பி.ஜே.பி.யின்
தேர்தல் அறிக்கை குறித்து உண்மையான மதச் சார்பற்ற சக்திகள் கடுமையான குரலை
உயர்த்தியுள்ளன. இந்தத் தேர்தல் அறிக்கையின் மூலம் ஒளிவு மறைவின்றி - தனது
இந்துத்துவா முகத்தைக் காட்டி விட்டது பி.ஜே.பி., புரியும் படிச் சொன்னால்
மீண்டும் மனுதர்மக் கொடியை ஏற்றத் துடியாய்த் துடிக்கிறது - இதன் ஆதரவு
சக்திகளும் தங்களை மூடி மறைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க
முன் வந்துள்ளன.
பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துள்ள
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டன. எந்த முகத்தை
வைத்துக் கொண்டு தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் வாக்குக் கேட்கப்
போகிறார்கள் என்ற கேள்விக் குறி கிளர்ந்து எழுந்துள்ளது. மரியாதையாக இந்த
நேரத்திலாவது கூட்டணியை முறித்துக் கொள்ள முன்வர வில்லையென்றால் காலா
காலத்திற்கும் அவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் கறுப்புப் பட்டியலில் வைத்து
விடு வார்கள் - அவர்களின் எதிர்காலம் ஆயுள் தண்டனைக் கைதி என்ற நிலைக்குத்
தான் தள்ளப்படும்.
தொண்டை வறளக் கத்துவதாலேயே,
முகத்திரையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவதாலேயோ தமிழர்களின் அறிவு
நாணயமான தாக்குதல்களிலிருந்து தப்பவே முடியாது!
தினமணி ஏடு முன் வந்து ஆர்.எஸ்.எஸ். அஜண்
டாவான பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை வரவேற்பதைப் புரிந்து கொள்ள
முடியும்; காரணம் தினமணி என்பது அதிகாரப் பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ். ஏடு;
அதுவும் திருவாளர் வைத்தியநாதய்யர் தட்டிப் பார்த்து தினமணி யின்
ஆசிரியராகக் கொண்டு வரப்பட்டவர்; அவரின் ஆர்.எஸ்.எஸ். அபிமானமும் வெறியும்
நாடு அறிந்த ஒன்றே!
அயோத்தி ராம ஜென்ம பூமி கோயில், பொதுக்
குடியுரிமை சட்டம், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு சலுகை வழங்கும் அரசியல்
சட்டப் பிரிவு 370, ஆகியவை பற்றிய பா.ஜ.க.வின் நிலைப்பாடு
வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட அம்சங்கள் இடம் பெறாமல்
போயிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டுமே தவிர, அந்தக் கட்சியின் கடந்த
தேர்தல் அறிக்கைகளில் காணப்பட்ட இந்த மூன்று அம்சங்களும் இந்தத் தேர்தல்
அறிக்கையிலும் காணப்படுவதில் வியப்பேதும் இல்லை என்று சாமர்த்தியமாக தினமணி
தலையங்கம் தீட்டியுள்ளதே - இது நேர்மையானது தானா?
இதற்கு முன் நடைபெற்ற 2004, 2009 பிஜேபி தேர்தல் அறிக்கைகளில் இவை இடம் பெற்றுள்ளனவா? இல்லையே!
அது ஒருபுறம் இருக்கட்டும்; பிஜேபியின்
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் சரியானவை தானா? சமூக
நீதி தானா? என்று தினமணி விவாதிக்காதது ஏன்? கருத்துத் தெரிவிக்காதது ஏன்?
இவற்றை அமுக்கிவாசித்து விட்டு, வேறு பிரச்சினைகளுக்குத் தாவுவது ஏன்?
இதற்குப் பெயர்தான் நயவஞ்சகப் பார்ப்பனத்தனம் என்பது! தினமணிகள் என்னதான்
நயவஞ்சக நாடகமாடினாலும் தந்தை பெரியாரின் தமிழ் மண் புரிந்து கொள்ளும்
நிலையில்தான் இருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டுகிறோம்.
அதே நேரத்தில் தினத்தந்தி என்ற பச்சைத் தமிழர் நடத்தும் ஏட்டுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆதித்தனார் அவர்களால் தோற்று விக்கப்பட்ட ஏட்டுக்கு என்ன வந்தது - என்ன நேர்ந்தது?
ஆச்சரியம் - ஆனால் உண்மை என்று நினைக்கும்
அளவுக்கு பிஜேபியின் தேர்தல் அறிக்கையை வரவேற்று எழுதியிருப்பது வேதனையை
அளிக்கிறது. இந்த வகையில் தினமலரோடு கைகோப்பது சரியானதுதானா? நியாயம் தானா?
நரேந்திரமோடி இந்தத் தேர்தல் அறிக்கையில் முத்திரை பதித்துள்ளாராம்.
பா.ஜ.க.வை காங்கிரசுடன் மற்ற
எதிர்க்கட்சிகளும் குறை சொல்லும் போது இந்துத்துவா கொள்கைதான் அவர்கள்
(பிஜேபி) மூச்சு; நாங்கள் மதச் சார்பற்ற ஆட்சியைத் தருவோம் என்று முழங்கி
வருகிறார்கள். ஆனால் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்க்கும்போது,
அந்த ராகத்தை பா.ஜ.க. கொஞ்சம் அடக்கிவாசித்திருப்பதுபோல தெரிகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின்
திட்டவட்டமான நோக்கம் என்றாலும், இந்த தேர்தல் அறிக்கையில் அரசியல் சட்ட
வரைமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான வழிமுறைகளைக் கண்டறிவோம் என்று உறுதி
அளித்து இருக்கிறார்கள் என்று தினத்தந்தி தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதுதான் மோடியின் முத்திரையா? இந்த
முத்திரை மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தாதா? ராமன் கோயிலை எங்கே
கட்டப் போகிறார்கள்? பாபர் மசூதியை அவர்கள் இடித்த இடத்தில்தானே கட்டப்
போகிறார்கள்! இதனை தினத்தந்தி ஏற்றுக் கொள்கிறதா?
பாபர் மசூதி இடிப்பு என்பது குற்றச் செயல்
இல்லையா? அந்தக் குற்றச் செயலுக்கு மேலாக இன்னொரு குற்றமா? எப்படி அரசியல்
சட்ட வரைமுறைக்கு உட்பட்டு இடிக்கப்பட்ட இடத்தில் கட்ட முடியும்?
நீதிமன்றம் ஒன்றும் அப்படிக் கூறவும் இல்லையே!
பிஜேபி - சங்பரிவார்க் கூட்டத்தைப்
பொறுத்தவரை இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது; இது
மக்களின் நம்பிக்கையைச் சார்ந்தது என்று சொல்லி வருவதையும் நினவு
கூர்ந்தால், சட்டம், நியதிகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து, அதி
காரத்தைப் பயன்படுத்தி ராமன் கோயிலைக் கட்டுவார்கள் அப்படித்தானே! அந்த
நிலை உருவாகுமானால், நாடே கலவரப் பூமியாகி விடாதா?
தினத்தந்தி இப்படி தலையங்கம் தீட்டினால் சிறுபான்மை மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா?
தந்தை பெரியார் பற்றியும் அவர்தம்
கொள்கைகள், தொண்டுகள் பற்றியும் சிறப்பாக தலையங்கம் தீட்டி வந்திருக்கிற
தினத்தந்தி இப்படித் தடுமாறுவது சரியல்ல; சிந்தித்துப் பார்க்க வேண்டும்
என்பது தான் நமது உரிமையோடு கூடிய வேண்டுகோள். சூத்திரன் சம்பூகன்
தவமிருந்தான் என்பதற்காக ராமன் அவனை வெட் டினானே - அந்த மனுதர்மம் மீண்டும்
கோலோச்ச வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே சிந்திப்பீர்!
---------------------------------"விடுதலை” தலையங்கம் 10-04-2014
20 comments:
ஊழல் ஊழல் என்று ஊளையிடும் நரிகளே! இதற்கு என்ன பதில்?
போரில் இறந்த வித வைகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகளைத் தங்களது கட்சி ஆதரவாளர் களுக்கு ஒதுக்கி பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றது வாஜ்பாய் தலை மையில் ஆன பாஜக தானே. ஊழல் செய்வதில் காங் கிரஸ் கட்சி, பாஜக இரண் டும் போட்டி போட்டுக் கொண்டு தான் ஊழல் செய்தன.
இதோ போரில் இறந்த இராணுவத்தினரின் மனைவி மற்றும் குடும்பத் தார்களுக்கு வழங்கப்பட வேண்டிய பெட்ரோல் பங்க் எந்த எந்த பாஜக தலைவர்களின் கைவசம் உள்ளது என்ற பட்டியல்-
பா.ஜ.க. ஆட்சிக் காலத் தில் ஒதுக்கீடு செய்யப்பட பெட்ரோல் பங்குகளிலும் ஊழல் செய்தனர். பெரும் பாலான பெட்ரோல் பங்க் உரிமங்கள் பா.ஜ.க. ஆதர வாளர்களுக்கே கொடுக்கப் பட்டன. வாஜ்பாயியின் உறவினரான ராஜ்மிஸ்ரா வின் மனைவி அபர்னா மிஸ்ராவுக்கு உரிமம் வழங் கப்பட்டது. உத்தரபிரதேசத் தில் ஹாப்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி ரமேஸ் சந்திர தாமரின் மகன் விகாஸ்தோமர் சின்னாள் பா.ஜ.க. எம்.பி.; வர்மா பூர் ணிமா பா.ஜ.க. எம்.எல்.ஏ., சோட்டேலால் வர்மாவின் மகன் பால்சந்தரா; உ.பி. கூட்டுறவுத்துறை அமைச் சர் ராம்பிரகாஷ் திரிபாதி யின் மருமகள் பிரதிபா திரிபாதி; பாடுபங்கி பா.ஜ.க. எம்.பி.; பாஜ்நாத் ராவத் , மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்க புண்ட்கரின் மனைவி கனிதா புண்ட்கர்; மும்பை பா.ஜ.க.அலுவலகச் செய லர் முகுந்த் குல்கர்னி; சிவசேனை எம்.பி சந்திர காந்த் கைரேயின் சகிதரன் சூரியகாந் கையிரே; சிவ சேனை ஹிமாச்சல் பா.ஜ.க. முதல்வர் பி.கே. துமாலின் மகன் அனுராக்சிங் தாகூர் மற்றும் அண்ணன் மகன் அரவிந்த் துமால்; லூதி யானா பா.ஜ.க. எம்.பி. யின் மருமகன் அனில்தம்மன்; இன்னும் பல பா.ஜ.க. வின் முக்கிய புள்ளிகளுக்கு இந்த உரிமங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டனவே!
Read more: http://viduthalai.in/e-paper/78488.html#ixzz2yXDOdlnB
குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா?
இது குற்றவியல் நீதி மன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா? என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டு களாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாள்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாள்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.
- கலைஞர் கடிதத்திலிருந்து முரசொலி (10.4.2014)
Read more: http://viduthalai.in/e-paper/78487.html#ixzz2yXDZdG6n
தாய்க்குலமே உங்கள் வாக்கு யாருக்கு?
ஜெயலலிதா பேசுகிறார்
குடும்பம் நடத்த போதுமான அள வுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத் தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமை யலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு.
அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளை கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும். - (நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா தினமணி, 17.7.2003)
விஜயகாந்த் பேசுகிறார்...
பெண்கள் முழு நேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில்குழப்பம் ஏற் படும். அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்குக் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மகளிர் அணி மாவட்ட செயலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் அணி நிருவாகிகள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட் டங்களின் மகளிரணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் 175 பேர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: பெண்கள் முழு நேர அரசியல் ஈடுபட்டால் அவர் களின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அதனால் அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்கு நீங்கள் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். உங்கள் குழந்தை களின் கல்வியில் அதிக அக்கறை எடுத் துக் கொள்ளுங்கள். அதோடு வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கட்சிக் கொள்கைகள் பெண்களிடம் சென்று சேரும் வகையில் பிரச்சாரம் செய்யுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.- தினமலர் 23.9.2007
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் பேசுகிறார்
திருமணம் என்பது கணவன் மனை விக்கு இடையேயான ஒப்பந்தம்; திரும ணத்தின்போது, நீ வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டால் உன் தேவை களை நான் கவனித்துக் கொள்வேன். உன்னையும் பாதுகாப்பேன் என கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும்போது வேறு வழியின்றி மனைவியைக் கணவன் கைவிடுகிறான் என்று பேசினாரே பார்க்கலாம் (தினமலர் 7.1.2013 பக்.12).
தாய்க்குலமே, தாய்க்குலமே பெண் களைச் சிறுமைப்படுத்தும் அடுப்பங்கரை பதுமைகளாக்கும் இவர்களை ஆதரிக் கலாமா? பெண்களுக்குச் சொத் துரிமை உட்பட அலை அலையாகத் திட்டங் களைச் சாதித்துத் தந்த தி,மு.க. தலைமை யிலான அணிக்குத்தானே உங்கள் வாக்கு?
குறிப்பு: பிஜேபி அணியில் பெண் வேட்பாளர்களே அறிவிக்கப்படவில்லை என்பதையும் மறந்து விடாதீர்கள். (சிதம் பரம் தொகுதியில் ஏற்பட்டது ஒரு விபத்து அவ்வளவே!).
Read more: http://viduthalai.in/e-paper/78485.html#ixzz2yXDkHmOB
நடுநிலை தவறும் மோடி இந்தியாவின் பிரதமருக்குத் தகுதியானவர் அல்ல!
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்
வாஷிங்டன் ஏப்.10- இந் தியா போன்ற பல மொழி, பல இனம், பல மதம் கொண்ட ஒரு நாட்டிற்கு ஒரு சார்புப் போக்குடைய நரேந் திரமோடி பிரதமருக்கான தகுதியான ஒருவராக இருக்க முடியாது ன்று அமெரிக் காவிலிருந்து வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது. முக்கிய விவரங்கள் வருமாறு:
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வின் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. உல கமே இதை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது, காரணம் இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் உலக அரங்கில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெளியுற வுத்துறையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக திகழும். ஆகையால் இந்தியா வின் தலைமைப்பதவிக்கு நடுநிலையான உலக நாட் டின் போக்குகளை நன்கு அறிந்து ஈடுகொடுப்பவராக இருக்கவேண்டும், அதே நேரத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமன் செய்யும் நோக்கோடு உறுதி யான திட்டங்களை வகிப் பவராக இருக்கவேண்டும் என அய்ரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்க மற்றும் கீழை நாடுகளும் ஆர்வம் கொண்டு கவனித்து வருகின்றன. தற்போதைய அரசியல்களத்தில் இருக்கும் நரேந்திரமோடிதான் இந்தி யாவின் பிரதமர் என்ற ஒரு மாயையை ஊடகங்கள் மூலம் மக்களிடையே ஏற் படுத்திவிட்டார்கள்.
வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்
இது குறித்து வாஷிங் டன் போஸ்ட் தனது தலை யங்கத்தில் குறிப்பிட்டுள் ளதாவது: நரேந்திர மோடியை பிரதமராக முன் னிறுத்தும் பாரதீய ஜனதா கட்சி மூன்றில் ஒரு பங்கு இடத்தை பிடித்து ஆட்சிக்கு வரும் என்று இந்திய ஊட கங்கள் கூறிக்கொண்டு இருக் கின்றன. இது உண்மையா பொய்யா என்று இன்னும் 5 வாரங்களில் தெரிந்துவிடும். பிரதமராக முன்னிறுத் தப்படும் நரேந்திரமோடி தற்போது ஆட்சியில் இருக் கும் குஜராத மாடல் குறித்து பேசிவருகிறார். இதை மாதிரியாகக் கொண்டு இந் தியா முழுவதும் செயல் படுவேன் என்று கூறுகிறார். தன்னுடைய பேச்சால் மக்களைக் கவருகிறார். ஆனால் முதலீட்டாளர்களை எந்த அளவு ஈர்ப்பார் என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தின் மாநிலத்தின் வளர்ச்சி ஒரு சதவீதமே வளர்ந்திருக் கிறது. இது அந்த அரசாங் கத்தின் புள்ளி விவரங்களில் இருந்தே தெரிகிறது, குஜ ராத்தை சர்வதேச சந்தை களுக்கு நிகரான ஒரு மாநி லமாக மாற்றியதாக கூறி வருகிறார். இது இந்தி யாவில் உள்ள சுமார் 80 கோடி வாக்களர்களை எப் படி சென்றடையும் என்று தெரியவில்லை.
குஜராத்தோடு ஒப்பிடுவது சரியல்ல!
இந்தியா போன்ற பல கலாச்சாரங்களைக் கொண்ட மாநிலங்களில் அனைத்து மாநிலத்திலும் வெவ்வேறு பிரச்சனைகள்; இவற்றை குஜராத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்பேசுவது எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும்? மோடியின் மீதான மதச்சாயத்தை முதலில் நீக்க வேண்டும், இந்தியாவின் பெருவாரியான வணிகம் சார்ந்த இஸ்லாமியர்களின் மன நிலையில் மாற்றம் ஏறப்பட்டால் அங்கு மோடி போன்றோர் ஆட்சிக்கு வரமுடியும்.ஆனால் மோடி பெரும்பான்மையான இந்துக்களை கணக்கில் கொண்டு பல்லாயிரக்கணக் கான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த 2002 மதக்கலவரம் பற்றி இன்று வரை தெளிவான ஒரு நிலையை மக்களிடம் வைக்கவில்லை. இது குறித்து பத்திரி கையாளர்களிடமோ அல் லது தனது மேடைப் பேச்சுக்களில் கூட எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. மோடி தலைமையில் ஆட்சி நடந்த போது தான் குஜராத் இனக்கலவரம் நடந்தது. குஜராத்தில் நடந்த கலவரத் தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சரியான அளவில் நிவாரணங்கள் சென்று சேர்ந்ததா என்று கூட அவ ரால் பதிலளிக்க முடிய வில்லை.
மோடியின் ஒரு பக்கச் சார்பு!
1998-ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பல நடுநிலையாளர்கள் கவலை கொண்டனர். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அப்போதைய தலைமை யும் மென்மையான போக்கை கடைபிடித்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் ஒரு பக்கச்சார்பு நடவடிக்கைகள் போன்று தான் தெரிகிறதே தவிர, பொதுவான ஒரு முற் போக்குத் திட்டம் என்று ஒன்றும் தெரியவில்லை, இந்தியா போன்ற நாட்டிற்கு தலைமைப்பதவி வகிப் பவர் பொருளாதாரம், நாட் டின் வளர்ச்சி, தொழில் துறை பெருக்கம், எல்லை நாடுகளுக்குள்ளான அமைதிப்போக்கு மற்றும் உலக நாடுகளுக்குள்ளான நல்ல நட்பான சூழல் கொண்ட திட்டமொன் றைத்தான் தனது நிலைப் பாடாக கொள்ளவேண்டும். நரேந்திரமோடியின் வெற்றி இதில் தான் இருக்கிறது, ஆனால் தற்போது அவர் அதிகமாக நடுநிலை தவறிய பேச்சுக்களையே (Prejudicial rhetoric) பேசிக் கொண்டு வருகிறார். இது இந்தியா போன்ற நாடு களுக்கு நல்லதாக அமை யாது.
(அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் (9.4.2014) தலையங்கம்)
Read more: http://viduthalai.in/e-paper/78484.html#ixzz2yXDu1rEa
ஆதரிப்பது...
எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)
Read more: http://viduthalai.in/page-2/78473.html#ixzz2yXEK2BXL
நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.
பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி சில உறுதிகளைத் தந்துள்ளார். ஒன்று. தனக்காக எதுவும் செய்யமாட்டேன்; எந்த கெட்ட எண்ணத்திலும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
குஜராத்தில் மூன்றாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, இந்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதமாக அங்கே நடந்து கொண்டாரா?
மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா மீது போலி கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தான் தற்போது உ.பி.யின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்; அவர் பொறுப் பேற்றதும்தான், உ.பி.யில் முசாபர் நகரில் கலவரம் வெடித்து, இஸ்லாமி யர்கள் இன்றும் முகாம்களில் இருக் கும் சூழ் நிலை ஏற்பட்டது. அண்மை யில், ஜாட் மக்களிடம், நீங்கள் பழிவாங்கும் நேரம் வந்து விட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர் அமீத் ஷா, இவர் மோடியின் வலது கரம்.
குஜராத்தில், மோடியின் அமைச் சரவையில் பாபு போகாரியா, புரு ஷோத்தம் சோலங்கி என்ற இரண்டு அமைச்சர்கள் மீதும், சுரங்கம் மற்றும் மீன் துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. போகாரியா மீது ரூ.54 கோடி ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாண்டு தண்டனை விதித்தது போர்பந்தர் நீதி மன்றம். இன்றும் அவர்கள் அமைச் சர்களாகத் தான் இருக்கிறார்கள்.
மாயா கோட்னானி. இவரும் மோடியின் அமைச்சரவையில் இருந் தவர்; 2002 குஜராத் கலவரத்தில் நேரடி யாக ஈடுபட்டு 29 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்றதனால், அமைச்சர் பதவி இழந்தவர்;
மத்திய அரசின் தணிக்கை அலு வலக அறிக்கையின்படி, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் டோப்ரோ போன்ற மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தவறான முறையில் சலுகைகள் தந்து அரசுக்கு ரூ.1275 கோடி இழப்பு 2011-12-ல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஏழை விவசாயிகளின் நிலங்களை, அச்சுறுத்தி, குறைந்த விலையில் அதானி போன்ற பெரும் நிறுவனங் களுக்கு, தாரை வார்த்துக் கொடுத் துள்ளது.
அதானி, அம்பானி நிறுவனங்கள், மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு, அவர் இத்தகைய சலுகைகளை அள்ளி வீசுவதால் தான் என கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடியோ, அவரது பாஜகவோ, பதில் ஏதும் சொல்லவில்லை.
மோடியை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்திற்கு, இதுவரை ரூ.10000 கோடி கருப்புப்பணம் செலவிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறிய குற்றச்சாட் டுக்கும் பதில் இல்லை.
இத்தகைய குற்றச்சாட்டுகள் கொண்ட மோடி சொல்கிறார்; எனக் காக நான் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று.
மோடி அவர்களே! நீங்கள் கூறிய வசனத்தை நாங்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனவே கேட்டிருக்கிறோம். எனக்கு என்று எந்த தேவையும் இல்லை; நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறுகிறேன் என்று சொன்னவர் மீது தான், இன் றைக்கு பெங்களூர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர், வரிசையாக பட்டிய லிட்டு, எந்தெந்த ஊர்களில் எத்தனை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள் ளது; அவற்றின் இன்றைய மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் என கூறி யுள்ளார். தமிழ் நாட்டில் ஓர் வழக்கு மொழி உள்ளது. யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று
நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/78482.html#ixzz2yXEUQEK9
பூனைக்குட்டி வெளியில் வந்தது!
இதோ என்னுடைய கையிலே நான் வைத்துக் கொண்டு இருப்பது, பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யா ஆகியோரின் படங்கள் போட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதைவிட மதவெறி கொண்ட கட்சி இருக்க முடியாது என்பதற்கு இதுவே அடையாளம். இதுவரை மறைந்து இருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. அதுமட்டுமல்ல அதில் இன்னும் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் உள் அட்டையில் ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, உபாத்யாய படங்கள் இடம்பெற்றுள்ளது குறித்து நான் பேசியதற்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனை நான் எப்போதும் மதிப்பவன், தலைவர் கலைஞரும் அவரை மதிப்பவர்.
அப்படிப்பட்டவர் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை நான் படிக்கவில்லை, பார்க்கவில்லை, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை அவரே பார்க்காமல் இருக் கிறாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. தெரியாமல் சொல்கிறாரா அல்லது தெரிந்து சொல்கிறாரா எனப் புரியவில்லை.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனது கையிலும் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை அதை சரியாகப் பார்க்கவேண்டும் என அவரை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
- தருமபுரி தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்
Read more: http://viduthalai.in/page-8/78451.html#ixzz2yXJLi8N4
தேர்தல் களம்!
தன் மனைவிபற்றி முதன்முதலாக மோடி
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தன்னை திருமண மானவர். தனது மனைவி பெயர் ஜஷோ டபென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித் துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜன தாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ.பி.யில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திரு மணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோ டபென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் மனைவியின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்குத் தெரியாது என மோடி தெரிவித்துள்ளார்.
மோடி தமக்குத் திருமணமானதாக குறிப் பிடுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. 2001, 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது திருமணம் பற்றி குறிப்பிடாமலே வந்தார் மோடி.
இதனால் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் மோடி தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மோடியின் மனைவி ஜஷோட பென், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அவர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
இது தனி நபர் பிரச்சினை என்றாலும், ஒரு பிரதமருக்கான வேட்பாளர் தன் குடும்ப வாழ்க் கையில் பெண்ணை எந்த அளவுக்கு ஒதுக்கு கிறார் - ஒடுக்குகிறார் - நடத்துகிறார் என்பதை யும் அலட்சியப்படுத்த முடியாதே!
வாக்காளர்களாகிய பெண்கள்தான் இதனைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்; முடிவு செய்யவேண்டும்.
வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் 845 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 42 பேர்களும், குறைந்த பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேர்களும் போட்டியிடுகின்றனர். ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 14 பேர் போட்டியிடுகின் றனர்.
வேட்பாளர்கள் ஏப்ரல் 24 ஆம் தேதிக் குள் மூன்றுமுறை தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலில் ஈடுபடும் கட்சி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வுள்ளது.
வாக்காளர் பட்டியல்
2014 ஜனவரிக்குப் பிறகு புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட விண்ணப்பித்தோர் உள்ளிட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்டங்களில் வெளி யிடப்படுகிறது. அதன்படி இப்போது தமிழ் நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை அய்ந்த ரைக் கோடியாகும்.
ஏ.பி.பரதன்
எங்கள் கட்சிக்கு மட்டுமல்ல; இந்தியா வுக்கே முக்கியமான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு 100-க்கும் குறைவாகவும், பி.ஜே.பி.,க்கு 170-க்கு மிகாமலும் இடம் கிடைக் கும். இந்த நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத கட்சிகளின் பங்களிப்பு முக்கியமான தாக இருக்கும் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்.
விசித்திர அரியானா
அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. இந்த நிலையில், எங்களுக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், உங்களுக்கு வாக்குகள் என்று இளைஞர்கள் கூறு கின்றார்களாம்.
Read more: http://viduthalai.in/page-8/78453.html#ixzz2yXJTsmyl
கார்ப்பரேட் - வகுப்புவாத சக்திகளின் பின்(பு)பலத்தில் பி.ஜே.பி.! மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பீர்! பல்துறைப் பெரு மக்களும் வேண்டுகோள்!!
பாஜக தலைமையிலான கார்ப்ப ரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சியில் அமர மேற்கொள்ளும் முயற் சியை அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் முறியடிக்க வேண்டும் என கல்வியாளர்கள், திரையுலகினர் உள் ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள் ளனர். திரை இயக்குநர்கள் குமார் ஷஹானி, சயீத் மிர்ஸா, கலைஞர்கள் அர்பணா கவுர், விவன் சுந்தரம், திரை யுலக பிரபலங்கள் எம்.கே.ரைனா, அனுராதா கபூர், பத்ரிரைனா, கல்வியா ளர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்சி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி. என். ஜா, கே.எம்.சிறீமலி உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
இந்து தேசியத்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் அமைப்புக்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியில் அமர கடும் முனைப்பு காட்டி வருகின் றன. சுதந்திர இந்தியா இதுவரை கண்டி ராத நிலைமை இது. இந்த சக்திகளுக்கு பலமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கிறது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைக்களத்துக்கு தலைமை தாங்கி அதில் தனக்கு உள்ள பங்குக்காக இதுவரை மன வருத்தம் தெரிவிக்க முன்வராத நபர்தான் இந்த சக்திகளைத் தலைமை ஏற்று வழி நடத்துபவர்.
கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் கூட்டணி, ஆட்சியை பிடித்தால் அது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர் காலத்துக்கே உலைவைத்துவிடும்.
பொறுப்புமிக்க தனி நபர்களும் அரசியல் அமைப்புகளும் நிலை மையை சீர்தூக்கிப் பார்த்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ள வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வாக் களித்து கார்ப்பரேட்- வகுப்புவாத சக்தி களின் கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் அமரும் முயற்சியை முறியடிக்க வேண் டும் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அலிகார் பல்கலை. குஜராத் கலவரத்துக்கு காரணமான வர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக ஓட்டளிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்சங்கத்தின் கவுரவ செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண் டும். குஜராத், முஸாபர்நகர் கலவரத் துக்கு காரணமானவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர் கள் தேல்வி அடையும் வகையில் முஸ் லிம்களும், மதச்சார்பற்ற வாக்காளர் களும் சாதுர்யமாக வாக்களிக்க வேண்டும்.
மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம் சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற் கடிக்க வேண்டும்.
நடந்த சம்பவத்துக்கு மோடி இது வரை வருந்தவில்லை. முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20,000 முஸ்லிம் கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்ய வில்லை.
முஸ்லிம்களின் முதல் முக்கியத் துவம் அவர்களது பாதுகாப்புதான். அதை உறுதி செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Read more: http://viduthalai.in/page-2/78526.html#ixzz2yd9onR5I
மோடியின் டிவிட்டரில் பொய்யான எண்ணிக்கைகள்
டிவிட்டர் எனும் நவீன ஊடக செயல்பாடு, ஒருவர் கருத்தை பதிவு செய்தால், அதனை வரவேற்கவும், கருத்து கூறவும், மாறுபட்ட எண் ணத்தை வெளிப்படுத்தவும் உள்ள ஓர் சிறப்பான விஞ்ஞான கண்டு பிடிப்பாகும். பலர் அதில் தங்களை இணைத்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்; விவா தம் மேற்கொள்கின்றனர். மிகப் பெரிய பிரபலங்கள் இந்த டிவிட் டரை பயன்படுத்தி வருகின்றனர்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்த அடுத்த நிமி டங்களிலேயே, ஆயிரக்கணக்கான வர்கள் அவரது கருத்தை வரவேற்ப தாக விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பேர், மோடியின் டிவிட்டரை விரும்புகின்றனராம்; மோடி நன்றி தெரிவிக்கிறார்.
ஆனால், அத்தகைய எண்ணிக் கையில் யாரும் உண்மையில் விருப் பம் தெரிவிக்கவில்லை; பொய்யான முறையில், இதனை உண்டாக்கி வருகின்றனர், மோடியின் ஊடக ஏஜெண்டுகள்.
ஸ்டேட்டஸ் பீப்பிள் எனும் இணையதள நிறுவனம் லண்டனில் உள்ளது. இந்த இணைய தள நிறு வனம், அல்காரிதம் எனும் முறை யில், டிவிட்டர் பயன்பாட்டாளர் களில் பொய்யானவர்கள் யார், எந்தவித செயல்பாடும் இல்லாதவர் கள் யார் என கண்டறியும் திறமை படைத்த நிறுவனம். இந்த நிறு வனம், மோடியின் டிவிட்டரை விரும்புவதாக காட்டும் எண்ணிக் கையில், 46 விழுக்காடு பொய் யானவை என்றும், 41 விழுக்காடு, எந்தவித செயல்பாடும் இல்லாத வர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளது.
2009-ல் மோடி, டிவிட்டரை துவங்கும்போது, அவருக்கு ஒரு லட்சம் வாசகர்கள் உள்ளதாக சொன் னார்கள்; நவம்பர் 2011-ல், இந்த எண்ணிக்கை, நான்கு லட்சம் என்று சொன்னார்கள். தற்போது, பத்து லட்சம் என மோ(ச)டி சொல்கிறார்.
இதுபோல், பொய்யான வாசகர் களை உருவாக்குவது இப்போது அதிகமாகி உள்ளது; சில நிறுவனங் கள், இந்த வாசகர்களுக்கு, 10 பைசா முதல் 50 பைசா வரை, ஒவ்வொரு விருப்பம் தெரிவிக்கும்போதும் தருகிறார்கள் என்கிறார் இணைய தள நிறுவனத்தில் இயக்குநராக இருக் கும் அபிஜித் சோனாகரா.
மோடி என்கிற ஒரு மனிதர், எந்தெந்த வகையில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதற்கு, அவரது டிவிட்டரும் அதில் விருப் பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக் கையை பொய்யாக உயர்த்திக் காட்டி, மக்களிடையே தனக்கு அதிக செல் வாக்கு இருப்பதாக ஓர் மாயையை உருவாக்கும் இந்த மோசடிச் செய லும், ஒரு பானை சோற்றுக்கு ஓரு பருக்கை பதம் என்பதை தெளிவாக்கி உள்ளது.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/78528.html#ixzz2yd9xxNO1
பார்ப்பனர்
நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)
Read more: http://viduthalai.in/page-2/78520.html#ixzz2ydA7fziL
மனைவியை மறந்தவரால் ராஜ தர்மத்தை நிறைவேற்ற முடியுமா? - காங்கிரஸ்
புதுடில்லி, ஏப்.11- வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி, தனது வேட்பு மனுவில் தனக்கு திரு மணம் ஆனது பற்றி தெரி வித்திருந்தார். இதுவரை அவரை திருமணம் ஆகாத வர் என்று அறியப்பட்ட நிலையில், இந்த தகவல் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஷோபா ஓஜா கூறுகை யில், ஒரு பெண்ணிற்கு கண வர் செய்யும் நியாயமான கடமைகளைக்கூட மோடி செய்யவில்லை.
அப்பெண் ணிற்கு உரிய மதிப்பை அவர் கொடுக்கவில்லை. திருமணத்தின்போது தனது மனைவிக்கு கொடுத்த வாக் கினை நிறைவேற்ற முடி யாதவர் எப்படி இந்த நாட் டிற்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றுவார்?
40 ஆண்டுகளாக தனது மனைவிக்கு உரிய உரிமை யையும் பாதுகாப்பையும் வழங்காதவர் இந்த நாட் டிற்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்? மோடி ஒரு உண்மையை இந்த நாட் டிற்கு கூறவேண்டும். தனக்கு திருமணமான உண் மையை மோடி ஏன் மறைக்க வேண் டும்? எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப் பாக மோடியின் மனை வியை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.
மோடி தனது திருமணத்தை வெளிப் படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். தனது மனைவி யின் உரிமைகளை தடுப்ப தற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா? மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை சிந் திக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தனது வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.
Read more: http://viduthalai.in/page-5/78495.html#ixzz2ydBU2oyr
கடவுளை நம்பாதே!
முன்காலத்தில் அடுத்த வீட்டுக்காரன் பசியால் துடிப்பதைப் பார்த்து உதவி செய்தார்கள். இப்போது இருப்பவர்கள் அப்படி இல்லை - எல்லாம் அவன் தலையெழுத்து, பட்டினி கிடக்கிறான் என்று பேசுகிறார்கள்.
தலையில் யார் வந்து எழுதியது? தலையெழுத்து எப்படி இருக்கும்? பட்டினி கிடப்பதற்கு தலை எழுத்து என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லை, கூலி கிடைக்கவில்லை, அதனால் அவன் பட்டினியாக கிடக்கிறான்.
-மதுரை ஜில்லா நிலக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டது (29.12.1958)
தகவல்: ச.இராசாமி, சென்னை -18
Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBq5ism
அடிமைத்தன்மை
சிந்திக்க முடியாதவன் மனிதனைவிட மட்டமானவன்; சிந்திக்க மறுப்பவன் தனக்குத்தானே துரோகம் செய்பவன்; சிந்திக்க அஞ்சுபவன் மூட நம்பிக்கையின் முழு அடிமை.
- இங்கர்சால்
Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBxjVRn
ஆலயத் திருடர்கள்!
நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?
- மார்ட்டின் லூதர்
Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydC6Unpw
மனுநீதி இப்படிச் சொல்கிறது
ஆரிய ஆணுக்கும், ஆரிய இனமல்லாத பெண்ணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியும். ஆரிய பெண்ணுக்கும், ஆரியனல்லாத ஆணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியாது.
பார்ப்பானைக் கொல்வது, பார்ப்பானின் பொன்னைக் கவர்வது, குரு பத்தினியோடு உறவு கொள்வது ஆகியவை மகா பாதகங்களாகும். பார்ப்பானைக் கொன்றவன் 12 ஆண்டுகள் வனவாசம் புரிய வேண்டும். அல்லது எரியும் நெருப்பில் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.
அல்லது போர்க்களத்தில் அம்புகளை எய்கின்ற இலக்காக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். சூத்திரனைக் கொன்ற பார்ப்பான் ஆறுமாதம் தவம் புரிய வேண்டும்; அல்லது பத்து பசுக்களையும், ஒரு எருதையும் பார்ப்பானுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
ஒரு சண்டாளனை, அல்லது பிணத்தைத் தொட்டவன் குளிப்பதன் மூலம் தூய்மை அடையலாம்.
ஒரு பார்ப்பனப் பெண்ணோடு அவள் விருப்பத்திற்கு எதிராக சம்போக உறவுகொண்ட பார்ப்பனனின் தலையை மொட்டை அடிப்பது அதற்குரிய தண்டனை ஆகும். இதே குற்றத்தை மற்ற ஜாதிக்காரர்கள் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டும்.
Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCCKkvY
பழைமைக்கு அடி
ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.
நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.
உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லை யென்று கருதுகிறீர்களா?
மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.
நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.
இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?
நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?
எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங் களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.
நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ் வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்
Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCHscuu
அவதாரங்கள் அழிவு வேலைக்கே
கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?
அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!
திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.
தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.
நம்மையும் ஒழித்திருப்பார்கள்: மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங் களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண் டான் என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!
இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம. அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும்.
அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!
10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCQJkLq
முதல் தரமான விரோதி!
எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அதுதான்! வேறு எது?
-வால்டேர்
Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCXnMdH
அறிவைத் தரக்கூடிய புத்தகங்களை சேகரிக்க வேண்டும்
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.
ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.
பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமரூட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.
பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.
அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வழி வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.
நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது.
நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.
அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
-அறிஞர் அண்ணா
Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCggqy6
Post a Comment