Search This Blog

24.4.14

கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?-பெரியார்சிலப்பதிகாரத்தில், 'கண்ணகி என்ற பெண் மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள் கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றி எரிகிறது!' என்று எழுதியிருப்பதுடன் இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள்!

இன்று எந்த ஒரு பெண்ணாவது - அவள் எவ்வளவு தான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் - இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரி காரியம் நடந்திருக்க முடியுமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் தீய்க்கு ஆணையிடுகிறாள், 'பார்ப்பனர்களை'த் தவிர்த்து, மற்றவர்களை அழித்து விடு என்று! பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுகிறவள், தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்!


அவளது கற்புக்கு மற்றோர் எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது தன் கணவனான கோவலன், மாதவி என்ற ஒரு தாசியோடு கூடிக் குலாவியிருந்த காலத்து அவன் தன்னைப் புறக்கணித்து விட்டு தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வராமலிருந்தும் கூட, அவன் கஷ்டப்படுகிறான் என்றறிந்து, அவனுக்காக வேண்டித் தனது விலையுயர்ந்த ஆபரணங்களையும், சேலைகளையும் மாதவி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் என்பதாகும்.

இத்தகைய முட்டாள்தனமான கற்பு எங்களாவது சிறந்த வீரத் தமிழ்ப் பண்பாகுமா? தமிழ்ப் பண்பு இத்தகைய கற்பையா தமிழ் மக்களுக்குப் போதித்து இருக்கிறது? உண்மை தமிழச்சியானால் அவள் ஒன்று மாதவி வீடேறி அந்தக் கோவலைக் கட்டி இழுத்து வந்திருக்க வேண்டும். அல்லது அவனை அவன் விருப்பப்படியே விட்டு விட்டுத் தான் வேறொரு ஆடவனை மணந்திருக்க வேண்டும். அது தனக்கு விருப்பமில்லையானால் சும்மாவாவது இருக்க வேண்டும். இதை எல்லாம் செய்வதை விட்டு தன் கணவன், மேலும் ஒரு தாசியோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கட்டும் என்று தன் நகையையும், சேலையையும் அந்தத் தாசிக்கு அனுப்பி வைப்பதா தமிழ்ப் பண்பு? இல்லை; இல்லை.

இது பெண் ஆணுக்கு அடிமை என்ற ஆரியக் கருத்தைத் தமிழர்களிடையே புகுத்துவதற்காகத் தமிழன் கையைக் கொண்டே எழுதச் செய்யப்பட்ட ஒரு பித்தலாட்டக் கதையே. இதை நம் பண்டிதர்கள் இன்னும் உணராது அய்ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறுகிறார்களே! இது சரியா?

சிறப்பு வாய்ந்த தமிழ் நூல்கள் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட தமிழர் பண்பை எடுத்துக்காட்டக் கூடிய தனித் தமிழ் நூல்களை எல்லாம் ஓரளவுக்கு இந்துமதக் கடவுளும், பெருமளவுக்கு ஆரிய சூ ழ்ச்சியால், ஆடி ஆற்றுப் பெருக்கின் போது பழம் சுவடிகளுடன் நதிப் பெருக்கில் இடும் மூடப் பழக்கமும் கொள்ளை கொண்டு விட்டன. எஞ்சி நின்ற ஒன்றிரண்டும் ஆரியத்திற்கு எதிர்ப்பாயிருப்பதால் அவற்றிற்கும் மக்களிடையே செல்வாக்கு ஏற்படாமல் செய்யப்பட்டு வருகின்றன.


தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்து விட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி, கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை. ஓர் எடிசன் தோன்றவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?

-------------------------------------தந்தை பெரியார் அவர்கள் 'மொழி' என்னும் பொருள் குறித்தும், "எழுத்து"என்னும் பொருள் குறித்தும் அரசினர் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் 20-ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றிய விரிவுரைகளின் தொகுப்பு.--"விடுதலை", 05.01.1968

36 comments:

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவது அபாயகரமானது! அண்டை நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும்!


இங்கிலாந்தைச் சேர்ந்த 75 பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

இலண்டன், ஏப்.23- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 75 கல்வியாளர்கள், பேராசிரியர்கள் நரேந்திர மோடி இந்தியாவின் பிரத மர் ஆனால் அது இந்தி யாவுக்கு ஆபத்து மட்டு மல்ல - மற்ற நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். இந்தியாவைப் பூர்வீக மாகக் கொண்ட (இங்கி லாந்தில்) வாழ்ந்துவரும் கல்வியாளர்கள், அறிஞர் கள் இந்தியாவில் நடை பெறும் தேர்தல்குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் மோடி அதிகாரத் துக்கு வருவது மிகுந்த அச்சத்துக்கிடமானது என்று கூறுகின்றனர்.

75 பேராசிரியர்களும் கல்வியாளர்களும் மோடி அதிகாரத்துக்கு வரும் எண் ணமே எங்களை அச்சத்தில் மூழ்கடிக்கிறது என்கின் றனர். தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் டுடே என்கிற இதழில் பேராசிரி யர் சேட்டன் பட், கவுதம் அப்பா ஆகியோர் தலை மையில் 75 பேராசிரியர்கள் மற்றும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்க லைக்கழகத்தில் பணிபுரி பவர்கள் ஆகியோர் கூட் டாக வெளியிட்டுள்ள திறந்த மடலில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்து தங்களின் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை அப்படியே லண்டனிலி ருந்து வெளிவரும் தி இண்டிபென்டன்ட் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: இந்தியாவில் அடுத்த அரசைத் தேர்வு செய்யுமிடத்தில் மக்கள் உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மோடியின் தலைமையிலான பாஜக அரசு அமைந்துவிட்டால்

இந்தியாவில் ஜனநாய கம், பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண் பாடுகள் என்று பிரிந்திருந் தாலும் அவற்றின்மீதான சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகள் ஆகி யவை மிகுந்த சவாலுக்கு உள்ளாகும் என்பதை எண்ணி மிகவும் கவலை கொள்கிறோம் என்று கூறி யுள்ளனர்.

மோடியின் எண்ணங் கள் அதிகாரம் பெறுவது நம்மை அச்சத்தில் மூழ் கடிக்கிறது என்கிற தலைப் பிலான அக்கடிதத்தில்,

நரேந்திர மோடி ஹிந்துத் தேசியவாத அமைப்பின் வலையில் உள்ளவர். ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்கள் கடந்த காலங்களில் சிறுபான்மை யருக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டுள்ளன. அண் மையில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக் குதல்களையும் நடத்தி உள் ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத் தில் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நடிகர் அனீஷ் கபூர் மற்றும் பலரும் தி கார்டி யன் இதழில் எழுதியதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாக இன்டிபென் டண்ட் இதழில், குஜராத் தில் ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற வன்முறை கள், பல்வேறு சம்பவங் களுக்கு மோடிதான் முழுப் பொறுப்பாளி என்று பல்வேறு தரப்பினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்கள் வெளியாயின. மேலும், அவற்றுக்கு சாட்சி யாக தற்போதைய மூத்த பாஜக தலைவர்களின் பேச்சுக்களும் அமைந்துள் ளன. இந்த முறையிலான அரசு நிச்சயமாக ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்தி விடும். பொதுத்துறை நிறுவனங்கள் அதோ கதி!


அதோடு, மோடி-பாஜக வின் மாதிரி பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய வணிகர்களுடன் தொடர் புள்ளதே. பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்த்து, ஏழைமக்களுக்கு எதிராக வும், அவர்களை வாட்டி வதைப்பதற்கு ஒப்பாக வும், செல்வத்தையும், அதி காரத்தையும் பெரும் பணக்காரர்களிடம் ஒப் படைப்பதே ஆகும். மோடியின் வெற்றி என்பது நீதியின்மீது, அதன் கொள்கைகள்மீது விடுக் கப்படும் சவாலாகும். குறிப்பாக, மகளிர்மீதான தடைகள், கண்காணிப்பு கள் ஏற்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்தியாவில் மட்டு மின்றி அண்டை நாடுகளி லும் அப்பதற்றம் ஏற் பட்டுவிடும் அபாயம் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

பிரிட்டீஷ் குறிப்பிடத் தக்க பல்கலைக்கழக மாகிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவரான பேரா சிரியர் நந்தினி கூப்து மற்றும் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் பணிபு ரிபவராகிய ஜோயா சாட் டர்ஜி ஆகியோர் குறிப் பிட்ட தகவல்களை கல்வி யாளர்கள் கடிதத்தில் மீண் டும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் இதழ்களி லும், பிற ஊடகங்களிலும் அதிக இடத்தை இக்கடி தம் பிடித்துள்ளது. இக் கடி தத்தில் குறிப்பிடப் பிட்டுள்ள படி,

13ஆண்டுகள் மேற்கு மாநிலமான குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த மோடி அரசின் அயோக் கியத்தனத்துக்கு ஆதார மாக கோத்ரா கலவரம் உள்ளது. 2002இல் குஜ ராத்தில் எல்லைகடந்த வன் முறையாக ஹிந்துக்களால் கலவரம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கிலானவர்கள் குறிப் பாக முசுலீம்கள் இறந் தனர். இந்த வன்முறை வெறியாட்டம் மோடியின் ஆட்சியில்தான் நடைபெற் றது. இந்த வன்முறையில் மோடியின் பங்கு குறித்து, வன்முறை சம்பவங் களுக்கு அனுமதியும், அவற்றை வேகப்படுத்தி யதுமான மோடியின் பங்கு கள் குறித்து மூத்த அதிகாரி கள், காவல்துறை அதிகாரி கள் ஒப்புதல் வாக் குமூலங் களில் தெரிவித்துள் ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79127.html#ixzz2zlOvCOSO

தமிழ் ஓவியா said...


கரணம் தப்பினால் மரணம்!


மிகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதைத் தவறவிட்டால் அடுத்த அய்ந்தாண்டுகள் மட்டுமல்ல - அதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் எதிர் காலத்தை இருளாக ஆக்கக் கூடியவை!

பி.ஜே.பி. என்பது பத்தோடு பதினொன்று என்று கருதப்படக் கூடிய ஓர் அரசியல் கட்சியல்ல! சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வருணாசிரம வெறி கொண்ட ஹிந்துத்துவா அமைப்பு.

இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும், ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எவ்வளவுத் துல்லியமானது என்பது எளிதில் விளங்கும்.
நியாயமாக இந்தத் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் கூட பி.ஜே.பி. தேர்தலில் நிற்க சட்டப்படி தகுதி உடையதல்ல என்று அறிவித்திட வாய்ப்புண்டு. தேர்தல் ஆணையம் அந்தக் கடமையை செய்யவில்லை.

எந்த அளவுக்கு இவர்கள் சென்றுள்ளார்கள்? பீகார் மாநில பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், மக்களவைத் தேர்தல் வேட்பாளரும், பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் என்பவர் என்ன கூறினார்? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும் என்று சொல்லுகிறார்.

மிகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி, அது அடங்குவதற்குள், இந்தத் தேர்தலில் முன்னணிப் படையாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய அங்கமான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியா, மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் என்ன பேசி இருக்கிறார்?

ஹிந்துக்கள் பெரும்பான்மையாகக் குடியிருக் கும் இடங்களில் சிறுபான்மை மக்களான முஸ்லீம் கள் வீடுகள் வாங்கினால் அவர்களை விரட்டி யடியுங்கள்; கல்லால் தாக்குங்கள்; டயரைக் கொளுத்தி அவர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள்மீது எறியுங்கள் என்று பச்சையாக பாசீச வெறித்தனத்தோடு பேசி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாகவே இவர்கள் இப்படி வெறியாட்டம் போடுகின்றனர் என்றால், தப்பித் தவறி இந்தக் கூட்டம் ஆட்சி அதிகாரத்துக்கு வருமேயானால் நாடே கலவரப் பூமியாகி விடும். மனித ரத்த வெள்ளம் நாளும் ஓடும் அபாய நிலைதான் ஏற்படும். இவற்றையெல்லாம் நரேந்திரமோடி கண்டிப்பதாகச் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

மோடியைப்பற்றித் தெரிந்தவர்கள் மோடியின் இந்த மறுப்பை ஏற்க மாட்டார்கள்.

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்டதை - நாய்க் குட்டி ஒன்று காரில் அடிபடுவதால் ஏற்படும் அனுதாபத்தோடு ஒப்பிட்டுப் பேசியவர் தானே மோடி!

2007இல் தெகல்கா எனும் புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் நேரில்கண்டு அவற்றைப் பதிவும் செய்தது. அப்படி பதிவு செய்யப்பட்டவர்களுள் ஒருவர் குஜராத் மாநில அரசின் சிறப்பு வழக்குரைஞர் அரவிந்த்பாண்டியா; அவர் மிகவும் வெளிப்படை யாகவே கூறியதை தெகல்கா வெளிப்படுத்தியதே!

மோடி முதல் அமைச்சராக இருந்திருக்கா விட்டால், அவர் வெடி குண்டையும் வீசியிருப் பார்! என்று கூறியிருக்கிறார் என்றால் மோடி, பிரவீன் தொகாடியாவுக்கு எந்த வகையிலும் ஹிந்துத்துவா வெறித்தனத்தில் குறைந்தவர் அல்லர் என்பது விளங்குமே! இவற்றின் அடிப்படையில் பா.ஜ.க.வையும் அதனோடு கூட்டணி வைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் மிக மோசமான தோல்விக்கு ஆளாக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த அணியை மட்டுமல்ல; நேரடியாக இந்த அணியோடு கூட்டு இல்லையென்றாலும், அடிப்படையில் பி.ஜே.பி.யின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டி ருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. வையும் தோற்கடித்துக் காட்ட வேண்டியது மிகவும் அவசிய மாகும்.

இதற்கு மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்கள் உண்டு; இதுவும் ஹிந்துத்துவா உணர்வைக் கொண்டது என்பது ஒன்று. பிஜேபி ஆளும் மாநிலத்தில்கூட நிறைவேற்றப்படாத மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் இந்த ஜெயலலிதாதான். ராமன் பெயரை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியிருப்பவரும் இவரே!

இரண்டாவது காரணம் ஒன்றும் முக்கியமாக இருக்கிறது மதங்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாத தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்டு, அதே நேரத்தில் அத்தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தும் துரோகத்தனத்திற்குக் கண்டிப்பாகப் பாடம் கற்பித்தாக வேண்டும்.

மூன்றாவது இந்த அம்மையாரின் மூன்றாண்டு ஆட்சி என்பது எந்தவித வளர்ச்சிக்கும் இடம் இல்லாதது - சட்டம் ஒழுங்கு மிகக் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதற்கும் சேர்த்து இந்தத் தேர்தலில் தண்டனை கொடுத்தாக வேண்டும். தமிழக வாக்காளர் களே கரணம் தப்பினால் மரணம் என்பதை மறவாதீர்!

விழிப்புணர்வு கொள்க! ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வென்றிட ஆவன செய்க!

Read more: http://viduthalai.in/page-2/79120.html#ixzz2zlQFYCWi

தமிழ் ஓவியா said...


மோடி பரிவாரத்தை புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் நம்ப மாட்டார்கள்

இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் எதைக் கணக்கில் கொண்டு வாக்களிப் பார்கள்? இது பெரிய கேள்விக்குறியாக அனைவருக்கும் உள்ளது. பொதுவாக இன்றைய புதிய தலைமுறை, சமூகப் பிரச் சினைகளில் அதிக அக்கறை காட்டவில் லையோ என்கிற ஒரு கவலை, பலருக்கும் இருக்கிறது. இதை மனதில் வைத்துதான், மாற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தி, அந்த மாற்றத்தை உருவாக்கிட மோடி சர்க்காருக்கு ஓட்டு போடுங்கள் என்கிற வாச கத்தை முன் வைக்கிறது, பாஜக. ஆனால், உண்மையிலேயே, மாற்றத்தை விரும்புகிற வர்களா பாஜகவினரும் அவர்களது சங் பரிவாரமும்?

இந்தியா என்கிற இந்த நாட்டில், பல மொழிகள், இனங்கள், மதங்கள் உள்ள நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக் கப்பட்டு, இயங்கிக்கொண்டிருக்கும் சூழ் நிலையைத்தான் unity in diversity, வேற்றுமை யில் ஒற்றுமை என நம்மால் மட்டுமன்றி, உலகில் பல நாடுகளிலும் பாராட்டும் நிலை உள்ளது. ஆனால், ஒரே மொழி, அது சமஸ் கிருதம் தான் என ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது. அதனால் தான்,இந்தியாவில், ஒரு ஆயிரம் பேர் கூட பேசிக்கொள்ளாத சமஸ்கிருததிற்கு, செம்மொழி அந்தஸ்து தந்தது பாஜக ஆட்சி. அனைத்து மொழிகளையும் அழித்து, சமஸ்கிருதத்தை பொது மொழியாக ஆக்கும் மாற்றம் தான், நாம் விரும்பும் மாற்றமா?

1999-ஆம் ஆண்டு, ஒரிசா மாநிலத்தில் மனோகர்பூர் கிராமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ், அவரது இரண்டு குழந்தைகள் திமோதி, வயது 6, பிலிப் வயது 10, மூன்று பேரும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்களே, பஜ்ரங்தள் அமைப் பின் தாராசிங் கூட்டத்தால். இது தான், நாம் விரும்பும் மாற்றமா?

2002-ல், கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து, ஏறத்தாழ 2000 மக்கள் சிறு பான்மை மக்கள், குறி வைத்து கொல்லப் பட்டும், தாக்கப்பட்டும், அதற்கு மோடியின் அரசில் இருந்த அமைச்சர்கள் துணை நின்றதும், அவரது அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயா கோட்னானி, 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இப்போது சிறையில் உள்ள நிலையில், அந்த கொடூர நிகழ்வுக்கு, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மோடி கூறுகிறார். காரின் முன்னால் அடிபடும் நாய்குட்டி மீது அனு தாபம் நான் காட்டுவது போல், இந்த கொலை களுக்கும் நான் அனுதாபம் கொள்கிறேன் என்று சொல்லும் ஒரு மன நிலையைக் கொண்டவர்தான், நாம் விரும்பும் மாற்றத் திற்கான தலைவரா?

இப்போது, மோடி ஆட்சி செய்யும் குஜ ராத்தில், மோடியின் பாஜகவோடு தொடர்பில் உள்ள விஎச்பி அமைப்பின் தலைவர் தொகாடியா, முஸ்லீம்கள் இந்து மக்கள் வாழும் பகுதியில் இடம் அல்லது வீடு வாங்கினால், அவர்களை தூக்கி எறியுங்கள்; கல்லால் அடியுங்கள் என வெளிப்படையாக வன்முறையைத் தூண்டிவிடுகிறார். நியாய மான அரசாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்நேரம், தொகாடியா கைது செய்யப் பட்டிருக்க வேண்டும்?


தமிழ் ஓவியா said...

ஆனால், மோடி யின் ஆட்சியில் அப்படி எதிர்பார்க்க முடியுமா? மோடி சொல்கிறார், தொகா டியா போன்றோர் செய்யும் அற்ப விஷ யங்கள், தன்னுடைய தேர்தல் பணி சிந்தனையை சிதற வைக்கின்றன என்கிறார். அவ்வளவு தான். ஆக, ஒரு சமுதாயத்தை, ஒரு அமைப்பு, பாபர் மசூதி இடிப்பில் முதன் மையாக திகழ்ந்த அமைப்பு, கலவர எண் ணத்தோடும், வாங்கிய வீட்டின்முன் நின்று, வீட்டை காலி செய்யவில்லை என்றால், தூக்கி எறியுங்கள் என சொல்வது எந்த தைரியத் தில், அங்கே, மோடி ஆட்சி நடை பெறுகிறது என்கிற தைரியத்தில்தானே. இந்த நிலை, எல்லா இடங்களுக்கும், மாநிலங்களுக்கும், வரவேண்டும் என விஎச்பி ஆசைப்படுகிறது, பாஜக துணை யோடு. இத்தகைய மாற் றத்தைத்தான் நாம் விரும்புகிறோமா?

இந்திய நாட்டில் பல்வேறு பிரச் சினைகள் இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து ஒரு ஜனநாயக ஆட்சியை மக்கள் ஆதரித்து வருகின்றனர். இடையே, அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டாலும், அதனை மக்கள், ஜனநாயக வழியில் வென்று, மீண் டும், ஜனநாயக பாதைக்கு அந்த கட்சியை கொண்டு வந்த பெருமை இந்த நாட்டு மக்களுக்கு உண்டு. ஆனால், மோடி தலை மையில் வரும் ஆட்சி, அத்தகைய ஜனநாயக மாண்பை காப்பாற்றும் ஆட்சியா? குஜராத் மாநிலத்தில், சட்ட மன்றம், தமிழ் நாட்டு சட்ட மன்றத்தைவிட கேவலமாக நடைபெறுகிறது. தனக்கு எதிராக ஒரு பத்திரிகையும் எழுத முடியாது. நீதி மன்ற ஆணைகளுக்கு ஒரு மதிப்பும் கிடையாது. அதனால் தான், பீகாரில் ஒரு பாஜக தலைவர், மோடியின் ஆட்சி வந்ததும், அவரை எதிர்த்து நடந்து கொண் டவர்கள் அனைவரும், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என சொல்ல முடிகிறது. இதற்கு ஏதேனும் மோடி தரப்பில் பதில் சொல்லப்பட்டதா? ஜன நாயகம் என்பது, பல முரண்பட்ட கருத்துகளையும் அனுமதிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த ஜனநாயக உணர்வை மதிக்காத, சர்வாதிகார மனப் பான்மையுடைய மோடியும், அவரது கட்சி யும் தான், நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டுவரப்போகிறதா?

சமூக நீதி என்பது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரை யில் உள்ள ஓர் முதன்மைக் கோட்பாடு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இழிவு படுத்தப் பட்ட மக்களுக்கான உரிமையாக சமூக நீதி கோட்பாடு கருதப்பட்ட தால்தான், அரசியல் அமைப்பு சட்டத்தில் அது ஓர் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டது. அதில் மோடிக் கும் பாஜகவும் என்ன நிலைப்பாடு? இட ஒதுக்கீட்டை ஒழித்து, அனைவரும் சமம் என ஓர் ஏமாற்று கோஷத்தை முன் வைத்து, மீண்டும், பார்ப்பன மேலாண்மையை கொண்டு வரும் திட்டத்தை, தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது. பெரியாரும், அம்பேத்கரும், ஜோதிபாக் பூலேயும், போராடி பெற்ற உரிமைகளை ஒழித்துக் கட்டும் மோடி திட்டத்தைத்தான், நாம் மாற்றம் என கொள்ளப்போகிறோமா?

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு, தமிழ் நாட்டில், கிராமத்தில் எளிய குடும்பத்தில், பிறந்து, இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார்களே, நமது பிள்ளைகள்; பல்வேறு மாநிலங்களில் ஆட்சியர்களாக, காவல் துறை அதிகாரிகளாக என பல பொறுப்புகளை வகிக்கிறார்களே, இவை யெல்லாம், தமிழ் நாட்டில் நடைபெற்ற திரா விடர் இயக்க போராட்டத்தின், ஆட்சியின் விளை பாடுகள் இல்லையா? இதனை மாற்றத் துடிக்கும் கள்வர்களின் மாற்றம் தான், நாம் விரும்பும் மாற்றமா?

குஜராத் அதிர்கிறது (VIBRANT GUJARAT என்ற அறிவிப்போடு, மோடி குஜராத்தில் பன்னாட்டு முதலாளிகளை அழைத்தாரே? அதில் எத்தகைய மோசடி அறிவிப்புகள்? 2011-இல் நடைபெற்ற அந்த மாநாட்டில், 20,83,047 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, அதற்கான முதலீடு குஜராத்திற்கு வருகிறது என பக்கம் பக்கமாக அறிவிப்பு வந்ததே. அது என்னவாயிற்று? ரூ.29,813 கோடி அளவில் முதலீடு வந்தது. இதைத் தான் மோடியின் நிர்வாக திறமை, குஜராத் வளர்ச்சி என்கிறார்கள். இதைவிட அதிகமாக தமிழ் நாட்டில் முதலீடு வந்துள்ளது. ஆனால், ஒவ் வொரு ஊராகச் சென்று, நான் பிரதமரான உடன், அடுத்த நாளே, பாலாறும் தேனாறும் ஓடும் என கதை விடும் ஒருவரின் ஏமாற் றைத் தான், நாம் மாற்றம் என நம்பி வாக்களிக்க வேண்டுமா?

நம்முடைய இளைஞர்கள், முதல் தலை முறை வாக்காளர்கள், விவரம் தெரிந்தவர்கள். கைப்பிடியில் உலகத்தை வைத்துக் கொண் டுள்ளார்கள். யார் எதைச் சொன்னாலும், அடுத்த நொடியில், சொன்னவர் கூறும் தகவல் சரியா, தவறா என ஆதாரத்துடன் தெரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள். இப்போது ஜெயலலிதா சொல்கிறாரே; மோடியின் குஜராத்தைவிட, தமிழ் நாடு முன்னேறி இருக்கிறது என்கிறாரே; அவர் கூறும் புள்ளி விவரங்கள் எல்லாம் 2011-ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட வளர்ச்சி என்ப தும், 2006 முதல் 2011 வரை திமுகவின் மைனாரிட்டி ஆட்சியில் தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது என்பதும் இளைஞர்களால் கண்டுபிடிக்க முடியாதா? அந்த புள்ளி விவரம் வெளியிட்ட துறையில் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது; தமிழ் நாட்டில் உள்ள வளர்ச்சி யாருடைய காலத்தில் நடந்தது; அரசின் புள்ளி விவரங்கள் எந்த ஆண்டில் எந்த அளவுக்கு உயர்ந் துள்ளது அல்லது சரிந்துள்ளது என்பதையும், உடனுக்குடன் நமது இளைஞர்கள் சரியாக தெரிந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு, முக நூலில் வரும் பதிவுகள் சான்றாக பகர்கின்றன. நேற்று, ஆங்கில ஊடகத்தில், லயோலா கல்லூரி மாணவர்கள் பேசியது, ஊழலைவிட, மதவாதம்தான் மிக ஆபத்தானது என சொன்னதும், இளைஞர்கள், தெளிவாக இருக்கிறார்கள் என்கிற ஓர் எண்ணத்தை உருவாக்குகிறது. இது வாக்காக மாறினால், ஜன நாயகத்திற்கு நல்லது. பொய் எந்த அளவுக்கு பகட்டாக உள்ளதோ அந்த அளவுக்கு மக்களால் நம்பப்படும் என்றான் ஹிட்லர்; அத்தகைய பகட்டை, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் துணையோடு, பல்லாயிரக்கணாக்கான கோடி செலவில் விளம்பரம் மூலம் தவறான அரசியலை மதவாத சக்திகள் துணையோடு முதன்மைப் படுத்தும், மோடி பரிவாரத்தை புதிய வாக் காளர்கள், இளைஞர்கள் நம்ப மாட்டார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/79124.html#ixzz2zlQSkVPO

தமிழ் ஓவியா said...


இன்று (23.4.2014) உலக புத்தக நாள்


சென்னை கடற்கரையில் வாசிக்க வாங்க நடைப்பயணம் சென்னை, ஏப். 23- உலகப்புத்தக நாளான இன்று (23.4.2014) காலை சென்னை மெரினா கடற்கரையில், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக வாசிக்க வாங்க! என்ற வாசகத்துடன் பதாகைகளை ஏற்றி குழந்தைகள், மாணவர்கள், வாச கர்கள், பங்கேற்ற புத்தக வாசிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான இன்று ஏப்ரல் 23, யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது.

உலகப்புத்தக நாளைக் கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் கடந்த 18-ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் 27-ஆம் தேதி வரை சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாசிக்க வாங்க எனும் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் இன்று (23.4.2014) உலக புத்தக நாளாக கொண்டாடும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு நடைபயணம் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது. குழந்தைகள், மாணவர்கள், வாசகர் கள் பெருமளவில் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் மு.தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3230 மாவட்ட ஆளுநர் ஸிலீ ஏ.பி.கண்ணா முன்னிலை வகித்தார். இந்நடை பயணத்தில் பேராசிரியர் இராஜசேகர் புத்தக வாசிப்பு குறித்த அரிய தகவல்களை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தார்.

இந்நடைப் பயணத்தின் முடிவில் இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், காலைச் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. புத்தகம் வாசிப்பு குறித்த அறிஞர்களின் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உலகப்புத்தக நாள் பெருவிழா வையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், ரோட்டரி இன்டர் நேஷனலும் சென்னை புத்தகச் சங்கமத்துடன் இணைந்து நடத்தின.

வாசிக்க வாங்க! என்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளரு மான வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித்தலைவர் த.வீரசேகரன்.

சென்னை புத்தக சங்கமத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விழிகள் பதிப்பகம் தி.வேணு கோபால், எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண் ணன், மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் கே.எஸ்.புகழேந்தி, திரா விடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தைச் சேர்ந்த இரா.தமிழ்ச் செல்வன், கோவி.கோபால், ராமு.

சென்னை புத்தக சங்கமத்தின் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், சி.வெற்றிச் செல்வி, பெரியார் மாணாக்கன், புரசை அன்புச் செல்வன், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகள், ரோட்டிராக்ட் மாணவர்கள், ஆனந்தன், சுரேஷ், அம்பேத்கர்,வை.கலையரசன், கலைமணி, விமல்ராஜ், தமிழ்க்குடிமகன், லோகேஷ்குமார், சக்திவேல், அருண், சங்கர் மற்றும் திரளான பொது மக்களும் பங்கேற்று சிறப்பித் தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் ஏப்.27ஆம் தேதி வரை நடைபெறும் சென்னை புத்தகச் சங்கம நுழைவுச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/79147.html#ixzz2zlQqcvM4

தமிழ் ஓவியா said...

பெரியாரை தாயாகப் பார்க்கிறேன் - அறிவுமதி


சென்னை புத்தகச் சங்கமத்தில் வாழ்வியலை நகைச்சுவையால் சிந்திக்க வைத்த நாகரிக கோமாளிகள் நையாண்டி நிகழ்ச்சி

பெரியாரை தாயாகப் பார்க்கிறேன் - அறிவுமதி

தங்கத்தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றிய பாவலர் அறிவுமதி, ஓவியர் டிராஸ்கி மருது ஆகியோருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி சிறப்பு செய்தார்.

சென்னை, ஏப்.23- சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை புத்தகச்சங்கமத்தின் புத்தககாட்சி அய்ந்தாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று (22.4.2014) கொளுத்தும் கோடை வெயிலிலும் நிழல் தரும் அறிவுச் சோலையாக இனிதே துவங்கியது. சென்னை புத்தகச்சங்கமத்தை பார்வையிட்ட சென்னை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக துறை இயக்குநர் எஸ்.ஆர். சீனிவாசன் மற்றும் பேராசிரியர் பெரு. மதியழகன் ஆகியோர் புத்தகச்சங்கமம் பற்றி கூறியதாவது எங்கள் துறை மாணவர்களுக்கு தேவையான கால்நடை மருத்துவம் பற்றிய புதிய பாடத்திட்டத்தின் கீழ் வரும் பல நூல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவி களுக்கு தேவையான சுமார் ரூ.15000 மதிப்புள்ள நூல்களை வாங்கி யுள்ளோம். அரங்குகள் மிகவும் சிறப்பான வசதிகளுடன் அனைத்து தேவை களும் எளிதாக கிடைக்கச் செய்யும் வகையில் உள்ளது. நல்ல வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.புத்தகக் கொடை, ஏ.டி.எம் வசதி, மற்றும் இரத்த வங்கி இவை எல்லாமே புதிய வசதிகள் ஆகும். என்று சென்னை புத்தகச்சங்கமம் பற்றிய தங்கள் கருத்தைக் கூறினார்கள். பத்திரிகையாளர் மா. திருமாவேலன் கூறியதாவது:- புத்தகச் சங்கமம் நல்லதோர் முயற்சி இதைத் தொடர்ந்து செய்யவேண்டும். சென்ற முறை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற போது கலந்து கொண்டேன். இந்த முறை பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும். நல்ல முயற்சி தொடர்ந்து செய்யுங்கள். இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று தன் உள்ளத்தில் உறைந்தவற்றை வெளிப்படுத்தினார். சென்ற புத்தகச்சங்கமம் நிகழ்ச்சியில் நடந்த பயிற்சிப் பட்டறையில் அயல் நாட்டு புத்தக கண்காட்சிகள் பற்றிய சிறப்பு வகுப்பை நடத்திய ஃப்ராங்ப்ரூட்- இண்டோ-ஜெர்மன் பதிப்பகத்தின் இந்திய முகவர் ஷப்னம் சென் னைப்புத்தகச்சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சியையும் பார்வையிட்டார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான புத்தக அரங்குகள் மற்றும் இதர சிறப்புகள் மகிச்சியளிப்பதாக கூறினார். மேலும் இண்டோ ஜெர்மன் புத்தக பதிப்பகம் சார்பில் வெளிவரும் இதழில் சென்ற ஆண்டு பெரியார் திடலில் நடந்த புத்தகச்சங்கமம் பற்றி சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். இம்முறையும் அதே போல் சிறப்பு கட்டுரை ஒன்றை விரிவாக எழுதவிருக்கிறேன் என்றார். புத்தகச்சங்கமத்தை இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ், ஒளிவண் ணன், வேணுகோபால், புகழேந்தி மற்றும் புத்தகச்சங்கம மேலாளர் பா.சீதாராமன் ஆகியோருக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...


புதுகை பூபாளம் குழுவினர் வழங்கிய நாகரிகக் கோமாளிகள் நையாண்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்கள் பிரகதீசுவரன், செந்தில், இசை - குமார், தவில் - செல்வக்குமார்.

மாலைப் பொழுதில் மனதிற்கு மகிழ்வூட்டும் சிறப்பு நிகழ்ச்சியாக புதுகைப்பூபாளம் குழுவினரின் நாகரிகக் கோமாளிகள் என்னும் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவுக்கு விருந்தாகவும் சிந்தனையைத் தெளிவூட்டுவதாக வும் துவக்கத்தில் இருந்து இறுதிவரை காண்போர் அனை வரையும் சிரிக்கவைத்ததுடன் இன்றைய வாழ்வியலை மிக அழகாக நம் கண்முன்னே காட்சிப்படுத்தியது. ஓவியர் ட்ராட்ஸ்கி மருது இதனைத்தொடர்ந்து தங்கத்தமிழ் என்ற தலைப்பில் உணர்வுரையை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் தமிழ் படிமங்களின் மூலத்தனித்தன்மை இல்லாதது போல் எனக்குத்தெரிந்தது. சங்கத்தமிழையும் சங்க இலக்கியத்தை யும் தமிழோடு இணைத்தது எனக்கு கிடைத்த நல்வாய்ப் பாகும், என்று மிகச்சிறப்பானதொரு உரையை வழங்கினார். பெரியாரை நான் தாயாகப் பார்க்கிறேன் பாவலர் அறிவுமதி தனது உரையில் கூறியதாவது:- என் தாய் இருக்கும் வரை ஒரு கைநாட்டுக்காரியாகவே இருந்து மறைந்தார். அந்த நிலையை மாற்றி எல்லோரையும் கல்வி கற்கவைத்த தந்தைப்பெரியாரை ஆண் தாயாகவே பார்க்கிறேன். இன்றைக்கு தமிழையும் தமிழர்களையும் எப்படியெல்லாம் இடறி விடலாம் என்று நினைக்கூடிய எழுத்தாளர்களும் பெருகி வருகிறார்கள். நான் தங்கத்தமிழில் எழுதும் போது ஒரு பாணன் நடந்து வருகிறான். ஒரு உழவன் நிலத்தில் ஏர் உழுகிறான் என்று தான் எழுதியிருந்தேன். ஆனால் அண்ணன் மருது அவர்கள் தன் ஓவிய திறமையால் பாணன் சேற்றில் கால் வைத்து யாழ் வாசிப்பது போல தீட்டியிருந்தார். அன்றைய காலகட்டத்தில் நிலத்தில் களை எடுக்கிற பெண்களின் இசையாக பறையிசை இருந்து வந்திருக்கிறது, இன்றைக்கு அதை ஒரு குறிப்பிட்ட ஜாதி வரையறைக்குள் திணித்துவிட்டார்கள், பறையிசையை பயன்படுத்தி உழவர்கள் வயல் வெளி களில் நாங்கள் நாளை உழவுக்கு தயாராகி விட்டோம் ஆகவே பறவைகளே! உங்கள் கூடுகளில் உள்ள குஞ்சுகளை பாது காப்பான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள் என்று உணர்த்தும் விதமாக பறை இசைக்கப்பட்டிருந்தது.

தற்போதைய காடுகள் அழிக்கப்படுவதால் மயிலினங்கள் கரும்புத்தோட்டத்தை காடுகளாக நினைத்து அங்கு முட்டைகளிட்டுவிடுகின்றன. ஆனால் கரும்பு அறுவடை ஆனபின் அந்த கரும்பு சோலைகள் எரிக்கப் படுகிறது. அப்போது முட்டைகளும் குஞ்சுகளும் சேர்ந்து அவிந்து அழிந்து அந்த மயிலினமே அருகி விட்டன. சங்ககால தமிழ் இலக்கியத்திலேயே ஒரு புலவன் கடவுள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளான். எந்த இலக்கியங்களும் மறுவாசிப்பு செய்யப்படவில்லை, மறுவாசிப்பு செய்யப் படாத எந்த இலக்கியங்களும் முழுமையடையாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று அன்று கணியன் பூங்குன்றன் கூறியதை இன்று தந்தை பெரியார், மார்க்ஸ், லெனின் நமக்குள் விதைத்து விட்டுச்சென்றிருக்கிறார்கள். நான் தந்தை பெரியார் பாசறையில் இருந்து வந்தவன்.

ஒரு திரைப்பட இயக்குநராக ஒளிப்பதிவாளராக சிறந்து விளங்கவேண்டுமென்றால், கண்டிப்பாக சங்க இலக்கி யங்களை படிக்கவேண்டும். புதிய புதிய யுக்திகளை தாங்கிய தாய்மடிதான் சங்கத்தமிழ் அது தங்கத்தமிழ் என தனது உரையில் சங்ககால தமிழரின் வாழ்வியலின் சிறப்பை அழகுற எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சால்வை அணிவித்து ட்ராஸ்ட்கி மருது மற்றும் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு இயக்க நூல்களை வழங்கி சிறப்பு செய்தார். நாகரிக கோமாளி நையாண்டி நிகழ்ச்சியை சிறப்புற நடத் திய புதுகை பூபாளம் குழுவினரான செந்தில், பிரகதீசுவரன், இசை-குமார், தவில்-செல்வக்குமார் ஆகியோர்களுக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து நூல்கள் வழங்கி சிறப்பு செய்தார்.

புத்தகச்சங்கமத்தின் நேற்றைய இறுதி நிகழ்வான சிறப்பு குலுக்களில் சென்னை அகரத்தைச்சேர்ந்த கே.தினேஷ் குமார் என்பவர் திறன்பேசி (டேப்லெட்) யை பரிசாக வென்றார். புத்தக கண்காட்சிக்கு திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான ராஜேஷ் அவர்களும் வேளாண் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்களும்ஏராளமான பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/79156.html#ixzz2zlR1L2E6

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞரின் நன்றியும் - பாராட்டும்!


சென்னை, ஏப்.23- தேர்தல் பரப்புரைகளை சிறப் பாக செய்த பெருமக்களுக்கு நன்றியையும் பாராட் டுதலையும் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இதுகுறித்து இன்று (23.4.2014) முரசொலியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது:

நாளை தமிழகத்திலே நாடாளுமன்றப் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, உழைத்த உழைப்புக்கான அறுவடையை காணக்கூடிய நாள். நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாகப் பிரச்சாரம் செய்வது முடிந்துவிட்டது.

நமது கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்குக் காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறோம். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் 90 வயதைக் கடந்தும் ஈடு பட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந் தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டி யிருந்தன.

கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழகம் முழுவ திலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனி லேயே பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தலில் அவருடைய பிரச்சாரம்பற்றி பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை.

கழக ஆட்சியின்போது தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள், சாதனைகள்பற்றியும்; அ.தி.மு.க. ஆட்சி யின் நிர்வாக அலங்கோலங்கள், அவலங்கள் பற்றியும், ஒவ்வொரு கூட்டத்திலும் திரண்டு வந்த மக்களிடையே எளிதில் புரியும் வண்ணம் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் விளக்கிச் சொன் னதை நீயே நேரிலும் கண்டிருக்கிறாய்; கேட்டி ருக்கிறாய்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்வி களுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாக வும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.

அடுத்து கழகத்தின் முன்னணித் தலைவர்கள், கலையுலகத்தினர், கழகச் சொற்பொழிவாளர்கள், பல் வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், துணைப் பொதுச்செயலாளர்களான சகோதரி சற்குண பாண்டியன், வி.பி. துரைசாமி மற்றும் கவிஞர் கனிமொழி, ரகுமான்கான், திருச்சி சிவா, பேராயர் எஸ்றா சற்குணம், வாகை சந்திரசேகர், குஷ்பூ சுந்தர், கம்பம் செல்வேந்திரன், பேராசிரியர் சபாபதி மோகன், நூர்ஜகான் பேகம், சங்கரி நாராயணன், புலவர் இந்திரகுமாரி, புதுக்கோட்டை விஜயா, தஞ்சை கூத்தரசன், வி.பி.ராஜன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, திண்டுக்கல் லியோனி, குமரிமுத்து, வாசு விக்ரம், இனிகோ இருதயராஜ், மனுஷ்யபுத்திரன் மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய தலைவர் கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

முக்கியமாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நாள் கூட பாக்கியில்லாமல், தேர்தல் பயணத் தில் ஈடுபட்டு, கழகக் கூட்டணிக்கு வாக் களிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் பூர்வமாக விளக்கிப் பேசியிருக்கிறார். துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னுடன் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார்.

அவர்களுக்கெல்லாம் கழகத்தின் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

முரசொலி , 23.4.2014

Read more: http://viduthalai.in/page-5/79113.html#ixzz2zlRhd578

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சி - மோடி கூறுவது உண்மையா?

மோடி, தான் ஏதோ இந்தியாவையே காப்பாற்ற வந்த அவதார நாயகன் போலப் பேசுகிறார். மத வாதி அல்லவா? தன்னு டைய, ஆர்.எஸ்.எஸ். மற் றும் இந்துத்துவா பூர்வீகத் திலிருந்து மோடியால் வெளியே வரமுடியவில்லை. 2002 இல் - தான் முதல்வராக வந்த பின்தான் குஜராத் வளரத் தொடங்கியது எனப் பறைசாற்றிக் கொள்கிறார், மோடி.

குஜராத்தைப்போலவே இந்தியா வையும் வளர வைப்பேன் என மார் தட்டிக் கொள்கிறார். அதனால் அவ ரைப் பிரதமராக்க வேண்டு மென மேடைதோறும் முழங்கி வருகிறார். உண்மையிலேயே குஜ ராத் வளர்ந்திருக்கிறதா என்று ஆராயவேண்டும். மோடியின் மேடைப் பேச்சைக் கேட்டு, 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டை அவர் கையில் கொடுப்பது விவேகமாகாது.

குஜராத்தில் என்ன நடந் திருக்கிறது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் :

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரக் கம் பெனிகளுள் ஒன்றான டாட்டா நிறுவன-நானோ கார் தொழிற்சாலைக்கு இடம் தருவதற்காக - ஏழை எளிய விவசாயிகளின் நிலங் கள், மிகக் குறைந்த விலைக் குக் கையகப்படுத்தப்பட்டி ருக்கிறது.

இதனால் அந்த ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த தோடு மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலையைப் போன்று இன்னும் சில பணக்காரக் கம்பெனிகள் குஜராத்தில் காலூன்றியி ருக்கின்றன.

இவற்றின் பள பளப்பான கட்டடங்களைப் பார்த்து குஜராத் வளர்ந்து விட்டதாகச் சொல்வது என்ன நியாயம்? நானோ கார் வாங்கும் அள வுக்கு குஜராத் மக்கள் செல்வச் செழிப் புப் பெற்றுவிட்டார் களா? சைக்கிள்கூட வாங்க வழியில்லாத ஏழை விவசாயி களும்.

நகரத் தொழிலாளர் களும் இன்னும் லட்சக் கணக்கில் இருக்கிறார் கள் என்பதை - மோடி மறுக்க முடியுமா? அடுத்து, குஜராத்தில் இன்றியமையாப் பண்டங் களின் விலைவாசி எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

எல்லோரும் அருந்தும் தேநீரை எடுத் துக் கொள்வோம் சென்னையில் பெரும்பாலான தேநீர்க் கடைகளில், பாமர மக்கள் அருந்தும் தேநீர் , ஒரு கப், சராசரியாக ரூபாய் 7-க்கு விற்கப்படுகிறது. (இங்கு நாம், மேல்தட்டு மக்கள் செல்லும் உணவு விடுதி களைக் கருத்தில் கொள்ளக் கூடாது).

ஆனால், குஜராத்தில் இந்த சென்னையில் உள்ள தேநீர் கடையில் கொடுக் கப்படும் கப்பில் பாதி அளவு உள்ள ஒரு கப் தேநீர் சராசரியாக ரூபாய் 8-க்கு விற்கப்படுகிறது. இதனைக் கட்டிங் தேநீர் என்று அகம தாபாத் பாமர மக்கள் கூறு கிறார்கள். (நமது ஊர்களில் கட்டிங் என்ற சொல் மது அருந்துவோர் பயன்படுத்து வதாகும்). ஆனால் குஜ ராத்தில் தேநீரையே கட் டிங் முறையில் இருவர் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழ் நிலை.

இந்த விவரம்- சிறுவயதில் நானும் தேநீர் விற்றேன் என்று கூறும் மோடிக்குத் தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா? (மிகத்தரமான தேநீர் ஓரளவு மலிவாகக் கிடைக் கக்கூடிய ஊர்களுள் அய்தராபாத் முதலிடம் பெறும்). அடுத்து, பால் விலையை எடுத்துக் கொள்வோம். சென் னையில், பால் ஒரு லிட்டர் ரூபாய் 31-க்கும் 28-க்கும், ஆவின் விநியோகம் செய்கிறது. இது கடைகளில் 34-க்கும் 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் கருநாடகாவி லும் கேரளாவிலும் இதே தரமுள்ள பால் 28 ரூபாய்க் குக் கிடைக்கிறது. ஆனால் குஜராத்தில் தரமான பால் ரூபாய் 42-க்கும், தேநீருக் கான பால் ரூபாய் 40-க்கும் அமுல் நிறுவனம் விநி யோகம் செய்கிறது. மக்கள் கடைகளில் இன்னும் அதிகம் கொடுத்துத்தான் வாங்க வேண்டியுள்ளது. இந்தியாவிலேயே பால் விலை மிக அதிகமாகவுள்ள மாநிலங்களில் குஜராத் தும் ஒன்று.

இப்படி ஆராய்ந்து கொண்டே போனால், குஜராத்தில், மற்ற மாநிலங் களை விட விலைவாசி அதிகம் என்பது புரியும். இதுதான் வளர்ச்சியா? மோடி இதை மூடி மறைக் கிறார் என்பதுதான் உண்மை.

- பேராசிரியர் சி.ஜம்புநாதன்

Read more: http://viduthalai.in/page-5/79111.html#ixzz2zlS1bKRR

தமிழ் ஓவியா said...


யார் நின்றாலும் கலைஞர் நிற்கின்றார் என்று தான் பொருள் டி.ஆர்.பாலுவின் சாதனைகள் சாதாரணமானவையல்ல,


இந்தியா முழுவதும் உள்ள சாலைகள், பாலங்கள் அவர் புகழ் பேசும், அவரை வெற்றி பெறச்செய்வீர் - தமிழர் தலைவர்

தஞ்சை, ஏப். 23- தஞ்சை தொகுதியில் ஊரணிபுரம் - உரத்தநாடு, திருவையாறு, தஞ்சை கூட்டங்களில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டி.ஆர்.பாலு அவர்களின் சாதனைகள் இந்தியா முழுமையும் பேசப்படக்கூடியவை. அத்தகையவரை வெற்றி பெற செய்வீர் என்றார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரது உரை வருமாறு:-

பல பேருக்கு மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள். அதே நேரத்தில் நாங்கள் (தி.க) ஏன் வந்தோம் என்று சொன்னால், மாற்றம் தேவை என்று ஏமாற்றத்தை கொடுத்துவிடக்கூடாது. ஏமாந்து விடக்கூடாது என்று மக்களை எச்சரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

தோல்வியை ஒப்புக் கொண்டார் - ஜெ

எம்.பி.சிவா அவர்கள் குறிப்பிட்டார்களே! காரை ஓட்டத் தெரியாதவர்களிடம் காரை ஓட்டச் சொன்னால் எப்படி ஓட்டுவார்கள் என்று சொன்னார். அந்த அம்மையாரே தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். தான் பிரதமர் வேட்பாளர் அல்ல.

தான் பிரதமராக போவதுமில்லை என்றார். பிளக்ஸ்களில் பிரதமராக அறிவித்தார்களே தவிர, மக்கள் கொடுத்த வாக்குகளால் அல்ல. அவரே பிரதமராகமாட் டோம், நான் அங்கம் வகிக்கக் போகிறோம் என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உங்கள் மனதில் நிற்க வேண்டியது...

இங்கே நிறுத்தப்பட்டிருக்கின்ற வேட்பாளர் டி.ஆர்.பாலு சாதாரணமானவர் அல்ல. பல சரித்திர சாதனைகளை செய்தவர்; போனமுறை 2009 தேர்தலில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து இதே இடத்தில் பேசினோம். அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தீர்கள். அவர்கள் வெற்றி பெற்றவுடன் பல திட்டங்களை கொண்டு வந்தார்.

குறிப்பாக உரத்தநாட்டில் மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரியை தொடங் கினார். சிறப்பாக செய்தார். இது தனிமனிதரின் சாதனை அல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனை என்பதை எல்லோரும் நினைத்து பார்க்க வேண்டும்.

நாற்காலிகளே சாட்சி

இந்த தேர்தலில் போட்டியிடும் அணிகள் பல இருந் தாலும், 5 அணிகளாக இருந்தாலும் போட்டி என்பது திமுகவுக்கும் - அதிமுகவுக்கும் தான். மூன்றாவது அணியாக பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இருந்தாலும் அவர்கள் ஒப்புக்கு சப்பாணி போன்றவர்கள். இதற்கு ஆதாரம். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் வந்தபோது இருந்த யாருமற்ற நாற்காலிகளே சாட்சி. எனவே அவர்கள் போட்டியிலிருந்து விலகி விட்டார்கள் என்பது தான் நிலை.

ஊழல் ஊழல் என்று சொல்லும்போது, கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஒருவரை குற்றவாளி என்று ஒரு விரலை நீட்டுகிறபோது, மற்ற நான்கு விரல்கள் நம் பக்கம் திரும்பி இருக்கிறது. அதற்குப் பொருள் என்ன வென்றால் ஒரு விரல் குற்றவாளி என்று ஒருவரை சொல்லும் பொழுது மற்ற நான்கு விரல் உன் பக்கம் இருக்கிறது.

அதைப் புரிந்து கொள் என்று கிராமத்தில் பொது தத்துவத்தை பழமொழியை சொல்லுவார்கள். அதுபோலவே இந்த அம்மையாரின் நிலை என்ன? எந்த சாதனை குறிப்பிட தகுந்தது? மக்களாகிய நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

யானைக்கு காட்டுகின்ற நன்றி மனிதர்க்கு...

புத்துணர்வு முகாம் இந்த அம்மையார் நடத்துகிறார். ஏனென்றால் ஜோசியர் யானைக்கு புத்துணர்வு வந்தால், உங்களுக்கு வெற்றி வரும் என்று சொன்னார்களோ தெரியவில்லை. யானைக்குக் காட்டுகின்ற நன்றி கூட, மனிதர்களுக்குக் காட்டுவதில்லை.

இந்த மக்கள் நலப்பணியாளர்கள் பதிமூன்றாயிரம் பேருக்கு காட்ட வில்லையே! இந்த ஆட்சிதானா இந்தியா முழுவதும் வர வேண்டும்?. இது போன்ற அம்மையாரின் ஆட்சியைப் பற்றி ஏராளம் சொல்லிக்கொண்டு போகலாம். ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம் அதற்காக எடுத்துச் சொல்கிறோம்.

டி.ஆர்.பாலுவின் சாதனைகள் எல்லோருக்கும் பொருந்தும். டி.ஆர்.பாலு போட்ட சாலை, பாலம் எவ்வளவு வேகமாக, சிறப்பாக, பக்குவமாக நாம் வர முடிகிறது. சென்னையிலிருந்து திருச்சி வருவதற்கு 10 மணிநேரம், 8 மணி நேரம் ஆகும். ஆனால் இப்பொழுது 4.30 மணி நேரத்தில் எல்லா வண்டிகளும் வருகின்றன. எல்லா கட்சி வண்டிகளும் வருகிறது. அதுதான் மிக முக்கியமானது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதினார்

சித்திரைச் சோலைகளே! உங்களைத் திருத்த இந்த பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உந்தன் வேரினிலே என்று பாடினார். மற்றவர்கள் சோலையினை ரசித்தார்கள். புரட்சிக்கவிஞர் சோலையை ரசிக்கவில்லை. அந்த சோலையை ரசிக்க எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ இந்த வேரினிலே என்று பாட்டாளி மக்களை, தொழிலாளர் களைப்பற்றி, பாடுபட்டவர்களை பற்றிச் சிந்தித்தார்.


தமிழ் ஓவியா said...

அவர்களெல்லாம் சமுதாயம் வளர பாடுபட்டார்கள். தந்தை பெரியார் மட்டும் பிறந்திராவிட்டால், நீதிக்கட்சி இயக்கம் தோன்றி இருக்காவிட்டால் இன்றைக்கு நம்முடைய படித்தவர்களின் எண்ணிக்கை பெருகி இருக்குமா? பதினெட்டு வயது இளைஞர்கள், வாக்களிக்க போகிற வர்களுக்கு குலக்கல்வித் திட்டம் பற்றி தெரியுமா? இது அவர்கள் குற்றமல்ல.

சொல்ல வேண்டியது நமது கடமை. அந்த குலக்கல்வித் திட்டம் நீடித்து அப்பன் தொழிலை மகன் செய்து கொண்டு இருக்க வேண்டும்.

பெரியார் இந்த பணியை செய்யாவிட்டால் இன்றைக்கு இத்தனை கல்லூரிகள் வந்திருக்குமா? இத்தனை பேர் படித்திருப்பார்களா? இவைகள் எல்லாம் மந்திர கோலால் வந்தது அல்ல. சாய்பாபாவால் வந்தது அல்ல. இதெல்லாம் திராவிடர் இயக்கம் போராடி வெற்றி பெற்று வாங்கித்தந்தது.

நீங்கள் பத்திரிக்கைகள் எல்லாம் பார்த்து ஏமாந்து போகாதீர்கள்; கருத்துக் கணிப்பு என்பதை எல்லாம் நம்பாதீர்கள். இவர்களுக்கு அத்தனை இடம், இத்தனை இடம் என்பார்கள். இன்னும் தேர்தல் வரவில்லை. கருத்துக் கணிப்பு எல்லாம் ஏர் கண்டிஷன் அறையில் இருந்து எழுதுவது

மார்னிங் ஸ்டார் - ஈவ்னிங் ஸ்டார் போல

ஒரே நபர் இரண்டு விதமான பத்திரிக்கையயை நடத்துவார். இங்கிலாந்தில் ஒரு கடை உண்டு. மார்னிங் ஸ்டார் என்று ஒருவர் நடத்தினார். ஈவினிங் ஸ்டார் என்று மாலை பத்திரிகை ஒருவர் நடத்தினார். மார்னிங் ஸ்டார் என்ற பத்திரிகையில் ஈவினிங் ஸ்டார் பத்திரிகையை கடுமையாக விமர்சிப்பார்கள். படிக்க சுவையாக இருக்கும். அப்படி எழுதி இருப்பார்கள்.

மக்களுக்குப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும். அடுத்த நாள் பத்திரிகையில் மார்னிங் ஸ்டாரை பற்றி ஈவினிங் ஸ்டாரில் கடுமையாக விமர்சித்து எழுதி இருப்பார்கள். மக்கள் இரண்டு பத்திரிகையும் வாங்கிக் கொண்டு அவர்களின் ஆபிசுக்கு சென்றார்கள். பார்த்தால் இரண்டு பத்திரிகையும் ஒன்று தான்.

ஒரே ஆபிசில் இருந்து தான் வெளிவருகிறது. ஒரே நபருடையது தான் என்று அப்போதுதான் தெரியும் ஈவினிங் ஸ்டார், மார்னிங் ஸ்டார் இரண்டும் ஒன்று தான் என்று இந்த தேர்தலிலும் அப்படித்தான் ஈவினிங் ஸ்டார், மார்னிங் ஸ்டார் போன்று ஒரு பக்கம் பாஜக ஒருபக்கம் அதிமுக என்ற அணி இருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு ஈவ்னிங் ஸ்டாரும், மார்னிங் ஸ்டாரும் இரண்டும் ஒன்று என்று சுலபமாக புரிந்து கொள்வீர்.

மோடியும் வேண்டாம் - லேடியும் வேண்டாம்

அம்மையார் சென்னையில் பேசும்போது வேடிக்கை யாக, எதுகை மோனைக்காக அவர் சொல்லும்போது. மோடி செய்யாததை இந்த லேடிதான் செய்தேன் என்று பேசி இருக்கிறார். இதை மற்றவர்கள் பேசி இருந்தால், தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார் என்று பாய்ந்து இருப்பார். ஆனால் எழுதி கொடுத்தவர்கள் மோடி - லேடி என்றால் ரொம்ப சுவையாக இருக்கும் என்று எழுதிக்கொடுத்து உள்ளார். மோடியா - லேடியா என்று நாம் பட்டிமன்றம் நடத்த தேவையில்லை.

நமக்கு (மக்களுக்கு) மோடியும் தேவையில்லை லேடியும் தேவையில்லை. நல்ல ஆட்சிதான் வேண்டும்.

தமிழ் ஓவியா said...

டாஸ்மாக் டார்கெட்

டாஸ்மாக்குக்கு டார்கெட் (இலக்கு) படிப்புக்கு டார்கெட் வைக்கலாம். உத்தியோகத்தை நிரப்புவதற்கு டார்கெட் வைக்கலாம். இதுவரை வேலை இல்லாமல் இருக் கிறவர்களுக்கு வேலை கொடுக்க டார்கெட் வைக்கலாம்.

குடிப்பதில் சரக்கு விற்பதில் போய் டார்கெட் வைக்கலாமா? டாஸ்மாக்கில் டார்கெட் வைக்கிறேன் என்றவுடன் தேர்தல் கமிஷன் நான்கு நாட்களாக டாஸ்மாக்கை மூடிவிட்டார்கள். டிமாண்ட் அதிகம் சாப்பாட்டைக்கூட முன்கூட்டி வாங்கி வைப்பதில்லை. சரக்கை வாங்கி வைக்கிறார்கள்.

நாம் எல்லா செய்திகளையும் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னாலே பார்த்தவுடன் வேதனையாக இருந்தது. அதில் டாஸ்மாக் கடைக்காரரிடம் மைக்கை கொண்டு நீட்டுகிறார் தொலைக்காட்சியாளர். அவர் சொல்கிறார், இப்பொழுது எங்களால் சரக்கை கொடுக்க முடியவில்லைங்க! அவ்வளவு டிமாண்ட் 6844 கடை இருக்கிறது என்று புள்ளி விவரம் சொல்லுகிறார்கள்.

அப்பொழுதுதான் நான் குறித்து வைத்தேன். எங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? எனவே 6844 கடையில் இதுவரை ஒரு நாளைக்கு 60 கோடி தான் வருமானம் வரும், விற்பனையாகும். அண்மையில் இரண்டு நாட்களாக நிலைமை என்ன?. அண்மையில் 80 கோடியிலிருந்து 173 கோடிக்கு போய் இருக்கிறது என்று சொல்கிறார்.

ஏனென்றால் மூன்று நாள் விடுமுறை. முன்கூட்டியே வாங்கி இருக்கிறார்கள் அதை சொல்லி விட்டு விற்பனையாளர் சொல்கிறார் இப்பொழுது எல்லாம் 1000 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டாகத் தருகிறார்கள். எங்களால் சில்லறை கொடுத்து நிற்க முடியவில்லை.

தமிழ் ஓவியா said...

எது நல்ல நோட்டு கள்ள நோட்டு என்று கண்டு பிடிக்க முடியவில்லை என்று அவர்கள் சொல்லி இருக்கிறார். இதுதான் அம்மையார் ஆட்சியில் வளம், வளர்ச்சியா, இதுதான் வளர்ச்சிக்கு அடையாளமா? நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே நம்முடைய டி.ஆர்.பாலு நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால் அவர் செய்த மிகப்பெரிய சாதனை பட்டியல்களையே இங்கு கொடுத்துள்ளார். சிவா சொன் னதைப் போல பல சாதனைகள் செய்திருக்கிறார். நாங்கள் எப்போதும் சுற்றுப்பயணத்தில் இருக்கக்கூடியவர்கள், அவரின் சாதனையால் நான்குவழி புறச்சாலைகள்! இந்தியா முழுவதும் அவரது சாதனைகளைப் பேசும்.

தஞ்சைத் தொகுதியில் திமுக வேட்பாளர்

எனவே கலைஞர் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றால் உரிய காரணம் இங்கே யார் நின்றாலும் உங்கள் மத்தியிலே இருக்க வேண்டிய எண்ணம் கலைஞருடைய தொண்டர்கள் நிற்கிறார்கள். கலைஞர்தான் நிற்கிறார்; உதயசூரியன் தான் நிற்கிறது என்கிற எண்ணம் ஒவ் வொருவருக்கும் இருக்க வேண்டும்.

பதவிக்காக உள்ளவர்கள் அல்ல.. கொள்கைக்காக

பத்திரிகையாளர்கள் நினைத்தார்கள் இவருக்கும் (டி.ஆர்.பாலுவுக்கும்) அவருக்கும் (பழனி மாணிக் கத்திற்கும்) சிண்டு முடிந்து விடலாம். சண்டை மூட்டலாம் என்று நினைத்தார்கள், பத்திரிக்கையாளர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கிறவர்கள் பதவிக்காக வந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்கெங்கோ போய்விட்டார்கள். கொள்கைக்காக வாழக்கூடியவர்கள் என்பதனால் சாதனையை இன்றைக்கும் செய்து கொண்டு இருக்கிறார்கள். சேதுசமுத்திர திட்டம், நெடுஞ்சாலை திட்டம் இன்னும் பல

பணம் பாதாளம் வரையிலே தான் பாயும் - கொள்கை அதையும் தாண்டி பாயும்

இங்கு நீங்கள் டி.ஆர்.பாலு அவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல ஒரு சாதனையாளரை தஞ்சை மண் பெற்றிருக்கிறது என்பது பொருள். காகித அம்புகளோ, சருகுகளே கற்கோட்டையை (திமுகவை) ஒரு போதும் அசைத்துவிட முடியாது வெற்றி நம்முடையது. மக்களி டையே எழுச்சி இருக்கிறது. அது 500 ரூபாய் எழுச்சி அல்ல, 1000 ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய எழுச்சி அல்ல. பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் சொன்னதை சொல்லி முடிக்கிறேன்.

ஈட்டி இருக்கிறதே, அது எட்டியவரை பாயும். பணம் இருக்கிறதே அது பாதாளம் வரை பாயும், பாய்ந்து கொண்டிருக்கிறது என்று சிவா அவர்கள் சொன்னார்கள்.

அன்றைக்கு பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சங்கள் தளபதி அழகிரிசாமி சொன்னார்கள். ஈட்டி எட்டியவரையில் பாயும் பணம் பாதளம் வரையிலே தான் பாயும். ஆனால் எங்களது கொள்கை இருக்கிறதே, சுயமரியாதை இயக்க கொள்கை, பெரியாரின் கொள்கை இருக்கிறதே.

பெரியாரின் வெற்றி இருக்கிறதே. அண்டம், பிண்டம் அனைத்தையும் தாண்டி அதற்கு அப்பாலும் பாயும் என்று சொன்னார்கள். அதுதான் நமக்குகேடயம். நல்லாட்சி மலர இருட்டை விரட்ட, திருட்டை போக்க உதயசூரியன், உதயசூரியனுக்கே வாக்களியுங்கள், பாலுவை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

Read more: http://viduthalai.in/page-6/79137.html#ixzz2zlSI8ZXC

தமிழ் ஓவியா said...


உங்களுக்குத் தெரியுமா?


விவசாயிகள் 7000-த்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டது மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில்தான்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நடை பாவாடை விரித்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாளர்தான் நரேந்திரமோடி!

நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமாகக் கருத்துச் சொன்னவர்தான் நரேந்திர மோடி!

Read more: http://viduthalai.in/page-7/79155.html#ixzz2zlSte3wh

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


நாட்டில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு என்று நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலம், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணிச்சலாக சட்டமன்றத் திலேயே கூறும் முதல்வரைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? ஆம்! அவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா!

Read more: http://viduthalai.in/page-8/79154.html#ixzz2zlTEU1iW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வில்தான் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகம் தன்னார்வ அமைப்பு தகவல்


புதுடில்லி, ஏப். 23- பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர் கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தன் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம்

இந்நிலையில், ஜன நாயக மறுசீரமைப்புக் கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் இது தொடர்பான புள்ளி விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

முதல் ஆறு கட்ட தேர்தலில் போட்டியிடும் 5,380 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு வில் உள்ள விவரங்களின் அடிப்படையில் இத்தக வல்கள் தொகுக்கப்பட் டுள்ளன.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

மொத்தமுள்ள 5,380 வேட்பாளர்களில் 879 பேர் (16%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 533 பேர் மீது கொலை, பாலி யல் வன்முறை, வழிப் பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

காங்கிரஸின் 287 வேட் பாளர்களில் 13 சதவீதத் தினர் அதாவது 36 வேட் பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள் ளன.

பாஜகவில் 48 வேட்பாளர்கள்

பாஜகவின் 279 வேட் பாளர்களில் 88 பேர் (32%) மீது தீவிர குற்ற வழக்கு கள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மியின் 291 வேட் பாளர்களில் 29 பேர் (10%) மீதும், பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 39 பேர் (12%) மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதி வாகியுள்ளன.

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 75 பேர் (26%), பாஜகவின் 279 வேட்பாளர்களில் 88 பேர் (32%), ஆம் ஆத்மியின் 291 வேட்பாளர்களில் 44 பேர் (15%), பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 65 பேர் (20%) மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/79121.html#ixzz2zlTNDmMn

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியிலா - அ.தி.மு.க. ஆட்சியிலா?


தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி களுக்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமும் திமுக வும்தானே. கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) நிஞிறி எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தி யானது 13.12 சதவிகிதமாக இருந்தது, இதே கால கட்டத்தில் மோடியின் குஜராத் மாநில நிஞிறி வெறும் 10 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில்!

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் நிஞிறி 4.14 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயத் துறைகளின் வீழ்ச்சியால், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.

கலைஞர் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நான்காம் இடத்திலிருந்த தமிழ்நாடு, ஜெயாவின் ஆட்சி யில் கடைசி இடத்துக்கு வந்துவிட்டது. ஜெயா அறிவித்த எல்லா திட்டங்களும், முதலீடுகளும் வெறும் ஏட்டள வில்தானே உள்ளது.

இப்பொழுது சொல்லுங்க, தமிழகம் அடைந்துள்ள சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம் திமுக ஆட்சிதானே!

Read more: http://viduthalai.in/page-8/79119.html#ixzz2zlTV5q6l

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

தமிழ் ஓவியா said...

மோடியிடம் தினமணியின் அவசரப் பேட்டி - ஏன்?


தினமணி, பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். ஏடு என்று நாம் சுட்டிக்காட்டிய போதெல்லாம் - அதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காதவர்கள்கூட, இந்தத் தேர்தலில் அது நடந்து கொண்டு வரும் போக்கினை நிதானமாகச் சிந்தித்தால் - திராவிடர் கழகத்தின் கணிப்பு விடுதலை யின் - மதிப்பீடு மிகவும் துல்லியமானதே என்று புரிந்து கொள்வார்கள்.

இதற்காக வெகு தூரத்திற்குச் சென்று ஆராய்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம்.

இன்று தமிழ்நாடெங்கும் - புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வாக்குப் பதிவு; இந்தக் கால கட்டத்தில் நேற்றைய தினமணி (23.4.2014) அவசர அவசரமாக தினமணியின் ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான திருவாளர் நரேந்திரமோடியைப் பேட்டி கண்டு, தினமணியின் முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடு கிறார் என்றால் இதன் அவசியம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பது - தமிழ்நாட்டில் கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூடப் புரிந்து கொள்வானே!

பேட்டிக்கு முகவுரையாக தினமணி ஆசிரியர் அய்யர்வாள், மோடிபற்றிக் கொடுக்கும் முன்னுரை அவரின் முகவரியைப் பச்சையாகக் கட்டம் கட்டி வெளிப்படுத்தக் கூடியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தும், இவரது சுறுசுறுப்பும், மன வலிமையும் நிகரற்றது. சொலல் வல்லன், சோர்வு இலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்கிற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம்.

இப் போது குஜராத் முதல்வர், தேர்தல் முடிவானால் அனேகமாக இந்தியப் பிரதமர்

என்று மோடிக்கு தினமணி ஆசிரியர் இப்பொழுதே பிரதமர் என்கிற மணிமுடியைச் சூட்டி விட்டார். தமது ஆசையைக் குதிரையாக்கி சவாரியும் செய்து விட்டார்.

மோடி என்றால் இதுதானா? மோடி என்றால் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற விலாசம் கிடையாதா?

மோடி என்றால் சிறுபான்மை மக்களுக்குப் பயங்கரமான எதிரி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லீம்கூட வேட்பாளராக பி.ஜே.பி. சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராதவர் என்ற அறிமுகம் அவரைப் பற்றிக் கிடையவே கிடையாதா?

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ் லிம்கள், ஒருவர் சீக்கியர்; இந்து ஒருவரும் கிடையாது என்ற நிலைப்பாடு, மோடி எத்தகைய பாசிஸ்டு என்பதை உலகுக்கு அறிவிக்கவில்லையா?

வெளிநாடுகளில்கூட கல்வியாளர்கள், பேராசிரி யர்கள் பல்துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள், இந்தியாவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு மரண பூமியாகும் - அண்டைய நாடுகள்கூடப் பதற்றம் அடையும் என்று கையொப்பமிட்டு அறிக்கை களே கொடுத்து இருக்கிறார்களே - அவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் அற்பம்தானா?

தமிழ் ஓவியா said...

அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை மோடி தங்கள் நாட்டுக்கு வந்திட விசா கொடுக்க மறுத்து வருவது - ஏன்? இதுபற்றியெல்லாம் வைத்திய நாதய்யர் களுக்குத் தெரியவே தெரியாதா?

நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிர்மாணிக்க 11,00 ஏக்கர் நிலத்தை சதுர அடி ரூ.900-க்கு அடி மாட்டு விலைக்கு விற்றதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?

சதுர அடி ரூ.10,000 சந்தை மதிப்பு!

அதே டாட்டாவுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.9750 கோடியை 20 வருடத்தில் திருப்பி செலுத்த வாய்ப்பு அளித்தவரும் இந்த மோடிதானே. இவர்கள் கண்ணோட்டத்தில் டாட்டா பரம ஏழையோ!

மோடியைப் பிரதமர் ஆக்குவதில் 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் - ஆர்வத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்களே - உயர் ஜாதி ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றனவே - இந்தப் பின்னணிகளைக் கொண்ட பிற்போக்குவாதிகள் என்ற அடையாளம் வெகு மக்கள் மத்தியில் அறவே அழிக்கப்பட வேண்டும் என்ற தந்திரம் தானே இந்தத் தினமணியின் அவசரப் பேட்டிக்கான அவசியம்!

மோடியை நோக்கி தினமணி ஆசிரியர் வைக்கும் கேள்விக்குள்ளேயே விடையிருக்குமாறு தேர்ந்தெடுத் தல்லவா மோடி முன் வைக்கிறார்.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் - அவரைத்தானே இந்த அக்கிரகாரவாசிகள் முன் வைக்கின்றனர் என்ற வினா எழலாம்.

ஒரு வகையிலே அவர்களின் கெட்டிக்காரத்தனம் இது; பச்சையாகப் பார்ப்பனர்களை முன்னிறுத்தும் போது, வெகு மக்கள் அந்த வன்மத்தை, நச்சுக் கோப்பையையும் பளிச்சென்று புரிந்து கொள்வார்கள்.

தந்தை பெரியார் மொழியில் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் நிஜப் புலிகளை விட, வேடம் தரித்த புலிகள் அதிகம் குதிக்கும். அதனால்தான் இந்த வேடப் புலியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதுவும் ஆர். எஸ்.எஸில் பயிற்சிக் கொடுத்துப் புடம் போடப்பட்ட வரைப் பயன்படுத்தி, தங்களின் மனுதர்ம ஹிந்துத்துவா சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோல நினைக்கிறார்கள்.

இந்த ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் சோ ராமசாமிகளின், தினமணி வைத் தியநாதய்யர் அண்ட் சோக்களின் விஷம ஊற்று எங்கே, எப்படி மய்யம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/79163.html#ixzz2zqtksBtE

தமிழ் ஓவியா said...


அவ(ன்)ள்


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்புப் பெண். தென்னாப்பிரிக்காவிலும் குக்கிராமம். படிப்பும் சொல்லும்படியாக ஏதும் இல்லை. பெண்ணின் பெயர் காஸ்டர் செமன்யா.

சிறிய வயதிலிருந்தே காற்றைக் கிழித்து ஓடுவது - அந்தச் சிறுமியின் பொழுதுபோக்கு! ஆனால் சர்வதேச ஓட்டப் பந்தய மைதானணீத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லைதான்.

ஆனாலும், அந்தப் பெண் 18 வயதில் பெர்லின் மைதானத்தில் நின்றார். துப்பாக்கிச் சத்தம் கேட் டது - அவ்வளவுதான் கால் கள் தரையில் பாவவில்லை - காற்றைக் கிழித்தார் 800 மீட்டர் தூரத்தை 1.55:45 நேரத்தில் கடந்து எல்லோர் புருவங்களையும் உயர்த் தக் காரணமாக இருந்தார்.

2009இல் அது உலக சாதனை! 1500 மீட்டரிலும் அதற்கு முன்னிருந்த சாதனையைவிட 25 வினாடிகள் குறைவில் முறியடித்தார்.

உடனே ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன; அவர்கள் எல்லாம் ஆண்கள்தான். ஒரு பெண்ணா - இவ்வளவு தூரத்தை இவ் வளவுக் குறுகிய நேரத்தில் கடந்தார்? ஆச்சரியமாக இருக்கிறதே - நம்ப முடி யாது. ஒருக்கால் இவள் ஓர் ஆணாக இருப்பாளோ? அல்லது போதைமாத்திரை சாப்பிட்டு இருப்பாளோ? சந்தேகக் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. காற்றைக் கிழித்து ஓடி முதல் பரிசுக் கோப்பையைப் பெற்ற பெண் அந்த மகிழ்ச்சியைக் கூட அனுப விக்கவில்லை.

அதனால் என்ன? எந்த பரிசோதனைக்கும் தயார்! மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்?

ஆனாலும் இந்தச் சோதனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, அவள் பெண்தான்; எந்தப் போதை மருந்தையும் உட் கொள்ளவில்லை என்று அறிவிப்பதற்கு ஓர் ஆண்டு தேவைப்பட்டது என்பதுதான் கொடுமை யாகும். அதன் விளைவு ஓர்ஆண்டு ஓட்டப் பயிற் சிக்குக்கூட ஓய்வு கொடுத் ததுதான் மிச்சம். குற்றமற்றவர் என்று நெருப்பில் குளித்து வெளியில் வந்ததும், மீண்டும் தடகளப் போட்டிக்குள் குதித்தார். அதே பெர்லின் தான் அந்தப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்றாலும் முன் சாதனையை விட இரு வினாடிகள் அதிகமாகப் போய் விட்டது.

இந்தக் கொடுமையை என்ன சொல்வது! இதற்கு யார் தான் பொறுப்பு!

தமிழ்நாட்டில்கூட புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியைச் சேர்ந்த சாந்தி 2006 - தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற நிலையில் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டார்.

பெண்ணென்றாலே இப்படி ஒரு நிலைதான். நம் நாட்டில். வானதி சீனி வாசனும், டாக்டர் தமிழி சையும் வறட்டுத் தவளைகளாக தொலைக் காட்சிப் பெட்டிகளில் கட்சிக்காகக் கத்தினாலும் காரியம் என்று வரும் பொழுது - தேர்தல் களத்தில் ஒதுக்கத் தானேபடுகிறார்கள்? அதுவும் பெண்ணென்றால் பேயென்று பேசும் இந்து மதக் கட்சியில் வேறு எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/79178.html#ixzz2zqvsun3B

தமிழ் ஓவியா said...


நாடெங்கும் மோடிக்கு எதிர்ப்பு அலை!


மும்பை கல்லூரி முதல்வர் மும்பை, ஏப்.24-மும் பையை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல் வரான டாக்டர் மாஸ்கரன் ஹஸ் தங்களது மாணவர் களுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் மோடிக்கு வாக் களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் அனுப்பிய மின் அஞ் சலில் கூறப்பட்டுள்ளதா வது; குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந் துள்ளது என்பது குறித்து மனித அபிவிருத்தி தொடர் பான அட்டவணை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறை அங்கு மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித் துள்ளது. உயர்கல்வி ஒரு கட்டத்திற்கு மேல் வளர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. வளர்ச்சி என்பது எது? வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுவதா? அதிக லாபங்களை ஈட்டு வதா? உற்பத்தியில் சாதனை படைப்பதா? இதையா மக்கள் வளர்ச்சியாக கருது கிறார்கள் என்றால் இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், இன்றி யமையாத பொருட்களின் தேவைகள் சரியாகவும், நியாயமான விலையில் கிடைப்பதே உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இதிலெல்லாம் அம்மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வித சாத னையையும் நிகழ்த்த வில்லை. எனவே எதிர் காலத்தை தீர்மானிக்கும் வகையில் மாணவர்கள் கவனமுடன் மோடிக்கு வாக்களிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று அந்த மின் அஞ்சலில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மின் அஞ் சலில் அனுப்பப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளதுடன், தேர்தல் ஆணையத் திலும் இது குறித்து புகார் அளித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரி புதுடில்லி, ஏப்.24-தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வளர்ச்சி மற்றும் நல்லாட்சி குறித்து பேசு வதும், அதன் பின்னணியில் சிலர் தீவிர மதப்பிரச்சாரம் செய்வதும், பாஜகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து புதுடில்லியில் அவர் கூறி யதாவது: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசி வருகிறார். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இதன் பின் னால் தீவிர மதப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள் ளது. பாஜ, விஎச்பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்க ளான அமித்ஷா, கிரிராஜ் சிங், பிரவின் தொகாடியா ஆகி யோர், இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக வெளிப்படையாக செயல் பட்டு வருகின்றனர். மோடி யின் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சார பொய்த் தோற்றத்தின் கீழ் மதவாதப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அவைகள் குறிப்பாக உத்தரப் பிரதே சம் மற்றும் பிகாரில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மதவாத சிக்கலும், பிரிவினைவாத வெறுப்புணர்வும் உருவா வதை மறைக்க முடியாது. இந்துத்துவத்தை விமர்சிப் பவர்களை, தேச விரோதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதர வாளர்கள் என்று முத்திரை குத்துவது சங்பரிவாரின் பழைய தந்திரமாகும். முஸ்லிம்களை தாக்குவதன் மூலம், அவர்கள் எப்போ தும் பாகிஸ்தானிற்கு விசு வாசமாக இருப்பார்கள் என்று மாயையை உரு வாக்குகிறார்கள் என்றார் யெச்சூரி.

சிரஞ்சீவி

விசாகப்பட்டினம், ஏப்.24- தனது முன்னேற்றத்துக்காக கட்சியின் மூத்த தலைவர் களை ஓரம் கட்டிய பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி ஒரு ஹிட்லர் என ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் சிரஞ்சீவி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மோடி ஒரு ஹிட்லர். அவர் தனது சுயநலத்துக்காக கட்சி யின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டினார். அவர் பிரதமரானால், தொழில திபர்கள் நாட்டை ஆட்சி செய்வர். சாதாரண மக் களுக்கு எந்த இடமும் இல்லை. அவருடன் சந்திர பாபு நாயுடு எப்படி கூட்டு சேர்ந்தார்? கடந்த 2004ஆம் ஆண்டு பா.ஜ மீது குற்றம் சுமத்தி தே.ஜ கூட்டணியில் இருந்து விலகியவர்தான் இந்த சந்திரபாபு நாயுடு. பா.ஜ.வுடன் கூட்டு வைத் தது வரலாற்று பிழை என் றார். தற்போது பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந் துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடங்களை விற்றுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பணம் மூலம் ஆட்சிக்கு வர முயற் சிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் வெறித் தனமாக இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குஜராத் மாநிலம் 8ஆவது இடத்தில் உள்ளது. காங்கிரசுக்கு வீழ்ச்சி என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் மக் களை திசை திருப்புவதற் காக சில கட்சிகள் செய்த ஏற்பாடு என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/79181.html#ixzz2zqwB7EJT

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

மாற்றி யோசி!

செய்தி: தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடக்க செங்குன்றத்தில் வீரமா காளியம்மன் கோயிலில் பூசணிக்காய் தீபம்.

சிந்தனை: பனங்காய் தீபம் நடத்தியிருந்தால் பணப் பட்டு வாடாவைத் தவிர்த் திருக்கலாமோ!

Read more: http://viduthalai.in/e-paper/79186.html#ixzz2zqwLjR2K

தமிழ் ஓவியா said...


குஜராத்தின் வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் 17%; மோடி ஆட்சியில் வெறும் 9% தான் சரத்பவார்!!


மும்பை ஏப்.24- குஜராத் மாநி லத்தை காங்கிரஸ் ஆண்டபோது இருந்த பொருளாதார வளர்ச்சியைவிட மிக மோசமாகத்தான் மோடி ஆட்சிக் காலத்து பொருளாதார வளர்ச்சி இருக் கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பாரதீய ஜனதா வின் நிறுவனர்களில் ஒருவர் அத்வானி. அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கூட. அவர் போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவரது விருப் பத்துக்கு மாறாக காந்திநகரிலேயே அவர் போட்டியிட வைக்கப்பட் டுள்ளார்.

அதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவர் தாம் முன்பு போட்டியிட்ட தொகு தியிலேயே போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஜஸ்வந்த்சிங்.. திறமை யான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.. நல்ல நிதி அமைச்சர். சிறந்த நாடாளுமன்றவாதி.. அவரும் அப் படியே பந்தாடப்பட்டார். ஹிட்லராகிறார் மோடி... மோடியைப் பொறுத்தவரையில் பாஜகவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். நாம் வரலாற்றில் ஹிட்லரை பார்த்திருக் கிறோம். அவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரம் அனைத்தும் தம்மிடமே குவிந்திருக்க வேண்டும் என்று செயல் பட்டவர். அப்படி அதிகாரம் குவிந்த தால் யூதர்களை எப்படியெல்லாம் அவர் கொன்றொழித்தார் என்பதை இந்த உலகமே கண்டது. இன்று அதே நிலை மைதான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் ஆகியோரெல் லாம் ஒதுக்கப்பட்டு மோடியின் வசம் அந்த கட்சி சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கால முதல்வர்களாக மாதவ்சிங் சோலங்கி, சிமன்பாய் படேல் இருந்தனர். அப் போது அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 16 முதல் 17.5 சதவீதம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இது 9சதவீதம் ஆக குறைந்தது. இதுதான் சிறந்த நிர்வாகமா? ஏன் வளர்ச்சி விகிதம் குறைந்தது? கடந்த கடைசி 3 ஆண்டு காலத்தில் மகாராஷ்டிரா ரூ.1.42 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள் ளது. ஆனால், ஏராளமான நிதி மாநாடு களை நடத்துகிற குஜராத்தால் மகாராஷ் டிராவின் அளவில் 20 சதவீதம்கூட ஈர்க்க முடியவில்லையே? அப்படியானால் எங்கே என்ன ஆட்சி நிர்வாகம் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது? வாஜ் பாயோ இந்திரா காந்தியோ தங்களுக் காக ஓட்டுக் கேட்டதே இல்லை.. தங் களது கட்சிக்காக ஓட்டுக் கேட்டார்கள்.. ஆனால், மோடியோ எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார் என்றார் சரத்பவார்.

Read more: http://viduthalai.in/page-2/79173.html#ixzz2zqxBXJ48

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/79162.html#ixzz2zqxIx07f

தமிழ் ஓவியா said...


16 ஆவது மக்களவைத் தேர்தல்: கலைஞர் - மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் வாக்களித்த பின்னர் கலைஞர் பேட்டி


சென்னை, ஏப்.24- தமிழகத்தில் இன்று (24.4.2014) நடைபெறும் 16 ஆவது மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டா லின் மற் றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்.

கலைஞர்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர்: தேர்தல் வாக்குப் பதிவு நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாக்களித்திருக் கிறீர்கள். இந்தத் தேர்தல் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்குமா?

கலைஞர்: சாதகமாக இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே, சாதகமாக இருக்கு மென்று நம்புகிறேன்.

செய்தியாளர்: தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறுமா?

கலைஞர்: நிச்சயமாகப் பெறும்.

செய்தியாளர்: தோல்வி பயம் காரணமாக அ.தி. மு.க. எல்லா இடங்களிலும் பணப் பட்டுவாடா செய் திருக்கிறதே?

கலைஞர்: அ.தி.மு.க. பணத்தில் புரளுகின்ற கட்சி. எனவே, அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

செய்தியாளர்: தொடர்ந்து தி.மு. கழகத்தின் சார்பாக அ.தி.மு.க.வின்மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கூறி வருகிறீர்கள். அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

கலைஞர்: நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.
அதேபோன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் இன்று காலை 10.10 மணியளவில் கோபால புரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள வாக்குச் சாவ டியில் வரிசையில் நின்று தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். மத்திய சென்னை வேட்பாளர் (தி.மு.க.) தயாநிதி மாறனும் வாக்களித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79176.html#ixzz2zqyb6rfE

தமிழ் ஓவியா said...


மோடி பிற்படுத்தப்பட்டவரா? இல்லை என்கிறார் அய்க்கிய ஜனதா தள தலைவர்


மேகசனா(குஜராத்), ஏப்.25- மோடி பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்று அய்க்கிய ஜனதா தளம் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் மோடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

குஜராத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அய்க்கிய ஜனதா தளம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. கடந்த 10 நாட்களாக மோடியின் திருமணம் குறித்த சர்ச்சை நிலவுகிறது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அவரது ஜாதி பற்றிய சர்ச்சை எழுந்து இருக்கிறது. பாஜக உயர் மட்ட ஜாதிகளுக்கு மட்டும் உரிய கட்சி அல்ல என்று உறுதிபடுத்தும்வகையில் மோடி தனது ஜாதி பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் 120கோடி மக்களை ஏமாற்றி வரு கிறார் என அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் கோவிந்த பாய் யாதவ் தெரிவித் துள்ளார்.கடந்த 1975ம்ஆண்டு பக்ஷி கமிஷன், மோடி சார்ந்துள்ள ஜாதிப்பிரிவை இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவில்லை. அந்த கமிஷனை பாபு பாய் ஜாய்பாய் படேல் அமைத் திருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79227.html#ixzz2zwf6i8BW

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்
தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவான மய்யங்களில் தேர்தல் பார்வை யாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப் பதிவு மய்யங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.

- பீரவீன்குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் மோடி அலையோ, லேடி அலையோ இல்லை!
- தொல். திருமாவளவன்

தே.மு.தி.க. தலைவர் மின்னணு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்தபோது, அவரின் மனைவி பிரேமலதா உதவி செய்துள்ளார். இது அப்பட்டமான விதி மீறல் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தியிருந்த போது, நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதே மோடி நேற்று உ.பி. வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1.65 என்று காணப்படுகிறது. 15 நாள்களில் திடீரென்று மோடிக்கு ரூ.14.34 லட்சம் எகிறியது எப்படி? என்ற வினா இப்பொழுது எழுந்துள்ளது. மோடி என்றாலே சிக்கல் நாயகர் தானோ!

பணபட்டுவாடா நடந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. -ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர்

தருமபுரியில் பணபட்டுவாடா செய்தவர்களை விரட்டிக் கொண்டு ஒடிய இளைஞர் காவல் படைவீரர் வினோத் கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

வாக்காளர்களுக்கு அஇஅதிமுக முன் பணம் கொடுத்துள்ளதே - அதைப் பற்றிக் கேட்க மாட் டீர்களா? - செய்தியாளர்களிடம் விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் 750 கைதிகள் அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


Read more: http://viduthalai.in/e-paper/79228.html#ixzz2zwfSoEK9

தமிழ் ஓவியா said...


சபரிமலை அலங்கோலம் பக்தர்கள் போர்க் கோலம்!

கொச்சி ஏப்.25- சபரி மலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளா கின்றனர்' என்று கேரள மாநில மனித உரிமை ஆணை யத்திடம் சபரிமலை அய்யப்ப சேவா சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் மனு, தேசிய குறை தீர்ப்பு அமைப்பான ஆம்புட்ஸ்மனின் விசா ரணைக்காகப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சியில் அந்த சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் எஸ். சுதர்சன் ரெட்டி, கருநாடக மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆண்டுதோறும் அய் யப்பனைத் தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த சுமார் 4 கோடி பக்தர்கள் சபரி மலைக்கு வருகின்றனர். அய்யப்பன் கோயிலை நிர் வகித்து வரும் திருவி தாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை.

தேவஸ்தான தங்கும் விடுதியில் அரசியல் வாதிகள் போன்ற வி.அய். பி.களுக்கு 600 அறைகளை ஒதுக்கிவிட்டு பக்தர்களுக் காக 400 அறைகளை மட்டுமே அளிக்கின்றனர். முக்கிய பூஜைக் காலங் களில் தங்கும் விடுதிக் கட்டணமாக ரூ.25,000 வரை தேவஸ்தானம் வசூ லித்தது.

இதனால் வேறு வழி யின்றி மலைப்பகுதியில் ஆங்காங்கே சுகாதாரமற்ற இடத்தில் தரையில் படுத்து தூங்கவேண்டிய அவல நிலைக்கு பக்தர்கள் ஆளா கின்றனர். வயதான பெண் கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கென தனிக் கழிப்பிட வசதியும் இல்லை. போதிய குடிநீர் வசதி கிடையாது.

சில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் உணவக உரிமையாளர்களின் நெருக்கடிக்கு இணங்கி, சபரிமலையில் அமைக் கப்பட்டுவந்த அன்னதான மண்டபப் பணிகளை தேவஸ்தானம் நிறுத்தி விட்டது.

மகர விளக்கு, மண்டல காலப் பூஜை, படிப்பூஜை போன்ற விசேஷ காலங் களில் நாள்தோறும் ஒரு சாப்பாடு ரூ.22 என்ற கணக்கில், சுமார் 18,000 பக்தர்களுக்கு எங்கள் சங் கத்தின் சார்பில் வழங்கப் படுகிறது. தனியார் உணவு விடுதிகளில் சாப்பாடு விலை ரூ.80 ஆகும்.

ஆனால் உணவுக் கழிவு களை அகற்றுவதற்கும், பாதுகாப்புத் தருவதற் காகவும் தினசரி ரூ.10 ஆயிரத்தை சபரிமலை அன்னதான அறக்கட்ட ளைக்கு செலுத்தவேண் டும் என்று தேவஸ்தானம் நிர்பந்திக்கிறது.

சபரிமலையில் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவதற்கான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளும் செயல் படுத்தப்படாமல் உள்ளன. இது குறித்து கேரள மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அளித்தோம். அது, தேசிய குறைதீர்ப்பு அமைப்பான "ஆம்புட்ஸ் மனுக்கு' அனுப்பி வைக் கப்பட்டுள்ளது' என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/79224.html#ixzz2zwfaYDGh

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page-2/79230.html#ixzz2zwfw7wV2

தமிழ் ஓவியா said...


தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாக்குமூலம்!


16ஆவது மக்களவைத் தேர்தல் மிக விசித்திர மாகவே நடந்துள்ளது; இந்தவிசித்திரத்துக்கான வித்து தேர்தல் ஆணையமாகும்.

திருவாளர் டி.என். சேஷன் அய்யர் தேர்தல் ஆணையராக வந்த கால முதல் தேர்தல் ஆணையத் திற்குப் புதுவாலும், இறக்கைகளும் முளைக்க ஆரம்பித்து விட்டன.

சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதக் கூடாது, சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது; கட்சிக் கொடி தோரணங்களைக் கட்டக் கூடாது.

தம் சொந்த வீட்டில், தாம் சார்ந்த கட்சியின் கொடியைக்கூடப் பறக்க விடக் கூடாது; தலைவர்களின் சிலைகள்கூட கண்களுக்குத் தெரியக் கூடாது என்று கூறி மக்களால் மதிக்கப்படும் தலைவர்களின் சிலை களுக்கெல்லாம் முக்காடு போட்டார்கள்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டுத் தீர்ப்பு வாங்கிய பிறகுதான் தலைவர்களின் சிலைகளை மூடுவது நிறுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் என்பது தனியதிகாரம் கொண்டதாயிருக்கலாம்; அதே நேரத்தில் ஒரு ஜனநாயக நாட்டில் வானளாவிய அதிகாரம் என்பது யாருக்கும் கிடையாது. அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சின்னச்சின்ன விஷயங்களில் எல்லாம் மலையளவு கவனம் செலுத்தி ஊதிப் பெருகச் செய்த தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம், மிக முக்கியமான பிரச்சினையில் கோட்டை விட்டது எப்படி?

பணப் பட்டுவாடா செய்ததைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அது பெரும் சவாலாகவே இருந்தது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். இதன் மூலம் தேர்தலில் வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பதைப் பொறுப்பில் உள்ள அதிகாரியே ஒப்புக் கொண்டு விட்டாரே!

இருப்பதிலேயே மிகவும் மோசமான குற்றம் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது; இதனையே தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் வேறு எதற்காக இருக்கிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகத் தான் இருக்கும்.

தமிழக அமைச்சர் ஒருவர் 50 கட்சித் தொண்டர் களுடன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்துள்ளார்.

தஞ்சைத் தொகுதியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு நேரிடையாகச் சென்று விசாரணை நடத்தியபோது காவல்துறை அதிகாரி முரண்பட்ட முறையில் பேசி இருக்கிறார்.

இப்பொழுதுகாவல்துறைகூட தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தேர்தல் ஆணையமும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும், தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டாமா?

தேர்தல் ஆணையராக ஜெ.எம். லிங்டோ இருந்தார். (14.6.2001 முதல் 7.2.2004 வரை) குஜராத் மதக் கலவரம் - அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தி நரேந்திரமோடி யால் நடத்தி முடிக்கப்பட்ட கால கட்டம் அது.

பல்லாயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் இருந்தனர். நிவாரண உதவிக்கூட சரிவர அளிக்கப் படாத நிலையில், குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முறைப்படி நடத்த வேண்டிய தருணம் அது.

குஜராத்தில் அசாதாரண நிலையைக் கணக்கிட்டு குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை ஒத்தி வைத்தார் - லிங்டோ.

அப்பொழுது மத்தியில் வாஜ்பேயி தலைமையில் பி.ஜே.பி. ஆட்சிதான் நடந்து வந்தது. ஆணையர் முடிவை எதிர்த்து - குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொள்ளப்பட்டது. (இந்து முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து இந்து வாக்கு வங்கி - இஸ்லாமியர் வாக்கு வங்கி என்று பிரிந்திருந்த தால் பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தட்டிப் பறித்து விடலாம் என்பது பி.ஜே.பி.யின் கணக்கு!

லிங்டோவின் முடிவு தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று உணர்ந்த நிலையில், குஜராத் மாநில முதல் அமைச்சராகவிருந்த நரேந்திர மோடி என்ன கூறினார் தெரியுமா?

ஜே.எம். லிங்டோ ஒரு கிறிஸ்தவர் - சோனியாவும் ஒரு கிறிஸ்தவர் அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று சொன்னதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எதிலும் அவருக்கு இந்துத்துவா மதப் பார்வைதானே! நன்றாகப் பதிலடி கொடுத்தார் லிங்டோ வீட்டு வேலைக்காரர்கள் முணு முணுப்பதுபோல பேசி வரும் நரேந்திரமோடி நாததிகம் என்ற ஒன்று உள்ளதுபற்றி அறியாதவராக இருக்கிறாரே - என்று பதிலடி கொடுத்தாரே!

அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் - குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்குவதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறது என்பது ஊரறிந்த இரகசியமாகவே ஆகிவிட்டது. இதற்கு எந்த முத்திரையைக் குத்துவதோ!

Read more: http://viduthalai.in/page-2/79232.html#ixzz2zwg68t9U

தமிழ் ஓவியா said...


பணப் பட்டுவாடாவை தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது ஒப்புக் கொள்கிறார் தேர்தல் அதிகாரி


சென்னை, ஏப்.25- இந்த மக்களவைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தலில் இந்த முறை 1.3 கோடி வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் நல்ல பயன் கிடைத்ததாக மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் தெரிவித் தனர். இந்த உத்தரவால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

பணப் பட்டுவாடா

இந்த மக்களவைத் தேர்தலில், வாக்குக்கு பணம் அளிப்பதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பணம் வழங்குவதை தடுப்பதற்காக 7 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கண்காணிப்புப் படைகள், மண்டல குழுக்கள் அமைக் கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தமிழகத்தில் வாகனச் சோத னைகள் நடத்தப்பட்டதன் மூலம், ரூ.25.56 கோடி ரொக்கமும், ரூ.27.74 கோடி மதிப்புள்ள ஜவுளிகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுமா: மக்களவைத் தேர் தலை ஒட்டி, தமிழகத்தில் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 20 நாட்கள் இடைவெளி உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் முழுவதுமாக தளர்த்தப்படாது. அரசின் சில நடைமுறைகளுக்கு அனு மதி வழங்கப்படும். அதுகுறித்த விரி வான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளி யிடப்படும் என்றார் பிரவீன்குமார்.

Read more: http://viduthalai.in/page-2/79236.html#ixzz2zwgGgRRg

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும்.

ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page-7/79231.html#ixzz2zwh9Plig

தமிழ் ஓவியா said...

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு: கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது.

அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்: தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத் துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhdtosA