரியார்

திருச்சங்கோட்டில் உபன்யாசம்

நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேசவேண்டியிருக்கும் என்று கருதவேயில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வரவேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தாரர் அவர்கள் சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேச வேண்டியவனாக இருக்கிறேன். இன்று பேசவேண்டிய விஷயம் “தற்கால இராஜ்ய நிலைமை” என்பதாக நோட்டீ சில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ இராஜிய திட்ட சம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட ஒரு அபிப்பிராயம் கொண்டிருப்பவன். இராஜிய துறையில் சிறிதுகாலம் இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில் அதிருப்தி கொண்டு வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத்துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட நான் இராஜிய நிலைமையைப் பற்றி என்ன பேசமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

சகோதரர்களே இன்றைய நிலைமையில் நான் இராஜியத்துறை கொள்கைகளில் மாத்திரம் அப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜிய விஷயம் என்பதையே நாணையமானதல்ல என்று கருதுவதோடு இந்தியநாட்டின் விடுதலைக்கு இந்த இராஜியத்துறை அவ்வளவு முக்கியமானதல்லவென்றும், மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்க வேண்டியது என்றும் கருதுகின்றவன். நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல் வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர அரசியல் வேலையல்ல.

ஏனெனில் சமூகத்துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத் தனத்தின் கொடுமை எவ்வளவு? இவைகளுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையை கொஞ்சமும் பெரிதாகக் கருதி லட்சியம் செய்ய மாட்டானென்றே கருதுகின்றேன். உங்களில் யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மத சம்பந்தமான சமூக சம்பந்தமான அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து மான மிழந்து இழி ஜாதியாய் வாழுகின்றோமே யொழிய அரசியல் அடிமைத் தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்பவில்லை. உத்தியோ கத்தை பிரமாதமானதாகக் கருதவில்லை. அதிகாரத்தை ஆசைப்பட வில்லை.

என்னுடைய நாட்டு மனிதன் ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருதவேண்டும்,அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான் என்னை வருத்துகின்றது. நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது. இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப் பற்றி கவனிப்போம் அதை யொழிப்போம். இல்லா விட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக்கின்றார்களோ அவற்றை யொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு “அரசியல் அரசியல்” என்றால் என்னஅருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப் பாருங்கள்.

“அரசியலைப் பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை. அன்னியனை ஒழிக்க வேண்டாமா? ” என்று சிலர் கேட்கின்றார்கள். இதிலும் உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் யார் அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப் பாருங்கள்.

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வரவேண்டாம் - தொடவேண்டாமென்பவனும், கிட்ட வந்தாலே - கண்ணில் தென்பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதை சாப்பிட் டால்-என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா? அல்லது “உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம்தான்” என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக யிருந்து வரு கின்றார்கள். கல்வி வாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திரமில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு யார் என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவு யில்லாதவர்கள். இவர்கள் முன் எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ புரட்டுகள் நடக்கின்றன. இதைப் பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்ற வேண்டியதே நமது முதல் வேலையாயிருக்கவேண்டும் என்பதை யாருமே கவனிப்பதில்லை. எந்தத் தலைவருமே நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால் நமக்கு எப்போது விடுதலை கிடைக்கக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.

“பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக்கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது. அதை நிறுத்த வேண்டாமா?” என்கின்றார்கள் மற்றொரு கூட்ட அரசியல் கூட்டத்தார். இதையும் என்னால் லட்சியம் செய்யவோ, ஒப்புக்கொள்ளவோ முடிய வில்லை. ஏனென்றால் பொருள் நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

நமது நாட்டில் சமூகத்துறையிலேயே பிறவியிலேயே பொருளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங்களுக்குத்தான் பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக்குட்பட்ட அடிமை உரிமைதானே இருந்து வருகின்றது? முற்கூறிய கூட்டங்களுக்குப் பொரு ளாதார உரிமை என்பது பிறவியிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுடன் மற்றவர்கள் அதற்கு அருகரல்லாமல் இருக்கும்படியான நிர்பந் தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, ஒரு இட்லிக்கடைப் பார்ப்பானுடைய மகன் ஹை கோர்ட் ஜட்ஜாக வரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன் மகன் மந்திரி ஆகலாம். ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாக வர முடியுமா? யோசித்துப் பாருங்கள். ஜாதியின் பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரிவா னது இம்மாதிரி சிலருக்கு நன்மையையும், சிலருக்குத் தீமையையும் செய்து வருகின்றது, வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனிமேல் இந்தப்படி செய்யாமல் இருக்க நமது “அரசியல் சுயராஜியத்தில்” எவ்வித திட்டமும் இல்லை என்பதோடு இந்த முறைமையைக் காப்பாற்றவும் திட்டம் போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக் கொள்ள முடியும்?

இன்றைய தினம் இந்த திருச்சங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப் போடக்கூட அவனிடம் இட்லி வாங்கமாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ்வளவு மோசமாயிருந்தாலும் “சாமி சாமி” என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமூக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?

ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளையும் கீழ்ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும், கொடுமைப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங்களையும் கவனித்து, அவர்களை அவர்களு டையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்ய முடியாத அரசியல் திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன்? மேல் ஜாதிக்காரனுக் கும் முதலாளிக்குமல்லவா அது பயன்படும். தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம் போடுகிறார்களா? பாருங்கள்.

நமது மக்களின் இழிவும், அடிமைத்தனமும், பொருளாதாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின் பயனாய் இருந்து வருகின்றதா? அல்லது இல்லையா? என்று பாருங்கள். பணக்காரனும் ஜமீன்தாரனும் பணக்கார பிரபுவும் தங்கள் பணங்களை இந்நாட்டில் என்ன செய்கிறார்கள்? என்று சற்று கவனித்துப்பாருங்கள். மதத்தின் பயனாய் ஏற்பட்ட முட்டாள்தனத்தின் காரணமாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவி லின் பேரால் பாழாகின்ற பணம் இவ்வளவென்று உங்களுக்குத் தெரியாதா? பணம் சேரச் சேர மண்ணால் கட்டின கோவிலை இடித்து கல்லால் கட்டு கின்றான். பிறகு சலவைக்கல்லால் கட்டுகிறான், சித்திரவேலை செய்கிறான், பிறகு வெள்ளியிலும், தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூடமக்களைக் கொண்ட நாட்டிற்கு பணம் மிச்சமாவதால் என்ன லாபம்?

பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால் தான் அந்தப் பணம் நாட்டின் நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேரிகளும், சூக்ஷிக்காரர்களும் பிழைப்பதற்காக பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித் துப் பாருங்கள். மற்றொரு கூட்டத்தார் நமக்கு “சமத்துவம் வேண்டிய தற்காக சுயராஜியம் வேண்டு”மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறி வற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன். பார்ப்பனனும், பறையனும் இருக்கும் நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின், இருக்கும்படி காப்பாற்றப் படவேண்டிய நாட்டின் மக்களுக்கு சமத்துவம் சம்பாதிப்பது என்பது புரட்டா? அல்லது நாணையமானதா என்று யோசித்துப்பாருங்கள். வீண் வாய்பேச்சில்-வெட்டிப்பேச்சில் மயங்குகின்ற பாமர மக்களைக் கூட்டு வித்துப் பேசி விடுவதினாலேயே எந்தக்காரியமும் நடந்துவிடாது. எப்படி யானாலும் ஒரு காலத்தில் வெளியாய்த்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடுதலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டு மானால் பயன்படத்தக்க நாணையமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப்போகும்-வரவேண்டுமென்று கேட்கப்படும்-சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்கமாட்டானா? என்று கேட்கின்றேன். பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா? என்று கேட்கின்றேன். இன்றைய தினம் சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின் றேன். இன்றையதினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத் துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும் பாடுபடாமல் இருந்து கொண்டு குடும்பத்தோடு மேன்மையாய் வாழ்பவனும் இருக்கமாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய் விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக் காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்? இந்த வித்தியாசங்கள் இருக்கும் “சுயராஜியத்திற்கும்” இப்போது இருக்கும் “அன்னிய ராஜியத்திற்கும்” என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்? என்பதை யோசித்து பாருங்கள். மத மூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசிய லிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களாயிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அன்னியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை பாழாக்குகிறார்கள்.

நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் இதுவரை சமூக சம்பந்தமான முற்போக்கு ஏதாவது ஏற்பட்டிருக்கின்றதா? என்று பாருங்கள். சமூக முற்போக்கு-சீர்திருத்தம் என்பவை ஏற்பட தீவிர முயற்சி செய்யப்படும் போதெல்லாம் அரசியல் என்பது குறுக்கிட்டு தடைகல்லாய் இருந்து வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது? என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வளவு விழிப்பான இந்தக்காலத்திலும் அரசியல் தலைவர்கள் வருணாச்சிரம பாதுகாப்பும் மதநடுநிலைமையும் என்று சொல்லிக்கொண்டு தானே இன்று சுயராஜியம் வேண்டுமென்கிறார் கள்-சுயராஜியமும் வாங்கப் போயுமிருக்கின்றார்கள். எந்தத் தலைவராவது சுயராஜியத்தில் வருணாச்சிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப் படும், மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ்-மேல் நிலைமை ஆகியவை கள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா? சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப்பாருங்கள்.

வருணாச்சிரமமும் மதக்கொடுமையும் ஒழியவேண்டுமென்கிற நான் எப்படி இந்த அரசியலை சுயராஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலை மையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா? என்று ஆராய்ந்து பாருங்கள். அப்படியிருக்க சுயராஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக் கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும் மானமும் இருந்தால் அதில் சேரக்கூடுமா? என்று யோசித்துப்பாருங்கள்.

நண்பர்களே! நான் இதுவரை பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோ அதிருப்திக்கோ இடமிருக்கக் கூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதை பேசவேண்டுமே ஒழிய கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி என்று பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள் கண்டிக்கக்கூடியதாகவும் இருக்க லாம். ஆனால் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் வெளியிட எனக் குள்ள பாத்தியதையில் உங்களுக்கு ஆnக்ஷபமிருக்காதென்று கருதியே பேசினே னேயொழியே வேறில்லை.

ஆகவே தாங்கள் நான் சொன்னதையும் இனியும் கனவான்கள் பலர் சொல்லப்போவதையும் தயவு செய்து ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

------------------------------------------------------- 01.09.1931 அன்று திருச்செங்கோட்டிற்கு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்களைக் காண சென்றிருந்தபோது ஈ.வெ.ராமசாமியவர்களை அங்கு “தற்கால ராஜிய நிலைமை” என்ற பொருள்பற்றி பேச ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டுமென திரு.டி.வி. நடேச முதலியாரும் பிறரும் வற்புறுத்தியதன் பொருட்டு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்கள் தலைமை வகிக்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.
”குடி அரசு” - சொற்பொழிவு - 06.09.1931

27 comments:

தமிழ் ஓவியா said...


ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை


கணியூர், ஏப். 6- திமுக தலைமையிலான கூட் டணி கொள்கைக் கூட்டணி. மற்ற கூட்டணியில் ஜாதி வெறி, மத வெறி, பதவி வெறிக் கான கூட்டணி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பெரும்பான்மை சமுதாயம் என்றால் என்ன?

பெரும்பான்மை சமுதாயம் என்றால் என்ன? ஒடுக்கப்பட்ட சமுதாயம் மண்டல் ஆணையத் தில் 52 சதவிகிதத்தினர் இந்தியா வில் பிற்படுத்தப்பட்டவர் கள்; தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்கள் என அனைவரையும் கூட்டினால் 85 சதவிகிதத்துக்கு நாம் இருப்போம். அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள் என்றால் ஆட்சியில் நாம் இருக்கும் சூழல் தெளிவாக இருக்கும்.

ஆனால், பிளவுபடுத்தப் பட்டதாக 4000 ஜாதி, அதற்குள் உட்பிரிவுகள், ஒட்டுமொத்தமாக இந்த மண்ணை ஒன்று சேர விடாமல் தடுத்து விட்டார் கள். தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால், அதிலே ஒன்றல்ல மூன்று பிரிவு வைத்து விட்டார்கள்.

பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள் மற்ற நாட்டில் எல்லாம் சமத்துவ மின்மை, அதாவது inequality சமத்துவ பேதம் அங்கே! ஆனால், இங்கே இருக்கிறது பாருங்கள் என்ன கொடுமை என்றால், Grade inequality எத்தனை ஜாதிங்க! ஒருத்தர் மேலே ஒருத்தர், இன்னொ ருத்தர் கீழே, அதற்கு கீழே இன்னொருத்தர் இந்த நான்கு பேரும் அடித்துக் கொள்ள வேண்டும் மேலே உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

உங்களுக்குள் என்ன சண்டை என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்க வேண்டும். இது மாதிரி ஒரு தந்திரமான ஒரு திட்டம். இதுமாதிரி இருக்கக் கூயவர்கள் அந்த அணியில் (பிஜேபி) இருக்கிறார் கள். இங்கே இருக்கக்கூடிய கூட்டணியிலே அத்தனைப் பேரும் ஒன்றாக இருக்கி றார்கள் என்றால், அதுதான் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கி இருக்கின்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியாகும்.

சிறுபான்மை தோழர் களுடன் நாம் ஒற்றுமை யாக ஒன்றாக இருப்பதுதான் சமுதாய வெற்றி. கனவில் கூட சட்டமன்றத்தை, நாடா ளுமன்றத்தை நினைத்துப் பார்ப்பவர்கள் அல்ல நாங் கள்; சுதந்திரமான பறவை கள். நாங்கள் எங்கள் கருத்தை பெரியார் கருத்தை, எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல், சொல்லக் கூடியவர்கள்.

நாங்கள் ஏன் தேர்தலைப் பற்றி கவலைப் படுகிறோம்? ஊர் ஊராக ஏன் போகவேண்டும்? கொஞ்சம் நாங்கள் அசந் தால், மதவெறியர்கள் மதக் கலவரத்தை உருவாக்கி விடு வார்கள். ஜாதி கலவரத்தை உற்பத்தி செய்து விடு வார்கள்.

இது வரை செய்த பணிகள் எல்லாம் வீணாக போய் விடும். திராவிடர் இயக்கம்தான் சமத்துவத் திற்கு அடித்தளம். அடித் தளம் நன்றாக போட வில்லை என்றால், அழித்து விடுவார்கள் என்ற கவலை தான். ஆகவே, இந்தக் கூட்டணி சமத்துவமும், ஒற்றுமையும் பின்னக்கூடிய கூட்டணி.

கம்யூனிஸ்டுகளை கழற்றிவிட்டார்களே!


தமிழ் ஓவியா said...

நேற்றுவரை நான்தான் பிரதமர் என்ற ஜெயலலிதா அம்மையார், திடீர் என்று அங்கம் வகிக்கிறேன் என்றால் என்ன பொருள்? இதை நன்றாக கவனிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் நண்பர்கள் எல்லாம் வடக் கில் இருந்து வந்தார்கள். இங்கே உள்ளவர்களும் கைகளை தூக்கி அவர்கள் கையை பிடித்தார்கள். தூக்கிய கையோடு சரி, கையை கீழ போட்டவுடன் கும்பிட்டார்கள். யார் மற்றவர்கள்? அந்த அம்மா இல்லை.

நால்வர் கூட்டணி

அவர்கள் நால்வர் அணியாக இருப்பார்கள், சைவ சமயக் குரவர்கள் நான்கு பேர் மாதிரி, நால்வர் அணி. நம்ம இடதுசாரி தோழர்கள் பாவம், வெகு காலம் காத்துக் கொண்டிருந்தார்கள். நம்மிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தொகுதி என்று அறிவிக்கப்படவில்லையே என்று இவர்களும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நம்பிக்கை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அவர்கள் உட்கார்ந்து கொண்டி ருந்தார்கள். அதுவும் ஒரு இலை அல்ல, இரட்டை இலை. நல்லா பரிமாறு வார்கள். நல்லா பரிமாறு வார்கள் என்று நினைத் தோம். ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்காங்க உட்கார்ந்தே இருக்காங்க! என்னங்க ஒன்றுமே காணோம் என்று கேட்டார் கள். நால்வர் அணியில் இருந்து இரண்டு பேர் வந்தார்கள். வந்தவுடன் கும்பிட்டார்கள்.

நண்பர்களாக நாம் சேர்ந்தோம் - நண்பர்களா கவே பிரிவோம்! என்று அவர்கள் கழற்றி விடப்பட் டார்கள். அதிகமாக அவர் களை நாம் பேசவேண்டாம். அவர்கள் எந்த அணியில் இருந்தாலும், எதிர்த்தாலும் கொள்கை ரீதியாக நண் பர்கள், யாரையும் எதிரி யாகப் பார்த்து நமக்குப் பழக்கமில்லை. அவர்களை அவமதித்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

பிரதமர் கனவு கண் டவர்கள். இப்பொழுது நாம் தமிழ்நாட்டில் அதிகம் இடம் வெற்றி பெற்று, மத்தியில் யாருக்காவது ஆதரவு தருவோம் என்று சொல்கிறார்கள். அது ஊடக நம்பிக்கை, உளவுத் துறை நம்பிக்கை. ஆனால் மக் களின் தீர்ப்பு வேறு வித மாக இருக்கும் என்பதை தேர்தல் முடிந்த பின் பார்க்கலாம்.

மோடி - ஜெ இரகசிய ஒப்பந்தமா?

இடதுசாரி தோழர்கள் எங்களை ஏன் வெளியே போக சொன்னார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது; கார ணம், மோடியோடு இரகசிய ஒப்பந்தம். ஆகவே நாங்கள் இருந்தால் வசதிகுறைவாக இருக்கும் என்று இடையில் உட்கார வைத்தார்களே தவிர, பரிமாறாமல் அனுப்பி விட்டார்கள்.

பரிமாறினால் மோடி கோபித்துக் கொள் வார் என்று பரிமாறாமல் இருந்திருக்கிறார்கள் என்ற நிலைதான் இவர்க ளுக்கு ஏற்பட்டது. இந்த திமுக அணி கொள்கைக் கூட்டணி, நாம் இருக்கிற கூட்டணி அடிப்படை கொள்கையில் மாறுபட்டு இருக்கிறோமா? இதுவல்லவா கூட்டணி! இந்த அம்மையார் செய்தது போல், யாராவது இதுபோல் அனுப்பப் பட்டார்களா? இதுவா அரசியல் நாணயம்?

ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி = பிஜேபி கூட்டணி

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டிலே, பெரியார் பிறந்த மண்ணிலே, திராவிடர் இயக்கம் வளர்ந்த மண்ணிலே, பேத மில்லாப் பெருவாழ்வு மாமன், மச்சான், மதத் தால் பிரிவில்லை, ஜாதிகளால் பிளவுபடுவ தில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தாலே தெரியும். இப்படிப்பட்ட சூழல் வடக்கே உண்டா? மற்ற மாநிலங்களில் உண்டா? என்றால் கிடையாது அப்படிப்பட்ட மதக்கலவரங்கள் இங்கேயும் உருவாக்க வேண்டும். ஜாதிகளை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக அமைந்ததுதான் பிஜேபி கூட்டணி.

ஜாதி வெறி, மத வெறி, பதவி வெறி இதை மூன்றையும் கூட்டினால் ஒரு கூட்டணி இதற்கு பெயர்தான் பி.ஜே.பி. கூட்டணி.

பிஜேபி கூட்டணிக்கு எதிராக, அதாவது பதவி வெறிக்கோ? சந்தர்ப்பவாதத்திற்கோ, அடி பணி யாமல் கொள்கையுடன் இருக்கின்ற ஒரே கூட் டணி, கலைஞர் தலைமையில் அமைக்கப்பட்டி ருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி.

நீங்கள் ஏப்ரல் 24ஆம் தேதி இந்த கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தின் (நல்ல) எதிர்காலத் தையும், மக்களின் வாழ்வையும், இந்தியாவை யும் மதவாத கூட்டணியிடமிருந்து காப்பாற்ற லாம் வாக்காளர்களே!

அம்மையார் ஆட்சியில் அமைதியா?

தமிழ்நாட்டில் அமைதி இல்லை! எங்கு பார்த்தாலும் கொலை, கொலை இல்லாத நாள் உண்டா? இரட்டைக் கொலை, மூன்று கொலை, நான்கு கொலை கொலை கொலையாய் கொலை ஒய் திஸ் கொலை வெறின்னு ஏன் பாடல் சினிமாவில் எடுத்தார்கள் என்று தெரிகிறது. இதுதான் அம்மையார் (ஜெயலலிதா) ஆட்சியின் அமைதியா? வளமா? வளர்ச்சியா?

கொலை எங்கும் நடந்து கொண்டு இருக் கிறது. பத்திரிகையைத் திருப்பினால், தொலைக் காட்சியை பார்த்தால் இன்றைக்கு கொலைச் செய்தி இல்லை. தமிழ்நாடு அமைதியாய் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

சிறைச்சாலைக்குள் கொலை, கோர்ட்டில் வாதாடச் சென்றால் கொலை, தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா? இதுபோல். அப் புறம் எங்க அமைதி வளம் வளர்ச்சி? எண்ணிப் பாருங்கள் வாக்காளர்களே! சிந்தித்து வாக்களி யுங்கள்! நல்ல தலைமுறையை உருவாக்க, அவர் களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்.

தமிழ் ஓவியா said...

கூட்டணியா? - சீட்டணியா?

எங்களின் (பாஜக) கூட்டணியில் தமிழ்நாட் டுக்குத்தான் ஒப்பந்தம் போட்டோமே தவிர பாண்டிச்சேரி கூட்டணிக்கு ஒப்பந்தம் போட வில்லை ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அறிவு ஆசான் பெரியார் தான் பழமொழி சொல்வார்கள். தலைக்கு ஒரு சீயக் காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று. அதுதான் நினைவுக்கு வருகிறது. எனவே, பிஜேபி தலைமை யில் உள்ள அணி கூட்டணி அல்ல, அது சீட்டணி!

யாருக்கு எத்தனை சீட்டு என்று கேட்கக்கூடிய, கேட்ட சீட்டணி - கூட்டணி அல்ல.

அந்த கூட்டணியில் (பாஜக) தலைவர்கள் ஒத்துப் போகிறார்களா? அவர் வந்தால், இவர் வரமாட்டார். இவர் வந்தால் அவர் வரமாட்டார்.

ஆகவே, அது ஒரு சர்க்கஸ் கம்பெனி. அதிலே ரிங் மாஸ்டர் மோடி. மற்றவர்கள் எல்லாம் ஜாடி. அவர்கள் ஜோடியாக வேலை பார்க்க மாட்டார்கள். ஜாடியாகத்தான் இருப்பார்கள்.

ஊடகத்தால் உண்மை - பலியாகும்!

அந்தக் காலத்தில் சொல்லுவார்கள். யுத்தத்தில் முதலாவது, பலியாவது உண்மை என்று ஆங் கிலத்தில் பழமொழி உண்டு. ஆனால், போரில் உண்மைகள் பலியாவதைவிட, தேர்தலில்தான் உண்மை பலியாவது அதிகம். ஏனென்றால், நம் நாட்டில் உண்மைகள் தேர்தலில் வெளியே வராது.

தமிழ் ஓவியா said...

அதற்கு உதாரணம், நம்ம நாட்டு ஊடகங்கள். நீங்கள் அதைப் பார்த்தாலே தெரியும். பல முக்கியமான செய்திகள் கூட அதில் வராது. மாறாக, எங்காவது ஒரு சின்ன பரபரப்பு, ஒரு கீறல் அல்லது ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால், அதைப் பெரிதாகப் போட்டு அதுவும் நம்முடைய இயக்கத்திற்கு எதிராக இருந்தால் அதுதான் செய்தி அவர்களுக்கு. இந்தக் காலத்தில் அல்ல, நீண்ட காலமாக பழக்கமான ஒன்று.

தந்தை பெரியார் அவர்கள் கூட்டத்திலே சொல் வார்கள். நான் எவ்வளவு மக்களைச் சந்திக்கி றேன். பொதுக் கூட்ட மேடைகளில் பேசுகிறேன். நாளைக்கு வருகிற செய்தித்தாள்களில் செய்தி வருமா? இருக்குமா? என்றால் இருக்காது.

கூட்டத்தில் எங்காவது ஓர் பன்றி உள்ள போய், குறுக்கே வந்து வேகமாக ஓடியது என்ற செய்தி இருந்தது என்றால், பெரியார் கூட்டத்தில் ஒரு பன்றி புகுந்து பெரிய கலாட்டா என்று செய்தி இருந்தால், அதைத்தான் செய்தியாக போடுவார் களே தவிர, நம்ம சொல்லும் கருத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள். போட மாட்டார்கள். அதுதான் நம் நாட்டு ஊடகங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்.

ஆகவே, இந்த ஊடகங்களில் வரும் கருத்துக் கணிப்பு என்பதை எல்லாம் நம்பாதீர்கள்! அது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு.

பாரதம், பாரதம் - பார் அதம் ஆட்சி

அம்மையாருக்கு (ஜெயலலிதா) இப்பொழுதே தேர்தல் பயம் வந்து விட்டது. நாம் எல்லாம் கஷ்டப்பட்டு ரோட்டில் வருகிறோம். அவங்க மேலே இருந்து வருவாங்க, பேசிவிட்டு வசதியாக போவாங்க! நாளுக்கு நாள் அம்மையாருக்கு (பிரதமர் கனவு) சுருதி குறைந்து அங்கம் வகிப்போம்! மத்தியில் வரக்கூடிய ஆட்சியிலே என்கிறார்கள்.

பிரதமர் கனவு கண்டு பிளக்ஸ் எப்படி வைத்தார்கள்? வருங்கால பாரதமே! பாரதம், பாரதம் - பார் அதம் ஆட்சி. பார் அதான் அவரின் ஆட்சி.

திருட(ர்கள்) சர்வே!

அதிமுக (அம்மையாரின்) ஆட்சியில் திருடர்கள் ஆந்திராவிற்குப் போய் விட்டார்களாம்! திருடன் சர்வே ஒன்று எடுக்கின்றான். பூட்டிய வீடு எத்தனை, பாட்டிகள் உள்ள வீடு எவ்வளவு, ஆபீசுக்கு ஆள் போன பிறகு தனியாக யார் வீட்டில் இருக்கிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள். எப்பொழுது மின்வெட்டு ஏற்படும்? என திருடர்கள் சர்வே எடுக்கிறார்கள்.

இது கலைஞர் ஆட்சியில் அல்ல, ஜெயலலிதா (அம்மையார்) ஆட்சியில் தான் அத்தனை திருட்டு நடக்கின்றது. திருடன் முதலிலே ஒரு (ஏற்பாடு) Preparation போட்டு, நடத்துகிறான் அதை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன அரசு இது? என்ன செய்கிறார்கள் இவர்கள்?

ஏப்ரல் 24 தேர்தல், மே 16 தேர்தல் முடிவு வரும். 1971இல் வந்த முடிவு, 2004இல் காவி ஆட்சி இறக்கப்பட்ட முடிவு மீண்டும் 2014இல் வரப்போகிறது. அன்றைக்குத் தெரியும். இந்த ஊடகங்களின் ஆரூடங்கள், ஆலமரத்தடி ஜோசியர்களின் பித்தலாட்டம். எங்களுக்குத் தெரியும் முன்கூட்டியே! உங்களுக்கு மே 16இல் தெரியும் என்று தனது உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/78280.html#ixzz2y9aw3pfB

தமிழ் ஓவியா said...

எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!

தமிழக பிஜேபி துணைத் தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளருமான எச். ராஜா என்பவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவதூறா கச் பேசியதற்காகவும் கிறித்த வர், முஸ்லீம்கள்மீது வெறுப் பைத் தூண்டும் வகையில் பேசியதாலும் அவர்மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை மது ரைக் கிளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78279.html#ixzz2y9bHYte1

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


வேட்பு மனு

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு வேட்பு மனு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1318.

தடை

மக்களவைத் தேர்தலில் முதல் வாக்கெடுப்பு நாளை தொடங்கி 9 கட்டமாக மே 12ஆம் தேதி முடிவடை கிறது. நாளை திரிபுராவில் தொடங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவுக்குப் பின்பு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மீறல்கள்

சென்னையில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் 55064.

தண்டனை

வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்கப் பட்டால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.

ரஜினியிடம் கெஞ்சல்

சரியான நேரத்தில் சரியான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்கிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

பரிதாபம்: தங்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்க முடியாதவர்கள் சினிமாக்காரர்களிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்களின் பரிதாப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வைகோ கிண்டல்!

அரிஸ்டாடிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதா வாகத்தான் இருக்க முடியும் என்று வைகோ கிண்டல் அடித்துள்ளார். தென் சென்னை பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: அரிஸ்டாட்டிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதாதான்! ஏனென்றால் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைய ஓட்ட ளியுங்கள் எனப் பேசி வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்களோ ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வரு கிறார்கள்.

40 தொகுதிகளை வைத்துக் கொண்டு எப்படி பிரதமராக முடியும்? ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளை கடைசி வரை காக்க வைத்து கழுத்தறுத்தவர் என்று வைகோ பேசியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78278.html#ixzz2y9bSBj5E

தமிழ் ஓவியா said...


பாஜக சீட்டணிக்கு தமிழக மக்கள் தக்க விடை கொடுப்பார்கள்

- குடந்தை கருணா

கோப்ரா போஸ்ட் எனும் புலனாய்வு இணைய தளம் மூன்று நாட்களுக்கு முன்னர், பாபர் மசூதி இடிப்பில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, சிவ சேனா, சங் பரிவார் அமைப்புகள் எப்படி திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தது என்றும், பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஸி, பால் தாக்கரே போன்றோருக்கு இவை அனைத்து முன் கூட்டியே தெரியும் எனும் தகவல்களை, ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

கோப்ரா போஸ்ட் இணை ஆசிரியர் ஆசிஸ், ராமஜன்மபூமி இயக்கத்தின் 23 தலைவர்களை பேட்டி எடுத்து இந்த ஆதாரங்களை தந்துள்ளார். அந்த 23 தலைவர்களும், பாபர் மசூதி இடிப்பில் சதி செய்த வர்கள் அல்லது சதியினை நிறைவேற்றியவர்கள்.

அயோத்தியா இயக்கம் எனும் நூலை எழுத இருப்பதாக ஆசிஸ் இந்த தலைவர்களிடம் கூறி, அதன் மூலம் இந்த சதி செயலை கண்டுபிடித்து நாட்டிற்கு தந்துள்ளது கோப்ரா போஸ்ட். உமா பாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார் போன்ற பாஜக தலைவர்கள், சுவாமி சச்சிதானந்த் சாக்ஸி மகராஜ், சாத்வி ரிதம்பரா, போன்ற இந்து சாமியார்கள், இவர்கள் இந்த பேட்டியில் பங்கேற்றவர்கள்.

லட்சக்கணக்கான கரசேவர்கள் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்கும் முன், பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என உறுதி மொழி எடுத்து, இந்த இடிப்பில் பங்கேற்றுள்ளனர். இந்த உறுதி மொழியை, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஸி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யா தர்மேந்திரா போன்றோர் முன்னிலையில் இந்த உறுதி மொழி மேற்கொள்ளப்பட்டது.

கரசேவர்களுக்கு, உயரமான கட்டிடங்களில் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயுதங் களும் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இந்த பயிற்சி யினை அளித்தது ஆர்.எஸ்.எஸ். என ஆதாரங்களை குவித்துள்ளது கோப்ரா போஸ்ட்.

1992-ல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையை அமைத்துக் கொடுத்தவர் மோடி.

பாபர் மசூதி இடித்த 1992-க்குப் பிறகு, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் நடைபெற்று பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இன்றளவும், இதற்கான தீர்வு இல்லாத நிலையில், நாட்டில் அமைதிக்கு பங்கம் எந்நேரமும் ஏற்படலாம் என்கிற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய பயங்கர சதித்திட்டத்தை தீட்டியும் பயிற்சியும் அளித்த ஆர்.எஸ்.எஸில் இருந்ததை பெருமையாகக் கருதுகிறேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி சொல்கிறார். ஆர்.எஸ்.எஸீன் கட்டுப்பாடுதான் தன்னை உயர்த்தியது என பெருமைக் கொள்கிறார்.

அத்தகைய மோடியை பிரதமராக வேண்டும் என தமிழ்நாட்டில் பாஜக சீட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வாக்கு கேட்கிறார்கள் என் றால், தமிழ் நாட்டை, அமளிக்காடாக ஆக்கிட மத வெறி சக்திகளுக்குத் துணைபோகிறார்கள் என்பது தான் விடை. தமிழக மக்கள் இத்தகையவர்களுக்கு தேர்தல் மூலம் நல்ல விடை கொடுப்பார்கள் என்பது உறுதி.

Read more: http://viduthalai.in/page-2/78272.html#ixzz2y9bdgUEo

தமிழ் ஓவியா said...


மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள்


யோகா குரு பாபா ராம் தேவ், பிஜேபி யின் ஆதரவாளர் என்பதும், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பர் என்பதும், அனைவருக்கும் தெரியும். அவரது யோகா வகுப்புகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை. (இவற்றை YOUTUBEல் காணலாம்.)

பாபாராம் தேவ் அரசியலில் முக்கியப் பங்கு ஆற்ற விரும்புகிறார். நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகிறார். அதனால் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஊழலை ஒழிக்க இவர் தரும் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள்: (02.04.2014, The Financial Express - பார்க்கவும்) சுங்க வரியைத் (Customs Duty) தவிர, மற்ற வரிகளான, வருமான வரி, கலால் வரி (Excise Duty) போன்றவற்றை ரத்து செய்துவிடலாம். 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க லாம். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர முடியும் என்று இவர் நம்புகிறார்.

இந்த வரிகளுக்குப் பதிலாக BTT (Banking Transaction Tax), என்ற வரியை, அதாவது, வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு 2% முதல் 15% வரை வரி விதிக்கலாம். மேலும் நோட்டுகளுக்குப் பதிலாக மின் பணம் ((Electronic Money) பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் கறுப்புச் சந்தை (Black Market) ஒழியும் என்று இவர் கருதுகிறார். பிரேசில் நாட்டில் இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.

இவர் தனது பொருளாதாரச் சீர்திருத் தங்களை, அரசியல் வாதிகள், பொருளாதார நிபணர்கள், (Chartered Accountants) ஆகி யோர் அடங்கிய குழுவில் விவாதித்திருக் கிறார்கள். நமது நாட்டில் தற்போது 17% வணிகம் தான் வங்கி வழியே நடப்பதாகவும் மீதி 83% வணிகம் வங்கிகளுக்கு வெளியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பாபா ராம்தேவின் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால், அரசின் கடைநிலை ஊழியர் அதிக வரி கட்ட நேரிடும். அதே சமயம் கோடிக்கணக்கில் வருமானம் பெரும் பணக்காரக் கம்பெனிகளும், முத லாளிகளும் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்ள வழி கிடைக்கும்.

மேலும் வருமான வரி, கலால் வரி போன்றவை தான் மத்திய அரசின் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். (இதில் ஒரு பகுதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தருகிறது) இவற்றை ரத்து செய்துவிட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிய பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்குக்கூட போதிய பணம் இருக்காது. அரசின் அன்றாடப் பணிகள் கூட முடங்கும் நிலை ஏற்படலாம்.

எப்படி இருப்பினும், தனது வரி விதிப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் வேட்பாளர் மோடியும், பிஜேபியும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பாபா ராம்தேவ் நம்புகிறார்.

- பேராசிரியர் சி. ஜம்புநாதன், சென்னை

Read more: http://viduthalai.in/page-2/78268.html#ixzz2y9bnXXup

தமிழ் ஓவியா said...


மலையாளமும் மாளவியாவும்

- தந்தை பெரியார்

தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசிய லிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வது வழக்கம்.

அது மாத்திரமல்லாமல் தாங்களாகத் தனித்து வெளியில் புறப்பட்டு பிரச்சாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடைமேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமாயிருந்த காலம் வரையில்தான் செல்லுபடியாய்க் கொண்டு வந்தது.

இப் போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செல வாணி ஆவதற்கில்லாமல் செல்லு மிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து என் ராமன் வேறே;

என் வருணாசிரமம் வேறே என்று சொல்லி கொண்டு தப்பித்துப் போகப் பட்டபாடு வெகு பாடாய்ப் போய்விட்டதும்; பிறகு திரு பஜாஜ் அவர்களை தருவித்து அவர் களுடன் திரிந்ததில் உள்ள யோக்கி யதையும் போய் அவர் தலையில் கை வைத்துக் கொண்டு திரும்பியதும் திரு வாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்திய மூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலிய வர்கள் தாங்கள் தனித்து போக முடியாமல் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாண சுந்தரம், முத்துரங்கம், ஓ.கந்தசாமி, பாவலர், ஜயவேலு, ஷாபிமுகமது;


தமிழ் ஓவியா said...

பஷீர் அகம்மது முதலிய நபர்களை கூட்டிக் கொண்டு வெளியில் போவதும், அங்கும் இப்போது எந்த ஊருக்குப் போனாலும் எவ்வளவு பயந்து ஒடுங்கி அடக்கமாகப் பேசினாலும் இவர்களைப் பேச ஒட்டாமல் திருப்பி அனுப்பிக் கப்படுவதும் பார்ப்பனப் பத்திரி கைகளும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் எவ்வளவுதான் மறைத்தாலும் தாராளமாய் வெளிப்பட்டுக் கொண்டு வரு கின்றது.

இந்த இரண்டு மூன்று வாரமாய் திரு.சீனிவாசய்யங் கார் கம்பெனி செல்லுமிடங்கள் பலவற்றில் கூட்டம்போட முடியாமல் திரும்புவதும், கூட்டம் கலைக்கப்பட்டுவருவதும் அவர் கூடச் செல்பவர்களுக்கு நடக்கும் மரியா தைகளும் சேலம், திருச்சி, கோயமுத்தூர் முதலிய ஊர்களில் நடந்த சம்பவங்களே போதுமானது.

தமிழ் ஓவியா said...

இவ்வளவும் போதாமால் இந்த வருஷத்திற்கு திரு பண்டிட் மாள வியா அவர்களைத் தருவித்து கடவுளுக் கும் கோயிலுக்கும் மதத்திற்கும் ராமாயணத் திற்கும் ஆபத்து வந்துவிட்டதென்று சொல்லி பிரச்சாரம் செய்யச் செய்ததில் அவர் சென்றவிடங்களிலெல்லாம் சரமாரி யாகக் கேள்விகள் கேட்டுத் திணறவைத்து கடைசியாகக் கூட்டம் கலைந்து வீட்டுக்குத் திரும்பும் படியாகிவிட்டது.

பார்ப்பனர் களும் அவர்களது கூலிகளும் பண்டி தரைப் பிடித்து அவர் தலையில் வருணாசிரமத்தையும் கோவி லையும் மதத்தையும் இராமனை யும் இராமா யணத்தையும் தூக்கி வைத்து எவ்வளவோ விளம்பரம் செய்தும் ஒரு காசுக்குக் கூட விற்க முடியாமல் போனதோடு திரு.மாளவியா வுக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த யோக்கியதையும் அடியோடு கவிழ்ந்து விட்டதென்றே சொல்லலாம்.

தமிழ் ஓவியா said...


உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் தலைமை வகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம் ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது. அதாவது 11-ஆம் தேதி இந்து பத் திரிகை வேண்டுமென்றே அயோக்கியதன மாய் அடியோடு மறைத்துவிட்டு உணர்ச்சி யுள்ள வாதங்கள் நடந்தன என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

10-ஆம் தேதி சுயராஜ்ஜியாவில் மாளவி யாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆட்சேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன என்றும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டா யிற்று என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.

12-ஆம் தேதி மித்திரனில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர் மானம் செய்திருப்பதாகவும் பிரீபிரஸ்சின் பேரால் போடப்பட்டிருக் கின்றது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும் திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்; எனக்கு சாதிரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிறிதவனையோ மகமதியனையோ இந்து வாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்குச் சாதிரம் பார்த்துதான் சொல்ல வேண்டு மென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜி நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவி யாஜியை மூர்ச்சையடையச் செய்து விட்டது.

எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக் கூடும்.

குடிஅரசு - தலையங்கம் - 12-05-1929

Read more: http://viduthalai.in/page-2/78273.html#ixzz2y9bx7ZqC

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை நிறைவேற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தாரீர்! கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வேண்டுகோள்


கோவை, ஏப்.6- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கட்டளைகளை நிறைவேற்றிட அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருமாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டார்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த கோவைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் பேசிய தாவது:-

இந்த இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல; இந்த இயக்கத்தினுடைய குறிக்கோள், நாடி நரம்பு களைத் தொட்டுப் பார்த்தால், அதில் ஏற்படுகின்ற துடிப்பு, இந்த இனத்தை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக - பெருந்தலைவர்கள், இடஒதுக்கீடு கோரிய சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், சர் ஏ..டி. பன்னீர் செல்வம் போன்ற பெருந்தலைவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடு பட்டார்கள் என்றால், அவர் களுடைய சுயநலத்திற்காக அல்ல, நம்முடைய எதிர்கால வாழ்வுக்காகத்தான் அவர்கள் பாடுபட் டார்கள், பணியாற்றினார்கள்.

நான் இங்கே உரையாற்றுவதற்கு முன்பு எனக்கு முன்னால் பேசிய தம்பி ஒருவர், 91 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதி என்று குறிப்பிட்டார். எனக்கு 91 வயது என்பதை வெளியிலே சொல்லிக்கொள்ள விருப்பமில்லை. அதிலும் என்னு டைய துணைவியாரை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னுடைய வயது 91 என்பதை உரக்கச் சொல்வதிலே கொஞ்சம் கூச்சம்தான்.

ஆனால், 91 வயதில், தள்ளாடும் பருவத்தில் நான் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்). என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்) என்னுடைய சுயமரியாதை உணர்வுக்கு தள்ளாட்டம் ஏற்படக் கூடாது (பலத்த கைதட்டல்) என்பதிலே நான் தந்தை பெரியார் வழியிலே, அண்ணா வழியில் சிந்தித்து அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கின்றேன். (பலத்த கைதட்டல்).

திராவிட முன்னேற்றக் கழகம் நான் தொடக்கத் திலே குறிப்பிட்டதைப்போல, ஒரு இன எழுச்சி இயக்கம். நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளைய அண்ணன் பேராசிரியர் அன் பழகனார் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தி லெல்லாம், இந்த இயக்கம் தொடங்கியது அதிகாரங் களைப் பெற அல்ல.

இந்த இயக்கம் தொடங்கியது தமிழர்களைக் காப்பாற்ற, தமிழகத்தைக் காப்பாற்ற பல கருவூலங்களை அகழ்ந்து எடுப்பதற்காகத்தான் இந்த இயக்கம் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல நீங்களும் கேட்டிருக் கிறீர்கள். நானும் கேட் டிருக்கிறேன்.

அந்த உரையை ஏடுகளிலே படித்தும் இருக் கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இன்றைக்கு உங் களை யெல்லாம் நான் நாடியிருப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் வளர்க்க வேண்டும், தேர்தலிலே நான்கு பேரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும், நாம் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியா வினுடைய பிரதமராக வேண்டும் என்றெல்லாம் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.

தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும், தமிழன் என்றால் அவன் யாரையும் தலை தாழ்த்த மாட்டான், அவனும் தலை தாழ மாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற் காகத்தான் இந்த இயக்கம் அன்றுதொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது, பணியாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட அந்த இயக்கத்திற்கு தலைவராக கிடைத்த - தளபதியாகவும் விளங்கிய நம்முடைய அருமை அண்ணா, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைந்த பிறகும் அவர் ஏற்றி வைத்த அந்தச் சுடர் விளக்கு அணை யாமல் காப்பாற்றுகின்ற அந்தப் பெரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்றால், என்னை மாத்திரம் நம்பி அல்ல, என் உயிரினும் மேலான உடன்பிறப் புக்களே (பலத்த கைதட்டல்) உங்களையெல்லாம் நம்பித்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.

அப்படிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுகின்ற ஒரு கட்டம். இந்த மக்களுக்கான ஒரு ஆட்சியை நல்லாட்சியை தர வேண்டிய ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில் எந்த சிரமங்களும் இல்லாமல், எந்தத் தடையும் இல்லாமல் பணியாற்றுகின்ற இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற அந்த வல்லமையை பெரியார் வழங்கினார், பேரறிஞர் அண்ணா கட்டிக் காத்தார்,

இன்றைக்கு பெரு வெள்ளமாகத் திரண்டிருக்கின்ற நீங்கள் எனக்கு அரவணைப்பாக இருந்து என்னோடு சேர்ந்து இந்த இயக்கத்தைக் காக்க முன் வருகிறீர்கள். அதற்காக நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/78266.html#ixzz2y9cFwmfV

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி


பூனைக்குட்டி வெளியில் வந்தது!

ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்

காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது

ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை

மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலை மறை காயாக இருந்தது அதிகாரப் பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.

மூன்று முக்கிய பிரச்சினைகள்

1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.

2. யூனிபார்ம் சிவில் கோட்.

3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்

பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.

சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தேவை புதிய சிந்தனை - பார்வை

இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.

தமிழ் ஓவியா said...

1992 டிசம்பர் 2002 பிப்ரவரி

1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.

பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?

தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

பூனைக் குட்டி வெளியில் வந்தது!

ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

ஒரு வகையில் நல்லதே!

ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!
கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!

வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


முகாம்: ஈரோடு

7.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78292.html#ixzz2yFi2l7de

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/78317.html#ixzz2yFj9cQKm

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மே மாதம் துவங்குகிறது


இங்கிலாந்து டெய்லிமெயில் என்ற செய்தி நிறுவனம் சேகரித்த தகவலின் படி அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை தொடர்பில் விசா ரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக் குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவநீதம்பிள்ளை இந்த நிபுணர் குழு வினை நியமிக்க உள்ளார்.

காணொலி சாதனங்கள் வாயிலாக வடக்கில் உள்ள மக்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.

2002-ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள் ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

மன்னார் பேராயர் ஜோசப் உள்ளிட்ட 60 பேர் இலங்கை அரசுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நெருக்கடி

இதனிடையே சாட்சியாளர்களுக்கு அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக வடகிழக்கு மாவட்டத்திலிருந்து தகவல்கள் வருகிறது, முக்கியமாக சில பிரமுகர்களின் அலை பேசி ஒட்டுகேட்பது, வெளிநாட்டிலிருந்து அவர்களை காணவருபவர்களை தடுத்து வைப்பது, சர்வதேச அரங்கிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசும் இராணுவமும் மேற்கொண்டு வருகிறது. போர் விசாரணைக் ஆணைக் குழு வினர் படையினரையும் அரசியல்வாதி களையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப் படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட் டுள்ளது.

இலங்கையின் சூழ்ச்சி ஆரம்பம்

விசாரணைக்குழு வருவதை தடுக்க முடியாத பட்சத்தில் சர்வதேச நிலைகளில் ராஜதந்திர நடவடிக்கை எடுக்க புதிய தந்திரங்களை இலங்கை கையாள ஆரம்பித்து விட்டது, இதனில் முதல் படியாக வெளியுறவுத்துறையில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு சர்வதேச அமைப்புகளுடன் நல்லிணக்க மாக உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் பன்னாடுகளில் இலங்கைக்காக பணியாற்றும் தூதர்களும் அடங்குவர் இதன்படி இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி பிரசாத் காரியவசம், அமெரிக்க தூதராக நியமிக் கப்படவுள்ளார். முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஜெர்மனிக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

சரத் கோங்காங்கே தென்னாபிரிக்கா வுக்கான உயர் அதிகாரியாகவும் சுதர்சனன் செனவிரட்ன இந்தியாவுக்கான உயர் அதிகாரியாகவும் நியமிக்கப்படவுள் ளனர். இவர்கள் அனைவரும் பன்னாடு களில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் பாதகமாக அமை யாதவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நட்புறவு நாடுகளின் உதவி யையும் எதிர் நிலை நாடுகளை மடக்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விசா வழங்குவதா வேண்டாமா?
போர்க் குற்ற விசாரணைக் குழுவில் யார் யார் அமைந்துள்ளனர் என்று தெரிந்த பிறகு அவர்களின் பின்புலங் களை ஆய்வு செய்து அவர்களுக்கு விசா வழங்குவதா வேண்டாமா என முடிவு செய்யும் எண்ணம் இலங்கை வெளியுறவுத்துறையிடம் உள்ளது, இது குறித்து சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சமர சிங்கே கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நியமல் பெரேரா கூறியதாவது மனித உரிமைகள் குழு இலங்கை வருவது தொடர்பான எந்த ஒரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை, ஆகையால் அதுகுறித்து இப்போது கூற ஒன்று மில்லை, விசாரணைக் குழுக்களுக்கு இலங்கையில் அனுமதி வழங்குவதா வேண்டாமா என்று அரசுடன் கலந்தா லோசித்து தான் முடிவு செய்வோம். பன்னாட்டு விசாரணைக்குழு விவகா ரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் பணிந்து போகமாட்டோம் எங்களுக்கு நாட்டு நலன் தான் முக்கியமே தவிர உலக நாடுகளின் அழுத்தம் முக்கியமல்ல என்று பதிலளித்தார்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/78319.html#ixzz2yFjGkadX

தமிழ் ஓவியா said...


என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?

- குடந்தை கருணா

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், திமுக அணி யில் இணைந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என மத சார்பின்மைக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவரும் விரும்பினர்; எதிர்பார்த்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியுடன் கூட்டு இல்லை எனக் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அதே நிலை எடுக்க வேண் டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

தி இந்து ஆங்கில நாளிதழில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில், போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் எனக் கூறி உள்ளார். உண்மை தான். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தாண்டி, தமிழ் நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற் கும் இடையே தான் போட்டி நடை பெறுகிறது. மற்ற கட்சிகளெல்லாம், களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை; ஆனால், திமுக அணி, அதி முகவை விமர்சனம் செய்து தேர் தலைச் சந்திப்பது என்பது, சிலர் சொல் வது போல், சட்டமன்றத் தேர்தல் அல்ல என்பது திமுகவிற்குத் தெரியும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அந்த அணியின் சார்பில் என்ன கருத்து முன் வைக்கப்பட்டது? மதச் சார்பின்மை, சமூக நீதி என்கிற இரண்டு தத்துவத்தை முன்வைத்து, தேர்தலைச் சந்திப்பதாக திமுக அணி கூறுகிறது. அதிமுக வெல்லும் ஒவ் வொரு இடமும், மோடிக்கு ஆதர வாகச் செல்லும் என்பது தா.பாண்டி யன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இங்கே, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவிற்கு ஒரு சீட்டு தேறாது என்பதும் தெரியும்.

அதிமுக இங்கே மண்ணைக் கவ்வினால், அது மதச் சார்பின்மைக்கு வெற்றி. அதனால் தான், திமுக அணி, அதிமுகவை குறிப்பிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதுதானே சரியான அணுகுமுறை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தருவது தானே சரியாக இருக்கும்.
அண்டை மாநிலமான ஆந்திரா வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து தெலுங் கானா பகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு என இருந்தாலும், தெலுங்கானா உருவாகிட காங்கிரஸ் முயற்சி எடுத்ததால், அதனுடன் கூட்டு என் கிறார் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி.

கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டு என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் போன்றோர் வந்து சந்தித்து சென்ற அடுத்த நாள், ஒரு காரணமும் சொல் லாமல், கம்யூனிஸ்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஒவ்வொரு தொண் டனையும் அவமதித்து, அவர்களது சுயமரியாதையையும் கேவலப்படுத் திய அதிமுகவை வீழ்த்துவது கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பணி யில்லையா காம்ரேட்ஸ்?

தமிழ் நாட்டில், காங்கிரசோடு கூட்டு இல்லை; மோடிக்கு தமிழகத் தில் இடம் இல்லை என்பதைத் தெளிவாக்கி தேர்தல் களம் காணுகிறது திமுக அணி.

தெலுங்கானா காம்ரேட்ஸ் கூறும் காரணத்தைவிட, தமிழ் நாட்டில், அதிமுகவை எதிர்ப்பதற்கும், திமுக அணியை ஆதரிப்பதற்கும் கூடுதல் காரணங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கிறதே காம்ரேட்ஸ்.

பாஜகவிற்கு தேர்தலுக்குப் பின்னால் ஆதரவு தரலாம் எனும் அதிமுவை தோற்கடிக்க, திமுக அணியை ஆதரித்து, மதவெறிக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என நிரூபிக்கும் பணியில் நீங்களும் இணையுங்கள் காம்ரேட்ஸ்.

Read more: http://viduthalai.in/page-2/78326.html#ixzz2yFjPewGX

தமிழ் ஓவியா said...


சளித் தொந்தரவு தீர சில எளிய வழிமுறைகள்...

குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்ப தால், அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?

அரை அங்குலம் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் குவளையாக வரும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.

பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரைத் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளித் தொந்தரவு, தலைவலி என எந்தப் பிரச்சினையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருள்களை நாக்கில் படாமல் அப்படியே விழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும்.

அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.
மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை

கற்றாழையில் உள்ள மருத்துவக் குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங் களுடைய உப பொருள்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.

ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, செரிமான சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.

தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான். இப்படி எண்ணற்ற குணங்களைக் கொண்டது கற்றாழை.
வைட்டமின்கள் நிறைந்த வேர்க்கடலை

பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக புரதச்சத்து நிறைந்தது.

அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்கவேண்டாம்.

வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.

அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.

அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய பிண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.

வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும்.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/78308.html#ixzz2yFk4dEIt

தமிழ் ஓவியா said...


உங்கள் வீட்டில் நாள்தோறும் ஒரு கீரை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்தோறும் ஒரு கீரை சமைத்து, உங்கள் வீட்டில் ஆரோக்கியத்தை நிரந்தரமாகச் செய்யுங்களேன்!

சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால், கீரை மசியல் நன்கு குழைவாக இருக்கும். கீரையை வேக வைக்கும் போது மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால்தான் அதில் இருக்கும் அமிலச் சத்துகள் வெளியேறும். கீரையை வேக வைக்கும்போது சிறிது உப்பைச் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

வெந்தயக்கீரையில் சிறிது சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும். எந்தக் கீரையாக இருந்தாலும் அதோடு மூன்று துணுக்கு கறிவேப்பிலையை உருவிப் போட்டு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வழக்கம்போல கடையவும். கீரை மசியல் மணமாக, சுவையாக இருக்கும். அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து, பொடி செய்து காலை, மாலை அரை டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடிக்கவும். வயிறு, மார்பு வலிகள் குணமாகும்.

வெந்தயக்கீரை அதிக அளவில் கிடைக்கிறதா? அதை வாங்கி, கழுவி, நிழலில் உலர வைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கசூரிமேத்தி என்றும் சொல்வார்கள். கொத்தமல்லியை நறுக்கி, பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து, பிறகு அலசி சுத்தம் செய்ய வேண்டும். புதினாவை அலசி சுத்தம் செய்த பிறகுதான் நறுக்கவேண்டும்.

முருங்கைக்கீரை

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்பு பெருக்கும். இதையே துவரம் பருப்பு, மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக்கீரையில் பருப்புச் சேர்த்து வேக வைத்து, மிளகாய், சீரகம் தாளித்து சாதத்தில் பிசைந்து உண்டு வந்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். நல்ல பசி எடுக்கும்.

முருங்கைக்கீரையை விழுதாக அரைத்து, தயிரில் கரைத்து, ஒரு நாளைக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் காணாமல் போய்விடும்.

முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நீர்ச்சுருக்குப் பிரச்சினை தீரும்.

வாத நோய்களைக் குணப்படுத்தும் பீச் பழம்

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிக்குப் பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்ற வையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களைச் சார்ந்தவையே.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் தோல் சுருக்கங்கள் நீங்குவதோடு தோல் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும், முகம் பொலிவுடனும் இருக்கும். பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவைச் சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுபடுத்தும்.

பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள் கிறது. கீல்வாதம், ரூமட்டிக் நோயால் அவதிப்படு கின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.

பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்சுடியது.

பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கருவுற்ற பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.

மேலும் சிறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் . இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.

Read more: http://viduthalai.in/page-7/78309.html#ixzz2yFkEEyqE

தமிழ் ஓவியா said...

.ஜே.பி.யின் மக்களைத் துண்டாடும் அறிக்கை ஹிந்துத்துவாவின் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது

புதுடில்லி, ஏப்.7- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (7.4.2014) டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை ஹிந் துத்துவாவின் மறு பதிப்பாக வெளிவந் துள்ளது.

முதல்கட்டத் தேர்தல் இன்று (7.4.2014) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தங் களின் தேர்தல் அறிக்கை இன்று தேர்தல் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களில் தங்களது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதினாலேயே தந்திர மாக இன்று வெளியிடப்படுகிறது.

ஏனென்றால், அவர்களின் தேர்தல் அறிக் கையில் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை அவர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள்மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வுள்ளது.

தேர்தல் அறிக்கையில் சில...

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் வெளி யாகியுள்ள முக்கிய செய்திகள் சில...

காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்பு சலுகைகள் நீக்கப்படும்.

இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் சென்று அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் பெற்று அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவர நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு சலுகைகள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களைப் போல் மாற்றி அமைக்கப்படும். பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் எந்த ஒரு தயவு தாட்சண்யமின்றி களையப்படும்.

முஸ்லிம்களின் மதரசாக்களின் (மதபோத னைக் கூடங்கள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, மாற்றியமைக்கப்படும்.

நவீன பல்நோக்கு மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். தற்பொழு துள்ள மருத்துவமனைகளிலும் நவீன மாற்றம் கொண்டு வருவோம்.

ராமர் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று. இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு மட்டுமல்ல; கோடிக் கணக்கான இந்திய மக்களின் உள்ளார்த்தமான எதிர்பார்ப்பு; அரசியல் அமைப்பைச் சரி செய்து ராமர் கோவில் கட்டுவோம்!

கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தொழில் அனைத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.

சேது சமுத்திரத் திட்டம்

ராம் சேது நம் தொன்மையான கலாச்சார மாகும். தோரியம் அதிக அளவில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் எந்த முடிவு எடுப்பதானாலும், இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

மேலும் பல அறிவிப்புகள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/78311.html#ixzz2yFkRS8Tf

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன? - கி.வீரமணி


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி

ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;

நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.

பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?

இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.

2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.

3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)

இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?

இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.

தமிழ் ஓவியா said...


1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.

எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!

கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?

இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்

இ) பொது சிவில் சட்டம்.

இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?

வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!

3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?

வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


8.4.2014முகாம்: கோவை

Read more: http://viduthalai.in/e-paper/78340.html#ixzz2yL8S4pb7

தமிழ் ஓவியா said...

அன்றே சொன்னார் தமிழர் தலைவர்

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது. இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது. நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தவர்; ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத்துவா கொள் கையை அப்பட்ட மாகக் கடைப்பிடிப்பதில் சற்றும் கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் - இணைய தளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப் தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மை யான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத் துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படை யாகவே இறங்கி விட்டது!

17.2.2014 விடுதலை அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தினார். இன்று அதன் உண்மை உணரப் படுகிறது. அன்று பி.ஜே.பி.யின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று முன்வரிசைக்கு, பி.ஜே.பி.க்குக் கட்டளையிடும் இடத்திற்கு வந்து விட்டது.

ஆர்.எஸ்.எஸால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டவர் தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

மோடி பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் அவரை ஏன் முன்னிறுத்தியுள்ளது? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதா என்ற கருத்து மக்கள் மத்தியிலே தெரிந்த ஒன்று. (இதற்கு முன்பேகூட பா.ஜ.க.வில் உள்ள உமா பாரதியும், கல்யாண்சிங்கும், (உ.பி.) பங்காரு லட்சுமணனும் (பி.ஜே.பி. தலைவராகவே இருந்தவர்) தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதியும் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளனர்.)

இந்த முத்திரை பா.ஜ.க.மீது விழுகின்ற காரணத்தால் அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஒரு பிற்படுத்தப் பட்டவரான மோடியைத் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தியுள்ளது.

மோடி யார் என்பதற்கும் பெரிய விளக்கம் தேவைப் படாது! அவர் குஜராத்து மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள்மீது அரசப் பயங்கரவாத மாக மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டத்தை ஏவி, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

எனவே சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதார் கிடைத்தால் அதனைத் தக்க முறையில் பயன்படுத்திட பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தவறிடுமா?

நிஜப்புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாகவே குதிக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சிந்தித்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோடியை ஆர்.எஸ்.எஸ். தனக்குக் கிடைத்த போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் இரகசியம் என்ன என்பது எளிதில் விளங்குமே!

சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனம் ஒன்றில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆற்றிய உரையை DNA - Daily News and Analysis வெளி யிட்டதுண்டு. Brahmins kept Indian Culture Alive என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது.

தமிழ் ஓவியா said...


“Bramins are custodians of Indian Culture and shastras. The Brahmin Community has helped preserved Indian Culture. If our culture is still thriving it is because of Brahmins he said that a Social system can be created by the Methods by the gun of Shastras”

இந்தியக் கலாச்சாரம் உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்ற தலைப்பில் வெளிவந்த அந்தச் செய்தியில் நரேந்திரமோடி பேசினார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம் சாஸ்திரங்கள் இவற்றின் பாதுகாவலர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் பார்ப்பனர்களே ஆவார்கள்!

நமது கலாச்சாரம் உயிரோடு இன்று வரை இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பார்ப்பனர்களே!

ஒரு ஒழுங்கு முறையான சமூக அமைப்பு முறையை சாஸ்திரங்கள் என்ற துப்பாக்கியால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்னவர் தான் இந்த நரேந்திரமோடி.

அப்படி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த நரேந்திரமோடியைத்தானே கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்திட முன்வரும். பார்ப்பனர்களுக்கு நல்ல அடிமையாகக் கிடைத்தவர்தான் இந்த மோடி!

இந்த மோடி ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள் கையைப் பாதுகாப்பதில் நிகர் அற்றவர். மலம் அள்ளும் தொழில் என்பது அவர்களின் கர்மப் பலன் அந்தப் பணி ஒரு தெய்வப் பணி என்று சொன்னவர் (மோடியின் கர்மயோக நூலில்)

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (11.2.2007) நடத்தியதுண்டு.

குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தண்ணீர்த் தொட்டியில் உயர் ஜாதிக் காரர்களுக்கு ஒரு நேரம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு வேறொரு நேரம் என்று எழுதி வைத்துள்ளனர். என்றால் - இதன் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான நகர சுத்தித் தொழிலாளர்கள் அங்கு சமீபத்தில் போராடினார்களே!

ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள்கையின் பாதாரவிந்தங்களைத் தழுவிடக் கூடியவர் மோடி என்பது விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் கொள்கையால் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் - வரும் தேர்தலில் இதற்கொரு பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/78355.html#ixzz2yL9X726t

தமிழ் ஓவியா said...


திமுக ஆட்சியை ஒரு கணம் நினைத்துப்பாரீர்! திமுக ஆட்சியில் திருப்திகர நிதிநிலைமை தி இந்து ஏடு பாராட்டு


தி இந்து ஆங்கில நாளேடு 25.10.2010 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்:

பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வரும் நிலையில்; அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் நிதியாண்டு நடுவில் அதிகரிப்பு ஆகியவை களுக்கு மத்தியில்; மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்று அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கு வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கான இலக்கு களை அடைவதற்கு ஏதுவாக நிதிநிலை இருக் கிறது என்று வலியுறுத்துகிறார், நிதித்துறை முதன் மைச் செயலாளர் கே.சண்முகம்.

வருவாய் பற்றாக் குறைக்கும் மொத்த வருவாய் வரவுகளுக்கும் இடையிலான விகிதம் 5.38 சதவிகிதமாகவும்; நிதி பற்றாக்குறைக்கும் ஒட்டுமொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகி தம் 3.72 சதவிகிதமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

சமீபத்திய நெறிமுறைகளின்படி, அடுத்த நிதியாண்டில்தான் (2011-2012) வருவாய் பற்றாக் குறை குறைக்கப்பட்டு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நிதிப்பற்றாக்குறை மூன்று சதவிகித மாகக் குறைக்கப்பட வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, நமது வருவாய் வரவு ஏறத்தாழ கூடுதலாக ரூ. 3000 கோடி அளவுக்கு உயரும். மத்திய அரசிலி ருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வரி வருவாய் பங்கீடு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்ட ணங்கள் மூலம் வருவாய் பெருமளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது ஏற்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் மீது மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வருவாய் உயர்வின் காரணமாக கூடுதல் வரி வருவாய் பங் கீடு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விதிப்பு மூலம் வருவாயானது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான அள வைக் காட்டிலும் இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் மின்சார மானியம், முதியோர் ஓய்வூதியத்தொகை, சத்துணவுத் திட்டம் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட சில நல்வாழ்வுத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு அரசுக்கு ரூ. 12,200 கோடி செலவாகும்.

இந்தப் பட்டியலில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக் கீடான ரூ. 2,250 கோடி மற்றும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்துக்கு மாநிலத்தின் பங்கான ரூ. 425 கோடி ஆகியவையும் அடங்கும்.

செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அக விலைப்படி உயர்வினால், அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 2190 கோடி செலவாகும்.

வருவாய் வரவுகளில் திருத்தப்பட்ட உயர்வு, கூடுதல் வருவாய் செலவினங்களான ரூ. 3000 கோடியில் ஈடு கட்டப்பட்டுவிடும்என்று சண் முகம் குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வருவாய் வரவுகளில், விற்பனை வரித்தொகை, மாநில சுங்க வரி, முத்திரைத்தாள், பதிவுக்கட்ட ணம் ஆகியவை மூலம் ஆண்டு முழுவதற் குமான ரூ. 41,438 கோடியில், சுமார் 17,345 கோடி வசூலாகியுள்ளது என்று அவர் தெரிவிக்கிறார் .

இந்த ஆண்டு இதுவரை, மத்திய வரிகளில் பங்கீடாக மத்திய அரசிடமிருந்து ரூ.3715 கோடியும், உதவி மானியமாக ரூ. 2,568 கோடியும் மாநிலத்தால் பெறப்பட்டுள்ளது.

அந்தத் திமுக ஆட்சி எங்கே! இன்றைய அஇஅதிமுக ஆட்சி எங்கே?

Read more: http://viduthalai.in/page-8/78372.html#ixzz2yLBGW2FB