Search This Blog

14.4.14

கடுகளவு அறிவு நாகரிக உணர்ச்சி உள்ள எவரும் தமிழ்வருடப் பிறப்புக் கொண்டாட முடியுமா?

தமிழ்ப் புத்தாண்டாம்! 


வருடம் என்பது ஒரு காலக்கோட்டின் அளவுகோல் ஆனால் எதையும் மதத் தோடு சேர்த்துப் பிணைத்தால்தானே இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் வயிறு கழுவ முடியும்.அந்த முறையில் தமிழ் வருடப் பிறப்பு என்ற முறையில் பார்ப்பனர்கள் அதற்கும் ஒரு புராணக் கதையைப் புகுத்தி இருக்கிறார்கள்.

ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ண மூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபி கைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க, அதற்குக் கண்ணன், நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார்.

எங்கும் அவர் இல்லாத பெண்களை காண முடியாததால், நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரசிக்க எண்ணங் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாக மாறினார்.

இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றார். அவர்கள் பெயர் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாய் பதம் பெற்றனர்.

----------------------------------------------- அபிதானசிந்தாமணி பக்.1392

இந்தக் காட்டுமிராண்டித்தனமான கதைதான் தமிழ் வருடப்பிறப்புக்குக் கூறப்படும் கதையாகும். கடுகளவு அறிவு, நாகரிக உணர்ச்சி உள்ள எவரும் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏற்றுக் கொண்டு தமிழ் வருடப் பிறப்புக் கொண் டாட முடியுமா?

தமிழ் வருடப் பிறப்பு என்கிறார்களே, இந்த வருடங்களின் பெயரைப் பார்த்தாலே தெரியுமே - இவை தமிழ் வருடங்கள் இல்லை என்று அத்தனையும் சமஸ்கிருதச் சொற்கள்தானே! இந்த நிலையில் தமிழ் வருடப் பிறப்பு என்றால் அது யாரை ஏமாற்ற?

60 வருடங்களை வைத்துக் கொண்டு, அதே சுற்றிச் சுற்றி வருகின்றபொழுது, அறுபது வருடத்திற்கு மேற்பட்ட செய்தியை எப்படி கணக்கிட முடியும். எந்த பிரபவ என்று எப்படி கணக்கிடுவது?

எவ்வளவோ விஞ்ஞான அறிவு வளர்ந்து இருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் எதையும் சுலபப்படுத்திக் கொள் ளக்கூடிய மனப்பான்மை வளர்வதற்குப் பதில் மத நம்பிக்கைக்கு ஆளாகி இத்தகைய குழப்பங்களின் மத்தியில் புதைந்து கொள்ள வேண்டுமா?

தீபாவளி என்றால் பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்று ஒரு கதையைக் கட்டிவிட்டு அதன் அடிப்படையில் காரியங்களை நடத்துகின்றார்கள்.

பொங்கலைக் கூடப் பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று கூறி அதற்கும் புராண முலாம் பூசி வைத்துள்ளார்கள். ஆனால் இதை உழைப்பாளிகளின் திருவிழாவாக நமது இயக்கம் மக்கள் மத்தியிலே எடுத்து வைத்து, மூடநம்பிக்கை ஒழிந்த முறை யிலே கொண்டாடப்பட்டு வருகின்றது.
பார்ப்பனர்கள் எதையும் வியாபார நோக்கத்துடனும், தங்களுடைய ஆதிக் கத்தை நிலை நிறுத்தும் நோக்கத்துடனும் ஏற்பாடு செய்து வைத்துள்ளவர்கள் குழந்தை கருவுற்ற நாள் முதற் கொண்டு, அதனுடைய ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் பார்ப்பனர்களின் தொடர்பு ஏற்படும்படி ஏற்பாடு செய்து வைத்து நம் மக்களின் பொருளை மட்டுமல்ல - அறிவையும் பறித்து விடுகிறார்கள்.
மனிதன் செத்துப் போனதற்குப் பிறகு கூட,வருடத்திற்கு ஒரு முறை திதி என்ற பெயரால் பணம் பறித்து வருகிறார்கள். இத்தகைய பார்ப்பனர்களின் எத்து வேலைகளைப் புரிந்து கொள்ளாமல், நம் தமிழின மக்களே, அவர்கள் விரித்த வலையிலே வீழ்ந்து, தமிழ் வருஷப் பிறப்பு என்பதும், தமிழினத் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் புத்தாண்டு செய்தி வெளியிடுவதும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி கிருஷ்ணன் என்ற ஆணுக்கும், நாரதன் என்ற ஆணுக்கும் பிறந்ததாகக் கூறப்படும் வரு டங்களுக்கு விழா கொண்டாடுவது நாம் இன்னும் காட்டுமிராண்டிப் பிராயத்தில் தான் இருக்கிறோம் என்பதற்கு அடை யாளமாகும். இத்தகைய ஆபாசத்திற்கு அரசு விடுமுறை விடுகிறது என்றால் நம் நாட்டு யோக்கியதை நாகரிக உலகத்தின் முன் தலை கவிழ்ந்து கிடக்கும் நிலைதானே!

இத்தகைய ஆபாசங்களை நாம் அரவ ணைத்துக் கட்டிக் கொண்டு அழும் வரை நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ, நாகரிக உலகில் தலை நிமிர்ந்து  நடக்கவோ அருகதை இழந்து விட்டிருக்கிறோம் என்றே பொருள்.

                            ----------------------------"விடுதலை” 13-04-2014

35 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள், ஊடகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் மோடி முன்னிறுத்தப்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?


பார்ப்பனர்கள், ஊடகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் மோடி முன்னிறுத்தப்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? பதவிப் பசிக்காரர்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பார்ப்பன சக்திகள் - ஊடகங்கள் - கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் நரேந்திரமோடி முன்னிறுத்தப்படுவதைப் புரிந்து கொள்ளாமல் நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்படும் அபாயங்களை அறிந்து கொள்ளாமல், கேவலம் பதவிக்காக பிஜேபியை ஆதரிக்கலாமா என்ற வினாவை எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் (அண்மையில் தனது 99 வயதில் மறைந்தவர்) 2002-இல் மோடி ஆளும் குஜராத்தில் நடைபெற்ற திட்டமிட்ட இஸ்லாமியச் சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்கிய இன அழிப்புப்பற்றி (Pogram) மிகுந்த வேதனையோடு ஒரு சிறு நூலே ‘The End of I: ndia’ என்று எழுதி வெளியிட்டார்.

குஷ்வந்த்சிங் கூறுகிறார்

அதில் மோடி திட்டமிட்டே அந்தக் கலவரங்களின் போது காவல்துறை அதிகாரிகள் குஜராத்தில் இஸ்லாமியர் களுக்கு எதிரான கலவரத்தினை அடக்க முயற்சிக்காமல், கண்டும் காணாதது போல் இருக்கச் சொல்லி சுமார் 2000 பேர்களுக்கு மேல் இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தை கள் கொல்லப்பட்ட கொடுமை!

இனி, மோடி போன்றவர்கள் பதவியில் நீடித்தால் இந்தியா என்ற ஒரு நாடு இருக்காது; மாறாக சிதறுண்டு போகும் என்று எச்சரிக்கை விடுத்தார்!


தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தீவிரம்!

இவர் பிரதமர் என்றால் நாடு தாங்குமா? எதிர்காலம் இருண்ட காலமாகத்தான் அமையும். மோடியைக் காட்டி, ஆட்சியைப் பிடித்து தங்களது வழக் குகளை வாபஸ் பெறுமாறு செய்ய வேண்டியது அவசரம் என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ். காவித் தீவிரவாதம் முனைப்புடன் செயல்படத் துவங்கி விட்டது.

அதற்காக ஆங்காங்கே மாநிலங்களில் அலை என்றுகூறி வலை வீசி, சிக்கியவர்களைக் கொண்டு சீட்டணி (கூட்டணி அல்ல) அமைத்து போட்டியிடு கின்றனர்.

பார்ப்பனர் மற்றும் கார்ப்பரேட் சக்திகளின் பின்னணி

பார்ப்பன ஏடுகளும் - ஊடகங்களும் பன்னாட்டு முதலாளித்துவ திமிங்கலங்களான முகேஷ் அம்பானி, டாடா, அடானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வந்து விட்டால் தாங்கள் இந்தியாவையே பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, விலைக்கே வாங்கி விட முடியும் என்ற பேராசையால் உந்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்ட முனைப்புடன் செயலாற்றுகின்றனர்!

முன் நடந்தவை - மதக் கலவரங்களை 1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 கோத்ரா கலவரம் பின் ஏற்பட்ட சிறுபான்மையினர் அழிப்புப்பற்றி அறவே அறியாத 18 வயது நிரம்பியதால் வாக்குரிமை பெற்ற வாக்காளர்களான இளைஞர்களிடம், காங்கிரஸ் அதிருப்தி, ஊழல் என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு, அவர்கள் கையில் உள்ள வாக்கினை வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற மயக்க பிஸ்கட்டுகள் மூலம் ஏமாற்ற, இணையதளம் மற்றும் அய்டெக் (High Tech) தொழில் நுட்பமூலம் ஆவேசமாய் முனைப்புடன் செயல்படுகின்றனர், பணத்தையும் பஞ்ச மில்லாமல் செலவழிக்கின்றனர்!

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பதவிப் பசி தேடிகளும், பார்ப்பன ஊடகவியலாளர்களும், மோடியைத் தூக்கிப் பிடித்து, அவர் ஏதோ ஒரு சர்வரோக நிவாரண சஞ்சீவி போல காட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற முனைப்புடன் உள்ளனர்!

ஆதரவின் உண்மை நிலை என்ன?

மேற்கு வங்க மம்தா பானர்ஜியிடமோ, ஒரிசா நவீன் பட்நாயக் இடமோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, திரிபுரா போன்ற சிறு மாநிலங்களிலோ, காஷ்மீரிலோ வேறு பல தென்னாட்டு மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திராவிலோ (நாயுடுவிடம் தூண்டில்) அவர்களுக்கு அடித்தளமே இல்லை.

தமிழ்நாட்டில் தங்கள் இடத்தை ஆறாகக் குறைத்து நிற்கும் பரிதாபமே! இந்த மாநிலங்களில் எல்லாம் பிஜேபிக்கு எந்தப் பலமும் கிடையாது. எப்படியிருந்தாலும் பத்திரிகை பலம், பணபலம், இன பலம் முதலியவைகளைக் கொண்டு முடிந்த வரை மாய வலைப் பிரச்சாரத்தினை நடத்த முயலுகின்றனர்.

ஆளுக்கொரு வேடம், நாளுக்கொரு பேச்சு- இவை களைக் கைவந்த கலையாக இந்த அணி மேற்கொண்டு, அதிமுகவுடன் ரகசிய ஒப்பந்தமும் பாதுகாப்புடன் செய்து கொண்டுள்ளது; அதன் காரணமாக அம்மையாரின் அனல் கக்கும் பேச்சு, இவர்களை எதிர்க்கும் அந்த பா.ஜ.க. அணி பக்கம் பாய்வதே கிடையாது.

அறிவு ஜீவிகளின் அறிவிப்பு!

மோடி கைகளில் இரத்தக் கறையுடனே வருகிறார் என்கிறார் மம்தா.

தமிழ் ஓவியா said...

அதே போல உ.பி.யின் மாயாவதி, ஒரிசாவின் நவீன் பட் நாயக் பீகாரின் நித்தீஷ்குமார் போன்றவர்கள் மட்டு மல்லாது.

இந்தியாவின் அறிவு ஜீவிகள் 12 பேர்கள் வெளி நாட்டில் - இங்கிலாந்தில் உள்ளவர்கள் - அங்கே மோடி பற்றி எழுதிய பிரபல ஆங்கில நாளேடான கார்டியன் பத்திரிகைக்கு கையொப்பம் இட்டு கூட்டு அறிக்கை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல எழுத்தாளரான

1. சல்மான் குர்ஷித்,
2. ஹார்வர்டு பேராசிரியர் வோமி பாபா.
3. உலகப் புகழ் வாய்ந்த சிற்பி அனிஷ்கபூர்
4. பிரபல சினிமா இயக்குநர் தீபா மேத்தா போன்றவர்கள் இதில் அடக்கம்!

இந்தியாவின் பன்முகத் தன்மை, பன்மத, பல கலாச்சார, பல மொழிகள், உலவும் நிலைக்கு ஆபத்து வரும் என்று எச்சரித்துள்ளனர்!

பதவிக்காக எதிர் காலத்தையே அடகு வைக்கலாமா?

இதைப்பறறிக் கவலைப்படாமல், மதக் கலவரங்களுக் கும், முழு முதலாளித்துவ கார்ப்பரேட் கலாச்சாரப் புயலுக்கும் கதவு திறக்க, சில பதவிகள், சீட்டுகளுக்காக இப்படி நாட்டின் எதிர்காலத்தையே அடகு வைத்து விடலாமா? என்று கூட்டுச் சேர்ந்த கொள்கைச் சோரவாதிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையின் பேரில்தான் தேர்தல் அறிக்கையே தயாரிக்கப்பட்டதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்ததற்குப் பிறகும் பிஜேபியை ஆதரிப்போம் என்று சொன்னால் அப்படிச் சொல் பவர்களுக்கு வாழ் நாள் முழுவதுமே மன்னிப்புக் கிடைக்குமா? மக்கள் மத்தியில் மிகச் சிறுமையாக தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்ளலாமா?

நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலை உள்ள மனிதநேயர்களே, நீங்கள் சிந்தித்து இவர்களை வர விடாமல் தடுக்க முன் வருக!

எனவேதான், யார் வர வேண்டுமென்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை வலியுறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

மீறி, கொள்ளிக் கட்டையை எடுத்துத் தான் தலையைச் சொறிந்து கொள்வோம் என்றால் அது உங்கள் விருப்பம் நண்பர்களே!

13.4.2014
முகாம்: திருப்பத்தூர்

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/78653.html#ixzz2yof9fCBs

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது ஆர்.எஸ்.எஸின் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்பட்டதுதான் தேர்தல் அறிக்கை அறிக்கைத் தயாரிப்புக் குழுத் தலைவர் ஜோஷி ஒப்புதல்


டில்லி, ஏப்13- பாஜக வின் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டங்கள் இடம் பெற் றுள்ளன அதன் ஆலோச னைகளும் பெறப்பட்டன என்று டில்லியில் செய் தியாளர்களிடம் பாஜக தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி விரிவாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

"எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தா லும், அதற்கு முன், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின், அறிவுரையை கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு வரும், அந்த கட்சியின் தேர் தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளிமனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கலாச்சார அமைப்பு மட்டும் தான். இருப்பினும், தேச பக்தி, பண்பாடு விஷயங் களில் தலைசிறந்து விளங் கும் அமைப்பு அது. அந்த அமைப்பின் தாக்கம் பா.ஜ.க.வில் இருப்பதை பெருமையாகவே கருதுகி றோம். மஸ்தூர் சபா, கிசான் சபா என்று ஆர்.எஸ்.எஸ். சார்ந்த பல அமைப்பு களின் கருத்துகளை கேட்டு த்தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டது.

எந்தவொரு விஷயத் தில் இறங்குவதாக இருந் தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம் தான். அந்த அமைப்பின் வழிகாட்டுதலை ஏற்பதா, வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. தேர்தல் அறிக்கை உருவாக்கியதி லும் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப் பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நரேந் திர மோடிக்கு வாரணாசி தொகுதியை நான் விட்டுக் கொடுக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. நரேந்திர மோடி எங்கள் கட்சியின் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட வர். அப்படிப்பட்ட தலை வருக்கு தொகுதியை தர மறுப்பேனா? அவ்வளவு தூரம் நான் என்ன முட் டாளா? என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78652.html#ixzz2yofa4d2A

தமிழ் ஓவியா said...


வெளிப்படைத் தன்மையும், கபடத் தன்மையும்


- குடந்தை கருணா

மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவாக யார் முன் வந்தாலும் அதற்கு திமுக கை கொடுத்து, கை குலுக்கி வரவேற்கும் என கலைஞர் பொதுக் கூட்டத்தில் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, திமுகவின் தலைவர் கலைஞர் சொன்ன செய்தி, இந்த தேர்தலில், மதசார்பின்மை, சமூக நீதி என்ற இரண்டு கொள்கையையும் முன் வைத்து, திமுகவும் தோழமை கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கொள்கைக்கு ஆதரவாக யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறினார்.

பாஜகவை திமுக விமர்சிக்கவில்லை என சிலர் வேண்டுமென்றே கூறிய நிலையில், தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து, கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய மதசார்பின்மையைக் குலைக்கும் கொள்கைகளை விமர்சித்து திமுக வெளிப்படையாகப் பேசி வருகிறது.

கம்யூனிஸ்டுகளை எந்த காரணமும் சொல்லாமல் கழற்றி விட்ட நிலையில், மதசார்பின்மை கொள் கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் திமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என கலைஞர் உள்ளிட்ட திமுக அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

திமுகவின் இந்த வேண்டுகோள் வெளிப் படையாக, கொள்கை அடிப்படையில் வெளியிடப் பட்ட வேண்டுகோள். மதசார்பின்மை கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், திமுக மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவினை வலுப் படுத்துவது இயற்கையானது; நியாயமானது.

அதே நேரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு எப்படி உள்ளது? கம்யூனிஸ்டுகள் எந்தக் காரணத்துக் காக விரட்டப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை ஜெயலலிதாவோ, அதிமுகவோ எந்த காரணத்தையும் சொல்லவில்லை; பாஜகவோடு, தேர்தல் முடிந்து கூட்டு வைத்துக்கொள்ள அதிமுக முடிவு செய்துதான் இத்தகைய நிலையை எடுத்துள்ளது என இப்போது கம்யூனிஸ்டுகள் காரணம் சொல்கிறார்கள். இதற்கும் ஜெயலலிதா எந்தப் பதிலையும் சொல்லவில்லை;

ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி யைப்பற்றியோ, பாஜக பற்றியோ ஒரு விமர்சனம்கூட இதுவரை சொல்லவில்லை; பாஜக தலைவர்களும், மோடி உட்பட, தமிழ் நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதா வையும் அதிமுகவையும் எந்த விமர்சனமும் செய்யவில்லை;

எதற்கெடுத்தாலும், கலைஞரைக் கேள்வி கேட் கும் ஊடகங்கள், ஜெயலலிதாவின் இந்த மவுனத் தைப்பற்றி அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை; மாறாக, சோ ராமசாமி மூலமாக கேள்வி பதில் என்கிற முறையில், பாஜக நிற்கும் இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வேட்பா ளர்களை ஆதரிக்காமல், அதிமுகவை ஆதரியுங்கள்.

அதிமுக வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு உதவிகரமாக இருக்கும் என கபடத் தனமாக, சோவை விட்டு இந்த செய்தியை சொல்லி யிருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வும், மோடியை முன்னிறுத்தும் பாஜகவும்.

மதசார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்த வெளிப்படையாக, நேர்மையாக ஆதரவு திரட்டும் திமுக அணிக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? அல்லது தங்களோடு கூட்டணி அமைத்துள்ள கட்சி களை காவு கொடுத்து, கள்ள உறவு வைத்துள்ள பாஜக வையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமா?

Read more: http://viduthalai.in/page-2/78650.html#ixzz2yofpSnaV

தமிழ் ஓவியா said...


குடும்ப தர்மத்தையே காப்பாற்றாத மோடி நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? லாலு பிரசாத் கேள்வி


பட்னா ஏப்.13- தன் மனைவியை மறைத்து, குடும்பத் தர்மத்தையே காப்பாற்றத் தவறிய மோடி நாட்டை எப்படி காப்பாற் றுவார் என்ற வினாவை எழுப்பினார் லாலு பிரசாத். ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சிதலைவர் லாலு பிர சாத் - தலைநகர் பாட்னா வில் தனது கட்சி ஆதர வாளர்களுடன் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட் டம் நடத்தினார்.

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகை யாளர்கள் பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் திருமணம் விவாதம் குறித்து கேள்வி கேட்டனர். குடும்ப தர்மம் காப் பாற்றுபவர் தான் தேசத்தின் தலைமை ஏற்க தகுதியான வர் என்றார் லாலு. நேற்று மாலை சமூக இணையதளத்தில் மோடி யின் திருமணவிவகாரம் குறித்து பதிலளித்த லாலு பிரசாத், மோடி போன்ற ஒரு முக்கியமான தலைவர் பல முறை அரசு விண்ணப்பங் களில் தனது திருமணத்தை மறைத்துவிட்டார்.

இம் முறை நீதிமன்ற தீர்ப்பின் படி வேறு வழியில்லாமல் தனக்கு திருமணமானதை யும், தனது மனைவி பெய ரையும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப தர்மமும் நாட் டைக்காப்பாற்றும் தர்ம மும் ஒன்றுதான் வீட்டிற் குத் தலைவனாக இருக் கிறவர். குடும்பத்தை சரி வர கவனிக்கவேண்டும்;

தனக்கு குடும்பம் உள் ளதையே மறைத்து இத் தனைக் காலம் வாழ்ந்தவர் எப்படி தேசத்தை காப் பாற்றும் பணியை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/78645.html#ixzz2yofzABkv

தமிழ் ஓவியா said...


மக்களே, நீங்களே நீதிபதி! தீர்ப்பளியுங்கள் என்று துண்டறிக்கை போட்ட துணிவு இராசாவைத் தவிர வேறு யாருக்குண்டு?


நீலகிரி தொகுதியில் தமிழர் தலைவர் தொடுத்த வினா

சேயூர் கைகாட்டி, ஏப். 13- மக்களிடம் துண்டறிக்கை வெளியிட்டு, நீங்களே நீதிபதிகள் - தீர்ப்பளியுங்கள் என்று தன் மீது புனையப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளை பொது மக்கள் முன்வைத்த துணிவு ஆ.இராசாவைத் தவிர வேறு யாருக்காவது உண்டா? என்று நீலகிரி தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவார்ந்த வினாவை எழுப்பினார். அவரது உரை வருமாறு:-

நீலகிரி தொகுதி மக்கள், சென்ற முறை இராசா அவர்களை ஆதரித்து, நல்ல தீர்ப்பு வழங்கிய மக்கள், இந்த தொகுதி மக்கள். எவ்வளவு கெட்டிக்கார மக்கள்! இராசா அவர்களை சரியாக அடையாளம் கண்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பினீர்கள் அதன் விளைவாகத்தான், எங்கே, எந்த பிரச்சினை என்றாலும் ஓடோடி வருவதற்கு, உதவுவதற்கு அவர் என்றைக்கும் மறந்ததில்லை.

மக்கள் தொண்டன் - இராசா

அவர்கள் என்ன செய்தார்கள் என்று, எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் (பொதுவாக) பட்டியல் போட்டு சொன்னது கிடையாது. ரொம்ப அரிதுதான். 5 ஆண்டு முன்பு தேர்தலில் நிற்பதற்கு மக்களை சந்திக்க வருவார்கள். வெற்றி பெற்றார்கள் என்றால் அதற்கு அடுத்து 5 ஆண்டு கழித்துதான் வருவார்கள். அவர்களை போய் நீங்கள் தான் பார்க்க வேண்டிய அவசியம் வரும்.

ஆனால், நம்முடைய இராசா அவர்கள் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டு, இன்றைக்கு பழியோடு, பொய்க் குற்றச்சாட்டோடு நிறுத்தப்பட்டிருக்கிற இராசா அவர்கள். உங்களுக்கு ஓர் இன்னல் நிகழ்ந்தால் ஓடோடி வரும் மக்கள் தொண்டனாக என்றைக்கும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லி, உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. அனுபவித்து இருக்கின்ற உங்களுக்கு தெரியும்.

9.4.2014 அன்று நீலகிரி தொகுதியின் கடைசி எல்லை பந்தலூர் வரை சென்றுவிட்டுத்தான் வந்தோம். அங்கே எல்லாம் மக்கள் எவ்வளவு பற்றோடு இருக்கிறார்கள் - இராசாமேல் என்பதை எல்லாம் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது; உள்ளபடியே மகிழ்ச்சியானது.

கலைஞர் அவர்கள் சரியாக தேர்ந்தெடுத்த வேட்பாளர் தான் இராசா அவர்கள். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்.

இராசாவின் அச்சார வெற்றி!

தமிழ்நாட்டில் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, இராசாவிற்கு எதிராக இருக்கக் கூடிய பா.ஜ.க. வேட்பாளர் காணாமல் போய்விட்டார். அதுவே முதல் வெற்றி, அச்சார வெற்றி தொடங்கி விட்டது என்று அர்த்தம். எப்படி காணாமல் போய்விட்டார் என்று குழுவை போட்டு ஆய்வு செய்கிறார்கள் . அவர் திடீர் என்று காணாமல் போய்விட்டாரா? அல்லது யாராவது விலை கொடுத்து, அவர்கள் பக்கம் போய் விட்டாரா? என்று பத்திரிகையாளர்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் தேர்தலில் இராசாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன்மூலம், அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் (பாஜகவின்) தேர்தலுக்கு முன்னாலேயே காணாமல் போனதால், இதுவே இராசா வெற்றிபெறப் போகிறார் என்பதற்கு, இதுதான் முதல் அச்சார வெற்றி அடையாளமாகும்.

எதிரே (பாஜக) வேட்பாளர் எதனால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார் என்பதை ஆராய்ச்சி செய்ய, 3 பேர் கொண்ட குழு போட்டு இருக் கிறார்கள். குழு எல்லாம் பேசி முடித்துவிட்டு, ஒரு 5 ஆண்டுக் குள் முடிவுக்கு வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மக்கள் தலைவர் - டாக்டர் கலைஞர்

கொளுத்தும் வெயிலில், சாலை வழியாகத்தான் பிரச்சாரத் திற்கு போகிறார் டாக்டர் கலைஞர். மேலே இருந்து கீழ் இறங்குகிற வேலை இல்லையே! செலவு ரொம்ப குறைவாக ஆகிறதே!

பணம் நிறைய செலவு செய்வதற்கு நிறைய சேர்த்து வைக்கவில்லை - எதிர்க்கட்சிக்காரர்களைப்போல். என்றைக் கும் மக்களோடு மக்களாக இருக்கின்ற, மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் சாலையில் போகிறார்.

அந்த அம்மா (ஜெயலலிதா) நேற்று மதியம்கூட, மேட் டுப்பாளையத்தில் பேசும்போது குற்றம் சொன்னார்கள். வேட்பாளர்கள் அறிமுகம் இல்லை. இது ரொம்பப் புதுமை. கலைஞர் பிரச்சாரத்தை பார்த்தீர்களானால் வேட்பாளர் கள் அறிமுகம்தான். இரண்டு தொகுதி, மூன்று தொகுதி வேட்பாளர்கள் எல்லாம் அங்கே வருகிறார்கள். உட்கார்ந்து இருப்பார்கள், சாதாரணமாகத்தான் நிற்பார்கள்.

வளைந்து, குனிந்து கும்பிடு போட மாட்டார்கள் வித விதமாக கும்பிடும் வேட்பாளர்கள் கிடையாது. சாதாரண மாக நிற்பார்கள்.

கும்பிடுவதில் எத்தனை வகை!

ஆனால் அந்த அம்மையார் (ஜெயலலிதா) கூட்டங்களில் இரண்டொரு இடங்களில் நின்று, மக்களைப் பார்த்து கும்பிடுவதைவிட, அந்த அம்மையாரை பார்த்துதான். விதவிதமாக கும்பிடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


S - மாதிரி வளைகிறார்கள். W- மாதிரி வளைகிறார்கள், ABCD-யில் எப்படி எப்படியெல்லாம் இருக்கிறதோ, அது மாதிரி வளைகிறார்கள். இது வேடிக்கையாகத்தான் இருக் கிறது.

இங்கே (திமுகவில்) அது மாதிரி இல்லை. கலைஞர் பிரச் சாரக் கூட்ட நிகழ்வின்போது, கலைஞர் சொல்லிவிடுவார் கொஞ்சம் நேரம் கும்பிட்டால் போதும் உட்காருப்பா என்று சொல்லி வேட்பாளரை உட்கார்ந்து விடச் சொல்லுவார்.

முதல்வருக்குத் தெரிய வேண்டாமா?

10.4.2014 அன்று அந்த அம்மா என்ன சொல்லி இருக்கிறார்? அவர் (கலைஞர்) வேட்பாளரை அறிவிக்கிறார். நான் வந்து அறிவித்தால் தேர்தல் ஆணையத் துக்கு என்ன என்கிறார். தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற கோபால்சாமி அய்யங்கார் சொல்லுகிறார். இந்தச் சட்டம் இப்பொழுது இல்லை - 1969 ஆண்டிலிருந்தே இருக்கிறது. புதிதாக வந்ததில்லை. முதல்வருக்கு இது தெரிய வேண்டாமா? என்று நேரிடையாகச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதே அம்மாவே சொல்கிறார். வேட்பாளர் கணக்கு, செலவு எல்லாம் அதிலே ஏற்படும் என்கிறார். கலைஞரு க்கும், திமுகவுக்கும் அதே விதிதானே? அவர் (கலைஞர்) ஏன் பயப்படாமல் வேட்பாளரை அறிவிக்கிறார். காரணம், இங்கே செலவு குறைவு. அங்கே (அதிமுக) சாதாரண செலவா?

வளம் - வளர்ச்சி எங்கே?

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்துக்கு மக்களே செலவு செய்து கொண்டு திரள்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது?

எதற்கு அவர்கள் அய்ந்து தடவை சொல்ல வேண்டும்? அவர்கள் செலவுகளிலேயே வந்தார்கள். வந்தார்கள் என்று ஒரு தடவை சொன்னால் கூட மக்களுக்கு தெரியும். ஆகவே, இதனுடைய அர்த்தம் தெரியவேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். அப்போது வளம், வளர்ச்சி எங்கே இருக்கிறது சொல்ல வேண்டும்.

வளம், வளர்ச்சி என்கிறார்களே! எத்தனைத் திட்டம் கொண்டு வந்தார்கள்? ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என்றார்களே. திட்டம் கொண்டு வந்தார்களா இல்லையே!

எப்படி இராசா மீது பொய்யான, அபாண்டமான குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்களோ, அதேபோலத்தான், சேது சமுத்திரத் திட்டமும், சுற்றுச்சூழல் மாசுபடுவது என்றும் தவறான கருத்தை சொல்கிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் நிறையத் தொடங்கினார். இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்ததும், இங்கிருக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு போய்விட்டார்களாம். அது உண்மை இல்லை. ஆனால் எல்லா தொழிலும் கருநாடகாவிற்கு போய்விட்டன. 12,000 கோடி மூலதனத்தோடு அவர்கள் போய்விட்டார்கள். கருநாடகத்திற்கு போய்விட்டார்கள்.

இவர் ஆட்சியில் எந்தத் தொழிற்சாலையை தொடங் கினார்? தொடங்கி இருக்கிறார்? எந்தத் தொழிற்சாலை கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறது?

எச்சரிக்கையாக இருங்கள்! -ஏமாந்து விடாதீர்கள்!

அட புதுசா தொழிற்சாலை எதுவுமே தொடங்கவில் லையே! இருக்கிற தொழிற்சாலைகளை மூடாமல் இருக் கிறார்களா? திருப்பூரின் பெருமை என்ன? எல்லோருக்கும் வாழ்வு அளிப்பது திருப்பூர் இல்லையா? எல்லோருக்கும் வாழ்வு அளிப்பது கோவை அல்லவா? சிவகாசி அல்லவா? இந்த மின்வெட்டால் எந்த இடத்திலும் தொழிற்சாலைகள் இயங்கவில்லையே!

எப்போது மின்சாரம் வரும் என்பது யாருக்கும் தெரியாதே! இப்பொழுது மின்சாரம் கொஞ்சம் கிடைக்கிற மாதிரி வரும். ஏமாந்து விடாதீர்கள்.

24ஆம் தேதியை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் குறைக்காமல் இருப்பார்கள். 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் முழு இருட்டைத்தான் பார்ப்பீர்கள். இப்போதாவது, வெளிச்சத்தைப் பார்க்கிறீர்கள். அப்பொழுது அதுவும் பார்க்க முடியாது.

தமிழ் ஓவியா said...

நீலகிரி தொகுதி வேட்பாளரான இராசா அவர்கள் பற்றி, இப்போதும்கூட, உண்மைக்கு மாறாக பேசுகிறார் ஜெயலலிதா. அவ்வளவும் உண்மைக்கு மாறான செய்திகள். என்ன செய்தார் இராசா என்று கேட்கிறார்களே, நாம திருப்பி கேட்க வேண்டும், என்ன செய்யவில்லை இராசா? என்று.

டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அத்திக்கடவு திட்டம் மிக முக்கியமான திட்டம். மக்களுக்கு செய்யவேண்டும் என்று அவரிடம் கூறியபொழுது, நிச்சயம் நாம் செய்யலாம்; ஆனால் நீங்கள் சொல்கிறீர்களே, என்ன அர்த்தம் என்றார்கள். மக்கள் சொல்கிறார்கள் அதை நாங்கள் உங்களிடம் சொல்கிறோம் என்றோம். அப்போது மக்களுடைய தோழர் இராசாவும் உடன் இருந்தார்.

யாருக்கு நாமம்?

ஆனால் அந்தந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டு, எனக்கு ஓட்டுப்போடுங்க! நான் செய்திடுவேன் என்று சொல்கிறீர்களே! ஏன்? உங்களிடம் தானே இன்றைக்கு ஆட்சி இருக்கிறது. அந்தத் திட்டத்திற்குத்தானே நாமம் போட்டீர்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடைசி யாக முடிக்கும்போது, அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று சொல்லுகிறார். அவர்களுக்கு போட்ட நாமத்துடன், ஏன்? மக்களுக்கும் நாமம் போடுகிறீர்கள். அதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா?

இராசா பற்றி சொல்லும்போது, (அவரே துண்டறிக்கை அச்சடித்துள்ளார்)

இராசா அவர்கள், தன்மீது சுமத்தப்பட்ட வழக்கு பொய்யானது என்பதை விளக்க, மக்கள் தெரிந்துகொள்ள, நீங்களே நீதிபதி தீர்ப்பளியுங்கள் என்று நோட்டீஸ் (துண்டறிக்கை) போட்டு பொதுமக்களிடம் கொடுத்து விடுகிறாரே!

தலைப்பு: நீங்களே நீதிபதி! தீர்ப்பளியுங்கள்!! இப்படி கேட்கிற துணிச்சல், வேறு யாருக்காவது உண்டா?

அதுபோல, அம்மையார் ஜெயலலிதா தன் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, அது பொய்யானது மக்களை நீங்களே தீர்ப்பளியுங்கள்! நீங்களே நீதிபதி தீர்ப்பளியுங்கள்!! என்று நோட்டீஸ் (துண்டறிக்கை) அச்சடித்துக் கொடுப்பதற்குத் துணிவு உண்டா?

இராசா அவர்கள் நீங்களே நீதிபதி தீர்ப்பளியுங்கள் என்று சொல்லி இருக்கிறாரே! அந்தத் துணிச்சல் அம்மையாருக்கு உண்டா?

தமிழ் ஓவியா said...

காரணம் என்ன? இராசாவின் மடியில் கனம் இல்லை, இதனால் வழியில் பயம் இல்லை. ஆனால் நீங்கள் அச்சம் இல்லை என்று சொல்லக்கூடாது. வழக்கை ஒத்தி, ஒத்தி வாய்தா வாங்கிக் கொண்டு இருந்தால் பயம் என்றுதானே அர்த்தம்.

இராசா மக்களிடம் கொடுத்த துண்டறிக்கையில்... ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு - சி.ஏ.ஜி.அறிக்கையாம்

இது நடக்காத ஏலம். அனுமானம், கற்பனையே!

உதாரணமாக, ஒரு வீட்டை விற்கிறோம். அதற்கு அப்புறம் 5 ஆண்டுகள் கழித்து விற்றிருந்தால் விலை கூடி இருக்குமே! என்ன செய்கிறது? என்னுடைய தேவைக்கு அன்றைக்கு விற்றேன். செய்தேன். 5 ஆண்டுகள் கழித்து ரூ.2 கோடி போகும். நீங்கள் ஒன்றரை கோடிக்கு ஏன் விற்றிருக்கிறீர்கள் என்று கேட்கலாமா? உடனே அரை கோடிக்கு வழக்கு போடுவதா? அரை கோடி ரூபாயை இவர் நட்டமாக்கி விட்டார் என்று சொல்வதா? எவ்வளவு உண்மைக்கு மாறானது.

அதில்கூட, ரூ.1.76 இலட்சம் கோடியாம்! பேசுகிறார் அந்த அம்மா ரூ.2 லட்சம் கோடி என்று பூஜ்ஜியம், பூஜ்ஜியமாக ரவுண்ட் பண்ணுகிறார்கள்.

வேறு முறைகளை கையாண்டிருந்தால், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 33000 கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்கிறது சி.பி.அய். குற்றப் பத்திரிகை

உதாரணமாக, பஞ்ச பாண்டவர்கள் எத்தனைப் பேர் என்று கேட்டால், கைகாட்டி நான்கு என்று சொல்ல, கை காட்டச் சொல்லி மூன்றைக் காட்டி, எழுதிக்காட்ட சொன்னால் இரண்டு காட்டி, அதில் ஒன்றை அழித்தாராம் என்ற கதை உண்டு. அதுபோலவேதான் சி.பி.அய். குற்றப் பத்திரிகையும்.

இந்த நாளேட்டில் குறிப்பிட்டுள்ளதைப் போல, உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ ஒரு ரூபாய் லஞ்சப் பணம் இருப்பதாகவோ, வருவாய்க்கு மேல் ஒரு ரூபாய் சொத்து சேர்த்ததாகவோ நிரூபித்துவிட்டால், நான் வழக்கை நடத்தாமலேயே ஆயுள் தண்டனையை ஏற்றுக் கொள் கிறேன். நிரூபிக்கத் தயாரா? என்று நீதிமன்றத்தில் ஆ.இராசா கேட்டாரே! (11.2.2011).

எவ்வளவு துணிச்சலாக இராசா பேசுகிறார்! இராசாவின் சொந்தக்காரர்கள் 33 பேர் வீட்டிற்குச் சென்று தேடித்தேடி பார்த்தார்களே! ஒன்றும் இல்லை என்று வெளியே வந்தார்களே! தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஒருவர் மேல் அபாண்டமாகப் பழி சுமத்துவது என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொருவரும் கோடி கோடி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த பலூனை ஊதி, ஊதி பெரிதாக்குகிறார்கள். அதில், உண்மை என்ற குண்டூசி பட்டால், அந்த பலூன் வெடித்துவிடும்.

வழக்கு பற்றி நீதிமன்றத்தில் இருக்கிறது. எங்காவது ஒரு ஆதாரம் கூட இல்லையே! எனவே, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால், அது உண்மையாகாது. அதுவும் பார்த்தீர்கள் என்றால், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும், திமுகவிற்கு அவப் பெயர் ஏற் படுத்தவேண்டும் என்பதற்காகவும், கலைஞருக்கு அவப் பெயர் உண்டாக்க வேண்டும் என்பதாலும் சொன்னார்கள்.

ஆனால் நீலகிரி தொகுதி மக்களாகிய நீங்கள், உங்களைப் போன்ற உண்மையை எங்கும் உணரக்கூடிய ஆற்றல் படைத்த வாக்காளர்கள் வேறு கிடையாது. அதனால் 24 ஆம் தேதி நடக்கும் தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் வீட்டு பிள்ளை இராசாவை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்று தமிழர் தலைவர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/78643.html#ixzz2yogOBYpy

தமிழ் ஓவியா said...


கோட்டையில் கொடியேற்றும் உரிமையை வாங்கித் தந்தது யார்? ஜெயலலிதாவிற்குக் கலைஞர் கேள்வி


தஞ்சாவூர், ஏப்.13- கருணாநிதி செய்தார் என்பதற்காக தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்டங்களை முடக்கும் ஜெயலலிதா, ஆகஸ்டு 15 இல் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதிதானே என்பதைச் சுட்டிக்காட்டினார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நேற்று (12.4.2014) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை அறிமுகப்படுத்தி பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் முகத்தில் சிரிப்பை காணவேண்டும்

நாம் தேர்தலில் நிற்கிறோம் என்றால், ஏதோ சடங் கிற்காக அல்ல. மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காகத் தான், சாதனை செய்வதற்காக தான் நிற்கிறோம். விளை யாட்டாக அல்ல. தேர்தலில் ஈடுபடுவதற்கு தமிழ் நாட்டை உயர்த்தவேண்டும். மக்களை செழிப்படையச் செய்யவேண்டும். மக்கள் முகத்தில் சிரிப்பை காண வேண்டும் என்று தான் ஜனநாயகத் தேர்தலில் ஈடுபடுகி றோம்.

இங்கே யார் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பதற்கு முன்பே, தி.மு.க.வில் ஏதாவது பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று பாலுவா? அல்லது இந்த தொகுதி பழனிமாணிக்கமா? என்று இந்தத் தொகுதியிலே தி.மு.க. பிளவு கண்டு கிடப்பதை போலவும், பாலுவும், பழனி மாணிக்கமும் தெருச்சண்டை போட்டுக்கொள்வது போலவும், 2 பேரும் கட்டிப்பிடித்துச் சண்டை போடுவ தைப் போலவும் விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

(அப்போது டி.ஆர்.பாலுவும், பழனிமாணிக்கமும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு உயர்த்திக் காண்பித்தனர்)

இப்போது மேடையில் கண்ட காட்சி தான் இந்த இயக்கத்திலே என்னுடைய தம்பிமார்களிடத்தில் நான் விரும்பி, வேண்டி காணுகின்ற காட்சி. இந்தக் காட்சி. நம்முடைய ஒற்றுமைக்குச் சாட்சி. இந்தக் காட்சியின் காரணமாக எதிரிகளின் சூழ்ச்சிக்கு வீழ்ச்சி.

நமது முதல் தேர்தல் அறிக்கையில்...

நமது முதல் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றோம். அப்போது எனது அருமை நண்பர் எம்.ஜி. ஆரும் நம்முடன் இருந்தார். அவரும் ஆதரித்து பல கூட்டங்களில் பேசி இருக்கிறார். நானும் பேசி இருக்கி றேன்.

தமிழ் ஓவியா said...


நமது கட்சித் தலைவர்கள் எல்லாம் அந்தக் கோரிக் கைக்காக ஒரு நாளை அறிவித்து பேராசிரியர், நாவலர், ஈ.வி.கே.சம்பத், நான் என தமிழகம் முழுவதும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அப்படிப்பட்ட மாபெரும் திட்டம். நமது வளத்தை பெருக்குகின்ற திட்டம். அந்தத் திட்டத்தை நமது முதல் தேர்தல் அறிக்கையில் எடுத்து காட்டினோம்.

அண்ணா கண்ட கனவு சேதுசமுத்திரத் திட்டம்

அண்ணா மறைவுக்கு பிறகும் அண்ணா கண்ட கனவு சேதுசமுத்திரத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற் றினால் வளம் கொழிக்க, வாணிபம் செழிக்க, வியாபாரி கள் தங்களது பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பு வார்கள் என்று தேர்தல் அறிக்கையில் அளித்து, அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.

அப்போது டி.ஆர்.பாலு அந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்று முனைப்போடு செயல் பட்டார் என்பதை நினைத்து பார்க்கும்போது, அது என் நினைவில் பசுமையாக இருந்தது. டி.ஆர்.பாலு போன்ற இளைஞர்கள் காத்து இருக்கிறோம் என்று கூறுவதை போல் அன்றைக்கு இந்த சேதுசமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடந்த போது, இந்திய அரசு இந்தத் திட்டத்தை ஆதரித்தது என்று மேடையில் இருந்தவர்கள் பேசினர்.

அந்தத் திட்டத்தை தொடங்கிய பிறகு, எம்.ஜி.ஆர்., அண்ணாவும் இல்லை. அம்மையார் இருந்தார். தமிழகத் திற்கு போதாத காலம் அம்மையார் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். அம்மையார் என்றால் புரியாது அம்மா என்றால் புரியும்.

உச்சநீதிமன்றத் திற்குச் சென்று தடைபெற்று இருக்கிறார்கள் என்றால், அவர்கள் தமிழகத்தைச் நேசிப்பார்களா?

டில்லிக்கு அம்மையார் சென்றார். ஏன் செல்கிறார் என்று பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கச் சென்று, தடையும் பெற்று இருக்கிறார். முழுமையானத் தடை அல்ல. அதை நிறைவேற்றுகின்ற முயற்சியை முடக்குகின்ற வரையில், தாமதப்படுத்தும் வகையில் தடை பெற்று இருக்கிறார். நீங்கள் தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

மத்திய அரசு, தமிழகத்திற்குத் தருகின்ற நல்ல திட்டத்தை வேண் டாம் என்று யாராவது சொல்வார்களா? வேண்டாம் என்றால் பராவாயில்லை, உச்சநீதிமன்றத் திற்குச் சென்று தடை பெற்று இருக்கிறார்கள் என்றால், அவர்கள் தமிழகத்தைச் நேசிப்பார்களா? இவர்கள் தமிழகத்துக்காரர்கள் இல்லை என்பதற்கு இது போதாதா? தமிழகத்தில் ஆளும் கட்சி, தமிழகத்திற்கு என்ன தேவை என்று கேட்டு பெறக்கூடிய கட்சி, நீ கொடுத்து நான் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்பதைப் போல அந்தத் திட்டத்தை வேண்டாம் என்று கூறி விட்டார்.

கொடியேற்ற மாட்டாரா?

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 சுதந்திர தினவிழா வில் கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தது யார், இந்தக் கருணாநிதி தானே.

ஜனநாயக இந்தியாவில் நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அம்மையார் அவர்களே நீங்கள் இந்தியப் பிரதமர். நான் முதலமைச்சர். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்றுகிறார்கள்.

அந்த நாளை அவர்களது அலுவலகத்தில் கொண்டாடு கிறார்கள். தமிழகத்தில் ஆட்சியருக்கு உள்ள உரிமை. முதல்வருக்குக் கிடையாதா? என்று கேட்டேன். இனிமேல் சுதந்திர தினத்தன்று எல்லா மாவட்ட ஆட்சி யரும் கொடியேற்றலாம். இந்தியாவில் உள்ள முதல மைச்சரும் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற உரிமையை வெளியிட்டார்கள்.

அண்ணா நூல் நிலையம், படிப்பகம், இதைக் கருணாநிதி கொண்டு வந்தார். ஆகவே இதை நடத்தவிடமாட்டேன் என்று செயல்படும் ஜெயலலிதா, சுதந்திரதினத்தன்று கொடியேற்றும் உரிமையை கருணாநிதி கொண்டு வந்தார். அதனால் இனிமேல் கொடி ஏற்றமாட்டேன் என்று சொல்லக்கூடிய திராணி. தெம்பு ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/78614.html#ixzz2yoh4dhjA

தமிழ் ஓவியா said...

பதுங்காமல் பதில் சொல்லட்டும்- பா.ஜ.க. பார்ட்னர்கள்!


1. சிறுபான்மையினர்களுக்கு சலுகைகளை வழங்குவதுபோல பலவற்றைச் சொல்லுகிறது தேர்தல் அறிக்கையில் சொல்லுகிறது பி.ஜே.பி. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை நவீனப் படுத்துவோம் - உருது மொழி மேம்பாட்டை உறுதிப்படுத்து வோம் என்றெல்லாம் கூறத் தெரிந்த பி.ஜே.பி.,க்கு அவர்களுக்குச் சச்சார் குழு பரிந்துரைத்தபடி இட ஒதுக்கீடு அளிப் போம் என்று கூற மனம் இல்லையே ஏன்?

2. சிறுபான்மையினர் கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் புதுப்பிக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் காணப்படுகிறது. முஸ்லிம் மக்களின் 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாரம்பரிய கலாச்சார சின்னமான பாபர் மசூதியை பட்டப் பகலில் பகிரங்கமாக அடித்து, உடைத்து நொறுக்கியவர்கள்தான் சிறுபான்மை மக்களின் பாரம்பரியச் சின்னங்களின் பாது காவலர்களா?

3. உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகரில் நடைபெற்ற மதக்கலவரத்தைக் காரணம் காட்டி, உ.பி.யில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சமாஜ் வாடி கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிய பி.ஜே.பி., குஜராத்தில் 2002 இல் மிகப்பெரிய மதக்கலவரம் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்களே - அப் பொழுது ஆட்சியில் இருந்த பி.ஜே.பி.யின் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய் யாதது ஏன்?

தமிழ் ஓவியா said...

4. ராமன் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் - காஷ்மீர் மாநிலத்திற்கான 370 சட்டப் பிரிவை அகற்று வோம் - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள - இவற்றின்மீது அக்கட்சி யுடன் கூட்டணி வைத்துள்ள ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? தேர்தலில் வெற்றி பெற்றால் இவற்றை பி.ஜே.பி. செயல் படுத்தும்போது இந்தக் கூட்டணிக் கட்சிகள் என்ன செய்ய முடியும்?
சிறுபான்மை மக்கள் மத்தியில் மன்னிப்புக் கோருவார்களா? சிறுபான்மை மக்கள் முகத்தில் எந்தக் காலத்திலும் விழிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா? தேர்தல் அறிக் கையில் மதச் சார்பின்மைபற்றியும், (பக்கம் 15) சிறுபான்மையினர் நலன்பற்றியும் (பக்கம் 45) ம.தி.மு.க. குறிப்பிட்டுள்ளதே இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?

5. ஈழத் தமிழர் (பக்கம் 11, 20), தமிழக மீனவர்கள் (பக்கம் 21) பற்றியெல்லாம் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முழங்கப்பட்டு இருக்கின் றனவே - இவைபற்றி ஒரே ஒரு வரிகூட பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வில்லையே - இதற்கு என்ன பதில்? இலட்சியத் தின்மீது உறுதி இருந்தால் இதுபற்றி குறைந்த பட்சம் வினா எழுப்பி இருக்கவேண்டாமா? அப்படியென்றால் இலட்சியமாவது - வெங்காய மாவது பதவிதான் எங்கள் பசி என்று பகிரங்க மாக ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே பொருள்?

6. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்பு ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று சுற்றி வளைத்துத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பி.ஜே.பி., அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங் குவதுபற்றி ஒரே ஒரு வரிகூட இடம்பெறச் செய்யாததற்குக் காரணம் என்ன?

எதைச் சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வாக்குக் கேட்க உத்தேசம்?

சமூகநீதிபற்றி ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் (பக்கம் 14) குறிப்பிடப்பட்டுள்ளதே அதை என்ன குப்பைக் கூடையில் தூக்கிப் போடப் போகிறார்களா?

7. வடகிழக்கு மாகாணங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மற்ற மாநிலங் களைப் போல மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை பகர்கிறதே - இதன் இலக்கு என்ன? பெரும்பாலும் கிறித்தவர்கள் வாழும் பகுதி என்ற கனல் கக்கும் கண்ணோட் டம்தானே இதில் காணக் கிடக்கிறது.

50 சதவிகிதத்தையும் தாண்டி அப்பகுதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே அதில் கை வைப்பதுதானே ஆரிய பி.ஜே.பி. யின் ஆத்திரம்!

தமிழ் ஓவியா said...

முஸ்லிம்கள் மட்டுமல்ல - கிறித்தவர்கள் முகத்திலும் விழிப்பதில்லை என்று கூட்டணிக் கட்சியினர் முடிந்த முடிவுக்கு வந்துவிட்டனரா?

8. பசு பாதுகாப்புக்கென்று தனியாகவே ஒரு துறை கொண்டு வரப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்களே - பி.ஜே.பி.யினுடைய தேர்தல் அறிக்கையில்!

விலங்குகளில் அது என்ன பசுவுக்கு மட்டும் பிரத்தியேகப் பாத்திரம்? இது அப்பட்டமான அவர்களின் ஹிந்துத்துவா குணம்தானே.

இந்தப் பசுப் பாதுகாப்பு என்று சொல்லித் தானே அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பச்சைத் தமிழர் காமராசரை, இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியிலே பட்டப் பகலிலே (7.11.1966) ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், ஜனசங்கம் (இன்றைய பி.ஜே.பி.), பூரி சங்கராச்சாரிகள், நிர்வாண சாமியார்கள் கைகளில் கொலைக் கருவிகளுடன் கூடி வெறியாட்டம் போட்டு, காமராசரை உயிரோடு கொளுத்த திட்டம் போட்டார்களே - (தி.மு.க. தொண்டனால் தப்பிப் பிழைத்தார்) காமராசரின் சீடர் காந்தீய மக்கள் கட்சியின் நிறுவனர் அந்தப் பி.ஜே.பி. கோத்திரத்துக்கு கோவிந்தா! போட ஆரம்பித்துவிட்டாரே - அது எப்படி? நடந்த தென்ன என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா? (காந்தியாரைக் கொன்றவர் களோடு ஆலிங்கனம் செய்யத் தயாராகிவிட்ட நிலையில், இது எம்மாத்திரம் என்று பதில் சொல்லுவார்களோ!)

9. தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.பற்றி அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு வரி விமர்சனம் கூட செய்யவில்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியான பிறகும், ஒரு முணு முணுப்புக்கூட அம்மையாரிடமிருந்து வெளிவர வில்லை. இதன்மூலம் அண்ணா என்ற பெய ரும், திராவிட என்ற இனக் கலாச்சார அடை யாளமும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு அறவே பொருத்தமற்றது என்று பகிரங்கப்பட்டுவிட்ட தல்லவா!

பச்சையான பாசிச ஹிந்துத்துவா தேர்தல் அறிக்கையைக் கொடுத்துவிட்டது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தோம் என்று தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாரே - இதற்குப் பின்பும் வைகோ கம்பெனி என்ன செய்ய போகிறது? கூட்டுச் சேர்ந்தவர்கள்பற்றிச் கிஞ்சிற்றும் கவலையில்லை - அந்தக் காவிக் கட்சிக்கு! ஆனால், தீவிர வித்தாரம் பேசும் ம.தி.மு.க., பா.ம.க., மணியன் வகையறாக்கள் அனைத்தை யும் துறந்து, காட்டிக் கொடுத்து, அவலநிலைக்கு ஆளாகிவிடவில்லையா?
கையறு நிலைக்குத் தங்களைத் தாங்களே தள்ளிக்கொண்டு விடவில்லையா?

இதுபோன்ற ஏராளமான கேள்விகள் உண்டு.

முதலில் இவற்றிற்கு மட்டும் பதுங்காமல், பதில் சொல்லுவார்களா - பா.ஜ.க. பார்ட்னர்கள்?

Read more: http://viduthalai.in/page-8/78619.html#ixzz2yohLjiOI

Unknown said...

1000 ee vay raa vanthalum thirutha mudiyathu aatuu manthai kootam

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

நமது தமிழ் ஓவியா தளத்தை எனது தளத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன்.
சாப்பாடு நல்லாருக்கு னு சொல்றத விட, இன்னும் கொஞ்சம் போடுங்க னு சொல்றதுதானே உண்மையான பாராட்டு நன்றி பணிகள் தொடர்க. தொடர்வேன் பார்க்க - http://valarumkavithai.blogspot.in/

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளி வந்த நிலையில் வாக்காளர்களின் மனப்பான்மையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பாரக்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பி.ஜே.பி. வெளியிட்டு இருப்பது மக்களிடம் வாக்குறுதி கொடுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாகத் தெரிய வில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நெடு நாளாகக் கூறி வந்துள்ள ஹிந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பதற் கான அதிகாரப் பூர்வ அறிவிப்பாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையை நினைக்க வேண்டும்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அதற்குப் பதிலாக ஹிந்து ராஜ்ஜியத்தின் சட்ட திட்டங்களை அறிவித்துள்ளார்கள். எந்த இடத்திலும் மதச் சார்பற்ற தன்மையைக் காப்போம் என்ற உறுதி மொழி இல்லை.

அதே நேரத்தில், மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரான செயல் திட்டங்களைப் பதிவு செய்துள்ளனர். ராமன் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள தனி சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் 370ஆம் பிரிவு நீக்கம், பசுவதைத் தடுப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்துக் களுக்குப் பாதுகாப்பு (அதற்கென்றே தனித்துறை), வடகிழக்கு மாகாணத்தில் கடைப்பிடிக்கப்படும் பிரத்தி யேக வாய்ப்புகள் பறிப்பு (அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்!) இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஹிந்துத்துவா செயல் திட்டங்களே!

இவற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் பிஜேபியை எதிர்த்தால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது; மதச் சார்பின்மையைத் தகர்க்கும் ஓர் அரசியல் சட்டம் மக்களை மிகப் பெரிய அளவில் செங்குத்தாகப் பிளந்து எறிந்து விடும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மதமாச்சரிய நெருப்பை ஊதிவிட்டு கலகம் விளைவிப்பதை கலையாகக் கருதும் ஓர் மனப்பான்மை வந்து குதித்து விடும். சமூக அமைதி என்பது மயானத் தில் மட்டும்தான் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும்.

இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற கருத்துக்கு இடமில்லாமல் ஒட்டு மொத்தமான சமுதாயமே அமைதியைத் தொலைத்து விடக் கூடிய அபாயம் தலைக்கு மேல் வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகள் மோடியைப் பிரதமராக் குவதற்கு சுயநலவெறி காரணமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சமுதாயத்தை மத ரீதியாகக் கூறு போட்டு மக்களின் வளர்ச்சிப் போக்குக்கு மரண குழி வெட்டும் வேலை! பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பிஜேபி கூறும் ஹிந்துத்துவாவை ஏற்கிறார்களா என்பது பிரச்சினையல்ல; பிஜேபி ஆட்சி அமைக்குமானால் அந்தப் பெரும்பான்மை மக்களின் சகல வாழ்வும் சுக்கு நூறாகி விடும் என்பதை மறந்து விடக் கூடாது பெரும்பான்மை என்ற போர்வையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் கைதான் ஓங்கும் - மீண்டும் மனுதர்மமே கோலோச்சத் தொடங்கும். இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததைத் தெரிந்துகொண்டால் இந்தச் சூட்சுமத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதியிலே அக்கறை உள்ளவர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மோடியின் தலைமை யில் அணி வகுத்து நிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையே (என்.டி.ஏ.) ஒட்டு மொத்தமாக வீழ்த்திட முனைய வேண்டும். விவரம் தெரியாமல் வழக்கம் போல வந்து போகும் ஒரு பொதுத் தேர்தல் என்று மேம்போக்காகக் கருதிக் கொண்டு, கோட்டை விட்டால், சமூகநீதியின் அஸ்திவாரமே கலைந்து போய் விடும் எச்சரிக்கை!!

சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை, மாச்சரியங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, இப்பொழுது தேவை ஒட்டு மொத்தமான சமூக நீதி, மதச் சார்பின்மை என்பதை மனதிற் கொண்டு, ஒரு மூச்சுப் பிடித்து பிற்போக்கு அணியை ஊதித் தள்ளிட வேண்டும். நம்மில் சில மனிதர்கள், அமைப்புகள் பதவிப் பசி எடுத்து வித்தாரம் பேசுவார்கள் நீட்டி முழங்குவார்கள்; அந்த மத்தாப்பு வெளிச்சத்தில் மனதைப் பறி கொடுத்து அஸ்திவாரத்திற்குத் தங்களுக் குத் தாங்களே வேட்டு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் வேண்டுகிறது - அதன் தலைவர் குரல் கொடுக்கிறார்.

திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை என்பதை நினைவிற் கொள்வீர்!

Read more: http://viduthalai.in/page-2/78680.html#ixzz2yufpIX3Z

தமிழ் ஓவியா said...


குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!


நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை முரளி மனோகர் முண்டா தட்டுகிறார்

புதுடில்லி, ஏப்.14-நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலை வர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன் னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர் தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட் டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பார தீய ஜனதாவின் பிரதிநிதி யாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரி விக்கிறார்கள். நாடு முழுவ தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசு கிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாகக் கருத முடியாது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அபிவிருத்தியில் எந் தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்ற னவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட் டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சி யின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதல்அமைச்சரால் எடுக் கப்பட்ட முடிவு. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

அவர் இவ்வாறு கூறி இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78674.html#ixzz2yugpLe00

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா

சிம்லா, ஏப். 14- நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை. பா.ஜ.க. ஊடகங்களின் விளம்பரம் மூலம் மோடி அலை இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா இன்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், நாட்டில் பாதியளவில் கூட பா.ஜ.க. இல்லை. மோடி அலையை உருவாக் கும் ஊடக விளம்பரங்கள் கிராமப்புறங்களில் சென் றடைய வில்லை. ஏனென்றால் களத்தில் உண்மை நிலவ ரங்கள் வேறுபட்டுள்ளன.

அறிக்கைகளின் படி, பா.ஜ.க. ஊடக பிரச்சார விளம்பரங்களுக்காக பல கோடிகளைச் செலவு செய் துள்ளது. ஆனால் காங்கிரஸ், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே வாக்குகளை கேட்கும். இமாசல பிரதேசத்தின் 4 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். என்றார்.

மேலும், பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தன்னுடைய புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்த அவர், அது முற்றிலும் கற்பனையானது, உண்மையான தகவல்களின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதப்படவில்லை. வணிக லாபத்திற் காகவே அது எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளி யிட்டிருந்தாலும், சஞ்சய பாரு தேர்தல் நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது கேள்விக் குரியது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhAC5n5

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒன்றைச் சொல்லிக் கொண்டு வருகிறார். தி.மு.க.வினரை விரட்டி அடியுங்கள் - விரட்டி அடியுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பொது மக்கள் அப்படியே அட்சரம் பிறழாமல் செய்கிறார்கள்.

தேனியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மக்கள் விரட்டியடித்தனர். கரூரில் தம்பித்துரையை விரட்டியடித்தனர். சொன்னவர் முதல் அமைச்சர் அல்லவா? குடி மக்கள் கேட்க வேண்டாமா? - (பொது மக்கள் கைதட்டி சிரித்தனர்). அதைத்தானே குடி மக்கள் செய்கிறார்கள்!

- ஆற்காடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/78676.html#ixzz2yuhMvMhQ

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பிறந்த நாள் நமது சூளுரை
திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

இன்று உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். அவர் வாழ் நாளில் எல்லாம் மதவாதத்தை ஜாதிய வாதத்தை - சமதர்மத்திற்கு எதிரான சக்திகளை எதிர்த்து வந்தவர். தந்தை பெரியாரின் அன்புக்கும் மதிப்புக்குமுரியவர் - அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்.மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தலை தூக்க எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் எண்ணங்களை நிறைவேற்றிட இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

- சென்னையில் செய்தியாளர்களிடம் 14.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78677.html#ixzz2yuharuXT

தமிழ் ஓவியா said...

நீலகிரி தொகுதியில் - அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு

12.4.2014 அன்று மாலையில் வந்த பத்திரிகை. பா.ஜ.க. கூட்டணியை உருவாக்குகிறேன் என்று ஒருவர் சொன்னார் - தமிழருவி மணியன். அவர் போகாத கட்சியே இல்லை. ஏராளமான கட்சிகளுக்கு ஒரு ரவுண்ட் போய்விட்டார். இனிமேல் போவதற்குக் கட்சியில்லை என்பதால் அவரே ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்.

அவர் சொல்கிறார்:

நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்குத்தான் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு என்று சொல்கிறார்.

ஆகவே, இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரியார் சொல்வதைப்போன்று பூனைக்குட்டி வெளியே வந்தது. கோணிப்பையில் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்தது.
பா.ஜ.க. அறிவிப்பா?

இது பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பா? என்று கேட்கலாம். இவர் (தமிழருவி மணியன்) தானே முன்னே நிற்கிறார். இதை இல்லை என்று அவர்கள் மறுக்கப்பட்டுமே! அவர் சொன்னது சொந்தக் கருத்து என்று மறுக்கவேண்டுமே! இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கிறோம். இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு பேரும் ஒன்றுதான். முன்பாகம், பின்பாகம். முன்பாகம் நாயக்கர் குதிரை; பின்பாகம் ராவுத்தர் குதிரை அவ்வளவுதான். குதிரை ஒன்றுதான்; நீங்கள் தடுமாறக் கூடாது.

இரண்டு பேரிடமும் அதே மதவாதம். ராமர் கோவில் திட்டம். ஒரே பிரச்சினை இருவரிடமும். ஆகவே, இவர்கள் வேறு திட்டம் போட்டிருப்பதை எண்ணி கவலைப்படவேண்டாம்.

Read more: http://viduthalai.in/page-4/78693.html#ixzz2yuiHx75W

தமிழ் ஓவியா said...


பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் நரேந்திரமோடி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கு!

பெங்களூரு, ஏப்.14- பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று கருநாடக முதல்வர் சித்த ராமையா தெரிவித்தார்.

பெங்களூரு மகாதே வப்புரா மாருத்தஹள்ளி யில் சனிக்கிழமை காங் கிரஸ் வேட்பாளர் ரிஸ் வான் அர்ஷத்தை ஆதரித்து அவர் பேசியதாவது:

20 தொகுதிகளைக் கைப்பற்றும்

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திரமோடி குஜ ராத் மாநிலம் வளர்ச்சிப் பணிகளில் முதலாவதாக உள்ளதாக தான் பங்கு கொள்ளும் பொதுக்கூட் டங்களில் பேசி வருகிறார். இதில் உண்மையில்லை என்றாலும் அவர் அதைத் தொடர்ந்து பேசி வரு கிறார். பொய் சொல்வதில் கை தேர்ந்தவரான நரேந் திரமோடி, ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்.

கருநாடகத்தில் அக்கட்சி யினர் செய்த ஊழலால் அக் கட்சியின் முதல்வர் உள்பட பலர் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இதனால் மக் களவைத் தேர்தலில் காங் கிரஸ் கட்சியை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ள னர். கருநாடகத்தில் காங் கிரஸ் 20 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றார் அவர்.

மோடியின் முதுகில் ஏறி பாஜகவால் வெற்றி சவாரி செய்ய முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச் சரும், தேசிய செய்தித் தொடர் பாளருமான தாராதேவி சித்தார்தா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூ ருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் எங்கும் நரேந் திரமோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை. இது பாஜகவினரால் அவிழ்த்து விடப்பட்டுள்ள பொய் மூட்டைகளில் ஒன்று. மக் களவைத் தேர்தல் முடிவு கள் வெளியான பிறகு கரு நாடகத்தில் மோடி அலை இல்லை என்பது தெளிவா கும். கருநாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவி னர் நடத்திய ஆட்சியை மக்கள் கெட்ட கனவாக கருதியுள்ளனர்.

பாஜக ஆட் சிக் காலத்தில் மாநிலத்தின் இயற்கை கனிமவளம் கொள்ளை அடிக்கப்பட் டது. உற்றார் உறவினர் களுக்கு சாதகமாக ஆட்சி வளைந்து கொடுக்கப்பட் டது.

மோடியை முகமூடியாக அணிந்துகொண்டு...

5 ஆண்டுகாலத்தில் 3 முதல்வர்கள் பதவி வகிக் கும் அளவுக்கு ஆட்சியி லும், கட்சியிலும் குழப் பம். முதல்வராக இருந்த எடியூரப்பா உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர் கள், தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வரிசையாக சிறைக்குச் சென்றனர். நில ஒதுக்கீட் டில் முறைகேடு போன்ற ஏராளமான குளறுபடி களுக்கு இடையே பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனவே, காங்கிரசை விமர் சிக்கும் தார்மீக உரிமையை பாஜக இழந்துள்ளது. பாஜக வின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக அக்கட்சி யினர் மோடியை முகமூடி யாக அணிந்துகொண்டு வாக்கு கேட்க வந்துள் ளனர்.

மோடியின் பின்னால் இருப்பவர்கள் அனை வரும் ஊழலில் சிக்கிய தலைவர்கள் தான். அரசி யல் வியாபாரம் என்ற மோசமான வழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள் பாஜ கவினர். அதையெல்லாம் மூடிமறைத்துவிட்டு நீதி மான்களைபோல மக்கள் முன் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

நரேந் திரமோடியின் முதுகில் ஏறி பாஜகவினரால் வெற்றி சவாரி செய்ய இயலாது. ஊழல்வாதிகள் பாஜகவில் அய்க்கியமாகியுள்ளனர். ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க ஆட்சி அதிகாரம் தேவைப்படுவதால் ஒன்றா கியுள்ளனர். தேர்தலுக்கு பிறகு பாஜகவில் கோஷ்டிபூசல் தலைதூக்கும். அப்போது பாஜகவினர் ஒருவர் காலை ஒருவர் இழுத்துக்கொள் வார்கள் என்றார் அவர்

Read more: http://viduthalai.in/page-5/78669.html#ixzz2yuiTptzh

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்து வதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகப் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். வாழைத் தண்டுக்கு சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவ டையும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulSPSj4

தமிழ் ஓவியா said...


மூலிகைகளால் நமக்கு ஏற்படும் மருத்துவப் பயன்கள்

மிளகையும், வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல், நீர்க்கோவை ஆகியவை குண மாகும். சீரகத்தையும், கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

நான்கு மிளகையும், இரு கிராம் பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றி லையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குண மாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஒதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெய்யை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரியையும், திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து, தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து, டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங் காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டை யும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்சவேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulde500

தமிழ் ஓவியா said...

உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் கவனம் அவசியம்

பரபரப்பான தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையும், உணவு பழக்க வழக்கங்களும் நம்மை நோயில் தள்ளி விடுகின்றன. உணவு முக்கியம்தான். ஆனால், எது நல்லது என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. பல ரெடிமேட் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இவை ஆரோக் கியத்துக்கு உகந்தவை அல்ல. மேலும் இத்தகைய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, படிப்பையும் பாழாக்கி விடுகிறது.

பீட்சா, பாஸ்தா போன்றவை மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை. ருசிக்காக இவற்றை எப்போதாவது சாப்பிட்டாலும், இவற்றுக்கு பதிலாக கோதுமை உணவு களை உட்கொள்ளலாம். இவை சீக்கிரமாக குளுக்கோஸாக மாறாது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளிலும் சத்து கிடையாது என்பதோடு பல்வேறு சிரமங்கள்தான் மிச்சம்.

ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எண்ணெய். இது பிஸ்கட்டிலும், பிற நொறுக்குத் தீனிகளிலும் அதிகமாக இருக்கும். உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா நிறுவனங்களும் எண்ணெயில் ஹைட்ரஜனை அதிகம் செலுத்துகின்றன.

டிரான்ஸ்ஃபேட் எனப்படும் இதை நம் உடலால் எளிதில் செரிக்க முடியாது. இதை உண்பதால் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிகம் சேரும். இப்படி அதிகமாகும் கெட்ட கொழுப்பினால், காலப்போக்கில் நாளங்கள் கடினமாகிவிடும். பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில உணவுப் பொருள்கள் உங்கள் குழந்தையின் உடல் அமைப்பில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.

ஒவ்வாமை, ஆஸ்துமா, அலர்ஜி, கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நீர்ச்சத்தும் குறையும். இதுபோல் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. எந்த அளவுக்கு நொறுக்குத் தீனிகளை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு ஆரோக் கியம் பாழாகாமல் இருக்கும்.

இவற்றுக்கு பதிலாக பாதாம், அக்ரூட் போன்ற அதிக சத்துள்ள உணவு பொருட்கள், உடனடி சக்தி கிடைக்கும். இந்த கோடை காலத்தில் மிகவும் கவனம் அவசியம். நீர்ச் சத்து மிகுந்த பழங்களை உண்ணலாம்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulq11a7

தமிழ் ஓவியா said...

நா.முத்துநிலவன் said...

// நமது தமிழ் ஓவியா தளத்தை எனது தளத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன்.
சாப்பாடு நல்லாருக்கு னு சொல்றத விட, இன்னும் கொஞ்சம் போடுங்க னு சொல்றதுதானே உண்மையான பாராட்டு நன்றி பணிகள் தொடர்க. தொடர்வேன் பார்க்க - http://valarumkavithai.blogspot.in///

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், இணைப்புக்கும் மிக்க நன்றி நா.முத்துநிலவன் அய்யா.

தமிழ் ஓவியா said...


மோடி பற்றி கலைஞர் கருத்து

சென்னை, ஏப்.15- திமுக - அதிமுக பற்றி மோடி தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:

செய்தியாளர்: நேற்றைய தினம் மோடி ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததைப் பற்றி, ரஜினிகாந்த் அவரை நல்ல நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ நோ கமெண்ட்ஸ், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்: இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?

கலைஞர்: நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.

செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?

கலைஞர்: அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகி விட்டது. ஆகவே எங்களைச் சாடுகிறார்கள்.

செய்தியாளர்: முதன் முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சி களுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: தமிழ்நாட்டில் முதன் முதலாக பிரச் சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன் முதலாக வெளியிட் டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78726.html#ixzz2z0KhxsRx

தமிழ் ஓவியா said...


சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீது பவார் தாக்கு!

டில்லி.ஏப்.15- மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவ ருமாகிய சரத் பவார் சமூக வலைதளமான டிவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அப்பதி வில் சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப் பிட்டு, சிலர் ஹிட்லராக வருவதற்கு கனவு காணு கிறார்கள் என்று தாக்கி உள்ளார்.

காங்கிரசே இல்லாத நாடாக இந்தியா வரும் என்று மோடி கூறியிருந்தார். பவார் அதைக்கண்டித்துக் கூறும்போது, மனநல மருத் துவமனையில் இருக்க வேண் டியவர் என்று சாடினார்.

தற்போது சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஹிட்லராக உருவாக கனவு காண்கிறார் கள். அப்படிப்பட்ட சக்தி களை வெற்றிபெற அனும திக்கக் கூடாது. அப்படிப் பட்டவரின் முயற்சிகளை நசுக்கிட வேண்டும் என் றார். மராட்டிய மாநிலத்தில் விதர்பாவில் தொடர்ச்சி யான இரு கூட்டங்களில் மோடி பேசும்போது, விவ சாயிகளைப் பாதுகாக்க வில்லை என்று பவார்மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.

அதற்குப் பதிலடியாக பவார், நாம் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்று கூறுகிறோம். ஆனால், பாஜக தலைவர் கள் தனிப்பட்ட முறையில் பெண்களை கேலிப் பொரு ளாக்குகிறார்கள். நாட்டை எப்படி அவர்கள் நடத்து வார்கள்? என்று கேட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை, காங்கிரசு தேர்தல் அறிக் கையிலும் நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மோடியின் வரலாறு குறித் தும், அறிவு குறித்தும் கேலி செய்துள்ளார். காந்தி ஒத் துழையாமை இயக்கத்தை அகமதாபாத்திலிருந்து தொடங்கியதாக கூறாமல், வார்தாவிலிருந்து தொடங் கினார் என்றாரே என்று கேலி செய்துள்ளார். பவார் கட்சியான தேசியவாதக் காங்கிரசுக் கட்சி கடந்த பத்து ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணியான காங்கிரசு அணியில் 1999லி ருந்து அங்கம் வகித்து வருகிறது.
-ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14-4-2014, டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78727.html#ixzz2z0L42SVv

தமிழ் ஓவியா said...


இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின் குரல்!

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இடையில் எட்டு நாள்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இயற்கைத் தட்ப வெப்ப நிலையோடு போட்டிப் போட்டுக் கொண்டு அனல் பறக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர். தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று இரு கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் திரண்டு அவர் உரையைக் கேட்கிறார்கள்.

இவருடைய கருத்தும், உரையும் வித்தியாசமாகவே இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலின் தனித் தன்மை என்ன? என்பது குறித்துத் தமக்கே உரித்தான ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

ஒரு காலத்தில் ஜன சங்கமாக இருந்த அமைப்புதான் இன்றைய பாரதீய ஜனதா கட்சி; இதற்கு முன் தனது இந்துத்துவா திட்டத்தை இலை மறை காயாகத் தான் வைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற அவர்களின் தாய் நிறுவனம் பின்புலத்தில் இருந்தது. நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அது முன்னுக்கு வந்து, பிஜேபியைக் கட்டளையிடும் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கி விடும். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷியே அந்த உண்மையைப் பட்டாங்கமாய் ஒப்புக் கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் ஆலோசனைகளின்படிதான் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.

அதன் காரணமாக ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் இவை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதனையும் தாண்டி ஆர்.எஸ்.எஸின் முக்கிய கோட்பாடான பசுவதைத் தடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பசு பாதுகாப்புக்கென்று தனித் துறையே உருவாக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கென்றுள்ள சிறப்புச் சலுகைகளும் மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியம் என்கிற ஆர்.எஸ்.எஸின் அடிநாதக் கொள்கை என்பதை அரங்கேற்றக் கூடிய ஒரு திட்டத்தோடு தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்தக் கோணத்தில் தான் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் வழக்கம் போல வந்து போகும் தேர்தல் அல்ல; நமது தலை முறையைப் பாதிக்கச் செய்யக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைத்து இந்தத் தேர்தலைப் பார்க்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நாட்டில் மதக் கலவரங்களைத் திட்டமிட்டு அது நடத்தி வந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் மதக் கலவரங்களின் பின்னணியில் சங்பரிவார் இருந்திருக்கிறது என்பதை இந்தியாவின் உள் துறையே சொல்லியிருக்கிறது. காவி பயங்கரவாதம் என்ற ஒரு சொலவடையையே கூட உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் சொன்ன துண்டு.

மாலேகான் குண்டுவெடிப்பைக் கவனித்தால் சங்பரிவார்க் கும்பல் இந்திய இராணுவம் வரை ஊடுருவி இருப்பதை அறிய முடிகிறது. இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி மருந்தை இவர்கள் கையாண்டுள்ளனர். இது சாதாரணமானதல்ல; மிகப் பெரிய சதித் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே மிகப் பெரிய சதித் திட்டத்தை வகுத்து நாட்டில் கலவரத்தைச் செய்துள்ளது மதவெறிப் பிடித்த ஒரு கும்பல் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் எப்படி யெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸின் பாடத் திட்டங்கள் இடம் பெற்று விட்டன. மனு தர்மத்தைப் பாடமாக வைக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அரசு நிருவாகத் துறைகளிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி விட்டன. இராணுவத் துறையிலும் பெரும் அளவுக்கு ஊடுருவி விட்டதாக கப்பல் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் கூறியுள்ளார்.

ஏதோ வாக்குச் சாவடிக்குள் சென்று ஒரு பொத்தானை அழுத்துகிறோம் என்ற சம்பிரதாயக் கடமை என்று நினைக்காமல், இந்தியாவின் எதிர் காலத்தையே அச்சுறுத்தும், குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைக்கும், சமூக நீதிக்கும் எதிரான சக்திதான் பிஜேபி என்பதை மனதிற் கொண்டு அதனையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சி களையும் அடையாளம் கண்டு, ஒரே கல்லால் பல காய்களை வீழ்த்தும் வாக்களிப்புக் கடமையைச் செய்ய வேண்டும்; திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பிரச்சாரம், வேண்டுகோள் தமிழ்நாட்டு அளவில் இருந்தாலும் - இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படுவதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78730.html#ixzz2z0LO7v7r

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

- (விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78728.html#ixzz2z0LfXMr2

தமிழ் ஓவியா said...


அணையா நெருப்பு டீஸ்டா செடல்வாட்


குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனிதஉரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான்.

அப்படி குஜராத்தில் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டப் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் சார்பில் செயல்படும் டீஸ்டா செடல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

டீஸ்டா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கை யின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.

1993இல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரி கையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.

கம்யூனலிசம் காம்பாட் (மத அடிப்படை வாதத்துக்கு எதிரான போர்) என்ற மாத இதழைக் கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான்.

தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளையும் மனச்சிதைவையும் அம்பலப்படுத் துவதை நோக்கமாகக் கொண்டு டீஸ்டா செயல்பட்டு வருகிறார்.

இப்படி மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தளராத உறுதியுடன் டீஸ்டா போராடினாலும், ஒருபுறம் அவருக்கு எதிரான அவப் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NKPAIy

தமிழ் ஓவியா said...

முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்

சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம் பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர். நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம்.

எங்கள் வீட்டுக்கு நான் 8ஆவது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன்.

அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார். பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.

முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.

ஆனால், பார்வையற்றவர் களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராதாபாய்.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NVA32r

தமிழ் ஓவியா said...


மாட்டு வண்டியில் பயணித்து ரிசர்வ் வங்கியின் நிர்வாகசபை வரை சென்றடைந்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தமிழர் ஆர்.காந்தி


காந்தி என்ற பெயரைச் சொன்னதும் நெல் விளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவநல்லூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் என்பது மட்டுமே சிலருக்கு தோன்றலாம்; ஆனால், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி பழகுவதற்கு இனிமை யானவர்; நேசிக்கத்தக்கவராகவும் விளங்குகிறார் என்பது அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்குப் புரியும்.

அரசுத் துறையில் பதவி உயர்வு என்பது ஓர் புதிர் போல நிலைமை என்ற அளவில், காந்தி அவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்கு தேர்வானது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல; ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வங்கியில் சிறந்த முறையில் சேவையும், நுண்ணறிவும் பெற்ற ஒருவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பணிமூப்பு அடிப்படையில் ஜி.கோபாலகிருஷ்ணா விற்கு இந்த வாய்ப்பு வராத நிலையில், பி. மொஹாபத்ரா அல்லது பி.விஜய் பாஸ்கர், இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நேரத்தில், பள்ளிக்கு மாட்டு வண்டியில் சென்ற ஓர் விவசாயி மகன் காந்தி, வெற்றிக் குதிரையாக, இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த பதவியில், வங்கி நடைமுறை மற்றும் மேம்பாடு பற்றிய துறையை அவர் கவனிப்பார். ரிசர்வ் வங்கியின் முக்கிய மாற்றங்களில், காந்தியின் பங்கு மகத்தானது. செபி எனும் பங்கு பரிமாற்றம் குறித்த கட்டுப்பாடு நிறுவனத்தில், காந்தியின் முன்னாள் தலைவர் டாக்டர் மேத்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, செபியின் நடவடிக்கைகளை மேம்படுத்திட அரும்பணி ஆற்றியவர்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்த எஸ். வெங்கிடரமணன், சி.ரங்கராஜன் இருவரது நம்பிக் கையும் பெற்று, அவர்களுக்கு செயல் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்.காந்தி. அதனால் தான், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த டாக்டர் மேத்தா, செபி நிருவனத்தில் பொறுப் பேற்ற போது, காந்தியையும் உடன் அழைத்துச் சென்றார். எளிமையானவர்; நல்ல மனிதர் என அவருடன் பணிபுரியும் சக பணியாளர்களாலும், நண்பர்களாலும் பாராட்டப்படுவர் ஆர்.காந்தி.

அவர் தனது வாழ்க்கையில் இன்னும் அதிக முன்னேற்றத்தைக்கூட அடைந்திருக்க முடியும்; ஆனால், அவரது சமூக சூழ்நிலையில், தந்தையின் கட்டளைப்படி, ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பொதுக்காப்பீட்டு கழகம், பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி என மூன்று நிறுவனங்களிலிருந்தும் ஆர்.காந்திக்கு அதிகாரி பதவி வழங்கியபோது, தந்தை யின் விருப்பப்படி, ரிசர்வ் வங்கியை தேர்ந்தெடுத்தார் என அவரை நன்கு அறிந்த அவரது நண்பர் கூறினார்.

களக்காடு க.அ.மொ.பீ.மீரானியா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பையும், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் புதுமுக வகுப்பும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பட்டப்படிப்பும் மேற்கொண்டவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் பல்வேறு பொறுப்புகள் பெற்று, துணை ஆளுநராக உயர்ந்திருக்கிறார் ஆர்.காந்தி. சிறிய கிராமத்தில் பிறந்த காந்திக்கு, பணி செய்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளவர்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் காந்தியின் இரண்டு மகன்களும், ரெய்கி எனும் ஜப்பானிய புத்த மார்க்கத்தின் ஓர் முறையை பயன்படுத்தி வருகிறார் கள். காந்தியும் அவரது துணைவியாரும், இந்த முறையை பயன்படுத்தி குணப்படுத்தும் முறையில் சிறந்த பயிற்சியாளர்களாகவும் உள்ளார்கள்.

வங்கியில் ஆர்.காந்தியின் மிகச்சிறந்த செயல்பாடு என்பது இன்றைக்கு பண வர்த்தகத்தை நாடு முழு வதும் வங்கிகள் செயல்படுத்தும், ஆன்லைன் மூல மாக பணத்தை ஒரு வங்கியின் கணக்கிலிருந்து எந்தவொரு வங்கியின் கணக்கிற்கும், துரிதமாக அனுப்பும் முறையை செயல்படுத்தியது.

இந்த முறையினால், பண வர்த்தகம், பல நாட்கள் கழித்து கணக்கில் சென்றடையும் நிலையை மாற்றி, சில நிமிடங்களில் சென்றடைந்து, வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய நன்மையை உண்டாக்கி உள்ளது. காந்தியின் வெற்றி தொப்பியில் மேலும் ஓர் இறகு இந்த ஆர்டிஜிஎஸ் எனும் பண வர்த்தக முறையை அமுல்படுத்தியதாகும்.

செபியில் பணியாற்றிய காலத்திலும், நிறுவனங்கள் பொய்யான வருமானத்தையும், லாபத்தையும் காட்டி, மக்களை ஏமாற்றி தங்களது பங்குகளை அதிக விலைக்கு விற்கும் மோசடித்தனத்தை, கட்டுப்படுத்தி அதனை நெறிப்படுத்தியதில் ஆர்.காந்தியின் பங்கு மகத்தானது. காந்தி ஓர் மக்கள் மனிதர் என்கிறார், செபி நிறு வனத்தின் முன்னாள் அதிகாரியும், சட்ட ஆலோசக ருமான பி.ஆர்.ரமேஷ்.

ஆம், மக்கள் மனிதர் ஆர்.காந்தி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பேற்பதில் நமது மகிழ்ச்சி யையும், வாழ்த்தையும் தெரிவிப்போம்.

Read more: http://viduthalai.in/page-7/78736.html#ixzz2z0NttKPA