Search This Blog

11.4.14

ஜாதி ஒழிப்பைக் கிளர்ச்சி மூலம் தான் சாதிக்க முடியும்!


நம்முடைய இயக்கத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக நமது கழகம் அரசியல் இயக்கம் அல்ல. நம் நாட்டில் அரசியல் இயக்கம் இதுவரையிலும் இல்லை. ஜாதி ஆதிக்க இயக்கங்கள் தான் நீண்ட நாள்களாக நடந்து வருகின்றன. காங்கிரஸ் ஜாதி ஆதிக்க இயக்கமாகவே இன்னும் விளங்கி வருகிறது. இப்போது நடக்கும் இயக்கங்களெல்லாம் பதவிவேட்டை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடந்து வருகின்றன. ஆனால் திராவிடர் கழகம் இயக்கம் நடத்துவதன் நோக்கமெல்லாம் ஒட்டு வாங்கவோ, பதவி பெறவோ அல்ல. இந்நாட்டு மக்களிடையே 2000-ஆண்டு காலமாக இருந்துவரும் இழிவினைச் - சூத்திரத் தன்மையை ஒழிக்கவே பாடுபடுகிறது.

ஜாதி ஒழிய கிளர்ச்சியின் மூலமாகப் போராடினால்தான் முடியும். அந்தப்படிக்குக் கிளர்ச்சிகள் செய்துதான் இன்று பெண்களுக்குச் சொத்துரிமையும், தாசிகள் என்ற ஒரு ஜாதியை ஒழிக்க தேவதாசி ஒழிப்புச் சட்டமும் கொண்டு வரும்படியான நிலைமையை ஏற்படுத்தினோம்.

நம் மக்களை வருணாசிரம முறைக்குக் கொண்டு செல்ல இருந்த (இராசகோபால ஆச்சாரியாரின்) குலக்கல்வித் திட்டம் கூட நமது கிளர்ச்சியினால்தான் ஒழிக்க முடிந்தது.


அதுபோலவே ஜாதி ஒழிப்புக்காக 4000-பேர்வரை சிறை சென்றும், பல உயிர்களைப் பலி கொடுத்தும் இன்னும் ஜாதி ஒழியாததால் வடநாட்டானின் ஆதிக்கத்திலிருந்து பிரிந்து தனிச் சுதந்திரத் தமிழ்நாடு அமைக்க, அடுத்துத் தொடங்க இருக்கும் இந்திய நாட்டின் பட எரிப்புப் போராட்டத்தை நடத்த எண்ணுகிறோம்.

----------------------------- 12.10.1958 அன்று திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு.”விடுதலை’’, 18.10.1958)

34 comments:

தமிழ் ஓவியா said...


குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா?


இது குற்றவியல் நீதி மன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா? என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டு களாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாள்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாள்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

- கலைஞர் கடிதத்திலிருந்து முரசொலி (10.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78487.html#ixzz2yXDZdG6n

தமிழ் ஓவியா said...


நடுநிலை தவறும் மோடி இந்தியாவின் பிரதமருக்குத் தகுதியானவர் அல்ல!


அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்

வாஷிங்டன் ஏப்.10- இந் தியா போன்ற பல மொழி, பல இனம், பல மதம் கொண்ட ஒரு நாட்டிற்கு ஒரு சார்புப் போக்குடைய நரேந் திரமோடி பிரதமருக்கான தகுதியான ஒருவராக இருக்க முடியாது ன்று அமெரிக் காவிலிருந்து வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது. முக்கிய விவரங்கள் வருமாறு:

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வின் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. உல கமே இதை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது, காரணம் இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் உலக அரங்கில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெளியுற வுத்துறையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக திகழும். ஆகையால் இந்தியா வின் தலைமைப்பதவிக்கு நடுநிலையான உலக நாட் டின் போக்குகளை நன்கு அறிந்து ஈடுகொடுப்பவராக இருக்கவேண்டும், அதே நேரத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமன் செய்யும் நோக்கோடு உறுதி யான திட்டங்களை வகிப் பவராக இருக்கவேண்டும் என அய்ரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்க மற்றும் கீழை நாடுகளும் ஆர்வம் கொண்டு கவனித்து வருகின்றன. தற்போதைய அரசியல்களத்தில் இருக்கும் நரேந்திரமோடிதான் இந்தி யாவின் பிரதமர் என்ற ஒரு மாயையை ஊடகங்கள் மூலம் மக்களிடையே ஏற் படுத்திவிட்டார்கள்.

வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்

இது குறித்து வாஷிங் டன் போஸ்ட் தனது தலை யங்கத்தில் குறிப்பிட்டுள் ளதாவது: நரேந்திர மோடியை பிரதமராக முன் னிறுத்தும் பாரதீய ஜனதா கட்சி மூன்றில் ஒரு பங்கு இடத்தை பிடித்து ஆட்சிக்கு வரும் என்று இந்திய ஊட கங்கள் கூறிக்கொண்டு இருக் கின்றன. இது உண்மையா பொய்யா என்று இன்னும் 5 வாரங்களில் தெரிந்துவிடும். பிரதமராக முன்னிறுத் தப்படும் நரேந்திரமோடி தற்போது ஆட்சியில் இருக் கும் குஜராத மாடல் குறித்து பேசிவருகிறார். இதை மாதிரியாகக் கொண்டு இந் தியா முழுவதும் செயல் படுவேன் என்று கூறுகிறார். தன்னுடைய பேச்சால் மக்களைக் கவருகிறார். ஆனால் முதலீட்டாளர்களை எந்த அளவு ஈர்ப்பார் என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தின் மாநிலத்தின் வளர்ச்சி ஒரு சதவீதமே வளர்ந்திருக் கிறது. இது அந்த அரசாங் கத்தின் புள்ளி விவரங்களில் இருந்தே தெரிகிறது, குஜ ராத்தை சர்வதேச சந்தை களுக்கு நிகரான ஒரு மாநி லமாக மாற்றியதாக கூறி வருகிறார். இது இந்தி யாவில் உள்ள சுமார் 80 கோடி வாக்களர்களை எப் படி சென்றடையும் என்று தெரியவில்லை.

குஜராத்தோடு ஒப்பிடுவது சரியல்ல!

இந்தியா போன்ற பல கலாச்சாரங்களைக் கொண்ட மாநிலங்களில் அனைத்து மாநிலத்திலும் வெவ்வேறு பிரச்சனைகள்; இவற்றை குஜராத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்பேசுவது எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும்? மோடியின் மீதான மதச்சாயத்தை முதலில் நீக்க வேண்டும், இந்தியாவின் பெருவாரியான வணிகம் சார்ந்த இஸ்லாமியர்களின் மன நிலையில் மாற்றம் ஏறப்பட்டால் அங்கு மோடி போன்றோர் ஆட்சிக்கு வரமுடியும்.ஆனால் மோடி பெரும்பான்மையான இந்துக்களை கணக்கில் கொண்டு பல்லாயிரக்கணக் கான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த 2002 மதக்கலவரம் பற்றி இன்று வரை தெளிவான ஒரு நிலையை மக்களிடம் வைக்கவில்லை. இது குறித்து பத்திரி கையாளர்களிடமோ அல் லது தனது மேடைப் பேச்சுக்களில் கூட எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. மோடி தலைமையில் ஆட்சி நடந்த போது தான் குஜராத் இனக்கலவரம் நடந்தது. குஜராத்தில் நடந்த கலவரத் தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சரியான அளவில் நிவாரணங்கள் சென்று சேர்ந்ததா என்று கூட அவ ரால் பதிலளிக்க முடிய வில்லை.

மோடியின் ஒரு பக்கச் சார்பு!

1998-ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பல நடுநிலையாளர்கள் கவலை கொண்டனர். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அப்போதைய தலைமை யும் மென்மையான போக்கை கடைபிடித்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் ஒரு பக்கச்சார்பு நடவடிக்கைகள் போன்று தான் தெரிகிறதே தவிர, பொதுவான ஒரு முற் போக்குத் திட்டம் என்று ஒன்றும் தெரியவில்லை, இந்தியா போன்ற நாட்டிற்கு தலைமைப்பதவி வகிப் பவர் பொருளாதாரம், நாட் டின் வளர்ச்சி, தொழில் துறை பெருக்கம், எல்லை நாடுகளுக்குள்ளான அமைதிப்போக்கு மற்றும் உலக நாடுகளுக்குள்ளான நல்ல நட்பான சூழல் கொண்ட திட்டமொன் றைத்தான் தனது நிலைப் பாடாக கொள்ளவேண்டும். நரேந்திரமோடியின் வெற்றி இதில் தான் இருக்கிறது, ஆனால் தற்போது அவர் அதிகமாக நடுநிலை தவறிய பேச்சுக்களையே (Prejudicial rhetoric) பேசிக் கொண்டு வருகிறார். இது இந்தியா போன்ற நாடு களுக்கு நல்லதாக அமை யாது.

(அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் (9.4.2014) தலையங்கம்)

Read more: http://viduthalai.in/e-paper/78484.html#ixzz2yXDu1rEa

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/78473.html#ixzz2yXEK2BXL

தமிழ் ஓவியா said...


நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி சில உறுதிகளைத் தந்துள்ளார். ஒன்று. தனக்காக எதுவும் செய்யமாட்டேன்; எந்த கெட்ட எண்ணத்திலும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

குஜராத்தில் மூன்றாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, இந்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதமாக அங்கே நடந்து கொண்டாரா?

மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா மீது போலி கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தான் தற்போது உ.பி.யின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்; அவர் பொறுப் பேற்றதும்தான், உ.பி.யில் முசாபர் நகரில் கலவரம் வெடித்து, இஸ்லாமி யர்கள் இன்றும் முகாம்களில் இருக் கும் சூழ் நிலை ஏற்பட்டது. அண்மை யில், ஜாட் மக்களிடம், நீங்கள் பழிவாங்கும் நேரம் வந்து விட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர் அமீத் ஷா, இவர் மோடியின் வலது கரம்.

குஜராத்தில், மோடியின் அமைச் சரவையில் பாபு போகாரியா, புரு ஷோத்தம் சோலங்கி என்ற இரண்டு அமைச்சர்கள் மீதும், சுரங்கம் மற்றும் மீன் துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. போகாரியா மீது ரூ.54 கோடி ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாண்டு தண்டனை விதித்தது போர்பந்தர் நீதி மன்றம். இன்றும் அவர்கள் அமைச் சர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மாயா கோட்னானி. இவரும் மோடியின் அமைச்சரவையில் இருந் தவர்; 2002 குஜராத் கலவரத்தில் நேரடி யாக ஈடுபட்டு 29 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்றதனால், அமைச்சர் பதவி இழந்தவர்;

மத்திய அரசின் தணிக்கை அலு வலக அறிக்கையின்படி, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் டோப்ரோ போன்ற மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தவறான முறையில் சலுகைகள் தந்து அரசுக்கு ரூ.1275 கோடி இழப்பு 2011-12-ல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஏழை விவசாயிகளின் நிலங்களை, அச்சுறுத்தி, குறைந்த விலையில் அதானி போன்ற பெரும் நிறுவனங் களுக்கு, தாரை வார்த்துக் கொடுத் துள்ளது.

அதானி, அம்பானி நிறுவனங்கள், மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு, அவர் இத்தகைய சலுகைகளை அள்ளி வீசுவதால் தான் என கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடியோ, அவரது பாஜகவோ, பதில் ஏதும் சொல்லவில்லை.

மோடியை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்திற்கு, இதுவரை ரூ.10000 கோடி கருப்புப்பணம் செலவிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறிய குற்றச்சாட் டுக்கும் பதில் இல்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் கொண்ட மோடி சொல்கிறார்; எனக் காக நான் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று.

மோடி அவர்களே! நீங்கள் கூறிய வசனத்தை நாங்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனவே கேட்டிருக்கிறோம். எனக்கு என்று எந்த தேவையும் இல்லை; நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறுகிறேன் என்று சொன்னவர் மீது தான், இன் றைக்கு பெங்களூர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர், வரிசையாக பட்டிய லிட்டு, எந்தெந்த ஊர்களில் எத்தனை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள் ளது; அவற்றின் இன்றைய மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் என கூறி யுள்ளார். தமிழ் நாட்டில் ஓர் வழக்கு மொழி உள்ளது. யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று

நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78482.html#ixzz2yXEUQEK9

தமிழ் ஓவியா said...


தி எக்கனாமிஸ்ட் பத்திரிகையும் மோடி ஆதரவாளர்களும்


- நீரோடை

தி எக்கனாமிஸ்ட் (The Economist) என்னும் ஆங்கிலப் பத்திரிகை உலக அளவில் புகழ் பெற்ற பத்திரிகை. நியூ யார்க், இலண்டன், சான் பிரான்சிஸ்கோ போன்ற உலக நகரங்களில் அலுவலகம் உள்ள பத்திரிகை.. ஏழு ஆசிய நாடுகளில் தனது பதிப்பினை வெளியிடும் இந்தப் பத்திரிகை 1843-இல் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. மில்லியன் கணக்கில் உலகில் விற்பனையாகும் பத்திரிகை சில நாள் களுக்கு முன்னால் (5.4.2014), இந்திய நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி தனது கருத்தை வெளியிட்டிருந்தது. "கல்வியறி வில்லாத கிராமத்தானும், வேறு கதியில் லாத சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவரும், பம்பாயில் உள்ள பலகோடி அதிபரும் ஒரே நிலையில், ஓட்டுக்களைப் பதிவு செய்யும், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்" என்று இந் தியாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி ஆரம்பித்து அந்தப் பத்திரிகை, காங்கிரசுக்கு மாற்றாக, ராகுல் காந்திக்கு மாற்றாக, நரேந்திர மோடி நிறுத்தப்படுகின்றார். ஆனால் நரேந்திர மோடியை விட மேலான ஒருவர் இந்தியப் பிரதமராக வரவேண்டும். நாங்கள் இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு நரேந்திர மோடி வருவதை விரும்பவில்லை , ஏனென்றால் எனப் பல காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

சிறு வயதில் வாழ்க்கையை வெறுத்து, இமய மலைக்கு நரேந்திர மோடி ஓடிப்போனதையும் ,பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து டீக்கடையில் வேலை பார்த்ததையும், பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததையும், அத்வானி அவர்களால் பாரதீய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டதையும் பட்டியலிட்டு உள்ள அந்தப் பத்திரிகை, நரேந்திர மோடி தன் வாழ்க்கை முழுவதையும் இஸ்லாமி யர்கள் மீதான வெறுப்பால் அமைத்துக் கொண்டவர் என்பதை மிக விரிவாக எடுத்துக்காட்டியுள்ளது. 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்படு வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே 1990-இல் அயோத்தியில் ஊர்வலம் நடத்த நரேந்திர மோடி ஏற் பாடு செய்ததையும், அதன் காரணமாக 2000-க்கும் மேற்பட்டவர்கள் , மதக் கல வரத்தில் இறக்கக் காரணமாக இருந்தவர் என்பதையும், 2002 - குஜராத் கலவரம் அதில் நடந்த கொடுமைகள், கொடூரக் கொலைகள், பாலியல் வன்முறைகள் என அனைத்தையும் பட்டியலிட்டு, 2013-இல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பல நூறு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு நரேந்திர மோடி கண்டனம் கூடத் தெரிவிக்க வில்லை. இப்படி எந்த நிலையில் இருந்து பார்த்தாலும், தான் இந்து தீவிரவாதி களிடம் கற்றுக்கொண்ட மன நிலை யிலேயே இருப்பவர் நரேந்திர மோடி, அவர் பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட பன்முகத் தன்மை உள்ள இந்தியாவிற்கு தலைமை ஏற்க தகுதி யானவர் அல்ல என்பதனைச்சுட்டிக் காட் டியிருக்கிறது. மோடியை ஆதரிப்பவர்கள் அவர் இந்திய உச்சநீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு பெற்றிருப் பதையும் , அவர் பழைய மாதிரி இல்லை, இப்போது மாறிவிட்டார் என்றும் கூறு கின்றார்கள் . இரண்டும் ஏற்கத்தக்கது அல்ல என்று தி எக்கனாமிஸ்ட் பத்திரி கையில் விவரித்துள்ளார்கள்.எந்த நிலையிலும் மாறாத இந்துத்துவா வெறி கொண்ட நபர் மோடி என்பதனை எடுத்துக்காட்டியுள்ளார்கள். தப்பித்தவறி மோடி வந்தால் பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு மிகப்பெரிய ,மோதல் ஏற்படுவதற்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. வெளி நாட்டைச்சார்ந்த அந்தப் பத்திரிகை , இந்திய தேர்தலைப் பற்றியும் , அதில் பிரதம வேட்பாளர் என்று சிலரால் முன்னிலைப் படுத்தப்படுகின்ற ஒருவரின் உண்மையான குணங்களைப் பற்றியும் தனது கருத்தினை எழுதியுள்ளது.

தமிழ் ஓவியா said...


இந்தக் கருத்திற்கு பி.ஜே.பி. கட்சியினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித் துள்ளனர். வெளி நாட்டுப்பத்திரிகை, இந்தி யாவைச்சார்ந்த ஒருவரைப் பற்றி எப்படி எழுதலாம் எனச்சாடியுள்ளனர். ஒரு நாட்டில் நடக்கும் தேர்தல் பற்றி, தலை வர்கள் பற்றி மற்ற நாட்டைச் சார்ந்த வர்கள் எழுதுவது இயல்புதானே, எதற்கு இதற்கு இப்படி குதி குதி என்று குதிக் கின்றார்கள் என்று தெரியவில்லை. http://www.economist.com/news/leaders/21600106 என்பது இந்தக் கட்டுரை வந்துள்ள பத்திரிகையின் இணையதள முகவரி,. இந்த இணையதளத்தில்தான் நான் மேலே குறிப்பிட்ட செய்தி வந் துள்ளது. இந்தக் கட்டுரைக்கு 2300-க்கு மேற்பட்டோர் கமெண்ட் என்று சொல் லப்படும் பின்னோட்டம் இட்டுள்ளனர். அதில் பலர் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் எழுதி, இந்தக் கருத்து தவறு என்று மெய்ப்பிக்க விரும்புவது போல எழுதியுள்ளனர். அந்தக் கருத்துக்களைப் படித்தாலே எப்படிப்பட்ட மன நிலையில் மோடியின் ஆதரவாளர்கள் இருக்கின் றார்கள் என்பதனைத் தெரிந்து கொள் ளலாம், ஒன்று போல நூற்றுக்கு மேற் பட்டவர்கள் திரும்பத் திரும்ப மோடி வந்தால் வளர்ச்சி வரும், வேலை வாய்ப்பு வரும் என்று எழுதிக்கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

சிலர் மோடி வந்தால்தான் அகன்ற பாரதம் கிடைக்கும், பாகிஸ்தானில், இந்துப் பெண்கள் எல்லாம் இராவணனிடம் மாட்டிய சீதையைப் போல சிறையுண்டு கிடக்கின்றனர், அவர்களைப் படை யெடுத்து மீட்கவேண்டும் என்றெல்லாம் எழுதியுள்ளனர். நம்முடைய கருத்து உள்ள சிலரும், இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ள தி எக்கனாமிஸ்டு பத்திரிகையைப் பாராட்டியும், ஜாதி வேறுபாடுகள் கோலோச்சும் இந்தியாவின் நிலைமை, இன்னும் நடைமுறையில் உள்ள தீண்டாமை, ஜாதி வேறுபாடு போன்ற கருத்துக்களைப் பதிந்துள்ளனர். மோடியைக் கொண்டு வர விரும்புப வர்கள் சனாதன வாதிகள் தான் என்ப தனை அந்தப் பத்திரிகையின் பின்னோட் டங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் ஹிட்லரின் தலைமையில் ஜெர்மனி அமைதியாக இருந்தது. அது சுடுகாட்டு அமைதி. அப்படித்தான் இப்போது குஜராத் உள்ளது. அச்சத்தினால் ஏற்பட்ட அமைதி வேறு, நிறைவு அடைந்து ஒற்றுமை யினால்,அன்பால் ஏற்படும் அமைதி வேறு. அன்பால் ஏற்படும் அமைதி உண் டாக்க நரேந்திர மோடியால் முடியாது , ஏனென்றால் இந்தியாவின் துயரம் நரேந்திர மோடி,மூத்த கட்சித் தலைவர் களை வஞ்சகமாக ஓரங்கட்டியவர், முரட்டுத்தனமான இயல்பு உள்ளவர், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி, ரிலையன்ஸ் போன்ற முதலாளிகளுக்கு விற்றவர், தொழிற்சங்கம், தொழிலாளர்கள் மேல் வெறுப்பு உள்ளவர் எனப் பின்னோட்டங் களில் அடுக்கடுக்காய் எழுதியுள்ளனர்.

மோடியைப் பற்றி தி எக்கானமிஸ்ட் எழுதியுள்ளதைக் கண்டிக்கின்றோம் என்று சுப்பிரமணியசாமி, நிர்மலா சீதா ராமன் போன்ற பி.ஜே.பி.யைச் சார்ந்த வர்கள் கூறியுள்ளனர். இது ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்துள்ளது. தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இந்தச்செய்தியை வெளியிடவில்லை. மோடியைப் பற்றி சரியான விமர்சனம் வந்துள்ளதை ஏன் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை.மோடியைப் பாராட்டி ஏதேனும் வந்தால், எட்டுக் காலப் பத்திகளில் போடும் தமிழ் நாட்டு ஊடகங்கள் இதில் ஏன் மவுனம் என்பதும் நமக்குப் புரியவில்லை. காங்கிரசு மேல் உள்ள வெறுப்பை தங்கள் பக்கம் திருப்பி வாக்குக்களாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். வேலை செய்கிறது என்பதனை திரா விடர் கழக் பொதுக்குழுத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டியது.

வருகின்ற ஆபத்தை நீக்க, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலே அமைந்த கூட்டணியை வெற்றி பெறச்செய்ய உழைப்பீர் தோழர்களே, தோழியர்களே. ஆர்.எஸ்.எஸ்.சின் போர்வையிலே ஆரியப்பாம்புகள் நடமாட்டம் என்று ஊர்வலங்களில் முழக்கம் எழுப்பினோம் ,இன்று அந்த ஆர்.எஸ்.எஸ். மோடி என்னும் முகமூடி போட்டுக்கொண்டு இந்தியாவை ஆரியமயமாக்க அலைகின்றது. அதற்கு மோடி என்னும் நபரை அலைந்து அலைந்து ஓட்டுக் கேட்க வைக்கின்றது. ஆபத்து வந்தது நாட்டோரே, அணி , அணியாய் திரள்வீர், இந்த ஆபத்தை உணர்வீர், உணர்த்துவீர் தமிழ் மக் களுக்கு. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை 40க்கும் 40-ஆக வெற்றி பெறச் செய்வீர்,

Read more: http://viduthalai.in/page-2/78479.html#ixzz2yXEg7uVL

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது!


இதோ என்னுடைய கையிலே நான் வைத்துக் கொண்டு இருப்பது, பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யா ஆகியோரின் படங்கள் போட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதைவிட மதவெறி கொண்ட கட்சி இருக்க முடியாது என்பதற்கு இதுவே அடையாளம். இதுவரை மறைந்து இருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. அதுமட்டுமல்ல அதில் இன்னும் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் உள் அட்டையில் ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, உபாத்யாய படங்கள் இடம்பெற்றுள்ளது குறித்து நான் பேசியதற்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனை நான் எப்போதும் மதிப்பவன், தலைவர் கலைஞரும் அவரை மதிப்பவர்.

அப்படிப்பட்டவர் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை நான் படிக்கவில்லை, பார்க்கவில்லை, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை அவரே பார்க்காமல் இருக் கிறாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. தெரியாமல் சொல்கிறாரா அல்லது தெரிந்து சொல்கிறாரா எனப் புரியவில்லை.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனது கையிலும் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை அதை சரியாகப் பார்க்கவேண்டும் என அவரை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

- தருமபுரி தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்

Read more: http://viduthalai.in/page-8/78451.html#ixzz2yXJLi8N4

தமிழ் ஓவியா said...


கார்ப்பரேட் - வகுப்புவாத சக்திகளின் பின்(பு)பலத்தில் பி.ஜே.பி.! மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பீர்! பல்துறைப் பெரு மக்களும் வேண்டுகோள்!!

பாஜக தலைமையிலான கார்ப்ப ரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சியில் அமர மேற்கொள்ளும் முயற் சியை அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் முறியடிக்க வேண்டும் என கல்வியாளர்கள், திரையுலகினர் உள் ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள் ளனர். திரை இயக்குநர்கள் குமார் ஷஹானி, சயீத் மிர்ஸா, கலைஞர்கள் அர்பணா கவுர், விவன் சுந்தரம், திரை யுலக பிரபலங்கள் எம்.கே.ரைனா, அனுராதா கபூர், பத்ரிரைனா, கல்வியா ளர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்சி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி. என். ஜா, கே.எம்.சிறீமலி உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

இந்து தேசியத்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் அமைப்புக்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியில் அமர கடும் முனைப்பு காட்டி வருகின் றன. சுதந்திர இந்தியா இதுவரை கண்டி ராத நிலைமை இது. இந்த சக்திகளுக்கு பலமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கிறது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைக்களத்துக்கு தலைமை தாங்கி அதில் தனக்கு உள்ள பங்குக்காக இதுவரை மன வருத்தம் தெரிவிக்க முன்வராத நபர்தான் இந்த சக்திகளைத் தலைமை ஏற்று வழி நடத்துபவர்.

கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் கூட்டணி, ஆட்சியை பிடித்தால் அது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர் காலத்துக்கே உலைவைத்துவிடும்.

பொறுப்புமிக்க தனி நபர்களும் அரசியல் அமைப்புகளும் நிலை மையை சீர்தூக்கிப் பார்த்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ள வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வாக் களித்து கார்ப்பரேட்- வகுப்புவாத சக்தி களின் கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் அமரும் முயற்சியை முறியடிக்க வேண் டும் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அலிகார் பல்கலை. குஜராத் கலவரத்துக்கு காரணமான வர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக ஓட்டளிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இச்சங்கத்தின் கவுரவ செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண் டும். குஜராத், முஸாபர்நகர் கலவரத் துக்கு காரணமானவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர் கள் தேல்வி அடையும் வகையில் முஸ் லிம்களும், மதச்சார்பற்ற வாக்காளர் களும் சாதுர்யமாக வாக்களிக்க வேண்டும்.

மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம் சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற் கடிக்க வேண்டும்.

நடந்த சம்பவத்துக்கு மோடி இது வரை வருந்தவில்லை. முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20,000 முஸ்லிம் கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்ய வில்லை.

முஸ்லிம்களின் முதல் முக்கியத் துவம் அவர்களது பாதுகாப்புதான். அதை உறுதி செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-2/78526.html#ixzz2yd9onR5I

தமிழ் ஓவியா said...


மோடியின் டிவிட்டரில் பொய்யான எண்ணிக்கைகள்

டிவிட்டர் எனும் நவீன ஊடக செயல்பாடு, ஒருவர் கருத்தை பதிவு செய்தால், அதனை வரவேற்கவும், கருத்து கூறவும், மாறுபட்ட எண் ணத்தை வெளிப்படுத்தவும் உள்ள ஓர் சிறப்பான விஞ்ஞான கண்டு பிடிப்பாகும். பலர் அதில் தங்களை இணைத்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்; விவா தம் மேற்கொள்கின்றனர். மிகப் பெரிய பிரபலங்கள் இந்த டிவிட் டரை பயன்படுத்தி வருகின்றனர்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்த அடுத்த நிமி டங்களிலேயே, ஆயிரக்கணக்கான வர்கள் அவரது கருத்தை வரவேற்ப தாக விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பேர், மோடியின் டிவிட்டரை விரும்புகின்றனராம்; மோடி நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், அத்தகைய எண்ணிக் கையில் யாரும் உண்மையில் விருப் பம் தெரிவிக்கவில்லை; பொய்யான முறையில், இதனை உண்டாக்கி வருகின்றனர், மோடியின் ஊடக ஏஜெண்டுகள்.

ஸ்டேட்டஸ் பீப்பிள் எனும் இணையதள நிறுவனம் லண்டனில் உள்ளது. இந்த இணைய தள நிறு வனம், அல்காரிதம் எனும் முறை யில், டிவிட்டர் பயன்பாட்டாளர் களில் பொய்யானவர்கள் யார், எந்தவித செயல்பாடும் இல்லாதவர் கள் யார் என கண்டறியும் திறமை படைத்த நிறுவனம். இந்த நிறு வனம், மோடியின் டிவிட்டரை விரும்புவதாக காட்டும் எண்ணிக் கையில், 46 விழுக்காடு பொய் யானவை என்றும், 41 விழுக்காடு, எந்தவித செயல்பாடும் இல்லாத வர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளது.

2009-ல் மோடி, டிவிட்டரை துவங்கும்போது, அவருக்கு ஒரு லட்சம் வாசகர்கள் உள்ளதாக சொன் னார்கள்; நவம்பர் 2011-ல், இந்த எண்ணிக்கை, நான்கு லட்சம் என்று சொன்னார்கள். தற்போது, பத்து லட்சம் என மோ(ச)டி சொல்கிறார்.

இதுபோல், பொய்யான வாசகர் களை உருவாக்குவது இப்போது அதிகமாகி உள்ளது; சில நிறுவனங் கள், இந்த வாசகர்களுக்கு, 10 பைசா முதல் 50 பைசா வரை, ஒவ்வொரு விருப்பம் தெரிவிக்கும்போதும் தருகிறார்கள் என்கிறார் இணைய தள நிறுவனத்தில் இயக்குநராக இருக் கும் அபிஜித் சோனாகரா.

மோடி என்கிற ஒரு மனிதர், எந்தெந்த வகையில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதற்கு, அவரது டிவிட்டரும் அதில் விருப் பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக் கையை பொய்யாக உயர்த்திக் காட்டி, மக்களிடையே தனக்கு அதிக செல் வாக்கு இருப்பதாக ஓர் மாயையை உருவாக்கும் இந்த மோசடிச் செய லும், ஒரு பானை சோற்றுக்கு ஓரு பருக்கை பதம் என்பதை தெளிவாக்கி உள்ளது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78528.html#ixzz2yd9xxNO1

தமிழ் ஓவியா said...

மனைவியை மறந்தவரால் ராஜ தர்மத்தை நிறைவேற்ற முடியுமா? - காங்கிரஸ்

புதுடில்லி, ஏப்.11- வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி, தனது வேட்பு மனுவில் தனக்கு திரு மணம் ஆனது பற்றி தெரி வித்திருந்தார். இதுவரை அவரை திருமணம் ஆகாத வர் என்று அறியப்பட்ட நிலையில், இந்த தகவல் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஷோபா ஓஜா கூறுகை யில், ஒரு பெண்ணிற்கு கண வர் செய்யும் நியாயமான கடமைகளைக்கூட மோடி செய்யவில்லை.

அப்பெண் ணிற்கு உரிய மதிப்பை அவர் கொடுக்கவில்லை. திருமணத்தின்போது தனது மனைவிக்கு கொடுத்த வாக் கினை நிறைவேற்ற முடி யாதவர் எப்படி இந்த நாட் டிற்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றுவார்?

40 ஆண்டுகளாக தனது மனைவிக்கு உரிய உரிமை யையும் பாதுகாப்பையும் வழங்காதவர் இந்த நாட் டிற்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்? மோடி ஒரு உண்மையை இந்த நாட் டிற்கு கூறவேண்டும். தனக்கு திருமணமான உண் மையை மோடி ஏன் மறைக்க வேண் டும்? எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப் பாக மோடியின் மனை வியை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

மோடி தனது திருமணத்தை வெளிப் படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். தனது மனைவி யின் உரிமைகளை தடுப்ப தற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா? மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை சிந் திக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தனது வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/78495.html#ixzz2ydBU2oyr

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்பாதே!


முன்காலத்தில் அடுத்த வீட்டுக்காரன் பசியால் துடிப்பதைப் பார்த்து உதவி செய்தார்கள். இப்போது இருப்பவர்கள் அப்படி இல்லை - எல்லாம் அவன் தலையெழுத்து, பட்டினி கிடக்கிறான் என்று பேசுகிறார்கள்.

தலையில் யார் வந்து எழுதியது? தலையெழுத்து எப்படி இருக்கும்? பட்டினி கிடப்பதற்கு தலை எழுத்து என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லை, கூலி கிடைக்கவில்லை, அதனால் அவன் பட்டினியாக கிடக்கிறான்.

-மதுரை ஜில்லா நிலக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டது (29.12.1958)

தகவல்: ச.இராசாமி, சென்னை -18

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBq5ism

தமிழ் ஓவியா said...

அடிமைத்தன்மை

சிந்திக்க முடியாதவன் மனிதனைவிட மட்டமானவன்; சிந்திக்க மறுப்பவன் தனக்குத்தானே துரோகம் செய்பவன்; சிந்திக்க அஞ்சுபவன் மூட நம்பிக்கையின் முழு அடிமை.

- இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBxjVRn

தமிழ் ஓவியா said...

ஆலயத் திருடர்கள்!

நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

- மார்ட்டின் லூதர்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydC6Unpw

தமிழ் ஓவியா said...

மனுநீதி இப்படிச் சொல்கிறது

ஆரிய ஆணுக்கும், ஆரிய இனமல்லாத பெண்ணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியும். ஆரிய பெண்ணுக்கும், ஆரியனல்லாத ஆணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியாது.

பார்ப்பானைக் கொல்வது, பார்ப்பானின் பொன்னைக் கவர்வது, குரு பத்தினியோடு உறவு கொள்வது ஆகியவை மகா பாதகங்களாகும். பார்ப்பானைக் கொன்றவன் 12 ஆண்டுகள் வனவாசம் புரிய வேண்டும். அல்லது எரியும் நெருப்பில் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.

அல்லது போர்க்களத்தில் அம்புகளை எய்கின்ற இலக்காக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். சூத்திரனைக் கொன்ற பார்ப்பான் ஆறுமாதம் தவம் புரிய வேண்டும்; அல்லது பத்து பசுக்களையும், ஒரு எருதையும் பார்ப்பானுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

ஒரு சண்டாளனை, அல்லது பிணத்தைத் தொட்டவன் குளிப்பதன் மூலம் தூய்மை அடையலாம்.

ஒரு பார்ப்பனப் பெண்ணோடு அவள் விருப்பத்திற்கு எதிராக சம்போக உறவுகொண்ட பார்ப்பனனின் தலையை மொட்டை அடிப்பது அதற்குரிய தண்டனை ஆகும். இதே குற்றத்தை மற்ற ஜாதிக்காரர்கள் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCCKkvY

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களை சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமரூட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வழி வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது.

நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCggqy6

தமிழ் ஓவியா said...


விரட்டியடியுங்கள் என்றார் முதல்வர் விரட்டுகிறார்கள் மக்கள் - யாரை? தமிழர் தலைவர் தரும் சுவையான தகவல்

கூட்டம் நடக்கும் இந்தப்பகுதி பெரிய அக்ரஹாரம். நமக்கு நெருக்கமான, உறவுக்காரர்களின் பகுதி. நமக்கெல்லாம் தெளிவாக தெரியும். இன்றைக்கு அது புதியதல்ல. அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே. எங்களுடைய உறவுக்காரர்கள், இங்கே இருக்கிறார்கள் உறவை விட மேலானவர்களாக இருப்பார்கள்.
விரட்டியடியுங்கள் விரட்டியடியுங்கள்

ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அன்பாக அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளை யாக கருதுகிறார்கள்.

அங்கே! அஇஅதிமுக-வில் பார்த்தீர்கள் என்றால், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கப் போகும்போது எம்.பி.யாக இருக்கிறார்கள் ஆனால் அந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த அம்மையார் சொன்னதை மக்கள் கேட்கிறார்கள்.

அம்மையார் விரட்டியடிங்க! விரட்டியடிங்க என்று சொன்னார். யாரை விரட்டியடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். ஆகவே தான் மக்கள் (அதிமுக காரர்களை) விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துணைத் தேர்தல் அறிக்கையாம்

ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வரியாவது இடம் பெற்றுள்ளதா?

இங்கு (தமிழ்நாட்டில்) மோடி வலையில் சிக்கிய மீன்களாக, தோழர்கள் இருக்கிறார்கள். தனி ஈழம் தமிழ் ஈழம் பற்றி பிஜேபி அறிக்கையில் வரவில்லையே! அவர்கள் கேட்டதுண்டா? ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றி ஒரு வரியாவது இருக்கிறதா பிஜேபி தேர்தல் அறிக்கையிலே?

மத்திய பிரதேசத்தில் இராஜபக்சேவை வரவேற்றது யார்? பி.ஜே.பி.யில் ஒருவர் தான் வரவேற்றார்.

தேர்தல் அறிக்கையிலே மீனவர் பிரச்சினை இடம் பெறவில்லையே! என்று கேட்டால் தனி ஈழம் பற்றி ஒரு வரிகூட இல்லையே! என்றால் அதற்கு துணை தேர்தல் அறிக்கையில் வரும் என்கிறார் நம்ம ஊர் இல.கணேசன்

தேர்தல் அறிக்கையிலே (யாராவது) துணை தேர்தல் அறிக்கை கொடுத்தது உண்டா?

என்னய்யா குழந்தை பிறந்ததே இன்னும்சத்தம் போடாமல் இருக்கே. உயிர் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் இல்லைங்க இன்னொன்று வரும் அது சத்தம் போடும் என்றால் என்ன அர்த்தம்?

எங்கே அமைதி! எங்கே அமைதி?

அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 3 ஆண்டுகளில் 5,632 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் (தமிழ்நாடு காவல்துறை அறிக்கைப்படி). மதுரையிலே பிரபலமான கொலை - கண்டுபிடிக்க முடிந்ததா? திருச்சியில் பிரபல மானவர் கொலை செய்யப்பட்டார். கண்டுபிடிக்கப் பட்டதா? (மூன்றரை ஆண்டுகள் ஆகிறதே) நம்முடைய காவல்துறைக்கு என்ன பெயர் ஸ்காட்லாந்தை மிஞ்சக்கூடியவர்கள் என்று பெயர் உண்டே! ஏன்? அவர்களால் முடியவில்லையே என்ன காரணம்? எங்கே அமைதி! அம்மையார் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

- ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் தமிழர் தலைவர் 10.4.2014

Read more: http://viduthalai.in/page-4/78550.html#ixzz2yiuRL7R6

தமிழ் ஓவியா said...


மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது! - கி.வீரமணி


தி இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது!

சென்னை, ஏப்.12- மதச் சார்பற்ற அணிக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்புள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தி இந்து (தமிழ்) நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக-வுக்கு ஆதரவாக நீங்கள் மேற் கொண் டிருக்கும் பிரச்சாரத்துக்கு மக்கள் மன்றத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?

மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

ராமர் கோயில் கட்டுவோம் என்பது உள்ளிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உங்கள் கருத்து?

பாஜக-வை ஆர். எஸ்.எஸ். தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது. இந்தத் தேர்தலில் யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்தது கூட ஆர்.எஸ்.எஸ்.தான். இதற்கெல்லாம் உதாரணம்தான் பாஜக தந்திருக்கும் தேர்தல் அறிக்கை . ராமர் கோயில் கட்டுதல், காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம், பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போன்ற அஜென் டாக்கள் (செயல் திட்டங்கள்) இதுநாள் வரையில் மறைமுகமாக வைக்கப்பட் டிருந்தன. இப்போது தேர்தல் அறிக்கை யாக வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழகத்தை எந்தளவுக்கு முன்னேற்றும். இதனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன பயன்?

தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பாஜக தேர்தல் அறிக் கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. மாறாக, சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித் திருக்கிறார்கள். இவை எல்லாமே தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண் டுள்ள திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

காங்கிரஸும் பாஜக-வும் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து வருகிறது என்றால் மூன்றாவது அணிக்கு உங்களது ஆதரவு உண்டா?

மூன்றாவது மாற்று அணி என்பது ஏற்கெனவே கருச்சிதைவு அடைந்த ஒன்று. இந்த முறை மூன்றாவது மாற்று அணி என்ற கரு கூட உருவாகவில்லை. மாற்று அணி உருவாகும்போது அப்போது ஆதரவு குறித்துத் தெரிவிக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்து மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்தால் திமுக அதற்கு ஆதரவளிக்குமா?

நூறு சதவீதம் அதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுக தலைவர் கலைஞர் மதச்சார்பற்ற அணி ஆட்சியமைக்க மட்டுமே திமுக ஆதரவளிக்கும் என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். எனவே அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.

அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின் றீர்கள். அவருக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

ஆ.ராசாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

திமுக-வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து கட்சிக்குள் குழப்பம் விளைவித்து வருகிறார். அவர் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் விட்டதை கலைஞர் செய்த தவறாகக் கருது கிறீர்களா?

அழகிரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் திமுக-தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்த திமுக, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியதை நியாயப்படுத்துகிறீர்களா?

ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் திமுக-வின் நியாயத்தை காங் கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அமைச்சர வையிலிருந்து திமுக வெளியேறியது. என்றாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து அந்த பழி தங்கள் மீது வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளித்து வந்தது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78560.html#ixzz2yiuhtpui

தமிழ் ஓவியா said...


திருமணத் தகவல்: முந்தைய தேர்தல்களில் மோடி மறைத்துவிட்டார் தேர்தல் ஆணையத்தில் கபில்சிபல் புகார்

புதுடில்லி, ஏப்.12-நாடாளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங் களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது திருமணம் ஆகிவிட் டதென்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந் தார்.

தற்போதைய நாடாளு மன்ற தேர்தலில், எந்த வொரு வேட்பாளரும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத் தில் எந்தவொரு தகவலை மறைத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடி வாளம் போட்டதால் மோடி இத்தகவலை இணைத்துள் ளதாக கூறப்பட்டது.

நரேந்திரமோடி, தனது திருமணம் குறித்து முதன் முதலாக தகவல் வெளி யிட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.

குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோது கூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். இதுபற்றி தற்போது கேள்வி எழுப்பி யுள்ள காங்கிரஸ் கட்சி, முந்தைய தேர்தல்களில் தனது திருமண தகவலை மோடி மறைத்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. தேர் தல் ஆணையத்திடம் புகார் அளித்த சட்ட அமைச்சர் கபில்சிபல், 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மோடி தனது திருமண தகவலை மறைத்துள்ள தாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78562.html#ixzz2yivKnYJm

தமிழ் ஓவியா said...


மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசிய மோடிக்கு கடும் கண்டனம்


சென்னை, ஏப். 12- மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சு மணன், செயலாளர் எஸ்.நம்பிராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளி களை அவமானப்படுத் தும் விதத்தில் ஜாம்செட்பூ ரில் பேசியுள்ளதற்கு எமது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம்.

நாட்டிற்கு ஒரு ஊன முற்ற செவிட்டு ஊமை அரசு தேவையில்லை என - மாற்றுத்திறனாளிகள் எதற்கும் லாயக்கில்லை என்ற தொனியில் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியை சக்கர நாற்காலி பயன்படுத்தும் நொண்டி என குறிப்பிட் டவர் என்பதால், மாற்றுத் திறனாளிகளை கொச் சைப்படுத்துவது இவ ருக்கு வாடிக்கையாகி வரு கிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாட்டில் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல உயர்ந்த பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வரும் சூழ லில், மோடிக்கு மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய புரிதலே இல்லை என்ப தாகவே நாங்கள் கருது கிறோம். மாற்றுத் திறனா ளிகள் எதற்கும் லாயக் கில்லை என்ற மன நிலை உள்ள ஒருவர் பிரதமரா னால் மாற்றுத்திறனாளி களின் நிலைமை என்ன வாகும்? என்பதே மாற்றுத் திறனாளிகளின் தற்போ தைய கேள்வி.
போராட்டம்

மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத் தில் பேசியுள்ள மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் இதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடு வதைத் தவிர்க்க முடி யாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78561.html#ixzz2yivU7Ozf

தமிழ் ஓவியா said...


இழிநிலை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78565.html#ixzz2yiwGHQls

தமிழ் ஓவியா said...


அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா!!

இந்த வார துக்ளக்கில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சோ ராமசாமி, பாஜக நிற்கும் தொகுதிகளில் பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும்; மீதம் உள்ள தொகுதிகளில், பாஜக சீட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வாக் களிக்க வேண்டாம்; அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்; அதிமுகவின் வெற்றி, பாஜகவிற்கு துணையாக இருக்கும் என பதில் அளித்துள்ளார்.

சோவின் கருத்து ஒன்றும் புதியது அல்ல; ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றும் அல்ல; இன்னும் சொல்லப் போனால், மோடி பிரதமராவது நல்லது; அவருக்கு வாய்ப்பு வர இயலாத சூழ்நிலை ஒன்று வருமா னால், மாற்றாக, ஜெயலலிதா, பிரதம ராவது நல்லது என துக்ளக் ஆண்டு விழாவில் 2013-இல் கூறியவர் சோ ராமசாமி. அந்த விழாவில் மோடியும் கலந்து கொண்டார்; அவரது முன்னி லையில் இந்த கருத்தை சொன்னார் சோ.

ஆக, ஜெயலலிதா பிரதமராவது நல்லது என்ற கருத்தை முதன் முதல் விதைத்தவரே சோ தான்.

மோடியின் அணுகுமுறைக்கும், ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கும் ஒன்றும் வித்தியாசம் கிடையாது. இரு வருமே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதிலும், தங்களது அமைச்சர்களை, அடிமைகளாக நடத்துவதிலும், ஊடகத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்வதைத் தவிர்ப் பதிலும். சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சியை விவாதம் செய்ய விடாமல் முடக்குவதிலும், ஒரே நிலைப் பாட்டைக் கொண்டவர்கள்.

ஆகவே தான், மோடிக்குப் பதிலாக, அத்வானியையோ, சுஸ்மா சுவராஜ் போன்றவர்களையோ, மாற்றாக கருதாமல், ஜெயலலி தாவைச் சிபாரிசு செய்கிறார் சோ.

மோடி அலை இந்தியா முழுவதும் வீசுகிறது என ஊடகம் மூலம் ஊதிப்பெருக்கி செய்தி வெளியிடும் பாஜகவினர், தமிழ் நாட்டிலும் அத் தகைய மோடி அலை வீசுவதாக சொன்னார்கள். கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜகவிற்கு எட்டு சீட்டுகள் என சுருக்கிக் கொண்டு, கூட்டணி அமைத்தார்கள். இதில் ஒரு இடம், நீலகிரியில் விற்கப்பட்டு விட்டது; வேலூர் தொகுதியை, பாஜக வில் இல்லாத ஒருவருக்கு, விற்று விட்டார்கள் என பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

இப்போது பாஜகவிடம் இருப்பது ஆறு தொகுதிகள் தான். இந்த தொகு திகளில் பாஜக தோல்வி அடையும் என்றாகிவிட்டது.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஒன்றும் வெற்றி பெறப்போவது இல்லை என சோ கருதுகிறார். ஆகவே, தற்போது உள்ள நிலையில், மீதம் உள்ள 33 தொகுதி களில் அதிமுகவை ஆதரித்தால், மோடிக்கு உதவும் என்ற கணக்கில் சோ கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதெல்லாம் முன்பே தெரிந்து தான், பாஜகவின் தமிழ் மாநில செயலாளர் பொன்னார், இந்த கூட்டணி உருவான அடுத்த நாள் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்கொண்டார்.

சோ, மோடிக்கு நெருங்கிய நண்பர்; ஜெயலலிதாவிற்கும் நண்பர்; ஆலோசகர். ஆர்.எஸ்.எஸ். கருத்தி யலை ஏற்றுக்கொண்டவர்.

ஏற்கெனவே, பாஜகவில் சேர்ந் துள்ள சுப்ரமணியன் சுவாமி, மதிமுக வும், பாமகவும் தேசத்துரோகக் கட்சிகள் என்று சொன்னவர். இப் போது, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்; அதிமுகவிற்கு போடுங்கள் என்கிறார் சோ.

சு.சுவாமி, சோவின் கருத்தை, பாஜகவின் கூட்டணி கட்சிகள் எந்த வகையில் எதிர் கொள்ளப் போகி றார்கள்? இல்லை, அரசியலில் இதெல் லாம் சாதாரணம்பா என்பார்களா?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78569.html#ixzz2yiwT9sPk

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளேயாவர்

டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த சாரதாபில் என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்குச் சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும்.

சீர்திருத்த சம்பந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப்பட்டு வந்திருக் கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றத்தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அது பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படி மதிக்க முடியும்?

இந்தச் சர்க்கார் இந்நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்நாட்டில் உள்ள பார்ப்பனியக் கொடுமையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமே யொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாது நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.

எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனியக் கொடுமைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் கல்யாண மசோதா விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர் களுடன் சேர்ந்து கொண்டதற்குக் காரணம் சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியது தானாம்.

இது யோக்கியமான சமாதானமல்லவென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சம்மதவயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண் ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது.

கலவி என்பது ஒரு உணர்ச்சி கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி. பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் உண்டாகலாம்.

அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவேகூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரண மான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயம் சட்டத்தையோ சிக்கலாகுமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?

கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?

ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரை கட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக் கியதனத்தைக் காட்டுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை அதே காரியத்திற்கு அரசாங் கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள் பங்காளிகள் என் பதையே காட்டுகின்றது.

எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாட்சியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.

குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/78594.html#ixzz2yix0ad1d

தமிழ் ஓவியா said...


சென்னையில் சைமன் கமிஷனுக்கு ஆடம்பரமான வரவேற்பு - பகிஷ்காரம் புஸ்ஸ் என்று போய்விட்டது

ராயல் கமிஷனுக்குப் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18ஆம் தேதி காலை 6 மணிக்கு டிறா என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள்.

அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதிநிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும், கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும், மற்றும் சென்னைப் பிரமுகர்களும், தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார் சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும் மகமதிய சமூகப் பிரதிநிதிகளும் ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும்,

வர்த்தக சங்கப் பிரதிநிதி களும் மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும் பொது ஜனங்கள் சார்பாக அரசாங்கத்தில் மந்திரிகளாக நியமிக்கப்பட்ட மந்திரிமார்களும் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சகல திறப்பட்ட மக்களின் கூட்டமும் ஏராளமாக வந்திருந்து ஒவ்வொரு பிரதிநிதி தாபனங்களும் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து அநேக வகுப்பு மகாநாடுகளில் கமிஷனை வரவேற்கச் செய்த தீர்மானங்களையும் தெரியப்படுத்தி வரவேற்றார்கள்.

சைமன் துரையவர்களும், கமிஷன் சார்பாக இவ்வாடம்பரமானதும் பிரதிநிதித்துவ மானதுமான வரவேற்பை ஏற்று அதற்குத்தக்க பதிலளித்த தோடு, தங்களது நன்றியறிதலையும் தெரிவித்து அரசாங்க விருந்தினராய்ச் சிலரும் மந்திரிகள் விருந்தினராய் சிலரும் தனிப்பிரபுக்களின் விருந்தினர் களாகச் சிலரும் அவரவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவை தவிர மற்றும் அநேக பிரதிநிதித்துவ சபைகளினுடைய பத்திரங்களும் அழைப்புகளும் கமிஷனுக்கு ஏராளமாக இருந்தது.

என்றாலும் அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள கமிஷனர்களுக்குப் போதிய சாவகாசம் இல்லை என்பதை முன்னமேயே அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டதின் மீது பல ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.

எனவே, சென்னையில் தாங்கள் தான் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்றும் தங்கள் கருத்துத்தான் தேசமக்கள் கருத்தென்றும் தாங்களே தான் தேசத் தலைவர்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே விளம்பரம் செய்து கொண்டும் தங்களுக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் தலைவர் பட்டங்களை பரிமாறிக் கொண்டும் இருந்த - இருக்கின்ற - ஒரு சில ஆசாமிகள் கூடிக் கொண்டு சுமார் ஒரு வருஷ காலமாக பகிஷ்காரக் கூச்சல் போட்டும் எவ்வளவோ சூழ்ச்சிகளும் விஷமப் பிரச்சாரங்களும் செய்தும் கடைசியாக சைமன் பகிஷ்காரம் புஸென்று காலி வேட்டாய் போய் விட்டதுடன் சைமன் கமிஷன் வரப் போவதில்லை என்று தெரிந்த ஒரு தெருவில் நின்று தங்கள் செலவில் போட்டோ படம் பிடித்து தங்கள் தங்கள் பத்திரிகையில் போட்டுக் கொண்டதோடு பகிஷ்காரம் முடிவு பெற்றுவிட்டதென்றே சொல்லுவோம்.

ஒரு சமயம் பகிஷ்காரக் கூச்சல்காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லவருவார்களானால் அவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பகிஷ்காரக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களில் அதாவது, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஷாபிமுகமது, குழந்தை, வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரம், இரத்தினசபாபதி, அமீத்கான், ஜெயவேலு முதலிய கூட்டத்தார்களை விட எந்தவிதத்திலாவது அதாவது, தேசியப் பொறுப்பிலோ ஒழுக்கத்திலோ, தியாகத்திலோ, செல்வத்திலோ குறைந்த யோக்கியதை உடையவர்கள் ஒருவராவது சைமன் கமிஷனை வரவேற்ற பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் இருந்தார்களா என்று கேட்கின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78591.html#ixzz2yixU8QTX

தமிழ் ஓவியா said...


இதுதான் குஜராத்தின் வளர்ச்சியா? 641 விவசாயிகள் தற்கொலை! ஜூ.வி. நேரில் சென்று கண்ட காட்சி

கபில் ஷா என்ற இயற்கை விவசாய ஆர் வலரைச் சந்தித்தபோது, பருத்தி சாகுபடியில் மட்டுமே குஜராத் 10 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்த மாநிலத்தின் பிரதான பயிரான நிலக்கடலையின் சாகுபடி பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய நிலைக்குத்தான் இங்கே விவசாயம் சென்றுகொண்டிருக்கிறது.

இதுதான் நிஜம். ஒரு பயிரை அழித்துவிட்டு இன்னொரு பயிரை வளர்ப்பது வளர்ச்சி இல்லை. விவசா யத்தை அழித்துவிட்டு தொழிற்சாலைகள் கட்டு வதற்கு பெயர், முன்னேற்றம் இல்லை. வளர்ச்சி என்றால் அனைத்துத் துறைகளும் வளர வேண் டும்.

விவசாயத்தை அழித்துவிட்டு தொழில் துறை வளர்கிறது என்றால், அதன் பெயர் வளர்ச்சி அல்ல... வீக்கம்! என்று சொன்னார்.

இது வளர்ச்சி அல்ல!

விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங் களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருவது பலத்த எதிர்ப்பைக் கிளப்பி வருகிறது. இப்படி மொத்தம் 5 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகள், மீனவர்களிடம் இருந்து பறித்து தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

குஜராத் வித்யா பீடத்தின் துணைவேந்தராக இருக்கும் சுதர்சன அய்யங் காரைச் சந்தித்தோம். நமது பண்பாடும், கலா சாரமும் நீர்த்துப் போகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக 1920 ஆம் ஆண்டு மகாத்மா இந்தப் பல்கலைக் கழகத்தைத் துவங்கினார். கிராமங் களில்தான் உண்மையான இந்தியா உள்ளது என்று சொன்ன அவர், இன்று உயிரோடு இருந்திருந்தால், குஜராத்தின் கிராமங்களை எண்ணி கண்ணீர் சிந்தியிருப்பார். மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் வேண் டும்.

ஆனால், இயற்கையை சிதைக்கும் விதமாக விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்களைப் பறித்துத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் மட்டுமே குறிக்கோள் என்றால், வருங்கால தலைமுறைக்கு விஷத்தன்மை கொண்ட மண்ணைத்தான் விட்டுச் செல்வோம்.

சாத்தான் வேதம் ஓதுவதைப்போல, இந்த அரசு பருவ நிலை மாற்றத்துக்காக ஒரு தனித் துறையை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு சுற்றுச்சூழல் கெட்டுப் போவதற்கு இந்த க்ளைமேட் சேஞ்ச் டிபார்ட்மென்ட் துணை போவதைப் பார்த்தால், இது எத்தனை பெரிய ஏமாற்று வேலை என்பது புரியும் என்கிறார்.

எங்கள் மாநிலத்தின் விவசாயிகள் காரில் செல்கிறார்கள் என்று மோடி ஒருமுறை சொன் னார். ஆனால், 2003-2012 காலகட்டத்தில் குஜ ராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலை யில் குஜராத் மக்களின் சமூக வளர்ச்சி எப்படி இருக்கிறது? கல்வி, சுகாதாரம், குழந்தைகளுக் கான ஊட்டச்சத்து, வறுமை, கழிப்பறை வசதிகள், குழந்தைகளின் படிப்பு சதவிகிதம் போன்றவை எப்படி இருக்கிறது?

- ஜூனியர் விகடன், 13.4.2014, பக்கம் 60-61

Read more: http://viduthalai.in/page-8/78583.html#ixzz2yixnPqSa

தமிழ் ஓவியா said...


யாகத்தில் கொலையுண்ட பசு ஸ்வர்க்கத்தை அடைகிறதாம்!


(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தி னின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர் கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லு கின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங் களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற் குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்த ரேய பஞ்சி 2 கா6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே. அஸ்நாரக்ஷ ஸம்ஸ்ருஜதாத் இத்யாஹ (ஜத... காண்டம் 7)

உதிரத்தை (இரத்தம்) ராட்சதருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லு கிறார். அதன்பின் வபாஹோமம் செய் யச் சொல் லுகிற மந்திரம்:-

தஸ்ய வபாமுத்கித்யாஹரந்தி தாமத் வர்யு: ஸ்ருவேணாபிதா ரயன்னாஹ
(ஜத... கண்டம் 12)

பொருள்: பசுவின் வபா என்னும் கொழுப்பை எடுத்த அத்வயு என்பவன் ஸ்ருவம் என்னும் பாத்திரத்தில் வைக் கின்றான்.

ஸர்வமாயுரேதிய ஏவம் வேத பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

வபாயாமா ஹுதாயாம் ஸ்வரக்கோ லோக: ப்ராக்யாயத. பொருள்: கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.


ஸோக்நேர் தேவயோன்யாம் ஆஹு திப்ய: ஸம்பூய ஹிரண்ய சரீர உனர்தவ: ஸ்வர்க்கம் லோகமேதி

பொருள்: அக்கினியில் தேவயோனியில் ஆஹுதி கொடுப்பதால் யாகம் செய்பவன் பொன்னாலாக்கப் பெற்ற சரீரத்தையுடை யவனாய் மேலே சுவர்க்க லோகத்தை அடையா நிற்பன்.

பசுவைக் கொலை செய்து அதன் சதையை முப்பத்தாறு பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந் தவன் சுவர்க்கத்தை அடைகின்றான். இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்று கீழ்க்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லோகானாப்னு வந்தி ப்ராணேஷு சைவதத் ஸ்வர்க்கேஷு ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)

Read more: http://viduthalai.in/page2/78575.html#ixzz2yiyZ0XDi

தமிழ் ஓவியா said...


தமிழ்த் தாய்க்குக் கோவில் கட்டினாலும் கருவறையில் பார்ப்பனர்தான்


காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கிராமத்தில் புதிதாய் எழுந்தருளிய தமிழ்த் தாய் திருக்கோவிலுக்கு காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. டாக்டர் வ.கோ. ரங்கசாமி, தேன்மொழி ரங்கசாமி ஆகியோரால் நிறுவப்பட்ட தமிழ்த்தாய் அறக்கட்டளையினரால் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆன்மீக அன்பர்கள் மற்றும் தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (தினஇதழ் 7.4.2014- பக்.7).

தமிழ் நீஷ பாஷை என்று சொன்னவர் காஞ்சிப் பெரியவாள் சந்திரசேகரர். அந்தத் தமிழ் மொழிக்கு அதன் மொழியழகில் மயங்கி, அன்பு கொண்டு இருக்கின்ற கோவில்கள், கடவுள்கள் போதாதென்று தமிழுக்கு கோயில்கட்டி தமிழ்த்தாயைச் சிலையாக அமர வைத்து அழகு பார்க்க முடிவெடுத்தனர், டாக்டர் வ.கோ.ரங்கசாமியும், தேன்மொழி ரங்கசாமி அவர்களும். இப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கிராமத்தில் தமிழ்த்தாய் எழுந்தருளியிருக்கிறாள். தமிழ்பக்தி முற்றிப்போனவர்களை வைத்து தமிழ்த்தாய் அறக்கட்டளையும் தொடங்கி கோவிலுக்கு குடமுழுக்கும் செய்துள்ளனர். ஆனால் என்னதான் தமிழ்த்தாயின் மீது பக்தியோடு இருந்தாலும் அவர்களால் தமிழ்த்தாயின் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியவில்லை.

செய்வதென்னவோ பார்ப்பனச் சிண்டுகள்தான். நமக்கு ஒரு அய்யம். இந்த பார்ப்பனச் சிண்டுகள் தமிழ்த்தாய்க்கு எந்த மொழியில் மந்திரம் சொன்னார்கள்? அர்ச்சனை செய்தார்கள்? நிச்சயம் சிண்டுகள் தமிழில் சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. தமிழ்தான் நீஷபாஷையாயிற்றே; அந்தத் தமிழுக்கு இவர்கள் அர்ச்சனை செய்கிறார்கள் என்றால் லோக குரு காஞ்சிப் பெரியவரை (அவர்கள் பார்வையில்) இந்தப் பார்ப்பனச் சிண்டுகள் அவமதிக்கின்றனர் என்று தானே பொருள்!

கோவிலைக் கட்டியபிறகு அவன் இராஜராஜ சோழனாக இருந்தாலும் சரி, டாக்டர் ரங்கசாமியாக இருந்தாலும் சரி, அவர்கள் கருவறைக்கு வெளியே தான். தமிழ்த்தாயை பார்த்து பரவசப்பட்டால் மட்டும் போதுமா? காலங்காலமாய் படுகின்ற அவமானத்தை எண்ணி ஆத்திரப்பட வேண்டாமா?

- இசையின்பன் - 9940348533

Read more: http://viduthalai.in/page2/78577.html#ixzz2yiz13DNV

தமிழ் ஓவியா said...


புள்ளிகள் பேசுகின்றன


கடந்த 50 ஆண்டுகளில் பேச்சு வழக்கிலிருந்து காணாமற் போன மொழிகளின் எண்ணிக்கை 220.

சென்னைப் பெரு நகரில் மக்கள் தொகை 46.8 லட்சம் (2011 கணக்குப்படி) படித்தவர்கள் 90.3 சதவிகிதம்.

124 கோடி இந்திய மக்கள் தொகையில் ஏதோ ஒரு வகையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட் டோர் 10 சதவிகிதமாகும்.

நாள் ஒன்றுக்குச் சிறுநீரகப் பாதிப்பால் ரத்தச் சுத்திகரிப்பு (டயலி ஸிஸ்) செய்து கொண்டோர் எண் ணிக்கை 20 ஆயிரமாம்!

80 வயதுக்கு மேற்பட்ட வாக் காளர் தமிழ்நாட்டில் 9.27 லட்சம்.

உலக நாடுகளின் வரிசையில் குழந்தைகளுக்கான பசி குறியீட்டில் இந்தியாவுக்குள்ள இடம் 15.

இந்தியாவில் நபர் ஒருவருக்கும் தேவைப்படும் மின்சாரம் 800 யூனிட் டுகள் - மின்சார விளக்குகள் பயன்படுத்தும் மக்கள் 67 சதவிகிதம்.

16ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 3 லட்சம்.

உலகெங்கும் 2013இல் மேலும் 50 லட்சம் பேர் வேலையில்லாதார் கணக்கில் சேர்ந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page3/78582.html#ixzz2yizRVQVx

தமிழ் ஓவியா said...


எடை மேடை


அயோத்தி இருண்ட இரவு (பாபர் மசூதிக்கும் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு - எனும் நூல் (கிருஷ்ணாஜா மற்றும் திரேந்திர கே.ஜா) விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் 248 பக்கங் களைக் கொண்டது விலை ரூ.150/-

இந்தக் கால கட் டத்தில் தேவையான நூலில் முதற்பதிவு எனும் தலைப்பாக இதோ (பக்.29-30).

1949ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், 23ஆம் நாள், காலை 9 மணி. பாபர் மசூதியுள் இராமர் சிலை வைக்கப்பட்டுப் பல மணி நேரம் கடந்த பின்னர், உ.பி. மாநிலம். பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகர் காவல் நிலைய அதிகாரியான பண்டித் ராம்தேவ் துபே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (திமிஸி) பதிவு செய்தார். அதில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (வன்முறையாகக் கலகம் செய்தல்), 448 (அத்துமீறி நுழைதல்), 295 (இறைவழிபாட்டு இடத்தின் புனிதத்தைக் குலைத்தல்) ஆகியவற்றின்கீழ், அபிராம்தாஸ், ராம்சகல்தாஸ், சுதர்சன்தாஸ், மற்றும் பெயர் தெரியாத 50 - 60 பேர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அந்த முதல் தகவல் அறிக்கைப் பதிவு இவ்வாறிருந்தது.

காலை 7 மணி அளவில் நான் (ராம்தேவ்துபே) ஜன்மபூமி இடத்திற்குச் சென்றேன். அங்கு காவற்பணியிலிருந்த காவலர் மாதா பிரசாத் (எண்- 7, அயோத்தி காவல் நிலையம்) வழியாக நான் தெரிந்து கொண்டதாவது: பாபர் மசூதியின் சுற்றுச்சுவர் வாயில் பூட்டை உடைத்தும், சுவரிலும் படிக்கட்டிலும் தொத்தித் தவழ்ந்து ஏறியும் உள்ளே நுழைந்த 50-60 நபர்கள் ஸ்ரீபகவானின் சிலையை அங்கு நட்டு வைத்ததோடு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் சீதா, இராமர் படங்களைக் கோடுகளாக எழுதினர். அந்த 50-60 நபர்களும் அதைச் செய்தபோது அங்கு காவற்பணியிலிருந்த ஹன்ஸ்ராஜ் (காவலர் எண்- 70) அவர்களைத் தடுத்தார். ஆயினும் அவர்கள் காவலரைப் பொருட்படுத்தவில்லை. அங்கு பாதுகாப்புப் பணி செய்த மாநில ஆயுதப் படையினர் அழைக்கப்பட்டனர். அதற்குள்ளாகக் கும்பல் மசூதிக்குள் நுழைந்து விட்டிருந்தது.

அவ்விடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட மூத்த அதிகாரிகள் செயலில் இறங்கினர். சில மணி நேரம் கடந்த பின்னர் 5000 - 6000 பேர் அங்கு கூடினர். மசூதிக்குள் நுழைய முயற்சி செய்த அவர்கள் மதமுழக்கங்களை எழுப்பியவாறும், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் இருந்தனர். வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதனால் இசை கேடாக எதுவும் நிகழவில்லை. குற்றம் இழைத்தவர்களான (அபி) ராம்தாஸ், (ராம்) சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் பெயர் தெரியா 50 - 60 நபர்கள் அத்துமீறி வன்முறையாக மசூதிக்குள் நுழைந்து சிலையை நட்டு வைத்ததோடு, மசூதியின் புனிதத்தையும் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். பணியில் இருந்த அலுவலர்களும், பொது மக்கள் பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். எனவே நிகழ்வு நன்றாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வுமெய் யெனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/78585.html#ixzz2yizkzrHs

தமிழ் ஓவியா said...


ராமன் பிறந்த நாளை கண்டுபிடிச்சிட்டாங்கோ!


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் என்ற தலைப்பில் சென்னை தியாகராயர் தக்கர்பாபா பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சி ( 05-04-2014) சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே என்பதை அறிவியல்? பூர்வமான(?) ஆதாரங்களுடன் அடித்துக் கூறினார் முனைவர் ஹரி. அதைப்புரிந்து கொள்ள நமக்கு எத்தனை கேலரி உணவு தேவை என்பதை நமது மூளை படும் பாட்டை அறிந்து கொண்ட பிறகு புரியும். அவர் அடித்துக்கூறுவது இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்! (5114 + 2014 = 7128). அதை விட பெரிய அணுகுண்டு செய்தி என்னவென்றால் இதை நிரூபிக்க சாப்ட்வேர், ஹார்டுவேர் வெட்டிவேர் மற்றும் சல்லிவேர் எல்லாம் பயன்படுத்தி ஆராய்ந்தார்களாம். அதன் முடிவு வியப்பில் ஆழ்த்தியதாம் அதாவது

* நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது, கி.மு. 5077 அக்டோபர் 7 ஆம் தேதி.

* வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076 ஏப்ரல் 03ஆம் தேதி.

* ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி: கி.மு. 5076 செப்டம்பர் 12.

* சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (கிஷ்கிந்தா) புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.

* அது ராவணன் கோட்டையை அடைந்தது: கி.மு. 5076 அக்டோபர் 12.

நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன் உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற் காகக் கட்டப்பட்ட பாலம் (ராமசேது) எத்தகைய தொழில்நுட்பத்துடன் வடிவ மைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாம். இறுதியில் கலைஞரின் கேள்விக்கு விடை யும் கிடைத்துவிட்டது. அதாவது சேதுபால தொழில் நுட்பம். எல்லாம் சரிங்கோ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அந்த காலகட்டத்தில் நதிக் கரை நாகரிகம் மாத்திரமே இருந்ததாக கூறியுள்ளார்களே. இன்றும் பல்கலைகழக வரலாற்றுப்பேராசிரியர் அதைத்தானே கூறி பாடம் எடுக்கிறார்கள், முனைவர் ஹரி அவர்கள் எழுதிய ஹிஸ்டோரிகல் ராமா உண்மை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு? இதையெல்லாம் சேர்த்து விடுவார்களா?

அங்கு வந்த என்னைப்போன்ற சாமானியனும் இந்துமத்தில் பற்றுள்ள பெரியவாள்களும் இதை நம்பி கொஞ்சம் அல்ல அதிகமாகவே புகழ்ந்துவிட்டு இலவசமாக இரண்டு புத்தகங்களை அவர் கையெழுத்துடன் வாங்கிக்கொண்டு செல்லலாம். ஆனால் இந்துமத சாஸ்திரங்கள் படி நடப்பவர்கள் இதை நம்புவார்களா?, பகுத்தறிவுவாதிகள் சண்டைக்கு வருவது இருக்கட்டும்; வடக்கில் இருந்து லட்சு மண் சேனாவினர் வந்து வம்பு செய்யப் போகிறார்கள், ஏன் தெரியுமா சுமார் 30,00,000 அதாவது முப்பது லட்சம் வயதை கொண்டு ஒரு அவதார புருடரான இராமனுக்கு (இராமனே புரூடா தானே) வெறும் 7128 வயது என்று கூறுகிறாயே - உனக்கு எந்த அமெரிக்க அமைப்பு இராமர் பெயரை பாழ்படுத்த பணம் (திஸீபீ) கொடுத்தது என்று கேட்க மாட் டார்களா?

சாஸ்திரங்களில் கூறப்படுவது திரேதா யுகத்தில் இராம அவதாரம் நடந்தது. அதாவது 12,66,000(பனிரெண்டு லட்சத்து அறுபத்து ஆறாயிரம்) இது மாத்திரமா அதன் பிறகு கிருதா யுகம் அங்கு தான் கிருட்டிணர் பிறந்தார் அந்த யுகம் 17,28,000 (பதினேழு லட்சத்து இருபத்தெட்டாறா யிம்) ஆண்டுகள். இவை யிரண்டும் முடிந்த பிறகு கலியுகம் பிறக்கிறது. அதாவது கிமு 3102. இதெல்லாம் இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேண்டு மென்றால் மாம்பலம் ரயில் நிலையத் திற்கு அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று விளக்கம் கேளுங்கள் இல்லையென்றால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இராமகிருஷ்ணா புத்தக மய்யத்தில் சென்று கேளுங்கள்! உண்மையில் இராமனின் வயது 29,94,000 இதுதான் இந்துமத சாஸ்திரங் களின் படி கணக்கு எல்லாம் போட்டு அது வும் டிஜிடல் கால்குலேட்டர் ஒரு புள்ளி கூட தப்பாக கூறாது என்பதை கவனிக்க. அதுசரி ராமன் பாலம் கட்டியது 17 லட்சத்தை 25 ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாக சங்பரிவார் வகையறாக்கள் சொன்னதெல்லாம் டூப் - அசல் டூப்பு தானா!

என்னவோ போங்க கையில் காசும், எழுத்துத் திறமையும் இருந்தால் நேற்று கூட ராமர் எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு போனார் என்று பொஸ்தகம் போடலாம். கேட்டால் சாட்டிலைட் மற்றும் கூகிள் மேப் டைம்லைன் பிறகு வாட்ஸ் அப், மற்றும் ஸ்கைப் போன்ற இணையதள நேரடி ஒளிபரப்பு மூலம் ஆதாரம் வைக்கலாம். டிஜிடல் பொஸ்தகம் வைக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஹரி என் மனைவி வந்திருந்தால் இதைவிட அதிகம் தகவல் கூறியிருப்பார் என அடிக்கடி கூறினார். இதிலிருந்து என்ன தெரிகிறது.


எல்லாவற்றையும் விட தமிழ் பாரம் பரிய அறக்கட்டளை என்ற அமைப்பின் பணி தான் என்ன?

- சரா

Read more: http://viduthalai.in/page5/78588.html#ixzz2yj0Adc2j

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் வங்கி

சென்னையில் விரைவில் இரண்டாம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட உள்ளது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் சுகாதார பயிற்சி நிறுவனத்தில் (மிஸீவீமீ ஷீயீ சிலீவீறீபீ பிமீணீறீலீ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. தற்போது, தனியார் மருத்துவமனையாகிய விஜயா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இந்த வார இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

பிறக்கும் குழந்தைக்கு புகட்டப்பட வேண்டிய தாய்ப்பால் மிகச் சிறப்பான உணவாகும். பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. தாய்க்கு பல காரணங்களால் பால்சுரக்காமல் உள்ளது. குறிப்பாக குறைப்பிரசவம், ஆரோக்கி யமில்லாத குழந்தைகளால் தாய்ப்பாலை அருந்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இதுபோன்ற தானே அருந்த முடியாத குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை வற் புறுத்தி அளிக்க மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது என்று விஜயா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் பொறுப்பாளராகிய அனில் குமார் கூறினார். தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் கொடையாக வங்கியில் அளிக்கலாம். அப்படிக் கொடுக்கப்படும் தாய்ப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வில் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிரிகளைக் களைவதற்கு சூடு படுத்தப்பட்டு, வங்கியில் பாதுகாக்கப் படும். ஆறு மாதங்கள் வரை வங்கியில் பாதுகாக்கப்படுகிறது என்று மருத்துவர் குமார் தாய்ப்பால் வங்கியின் பயன்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கொல்கத்தா, குஜராத், உதய்ப்பூர் மற்றும் பூனா ஆகிய நகரங் களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதற்கு முன்ன தாகவே தாய்ப்பால் வங்கிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, செயல்படுத்த முடி யாமல் இருந்தது.

இதுதான் முதல் தனியார் மருத்துவ மனையில் தொடங் கப்பட்டுள்ள தாய்ப் பால் வங்கியாகும். குறைப் பிரச வத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (மிசிஹி) உள்ள குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியிலிருந்து அளிக்கப்படும்.
முறைப்படி தாய்ப்பாலை கொடை யாக அளிக்க விருப்பம் தெரிவிப்பவர் களின் தாய்ப்பால் மாதிரி எடுக்கப்பட்டு கிருமித்தொற்று, நுண்ணுயிரிகள் உள் ளனவா என்று ஆய்வு செய்யப்படும். கூடுதலாக சுரக்கும் தாய்ப்பாலை சேக ரித்து வைப்பதற்கு, தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தாய்ப்பாலைப் பெறுவதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் தாய்ப் பாலை அளிப்பதற்கும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறோம். தாய்ப்பாலை அளிக் கும் தாய்மார்கள் பட்டியலை பதிவு செய்கிறோம். தகுந்த விலையுடன் தாய்ப் பாலை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று மருத்துவர் குமார் கூறினார். எழும்பூர் குழந்தைகள் சுகாதாரப் பயிற்சி நிறுவனத்தின் பிறக்கும் குழந்தை களுக்கான பிரிவான நியூனாடாலஜி தலைவரும், பேராசிரியருமாகிய ஜெ.குமுதா கூறும்போது, எழும்பூரில் உள்ள தாய்ப்பால் வங்கி நன்றாக செயல்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை 800மிலியிலிருந்து ஒரு லிட்டர்வரை கொடையாகப் பெறுகி றோம். தீவிரசிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களிட மிருந்து தாய்ப்பாலைப் பெற்றுக் கொள்கிறோம் என்றார். மேலும் அவர் கூறும்போது, பாலின் பாதுகாப்பு பலமுறை செய்யப்படும் ஆய்வின்மூலம் உறுதி செய்யப்படுகிறது. குறைப்பிரசவத் தில் பிறக்கும் 1.00 கி.கி, 1.20 கி.கி. அளவில் எடை குறைந்த குழந்தைகளுக்கும், போதுமான அளவு பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page5/78590.html#ixzz2yj0J8xZz

தமிழ் ஓவியா said...


மோடி மனைவியின் மனக் குமுறல்!


தன்னை மிகவும் பிரபல மானவர் என்று உலகிற்கு தெரியும் வகையில் நடந்து கொள்பவர் மோடி, அதிலும் நான் சுயம்சேவகன்(ஆர் எஸ் எஸ் தொண்டன்) என்று எல்லா பொதுகூட்டமேடையிலும் பேசுவதை வழக்கமாக கொண்டு இருப்பவர். பொது வாக சுயம்சேவகர்கள் திரு மணம் செய்யக்கூடாது என்று விதிமுறை உண்டு. இதன் காரணமாக நரேந்திரமோடி உலகத்தாருக்கு திருமணமாகாதவர் என்ற பிம்பத்தையே ஏற்படுத்திவந்தார். சுமார் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டவர் தான் திருமணமானவர் என்று குறிப் பிடவில்லை. இவர் திருமணமானவர் என்று சொன்ன தகவல் எல்லாம் வதந்தி என்றும் நரேந்திரமோடி உறுதியான மனப்பான்மையுள்ள உண்மையான சுயம்சேவக் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தே 2013-மார்ச் நாக்பூரில் நடந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனுடைய உண்மையான விளக்கம் கடு மையான பிரம்மச்சரியத்தைக் கடை பிடிக்கும் திருமணமாகாத தொண்டர் என்பதாகும். கடந்த வருடம் நரேந்திர மோடி பாஜக பிரதமவேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரது திருமணம் குறித்த விவாதமும் துவங்கிவிட்டது, ஏற்கனவே 2008 ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் நரேந்திரமோடியின் மனை வியைப் பேட்டி கண்டு செய்திவெளியிட்டு பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த செய்தி அதிகம் பரவாமல் மறைக்கப்பட்டு விட்டது. இந்த வருடம் பெண்கள் தினம் அன்று நரேந்திரமோடியின் டீக்கடை விவாதம் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினம் குறித்த நரேந்திர மோடியின் பேச்சிற்கு தன்னுடைய மனைவியை சரியாக கவனிக்காதவர் பெண்களின் நலன் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்திருந்தது, மேலும் 2002ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது தான் திருமணமாகாதவர் என்று வேட்பாளர் பிரமாணபத்திரத்தில் எழுதியிருந்ததைக் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று வழக்கை தள்ளிவைத்துவிட்டது. இம்முறை ஆம் ஆத்மி தலைவர்களும் நரேந்திரமோடியின் திருமண வாழ்க்கை குறித்து பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். தனது திருமண விவகாரம் குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்த பிறகு தனது மவுனத்தைக் கலைத்து தான் திருமணமா னவர் என்று குறிப்பிட்டார் நரேந்திரமோடி.

நேற்று பாஜகவின் சார்பில் வதோதராவில் போட்டியிடும் நரேந்திர மோடி தனது வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் ஜசோதாபென் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

கடந்த 3 சட்ட மன்றத்தேர்தலின் போது தன்னை திருமணமாகாதவர் என்று குறிக் கும் விதமாக தனது பிரமாணப்பத்திரத்தில் திருமண பகுதியை நிரப்பாமல் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்டிருப் பதை நகலாக எடுத்து வதோதரா ஆட்சியாளர் அலுவலக சுவரில் யாரோ ஒட்டி விட்டனர். இதை சிலர் பார்த்த பின்பு மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்ட செய்தி இரவு செய்தி ஊடகங்கள் மூலம் பரவியது. ஆனால் இதுவரை ஆட்சியாளர் அலுவலக இணையதளத்தில் மோடியின் பிரமாண பத்திர தகவல் குறித்து எந்த தகவலையும் சேர்க்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஜசோதா பென் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த செய்தியின் தமிழாக்கம் “I am Narendra Modi’s Wife” | OPEN Magazine 2009
மார்ச்.

.”Joshodaben claims she was deserted and never given the privileges of a wife”...........
......

......நான் ஒரு சராசரி இந்தியப்பெண்ணிற்கு உண்டான மகிழ்ச்சிகளைக்கூட பெற முடியாத பாவப்பட்ட ஜென்மம் ஆகிவிட் டேன், எனது திருமணவாழ்க்கை துவக்கத் தில் இருந்தே பாலைவனமாகிப்போனது. மனைவிக்கான எந்த ஒரு அதிகாரமும் வழங்கவில்லை, மோடி அவர்கள் என்னை ஒரு மனைவியாகவே நினைக்கிறாரா இல்லையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார். இது பேட்டி கேட்கும் முன்பு கூறியவார்த்தை பேட்டி கொடுக்க வெளியே வந்தவரை மிரட்டிய பள்ளி நிர்வாகம், செய்தியாளர்களை விரட்டிவிட்டதுடன், சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பத்தி ரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பி இருக்கிறார்........

Read more: http://viduthalai.in/page8/78600.html#ixzz2yj1AEJJr

தமிழ் ஓவியா said...


மோடி மனைவியின் மனக் குமுறல்!


தன்னை மிகவும் பிரபல மானவர் என்று உலகிற்கு தெரியும் வகையில் நடந்து கொள்பவர் மோடி, அதிலும் நான் சுயம்சேவகன்(ஆர் எஸ் எஸ் தொண்டன்) என்று எல்லா பொதுகூட்டமேடையிலும் பேசுவதை வழக்கமாக கொண்டு இருப்பவர். பொது வாக சுயம்சேவகர்கள் திரு மணம் செய்யக்கூடாது என்று விதிமுறை உண்டு. இதன் காரணமாக நரேந்திரமோடி உலகத்தாருக்கு திருமணமாகாதவர் என்ற பிம்பத்தையே ஏற்படுத்திவந்தார். சுமார் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டவர் தான் திருமணமானவர் என்று குறிப் பிடவில்லை. இவர் திருமணமானவர் என்று சொன்ன தகவல் எல்லாம் வதந்தி என்றும் நரேந்திரமோடி உறுதியான மனப்பான்மையுள்ள உண்மையான சுயம்சேவக் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தே 2013-மார்ச் நாக்பூரில் நடந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனுடைய உண்மையான விளக்கம் கடு மையான பிரம்மச்சரியத்தைக் கடை பிடிக்கும் திருமணமாகாத தொண்டர் என்பதாகும். கடந்த வருடம் நரேந்திர மோடி பாஜக பிரதமவேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரது திருமணம் குறித்த விவாதமும் துவங்கிவிட்டது, ஏற்கனவே 2008 ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் நரேந்திரமோடியின் மனை வியைப் பேட்டி கண்டு செய்திவெளியிட்டு பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த செய்தி அதிகம் பரவாமல் மறைக்கப்பட்டு விட்டது. இந்த வருடம் பெண்கள் தினம் அன்று நரேந்திரமோடியின் டீக்கடை விவாதம் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினம் குறித்த நரேந்திர மோடியின் பேச்சிற்கு தன்னுடைய மனைவியை சரியாக கவனிக்காதவர் பெண்களின் நலன் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்திருந்தது, மேலும் 2002ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது தான் திருமணமாகாதவர் என்று வேட்பாளர் பிரமாணபத்திரத்தில் எழுதியிருந்ததைக் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று வழக்கை தள்ளிவைத்துவிட்டது. இம்முறை ஆம் ஆத்மி தலைவர்களும் நரேந்திரமோடியின் திருமண வாழ்க்கை குறித்து பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். தனது திருமண விவகாரம் குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்த பிறகு தனது மவுனத்தைக் கலைத்து தான் திருமணமா னவர் என்று குறிப்பிட்டார் நரேந்திரமோடி.

நேற்று பாஜகவின் சார்பில் வதோதராவில் போட்டியிடும் நரேந்திர மோடி தனது வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் ஜசோதாபென் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

கடந்த 3 சட்ட மன்றத்தேர்தலின் போது தன்னை திருமணமாகாதவர் என்று குறிக் கும் விதமாக தனது பிரமாணப்பத்திரத்தில் திருமண பகுதியை நிரப்பாமல் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்டிருப் பதை நகலாக எடுத்து வதோதரா ஆட்சியாளர் அலுவலக சுவரில் யாரோ ஒட்டி விட்டனர். இதை சிலர் பார்த்த பின்பு மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்ட செய்தி இரவு செய்தி ஊடகங்கள் மூலம் பரவியது. ஆனால் இதுவரை ஆட்சியாளர் அலுவலக இணையதளத்தில் மோடியின் பிரமாண பத்திர தகவல் குறித்து எந்த தகவலையும் சேர்க்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஜசோதா பென் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த செய்தியின் தமிழாக்கம் “I am Narendra Modi’s Wife” | OPEN Magazine 2009
மார்ச்.

.”Joshodaben claims she was deserted and never given the privileges of a wife”...........
......

......நான் ஒரு சராசரி இந்தியப்பெண்ணிற்கு உண்டான மகிழ்ச்சிகளைக்கூட பெற முடியாத பாவப்பட்ட ஜென்மம் ஆகிவிட் டேன், எனது திருமணவாழ்க்கை துவக்கத் தில் இருந்தே பாலைவனமாகிப்போனது. மனைவிக்கான எந்த ஒரு அதிகாரமும் வழங்கவில்லை, மோடி அவர்கள் என்னை ஒரு மனைவியாகவே நினைக்கிறாரா இல்லையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார். இது பேட்டி கேட்கும் முன்பு கூறியவார்த்தை பேட்டி கொடுக்க வெளியே வந்தவரை மிரட்டிய பள்ளி நிர்வாகம், செய்தியாளர்களை விரட்டிவிட்டதுடன், சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பத்தி ரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பி இருக்கிறார்........

Read more: http://viduthalai.in/page8/78600.html#ixzz2yj1AEJJr