Search This Blog

23.4.14

பார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே? - பெரியார்

நம் மக்கள் என்றென்றும் ஊழியம் செய்யும் சூத்திரராய் இருப்பதா?

எனக்கு 78-வயது முடிந்து 79-வது பிறந்ததைப் பாராட்டுவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எனக்கும் வாழ வேண்டுமென்ற ஆசைதான். ஏன்? ஏதோ எழுபத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தோம் இன்னும் கொஞ்சம் காலம் இருப்போம் என்றல்ல; நான் ஈடுபட்டுள்ள பணியை மேலும் தொடர்ந்து செய்யவே. நான் பொதுவாழ்வில் ஈடுபட்டு இன்றைக்கு 37,  38- ஆண்டகளாகின்றன. நான் காங்கிரசில் சேர்ந்தது 1920-இல். அதற்கு முன் முனிசிபாலிட்டி, தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு முதலிய ஸ்தாபனங்களில் இருந்தாலும் அவையெல்லாம் சொந்தப் பெருமைக்கு, மதிப்புக்கு என்றுதான். பொதுவாழ்வு என்றால் முன்பெல்லாம் பெருமைக்கு என்று இருந்தது. ஆனால் இன்று காந்தி வந்தபிறகு அது பித்தலாட்டத்திற்கு என்று மாறிவிட்டது.

பொது வாழ்வில் ஈடுபட்டு 37-ஆண்டுகள் ஆனாலும் எனக்கு உலக அறிவும், அனுபவமும் என்னுடைய 10-வது வயதிலிருந்தே உண்டு.

இந்தக் காலத்து மாணவர்களுக்குப் பொது அறிவே இருப்பதில்லை. அதிலும் ஒரு மாணவன் அதிக மார்க் (மதிப்பெண்) வாங்குகிறான் என்றால் பொது அறிவு இன்னமும் மோசம், வெறும் புத்தகப் பூச்சி என்றுதான் அர்த்தம். அவர்கள் பழகுவதெல்லாம் அந்தப் புத்தகங்களோடும் ஆசிரியர்களோடும் தான். பொது மக்களோடு பழகுகின்ற வாய்ப்பிருக்கிறவர்களுக்குத்தான் பொது அறிவும், அனுபவமும் பெற வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெங்களுர் போயிருந்தேன். மைசூர் அரசாங்கத்தில் Chief Justice (தலைமை நீதிபதி) ஆக இருந்து ரிட்டையர் (ஓய்வு) ஆகிவந்தவர் ஒருவர். அவருக்கு நம்முடைய கொள்கையில் நிரம்பப் பற்று உண்டு. அவரைச் சந்திக்க நேரிட்டபோது அவர் சொன்னார்: "நீ பொது நலத்திற்காக வேலை செய்கிறாய். ஆனால் உனக்குப் போதுமான ஆதரவு இல்லை. வேறு நாடாயிருந்தால் உன்னைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள்" என்றார். அதற்கு, "ஆதரவில்லாமல் போனாலும் போகட்டும், குழியல்லவா பறிக்கிறார்கள்!" என்று நான் சொன்னேன்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, "பார்ப்பன ஆதிக்கம் உங்களுடைய ஊரில் மிகவும் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) ஒரு தீர்ப்பு ஆனது; மிகவும் அநியாயமான தீர்ப்பு. நீங்கள் பண்ணி வைத்த திருமணங்களை யாரும் குறை சொல்ல முடியாது. நான் இருந்திருந்தால் என்னிடம் அந்த வழக்கு வந்திருந்தால் வேறு விதமாக தீர்ப்பளித்திருப்பேன்" என்று சொன்னார்.

அது என்னவென்றால் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்க்கோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று இரண்டு பார்ப்பன ஜட்ஜீகள் (நீதிபதிகள்) தீர்ப்பளித்தார்கள்;

"சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்வதுதானே" என்று அவர் கேட்டதற்கு நான் சொன்னேன், அங்கு இருப்பவரெல்லாமும் பார்ப்பனர்கள்தானே அவர்கள் மேலும் பலமாக ஆணி அடித்து விடுவார்கள்" என்றேன்.

இதேபோல் மற்றொரு வழக்கு ஒன்றும் உண்டு. திரு. முத்தையா முதலியார் காலத்தில் கம்யூ G.O (அரசு ஆனை) உத்தரவு போட்டார். அதன் மூலம் (வகுப்புவாரி உரிமை) நம்முடைய மக்களுக்கு அரசு வேலைகளில் இடம் ஒதுக்கி வைத்தார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் செய்யும் போது வகுப்புவாரி உத்தரவு செல்லாது என்று சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சட்டம் செய்தவர்களுள் ஒருவர். அவரே வக்கீலாக (வழக்குரைஞராக) வந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு செல்லாது என்று வாதாடினார். அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பாகிவிட்டது.

"இந்தத் தீர்ப்பைப் பார்த்ததும் எனக்கு வருத்தமாயிருந்தது. என்னிடம் இந்த வழக்கும் வந்திருந்தால் கட்டாயம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்திருப்பேன். அந்த மாதிரியிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு அர்த்தம் பண்ணியிருப்பேன்" என்று மைசூர் ராஜ்ஜியத்தில் ரிடையர் ஆன அந்த சீஃப் ஜஸ்டிஸ் (தலைமை நீதிபதி) சொன்னார்.

"இந்த மாதிரி உணர்ச்சியுள்ளவர்கள் நாலுபேர் உதவியாக இருந்தால் உங்களுடைய அனுபவமெல்லாம் பயன்பட்டால் எவ்வளவோ சாதிக்கலாம்," என்றேன் நான்.

அதற்கு அவர் "எனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? முப்பது வருஷமாக ஜட்ஜாக (நீதிபதியாக) நான் இருந்தேன். கோஷா பெண் மாதிரி! நான் கிளப்புக்குப் போகக்கூடாது. யாரிடமும் பழகக்கூடாது; கல்யாணங்களுக்கும் போகக்கூடாது; பொது இடங்களுக்கும் போகக் கூடாது; ஏனென்றால் பழகினால் யாரேனும் ஏதாவது சிபாரிசுக்கு வந்துவிடுவார்கள். இந்த வகையில் பொதுமக்களோடு பழகாத கோஷாப் பெண்போல் இருந்த எனக்கு என்ன அனுபவம் இருக்கப்போகிறது? வக்கீல்கள் சொல்லும் பொய்யிலிருந்து மெய்யைக் கண்டுபிடிப்பதிலேயே என் காலம் எல்லாம் கரைந்து விட்டது" என்று சொன்னார்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொது அறிவு பெற, அனுபவம் பெற வாய்ப்பு இருப்பதில்லை.

என்னுடைய நிலைமை அப்படியில்லை. 60, 80-வருஷமாக (ஆண்டாக) எனக்கு உலகம் தெரியும். அப்போது இவ்வளவு பித்தலாட்டம், ஏமாற்றம் எல்லாம் மக்களுக்குத் தெரியாது. கடன்கூட வாய்ப் பேச்சில்தான்.

மோசடி என்பதே அன்று கிடையாது. வழக்கு ஏதும் ஏற்படாது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. கையொப்பம் வாங்கினாலும் முடியவில்லை. அடமானம் வைத்துப் பணம் கொடுத்தாலும் திருப்பி வாங்க முடியவில்லை. இதெல்லாம் சொந்த வாழ்க்கையில் காந்தி வந்தபின் மோசடிகள்.

காந்தியார் வந்தபிறகு பொது வாழ்க்கையில் பித்தலாட்டம் பெருகிவிட்டது. அதைவிட ஆச்சரியம் பித்தலாட்டத்தை மக்கள் தவறு என்று நினைப்பதில்லை. சாமர்த்தியம், கெட்டிக்காரத்தனம் என்று நினைக்கிறார்கள்! சட்டசபைக்குப் போவதற்கோ பதவிக்குப் போவதற்கோ இன்று அயோக்கியத்தனம் செய்தால்தான் முடிகிறது. எவன் உண்மை பேசுகிறானோ எவன் உள்ளபடி சொல்லுகிறானோ அவனை ஒழிப்பதுதான் மற்றவர்களுடைய வேலை! இதுதான் பார்ப்பன தருமம்.

உலகத்திலேயே இரண்டு மூன்றுபேர் உண்மை பேசி நடந்திருக்கிறார்கள். முதலாமவர் புத்தர்; இரண்டாமவர் இயேசு; மூன்றாமவர் கொஞசம் தைரியமாகக்கூடச் சொல்லியிருப்பவர் முகமதுநபி!

ஆனால் இந்து சாஸ்திரத்தில் புத்தன் என்றால் அயோக்கியன் என்று பொருள். அயோக்கியன் கொலைக்காரன் அவனைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இராமாயணம் அவனை ஒழிக்க வேண்டும் அவன் பெண்டு பிள்ளைகளைக் கற்பழிக்க வேண்டும். ஒழிக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்கள்! அவர்களைக் கொன்றால் புண்ணியம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தத்தில் முஸ்லிம்களைத் தொட்டால் தீட்டு; முஸ்லிமைத் தொட்டால் துணியை எல்லாம் எடுத்துப்போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு வேறு துணியை உடுத்த வேண்டும்!

அன்பைப் போதித்த முகமது நபியை, இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை இந்த வகையில் நடத்தினார்கள்! இந்தப்படியாக நாட்டில் உண்மைக்கு, நியாயத்திற்குத், தத்துவத்திற்குப் பாடுபட்டால் அவர்களுக்கு மரியாதைக் குறைவு. 1957-ஆம் ஆண்டிலும் பித்தலாட்டத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் தான் சிறப்பு.

எங்களைப் பொருத்த வரையில் அடிப்படையில் பித்தலாட்டம் செய்து பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்கிறோம். "உண்மையை அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து கேட்டால் கேள், கேட்காவிட்டால் போ" என்று இப்படி சொல்லக்கூடிய நிலைமை இந்தியா பூராவும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஒரு பஞ்சாயத்து போர்டு எலக்க்ஷனுக்குக் கூட நாங்கள் போவதில்லை.

சுத்த முட்டாள் சட்டசபைக்குப் போனால் கூட மாதம் ரூ.150/- படிதினம் 15/- (1957-ல்) கிடைக்கிறது! பர்மிட், லஞ்சம் எல்லாம் கிடைக்கிறது ஆகவே எந்தப் பித்தலாட்டம் செய்தாவது, எந்தக் கொள்கையை - எதைவிட்டுக் கொடுத்தாவது சட்டசபைக்குச் செல்ல வேண்டும். யாரை நினைத்தாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.

எங்களோடு இருந்தவரை வணக்கம் என்று சொன்னவன் இப்போது நமஸ்காரம் என்று சொல்கிறான்.

சமஸ்கிருத துவேஷம், பார்ப்பன துவேஷம் என்று பார்ப்பனர் நினைப்பர். வோட்டுக்குப் போகின்றவன் எல்லாம் நமஸ்காரம் என்று சொல்லுகிறான்! இந்த சின்ன சங்கதிக்கே இப்படி! அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

எங்களோடு இருந்தவரை பார்ப்பான் என்று சொன்னான். இப்போது 'பிராமணன்' என்று சொல்கிறான்! பார்ப்பான் என்று சொன்னால் அவன் மனம் புண்படுமாம். பார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே?

இன்று எங்களுடைய அந்தஸ்து (செல்வாக்கு நிலை) உயர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு என்றால் காங்கிரஸ்காரர்கள் கூட எங்களுடைய தயவை விரும்புகிறார்கள். மக்கள் எங்களிடம் நம்பிக்கை வைத்துவிட்டார்கள். எங்கள் சொல்படி கேட்கிறார்கள் என்றால் நாங்கள் எந்த விதமான எங்களுடைய சொந்த சுயநலத்திற்கும் பாடுபடுவதில்லை. ஏதோ உழைக்கிறோம் என்றால் அது பொது நலத்தை உத்தேசித்துதான். எங்களுக்குச் சுயநல நோக்கம், எண்ணம் இல்லை என்பதை எல்லோரும் நன்கு உணர்ந்துவிட்டனர்.

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை சாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமாகின்றது. அது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச்சாரி முதல் எல்லோரும் எதிரிகள்; நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியுமென்று எண்ணினோம். "பிராமணன்" என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக்கூடாது பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்ற திட்டங்களை வைத்து, முதல் திட்டத்திற்குக் கிளர்ச்சி ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650-பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள். இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். இராசகோபாலாச்சாரி சொன்னார் "நாங்கள் எப்போது சொன்னோம் சாதி ஒழிய வேண்டுமென்று எங்கே சொன்னோம்?" என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய சாதியை, மதத்தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கிறான். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம்; அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்தச் சட்டம் இருக்கிறவரை - சாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறவரை, நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும்?

இந்தச் சட்டத்தை மாற்றும் உரிமை இந்தச் சென்னைச் சட்டசபைக்கு இல்லை. அந்த உரிமை மத்திய அரசாங்க - டெல்லி சட்டசபைக்குத்தான் (பாராளுமன்றம்) இருக்கிறது. அங்கும் மூன்றில் இரண்டு பங்கு மேஜாரிட்டி (பெரும்பான்மை வாக்களிப்பு) கொண்டு வந்துதான் மாற்ற முடியும். இது எவ்வாறு முடியும்?

நம்முடைய சூத்திரத் தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட நாம் இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா?

ஆதிக்கக்காரன் சட்டசபை ஆசை காட்டி விட்டான். அந்த சட்டசபைக்குப் போகின்றவர்களாவது சாதியை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்களா? அப்படிச் சொன்னால்தான் முடியுமா?

ஆகவே இந்த நிலையில் சாதியை ஒழிக்க நான் அரசமைப்புச் சட்டத்தைச் - சாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் - கொளுத்தப் போகிறேன்.

சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்புங்கள், காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன்' என்று!

ஒன்றுமில்லாத குப்பை சங்கதிக்கு முதுகுளத்தூரில் 30, 40-பேர் செத்திருக்கிறார்கள். 3000-வீடுகளுக்குத் தீ வைத்திருக்கிறார்கள்! வெட்டி நெருப்பில் எறிந்தார்கள்! வெட்டித் தலையைக் கொம்பில் சொருகிக் கொண்டு ஆடினார்கள்! ஒன்றுமில்லாத சப்பைச் சங்கதிக்கு இம்மாதிரி செய்திருக்கிறார்கள். நம்முடைய மக்கள் என்றென்றும் கக்கூஸ் (மலக்கழிவு) எடுக்க வேண்டியது; தெருக்கூட்ட வேண்டியது, உடலுழைப்பு செய்து சூத்திரராகவே இருப்பது, நாம் கைகட்டிக் கொண்டு சும்மாவே இருப்பதா?

நம்முடைய உயிரை நாம் பலி கொடுக்க வேண்டும். நான் வேண்டுமானால் வாய்தா (காலக்கெடு) கொடுக்கிறேன். ஆனால் ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மாயிருப்பது? இவற்றையெல்லாம் முடிவு செய்து நீங்கள் எனக்கு எழுதுங்கள்! உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு எனக்கு எழுதுங்கள்!

நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங்கள்!

---------------------------------- 08.1.1957-ல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: "விடுதலை", 20.10.1957

27 comments:

தமிழ் ஓவியா said...


சென்னையில்ஒருபுத்தகச்சோலை! அறிவுத்தேனருந்தவாரீர்!வாரீர்!!

இன்று உலகப் புத்தக நாள்! ஆங்கில மகாக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளை - உலகம் பொருத்தமாகப் புத்தக நாள் என்று கொண்டாடுகிறது. அந்த வகையில் சென்னை - இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஓர் அறிவுச்சோலை உங்களை அறிவுக்கரம் கொண்டு அன்பு தவழ, பொன்முறுவல் பூத்து அழைக்கிறது.

நீங்கள் அங்கு ஏன் வர வேண்டும்? அங்குதான் 200 புத்தக அரங்குகள் சங்கமித்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பதிப்பகங்கள் மட்டுமல்ல; டில்லி, மும்பை ஆகிய மாநிலங்களிலிருந்தும் அரங்குகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலும் கோவை, மதுரை, ஈரோடு முதலிய மாவட்டங்களிலிருந்தும் பதிப்பகத்தார்கள் தங்கள் வெளியீடுகளை அணி வகுக்கச் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உலகப் புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கப்பட்டது.

பதிப்பகத்தார்கள் போட்டி போட்டுக் கொண்டு அரங்குகளை அமைக்க முன் வந்ததால், இடவசதி கருதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விரிவான ஏற்பாடுகள், வந்தவர்கள் வியப்படைகிறார்கள் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எல்லாம் உண்டு.

நூறு தமிழ்ப் பதிப்பகத்தார்கள்
35 ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்
10 மல்டி மீடியா நிறுவனங்கள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல் துறை மணம் கமழும் நூல்கள் எனும் அறிவு சார் கருவூலங்கள்!

மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சி கள், பட்டிமன்றம், ஆய்வரங்கம், பொம்ம லாட்டம், பறை இசை எனும் செவி விருந்துகள்!

நாவிற்கு விருந்தில்லையா என்று கேட்டு விடாதீர்கள் - வந்து பாருங்கள் நேரில் அனுபவித்தால்தான் அதன் அருமை எத்தகையது என்பது விளங்கும்; ஏட்டுச் சர்க்கரை என்றால் இனிக்காதே!

10 முதல் 50 விழுக்காடு வரை (பழைய நூல்கள்) தள்ளுபடி செய்து தரும் நூல் களும் உண்டு.

விருந்தாகவும் - மருந்தாகவும் பயன் படக் கூடிய நூல்கள் அணி அணியாகக் கண்களையும், கருத்துக்களையும் பறிக் கின்றன.

தேர்தல் சந்தடியிலும்கூட குடும்பம் குடும்பமாக மக்கள் மொய்த்த வண்ணமே உள்ளனர். சென்னையின் நடுநாயகமான இடத்தில் இது அமைந்துள்ளதைப் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

கற்றது கை மண்ணளவு

கல்லாதது உலகளவு

என்பதை மறந்து விடாதீர்கள்!

புத்தகத்தைப் படிப்பது குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவ தற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்த கம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படு கிறது. அதனால்தான் நம் மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.

நீங்கள் குடிஅரசு, பகுத்தறிவுப் பதிப்பக புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியாவீர்கள். இந்தப் புத்தகங்கள் மதம், ஜாதி நம் அரசியல் முதலிய துறைகளில் அவற் றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக்கும்.

விலை மிக மிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டே நட்டத்திற்கு பதிப்பிக்கப்படுகிறது!

1962இல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது இது பெரியார் இயக்க நூல்களும் இடம் பெறுகின்றன என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறோம்.

மேலும் யார்க்கு எது விருப்பமோ அந்த வகையில் அறிவு ருசிக்கான நூல்கள் தடபுடலாக இருக்கின்றன. குழந் தைகள் முதல் தொண்ணூறைத் தாண்டும் முதியோர் வரை பலன் பெறும் பழ முதிர்ச்சோலை இது!

18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் புத்தகச் சங்கமம் 27ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனம் (ழிஙிஜி) இணைந்து நடத்துகின் றன காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
கடைசியாக ஒரு கொசுறு.

நண்பர் ஒருவர் ஆப்ரகாம் லிங்கனி டம் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை; பின் ஏன் நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன் நான் பணம் சேர்ப்ப தற்காகப் படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படிப் பண்போடு வாழ வேண் டும் என்பதைத் தெரிந்து கொள்வதற் காகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பல ஆண்டுகள் கழித்து அமெ ரிக்கக் குடியரசுத் தலைவராக ஆன பிற கும்கூட இதே பணிவோடுதான் இருந்தார்.

இதற்குமேல் எந்த எடுத்துக்காட்டு தேவை?

நல்லதோர் வாய்ப்பெனும் விருந்து நழுவ விடலாமா! இடையில் இன்னும் நான்கு நாள்களே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-2/79122.html#ixzz2ziZULGR2

தமிழ் ஓவியா said...

பிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது உடுப்பி கோயிலில் பாரபட்சம்

உடுப்பி: "நீ பிராமணர் இல்லையா, இங்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது" என்று கூறி கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் உணவருந்தும் இடத்தில் இருந்து விரட்டி விடப்பட்ட சம்பவம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடந்துள்ளது. ஆலய நிர்வாகிகளுக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். 800 ஆண்டுகள் பழமையான உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அதன் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகத்தால் அவ்வப்போது செய்திகளில் அடிபடுகிறது. கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற மனப்பாங்கு இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு இருப்பதில்லை. பிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது உடுப்பி கோயிலில் பாரபட்சம் பிராமணர் சாப்பிட்ட இலையின் மீது வேறு ஜாதியினர் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தால் உடலில் உள்ள வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கையை சிலர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விதைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அங்கபிரதட்சண சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் எச்சில் இலை அங்கபிரதட்சணத்துக்கு கூட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் மணிப்பால் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் வனிதா என்.ஷெட்டி. இவர் உடுப்பி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு போஜனசாலையிலுள்ள தரைத்தளத்திற்கு சென்று சாப்பிட அமர்ந்துள்ளார். சாப்பாடு பரிமாறுவதற்கு முன்பாக ஊழியர் ஒருவர் வந்து வனிதாவிடம் அவர் பிராமண ஜாதியை சேர்ந்தவரா என்று கேட்டுள்ளார். அவர், இல்லை என்று கூறியதால் அங்கிருந்து வெளியேறி முதலாவது தளத்திலுள்ள பிற ஜாதியினருக்கான இடத்தில் அமர்ந்து சாப்பிடும்படி அந்த ஊழியர் கூறிட்டார். இதனால் அவமானமடைந்த வனிதா சாப்பிடாமலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் கோயில் நிர்வாகத்தின் பாரபட்சமான தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் முதல்வர் சித்தராமையாவை பார்த்து மனு அளித்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய, உடுப்பி கிருஷ்ணர் கோயில் நிர்வாகி வித்யா வல்லபா தீர்த்த சுவாமி, இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/refusing-food-non-brahmins-at-temple-kicks-off-row-198975.html

தமிழ் ஓவியா said...


நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!


ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலை!

நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக மாக வெற்றி பெற வைக்க, தமிழக மக்கள் - குறிப்பாக வாக்காளர்கள் தயாராகியுள்ள நிலையில், ஆளும் கட்சி சார்பில் ஆங்காங்கு பண மழை பொழியத் துவங்கி இரண்டு நாள்கள் ஆகின்றன! தஞ்சை, நீலகிரி, வடசென்னை - முதலிய தொகுதிகள் உட்பட விலையில்லாத மதிப்புள்ள வாக்குகளை 500, 1000 ரூபாய்களுக்கு விலை வைத்து வாங்கி விடுவதன் மூலம் தேர்தலில் தங்களைத் தழுவும் தோல்வியைத் தடுக்கலாம் என்று அந்த முறையைக் கையாண்டு வருகின்றனர்.

எவ்வளவு எதிர்ப்புக் காட்டப்பட்டாலும், காவல்துறை, தேர்தல் ஆணையம் கண்டும் காணாதவர்களைப் போல் ஆளும் அ.தி.மு.க. அணிக்கே சாதகமாக உள்ளார்கள்.

புகார் தருகின்ற தி.மு.க. மற்ற கட்சி நண்பர்கள் மீதே பொய் வழக்கும் போடத் தவறுவதில்லை!

நாளை நடைபெறும் தேர்தலுக்காக 144 தடை உத்தரவா? பணம் பட்டுவாடாவுக்கு வசதியான ஏற்பாடா? என்பதே பலரின் கேள்விக் குறியாக உள்ளது!

ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

வாக்காளர்களே, கடமையாற்றிட வேண்டிய காவல்துறையினரும், நீதியை நிலை நிறுத்தும் தேர்தல் கமிஷனும் இப்படி கண்டும் காணாத காட்சிகளை அரங்கேற்றலாமா?

நாளை நல்ல தீர்ப்பு வழங்குங்கள் வாக்காளர்களே!

ஜனநாயகம் காக்கப்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/e-paper/79128.html#ixzz2zlOODGuX

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவது அபாயகரமானது! அண்டை நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும்!


இங்கிலாந்தைச் சேர்ந்த 75 பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

இலண்டன், ஏப்.23- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 75 கல்வியாளர்கள், பேராசிரியர்கள் நரேந்திர மோடி இந்தியாவின் பிரத மர் ஆனால் அது இந்தி யாவுக்கு ஆபத்து மட்டு மல்ல - மற்ற நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். இந்தியாவைப் பூர்வீக மாகக் கொண்ட (இங்கி லாந்தில்) வாழ்ந்துவரும் கல்வியாளர்கள், அறிஞர் கள் இந்தியாவில் நடை பெறும் தேர்தல்குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் மோடி அதிகாரத் துக்கு வருவது மிகுந்த அச்சத்துக்கிடமானது என்று கூறுகின்றனர்.

75 பேராசிரியர்களும் கல்வியாளர்களும் மோடி அதிகாரத்துக்கு வரும் எண் ணமே எங்களை அச்சத்தில் மூழ்கடிக்கிறது என்கின் றனர். தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் டுடே என்கிற இதழில் பேராசிரி யர் சேட்டன் பட், கவுதம் அப்பா ஆகியோர் தலை மையில் 75 பேராசிரியர்கள் மற்றும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்க லைக்கழகத்தில் பணிபுரி பவர்கள் ஆகியோர் கூட் டாக வெளியிட்டுள்ள திறந்த மடலில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்து தங்களின் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை அப்படியே லண்டனிலி ருந்து வெளிவரும் தி இண்டிபென்டன்ட் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: இந்தியாவில் அடுத்த அரசைத் தேர்வு செய்யுமிடத்தில் மக்கள் உள்ளனர்.

மோடியின் தலைமையிலான பாஜக அரசு அமைந்துவிட்டால்

இந்தியாவில் ஜனநாய கம், பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண் பாடுகள் என்று பிரிந்திருந் தாலும் அவற்றின்மீதான சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகள் ஆகி யவை மிகுந்த சவாலுக்கு உள்ளாகும் என்பதை எண்ணி மிகவும் கவலை கொள்கிறோம் என்று கூறி யுள்ளனர்.

மோடியின் எண்ணங் கள் அதிகாரம் பெறுவது நம்மை அச்சத்தில் மூழ் கடிக்கிறது என்கிற தலைப் பிலான அக்கடிதத்தில்,

நரேந்திர மோடி ஹிந்துத் தேசியவாத அமைப்பின் வலையில் உள்ளவர். ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்கள் கடந்த காலங்களில் சிறுபான்மை யருக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டுள்ளன. அண் மையில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக் குதல்களையும் நடத்தி உள் ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத் தில் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நடிகர் அனீஷ் கபூர் மற்றும் பலரும் தி கார்டி யன் இதழில் எழுதியதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாக இன்டிபென் டண்ட் இதழில், குஜராத் தில் ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற வன்முறை கள், பல்வேறு சம்பவங் களுக்கு மோடிதான் முழுப் பொறுப்பாளி என்று பல்வேறு தரப்பினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்கள் வெளியாயின. மேலும், அவற்றுக்கு சாட்சி யாக தற்போதைய மூத்த பாஜக தலைவர்களின் பேச்சுக்களும் அமைந்துள் ளன. இந்த முறையிலான அரசு நிச்சயமாக ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்தி விடும். பொதுத்துறை நிறுவனங்கள் அதோ கதி!


அதோடு, மோடி-பாஜக வின் மாதிரி பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய வணிகர்களுடன் தொடர் புள்ளதே. பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்த்து, ஏழைமக்களுக்கு எதிராக வும், அவர்களை வாட்டி வதைப்பதற்கு ஒப்பாக வும், செல்வத்தையும், அதி காரத்தையும் பெரும் பணக்காரர்களிடம் ஒப் படைப்பதே ஆகும். மோடியின் வெற்றி என்பது நீதியின்மீது, அதன் கொள்கைகள்மீது விடுக் கப்படும் சவாலாகும். குறிப்பாக, மகளிர்மீதான தடைகள், கண்காணிப்பு கள் ஏற்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்தியாவில் மட்டு மின்றி அண்டை நாடுகளி லும் அப்பதற்றம் ஏற் பட்டுவிடும் அபாயம் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பிரிட்டீஷ் குறிப்பிடத் தக்க பல்கலைக்கழக மாகிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவரான பேரா சிரியர் நந்தினி கூப்து மற்றும் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் பணிபு ரிபவராகிய ஜோயா சாட் டர்ஜி ஆகியோர் குறிப் பிட்ட தகவல்களை கல்வி யாளர்கள் கடிதத்தில் மீண் டும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் இதழ்களி லும், பிற ஊடகங்களிலும் அதிக இடத்தை இக்கடி தம் பிடித்துள்ளது. இக் கடி தத்தில் குறிப்பிடப் பிட்டுள்ள படி,

13ஆண்டுகள் மேற்கு மாநிலமான குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த மோடி அரசின் அயோக் கியத்தனத்துக்கு ஆதார மாக கோத்ரா கலவரம் உள்ளது. 2002இல் குஜ ராத்தில் எல்லைகடந்த வன் முறையாக ஹிந்துக்களால் கலவரம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கிலானவர்கள் குறிப் பாக முசுலீம்கள் இறந் தனர். இந்த வன்முறை வெறியாட்டம் மோடியின் ஆட்சியில்தான் நடைபெற் றது. இந்த வன்முறையில் மோடியின் பங்கு குறித்து, வன்முறை சம்பவங் களுக்கு அனுமதியும், அவற்றை வேகப்படுத்தி யதுமான மோடியின் பங்கு கள் குறித்து மூத்த அதிகாரி கள், காவல்துறை அதிகாரி கள் ஒப்புதல் வாக் குமூலங் களில் தெரிவித்துள் ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79127.html#ixzz2zlOvCOSO

தமிழ் ஓவியா said...

பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள்மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 23- சென்னை உயர்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழில்முருகன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்புச் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த தலைமைச் செயலாளர், உள் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இதே கோரிக்கைகளை கொண்ட மனு கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த உயர்நீதிமன்றத்தில் தொட ரப்பட்டது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சாலைகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப் படைக்கப்படுகின்றனர். பிச்சைக்காரர்களின் எண் ணிக்கையைப் பொறுத்து, மாவட்டத்துக்கு ஒரு பிச்சைக்காரர்கள் காப்பகம் கட்டப்படுகிறது.

இதற்காக 70 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள், வழி பாட்டு தலங்களில் பிச்சை எடுப்பவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை முகாம்களில் அடைத்து வருகிறோம். பிச்சை எடுப் பதை தடுக்கும் அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

எனவே இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு களை பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், இந்த உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், தகுந்த நடவடிக் கையை பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு எடுக்க வேண்டும்.

- இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/79112.html#ixzz2zlPe8chU

தமிழ் ஓவியா said...


கரணம் தப்பினால் மரணம்!


மிகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதைத் தவறவிட்டால் அடுத்த அய்ந்தாண்டுகள் மட்டுமல்ல - அதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் எதிர் காலத்தை இருளாக ஆக்கக் கூடியவை!

பி.ஜே.பி. என்பது பத்தோடு பதினொன்று என்று கருதப்படக் கூடிய ஓர் அரசியல் கட்சியல்ல! சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வருணாசிரம வெறி கொண்ட ஹிந்துத்துவா அமைப்பு.

இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும், ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எவ்வளவுத் துல்லியமானது என்பது எளிதில் விளங்கும்.
நியாயமாக இந்தத் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் கூட பி.ஜே.பி. தேர்தலில் நிற்க சட்டப்படி தகுதி உடையதல்ல என்று அறிவித்திட வாய்ப்புண்டு. தேர்தல் ஆணையம் அந்தக் கடமையை செய்யவில்லை.

எந்த அளவுக்கு இவர்கள் சென்றுள்ளார்கள்? பீகார் மாநில பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், மக்களவைத் தேர்தல் வேட்பாளரும், பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் என்பவர் என்ன கூறினார்? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும் என்று சொல்லுகிறார்.

மிகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி, அது அடங்குவதற்குள், இந்தத் தேர்தலில் முன்னணிப் படையாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய அங்கமான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியா, மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் என்ன பேசி இருக்கிறார்?

ஹிந்துக்கள் பெரும்பான்மையாகக் குடியிருக் கும் இடங்களில் சிறுபான்மை மக்களான முஸ்லீம் கள் வீடுகள் வாங்கினால் அவர்களை விரட்டி யடியுங்கள்; கல்லால் தாக்குங்கள்; டயரைக் கொளுத்தி அவர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள்மீது எறியுங்கள் என்று பச்சையாக பாசீச வெறித்தனத்தோடு பேசி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாகவே இவர்கள் இப்படி வெறியாட்டம் போடுகின்றனர் என்றால், தப்பித் தவறி இந்தக் கூட்டம் ஆட்சி அதிகாரத்துக்கு வருமேயானால் நாடே கலவரப் பூமியாகி விடும். மனித ரத்த வெள்ளம் நாளும் ஓடும் அபாய நிலைதான் ஏற்படும். இவற்றையெல்லாம் நரேந்திரமோடி கண்டிப்பதாகச் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

மோடியைப்பற்றித் தெரிந்தவர்கள் மோடியின் இந்த மறுப்பை ஏற்க மாட்டார்கள்.

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்டதை - நாய்க் குட்டி ஒன்று காரில் அடிபடுவதால் ஏற்படும் அனுதாபத்தோடு ஒப்பிட்டுப் பேசியவர் தானே மோடி!

2007இல் தெகல்கா எனும் புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் நேரில்கண்டு அவற்றைப் பதிவும் செய்தது. அப்படி பதிவு செய்யப்பட்டவர்களுள் ஒருவர் குஜராத் மாநில அரசின் சிறப்பு வழக்குரைஞர் அரவிந்த்பாண்டியா; அவர் மிகவும் வெளிப்படை யாகவே கூறியதை தெகல்கா வெளிப்படுத்தியதே!

மோடி முதல் அமைச்சராக இருந்திருக்கா விட்டால், அவர் வெடி குண்டையும் வீசியிருப் பார்! என்று கூறியிருக்கிறார் என்றால் மோடி, பிரவீன் தொகாடியாவுக்கு எந்த வகையிலும் ஹிந்துத்துவா வெறித்தனத்தில் குறைந்தவர் அல்லர் என்பது விளங்குமே! இவற்றின் அடிப்படையில் பா.ஜ.க.வையும் அதனோடு கூட்டணி வைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் மிக மோசமான தோல்விக்கு ஆளாக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த அணியை மட்டுமல்ல; நேரடியாக இந்த அணியோடு கூட்டு இல்லையென்றாலும், அடிப்படையில் பி.ஜே.பி.யின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டி ருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. வையும் தோற்கடித்துக் காட்ட வேண்டியது மிகவும் அவசிய மாகும்.

இதற்கு மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்கள் உண்டு; இதுவும் ஹிந்துத்துவா உணர்வைக் கொண்டது என்பது ஒன்று. பிஜேபி ஆளும் மாநிலத்தில்கூட நிறைவேற்றப்படாத மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் இந்த ஜெயலலிதாதான். ராமன் பெயரை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியிருப்பவரும் இவரே!

இரண்டாவது காரணம் ஒன்றும் முக்கியமாக இருக்கிறது மதங்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாத தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்டு, அதே நேரத்தில் அத்தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தும் துரோகத்தனத்திற்குக் கண்டிப்பாகப் பாடம் கற்பித்தாக வேண்டும்.

மூன்றாவது இந்த அம்மையாரின் மூன்றாண்டு ஆட்சி என்பது எந்தவித வளர்ச்சிக்கும் இடம் இல்லாதது - சட்டம் ஒழுங்கு மிகக் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதற்கும் சேர்த்து இந்தத் தேர்தலில் தண்டனை கொடுத்தாக வேண்டும். தமிழக வாக்காளர் களே கரணம் தப்பினால் மரணம் என்பதை மறவாதீர்!

விழிப்புணர்வு கொள்க! ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வென்றிட ஆவன செய்க!

Read more: http://viduthalai.in/page-2/79120.html#ixzz2zlQFYCWi

தமிழ் ஓவியா said...


இன்று (23.4.2014) உலக புத்தக நாள்


சென்னை கடற்கரையில் வாசிக்க வாங்க நடைப்பயணம் சென்னை, ஏப். 23- உலகப்புத்தக நாளான இன்று (23.4.2014) காலை சென்னை மெரினா கடற்கரையில், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக வாசிக்க வாங்க! என்ற வாசகத்துடன் பதாகைகளை ஏற்றி குழந்தைகள், மாணவர்கள், வாச கர்கள், பங்கேற்ற புத்தக வாசிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான இன்று ஏப்ரல் 23, யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது.

உலகப்புத்தக நாளைக் கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் கடந்த 18-ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் 27-ஆம் தேதி வரை சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாசிக்க வாங்க எனும் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் இன்று (23.4.2014) உலக புத்தக நாளாக கொண்டாடும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு நடைபயணம் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது. குழந்தைகள், மாணவர்கள், வாசகர் கள் பெருமளவில் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் மு.தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3230 மாவட்ட ஆளுநர் ஸிலீ ஏ.பி.கண்ணா முன்னிலை வகித்தார். இந்நடை பயணத்தில் பேராசிரியர் இராஜசேகர் புத்தக வாசிப்பு குறித்த அரிய தகவல்களை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தார்.

இந்நடைப் பயணத்தின் முடிவில் இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், காலைச் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. புத்தகம் வாசிப்பு குறித்த அறிஞர்களின் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உலகப்புத்தக நாள் பெருவிழா வையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், ரோட்டரி இன்டர் நேஷனலும் சென்னை புத்தகச் சங்கமத்துடன் இணைந்து நடத்தின.

வாசிக்க வாங்க! என்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளரு மான வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித்தலைவர் த.வீரசேகரன்.

சென்னை புத்தக சங்கமத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விழிகள் பதிப்பகம் தி.வேணு கோபால், எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண் ணன், மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் கே.எஸ்.புகழேந்தி, திரா விடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தைச் சேர்ந்த இரா.தமிழ்ச் செல்வன், கோவி.கோபால், ராமு.

சென்னை புத்தக சங்கமத்தின் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், சி.வெற்றிச் செல்வி, பெரியார் மாணாக்கன், புரசை அன்புச் செல்வன், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகள், ரோட்டிராக்ட் மாணவர்கள், ஆனந்தன், சுரேஷ், அம்பேத்கர்,வை.கலையரசன், கலைமணி, விமல்ராஜ், தமிழ்க்குடிமகன், லோகேஷ்குமார், சக்திவேல், அருண், சங்கர் மற்றும் திரளான பொது மக்களும் பங்கேற்று சிறப்பித் தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் ஏப்.27ஆம் தேதி வரை நடைபெறும் சென்னை புத்தகச் சங்கம நுழைவுச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/79147.html#ixzz2zlQqcvM4

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞரின் நன்றியும் - பாராட்டும்!


சென்னை, ஏப்.23- தேர்தல் பரப்புரைகளை சிறப் பாக செய்த பெருமக்களுக்கு நன்றியையும் பாராட் டுதலையும் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இதுகுறித்து இன்று (23.4.2014) முரசொலியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது:

நாளை தமிழகத்திலே நாடாளுமன்றப் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, உழைத்த உழைப்புக்கான அறுவடையை காணக்கூடிய நாள். நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாகப் பிரச்சாரம் செய்வது முடிந்துவிட்டது.

நமது கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்குக் காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறோம். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் 90 வயதைக் கடந்தும் ஈடு பட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந் தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டி யிருந்தன.

கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழகம் முழுவ திலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனி லேயே பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தலில் அவருடைய பிரச்சாரம்பற்றி பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை.

கழக ஆட்சியின்போது தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள், சாதனைகள்பற்றியும்; அ.தி.மு.க. ஆட்சி யின் நிர்வாக அலங்கோலங்கள், அவலங்கள் பற்றியும், ஒவ்வொரு கூட்டத்திலும் திரண்டு வந்த மக்களிடையே எளிதில் புரியும் வண்ணம் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் விளக்கிச் சொன் னதை நீயே நேரிலும் கண்டிருக்கிறாய்; கேட்டி ருக்கிறாய்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்வி களுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாக வும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.

அடுத்து கழகத்தின் முன்னணித் தலைவர்கள், கலையுலகத்தினர், கழகச் சொற்பொழிவாளர்கள், பல் வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், துணைப் பொதுச்செயலாளர்களான சகோதரி சற்குண பாண்டியன், வி.பி. துரைசாமி மற்றும் கவிஞர் கனிமொழி, ரகுமான்கான், திருச்சி சிவா, பேராயர் எஸ்றா சற்குணம், வாகை சந்திரசேகர், குஷ்பூ சுந்தர், கம்பம் செல்வேந்திரன், பேராசிரியர் சபாபதி மோகன், நூர்ஜகான் பேகம், சங்கரி நாராயணன், புலவர் இந்திரகுமாரி, புதுக்கோட்டை விஜயா, தஞ்சை கூத்தரசன், வி.பி.ராஜன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, திண்டுக்கல் லியோனி, குமரிமுத்து, வாசு விக்ரம், இனிகோ இருதயராஜ், மனுஷ்யபுத்திரன் மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய தலைவர் கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

முக்கியமாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நாள் கூட பாக்கியில்லாமல், தேர்தல் பயணத் தில் ஈடுபட்டு, கழகக் கூட்டணிக்கு வாக் களிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் பூர்வமாக விளக்கிப் பேசியிருக்கிறார். துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னுடன் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார்.

அவர்களுக்கெல்லாம் கழகத்தின் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

முரசொலி , 23.4.2014

Read more: http://viduthalai.in/page-5/79113.html#ixzz2zlRhd578

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சி - மோடி கூறுவது உண்மையா?

மோடி, தான் ஏதோ இந்தியாவையே காப்பாற்ற வந்த அவதார நாயகன் போலப் பேசுகிறார். மத வாதி அல்லவா? தன்னு டைய, ஆர்.எஸ்.எஸ். மற் றும் இந்துத்துவா பூர்வீகத் திலிருந்து மோடியால் வெளியே வரமுடியவில்லை. 2002 இல் - தான் முதல்வராக வந்த பின்தான் குஜராத் வளரத் தொடங்கியது எனப் பறைசாற்றிக் கொள்கிறார், மோடி.

குஜராத்தைப்போலவே இந்தியா வையும் வளர வைப்பேன் என மார் தட்டிக் கொள்கிறார். அதனால் அவ ரைப் பிரதமராக்க வேண்டு மென மேடைதோறும் முழங்கி வருகிறார். உண்மையிலேயே குஜ ராத் வளர்ந்திருக்கிறதா என்று ஆராயவேண்டும். மோடியின் மேடைப் பேச்சைக் கேட்டு, 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டை அவர் கையில் கொடுப்பது விவேகமாகாது.

குஜராத்தில் என்ன நடந் திருக்கிறது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் :

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரக் கம் பெனிகளுள் ஒன்றான டாட்டா நிறுவன-நானோ கார் தொழிற்சாலைக்கு இடம் தருவதற்காக - ஏழை எளிய விவசாயிகளின் நிலங் கள், மிகக் குறைந்த விலைக் குக் கையகப்படுத்தப்பட்டி ருக்கிறது.

இதனால் அந்த ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த தோடு மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலையைப் போன்று இன்னும் சில பணக்காரக் கம்பெனிகள் குஜராத்தில் காலூன்றியி ருக்கின்றன.

இவற்றின் பள பளப்பான கட்டடங்களைப் பார்த்து குஜராத் வளர்ந்து விட்டதாகச் சொல்வது என்ன நியாயம்? நானோ கார் வாங்கும் அள வுக்கு குஜராத் மக்கள் செல்வச் செழிப் புப் பெற்றுவிட்டார் களா? சைக்கிள்கூட வாங்க வழியில்லாத ஏழை விவசாயி களும்.

நகரத் தொழிலாளர் களும் இன்னும் லட்சக் கணக்கில் இருக்கிறார் கள் என்பதை - மோடி மறுக்க முடியுமா? அடுத்து, குஜராத்தில் இன்றியமையாப் பண்டங் களின் விலைவாசி எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

எல்லோரும் அருந்தும் தேநீரை எடுத் துக் கொள்வோம் சென்னையில் பெரும்பாலான தேநீர்க் கடைகளில், பாமர மக்கள் அருந்தும் தேநீர் , ஒரு கப், சராசரியாக ரூபாய் 7-க்கு விற்கப்படுகிறது. (இங்கு நாம், மேல்தட்டு மக்கள் செல்லும் உணவு விடுதி களைக் கருத்தில் கொள்ளக் கூடாது).

ஆனால், குஜராத்தில் இந்த சென்னையில் உள்ள தேநீர் கடையில் கொடுக் கப்படும் கப்பில் பாதி அளவு உள்ள ஒரு கப் தேநீர் சராசரியாக ரூபாய் 8-க்கு விற்கப்படுகிறது. இதனைக் கட்டிங் தேநீர் என்று அகம தாபாத் பாமர மக்கள் கூறு கிறார்கள். (நமது ஊர்களில் கட்டிங் என்ற சொல் மது அருந்துவோர் பயன்படுத்து வதாகும்). ஆனால் குஜ ராத்தில் தேநீரையே கட் டிங் முறையில் இருவர் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழ் நிலை.

இந்த விவரம்- சிறுவயதில் நானும் தேநீர் விற்றேன் என்று கூறும் மோடிக்குத் தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா? (மிகத்தரமான தேநீர் ஓரளவு மலிவாகக் கிடைக் கக்கூடிய ஊர்களுள் அய்தராபாத் முதலிடம் பெறும்). அடுத்து, பால் விலையை எடுத்துக் கொள்வோம். சென் னையில், பால் ஒரு லிட்டர் ரூபாய் 31-க்கும் 28-க்கும், ஆவின் விநியோகம் செய்கிறது. இது கடைகளில் 34-க்கும் 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் கருநாடகாவி லும் கேரளாவிலும் இதே தரமுள்ள பால் 28 ரூபாய்க் குக் கிடைக்கிறது. ஆனால் குஜராத்தில் தரமான பால் ரூபாய் 42-க்கும், தேநீருக் கான பால் ரூபாய் 40-க்கும் அமுல் நிறுவனம் விநி யோகம் செய்கிறது. மக்கள் கடைகளில் இன்னும் அதிகம் கொடுத்துத்தான் வாங்க வேண்டியுள்ளது. இந்தியாவிலேயே பால் விலை மிக அதிகமாகவுள்ள மாநிலங்களில் குஜராத் தும் ஒன்று.

இப்படி ஆராய்ந்து கொண்டே போனால், குஜராத்தில், மற்ற மாநிலங் களை விட விலைவாசி அதிகம் என்பது புரியும். இதுதான் வளர்ச்சியா? மோடி இதை மூடி மறைக் கிறார் என்பதுதான் உண்மை.

- பேராசிரியர் சி.ஜம்புநாதன்

Read more: http://viduthalai.in/page-5/79111.html#ixzz2zlS1bKRR

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


மோடியை எதிர்த்தவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்ற நஞ்சைக் கக்கிய பிஜேபி பிரமுகர் கிரிராஜ் பிரச்சாரத்துக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு - 39, புதுச்சேரி - 1, மே.வங்காளம் - 6, உத்தரப் பிரதேசம் - 12, ராஜஸ்தான் -5, மகாராஷ் டிரம் - 19, மத்தியப் பிரதேசம் - 10, ஜார்க்கண்ட் - 4, காஷ்மீர் - 1, சத்தீஸ்கர் - 7, பீகார் - 7, அசாம் - 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதலாக வாக்குப் பதிவையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்களன்று மட்டும் ஒரு நாள் பெருங்குடி மக்கள் வாங்கிய மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.173 கோடியாம்!

தேர்தல் பணிகளுக்காக தமிழ்நாட்டில் ஈடுபடுத்தப் பட்டுள்ள காவல் துறையினர் 1.43 லட்சம்.

அதிமுகவினர் லாட்ஜில் பணம் பட்டுவாடா செய்ததை எதிர்த்து நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தோழர்களுடன் நள்ளிரவில் மறியல் செய் தார்.

தமிழ்நாடு முழுவதும் தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.50 கோடி! பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2835.

மோடியைப் பார்த்து முசுலீம்கள் அச்சப்படுகின்றனர் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

குஜராத் மாநில அமைச்சர் புருசோத்தம் சோலங்கி (பி.ஜே.பி.) வந்த ஹெலிகாப்டரிலிருந்து ரூ.1.75 லட்சம் பணம் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொருவரும் வாக்களித்தால் இந்த நாடு நன்றியு டையதாகவிருக்கும் என்கிறார் குடியரசு முன் னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page-8/79123.html#ixzz2zlT7ClHy

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு என்று நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலம், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணிச்சலாக சட்டமன்றத் திலேயே கூறும் முதல்வரைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? ஆம்! அவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா!

Read more: http://viduthalai.in/page-8/79154.html#ixzz2zlTEU1iW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வில்தான் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகம் தன்னார்வ அமைப்பு தகவல்


புதுடில்லி, ஏப். 23- பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர் கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தன் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம்

இந்நிலையில், ஜன நாயக மறுசீரமைப்புக் கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் இது தொடர்பான புள்ளி விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

முதல் ஆறு கட்ட தேர்தலில் போட்டியிடும் 5,380 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு வில் உள்ள விவரங்களின் அடிப்படையில் இத்தக வல்கள் தொகுக்கப்பட் டுள்ளன.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

மொத்தமுள்ள 5,380 வேட்பாளர்களில் 879 பேர் (16%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 533 பேர் மீது கொலை, பாலி யல் வன்முறை, வழிப் பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

காங்கிரஸின் 287 வேட் பாளர்களில் 13 சதவீதத் தினர் அதாவது 36 வேட் பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள் ளன.

பாஜகவில் 48 வேட்பாளர்கள்

பாஜகவின் 279 வேட் பாளர்களில் 88 பேர் (32%) மீது தீவிர குற்ற வழக்கு கள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மியின் 291 வேட் பாளர்களில் 29 பேர் (10%) மீதும், பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 39 பேர் (12%) மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதி வாகியுள்ளன.

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 75 பேர் (26%), பாஜகவின் 279 வேட்பாளர்களில் 88 பேர் (32%), ஆம் ஆத்மியின் 291 வேட்பாளர்களில் 44 பேர் (15%), பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 65 பேர் (20%) மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/79121.html#ixzz2zlTNDmMn

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியிலா - அ.தி.மு.க. ஆட்சியிலா?


தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி களுக்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமும் திமுக வும்தானே. கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) நிஞிறி எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தி யானது 13.12 சதவிகிதமாக இருந்தது, இதே கால கட்டத்தில் மோடியின் குஜராத் மாநில நிஞிறி வெறும் 10 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில்!

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் நிஞிறி 4.14 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயத் துறைகளின் வீழ்ச்சியால், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.

கலைஞர் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நான்காம் இடத்திலிருந்த தமிழ்நாடு, ஜெயாவின் ஆட்சி யில் கடைசி இடத்துக்கு வந்துவிட்டது. ஜெயா அறிவித்த எல்லா திட்டங்களும், முதலீடுகளும் வெறும் ஏட்டள வில்தானே உள்ளது.

இப்பொழுது சொல்லுங்க, தமிழகம் அடைந்துள்ள சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம் திமுக ஆட்சிதானே!

Read more: http://viduthalai.in/page-8/79119.html#ixzz2zlTV5q6l

தமிழ் ஓவியா said...

மோடியிடம் தினமணியின் அவசரப் பேட்டி - ஏன்?


தினமணி, பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். ஏடு என்று நாம் சுட்டிக்காட்டிய போதெல்லாம் - அதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காதவர்கள்கூட, இந்தத் தேர்தலில் அது நடந்து கொண்டு வரும் போக்கினை நிதானமாகச் சிந்தித்தால் - திராவிடர் கழகத்தின் கணிப்பு விடுதலை யின் - மதிப்பீடு மிகவும் துல்லியமானதே என்று புரிந்து கொள்வார்கள்.

இதற்காக வெகு தூரத்திற்குச் சென்று ஆராய்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம்.

இன்று தமிழ்நாடெங்கும் - புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வாக்குப் பதிவு; இந்தக் கால கட்டத்தில் நேற்றைய தினமணி (23.4.2014) அவசர அவசரமாக தினமணியின் ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான திருவாளர் நரேந்திரமோடியைப் பேட்டி கண்டு, தினமணியின் முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடு கிறார் என்றால் இதன் அவசியம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பது - தமிழ்நாட்டில் கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூடப் புரிந்து கொள்வானே!

பேட்டிக்கு முகவுரையாக தினமணி ஆசிரியர் அய்யர்வாள், மோடிபற்றிக் கொடுக்கும் முன்னுரை அவரின் முகவரியைப் பச்சையாகக் கட்டம் கட்டி வெளிப்படுத்தக் கூடியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தும், இவரது சுறுசுறுப்பும், மன வலிமையும் நிகரற்றது. சொலல் வல்லன், சோர்வு இலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்கிற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம்.

இப் போது குஜராத் முதல்வர், தேர்தல் முடிவானால் அனேகமாக இந்தியப் பிரதமர்

என்று மோடிக்கு தினமணி ஆசிரியர் இப்பொழுதே பிரதமர் என்கிற மணிமுடியைச் சூட்டி விட்டார். தமது ஆசையைக் குதிரையாக்கி சவாரியும் செய்து விட்டார்.

மோடி என்றால் இதுதானா? மோடி என்றால் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற விலாசம் கிடையாதா?

மோடி என்றால் சிறுபான்மை மக்களுக்குப் பயங்கரமான எதிரி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லீம்கூட வேட்பாளராக பி.ஜே.பி. சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராதவர் என்ற அறிமுகம் அவரைப் பற்றிக் கிடையவே கிடையாதா?

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ் லிம்கள், ஒருவர் சீக்கியர்; இந்து ஒருவரும் கிடையாது என்ற நிலைப்பாடு, மோடி எத்தகைய பாசிஸ்டு என்பதை உலகுக்கு அறிவிக்கவில்லையா?

வெளிநாடுகளில்கூட கல்வியாளர்கள், பேராசிரி யர்கள் பல்துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள், இந்தியாவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு மரண பூமியாகும் - அண்டைய நாடுகள்கூடப் பதற்றம் அடையும் என்று கையொப்பமிட்டு அறிக்கை களே கொடுத்து இருக்கிறார்களே - அவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் அற்பம்தானா?

அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை மோடி தங்கள் நாட்டுக்கு வந்திட விசா கொடுக்க மறுத்து வருவது - ஏன்? இதுபற்றியெல்லாம் வைத்திய நாதய்யர் களுக்குத் தெரியவே தெரியாதா?

நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிர்மாணிக்க 11,00 ஏக்கர் நிலத்தை சதுர அடி ரூ.900-க்கு அடி மாட்டு விலைக்கு விற்றதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?

சதுர அடி ரூ.10,000 சந்தை மதிப்பு!

அதே டாட்டாவுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.9750 கோடியை 20 வருடத்தில் திருப்பி செலுத்த வாய்ப்பு அளித்தவரும் இந்த மோடிதானே. இவர்கள் கண்ணோட்டத்தில் டாட்டா பரம ஏழையோ!

தமிழ் ஓவியா said...


மோடியைப் பிரதமர் ஆக்குவதில் 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் - ஆர்வத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்களே - உயர் ஜாதி ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றனவே - இந்தப் பின்னணிகளைக் கொண்ட பிற்போக்குவாதிகள் என்ற அடையாளம் வெகு மக்கள் மத்தியில் அறவே அழிக்கப்பட வேண்டும் என்ற தந்திரம் தானே இந்தத் தினமணியின் அவசரப் பேட்டிக்கான அவசியம்!

மோடியை நோக்கி தினமணி ஆசிரியர் வைக்கும் கேள்விக்குள்ளேயே விடையிருக்குமாறு தேர்ந்தெடுத் தல்லவா மோடி முன் வைக்கிறார்.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் - அவரைத்தானே இந்த அக்கிரகாரவாசிகள் முன் வைக்கின்றனர் என்ற வினா எழலாம்.

ஒரு வகையிலே அவர்களின் கெட்டிக்காரத்தனம் இது; பச்சையாகப் பார்ப்பனர்களை முன்னிறுத்தும் போது, வெகு மக்கள் அந்த வன்மத்தை, நச்சுக் கோப்பையையும் பளிச்சென்று புரிந்து கொள்வார்கள்.

தந்தை பெரியார் மொழியில் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் நிஜப் புலிகளை விட, வேடம் தரித்த புலிகள் அதிகம் குதிக்கும். அதனால்தான் இந்த வேடப் புலியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதுவும் ஆர். எஸ்.எஸில் பயிற்சிக் கொடுத்துப் புடம் போடப்பட்ட வரைப் பயன்படுத்தி, தங்களின் மனுதர்ம ஹிந்துத்துவா சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோல நினைக்கிறார்கள்.

இந்த ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் சோ ராமசாமிகளின், தினமணி வைத் தியநாதய்யர் அண்ட் சோக்களின் விஷம ஊற்று எங்கே, எப்படி மய்யம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/79163.html#ixzz2zqtksBtE

தமிழ் ஓவியா said...


அவ(ன்)ள்


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்புப் பெண். தென்னாப்பிரிக்காவிலும் குக்கிராமம். படிப்பும் சொல்லும்படியாக ஏதும் இல்லை. பெண்ணின் பெயர் காஸ்டர் செமன்யா.

சிறிய வயதிலிருந்தே காற்றைக் கிழித்து ஓடுவது - அந்தச் சிறுமியின் பொழுதுபோக்கு! ஆனால் சர்வதேச ஓட்டப் பந்தய மைதானணீத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லைதான்.

ஆனாலும், அந்தப் பெண் 18 வயதில் பெர்லின் மைதானத்தில் நின்றார். துப்பாக்கிச் சத்தம் கேட் டது - அவ்வளவுதான் கால் கள் தரையில் பாவவில்லை - காற்றைக் கிழித்தார் 800 மீட்டர் தூரத்தை 1.55:45 நேரத்தில் கடந்து எல்லோர் புருவங்களையும் உயர்த் தக் காரணமாக இருந்தார்.

2009இல் அது உலக சாதனை! 1500 மீட்டரிலும் அதற்கு முன்னிருந்த சாதனையைவிட 25 வினாடிகள் குறைவில் முறியடித்தார்.

உடனே ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன; அவர்கள் எல்லாம் ஆண்கள்தான். ஒரு பெண்ணா - இவ்வளவு தூரத்தை இவ் வளவுக் குறுகிய நேரத்தில் கடந்தார்? ஆச்சரியமாக இருக்கிறதே - நம்ப முடி யாது. ஒருக்கால் இவள் ஓர் ஆணாக இருப்பாளோ? அல்லது போதைமாத்திரை சாப்பிட்டு இருப்பாளோ? சந்தேகக் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. காற்றைக் கிழித்து ஓடி முதல் பரிசுக் கோப்பையைப் பெற்ற பெண் அந்த மகிழ்ச்சியைக் கூட அனுப விக்கவில்லை.

அதனால் என்ன? எந்த பரிசோதனைக்கும் தயார்! மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்?

ஆனாலும் இந்தச் சோதனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, அவள் பெண்தான்; எந்தப் போதை மருந்தையும் உட் கொள்ளவில்லை என்று அறிவிப்பதற்கு ஓர் ஆண்டு தேவைப்பட்டது என்பதுதான் கொடுமை யாகும். அதன் விளைவு ஓர்ஆண்டு ஓட்டப் பயிற் சிக்குக்கூட ஓய்வு கொடுத் ததுதான் மிச்சம். குற்றமற்றவர் என்று நெருப்பில் குளித்து வெளியில் வந்ததும், மீண்டும் தடகளப் போட்டிக்குள் குதித்தார். அதே பெர்லின் தான் அந்தப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்றாலும் முன் சாதனையை விட இரு வினாடிகள் அதிகமாகப் போய் விட்டது.

இந்தக் கொடுமையை என்ன சொல்வது! இதற்கு யார் தான் பொறுப்பு!

தமிழ்நாட்டில்கூட புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியைச் சேர்ந்த சாந்தி 2006 - தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற நிலையில் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டார்.

பெண்ணென்றாலே இப்படி ஒரு நிலைதான். நம் நாட்டில். வானதி சீனி வாசனும், டாக்டர் தமிழி சையும் வறட்டுத் தவளைகளாக தொலைக் காட்சிப் பெட்டிகளில் கட்சிக்காகக் கத்தினாலும் காரியம் என்று வரும் பொழுது - தேர்தல் களத்தில் ஒதுக்கத் தானேபடுகிறார்கள்? அதுவும் பெண்ணென்றால் பேயென்று பேசும் இந்து மதக் கட்சியில் வேறு எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/79178.html#ixzz2zqvsun3B

தமிழ் ஓவியா said...


16ஆவது மக்களவைத் தேர்தல் : தமிழர் தலைவர் வாக்களித்தார் பணநாயகத்துக்கு மக்கள் அடிமையாக மாட்டார்கள்! செய்தியாளர்களுக்குப் பேட்டி


மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை16ஆவது மக்களவைத் தேர்தல் : தமிழர் தலைவர் வாக்களித்தார்
பணநாயகத்துக்கு மக்கள் அடிமையாக மாட்டார்கள்!

செய்தியாளர்களுக்குப் பேட்டி

சென்னை, ஏப்.24- தமிழகத்தில் இன்று (24.4.2014) நடைபெறும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் தங்களது குடும்பத் தினருடன், அடையாறு காமராஜர் அவென்யூ முதல் தெருவிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச் சாவடியில் காலை 8.35 மணிக்கு வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பணநாயகத்திற்கு இங்கே இடமில்லை; ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்பதை உறுதியாக நாம் நம்புகிறோம் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார். வாக்களித்துவிட்டு வந்த தமிழர் தலைவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில்:-

சற்று நேரத்திற்கு முன்னால், இந்தப் பகுதியில் எங்கள் குடும்பத்தினரோடு நாங்கள் வாக்குகளைப் பதிவு செய்தோம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்த வகையில், மக்கள் தெளிவான ஒரு மாற்றத்திற்குத் தயாராகயிருக்கிறார்கள். மிகப்பெரிய ஒரு அவலத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள வேண்டும் என்கிற நிலையில், குறிப்பாக, தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடிய ஒரு இருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்கவேண்டும் என்கிற முயற்சியோடு, உற்சாகத்தோடு வாக்காளர்ப் பெருமக்கள் தமிழ்நாடு முழுவதும் திரண்டதைப் பார்த்தோம்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக வெளிப்படையாகவே தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா? காவல்துறை தன்னுடைய கடமையைச் செய்கிறதா? என்பதைப்பற்றி கவலைப் படாமல், வெளிப் படையாகவே, 500 ரூபாய் நோட்டிலிருந்து, 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய் என்று விநியோகம் செய்திருக் கிறார்கள். பணம் பெற்றுக் கொண்டவர்களே எங்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக அதையும்மீறி, மக்கள் தெளிவாக தங்களுடைய வாக்கைச் செலுத்துவார்கள். நல்ல தீர்ப்பளித்து, பண நாயகத்திற்கு இடமில்லை - ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்பதைக் காட்டுவார்கள் என்று உறுதியாக நாம் நம்புகிறோம்.

வெற்றி நமதே!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79179.html#ixzz2zqw2B8HP

தமிழ் ஓவியா said...


குஜராத்தின் வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் 17%; மோடி ஆட்சியில் வெறும் 9% தான் சரத்பவார்!!


மும்பை ஏப்.24- குஜராத் மாநி லத்தை காங்கிரஸ் ஆண்டபோது இருந்த பொருளாதார வளர்ச்சியைவிட மிக மோசமாகத்தான் மோடி ஆட்சிக் காலத்து பொருளாதார வளர்ச்சி இருக் கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பாரதீய ஜனதா வின் நிறுவனர்களில் ஒருவர் அத்வானி. அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கூட. அவர் போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவரது விருப் பத்துக்கு மாறாக காந்திநகரிலேயே அவர் போட்டியிட வைக்கப்பட் டுள்ளார்.

அதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவர் தாம் முன்பு போட்டியிட்ட தொகு தியிலேயே போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஜஸ்வந்த்சிங்.. திறமை யான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.. நல்ல நிதி அமைச்சர். சிறந்த நாடாளுமன்றவாதி.. அவரும் அப் படியே பந்தாடப்பட்டார். ஹிட்லராகிறார் மோடி... மோடியைப் பொறுத்தவரையில் பாஜகவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். நாம் வரலாற்றில் ஹிட்லரை பார்த்திருக் கிறோம். அவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரம் அனைத்தும் தம்மிடமே குவிந்திருக்க வேண்டும் என்று செயல் பட்டவர். அப்படி அதிகாரம் குவிந்த தால் யூதர்களை எப்படியெல்லாம் அவர் கொன்றொழித்தார் என்பதை இந்த உலகமே கண்டது. இன்று அதே நிலை மைதான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் ஆகியோரெல் லாம் ஒதுக்கப்பட்டு மோடியின் வசம் அந்த கட்சி சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கால முதல்வர்களாக மாதவ்சிங் சோலங்கி, சிமன்பாய் படேல் இருந்தனர். அப் போது அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 16 முதல் 17.5 சதவீதம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இது 9சதவீதம் ஆக குறைந்தது. இதுதான் சிறந்த நிர்வாகமா? ஏன் வளர்ச்சி விகிதம் குறைந்தது? கடந்த கடைசி 3 ஆண்டு காலத்தில் மகாராஷ்டிரா ரூ.1.42 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள் ளது. ஆனால், ஏராளமான நிதி மாநாடு களை நடத்துகிற குஜராத்தால் மகாராஷ் டிராவின் அளவில் 20 சதவீதம்கூட ஈர்க்க முடியவில்லையே? அப்படியானால் எங்கே என்ன ஆட்சி நிர்வாகம் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது? வாஜ் பாயோ இந்திரா காந்தியோ தங்களுக் காக ஓட்டுக் கேட்டதே இல்லை.. தங் களது கட்சிக்காக ஓட்டுக் கேட்டார்கள்.. ஆனால், மோடியோ எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார் என்றார் சரத்பவார்.

Read more: http://viduthalai.in/page-2/79173.html#ixzz2zqxBXJ48

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/79162.html#ixzz2zqxIx07f

தமிழ் ஓவியா said...


அய்யய்ய... சொல்ல வெட்கமாகுதே! செய்தி வெளியிட பணம்: 854 வழக்குகள் பதிவு


புதுடில்லி, ஏப்.24- மக் களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிட்டு 45 நாள்கள் ஆகியுள்ள நிலை யில், இதுவரை பணம் பெற்றுக் கொண்டு வேட் பாளர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது தொடர்பாக 854 வழக்கு களைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.

விளக்கம் கேட்டு அறிவிக்கை

இதில் 329 பேர் மீதான புகார்களில் உண்மை இருப் பது கண்டறியப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட வேட் பாளர்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப் பப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் பணத் தைப் பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிட்டதாக 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42 வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது.

ராஜஸ்தானில் 89 வழக் குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. 37 பேருக்கு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேசத்தில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 64 பேருக்கு அறிவிக்கை அனுப்பப்பட் டுள்ளது. பஞ்சாபில் 73 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 41 பேருக்கு அறி விக்கை அனுப்பப்பட் டுள்ளது.

அதே போன்று குஜராத் தில் 61 வழக்குகள் (45 பேருக்கு அறிவிக்கை), மகாராஷ்டிரத்தில் 118 வழக்குகள் (23 பேருக்கு அறிவிக்கை), கருநாடகத் தில் 34 வழக்குகள் (15 பேருக்கு அறிவிக்கை), பிகாரில் 10 வழக்குகள் (ஒரு வருக்கு அறிவிக்கை), மத் தியப் பிரதேசத்தில் 9 வழக் குகள் (4 பேருக்கு அறி விக்கை), ஒடிசாவில் 15 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, அதில் 5 பேருக்கு அறிவிக்கை அனுப்பப்பட் டுள்ளது.

தமிழகத்தில் 41 வழக்கு கள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அதில் 8 பேருக்கு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவுரை

பணத்தை அளித்து தனக்கு ஆதரவாக செய்தி வெளியிடச் செய்யும் வேட் பாளர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று மாநில தலை மைத் தேர்தல் அலுவலர் களுக்கு தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே அறி வுறுத்தியுள்ளது.

இது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணை யத்தால் அமைக்கப்பட் டுள்ள குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த தொகை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-5/79159.html#ixzz2zqyFkUaH

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்
தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவான மய்யங்களில் தேர்தல் பார்வை யாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப் பதிவு மய்யங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.

- பீரவீன்குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் மோடி அலையோ, லேடி அலையோ இல்லை!
- தொல். திருமாவளவன்

தே.மு.தி.க. தலைவர் மின்னணு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்தபோது, அவரின் மனைவி பிரேமலதா உதவி செய்துள்ளார். இது அப்பட்டமான விதி மீறல் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தியிருந்த போது, நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதே மோடி நேற்று உ.பி. வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1.65 என்று காணப்படுகிறது. 15 நாள்களில் திடீரென்று மோடிக்கு ரூ.14.34 லட்சம் எகிறியது எப்படி? என்ற வினா இப்பொழுது எழுந்துள்ளது. மோடி என்றாலே சிக்கல் நாயகர் தானோ!

பணபட்டுவாடா நடந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. -ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர்

தருமபுரியில் பணபட்டுவாடா செய்தவர்களை விரட்டிக் கொண்டு ஒடிய இளைஞர் காவல் படைவீரர் வினோத் கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

வாக்காளர்களுக்கு அஇஅதிமுக முன் பணம் கொடுத்துள்ளதே - அதைப் பற்றிக் கேட்க மாட் டீர்களா? - செய்தியாளர்களிடம் விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் 750 கைதிகள் அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


Read more: http://viduthalai.in/e-paper/79228.html#ixzz2zwfSoEK9

தமிழ் ஓவியா said...


சபரிமலை அலங்கோலம் பக்தர்கள் போர்க் கோலம்!

கொச்சி ஏப்.25- சபரி மலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளா கின்றனர்' என்று கேரள மாநில மனித உரிமை ஆணை யத்திடம் சபரிமலை அய்யப்ப சேவா சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் மனு, தேசிய குறை தீர்ப்பு அமைப்பான ஆம்புட்ஸ்மனின் விசா ரணைக்காகப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சியில் அந்த சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் எஸ். சுதர்சன் ரெட்டி, கருநாடக மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆண்டுதோறும் அய் யப்பனைத் தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த சுமார் 4 கோடி பக்தர்கள் சபரி மலைக்கு வருகின்றனர். அய்யப்பன் கோயிலை நிர் வகித்து வரும் திருவி தாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை.

தேவஸ்தான தங்கும் விடுதியில் அரசியல் வாதிகள் போன்ற வி.அய். பி.களுக்கு 600 அறைகளை ஒதுக்கிவிட்டு பக்தர்களுக் காக 400 அறைகளை மட்டுமே அளிக்கின்றனர். முக்கிய பூஜைக் காலங் களில் தங்கும் விடுதிக் கட்டணமாக ரூ.25,000 வரை தேவஸ்தானம் வசூ லித்தது.

இதனால் வேறு வழி யின்றி மலைப்பகுதியில் ஆங்காங்கே சுகாதாரமற்ற இடத்தில் தரையில் படுத்து தூங்கவேண்டிய அவல நிலைக்கு பக்தர்கள் ஆளா கின்றனர். வயதான பெண் கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கென தனிக் கழிப்பிட வசதியும் இல்லை. போதிய குடிநீர் வசதி கிடையாது.

சில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் உணவக உரிமையாளர்களின் நெருக்கடிக்கு இணங்கி, சபரிமலையில் அமைக் கப்பட்டுவந்த அன்னதான மண்டபப் பணிகளை தேவஸ்தானம் நிறுத்தி விட்டது.

மகர விளக்கு, மண்டல காலப் பூஜை, படிப்பூஜை போன்ற விசேஷ காலங் களில் நாள்தோறும் ஒரு சாப்பாடு ரூ.22 என்ற கணக்கில், சுமார் 18,000 பக்தர்களுக்கு எங்கள் சங் கத்தின் சார்பில் வழங்கப் படுகிறது. தனியார் உணவு விடுதிகளில் சாப்பாடு விலை ரூ.80 ஆகும்.

ஆனால் உணவுக் கழிவு களை அகற்றுவதற்கும், பாதுகாப்புத் தருவதற் காகவும் தினசரி ரூ.10 ஆயிரத்தை சபரிமலை அன்னதான அறக்கட்ட ளைக்கு செலுத்தவேண் டும் என்று தேவஸ்தானம் நிர்பந்திக்கிறது.

சபரிமலையில் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவதற்கான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளும் செயல் படுத்தப்படாமல் உள்ளன. இது குறித்து கேரள மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அளித்தோம். அது, தேசிய குறைதீர்ப்பு அமைப்பான "ஆம்புட்ஸ் மனுக்கு' அனுப்பி வைக் கப்பட்டுள்ளது' என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/79224.html#ixzz2zwfaYDGh

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும்.

ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page-7/79231.html#ixzz2zwh9Plig

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை


(இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் வருடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடி யாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது. அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர்.

அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்ப வர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்கு கள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந் திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது. தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை..

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப் படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார்.

தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhPbwYb

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது. - பக்ஸ்டன்

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhX0aKa

தமிழ் ஓவியா said...

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு: கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது.

அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்: தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத் துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhdtosA