Search This Blog

11.4.14

பி.ஜே.பி.,க்கு சோவின் கண்ணீர் அஞ்சலி!

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யை திருவாளர் சோ ராமசாமி அய்யரேகூட கைவிட்டுவிட்டாரே! மூக்கைச் சிந்தி விட்டாரே!
அவர் மொழியில் அமங்கலம்பாடிவிட் டாரே - நமக்கு ஏன் வம்பு - இதோ அவரையே பேச வைப்போமே!

கேள்வி: பா.ஜ.க.வின் மூத்த தலைவர் களுக்கு என்ன ஆயிற்று? குட்டையைக் குழப்பிக் கொண்டே இருக்கிறார்களே! கட்டுப் பாடான ஆர்.எஸ்.எஸிலிருந்து உருவான கட்சியே இப்படி என்றால்..?

பதில்: பா.ஜ.க.வின் சில மூத்த தலைவர்கள் குட்டையைக் குழப்புவதாக நீங்கள் கூறுகிறீர்கள். இன்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட, நாளை அவர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான் இன்னமும் முக்கியமான விஷயம். பா.ஜ.க. தலைமையில் ஆட்சியமைக்க ஒரு சில கட்சிகள் தயக்கம் காட்டினால் போதும் - பா.ஜ.க.விலேயே சிலர் மோடிக்குப் பதிலாகத் தன்னை முன்னிறுத்தினால் ஆதரவு சுலபமாகக் கிடைத்துவிடும் என்று பேச ஆரம்பிப்பார்கள். மீடியாவிலும் அப்படிப் பேச வைப்பார்கள். அப்படிச் செய்கிற போதுதான் குழப்பம் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதற்கெல்லாம் இடம் அளிக்காத வகையில், பா.ஜ.க. மெஜாரிட்டி பலத்திற்கு மிக நெருக்கமாக வந்துவிட்டால் அக்கட்சிக்கு நல்லது.

கேள்வி: ஒன்றன்பின் ஒன்றாகப் பிரச்சி னைகளை (துணைப் பிரதமர் யார் என்பது உள்பட) பா.ஜ.க.வினரே கிளப்புவதைப் பார்த்தால், உள்ளடி வேலை நடக்கிறதோ என்ற சந்தேகம் வரவில்லையா?

பதில்: என்ன இருந்தாலும், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்று பா.ஜ.க.வினர் தீர்மானித்துவிட்டார்கள். அப்படி ஆட்சி அமைகிறபோது, அதில் தனக்கு என்ன பங்கு என்பதுபற்றிப் பல தலைவர்களுக்குக் கவலை வந்துவிட்டது. அதனால்தான் பல தலைவர்கள் இசகுபிசகாகப் பேசி வருகிறார்கள். அதில் ஒரு சிலருக்குப் பிரதமர் ஆசைகூட இருப்பது ஆபத்தான விஷயம்.

கேள்வி: தமிழக பா.ஜ.க. கூட்டணியின் ப்ளஸ் பாயின்ட் என்ன?

பதில்: பா.ஜ.க.வை ஒரேடியாக அலட்சியப் படுத்திவிட முடியாது என்கிற அளவிற்கு ஒரு கூட்டணி உருவாகியிருப்பது ப்ளஸ் பாயின்ட். அதற்குமேல் அதை விசேஷமாகச் சொல் வதற்கு இல்லை.

கேள்வி: விஜயகாந்த் பேசும் கூட்டங் களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. பா.ஜ.க. கூட்டணி முதன்மைக் கூட்டணியாக வெற்றி பெறுமா?

பதில்: அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கணிசமான வாக்கு களைப் பெறக்கூடிய கூட்டணியாக பா.ஜ.க. கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இவையெல்லாம் இந்த வார துக்ளக்கில் (16.4.2014) வெளிவந்துள்ள கேள்வி பதில்கள்.

அகில இந்திய அளவில் பி.ஜே.பி.,க்குள் நடக்கும் உள்குத்துகள்பற்றிப் புலம்பல்! தமிழ் நாட்டிலோ தேறவே தேறாது என்று முணுகல்!

பி.ஜே.பி.,க்காக உடன்கட்டை ஏறத் துடித்துக் கொண்டிருக்கும் திருவாளர் சோவே கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டாரே!

                ------------------------"விடுதலை” 11-4-2014

25 comments:

தமிழ் ஓவியா said...


கார்ப்பரேட் - வகுப்புவாத சக்திகளின் பின்(பு)பலத்தில் பி.ஜே.பி.! மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பீர்! பல்துறைப் பெரு மக்களும் வேண்டுகோள்!!

பாஜக தலைமையிலான கார்ப்ப ரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சியில் அமர மேற்கொள்ளும் முயற் சியை அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் முறியடிக்க வேண்டும் என கல்வியாளர்கள், திரையுலகினர் உள் ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள் ளனர். திரை இயக்குநர்கள் குமார் ஷஹானி, சயீத் மிர்ஸா, கலைஞர்கள் அர்பணா கவுர், விவன் சுந்தரம், திரை யுலக பிரபலங்கள் எம்.கே.ரைனா, அனுராதா கபூர், பத்ரிரைனா, கல்வியா ளர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்சி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி. என். ஜா, கே.எம்.சிறீமலி உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

இந்து தேசியத்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் அமைப்புக்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியில் அமர கடும் முனைப்பு காட்டி வருகின் றன. சுதந்திர இந்தியா இதுவரை கண்டி ராத நிலைமை இது. இந்த சக்திகளுக்கு பலமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கிறது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைக்களத்துக்கு தலைமை தாங்கி அதில் தனக்கு உள்ள பங்குக்காக இதுவரை மன வருத்தம் தெரிவிக்க முன்வராத நபர்தான் இந்த சக்திகளைத் தலைமை ஏற்று வழி நடத்துபவர்.

கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் கூட்டணி, ஆட்சியை பிடித்தால் அது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர் காலத்துக்கே உலைவைத்துவிடும்.

பொறுப்புமிக்க தனி நபர்களும் அரசியல் அமைப்புகளும் நிலை மையை சீர்தூக்கிப் பார்த்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ள வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வாக் களித்து கார்ப்பரேட்- வகுப்புவாத சக்தி களின் கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் அமரும் முயற்சியை முறியடிக்க வேண் டும் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அலிகார் பல்கலை. குஜராத் கலவரத்துக்கு காரணமான வர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக ஓட்டளிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இச்சங்கத்தின் கவுரவ செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண் டும். குஜராத், முஸாபர்நகர் கலவரத் துக்கு காரணமானவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர் கள் தேல்வி அடையும் வகையில் முஸ் லிம்களும், மதச்சார்பற்ற வாக்காளர் களும் சாதுர்யமாக வாக்களிக்க வேண்டும்.

மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம் சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற் கடிக்க வேண்டும்.

நடந்த சம்பவத்துக்கு மோடி இது வரை வருந்தவில்லை. முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20,000 முஸ்லிம் கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்ய வில்லை.

முஸ்லிம்களின் முதல் முக்கியத் துவம் அவர்களது பாதுகாப்புதான். அதை உறுதி செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-2/78526.html#ixzz2yd9onR5I

தமிழ் ஓவியா said...


மோடியின் டிவிட்டரில் பொய்யான எண்ணிக்கைகள்

டிவிட்டர் எனும் நவீன ஊடக செயல்பாடு, ஒருவர் கருத்தை பதிவு செய்தால், அதனை வரவேற்கவும், கருத்து கூறவும், மாறுபட்ட எண் ணத்தை வெளிப்படுத்தவும் உள்ள ஓர் சிறப்பான விஞ்ஞான கண்டு பிடிப்பாகும். பலர் அதில் தங்களை இணைத்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்; விவா தம் மேற்கொள்கின்றனர். மிகப் பெரிய பிரபலங்கள் இந்த டிவிட் டரை பயன்படுத்தி வருகின்றனர்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்த அடுத்த நிமி டங்களிலேயே, ஆயிரக்கணக்கான வர்கள் அவரது கருத்தை வரவேற்ப தாக விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பேர், மோடியின் டிவிட்டரை விரும்புகின்றனராம்; மோடி நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், அத்தகைய எண்ணிக் கையில் யாரும் உண்மையில் விருப் பம் தெரிவிக்கவில்லை; பொய்யான முறையில், இதனை உண்டாக்கி வருகின்றனர், மோடியின் ஊடக ஏஜெண்டுகள்.

ஸ்டேட்டஸ் பீப்பிள் எனும் இணையதள நிறுவனம் லண்டனில் உள்ளது. இந்த இணைய தள நிறு வனம், அல்காரிதம் எனும் முறை யில், டிவிட்டர் பயன்பாட்டாளர் களில் பொய்யானவர்கள் யார், எந்தவித செயல்பாடும் இல்லாதவர் கள் யார் என கண்டறியும் திறமை படைத்த நிறுவனம். இந்த நிறு வனம், மோடியின் டிவிட்டரை விரும்புவதாக காட்டும் எண்ணிக் கையில், 46 விழுக்காடு பொய் யானவை என்றும், 41 விழுக்காடு, எந்தவித செயல்பாடும் இல்லாத வர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளது.

2009-ல் மோடி, டிவிட்டரை துவங்கும்போது, அவருக்கு ஒரு லட்சம் வாசகர்கள் உள்ளதாக சொன் னார்கள்; நவம்பர் 2011-ல், இந்த எண்ணிக்கை, நான்கு லட்சம் என்று சொன்னார்கள். தற்போது, பத்து லட்சம் என மோ(ச)டி சொல்கிறார்.

இதுபோல், பொய்யான வாசகர் களை உருவாக்குவது இப்போது அதிகமாகி உள்ளது; சில நிறுவனங் கள், இந்த வாசகர்களுக்கு, 10 பைசா முதல் 50 பைசா வரை, ஒவ்வொரு விருப்பம் தெரிவிக்கும்போதும் தருகிறார்கள் என்கிறார் இணைய தள நிறுவனத்தில் இயக்குநராக இருக் கும் அபிஜித் சோனாகரா.

மோடி என்கிற ஒரு மனிதர், எந்தெந்த வகையில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதற்கு, அவரது டிவிட்டரும் அதில் விருப் பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக் கையை பொய்யாக உயர்த்திக் காட்டி, மக்களிடையே தனக்கு அதிக செல் வாக்கு இருப்பதாக ஓர் மாயையை உருவாக்கும் இந்த மோசடிச் செய லும், ஒரு பானை சோற்றுக்கு ஓரு பருக்கை பதம் என்பதை தெளிவாக்கி உள்ளது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78528.html#ixzz2yd9xxNO1

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/78520.html#ixzz2ydA7fziL

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்பாதே!


முன்காலத்தில் அடுத்த வீட்டுக்காரன் பசியால் துடிப்பதைப் பார்த்து உதவி செய்தார்கள். இப்போது இருப்பவர்கள் அப்படி இல்லை - எல்லாம் அவன் தலையெழுத்து, பட்டினி கிடக்கிறான் என்று பேசுகிறார்கள்.

தலையில் யார் வந்து எழுதியது? தலையெழுத்து எப்படி இருக்கும்? பட்டினி கிடப்பதற்கு தலை எழுத்து என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லை, கூலி கிடைக்கவில்லை, அதனால் அவன் பட்டினியாக கிடக்கிறான்.

-மதுரை ஜில்லா நிலக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டது (29.12.1958)

தகவல்: ச.இராசாமி, சென்னை -18

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBq5ism

தமிழ் ஓவியா said...

அடிமைத்தன்மை

சிந்திக்க முடியாதவன் மனிதனைவிட மட்டமானவன்; சிந்திக்க மறுப்பவன் தனக்குத்தானே துரோகம் செய்பவன்; சிந்திக்க அஞ்சுபவன் மூட நம்பிக்கையின் முழு அடிமை.

- இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBxjVRn

தமிழ் ஓவியா said...

ஆலயத் திருடர்கள்!

நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

- மார்ட்டின் லூதர்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydC6Unpw

தமிழ் ஓவியா said...

மனுநீதி இப்படிச் சொல்கிறது

ஆரிய ஆணுக்கும், ஆரிய இனமல்லாத பெண்ணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியும். ஆரிய பெண்ணுக்கும், ஆரியனல்லாத ஆணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியாது.

பார்ப்பானைக் கொல்வது, பார்ப்பானின் பொன்னைக் கவர்வது, குரு பத்தினியோடு உறவு கொள்வது ஆகியவை மகா பாதகங்களாகும். பார்ப்பானைக் கொன்றவன் 12 ஆண்டுகள் வனவாசம் புரிய வேண்டும். அல்லது எரியும் நெருப்பில் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.

அல்லது போர்க்களத்தில் அம்புகளை எய்கின்ற இலக்காக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். சூத்திரனைக் கொன்ற பார்ப்பான் ஆறுமாதம் தவம் புரிய வேண்டும்; அல்லது பத்து பசுக்களையும், ஒரு எருதையும் பார்ப்பானுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

ஒரு சண்டாளனை, அல்லது பிணத்தைத் தொட்டவன் குளிப்பதன் மூலம் தூய்மை அடையலாம்.

ஒரு பார்ப்பனப் பெண்ணோடு அவள் விருப்பத்திற்கு எதிராக சம்போக உறவுகொண்ட பார்ப்பனனின் தலையை மொட்டை அடிப்பது அதற்குரிய தண்டனை ஆகும். இதே குற்றத்தை மற்ற ஜாதிக்காரர்கள் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCCKkvY

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லை யென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங் களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ் வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCHscuu

தமிழ் ஓவியா said...


அவதாரங்கள் அழிவு வேலைக்கே


கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?

அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!

திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.

தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.

நம்மையும் ஒழித்திருப்பார்கள்: மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங் களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண் டான் என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!

இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம. அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும்.

அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!

10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCQJkLq

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களை சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமரூட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வழி வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது.

நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCggqy6

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்


தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.

90 வயதைக் கடந்த நிலையிலும்கூட திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் பொழுதெல்லாம் அந்தவூருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பைப் பசுமையாக நினைவூட்டி, மலரும் நினைவுகளில் தோய்ந்து போகிறார்.

கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பேசும்பொழுது திராவிடர் கழகத்தில் அவர் இளைஞராக இருந்தபோது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டினார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பெரியாரைப் பற்றியும், அண்ணா அவர்களைப் பற்றியும், சுயமரியாதைக் கொள்கைகள்பற்றியும் பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம்... தந்தை பெரியார் போதனைகளையும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைகளையும் விட்டு விட்டு இந்தக் கருணாநிதியால் பேச முடியாது என்று சொன்னாரே - அதுதான் முத்தாய்ப்பு!

இயக்கத்தின் அஸ்திவாரம் சித்தாந்தங்கள் இளைஞர்களிடத்தில் போய் சேராத வரை வெறும் தேர்தல் பிரச்சாரம் ஆழமாகப் போய்ச் சேர்ந்திடாது. இளைஞர்கள் திசை மாறி ஓடுகிறார்களே என்று குறைபட்டுக் கொள்வதில் பொருள் இல்லை.

இளைஞர்களிடத்தில் திராவிடர் இயக்கச் சித்தாந் தங்களையும், சாதனையையும் எடுத்துக் கூறாவிட்டால் வேறு சீரழிவுத் திசையில்தான் பயணம் செய்வார்கள். முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் மற்ற பேச்சாளர்கள் இதனைப் பாலபாடமாகப் பெற வேண்டும்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் இயக்கத்தின் இலட்சிய நீரோட்டத்தை எடுத்துச் சொல்லத் தவறுவதில்லை.

திராவிடர் கழகத் தலைவர் உரையைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக, இந்தத் தேர்தல் என்பது குலதருமத்துக்கும், சம தர்மத்துக் குமிடையே நடக்கும் போராட்டம் என்பதைக் காரண காரியத்தோடு எடுத்துக் கூறி வருகிறார்.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் படிப்பவர்களுக்குத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை தெற்றெனப் புலனாகும்.

சமூக நீதிக்காகப் பிறந்த இயக்கமாயிற்றே திராவிடர் இயக்கம்.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே சமூக நீதி என்ற சொல்லோ, இடஒதுக்கீடு என்ற பதமோ மருந்துக்கும்கூட இடம் பெறவில்லையே!

மாறாக மதவாத அனல் காற்று தான் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே வீசுகிறது. இந்த அடிப்படையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆழமான உரையாக திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் உரை அமைந்துள்ளது.

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார உரை; களை கட்டி நிற்கிறது; யதார்த்தமாக. கால தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல பல யுக்திகளை அவர் சொற்பொழிவில் காண முடிகிறது.

மக்களைப் பார்த்து ஜெயலலிதா கேள்வி எழுப்பி வருகிறார். செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களைப் பார்த்து செல்வி ஜெயலலிதா கேள்வி கேட்டு வருகிறார்.

அதே பாணியில் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து செய்தீர்களா? செய்தீர்களா? என்று கேட்பது வாக்காளர் மத்தியில் மிகவும் எடுபடுகிறது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உரை - எழுதி வைத்துக் கொண்டு படிப்பதாகும். ஒரே உரையை எத்தனைக் கூட்டங்களில்தான் பேசுவது, பேசுவோருக்கே வெறுத்துப் போய் விடாதா? நாளடைவில் அவர் உரை உணர்ச்சியற்றதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

துணிந்து உண்மைக்கு மாறான வகையில் ஒரு முதல் அமைச்சர் பேசி இருப்பது ஆச்சரியமானது!

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்பதே கிடையாது என்று பேசக் கூடிய துணிவு அல்லது அசட்டுத் தைரியமே! இதனைக் கேட்கும் பொது மக்கள் முதல் அமைச்சரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அன்றாடம் மின் வெட்டினால் பல வகைகளிலும் அல்லற்படும் அந்த மக்களிடத்திலேயே இப்படி அபாண்டமாகப் பொய்யைக் கூறினால், அந்தப் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

இதில் இன்னொரு தகவலை முதல் அமைச்சர் கூறுவதுதான் வேடிக்கை.

மின்சார உற்பத்தி தன்னிறைவை அடைந்து விட்டதாம். ஆனால், நாள்தோறும் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றனவாம். இதில் ஏதோ சதி நடக்கிறதாம் - சொல்லுபவர் யார் தெரியுமா? ஒரு முதல் அமைச்சர்.

அப்படி சதி இருப்பது உண்மையென்றால் அதனைக் கண்டுபிடித்து, சதிகாரர்களைத் தண்டிக்க வேண்டியதும் முதல் அமைச்சரின் வேலைதானே! இப்படிக் கூறுவது - முதல் அமைச்சர் நிர்வாகத் திறன் அற்றவர் என்று பொருளாகி விடாதா?

தொலைக்காட்சிகளில் தலைவர்களின் உரைகளைக் கேட்கும் பொது மக்கள் இதுபற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/78566.html#ixzz2yiuH5uQ2

தமிழ் ஓவியா said...


விரட்டியடியுங்கள் என்றார் முதல்வர் விரட்டுகிறார்கள் மக்கள் - யாரை? தமிழர் தலைவர் தரும் சுவையான தகவல்

கூட்டம் நடக்கும் இந்தப்பகுதி பெரிய அக்ரஹாரம். நமக்கு நெருக்கமான, உறவுக்காரர்களின் பகுதி. நமக்கெல்லாம் தெளிவாக தெரியும். இன்றைக்கு அது புதியதல்ல. அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே. எங்களுடைய உறவுக்காரர்கள், இங்கே இருக்கிறார்கள் உறவை விட மேலானவர்களாக இருப்பார்கள்.
விரட்டியடியுங்கள் விரட்டியடியுங்கள்

ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அன்பாக அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளை யாக கருதுகிறார்கள்.

அங்கே! அஇஅதிமுக-வில் பார்த்தீர்கள் என்றால், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கப் போகும்போது எம்.பி.யாக இருக்கிறார்கள் ஆனால் அந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த அம்மையார் சொன்னதை மக்கள் கேட்கிறார்கள்.

அம்மையார் விரட்டியடிங்க! விரட்டியடிங்க என்று சொன்னார். யாரை விரட்டியடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். ஆகவே தான் மக்கள் (அதிமுக காரர்களை) விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துணைத் தேர்தல் அறிக்கையாம்

ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வரியாவது இடம் பெற்றுள்ளதா?

இங்கு (தமிழ்நாட்டில்) மோடி வலையில் சிக்கிய மீன்களாக, தோழர்கள் இருக்கிறார்கள். தனி ஈழம் தமிழ் ஈழம் பற்றி பிஜேபி அறிக்கையில் வரவில்லையே! அவர்கள் கேட்டதுண்டா? ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றி ஒரு வரியாவது இருக்கிறதா பிஜேபி தேர்தல் அறிக்கையிலே?

மத்திய பிரதேசத்தில் இராஜபக்சேவை வரவேற்றது யார்? பி.ஜே.பி.யில் ஒருவர் தான் வரவேற்றார்.

தேர்தல் அறிக்கையிலே மீனவர் பிரச்சினை இடம் பெறவில்லையே! என்று கேட்டால் தனி ஈழம் பற்றி ஒரு வரிகூட இல்லையே! என்றால் அதற்கு துணை தேர்தல் அறிக்கையில் வரும் என்கிறார் நம்ம ஊர் இல.கணேசன்

தேர்தல் அறிக்கையிலே (யாராவது) துணை தேர்தல் அறிக்கை கொடுத்தது உண்டா?

என்னய்யா குழந்தை பிறந்ததே இன்னும்சத்தம் போடாமல் இருக்கே. உயிர் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் இல்லைங்க இன்னொன்று வரும் அது சத்தம் போடும் என்றால் என்ன அர்த்தம்?

எங்கே அமைதி! எங்கே அமைதி?

அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 3 ஆண்டுகளில் 5,632 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் (தமிழ்நாடு காவல்துறை அறிக்கைப்படி). மதுரையிலே பிரபலமான கொலை - கண்டுபிடிக்க முடிந்ததா? திருச்சியில் பிரபல மானவர் கொலை செய்யப்பட்டார். கண்டுபிடிக்கப் பட்டதா? (மூன்றரை ஆண்டுகள் ஆகிறதே) நம்முடைய காவல்துறைக்கு என்ன பெயர் ஸ்காட்லாந்தை மிஞ்சக்கூடியவர்கள் என்று பெயர் உண்டே! ஏன்? அவர்களால் முடியவில்லையே என்ன காரணம்? எங்கே அமைதி! அம்மையார் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

- ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் தமிழர் தலைவர் 10.4.2014

Read more: http://viduthalai.in/page-4/78550.html#ixzz2yiuRL7R6

தமிழ் ஓவியா said...


மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது! - கி.வீரமணி


தி இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது!

சென்னை, ஏப்.12- மதச் சார்பற்ற அணிக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்புள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தி இந்து (தமிழ்) நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக-வுக்கு ஆதரவாக நீங்கள் மேற் கொண் டிருக்கும் பிரச்சாரத்துக்கு மக்கள் மன்றத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?

மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

ராமர் கோயில் கட்டுவோம் என்பது உள்ளிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உங்கள் கருத்து?

பாஜக-வை ஆர். எஸ்.எஸ். தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது. இந்தத் தேர்தலில் யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்தது கூட ஆர்.எஸ்.எஸ்.தான். இதற்கெல்லாம் உதாரணம்தான் பாஜக தந்திருக்கும் தேர்தல் அறிக்கை . ராமர் கோயில் கட்டுதல், காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம், பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போன்ற அஜென் டாக்கள் (செயல் திட்டங்கள்) இதுநாள் வரையில் மறைமுகமாக வைக்கப்பட் டிருந்தன. இப்போது தேர்தல் அறிக்கை யாக வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழகத்தை எந்தளவுக்கு முன்னேற்றும். இதனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன பயன்?

தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பாஜக தேர்தல் அறிக் கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. மாறாக, சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித் திருக்கிறார்கள். இவை எல்லாமே தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண் டுள்ள திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

காங்கிரஸும் பாஜக-வும் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து வருகிறது என்றால் மூன்றாவது அணிக்கு உங்களது ஆதரவு உண்டா?

மூன்றாவது மாற்று அணி என்பது ஏற்கெனவே கருச்சிதைவு அடைந்த ஒன்று. இந்த முறை மூன்றாவது மாற்று அணி என்ற கரு கூட உருவாகவில்லை. மாற்று அணி உருவாகும்போது அப்போது ஆதரவு குறித்துத் தெரிவிக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்து மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்தால் திமுக அதற்கு ஆதரவளிக்குமா?

நூறு சதவீதம் அதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுக தலைவர் கலைஞர் மதச்சார்பற்ற அணி ஆட்சியமைக்க மட்டுமே திமுக ஆதரவளிக்கும் என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். எனவே அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.

அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின் றீர்கள். அவருக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

ஆ.ராசாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

திமுக-வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து கட்சிக்குள் குழப்பம் விளைவித்து வருகிறார். அவர் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் விட்டதை கலைஞர் செய்த தவறாகக் கருது கிறீர்களா?

அழகிரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் திமுக-தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்த திமுக, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியதை நியாயப்படுத்துகிறீர்களா?

ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் திமுக-வின் நியாயத்தை காங் கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அமைச்சர வையிலிருந்து திமுக வெளியேறியது. என்றாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து அந்த பழி தங்கள் மீது வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளித்து வந்தது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78560.html#ixzz2yiuhtpui

தமிழ் ஓவியா said...


திருமணத் தகவல்: முந்தைய தேர்தல்களில் மோடி மறைத்துவிட்டார் தேர்தல் ஆணையத்தில் கபில்சிபல் புகார்

புதுடில்லி, ஏப்.12-நாடாளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங் களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது திருமணம் ஆகிவிட் டதென்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந் தார்.

தற்போதைய நாடாளு மன்ற தேர்தலில், எந்த வொரு வேட்பாளரும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத் தில் எந்தவொரு தகவலை மறைத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடி வாளம் போட்டதால் மோடி இத்தகவலை இணைத்துள் ளதாக கூறப்பட்டது.

நரேந்திரமோடி, தனது திருமணம் குறித்து முதன் முதலாக தகவல் வெளி யிட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.

குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோது கூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். இதுபற்றி தற்போது கேள்வி எழுப்பி யுள்ள காங்கிரஸ் கட்சி, முந்தைய தேர்தல்களில் தனது திருமண தகவலை மோடி மறைத்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. தேர் தல் ஆணையத்திடம் புகார் அளித்த சட்ட அமைச்சர் கபில்சிபல், 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மோடி தனது திருமண தகவலை மறைத்துள்ள தாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78562.html#ixzz2yivKnYJm

தமிழ் ஓவியா said...


மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசிய மோடிக்கு கடும் கண்டனம்


சென்னை, ஏப். 12- மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சு மணன், செயலாளர் எஸ்.நம்பிராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளி களை அவமானப்படுத் தும் விதத்தில் ஜாம்செட்பூ ரில் பேசியுள்ளதற்கு எமது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம்.

நாட்டிற்கு ஒரு ஊன முற்ற செவிட்டு ஊமை அரசு தேவையில்லை என - மாற்றுத்திறனாளிகள் எதற்கும் லாயக்கில்லை என்ற தொனியில் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியை சக்கர நாற்காலி பயன்படுத்தும் நொண்டி என குறிப்பிட் டவர் என்பதால், மாற்றுத் திறனாளிகளை கொச் சைப்படுத்துவது இவ ருக்கு வாடிக்கையாகி வரு கிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாட்டில் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல உயர்ந்த பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வரும் சூழ லில், மோடிக்கு மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய புரிதலே இல்லை என்ப தாகவே நாங்கள் கருது கிறோம். மாற்றுத் திறனா ளிகள் எதற்கும் லாயக் கில்லை என்ற மன நிலை உள்ள ஒருவர் பிரதமரா னால் மாற்றுத்திறனாளி களின் நிலைமை என்ன வாகும்? என்பதே மாற்றுத் திறனாளிகளின் தற்போ தைய கேள்வி.
போராட்டம்

மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத் தில் பேசியுள்ள மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் இதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடு வதைத் தவிர்க்க முடி யாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78561.html#ixzz2yivU7Ozf

தமிழ் ஓவியா said...


இழிநிலை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78565.html#ixzz2yiwGHQls

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளேயாவர்

டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த சாரதாபில் என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்குச் சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும்.

சீர்திருத்த சம்பந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப்பட்டு வந்திருக் கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றத்தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அது பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படி மதிக்க முடியும்?

இந்தச் சர்க்கார் இந்நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்நாட்டில் உள்ள பார்ப்பனியக் கொடுமையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமே யொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாது நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.

எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனியக் கொடுமைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் கல்யாண மசோதா விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர் களுடன் சேர்ந்து கொண்டதற்குக் காரணம் சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியது தானாம்.

இது யோக்கியமான சமாதானமல்லவென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சம்மதவயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண் ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது.

கலவி என்பது ஒரு உணர்ச்சி கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி. பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் உண்டாகலாம்.

அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவேகூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரண மான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயம் சட்டத்தையோ சிக்கலாகுமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?

கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?

ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரை கட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக் கியதனத்தைக் காட்டுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை அதே காரியத்திற்கு அரசாங் கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள் பங்காளிகள் என் பதையே காட்டுகின்றது.

எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாட்சியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.

குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/78594.html#ixzz2yix0ad1d

தமிழ் ஓவியா said...


சென்னையில் சைமன் கமிஷனுக்கு ஆடம்பரமான வரவேற்பு - பகிஷ்காரம் புஸ்ஸ் என்று போய்விட்டது

ராயல் கமிஷனுக்குப் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18ஆம் தேதி காலை 6 மணிக்கு டிறா என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள்.

அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதிநிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும், கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும், மற்றும் சென்னைப் பிரமுகர்களும், தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார் சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும் மகமதிய சமூகப் பிரதிநிதிகளும் ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும்,

வர்த்தக சங்கப் பிரதிநிதி களும் மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும் பொது ஜனங்கள் சார்பாக அரசாங்கத்தில் மந்திரிகளாக நியமிக்கப்பட்ட மந்திரிமார்களும் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சகல திறப்பட்ட மக்களின் கூட்டமும் ஏராளமாக வந்திருந்து ஒவ்வொரு பிரதிநிதி தாபனங்களும் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து அநேக வகுப்பு மகாநாடுகளில் கமிஷனை வரவேற்கச் செய்த தீர்மானங்களையும் தெரியப்படுத்தி வரவேற்றார்கள்.

சைமன் துரையவர்களும், கமிஷன் சார்பாக இவ்வாடம்பரமானதும் பிரதிநிதித்துவ மானதுமான வரவேற்பை ஏற்று அதற்குத்தக்க பதிலளித்த தோடு, தங்களது நன்றியறிதலையும் தெரிவித்து அரசாங்க விருந்தினராய்ச் சிலரும் மந்திரிகள் விருந்தினராய் சிலரும் தனிப்பிரபுக்களின் விருந்தினர் களாகச் சிலரும் அவரவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவை தவிர மற்றும் அநேக பிரதிநிதித்துவ சபைகளினுடைய பத்திரங்களும் அழைப்புகளும் கமிஷனுக்கு ஏராளமாக இருந்தது.

என்றாலும் அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள கமிஷனர்களுக்குப் போதிய சாவகாசம் இல்லை என்பதை முன்னமேயே அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டதின் மீது பல ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.

எனவே, சென்னையில் தாங்கள் தான் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்றும் தங்கள் கருத்துத்தான் தேசமக்கள் கருத்தென்றும் தாங்களே தான் தேசத் தலைவர்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே விளம்பரம் செய்து கொண்டும் தங்களுக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் தலைவர் பட்டங்களை பரிமாறிக் கொண்டும் இருந்த - இருக்கின்ற - ஒரு சில ஆசாமிகள் கூடிக் கொண்டு சுமார் ஒரு வருஷ காலமாக பகிஷ்காரக் கூச்சல் போட்டும் எவ்வளவோ சூழ்ச்சிகளும் விஷமப் பிரச்சாரங்களும் செய்தும் கடைசியாக சைமன் பகிஷ்காரம் புஸென்று காலி வேட்டாய் போய் விட்டதுடன் சைமன் கமிஷன் வரப் போவதில்லை என்று தெரிந்த ஒரு தெருவில் நின்று தங்கள் செலவில் போட்டோ படம் பிடித்து தங்கள் தங்கள் பத்திரிகையில் போட்டுக் கொண்டதோடு பகிஷ்காரம் முடிவு பெற்றுவிட்டதென்றே சொல்லுவோம்.

ஒரு சமயம் பகிஷ்காரக் கூச்சல்காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லவருவார்களானால் அவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பகிஷ்காரக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களில் அதாவது, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஷாபிமுகமது, குழந்தை, வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரம், இரத்தினசபாபதி, அமீத்கான், ஜெயவேலு முதலிய கூட்டத்தார்களை விட எந்தவிதத்திலாவது அதாவது, தேசியப் பொறுப்பிலோ ஒழுக்கத்திலோ, தியாகத்திலோ, செல்வத்திலோ குறைந்த யோக்கியதை உடையவர்கள் ஒருவராவது சைமன் கமிஷனை வரவேற்ற பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் இருந்தார்களா என்று கேட்கின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78591.html#ixzz2yixU8QTX

தமிழ் ஓவியா said...


திரு.ராஜகோபாலாச்சாரியின் பஞ்ச நிவாரணப் புரட்டு

சேலம் ஜில்லா திருச்செங்கோட்டுக்குப் பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியைவிட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபாரிசின் மீது வெளி இடங்களிலே யிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்.

இந்த சூழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள்.

இவர் சென்ற தேர்தலின் போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரச்சாரங்களும் அவற்றின் மூலம் திரு.சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர்களுக்கே ஓட்டு கொடுங்கள் என்று எழுதச் செய்த சூழ்ச்சியும் மக்கள் அறிந்ததேயாகும். ஆனால் அந்தத் தேர்தல் நடந்த பிறகு அச்சூழ்ச்சிகளால் ஓட்டுப்பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியாரோ அல்லது காங்கிரசுக்காரரோ அல்லது சுதந்திரக் கட்சியாரோ செய்த வேலை என்ன என்று கேட்கின்றோம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பெரிய பூசாரி ஆய்விடுவதைப் போல், திரு.காந்தியைக் கொண்டு பணம் வசூலிப்பதும், அப்பணத்தைக் கொண்டும் மாதம் 50, 100, 150, 200- என்பதாக பார்ப்பனர்களுக்குச் சம்பளம் கொடுத்து பல பார்ப்பனர்களை வளர்ப்பதும், பார்ப்பனரல்லாதாரில் ஏதாவது ஒன்று இரண்டு பேர்களை அதுவும் முட்டாள்களாகத் தேடிப்பிடித்து அவர்களை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் தான் சேர்த்துக் கொண்டிருப்பதாக பொது ஜனங்களை ஏமாற்றுவதும் ஆகிய இந்த பித்தலாட்ட காரியத்தினாலேயே பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய் ஏமாற்றலாம் என்று கருதி இருக்கின்றார்.

ஆதியில் இந்த ஆசிரமம் பெரிதும் பஞ்சமர்கள் என்பவர்களையே பிரதானமாகக் காட்டி ஏற்படுத்திய தாகும். அந்தப் பெயராலேயே பொதுஜனங் களிடையே! பணமும் வசூலிக்கப்பட்டது.

எனவே அப்பேர்ப்பட்ட ஒரு ஆசிர மத்தில் தீண்டாதார் என்பவர்கள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றார் என்பதும், பார்ப்பனரல்லாதாராரிடமிருந்தே கொடுக்கப்பட்ட பூமியால் பார்ப்ப னரல்லாதாரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் நடைபெறும் ஆசிரமமான புதுப்பாளையம் ஆசிரமமென்பதில் இப்போது இருக்கும் பார்ப்பனர் எண்ணிக்கை எவ்வளவு?

அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு? பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு? ஆகிய இவைகளைக் கவனித்தால் ஆசிரமப்புரட்டும் ஆச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டும் தீண்டாமை விலக்குப் புரட்டும் கதர்த் தொண்டு புரட்டும் தானாகவே ஒரு மூடனுக்குக் கூட விளங்கிவிடும் நிற்க.

இச்சூழ்ச்சிகள் நடக்கும் இவ்வாச்சிரமத்திற்காக திரு.காந்தியின் சிபாரிசை கேட்டுக் கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் சில பயித்தியக்காரர்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதைப் பற்றியோ அவைகளை பொது நலத்தின் பெயரால் சில பார்ப்பனர்களை தின்று கொழுக்கச் செய்யும் அக்கிரமங்களைப் பற்றியோ நமக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆனால் இந்தப் புரட்டுகளும் யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும் சமீபத்தில் வரப்போகும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிப்பதற்கு என்று செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அறியாமல் எங்கு பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்துபோய்ப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவார்களோ என்கின்ற விஷயத்தில் தான் நாம் கவலைப்படுவதோடு பொதுமக்களையும் உஷாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-7/78592.html#ixzz2yixd28TP

தமிழ் ஓவியா said...


யாகத்தில் கொலையுண்ட பசு ஸ்வர்க்கத்தை அடைகிறதாம்!


(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தி னின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர் கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லு கின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங் களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற் குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்த ரேய பஞ்சி 2 கா6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே. அஸ்நாரக்ஷ ஸம்ஸ்ருஜதாத் இத்யாஹ (ஜத... காண்டம் 7)

உதிரத்தை (இரத்தம்) ராட்சதருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லு கிறார். அதன்பின் வபாஹோமம் செய் யச் சொல் லுகிற மந்திரம்:-

தஸ்ய வபாமுத்கித்யாஹரந்தி தாமத் வர்யு: ஸ்ருவேணாபிதா ரயன்னாஹ
(ஜத... கண்டம் 12)

பொருள்: பசுவின் வபா என்னும் கொழுப்பை எடுத்த அத்வயு என்பவன் ஸ்ருவம் என்னும் பாத்திரத்தில் வைக் கின்றான்.

ஸர்வமாயுரேதிய ஏவம் வேத பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

வபாயாமா ஹுதாயாம் ஸ்வரக்கோ லோக: ப்ராக்யாயத. பொருள்: கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.


ஸோக்நேர் தேவயோன்யாம் ஆஹு திப்ய: ஸம்பூய ஹிரண்ய சரீர உனர்தவ: ஸ்வர்க்கம் லோகமேதி

பொருள்: அக்கினியில் தேவயோனியில் ஆஹுதி கொடுப்பதால் யாகம் செய்பவன் பொன்னாலாக்கப் பெற்ற சரீரத்தையுடை யவனாய் மேலே சுவர்க்க லோகத்தை அடையா நிற்பன்.

பசுவைக் கொலை செய்து அதன் சதையை முப்பத்தாறு பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந் தவன் சுவர்க்கத்தை அடைகின்றான். இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்று கீழ்க்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லோகானாப்னு வந்தி ப்ராணேஷு சைவதத் ஸ்வர்க்கேஷு ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)

Read more: http://viduthalai.in/page2/78575.html#ixzz2yiyZ0XDi

தமிழ் ஓவியா said...


புள்ளிகள் பேசுகின்றன


கடந்த 50 ஆண்டுகளில் பேச்சு வழக்கிலிருந்து காணாமற் போன மொழிகளின் எண்ணிக்கை 220.

சென்னைப் பெரு நகரில் மக்கள் தொகை 46.8 லட்சம் (2011 கணக்குப்படி) படித்தவர்கள் 90.3 சதவிகிதம்.

124 கோடி இந்திய மக்கள் தொகையில் ஏதோ ஒரு வகையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட் டோர் 10 சதவிகிதமாகும்.

நாள் ஒன்றுக்குச் சிறுநீரகப் பாதிப்பால் ரத்தச் சுத்திகரிப்பு (டயலி ஸிஸ்) செய்து கொண்டோர் எண் ணிக்கை 20 ஆயிரமாம்!

80 வயதுக்கு மேற்பட்ட வாக் காளர் தமிழ்நாட்டில் 9.27 லட்சம்.

உலக நாடுகளின் வரிசையில் குழந்தைகளுக்கான பசி குறியீட்டில் இந்தியாவுக்குள்ள இடம் 15.

இந்தியாவில் நபர் ஒருவருக்கும் தேவைப்படும் மின்சாரம் 800 யூனிட் டுகள் - மின்சார விளக்குகள் பயன்படுத்தும் மக்கள் 67 சதவிகிதம்.

16ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 3 லட்சம்.

உலகெங்கும் 2013இல் மேலும் 50 லட்சம் பேர் வேலையில்லாதார் கணக்கில் சேர்ந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page3/78582.html#ixzz2yizRVQVx

தமிழ் ஓவியா said...


எடை மேடை


அயோத்தி இருண்ட இரவு (பாபர் மசூதிக்கும் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு - எனும் நூல் (கிருஷ்ணாஜா மற்றும் திரேந்திர கே.ஜா) விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் 248 பக்கங் களைக் கொண்டது விலை ரூ.150/-

இந்தக் கால கட் டத்தில் தேவையான நூலில் முதற்பதிவு எனும் தலைப்பாக இதோ (பக்.29-30).

1949ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், 23ஆம் நாள், காலை 9 மணி. பாபர் மசூதியுள் இராமர் சிலை வைக்கப்பட்டுப் பல மணி நேரம் கடந்த பின்னர், உ.பி. மாநிலம். பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகர் காவல் நிலைய அதிகாரியான பண்டித் ராம்தேவ் துபே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (திமிஸி) பதிவு செய்தார். அதில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (வன்முறையாகக் கலகம் செய்தல்), 448 (அத்துமீறி நுழைதல்), 295 (இறைவழிபாட்டு இடத்தின் புனிதத்தைக் குலைத்தல்) ஆகியவற்றின்கீழ், அபிராம்தாஸ், ராம்சகல்தாஸ், சுதர்சன்தாஸ், மற்றும் பெயர் தெரியாத 50 - 60 பேர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அந்த முதல் தகவல் அறிக்கைப் பதிவு இவ்வாறிருந்தது.

காலை 7 மணி அளவில் நான் (ராம்தேவ்துபே) ஜன்மபூமி இடத்திற்குச் சென்றேன். அங்கு காவற்பணியிலிருந்த காவலர் மாதா பிரசாத் (எண்- 7, அயோத்தி காவல் நிலையம்) வழியாக நான் தெரிந்து கொண்டதாவது: பாபர் மசூதியின் சுற்றுச்சுவர் வாயில் பூட்டை உடைத்தும், சுவரிலும் படிக்கட்டிலும் தொத்தித் தவழ்ந்து ஏறியும் உள்ளே நுழைந்த 50-60 நபர்கள் ஸ்ரீபகவானின் சிலையை அங்கு நட்டு வைத்ததோடு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் சீதா, இராமர் படங்களைக் கோடுகளாக எழுதினர். அந்த 50-60 நபர்களும் அதைச் செய்தபோது அங்கு காவற்பணியிலிருந்த ஹன்ஸ்ராஜ் (காவலர் எண்- 70) அவர்களைத் தடுத்தார். ஆயினும் அவர்கள் காவலரைப் பொருட்படுத்தவில்லை. அங்கு பாதுகாப்புப் பணி செய்த மாநில ஆயுதப் படையினர் அழைக்கப்பட்டனர். அதற்குள்ளாகக் கும்பல் மசூதிக்குள் நுழைந்து விட்டிருந்தது.

அவ்விடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட மூத்த அதிகாரிகள் செயலில் இறங்கினர். சில மணி நேரம் கடந்த பின்னர் 5000 - 6000 பேர் அங்கு கூடினர். மசூதிக்குள் நுழைய முயற்சி செய்த அவர்கள் மதமுழக்கங்களை எழுப்பியவாறும், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் இருந்தனர். வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதனால் இசை கேடாக எதுவும் நிகழவில்லை. குற்றம் இழைத்தவர்களான (அபி) ராம்தாஸ், (ராம்) சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் பெயர் தெரியா 50 - 60 நபர்கள் அத்துமீறி வன்முறையாக மசூதிக்குள் நுழைந்து சிலையை நட்டு வைத்ததோடு, மசூதியின் புனிதத்தையும் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். பணியில் இருந்த அலுவலர்களும், பொது மக்கள் பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். எனவே நிகழ்வு நன்றாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வுமெய் யெனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/78585.html#ixzz2yizkzrHs

தமிழ் ஓவியா said...


ராமன் பிறந்த நாளை கண்டுபிடிச்சிட்டாங்கோ!


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் என்ற தலைப்பில் சென்னை தியாகராயர் தக்கர்பாபா பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சி ( 05-04-2014) சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே என்பதை அறிவியல்? பூர்வமான(?) ஆதாரங்களுடன் அடித்துக் கூறினார் முனைவர் ஹரி. அதைப்புரிந்து கொள்ள நமக்கு எத்தனை கேலரி உணவு தேவை என்பதை நமது மூளை படும் பாட்டை அறிந்து கொண்ட பிறகு புரியும். அவர் அடித்துக்கூறுவது இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்! (5114 + 2014 = 7128). அதை விட பெரிய அணுகுண்டு செய்தி என்னவென்றால் இதை நிரூபிக்க சாப்ட்வேர், ஹார்டுவேர் வெட்டிவேர் மற்றும் சல்லிவேர் எல்லாம் பயன்படுத்தி ஆராய்ந்தார்களாம். அதன் முடிவு வியப்பில் ஆழ்த்தியதாம் அதாவது

* நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது, கி.மு. 5077 அக்டோபர் 7 ஆம் தேதி.

* வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076 ஏப்ரல் 03ஆம் தேதி.

* ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி: கி.மு. 5076 செப்டம்பர் 12.

* சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (கிஷ்கிந்தா) புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.

* அது ராவணன் கோட்டையை அடைந்தது: கி.மு. 5076 அக்டோபர் 12.

நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன் உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற் காகக் கட்டப்பட்ட பாலம் (ராமசேது) எத்தகைய தொழில்நுட்பத்துடன் வடிவ மைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாம். இறுதியில் கலைஞரின் கேள்விக்கு விடை யும் கிடைத்துவிட்டது. அதாவது சேதுபால தொழில் நுட்பம். எல்லாம் சரிங்கோ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அந்த காலகட்டத்தில் நதிக் கரை நாகரிகம் மாத்திரமே இருந்ததாக கூறியுள்ளார்களே. இன்றும் பல்கலைகழக வரலாற்றுப்பேராசிரியர் அதைத்தானே கூறி பாடம் எடுக்கிறார்கள், முனைவர் ஹரி அவர்கள் எழுதிய ஹிஸ்டோரிகல் ராமா உண்மை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு? இதையெல்லாம் சேர்த்து விடுவார்களா?

அங்கு வந்த என்னைப்போன்ற சாமானியனும் இந்துமத்தில் பற்றுள்ள பெரியவாள்களும் இதை நம்பி கொஞ்சம் அல்ல அதிகமாகவே புகழ்ந்துவிட்டு இலவசமாக இரண்டு புத்தகங்களை அவர் கையெழுத்துடன் வாங்கிக்கொண்டு செல்லலாம். ஆனால் இந்துமத சாஸ்திரங்கள் படி நடப்பவர்கள் இதை நம்புவார்களா?, பகுத்தறிவுவாதிகள் சண்டைக்கு வருவது இருக்கட்டும்; வடக்கில் இருந்து லட்சு மண் சேனாவினர் வந்து வம்பு செய்யப் போகிறார்கள், ஏன் தெரியுமா சுமார் 30,00,000 அதாவது முப்பது லட்சம் வயதை கொண்டு ஒரு அவதார புருடரான இராமனுக்கு (இராமனே புரூடா தானே) வெறும் 7128 வயது என்று கூறுகிறாயே - உனக்கு எந்த அமெரிக்க அமைப்பு இராமர் பெயரை பாழ்படுத்த பணம் (திஸீபீ) கொடுத்தது என்று கேட்க மாட் டார்களா?

சாஸ்திரங்களில் கூறப்படுவது திரேதா யுகத்தில் இராம அவதாரம் நடந்தது. அதாவது 12,66,000(பனிரெண்டு லட்சத்து அறுபத்து ஆறாயிரம்) இது மாத்திரமா அதன் பிறகு கிருதா யுகம் அங்கு தான் கிருட்டிணர் பிறந்தார் அந்த யுகம் 17,28,000 (பதினேழு லட்சத்து இருபத்தெட்டாறா யிம்) ஆண்டுகள். இவை யிரண்டும் முடிந்த பிறகு கலியுகம் பிறக்கிறது. அதாவது கிமு 3102. இதெல்லாம் இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேண்டு மென்றால் மாம்பலம் ரயில் நிலையத் திற்கு அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று விளக்கம் கேளுங்கள் இல்லையென்றால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இராமகிருஷ்ணா புத்தக மய்யத்தில் சென்று கேளுங்கள்! உண்மையில் இராமனின் வயது 29,94,000 இதுதான் இந்துமத சாஸ்திரங் களின் படி கணக்கு எல்லாம் போட்டு அது வும் டிஜிடல் கால்குலேட்டர் ஒரு புள்ளி கூட தப்பாக கூறாது என்பதை கவனிக்க. அதுசரி ராமன் பாலம் கட்டியது 17 லட்சத்தை 25 ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாக சங்பரிவார் வகையறாக்கள் சொன்னதெல்லாம் டூப் - அசல் டூப்பு தானா!

என்னவோ போங்க கையில் காசும், எழுத்துத் திறமையும் இருந்தால் நேற்று கூட ராமர் எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு போனார் என்று பொஸ்தகம் போடலாம். கேட்டால் சாட்டிலைட் மற்றும் கூகிள் மேப் டைம்லைன் பிறகு வாட்ஸ் அப், மற்றும் ஸ்கைப் போன்ற இணையதள நேரடி ஒளிபரப்பு மூலம் ஆதாரம் வைக்கலாம். டிஜிடல் பொஸ்தகம் வைக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஹரி என் மனைவி வந்திருந்தால் இதைவிட அதிகம் தகவல் கூறியிருப்பார் என அடிக்கடி கூறினார். இதிலிருந்து என்ன தெரிகிறது.


எல்லாவற்றையும் விட தமிழ் பாரம் பரிய அறக்கட்டளை என்ற அமைப்பின் பணி தான் என்ன?

- சரா

Read more: http://viduthalai.in/page5/78588.html#ixzz2yj0Adc2j

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் வங்கி

சென்னையில் விரைவில் இரண்டாம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட உள்ளது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் சுகாதார பயிற்சி நிறுவனத்தில் (மிஸீவீமீ ஷீயீ சிலீவீறீபீ பிமீணீறீலீ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. தற்போது, தனியார் மருத்துவமனையாகிய விஜயா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இந்த வார இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

பிறக்கும் குழந்தைக்கு புகட்டப்பட வேண்டிய தாய்ப்பால் மிகச் சிறப்பான உணவாகும். பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. தாய்க்கு பல காரணங்களால் பால்சுரக்காமல் உள்ளது. குறிப்பாக குறைப்பிரசவம், ஆரோக்கி யமில்லாத குழந்தைகளால் தாய்ப்பாலை அருந்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இதுபோன்ற தானே அருந்த முடியாத குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை வற் புறுத்தி அளிக்க மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது என்று விஜயா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் பொறுப்பாளராகிய அனில் குமார் கூறினார். தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் கொடையாக வங்கியில் அளிக்கலாம். அப்படிக் கொடுக்கப்படும் தாய்ப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வில் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிரிகளைக் களைவதற்கு சூடு படுத்தப்பட்டு, வங்கியில் பாதுகாக்கப் படும். ஆறு மாதங்கள் வரை வங்கியில் பாதுகாக்கப்படுகிறது என்று மருத்துவர் குமார் தாய்ப்பால் வங்கியின் பயன்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கொல்கத்தா, குஜராத், உதய்ப்பூர் மற்றும் பூனா ஆகிய நகரங் களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதற்கு முன்ன தாகவே தாய்ப்பால் வங்கிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, செயல்படுத்த முடி யாமல் இருந்தது.

இதுதான் முதல் தனியார் மருத்துவ மனையில் தொடங் கப்பட்டுள்ள தாய்ப் பால் வங்கியாகும். குறைப் பிரச வத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (மிசிஹி) உள்ள குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியிலிருந்து அளிக்கப்படும்.
முறைப்படி தாய்ப்பாலை கொடை யாக அளிக்க விருப்பம் தெரிவிப்பவர் களின் தாய்ப்பால் மாதிரி எடுக்கப்பட்டு கிருமித்தொற்று, நுண்ணுயிரிகள் உள் ளனவா என்று ஆய்வு செய்யப்படும். கூடுதலாக சுரக்கும் தாய்ப்பாலை சேக ரித்து வைப்பதற்கு, தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தாய்ப்பாலைப் பெறுவதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் தாய்ப் பாலை அளிப்பதற்கும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறோம். தாய்ப்பாலை அளிக் கும் தாய்மார்கள் பட்டியலை பதிவு செய்கிறோம். தகுந்த விலையுடன் தாய்ப் பாலை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று மருத்துவர் குமார் கூறினார். எழும்பூர் குழந்தைகள் சுகாதாரப் பயிற்சி நிறுவனத்தின் பிறக்கும் குழந்தை களுக்கான பிரிவான நியூனாடாலஜி தலைவரும், பேராசிரியருமாகிய ஜெ.குமுதா கூறும்போது, எழும்பூரில் உள்ள தாய்ப்பால் வங்கி நன்றாக செயல்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை 800மிலியிலிருந்து ஒரு லிட்டர்வரை கொடையாகப் பெறுகி றோம். தீவிரசிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களிட மிருந்து தாய்ப்பாலைப் பெற்றுக் கொள்கிறோம் என்றார். மேலும் அவர் கூறும்போது, பாலின் பாதுகாப்பு பலமுறை செய்யப்படும் ஆய்வின்மூலம் உறுதி செய்யப்படுகிறது. குறைப்பிரசவத் தில் பிறக்கும் 1.00 கி.கி, 1.20 கி.கி. அளவில் எடை குறைந்த குழந்தைகளுக்கும், போதுமான அளவு பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page5/78590.html#ixzz2yj0J8xZz

தமிழ் ஓவியா said...


வேலை தேடி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!


விப்புல் பாண்டியா (பொதுச் செயலாளர், பங்கத்தன் மஸ்தூர் சங்கம், அகமதாபாத்); குஜராத்தில் வேலை இல்லாத் திண்டாட்டமே இல்லை என்பதுபோல சித்திரிக்கவே அரசு முனைகிறது. அதனால், வேலை இல்லாமல் இருப்பவர் களை எல்லாம் வெளி மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்தவர்களாக அது சித்திரிக்க முயல்கிறது.

வெளிமாநிலத்தில் இருந்து மட் டுமல்ல, வளர்ச்சி காணாத பகுதி களில் இருந்து அதிக வளர்ச்சி கண்டுவரும் சூரத், அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா போன்ற நகரங்களுக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான பலர் வேலை தேடி குடி பெயர்ந்து வருகிறார்கள்.

விவசாய நிலங்களை எல்லாம் அரசு தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டதால்...

நிலச்சுவான்தார்களுக்கு வேண்டு மானால் பணம் கிடைத்திருக்கலாம். விவசாயக் கூலிகள்எங்கே வேலைக் குப் போவார்கள்? ஆனால், அரசு அவர்களை கண்டு கொள்வதே இல்லை. நகர்ப்புறங்களில் ஆபத் தான கட்டுமான வேலைகளில் வேலை செய்பவர் களுக்குப் பணி பாதுகாப்பு இல்லை.

ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு தலைக் கவசம், ஷூ ஆகியவைகூட இந்த மாநிலத்தில் பல இடங்களில் வழங்கப்படுவது இல்லை. அதனால், கட்டட சாரம் சரிந்து தொழிலாளர் பலி, உயரத்தில் இருந்து கால் தவறி விழுந்து இருவர் பலி என்று தினம் தினம் இங்கே செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. அமைப்புசாரா தொழி லாளியைப் பொறுத்த மட்டில், அவன்தான் அவனது குடும்பத்துக்கு ஆதாரம்.

அவன் இப்படி திடீர் என்று இறந்துவிட்டால் அவனது குடும்பம் என்னாகும்? ஒரு தொழிலாளி உயிருடன் இருக்கும்போதே அவனது குழந் தைகள் படிக்க இங்கே வழியில்லை. இந்த நிலையில் அவன் இறந்து விட்டால், அவனது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்? இது போன்ற செலவுகளுக்காக தொழி லாளர் நலநிதி வரி என்ற பெயரில் அரசிடம் 500 கோடி ரூபாய் இருந்தும் அதில் இருந்துஒரு சதவிகிதத்தைக் கூட இந்த அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ கொடுப்பது இல்லை. இந்தப் பணம் முழுவதையும் அது செலவு செய்யம லேயேதான் வைத்திருக்கிறது. தொழிற்சங்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் இங்கு நசுக்கப்பட்டு வெகு காலம் ஆகி விட்டது.

- ஜூனியர் விகடன் 6.4.2014

Read more: http://viduthalai.in/page7/78598.html#ixzz2yj0V9O9Z