Search This Blog
18.4.14
இராஜாஜியின் பேய் ஆட்டம்! - பெரியார்
திராவிடர் கழகத்தின் வளர்ச்சியையும், கழகத்திற்கு வளர்த்து வரும் மக்கள் ஆதரவையும் கண்ட நண்பர் ஆச்சாரியார், தன் உணர்வை இழந்து ஜன்னி கண்டவர் போல் ஏதேதோ பேசுகிறார். ஆச்சாரியார் அவர்களுக்கு உள்ள பெருமை எல்லாம் அவர் அறிவாளி என்பதுதானே ஒழிய, மற்றபடி அவரது நடப்புக்காகவோ, எண்ணத்திற்காகவோ, அறிஞர்கள் கருத்து மாத்திரமல்லாமல் அவருக்கும் தெரியும் என்று கருதுகிறேன்.
நம்மைப் பொறுத்தவரை, அவரது அறிவைப் பாராட்டினதும், அவரிடம் நமக்கு அன்பும், மரியாதையும் இருந்து வருகின்றன. ஆச்சாரியார் தன் இனத்திற்கு - பார்ப்பனருக்காகவே பாடுபடுகிறவர். அதற்காகவே வாழ்பவர் என்பது நமது முடிந்த முடிவு. அதை நாம் குறை கூறுவதில்லை. அதற்காக அவருக்குச் சொந்தத்தில் எந்தவிதமான கெடுதி ஏற்படவும் நாம் கனவிலும் நினைத்ததில்லை. நினைக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் தமிழர் இனத்திற்குப் பாடுபட, தமிழரில் இல்லையே என்று பலதடவை வெட்கப்பட்டிருக்கிறேன். துக்கப்பட்டு இருக்கிறேன்.
பார்ப்பனர்களை நான் ஆரியர் என்று குறிப்பிட்டு வருவதில் ஒரு பெரிய ஓட்டையைக் கண்டுபிடித்து விட்டதாகக் கருதிக் கொண்டு நமக்கு ஆச்சாரியார் முட்டாள் பட்டத்தையோ, பைத்திக்காரப் பட்டத்தையோ கட்டி வந்தாலும், ஆச்சாரியார் இந்த ஓட்டையை வேண்டுமென்றே கற்பித்து மக்களை மயக்கப் பார்க்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில், பார்ப்பனர் ஆரிய இனத்தின் கலப்பு என்று ஆச்சாரியார் கூறுவதை நாம் ஒப்புக் கொண்டாலும், திராவிடர்களும் ஒரு அளவுக்காகவாவது அதுபோல் இருக்கலாம் என்றாலும், நாம் ஆரியர் - திராவிடர் (அல்லது தமிழர்) என்பதன் கருத்தும் உண்மையும் என்ன என்பதைப் பலமுறை வெளியாக்கி இருக்கிறோம்.
அதாவது, பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாசாரத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள். அதுவும் தங்களை - தங்களை பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களைத் தாழ்த்தவும் மாத்திரமே அக்கலாசாரத்தை ஒரு சாதனமாகப் பய்னபடுத்திக் கொள்ளுகிறவர்கள். இதனாலேயே, இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால், நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல்லர்; வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண்களும் அய்ரோப்பிய ஆண்களுக்குமாகப் பிறந்தவர்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாகக் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாசாரத்தை அதாவது பழக்க வழக்கம் மனப்பான்மை ஆகியவற்றைக் கையாண்டு, தங்களை சட்டைக்காரர், இந்தோ - அய்ரோப்பியர்கள் என்று சொல்லிக் கொண்டு (வெள்ளையன் காலத்தில்) உயர்வு வாழ்வு, உயர்ந்த சலுகை பெற்று துரை என்ற பெயரால் தொப்பி போட்டுக் கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியன், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக் கொண்டு, ஆரியச் சின்னமாகிய பூணூலைத் தரித்துக் கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மையைக் கொண்டு தனி சலுகை, தனி உரிமை முதலியவற்றை அனுபவித்துக் கொண்டு நம்மை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன்.
இன்று அதைச் சட்டப்பூர்வமாய் கொண்டு அடைந்து வருகிறார்கள். ஆட்சிக் கலப்படமற்ற ஆரியர் ஆட்சி என்பதை ஆச்சாரியார் மறுப்பாரா? டில்லி ஆட்சி என்றால் என்ன? மத்திய ஆட்சி என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே, எல்லாம் பெரிய தலைமைப் பதவிகளிலும் தமிழர் அல்லாதவன் அல்லது ஆரியக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறவன் அடைந்து வருகிறான் என்பதை ஆச்சாரியார் மறுக்க முடியுமா?
இந்தக் காரணத்தில்தான் நான் ஆரியர் - திராவிடர் அல்லது பார்ப்பனர் (பிராமணர்) தமிழர் (சூத்திரர்) என்று பிரித்துக் கூறுகிறேன். இதில் எப்படி ஓட்டை கண்டுபிடிக்க முடியும்?
மற்றும் ஒரு துணிகரமான விஷயம் என்னவென்றால் பார்ப்பானின்
உயர்வாழ்வையே பொதுநல நல்வாழ்வாகவும் பார்ப்பானின் (ஆரிய) ஆட்சியையே நல்ல ஆட்சியாகவும் கொண்டு பேசப்படுவதே ஆகும்.
தமிழ், தமிழ்நாடு, தமிழர் ஆட்சி, தமிழர் வாழ்வு என்பனவெல்லாம் அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஆரிய ஆட்சியின் சட்டமும் திட்டமுமாக இருந்து வருகிறது.
1. மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவு ஒழிந்து மக்கள் ஒரு ஜாதி ஆவதை ஆச்சாரியார் "நான் சர்வ வல்லமையுடன் எதிர்க்கிறேன். இதை நான்தான் சொல்லமுடியும். இதற்காகவே உயிர் வாழ்கிறேன்" என்கிறார்.
2. தமிழ்நாட்டுக்கு "தமிழ்நாடு" என்ற பெயர் கூடாது.
3. தமிழ்நாடு தமிழ்மொழி நாடாக அமைக்கப்படக்கூடாது.
4. தமிழ்நாட்டில் தமிழ்கள் மைனாரிட்டிகளாய் (மற்ற மொழிக்காரர்களை விடக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களாய்) இருக்கும்படியான அளவில் கன்னடியர் நாட்டையும், மலையாளிகள் நாட்டையும், சேர்த்து ஒரு நாடாக்கி தமிழர்களைச் சிறுபிரிவினராக ஆக்க வேண்டும் என்கிறார்.
5. இது முடியாவிட்டால் தமிழ் நாட்டுடன் ஒரு கன்னட ஜில்லாவும், ஒரு மலையாள ஜில்லாவுமாவது சேர்ந்து இப்போது இருக்கிறபடி இருந்து கொண்டு, பார்ப்பனர் அல்லாதவர் - தமிழர் என்ற பெயரால் தமிழனின் பங்கு பதவி, உத்தியோகங்களைப் பெரும்பாலும் கேரளத்தானும், கர்நாடகத்தானுமே அடைந்து இருக்கட்டும் என்கிறார்.
6. இதுவும் முடியாது என்றால், இன்னும் அய்ந்து ஆண்டுகளுக்கு ஆவது பிரிவினை அமைப்பே வேண்டாம் என்கிறார்.
7. இதுவும் முடியாவிட்டால் தமிழ்நாடு டில்லி ஆட்சியில் (மத்திய ஆட்சியில்) இருக்கும்படி தமிழ்நாடு ஆட்சியை டில்லிக்குக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்.
இவற்றை என்ன என்னவோ காரணங்களைச் சாக்காகக் கொண்டு வலியுறுத்துகிறார். இதற்குச் சிறிது கூட சிந்தனை இல்லாமல் வெகு சமீபத்தில் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தையும், சில மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட சட்டசபைத் தீர்மானங்களையும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் அடியோடு எதிர்க்கும் முறையில் துணிவாகப் பேசுகிறார்.
இந்தியாவை 21-சுதந்திர நாடாகப் பிரித்து அந்நாடுகளுக்குப் பூரண அதிகாரம் கொடுப்பது என்று திட்டம் செய்து கொண்டு அந்தப்படி இந்தியாவை மொழி வழியாகவே பிரித்து, 25-ஆண்டுகளாகப் பிரிவினையைக் காரியத்தில் செய்து கொண்டு வந்து, அந்த முயற்சி தமிழ்நாட்டிற்கு வரும்போது, அதுவும் தமிழ்நாட்டானும், கேரள நாட்டானும், கர்நாடக நாட்டானும் அனேகமாய் அபிப்பிராய பேதமில்லாமல் பிரிந்து கொள்ள விரும்பி, ஆவலாய் இருக்கும்போது, அவரவர்கள் சட்டசபையிலும் பிரிந்து கொள்ளத் தீர்மானித்துக் கொண்டிருக்கும்போது - இடையில் தீவட்டிக் கொள்ளைக்காரர் புகுந்தது போல - சில பொறுப்பற்ற நாணயமற்ற சுயநலமிகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கொள்ளைக்கு வருவது போல் முரட்டத்தனமாய்க் கூப்பாடு போட்டுக் கொண்டு பேயாட்டம் ஆடுகிறார். இதைத் தமிழ் மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்றே கருதுகிறார்.
மேலே காட்டப்பட்ட ஏழு அய்ட்ட பேச்சுக்களும், விஷமமும், சதிகளும், துரோகங்களும் நிறைந்து வழிபவைகளாகவே இருக்கின்றன. ஜாதி இருக்க வேண்டுமென்றால் என்ன அர்த்தம்?
"பிராமணன்", "சூத்திரன்", "பஞ்சமன்" என்பதாக மதத்தின்படி, சாஸ்திரத்தின்படி, சட்டத்தின்படி, பழக்கத்தின்படி மக்கள் இருக்க வேண்டும்; நடத்தப்பட வேண்டும். அவரவர்களுக்கு மதசாஸ்திர சட்டப் பழக்க வழக்கத்தின்படி உண்டான தன்மைகள் அவனவன் நடக்க, பலாபலன்களை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதுதானே அர்த்தம்.
இப்பொழுது தெரிகிறதா? பொது மக்களே! ஆச்சாரியார் கல்வித் திட்டத்தை ஆதரித்த முண்டங்களே!! ஆச்சாரியாரின் கல்வித் திட்டம் வர்ணாசிரமத்தை ஜாதி முறையை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டமேயாகும் என்பது.
ஆச்சாரியார் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் அவர் திட்டங்கள் பெரிதும் ஜாதியைக் காப்பாற்றும் திட்டம்தான் என்று நான் கூறி வந்ததும் 1938-இல் ஆச்சாரியார் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் வடமொழியையும் இந்தியையும் தமிழர்களிடையில் கட்டாயமாய் புகுத்தியதன் உள் அந்தரங்கமும் வர்ணாசிரமம் - ஜாதி முறையை பாதுகாக்கவே என்பதும் இப்போது மக்கள் உணரலாம்.
நான் காங்கிரசிலிருந்து விலகக் காரணம் என்ன என்பதும் இப்போதாவது பொது மக்கள் உணரலாம்.
வெள்ளையன் போகாமல் இந்த 10-வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து ஜாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள் மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது.
ஆச்சாரியார் பெண் காந்தியார் மகனைக் காதலித்ததும் யார் யாரோ தடுத்தும் காந்தியார் தடுத்தும் ஆச்சாரியார் தடுத்தும் காந்தர்வ விவாகமாக முடிந்ததும் வெள்ளையன் ஆட்சியின் பலன் அல்லவா? அவ்வளவு ஏன்? பண்டிட் மோதிலால் நேரு மகள் முஸ்லிமைக் காதலித்தது வெள்ளையன் ஆட்சியின் பயன் அல்லவா?
இதனால் ஒரு குறைவுமில்லை என்றாலும் இதன் தத்துவம் ஜாதி செத்து வருகிறது என்பதுதானே! அந்தப் போக்கு அப்படியே சென்று இன்றுவரை வெள்ளையன் இருந்திருந்தால் 100-க்கு 75-பார்ப்பனர்கள் ஒழிந்தே இருப்பார்கள். முற்றும் ஆரியம் மலையேறி இருக்கும். இந்த நிலையில் வெள்ளையன் போக நேரிட்டதும் தமிழ்நாட்டின் ஆட்சி மத்திய ஆட்சியின் கீழ் என்னும் பேரால் வடநாட்டான் ஆரியன் கைக்குப் போனதும் எல்லாம் ஜாதியைக் காப்பதற்கே அல்லாமல் வேறு எதற்கு? உயர்ந்த ஜாதியான் என்பதற்குக் கடுகளவு யோக்கியம், ஒழுக்கம், நாணயம் எவனிடமாவது இருக்கிறதா?
மத்திய ஆட்சி என்பதற்கு ஆக எந்த இலாகாவிலாவது அறிவோ நாணயமோ இருக்கிறதா? துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுத்து மானத்தை விட்டுக் கூட்டிக் கொடுப்பவர்கள், தெரியாதவர்கள் போல் நடித்து மக்களை ஏய்த்து ஈனவாழ்வு வாழ்ந்தாலும் மற்ற பொதுமக்களாவது இன்றைய ஆட்சியின் எல்லாத் துறைகளும் எல்லா முறைகளும் ஜாதியைக் காப்பாற்றவும் புதுப்பிக்கவுமே ஆகும் என்பதை உணர வேண்டாமா? தமிழர்களே! உணர்மின்! ஆத்திரத்தில் சொற்கள் தடிப்பாக வருவதால் மேலே போகப் பயந்து கொண்டு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
மற்ற அய்ட்டங்களைப் பற்றி பின்னால் எழுதலாம் என்று இருக்கிறேன்.
குறிப்பு: இக்கட்டுரையை எழுதத் தொடங்கும்போது சொற்களை நிறுத்தி அடக்கமாகவே போட முடிந்தது. எழுத எழுத ஆத்திரம் மேலோங்கியதால், எனக்கும் கட்டுப்படுத்த முடியாததால், திடீரென்று நிறுத்திக் கொண்டேன்.
--------------------- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "விடுதலை", 21.06.1956
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
எதிர்ப்பு! எதிர்ப்பு!! மோடிக்கு சர்வதேச ஊடகங்களும் எதிர்ப்பு
புதுடில்லி, ஏப்.17- பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு பிரதம ராக வாய்ப்பில்லை என்று சர்வதேச அளவில் ஊடகங் கள் கருத்துக்களை வெளி யிட்ட வண்ணம் உள்ளன.
அண்மையில் வெளிவந் துள்ள தி எக்கனாமிஸ்ட் அதன் அட்டையில் நம்பிக் கையான பிரதமர் என்ற தலைப்பிட்டுள்ளது. தன் னுடைய தலையங்கத்தில் கடுமையான வார்த்தை களாகவே, இந்தியாவின் மிக உயர்ந்த அலுவல கத்தை திரு.மோடிக்கு இந்த செய்தித்தாளில் பெற்றுத்தர முடியாது என்று எழுதி உள்ளது. இதுபோன்றே சிறிதுசிறிதாக உருவாக்கி, மோடி அலை என்று இருப் பதாக மோடியின் ஆதரவா ளர்களிடையே கருத்து ஏற் படுத்தப்பட்டது. அதனா லேயே அவரைத் தாக்கும் அறிக்கைகளும், தலையங் கங்களும் வந்தன.
தி கார்டியன் ஏட்டின் ஏப்ரல் 14 ஆம் தேதியிட்ட இதழில், நரேந்திர மோடி என்று தலைப்பிட்டு மோடி யின் ஹிந்துத்துவா தீவிர வாதத்துக்கு பிரிட்டன் தோள் கொடுக்காது என்று எழுத்தாளர் பிரியம்வதா கோபால் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி அய்க்கிய ராஜ்ஜியம் (இங்கிலாந்து) அம்மனிதருடனான தொடர்புகளைத் துண் டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை உருவாக்கி உள்ளார். அவர் எழுதும் போது, உலகமே அறிந் துள்ள, முக்கியமாக வலது சாரித்தன்மையில் மீண்டும் தீவிரத்துடன் இருப்பதை அறிந்து நாம் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிட்டன் பாசி சத்துக்கு எதிராக உள்ள நிலையில், நாட்டின் நீதி, நிர்வாகம் போன்ற அதிகா ரத்தை கண்டிப்பாக மோடி போன்றவர்கள் பெற அனு மதிக்கக் கூடாது.
கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில், தானேரிச் சார்டு சுருக்கமாக மோடி குறித்து எழுதும்போது, படிகம்கூட வைரஸ் பாதிப் புக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி பிரதமரானால் இந்தியா நீதியின் பாதைக்கு வரவே முடியாது. வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி தரப்பில் கூறுவது குறித்து கூறும்போது,
குஜராத் மாநிலத்தில், பொருளாதார வளர்ச்சி என் பதைவிட மோடியின் செயல் அதிபயங்கரமானது. அடிப்படை மனிதத் தன்மை குறித்து மறக்கலாமா? வளர்ச்சி விகிதத்தை உயர்த் துவதில் பெரும்பான்மை இந்தியர் சகிப்புத்தன்மை யற்ற, கருணையற்ற, ஒரு சார்பு நிலையில் இருப்பது தான் என்றால் நீதி இல் லையே என்று குறிப்பிட் டுள்ளார்.
மோடி தன் திரும ணத்தை தேர்தல் உறுதி ஆவ ணத்தில் ஒப்புக்கொண் டுள்ள தகவலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தி பாகிஸ்தான் பிரஸ் குறிப்பாக மோடியின் காஷ் மீர் நிலைப்பாடு குறித்து எழுதியுள்ளது. தி எக்ஸ் பிரஸ் டிரிபியூனில் சஞ்சய் குமார் மோடி தென் ஆசி யாவில் பொது நியதி களுக்கு சவால் விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீரின் நிலையில் மாற்றம் செய்ய நினைத்தாலோ, அணுக் கொள்கையை பின்னுக்குத் தள்ளினாலோ கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் கேடா னவர் மோடி என்றும் கூறியுள்ளார்.
ஹஃப்ஃபிங்டன் போஸ்ட்டில் மூன்று முறை சுனில் ஆடம்ஸ் என்பவர் மோடிக்கு ஆதரவாக எழுதி யிருந்தாலும், மார்ச் 31 அன்று மோடி ஒரு கருவி தான் என்கிறார். இந்தியா வின் பின்னணியை விட்டு விட்டு அல்லது பாதுகாப்பு இல்லாத பகுதிகளையா வது நீக்கிவிட்டு, பிரபல பார்ப்பனர் கூறுவதுபோல, கணவன் - மனைவியி டையே கொடுத்தலும், பெறுதலும் போல் இருக்கவேண்டும் என்று ஆடம்ஸ் கூறுகிறார்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16.4.2014
Read more: http://viduthalai.in/e-paper/78801.html#ixzz2zC96RLay
காஞ்சி சங்கராச்சாரியாரின் முகமூடியும் மோடியின் கல்யாண பந்தத்தின் மர்மமும்!
15.4.2014 நாளிட்ட தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்துள்ள - இதுவரை மற்ற நாளேடு களிலோ, வார ஏடுகளிலோ வெளிவந்திராத ஒரு செய்தி இதோ, படியுங்கள்!
மோடி தனது மனைவி பெயரை அறிவித்தது எப்படி?: பின்னணியில் காஞ்சி காமாட்சி அம்மனின் அருள் எனத் தகவல் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிட்டவுடன், அது நாடு முழுவதும் மாபெரும் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இந்த விவாதத்தின் தீவிரம் குறைந்துவரும் நிலையில், மோடி தனது மனைவியின் பெயரை அறிவிக்கும் முடி வுக்கு பின்னணியில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் இருப்பதாக அக்கோயில் வட் டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி தசமஹா வித்யா ஹோ மம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டில்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத்துள் ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மனின் பட்டுப்புடவையும் இருந் துள்ளது. இந்தப் பட்டுப் புடவையைக் கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று மோடியிடம் கூறினா ராம். சற்று மவுனம் காத்து பின்னர் வியந்து போய் நரேந்திரமோடி பிரசாதத்தை பெற்றுக்கொண்டாராம். அம்பாள் பக்த ரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப்புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்கு மாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக்கொண்டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவியின் பெயரை குறிப் பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங் களில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து நடராஜ சாஸ்திரியிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந் தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவித் துள்ளார் என்றார் அவர்.
காஞ்சி காமாட்சி மோடிக்காக அருள்பாலித் துள்ளார் போலும்; (அவாள் காஞ்சி காமாட்சி யம்மன்) முழுக்க முழுக்க காஞ்சி மடத்தின்கீழ் - அதாவது ஜெயில் - பெயில் புகழ் ஜெயேந் திர சரசுவதி அன்ட் கோவின் நிர்வாகத்தின்கீழ் நடைபெறுவதால், இந்த ஏற்பாடே பெரிய வாள், சிறியவாள் அனுமதியோடோ அல்லது முழு ஆதரவோடுதானே நடந்திருக்க முடியும்; இல்லையா! (காசி விசாலாட்சியம்மையார் என்ன செய்வாளோ).
காஞ்சி மடத்தின் அருள், நித்திய கல்யாண குணங்களோடு ஆசிகள் வழங்கியுள்ளார், நாளைய பிரதமர் என்ற பூரிப்பில், புளகாங் கிதத்தில் உள்ள ஹரஹர நரேந்திரருக்காக!
இந்த ஹரஹர நரே சத்தம் வடக்கேயுள்ள (ரூப் ஆனந்த்) சங்கராச்சாரிக்கு ஏக கோபத்தை உண்டாக்கி, மோடியை வாரணாசியில் ஒரு வகையாக தேர்தல் வேலை பார்க்க முடிவு செய்துவிட்ட நிலையில்,
இங்கே காஞ்சிப் பெரியவாள் யாகம், யோகம் எல்லாம் செய்து, முந்தைய அத் வானியை வர வழைத்ததுபோல, காஞ்சிக்கு மோடியை தம்பதி சமேதராக வரவழைத்துத் தர முன்னேற்பாடு திட்டமோ!
இதற்காக, செருப்புப் பேச்சுப் புகழ் காரைக் குடி அய்யரும் தனி ஏற்பாடு செய்துள்ளாராம்!
பலே, பலே, யாகம் கைகொடுக்குமா?
மே 16 இல் தெரியும்!
- ஊசிமிளகாய்
Read more: http://viduthalai.in/e-paper/78802.html#ixzz2zC9HNYWD
மோடியை எதிர்த்துக் கிளம்புகிறார்கள் உள்நாட்டு - வெளிநாட்டு அறிஞர்கள்
புதுடில்லி, ஏப்.17- பாஜக தலைவர் மோடி, தன்னு டைய பிரதமர் பதவிக்கான ஓட்டத்தின் இறுதிக்கட் டத்தை எட்டும் நிலையில் உள்ளார். இந்நிலையில் உள் நாட்டிலும், வெளிநாடுகளி லும் உள்ள சுதந்திர சிந்த னையாளர்கள், அறிஞர்கள் மோடிக்கு எதிராக உள்ள னர் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.
அவதார புருஷர்போல் உருவகம் பெற்று பிரச் சாரக்களத்தில் உள்ள மோடி மீதான எதிர்தாக்குதல் அவ ரைச்சுற்றி முழுவடிவத்தை அடைந்துவருகின்றது. சுமார் 25 கலைஞர்கள், கல்வியா ளர்கள், எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக கள மிறங்கியுள்ளனர்.
எழுத்தாளரும், நாவலா சிரியருமான சல்மான் ருஷ்டி இங்கிலாந்திலிருந்து வெளி வரும் தி கார்டியன் செய்தித்தாளில் மோடி பிரத மர் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளதுகுறித்து தீர்க்க முடியாத கவலை என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.
நீதிக்கான நடத்தையிலி ருந்தும், அரசியல் நாகரிகங் களில் மாறுபட்டும் முற்றி லும் முரண்பட்டுள்ள மோடி யின் நடத்தை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசமைப் புக்கு பல்வேறு வகைப் பட்ட விளக்கங்களைக் கூறு வதற்கு ஒப்பாக உள்ளது என்று ருஷ்டி எழுதுகிறார். அதைப்போலவே கலைஞ ராகிய அனீஷ் கபூரும் எழுதி யுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள பிரியம்வதா கோபால், மேற்கத்திய ஊடகங்கள் யாவும் சரியாக மோடியை விமர்சித்தே எழுதி வரு கின்றன. 2002 ஆம் ஆண் டில் குஜராத்தில் நடை பெற்ற கலவரங்களில் மோடியின் பங்குபற்றி மட்டு மின்றி, அமைதிக்கு உதவாத, மோசமான வெளி நாட்டுக்கொள்கையும் மோடி பிரதமராக நிறுத்தப் படும்போது, அவர் முன் னுள்ள கேள்விகளாகும். ஹிந்து தீவிரவாதத்துக்கு பிரிட்டன் என்றுமே தோள் கொடுக்காது. கலவரங்களில் தாக்குதல் சம்பவங் களைப் பற்றிக்கூறும்போது, உணர்ச் சிவசத்தால் ஏற்பட்டதாக பாஜக கூறிவரு கிறது என்று கார்டியன் இதழில் எழுதி யுள்ளார்.
இலண்டனில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட எழுத்தாளர் இயக்கமாகிய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், மோடி போட்டியிடும் வாரணாசி யில், மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ள தாகவும், கவிஞர் குல்சார், ஷப்னம் ஆஸ்மி மற்றும் இயக்குநர் மகேஷ் பட் உள் ளிட்ட பிரபலமானவர் களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட அழைக்கப்பட்டுள் ளனர்.
இயக்குநர் பட் கூறும் போது, வளர்ச்சி என்று ஓங்கி ஒலிப்பது, இலைமறை யாக உள்ள சங்கத்தின் (ராஷ் டிரிய சுயம் சேவக் சங்கம்) கொள்கைகளை மறைப்ப தற்கு வேண்டுமானால் பயன் படக்கூடும். சர்வாதிகாரிக்கு பெரும்பான்மை ஆதரவு என்பது மக்களுக்கு எதிரா கவே இருக்கும்.
மோடி பங்கேற்கும் ஹிந் துத்துவாவை முதன்மைப் படுத்தும் பிரச்சார நிகழ்ச்சி களை, இனவெறியுடன் கூடிய ஹிந்துத்துவா நிகழ்ச்சி களைப் புறக்கணிக்க வேண் டும். மாற்றங்களை ஏற்காத வலதுசாரிகள் கலாச்சாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு பிரதமராக வருவது குறித்து பலரும் அச்சத்துடன் உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் இயக்குநர் பட், மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். அவர் கூறும்போது, ஒரு படத்தயாரிப்பாளர் என்கிற வகையில், விளம்பரத்துக்கு உள்ளதெல்லாம் நல்ல படங்களாக இருப்பதில்லை என்று என்னால் கூற முடி யும் என்றார். அன்ஹட் என்கிற தொண்டு நிறுவனத் தை நடத்திவரும் ஷப்னம் ஆஸ்மி கூறும்போது, 50 அமைப்புகள், நூற்றுக்கணக் கான தொகுதிகளை சுற்றி வருவது, இரண்டாயிரம் தொண்டர்களுடன் அதி வேகத்துடன் இயக்கிவரும் மோடி என்று அனைத்தையும் கண்டாலும், நம் அரசமைப் பையும், ஜனநாயகத்தையும் காக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.
- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 15.4.2014, புதுடில்லி பதிப்பு
Read more: http://viduthalai.in/e-paper/78800.html#ixzz2zC9T2SzZ
பார்ப்பான் உயிர்
பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல்சாதியான் என்றோ எவனும் மதிக்கமாட்டான். - (விடுதலை, 3.12.1971)
Read more: http://viduthalai.in/page-2/78796.html#ixzz2zC9fXdnm
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்- உஷார்!
பாபர் மசூதி இடிப்புப்பற்றி கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய ஏடு வெளியிட்டுள்ள தகவல் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பி.ஜே.பி. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் காவடி எடுத்துப் பார்த்தார்கள். அதைத் தடை செய்யவேண்டும் என்றனர் - தேர்தல் ஆணையம் உடன்படவில்லை.
23 முக்கிய தலைவர்கள் பேட்டி எடுக்கப்பட்டனர் - இரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்துவிட்டனர்.
இந்த இரகசிய வீடியோ பதிவில் இடம்பெற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டால் ஒரு வகையில் ஆச்சரியமாகவும் - ஏன் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.
வினய் கட்டியார், உமாபாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த், சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி, சாத்வி ரிதம்பரா, மஹந்த் அவைத்யநாத், சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்ட மேலும் பி.ஜே.பி. பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தனர்.
17 ஆண்டு விசாரணைக்குப் பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பாபர் மசூதி இடிப்பில் 68 பேர் குற்றவாளி கள் என்று அறுதியிட்டுக் கூறியது. வாஜ்பேயி பெயரை எப்படி சேர்க்கலாம் என்று நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்த யோக்கிய சிகாமணிகள்தான் இந்தப் பி.ஜே.பி.யினர் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் அவர்களின் அகராதியில் கிடையாதே!
ரேபரேலி (உத்தரப்பிரதேசம்) நீதிமன்றம் ஏற்கெ னவே அத்வானி உள்பட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஜி), 149, 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தது.
கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளை வித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்ற குற்றங்களின் பிரிவுகள் இவை.
அத்வானியே தலைமை தாங்கிதான் பாபர் மசூதியை இடித்தார். அத்வானிபற்றிய குற்றப் பத்திரிகையில் சி.பி.அய். பகிரங்கமாகக் கூறியுள்ளது.
நீங்களும், மற்றவர்களும் பாபர் மசூதியை இடிக்க ஒரு சதித் திட்டம் தீட்டி இருக்கிறீர்கள். சம்பவ இடத்தில் அன்று காலை (1992, டிசம்பர் 6) பத்தரை மணியளவில் பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிரமாகப் பங்கெடுத்திருக் கிறீர்கள். பல தலைவர்களும் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கு என்று ஆவேசமாகப் பேசி, கரசேவகர் களை, தொண்டர்களைத் தூண்டினீர்கள், காலை 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு தொண்டர்களுக் குக் கட்டளையிட்டீர்கள். மசூதியை இடிக்க டிராக்டர் களோ, புல்டோசர்களோ வேண்டாம். ஆளுக்கொரு தடியை எடுத்தாலே போதும் - மசூதி இடிந்துவிடும் என்று ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள்.
மசூதி இடிக்கப்படும் வரை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கல்யாண்சிங் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று சொன்னீர்கள். அப்பொழுது தான் மத்தியப் படை, மசூதி இடிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்று முதலமைச்சர் கல்யாண்சிங்குக்கு யோசனை சொன்னீர்கள்.
மோடியை எதிர்த்து கிளர்ந்தெழுகிறார்கள் 224 கலைஞர்கள், எழுத்தாளர்கள்
தேர்தல் நாள் நெருங்க நெருங்க பி.ஜே.பி. கரைகிறது
மோடியை எதிர்த்து கிளர்ந்தெழுகிறார்கள்
224 கலைஞர்கள், எழுத்தாளர்கள்
சென்னை, ஏப்.17- மதவெறி பிடித்த பி.ஜே.பி. - அதன் பிரதமர் வேட்பாளரை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 224 எழுத்தாளர்கள், கலைஞர்கள் கையொப்ப மிட்டுப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
15 ஏப்ரல் 2014 அன்று மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் பிரஸ் கிளப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை. தமிழக வரலாற்றில் 224 கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒன்று கூடி இப்படி ஒரே குரலில் ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் மத்தியில் ஒலித்தது சமீப காலங் களில் இதுவே முதல் முறை.
இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற் காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்பொரேட் மூலதனமும் வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள் விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலு முள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர் கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத் தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆதிக்க ஜாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக் கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச் சார்பின்மையை முன் வைத்து உரு வான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன.
இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லா விதமான செயற்பாடுகளையும் மேற் கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜன நாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்பு களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பா.ஜ.க.வால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்ட ணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார் பொரேட் - மதவாத - ஜாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக் காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.
“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong bid for power in the coming elections.
These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002 and has never accepted his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.
"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.
" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.
“We urge all responsible individuals and political formations to ponder over the situation andurgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."
(In total 224 writers and artistes have signed below)
இதில் கையொப்பமிட்டுள்ளவர்களின் பட்டியல் வருமாறு:
கி.இராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், புதுவை,
பிரபஞ்சன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர், சென்னை,
இந்திரா பார்த்தசாரதி, மூத்த தமிழ் எழுத்தாளர். டில்லி,
முனைவர் தொ.பரமசிவன், எழுத்தாளர்/ வரலாற்றறிஞர், திருநெல்வேலி,
கவிக்கோ அப்துல் ரஹ்மான், மூத்த தமிழ்க் கவிஞர், சென்னை,
விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன், சென்னை,
வெங்கடேஷ் சக்கரவர்த்தி, திரைக் கோட்பாட்டாளர், அய்தராபாத்.
கலாப்ரியா, மூத்த கவிஞர், திருநெல்வேலி,
அப்பண்ணசாமி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
வெளி.ரங்கராஜன், எழுத்தாளர்/இதழாசிரியர், சென்னை,
ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், மு.எ.க.ச, பத்தமடை,
எஸ்.வி.இராஜதுரை, மூத்த எழுத்தாளர், கரூர்,
மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர், சென்னை,
எஸ்,ராமகிருஷ்ணன், எழுத்தாளர், சென்னை,
வஹீதையா கான்ஸ்டான்டின், எழுத்தாளர், நாகர்கோவில்,
அம்பை, எழுத்தாளர், டில்லி,
வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர், திருநெல்வேலி, வ.கீதா, எழுத்தாளர், சென்னை,
கோணங்கி, எழுத்தாளர், கோவில்பட்டி,
முனைவர் ஆனந்தி, பேராசிரியர், சென்னை,
அ.மார்க்ஸ், எழுத்தாளர், சென்னை,
சந்திரா, எழுத்தாளர், சென்னை,
கவின்மலர், எழுத்தாளர், சென்னை,
கோ.சுகுமாரன், மனித உரிமைப் போராளி/எழுத்தாளர், புதுவை,
ராமானுஜம், எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர், சென்னை,
தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், சென்னை,
யூமா வாசுகி, எழுத்தாளர், சென்னை,
முனைவர் சாதிக், கவிஞர்/முன்னாள் துணைவேந்தர், சென்னை,
ஞாநி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
துரைராஜ், மூத்த இதழாளர், திருச்சி,
வாசுதேவன், எழுத்தாளர்/விமர்சகர், சென்னை,
முனைவர் ராஜன்குறை, எழுத்தாளர், டில்லி,
யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர், லண்டன்,
ஓவியர் விஸ்வம், சென்னை,
ஓவியர் நடேஷ், சென்னை,
பா.ரஞ்சித், திரைப்பட இயக்குநர், சென்னை,
அமீர், திரைப்பட இயக்குநர், சென்னை,
வெற்றிமாறன், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர், சென்னை,
பொ.வேல்சாமி, எழுத்தாளர்/தமிழறிஞர், நாமக்கல்,
வி.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர், திரை இதழாசிரியர், சென்னை,
சு.வெங்கடேசன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர், மதுரை,
பாரதி தம்பி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
கிராமியன், எழுத்தாளர்/விமர்சகர், திருச்சி,
ஷோபாசக்தி, எழுத்தாளர், பாரிஸ், முகம்மது சிப்லி, இதழாளர், சென்னை,
அஜயன் பாலா, எழுத்தாளர், சென்னை, அசதா, எழுத்தாளர், விழுப்புரம்,
முனைவர் வீ.அரசு, எழுத்தாளர்/பேராசிரியர், சென்னை,
பாஸ்கர் சக்தி, எழுத்தாளர், சென்னை,
முருகேசபாண்டியன், எழுத்தாளர்/விமர்சகர், மதுரை,
முருகபூபதி, அரங்க இயக்குநர், கோவில்பட்டி,
பிரளயன், அரங்க இயக்குநர், சென்னை,
சுபாதேசிகன், இதழாளர்/எழுத்தாளர், சென்னை,
சி.மோகன், எழுத்தாளர்/சிறு பத்திரிகை எழுத்தாளர், சென்னை,
தளவாய் சுந்தரம், எழுத்தாளர், சென்னை,
சங்கர ராமசுப்பிரமணியன், எழுத்தாளர்/ இதழாளர், சென்னை,
மீனா, எழுத்தாளர், திருவண்ணாமலை,
பிருந்தா, எழுத்தாளர், சென்னை, நேசமித்திரன், கவிஞர்/இதழாசிரியர், நைஜீரியா,
ச.கோபாலகிருஷ்ணன், இதழாளர், சென்னை,
ஜெயராணி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
தீஸ்மாஸ் டீ சில்வா, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
லஷ்மி சரவணகுமார், எழுத்தாளர், சென்னை, சிபி செல்வன், எழுத்தாளர், சேலம்,
அழகிய பெரியவன் எழுத்தாளர், வேலூர்,
தேவிபாரதி, எழுத்தாளர், சென்னை,
கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
மனுஷ்யபுத்திரன், கவிஞர்,சென்னை,
சுசீந்திரன் நடராசா, எழுத்தாளர், பெர்லின்.
ஏ.மெஹபூப் பாஷா, மனித உரிமைச் செய்தி இதழாசிரியர், மதுரை,
ரியாஸ் குரானா, எழுத்தாளர்/விமர்சகர், இலங்கை,
ஆர்.பி.அமுதன், திரைப்பட இயக்குநர், சென்னை,
பிரகதீஸ்வரன், நாடகக் கலைஞர்/பதிப்பாளர், புதுகை,
சுகுணா திவாகர், எழுத்தாளர்/கவிஞர், சென்னை,
விஷ்ணுபுரம் சரவணன், கவிஞர், சென்னை,
நீலகண்டன், பதிப்பாளர், சென்னை.
பா.ம.மகிழ்நன், ஊடகவியலாளர், சென்னை,
இரா.தெ.முத்து, எழுத்தாளர், சென்னை,
ப.கு.ராஜன், நூலாசிரியர், சென்னை,
அருள் எழிலன், எழுத்தாளர், சென்னை,
ஜீவசுந்தரி, எழுத்தாளர், சென்னை,
அபு சாலிஹ், இதழாசிரியர். சென்னை,
ஷாஜஹான், எழுத்தாளர், டில்லி,
ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர், சென்னை,
தி.கண்ணன், எழுத்தாளர், சிறீரங்கம்,
வினி சர்ப்பனா, இதழாளர், சென்னை,
புது எழுத்து மனோன்மணி, இதழாசிரியர், காவேரிப்பட்டிணம்,
ஜமாலன், எழுத்தாளர்/விமர்சகர், ஷார்ஜா,
கமலக்கண்ணன், திரைப்பட இயக்குநர், கோவை,
ஆத்மார்த்தி, கவிஞர், மதுரை,
ஆதவன் தீஷண்யா, எழுத்தாளர்/இதழாசிரியர், ஓசூர்,
தேனுகா, ஓவிய விமர்சகர், கும்பகோணம்,
பேரா.பா.கல்விமணி, கல்வியாளர், திண்டிவனம்,
பேரா.ப.சிவகுமார், கல்வியாளர், சென்னை,
பேரா.மு.திருமாவளவன், கல்வியாளர், சென்னை,
ஜாபர் சாதில் பாகவி, இதழாசிரியர், சென்னை,
ரஜினி, மனித உரிமைப் போராளி, மதுரை,
குட்டி ரேவதி, கவிஞர், சென்னை,
இளங்கோகிருஷ்ணன், கவிஞர், சுதிர்செந்தில், இதழாசிரியர், திருச்சி,
அய்யப்ப மாதவன், கவிஞர், சென்னை,
தாமிரா திரைப்பட இயக்குநர்,
வ.கீரா திரைப்பட இயக்குநர்
நக்கீரன், கவிஞர், நன்னிலம்,
லிபி ஆரண்யா, கவிஞர், மதுரை,
குமாரசெல்வா, எழுத்தாளர், மார்த்தாண்டம்,
ஜே.ஆர்.வி.எட்வர்ட், எழுத்தாளர், நாகர்கோவில்,
இசை, கவிஞர், கோவை மகுடேஸ்வரன், கவிஞர், திருப்பூர்,
மேகவண்ணன், எழுத்தாளர், இராமேஸ்வரம்,
றஞ்சி, எழுத்தாளர், சுவிட்சர்லாந்த்,
அன்புச்செல்வன், கவிஞர், மதுரை,
பவுத்த அய்யனார், எழுத்தாளர்/பதிப்பாளர், சென்னை,
முத்துமீனாள், எழுத்தாளர், சென்னை,
யாழன் ஆதி, கவிஞர், ஆம்பூர்,
தை.கந்தசாமி, கவிஞர், திருத்துறைபூண்டி,
முனைவர் ரவிச்சந்திரன் சிறீராமச்சந்திரன், எழுத்தாளர், கோவை,
நிஷாமன்சூர், கவிஞர், மேட்டுப்பாளையம்,
அருண், திரைப்பட இயக்கம், சென்னை,
சே.கோச்சடை, எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர், காரைக்குடி,
முனைவர் ஜீவரத்தினம், ஆய்வாளர், ரெட்டைவயல்,
சி.சரவண கார்த்திகேயன்,எழுத்தாளர், பெங்களூரு,
போஸ் பிரபு (பிரேமா), கவிஞர், சிவகாசி, யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர், மடிப்பாக்கம்,
லீனா மணிமேகலை, கவிஞர், சென்னை,
சா.விஜயலட்சுமி, கவிஞர், சென்னை, நந்தகுமார், எழுத்தாளர், கடார்,
பா.ரவீந்திரன், எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த்,
தளவாய், எழுத்தாளர்/இதழாளர், சென்னை, பூ.இராமு, திரைக் கலைஞர், சென்னை,
கருப்பு கருணா, குறும்பட இயக்குநர், திருவண்ணாமலை,
எம்.சிவக்குமார், திரை ஆய்வு எழுத்தாளர், சென்னை,
உமர் ஃபாரூக், எழுத்தாளர், கம்பம்,
தமிழ்நதி, கவிஞர், கனடா, சுகன் கனகசபை, கவிஞர், பாரிஸ், அ.வெற்றிவேல்,
எழுத்தாளர், சவூதி அரேபியா,
கார்டூனிஸ்ட் பாலா, சென்னை,
அதிஷா, இதழாளர், சென்னை,
வெய்யில், கவிஞர், காரைக்கால்,
நடராஜன் கிருஷ்ணன், எழுத்தாளர், குன்றத்தூர், நந்தகோபால், இதழ் ஆசிரியர், சென்னை,
எஸ்.காமராஜ், எழுத்தாளர், சாத்தூர்,
ஜபருல்லா ரஹ்மானி, எழுத்தாளர், சிங்கப்பூர்,
நீரை மகேந்திரன், இதழாளர், சென்னை,
கவுதம சக்திவேல், மனித உரிமைப் போராளி, பொள்ளாச்சி, நரன், கவிஞர், சென்னை,
கவிதா முரளீதரன், இதழாளர், சென்னை,
முனைவர் பெருந்தேவி, எழுத்தாளர், நியூயார்க்,
விஷ்ணுராம், ஊடகவியலாளர், சென்னை,
ராஜவேலு, லேபர் நியூஸ் நிர்வாகி, சென்னை,
சிவகுமார், எழுத்தாளர்/பேராசிரியர், சென்னை,
மாரிச்செல்வன், எழுத்தாளர், சென்னை,
முகம்மது ஆசிக், கவிஞர், வல்லம்,
இரா.ஜவஹர், மூத்த இதழாளர், சென்னை,
டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர், சென்னை,
ஃபைஸ் ஃபைசல், இதழாசிரியர், சென்னை,
மு.சிவகுருநாதன், எழுத்தாளர், திருவாரூர்,
டாக்டர் ஹிமானா சையத், எழுத்தாளர், சென்னை,
பாரதிநாதன், நாவலாசிரியர், சென்னை,
இரா.வினோத், ஊடகவியலாளர், பெங்களூரு,
இளவேனில், கவிஞர், பள்ளிப்பட்டி,
சக்தி ஜோதி, கவிஞர், மதுரை,
எஸ்.சங்கர், இதழாளர், மடிப்பாக்கம்,
சிறீகுமார், விமர்சகர், சென்னை, கார்த்திகைப் பாண்டியன், எழுத்தாளர், மதுரை.
தேவரசிகன், கவிஞர், கும்பகோணம்,
ஜி.சரவணன், எழுத்தாளர், அம்மாசத்திரம்,
சிராஜுதீன், பதிப்பாளர், சென்னை, பிரேமா ரேவதி, எழுத்தாளர், சென்னை,
கு.ப, விமர்சகர், மதுரை,
ஜி.சிறீதரன், எழுத்தாளர், ஓசூர்,
அத்தாவுல்லா, எழுத்தாளர், நாகர்கோவில்,
ஆளூர் ஷாநவாஸ், எழுத்தாளர், சென்னை,
ஆர்,முருகப்பன், நூலாசிரியர், திண்டிவனம்,
மா.ச.மதிவாணன், ஊடகத்துறை, சென்னை,
சாம்ராஜ், கவிஞர், மதுரை,
யவனிகா சிறீராம், கவிஞர், திண்டுக்கல்,
செல்மா பிரியதர்ஷன், கவிஞர், திண்டுக்கல்,
அ.கரீம், எழுத்தாளர், கோவை,
அறிவழகன், எழுத்தாளர், சேலம்,
ம.மதிவண்ணன், கவிஞர், பெருந்துறை,
குமார் அம்பாயிரம், எழுத்தாளர், திருவண்ணாமலை,
பிரியாபாபு, எழுத்தாளர், சென்னை,
முனைவர் தி.பரமேஸ்வரி, கவிஞர்/பதிப்பாசிரியர், காஞ்சீபுரம்,
பவா செல்லத்துரை, எழுத்தாளர், திருவண்ணாமலை,
கே.வி.சைலஜா, எழுத்தாளர்/பதிப்பாளர், திருவண்ணாமலை, கே.வி.ஜெயசிறீ, எழுத்தாளர்,
திருவண்ணாமலை, அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை,
கடற்கரை, கவிஞர்/பதிப்பாளர், சென்னை,
ஃபிர்தௌஸ் ராஜகுமாரன், எழுத்தாளர், கோவை, தமயந்தி, எழுத்தாளர், சென்னை,
நவீன், திரைப்பட இயக்குநர், சென்னை,
பிரின்சு என்னாரெசு பெரியார், திரைப்பட இயக்குநர், சென்னை,
பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எழுத்தாளர், சென்னை,
நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர்/இதழாசிரியர், சென்னை,
ராஜ்முருகன், திரைப்பட இயக்குநர், சென்னை,
புகழேந்தி, ஓவியர், சென்னை, ட்ராட்ஸ்கி மருது, ஓவியர், சென்னை,
ரோகிணி, நடிகை, சென்னை,
ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், மதுரை,
கரிகாலன், கவிஞர், விருதாசலம்,
தமிழ்ச்செல்வி, எழுத்தாளர், விருத்தாச்சலம்,
அ,வெண்ணிலா, கவிஞர், வந்தவாசி,
பாரதி கிருஷ்ணகுமார், இயக்குநர், சென்னை,
யாழினி முனுசாமி, எழுத்தாளர், சென்னை,
பி.ஜி.சரவணன், கவிஞர், மதுரை,
மீனாகந்தசாமி, எழுத்தாளர், சென்னை,
கோவி.லெனின், பத்திரிகையாளர், சென்னை,
புதிய மாதவி, எழுத்தாளர் மும்பை,
கண்மணி ராஜா முகமது, திரைத்துறை, சென்னை,
காலபைரவன், எழுத்தாளர், விழுப்புரம்,
சீனு இராமசாமி, திரைப்பட இயக்குநர், சென்னை,
நாச்சியாள் காந்தி, ஊடகவியலாளர், சென்னை,
வெற்றிவேல், ஆவணப்பட இயக்குநர், சென்னை,
நறுமுகை தேவி, கவிஞர், கோவை,
ஏகாதேசி, பாடலாசிரியர், சென்னை,
சிறீஜித், அரங்கக் கலைஞர், சென்னை.
லிவிங்ஸ்அய்ல் வித்யா, அரங்கக் கலைஞர், சென்னை,
மு.வி.நந்தினி, இதழாளர், சென்னை,
(இந்த மகத்தான பணியை ஒருங்கிணைத்த தோழர் அ.மார்க்ஸ் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுகள்)
Read more: http://viduthalai.in/page-2/78798.html#ixzz2zCAMDRps
கோவை தொண்டறச் செம்மல் மருத்துவர் பக்தவத்சலத்துக்கு வாழ்த்து
டாக்டர் பக்தவத்சலம், தமிழர் தலைவர் கி.வீரமணி, கோவை வசந்தம் இராமச்சந்திரன் மற்றும் டாக்டரின் அலுவலக நிர்வாகி
கோவையின் சிறந்த தொண்டறச் செம்மலான மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்களது கே.ஜி.பி. மருத்துவமனை என்பது மருத்துவத் தொழிலை தொண்டாகவும் செய்து வரும் அரிய சிறப்பான நிறுவனம் ஆகும்.
அதன் நிறுவனர் மதிப்பிற்குரிய மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்கள் அதனைத் துவக்கி 50 ஆண்டுகள் நிறைவு என்பதும், அவரது திருமணம் நடந்தது 50 ஆண்டு நிறைவு என்பதும் அவர்கள் கோவையில் நம்மை நேரில் சந்தித்து 8.4.2014 அன்று தெரிவித்தபோது மிகவும் மகிழ்ந்து, சிறப்பாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தேன்.
அதை விட முக்கியம் எனது உளப்பூர்வ நன்றியையும் தெரிவித்தேன்; காரணம் முதலில் எனக்கு இதய நோய் தாக்கியபோது, அவருடைய மருத்துவமனையும் மருத்துவர்களும் தான் காப்பாற்றினார்கள்;
எனது பணி தொடர அப்போது செய்த அரிய உதவி மறக்க முடியாதது, எனவே நன்றியும் தெரிவித்தோம். அம்மருத்துவமனையும், மனித நேயரும் பண்பாளருமான மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலனாரும் வாழ்க! வளர்க!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
Read more: http://viduthalai.in/page-8/78824.html#ixzz2zCBeDO2q
தேர்தல் களம்
வரவேற்க ஓர் ஆள்கூட வரவில்லை : பேரணியை புறக்கணித்து திரும்பிச் சென்றார் சுஷ்மா
சிவபுரி, ஏப். 17- மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் பாஜ பேரணியில் பங்கேற்க சென்ற சுஷ்மா சுவராஜை வரவேற்க ஒரு ஆள் கூட வராத காரணத்தால் கோபத்தில் பேரணியை அவர் புறக்கணித்தார். மத்தியப் பிரதேச மாநிலம் குனா மக்களவை தொகுதியில் பாஜகவை சேர்ந்த ஜெய் பான் சிங் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா போட்டியிடுகிறார். மிகவும் முக்கியமான இந்த தொகுதியில் பாஜக வேட் பாளரை வெற்றி பெற செய்வதற்காக அக்கட்சி யின் பல மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், ஜெய்பான் சிங்கை ஆதரித்து சிவபுரியில் நேற்று முன்தினம் பேரணியில் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக அவர் போபாலில் இருந்து ஹெலிகாப்டரில் சிவபுரி வந்தார். மதியம் 1.45 மணிக்கு ஹெலி காப்டர் தரை இறங்கியது.
அங்கு தொகுதி வேட் பாளர் ஜெய்பால் சிங் உள்பட பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் இல்லை. பாது காப்புக்காக ஒரு சில காவல்துறையினர் மட்டுமே இருந்தனர். சுஷ்மா வருவதை கேள்விப்பட்டு சில பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்.
ஜெய்பால் சிங்கை செல்பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. தன்னை வரவேற்க யாரும் வராததால் ஆத்திரமடைந்த சுஷ்மா, பேரணியில் பங்கேற்காமல் மீண்டும் ஹெலி காப்டரில் ஏறி போபால் சென்றுவிட்டார். இதன் பின்னர் அசோக்நகர் சென்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மோடி திருமண விவகாரம்: 3 வாரத்தில் அறிக்கை கோருகிறது நீதிமன்றம்
அகமதாபாத், ஏப்.17-பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தனது திருமணம் குறித்து விவரங் களை மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அகமதாபாத்தில் உள்ள நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தர விட்டுள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதி வேட்புமனுவில் மனைவி பெயரை ஜசோதாபென் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி உறுப்பினர் நிஷாந்த் வர்மா, ராணிப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், கடந்த 2012 சட்டசபை தேர்தலின் போது மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட மோடி வேட்புமனுவில், மனைவி என்ற இடத்தில் ஒன்றும் நிரப்பாமல் காலியாக விட்டுள்ளார். எனவே, இதுகுறித்து விசாரித்து அவர் மீது வழக்குப் பதிய வேண்டும். மேலும் மணிநகர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் பி.கே ஜடேஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதி மன்றம், நிஷாந்த் வர்மா மனு குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், நிஷாந்த் வர்மா, மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களை முட்டாளாக்காதீர்கள் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
கிஷன்கன்ஞ், ஏப். 17- பீகார் மாநிலம், கிஷன் கன்ஞ் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மவுலானா அஸ்ராருல் ஹக்கை ஆதரித்து, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, மோடியின் குஜராத் மாடல் (டாபி மாடல்) என்பது பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து டாடா மற்றும் அதானி போன்ற பெரிய பணக்காரர்களுக்கு கொடுப் பதை தவிர வேறு ஒன்றுமில்லை. குஜராத்தில் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான 45,000 ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் அதானி என்பவருக்கு 300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
டாடாவின் நானோ கார் திட்டத்திற்கு ரூ.10,000கோடி 0.1% வட்டியில் குஜராத் அரசு கொடுத்துள்ளது. ஆனால், சாதாரண மனிதன் அங்கு கடன் வாங்கினால், அவனுக்கு 12% வட்டி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு ரூ.40,000செலவு செய்கிறது.
ஆனால் கல்வி, சுகாதாரத்திற்கு செலவழிக்கப் படும் தொகை ரூ.10,000கோடிக்கும் குறைவாக உள்ளது. அந்த மாநிலத்தில், 40 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.11சம்பாதிக்கின்றனர். அப்படியா னால், ஒரு நாளைக்கு ரூ.12சம்பாதிப்பவர்கள் குஜ ராத்தில் பணக்காரர்களாக கருதப்படுகிறார்களா? மோடி அவர்களே நாட்டு மக்களை முட்டாளாக் குவதை நிறுத்துங்கள் என்றார்.
மதவாத கொள்கையை பின்பற்றுபவர் மோடி: பிரியங்கா
ரேபரேலி, ஏப்.17-நரேந்திர மோடி மதவாத கொள்கையை பின்பற்றுகிறார் என ரேபரேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். ராகி கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:
நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பதுதான் காங்கிரஸ் கொள்கை. ஆனால், பா.ஜ.க. மதவாத கொள்கையை பின்பற்றுகிறது. அவர்களின் நோக் கமே மதவாதத்தை பரப்பி மக்களை பிரிப்பது தான். அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் மற்றொரு கொள்கை.
அதிகாரம் மக்களிடம் இருக்க வேண் டுமா அல்லது ஒருவரது கையில் இருக்க வேண் டுமா என்பதை நீங்கள்தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். மக்களவை தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும் முடிவில் இரண்டு பங்குகள் உள் ளன. ஒன்று உங்கள் பகுதியின் வளர்ச்சி, மற் றொன்று நாட்டின் எதிர்காலம்.
நீங்கள் சரியான கட்சியை தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன். இந்திரா காந்தியும், சோனியா காந்தியும் இங்கு பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி உள்ளனர். இந்த வளர்ச்சி நிற்கப்போவதில்லை. எதிர்காலத் திலும் தொடரும்.
Read more: http://viduthalai.in/page-8/78825.html#ixzz2zCC0KwHs
தேர்தல்: தா.பாண்டியன் கணிப்பு இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
திமுகவுக்குத் தொடக்கத்தில் இருந்த தைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அதிமுக எடுத்த நிலை காரணமாக திமுகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப் பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது திமுக முன்னேறி இருக்கிறது.
அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அதிமுக வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளி வாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி, வெற்றிபெற மாட் டோம் என்பதை அவர்களாகவே அறிவித்து விட்டார்கள். தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பி.ஜே.பி ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று நானும் நினைத் தது உண்டு.
ஆனால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர் களும், அவர்களோடு கூட்டு சேர்ந்தவர்க ளும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீரவசனம் பேசமாட்டேன். ஏனென் றால் தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை.
- தா.பாண்டியன் - ஜூனியர் விகடன் (20.4.14) பேட்டியிலிருந்து
Read more: http://viduthalai.in/page-8/78823.html#ixzz2zCCGml24
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
பணத்திற்குப் பதில் பண்டங்கள்!
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடா செய்வதில் சிக்கல் இருந்தால் மளிகைக் கடைகள் மூலம் மளிகைச் சாமான்களை வழங்கும் ஒரு புது யுக்தி கையாளப்படுகிறதாம். எப்படி இருக்கிறது? மக்கள் தயாராக இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? முதலில் தேவை விழிப் புணர்வே! இயற்கையாக இல்லையென்றால் ஊட்டப் பட வேண்டும்.
Read more: http://viduthalai.in/e-paper/78861.html#ixzz2zHrwO1xJ
வாக்குப்பதிவு இயந்திரத்தை வாஸ்துப்படி திசை மாற்றி வைக்கச் சொன்ன அமைச்சர்
கோலார், ஏப்.18- கருநாடக மாநிலம் கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி யில் மத்திய அமைச்சர் முனியப்பாவின் வேண்டு கோளை ஏற்று, வாஸ்து சாஸ்திரப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தை திசை மாற்றி வைத்தார்'' என்ற புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் மத்திய அமைச்சர் முனியப்பா போட்டி யிடுகிறார்.
கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஹரோஹள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை முனியப்பா வாக் களிக்க வந்தபோது, வாக் குப்பதிவு இயந்திரம் தெற்கு நோக்கி இருந்ததை கண்டு அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படு கிறது.
இதனையடுத்து வாஸ் துப்படி அந்த எந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி மாற்றி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண் டார். அவரின் வேண்டு கோளை ஏற்று, வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர் தல் அதிகாரியும், முனியப் பாவின் ஆதரவாளர்களும் திருப்பி வைத்துள் ளனர். இதுகுறித்து புகார் தெரி விக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு இயந்தி ரத்தை திசை மாற்றி வைத் ததாக தேர்தல் அதிகாரியை ஹரோஹள்ளி வாக்குச் சாவடியில் இருந்து தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துவிட்டது.
இந்த தகவலை கோலார் துணை ஆணை யரும், தேர்தல் அதிகாரியு மான டி.கே. ரவி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/78857.html#ixzz2zHs2Udh7
மூட மக்கள்
ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)
Read more: http://viduthalai.in/page-2/78862.html#ixzz2zHsn9KRr
ஜனநாயகத்துக்கே கேடான சர்வே
என்டிடிவியின் சர்வே முறைகேடு வெளுத்துவாங்கும் டில்லி இணைய ஊடகம்
டில்லி. ஏப்.18- என்டிடிவி அளித்துள்ள புதிய சர்வே முடிவுகள் அப்படியே எடுத்துக் கொண்டால், நடைபெற்றுவரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 இடங்களைப் பெறும் என்று முன்கூட்டியே சொல்லி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரசு இதற்குமுன் பெற்ற எண்ணிக்கைகளை மொத்தமாக இழந்து நிற்பதாகவும், அவர் களைக்காட்டிலும், மோடி அலையால் உபியில் மொத்தமாக 51 இடங்களை வாரிச் சுழற்றிக் கொள்வதாகவும் சர்வே கூறுகிறது.
காங்கிரசு அனைத்துத் தேர்தலிலும் தனியே குறைந்தபட்சமாக 92 இடங்களை வென்றுள்ளது. சர்வேபடி அய்க்கிய முற் போக்கு கூட்டணியில் வெறும் 111 இடங் கள் மட்டுமே பெறும் என்று கூறியுள்ளது.
ஆம்ஆத்மி டில்லியில் வெடித்துக் கிளம்பியது. சர்வேபடி, மிகச் சொற்ப மாகவே அக்கட்சி பெறும் என்கிறது.
பாஜக, அதன் ஆதரவாளர்களுக்கு அல்லது சர்வே எடுத்ததாக சொல்பவ ருக்கு கிறிஸ்துமஸ் ஆண்டின் தொடக்கத் திலேயே வந்துவிடுகிறது என்பதுபோல் சர்வே முடிவு உள்ளது.
சர்வேயில் எடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையாகவே வாக்காளர்களின் கருத்துகளைக் கொண்டதுதானா?
எப்படிப் பார்த்தாலும், தேர்தல் நேரத்தில் என்டிடிவி எடுத்துள்ள இந்த சர்வே, போதுமான ஆதாரங்கள் இல்லா மல், பரப்பப்பட்டுள்ளது. அவர்களின் பிழைப்புக்காகவும் எடுக்கப்பட்டிருக் கிறது. சர்வே முடிவு என்பது ஊடகங்களின் கருத்துத்திணிப்புதானோ என்று எல்லோ ருடைய மனதிலும் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.
பிரச்சினையே தேர்தல் ஆணை யத்தின் முடிவால் அல்ல. அது வரை யறுத்துள்ள கெடுபிடியான நேரம்தான். ஒரு மாதம்வரையிலான தேர்தலின் மத்தியில் சர்வே எடுக்கும் உரிமை மறுக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் நிலைமை மோசமாகி விட்டது. தேர்தல் ஆணையத்தின் அவசரகோலத்தில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவுகளால், தற்போது என்டிடிவி சர்வே முடிவுகளை உறுதிப்படுத்தவோ, சர்வே முடிவுகளுக்கு மாறான நிலையிலிருப்பதை எடுத்துக்காட்டவோ வழி இல்லை. சர்வே முடிவால் பாதிக்கப் பட்டவர்கள் கருத்து தெரிவிக்க இயலா மலும் உள்ளது. என்டிடிவி சர்வே ஆணை யத்தின் விதிமுறைகளை கடைப்பிடித் துள்ளதாகக் கூறினாலும், உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை.
ஆணையத்தின் இறுதிக்கெடுவாகிய ஏப்ரல் நான்காம் தேதிக்குப்பிறகு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதை மன்னித்து, சாதகமான காரணங்களைக் கூறி வெளியிட அனுமதித்துள்ளது.
வாக்களிப்பவர்கள் தாமாக முடி வெடுப்பதற்கு வாய்ப்பாக, போதிய கால இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது. இதனாலேயே, தேர்தலுக்குப்பின் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித் தார்கள் என்பதை வெளியிடும்போது, வாக்களிக்கக் காத்திருப்போரையும், அதைப்போலவே வாக்களிக்க வலியுறுத் துவதாகிவிடும். எனவே, ஆணையம் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்பை வெளி யிடுவதைத் தடை செய்துள்ளது.
என்டிடிவி சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து, ஆணையம் விதித்த கெடு வுக்குமுன்பாக எடுத்து முடிக்கப்பட்டது போல் இருப்பது முற்றிலும் தவறானது. ஏப்ரல் நான்காம் தேதிக்கு முன்னதாக எடுத்துள்ளதாகக் கூறி தற்போதைய நிலவரங்களையும் இணைத்தே சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவு மக்களிடையே ஒருசார் பான ஆதரவுநிலையை அதிகப்படுத்தும் நோக்கமேயாகும். மேலும், உச்சகட்ட தேர்தல் காய்ச்சலில் இருக்கும்போது, வாக்காளர்களின் முடிவு என்னவென்றே ஊகிக்க முடியாத நேரத்தில் தேர்தலின் ஒரு பகுதியாக சர்வே முடிவை ஒரு சார்பாக வெளியிட்டுள்ளது.
ஊடகங்களிடையே உள்ள கடும் போட்டியில் பார்வையாளர்கள் மத்தியில் சர்வே எடுத்தது அந்த ஊடகத்தின் பெரிய வெற்றியாகும். ஆனால், அதன் விலை என்ன?
ஒரு குறிப்பிட்ட கட்சிமட்டும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று வெளியிட்டு வாக்காளர்களைத் திசை திருப்புவதை என்டிடிவி செய்துள்ள நோக்கம் தெரி கிறது. தவிர்க்கவே முடியாதவகையில் திரும்பதிரும்ப அவர்களிடையே வெற்றிபெறுவது இன்னார்தான் என்று கருத்து வெளியிடும்போது, அவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு வெற்றிபெறுவதாக சித்தரிக்கப்பட்டதன் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் யார் வெல்வதாக கருது கிறார்களோ அவர்களை ஆதரிக்கும் மனோநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
மூத்த செய்தி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு மோடியைப்பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்பதைவிட, வெற்றிபெறுவார் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேள்விப் பட்டாராம். அதனால் வாக்களிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் உண்மை வேறாக இருந்தாலும், அதற்கும் மேலாக தொடர்ந்தாற்போல் மிகப்பெரிய வெற்றி பெறுவதாகக் கூறிவருகின்றனர். இப்படித்தான் மோடி வெற்றிபெறுவதாக, அடுத்த பிரதமர் என்று தொடர்ந்து கூறி, வாக்காளர்களை திசை திருப்பி வருகின்றனர்.
என்டிடிவி சர்வே பாஜகவுக்கு உதவுகிறது. அதேநேரத்தில் காங்கிரசை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. ஆம்ஆத்மி கட்சி, தன்னைக்காத்துக் கொள்ள போராடும் தேவை உள்ளதாகும். அந்த அமைப்புகள், அதன் கொள்கைகள் ஆகியவற்றைத் தாக்குவதுபோல் சர்வே முடிவு உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும், வாக்காளர்கள் மத்தியில் டில்லியில் இதன்பாதிப்பு அதிகமாகும்
எல்லாவற்றையும் கடந்து, இந்த கசப்பான தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இதுபோன்ற வாதங்கள் பங்குதாரர்களால், சர்வே முடிவை பாராட்டுபவர்கள், வரவேற்பவர்களுக்கு கொள்கை ஏதும் கிடையாது. பிரச்சாரக் களத்தில் இந்த சர்வே முடிவைச் சொல்லி கிடைக்காத இடத்திலும் ஆதரவைத் தேட முயல் வார்கள். அநேகமாக மாபெரும் தேர் தலின் முடிவு என்பது சர்வே முடிவுக்கு தொடர்பின்றியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-ஃபர்ஸ்ட் போஸ்ட், 15-4-2014, டில்லி
Read more: http://viduthalai.in/page-2/78865.html#ixzz2zHt9PKii
சூனியமும் புராதன மதங்களும்
சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.
ஜான்வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக் கையை வற்புறுத்தியிருக்கிறார்.
இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற் காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன.
நியாய ஸ்தலத்தின் உத்தரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர். அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறினதில்லை என்று மறுத்தாள்.
கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாள். இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.
கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமானதாகவே இருந்தது. ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான்.
இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.
(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம்-பிசாசு என்ற நூலில்)
தகவல்: குன்னம் ராமண்ணா
Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHu8PV6O
இப்போ பிராமணனும் இல்லே பிராமண தர்மமும் இல்லே!
வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?
புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே.. பிராமண தர்மமும் இல்லே.
வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?
புரோகிதர் விடை: பக்தியாவது. ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சுக்கிறா!
- துக்ளக், 1-6-1981 இதழ், பக்கம் 32
தகவல்: கிருட்டினசாமி, செகந்திராபாத்
Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHuNt196
கண்டு முட்டு - கேட்டு முட்டு!
வைணவர்களில் இருக்கின்ற இருபிரிவாளர்களான வடகலை நாமக்காரர்களும், தென்கலை நாமக்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டாலே - அதாவது தென்கலை நாமம் போட்டிருப்பவரை வடகலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும், வடகலை நாமம் போட்டிருப்பவரை தென்கலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும் - அந்த பாவத்தைப் போக்க சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இவர்கள் கண்டு முட்டுகள் ஆவார்கள்!
சைவர்களும், வைணவர்களும் ஒருவரையொருவர் எதிர்ப்பாகக் கருதி வந்தனர் அந்தக் காலத்தில் - அப்படி இருக்கும்போது சைவர்கள் செல்லும் வழியில் - செல்லும் போது வைஷ்ணவக் கடவுளைப் பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் காதாலோ கேட்டுவிட்டாலும், அதே போன்று வைஷ்ணவர்கள் காதில் படும்படி சைவர்கள் தங்கள் கடவுளைப்பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் கேட்டுவிட்டாலும் அந்தைப் பாவத்தைப் போக்குவதற்கு சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இப்படி செய்வதை கேட்டு - முட்டு என்பர்.
இப்படி கண்டு முட்டு, கேட்டு முட்டுகளைப் போன்று இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் எதிர்ப்பாக நடந்து கொள்கின்றனர்.
(10.10.1977 அன்று கடலூர் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி உரையிலிருந்து)
தகவல்: துரை.சந்திரசேகரன்
Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHudTgpt
விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை
அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரி யர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.
உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.
இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்
Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHumGwZ4
அம்மையாரை அம்பலப்படுத்தும் அண்ணா திமுக ஏடு
ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தது திமுக என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லிவிட்டாராம்.
அதிமுக ஏடான நமது எம்.ஜி.ஆர். சும்மா இருக்குமா? விட்டேனா பார்? என்று எகிறிக் குதிக்கிறது.
முடிந்தால் காரணா காரியத்தோடு மறுக்க வேண்டும். முடியாவிட்டால் மூலையில் போய் முடங்கிட வேண்டும். ஏன் வீணாக அரட்டைக் கச்சேரி நடத்த வேண்டும்?
பதினெட்டு கடல்மைல் தொலைவில் பல்லாயிரம் உயிர்கள் அய்யோ என ஓலமிட்டு எழுப்பிய மரண ஒலியை, அன்றாடம் பாராட்டு விழாக்கள் நடத்தி, அதில் எழுந்த ஜால்ரா சத்தத்தின் மூலம் மறைத்து விட்ட மாபாதகன் கருணாநிதி என்று எழுதுகிறதே - எதற்காக?
கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டை நோக்கிக் கல் எறியலாமா?
போரை நிறுத்த வேண்டும் என் பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறார் - இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்று சொன்னவர் யார்? அம்மையார் ஜெயலலிதா தானே, இதனை வெளியிட்டதும் இதே நமது எம்.ஜி.ஆர்ஏடு தானே! (16.10.2008).
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று கலைஞர் வற்புறுத்தி இருக்கிறார் என்பதையும், அப்படிப் போரை நிறுத்தக் கூடாது என்று ஜெயலலிதா கூறியிருக் கிறார் என்பதையும், நமது எம்.ஜி.ஆர் ஏடே ஏற்றுக் கொண்டு இருக்கிறதே!
18 கடல் மைல் தொலைவில் பல்லா யிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்துக் கண்ணீர் வடிக்கிறதே நமது எம்.ஜி.ஆர். - அந்தப் பல்லாயிரம் உயிர் கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத் தியவர்தானே செல்வி ஜெயலலிதா!
ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள் - இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல - என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? அப்படி சொன்னதை இதே நமது எம்.ஜி.ஆர். ஏடும் (18.1.2009). கொட்டை எழுத்தில் பொறிக்க வில்லையா?
கூட இருந்தே குழி பறிக்கும் என்பார் கள்; நமது எம்.ஜி.ஆர் ஏட்டின் எழுத் தாளர்கள் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்களோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
அம்மையாரை அம்பலப்படுத்த வைப் பதில் அவர்களுக்கு அப்படி என்னதான் தீராத ஆசையோ!
Read more: http://viduthalai.in/page-8/78890.html#ixzz2zHv0aT8x
நடிகர்கள் - பதில் சொல்லியாக வேண்டும்!
ஒரு நாள் ரஜினி சந்திப்பு! - இன்னொரு நாள் நடிகர் விஜய் சந்திப்பு! ஆக மோடி தேர்தல் நடிகர் ஆகி? இருக்கிறார் என்பதுதானே இந்த நாடகத்தின் பின்னணி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! சம்பிரதாய சந்திப்பாம்! சொல்லுகிறார்கள்; படிப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்கள்! நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை - இதில் யாருக்கும் வெட்கம் இல்லை!
தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்லர்.
இந்தத் தமிழ்நாட்டு நடிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவாவைக் கையில் எடுத்துக் கொண்டு, மதவாதத்தைத் திணித்து மக்கள் மத்தியில் கல வரத்தை உண்டு பண்ணத் திட்டமிட்ட மதவெறியர் களுக்கு ஒரு வகையில் துணை போயிருக்கிறார்கள் இந்த நடிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்!
இந்தத் தவறுக்குப் பின்னொரு காலத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்! - சிறுபான்மை மக்கள் மத்தியிலும் மதச்சார்பற்ற எண்ணங்கொண்ட மக்கள் மத்தியிலும் இவர்களுக்குரிய இடம் என்ன? ஏன் இந்த விஷப் பரிட்சை?
Read more: http://viduthalai.in/page-8/78888.html#ixzz2zHvL8ukw
தனியார் துறையில் இட ஒதுக்கீடு - நந்தன் நிலகேனி -
பெங்களூரு, ஏப். 18- தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து பெங்களூரு காங் கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகனி கருத்துக் கூறி யுள்ளார்.
தனியார் துறையில் இட ஒதுக் கீடு அவசியம் என்ற குரல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முற் போக்கு அரசியல் தலை வர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இன்போ சிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
சமூகத்தில் குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் பல நூற்றாண்டுகளாக திட்ட மிட்டு மறுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஈடுசெய்வதற்கா கவே டாக்டர் அம்பேத்கர் பொதுத் துறையில் இடஒதுக் கீடு முறையை கொண்டு வந்தார். எனினும், பின்தங் கிய மக்களால் இன்னும் முன் னேற முடியாத நிலையே இருக்கிறது.
பொதுத்துறை யைப்போல தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியே தவிர, ஒரு குறிப் பிட்ட மக்களின் வளர்ச்சி மட்டுமல்ல.
எனவே வேலை வாய்ப்பை உருவாக்கும் தனி யார் நிறுவனங்கள் சமூகத் தில் ஒடுக்கப்பட்டவர்களுக் கும், பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
Read more: http://viduthalai.in/page-8/78886.html#ixzz2zHvTbXb3
முஸ்லிம்கள் மீதான மோடியின் அன்பு போலியானது: அகிலேஷ்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முஸ்லிம்கள் மீது காட்டி வரும் அன்பு போலித் தனமானது என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சாடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோயில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "மோடிக்கு தேர்தல் நேரத்தில் தான் முஸ்லிம்களின் ஞாபகம் வருகிறது. அவர் முஸ்லிம்கள் மீது தற்போது காட்டி வரும் அன்பு போலியானது.
முஸ்லிம்கள் தன்னை நேரில் பார்த்தால், என்னை விரும்ப ஆரம்பித்து விடுவர் என்று நேற்றுகூட அவர் பேசியுள்ளார். ஆனால், முஸ் லிம் மக்கள் மோடியையும், பாஜக தலைவர் களையும் நம்பிவிடக் கூடாது.
காங்கிரஸின் தவறான கொள்கைகளால் மட்டுமே பாஜக என்ற கட்சி இன்னும் இருக் கிறது. தற்போது ஒரு பக்கம் மதவாத சக்திகளும், மறுபக்கம் சோசலிச சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.
இதில், யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கால் மட்டுமே நாட்டின் நலனை காக்க முடியும் என்றார் அகிலேஷ் யாதவ்.
Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvdsM50
அட்டைப் படத்தில் பா.ம.க.
திராவிடர் கட்சிகளுடன் இனி கூட்டு இல்லை என்று சொன்ன பா.ம.க. தற்போது அதனை மீறி விட்டதே என்ற கேள்விக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அற்புதமான விளக்கத்தை விண்டுரைத்துள்ளார். (தி இந்து 18.4.2014).
திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டு சேர்வதில்லை என்றுதான் கூறினோம் என்று அந்தர் பல்டி அடித்துள்ளாரே. சர்க்கஸ்காரர்கூட இந்தப் பல்டிக்கு முன் எம்மாத்திரம்?
அவர் கூற்றுப்படி பார்க்கப் போனால் மதிமுக திராவிடக் கட்சியில்லை - அப்படித்தானே? அந்தோ பரிதாபம்! இதற்கெல்லாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் எந்தப் பதிலையும் சொல்ல மாட்டார்.
சொல்லிக் கொள்ள எந்த கொள்கையும் இல்லை என்கிற அளவுக்கு அவர்தான் மகா சாதனைப் படைத்து விட்டாரே!
அது சரி.. எந்தத் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பா.ம.க நிறுவனர் சொன்னாரே - அப்படிப் பார்த்தால் பா.ம.க. இப்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ள பா.ஜ.க. கூட தேசியக் கட்சி இல்லை என்று சத்தியம் செய்தாலும் செய்வார்.
பல்டிகள் என்று ஓரு புத்தகம் எழுதினால் அதன் அட்டைப் படத்தில் இடம் பெறுவது பா.ம.க.வாகத்தான் இருக்கும்!
Read more: http://viduthalai.in/e-paper/78948.html#ixzz2zNxQCPoo
மதிமுக பொதுச் செயலாளர் கொள்கையும் பேசுகிறார்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்குக் கொள்கை ஞானோதயம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ஏற்பட்டு விட்டது.
என்ன புதிர் என்கிறீர்களா? பாரதீய ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொன்னாரே பார்க்கலாம்.
அப்படியென்றால் ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறாரா? அதைப்பற்றி மூச்சுவிடவில்லையே - ஏன்?
வெளி நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட் டால் அவர்களுக்கு உதவுவோம் என்று பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் கூறப்பட் டுள்ளதே - அதைப்பற்றி மதிமுகவின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவைச் சேர்ந்த இந்து அல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பா.ஜ.க. முகத்தைத் திருப்பிக் கொள்ளுமா?
பசுவதை பற்றி பா.ஜ.க. கூறுவதுபற்றி என்ன கருத்து?
பச்சையான இந்துத்துவா தேர்தல் அறிக்கையை முன் வைத்து பா.ஜ.க. இந்தத் தேர்தலைச் சந்திக்க வந்து விட்டது. இதற்கு நடைபாவாடை விரிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; திராவிட இயக்க த்தைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் பொல்லா நிலைக்குக் காலா காலத் திற்கும் மதிமுகவும், பாமகவும் பதில் சொல்லி யாக வேண்டும்.
Read more: http://viduthalai.in/e-paper/78947.html#ixzz2zNxc6A9I
ராம்தேவ் மீதான புகார் எதிரொலி:
யோகா முகாம்கள் நடத்த தடை
புதுடில்லி, ஏப். 19- யோகா குரு ராம்தேவ் மீதான புகாரின் எதிரொலியாக, யோகா உள்ளிட்ட அரசியல் சார்பற்ற முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ், வாழும் கலை நிறுவனர் சிறீசிறீரவி சங்கர் ஆகியோர் பயிற்சி முகாம் என்ற பெயரில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பொது மக்களிடம் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், யோகா உள்ளிட்ட அரசியல் அல்லாத அமைப்புகள் முகாம்கள் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், சில அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறுகள் நடக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலோ, ஏற்கெனவே அளித்த அனுமதியை தவறாக பயன்படுத்திய அமைப்புகளாக இருந்தாலோ அவர்கள் யோகா போன்ற முகாம்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம். இதுபோன்ற விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுபற்றியும் ஆணையத் துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தை ஊழல் பிரதேசம் என்று கூறலாம் : சோனியா
நீமச், ஏப். 19- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் தொகுதியின் தற்போதைய எம்பியும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான மீனாட்சி நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறு கையில், சமீப காலமாக குஜராத் மாநிலம்தான் வளர்ச் சியின் மாதிரி என்று பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அம்மாநி லத்தில் அங்கு 40 விழுக்காடு மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் உள்ள தலித் இனத்தை சேர்ந்த 27000பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்னமும் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான காலியிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கினார்.
பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்தியப்பிரதேச மாநில ஊழல்களை பட்டியலிட்டு பேசிய சோனியா இங்கு நடைபெற்ற தேர்வுவாரியத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு தகுதியில்லாதவர்களுக்கு அம்மாநில அரசு வாய்ப்பளித் திருக்கிறது. இம்மாநிலத்தை மத்தியபிரதே சம் என்று கூறுவதை விட ஊழல்பிரதேசம் என்று கூறலாம். அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/78953.html#ixzz2zNxoMRvi
சிந்தனா சக்தியற்றவன்
தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)
Read more: http://viduthalai.in/page-2/78937.html#ixzz2zNy4kc00
தூக்கிலிட்டால், அதையும் நாங்கள் தான் எதிர்ப்போம், மோடி
அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், 2002 குஜராத் கலவரத்தில், ஒரு தவறு தன்மீது நிருபிக்கப்பட்டாலும், தன்னை நடுத்தெருவில் வைத்துத் தூக்கிலிடலாம் என்றார் திருவாளர், மனித நேயர் மோடி.
இதைக் கேட்டதும், இங்கே உள்ள சில அல்லக்கைகள், ஆகா, பார், பார், மோடி எவ்வளவு யோக்கியர். எப்படி பேசுகிறார் பாருங்கள் என்கிறார்கள். அவர்களுக்காக வரலாற்றை சற்று ஞாபகப்படுத்துவோம்.
நரோடா பாட்டியா என்கிற ஊர், குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், அகமதாபாத் திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர்., அந்த நரோடா பாட்டி யாவில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர் அப்போது பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்.மாயா கோட்னானி. இவர் ஒரு பெண்மணி. இவரும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியும் இணைந்து ஏறத்தாழ 5000 பாஜக, பஜ்ரங்தள் கலவரக்காரர்கள் துணையோடு, அந்தப் பகுதியில் கலவரத்தை இஸ்லா மியர்களுக்கு எதிராக நடத்தினர். 28.2.2002 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து பத்து மணி நேரம் அந்த கலவரம் நடந்தது. 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மசூதிகளையும், முஸ்லீம் மக்கள் வாழும் வீடுகளையும், எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து, தரை மட்டமாக்கினர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இத்தனையும், பாஜக பெண் எம்.எல்.ஏ. மருத்துவர் மாயா கோட்னானி முன்னிலையில் நடந்தது. இந்தப் பெண்மணி, கலவரக்காரர்களுக்கு, முஸ்லீம்களை கொல்ல, அரிவாளை தந்தும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கலவரம் நடந்தது 28.2.2002-இல். அப்போது அவர் எம்.எல்.ஏ. ஒரே இடத்தில் 97 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது இந்தியாவிலேயே, நரோடா பாட்டியாவில் தான். அத்தகைய கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈனச் செயல் அதுவும் ஒரு பெண்மணி தலை மையில் நடைபெற்றது.
அவரது வழக்கை, மோடி அரசு, வேண்டுமென்றே இழுத்தடித்த நிலை யில்தான், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, சிறப்பு விசாரணை மன்றம் 2008-இல் அமைக்கப்பட்டு, மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 60 பேருக்கு மேல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. 29.8.2012 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தீர்ப்பு?
நரோடா பாட்டியாவில் 97 முஸ் லீம்கள் கொல்லப்பட்டதில் மாயா கோட்னானிக்கு தொடர்பு உள்ளது; ஆகவே அவருக்கு 28 ஆண்டு கால இரட்டை ஆயுள் தண்டனையும், பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், இவர்களோடு சேர்த்து, உடனிருந்த 30 பேருக்கு 14 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.
மாயா கோட்னானி எம்.எல்.ஏ.ஆக இருந்து கலவரம் நடத்தியது 28.2.2002. அவர் மீது கொடூரமான குற்றச்சாட்டு இருக்கிறது என மோடிக்குத் தெரியும். அது தெரிந்தும் 2007-இல் தனது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மாயா கோட்னானியை நியமித்தார் மோடி.
ஆகஸ்டு, 2012-இல் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே, மோடி, இப்போது, நாடகம் நடத்துவது போல், அப்போதும், மாயா கோட்னானிக்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் மனு தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி, மாயா கோட்னானி மீது தூக்குத்தண்டனை கோரும் முடிவை மாற்றிக்கொண்டது.
ஆனால், இப்போது, மோடி சொல்கிறார். தான் குற்றம் செய்திருந்தால், முச்சந்தியில் வைத்து அவரை தூக்கிலிடலாம் என்கிறார்.
கொலையாளியை தெரிந்தே தனது அமைச்சரவையில் சேர்த்தவர்; இரட்டை ஆயுள் தண்டனை தந்த நேரத்திலும் தனக்கு அதில் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்கிற ஓர் எண்ணம் இல்லாதவர், இப்போது தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் பெரிதாகப் பேசப்படுவதால், தூக்கு தண்டனை ஏற்கத்தயார் என நாடகம் ஆடுகிறார்.
அவ்வாறு, மோடிக்கு இந்த நாட்டிலே தூக்குத்தண்டனை என விதிக்கப்பட்டால், அது ரத்து செய்யப் பட வேண்டும் என போராடுபவர் களும் நாங்களாகத் தான் இருப்போம்.
ஆகவே,மோடி ஜி, பயமில்லாமல் பொய் சொல்லுங்கள்.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/78943.html#ixzz2zNyOM4x6
ஆசிரியருக்குக் கடிதம் >>>
திமுக ஆட்சியில் அப்படி
அதிமுக ஆட்சியில் இப்படி
எங்கள் ஊரின் நிலைமை ரேசன் விபரம் திமுக ஆட்சியில் 10 கிலோ கோதுமை, மண்ணெண்ணெய் 50 ரூபாய்க்கு மளிகை பொருள் சமையல் எண்ணை பருப்பு இவைகள் தாராளமாக கிடைத்தது இப்பொழுது கோதுமை 5 கிலோ மண்ணெண்ணெய் 5 லிட்டர் மளிகை பொருள் சுத்தமாக இல்லை. பருப்பு எண்ணெய் முந்தியவர்களுக்கு மட்டும்தான் அதிலும் 2014 ஏப்ரல் மாதம் 2 கிலோ கோதுமை கொடுக்கிறார்கள்.
மக்கள் நல பணியாளர்கள் நிலை என்ன?
இலவச பொருள் மிக்சி கிரைண்டர் மின் அடுப்பு இவைகளை இலவசமாக கொடுப்பதாக சொல்லி விட்டு அதற்கான பணத்தை மின் கட்டணத்தை அதிகரிக்கச் செய்து அதன் மூலமாக மேற்படி பொருள் களுக்கு உண்டான பணத்தை மக்களுக்கு தெரியாமல் வசூலிக்கின்றது இன்றைய ஆட்சி.
டேன்டி (டீ) எஸ்டேட்டில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கிடைக்காத சலுகை களை தி.மு.க. ஆட்சிதான் செய்தது அதாவது தற்காலிக தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளத்தை மாற்றி மாதச் சம்பளமாக செய்து அதன் மூலமாக ஆண்டு ஊக்கத் தொகை கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.
- அ.ப. முருகவேல், கொளப்பள்ளி
Read more: http://viduthalai.in/page-2/78945.html#ixzz2zNyX5IIy
பத்மநாபசுவாமி கோயிலில் செல்வங்கள் கடத்தல்
உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம், ஏப். 19-திருவ னந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து மன்னர் குடும்பத்தினரும் சில ஊழியர்களும் செல்வங்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையி லான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்வங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளை திறந்து செல்வங்களை மதிப்பிட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப் பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கியிருந்து பத்மநாபபுரம் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஊழியர்கள் ராஜ குடும்பத்தினர் உள்பட பலரை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத் தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு: ஹீ பத்மநாபசுவாமி கோயில் ஒரு பொது சொத்தாகும். ஆனால் கோயிலை யும், கோயிலுக்கு சொந்தமான சொத்துக் களையும் தங்களுக்கு சொந்தமான சொத் துக்களாக கருதி மன்னர் குடும்பத்தினர் சில செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹீ மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுக தொடர்புகள் உள் ளன. இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து செல்வங்களை கடத்தியிருக்க லாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
* இந்த சந்தேகத்தை உறுதிப்படுத் தும் வகையில் கோயிலுக்குள் வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹீ ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்கமுலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹீ பல ஆயிரம் கோடி மதிப்புள்ள செல்வங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள செல்வங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹீ ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும்.
* கோயில் நட்டத்தில் இயங்கு வது போல் பொய் கணக்கு காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்கு களை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
* கோயில் விவகாரங்களில் இனி மேல் மன்னர் குடும்பம் தலையிடக் கூடாது.
* கோயில் நிர்வாகத்தை கவனிக்க புதிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். ஹீ மன்னர் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும்.
*இந்தியா குடியரசு நாடாகி பல வரு டங்கள் ஆகின்றன. ஆனாலும் திருவனந்த புரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மன்னர் ஆட்சியும் நடப்பது போல் உள்ளது. ஒரு குழுவாக சேர்ந்து கோயிலில் இருந்து செல்வங் களை கடத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
* இந்த கடத்தலை தடுத்த சில ஊழியர்களுக்கு எதிராக கொலைமுயற்சி சம்பவமும் நடந்துள்ளன. சமீபத்தில் ஒரு ஊழியர் மீது அமிலம் வீசப்பட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தவிர சமீபத்தில் கோயில் குளத்தில் சந்தேக மான முறையில் ஒரு ஆண் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறை முறையாக விசாரிக்க வில்லை. ஹீ பத்மநாபசுவாமி கோயில் விவ காரத்தில் கேரள அரசும் மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளது.
* கோயில் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படையை நியமிக்க வேண்டும். இதுதவிர கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை கோயிலுக்குள் பாலி யல் வன்கொடுமை முயற்சி நடந் துள்ளது. இது போல் பல மோசமான சம் பவங்கள் கோயிலுக்குள் நடந்துள்ளன.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது வரும் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
Read more: http://viduthalai.in/page-2/78944.html#ixzz2zNykJ5Aw
பகிஷ்காரத்தின் இரகசியமும் தலைவர்களின் யோக்கியதையும்
சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம், அடிவிழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும்,
அதனால் சில பார்ப்பனர்கள் ஊரைவிட்டே ஓடவேண்டியதாய் நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எ.சீனிவாசய்யங்கார் முதலிய வர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள்.
அதாவது பகிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளு கின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது. என்றும் இந்தப் பட்டணத்திலேயே இருந்து பகிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரைவிட்டுப் போய்விடுவதா? என்று கோபத்துடன் கேட்டார்கள்.
அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும் சர்க்கார் உத்திரவில்லாமல் தெருவில் தலைகாட்டுவதில்லை என்றும் மற்ற பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததுடன் சர்க்காருக்கும் போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவித்துவிட்டுப் பொதுமக்களை ஏமாற்ற வேண்டி சைமன் கமிஷன் நடக்காத ஏதாவது ஒரு தெருவில் சில குறிப்பிட்ட நபர்களுடன் ஊர்வலம் செல்ல மாத்திரம் அனுமதி கேட்டுக் கொண்டார்கள்.
போலீஸ் கமிஷனர் சைமன் கமிஷன் வரும் வீதியில் வேண்டுமானாலும் நீங்கள் ஊர்வலம் போகலாம்; நான் பந்தோபது கொடுக்கின்றேன் என்று சொல்லியும் கண்டிப்பாய்க் கமிஷன் போகாத வீதியிலேயே ஊர்வலம் போக உத்திரவு பெற்றதோடு அதற்கும் பந்தோபஸ்தும் பெற்றுக் கொண்டார்கள். இதை அறிந்த ஆந்திர தேசத்துப் பார்ப்பனர்கள் போலீஸ் கமிஷனரோடு சென்னை பார்ப்பனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்து தாங்கள் நேரில் பகிஷ்காரம் நடத்துவதால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
சர்க்கார் அவர்களைப் பிடித்து அரடு செய்தவுடன் அவர்களும் தங்களை வெளியில்விட்டால் உடனே ஊருக்குப் போய் விடுகின்றோம் என்கின்றதாக வாக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும், சென்னை பார்ப்பனர்களும் ஆந்திரப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளுக்கு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய சேதிகளிலேயே அறியக் கிடக்கின்றது.
பகிஷ்காரத்தின் யோக்கியதை இப்படி இருக்க வேறு பல பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் பேரால் தாராளமாய் சைமன் கமிஷனிடம் சென்று தங்கள் சமூக நன்மைக்குத் தேவையான காரியங்களை எடுத்துச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை அடுத்த வாரம் வெளிப்படுத்துவோம்.
பொதுவாகச் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தங்கள் சங்கதியை அவர்களிடம் எடுத்துச் சொல்லாதவர்கள் யார் என்பதும், சைமன் கமிஷனர்கள் உத்தேசித்து வந்த காரியங்களில் எது தடைபட்டுப்போய் விட்டது என்பதும் முக்கியமாக யோசித்து பார்க்க வேண்டியதோடு காங்கிரஸ் மகாசபை என்பதின் யோக்கியதை எப்படிப்பட்டது, அதை மக்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் நமது நாட்டில் ஏற்பட்ட அந்த நிமிஷம் முதலே இக்கூச்சல் வடநாட்டில் மகமதியர்களுக்கு விரோதமாக அவர்களுடைய வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ உரிமையை பிடுங்கிக் கொள்ளவும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் சிறப்பாக தீண்டப்படாதார் என்று கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைத் தலையெடுக்க வொட்டாமல், செய்வதற்காகவும், செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்று நாம் எழுதியும் பேசியும் வந்ததோடு, மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கண்டிப்பாய்த் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் அவசியம் கமிஷன் முன் சொல்லியே ஆக வேண்டுமென்று வற்புறுத்தியும் வந்தோம்.
அந்தப்படியே விஷயங்கள் நடந்ததோடு முக்கியமாய்த் தீண்டப்படாதவர்கள் எனப்பட்டவர்கள் இமயம் முதல் குமரிவரையில் ஒரே மாதிரியாகத் தங்கள் நிலைமையையும், தேவைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது குறித்தும் அவற்றைக் கமிஷனர் கனவான்கள் நன்றாய் உணர்ந்து வேண்டியது செய்வ தாய் வாக்குறுதி கொடுத்திருப்பதைக் குறித்தும் நாம் அளவில்லா மகிழ்ச்சி அடை கின்றோம். இந்தக் கமிஷன் அறிக்கையின் மீது வழங்கப்படும் சீர்திருத்தம் என்பது எத்தன்மையதுவாக இருப்பினும் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை.
ஏனெனில் அச்சீர்திருத்தம் என்பதில் இப்போது தெரிவிக்கப்பட்ட குறைகள் நீங்கும் படியான மார்க்கங்கள் இல்லாதிருக்குமானால் இந்தச் சர்க்காரின் கண்களில் கோலை விட்டு ஆட்டக்கூடிய நிலைமையைச் சாதாரணமாக வெகு சுலபத்தில் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடிய சவுகரியங்கள் தாராளமாக கிடைத்துவிடும், என்கின்ற உறுதிதான் - ஆதலால் சைமன் கமிஷன் விஷயத்தில் நாம் நமது கடமையைச் செய்து விட்டோம்.
குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 10-03-1929
Read more: http://viduthalai.in/page-8/78956.html#ixzz2zO0QlTkg
வடஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா
வடஆற்காடு ஜில்லா போர்டின் 27.03.1929ஆம் தேதி மீட்டிங்கில். ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது.
அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத்தக்கதாகும்.
வடஆற்காடு ஜில்லா போர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப்பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவராயிருந்ததின் உண்மையை வெளிப்படுத்திவிட்டார்போலும், இதிலிருந்து நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு.நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.
நிற்க, வடஆற்காடு ஜில்லாபோர்டை மற்ற ஜில்லாபோர்டு பின்பற்றுமா என்று அறிய ஆசையுடையவர்களாய் இருக்கின்றோம்.
குடிஅரசு - கட்டுரை - 31-03-1929
Read more: http://viduthalai.in/page-8/78955.html#ixzz2zO101QhE
சம்பூகன்களே! ஏகலைவன்களே!
டும்... டும்.. டும்!
சகலருக்கும் அறிவிப்பு
தேர் வருது, தேர் வருது,
தேர்தல்
தேர் வருது தேர் வருது டும்... டும்.. டும்!
வறுமைக் கோட்டுக்
கிளையிலே
கூடு கட்டும்
ஏழைகளே
பாழைகளே
பஞ்சாப் பறக்கப்
போவுது பஞ்சம் பஞ்சம்!
இனி வேண்டாம் கவலை... டும்.. டும்... டும்...
மழை இல்லையா?
மனம் தளராதே!
குடி நீரும் இல்லையா
குமைந்து போகாதே!
குடியா மூழ்கிப் போகும்?
இனி வேண்டாம் கவலை... டும்.. டும்... டும்...
மின்சாரம் இல்லையா?
மிரளாதே!
மின் மினிபோல
வரப் போவுது
வரப் போவுது
மின்சாரம் வரப் போவுது!
இனி வேண்டாம் கவலை... டும்.. டும்... டும்...
விலைவாசி ஏற்றமா
வெம்பாதே, -
விலையெல்லாம்
இறங்கி இறங்கி
தட்டப் போவுது
உங்கள் கதவினை
தட்டப் போவுது
இனி வேண்டாம் கவலை... டும்.. டும்... டும்...
வீடில்லையா?
வேண்டாம் விசாரம்!
விடியற்காலையிலே பார்
வீடு ஒன்று
பொத்தென்று
குதிக்கப்போவுது
குதிக்கப் போவது
இனி வேண்டாம் கவலை... டும்.. டும்... டும்...
வேலை வேலையென்று
வேலையில்லாமல்
கூவித் திரியும்
வாலிபக் கோழிகளே!
விட்டது உங்கள் கிரகணம்!
இனி வேண்டாம் கவலை... டும்.. டும்... டும்...
மந்திரக் கோலில்
மாங்காயோ!
சூ மந்திரக் காளி
சூட்சுமமோ!
அதோ.... அதோ..
மோடி வருகிறார்
மோடி வருகிறார்
ராமன் கோயில் கட்ட
கொத்தனார்
மோடி வருகிறார்
மோடி வருகிறார்!
கரசேவைப் புகழ்
காரர்களும்
கண்டிப்பாய்
வருவார்கள்
வானரப் படை
இல்லாமலா?
வாட்ட சாட்டமாய்
வருவார்கள் - வருவார்கள்!
ஜெய் ஸ்ரீராம்!
அதோ பார்
சொகுசுப் பங்களா
ஜோராய்!
ஜெய் சீத்தாராம்!
வயல்வெளிகளைப் பார்!
பச்சைப் பசேல்
பருவ முத்தங்கள்!
ஜெய், பல்ராம்! வேண்டாம் இனி
மின்சாரம்
வருவான் இனி
ஜோதி ராமலிங்கம்!
ஜீ பூம்பா!
ஜீவ நதிகள்
ஜில் ஜில் ஓட்டங்கள்
எங்குப் பார்த்தாலும்
ஆடைப் பஞ்சமா? இனி
இல்லை இல்லை
நிர்வாண சாமியார்
ஆசீர்வாதம்
அட்டியின்றிக்
கிடைக்கும் கிடைக்கும்!
ஜெய் கிருஷ்ணா!
பா.ஜ.க. ஆட்சியிலே -
பாரதம்
மகாபாரதம்
திரும்பப் போவுது
திரும்பப் போவுது
பாஞ்சாலிகளுக்கு
இனி
பட்டாபிஷேகம்!
பள்ளியெலாம்
இனி
பர்ண சாலைகள்!
சம்பூகன்களே!
தலைகள்
தயாராக
இருக்கட்டும்! இருக்கட்டும்!
வாளேந்தி வருகிறார்.
ராமனாம் மோடி!
ஏகலைவன்களே!
துரோணாச்சாரியின்
தூதனாம் மோடி
வருகிறார் வருகிறார்!
கட்டை விரல்
தயார் தயார் தானா?
காணிக்கை வெட்ட வேண்டும்!
மனுநீதிதான்
இனி சட்டம்!
குலதர்மம்தான்
இனி திட்டம்!!
சவக்குழியிலிருந்து
மீண்டு(ம்)
ஆச்சாரியார்
பராக்! பராக்!!
எதற்கும் தயாராக
இருக்கட்டும்!
ஈரோட்டு
நெருப்புப் பெட்டியும்
தீப்பந்தமும்!
மறந்துவிடாதீர்கள்
அந்தக் கைத்தடியும்
முக்கியம்! முக்கியம்!!
- டும்... டும்.. டும்!!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
Read more: http://viduthalai.in/page-1/78909.html#ixzz2zO1hkxuF
தகவல் அறியும் உரிமை 7 ஆண்டுகளுக்குப் பின் தகவல்
மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் கை ரிக்ஷாக்கள் உள்ளன. கை ரிக்ஷாக்கள் கொல்கத்தாவில் எத்தனை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சபீர் அகமது என்பவர் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அன்று கொல்கத்தா மாநகராட்சியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுள்ளார். பொதுவாக தகவல்பெறும் சட்டம் 2005ன்கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றுஅச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கைரிக்ஷாத் தொழிலாளிகளை அடை யாளம் கண்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்காக, அவர்களின் எண் ணிக்கை குறித்து மாநகராட்சியிடம் கேட்கப்பட்டதாக சபீர் அகமது தெரி வித்துள்ளார்.
ஏழு ஆண்டுகள் கழித்து சபீர் அகமது மற்றும் கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையத்தின் சார்பில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கான விசாரணைக்கு அழைப்பு வந்தபோது, ஏழாண்டுகளுக்குப் பின்னர் வந்த அழைப்பால் சபீர் அகமது மிகவும் ஆச்சரியப்பட்டார். கொல்கத்தா மாநாகராட்சி அலு வலர்கள் 2005 ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று உள்ளபடி கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளிகள் 870பேர் உள்ளதாகவும், அவர்கள் மறுவாழ்வுக்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் ஏழாண்டுகளுக்குப் பின்னர் பதில் அளித்துள்ளனர்.
மேற்கு வங்கத்திற்கான தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையர் சுஜித் சர்க்கார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் தகவல்களுடன் 15 நாட்களில் வருமாறு கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட் டார்.
மனுதாரரான சபீர் அகமது கூறும் போது, மாநகராட்சி அலுவலர்களிடமி ருந்து குறித்த நேரத்தில் பதில் கிடைத் திருந்தால், ஏழைத் தொழிலாளிகள் நலனுக்குப் பயன்பட்டிருக்கும். தாமதிக் கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது போல், தாமதிக்கப்பட்ட தகவல் மறுக்கப் பட்ட தகவலாகவே உள்ளது என்றார். கைரிக்ஷா முறை மனிதத்தன்மை இல்லாததால் அவற்றை உடனடியாக அகற்ற அரசு முடிவு எடுத்துள்ளது என்று 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் அப்போதைய முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்திருந்தார். கொல்கத்தா ஹக்கினி-கேரியேஜ் சட்டம் 1919இல் கை ரிக்ஷா முறையை நீக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறி மசோதா சட்டசபையில் அறிமுகப்படுத் தப்பட்டது.
இந்த அறிவிப்பு ரிக்ஷா தொழி லாளிகளின் மறுவாழ்வு குறித்து கூறி உள்ளது என்றும் மனுதாரராகிய சபீர் அகமது கூறுகிறார்.
Read more: http://viduthalai.in/page4/78914.html#ixzz2zO2xraxi
மோடியின் முகவரி இதுதான் இட்லரைக் கடவுளாகக் காட்டும் குஜராத் பாடத் திட்டம்
யூதர்களுக்கு உலகப் போர் என்றாலே ஒரு மறுபிறவி என்று தான் சொல்லவேண்டும். ஹிட்ல ரின் தலைமையில் ஜெர்மன் இருந்த போது அங்கு வாழ்ந்த 87 விழுக்காடு யூதர்கள் கொல்லப் பட்டார்கள், இதில் 50 சதவீதம் ஆயுதங்களின் மூலம் கொல்லப் பட்டனர். மீதமுள்ள 37 விழுக் காடு மக்கள் சிறையில் உணவு இன்றி பட்டினிபோட்டு தொற்று நோய் ஏற்படுத்தும் நோய் கிருமி களை பரப்பி விட்டும், விஷ வாயுக்கள் மூலமாகவும் கொன்று தீர்த்தார் நாஜிக்களின் அதிபர் இட்லர்.
இட்லரின் இந்த கொடூரத் தனத்தை உலகமே இன்றும் வெறுப் போடு பார்த்துக்கொண்டு இருக்கும் போது குஜராத் அரசின் பாடத்திட்டம் இதைத் தேசிய நலனுக்காகச் செய்த ஒன் றாகவும், தன்னுடைய நாட்டைக் காப் பாற்ற சாதாரணமாக நடக்கும் செயல் என்றும் நியாயப்படுத்தியுள்ளது. இட்ல ரின் செயல் தேசியநலன் மற்றும் தான் சார்ந்த சமூகத்தின் நன்மைக்காக செய்யப் பட்டவைகளே! அங்கு நடந்தவை எல் லாம் மனித குலத்திற்கு விரோதமனாவை அல்ல சமூகவியல் 9 ஆம் வகுப்பு குஜ ராத்தி மொழி பாடப்புத்தகம்
குஜராத்தில் 9, மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இரண்டாம் உலகப் போர் பற்றிய பாடத்தில் இட்லரின் செயலை மிகவும் சாமர்த்தியமாக நியாயப் படுத்தி குழந்தைகள் மனதில் இட்லரை நாயகனாக மாற்றியுள்ளது ஆளும் பாஜக அரசு
இந்த பாடத்திட்டத்தை விமர்சித்த டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில இதழின் அகமதாபாத் பதிப்பு நியாமற்ற மனிதாபிமானம் இல்லா ஒரு நிகழ்வை சர்வ சாதாரணமாக அதுவும் மிகவும் நுணுக்கமாக சரிதான் என்று பள்ளி மாணவர்களின் மனதில் திணிப்பது மிகவும் அபாயகரமான ஒன்று என்று எழுதியிருந்தது, இதனை அடுத்து புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவோம் என்று குஜராத் அரசு உத்திர வாதம் கொடுத்தது. ஆனால் மீண்டும் புதிய பாட்த்திட்டத்தில் மீண்டும் புதிய தகவலை திணித்து, இட்லரை கடவுளாக்கி விட்டார்கள்
2005ஆம் ஆண்டு மார்ச் 14இல் புதிய பாடத் திட்ட குழு அமைக்கும் போது இந்த பகுதியை நீக்காமல் மீண்டும் சேர்க்கப்பட்டது. மேலும் சில தகவல்கள் இட்லர் தெய்வமாக கருதும் படி எழுதப்பட்டது. குஜராத் அரசின் திருத்தப் பட்ட 10 ஆம் வகுப்பு சமூக வியல் பாடத்தில் பக்கம் 11- இல் இப்படி எழுதப்பட்டு இருக் கிறது. இட்லரின் நடவடிக்கை வீரம் விவேகம் மற்றும் ராஜதந்திரம் மிக்க ஒருவரின் நடவடிக்கையைப் போல் உள்ளது, ஜெர்மனியை வளர்ச் சிப்பாதைக்கு கொண்டு செல்ல அவரது ராஜதந்திர குணம் காரணமாக இருந்தது. என்று மேலும் சில வார்த்தைகளைச் சேர்த் துள்ளனர். குஜராத் பள்ளிக் கல்வித் துறையினர் பாசிசத்தை நியாயப்படுத்தி, இட்லரை ஒரு கடவுளாக கருதும் வகையில் வரலாற்றில் எழுதியுள்ளனர். அதாவது, மற்ற மன் னர்கள் தம் நாட்டில் வாழும் வேற்று இனத்து மக்களைப்பற்றி கவலையற்று இருந்ததாகவும் அவர்களால் ஏற்படும் இழப்புகளை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், ஆனால், இட்லர் மட் டுமே அத்தகைய பிற இன மக்களை ஒடுக்கி, தம் இன மக்களின் நலனுக்கு பாடுபட்டது போன்ற தொனியில் குஜராத் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜிலீமீ ழிமீஷ் ழிமீ கீஷீக்ஷீளீ)
Read more: http://viduthalai.in/page4/78915.html#ixzz2zO37dt93
மதம் பிடிக்க வேண்டாமே! .
அலைபேசியில் குறுஞ்செய்திமூலம் மதத்துக்கு எதிரான கருத்தை வெளி யிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட இணையர்மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, விசாரணையின் முடிவில் பாகிஸ் தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கிழக்கு பாகிஸ்தானில் கோஜ்ரா நகரில் ஷப்கத் இம்மானுவேல் என்பவர், அவருடைய மனைவி ஷாகுப்தா கவுசர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று இவருடைய அலைபேசி யிலிருந்து இசுலாத்தில் புனிதராகக் கூறப்படும் முகமதுவை விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பி, இசுலாமிய மதத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக அவர்மீது புகார் எழுப்பப்பட்டது. மவுல்வி முகம்மத் உசேன் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கணவனுடன் அவர் மனைவியையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 40முதல் 50 வயதுடைய இருவரும் வறுமையில் உள்ளவர்கள். வழக்கை நடத்தவே வாய்ப்பற்றவர்கள். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய பொரு ளான அலைபேசியும் முன்னதாகவே தொலைந்து போனதாகவும் தெரிவித் துள்ளனர். தோபா தேக்சிங் நகரில் உள்ள நீதி மன்றம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்தது. தற்போது நீதிபதி மியான் ஆமிர் ஹபீப் விசாரணை செய்து முடிவில் தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில் அவ் விருவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தரப்பு வழக் குரைஞர் நதீம் ஹசன் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி உள்ளார்.
இதேபோல், 2009-இல் இதே குஜ்ரா பகுதியில் குர்ரானை இழிவுபடுத்தியதாக ஏற்பட்ட வதந்தியில் ஒரு கும்பல் வன் முறையில் ஈடுபட்டு கிறித்துவர்கள் வாழ்கின்ற அப்பகுதியில் சுமார் 77 வீடுகள் தீக்கிரையாகின. சுமார் ஏழு பேர் அக் கலவரத்தில் உயிரிழந்தனர். அதேபோல் லாகூரில் ஜோசப் காலனியில் தனிப்பட்ட வர்களிடையே, பேச்சுவாக்கில் பேசிய பேச்சுகூட புகாராக பதிவாகி சவான் மாசிக் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாகிஸ் தானில் அங்குள்ள சிறுபான் மையினரை தனிப்பட்ட வகையிலான தகராறுகளுக்குக் கூட இந்த சட்டத்தை துணையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்கப் படும் கொடுமை நிகழ்கிறது.
180 மில்லியன் மக்கட்தொகையில் 97விழுக்காட்டினர் இசுலாமியராக உள் ளனர். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் மூலம்கூட சிறுபான்மையினர் பாதிக்கப் படுகின்றனர்.
Read more: http://viduthalai.in/page4/78916.html#ixzz2zO3L0l9W
பகவத்சிங் நினைவைப் போற்ற நாத்திகர்கள் அணி வகுப்பு
விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாத்திகர்கள் குவிந் தனர். 250-க்கும் மேற்பட்ட நாத்திகர்கள் மும்பையில் பகத்சிங் நினைவுநாளில் திரண்டனர். அந்நிகழ்வில், மத சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டித்து ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். கடந்த ஆகஸ்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவரும், ஆதிக்க சக்திகளை எதிர்த்து வந்தவரு மாகிய டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல்துறை உண்மை தகவல்களின்பேரில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளது.
மும்பை பல்கலைக்கழகத்தின் புறநகர் கலினா வளாகத்தில் நடைபெற்ற நிகழ் வின் அமைப்பாளர் சஞ்சய் சவார்க்கார் கூறும்போது, எல்லோரும் ஒன்று சேர்வதன் நோக்கம் என்னவென்றால், ஒரே சிந்தனையுள்ளவர்கள் ஓர் அமைப்பாக இணைந்து, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதே. அதே போல், நாத்திகராக இருப்பதில் நீதிக்குப் புறம்பாக ஏதுமில்லை என்கிற செய்தியை சமுதாயத்துக்கு தெரிவிப்பதுமாகும். மத சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை உரு வாகும்போது, பரந்த சிந்தனையாளர்கள் ஒன்று சேர்வது முக்கியமான தேவை யாகும். நான் ஏன் நாத்திகன் என்கிற பகத் சிங் கட்டுரை அனைவரும் அறிந்ததே. அவருடைய நினைவுக்காகவே இந்நிகழ்வு இங்கே நடைபெறுகிறது என்றார்.
எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வல்லுநருமாகிய அச்யுத் கோட்புலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் (Federation of Rationalist’s Association of India)
நரேந்திர நாயக் மற்றும் பலர் பங்கேற்று உரை ஆற்றினர்.
நரேந்திர நாயக் பேசும்போது, கடவுளிடம் உங்களுக்கு பயம் உண்டா? என்று என்னிடம் கேட்பார்கள். நான் எப்போதுமே சொல்வேன்: கடவுளின் முகவர்களால்தான் அச்சம் ஏற்படும் என்பேன். அதேபோல் ஏராளமான நாத்திகர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்கள் பெருமிதத்துடன் வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.
எழுத்தாளர் பவார் பேசும்போது மிகுந்த கவலையுடன் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல் துறை போதுமான அக்கறையுடன் முன் னெடுத்துச் செல்லவில்லை. விசாரணையில் வேகம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.
- (டி.என்.ஏ. ஆங்கில நாளிதழ் 24-3-2014)
Read more: http://viduthalai.in/page5/78917.html#ixzz2zO3fVEZk
புதிய எழுத்தாளர்களை ஏன் தேடுகிறீர்கள்?
நூல்களை பற்றி விவாதிக்க விரும்பு கிறீர்களா? நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நாடகங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஒலிவடிவில் உள்ள நூல்கள் என்று பல உள்ளன. அனைத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும் என்பதில்லை. அமர்ந்து விவாதியுங்கள்.
புதிய எழுத்தாளர்களின் நூல்களைத் தேடியபோது, நூல் விரும்பிகள் அல்லது நண்பர்கள் குழு மூலம் நூல்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றபின்னர்தான் விருப் பமான நல்ல நூல்களை தெரிவுசெய்து வாசிக்கவும், தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளவும் முடிந்தது.
பலநேரங்களில், ஓர் எழுத்தாளரின் நூல் தொகுப்பை கால வரிசையாக படித்திட முயற்சி செய்துவந்துள்ளேன். புதிய எழுத் தாளர்களின் நூல்களைப்போலவே பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்களையும் படிப்பதில் மகிழ்வதோடு, என்னை வளர்த்துக்கொள்ளவும் முடிந்தது.
நூல் விற்பனையகத்துக்கு செல்லும் போதும், நூலகத்துக்குச் செல்லும்போதும் அங்கு பணிபுரிபவர்கள் எடுத்துக்கூறும் புதிய நூல்களை அதன் அறைகளிலிருந்து எடுத்துக்கொள்வேன். புதிய வரவுகளாக என் கவனத்தை ஈர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து கொள்வேன். அதேபோல், நூல் விற்பனை நிலையமானாலும், நூலகமானா லும் விற்பனைக்கு என்று உள்ளவற்றை கவனத்தில் கொள்வேன்.
நூல்களின் பட்டியலைப் பெற்று கற்பனைக் காவியங்களையும், அறிவியல், கற்பனை மற்றும் மர்மக் கதைகளை தெரிவு செய்து அதிலும் புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பெற முயற்சி செய்வேன்.
சிலர் கூறுவதுபோல், இணையத்தில் உள்ள நூல்களின் குறிப்புகளை, சில பக்கங்களை முதலில் படித்துப்பார்த்து விட்டு பிறகு இணைய தளம்மூலமே பெற்றுக் கொள்வேன்.
பார்னே & நோபிள் இணையதளம் நூல்களின் முன்னோட்ட வாசிப்புக்கு சில பக்கங்களை அளிக்கிறது. அதை பல நேரங்களில் மறந்துவிடுகிறேன்.
சில நேரங்களில் விமர்சனங்களைப் படிப்பதன் மூலமும், கவரும் அட்டைகள் மூலமூம், ஒரு நூலில் மற்ற நூல்குறித்து குறிப்பிடப்படுவதைப் பார்த்தும், பார்லே & நோபிள் நூல்களில் ஒரே நேரத்தில் அல்லது ஒரே தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் குறித்தும் நூல்கள் பெறுவதில் என்னை இணைத்துக் கொள்கிறேன். கடந்த வாரம் கூறியதுபோல், நல்ல படங்களிலிருந்தும், சில நேரங்களில் நூல்களைப்பற்றி அறிந்துகொள்வேன். பிஹைண்ட் தி லைன்ஸ் (Behind the Lines) என்கிற படத்தைப் பார்த்தபோது டாக்டர் ரிவர்ஸ், சீக்ஃப்ரெய்ட் சாசூன் குறித்து அறிந்துகொள்ள பட் பார்க்கர் எழுதிய ரீஜெனரேஷன் (Regeneration) என்கிற நூலைப்படிக்க முடிவு செய்தேன். அந் நூலைப் படித்த பின்னர் மீண்டும் அப் படத்தை பார்த்தபோதுதான் அது எப் பேர்ப்பட்ட படம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
பலரும் நல்ல வாசிப்பாளர் பட்டியலில் உள்ளனர். விருப்பமான எழுத்தாளரின் அடுத்த நூலுக்காகக் காத்திருக்கும்போது சிறிதே சலிப்பும் ஏற்படும். அப்போது, புதிய எழுத்தாளருக்கான தேவை ஏற்படுகிறது. சில நூல்கள் மூன்று தலைப்புகளில் ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நூல்களை இடைவெளிவிடாமல் படித்து விடுவேன். நூல் தேடுதலில் முதலில் தேடிய நூலைக்காட்டிலும், அடுத்த நூல் நன்றாக இருப்பின் அந்நூலை எடுத்துக்கொள்வேன். அதன்பிறகும், நூலைத் தேடுவதில் மகிழ்வே அடைவேன். அதுவும் பல நாட்டு நூல்களைத் தேடுவதில் பெரிதும் மகிழ்ந் துள்ளேன்.
நீங்கள் எப்படி? நூலகத்தில் ஒரு நல்ல நூலைக்கண்டால் அதை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்களா? நீங்கள் படித்த நூல்களைக் காட்டிலும், எல்லோர் பாராட்டையும் பெற்றநூல்களைக்காட்டிலும் உங்களாலும் எழுதமுடியும் என்று முயற்சி செய்துள்ளீர்களா? முயற்சி செய்யுங்கள்.
-டெய்லிகோஸ்.காம் இணையத்தில் சி.எஃப்.கே.
Read more: http://viduthalai.in/page5/78918.html#ixzz2zO3s7v5f
பொன் மொழிகள்
நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை. - எமிலி போஸ்ட்
மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பானேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது. - கார்டினல் நியூமென்
பிரச்சினைகள் என்பது முன்னேற்றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வராதீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.
- சார்லஸ் எப் கெட்டரிங்
ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.
- பிளெய்ஸ் பாஸ்கல்
நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.
- கோத்தி
பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். - டாவெநன்ட்
Read more: http://viduthalai.in/page7/78923.html#ixzz2zO4gCtBz
அண்ணா சொன்னார்
டாக்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது
கம்பவுண்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது;
டாக்டர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கிற மந்திரக்காரன் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது; அதையே ஒரு நோயாளி சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது - ஒரே விஷயத்திற்கு! சுரமாயிருக்கிறது - என்ன செய்யலாம்!
என்று மந்திரக்காரனைக் கேட்டால், பொன்னியம்மன் கோயிலில் மூன்று நாள்களுக்கு படுத்துக் கொள்ளுங்கள்; எல்லாம் சரியாகிப் போய்விடும் என்று சொல்லுவான். காரணம், பொன்னியம்மன் கோயிலுக்கு அவன் தான் பூசாரி.
- (அண்ணா அவர்களின் காந்தியும் காந்தியமும் பூம்புகார் பதிப்பக நூலில் - பக்கம் 253)
Read more: http://viduthalai.in/page8/78926.html#ixzz2zO51cc35
Post a Comment