Search This Blog

30.4.14

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 124-ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள் தமிழர் தலைவர் பேட்டி
 

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி

 

பாரதிதாசன் படத்திற்கு குமரி ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 29- புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

புரட்சிக்கவிஞர் பாவேந் தர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) சென்னை காமராசர் கடற் கரை சாலையிலுள்ள புரட் சிக்கவிஞர் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவி யும் மரியாதை செய்தார்.

புரட்சிக்கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தவுடன் தமிழர் தலைவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது:-

புரட்சிக் கவிஞர் அவர்க ளுடைய பிறந்த நாளான இன்று (29.4.2014) ஒரு புதுமை நாள் என்பது மட்டு மல்ல. இன்றைக்கு நாட்டை மதவெறியும், ஜாதி வெறி யும் கப்பிக்கொண்டு இருண்ட எதிர்காலம் சூழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்ற இந்தக் காலத்தில் புரட்சிக் கவிஞருடைய கருத்துக்கள் மிகவும் தேவை.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள் கையை ஒரு சூரணமாக்கி இலக்கியத்திலே தந்த பெரு மைக்குரியவர் புரட்சிக்கவி ஞர். இருட்டறையில் உள்ள தடா உலகம் என்று அன் றைக்குக் கேட்டார், அதை விரட்டுவது பகுத்தறிவே என்று சொன்னார். அப்படிப் பட்ட அந்த பகுத்தறிவை வலியுறுத்திப் பாடிய கார ணத்தால் உலகக் கவிஞராக உயர்ந்திருக்கக்கூடிய அவருக்கு உரிய விளம்பரம் தரப்படாவிட்டாலும்கூட, என்றென்றைக்கும் அவரு டைய இடத்தை எவரும் பறிக்க முடியாது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் மிகப் பெரிய சமுதாயப்புரட்சியை உருவாக்கித் தனித்த ஒரு தன் மையோடு மதவெறியை மாய்த்து மனித நேயத்தை மானுடத்தைக் காப்பாற்று வதற்காக மிகப்பெரிய அள விலே மானிடப்பரப்பையே தன்னுடைய அளவு கோலாக, தன்னுடைய நாடாக, தன் னுடைய கனவாக அமைத் துக் கொண்டவர்கள், அந்த வகையில் மானுடத்திற்கு மிகப்பெரிய மன்பதை உல கத்திற்கு அரிய கருத்துக்க ளைச் சொன்ன அந்தக் கவி ஞருடைய பிறந்த நாள் என் பது சமுதாயத்தினுடைய எழுச்சி மிகுந்த நாள். அவர் வாழ்க! அவர் புகழ் வாழ்க இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.




இன்று  - ஏப்ரல் 29- புதுவை தந்த புரட்சிப் பாவலர், ஒப்புவமையற்ற பெரியாரின், ஒப்புவமை யற்ற புரட்சிக் கவிஞரின்  124ஆவது பிறந்த நாள்! இந்நாள் (1891).

தனது நன்றி உணர் வைக் காட்டுவதற்காக  பாரதிதாசன் என்று  தன்னை அடக்கத்துடன் அழைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம் - ஓர் புரட்சி இலக்கியத்தில் எவரும் எட்ட முடியாத பெரும் இமயத்தின் உச்சியிலும் உச்சி!
சுயமரியாதை கொள் தோழா, என்று அறிவுறுத் தியதால் ஆரிய ஊடகத்தாலும், இன உணர்வு, மொழி உணர்வற்ற நமது ஏடுகளாலும் இன்னும் இருட்டடிக்கப்பட்டாலும் இணையிலாச் சூரியனைப் போன்று பகுத்தறிவு உலகத்திற்கு ஒளியூட்டும் ஓர் ஒப்புவமை இல்லா உயர் கவிஞர் அவர்.
விளம்பர சடகோபம் எதிர்பார்த்து எவருக்கும் ஆழ்வாராகிட துடிப்போர் உண்டு; ஆனால், தன் னேரிலா தன்மானப் பெருங் கவியாக, தனித்தே நின்று, தகத்தகாய ஒளியுடன் இன்றும் என்றும் வாழுபவர் நம் புரட்சிக் கவிஞர்!
பண்பாட்டுப் படையெடுப்புதான் நம் திராவிடர் இனத்தை வீழ்த்தியது என்பதை தனது சொடுக்கு வரிக் கவிதைகளால் மிடுக்குடன் எடுத்துரைக்கத் தயங்காதவர் நமது போற்றதலுக்குரிய புரட்சிக் கவிஞர்!

இதோ ஒரு சிறு எடுத்துக்காட்டு:

பகவத்கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்
திருக்குறள் அருளிய திருவள்ளுவரோ
தென் மதுரைக்கோர் அச்சென செப்புவர்
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்
இதனால் அறிவதென்ன வென்றால்
இரு வேறு நூற்கள் இருவேறு கொள்கைகள்
இருவேறு மொழிகள் இருவேறு பண்பாடு
உள்ளன உணர்தல் வேண்டு மன்றோ?
கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினன் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினர் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழியாளர் வழங்குகின் றார்
பரிமே லழகர் திருக்கு றளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம் மேற்கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன்று ணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்!
சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே
மதமிலார் நூற்கு மதமுளார் உரை செயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்


- இப்படி மற்ற புலவர்கள், இலக்கிய மேதைகள் கூட சொல்ல அஞ்சும் உண்மைகளை அப்படியே உலகுக்குச் சொல்லி, அதனால் தன் புகழ் பலிபீடத் தில் ஏற்றப்பட்டாலும் கவலை இல்லை; ஏற்ற கருத்தை எவர் எதிர்ப்பினும் அஞ்சாமல் அயராமல் வெளியி டுவதே எம்பணி என்று வாழ்ந்து, வரலாற்றைப் படைத்த  வைர நெஞ்சக் கவிஞர் எம் புரட்சிக் கவிஞர் ஒரு வற்றாத ஜீவநதி!
பெரியார் என்ற தலைக் காவிரியின் கிளைத்த தனித்த ஆறு! வாழ்க! வாழ்கவே!!

-----------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் சென்னை
                                -------------------”விடுதலை”   29.4.2014


22 comments:

தமிழ் ஓவியா said...


இந்து அறநிலையத்துறையின் வேலை மூடத்தனத்தைப் பரப்புவது தானா?


இந்து அறநிலையத்துறையின் வேலை
மூடத்தனத்தைப் பரப்புவது தானா?
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம்!

சென்னை, ஏப்.29- தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில் களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியது.
கடந்த ஆண்டு தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. இது மட்டு மின்றி, ஏரி கண்மாய், குளங்களும் தண்ணீரின்றி வறண்டுள்ளது.

கோடைக் காலங்களில் பெய்யும் மழை கூட பொய்த்ததால் பல இடங் களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந் நிலை யில் மழை வேண்டி தமி ழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வருண ஜெபம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஒரே நேரத் தில் இந்த பூஜை நடந்தது. இதில், சென்னையில் திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், வடபழனி முருகன் கோயில் உட்பட 28 முக்கிய கோயில்களில் வருண ஜெபம் நடந்ததாம்.

நேற்று காலை 5.05 மணியளவில் கணபதி ஹோ மத்துடன் வருண ஜெபம் தொடங்கியதாம். தொடர்ந்து சுவாமிக்கு சீதாள ரூபன ஏகாதச ருத்ரஜப பாரா யணம், வருண ஜெபம், வருண சூக்த பாராயணம், தீபாராதனை உட்பட பல் வேறு அபிஷேகங்கள் நடந் தன. மேலும், இசைக் கல் லூரி மாணவர்களும், மழை வேண்டி அமிர்தவர்ஷிணி, மேகவர்ஷிணி, கேதாரம், ஆனந்த பைரவி, ரூப கல்யாணி உள்ளிட்ட இசை ஆராதணை நடத்தினராம். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியிடம் மழைபொழிய வேண்டி வழிபாடு செய்தனராம். ரகசிய ஏற்பாட்டால் பக்தர் கள் கூட்டம் இல்லை.

இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் மழை வேண்டி வழிபாட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்தானாம். இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மழை வேண்டி வழிபாடு நடத்தப்பட்ட கோயில்களில் குறைவான பக்தர்களே கலந்து கொண் டனராம்.

Read more: http://viduthalai.in/e-paper/79451.html#ixzz30KN2KmWZ

தமிழ் ஓவியா said...


சிக்கினார் நரேந்திரமோடி ஹவாலா ஏஜெண்டுடன் நரேந்திரமோடி: குறுந்தகடை வெளியிட்டது காங்கிரஸ்


புதுடில்லி, ஏப்.29- ரூ.1000 கோடி அன்னிய செலவாணி பணத்துடன் பிடிப்பட்ட அப்ரோஸ் பட்டா, மோடியுடன் உள்ள புகைப்படம் அடங்கிய சிடியை காங்கிரஸ் வெளி யிட்டு பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. காங் கிரஸ் தலைவர் சோனியா காந் தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில பேரம் நடத் தியது தொடர்பான சிடியை பாஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. இது அரசியல் வட் டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜக பிர தமர் வேட்பாளர் மோடியு டன், ரூ.1000 கோடி ஹவாலா பணத்துடன் சிக்கிய பிரபல ஹவாலா ஏஜென்ட் அப் ரோஸ் உள்ள ஒளிப்படம் அடங்கிய சிடியை காங் கிரஸ் நேற்று வெளியிட்டது. இதனால், தேசிய அரசி யலில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

சிடியை வெளியிட்ட காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சந்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், அகம தாபாத், சூரத் நகரத்திலி ருந்து ஹவாலா பணத்தை கொண்டு செல்ல முயன்ற வழக்கில் பிடிப்பட்டவர் அப்ரோஸ் பட்டா. இவர் ரூ.1000 கோடி முதல் ரூ.5000 கோடி வரை ஹவாலா மோசடி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இப் பணம் நிழல் உலக தாதாக்களின் பணமாக இருக்கலாம் எனவும் சந் தேகிக்கப்படுகிறது. இப் படிப்பட்ட நபர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் மோடியின் சீடரும் கூட. இவருக்கும் குஜராத் முதல்வருக்கும் என்ன தொடர்பு? அரசு நிகழ்ச் சிகளில் ஹவாலா ஏஜென்ட் எப்படி கலந்து கொண்டார் என்பதை பாஜக தெளிவு படுத்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசா ரணைக்கு மோடி உத்தர விடுவாரா? தனக்கும் ஹவாலா ஏஜெண்ட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை தெளிவுபடுத்துவரா என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79452.html#ixzz30KNHZ29k

தமிழ் ஓவியா said...

பிரதமராகவே ஆகி விட்டாரா மோடி?

வங்கதேச அகதிகளை விரட்டுவோம்!
இந்து அகதிகளை வரவேற்போம்!

மோடியின் விஷம் கக்கும் பாசிசப் பேச்சு!

புதுடில்லி, ஏப்.29- வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகள் இந்துக் களாக இருந்தால் அடைக் கலம் தருவதாகவும் இஸ் லாமியர்களாக இருந்தால் விரட்டிவிடப்போவதாகவும் நரேந்திரமோடி மேற்கு வங்கத்தில் உள்ள சிரிராம் பூரில் நடந்த தேர்தல் பரப் புரையில் நரேந்திரமோடி கூறியுள்ளார். ஓட்டுக்களை வாங்குவ தற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பிரிவினை பேச்சை தனது உரையின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார். இது போன்ற பேச்சுக்களின் மூலம் ஒட் டு மொத்த பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று மதரீதியில் பேச ஆரம்பித் துள்ளார். பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் வரை நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் என மக்களை ஏமாற்றும் விதமாக பேசிவந்த நரேந் திர மோடி, தேர்தல் அறிக் கையில் முழுக்க இந்துத் துவா நாற்றம் வீசியிருப் பதைப் பார்த்ததும் அந்த நாற்றம் பிடித்த பாத்திரத் திற்கு ஏற்ப தன்னுடைய வேடத்தையும் மாற்றிவிட் டார். இதுவரை பாஜகவின் கிரிராஜ் போன்றோர் நாட்டு நலனுக்கு எதிரான பேச் சுக்களை பேசிவந்த நிலை யில் பிரதமவேட்பாளர் என்று கூறிக்கொள்ளும் நரேந்திரமோடி நேரடியாக தன்னுடைய பேச்சில் நாட்டு நலனுக்கு எதிரான நச்சுக் கருத்தைப் பரப்ப தொடங்கி விட்டார்.

தமிழ் ஓவியா said...

மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா பானர்ஜி மீது இதுவரை மென்மை யான போக்கைக் காட்டி வந்த மோடி திடீரென மமதா பானர்ஜி மதரீதியாக மக்களை பிரித் துப்பார்க்கிறார் என்று அதிரடியாக குற்றச்சாட்டை கூறுகிறார். நான் ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்கத் திற்குள் நுழையும் முஸ்லீம் களும் இங்குள்ள வங்க தேச இஸ்லாமிய அகதி களும் விரட்டியடிக்கப் படுவார்கள், அதே நேரத்தில் இந்து வங்கதேச அகதிகளுக்கு மறுவாழ்வு வழங்கப்படும். வங்கதேச இந்துக்கள் இந்தியாவிற்கு வந்து வாழ வழிவகை செய் யப்படும் என்று கூறி யுள்ளார். நரேந்திர மோடி அஸ் ஸாம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையின் போதும் பிரிவினைவாத கருத்தைக்கூறியுள்ளார். மேற்குவங்க முஸ்லீம் அகதிகள் முகாம் அழிக்கப் படும், இந்துக்களுக்கு குடி யுரிமை வழங்கப்படும் என்ற தொனியில் பேசினார். வங்கதேச அரசையும் மிரட் டும் தொனியில் பேசினார்.

இந்துக்களுக்கு மட்டும் அடைக்கலம்!

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒவ்வொரு முறையும் தனது தேசிய அளவிலான மாநாடுகளின் போது இஸ்லாமியர்களுக்கு உல கம் எங்கும் அகதிகளாக சென்று வாழ உரிமையுள் ளது, ஆனால் இந்துக் களுக்கு என்று ஒரு நாடுகூட அடைக்கலம் கொடுப்ப தில்லை என்று கூறுகிறது. இந்துக்கள் இந்தியாவை நோக்கி மாத்திரம் வருகி றார்கள், வரவேண்டும் அவர்களுக்கு உலக நாடு களில் தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்று கூறிக்கொண்டே வருகி றார்கள். இதைக் கவனத்தில் கொண்டு தான் பாஜக தேர்தல் அறிக்கையில் அயல்நாடுகளில் வாழும் இந்துக்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று கூறி யுள்ளனர்.

முஸ்லீம்களை மய்ய மாக வைத்து இதுபோன்ற விஷமப் பேச்சை பேசுவ தற்கு முக்கிய காரணம் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 40 விழுக்காடு முஸ்லீம்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வங்க தேச அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தின் செய்தித்தொடர்பாளர் மன்மோகன் வைத்யா கூறும் போது வங்கதேச மக்கள் இந்தியா முழுவதும் பரவிவிட்டனர். ஆகை யால் மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்ததும், எல்லை களை தீவிரமாக கண்கா ணிப்பது தான் புதிய அரசின் தலையாய பணி என்று கூறியுள்ளார்.

பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வசிக்கும் முஸ்லீம்களின் கணக்கெ டுப்பை மேற்கொள்ளு மாறு இரகசிய உத்தரவு போடபட்டுள்ளது. இவர் களில் பெரும்பாலானோர் வங்கதேசத்தவர் என கட் டாய முத்திரை குத்தும் செயலையும் செய்து கொண்டு வருகிறது. இதனடிப்படை யில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெருவாரியான முஸ்லீம் களை வங்கதேசத்தவர் என்ற முத்திரை குத்தப் பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநில முதல மைச்சர் ரமன்சிங்கிடம் ஆர்.எஸ்.எஸ் நேரடியா கவே முஸ்லீம்களின் எண் ணிக்கை குறித்து கணக்கிட ஆணையிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செய்திதொடர்பாளர் இதுகுறித்து பேசும் போது வங்கதேச முஸ்லீம்கள் இங்கு அதிக அளவில் வந்து வசிக்கத் துவங்கி விட்டனர். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கடந்த முப்பது ஆண்டு களில் சத்தீஸ்கரில் மட்டும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட் டது என்று கூறினார். இவர்கள் அனைவரும் கள் ளத்தனமாக வங்கதேசத்தில் இருந்து எல்லை தாண்டி வந்தவர்கள் என்று அப் பட்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது பேச்சில் மன்மோகன் வைத்யா கூறும் போது மோடி நாட்டு நலனில் மீது அக்கறை கொண்டவர். ஆகையால் தான் அந்நிய நாட்டு அகதிகள் நமது நாட் டிற்கு பெரிதும் ஆபத்து கொண்டவர்கள் என்று உணர்ந்து கொண்டு தன்னு டைய பரப்புரையில் கூறி வருகிறார். உலகில் வேறு ஏதாவது ஒரு நாடு அகதி களை விருப்பம் போல் தங்கள் நாட்டினுள் நுழைய அனுமதிக்கிறதா? ஆனால் இந்தியா மாத்திரம் இது போன்ற செயலைச்செய் கிறது. காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல் தான் முஸ்லீம்கள் இந்தியாவில் குடியேற காரணமாக உள் ளது என கூறினார். (எகனாமிக்ஸ் டைம்ஸ் 29.04.14)

Read more: http://viduthalai.in/e-paper/79450.html#ixzz30KNPnDoF

தமிழ் ஓவியா said...


மோதிப் பார்க்கும் மோடி


தேர்தல் முடிவுகளின் தேதி விரைவில் வரவிருக்கும் நிலையில் நரேந்திர மோடி தற்போதே பிரதமர் ஆகிவிட்டது போன்ற கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த ஓர் ஆண்டாக தனது கட்சி யின் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி நோக வைத்த மோடி தற் போது தனிமனிதனாய் வலம் வரத்துவங்கி இருக்கிறார். அரசியல் எதிரியாக இதுவரை காங் கிரசை பாவித்து மேடைகளில் பேசி வந்தார். பிறகு சோனியா ராகுல் இரு வரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேச தொடங்கினார். தமிழகத்தில் நாடா ளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்து முதல் வர் ஜெயலலிதாவை தாக்கி பேச ஆரம் பித்தார். விளைவு, தமிழக முதல்வரும் பதிலடி கொடுத்தார். வாரணாசியில் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்றோரை சமூதாயத் தைப் பிளவுபடுத்தி அதன் மூலம் அரசி யல் வாழ்வு பெற்றவர்கள் என்று கடுமையாக தாக்கி பேசினார்.
ஒரிசாவில் நவீன் பட்நாயக் கையும் விட்டுவைக்கவில்லை. ஒரிசா சுதந்திரத் திற்கு பிறகு இத்தனை ஆண்டுகள் ஆகியும் வரை படத்தில் இருக்கிறதா இல்லையா என்ற நிலை ஏற்பட்டதற்கு காரணம் பட்நாயக்கின் ஆட்சிதான் என்று அவரையும் வம்பிற்கு இழுத்தார். இந்த நிலையில் பெருவாரியான மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது, மம்தாவிடம் மோதிப் பார்க்கும் மோடி


தமிழ் ஓவியா said...

இரண்டு கட்ட தேர்தல்கள் மாத்திரமே இருக்கும் நிலையில் மேற்கு வங்கம் சென்ற மோடி மம்தாவையும் விட்டு வைக்கவில்லை. தேர்தல் துவக்கத்தில் இருந்து இதுவரை மோடி 3 முறை மேற்கு வங்கம் சென்றுள்ளார். அப்போதெல்லாம் மம்தாவைப்பற்றி எதுவும் பேசவில்லை, கடந்த 22-ஆம் தேதி ஹவுராவில் நடந்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தின் ஆங் கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நரேந்திரமோடி பிரதமராவதற்கு ஒரு போதும் ஆதரவு தரமாட்டோம் எங்களது இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

தான் பிரதமர் ஆகும் பட்சத்தில் தனக்குப் பெரிதும் உதவியாக இருப்பார் என்று நம்பி இருந்த மோடிக்கு மம்தாவின் இந்த பேச்சு மிகவும் கோபமடைய செய்ததுவோ என்னவோ அல்லது ஏமாற்றத்தின் விளைவாலோ 27-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மம்தாவையும் அவரது அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். மம்தாவின் மீது மேற்கு வங்க மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்ததாவும், மக்களது நம்பிக்கையைக் அவர் குலைத்து விட்டதாகவும், மேற்குவங்கத்தின் வளர்ச் சிப் பாதைக்கு மம்தா பெரும் தடையாக இருப்பதாகவும் தன்னுடைய பேச்சில் கூற ஆரம்பித்தார்.

அதுமாத்திரம் அல்லாமல் இத்தனை ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகளின் ஆதிக் கத்தில் இருந்த மேற்குவங்கம் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கைக்கு மாறியி ருக்கிறது, ஆட்சி தான் மாறி இருக்கிறதே தவிர நிர்வாகம் மற்றும் மாநில வளர்ச்சி முற்றிலும் முன்பை விட பின் தங்கி விட்டது மேற்கு வங்கத்தை மம்தா பானர்ஜி 35 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஒரு ஓவியம் 1 கோடியே 80 லட்சம்

தன்னுடைய ஓவியங்களை முதல் மந்திரி என்ற லேபிளைப்பயன்படுத்தி விற்பனை செய்கிறார். இதனால் ஒன்று மில்லாத ஓவியத்தைக்கூட ஒரு கோடியே என்பது லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள் என்று தன்னுடைய உரையில் மம்தாபானர்ஜியை தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கினார்.

தமிழ் ஓவியா said...

இதுவரை எந்த ஒரு கட்சியையும் குற்றம் சாட்டாமல் தன்னுடைய தேர்தல் பரப்புரையை செய்துகொண்டிருந்த மம்தா பானர்ஜி முதல் முதலாக மோடிக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தார். திங்கள் அன்று கொல்கத்தாவில் மம்தா பேசிய போது என்மீது குற்றம் சுமத்திய நரேந்திரமோடி குற்றச்சாட்டிற்கு ஆதா ரங்களை முன்வைக்கவேண்டும் இப்படி ஆதாரம் இல்லாமல் சிறுபிள்ளைத்தன மாக குற்றாச்சாட்டுகளை அள்ளிவீசுவது, அரசியல் கட்சித்தலைவர்களுக்கு நல்ல தல்ல. மோடிக்கு தலைக்கனம் அதிகமாகி விட்டது, தேர்தல் முடிவுகள் இந்த தலைக் கனத்திற்குத் தகுந்த பாடம் புகட்டும் என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான முகுல்ராயும் பதிலடி கொடுத்தார். மம்தாபானர்ஜியின் ஓவியம் ஒரு கோடியே எண்பது லட்சத் திற்கு விற்பதாக பொதுக்கூட்ட மேடை யில் பேசியுள்ளார். இது முற்றிலும் பொய்யான தகவலாகும்; அப்படி ஒரு ஓவியம் விற்றிருந்தால் அது மிகவும் பிரபலமடைந்திருக்குமே, மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் ஏலம் விடப் பட்டு அது பல குழந்தைகள் காப்பகம் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளின் பள்ளிகளுக்கு அந்த தொகை முழுவது மாக வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கான அனைத்து ஆவணங் களும் தணிக்கைத்துறையிடம் உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பெறலாம் மம்தா பானர்ஜி விளம்பரப்படுத்தாமல் செய்துவரும் இந்த நல்ல காரியத்தை பொதுமேடையில் ஏளனம் செய்தது மல்லாமல் பெரிய தொகைக்கு விற்கிறார் என்று மோடி குற்றம் சாட்டியுள்ளார், மோடி இதற்கு ஆதாரம் தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். மோடியின் குற்றச்சாட்டு குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளிக்க உள்ளோம் என்று கூறினார். மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான டெரிக் ஒபிரையன் கூறும் போது மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கவில்லை, அப்படி இருக்க ஒரு கோடிக்கு விற்றதாக மோடி கூறி யிருப்பது அவர் ஒரு நல்ல அரசியல் வாதி இல்லை என்பதையே குறிக்கிறது. மேலும் நல்ல அரசியல்வாதி என்பவர் மக்களின் நலன் கருதி பாடுபடுபவர்: ஆனால் மோடி குஜராத் மாநிலத்தின் கசாப்புக்கடைகாரர்போல் செயல் பட்டவர்.

மம்தா போன்ற மனித நேயம்கொண்ட மக்களின் பெரும் ஆதரவைப்பெற்ற ஒரு தலைவர் மீது இவ்வாறு குற்றம் சொல்வது நரேந்திரமோடியின் கீழ்த்தரமான செய லையே காட்டுகிறது என்று கூறினார். பிரியங்காவின் கணவரையும் விட்டுவைக்கவில்லை

தற்போது பிரியங்காகாந்தியின் கணவர் இராபர்ட் வதேராமீதும் குற்றச்சாட்டை அடுக்கிக்கொண்டு வருகிறார். திங்கள் அன்று அகமதாபாத்தில் பேசியபோது வதேராவின் பெயரைக்கூறி சோனி யாவின் மருமகன் என்ற நிலையில் அனைத்து மாநிலங்களில் தனது கட்டுமான நிறுவனத்திற்காக நிலங்களை குறைந்த விலையில் வாங்கிப் போட்டுக் கொண்டு வருகிறார். என்றும் பல்வேறு வகையில் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட த் துவங்கி விட்டார். எல்லவற்றையும் விட லூதியானா பொதுக் கூட்டத்தில் பேசும் போது என்னை நீங்கள் மறந்தாலும் உங்கள் பிரதமரான நான் உங்களை மறக்க மாட்டேன், என்று கூறியது அரசியல் விமர்சகர்களிடையே வியப்பை ஏற்படுத் தியுள்ளது, தேர்தல் முடிந்து இன்னும் முடிவுகள் வெளிவரவில்லை, பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தேர்தல் கணிப்புகள் அனைத்தும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க முழுபலம் கிடைக்காது என்று கூறிவரும் வேளையில் பிற கட்சிகளின் உதவி தேவை இருக்கும் இந்த நேரத்தில் மோடி வாய்க்கு வந்தது போல் பேசிக்கொண்டு வருகிறார்.

பிரதமர் பிரதமர் என்று பேசிப்பேசி அவருக்கு இந்தப் பிரதமர் என்னும் பதவி தலையில் கனம் ஆகத் துவங்கிவிட்டது இந்தக் கனம் மே 16-ஆம் தேதிக்கு பிறகு சுத்தமாக மறைந்து மீண்டும் அவரை பின்னங்கால் பிடரியில்பட குஜராத் நோக்கி ஓடவைக்கும் என்பது திண்ண மாகும்! - சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/79446.html#ixzz30KNgjEMt

தமிழ் ஓவியா said...


லாலு பேசும் மொழி!


இந்த பி.ஜே.பி. சங்பரிவாரக் கும்பலுக்குச் சரியான பதிலடி கொடுக்க ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்து தான் சரியானவராகத் தோன்றுகிறார். மட்டைக்கிரண்டு கீற்றாகத் தோலுரிப்பதில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார்.

1990இல் ரத யாத்திரை என்று கூறி அத்வானி ரத்த யாத்திரை நடத்தியபோது அவரைத் தைரியமாகக் கைது செய்த முதல் அமைச்சர் தான் லாலு பிரசாத். மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை முதன் முதலாக சமூக நீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அறிவித்தபோது, உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் தூண்டி விட்டுக் கலவரங்களை அரங்கேற்றிய நிலையில், அவர்களின் வாலை ஒட்ட நறுக்கியவர் பீகார் முதல் அமைச்சர் லாலுதான்.

உங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு உயர் ஜாதி பார்ப்பனர்களை அழைக்காதீர்கள் - நானே வருகிறேன் என்று சொன்னவரும்கூட அவர்தான்.

இந்தக் காரணங்களால்தான் பார்ப்பனர் உயர் ஜாதி ஊடகங்கள் அவரை மட்டம் தட்டி எழுதின. லாலு அவர்களின் ஜாதியைக் குறிக்கும் வண்ணம் மாடு கறப்பதுபோல கேலிச் சித்திரங்களை வெளியிட்டதுண்டு.

வி.பி.சிங், லாலு பிரசாத், வீரமணி என்றால் இன்று வரை கூட சோ போன்ற பார்ப்பனர்கள் ஆத்திர நெருப்பைக் கொட்டுவதைக் காண முடிகிறது.

அவர் இரயில்வே அமைச்சராக இருந்தபோது சாதனை முத்திரைகளைப் பொறித்தார்; ஏழை - எளிய நடுத்தர மக்களின் வாகனம் இரயில் என்பதை ஆக்கிக் காட்டியதோடு அல்லாமல், இரயில்வே துறையில் பெரிய அளவுக்கு இலாபத்தைக் குவித்துக் காட்டிய சாதனையாளர் அவர்.

ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்திற்கே சென்று வகுப்பு நடத்தி, தன் ஆற்றலைப் புலப்படுத்தி யிருக்கிறார். ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆகிக் காட்டுவேன் என்று கூட அவர் சூளுரைத்துச் சொன்னதும் உண்டு. அதற்கான நிருவாக ஆற்றல் உடையவர் அவர் என்பதில் அய்யமில்லை.

ஒரு கெட்ட வாய்ப்பு - பீகாரில் லாலு பிரசாத், நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான் போன்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று சேராமல் அரசியல் அடிப்படையில் பிரிந்து கிடப்பது தான். இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து கைகோத்து நின்றால் இந்தியாவின் அரசியல் வடிவமேகூட வேறு விதமாகத்தானிருக்கும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் - இவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்று சொல்லி அதன் அடிப்படையில்தான் பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார் கான்ஷிராம்; அந்த அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் கையில் கொண்டு வந்து சேர்த்தார். அவர் மறைவிற்குப் பிறகு செல்வி மாயாவதி, தடம் மாறி, பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொண்டு, கட்சி பிறந்ததன் நோக்கத்தையே சிதற அடித்து விட்டார்.

கான்ஷிராம் வகுத்துத் தந்த அந்த உ.பி. மாடல் தொடர்ந்திருந்தால், அது இந்தியா முழுமையும் வலிமை பெற்று இருக்கும்.

இந்து ஏட்டுக்கு லாலு பிரசாத் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கேள்வி: மீண்டும் முஸ்லிம், யாதவ் ஆதரவாளர் களை உங்கள் பக்கம் ஈர்த்து விட்டதாக நினைக் கிறீர்களா? லாலு பிரசாத் பதில்: முஸ்லிம்கள், யாதவர்கள் மட்டுமல்ல; மகா தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எங்களை ஆதரிக்கின்றனர் என்று குறிப் பிட்டுள்ளார்.

பி.ஜே.பியைப் பற்றிக் கேட்டபோது, கிரிராஜ் சிங்கும், நிதிஷ் கட்காரியும் விரக்தி காரணமாக வசைபாடத் தொடங்கி விட்டனர். மோடியைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்கிறார் கிரிராஜ்சிங். பிகாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின்கட்காரி; என்ன அரசியல் சிந்தனை இது! இவர்கள்தான் பாசிஸ்டுகள், மதவாதிகள்! இதைத் தெரிந்தே தான் சொல்கிறார்கள். கடும் ஆட்சேபனைகள் வந்தபிறகு சொன்னதைத் திரும்பப் பெறுகின்றனர். இதுதான் மோடியின் வேலைத் திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டு விட்டது என்று லாலு அறிவார்ந்த சாட்டையடி கொடுத்துள்ளார். இதுதான் இந்த சங்பரிவாரக் கும்பலுக்கான சரியான வைத்திய முறையாகும். புரிகிற மொழியில் பேசினால்தானே எதிரிகளுக்கும் புரிகிறது.

Read more: http://viduthalai.in/page-2/79444.html#ixzz30KNuy8xi

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம். - (விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/79443.html#ixzz30KONLc3v

தமிழ் ஓவியா said...


கடவுள் பெயரை சொல்லி தப்பிக்காதீர் ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் எச்சரிக்கை


நாமக்கல், ஏப்.29- மாவட்டத்தில் மழை பெய் யவில்லை என்பதற்காக, கடவுள் பெயரை சொல்லி அதிகாரிகள் தப்பிக்காதீர்கள், என மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி எச்சரித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில், நேற்று, கோடை வறட்சியில் குடிநீர் பிரச் சினை தீர்ப்பது தொடர்பான, பல்துறை அலுவலர்களுக் கான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, நகராட்சி, நகர பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம், குடிநீர் ஆதாரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, எனக் கேட்டார். அப்போது, கொல்லிமலை யூனியன் அதிகாரிகள், கொல்லிமலை மக்களுக்கு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. நீரா தாரங்கள் வறண்டு கிடப்ப தால், ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்சினை தீர்க்க, மலை மேல் வாய்ப் புகள் குறைவாக உள்ளது. எனவே, கடவுள் பார்த்து மழை பெய்ய வைத்தால், பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்தனர். அதே போல், ஒவ்வொரு அதிகாரிகளும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் உள்ள பிரச்சினை, நிதி, புதிய போர் வெல் அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட் டவை குறித்து பேசினர்.

அப்போது, ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பேசியதா வது:

அதிகாரிகள், குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறுவதை விட்டு விட்டு, கடவுள் பெய ரை சொல்லி தப்பிக்க வேண் டாம். குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து, மக்களிடம் இருந்து, குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண் டும். இன்னும், இரண்டு மாதங்களுக்கு, வாரம் ஒருநாள் குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அதில், முந் தைய கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது, கூட்ட ரங்கிலேயே சார்ஜ் மெமோ வழங்கப்படும். பழுதான போர்வெல்களை பழுது நீக்கி வைத்துக் கொள்ள வேண் டும். குடிநீர் பிரச்னை தீர்ப்ப தற்காக, பல்வேறு திட்டங் களில் இருந்தும் நிதி எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் வழங் கப்பட்டுள்ளது. நிதி இல்லை என்றால், என்னிடம் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று, குடிநீர் பிரச்னையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், பஞ்சாயத்து அளவில் இருந்தே, பிரச்சி னைகளை களைய முடியும். புதிய போர்வெல் அமைப் பது தேவையென்றால், உட னடி அனுமதி பெற்று, மக்களுக்கு குடிநீர் பிரச்சி னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-3/79495.html#ixzz30KOsTFNu

தமிழ் ஓவியா said...


பேராசிரியர் முனைவர் வீ.அரசுக்கு பணி நிறைவு பாராட்டு விழா


பேராசிரியர் முனைவர் வீ.அரசுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

மார்க்ஸியலை பெரியாரியல் பார்வையில் நோக்கிய ஒரு விழா!

மூடநம்பிக்கைகளையும், பிற்போக்குத் தனங்களையும் எதிர்த்து நாட்டில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பாராட்டுரை


சென்னை, ஏப். 29- அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் நாட்டில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு; வாருங்கள் செய்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வீ.அரசு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழத்தில் 29 ஆண்டுகள் அரும்பணியாற்றி, பணி நிறைவு பெற்றதையொட்டி பாராட்டுவிழா சென்னை பல் கலைக் கழக பவள விழா கலை விழா அரங்கில் நேற்று (28.4.2014) திங்கள் பிற்பகல் 3,30 மணிக்குத் தொடங்கப் பெற்றது.

துறைப் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்றார்.

அது ஒரு பாராட்டு விழாவாக நடைபெற்றது என்றாலும் பெரியாரி யல், மார்க்ஸியியல் கொள்கைப் பூர்வ விழாவாக அமைந்தது தனிச்சிறப்பாகும்.

மாணவர் பருவத்தில் பொதுஉடைமை இயக்கத்தால் கவரப்பட்டு அவ்வமைப்பில் இருந்தார் எனினும் பெரியார் பார்வையில் மார்க்ஸியம் என்பதுதான் எனது நிலைப்பாடு என்று நேற்றைய விழாவில் வீ.அரசு அவர்கள் நேர்ப்படப் பேசியது குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் பேசிய பலரும் இந்த மய்யப் புள்ளியைச் சுற்றிச்சுற்றி வந்தது குறிப்பிடத்தக்க தாகும். விழாவில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் அவர்கள் கூட அதற்கு அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

மண்ணிற்கேற்ற மார்க்ஸியம் என்ற கருத்தியல் தமிழ் மண்ணில் வெகு காலமாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கிய கருத்துதானே! அதன் செல்வாக்கை அவ்விழாவில் காண முடிந்தது.


தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

எடுத்த எடுப்பிலேயே ஒரு சின்ன திருத்தம் என்று ஆரம்பித்தார். ஒரு எதிர்பார்ப்பு (ஷிஜீமீஸீமீ) பரபரப்பாக காணப்பட்டது. பணி நிறைவு என்பது பல்கலைக்கழகப் பணிக்குத்தானே தவிர, அதனையும் கடந்த பணி இருக்கிறது என்று ஆசிரியர் அவர்கள் சொன்னபோது அரங்கமே கலகலத்தது.

பழைமைவாதமும், மூடத்தனங்களும் பரவலாக இருக்கும் மண்ணில் தான் நமது பேராசிரியர் அரசு போன்ற பகுத்தறிவாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இலக்கியங்கள் என்பவை வெரும் ரசனைக்காக, இலக் கணத்துக்காக என்றில்லாமல் புத்தாக்கத்துக்காக இருக்க வேண்டும். பெரியார் நாடு என்றழைக்கப்படும். உரத்தநாடு பகுதியின் வடக்கூர்தான் இவர் சொந்தவூர். வடக்கூர்தான் என்றாலும் எல்லாத் திசைகளுக்கும் தேவைப்படுபவராக விளங்குகிறார். 40 முனைவர் பட்ட (பிஎச்டி) மாணவர்களை தயாரித்துள்ளார். 120 மாணவர்கள் எம்.பில். பட்டம் பெறுவதற்கு வழி காட்டியாக இருந்துள்ளார்.

ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் எளிய குடியில் பிறந்து உயர்ந்து நிற்கும் தமிழர். உயர்வதற்குத் தேவை உழைப்பே தவிர பிறப்பைப் பொறுத்ததல்ல என்பதற்கு

இவர் ஓர் எடுத்துக்காட்டு!

ஆய்வுக்காக மாணவர்களுக்கு இவர் அளித்துள்ள தலைப்புகளை வைத்துக் கூட ஆய்வு செய்யலாம், அந்த அளவுக்குப் பயனுள்ளவை அவை.

பல நாடுகளுக்கும் சென்று வந்த அனுபவம் உண்டு. ஆக்கபூர்வமான தொகுப்புப் பணியை மேற்கொண்டு உள்ளார். தோழர் ஜீவா அவர்களின் படைப்புகளை 7500 பக்கங்களில் தொகுத்துள்ளார்.

19ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் லௌகீக சங்கம் தோன்றி செயல்பட்டுள்ளது. அந்த அமைப்புகளின் வெளியீடுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள சாதனையை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும் (சென்னை லௌகீக சங்க - ஜிபிமிழிரிணிஸி - தத்துவ விவேசினி).

1928இல் தந்தை பெரியார் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கினார். அதன் பொறுப்பாளராக சாத்தான் குளம் இராகவன் அவர்களை அமர்த்தினார். அந்த இராகவனா ரின் நூல்களை பத்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் பெயரில் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டபோது எனக் கொரு தயக்கம் இருந்தது. காரணம் பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சொற் பொழிவுகள் வெறும் சடங்காச்சாரமாகவே பெரும்பாலும் இருக்கும்.

பெரியார் பெயரில் அறக்கட்டளை என்று வைத்துவிட்டு, அவர் கொள்கைக்கு நேர் விரோதமாக உள்ளவர்களை வைத்து சொற்பொழிவாற்றச் செய்து விடுவார்கள்.

ஆனால் நமது அரசு அவர்கள் நடத்துவேன் என்றார். அது பயன் உள்ளதாக இருக்கும்; கொள்கைக்குச் சேதாரம் இருக்காது என்ற நம்பிக்கையில் இந்தத் துறையில் தந்தை பெரியார் அறக்கட்டளையை நிறுவியுள்ளோம் அதன் முதல் உரையை நமது பெருமைக்குரிய தமிழர் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களை அழைத்துப் பேச வைத்து நல்லதோர் தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வோராண்டும் தக்கவரை கொண்டு சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் அரசு அவர்களின் பாராட்டுக்குரிய பண்பு - மனதிற்பட்டதைச் சற்றும் மறைக்காமல் பட்டென்று பட்டுத் தெறித்தது போல கூறுவதுதான். அது எளிதாக யாருக்கும் அமைந்திடாத ஒன்றே!

பல்கலைக்கழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளீர்கள். ஒரு பேராசிரியர் பற்றி ஒரு ஆசிரியர் இவ்வளவுதான் சொல்ல முடியும் என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னபொழுது ஒரே சிரிப்பொலி!

மேலும் அவர் தமது உரையில் அரசு அவர்களே, பல்கலைக்கழகம் உங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டது. அதன் பொருள் பல்கலைக்கழகத்தில் வெளியில் உங்களுக் குப் பணி அதிகம் இருக்கிறது என்பதாகும். வீடு என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்காக அல்ல, உள்ளே குடியிருப் பதற்காகத்தான். இங்கு நாங்கள் வந்தது வழியனுப்புவ தற்காக அல்ல - கையோடு அழைத்துப் போகத்தான் என்று அழகாக அறிவு சான்ற உரை நிகழ்த்தினார் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள்.

முனைவர் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி

மூன்று ஆண்டுகளுக்கு முன் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் மேடையில் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் நமது பேராசிரியர் அரசு அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட்டு என்கிற போது, தவிர்க்க இயலாமல் ஒப்புக் கொண்டேன். பாராட்டு என்பது ஒரு மாபெரும் வரம்! கண்ணுக்கு வைட்டமின் ஏ தேவை, ஞாபக சக்திக்கு வல்லாரை என்பது போல, ஒருவரை ஊக்கப்படுத்துவதற்கு பாராட்டு அவசியமாகும்.

ஒரு பல்கலைக்கழகத் துறைத் தலைவருக்கு என்னென்ன தகுதிகள் தேவையோ, அத்தனைத் தகுதிகளும் அரசுக்கு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் டாக்டர் மு.வ.வுக்கு முன் - பின் என்று குறிப் பிட்டாக வேண்டும்.

புலமை, ஆய்வு இரண்டும் முக்கியமாகும். மு.வா.வுக் குப் பிறகு இவை அருகிவிட்டது. படைப்புத் திறன் என்பது முயன்று பெறுவதல்ல - இயற்கையில் அமைதல் வேண்டும்.

கவிஞர் கண்ணதாசனோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையோ, பல் கலைக்கழகத்திற்கு வந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்திட முடியாது. உலகில் 120 சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் ஒன்று கூட இந்தியாவில் கிடையாது. 3300 கல்லூரிகள் உள்ளன. ஆனால் ஆய்வுகள் இல்லை.

டாக்டர் மு.வ. அவர்களுக்குப் பிறகு, அரசு அவர்களைத் தான் குறிப்பிட வேண்டும். 19ஆம் நூற்றாண்டில் சென்னை லௌகீக சங்கம் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து தத்துவ விவேசினி என்ற பெயரில் கொண்டு வந்துள்ளார். இதற்காகவே பாராட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

முனைவர் அவ்வை நடராசன்

பேராசிரியர் அரசு கவனத்தில் கொண்டதும், கருத்து செலுத்தியதும் - நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியைச் சார்ந்ததாகும். சீர்திருத்த உணர்வை வளர விடமாட்டார்கள். அதனைத் தொடக்கத்திலேயே அழித்து விடுவார்கள்.

திருவிக குறிப்பிடுகிறார்: பவுத்தம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய படிகள் அத்தனையையும் அப்படியே வாங்கிக் கொளுத்தி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

70 மாணவர்கள் தமிழை எடுத்துப் படிக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான். அதற்குக் காரணம் துறைத் தலைவராக அரசு அவர்கள் இருப்பதுதான். நாடகம், ஊடகம், தெருக்கூத்து, கதை எழுதுவது என்று பல துறைகளிலும் மாணவர்களைத் தயார் செய்து வந்துள்ளார்.

நான் இதுவரை படித்திராத ஒன்று அரசு அவர்களால் தொகுக்கப்பட்ட நாத்திகம் தொடர்பான லௌகீக சங்கத்தின் குறிப்புகள். அரும்பாடுபட்டுத் தொகுத்துத் தந்தார்கள் உலகிற்கு. அதற்காக எவ்வளவுப் பாராட்டினாலும் தகும் என்றார் அவ்வை நடராசன்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

பிறப்பையும் இறப்பையும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் நம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பகிர்வு மட்டும்தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். இந்தத் துறையில் இரு காதுகளில் வைரக் கம்மல் அணிந்தவராய்க் காணப்பட்டார். இதனை விட்டுப் போகும் போது வெறும் காதோடுதான் செல்கிறார் என்று கூறி அரசு அவர்களின் பெருமைகளை கவிதை மூலம் வெளிப்படுத் தினார்.

தோழர் சி.மகேந்திரன் (சிபி.அய். மாநிலத் துணைச் செயலாளர்)

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியவர்களை ஏற்றுக் கொண்டவர் பேராசிரியர் அரசு. நம் நாட்டுச் சூழலுக்கு வெறும் மார்க்சியம் போதுமானதல்ல அந்தப் போதாமைக் குத் தான் பெரியார் தேவைப்படுறார் என்பது அரசு அவர் களின் கருதுகோளாகும். அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

தமிழ் ஓவியா said...

ஒடுக்குமுறை என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையிலும் உண்டு. நம் நாட்டில் பெரியாரியலும், மார்ச்சியியலும் இணைந்த ஒரு கோட்பாடு தேவை என்ற கருத்து சரியானதுதான் என்று குறிப்பிட்டார்.

புலவர் பா.வீரமணி

ஒப்பனை செய்யாத பேராசிரியர் நமது வீ.அரசு அவர்கள் தத்துவம் - இயங்கியல் பார்வை ஒவ்வொருவருக்கும் தேவை அது பேராசிரியர் அரசு அவர்களிடம் இருக்கிறது.

நம் நாட்டில் எத்தனைப் பேராசிரியர்களுக்கு பெரியா ரைப் பற்றித் தெரியும் - எத்தனைப் பேருக்கு ம.சிங்கார வேலரைத் தெரியும்?

பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி சிறந்த நாடாளுமன்ற வாதி - அவர் நமது கே.டி.கே. தங்கமணி அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தத் தலைவர் பேசப்படுவார் என்பதுதான் அந்தக் கேள்வி.
தமக்குத் தெரிந்த தலைவர்களின் பெயர்களை எல்லாம் கே.டி.கே. சொல்லியிருக்கிறார். ஹிரேன் முகர்ஜி அவர்களோ, பெரியார், ம.சிங்காரவேலர் இருவர் தான் அப்படிப் பேசப்படப்போகும் தலைவர்கள் என்று குறிப்பிட்டார்.

1969இல் தாமரை இதழில் தி.க.சி. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தை போட்டார். பாரதிதாசனை பொது வுடைமை இயக்கம் ஏன் அங்கீரிப்பதில்லை - எனக்கு வியப் பாகவே இருந்தது. தோழர் தா.பாண்டியன் அவர்களிடமும் கேட்டேன். அப்பொழுது தோழர் தா.பா. என்னிடம் சொன்னது. இதையேதான் நான் ஜீவாவிடமும் கேட்டேன்; அதற்கு ஜீவா சொன்ன பதில் என்ன தெரியுமா? கட்டுண் டோம் காத்திருப்போம்! என்பதுதான் (சிரிப்பலை ஒலி!)

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து பேராசிரியர் முனைவர் மணிகண்டன், அரசு அவர்கள் இந்தத் துறையை எப்படியெல்லாம் செம்மைப் படுத்தினார் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

துணைவேந்தர் முனைவர் தாண்டவன்

அலுவலகப் பணி காரணமாக தாமதமாக வந்து கலந்து கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.தாண்டவன் அவர்கள் பேராசிரியர் அரசு போன்றவர்கள், நான் துணை வேந்தராக இருக்கும் காலகட்டத்தில் பணி ஓய்வு பெறுவது பேரிழப்பாகும். ஆனால் அவரை உரிய முறையில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து பயன்படுத்திக் கொள் ளும் என்று கூறி, அரசு அவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்துப் பாராட்டிச் சிறப்புச் செய்தார்.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை சார்பில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பேராசிரியர் முனைவர் வீ.அரசு அவர்களுக்குக் கைத்தறி ஆடை அணிவித்தும், நினைவுப் பரிசும் வழங்பினார். ஏராளமான பெருமக்கள் அரசு அவர்களுக்கு சால்வைகள் நூல்கள் வழங்கினர். பேராசிரியர் ஏகாம்பரம் நன்றி கூறினார். தொடக்கத்தில் பேராசிரியர் பழனி வரவேற்புரை ஆற்றினார்.

அரசு ஏற்புரை

எட்டு, ஒன்பது வயது முதல் தந்தை பெரியாரைப் பார்த்து வந்தவன் நான் - எங்கள் ஊர்ப்பகுதி - தந்தை பெரியார் அவர்கள் கொள்கைகள் பரவிய பகுதி. ஆசிரியர் அவர் களையும் இளமையில் இருந்து அறிந்தவன். 1985 ஏப்ரலில் இந்தத் துறையில் சேர்ந்தேன். நமது வா.செ.கு. அவர்களைச் சந்தித்தபோது எனக்கு அவர் சொன்ன வழிகாட்டும் கருத்து. ஓர் அய்ந்து வருடத்துக்கு நூலகத்தின் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளேயே இருந்து நூல்களைப் படித்துத் தீருங்கள். அதன் பின்னர்தான் நீங்கள் நல்ல ஆசிரியனாக, ஆய்வா ளனாக வர முடியும் என்றார். அந்த அறிவுரை எனக்குப் பெரிதும் பயன்பட்டது. என்னைப் பொறுத்தவரை, மார்க்சியத்தை நான் பெரியாரைச் சார்ந்தே பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விழா மாலை 6.30 மணி அளவில் நிறைவு பெற்றது.

பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், இருபால் மாண வர்களும், பல்கலைப் பெருமக்களும் மன்றமே நிரம்பி வழியும் அளவுக்குக் கூடியிருந்தது பேராசிரியர் அரசு பால் கொண்டுள்ள மதிப்பைக் காட்டியது.

- தொகுப்பு: மின்சாரம் -

பேராசிரியர் வீ.அரசு பற்றி...

வீ.அரசு - பிறந்த ஊர் உரத்தநாடு அருகில் உள்ள வடக்கூர்.

ஜாதி மறுப்புத் திருமணம், மனைவி: மங்கை

சி.பி.எம்.இல் இருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி 1985 முதல் 2014 வரை - 29 ஆண்டுகள் இடதுசாரி பெரியார் ஈடுபாட்டாளர்

பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்.

இவருடைய வழிகாட்டலில் 40 பேர். பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளனர்.

இவருடைய வழிகாட்டலில் 120 பேர். எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

கைலாசபதி, சிவத்தம்பி மரபு வழிப்பேராசிரியர்
சிவத்தம்பியுடன் நெருக்கமான நட்பு

மலேசியா, சிங்கப்பூர், செக்கோஸ்லோவியா, இத்தாலி, இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இலங்கை முதலிய நாடுகளில் தமிழ் சார்ந்த செயல்பாடுகள்

ஜீவாவின் படைப்புகள் - 7500 பக்கங்கள் 4 தொகுதிகள்
புதுமைப்பித்தன் கதைகள் - 3 தொகுதிகள்
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திரட்டு
ஒரு நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்பு
வ.உ.சி. நூல் திரட்டு
ஆய்வுக்கட்டுரைகள் 4 தொகுதிகள்
சாத்தான்குளம் ராகவனுடைய நூல்களைத் தொகுத்து 10 தொகுதிகளாக வெளியிடல்.

19 ஆம் நூற்றாண்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடல் - சென்னை லௌகீக சங்கம் Thinker தத்துவ விவேசினி மூலமாக.

ரிக்வேதம் 3 தொகுதிகள் - செவ்விதாக்கம்
கட்டியம் - நாடக இதழ் 2001 - 2007 தரமானது
மாற்றுவெளி - ஆய்விதழ் - 2009 இப்போது வரை
பெரியார் மீது ஈடுபாடு
கருத்தியல் பேச்சாளர்
மரபை மறுப்பவர்
மனதில் பட்டதை அதிரடியாக அறிவிப்பவர்
காணக்கிடைக்காத தமிழ்ப் பேராசிரியர்
தமிழின் சகல பரப்புகளையும்...
சங்க இலக்கியம், நவீன இலக்கியம், கல்வெட்டு, நாணயவியல், தொல்லியல், நாடகவியல், நாட்டுப்புற வியல், கம்யூனிசம் என்று எல்லா துறைகளிலும் ஆழமான அறிவு

விந்தனைப் பற்றியும் தொ.மு.சி. பற்றியும் எம்.பில். மற்றும் பி.எச்டி. ஆய்வு நிகழ்த்தியவர்

பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு இல்லை

அவருடைய இல்லம் தலைசிறந்த நூலகம், பாராட்டாதவர்களே இல்லை.
பழகுவதற்கு இனியவர் - தலைமைப் பண்பு மிக்கவர்.

விழாவில் கலந்து கொண்ட சான்றோர் பெருமக்கள்

Read more: http://viduthalai.in/page-4/79455.html#ixzz30KPJ06XI

தமிழ் ஓவியா said...


பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனைப் பெண்கள்


உறவுகளுக்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக... என பன்முக பந்தமாக நம்முள் கலந்திருக்கும் பெண்களை சிறப் பிக்கும் மகளிர் தினம். இந்த வேளையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பற்றி அறிந்துகொள்வோம்.

தொழில்துறை: இந்திரா நூயி

சென்னையில் பிறந்த இந்திரா நூயி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.

முதன் முதலில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். உலக அளவில் அதிக சக்தி வாயந்த பெண்ணாகவும் நூயி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த மல்லிகா சீனிவாசன், தற்போது டாஃபே அமைப்பின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்த அவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார். கடந்த 25 ஆண்டுகளாக தரமான டிராக்டர் களை உற்பத்தி செய்து வரும் டாஃபே நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், வடிவமைப்பதிலும் மல்லிகா மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பிரபல கண் மருத்துவமனை அமைப்பான சங்கர நேத்ரால யாவுடனும், சென்னை புற்றுநோய் மருத்துவ மனையுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

விவசாயம்: சின்னப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் உள்ள புலிச்சேரி கிராமத்தில் பிறந்த அவர் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்கி விவசாயம் செழித்து விளங்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் தன் பவுண்டேஷன் அமைப்பின் களஞ்சியம் என்ற இயக்கத்தில் இணைந்து செயல்படத் துவங்கினார். இந்திய நாட்டில் உள்ள பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-7/79486.html#ixzz30KQGtGEg

தமிழ் ஓவியா said...


அப்படியே மின் தடையைப் போக்க யாகம் ஒன்றையும் நடத்தலாமே!


அண்ணாவுக்கு நாமம் போடும் அ.தி.மு.க அரசாங்கம், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில்களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து அறநிலையத்துறை நேற்று நடத்தியுள்ளது.

சரி, அப்படியே மின்சாரம் வேண்டியும் ஒரு பூஜை போடுங்க. மழை வேண்டும் என்று யாகம் செய்தால் பூணூல் காட்டில்தான் நல்ல மழை. வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்டு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் வந்து மக்கள் மாண்ட பொழுது அங்கு மழையை நிறுத்த இந்த பூணூல் விஞ்ஞானிகள் யாகம் செய்ய வேண்டியதுதானே!

மழையை உண்டாக்க முடியும் என்றால் மழையை நிறுத்தவும் முடியும் தானே! ஆனால் உண்மை என்னவென்றால் இதில் எதுவும் நடக்காது. யாகம் என்பதே பூணூல் கூட்டம் வயிறு வளர்க்கத்தானே. என்ன சொல்லுறது. சரிதானே?

Read more: http://viduthalai.in/page-8/79470.html#ixzz30KQWvxPd

தமிழ் ஓவியா said...


அரசுக்கு இப்படி மதம் பிடிக்கலாமா?

தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பது, நீதிக்கட்சி ஆட்சியினால், பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு, பலத்த எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி அமைக்கப்பட்டதாகும்.

மடங்கள், கோவில் பெருச்சாளிகள், சொத்தை, வரு மானத்தை கொள்ளையடிப்பதைத் தடுத்து, ஒழுங்கு முறையாக அதன் வரவு - செலவுகள் தணிக்கைக்குட் படுத்தும் நிலையை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்ட துறைதானே தவிர, ஹிந்து மதப் பக்தியையோ, மூட நம்பிக்கைகளையோ பிரச்சாரம் செய்யும் சனாதன சவுண்டி வேலை செய்வதற்காக ஏற்பட்டதல்ல.

அதுபற்றிய முழு விவரம் தமிழில் தேவையெனில், மறைந்த டாக்டர் நம்பி ஆரூரான் அவர்களது நூலை (அது அவரது முனைவர் பட்ட ஆய்வுக்கானது) படித் தாலே விவாதங்கள் சட்டமன்றத்தில் எப்படியெல்லாம் நடந்தன என்பது எவருக்கும் புரியும்.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை, கோவில்களில் மழை வேண்டி யாகம், பூஜை, புனஸ்காரம் நடத்த ஆணை யிட்டிருப்பது மிகவும் கேலிக்குரியதான செயல் அல்லவா!

இந்தத் துறை ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் இயங்கும் நிலையில், அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் வேட்டு வைத்து, அரசின் துறை இப்படி நகைப்பிற்குரிய வகையில் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

மேலும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை (திஸீபீணீனீமீஸீணீறீ ஞிவீமீ) என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 51 ஆவது பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான் மையை வளர்த்தல், ஏன்? எதற்கென்று கேள்வி மூலம் அறிவைப் பெருக்குதல், மனிதநேயம், சீர்திருத்தம் செய்தல் என்பவை வற்புறுத்தப்பட்டுள்ள நிலையில்,

யாகம் செய்தால், ஜெபம், பிரார்த்தனை செய்தால் மழை வரும் என்று கூறிடுவதும், இந்தப் பச்சை மூட நம்பிக் கைகளை தமிழக அரசின் ஒரு துறையே பரப்பிடுவதும் எவ்வகையில் ஏற்கத்தக்கது? அரசியல் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

யாகம் செய்தால் மழை வரும் என்றால், யாகம் செய்யும் எவரும் ஏன் குடையோடு செல்வதில்லை?

மழையை வரவழைக்க யாகம் - பூஜையால் முடியும் என்றால்,

அதிக மழை பெய்து வெள்ளம் வருவதைத் தடுக்க, நிறுத்த எந்த யாகம், எந்த ஜெபம் செய்யவேண்டும்?

எந்த அறிவாளியாவது, இந்து அறநிலையத் துறையில் ஆணையிட்ட அதிகாரிகளான அறிவுக் கொழுந்து களாவது கூறுவரா?

மரங்களை வெட்டுவது, காடுகளை அழித்து மொட் டையடித்தல் இவைகளைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் இப்படியா உலகம் கைகொட்டி நகைக்கும் அவமான அறியாமை ஆட்டங்கள் ஆடுவது?

கலைஞர் முன்பு முதல்வராக இருந்தபோது, செயற்கை மழையையே விஞ்ஞானம்மூலம் வர வழைத்துக் காட்டினார்களே, (செலவு அதிகம் என்பதால் அதை செய்வது எளிதல்ல என்றாலும், அப்படிப்பட்ட அறிவியல்பூர்வமான முறைகள் அல்லவா முக்கியம்).

முன்பு சோவியத் ரஷ்யாவாக இருந்தபோது, மாஸ்கோ பல்கலைக் கழக வளாகத்தில், இந்திரா காந்தி சிலை திறக்க, இந்தியப் பிரதமராக இராஜீவ் காந்தியை அழைத்திருந்தனர். அந்நிகழ்ச்சி நடைபெற இரண்டு நாள் இருக்கும்பொழுது, அங்கு கடும் மழை பெய்த நிலை.
சோவியத் அரசு, விஞ்ஞானிகளை அழைத்து யோசனை கேட்டது,

உடனே விஞ்ஞானிகள், அது ஒரு பிரச்சினை அல்ல; மேகங்களைக் கலைத்துவிடுவோம்; நிகழ்ச்சி மழையின்றி நடைபெறும் என்று உறுதி கூறி, நடத்திக் காட்டினர். அவ்வளவு அறிவியல் முன்னேற்றம், வளர்ச்சி.

இங்கோ, முழங்கால் அளவில் நின்று அமிர்தவர்ஷினி ராகம் - குன்னக்குடி அய்யர் வயலின்மூலம் என்றெல் லாம் செய்தனரே, பலன் என்ன? மழை பெய்ய வில்லையே!

தனியார் மூடத்தனத்திற்குப் பதிலாக, தமிழக அரசின் துறையே இப்படி அறியாமை நோயைப் பரப்பலாமா?

இந்து மதக் கிறுக்குத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லையா?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/79500.html#ixzz30QGoVcWS

தமிழ் ஓவியா said...


மோடியின் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குமுறல்


மோடியின் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குமுறல்
ஆயிரக்கணக்கானோர் ரத்தத்தால் கைரேகைப் பதிவு

அகமதாபாத்.ஏப்.30- குஜராத் அரசின் முன்மாதிரி வளர்ச்சித் திட்டம் என்று விளம்பரப்படுத்தி வரு வதை எதிர்த்து, குஜராத் மாநிலத்தின் பல பகுதி களிலிருந்தும் தாழ்த்தப்பட் டவர்கள் அகமதாபாத் நக ரில் திரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இரத் தத்தால் கை ரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். ஏக் ஆவாஸ், ஆக் மோர்ச்சா என்கிற அமைப் பின் தீர்மானத்தின்படி குஜ ராத் அரசின் கொள்கை களால் தாழ்த்தப்பட்ட சமூ கமே வருத்தத்தில் ஆழ்ந் துள்ளது. வளர்ச்சித்திட்டம் என்கிற பெயரில் ஒரு சார் பாகவும், ஒடுக்கப்பட்டவர் களுக்கு எதிராகவும் இருப் பதாக குற்றம் சாட்டியுள் ளது.

தாழ்த்தப்பட்டவர்களுக் கான சமூக சேவகர் ஜிக் னேஷ் மெவானி, குஜராத் அரசு தாழ்த்தப்பட்டவர் களின் வாழ்க்கையில் மாற் றம் ஏற்படுத்தும் திட்டங் களைப் புறக்கணித்துள்ள தாக குற்றம் சாட்டி உள் ளார்.

மாநில முதல்வர் நரேந் திர மோடி கூறிவரும் மாதிரி வளர்ச்சியில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பெரிதும் புறக்கணித்துள்ளார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை தொழிலதிபர் களுக்கு அரசு வழங்கி உள்ளது. எங்கள் தீர்மானங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,. பழங்குடி இனத்தவர் களுக்கும் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை வழங்குமாறு கோரி உள்ளோம். மனித மலங்களை சுமப்பதைத் தடை செய்யவேண்டும் என்றும், அப்பணிக்கான ஒப்பந்தங் களைப் போட்டு பணிகள் மேற்கொள்வதையும் அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரி உள்ளோம் என்று மெவானி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, வன்முறைச் சம்பவங்களுக்கான வழக்குகளில் தண்டனை அளிக்கப் பட்டது வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. ஆகவே, மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வாய்ப்பிருந்தும், குஜராத் அரசு அதுபோன்ற நீதிமன்றங் களை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி அமைக்கப்பட்டால் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளும் முடிவுக்குவரும் என்று கூறினார்.

-டைம்ஸ் ஆஃப் இந்தியா, 15-4-20

Read more: http://viduthalai.in/e-paper/79498.html#ixzz30QGxsoCc

தமிழ் ஓவியா said...


மோசடிக்காரர்கள்




மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page-2/79502.html#ixzz30QH9psMU

தமிழ் ஓவியா said...


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். இதுவரை 13 ஜனசபா என்ற மக்கள் அரங்க உரையை நிகழ்த்தியுள்ளார், இங்கு மக்கள் கேள்வி கேட்க இவர் பதில் அளிப்பார். இந்த 13 ஜனசபா மாத்திரமில்லாமல் பல்வேறு சாலைப் பிரச்சாரம் (ரோட் ஷோ) நடத்தியுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் லட்சக்கணக்கானோர் பங்குகொண்டனர். இந்தச் செய்தி யாருக்குப் பயம் உண்டாக்குகிறதோ, இல்லையோ- பாஜகவிற்கு பெரும் கிலியை உண்டாக்கிவிட்டது. காரணம் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் இவர்களின் ஓட்டுக்கள் தான் வெற் றியைத் தீர்மானிக்கும். இதுநாள்வரை நடந்த தேர்தல்களில் சரியான எதிரி வேட்பாளர் நிறுத்தப்படாததின் காரண மாகத்தான் சொற்ப வாக்குகளில் முரளி மனோகர் ஜோஷி வெற்றிபெற்று வந்தார். ஜோஷிக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை முரளிமனோகர் ஜோஷி பெற்ற வாக்குகளின் விழுக்காடு ஒன்றும் மிகப்பெரிய அளவில் இல்லை.

இம்முறை காங்கிரசும் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக கெஜ்ரி வாலை ஆதரிப்பதுபோல் தொகுதிக்கு அதிகமாக அறிமுகமில்லாத வேட் பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் காங் கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் வாரணாசிக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆகையால் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக் கும் என்று சொல்லமுடியாது. இந்த நிலையில் வெற்றிக்குக் காரண மான அனைத்து வாக்குகளும் கெஜ்ரி வாலுக்குச் செல்லும் சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வாரணாசி மக்களிடம் பாஜக கொஞ்சம் அதிக மாகவே கெட்டபெயர் வாங்கிக் கொண்டு வருகிறது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவானவர்களைத் தாக்குவது, பேனர்களை கிழிப்பது, பொது இடங் களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அசிங்க மான சொற்களை உபயோகப்படுத்துவது போன்றவைகளால் வாரணாசி மக்களி டையே பாஜகமீது வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதுபோல் கெஜ்ரிவால் தன்னை, யாரும் தரக்குறைவாகப் பேசினால் அவர்களுக்கு பூச்செண்டு களைப் பரிசாக அளியுங்கள் என்று கூற, வாரணாசியில் பல இடங்களில் பூச் செண்டுகளின் வியாபாரம் பெருகியுள் ளது. அதாவது பாஜகவினருக்கு எதிரான நிலை மக்களிடையே உருவாகி விட்டது. இன்னும் தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் பட்சத்தில் கெஜ்ரிவாலின் ரோட் ஷோ மிகவும் பிரபலமாகி வருவ தால், தங்களுக்கு விழும் வெற்றிக்கான வாக்குகளை கெஜ்ரிவால் பறித்துவிடு வாரோ என பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இறுதியாக மோடி ஒருமுறை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வாரணாசி பாஜக பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். மே 12 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசியில் நடைபெற உள்ளதால் மோடி எப்படியும் இரண்டு முறையாவது வாரணாசியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், அதற்கு முன்பு கெஜ்ரிவாலில் பிரச்சாரத்தில் குழப்பம் உண்டாக்கிவிடவேண்டும் என்றும் வாரணாசி பாஜக பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். மோடியின் ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் இல்லை கடந்த 24 ஆம் தேதி மோடி தனது வேட்பு மனு தாக்கலின் போது பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்திக் காண் பித்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாரணாசி மக்கள் பலர் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் இந்தியா வெங்கும் பலரை கொண்டுவந்து இறக்கியுள்ளனர். முக்கியமாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆட்சியாளும் மாநிலத்தில் இருந்து பெருவாரியான மக்கள் ரயில் மூலம் வாரணாசி வந்து இறங்கியுள்ளனர். ஊர்வலத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இது குறித்து வாரணாசிப்பதிப்பான ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வாரணாசி ரயில் நிலையம் கும்பமேளாவிற்கு வரும் கூட்டம் போல் நிறைந்துவிட்டது, நாடு முழுவதிலும் இருந்து பல ரயில்களில் பாஜக கட்சி யினர் வந்துகொண்டு இருந்தனர். வாரணாசி மக்கள் மோடியின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாஜகவி னரைப் பார்த்தாலே தெரியும் என்று எழுதியுள்ளது.
(ஹிந்துஸ்தான் இந்தி நாளிதழ், வாரணாசி)

Read more: http://viduthalai.in/page-2/79506.html#ixzz30QHPptlc