Search This Blog

19.4.14

துக்ளக் சோவின் சோகம்!

சோவின் சோகம்!

திருவாளர் சோ ராமசாமி மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அடங்காத வெறிப் பிடித்து அலைவது அனைவருக்கும் தெரியும்.

பா.ஜ.க. போட்டியிடாத தொகுதிகளில் அ.இ.அ.தி. மு.க.வுக்கு வாக்களிப்பதுதான் நல்லது - மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய அது உதவி செய்யும். மாறாக பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது; ஓட்டுப் பிளவைத்தான் உண்டாக்கும் - இது பெரும்பாலான தொகுதிகளுக்குப் பொருந்தும். (துக்ளக் 16.4.2014).

பொது ஒழுக்கக் கேட்டுக்குத் தூண்டும் ஆபாசப் புத்தி இது என்பது பண்புள்ள மக்களுக்குத் தோன்றும்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தர்மத்தைக் காப்பாற்றிட எந்த அதர்மத்தையும் செய்யலாம் - அப்படி செய்வது தர்மமே!

அந்த (அ) தர்மத்தைத்தான் சோ இதில் கையாண்டுள்ளார். இதில் இன்னொரு அசிங்கமும் இருக்கிறது. பி.ஜே.பி.யை தேர்தலில் எதிர்த்து நிற்கும் அஇஅதிமுக - தேர்தலுக்குப் பிறகு பிஜேபிக்கு உதவும் என்று சோ எழுதுவதாகும்.

இந்த இழி தகைக் குணாளர்கள்தான் நாட்டில் ஊழல் பற்றியும், ஒழுக்கக் கேடுகள் பற்றியும் உரோமம் பிளந்து எழுதுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும் அதற்கு அடுத்த வாரம் வெளி வந்த துக்ளக்கில் 23.4.2014 தலையங்கப் பகுதியில் என்ன எழுதி இருக்கிறார்?

அ.தி.மு.க.வின் நிலையைப் பார்த்தால், அது தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தனித்த போட்டி, பா.ஜ.க.,விற்கு எதிரானது என்று கூற முடியாது. பா.ஜ.க.வை ஏன் விமர்சிக்கவில்லை? ரகசிய உறவுதானே காரணம்? என்று காங்கிரஸும், தி.மு.க.வும் தினமும் பிரச்சாரம் செய்தும்கூட பல கூட்டங்களில் பேசி விட்ட தமிழக முதல்வர் இதுவரை பா.ஜ.க.வை எதிர்த்து எதுவுமே கூறவில்லை. இனியும் கூட தேர்தல் பிரசாரங்களில் சூடு ஏற, ஏற அவர் பா.ஜ.க.வைப் பற்றி ஏதாவது குறை கூறினாலும், அது சம்பிரதாய எதிர்ப்பாகத்தான் இருக்குமே தவிர, மதவெறி என்ற அபத்தமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம் என்று தலையங்கப் பகுதியில் எழுதியுள்ளார்.

அரசியல் வல்லுநர் இந்த சோ என்று ஆலாபனம் பாடுவோர் உண்டு. இதற்கு மாறான சில நிகழ்ச்சிகளும் நாட்டில் நடக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு வெகு தூரம் சென்று தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடவில்லை.

அவருக்குக் கிடைத்த கடைசித் தகவலை - அதே தலையங்கத்தின் தலைப் பகுதியில் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த இதழுக்கான வேலைகள் முடிகிறபோது கிடைத்த தகவலின்படி காங்கிரஸ், பா.ஜ.க. இரண் டையும் டெபாஸிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் தனது பிரச்சாரத்தில் பேசியதாகத் தெரிகிறது. இப்படி காங்கிரஸுடன்  பா.ஜ.க.வையும் இணைத்து அவர் பேசியது துரதிர்ஷ்டவசமானது; வருந்தத்தக்கது - இந்த அணுகுமுறையை நாம் சற்றும் ஏற்கவில்லை - சோ - என்று பெயர் போட்டு எழுதுகிறார்.

சோ முதலில் ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும்; ஒன்று - தனது கணிப்புப் பொய்த்தது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இரண்டு தேர்தல் பிரச்சாரங்களில் சூடு ஏற, ஏற முதல்வர் பா.ஜ.க.வைப்பற்றி ஏதாவது குறை கூறினாலும் அது சம்பிரதாய எதிர்ப்பாகத் தான் இருக்கும் என்று இதே இதழில் தலையங்கப் பகுதியில் குறிப்பிட்டிருந்தாரே - அந்தக் கண்ணோட்டத்தில் முதல்வர் பேச்சை ஏன் சோ ராமசாமி எடுத்துக் கொள்ளக் கூடாது?
பரிதாபம்! சோ தனது அரசியல் ராஜ தந்திரம் எல்லாம் அடி மாட்டு விலைக்குப் போய் விட்டது என்று ஒப்புக் கொள்வாரா என்ன?

முதல்வர் பேசியதற்கு தனது விசனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் சோ தி.மு.க.வோடு சேர்த்து அ.தி.மு.க.வும் மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது என்று சோவின் அபிமான சிரோன்மணியான நரேந்திர மோடி பேசியது பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? அதன் எதிர்த் தாக்குதல் தானே முதல்வரின் பதிலடி?

ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டிருந்த பயணத்தில் நடு வழியில் ஏன் இந்தச் சிக்கல்? தி.மு.க.வுக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கப் போகிறது என்று தங்களுக்குள் பேசி சப்புக் கொட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வாக்களிப்பு நாள் நெருங்க நெருங்க, மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டவுடன், தங்களுடைய பிரச்சாரத்தை வேறு வகையில் அமைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி முற்றி விட்டதுதான் இதற்குக் காரணம்.

அ.இ.அ.தி.மு.க.வுக்கும், பிஜேபிக்கும் மறைமுகக் கூட்டு என்று எதிர் அணியினர் கிளப்பிய குற்றச்சாற்று உண்மைதான் என்பதை இந்த இரு கட்சிகளின் பிரச்சாரத்தின் அடிப்படையில் நம்பும் நிலை ஏற்பட்டு விட்டதால் - வேறு மாதிரியாக நடந்து கொள்ள வேண் டிய அவசியம் ஏற்பட்டு விட்டது இரு கட்சிகளுக்கும் என்பதுதான் உண்மை.

நாள் நெருங்க நெருங்க சோ வகையறாக்களுக்கு சோகமான சூழல்தான் உருவாகும் என்பதில் அய்யமில்லை.

துக்ளக் தலையங்கத்திலேயே அந்தத் தொனி ஒலிக்கிறதே!

                        -----------------------------"விடுதலை” தலையங்கம் 19-04-2014

24 comments:

தமிழ் ஓவியா said...


மதிமுக பொதுச் செயலாளர் கொள்கையும் பேசுகிறார்ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்குக் கொள்கை ஞானோதயம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ஏற்பட்டு விட்டது.

என்ன புதிர் என்கிறீர்களா? பாரதீய ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொன்னாரே பார்க்கலாம்.

அப்படியென்றால் ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறாரா? அதைப்பற்றி மூச்சுவிடவில்லையே - ஏன்?

வெளி நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட் டால் அவர்களுக்கு உதவுவோம் என்று பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் கூறப்பட் டுள்ளதே - அதைப்பற்றி மதிமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவைச் சேர்ந்த இந்து அல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பா.ஜ.க. முகத்தைத் திருப்பிக் கொள்ளுமா?

பசுவதை பற்றி பா.ஜ.க. கூறுவதுபற்றி என்ன கருத்து?

பச்சையான இந்துத்துவா தேர்தல் அறிக்கையை முன் வைத்து பா.ஜ.க. இந்தத் தேர்தலைச் சந்திக்க வந்து விட்டது. இதற்கு நடைபாவாடை விரிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; திராவிட இயக்க த்தைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் பொல்லா நிலைக்குக் காலா காலத் திற்கும் மதிமுகவும், பாமகவும் பதில் சொல்லி யாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/78947.html#ixzz2zNxc6A9I

தமிழ் ஓவியா said...ராம்தேவ் மீதான புகார் எதிரொலி:
யோகா முகாம்கள் நடத்த தடை

புதுடில்லி, ஏப். 19- யோகா குரு ராம்தேவ் மீதான புகாரின் எதிரொலியாக, யோகா உள்ளிட்ட அரசியல் சார்பற்ற முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ், வாழும் கலை நிறுவனர் சிறீசிறீரவி சங்கர் ஆகியோர் பயிற்சி முகாம் என்ற பெயரில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பொது மக்களிடம் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், யோகா உள்ளிட்ட அரசியல் அல்லாத அமைப்புகள் முகாம்கள் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், சில அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறுகள் நடக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலோ, ஏற்கெனவே அளித்த அனுமதியை தவறாக பயன்படுத்திய அமைப்புகளாக இருந்தாலோ அவர்கள் யோகா போன்ற முகாம்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம். இதுபோன்ற விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுபற்றியும் ஆணையத் துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தை ஊழல் பிரதேசம் என்று கூறலாம் : சோனியா

நீமச், ஏப். 19- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் தொகுதியின் தற்போதைய எம்பியும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான மீனாட்சி நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறு கையில், சமீப காலமாக குஜராத் மாநிலம்தான் வளர்ச் சியின் மாதிரி என்று பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அம்மாநி லத்தில் அங்கு 40 விழுக்காடு மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் உள்ள தலித் இனத்தை சேர்ந்த 27000பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்னமும் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான காலியிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கினார்.

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்தியப்பிரதேச மாநில ஊழல்களை பட்டியலிட்டு பேசிய சோனியா இங்கு நடைபெற்ற தேர்வுவாரியத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு தகுதியில்லாதவர்களுக்கு அம்மாநில அரசு வாய்ப்பளித் திருக்கிறது. இம்மாநிலத்தை மத்தியபிரதே சம் என்று கூறுவதை விட ஊழல்பிரதேசம் என்று கூறலாம். அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78953.html#ixzz2zNxoMRvi

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/78937.html#ixzz2zNy4kc00

தமிழ் ஓவியா said...


தூக்கிலிட்டால், அதையும் நாங்கள் தான் எதிர்ப்போம், மோடி

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், 2002 குஜராத் கலவரத்தில், ஒரு தவறு தன்மீது நிருபிக்கப்பட்டாலும், தன்னை நடுத்தெருவில் வைத்துத் தூக்கிலிடலாம் என்றார் திருவாளர், மனித நேயர் மோடி.

இதைக் கேட்டதும், இங்கே உள்ள சில அல்லக்கைகள், ஆகா, பார், பார், மோடி எவ்வளவு யோக்கியர். எப்படி பேசுகிறார் பாருங்கள் என்கிறார்கள். அவர்களுக்காக வரலாற்றை சற்று ஞாபகப்படுத்துவோம்.

நரோடா பாட்டியா என்கிற ஊர், குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், அகமதாபாத் திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர்., அந்த நரோடா பாட்டி யாவில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர் அப்போது பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்.மாயா கோட்னானி. இவர் ஒரு பெண்மணி. இவரும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியும் இணைந்து ஏறத்தாழ 5000 பாஜக, பஜ்ரங்தள் கலவரக்காரர்கள் துணையோடு, அந்தப் பகுதியில் கலவரத்தை இஸ்லா மியர்களுக்கு எதிராக நடத்தினர். 28.2.2002 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து பத்து மணி நேரம் அந்த கலவரம் நடந்தது. 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மசூதிகளையும், முஸ்லீம் மக்கள் வாழும் வீடுகளையும், எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து, தரை மட்டமாக்கினர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இத்தனையும், பாஜக பெண் எம்.எல்.ஏ. மருத்துவர் மாயா கோட்னானி முன்னிலையில் நடந்தது. இந்தப் பெண்மணி, கலவரக்காரர்களுக்கு, முஸ்லீம்களை கொல்ல, அரிவாளை தந்தும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கலவரம் நடந்தது 28.2.2002-இல். அப்போது அவர் எம்.எல்.ஏ. ஒரே இடத்தில் 97 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது இந்தியாவிலேயே, நரோடா பாட்டியாவில் தான். அத்தகைய கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈனச் செயல் அதுவும் ஒரு பெண்மணி தலை மையில் நடைபெற்றது.

அவரது வழக்கை, மோடி அரசு, வேண்டுமென்றே இழுத்தடித்த நிலை யில்தான், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, சிறப்பு விசாரணை மன்றம் 2008-இல் அமைக்கப்பட்டு, மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 60 பேருக்கு மேல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. 29.8.2012 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தீர்ப்பு?

நரோடா பாட்டியாவில் 97 முஸ் லீம்கள் கொல்லப்பட்டதில் மாயா கோட்னானிக்கு தொடர்பு உள்ளது; ஆகவே அவருக்கு 28 ஆண்டு கால இரட்டை ஆயுள் தண்டனையும், பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், இவர்களோடு சேர்த்து, உடனிருந்த 30 பேருக்கு 14 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.

மாயா கோட்னானி எம்.எல்.ஏ.ஆக இருந்து கலவரம் நடத்தியது 28.2.2002. அவர் மீது கொடூரமான குற்றச்சாட்டு இருக்கிறது என மோடிக்குத் தெரியும். அது தெரிந்தும் 2007-இல் தனது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மாயா கோட்னானியை நியமித்தார் மோடி.

ஆகஸ்டு, 2012-இல் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே, மோடி, இப்போது, நாடகம் நடத்துவது போல், அப்போதும், மாயா கோட்னானிக்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் மனு தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி, மாயா கோட்னானி மீது தூக்குத்தண்டனை கோரும் முடிவை மாற்றிக்கொண்டது.

ஆனால், இப்போது, மோடி சொல்கிறார். தான் குற்றம் செய்திருந்தால், முச்சந்தியில் வைத்து அவரை தூக்கிலிடலாம் என்கிறார்.

கொலையாளியை தெரிந்தே தனது அமைச்சரவையில் சேர்த்தவர்; இரட்டை ஆயுள் தண்டனை தந்த நேரத்திலும் தனக்கு அதில் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்கிற ஓர் எண்ணம் இல்லாதவர், இப்போது தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் பெரிதாகப் பேசப்படுவதால், தூக்கு தண்டனை ஏற்கத்தயார் என நாடகம் ஆடுகிறார்.

அவ்வாறு, மோடிக்கு இந்த நாட்டிலே தூக்குத்தண்டனை என விதிக்கப்பட்டால், அது ரத்து செய்யப் பட வேண்டும் என போராடுபவர் களும் நாங்களாகத் தான் இருப்போம்.

ஆகவே,மோடி ஜி, பயமில்லாமல் பொய் சொல்லுங்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78943.html#ixzz2zNyOM4x6

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


திமுக ஆட்சியில் அப்படி
அதிமுக ஆட்சியில் இப்படி

எங்கள் ஊரின் நிலைமை ரேசன் விபரம் திமுக ஆட்சியில் 10 கிலோ கோதுமை, மண்ணெண்ணெய் 50 ரூபாய்க்கு மளிகை பொருள் சமையல் எண்ணை பருப்பு இவைகள் தாராளமாக கிடைத்தது இப்பொழுது கோதுமை 5 கிலோ மண்ணெண்ணெய் 5 லிட்டர் மளிகை பொருள் சுத்தமாக இல்லை. பருப்பு எண்ணெய் முந்தியவர்களுக்கு மட்டும்தான் அதிலும் 2014 ஏப்ரல் மாதம் 2 கிலோ கோதுமை கொடுக்கிறார்கள்.

மக்கள் நல பணியாளர்கள் நிலை என்ன?

இலவச பொருள் மிக்சி கிரைண்டர் மின் அடுப்பு இவைகளை இலவசமாக கொடுப்பதாக சொல்லி விட்டு அதற்கான பணத்தை மின் கட்டணத்தை அதிகரிக்கச் செய்து அதன் மூலமாக மேற்படி பொருள் களுக்கு உண்டான பணத்தை மக்களுக்கு தெரியாமல் வசூலிக்கின்றது இன்றைய ஆட்சி.

டேன்டி (டீ) எஸ்டேட்டில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கிடைக்காத சலுகை களை தி.மு.க. ஆட்சிதான் செய்தது அதாவது தற்காலிக தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளத்தை மாற்றி மாதச் சம்பளமாக செய்து அதன் மூலமாக ஆண்டு ஊக்கத் தொகை கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

- அ.ப. முருகவேல், கொளப்பள்ளி

Read more: http://viduthalai.in/page-2/78945.html#ixzz2zNyX5IIy

தமிழ் ஓவியா said...


பத்மநாபசுவாமி கோயிலில் செல்வங்கள் கடத்தல்


உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம், ஏப். 19-திருவ னந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து மன்னர் குடும்பத்தினரும் சில ஊழியர்களும் செல்வங்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையி லான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்வங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளை திறந்து செல்வங்களை மதிப்பிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப் பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கியிருந்து பத்மநாபபுரம் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஊழியர்கள் ராஜ குடும்பத்தினர் உள்பட பலரை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத் தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு: ஹீ பத்மநாபசுவாமி கோயில் ஒரு பொது சொத்தாகும். ஆனால் கோயிலை யும், கோயிலுக்கு சொந்தமான சொத்துக் களையும் தங்களுக்கு சொந்தமான சொத் துக்களாக கருதி மன்னர் குடும்பத்தினர் சில செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹீ மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுக தொடர்புகள் உள் ளன. இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து செல்வங்களை கடத்தியிருக்க லாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* இந்த சந்தேகத்தை உறுதிப்படுத் தும் வகையில் கோயிலுக்குள் வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹீ ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்கமுலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹீ பல ஆயிரம் கோடி மதிப்புள்ள செல்வங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள செல்வங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹீ ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும்.

* கோயில் நட்டத்தில் இயங்கு வது போல் பொய் கணக்கு காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்கு களை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

* கோயில் விவகாரங்களில் இனி மேல் மன்னர் குடும்பம் தலையிடக் கூடாது.

* கோயில் நிர்வாகத்தை கவனிக்க புதிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். ஹீ மன்னர் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும்.

*இந்தியா குடியரசு நாடாகி பல வரு டங்கள் ஆகின்றன. ஆனாலும் திருவனந்த புரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மன்னர் ஆட்சியும் நடப்பது போல் உள்ளது. ஒரு குழுவாக சேர்ந்து கோயிலில் இருந்து செல்வங் களை கடத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* இந்த கடத்தலை தடுத்த சில ஊழியர்களுக்கு எதிராக கொலைமுயற்சி சம்பவமும் நடந்துள்ளன. சமீபத்தில் ஒரு ஊழியர் மீது அமிலம் வீசப்பட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தவிர சமீபத்தில் கோயில் குளத்தில் சந்தேக மான முறையில் ஒரு ஆண் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறை முறையாக விசாரிக்க வில்லை. ஹீ பத்மநாபசுவாமி கோயில் விவ காரத்தில் கேரள அரசும் மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளது.

* கோயில் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படையை நியமிக்க வேண்டும். இதுதவிர கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை கோயிலுக்குள் பாலி யல் வன்கொடுமை முயற்சி நடந் துள்ளது. இது போல் பல மோசமான சம் பவங்கள் கோயிலுக்குள் நடந்துள்ளன.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது வரும் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/78944.html#ixzz2zNykJ5Aw

தமிழ் ஓவியா said...


மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது தொல்.திருமாவளவன்

சிதம்பரம், ஏப். 19- விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி யின் சிதம்பரம் நாடாளு மன்றத் தொகுதியின் வேட் பாளருமான திருமாவள வன் ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற் பதிந்த நல்லூர், நாயகனைப் பிரியாள், சிங்கராயபுரம், பாண்டிபஜார், அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார் பேட்டை, ஆதிச்சனூர், நத் தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள் மொழி, மற்றும் தா.பழூர் உள்ளிட்ட அய்ம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஓட்டு கேட்டார். சிலால் என்னுமிடத்தில் பிரச்சா ரத்தை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதா வது:

இந்தத் தேர்தல் மதவா தத்திற்கும், ஜனநாயகத்திற் கும் இடையே நடக்கின்ற போர். தி.மு.க. தலைவர் கலைஞர் மதவாதத்திலி ருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார் மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது, ஆட்சி சிக்கிக் கொள்ளக்கூடாது.

நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமா னால் சமூகநீதியை காப் பாற்ற வேண்டுமானால், இட ஒதுக்கீட்டுக் கொள் கையை காப்பாற்ற வேண் டுமானால், இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூ கத்தைப் பாதுகாக்க வேண் டுமானால் மதவாதிகளிட மிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற அக் கறை தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்ட தலை வர் கலைஞர் அவர்கள் அடுத்த பிரதமரை தீர்மா னிக்க வேண்டும். அவர் அடுத்த பிரதமரை தீர்மா னிக்க வேண்டுமானால் அவருடைய கரத்தை வலுப் படுத்த வேண்டும். அவரு டைய கரத்தை வலுப்படுத் துவதற்கு நீங்கள் மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தலைவர் கலைஞர் மட் டும்தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்கு கிறார்.

- இவ்வாறு தொல். திருமாவளவன் உரையாற் றினார்.

Read more: http://viduthalai.in/page-5/78940.html#ixzz2zNzvcXN2

தமிழ் ஓவியா said...

பகிஷ்காரத்தின் இரகசியமும் தலைவர்களின் யோக்கியதையும்


சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம், அடிவிழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும்,

அதனால் சில பார்ப்பனர்கள் ஊரைவிட்டே ஓடவேண்டியதாய் நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எ.சீனிவாசய்யங்கார் முதலிய வர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள்.

அதாவது பகிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளு கின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது. என்றும் இந்தப் பட்டணத்திலேயே இருந்து பகிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரைவிட்டுப் போய்விடுவதா? என்று கோபத்துடன் கேட்டார்கள்.

அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும் சர்க்கார் உத்திரவில்லாமல் தெருவில் தலைகாட்டுவதில்லை என்றும் மற்ற பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததுடன் சர்க்காருக்கும் போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவித்துவிட்டுப் பொதுமக்களை ஏமாற்ற வேண்டி சைமன் கமிஷன் நடக்காத ஏதாவது ஒரு தெருவில் சில குறிப்பிட்ட நபர்களுடன் ஊர்வலம் செல்ல மாத்திரம் அனுமதி கேட்டுக் கொண்டார்கள்.

போலீஸ் கமிஷனர் சைமன் கமிஷன் வரும் வீதியில் வேண்டுமானாலும் நீங்கள் ஊர்வலம் போகலாம்; நான் பந்தோபது கொடுக்கின்றேன் என்று சொல்லியும் கண்டிப்பாய்க் கமிஷன் போகாத வீதியிலேயே ஊர்வலம் போக உத்திரவு பெற்றதோடு அதற்கும் பந்தோபஸ்தும் பெற்றுக் கொண்டார்கள். இதை அறிந்த ஆந்திர தேசத்துப் பார்ப்பனர்கள் போலீஸ் கமிஷனரோடு சென்னை பார்ப்பனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்து தாங்கள் நேரில் பகிஷ்காரம் நடத்துவதால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

சர்க்கார் அவர்களைப் பிடித்து அரடு செய்தவுடன் அவர்களும் தங்களை வெளியில்விட்டால் உடனே ஊருக்குப் போய் விடுகின்றோம் என்கின்றதாக வாக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும், சென்னை பார்ப்பனர்களும் ஆந்திரப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளுக்கு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய சேதிகளிலேயே அறியக் கிடக்கின்றது.

பகிஷ்காரத்தின் யோக்கியதை இப்படி இருக்க வேறு பல பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் பேரால் தாராளமாய் சைமன் கமிஷனிடம் சென்று தங்கள் சமூக நன்மைக்குத் தேவையான காரியங்களை எடுத்துச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை அடுத்த வாரம் வெளிப்படுத்துவோம்.

தமிழ் ஓவியா said...

பொதுவாகச் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தங்கள் சங்கதியை அவர்களிடம் எடுத்துச் சொல்லாதவர்கள் யார் என்பதும், சைமன் கமிஷனர்கள் உத்தேசித்து வந்த காரியங்களில் எது தடைபட்டுப்போய் விட்டது என்பதும் முக்கியமாக யோசித்து பார்க்க வேண்டியதோடு காங்கிரஸ் மகாசபை என்பதின் யோக்கியதை எப்படிப்பட்டது, அதை மக்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் நமது நாட்டில் ஏற்பட்ட அந்த நிமிஷம் முதலே இக்கூச்சல் வடநாட்டில் மகமதியர்களுக்கு விரோதமாக அவர்களுடைய வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ உரிமையை பிடுங்கிக் கொள்ளவும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் சிறப்பாக தீண்டப்படாதார் என்று கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைத் தலையெடுக்க வொட்டாமல், செய்வதற்காகவும், செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்று நாம் எழுதியும் பேசியும் வந்ததோடு, மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கண்டிப்பாய்த் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் அவசியம் கமிஷன் முன் சொல்லியே ஆக வேண்டுமென்று வற்புறுத்தியும் வந்தோம்.

அந்தப்படியே விஷயங்கள் நடந்ததோடு முக்கியமாய்த் தீண்டப்படாதவர்கள் எனப்பட்டவர்கள் இமயம் முதல் குமரிவரையில் ஒரே மாதிரியாகத் தங்கள் நிலைமையையும், தேவைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது குறித்தும் அவற்றைக் கமிஷனர் கனவான்கள் நன்றாய் உணர்ந்து வேண்டியது செய்வ தாய் வாக்குறுதி கொடுத்திருப்பதைக் குறித்தும் நாம் அளவில்லா மகிழ்ச்சி அடை கின்றோம். இந்தக் கமிஷன் அறிக்கையின் மீது வழங்கப்படும் சீர்திருத்தம் என்பது எத்தன்மையதுவாக இருப்பினும் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை.

ஏனெனில் அச்சீர்திருத்தம் என்பதில் இப்போது தெரிவிக்கப்பட்ட குறைகள் நீங்கும் படியான மார்க்கங்கள் இல்லாதிருக்குமானால் இந்தச் சர்க்காரின் கண்களில் கோலை விட்டு ஆட்டக்கூடிய நிலைமையைச் சாதாரணமாக வெகு சுலபத்தில் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடிய சவுகரியங்கள் தாராளமாக கிடைத்துவிடும், என்கின்ற உறுதிதான் - ஆதலால் சைமன் கமிஷன் விஷயத்தில் நாம் நமது கடமையைச் செய்து விட்டோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78956.html#ixzz2zO0QlTkg

தமிழ் ஓவியா said...


இனியாவது புத்தி வருமா? இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்


சுதேசமித்திரன் இந்து பத்திரிகைகளின் பத்திராதிபரும் தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிர காரியதரிசியாயிருந்தவரும் இந்தியாவின் 33-கோடி பொதுமக்களுக்கு சுயராஜியம் வாங்கிக் கொடுக்க உயிர் விட்டுக் கொண்டு பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ.ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம்!

அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்பு வாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்டவிரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்திரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம்,

இதற்குப் பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. சண்முகம்) தவிர மற்ற எல்லோரும் பார்ப்பனர்களானதால் யாரும் ஒன்றும் பேசாமல் கேள்விக்கு அனுகூலமாயிருந்தார்களாம்.

அரசாங்க மெம்பர் பதில் சொல்லுகையில் இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும் சென்னை அரசாங்கத்தை விவரம் கேட்டுப் பதில் சொல்லுவதாயும் சொல்லிக் கொண்டிருக்கும் போது திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் எழுந்து அதைப்பற்றி சர்க்கார் மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்றும் மேலும் அநேகருக்குத் திருப்தி என்றும் சொன்னாராம் உடனே திரு.எ.ரங்கசாமி அய்யங்கார் இது உண்மையல்ல என்றாராம்.

உடனே திரு.சண்முகம் எழுந்து சென்னை சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் கிளப்பி அங்கத்தினர்கள் எல்லோராலும் வகுப்புவாரி உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டும் அநேக பொதுக்கூட்டங்களில் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் ஆதரித்தும் பாராட்டியும் தீர்மானங்களும் செய்யப்பட்டும் இருக்கின்றது என்று சொன்னாராம். இந்த சமயம் அரசாங்க மெம்பரும் சட்டசபை மெம்பர்களும் அய்யங்கார் முகத்தைப் பார்த்தார்களாம்.

அய்யங்கார் முகம் பூமியை பார்த்ததாம். உடனே அரசாங்க மெம்பர் எழுந்து நல்ல சமயத்தில் தனக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்ததற்காக திரு. சண்முகத்திற்கு வந்தனம் செலுத்து வதாய்ச் சொன்னாராம். இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் கைத்தட்டினார்களாம்.

இவற்றை அசோசியட்பிரஸ், பிரீபிரஸ் பிரதிநிதியும் பார்த்து கொண்டே இருந்தும் கூட இதை எந்தப் பத்திரிகைக்கும் தெரியப்படுத்தவேயில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கம் பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்புவதில் எவ்வளவு அயோக்கியத் தனம் செய்கின்றது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

அன்றியும் இந்திய சட்டசபை தானங்களை பெரிதும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இருப்பதால் அவர்களால் நமக்கு எவ்வளவு துரோகங்கள் நடைபெறுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இனியாவது இந்திய சட்டசபை ஓட்டர்களுக்கு புத்திவருமா?

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 31-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO17d2oR

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடச் சமுதாயத்திற்கு மானம், அறிவு, மனிதத் தன்மை என்பவை இல்லாமல் போக - அடியோடு இல்லாமல் போக ஆரியர்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் அந்த வெற்றியை அழித்து நாம் மனிதத் தன்மை பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்றே சொல்லுவோம். இதில் இறங்குவது, மிக்க யோசனை செய்து செய்யவேண்டிய காரியம் என்றும் சொல்லுவோம்.

பார்ப்பனருக்கு ஆயுதம் பஞ்சாங்கமும், தர்ப்பைப் புல்லும்தான். நமக்கு ஆயுதம் நம்முள் ஒற்றுமையும் நமது மான அபிமானமுந்தான்.

நம் இருவர் நிலைமையைப் பற்றிச் சிந்தித்தோமானால் ஒரு பார்ப்பனராவது பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் தன்மையிலிருந்து ஒரு சிறிதும் தவறி நடந்து கொள்ள மாட்டார்கள்; விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலோர், தன்தன் சுயநலத்திற்கு இரண்டையும் விலை கூறி விற்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO1GI1KN

தமிழ் ஓவியா said...


பிராண வாயுவை மட்டும் உணவாக உட்கொள்ளும் உயிர்!டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹன்சிராய் என்பவர் விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார். வடக்கு பசிபிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி இந்த ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒரு வகை பாக்டீரியா உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாக்டீரியாக்கள் 8 கோடியே 60 இலட்சம் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுக்குப் பதிலாக ஆக்சிஜனை மட்டும் சுவாசித்து இவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் மூலம் அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பாக்டீரியா பற்றி மேலும் விரிவான ஆய்வு நடந்து வருவதாக ஹன்சிராய் கூறியுள்ளார். இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்துக்கு கீழே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page2/78911.html#ixzz2zO2HSP5i

தமிழ் ஓவியா said...


மதம் பிடிக்க வேண்டாமே! .


அலைபேசியில் குறுஞ்செய்திமூலம் மதத்துக்கு எதிரான கருத்தை வெளி யிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட இணையர்மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, விசாரணையின் முடிவில் பாகிஸ் தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் கோஜ்ரா நகரில் ஷப்கத் இம்மானுவேல் என்பவர், அவருடைய மனைவி ஷாகுப்தா கவுசர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று இவருடைய அலைபேசி யிலிருந்து இசுலாத்தில் புனிதராகக் கூறப்படும் முகமதுவை விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பி, இசுலாமிய மதத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக அவர்மீது புகார் எழுப்பப்பட்டது. மவுல்வி முகம்மத் உசேன் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கணவனுடன் அவர் மனைவியையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 40முதல் 50 வயதுடைய இருவரும் வறுமையில் உள்ளவர்கள். வழக்கை நடத்தவே வாய்ப்பற்றவர்கள். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய பொரு ளான அலைபேசியும் முன்னதாகவே தொலைந்து போனதாகவும் தெரிவித் துள்ளனர். தோபா தேக்சிங் நகரில் உள்ள நீதி மன்றம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்தது. தற்போது நீதிபதி மியான் ஆமிர் ஹபீப் விசாரணை செய்து முடிவில் தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில் அவ் விருவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தரப்பு வழக் குரைஞர் நதீம் ஹசன் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி உள்ளார்.

இதேபோல், 2009-இல் இதே குஜ்ரா பகுதியில் குர்ரானை இழிவுபடுத்தியதாக ஏற்பட்ட வதந்தியில் ஒரு கும்பல் வன் முறையில் ஈடுபட்டு கிறித்துவர்கள் வாழ்கின்ற அப்பகுதியில் சுமார் 77 வீடுகள் தீக்கிரையாகின. சுமார் ஏழு பேர் அக் கலவரத்தில் உயிரிழந்தனர். அதேபோல் லாகூரில் ஜோசப் காலனியில் தனிப்பட்ட வர்களிடையே, பேச்சுவாக்கில் பேசிய பேச்சுகூட புகாராக பதிவாகி சவான் மாசிக் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாகிஸ் தானில் அங்குள்ள சிறுபான் மையினரை தனிப்பட்ட வகையிலான தகராறுகளுக்குக் கூட இந்த சட்டத்தை துணையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்கப் படும் கொடுமை நிகழ்கிறது.

180 மில்லியன் மக்கட்தொகையில் 97விழுக்காட்டினர் இசுலாமியராக உள் ளனர். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் மூலம்கூட சிறுபான்மையினர் பாதிக்கப் படுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page4/78916.html#ixzz2zO3L0l9W

தமிழ் ஓவியா said...


பகவத்சிங் நினைவைப் போற்ற நாத்திகர்கள் அணி வகுப்பு


விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாத்திகர்கள் குவிந் தனர். 250-க்கும் மேற்பட்ட நாத்திகர்கள் மும்பையில் பகத்சிங் நினைவுநாளில் திரண்டனர். அந்நிகழ்வில், மத சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டித்து ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். கடந்த ஆகஸ்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவரும், ஆதிக்க சக்திகளை எதிர்த்து வந்தவரு மாகிய டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல்துறை உண்மை தகவல்களின்பேரில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தின் புறநகர் கலினா வளாகத்தில் நடைபெற்ற நிகழ் வின் அமைப்பாளர் சஞ்சய் சவார்க்கார் கூறும்போது, எல்லோரும் ஒன்று சேர்வதன் நோக்கம் என்னவென்றால், ஒரே சிந்தனையுள்ளவர்கள் ஓர் அமைப்பாக இணைந்து, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதே. அதே போல், நாத்திகராக இருப்பதில் நீதிக்குப் புறம்பாக ஏதுமில்லை என்கிற செய்தியை சமுதாயத்துக்கு தெரிவிப்பதுமாகும். மத சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை உரு வாகும்போது, பரந்த சிந்தனையாளர்கள் ஒன்று சேர்வது முக்கியமான தேவை யாகும். நான் ஏன் நாத்திகன் என்கிற பகத் சிங் கட்டுரை அனைவரும் அறிந்ததே. அவருடைய நினைவுக்காகவே இந்நிகழ்வு இங்கே நடைபெறுகிறது என்றார்.

எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வல்லுநருமாகிய அச்யுத் கோட்புலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் (Federation of Rationalist’s Association of India)
நரேந்திர நாயக் மற்றும் பலர் பங்கேற்று உரை ஆற்றினர்.

நரேந்திர நாயக் பேசும்போது, கடவுளிடம் உங்களுக்கு பயம் உண்டா? என்று என்னிடம் கேட்பார்கள். நான் எப்போதுமே சொல்வேன்: கடவுளின் முகவர்களால்தான் அச்சம் ஏற்படும் என்பேன். அதேபோல் ஏராளமான நாத்திகர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்கள் பெருமிதத்துடன் வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.

எழுத்தாளர் பவார் பேசும்போது மிகுந்த கவலையுடன் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல் துறை போதுமான அக்கறையுடன் முன் னெடுத்துச் செல்லவில்லை. விசாரணையில் வேகம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

- (டி.என்.ஏ. ஆங்கில நாளிதழ் 24-3-2014)

Read more: http://viduthalai.in/page5/78917.html#ixzz2zO3fVEZk

தமிழ் ஓவியா said...


புதிய எழுத்தாளர்களை ஏன் தேடுகிறீர்கள்?


நூல்களை பற்றி விவாதிக்க விரும்பு கிறீர்களா? நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நாடகங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஒலிவடிவில் உள்ள நூல்கள் என்று பல உள்ளன. அனைத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும் என்பதில்லை. அமர்ந்து விவாதியுங்கள்.

புதிய எழுத்தாளர்களின் நூல்களைத் தேடியபோது, நூல் விரும்பிகள் அல்லது நண்பர்கள் குழு மூலம் நூல்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றபின்னர்தான் விருப் பமான நல்ல நூல்களை தெரிவுசெய்து வாசிக்கவும், தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளவும் முடிந்தது.

பலநேரங்களில், ஓர் எழுத்தாளரின் நூல் தொகுப்பை கால வரிசையாக படித்திட முயற்சி செய்துவந்துள்ளேன். புதிய எழுத் தாளர்களின் நூல்களைப்போலவே பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்களையும் படிப்பதில் மகிழ்வதோடு, என்னை வளர்த்துக்கொள்ளவும் முடிந்தது.

நூல் விற்பனையகத்துக்கு செல்லும் போதும், நூலகத்துக்குச் செல்லும்போதும் அங்கு பணிபுரிபவர்கள் எடுத்துக்கூறும் புதிய நூல்களை அதன் அறைகளிலிருந்து எடுத்துக்கொள்வேன். புதிய வரவுகளாக என் கவனத்தை ஈர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து கொள்வேன். அதேபோல், நூல் விற்பனை நிலையமானாலும், நூலகமானா லும் விற்பனைக்கு என்று உள்ளவற்றை கவனத்தில் கொள்வேன்.

நூல்களின் பட்டியலைப் பெற்று கற்பனைக் காவியங்களையும், அறிவியல், கற்பனை மற்றும் மர்மக் கதைகளை தெரிவு செய்து அதிலும் புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பெற முயற்சி செய்வேன்.

சிலர் கூறுவதுபோல், இணையத்தில் உள்ள நூல்களின் குறிப்புகளை, சில பக்கங்களை முதலில் படித்துப்பார்த்து விட்டு பிறகு இணைய தளம்மூலமே பெற்றுக் கொள்வேன்.

பார்னே & நோபிள் இணையதளம் நூல்களின் முன்னோட்ட வாசிப்புக்கு சில பக்கங்களை அளிக்கிறது. அதை பல நேரங்களில் மறந்துவிடுகிறேன்.

சில நேரங்களில் விமர்சனங்களைப் படிப்பதன் மூலமும், கவரும் அட்டைகள் மூலமூம், ஒரு நூலில் மற்ற நூல்குறித்து குறிப்பிடப்படுவதைப் பார்த்தும், பார்லே & நோபிள் நூல்களில் ஒரே நேரத்தில் அல்லது ஒரே தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் குறித்தும் நூல்கள் பெறுவதில் என்னை இணைத்துக் கொள்கிறேன். கடந்த வாரம் கூறியதுபோல், நல்ல படங்களிலிருந்தும், சில நேரங்களில் நூல்களைப்பற்றி அறிந்துகொள்வேன். பிஹைண்ட் தி லைன்ஸ் (Behind the Lines) என்கிற படத்தைப் பார்த்தபோது டாக்டர் ரிவர்ஸ், சீக்ஃப்ரெய்ட் சாசூன் குறித்து அறிந்துகொள்ள பட் பார்க்கர் எழுதிய ரீஜெனரேஷன் (Regeneration) என்கிற நூலைப்படிக்க முடிவு செய்தேன். அந் நூலைப் படித்த பின்னர் மீண்டும் அப் படத்தை பார்த்தபோதுதான் அது எப் பேர்ப்பட்ட படம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பலரும் நல்ல வாசிப்பாளர் பட்டியலில் உள்ளனர். விருப்பமான எழுத்தாளரின் அடுத்த நூலுக்காகக் காத்திருக்கும்போது சிறிதே சலிப்பும் ஏற்படும். அப்போது, புதிய எழுத்தாளருக்கான தேவை ஏற்படுகிறது. சில நூல்கள் மூன்று தலைப்புகளில் ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நூல்களை இடைவெளிவிடாமல் படித்து விடுவேன். நூல் தேடுதலில் முதலில் தேடிய நூலைக்காட்டிலும், அடுத்த நூல் நன்றாக இருப்பின் அந்நூலை எடுத்துக்கொள்வேன். அதன்பிறகும், நூலைத் தேடுவதில் மகிழ்வே அடைவேன். அதுவும் பல நாட்டு நூல்களைத் தேடுவதில் பெரிதும் மகிழ்ந் துள்ளேன்.

நீங்கள் எப்படி? நூலகத்தில் ஒரு நல்ல நூலைக்கண்டால் அதை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்களா? நீங்கள் படித்த நூல்களைக் காட்டிலும், எல்லோர் பாராட்டையும் பெற்றநூல்களைக்காட்டிலும் உங்களாலும் எழுதமுடியும் என்று முயற்சி செய்துள்ளீர்களா? முயற்சி செய்யுங்கள்.

-டெய்லிகோஸ்.காம் இணையத்தில் சி.எஃப்.கே.

Read more: http://viduthalai.in/page5/78918.html#ixzz2zO3s7v5f

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்


நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை. - எமிலி போஸ்ட்

மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பானேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது. - கார்டினல் நியூமென்

பிரச்சினைகள் என்பது முன்னேற்றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வராதீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.
- சார்லஸ் எப் கெட்டரிங்

ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.
- பிளெய்ஸ் பாஸ்கல்

நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.
- கோத்தி

பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். - டாவெநன்ட்

Read more: http://viduthalai.in/page7/78923.html#ixzz2zO4gCtBz

தமிழ் ஓவியா said...


அண்ணா சொன்னார்


டாக்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது

கம்பவுண்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது;

டாக்டர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கிற மந்திரக்காரன் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது; அதையே ஒரு நோயாளி சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது - ஒரே விஷயத்திற்கு! சுரமாயிருக்கிறது - என்ன செய்யலாம்!

என்று மந்திரக்காரனைக் கேட்டால், பொன்னியம்மன் கோயிலில் மூன்று நாள்களுக்கு படுத்துக் கொள்ளுங்கள்; எல்லாம் சரியாகிப் போய்விடும் என்று சொல்லுவான். காரணம், பொன்னியம்மன் கோயிலுக்கு அவன் தான் பூசாரி.

- (அண்ணா அவர்களின் காந்தியும் காந்தியமும் பூம்புகார் பதிப்பக நூலில் - பக்கம் 253)

Read more: http://viduthalai.in/page8/78926.html#ixzz2zO51cc35

தமிழ் ஓவியா said...


இப்பொழுதேஆரம்பித்து விட்டனர் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும்!

மதவெறி நஞ்சைக் கக்குகிறார் பிஜேபி வேட்பாளர் கூட்டணிக் கட்சிகள் கொட்டாவி விடுகின்றனவா?

தியோகர், ஏப்.20- பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தி யாவில் இடமில்லை. அவர் கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அக்கட்சி வேட்பாளர் கிரி ராஜ் சிங் கூறினார். அவரது இப்பேச்சு அரசியல் வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு கட்சிக ளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், ஜார்க் கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பீஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது நரேந்திர மோடியை பிரதமராகவிடா மல் தடுப்பவர்கள், பாகிஸ் தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர் சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இட மில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும் என்றார்.

இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற் றிருந்தனர். கிரிராஜின் கருத் துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடியின் தீவிர ஆதர வாளரான கிரிராஜ் சிங், பீஹாரின் நவாடா தொகு தியில் தற்போது போட்டி யிடுகிறார். இவர், 2005 முதல் 2013 வரை பீஹார் மாநில அமைச்சராக பதவி வகித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78979.html#ixzz2zTbRPbPY

தமிழ் ஓவியா said...


திருவனந்தபுரம் கோயிலில் கொள்ளையோ கொள்ளை!


திருவனந்தபுரம், ஏப்.20- பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தப்பட்டதாக வும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமை யாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரை யிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப் புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.

இந்நிலையில், கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை தெரிவிக்க, கோபால கிருஷ்ணன் என் பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் கடந்த 2 மாதங்களாக கோயிலில் ஆய்வு நடத்தி, சில தினங் களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக் கல் செய்தார்.

அதில், மன்னர் குடும்பத்தினரும் கோயில் ஊழியர்களும் சேர்ந்து கோயில் பொக் கிஷங்களை கடத்தி இருக் கலாம் என பரபரப்பு குற் றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தி சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமையாளர் களுக்கு இது கொடுக்கப் பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட் டுள்ள விவரம்: பத்மநாப சுவாமி கோயில் நகைகளை பாலிஷ் செய்வதற்காக தஞ் சாவூரை சேர்ந்த சில நகைக்கடைகளுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். பல கட்டங்களாக இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட் டனர்.

அப்போது கோயிலில் இருந்து கிலோ கணக்கில் நகைகளை மணலில் கலந்து இவர்கள் கடத்திச் சென்றுள் ளனர். பின்னர், இவர்கள் தவறை உணர்ந்தும் பயந் தும் சிறிது நகைகளை உண் டியலில் போட்டுள்ளனர். நகை பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜு என்பவருக்கு மட்டும் 3 கிலோ எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

கோயிலில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என் பதை கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்த பொக்கிஷம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தவிர கோயில் உண்டியலில் ஏராளமான அளவில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ளன.

இவற்றை யும் பலர் சுருட்டியுள்ள னர். ரகசிய அறையில் இருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாகவும் நகைகளை கடத்திச் சென் றிருக்கலாம். பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பின் னரும் ஏராளமான அளவில் நகைகள் கடத்தப்பட்டுள்ளன.

திருவிதாங்கூர் மன்ன ராக இருந்த மார்த்தாண்ட வர்மா, கோயில் ஊழியர்கள் பலருக்கு நகைகளை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு கோயில் ஊழியர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக் கும் கிலோ கணக்கில் தங்கம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் நேற்று (19.04.2014) அளித்த பேட்டி:கோயிலில் இருந்து நகைகள் கடத்தப்படுவது குறித்து எனக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான புகார்கள் வந் தன. இது குறித்து அப் போதே கேரள அரசிடம் தெரிவித்தேன். ஆனால், மன்னர் குடும்பத்தினருக்கு பயந்து கேரள அரசு விசா ரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தினமும் கோயிலுக்கு வந்து விட்டு செல்லும்போது பிரசாதம் கொண்டு செல்லும் பாயசம் வாளியில் நகைகள் கடத்திச் செல்வதாக நான் அப் போதே கூறினேன். அப் போது என்னை கேலி செய்தனர். இப்போது அது உண்மை என தெரிந்து விட்டது. இந்த கடத்தலுக்கு மன்னர் குடும்பத்தினரும், கேரள அரசும்தான் பொறுப் பேற்க வேண்டும். இவ் வாறு அச்சுதானந்தன் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78977.html#ixzz2zTbbsGMn

தமிழ் ஓவியா said...


அந்தப் பாட்டாளிச் சொந்தங்கள் யார்? பட்டியலிடுங்கள் பார்க்கலாம்


கேள்வி: வன்னியர்கள் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிறீர்கள். அப்புறம் அந்நியர்கள் ஓட்டு எப்படி வன்னியருக்கு விழும்?

பதில்: இது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி படையாச்சியார் இருந்தபோது சொல் லப்பட்டது. இப்போது யாரும் அப்படி சொல்வது இல்லை. பாமக என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் பாடுபடும் பாட்டாளிச் சொந்தங்களின் கட்சி. இதில் எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியில் பொதுச் செய லாளரே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

- பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இது (ஜூனியர் விகடன் 20.4.2014)

இந்தக் கூற்று உண்மையா? இப்பொழுது பா.ம.க சார்பில் எட்டு பேர் நிறுத்தப்பட்டுள்ளார்களே - இதில் சிதம்பரம் ரிசர்வ் தொகுதியைத் தவிர மீதியுள்ள 7 பேர்களில் வன்னியர்களைத் தவிர வேறு யாராவது உண்டா? இதற்கு முன்பும்கூட வன்னியர்களைத் தவிர வேறு எந்த பாட்டாளிச் சொந்தங்கள் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளனர்?

பட்டியலிருந்தால் வெளியிடட்டுமே, பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTbkbenS

தமிழ் ஓவியா said...


மோடிக்கு மட்டும்தான் ஆதரவு பாஜக.,வுக்கு எதிர்ப்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ்தாக்கரே பேட்டி


மும்பை.ஏப்.20- டைம்ஸ் நவ் தனியார்த் தொலைக்காட்சிக்கு மகா ராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அளித்த பேட்டியில் மோடியை மட் டுமே ஆதரிப்பதாகவும், பாஜக, ராஜ்நாத் சிங்கை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியின் செய்தியாளர் அர்னாப் கோஸ் வாமி பாஜகவையும் அதன் தலைவர் ராஜ்நாத்சிங்கையும் எதிர்க்கும் அதேநேரத்தில் மோடியை ஆதரிப்பது ஏன்? என்று தொடர்ச்சியாகக் கேள் விகளை எழுப்பினார்.

அதற் குப் பதிலளித்த ராஜ்தாக்கரே, நான் தெளிவுபடுத்தி உள் ளேன். மோடியை அவரு டைய பணிகளுக்காக ஆதரித்து வருகிறேன். இதனால் நான் பாஜகவை ஆதரிப்பதாகப் பொருளில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எண்ணமே எனக்கு இல்லை. நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றுமட்டுமே விரும்புகிறேன் என்று மோடியை ஆதரிப்பதற்கான விளக்கங்களைக் கூறினார்.

ஆனால், செய்தியாளர் கோஸ்வாமி தொடர்ச்சியாக மோடிக்கும், தாக்கரேவுக் கும் இடையே வெளிமாநி லங்களிலிருந்து மும்பையில் பணிபுரிவோர்பற்றிய முரண்பாடுகள் குறித்துக் கேட்டபோது, இந்த விவ காரத்தில் நான் மோடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குஜராத்தில் வேண்டுமானால் சாதாரண வேலைகளைக்கூட செய்வ தற்கு ஆள் இல்லாமல் இருக் கலாம். ஆகவே, அவர் களுக்கு உத்தரப்பிரதேசத்தி லிருந்தும், பீகாரிலிருந்தும் ஆட்கள் தேவைப்படலாம். ஆனால், வேலை செய்யப் போதுமான ஆள்கள் எங் களிடம் இருக்கிறார்கள்.

பூனாவில் ராஜ்நாத்சிங் பேசும்போது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ஆதரவு குறித்து கூறும்போது, பாஜகவுக்கு நாங்கள் கேட் காமல் தாங்களாகவே ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறியுள் ளாரே என்று கேட்டபோது, நான் மோடியைத்தான் ஆதரிக்கிறேன். ராஜ்நாத்தை அல்ல. அவர் சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத நவநிர் மாண் தொண்டர் கூறும் போது, ராஜ் தாக்கரே கூறு வதுபோல் மோடியின் செயல்களையொட்டி மோடியை மட்டுமே ஆதரிக் கிறோம். ஆதரவு என்று வரும்போது, மோடி ஆதரவு நிலையைமட்டுமே வாக்கா ளர்களுக்கும் தெளிவாகவே கூறியுள்ளோம் என்றார்.

இதனிடையே தொடர்ச்சி யான கேள்விகளால் ஆவேச மடைந்த ராஜ்தாக்கரே, இது பேட்டிதானே தவிர, குறுக்கு விசாரணை அல்ல என்று மிரட்டல் தொனியில்கூறி பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014

Read more: http://viduthalai.in/e-paper/78974.html#ixzz2zTcALRZ3

தமிழ் ஓவியா said...


வைகோவின் பரிதாபம் ஈழமும் - பா.ஜ.க.வும்


மோடி பிரதமரானால் அவரைப் பயன்படுத்தி ஈழத்தை சாத்தியமாக்குவார் வைகோ என்கிறார்கள் நண்பர்கள். 2002 இல் அன்றைய துணைப் பிரதமர் அத்வானி அவர்கள் இலங் கையிடம் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகத் தேடப்படும் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆனையிரவுப் போர் என்பது புலிகளின் ஈழப் போரில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. வியக்கத்தக்க அளவு வெற்றிகரமாக முன் னேறிய புலிகள் யாழ்ப்பாணத்தை வசப்படுத்தி விடுகின்றனர். யாழ் நகரை வசப்படுத்திய அடுத்த கணம் அவர்கள் யாழ் கோட்டையை முற்றுகையிடுகின்றனர்.

யாழ் கோட்டையில் பதுங்கியிருந்த அல்லது தங்கியிருந்த ஏறத்தாழ 4000 இலங்கை ராணுவ வீரர்களுக்கும் புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற சூழல். இது நடந்தது 2002 இல்.

இது மட்டும் நடந்திருக்குமானால் ஒருக்கால் ஈழப் போரின் முகம் சற்று மாறியிருக்கக் கூடும். 4000 இலங்கை வீரர்கள் புலிகளிடம் சரணடைந்திருந்தால் அந்த 4000 வீரர்களையும் மீட்டெடுக்க வேறு வழியின்றி இலங்கையும் சற்று இறங்கி வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

4000 இலங்கை வீரர்களும் சிங்களவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். சிங்கள மக்கள் என்ன செய்தேனும் அவர்களை மீட்டெடுக்க அரசாங்கத்தை நெருக்கி இருப்பார்கள். சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும் இலங்கைக்கு.

அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்கள் தலையிட்டு அந்த நெருக்கடியிலிருந்து 4000. வீரர்களையும் மீட்டெடுக்க இலங்கைக்கு உதவினார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

எனில் ஈழ விஷயத்தில் வெண்ணெய் திரண்டு வந்தபோது தாழியை உடைத்தவர்கள் ஆகிறார்கள் பிஜேபியினர்.

மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல்வர் சிவ ராஜ்சிங் சௌஹான் சாஞ்சியில் கட்டப் பட்டுள்ள புத்தப் பல்கலைக் கழகத்தை துவக்கி வைக்க ராஜபக்ஷேவைத்தான் அழைத்தார். கறுப்புக் கொடி காட்டப் போன வைகோ அவர்களை கைது செய்து திறந்த வெளியில் இரவு பகலாக வைத்திருந்தது பி.ஜே.பி. அரசு. மட்டுமல்ல, இவர்களில் யாரேனும் ரயில் மார்க்கமாக வந்து விடக் கூடும் என பயந்த அவர்கள் அன்றைய தினம் போபால் மற்றும் விதிஷா இடையே எந்த ரயிலும் நிற்க அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு விண்ணப்பம் வைக்கிறது. 20.9.2012 அன்று 11 ரயில்கள் அந்த ரயில் நிலையங்களில் நிற்கவில்லை.

விண்ணப்பித்தது பி.ஜே.பி. ஒத்துழைத்தது காங்கிரஸ் ராஜ பக்ஷேவைக் காப்பாற்றவெனில் இருவரும் எப்போதும் கரம் கோக்கவே செய்வார்கள். 19.09.2012 அன்று பத்திரி கையாளர்களை சந்தித்தபோது ராஜபக்ஷே 2000 இந்து கோயில்களை இடித்து நாசப்படுத்தியவர் என்று கூட கட்காரியிடம் தான் சொல்லிப் பார்த்ததாகவும் ஆனாலும் அவர் இளகவில்லை என்றும் வைகோ சொன்னார்.

இரா. எட்வின்
(நன்றி: காக்கை சிறகினிலே ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page-2/78968.html#ixzz2zTcNDRIq

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பிறந்த மண்ணில் ஜாதி, மத சண்டைக்கு இடம் இல்லை, நரேந்திரமோடி உணர வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேச்சு


தருமபுரி, ஏப்.20- தரும புரி தொகுதி ஜனநாயக முற் போக்கு கூட்டணி வேட் பாளர் இரா.தாமரைச்செல் வனை (திமுக) ஆதரித்து மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி பாப்பி ரெட்டிப்பட்டி, பெரிய நத்தம், பொம்மிடி, கடத்தூர், தருமபுரி ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டு பேசும்போது:-

தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன்னை போ ராட்டத்தோடு இணைத்துக் கொண்டு போராடி மக்க ளுக்கு தேவையான திட்டங் களை கொண்டு வந்தார். கொண்டுவரக் காரணமாக இருந்தார்.

2000-ஆம் ஆண்டு ஜெய லலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது கோவை வேளாண் மை கல்லூரி மாணவிகள் 3 பேர் கொளுத்தப்பட்டதும், 17 பேர் காயமடைந்ததும் மறந்து இருக்க மாட்டீர்கள். வலி மிகுந்த சம்பவமாக அது இருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூற முடியுமே தவிர. நிதி உதவி செய்யமுடியுமே தவிர அந்த இழப்பை யாரா லும் ஈடுசெய்ய முடியாது. மக்களைப்பற்றி, மாணவர் களைப்பற்றி, மாணவி களைப் பற்றி கவலைப் படாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வருகிறது.

மக்களைப் பற்றி ஜெய லலிதா சந்திக்காமல் மேலே பறந்து கொண்டிருக்கிறார். மண்ணின் மைந்தரான தலை வர் கலைஞர் 91 வயதிலும் சாலை வழியாக வந்து தினம் தினம், மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடமையைப் பற்றி பேசும் ஜெயலலிதா 3 ஆண்டு களில் எந்தக் கடமையை செய்தார்கள்? பெண்கள் தைரியமாக நடமாடமுடிய வில்லை, பெண்கள் திருடர் களுக்கு பயந்து நகையே போட்டுக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல தமிழகத் தில் பெண்களுக்கெதிராக கொடுமைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் கொலை, கொள் ளை என்ற சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். ஆந்திராவுக்கு ஓடிப் போனவர்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டார்கள் போல் உள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு திமுக வை தவிர யாரும் உரிமை கோரமுடியாது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்க ளுக்காக வாதாடி, போராடி அந்த திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர் களும், தளபதி ஸ்டாலின் அவர்களும் தான். துளி அளவும் தொடர்பில்லாத வர்கள் இத்திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடு கிறார்கள். இந்த திட்டத்தை முறையாக இந்த ஆட்சி பயன்படுத்தி இருந்தால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டி ருக்காது.

அரசின் பணத்தில் அதிமுக கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை பதித்துள்ளது. அரசு முத்திரை தான் போட வேண்டும். எந்த ஒரு அரசும் இதுபோன்ற செயலில் இறங்கியதாக சரித் திரம் கிடையாது.

கடந்த திமுக ஆட்சியில் 75 ஆயிரம் கோடி முதலீடு தமி ழகத்துக்கு வரப்பெற்றதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. இந்த ஆட்சியில் ஒப்பந்தங் கள் போட்டதோடு சரி எந்த தொழிற்சாலையும் வர வில்லை. 10 லட்சம் பட்ட தாரிகள் வேலையின்றி கிடக் கிறார்கள்.

பாமக.,வை சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தருமபுரியில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத் திற்கு மத்திய அமைச்சராக இருந்த சிலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் எதையும் செய்யாமல் பேர் வாங்க நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்தின் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் திமுக தான். இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த மக்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ததும் திமுக அரசு தான் என்பதை மறந்து விட் டார்கள்.

தமிழகத்துக்கு திமுக, அதிமுக எதையும் செய்ய வில்லை என்று மோடி பேசி உள்ளார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்று மையாக சகோதரர்களாக மனிதர்களாக வாழ்கின்றனர். அதை மோடி குஜராத் மாநில மாக மாற்றிட முயற்சி செய் யக் கூடாது.

பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண் அந்த மண்ணில் ஜாதி சண்டைக்கு, மதச் சண்டைக்கு இட மில்லை, என்பதை நரேந்திர மோடி உணர வேண்டும் திராவிட இயக்கம் உருவாக் கிய அரசியல் நம்மைக் கைவிடாது இதை மீறி யாரும் மதத்தின் பெயரைச் சொல்லி ஜாதியின் பெயரைச் சொல்லி தமிழகத்திற்குள் ஊடுருவ முடியாது.

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை காட்டிலும் குஜ ராத் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது என்றார் கனி மொழி.

Read more: http://viduthalai.in/page-7/78984.html#ixzz2zTdxR3Ul

தமிழ் ஓவியா said...


அய்யோ பாவம் அதிமுக ஏடு!


தேர்தல் பயத்தில் ஜன்னிப் பிடித்து உளற ஆரம்பித்து விட்டது அண்ணா திமுகவின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.

உதய சூரியன் பொத்தானை அழுத்தினால் வீட்டின் விளக்கு எரியும்; நாட்டைப் பிடித்த இருள் அகலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம் (17.4.2014).

பொச பொச என்று எகிறிவிட்டது அந்த ஏட்டுக்கு. விவாதம் செய்யலாம் - வீரமணி அவர்கள் சொல்லுவது இந்தந்த வகையில் தவறு என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் வச்சுக்கிட்டா வஞ்சனை செய்கிறார்கள் - அவர்கள்? சரக்கு அவ் வளவுதான்! பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலைத்தானே அடிப்பார்கள் கையாலாகாதவர்கள்.

வசை மாரி பொழிந்து தள்ளுகிறது ஆனால் அவர்களை அறியாமலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஏற்கெனவே உதவாத உதயசூரிய னுக்கு ஓட்டுப் போட்டதற்கான பலனாக கருணாநிதி ஆட்சி இருட்டையும், திருட் டையும், விதைக்கும், மின் தடையைத் தந்து, தமிழகத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது - என்று குறிப்பிட்டுள்ளது (17.4.2014).

விவாதத்துக்காகவே ஒப்புக் கொள் வோம். கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின் வெட்டுக்கே இருட்டும் திருட்டும் என்றால், அம்மையார் ஆட்சி யில் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்தில் எத்தனை மடங்கு இருட்டும், திருட்டும் எகிறிக் குதிக்கும் - (அதுதானே இப்பொழுது நாட்டின் நிலைமை) பட்டப்பகலிலேயே கழுத்தை அறுத்துக் கொல்லும் புதிய கலாச் சாரத்தை அல்லவா அண்ணா திமுக ஆட்சி வளர்த்து விட்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இங்கு சொல்ல வேண்டும். எதையாவது நமது எம்.ஜி.ஆர். ஏடும் கிறுக்குகிறது; அதற்கு வட்டியும் முதலுமாக விடுதலை கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது. அதற்குமேல் எதையும் எழுத முடியாத அளவுக்கு மூச்சுத் திணறுவது,

இப்படியும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page-8/79000.html#ixzz2zTf0YPZ7