Search This Blog

16.4.14

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அமைதி, வளர்ச்சி, வளம் என்பது என்ன? - கி. வீரமணி

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அமைதி, வளர்ச்சி, வளம் என்பது என்ன? 

 

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆதாரங்களுடன் பட்டியலிட்டார் தமிழர் தலைவர்

சென்னை, ஏப்.16- அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அமைதி, வளர்ச்சி, வளம் என்று மூன்று முழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை உண்மைக்கு மாறானவை என்று ஆதாரங்களுடன் பட்டியலிட்டுக் காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

தென் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் நேற்று (15.4.2014) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நிற்கும் அணிகளி லேயே பலமான அணி தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணிதான்.

பலமான அணி இதுவே

இந்த அணியில்தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் ஒன்றாக இணைந்துள்ளனர்.

இந்த அணிதான் கொள்கை அணி. இதில்தான் மதச் சார்பற்ற ஆட்சி, சமூகநீதி  என்ற கொள்கைகள் திட்டவட்ட மாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எதிர் அணி என்பது கூட்டணிகூட அல்ல - அது வெறும் சீட்டணி, கொள்கைகள் என்று எடுத்துக் கொண் டால் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை.

தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகன்

பல கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளைக் கொடுத்துள் ளன. என்றாலும் நூறு அம்சங்களைக் கொண்ட திமுகவின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளிவந்த சில நாட் களிலேயே அதன் வெற்றி ஒளி உச்சநீதிமன்றம் வரை ஊடுருவி விட்டதே!

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு முதல் வெற்றி!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பக்கம் 21இல் அரவாணி கள் (Trans Genders) என்ற தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முதலாகக் கலைஞர் ஆட்சி யில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில் அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப் படும் அறுவைச் சிகிச்சையை இலவசமாக செய்வதற்கும் வழி வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளில் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட திமுக கழகம் பாடுபடும்.

மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அர வாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை திமுக கழகம் வலியுறுத்தும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

உச்சநீதிமன்றம் இப்பொழுது அளித்துள்ள தீர்ப்பினை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணை யின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கை களை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறி வுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வழி வகுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களின் சமூக மேம்பாட்டிற்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது. குறிப்பாக திருநங்கைகளுக்கு என பிரத்தியேக கழிப்பறைகளும் அவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ உதவிகளும் ஏற்படுத்தி தர மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. என்று உச்சநீதிமன்றத் தில் நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. (பலத்த கரஒலி) இந்த வெற்றி தேர்தல் வெற்றிக் கான முதல் அச்சாரமாகும். எந்தெந்தப் பகுதி சமுதாயத்தில் பாதிக்கப்படுகிறதோ, அந்தந்தப் பகுதி மக்களுக்காகப் பாடுபடுவதுதான் திராவி டர் இயக்கமாகும்.  தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இதற் கொரு அருமையான எடுத்துக்காட்டாகும்.

ஈழத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்தது திமுக!

ஈழத் தமிழர்களுக்கு திமுக ஆட்சியில் ஏதும் செய்ய வில்லை என்று சிலர் கூறி வருகிறார்கள். ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தது திமுகவைத் தவிர, வேறு யாரைச் சொல்ல முடியும்?
இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் அமைதிப் படை, வி.பி. சிங் ஆட்சியில் திரும்பப் பெறப்பட்ட போது, அந்தப் படையை வரவேற்க முடியாது என்று சொன்ன முதுகெலும்புள்ள முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா? எம் தமிழர்களை, தமிழ்ப் பெண்களை வேட்டையாடிய இந்திய  இராணுவத்தை வரவேற்கச் செல்ல மாட்டேன் என்றாரே!

ஈழத்தாய் வேடம்!

ஆனந்தவிகடன் குறிப்பிடுவது போல ஈழத் தாய் வேடம் போடும் அம்மையார் ஈழத் தமிழர் பிரச்சினையில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்? ஈழத் தமிழர் என்று கூடச் சொல்ல மாட்டார்! இலங்கைத் தமிழர் என்றுதான் உச்சரிப்பார்!
டெசோ சார்பில் சென்னை இராயப்பேட்டையில் மாநாடு நடத்தப்பட்டபோது அந்த மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்பதற்காக எந்தெந்த வழிகளில் எல்லாம் தொல்லை கொடுத்தார் - முட்டுக்கட்டை போட்டார் என்பது தெரியாதா?

நான்கு மணிக்கு மாநாடு என்றால் பிற்பகல் 3 மணிக்குத் தானே நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்பட்டு மாநாடு நடத்தப்பட்டது.

அங்கே ஒரு ராஜபக்சே இங்கே ஒரு மோடி!

அங்கே ஒரு ராஜபக்சே என்றால், இங்கே ஒரு நரேந்திர மோடி! இன அழிப்பில் ஈடுபட்டு, இரத்தக் கறை படிந்தவர் கள் தானே இவர்கள் இருவரும்? அந்த மோடிக்கு இங்கு சிலர் நடைபாவாடை விரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங், The end of India என்ற நூல் ஒன்றை எழுதினார். சங்பரிவார்கள் நடந்து கொள்ளும் விதம், பிஜேபியின் நடவடிக்கைகளையெல் லாம் குறிப்பிட்டு இந்தியா என்று ஒன்று இருக்காது என்று அந்த நூலில் குறிப்பிட்டு இருந்தார்.

2004 திரும்பட்டும்!

2004 இல் நடைபெற்ற 14 ஆவது மக்களவைத் தேர்தல் மூலம் தமிழ்நாடுதான் அதனைத் தடுத்தது. புதுச்சேரியைச் சேர்ந்து 40க்கும் 40 என்ற ரீதியில் கலைஞர் வெற்றி பெற்ற தால்தான் அந்த நிலை தடுக்கப்பட்டது. வரும் தேர்தலிலும் 40-க்கும் 40 இடங்களிலும் வெற்றியை திமுக அணிக்குத் தேடிக் கொடுத்தால், கலைஞர் சுட்டிக் காட்டிபவர்தான் இந்தியாவின் பிரதமராக வர முடியும்.

காஷ்மீர் முதல் குமரி வரை ரத்த வெள்ளம் பாயவேண்டுமா?

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை என்பது இந்துத்துவா வின் செயல் திட்டமாகும். பாபர் மசூதியை இடித்தவர்கள், அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என் கிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்திற்குரிய சிறப்புச் சட்டம் 370அய் ரத்து செய்வோம் என்கிறார்கள், ஆக காஷ்மீர் முதல் குமரி வரை மதக் கலவரத்தை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அதற்கு நாம் இடம் தரப் போகிறோமா என்ற கேள் விக்கு விடை கொடுப்பதுதான் நடக்கப்போகும் தேர்தல்.

இதனை மறைக்கத்தான் குஜராத் வளர்ச்சி - அதன் கதாநாயகர் மோடி என்று பெரிய அளவில் விளம்பர  வெளிச்சத்தை வாரி இறைக்கிறார்கள். உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளதா என்றால் அது உண்மை யல்ல என்று புள்ளி விவரங்கள் நிரூபித்து விட்டன. ஒரு பொய்யையே திருப்பித் திருப்பிச் சொல்லும் கோயபல்சு வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

குஜராத்து வளர்ச்சி யாருக்கு?

கலைஞர் ஆட்சியில் கொடுத்ததுபோல குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்ட துண்டா?

இந்தியாவில் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குஜராத்துக்கு உரிய இடம் 12; சாலை வளர்ச்சியில் 11 ஆவது இடம் எழுத் தறிவில் 18 ஆவது இடம் - இதுதான் குஜராத் வளர்ச்சியா?

உண்மையில் குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. யாருக்குத் தெரியுமா? கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அபாரமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நானோ கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்காக டாட்டா நிறுவனத்துக்கு மோடி தாரை வார்த்துக் கொடுத்தது கொஞ்ச நஞ்சமல்ல. 1100 ஏக்கர் நிலம், சதுர அடி ரூ.900-க்கு விற்கப் பட்டது. ஆனால் சந்தை நிலவரம் சதுர அடி ரூ.10 ஆயிரம்; இதில் மட்டும் அரசுக்கு இழப்பு 33 ஆயிரம் கோடி ரூபாய்!

அதைவிட அதானி கும்பலுக்கு சதுர அடி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதானிக்கு மட்டும் 3 துறைமுகங்கள் குஜராத்தில் உள்ளன; அந்த அதானிக்குச் சொந்தமான விமானத்தில்தான் இந்தியா முழுவதும் நரேந்திரமோடி சுற்றித் திரிகிறார், இதுபற்றியெல்லாம் எந்த ஊடகம் எழுதுகிறது?

தமிழ்நாட்டின் நிலை என்ன? இதோ கல்கியே கூறுகிறது
குஜராத்தில்தான் வளர்ச்சி இப்படி என்றால் தமிழ் நாட்டின் வளர்ச்சி என்ன? நாம் சொல்லுவதைவிட அவர்கள் ஏடான கல்கியே வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெய லலிதா  - ஆனால் புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவு களின்படி தமிழகத்தில் 2011இல் 677 பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2013-இல் இதன் எண்ணிக்கை 923ஆக உயர்ந்து விட்டது.

வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இது தொடர்பாக 2012இல் தமிழகத்தில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2009-இல் (திமுக ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள் 2013-இல் பதினைந்தாக உயர்ந்து விட்டது.

சரி.... பொருளாதாரத்துக்கு வருவோம். விவசாயத் தில் 12 சதவிகிதமும் உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாக திட்டக் கமிஷன் கூறுகிறது. தொழில் வளர்ச்சியில் திமுக ஆட்சி யில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம்இப்போது 14 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பொருளாதாரம் உள்ளிட்ட பல துறை வளர்ச்சிகளில் குறியீடாக இருக்கும் (ஜி.டி.பி) மொத்த உள்நாட்டு உற்பத்தி தேசிய அளவில் இருப்பதைவிட தமிழகத்தில் குறைவாக உள்ளது என்று கல்கி (16.3.2014 பக்கம் 11) கூறுகிறதே - பொது மக்கள் சிந்திக்க வேண்டாமா?

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வளர்ச்சி இதுதானா?

வளம்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 150 ஆண்டு காலமாக தமிழகம் கனவு  கண்டு கொண்டிருந்த 1427 கோடி ரூபாய் மூலதனத்தில் மேற்கொள்ளப்பட இருந்த சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டம் நாட்டின் வளத்துக்கான திட்டமல் லவா? அதை உச்சநீதிமன்றம் சென்று தடுத்த ஜெயலலிதா அம்மையார்அவர்களா நாட்டு வளம் பற்றிப் பேசுவது?
13000 மக்கள் நல ஊழியர்களின் வேலை வாய்ப்பை பறித்து வீட்டுக்கு அனுப்பியதுதான் வளர்ச்சியின் அறி குறியா? யானைக்குப் புத்துணர்வு அளிக்க முன்வரும் அதி முக அரசுதான் 13000 குடும்பங்களின் வயிற்றில் அடித்தது.
அமைதிபற்றியும் அதிமுக தேர்தல் அறிக்கை பேசுகிறது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு இல்லாத நாள் உண்டா? நடைப் பயிற்சி செல்லும் பெண்கள்கூட கழுத்தில் செயின் போட்டுக் கொள்வதில்லை. அந்த அளவுக்குச் செயின் பறிப்புப் பயம்! பாதுகாப்பான இடம் சிறைச்சாலை - அங்குக்கூட இந்த ஆட்சியில் கொலை நடக்கிறது - இதுதான் அமைதிக்கு அடையாளமா?
இத்தகைய ஆட்சிக்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா? கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளலாமா?

ஆதரிப்பீர் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை!

நாட்டில் நல்லாட்சி மலர, மதச் சார்பற்ற ஆட்சி வர, சமூக நீதி சிறக்க திமுக தலைமையிலான ஜனநாயக முற் போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து 40-க்கு 40-ம் வெற்றி என்ற நிலையை உருவாக்குவீர் என்று கேட்டுக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

அதிமுக-பிஜேபி கூட்டு  சோமூலம் வெளியாகிறது!

பா.ஜ.க. போட்டியிடாத தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதுதான் நல்லது; மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய அது உதவி செய்யும். மாறாக பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்தால், அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது; ஓட்டுப் பிளவைத்தான் உண்டாக்கும் என்று சோ எழுதியுள்ளார் (துக்ளக் 16.4.2004).
இதன் பொருள் என்ன? சோ மூலம் ஓர் இரகசியம் வெளி வந்துவிட்டது. அ.இ.அ.தி.மு.க.வும் பி.ஜே.பி.யும் தனித்தனியாக நின்றாலும் அவர்களுக்குள் இருக்கும் இரகசிய உறவும் என்ன என்பதை சோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறதா - இல்லையா? பி.ஜே.பி.யோடு கூட்டுச் சேர்ந்துள்ள வீராதி வீரர்களும் இதுபற்றி ஒன்றும் கூறவில்லையே - ஏன்?

------------------------ சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர், 15.4.2014

17 comments:

தமிழ் ஓவியா said...

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது


திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக
அங்கீகரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது

சமுதாயம், கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும்

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் நேற்று (15..4.2014); நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், திரிபாதி ஆகியோரால் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புதான் அது.

சமுதாயத்தில் அவர்களின் நிலை

அரவாணிகள் என்ற பெயரில் ஏதோ நடமாடும் நிலையில் தான் அவர்கள் இருந்து வந்தனர். சமுதாயத்தில் ஏதோ அருவருப்பானவர்கள் கேலிக்குரியவர்கள் என்பது போன்ற மனப்பான்மை இருந்து வந்தது.

பிறப்பின் அடிப்படையில் உருவ அமைப்பில் சில மாற்றங்கள் இருந்து விடுவதாலேயே அவர்கள் மதிக்கப்படத் தகுந்தவர்கள் அல்ல என்ற மனப்பான்மை மனிதத் தன்மையற்றது - பகுத்தறிவுக்கும் விரோதமானது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஓர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பது பெரிதும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பு - பாலினம், மதம், ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து சம வாய்ப்பை அனைத்துக் குடி மக்களுக்கும் வழங்குகிறது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பதற்கு (இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி) 64 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன என்றாலும் காலந் தாழ்ந்தாவது இப்படி ஒரு தீர்ப்பு வந்ததே என்று வரவேற்று மகிழ்ச்சி அடைகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று, நேற்று (14.5.2014) சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலும் பேசினேன்.

திராவிடர் கழகம் நடத்திய கோவைப் பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்

13.4.2013 அன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திருநங்கைகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...

திருநங்கையர்களுக்கான உரிமைகளும், வாய்ப்புகளும்

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங் கைகளை மூன்றாவது பாலாக, மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், Sex என்ற அரசு விண் ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப் பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்படவைக்க வேண்டும் என்றும்,
(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை யினர் நியமனம் செய்யப்படுவது போல திரு நங்கையருக் கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க்குக் குறிப் பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்!

மாநாடுகளில் திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவம் பெற்று வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவும் முக்கியமானதாகும். அந்தக் கோவைப் பெண்கள் மாநாட்டில் ரேவதி என்ற திருநங்கை அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்கென்று வாரியம் அமைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில்

16ஆவது மக்களவை தேர்தல் திமுக அறிக்கையில் கூட, மிகவும் கவனமாக அவர்கள் பிரச்சினை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மொத்தம் நூறு அம்சங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமான திமுகவின் தேர்தல்அறிக்கையில் 11ஆவது அம்சமாக அரவாணிகள் (Transgenders) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரவாணிகள்

இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைஞர் ஆட்சி யில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாக செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர் களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியினர்மீது எப்பொழுதுமே உண்மையான திராவிடர் இயக்கத்திற்கு அக்கறை உண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

கோவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானம் - திமுக தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இசைவாக வந்ததற்காக உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதுபோல இது ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையும்கூட!

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் திருநங்கைகளின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் என்றாலும் கல்வி நிலையிலும் மிக மிகப் பின் தங்கிய நிலையில் தான் உள்ளனர்.

மத்திய - மாநில அரசுகளின் கடமை

திராவிடர் கழக மாநாட்டிலும் திமுக தேர்தல் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பான திட்டத்தை (Scheme) வகுத்து, அவர்களைச் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக மற்றவர்களுக்கு இணையான வர்கள் என்ற சமூக அங்கீகாரம் கிடைத்திட அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலையை உயர்த்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள் இருக்கின் றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும். அவர் களில் படித்தவர்கள் இந்த வகையில் வழி காட்ட வேண்டி யதும் அவசியமாகும். கழகமும் இதில் கவனம் கொள்ளும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

16.4.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/78758.html#ixzz2z6IJmQU4

தமிழ் ஓவியா said...


அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் வழங்கியது பிஜேபி அரசாம் - மோடியின் பொய்யான தகவல்


இந்தியாவின் சட்ட மேதை பாபாசாகிப் அம் பேத்கரின் பிறந்த நாள் விழா வின் போது நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை கடு மையாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது: காங் கிரஸ் அரசு, அம்பேத்கர் வாதிகளையும், தலித்துக் களையும் அவமானப் படுத்தி அவர்களை அடி மைகளாக்கி வைத்துள்ளது என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் குஜராத் மாடல் அங்குள்ள தொழிலதிபர்களுக்குத்தான் அதிக லாபத்தை ஈட்டித் தந்திருக்கிறதே தவிர, அடிப்படை வசதிகள் கூட சாமானிய மக்களைச் சென்ற டையவில்லை, அங்குள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களின்நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது மோடி, தலித்மக்களை தேவை யற்ற குடிமகன்களாகவே கருதுகிறார், கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலித்துக்களின் நிலை மிக வும் மோசமானதாக மாறி விட்டது, என்று கூறினார்.

ராகுல்காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சந்தீப் சுரஜ்வாலா, மோடியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக் கும் போது கூறியதாவது இந்தியா முழுவதும் இத்தேசத்தின் அரசியல் சாசன தந்தையை கொண் டாடிக்கொண்டு இருக்கும் போது நரேந்திரமோடி, தலித் விரோத மனப்பான் மையை வெளிப்படுத்து கிறார்.

அவர் தலித்துகளை மனதால் பாதிக்கப்பட்டவர் கள் என்றும், தலித்துகளின் குணம் என்றும் மாறாத ஒன்று என்றும் பழித்துக் கூறுகிறார். மோடி எழுதிய கர்ம யோக் என்ற நூலைப் பற்றி சுரஜ்வாலா, மோடி தனது நூலில்(48, 49 ஆம் பக்கத்தில்) தூய்மைப் பணியாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தூய் மைப்பணியாளர்களின் முன்னோர்கள் மனித மலங்களை அள்ளுவதை கடவுளுக்குச்செய்யும் பணியாகக் கருதினார்கள், ஆகவே அவர்கள் முகம் சுழிக்காமல் தங்கள் பணி களை பயபக்தியுடன் செய்து வந்தனர். அவர்களின் நோக்கமே சமூகத்திற்கு ஆற் றும் தொண்டுதான், கட வுளுக்கு ஆற்றும் தொண்டு என்று கருதினர்.

ஆகவே இந்தத் தொழிலை நூற்றாண்டு களாக பயபக்தியுடன் செய்து வந்தனர். இந்தப் பணியை, ஆன்மீகப் பணியை விட மேன்மை யான பணி என்று கருதலாம். இந்த நிலையில் தூய்மைப்பணியாளர்களை வேறு ஒரு பணிக்கு அமர்த் துவதோ அல்லது அவர் களாக வேறு ஒரு பணியைத்தேர்ந்தெடுப்பதோ, கடவுளுக்குச் செய்யும் விரோதமான காரியமாகும் என்று எழுதியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிவிழாவில் கலந்துகொண்ட போது மோடி கூறியதாவது; மனவளர்ச்சி குன்றிய வர்கள், தலித்துகளைப்போன்றவர்கள், அவர்களுக்கும் உங்களைப்போன்று சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் கண்காணிப்பில் வைக்கப் படவேண்டியவர்கள், என்று கூறினார். மோடியின் இந்தப் பேச்சு எவ்வளவு கீழ்த்தரமானது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான எந்த ஒரு திட்ட வரைமுறையையும் முன்வைக்க வில்லை என்றார். மீண்டும் பொய்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது, வாஜ்பாய் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்கிறார் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியது, வி.பிசிங் தலைமையிலான அரசு. இது அனைவருக்கும் தெரிந்த பொதுவான செய்தியாகும்

Read more: http://viduthalai.in/e-paper/78763.html#ixzz2z6IgEwqO

தமிழ் ஓவியா said...


குழப்பத்தின் உச்சியில் முதல் அமைச்சர்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென்று சில புதிய சொற்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவரும் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தைத் தொடங்கியவர் அவர்.

அ.இ.அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும், பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரிலும், காங்கிரசும் போட்டியிட்டாலும் இதுவரை திமுக பற்றியும், காங்கிரஸ் பற்றியுமே காரசாரமாக எழுதிப் படித்து வந்தார். பிஜேபியைப் பற்றி ஏன் அவர் வாய்த் திறக்கவில்லை? மோடியைப்பற்றி ஏன் விமர்சிக்கவில்லை? என்ற வினா பல தரப்பிலும் எழுந்து வந்தது; ஏடுகளும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தன.

பிஜேபிக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையே மறைமுகமான கூட்டு இருப்பதுதான் இதற்குக் காரணம் என்ற நியாயமான விமர்சனங்கள் வெளி வர ஆரம்பித்தன.

மிகவும் காலந்தாழ்ந்து இப்பொழுதுதான் பிஜேபி யைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்ஜெயலலிதா. பிஜேபியுடன் மறைமுகக் கூட்டு என்ற கருத்து வெடித்துக் கிளம்பிய நிலையில், அது தமக்குப் பாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக பிஜேபியை எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். பி.ஜே.பி. காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று கூடக் கூறுகிறார். அதே நேரத்தில் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நரேந்திர மோடியும் முதன் முதலாக திமுகவோடு இணைத்து அஇஅதிமுக-வையும் சாடியுள்ளார் ஜெயலலிதாவும், மோடியும் சொல்லி வைத்துக் கொண்டு பேசுவதுபோல பேசி இருக்கிறார்கள்.

அது எப்படியோ போகட்டும்; அ.இ.அ.தி.மு.க, பொதுச் செயலாளர் என்ன காரணம் கூறி பி.ஜே.பியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறுகிறார்?

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் காவிரி நீர்ப் பற்றியோ, முல்லைப் பெரியாறு பிரச்சினைபற்றியோ, இலங்கைத் தமிழர் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ, கச்சத் தீவைப் பற்றியோ குறிப்பிடப்பட வில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பிஜேபியை எதிர்ப்பதாகக் கூறுகிறார் ஜெயலலிதா.

அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை தேர்தல் கூட்டங்களில் எழுப்பிய வினாவுக்கு அம்மையாரிட மிருந்து விடை இல்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இந்துத்துவா அஜண்டாபற்றி முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?

ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கென்று உள்ள சிறப்புத் தகுதிகளை உறுதிபடுத்தும் அரசமைப்புச் சட்டம் 370ஆவது நீக்கம் குறித்து ஜெயலலிதா அம்மையாரின் கருத்து என்ன? என்ற வினாவைத் தமிழர் தலைவர் எழுப்பியுள்ளார்.

இந்த முக்கியமான வினாவுக்கு விடையளிக்காமல், வேறு பிரச்சினைக்குச் செல்லுகிறார் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர். இதன் மூலம் பிஜேபியின் இந்துத்துவா கொள்கையோடு ஒத்துப் போகிறார் என்று பொருள். இந்த ஆபத்தான போக்கை தமிழக வாக்காளப் பெரு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் கணிப்புகள் சில நாட்களாக, அஇஅதி முகவுக்குப் பாதகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் பிஜேபியைப்பற்றி இந்த அளவுக்காவது பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

திடீரென்று காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளின் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த மூன்றாவது அணியைச் சுக்கல் நூறாக நொறுக்கிய அம்மையாரா அது குறித்துப் பேசுவது? இடதுசாரிகள் இப்பொழுது என்ன நினைப்பார்கள்?

இந்த அம்மாவுக்கு என்னாச்சு? மூன்றாவது அணிக்காகத் தானே இந்த அம்மையாரோடு கூட்டணி வைக்க முயற்சித்தோம், இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்துக் கொண்டவர் அஇஅதிமுக பொதுச் செயலாளர் தானே! இந்த நிலையில் மூன்றாவது அணியைப்பற்றிப் பேசுகிறாரே - இது என்ன குழப்பம்! இந்த அம்மாவுக்கு என்று தெளிவான திட்டவட்டமான சிந்தனை ஏதும் கிடையாதா? என்று இடதுசாரிகள் மட்டுமல்ல; விவரம் தெரிந்த எவரும் அவ்வாறு கருதவே செய்வார்கள்.

ஆக அம்மையார் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது; தோல்விப் பயம் காரணமாக நேற்று என்ன சொன்னோம், இன்று என்ன சொல்லுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட குழப்பவாதியை வெற்றியடையச் செய்தால் நாடுதான் குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்; முன்னுக்கு பின் முரணாகப் பேசும் அம்மையாருக்கு இந்தத் தேர்தலில், தக்க பாடத்தைப் போதிப்பது தமிழக வாக்காளர்களின் முக்கியக் கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78767.html#ixzz2z6JEic00

தமிழ் ஓவியா said...


மக்களே நீதிபதிகள், நல்ல தீர்ப்பை தருவார்கள்! - ஆ. ராசா பேட்டி


மக்களை நீதிபதிகளாக கருதி, 'நல்ல தீர்ப்பை தாருங்கள்' என, கேட்கிறேன்; நிச்சயம் தருவார்கள். அதேபோல, ஜெயலலிதா மீது நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கின் விவரங்களை முழுமையாக மக்களிடம் தெரிவித்து, அவரால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா? இதனை சவாலாகவே கேட்கிறேன்,'' என, நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராஜா சவால் விட்டு உள்ளார். மற்ற எம்.பி.,க்கள் ஓட்டம்பிடிக்கும் நேரத்தில், தான் சிறையில் இருந்த போதும், தொகுதி பிரச்சினைகளை கவனிக்க நிர்வாகிகளை நியமித்து நற்பணியாற்றியதால், தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, தனது தேர்தல் பிரச்சாரம், வெற்றி வாய்ப்பு மற்றும் சூழ்ந்து உள்ள சர்ச்சைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


நீலகிரி தொகுதியில், தற்போதைய சூழலில், அனைத்து கட்சிகளின் பிரச்சார வியூகங்களையும், 'பா.ஜ, வேட்பாளரின் மனு தள்ளுபடி' சம்பவம் மாற்றியுள்ளது. தி.மு.க.,வின் பிரச்சார வியூகத்தை இது எப்படி பாதித்து உள்ளது?

தி.மு.க.,வின் தேர்தல் பிரச்சாரம், எங்களுடைய திட்டப்படிதான் நடந்து வருகிறது. என் தொகுதியில், நான் இதுவரை மக்களுக்கு செய்த பணிகளை வைத்து தான், மக்களை சந்தித்து, ஓட்டு கேட்கிறேன். புதிய வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை. வெற்றி பெற்றால் மக்களுக்காக மேலும் பல்வேறு பணிகளை நிச்சயம் செயல்படுத்துவேன்.

'2ஜி' அலைக்கற்றை ஊழல் குற்றச் சாட்டு தொடர்பாக, நீங்கள் சிறையில் இருந்த காலத்தில், உங்கள் தொகுதி யில் நடந்த வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?

மலை மாவட்டம், சமவெளி பகுதி என்று பாராமல், பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி உள்ளேன். சிறையில் இருந்த காலத்தில் கூட, என் தொகுதி நிதியில், 19 கோடி ரூபாய் மதிப் பீட்டில், 510 பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்து, அதில், 80 சதவீத பணிகள் நிறைவேறி உள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடியும்.குறிப்பாக, மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமங்களுக்கு, சிறப்பு அனுமதியின் கீழ், மின் இணைப்பு கிடைக்க செய்தேன். மேலும், மேட்டுப் பாளையம் மற்றும் ஊட்டியில் இரண்டு அலுவலகங்களை திறந்து, மக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களுக்கு தேவையானவற்றை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.

'2ஜி' வழக்கு, சிறைவாசம் ஆகியவை உங்களை பிரபலப்படுத்தியதா, பிரச்சினையில் ஆழ்த்தியதா?

எல்லா காலகட்டங்களிலும், ஒரு புரட்சி வரும்போது, அதன் வெற்றி என்பது, எளிதாக கிடைத்து விடாது. பல்வேறு எதிர்ப்பு, தடைகள் வரத்தான் செய்யும். அதிலிருந்து மீண்டுவந்து, அதன் பயன்கள் மக்களுக்கு கிடைக்கும்போது, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீர்த்துப்போகும். மக்கள் சக்திக்கு முன், எந்த குற்றச்சாட்டும் நிலைக்காது. அது விரைவில் நடக்கும்.

'2ஜி' வழக்கு பற்றி, ஒரு வக்கீலான உங்களின் கருத்து?

பொதுவாக, 'பி.சி.ஆக்ட்' (ஊழல் தடுப்பு சட்டம்) என்று வரும்போது, மூன்று காரணிகள் அதில்விவாதிக்கப்படும். சொத்து சேர்ப்பு; அரசுக்கு வருவாய் இழப்பு; தனியார் நிறுவனங்கள் பெற்ற பலன் ஆகிய மூன்று சாராம்சங்களை வைத்துதான் இந்த வழக்கு நகரும். நான் குற்றமற்றவன் என்பதை, நிச்சயம் நிரூ பிப்பேன். எனது வழக்கில், வருமானத் துக்கு அதிகமான சொத்து இல்லை; அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை என்பதை ஏற்கனவே சட்டத்தின் முன் நிரூபித்துவிட்டேன். தனியார் நிறுவனங் களின் பலன் பற்றிய விஷயத்தில், மத்திய அரசுக்கும், சி.பி.அய்.,க்கும் இடையே சட்டப்படியான விவாதங்கள் நடந்து வருகின்றன. '2ஜி' ஸ்பெக்ட்ரம் திட்டத் தால், அலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந் துள்ளது. கட்டணம், 50 பைசாவாக குறைந்து உள்ளது. இதுதான், என் முயற்சியால் மக்களுக்கு கிடைத்த பயன்.

'2ஜி' வழக்கு, உங்கள் அரசியல் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது?

இந்த வழக்கை சந்திப்பதற்கு முன்பும், நான் எப்படி இயல்பாக இருந்தேனோ, அப்படித்தான், சிறைக்கு சென்று திரும் பிய போதும் இருக்கிறேன். தி.மு.க., தலை வர் கலைஞர் கூறியதைப் போல், இந்த வழக்கு பலூனை போல் பெரிதாக்கப்பட்டு உள்ளது. பின் ஒன்றுமில்லாமல் போகும். அப்பொழுதும், நான் இதேபோலத் தான் இருப்பேன். எனது மக்கள் பணி தொட ரும். குறிப்பாக, இந்த வழக்கை பொறுத்த வரை, நான் இதுவரை ஒருவாய்தா கூட வாங்கவில்லை. அரசு வக்கீலையோ, நீதிபதியையோ மாற்றச்சொல்லி மனு போடவில்லை.

ஜெயலலிதாவின் பிரச்சார கூட் டங்களில் '2ஜி' வழக்கு தான் முன் வைத்து பேசப்படுகிறது. இது உங் களுக்கு பாதகமாக உள்ளதா?


தமிழ் ஓவியா said...

அவர்கள் என்ன கூறுவது, '2ஜி' ஊழல் குற்றச்சாட்டு குறித்த அனைத்து அம்சங் களையும், மக்களிடையே நானே பிரச்சாரங்களில் தெரிவித்து, அவர்களை நீதிபதிகளாக கருதி, 'நல்ல தீர்ப்பை தாருங்கள்' என, கேட்கிறேன்; நிச்சயம் தருவார்கள். அதுபோல, ஜெயலலிதா மீது நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கின் விவரங்களை, முழுமையாக மக்களிடம் தெரிவித்து, அவரால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா? இதனை சவாலாகவே கேட்கிறேன்.

கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசும் போது, விரக்தி வெளிப்பட்டதே...

கடந்த 1969ஆம் ஆண்டு, பெரியாருக் கும், இது போன்ற விரக்தி ஏற்பட்டது. ஆனால், அதற்கு பின், அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக உழைத்தார். அதேபோல, தலைவர் கலைஞர், சலிப்பையே, உழைப்பாக மாற்றும் ஆற்றல் பெற்றவர். கோவையில் பேசிய பின், மறுநாள் அவிநாசியில் பேசிய பிரச்சார கூட்டத்திலேயே, அது வெளிப்பட்டதே. அவர் இன்னும் பல ஆண்டுகள், மக்களுக்காக நிச்சயம் உழைப்பார்.

பா.ஜ.க., களத்தில் இல்லாத காரணத்தால், தே.மு.தி.க., ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?

நிச்சயம் என் வெற்றிக்கு அது வலுச்சேர்க்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் வெற்றி பெற்று டில்லிக்கு சென்றாலும், அங்கு ஆட்சியில் அமரப்போகும் எந்த ஒரு தேசிய அளவிலான அணியும், உங்கள் கட்சிக்கு எதிர்க்கட்சியாக தான் இருக்கப் போகிறது. அந்த சூழ்நிலை யில் நீலகிரி தொகுதியில் எத்தகைய பணிகளை உங்களால் செயல்படுத்த முடியும்?

டில்லியை பொறுத்தவரை, எதிர்க்கட்சிகள் என்பது, 'எதிரி' கட்சிகளாக நிச்சயம் இருக்காது. எம்.பி.,யாக, நான் இருந்த காலகட்டங்களில், மத்தியில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கும் சென்று, பல்வேறு திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்ற முடிந்தது. நீங்கள் நினைப் பது போல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் கூட, நீலகிரி தொகுதி மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை என்னால் குறிப்பிட்ட துறைகளிடம் பேசி இங்கு கொண்டு வர முடியும்.

சுற்றுலாத்தலமான ஊட்டிக்கு, நீங்கள் அறிவித்த, கேபிள் கார் திட் டம், ஹெலிகாப்டர் சர்வீஸ் திட்டங் கள் என்னாச்சு?

இந்த திட்டங்களின் முதற்கட்ட பணிகளை, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் வந்து, ஊட்டியில் கள ஆய்வு செய்தேன். சில காரணங்களால் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான். வரும் நாட்களில், மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால், நிச்சயம் செயல்படுத்த முடியும்.

* கூடலூரில் பாரதியார் பல்கலை கட்டடம், விடுதி, 2.54 கோடி ரூபாயில் கட்டப்பட்டது

* ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலைக்கு 30 கோடி ரூபாய், மத்திய அரசின் அவசர கால நிதி பெற்றுத் தரப்பட்டது

* கடந்த 2009ல், நீலகிரியில் நடந்த பேரிடர் பாதிப்பின் போது, 100 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன

* மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை, 19.9 கோடி ரூபாயில் அகலப் படுத்தப்பட்டது

* மேட்டுப்பாளையத்தில், 2.19 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

* நீலகிரி தொகுதி சாலை மேம் பாட்டுக்காக, மத்திய நெடுஞ்சாலைத் துறை நிதியில், 100 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டது

* அவிநாசியில் ஒரு கோடி ரூபாயில் சவக்கிடங்கு கட்டப்பட்டது

* அன்னூரை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்பட்டது

* அன்னூரில் புதிய சார்--பதிவாளர் அலுவலக கட்டடம்

* பண்ணாரி சாலை சீரமைப்பு

* மேட்டுப்பாளையம் மருத்துவமனை மேம்பாடு

* சத்தியமங்கலத்தில் புதிய சார்பு நீதிமன்றம் அமைக்க மாநில அரசின் அனுமதி பெற்றுத் தந்தேன்

* அவிநாசி - அத்திக்கடவு திட்ட ஆய் வுக்கு உத்தரவு

* அஞ்சலக அம்பு திட்டத்தின் கீழ், தொகுதி முழுவதிலும், 35 தபால் அலுவலகங்களை மேம்படுத்தியது.

ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியும். இது தவிர, மேலும் பல பணிகள் நடந்து உள்ளன.

- (நன்றி: தினமலர் 16.4.2014)

Read more: http://viduthalai.in/page-2/78768.html#ixzz2z6JhvvYf

தமிழ் ஓவியா said...


திருநங்கைகள் 3ஆம் பாலினம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கலைஞர் வரவேற்பு



சென்னை, ஏப். 16- திருநங்கைகளை 3ஆம் பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவித்ததை திமுக தலைவர் கலைஞர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிடப் பட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்து சமுதாயத் தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாது காக்கத்தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவு கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந் தோம்.

சொன்னதைச் செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதற்கிணங்க, திமுக ஆட்சியில் 15-4-2008இல் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங் களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக் களும், 585 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

20-08-2009இல் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் ரூ. 25 லட்சத்து 53 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. அரவாணிகளுக்காக 150 சுயஉதவிக் குழுக்கள் அமைப்பதற்கு ரூ. 6 லட்சத்து 9 ஆயிரமும், சுய தொழில் தொடங்க ரூ. 64 லட்சமும் வழங்கப்பட் டுள்ளது. 20-10-2011இல் அரவாணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென ரூ 1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருநங்கைகளின் நலனுக்காக திமுக ஆட்சியில் இருந்த போது, இவ்வளவையும் செய்ததோடு, அண்மையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும், அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கு வழங்க திமுக பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை 3ஆம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம். தேர்தல் அறிக்கையில் கூறி, அதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன் பாகவே, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது நிறைவேறு கின்ற வகையில் திருநங்கைகளை 3ஆம் பாலினமாக அறிவித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி யுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.
இந்தத் தீர்ப்பு திருநங்கைகள் வாழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு உள்ள எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத் திலும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுக் காலமாக குரல் கொடுத்த திமுகவிற்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகி யோருக்கும், இந்த வழக்கைத் தொடுத்த லட்சுமி நாராயணன் திரிபாதிக்கும் நம் இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை திமுக சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டு கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/78779.html#ixzz2z6K3oO4p

தமிழ் ஓவியா said...


இந்து அலுவலகத்தில் மாமிச உணவு சாப்பிடக்கூடாதாம்!

தி ஹிந்து (பிரபல ஆங் கிலம் மற்றும் புதிதாக துவங் கப்பட்ட தமிழ் பத்திரிகை யின் தலைமையகமாக இருக் கும் சென்னை அலுவலகத் தின் கேண்டீனில் சாப்பிடுபவர்கள் பெரும்பான்மை யானவர்கள் சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களாம்; அவர் கள் பிற பணியாளர்கள் கொண்டுவரும் அசைவ உணவுவகைகளின் வாசனை யை சகித்துக் கொள்ள முடி யாத காரணத்தால் சங்கடத் திற்குள்ளாகின்றனராம்..

அதனால் மாமிச உணவு சாப்பிடும் தி ஹிந்து(அந்த பத்திரிகை பணியாளர்கள் எந்த காரணம் கொண்டும் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் மாமிச உண வை கேண்டீனுக்கு கொண்டு வராதீர்கள் என்று எச்சரித் திருக்கிறார்.

தி ஹிந்து பத்திரிகை அலுவலகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் துணைத்தலைவர் சிறீதரன்..

மாமிச உணவை தி ஹிந்து கேண்டீனுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஏற் கெனவே இருக்கும் தடையையும் அவர் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருக்கிறார் ஊருக்கெல்லாம் சமத்துவத்தையும், மதச்சார் பற்ற அரசியலையும் போ திக்கும் தி ஹிந்து அலுவலக கேண்டீனில் அசைவ சாப் பாட்டுக்கு இடமில்லை;

மாமிசம் சாப்பிட தடை இருக்கிறது அதை மீறாதீர்கள் என்று கடுமையாக எச்சரிக் கும் சுற்றறிக்கை அனுப்பு கிறார் அதன் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.

அப்படியானால்தி ஹிந்துவில் பணிபுரியும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான அசைவ சாப்பாட்டாளர்கள் தங்கள் உணவை எங்கே சாப்பிடுவது என்கிற நியாயமான கேள்விக்கு பெரும்பான்மை மரக்கறியாளர்களின் அசவுகரியம் பற்றி கவலைப்பட்ட சிறீதரன் பதில் சொல்ல வில்லை. ஒரு வேளை மாமிசம் சாப்பிடுபவர்கள் மனிதர் களே அல்ல என்று நினைத்து விட்டார்களோ!

Read more: http://viduthalai.in/page-2/78787.html#ixzz2z6KLh9Y8

தமிழ் ஓவியா said...


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து சலுகைகள் வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஏப்.16-திரு நங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட் டியலில் சேர்த்து அவர் களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருநங்கைகளை மூன் றாம் பாலினமாக அங்கீ கரித்து அவர்களுக்கு மற்ற வர்களைப் போல் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகை களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல் எஸ்ஏ) பொது நலன் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

ஆண், பெண் என்ற பாலினங்களுக்கு அடுத்த படியாக மூன்றாம் பாலின மாக திருநங்கைகளை பட்டி யலில் சேர்க்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களும் நாட்டின் குடி மக்கள்தான். அவர்களுக்கு மற்றவர்களை போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உட்பட அரசின் அனைத்து சலுகைகளை பெற சம உரிமை உண்டு. சமூகத்தில் முன்பு திருநங் கைகள் மதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் பிரிக்கப் பட்டு அவர்கள் தொந்தர வுக்கு ஆளாகின்றனர்.

இந்திய தண்டனை சட் டத்தின் 377 ஆவது பிரிவும் திருநங்கைகளுக்கு எதிராக காவல்துறையினரால் தவ றாக பயன்படுத்தப்படு கிறது. அவர்களின் சமூக பொருளாதார நிலை திருப்தி கரமாக இல்லை.

அவர்கள் சமூகத்தின் ஒரு பங்கு என் பதால், அவர்களுக்கும் வாக் காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரி மம் உள்ளிட்ட அனைத்து உரிமைகள், சலுகைகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவு திருநங்கைகளுக்கு மட் டுமே பொருந்தும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பொருந்தாது. - இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த உத்தரவை வர வேற்றுள்ள திருநங்கைகள் உரிமை அமைப்பை சேர்ந்த லட்சுமி நாராயண் திரிபாதி, மனித உரிமையை அடிப் படையாக வைத்துதான் நாட்டின் முன்னேற்றமே உள்ளது. எங்களுக்கு சம உரிமை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி ருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-5/78755.html#ixzz2z6Kcgvl9

தமிழ் ஓவியா said...


எதிர்ப்பு! எதிர்ப்பு!! மோடிக்கு சர்வதேச ஊடகங்களும் எதிர்ப்பு


புதுடில்லி, ஏப்.17- பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு பிரதம ராக வாய்ப்பில்லை என்று சர்வதேச அளவில் ஊடகங் கள் கருத்துக்களை வெளி யிட்ட வண்ணம் உள்ளன.

அண்மையில் வெளிவந் துள்ள தி எக்கனாமிஸ்ட் அதன் அட்டையில் நம்பிக் கையான பிரதமர் என்ற தலைப்பிட்டுள்ளது. தன் னுடைய தலையங்கத்தில் கடுமையான வார்த்தை களாகவே, இந்தியாவின் மிக உயர்ந்த அலுவல கத்தை திரு.மோடிக்கு இந்த செய்தித்தாளில் பெற்றுத்தர முடியாது என்று எழுதி உள்ளது. இதுபோன்றே சிறிதுசிறிதாக உருவாக்கி, மோடி அலை என்று இருப் பதாக மோடியின் ஆதரவா ளர்களிடையே கருத்து ஏற் படுத்தப்பட்டது. அதனா லேயே அவரைத் தாக்கும் அறிக்கைகளும், தலையங் கங்களும் வந்தன.

தி கார்டியன் ஏட்டின் ஏப்ரல் 14 ஆம் தேதியிட்ட இதழில், நரேந்திர மோடி என்று தலைப்பிட்டு மோடி யின் ஹிந்துத்துவா தீவிர வாதத்துக்கு பிரிட்டன் தோள் கொடுக்காது என்று எழுத்தாளர் பிரியம்வதா கோபால் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி அய்க்கிய ராஜ்ஜியம் (இங்கிலாந்து) அம்மனிதருடனான தொடர்புகளைத் துண் டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை உருவாக்கி உள்ளார். அவர் எழுதும் போது, உலகமே அறிந் துள்ள, முக்கியமாக வலது சாரித்தன்மையில் மீண்டும் தீவிரத்துடன் இருப்பதை அறிந்து நாம் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிட்டன் பாசி சத்துக்கு எதிராக உள்ள நிலையில், நாட்டின் நீதி, நிர்வாகம் போன்ற அதிகா ரத்தை கண்டிப்பாக மோடி போன்றவர்கள் பெற அனு மதிக்கக் கூடாது.

கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில், தானேரிச் சார்டு சுருக்கமாக மோடி குறித்து எழுதும்போது, படிகம்கூட வைரஸ் பாதிப் புக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி பிரதமரானால் இந்தியா நீதியின் பாதைக்கு வரவே முடியாது. வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி தரப்பில் கூறுவது குறித்து கூறும்போது,

குஜராத் மாநிலத்தில், பொருளாதார வளர்ச்சி என் பதைவிட மோடியின் செயல் அதிபயங்கரமானது. அடிப்படை மனிதத் தன்மை குறித்து மறக்கலாமா? வளர்ச்சி விகிதத்தை உயர்த் துவதில் பெரும்பான்மை இந்தியர் சகிப்புத்தன்மை யற்ற, கருணையற்ற, ஒரு சார்பு நிலையில் இருப்பது தான் என்றால் நீதி இல் லையே என்று குறிப்பிட் டுள்ளார்.

மோடி தன் திரும ணத்தை தேர்தல் உறுதி ஆவ ணத்தில் ஒப்புக்கொண் டுள்ள தகவலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தி பாகிஸ்தான் பிரஸ் குறிப்பாக மோடியின் காஷ் மீர் நிலைப்பாடு குறித்து எழுதியுள்ளது. தி எக்ஸ் பிரஸ் டிரிபியூனில் சஞ்சய் குமார் மோடி தென் ஆசி யாவில் பொது நியதி களுக்கு சவால் விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீரின் நிலையில் மாற்றம் செய்ய நினைத்தாலோ, அணுக் கொள்கையை பின்னுக்குத் தள்ளினாலோ கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் கேடா னவர் மோடி என்றும் கூறியுள்ளார்.

ஹஃப்ஃபிங்டன் போஸ்ட்டில் மூன்று முறை சுனில் ஆடம்ஸ் என்பவர் மோடிக்கு ஆதரவாக எழுதி யிருந்தாலும், மார்ச் 31 அன்று மோடி ஒரு கருவி தான் என்கிறார். இந்தியா வின் பின்னணியை விட்டு விட்டு அல்லது பாதுகாப்பு இல்லாத பகுதிகளையா வது நீக்கிவிட்டு, பிரபல பார்ப்பனர் கூறுவதுபோல, கணவன் - மனைவியி டையே கொடுத்தலும், பெறுதலும் போல் இருக்கவேண்டும் என்று ஆடம்ஸ் கூறுகிறார்.

- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78801.html#ixzz2zC96RLay

தமிழ் ஓவியா said...


மோடியை எதிர்த்துக் கிளம்புகிறார்கள் உள்நாட்டு - வெளிநாட்டு அறிஞர்கள்


புதுடில்லி, ஏப்.17- பாஜக தலைவர் மோடி, தன்னு டைய பிரதமர் பதவிக்கான ஓட்டத்தின் இறுதிக்கட் டத்தை எட்டும் நிலையில் உள்ளார். இந்நிலையில் உள் நாட்டிலும், வெளிநாடுகளி லும் உள்ள சுதந்திர சிந்த னையாளர்கள், அறிஞர்கள் மோடிக்கு எதிராக உள்ள னர் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.

அவதார புருஷர்போல் உருவகம் பெற்று பிரச் சாரக்களத்தில் உள்ள மோடி மீதான எதிர்தாக்குதல் அவ ரைச்சுற்றி முழுவடிவத்தை அடைந்துவருகின்றது. சுமார் 25 கலைஞர்கள், கல்வியா ளர்கள், எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக கள மிறங்கியுள்ளனர்.

எழுத்தாளரும், நாவலா சிரியருமான சல்மான் ருஷ்டி இங்கிலாந்திலிருந்து வெளி வரும் தி கார்டியன் செய்தித்தாளில் மோடி பிரத மர் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளதுகுறித்து தீர்க்க முடியாத கவலை என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.

நீதிக்கான நடத்தையிலி ருந்தும், அரசியல் நாகரிகங் களில் மாறுபட்டும் முற்றி லும் முரண்பட்டுள்ள மோடி யின் நடத்தை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசமைப் புக்கு பல்வேறு வகைப் பட்ட விளக்கங்களைக் கூறு வதற்கு ஒப்பாக உள்ளது என்று ருஷ்டி எழுதுகிறார். அதைப்போலவே கலைஞ ராகிய அனீஷ் கபூரும் எழுதி யுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள பிரியம்வதா கோபால், மேற்கத்திய ஊடகங்கள் யாவும் சரியாக மோடியை விமர்சித்தே எழுதி வரு கின்றன. 2002 ஆம் ஆண் டில் குஜராத்தில் நடை பெற்ற கலவரங்களில் மோடியின் பங்குபற்றி மட்டு மின்றி, அமைதிக்கு உதவாத, மோசமான வெளி நாட்டுக்கொள்கையும் மோடி பிரதமராக நிறுத்தப் படும்போது, அவர் முன் னுள்ள கேள்விகளாகும். ஹிந்து தீவிரவாதத்துக்கு பிரிட்டன் என்றுமே தோள் கொடுக்காது. கலவரங்களில் தாக்குதல் சம்பவங் களைப் பற்றிக்கூறும்போது, உணர்ச் சிவசத்தால் ஏற்பட்டதாக பாஜக கூறிவரு கிறது என்று கார்டியன் இதழில் எழுதி யுள்ளார்.

இலண்டனில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட எழுத்தாளர் இயக்கமாகிய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், மோடி போட்டியிடும் வாரணாசி யில், மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ள தாகவும், கவிஞர் குல்சார், ஷப்னம் ஆஸ்மி மற்றும் இயக்குநர் மகேஷ் பட் உள் ளிட்ட பிரபலமானவர் களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட அழைக்கப்பட்டுள் ளனர்.

இயக்குநர் பட் கூறும் போது, வளர்ச்சி என்று ஓங்கி ஒலிப்பது, இலைமறை யாக உள்ள சங்கத்தின் (ராஷ் டிரிய சுயம் சேவக் சங்கம்) கொள்கைகளை மறைப்ப தற்கு வேண்டுமானால் பயன் படக்கூடும். சர்வாதிகாரிக்கு பெரும்பான்மை ஆதரவு என்பது மக்களுக்கு எதிரா கவே இருக்கும்.

மோடி பங்கேற்கும் ஹிந் துத்துவாவை முதன்மைப் படுத்தும் பிரச்சார நிகழ்ச்சி களை, இனவெறியுடன் கூடிய ஹிந்துத்துவா நிகழ்ச்சி களைப் புறக்கணிக்க வேண் டும். மாற்றங்களை ஏற்காத வலதுசாரிகள் கலாச்சாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு பிரதமராக வருவது குறித்து பலரும் அச்சத்துடன் உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் இயக்குநர் பட், மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். அவர் கூறும்போது, ஒரு படத்தயாரிப்பாளர் என்கிற வகையில், விளம்பரத்துக்கு உள்ளதெல்லாம் நல்ல படங்களாக இருப்பதில்லை என்று என்னால் கூற முடி யும் என்றார். அன்ஹட் என்கிற தொண்டு நிறுவனத் தை நடத்திவரும் ஷப்னம் ஆஸ்மி கூறும்போது, 50 அமைப்புகள், நூற்றுக்கணக் கான தொகுதிகளை சுற்றி வருவது, இரண்டாயிரம் தொண்டர்களுடன் அதி வேகத்துடன் இயக்கிவரும் மோடி என்று அனைத்தையும் கண்டாலும், நம் அரசமைப் பையும், ஜனநாயகத்தையும் காக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 15.4.2014, புதுடில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78800.html#ixzz2zC9T2SzZ

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உயிர்

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல்சாதியான் என்றோ எவனும் மதிக்கமாட்டான். - (விடுதலை, 3.12.1971)

Read more: http://viduthalai.in/page-2/78796.html#ixzz2zC9fXdnm

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்- உஷார்!

பாபர் மசூதி இடிப்புப்பற்றி கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய ஏடு வெளியிட்டுள்ள தகவல் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பி.ஜே.பி. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் காவடி எடுத்துப் பார்த்தார்கள். அதைத் தடை செய்யவேண்டும் என்றனர் - தேர்தல் ஆணையம் உடன்படவில்லை.

23 முக்கிய தலைவர்கள் பேட்டி எடுக்கப்பட்டனர் - இரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்துவிட்டனர்.

இந்த இரகசிய வீடியோ பதிவில் இடம்பெற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டால் ஒரு வகையில் ஆச்சரியமாகவும் - ஏன் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.

வினய் கட்டியார், உமாபாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த், சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி, சாத்வி ரிதம்பரா, மஹந்த் அவைத்யநாத், சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்ட மேலும் பி.ஜே.பி. பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தனர்.

17 ஆண்டு விசாரணைக்குப் பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பாபர் மசூதி இடிப்பில் 68 பேர் குற்றவாளி கள் என்று அறுதியிட்டுக் கூறியது. வாஜ்பேயி பெயரை எப்படி சேர்க்கலாம் என்று நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்த யோக்கிய சிகாமணிகள்தான் இந்தப் பி.ஜே.பி.யினர் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் அவர்களின் அகராதியில் கிடையாதே!

ரேபரேலி (உத்தரப்பிரதேசம்) நீதிமன்றம் ஏற்கெ னவே அத்வானி உள்பட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஜி), 149, 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தது.

கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளை வித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்ற குற்றங்களின் பிரிவுகள் இவை.

அத்வானியே தலைமை தாங்கிதான் பாபர் மசூதியை இடித்தார். அத்வானிபற்றிய குற்றப் பத்திரிகையில் சி.பி.அய். பகிரங்கமாகக் கூறியுள்ளது.

நீங்களும், மற்றவர்களும் பாபர் மசூதியை இடிக்க ஒரு சதித் திட்டம் தீட்டி இருக்கிறீர்கள். சம்பவ இடத்தில் அன்று காலை (1992, டிசம்பர் 6) பத்தரை மணியளவில் பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிரமாகப் பங்கெடுத்திருக் கிறீர்கள். பல தலைவர்களும் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கு என்று ஆவேசமாகப் பேசி, கரசேவகர் களை, தொண்டர்களைத் தூண்டினீர்கள், காலை 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு தொண்டர்களுக் குக் கட்டளையிட்டீர்கள். மசூதியை இடிக்க டிராக்டர் களோ, புல்டோசர்களோ வேண்டாம். ஆளுக்கொரு தடியை எடுத்தாலே போதும் - மசூதி இடிந்துவிடும் என்று ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள்.

மசூதி இடிக்கப்படும் வரை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கல்யாண்சிங் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று சொன்னீர்கள். அப்பொழுது தான் மத்தியப் படை, மசூதி இடிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்று முதலமைச்சர் கல்யாண்சிங்குக்கு யோசனை சொன்னீர்கள்.

தமிழ் ஓவியா said...

கரசேவை என்றால் பஜனையும், பக்திக் கீர்த்தனை யும் பாடுவதல்ல. சர்ச்சைக்குரிய, தகராறுக்குரிய 2.73 ஏக்கர் நிலத்தில் செங்கல் கொண்டு ராமர் கோவில் கட்டுவதாகும் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று அத்வானிமீது சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் பிற்பகல் 3.15 மணிக்கு மத்தியப் படையினர் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்க மசூதிகளின் வாயில்களை இழுத்து மூடுங்கள் என்று உத்தரவிட் டீர்கள் என்ற தகவலும் அதில் அடக்கம்.

பி.ஜே.பி.யில் இருந்து விலகிய நிலையில், கல்யாண் சிங்கும், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களை நம்பி ஏமாந்தேன் என்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினாரே! (தினமணி, 3.6.2009).

அதுமட்டுமல்ல, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா அய்.பி.எஸ். என்பவரும், அத்வானிதான் கரசேவகர்களுக்குக் கட்டளையிட்டார் என்று லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் கூறினாரே!

பிசினஸ் இந்தியா ஏட்டின் செய்தியாளர் ருச்சிரா குப்தாவும் அத்வானியின் கட்டளைகள்பற்றி லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் சொன்னதுண்டே!

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் - அவர் களைக் காப்பாற்றுங்கள் என்று அத்வானியிடம் கேட்டுக் கொண்டேன்; அவரோ அசைந்து கொடுக்கவில்லை. மாறாக எனக்கு இனிப்பு வழங்கினார் என்று அந்தப் பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, நாடாளுமன்றத் திலேயே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சித் தலைவ ராகிய சுஷ்மா சுவராஜ் என்ன கூறினார் தெரியுமா? பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்ட னையை ஏற்கத் தயார்! என்று சொன்னாரே! (தினமலர், 9.12.2009).

இவ்வளவுக்குப் பிறகும் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள் என்றால், இதனைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) உரிய முறையில் வழக்கை நடத்தியிருந்தால், இந்தப் பிஜேபி தலைவர்கள் எல்லாம் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியையே இழந்து இருப்பார்களே!

கோப்ரா போஸ்ட் புலனாய்வு இணைய தள நிறுவனம், தேர்தல் நேரத்தில் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பாபர் மசூதியை இடித்த மதவெறியர்களை ஆளவிடலாமா? என்ற வினாவை வாக்காளர்கள் மத்தியில் எழுப்புவது அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78797.html#ixzz2zC9nw2v6

தமிழ் ஓவியா said...


கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் திமுக தான் பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு


அருள்புரம், ஏப். 17- கைத் தறி நெசவாளர்களின் வளர்ச்சி என்றென்றும் உற்ற துணை யாக இருப்பது திராவிட முன் னேற்றக்கழகம் தான் என்று சுப.வீரபாண்டியன் குறிப் பிட்டார்.

திருப்பூர் மாவட்டம், பல் லடம் ஒன்றியத்திற்குட்பட்ட அருள்புரத்தில் (14.4.2014) அன்று மாலை 6 மணியள வில் ஜனநாயக முற்போக் குக் கூட்டணியின் சார்பில் திறந்த ஜீப்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பல்ல டம் ஒன்றிய திமுக செயலா ளர் ராஜசேகர் தலைமை தாங் கினார்.

இப்பிரச்சாரத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பா ளர் வழக்குரைஞர் கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பேசியதாவது: தமிழகத்தில் காலங்காலமாக தொன்று தொட்டு இருந்து வரும் தொழில்கள் உழவு, நெசவு, மீன்பிடிப்பு ஆகிய வைகளாகும். இந்த அடிப் படையான தொழில்களுக்கு கலைஞர் ஆட்சி என்னென்ன நன்மைகளைச் செய்தது! இன்றைய ஆட்சி என்ன செய் துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற் குத்தான் இந்தக்கூட்டம்.

கடன் நீக்கம்

விவசாயிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய் விவசாயக்கடன் ரத்து செய் யப்பட்டது. இதன் மூலம் 2,26,000 குடும்பங்கள் பயன் பெற்றன. மிகமுக்கியமாக இதில் அதிமுகவைச் சார்ந்த நிலவுடைமையாளர் தான் அதிக அளவில் பயன்பெற் றுள்ளார்கள். பாரபட்சமின்றி அனைத்துக் கட்சி நண்பர் களும் இலாபமடைந்திருக் கின்றார்கள். இதற்கு நன்றி காட்ட வேண்டாமா?

இலவச மின்சாரம்

மின்சாரமே இல்லாத நாட்கள் தான் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இலவச மின்சாரம் எப்படி வரும்? தமிழகம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. மின் சாரக் கம்பியில் துணிகாயப் போடும்நிலை ஏற்பட்டுள் ளது. தண்ணீரை ஒரு அரசாங் கம் விற்பனை செய்கிற தென்றால் உலகிலேயே அது தமிழ்நாட்டு அரசாங்கம் தான். கலைஞர் இலவச மின் சாரம் தந்தாரே! விவசாயப் பெருங்குடிமக்கள் நினைத் துப் பார்க்க வேண்டாமா?

உழவர் சந்தை

விவசாயிகளின் உற்பத் திக்கு சரியான விலை கிடைக்க கலைஞர் அவர்கள் உழவர் சந்தையைக் கொண்டு வந் தார். இதன் வரவால் எத் தனை விவசாயக் குடும்பங் கள் மகிழ்ச்சிக் கடலில் தத் தளித்தார்கள் தெரியுமா? முதலில் 117 சந்தைகளை கலைஞர் கொண்டு வந்தார். பிறகு அதிக எண்ணிக்கை யில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது 13 காய் கறிக்கடைகளை கோடிக் கணக்கான மக்கள் வாழ் கின்ற நாட்டில் தற்போதைய அரசு திறந்துள்ளது. இது போன்றவர்களுக்கு இனியும் வாக்களிக்கலாமா?
கைத்தறித்தொழில் கைத்தறித்தொழிலுக்கு எப்போதும் துணை நிற்பது திமுக தான். கைத்தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்டி ருந்த மத்திய மதிப்புக் கூட்டு வரியை நீக்கிய ஆட்சி திமுக வின் பொற்கால ஆட்சி, ஆனால் இப்போது இப்பகு தியில் விசைத்தறிகள் ஓட வில்லை. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி, உரிமை யாளர்களின் வேலை நிறுத் தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜவுளி உற்பத்தியா ளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப் பந்தப்படி விசைத்தறி உரி மையாளர்களுக்கு உயர்வு தரவில்லை. இப்பிரச்சினை யைத்தீர்க்க தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அன்றாடம் தொழில் நிமித்தமாகப் பய ணித்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், பேருந்து கட்டண உயர்வைப் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நீங்களே நன்றாகச் சிந்தித் துப்பாருங்கள்.

மீன்பிடி தொழிலுக்கு எவ்வித நன்மைகளையும், பாதுகாப்பையும் வழங்காத அரசாக தற்போதைய அரசு இருந்து வருகிறது. இந்த நிலைமாற அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் கணேஷ் குமார் அவர்களை நீங்களெல் லாம் பெற்றிபெற வைக்க வேண்டும் என்று சுப.வீ. அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் யாழ்.ஆறுச் சாமி, பேராசிரியர் அவர்க ளுக்கு சிறப்பு செய்தார். திரா விட இயக்கத் தமிழ் பேரவை யின் மாநில இணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராசு, சேகாம்பாளையம் ரங்கசாமி, ரமேஷ், திருப்பூர் பிரகாசு, சிவாசலமூர்த்தி, சரவண மூர்த்தி, திமுக இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, தி.க இளைஞரணியைச் சார்ந்த மணிகண்டன் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட் டணியின் செயல் வீரர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/78827.html#ixzz2zCAumyBS

தமிழ் ஓவியா said...


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேண்டுகோள்

நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உங்களின் விலை மதிப்பற்ற வாக்குரிமையை யாருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுத்த வேண்டுகிறோம்.

நடைபெறும் தேர்தல் அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவது யார் என்பதை தீர்மானிக்க அல்ல -
உங்கள் தலைவிதியை- உங்கள் சமுதாய எதிர்காலத்தை நிர்மாணிக்கும் தேர்தல் ; இதில் நாம் சரியான முடிவு எடுக்காவிடில் அதன் பாதிப்பு அடுத்த நூற்றாண்டையும் தாண்டி இருக்கும்.

மதச் சார்பற்ற ஆட்சி அமைய ஒத்துழைப்பதா ? - மதவெறி பாசிச சக்தி நாட்டை ஆள அனுமதிப்பதா ? என்பதே நம்முன் உள்ள கேள்வி. பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை அதன் மதவெறியை அம்பலப் படுத்தியுள்ளது.

முஸ்லிம் உயிர் மூச்சான ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமாக, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்; பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற பா.ஜ.க அறிவிப்புக்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு விடப்பட்ட சவால்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க வோடு தே.மு.தி.க, பா.ம.க, ,ம.தி.மு.க, அய்.ஜே.கே, பு.நீ.க, கொ.மு.க என்ற கட்சிகள் சந்தர்ப்பவாத பொருந்தாக் கூட்டணியை அமைத்து மதவாதத்திற்கு துணைபோகின்றன.

தனியாகப் போட்டியிட்டாலும் அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க வின் மறு அவதாரமே!

மதமாற்ற தடைசட்டம், மதப்பிரச்சாரத்திற்கு கட்டுப் பாடு, ஆலயங்களில் ஆடுமாடு அறுக்கத்தடை என்ற சட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா, அயோத்தியில் ராமருக்கு ஆலயம் - பொது சிவில்சட்டம் அ.இ.அ.தி.மு.க ஆதரிக்கும் என பொதுக்குழுவிலேயே தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியவர்.

தனி இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர் - முஸ்லிம்கள் மட்டும் தான் சிறுபான்மையினரா, அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் மற்றவர்கள் போராட மாட்டார்களா ? என பகிரங்கமாக கேட்டவர்.

தேர்தல் பிரச்சாரங்களில் அ.இ.அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் ஒருவரை யொருவர் விமர்சிப்பதில்லை என்பதிலிருந்தே இந்த இரு கட்சிகளின் நெருக்கத்தை தெரிந்து கொள்ளலாம்

எனவே அ.இ.அ.தி.மு.கவுக்கு அளிக்கும் ஓட்டு பா.ஜ.கவுக்கு போடுவதற்கே சமம்.

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைவதற்கும் சிறுபான் மையினரின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்படுவதற்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியே உறுதி கூறியுள்ளது.

தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எண்ணற்ற அமைப் புக்கள், இயக்கங்கள் இக்கூட்டணியை ஆதரிக்கின்றன.

டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழகம் சிறுபான்மையினர் நலனில் என்றென்றும் அக்கறை கொண்ட கட்சி.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப்பின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற டாக்டர் கலைஞர் 1969 நவம்பர் 13இல் பிற்பட்டோர் நலக்குழுவை அமைத்து அதன் பரிந்துரையின்பேரில் முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
15-09-2007இல் கல்வி - வேலை வாய்ப்பில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியவர் கலைஞர்.

ஆரம்ப கல்வி, மேற்படிப்பு, தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திறன் வளர்ப்பு பயிற்சி, விடுதிகள் -

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் தொடங்கி, தனிநபர் கடன் -
முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம் அமைத்து மாவட்டம் தோறும் ஆண்டு ஒன்றுக்கு

ரூபாய் 20 இலட்சம் இணைமாணியம் -

உலமாக்கள் பணியாளர் நலவாரியம் -

இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிறை சென்றவர்களுக்கும் மறுவாழ்வுத்திட்டம் -

கபரஸ்தான் பாதுகாப்பு, பட்டா, சுற்று சுவர் -
சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டபூர்வ அந்தஸ்த்து-
சிறுபான்மையினருக்கென தனி இயக்குனரகம் -

பல்கலை கழகங்களில் இஸ்லாமிய ஆய்வுமையம் -உருது அக்காடமி, சிறுபான்மை மொழிகளுக்கு உரிய அந்தஸ்த்து-

திருமணக் கட்டாயச் சட்டத்தில் முஸ்லிம் திரு மணத்திற்கு 1அ தனிப்படிவம் அதன்மூலம் தஃப்தர் பாதுகாப்பு-

சிறுபான்மையினர் சுயநிதி, பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பணியாளர்களுக்கு அரசு ஊதியம், அதற்கு ஆண்டுதோறும் ரூபாய் 331 கோடி

இப்படி எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய தி.மு.க வை நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்ப்போம் அந்த தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம்.

தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட அணிகளை தவிர மற்றவை சுயேட்சைகளுக்கு சமம் எனவே அவர்களுக்கு போடும் வாக்குகள் வீணாகிவிடும் என்பதை மனதில் கொண்டு,

சமூக நீதியை நிலைநாட்ட. மதசார்பற்ற அரசு அமைக்க

ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (மணிச்சுடர், 14.4.2014)

Read more: http://viduthalai.in/page-4/78819.html#ixzz2zCB90hQC

தமிழ் ஓவியா said...


தேர்தல்: தா.பாண்டியன் கணிப்பு இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?


திமுகவுக்குத் தொடக்கத்தில் இருந்த தைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அதிமுக எடுத்த நிலை காரணமாக திமுகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப் பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது திமுக முன்னேறி இருக்கிறது.

அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அதிமுக வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளி வாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி, வெற்றிபெற மாட் டோம் என்பதை அவர்களாகவே அறிவித்து விட்டார்கள். தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பி.ஜே.பி ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று நானும் நினைத் தது உண்டு.

ஆனால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர் களும், அவர்களோடு கூட்டு சேர்ந்தவர்க ளும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீரவசனம் பேசமாட்டேன். ஏனென் றால் தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை.

- தா.பாண்டியன் - ஜூனியர் விகடன் (20.4.14) பேட்டியிலிருந்து

Read more: http://viduthalai.in/page-8/78823.html#ixzz2zCCGml24