Search This Blog

7.4.14

சமூக சீர்திருத்தமும் சமயக் கொள்கைகளும் - பெரியார்

சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு

தலைவர் அவர்களே! இளைஞர்களே ! சகோதரர்களே! 2 மணி நேரத் திற்கு முன் தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப்பற்றிய என்னுடைய பழய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாண வர்களும், இளைஞர்களுமாயிருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரி வித்துக் கொள்ளுகிறேன்.

நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம்? என்பதும் சமயக்கொள்கை என்றால் எந்த சமயம்? என்பதும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு அவசியமாகும். நான் இப்போது பொதுவாக மனித சமூகம் என்பதையும், பொதுவாக மனித சமூகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளு கிறேன். பிறகு அவசியமிருந்தால் தனிச்சமூகம், தனிச்சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன். பொதுவாக சமயங்கள் - மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொண் டாலும் அவை மனிதசமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்ட வையாகும்.

மனிதவாழ்க்கைக்கேற்ற திட்டங்களேதான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவதுமாகும்.

ஒரு வாசகசாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ண யித்துக்கொள்வது போலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும் தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர் களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும். இதுவும் அந்தந்த காலதேசவர்த்த மானத்திற்கும் மக்கள் அறிவு நிலைமைக்கும் வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப் படுவதே யாகும். ஆனால் அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமை களைக்கூட சரிவர உணர்ந்து நடந்து கொள்ளமுடியாத அறிவு - இல்லாத காலத்தில் மக்களை பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக்கருதி ஏற்படுத்திய கொள்கைகளும் சேர்ந்ததாகும். 


அதாவது எப்படி ஒரு குழந்தையானது தன்னைக்காப்பாற்றிக்கொள்ளக் கூடிய சக்தி இல்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக் குழந்தை வெளியில்போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப்படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒருவித பயம் உண்டா கும் படியான பூச்சாண்டிபிடித்துக்கொள்வான் என்றும், பேய் பூதம் பிடித்துக் கொள்ளும் என்றும் துண்டுத்தடிக்காரன் பிடித்துக்கொண்டுபோய் அடைத்து விடுவான் என்றும் இன்னும் பலவகையாய்ச் சொல்லுவதோடு கையையும், முகத் தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாத படி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுகமுடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப் போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம் மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும் மதக்கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள். அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும் தான் இன்றைய மோக்ஷம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில்போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம் இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவைகளுமாகும். அதுமாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளை யெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டுமானபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்ப மாட்டார்களென்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும் அறிவுக்குப் பொருந்தாததுவுமாய் இருப்பதால்) அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார், பகவான் சொன்னார், ரிஷி சொன்னார், முனிவர் சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோக்ஷம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்க வேண்டும் என்று சொல்லி நம்பச்செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக் குள் புகுத்தி இருக் கிறார்கள்.

 இவற்றை யெல்லாம் உண்மை என்று நம்பின பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முறட்டுப் பிடிவாதம் குரங்குப்பிடியாய் பிடித்து, சிறிதுகூட காலத்திற்கும் அறிவின் நிலைமைக்கும் யேற்றமாதிரி திருத்துவதற்கு விடாமல் முட்டுக் கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்ற படியும் பல பல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருத்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருதவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று. ஆகவே இன்றையத் தினமும் மக்கள் எந்த சமயமானாலும் இந்தத் தத்துவத் தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேச வர்த்தமானத் திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌக ரியமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமாயினும் சமய மாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலகவாழ்க்கை நலத் திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும் அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்கு கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும் அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமை என்றும் அது எப்படிப்பட்டதானாவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாயிருந்தாலு மதை அழித்துத்தீர வேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொ ருவருடையவும் முக்கியமான கடமையாகும்.

ஆகவே அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக்கொள் கைகளாகும். இனி இந்திய சமூகத்தையும் இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக்கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமூகம் பெரிதும் சமயத்தைக்காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிறிப்புக்கு இடமான விஷயமென்ன வென்றால் மனித சமூக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளை யெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறைவேற்ற வென்று பொய்யாக வும் கற்பனையாகவும் பயத்திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாயிருக்கின்றது. காரணம் என்னவென்றால் மனிதனை அறிவு பெருவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமூகம் இன்றும் சுயஅறிவு அற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது? என்பவைகளை கவனிக்காமல் கீழ் நிலை யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்தமடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. 

உதாரணம் வேண்டுமானால் பாருங்கள். எல்லா சமயக்காரர்களின் மனோ பாவமும் குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாக இருப்பதை காண்கின்றோம். ஆனால் ஆண் களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயத்தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இவன் இஸ்லா மானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன் இந்து, இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங் களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே ஒழிய கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும் மக்கள் வேஷத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கொள்கைகளை அடியோடு நழுவ விட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக்கொடுத்து அதை கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள் பின்பற்றுகிறார்களா இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை வற்புருத்தாததே யாகும். எந்த சமயத்திற்கும் இந்தமாதிரி வேஷந்தான் பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான் எந்த சமயமக்களிடமும் சமயஉண்மைகொள்கைகளைப் பார்க்கமுடியாமல் போனதோடு சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னாலும், லக்ஷியம் செய்யாமல் போய்விடவேண்டியாகிவிட்டது.

அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷ­ மாத்திரத்திலேயே சமயப்பிரதானம் கிடைத்துவிடுகின்றதாலும் உண்மை யான அதாவது மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக, பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோக்ஷம், கடவுள், அருள், அடுத்த ஜன்மத்தில் மேன்மையான பதவி ஆகியவைகள் என்பவைகள் எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே கிடைத்து விடுவதாய் அவர் களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெரும் வேஷத்தைப் போடுகின்றதாலேயே மோக்ஷமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான சமயக்கொள்கையை அலக்ஷியப்படுத்தி விடுகிறார்கள்.

ஆகையால் இன்றையதினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டு மானால் அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளை யெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோக்ஷம் நரகம் தலைவிதி கடவுளின் பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜா வாய் பிறக்கலாம் என்பவைகளையும் சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும். அப்படிக்கில்லாதபக்ஷம் எப்படிப்பட்ட நல்ல கொள்கையுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக் காது. மேலும் கொள்கையையும் அறிவையும் பிரத்தியக்ஷ அனுபவத்தையும் பொருத்திவிடவேண்டும். அதைக்கொண்டு அவரவர்களையே நடந்து கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெரும் பாட்டிக் கதைச் சமயங்கள் இன்றைய சமூக முன்னேற்றத்திற்கு பயன்படவே படாது என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.

உதாரணமாக முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக் கல்வி அறிவு சௌகரியமில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர் பிரயாணம் போய் விட்டுமென்று கருதி அந்த ஊருக்கு போனால் புண்ணியம், இந்த சாமியை தரிசித்தால் மோக்ஷம், இந்த தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய் பிறப்பான் என்றெல்லாம் சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக் கதைகள் எழுதி வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும் உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை ஆகியவைகள் மீது சவாரிசெய்து அவற் றிற்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்கட்டுமென்று கருதி காலால் நடந்து போனால் அதிக மோக்ஷம் அவசியம் கிடைக்கு மென்றும் எழுதி வைத் திருந்தால் இன்று வர்த்தமானப் பத்திரிகை ரயில் , மோட்டார், ஆகாயக் கப்பல் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டு மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போகவேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவே தான் அனேக விஷயங்களை சமயத்தின்பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி மூடர்களாக வும், தரித்திரர்களாகவுமாகி அடிமைகளாய் கஷ்டப்படுகின்றார்கள். இக் கஷ்டத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தை தைரியமாய் எடுத்து ஓத வேண்டும். அதன் போலித் தத்துவங்களை தைரியமாய் அழிக்க வேண்டும். அதோடுபோலி கற்பனை நிபந்தனைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண்ணியம், மோக்ஷம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற் றையும் அடியோடு ஒழித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ சுதந்திரமோ, திருப்தியோ, மோக்ஷமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்த உபத்திரவங்களும் மடத்தனங்களும் இன்று உலகத்தில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்றது என்று ஒருசமயம் சொல்லலாம். ஆனாலும் இந்து சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர் களிடமுமே அதிகமாக மிக்க கெடுதி தரும்படியாக-சிறிதுகூட முன்னேற்ற மடைய முடியாதபடியாக - சீர்திருத்தம் செய்ய சற்றும் ஒறுப்படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடை களை அழித்து முன்னேற்றமும், விடுதலையும் அடைந்து வருகின்றார் கள். ஆதலால் வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமூகம் முன்னேரும் படியும் சமயக் கொள்கைகள் அதற்கு பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.

          ---------------------------சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ‘சமூக சீர்திருத்தமும் சமயக் கொள்கைகளும்’ என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. ” குடி அரசு” - சொற்பொழிவு - 25.01.1931

19 comments:

Vignesh L'Narayan said...

அருமையான பதிவு. ஆனால், பெரியாருக்கு முன்பே, சமூக சீர்திருத்தத்திற்க்காக துணிச்சலாய் போராடியவன், பாரதி. ஆனால் அவனுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு விட்டது. நான் பெரியாரை சிறுமை படுத்துவதாய் நினைக்க வேண்டாம். ஒரு வேளை பாரதியும் ஒரு இயக்கத்தை தொடங்கி, அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவித்திருந்தால், அவனுக்கும் "பத்ம்ஸ்ரீ","பத்மபூஷன்" கொடுத்து கவுரவித்திருக்கும் நம் ஓட்டு பொருக்கி அரசியல் கட்சிகள். பாவம் பிழைக்கத் தெரியாதவன் என் பாரதி.

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி


பூனைக்குட்டி வெளியில் வந்தது!

ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்

காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது

ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை

மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலை மறை காயாக இருந்தது அதிகாரப் பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.

மூன்று முக்கிய பிரச்சினைகள்

1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.

2. யூனிபார்ம் சிவில் கோட்.

3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்

பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.

சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தேவை புதிய சிந்தனை - பார்வை


தமிழ் ஓவியா said...

இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.

1992 டிசம்பர் 2002 பிப்ரவரி

1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.

பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?

தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

பூனைக் குட்டி வெளியில் வந்தது!

ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

ஒரு வகையில் நல்லதே!

ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!
கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!

வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


முகாம்: ஈரோடு

7.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78292.html#ixzz2yFi2l7de

தமிழ் ஓவியா said...


யார் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் வாழ்வில் செழிப்பு?மற்ற மற்ற மாநிலங்களில் தலை தூக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான மதவெறி ஆயுதங்கள் தமிழ்நாட்டில் பறிமுதலாகிவிட்டன. தந்தை பெரியாரும், திராவிட இயக்கமுமே இதற்கு அடிப் படையாகும்.

சிறுபான்மையினருக்கு- கிறித்த வர்க்கு, முசுலிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது நீதிக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்டது (1921 மற்றும் 1928 ஆண்டு களில்) அரசு ஆணை எண். 744, நாள் 13.9.1928)

பார்ப்பனர் அல்லாதார் 5

பார்ப்பனர் 2 முகமதியர் 2

ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் 2

தாழ்த்தப்பட்டவர் உள்பட பிறர் 1

மொத்தம் 12

1927 இல் மொத்தம் 12 இடங்களில் அதில் ஆறில் ஒரு பங்கு முஸ்லிம் களுக்கு ஒதுக்கப்பட்டது - நீதிக்கட்சி ஆதரவு அமைச்சரவையில்.

இடையில் - அது தடைப்பட்டுப் போனது. 2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி சிறுபான்மையினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக் கான அவசரச் சட்டம் - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பிறப்பிக்கப்பட்டது (15.9.2007).

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பெற்ற பலன் குறிப்பிடத்தக்கவையாகும்.

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக்கல்லூரிகளில் 2006-2007 இல் பெற்ற இடங்கள் வெறும் 46,

2007-2008 இல் பெற்ற இடங்கள் 57,

2008-2009 இல் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க. அரசு அளித்த நிலை யில் பெற்ற மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 80.

இட ஒதுக்கீடு காரணமாக முஸ்லிம் கள் மருத்துவக் கல்லூரியில் 74 சதவிகிதம் கூடுதல் இடங்கள் பெற்றுள்ளனர்.

அதேபோல, பொறியியல் கல்லூரி களில் இட ஒதுக்கீடு கிட்டாத 2007-2008 இல் பெற்ற இடங்கள் 2125.

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு 2008-2009 இல் கிடைத்த இடங்கள் 3288.

2009-2010 இல் முஸ்லிம்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 3655.
இது மட்டுமல்ல,

1973ஆம் ஆண்டிலேயே உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் முதல்வர் கலைஞரே!

சிறுபான்மையினர் நல ஆணையம் (13.2.1988), தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (1.7.1999) ஆகிய வற்றை ஏற்படுத்திய பெருமகனும் கலைஞர் அவர்களே!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மய்யம், சிறுபான்மை யினர் நலனுக்காகத் தனி இயக்குநரகம் (6.4.2007) ஆகியவை உண்டாக்கப்பட்ட தெல்லாம் எந்த ஆட்சியில்? தி.மு.க. ஆட்சியில்தானே. நன்றி மறவா சிறு பான்மை மக்கள் தி.மு.க.வின் பக்கமே உறுதியாக என்றும் இருப்பார்கள் என்ப திலும் அய்யம்தான் உண்டோ!

ஜனநாயக முற்போக்கு கூட்டணி யையே ஆதரிப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/78316.html#ixzz2yFicC1fk

தமிழ் ஓவியா said...


74 சதவீத கார்ப்பரேட்காரர்களின் பின்னணியில் மோடி!

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அது நாட்டிற்கு ஆபத்தாகும். கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு (மார்க்கெட்டிங்) கையாளும் உத்தியைப் போன்று தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன

- என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கோழிக்கோட்டில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்.

சொல்லுகிறாவர் காங்கிரஸ்காரராக இருக்கலாம்; ஆனால் அவரால் சொல்லப்பட்ட தகவல் மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மை.

எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கணக்கீட்டுப் (சர்வே) படி 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளலாம்.

ஏழை - எளிய மக்களைப்பற்றி மோடிக்குக் கவலையில்லை. பெரும் பணக்காரர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கட்சியாகும் அது.

பகுச்சராஜி பகுதியில் பணத் திமிங்கலங்களுக்கு நிலத்தைத் தூக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழை எளிய மக்களிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதே! அதற்காக மிகப் பெரிய எதிர்ப்பு இயக்கம் வெடித்துக் கிளம்பவில்லையா?

நானோ கார் உற்பத்திக்காக என்று சொல்லி டாட்டா நிறுவனத்துக்கு மோடி தூக்கிக் கொடுத்த நிலம் எவ்வளவு தெரியுமா? 1100 ஏக்கர்; அதன் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரம்; ஆனால் சதுர மீட்டர் ரூ.900 என்ற அளவில் தாரை வார்க்கப்பட்டது அதன் காரணமாக குஜராத் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.33 ஆயிரம் கோடி.

0.1 சதவிகித வட்டிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடனைத் திருப்பிக் கட்டலாம். விற்பனை வரியில்லை. தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகைகள்!

ஆன்லைனில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் பணிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் குஜராத் முதல் அமைச்சர் மோடி. டாட்டாவுக்கு ஒரு குறுஞ்செய்தி (ஷிவிஷி) அனுப்பி 2900 கோடி ரூபாயாக முதலீடுத் திட்டத்துக்கு ரூ.9570 கோடி ரூபாய் கடன்அளிக்கப்பட்டது. வெங்காய விவசாயிகளிடம் 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளார்.

ஒரு கொடுமை என்ன தெரியுமா? அதானி கும்பலுக்கு முந்தரா துறைமுகம் கட்டுவதற்காக 5.47 கோடி சதுர மீட்டர் நிலம் கொடுக்கப்பட்டது (2005-2007கால கட்டத்தில்) 2011 டிசம்பர் வரை இந்த நிலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவு 98.60 லட்சம் சதுர மீட்டர்; மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை என்ன செய்தது?

கொள்ளை அடிப்பதுதானே பண முதலைகளின் நோக்கம்? சதுர மீட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 32 காசுக்கு மோடி அரசிடமிருந்து பெற்ற நிலத்தை மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.733 என்ற விலையில் விற்றுக் கொள்ளை இலாபத்தைக் குவித்தனர்.

அதானி துறைமுகம் கட்டப்படுவதற்காக அளிக்கப்பட்ட அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? பெரும்பாலும் மீனவர்கள் குறுசிறு விவசாயிகளும்தான். தடை செய்யப்பட்டு இருந்த நிறுவனத்திடமிருந்து கால்நடைத் தீவனத்தை 5 கிலோவிற்கு ரூ.240 வீதம் வாங்கியது அரசு; ஆனால் அதன் சந்தை மதிப்பு என்னதெரியுமா? 5 கிலோ விலை ரூ.120 முதல் 140 வரை தான்; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின் கழகத் திட்டம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தவித ஏலமும் இல்லாமல் தாரை வார்த்ததால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ.20 ஆயிரம் கோடி!

விரிக்கின் வளர்ந்து கொண்டே போகும். இந்த நிலையில்தான் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாரும் இதே கருத்தினைக் கூறியுள்ளார் என்பதும் கருத்தூன்றத்தக்கதாகும்.

இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். குஜராத் மாநிலத்தில் சட்டப்படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படும் பொழுது 85 சதவீத தொழிலாளர் பணியாளர்கள் உள்ளூரிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும். இந்த முதலாளிகளுக்கு இதிலும் விதி விலக்கு அளித்த புண்ணியவான் தான் நரேந்திர மோடி!

பெரும் முதலாளிகளை மோடி ஊக்குவித்ததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் மூடப் பட்ட சிறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்; வேலை இழந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர்.

இவற்றின் காரணமாகத்தான் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மோடி ஆளும் குஜராத் இந்தியாவில் 12ஆவது இடத்தில் இருக்கிறது; கூறுவது நாம் அல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தலைமையிலான நிபுணர் குழு! பொய்ப் பிரச்சாரத்தால் அதிகாரத்தைக் கவ்விப் பிடித்து நாசப்படுத்தி விடலாம் என்று ஒரு கூட்டம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறது.

வாக்காளர்களே, உஷார்! உஷார்!!

Read more: http://viduthalai.in/page-2/78318.html#ixzz2yFj141YK

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/78317.html#ixzz2yFj9cQKm

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மே மாதம் துவங்குகிறது


இங்கிலாந்து டெய்லிமெயில் என்ற செய்தி நிறுவனம் சேகரித்த தகவலின் படி அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை தொடர்பில் விசா ரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக் குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவநீதம்பிள்ளை இந்த நிபுணர் குழு வினை நியமிக்க உள்ளார்.

காணொலி சாதனங்கள் வாயிலாக வடக்கில் உள்ள மக்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.

2002-ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள் ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

மன்னார் பேராயர் ஜோசப் உள்ளிட்ட 60 பேர் இலங்கை அரசுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நெருக்கடி

இதனிடையே சாட்சியாளர்களுக்கு அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக வடகிழக்கு மாவட்டத்திலிருந்து தகவல்கள் வருகிறது, முக்கியமாக சில பிரமுகர்களின் அலை பேசி ஒட்டுகேட்பது, வெளிநாட்டிலிருந்து அவர்களை காணவருபவர்களை தடுத்து வைப்பது, சர்வதேச அரங்கிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசும் இராணுவமும் மேற்கொண்டு வருகிறது. போர் விசாரணைக் ஆணைக் குழு வினர் படையினரையும் அரசியல்வாதி களையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப் படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட் டுள்ளது.

இலங்கையின் சூழ்ச்சி ஆரம்பம்

விசாரணைக்குழு வருவதை தடுக்க முடியாத பட்சத்தில் சர்வதேச நிலைகளில் ராஜதந்திர நடவடிக்கை எடுக்க புதிய தந்திரங்களை இலங்கை கையாள ஆரம்பித்து விட்டது, இதனில் முதல் படியாக வெளியுறவுத்துறையில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு சர்வதேச அமைப்புகளுடன் நல்லிணக்க மாக உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் பன்னாடுகளில் இலங்கைக்காக பணியாற்றும் தூதர்களும் அடங்குவர் இதன்படி இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி பிரசாத் காரியவசம், அமெரிக்க தூதராக நியமிக் கப்படவுள்ளார். முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஜெர்மனிக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

சரத் கோங்காங்கே தென்னாபிரிக்கா வுக்கான உயர் அதிகாரியாகவும் சுதர்சனன் செனவிரட்ன இந்தியாவுக்கான உயர் அதிகாரியாகவும் நியமிக்கப்படவுள் ளனர். இவர்கள் அனைவரும் பன்னாடு களில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் பாதகமாக அமை யாதவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நட்புறவு நாடுகளின் உதவி யையும் எதிர் நிலை நாடுகளை மடக்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விசா வழங்குவதா வேண்டாமா?
போர்க் குற்ற விசாரணைக் குழுவில் யார் யார் அமைந்துள்ளனர் என்று தெரிந்த பிறகு அவர்களின் பின்புலங் களை ஆய்வு செய்து அவர்களுக்கு விசா வழங்குவதா வேண்டாமா என முடிவு செய்யும் எண்ணம் இலங்கை வெளியுறவுத்துறையிடம் உள்ளது, இது குறித்து சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சமர சிங்கே கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நியமல் பெரேரா கூறியதாவது மனித உரிமைகள் குழு இலங்கை வருவது தொடர்பான எந்த ஒரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை, ஆகையால் அதுகுறித்து இப்போது கூற ஒன்று மில்லை, விசாரணைக் குழுக்களுக்கு இலங்கையில் அனுமதி வழங்குவதா வேண்டாமா என்று அரசுடன் கலந்தா லோசித்து தான் முடிவு செய்வோம். பன்னாட்டு விசாரணைக்குழு விவகா ரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் பணிந்து போகமாட்டோம் எங்களுக்கு நாட்டு நலன் தான் முக்கியமே தவிர உலக நாடுகளின் அழுத்தம் முக்கியமல்ல என்று பதிலளித்தார்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/78319.html#ixzz2yFjGkadX

தமிழ் ஓவியா said...


என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?

- குடந்தை கருணா

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், திமுக அணி யில் இணைந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என மத சார்பின்மைக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவரும் விரும்பினர்; எதிர்பார்த்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியுடன் கூட்டு இல்லை எனக் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அதே நிலை எடுக்க வேண் டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

தி இந்து ஆங்கில நாளிதழில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில், போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் எனக் கூறி உள்ளார். உண்மை தான். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தாண்டி, தமிழ் நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற் கும் இடையே தான் போட்டி நடை பெறுகிறது. மற்ற கட்சிகளெல்லாம், களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை; ஆனால், திமுக அணி, அதி முகவை விமர்சனம் செய்து தேர் தலைச் சந்திப்பது என்பது, சிலர் சொல் வது போல், சட்டமன்றத் தேர்தல் அல்ல என்பது திமுகவிற்குத் தெரியும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அந்த அணியின் சார்பில் என்ன கருத்து முன் வைக்கப்பட்டது? மதச் சார்பின்மை, சமூக நீதி என்கிற இரண்டு தத்துவத்தை முன்வைத்து, தேர்தலைச் சந்திப்பதாக திமுக அணி கூறுகிறது. அதிமுக வெல்லும் ஒவ் வொரு இடமும், மோடிக்கு ஆதர வாகச் செல்லும் என்பது தா.பாண்டி யன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இங்கே, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவிற்கு ஒரு சீட்டு தேறாது என்பதும் தெரியும்.

அதிமுக இங்கே மண்ணைக் கவ்வினால், அது மதச் சார்பின்மைக்கு வெற்றி. அதனால் தான், திமுக அணி, அதிமுகவை குறிப்பிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதுதானே சரியான அணுகுமுறை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தருவது தானே சரியாக இருக்கும்.
அண்டை மாநிலமான ஆந்திரா வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து தெலுங் கானா பகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு என இருந்தாலும், தெலுங்கானா உருவாகிட காங்கிரஸ் முயற்சி எடுத்ததால், அதனுடன் கூட்டு என் கிறார் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி.

கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டு என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் போன்றோர் வந்து சந்தித்து சென்ற அடுத்த நாள், ஒரு காரணமும் சொல் லாமல், கம்யூனிஸ்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஒவ்வொரு தொண் டனையும் அவமதித்து, அவர்களது சுயமரியாதையையும் கேவலப்படுத் திய அதிமுகவை வீழ்த்துவது கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பணி யில்லையா காம்ரேட்ஸ்?

தமிழ் நாட்டில், காங்கிரசோடு கூட்டு இல்லை; மோடிக்கு தமிழகத் தில் இடம் இல்லை என்பதைத் தெளிவாக்கி தேர்தல் களம் காணுகிறது திமுக அணி.

தெலுங்கானா காம்ரேட்ஸ் கூறும் காரணத்தைவிட, தமிழ் நாட்டில், அதிமுகவை எதிர்ப்பதற்கும், திமுக அணியை ஆதரிப்பதற்கும் கூடுதல் காரணங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கிறதே காம்ரேட்ஸ்.

பாஜகவிற்கு தேர்தலுக்குப் பின்னால் ஆதரவு தரலாம் எனும் அதிமுவை தோற்கடிக்க, திமுக அணியை ஆதரித்து, மதவெறிக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என நிரூபிக்கும் பணியில் நீங்களும் இணையுங்கள் காம்ரேட்ஸ்.

Read more: http://viduthalai.in/page-2/78326.html#ixzz2yFjPewGX

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன? - கி.வீரமணி


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி

ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;

நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.

பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?

இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.

2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.

3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)

தமிழ் ஓவியா said...

இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?

இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.

1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.

எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!

கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?

இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்

இ) பொது சிவில் சட்டம்.

இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?

வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!

3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?

வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


8.4.2014முகாம்: கோவை

Read more: http://viduthalai.in/e-paper/78340.html#ixzz2yL8S4pb7

தமிழ் ஓவியா said...


தேர்தல் களம்


தி.மு.க. தலைமைக் கழகம் எச்சரிக்கை

தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று உளவுத்துறை சொன்ன நிலையில் 10ஆம் தேதிக்குப் பின் பணப்பட்டுவாடா செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது என்றும், கழகத் தோழர்களும், வேட்பாளர்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் திமுக தலைமைக் கழகம் எச்சரித்துள்ளது.

ம.பி. யில் பிஜேபி ஓட்டுக்கு ரூ.500 பணமாம்!

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக பாகிரத பிரசாத் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கட்சி டிக்கெட் வழங்கிய 24 மணி நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அவரும் அந்த தொகுதியைச் சேர்ந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. அரவிந்த் படோரி யாவும் அட்டெர் என்ற பகுதியில் பிரச்சாரம் செய்தனர். அப்போது இருவரும் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வீதம் பணம் கொடுத்தனர். இதை அங்கிருந்த காங்கிரசார் பார்த்து வீடியோ எடுத்து விட்டனர். இதே போல் கத்ஜோர் என்ற நிறுவனம் சார்பில் பா.ஜனதா மறைமுகமாக அதன் உறுப்பினர்களுக்கு தேர்தலையொட்டி பணம் கொடுத்தது. இதையும் காங்கிரசார் வீடியோ எடுத்தனர்.

இந்த வீடியோ ஆதாரங்களை போபாலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யதேவ் கதாரே போபாலில் செய்தியாளர்களிடம் போட்டு காண்பித்தார். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. வீடியோ ஆதாரங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறும் போது, இந்த புகார் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அனுப் பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால் பா.ஜனதா வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெட்டும் - குத்தும்

மின்வெட்டுப் பிரச்சினை காரணமாக அதிமுக வெற்றியைப் பாதிக்காது.

- சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

ஆமாம் திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறையென்றால் அது வெட்டு!

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்றால் - இரட்டை இலையில் குத்து!

ஆகா என்னே வெட்டு - என்னே குத்து!

இது போதுமா?

2013ஆம் ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் இந்த அமைப்புகளால் நாட்டில் நிகழ்ந்த மதக் கலவரங்கள் 828; படுகொலைகள் 133.

இது போதுமா? ஆட்சியைப் பிடித்து, கொலை கொள்ளைகளைத் தேசிய மயமாக்கத்தான் துடிக்கிறது பி.ஜே.பி.! அதிமுகவும் கூட்டுச் சேர்ந்தால் தமிழ்நாட்டில் நடக்கும் படுகொலைகள், கொள்ளைகளையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ளலாம்.

இரகசியம் இல்லை

பா.ஜ.க.வுக்கும் - அதிமுகவுக்கும் இடையில் எவ்வித இரகசிய உடன்பாடும் இல்லை.

- பொன்.இராதாகிருஷ்ணன், தலைவர், தமிழ்நாடு பிஜேபி.

உண்மைதானே! இதில் இரகசியம் என்ன வேண்டி யிருக்கிறது? பிஜேபியைக் குறை கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பேசுவதில்லை; அதேபோல ஜெயலலிதாவைக் குறைகூறி பி.ஜே.பி., தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுவதில்லை. இதற்கு என்ன பொருள்? வெளிப்படையாகவே அதிமுக பிஜேபி கூட்டு இருக்கிறது என்பது தானே!

புதுச்சேரி மயக்கம்!

பி.ஜே.பி.யோடு என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியில் கூட்டு வைத்துக் கொண்டு இருந்தாலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை இந்தக் கூட் டணியில் உள்ள பா.ம.க., என்.ஆர். காங்கிரசை எதிர்த்துப் போட்டிப் போடுகிறது. இதனை கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் ஆதரிக்கின்றன. என்ன கூட்டோ - வறுவலோ! புடலங்காயோ! புதுச்சேரி என்றாலே எல்லாம் மயக்கம் தானோ!

காலதாமதம் காம்ரேட்!

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து ஒதுக்கப்பட்டோம்!

- சுதாகர்ரெட்டி சி.பி.அய். இந்திய பொதுச் செயலாளர்

ஒருவரை புரிந்து கொள்ள இடதுசாரிகளுக்கு இவ்வளவுக் காலம் தேவைப்பட்டுள்ளதா? பேஷ்! பேஷ்!!அச்சுறுத்தலோ!

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட இம்ரான் மசூத் நரேந்திரமோடியைத் துண்டு துண்டாக வெட்டுவோம் என்று பேசியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது - அவர் கைது செய்யவும் பட்டார்.

இது குறித்து ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேர்தல் முடிந்த பின் யார் யாரை வெட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று பேசியுள்ளார். தேர்தலா - கசாப்புக் கடையா என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/78350.html#ixzz2yL92wTZh

தமிழ் ஓவியா said...

ஒன்றுமே இல்லை


பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை -_ தமிழனுக்குப் போகக்கூடாது; - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/78351.html#ixzz2yL9GDlWH

தமிழ் ஓவியா said...

அன்றே சொன்னார் தமிழர் தலைவர்

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது. இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது. நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தவர்; ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத்துவா கொள் கையை அப்பட்ட மாகக் கடைப்பிடிப்பதில் சற்றும் கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் - இணைய தளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப் தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மை யான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத் துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படை யாகவே இறங்கி விட்டது!

17.2.2014 விடுதலை அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தினார். இன்று அதன் உண்மை உணரப் படுகிறது. அன்று பி.ஜே.பி.யின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று முன்வரிசைக்கு, பி.ஜே.பி.க்குக் கட்டளையிடும் இடத்திற்கு வந்து விட்டது.

ஆர்.எஸ்.எஸால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டவர் தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

மோடி பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் அவரை ஏன் முன்னிறுத்தியுள்ளது? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதா என்ற கருத்து மக்கள் மத்தியிலே தெரிந்த ஒன்று. (இதற்கு முன்பேகூட பா.ஜ.க.வில் உள்ள உமா பாரதியும், கல்யாண்சிங்கும், (உ.பி.) பங்காரு லட்சுமணனும் (பி.ஜே.பி. தலைவராகவே இருந்தவர்) தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதியும் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளனர்.)

இந்த முத்திரை பா.ஜ.க.மீது விழுகின்ற காரணத்தால் அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஒரு பிற்படுத்தப் பட்டவரான மோடியைத் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

மோடி யார் என்பதற்கும் பெரிய விளக்கம் தேவைப் படாது! அவர் குஜராத்து மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள்மீது அரசப் பயங்கரவாத மாக மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டத்தை ஏவி, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

எனவே சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதார் கிடைத்தால் அதனைத் தக்க முறையில் பயன்படுத்திட பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தவறிடுமா?

நிஜப்புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாகவே குதிக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சிந்தித்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோடியை ஆர்.எஸ்.எஸ். தனக்குக் கிடைத்த போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் இரகசியம் என்ன என்பது எளிதில் விளங்குமே!

சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனம் ஒன்றில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆற்றிய உரையை DNA - Daily News and Analysis வெளி யிட்டதுண்டு. Brahmins kept Indian Culture Alive என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது.

“Bramins are custodians of Indian Culture and shastras. The Brahmin Community has helped preserved Indian Culture. If our culture is still thriving it is because of Brahmins he said that a Social system can be created by the Methods by the gun of Shastras”

இந்தியக் கலாச்சாரம் உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்ற தலைப்பில் வெளிவந்த அந்தச் செய்தியில் நரேந்திரமோடி பேசினார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம் சாஸ்திரங்கள் இவற்றின் பாதுகாவலர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் பார்ப்பனர்களே ஆவார்கள்!

நமது கலாச்சாரம் உயிரோடு இன்று வரை இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பார்ப்பனர்களே!

ஒரு ஒழுங்கு முறையான சமூக அமைப்பு முறையை சாஸ்திரங்கள் என்ற துப்பாக்கியால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்னவர் தான் இந்த நரேந்திரமோடி.

அப்படி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த நரேந்திரமோடியைத்தானே கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்திட முன்வரும். பார்ப்பனர்களுக்கு நல்ல அடிமையாகக் கிடைத்தவர்தான் இந்த மோடி!

இந்த மோடி ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள் கையைப் பாதுகாப்பதில் நிகர் அற்றவர். மலம் அள்ளும் தொழில் என்பது அவர்களின் கர்மப் பலன் அந்தப் பணி ஒரு தெய்வப் பணி என்று சொன்னவர் (மோடியின் கர்மயோக நூலில்)

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (11.2.2007) நடத்தியதுண்டு.

குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தண்ணீர்த் தொட்டியில் உயர் ஜாதிக் காரர்களுக்கு ஒரு நேரம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு வேறொரு நேரம் என்று எழுதி வைத்துள்ளனர். என்றால் - இதன் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான நகர சுத்தித் தொழிலாளர்கள் அங்கு சமீபத்தில் போராடினார்களே!

ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள்கையின் பாதாரவிந்தங்களைத் தழுவிடக் கூடியவர் மோடி என்பது விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் கொள்கையால் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் - வரும் தேர்தலில் இதற்கொரு பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/78355.html#ixzz2yL9X726t

தமிழ் ஓவியா said...


திமுக ஆட்சியை ஒரு கணம் நினைத்துப்பாரீர்! திமுக ஆட்சியில் திருப்திகர நிதிநிலைமை தி இந்து ஏடு பாராட்டு


தி இந்து ஆங்கில நாளேடு 25.10.2010 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்:

பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வரும் நிலையில்; அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் நிதியாண்டு நடுவில் அதிகரிப்பு ஆகியவை களுக்கு மத்தியில்; மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்று அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கு வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கான இலக்கு களை அடைவதற்கு ஏதுவாக நிதிநிலை இருக் கிறது என்று வலியுறுத்துகிறார், நிதித்துறை முதன் மைச் செயலாளர் கே.சண்முகம்.

வருவாய் பற்றாக் குறைக்கும் மொத்த வருவாய் வரவுகளுக்கும் இடையிலான விகிதம் 5.38 சதவிகிதமாகவும்; நிதி பற்றாக்குறைக்கும் ஒட்டுமொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகி தம் 3.72 சதவிகிதமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

சமீபத்திய நெறிமுறைகளின்படி, அடுத்த நிதியாண்டில்தான் (2011-2012) வருவாய் பற்றாக் குறை குறைக்கப்பட்டு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நிதிப்பற்றாக்குறை மூன்று சதவிகித மாகக் குறைக்கப்பட வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, நமது வருவாய் வரவு ஏறத்தாழ கூடுதலாக ரூ. 3000 கோடி அளவுக்கு உயரும். மத்திய அரசிலி ருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வரி வருவாய் பங்கீடு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்ட ணங்கள் மூலம் வருவாய் பெருமளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது ஏற்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் மீது மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வருவாய் உயர்வின் காரணமாக கூடுதல் வரி வருவாய் பங் கீடு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விதிப்பு மூலம் வருவாயானது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான அள வைக் காட்டிலும் இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் மின்சார மானியம், முதியோர் ஓய்வூதியத்தொகை, சத்துணவுத் திட்டம் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட சில நல்வாழ்வுத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு அரசுக்கு ரூ. 12,200 கோடி செலவாகும்.

இந்தப் பட்டியலில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக் கீடான ரூ. 2,250 கோடி மற்றும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்துக்கு மாநிலத்தின் பங்கான ரூ. 425 கோடி ஆகியவையும் அடங்கும்.

செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அக விலைப்படி உயர்வினால், அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 2190 கோடி செலவாகும்.

வருவாய் வரவுகளில் திருத்தப்பட்ட உயர்வு, கூடுதல் வருவாய் செலவினங்களான ரூ. 3000 கோடியில் ஈடு கட்டப்பட்டுவிடும்என்று சண் முகம் குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வருவாய் வரவுகளில், விற்பனை வரித்தொகை, மாநில சுங்க வரி, முத்திரைத்தாள், பதிவுக்கட்ட ணம் ஆகியவை மூலம் ஆண்டு முழுவதற் குமான ரூ. 41,438 கோடியில், சுமார் 17,345 கோடி வசூலாகியுள்ளது என்று அவர் தெரிவிக்கிறார் .

இந்த ஆண்டு இதுவரை, மத்திய வரிகளில் பங்கீடாக மத்திய அரசிடமிருந்து ரூ.3715 கோடியும், உதவி மானியமாக ரூ. 2,568 கோடியும் மாநிலத்தால் பெறப்பட்டுள்ளது.

அந்தத் திமுக ஆட்சி எங்கே! இன்றைய அஇஅதிமுக ஆட்சி எங்கே?

Read more: http://viduthalai.in/page-8/78372.html#ixzz2yLBGW2FB

தமிழ் ஓவியா said...


வாக்குச் சாவடிக்குள் ஆர்.எஸ்.எஸ்.: எச்சரிக்கை! எச்சரிக்கை!! டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்புபுதுடில்லி.ஏப்.9- வாக்குப் பதிவன்று வாக்குச் சாவடி களில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் திட்டம் குறித்து டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் முன்னாள் பிரச்சாரக் ஹிந்துத்து வாவின் அடையாளமாக உள்ள மோடி தேசத்தின் மிக உயரிய பதவியை அடைய துடித்துக்கொண்டு செயல் பட்டு வருகின்றார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் செயலில் குதித்துள்ளது.

அன்றாட அரசியலிலிருந்து விலகி இருப்பதாக கருதப்பட்டுவந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது மோடிக்காகப் பிரச்சாரம் செய்துவருவதோடு, முதன்முதலாக நேரிடை யாக வாக்குச்சாவடிகளில் நுழைந்து செயல்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன், டில்லி சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளருமாவார். டில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய கொஞ்சம்கூட வெற்றியிலிருந்து நழுவ விடா மல் இருப்பதை உறுதிசெய்ய மூத்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். 2009 இல் டில்லியில் ஒரு இடம்கூட பாஜக வெற்றிபெற வில்லை. அனைத்துமே காங்கிரசுக்கே சென்றது.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறிப்பாக சுயம்சேவக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினருடன் தோள்கொடுத்து எல்லா செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். வாக்குச்சாவடிகளிலும் நுழைந்து நெருக்கடியான நேரத்திலும் முக்கியப் பங் காற்றிட உள்ளனர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ்சில் நடை பெற்ற பிரதிநிதி சபா பயிற்சியில் சுயம்சேவக்குகளான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு முக்கியமான பயிற்சி களை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78389.html#ixzz2yRJerz6T

தமிழ் ஓவியா said...


உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.

- (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/78390.html#ixzz2yRJtkzfw

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி கன்னட எழுத்தாளர்கள் கடும் கண்டனம்

பெங்களூரு, ஏப். 9-கர்நாட கத்தில் மக்களின் அன்பைப் பெற்ற பிரபல கன்னட எழுத் தாளர்கள், பாரதீய ஜனதா கட்சியின் மதவெறிக்கும், அதை ஊட்டி வளர்க்கத் திட்டமிட்டுள்ள அவர்களது பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடிக்கும் எதிராக களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக ஞானபீட விருதுபெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தியும், பிரபல திரைப் பட மற்றும் நாடக கலைஞ ரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் ஆகியோர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி யுள்ளனர்.பாஜக தனது பிரத மர் வேட்பாளராக முன்னி றுத்தியுள்ள நரேந்திர மோடி, இந்திய நாகரிகத்திற்கு ஏற் பட்டுள்ள மிகப்பெரும் அச் சுறுத்தல் என்றும், இந்தியா வின் பன்முக கலாச்சாரத் திற்கு விடப்பட்டுள்ள சவால் என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை, இன்னும் கடுமையான வார்த்தைகளில் சாடியுள்ள எழுத்தாளர் அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப் பிட்டுள்ளார்.இதே கடுமை யுடன் எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், நரேந்திர மோடி யையும் பாஜகவையும் விமர் சித்துள்ளார். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, மோடி பிரதமராக இருக்கும் நாட்டில் நான் வாழ விரும்ப மாட்டேன் என்று எழுத் தாளர் அனந்த மூர்த்தி கூறி யிருந்தார்.

அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், மீண்டும் அதே கருத்தை வெளியிட்டுள்ள அவர், மோடிக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறு தியாக இருப்பதாக தெரிவித் துள்ளார். இந்நிலையில், மதவெறிக்கு எதிராக குரல் கொடுத் துள்ள கர்நாடகத்தின் இரண்டு பிரபல எழுத்தாளர்க ளுக்கும் இதர எழுத்தாளர் களான வசுந்தரா பூபதி, மரு ளாசிதப்பா, ஜி.கே.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/78401.html#ixzz2yRLHMfqb

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை:

ராமர் பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது வளர்ச்சிக்கு எதிரானது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப். 9- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது அறிவியலுக் கும், பகுத்தறிவுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புதிய மொந்தை யில் பழைய கள் என்பதாகக் கூட இல்லை. பழைய மொந் தையில் பழைய கள் என்ப தாகவே அமைந்துள்ளது. மோடி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களால் சிறுபான்மை மக்கள் கூட கவரப்பட்டுள் ளதாகவும், அவர்கள் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருப் பதாகவும் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த பார தீய ஜனதா கட்சி தலைமை முயற்சித்து வந்தது.

ஆனால் அவர்களது தேர் தல் அறிக்கை வகுப்புவா தத்தை முன்வைப்பதோடு, தாராளமய பொருளாதார கொள்கையை வலியுறுத் தும் கட்சிதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் கோவில் கட்டுவோம், ஜம்மு-காஷ் மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் அரசி யல் சட்டப்பிரிவு 370அய் ரத்து செய்வோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரு வோம், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்ற ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அனைத்து செயல்திட்டங்க ளையும் உள்ளடக்கியதா கவே பாரதீய ஜனதா கட்சி யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முற்றாக முடக்குவோம் என்று கூறு வதும், ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவதும் முற்றிலும் அறிவியலுக்கும், பகுத்தறி வுக்கும், வளர்ச்சிக்கும் எதி ரானது.

காங்கிரசுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சி பொரு ளாதாரத்துறையில் அதே காங்கிரசின் தாராள மயமாக் கல் கொள்கையைத்தான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் மாறாது, மாறவும் முடியாது என் பதை அவர்களது தேர்தல் அறிக்கையே தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78400.html#ixzz2yRLQ07RM