16ஆவது மக்களத் தேர்தலில் பிஜேபி தன்
இந்துத்துவா அஜண்டாவை வைக்கப் போகிறது - மீண்டும் மனுதர்மக் கொடியைப் பறக்க
விடப் பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உஷார்!
உஷார்!! என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடர்ந்து கூறிக்
கொண்டே வந்தார். அபாயச் சங்கை ஊதிக் கொண்டே இருந்தார்.
சிறப்புக் கூட்டம் போட்டுப் பேசினார்.
உரைகளை ஒலிப் பேழைகளாக வெளி யிட்டார்; அறிக்கைகளை வெளியிட்டு
விழித்தெழுவீர் தமிழர்களே என்று வேண் டுகோளும் விடுத்து வந்தார்.
நூல்களாகவும் தொகுத்துக் கொடுக்கப்பட்டன.
அந்தத் தலைவருக்கும், திராவிடர்
கழகத்துக்கும் இந்தப் பிரச்சினையில் மகத்தான பொறுப்பு இருக்கிறது. காரணம்
தமிழ் மண்ணில் மண்டிக் கிடந்த ஆரியக் கள்ளிகளை, விஷச் செடிகளை -
பார்த்தீனியங்களை மண்ணும் மண்ணடி வேருடனும் வீழ்த்தி, தமிழர்களுக்கான புதிய
பூமியை உண்டாக்கிய ஏர் உழவர் தந்தை பெரியார் அன்றோ! ஏற்றம் இறைத்தது
திராவிடர் இயக்கம் அன்றோ!
இந்தியாவிலேயே ஆரியத்திற்கு முதுகில் மண் காட்டிய காரியத்தைத் தமிழ் நாடுதானே செய்தது!
இந்த நாடு ஆஸ்திகாள் வாழத் தகுதி இழந்து
விட்டது! என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கையொப்பமிட்டு அறிக்கை (கல்கி
4.4.1971) வெளியிடும் அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழுந்த நிலை
இங்கு தானே! இந்தியாவின் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப்
புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர்
பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த
பேராசிரியர் களின் கருத்து ஆகும்.
----------------------------------- ஆனந்தவிகடன் 16.7.1972
----------------------------------- ஆனந்தவிகடன் 16.7.1972
அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி போன்ற அறிஞர்கள் கூறும் அளவுக்குப் பக்குவப்படுத்தப்பட்ட மண்ணிது.
தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆண்டான் அடிமை.
இவைகளின் ஆணி வேர் வரை சென்று மூலபலத்தை
அழித்து முற்றிலும் புதியதோர் சமுதாயத்தை உருவாக்க ஓய்வறியாது உழைத்த உலகத்
தலைவர் தந்தை பெரியார்!
கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை,
பெண்ணுரிமை, சமூக நீதிக்கான களங்கள் கண்டு இந்தியத் துணைக் கண்டத்திலேயே
தமிழ்ப் பூமி தலை நிமிர வைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக ஆக்கியது தமிழ் மண் - அதற்குக் காரணியாக இருந் தது திராவிடர் இயக்கம்.
இடஒதுக்கீட்டை - எதிர்ப்பு என்னும் காட்டுத் தீக்கு இடையே அங்குலம் அங்குலமாக வளர்த்தெடுத்த வரலாறு எம் இயக்கத்துக்கு உண்டு.
இவை எல்லாம் அழிக்கப்பட வேண் டுமா? மீண்டும் வருணாசிரமப் பாம்பு படம் எடுக்க வேண்டுமா?
இந்துத்துவா என்றால் இதன் பொருள் இதுதான்! பகுத்தறிவுப் பகலவன் - இனப் பாதுகாவலர் தந்தை பெரியார் கூறிச் சென்றாரே!
நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய்
இருக்கின்ற வரையில், நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை.
நாம் முதலில் சமய சமு தாயத் துறையில் ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட
வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே நமக்குச் சூத்திரப் பட்டம்
கிடைத்திருக்கிறது. அதனாலே நாம் அரசியல் அடிமைகளாய் வாழ்கிறோம்
-----------------------------------(குடிஅரசு
28.7.1948).
என்று கல்வெட்டாகச் செதுக்கி வைத்து
விட்டுச் சென்றுள்ளாரே வைக்கம் வீரர். இந்து ராஷ்டிரம்பற்றி அண்ணல்
அம்பேத்கர் கூறுகிறார்: இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது
இந்த நாட்டுக்குப் பெருங் கொடுமையாக (நிக்ஷீமீணீமீ விமீஸீணீநீமீ) அமையும்.
இந்துக்கள் என்ன சொன்ன போதிலும் இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகியவற்றிற்குக் கேடாக அமையும் என்பதில் எந்த மாற்றமும்
இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம்
எதார்த்தத்தைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும் என்றாரே
அண்ணல் அம்பேத்கர் (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை பக்கம் 358) தந்தை
பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் கணித்த கணிப்பினைக் கடந்து பி.ஜே.பி.யின்
இந்துத்துவாவுக்குப் பாஷ்ய கர்த்தாக்களாக ஆகப் போகிறார்களா மணியன்
கம்பெனிகள்? இந்துத்துவா கூடவே கூடாது - அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பியும்
கூடாது அதன் சுவீகாரப் புத்திரன் மோடியும் கூடாது என்பதற்கு வரலாற்று
ரீதியான காரணங்கள் ஏராளம் உண்டே!
மலம் அள்ளும் மக்கள் அந்தத் தொழிலைச்
செய்வது- அது ஒரு தெய் வீகப் பணி என்று அவர்கள் கருதுவதுதான்! என்று
அடித்தட்டு மக்களின் அசுத்தம் நிறைந்த அடிமை வாழ்வுக்கு நியாயம்
கற்பிக்கும் கடையர்தான் மோடி (மோடியின் கர்மயோக்) அந்த நூலைக் கண்டித்து
அப்பொழுதே ஆர்ப்பாட்டம் நடத்தியது திராவிடர் கழகம்! (11-12-2007)
தாழ்த்தப்பட்டவர்கள் குஜராத்தில் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்க முடியாது - மோடியின் குஜராத் மாநிலத்தில்.
குடி தண்ணீர்த் தொட்டிகளில்கூட
தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு நேரம், உயர் ஜாதிக்காரர்களுக்கு வேறொரு நேரம்
என்று எழுதப்பட்டுள்ள கேவலம் அங்கே! காலை 9 மணி முதல் 10 வரை பார்ப்பனர்கள், பட்டேல்கள், 10 மணி முதல் 12 மணி வரை பார்வாகா வங்கிரீஸ் மற்றும்
கும்பார் தாழ்த்தப்பட்ட மக்கள். மோடியைத் தூக்கிச் சுமக்கத் தோள்களைத்
தீட்டிக் கொண்டு அலையும் பதவிப் பசிக் காரர்களுக்கு இவையெல்லாம் தெரியுமா?
அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு
செயல்படும் நவ்சர்ஜன் எனும் தொண்டு நிறுவனம் நீதிக்கும் மனித
உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மய்யம் என்ற அமைப்பு குஜராத்தில்
1600 கிராமங்களில் முறைப்படி மேற்கொண்ட ஆய்வில் 98 சதவீத தலித்துகள்
தீண்டாமைக் கொடுமைக்குப் பல வகைகளிலும் ஆட்பட்டுள்ளதை விவரித்துள்ளதே!
இந்த மோடிதான் இந்தியாவை ஆள்வதற்கான தகுதி படைத்த பிரதமரா?
சங்பரிவார் - பிஜேபி என்பதெல்லாம் ஏதோ
பத்தோடு பதினொன்று என்கிற கட்சியல்ல. அவைகளுக்கு அழுத்தமான சமுதாயத்தைப்
பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் அசைக்க முடியாத அடிமன ஆழமான
கோட்பாடுகள் உண்டு.
பசுவதைத் தடுப்பு என்னும் பெயரால் பட்டப்
பகலில் பச்சைத் தமிழர் காமராசரை இந்தியாவின் தலை நகரில் வீட்டோடு வைத்துக்
கொளுத்திக் கொலை (7.11.1966) செய்யமுயன்ற கூட்டம் இது என்பது வைகோ
அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; காந்தி சீடர் காமராசர் பக்தர்
தமிழருவி மணியனுக்குத் தெரியாமல் இருக்குமா? தெரியாது என்றால் நம்பத் தான்
முடியுமா? தெரியாதது போல நடிக்கிறார் என்றால்.. அவர் நாணயத்தைச்
சந்தேகிக்கும் நிலை ஏற்படாதா?
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை
மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் - அந்த
இடத்திலே ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று ஒரு தேர்தல் அறிக்கையிலே
பகிரங்கமாக அறிவித்து ஒட்டுக் கேட்டு வருகிறார்கள் - அதற்குக் கறுப்புத்
துண்டு வைகோவும், காந்திசீடர் மணியனும் சலாம் போட்டு பராக்குக்
கூறுகிறார்கள் என்றால் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இப்படிப் பட்டவர்களா?
என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.
குஜராத்திலே பிறந்த பெரிய தலைவர்
காந்தியார்! அவருக்குச் சிலை எடுக்காமல் பட்டேலுக்கு உலகத்திலேயே
மிகப்பெரிய சிலை எடுக்க நாடு முழுவதும் இரும்பு களைத் திரட்டுகிறார் மோடி
என்றால் அதன் முகாந்திரம் என்ன?
காந்தியாரைக் கொன்ற கோட்சே கூட்டத்தின்
பாசக் காரர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்பதை காந்தீய மக்கள் கட்சி
நிறுவனருக்குத் தெரியாதா? நூலிழைப் பிளந்து எழுதி வருகிறாரே - இந்த இடத்தை
உள் வாங்கிக் கொள்ளும் நுட்பம் எங்கே போயிற்று?
என்ன சொன்னார் இந்த தமிழருவி மணியன்?
சிறுபான்மையோர் நம்பிக்கையை முழுமையாகப் பெற வேண்டும் என்றால் மோடியும்
பா.ஜ.க.வும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அயோத்தியைக் குறி
வைத்து அரசியல் செய்யக் கூடாது. பாபர் மசூதியைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்
தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்
என்ற முழக்கத்தைக் கைவிடச் செய்தல், காஷ்மீருக்கு விசேஷ சலுகைகளை அளிக்கும்
அரசியல் சட்டம் 370 பிரிவின்கீழ் கை வைக்கக் கூடாது. இது போன்ற
சிறுபான்மையோரின் உணர்வை மதித்து நடந்தால் காங்கிரசின் போலி மதச்
சார்பின்மை கோஷம் எடுபடாது. ஆனால் இப்படி நடக்க ஆர்.எஸ்.எஸ். விட்டு
வைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி
----------------------- (கல்கி 29.9.2013 பக்கம் 6).
இப்படி சொல்லி இருப்பவர்தான் காந்தீய
மக்கள் கட்சியின் நிறுவனர் திருவாளர் தமிழருவி மணியன். இந்த மில்லியன்
டாலர் கேள்விக்கு பதுங்காமல், பம்மாத்துச் செய்யாமல், ஓடி ஒளியாமல்
மணியன் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
அப்படியே ஆர்.எஸ்.எஸ். சொல்லுவதை
பி.ஜே.பி. அப்படியே ஒப்புக் கொண்டு தேர்தல் அறிக்கையிலும் அதிகாரப்
பூர்வமாக அறிவித்துவிட்டது. மணியன் பயந்தபடியே ஆர்.எஸ்.எஸ். பிஜேபிமீது
குதிரைச் சவாரி செய்வது அம்பலமாகி விட்டதே!
அறிவு நாணயம் கிளர்ந்தெழுந்து ஆவேசப் புயலாய் அனலை நிரப்பி ஆடித் தீர்த்திருக்க வேண்டாமா? அதுதானே இயல்பானதும்கூட!
மனிதன் எப்படி சீழ்ப் பிடித்துப் போயிருக்கிறார் தெரியுமா?
மதங்களின் அடிப்படையில் மனி தனைப்
பேதப்படுத்திப் பார்க்கும் தன்மை மோடியிடம் இல்லை. அவர் இந்தியர் நலன்
என்றுதான் சொல்கிறார். ஹிந்துக்கள் நலன் என்று சொல்வதில்லை என்று ஈரோட்டில்
பேசியுள்ளார்
-------------------------------------(தினமணி 9.4.2014)
பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக் கையை
வெளியிட்டு தனது அப்பட்டமான இந்து முகத்தைக் காட்டிக் கொண்ட பிறகு இப்படி
அவரால் பேச முடிகிறது என்றால்... என்ன நடந்தது? கல்கியில் கூறியதற்கும்
தினமணி வெளியீட்டுக்கும் இடையில் நிகழ்ந்ததென்ன என்ற வினாவுக்கு
வெளிப்படையாக அவர் பதில் சொல்ல வேண்டும்.
மணியன் இப்படி என்றால் பெரிய குளத்தில்
மதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய வைகோ அவர்கள் பாரதீய ஜனதா கூட்டணி 320
இடங்களில் வெற்றி பெறும் (மாலை மலர் 9.4.2014 பக்கம் 10) என்று மகிழ்ச்சிப்
பொங்க கொக் கரித்துள்ளாரே! அதற்கு முன்பேகூட மோடி பெரும்பான்மை பெறுவார்
என்று பொரிந்து தள்ளிக் கொண்டுதானே இருந் தார். பி.ஜே.பி.க்குச் சிறப்பான
பிரச்சார செயலாளராகப் போய் விடலாம் - அங்கு தான் பேச்சாளருக்குப்
பஞ்சமாயிற்றே!
வைகோ - மணியன் ஆகியோர் கணிப்புப் படியே பிஜேபி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப் போவதாகவே வைத்துக் கொள்ளவோம்.
பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்து ராமன் கோயில் கட்டுவது உட்பட அந்த மூன்று செயல்களை முக்கியமாகச் செய்தால்...
சிறுபான்மை மக்கள் முன் மண்டியிட்டு
மன்னிப்புக் கேட்பார்களா? தோளில் தொங்கும் கறுப்புச் சால்வையைத் தூக்கி
எறிந்துவிட்டு தோற்றேன் தோற்றேன்!! என்று தோப்புக் கரணம் போடுவார்களா?
சிறுபான்மை மக்களை ஏமாற்றுவ தற்காகக்
குடித்த நோன்பு கஞ்சி கொஞ்ச நஞ்சம் குடலுக்குள் ஒட்டியிருந்தால் அதனை
எண்டாஸ்கோப் மூலம் வெளியே எடுத்து எறிந்து விடுவார்களா?
இந்த நாட்டின் கோடானு கோடி சிறுபான்மை
மக்கள்பற்றி மோடிக்கும் - அவர் கூட்டத்துக்கும் இருக்கும் எண்ண வோட்டம்
நாடு அறிந்த ஒன்று. சிறுபான்மை மக்கள் மத்தியில் வைகோ எந்த முகம் கொண்டு
சலாம் வைப்பார்?
கொள்கைவாதிகள் என்றும், குன்று போல் நிற்பார்கள். சந்தர்ப்பவாதிகளோ இப்படித்தான் கூனிக் குறுகி நிற்க நேரிடும்.
பி.ஜே.பி. தோற்றாலும்கூட - இந்தப் பழிக் கறை இவர்களை விட்டுப் போகாது - போகவே போகாது!
சாமர்த்தியங்கள் எப்பொழுதும் கை
கொடுக்காது. ஒரு கட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மை உருவம்
வெடுக்கென்று வெளியில் வநது விழுந்து விடும்.
அந்தப் பழிப் பட்டியலில் வைகோ, மருத்துவர் ராமதாசு (பெரியாரைப் பற்றிப் பேசுபவர் ஆயிற்றே! தொண்டர்களைக் கறுப்புச் சட்டை போடச் செய்தவர் ஆயிற்றே) தமிழருவி மணியன் ஒரு தனி அணியாகவே அணி வகுத்து நிற்பார்கள்- சந்தேகம் வேண்டாம்! விஜயகாந்த்.. பாவம் அவரை விட்டு விடுவோம் - கணக்கில் எடுத்துக் கொள்ள அவரிடம் என்ன கருத்து இருக்கிறது?
18 comments:
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.
90 வயதைக் கடந்த நிலையிலும்கூட திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் பொழுதெல்லாம் அந்தவூருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பைப் பசுமையாக நினைவூட்டி, மலரும் நினைவுகளில் தோய்ந்து போகிறார்.
கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பேசும்பொழுது திராவிடர் கழகத்தில் அவர் இளைஞராக இருந்தபோது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டினார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பெரியாரைப் பற்றியும், அண்ணா அவர்களைப் பற்றியும், சுயமரியாதைக் கொள்கைகள்பற்றியும் பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம்... தந்தை பெரியார் போதனைகளையும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைகளையும் விட்டு விட்டு இந்தக் கருணாநிதியால் பேச முடியாது என்று சொன்னாரே - அதுதான் முத்தாய்ப்பு!
இயக்கத்தின் அஸ்திவாரம் சித்தாந்தங்கள் இளைஞர்களிடத்தில் போய் சேராத வரை வெறும் தேர்தல் பிரச்சாரம் ஆழமாகப் போய்ச் சேர்ந்திடாது. இளைஞர்கள் திசை மாறி ஓடுகிறார்களே என்று குறைபட்டுக் கொள்வதில் பொருள் இல்லை.
இளைஞர்களிடத்தில் திராவிடர் இயக்கச் சித்தாந் தங்களையும், சாதனையையும் எடுத்துக் கூறாவிட்டால் வேறு சீரழிவுத் திசையில்தான் பயணம் செய்வார்கள். முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் மற்ற பேச்சாளர்கள் இதனைப் பாலபாடமாகப் பெற வேண்டும்.
தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் இயக்கத்தின் இலட்சிய நீரோட்டத்தை எடுத்துச் சொல்லத் தவறுவதில்லை.
திராவிடர் கழகத் தலைவர் உரையைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக, இந்தத் தேர்தல் என்பது குலதருமத்துக்கும், சம தர்மத்துக் குமிடையே நடக்கும் போராட்டம் என்பதைக் காரண காரியத்தோடு எடுத்துக் கூறி வருகிறார்.
பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் படிப்பவர்களுக்குத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை தெற்றெனப் புலனாகும்.
சமூக நீதிக்காகப் பிறந்த இயக்கமாயிற்றே திராவிடர் இயக்கம்.
பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே சமூக நீதி என்ற சொல்லோ, இடஒதுக்கீடு என்ற பதமோ மருந்துக்கும்கூட இடம் பெறவில்லையே!
மாறாக மதவாத அனல் காற்று தான் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே வீசுகிறது. இந்த அடிப்படையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆழமான உரையாக திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் உரை அமைந்துள்ளது.
தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார உரை; களை கட்டி நிற்கிறது; யதார்த்தமாக. கால தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல பல யுக்திகளை அவர் சொற்பொழிவில் காண முடிகிறது.
மக்களைப் பார்த்து ஜெயலலிதா கேள்வி எழுப்பி வருகிறார். செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களைப் பார்த்து செல்வி ஜெயலலிதா கேள்வி கேட்டு வருகிறார்.
அதே பாணியில் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து செய்தீர்களா? செய்தீர்களா? என்று கேட்பது வாக்காளர் மத்தியில் மிகவும் எடுபடுகிறது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உரை - எழுதி வைத்துக் கொண்டு படிப்பதாகும். ஒரே உரையை எத்தனைக் கூட்டங்களில்தான் பேசுவது, பேசுவோருக்கே வெறுத்துப் போய் விடாதா? நாளடைவில் அவர் உரை உணர்ச்சியற்றதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
துணிந்து உண்மைக்கு மாறான வகையில் ஒரு முதல் அமைச்சர் பேசி இருப்பது ஆச்சரியமானது!
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்பதே கிடையாது என்று பேசக் கூடிய துணிவு அல்லது அசட்டுத் தைரியமே! இதனைக் கேட்கும் பொது மக்கள் முதல் அமைச்சரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அன்றாடம் மின் வெட்டினால் பல வகைகளிலும் அல்லற்படும் அந்த மக்களிடத்திலேயே இப்படி அபாண்டமாகப் பொய்யைக் கூறினால், அந்தப் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?
இதில் இன்னொரு தகவலை முதல் அமைச்சர் கூறுவதுதான் வேடிக்கை.
மின்சார உற்பத்தி தன்னிறைவை அடைந்து விட்டதாம். ஆனால், நாள்தோறும் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றனவாம். இதில் ஏதோ சதி நடக்கிறதாம் - சொல்லுபவர் யார் தெரியுமா? ஒரு முதல் அமைச்சர்.
அப்படி சதி இருப்பது உண்மையென்றால் அதனைக் கண்டுபிடித்து, சதிகாரர்களைத் தண்டிக்க வேண்டியதும் முதல் அமைச்சரின் வேலைதானே! இப்படிக் கூறுவது - முதல் அமைச்சர் நிர்வாகத் திறன் அற்றவர் என்று பொருளாகி விடாதா?
தொலைக்காட்சிகளில் தலைவர்களின் உரைகளைக் கேட்கும் பொது மக்கள் இதுபற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திப்பார்களாக!
Read more: http://viduthalai.in/page-2/78566.html#ixzz2yiuH5uQ2
விரட்டியடியுங்கள் என்றார் முதல்வர் விரட்டுகிறார்கள் மக்கள் - யாரை? தமிழர் தலைவர் தரும் சுவையான தகவல்
கூட்டம் நடக்கும் இந்தப்பகுதி பெரிய அக்ரஹாரம். நமக்கு நெருக்கமான, உறவுக்காரர்களின் பகுதி. நமக்கெல்லாம் தெளிவாக தெரியும். இன்றைக்கு அது புதியதல்ல. அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே. எங்களுடைய உறவுக்காரர்கள், இங்கே இருக்கிறார்கள் உறவை விட மேலானவர்களாக இருப்பார்கள்.
விரட்டியடியுங்கள் விரட்டியடியுங்கள்
ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அன்பாக அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளை யாக கருதுகிறார்கள்.
அங்கே! அஇஅதிமுக-வில் பார்த்தீர்கள் என்றால், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கப் போகும்போது எம்.பி.யாக இருக்கிறார்கள் ஆனால் அந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த அம்மையார் சொன்னதை மக்கள் கேட்கிறார்கள்.
அம்மையார் விரட்டியடிங்க! விரட்டியடிங்க என்று சொன்னார். யாரை விரட்டியடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். ஆகவே தான் மக்கள் (அதிமுக காரர்களை) விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
துணைத் தேர்தல் அறிக்கையாம்
ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வரியாவது இடம் பெற்றுள்ளதா?
இங்கு (தமிழ்நாட்டில்) மோடி வலையில் சிக்கிய மீன்களாக, தோழர்கள் இருக்கிறார்கள். தனி ஈழம் தமிழ் ஈழம் பற்றி பிஜேபி அறிக்கையில் வரவில்லையே! அவர்கள் கேட்டதுண்டா? ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றி ஒரு வரியாவது இருக்கிறதா பிஜேபி தேர்தல் அறிக்கையிலே?
மத்திய பிரதேசத்தில் இராஜபக்சேவை வரவேற்றது யார்? பி.ஜே.பி.யில் ஒருவர் தான் வரவேற்றார்.
தேர்தல் அறிக்கையிலே மீனவர் பிரச்சினை இடம் பெறவில்லையே! என்று கேட்டால் தனி ஈழம் பற்றி ஒரு வரிகூட இல்லையே! என்றால் அதற்கு துணை தேர்தல் அறிக்கையில் வரும் என்கிறார் நம்ம ஊர் இல.கணேசன்
தேர்தல் அறிக்கையிலே (யாராவது) துணை தேர்தல் அறிக்கை கொடுத்தது உண்டா?
என்னய்யா குழந்தை பிறந்ததே இன்னும்சத்தம் போடாமல் இருக்கே. உயிர் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் இல்லைங்க இன்னொன்று வரும் அது சத்தம் போடும் என்றால் என்ன அர்த்தம்?
எங்கே அமைதி! எங்கே அமைதி?
அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 3 ஆண்டுகளில் 5,632 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் (தமிழ்நாடு காவல்துறை அறிக்கைப்படி). மதுரையிலே பிரபலமான கொலை - கண்டுபிடிக்க முடிந்ததா? திருச்சியில் பிரபல மானவர் கொலை செய்யப்பட்டார். கண்டுபிடிக்கப் பட்டதா? (மூன்றரை ஆண்டுகள் ஆகிறதே) நம்முடைய காவல்துறைக்கு என்ன பெயர் ஸ்காட்லாந்தை மிஞ்சக்கூடியவர்கள் என்று பெயர் உண்டே! ஏன்? அவர்களால் முடியவில்லையே என்ன காரணம்? எங்கே அமைதி! அம்மையார் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
- ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் தமிழர் தலைவர் 10.4.2014
Read more: http://viduthalai.in/page-4/78550.html#ixzz2yiuRL7R6
விரட்டியடியுங்கள் என்றார் முதல்வர் விரட்டுகிறார்கள் மக்கள் - யாரை? தமிழர் தலைவர் தரும் சுவையான தகவல்
கூட்டம் நடக்கும் இந்தப்பகுதி பெரிய அக்ரஹாரம். நமக்கு நெருக்கமான, உறவுக்காரர்களின் பகுதி. நமக்கெல்லாம் தெளிவாக தெரியும். இன்றைக்கு அது புதியதல்ல. அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே. எங்களுடைய உறவுக்காரர்கள், இங்கே இருக்கிறார்கள் உறவை விட மேலானவர்களாக இருப்பார்கள்.
விரட்டியடியுங்கள் விரட்டியடியுங்கள்
ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அன்பாக அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளை யாக கருதுகிறார்கள்.
அங்கே! அஇஅதிமுக-வில் பார்த்தீர்கள் என்றால், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கப் போகும்போது எம்.பி.யாக இருக்கிறார்கள் ஆனால் அந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த அம்மையார் சொன்னதை மக்கள் கேட்கிறார்கள்.
அம்மையார் விரட்டியடிங்க! விரட்டியடிங்க என்று சொன்னார். யாரை விரட்டியடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். ஆகவே தான் மக்கள் (அதிமுக காரர்களை) விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
துணைத் தேர்தல் அறிக்கையாம்
ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வரியாவது இடம் பெற்றுள்ளதா?
இங்கு (தமிழ்நாட்டில்) மோடி வலையில் சிக்கிய மீன்களாக, தோழர்கள் இருக்கிறார்கள். தனி ஈழம் தமிழ் ஈழம் பற்றி பிஜேபி அறிக்கையில் வரவில்லையே! அவர்கள் கேட்டதுண்டா? ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றி ஒரு வரியாவது இருக்கிறதா பிஜேபி தேர்தல் அறிக்கையிலே?
மத்திய பிரதேசத்தில் இராஜபக்சேவை வரவேற்றது யார்? பி.ஜே.பி.யில் ஒருவர் தான் வரவேற்றார்.
தேர்தல் அறிக்கையிலே மீனவர் பிரச்சினை இடம் பெறவில்லையே! என்று கேட்டால் தனி ஈழம் பற்றி ஒரு வரிகூட இல்லையே! என்றால் அதற்கு துணை தேர்தல் அறிக்கையில் வரும் என்கிறார் நம்ம ஊர் இல.கணேசன்
தேர்தல் அறிக்கையிலே (யாராவது) துணை தேர்தல் அறிக்கை கொடுத்தது உண்டா?
என்னய்யா குழந்தை பிறந்ததே இன்னும்சத்தம் போடாமல் இருக்கே. உயிர் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் இல்லைங்க இன்னொன்று வரும் அது சத்தம் போடும் என்றால் என்ன அர்த்தம்?
எங்கே அமைதி! எங்கே அமைதி?
அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 3 ஆண்டுகளில் 5,632 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் (தமிழ்நாடு காவல்துறை அறிக்கைப்படி). மதுரையிலே பிரபலமான கொலை - கண்டுபிடிக்க முடிந்ததா? திருச்சியில் பிரபல மானவர் கொலை செய்யப்பட்டார். கண்டுபிடிக்கப் பட்டதா? (மூன்றரை ஆண்டுகள் ஆகிறதே) நம்முடைய காவல்துறைக்கு என்ன பெயர் ஸ்காட்லாந்தை மிஞ்சக்கூடியவர்கள் என்று பெயர் உண்டே! ஏன்? அவர்களால் முடியவில்லையே என்ன காரணம்? எங்கே அமைதி! அம்மையார் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
- ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் தமிழர் தலைவர் 10.4.2014
Read more: http://viduthalai.in/page-4/78550.html#ixzz2yiuRL7R6
மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது! - கி.வீரமணி
தி இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது!
சென்னை, ஏப்.12- மதச் சார்பற்ற அணிக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்புள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தி இந்து (தமிழ்) நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக-வுக்கு ஆதரவாக நீங்கள் மேற் கொண் டிருக்கும் பிரச்சாரத்துக்கு மக்கள் மன்றத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?
மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
ராமர் கோயில் கட்டுவோம் என்பது உள்ளிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உங்கள் கருத்து?
பாஜக-வை ஆர். எஸ்.எஸ். தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது. இந்தத் தேர்தலில் யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்தது கூட ஆர்.எஸ்.எஸ்.தான். இதற்கெல்லாம் உதாரணம்தான் பாஜக தந்திருக்கும் தேர்தல் அறிக்கை . ராமர் கோயில் கட்டுதல், காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம், பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போன்ற அஜென் டாக்கள் (செயல் திட்டங்கள்) இதுநாள் வரையில் மறைமுகமாக வைக்கப்பட் டிருந்தன. இப்போது தேர்தல் அறிக்கை யாக வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழகத்தை எந்தளவுக்கு முன்னேற்றும். இதனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன பயன்?
தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பாஜக தேர்தல் அறிக் கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. மாறாக, சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித் திருக்கிறார்கள். இவை எல்லாமே தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண் டுள்ள திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்க முடியும்.
காங்கிரஸும் பாஜக-வும் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து வருகிறது என்றால் மூன்றாவது அணிக்கு உங்களது ஆதரவு உண்டா?
மூன்றாவது மாற்று அணி என்பது ஏற்கெனவே கருச்சிதைவு அடைந்த ஒன்று. இந்த முறை மூன்றாவது மாற்று அணி என்ற கரு கூட உருவாகவில்லை. மாற்று அணி உருவாகும்போது அப்போது ஆதரவு குறித்துத் தெரிவிக்கப்படும்.
தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்து மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்தால் திமுக அதற்கு ஆதரவளிக்குமா?
நூறு சதவீதம் அதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுக தலைவர் கலைஞர் மதச்சார்பற்ற அணி ஆட்சியமைக்க மட்டுமே திமுக ஆதரவளிக்கும் என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். எனவே அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.
அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின் றீர்கள். அவருக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
ஆ.ராசாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
திமுக-வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து கட்சிக்குள் குழப்பம் விளைவித்து வருகிறார். அவர் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் விட்டதை கலைஞர் செய்த தவறாகக் கருது கிறீர்களா?
அழகிரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் திமுக-தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்த திமுக, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியதை நியாயப்படுத்துகிறீர்களா?
ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் திமுக-வின் நியாயத்தை காங் கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அமைச்சர வையிலிருந்து திமுக வெளியேறியது. என்றாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து அந்த பழி தங்கள் மீது வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளித்து வந்தது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/78560.html#ixzz2yiuhtpui
திருமணத் தகவல்: முந்தைய தேர்தல்களில் மோடி மறைத்துவிட்டார் தேர்தல் ஆணையத்தில் கபில்சிபல் புகார்
புதுடில்லி, ஏப்.12-நாடாளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங் களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது திருமணம் ஆகிவிட் டதென்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந் தார்.
தற்போதைய நாடாளு மன்ற தேர்தலில், எந்த வொரு வேட்பாளரும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத் தில் எந்தவொரு தகவலை மறைத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடி வாளம் போட்டதால் மோடி இத்தகவலை இணைத்துள் ளதாக கூறப்பட்டது.
நரேந்திரமோடி, தனது திருமணம் குறித்து முதன் முதலாக தகவல் வெளி யிட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.
குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோது கூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். இதுபற்றி தற்போது கேள்வி எழுப்பி யுள்ள காங்கிரஸ் கட்சி, முந்தைய தேர்தல்களில் தனது திருமண தகவலை மோடி மறைத்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. தேர் தல் ஆணையத்திடம் புகார் அளித்த சட்ட அமைச்சர் கபில்சிபல், 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மோடி தனது திருமண தகவலை மறைத்துள்ள தாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/78562.html#ixzz2yivKnYJm
மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசிய மோடிக்கு கடும் கண்டனம்
சென்னை, ஏப். 12- மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சு மணன், செயலாளர் எஸ்.நம்பிராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளி களை அவமானப்படுத் தும் விதத்தில் ஜாம்செட்பூ ரில் பேசியுள்ளதற்கு எமது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம்.
நாட்டிற்கு ஒரு ஊன முற்ற செவிட்டு ஊமை அரசு தேவையில்லை என - மாற்றுத்திறனாளிகள் எதற்கும் லாயக்கில்லை என்ற தொனியில் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியை சக்கர நாற்காலி பயன்படுத்தும் நொண்டி என குறிப்பிட் டவர் என்பதால், மாற்றுத் திறனாளிகளை கொச் சைப்படுத்துவது இவ ருக்கு வாடிக்கையாகி வரு கிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாட்டில் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல உயர்ந்த பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வரும் சூழ லில், மோடிக்கு மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய புரிதலே இல்லை என்ப தாகவே நாங்கள் கருது கிறோம். மாற்றுத் திறனா ளிகள் எதற்கும் லாயக் கில்லை என்ற மன நிலை உள்ள ஒருவர் பிரதமரா னால் மாற்றுத்திறனாளி களின் நிலைமை என்ன வாகும்? என்பதே மாற்றுத் திறனாளிகளின் தற்போ தைய கேள்வி.
போராட்டம்
மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத் தில் பேசியுள்ள மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் இதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடு வதைத் தவிர்க்க முடி யாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/e-paper/78561.html#ixzz2yivU7Ozf
இழிநிலை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!
- (விடுதலை, 10.8.1961)
Read more: http://viduthalai.in/page-2/78565.html#ixzz2yiwGHQls
பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளேயாவர்
டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த சாரதாபில் என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்குச் சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும்.
சீர்திருத்த சம்பந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப்பட்டு வந்திருக் கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றத்தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அது பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படி மதிக்க முடியும்?
இந்தச் சர்க்கார் இந்நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்நாட்டில் உள்ள பார்ப்பனியக் கொடுமையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமே யொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாது நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.
எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனியக் கொடுமைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் கல்யாண மசோதா விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர் களுடன் சேர்ந்து கொண்டதற்குக் காரணம் சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியது தானாம்.
இது யோக்கியமான சமாதானமல்லவென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சம்மதவயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண் ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது.
கலவி என்பது ஒரு உணர்ச்சி கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி. பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் உண்டாகலாம்.
அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவேகூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரண மான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயம் சட்டத்தையோ சிக்கலாகுமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?
கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?
ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரை கட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக் கியதனத்தைக் காட்டுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை அதே காரியத்திற்கு அரசாங் கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள் பங்காளிகள் என் பதையே காட்டுகின்றது.
எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாட்சியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.
குடிஅரசு - கட்டுரை - 10.02.1929
Read more: http://viduthalai.in/page-7/78594.html#ixzz2yix0ad1d
சென்னையில் சைமன் கமிஷனுக்கு ஆடம்பரமான வரவேற்பு - பகிஷ்காரம் புஸ்ஸ் என்று போய்விட்டது
ராயல் கமிஷனுக்குப் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18ஆம் தேதி காலை 6 மணிக்கு டிறா என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள்.
அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதிநிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.
பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும், கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும், மற்றும் சென்னைப் பிரமுகர்களும், தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார் சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும் மகமதிய சமூகப் பிரதிநிதிகளும் ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும்,
வர்த்தக சங்கப் பிரதிநிதி களும் மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும் பொது ஜனங்கள் சார்பாக அரசாங்கத்தில் மந்திரிகளாக நியமிக்கப்பட்ட மந்திரிமார்களும் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சகல திறப்பட்ட மக்களின் கூட்டமும் ஏராளமாக வந்திருந்து ஒவ்வொரு பிரதிநிதி தாபனங்களும் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து அநேக வகுப்பு மகாநாடுகளில் கமிஷனை வரவேற்கச் செய்த தீர்மானங்களையும் தெரியப்படுத்தி வரவேற்றார்கள்.
சைமன் துரையவர்களும், கமிஷன் சார்பாக இவ்வாடம்பரமானதும் பிரதிநிதித்துவ மானதுமான வரவேற்பை ஏற்று அதற்குத்தக்க பதிலளித்த தோடு, தங்களது நன்றியறிதலையும் தெரிவித்து அரசாங்க விருந்தினராய்ச் சிலரும் மந்திரிகள் விருந்தினராய் சிலரும் தனிப்பிரபுக்களின் விருந்தினர் களாகச் சிலரும் அவரவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இவை தவிர மற்றும் அநேக பிரதிநிதித்துவ சபைகளினுடைய பத்திரங்களும் அழைப்புகளும் கமிஷனுக்கு ஏராளமாக இருந்தது.
என்றாலும் அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள கமிஷனர்களுக்குப் போதிய சாவகாசம் இல்லை என்பதை முன்னமேயே அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டதின் மீது பல ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.
எனவே, சென்னையில் தாங்கள் தான் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்றும் தங்கள் கருத்துத்தான் தேசமக்கள் கருத்தென்றும் தாங்களே தான் தேசத் தலைவர்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே விளம்பரம் செய்து கொண்டும் தங்களுக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் தலைவர் பட்டங்களை பரிமாறிக் கொண்டும் இருந்த - இருக்கின்ற - ஒரு சில ஆசாமிகள் கூடிக் கொண்டு சுமார் ஒரு வருஷ காலமாக பகிஷ்காரக் கூச்சல் போட்டும் எவ்வளவோ சூழ்ச்சிகளும் விஷமப் பிரச்சாரங்களும் செய்தும் கடைசியாக சைமன் பகிஷ்காரம் புஸென்று காலி வேட்டாய் போய் விட்டதுடன் சைமன் கமிஷன் வரப் போவதில்லை என்று தெரிந்த ஒரு தெருவில் நின்று தங்கள் செலவில் போட்டோ படம் பிடித்து தங்கள் தங்கள் பத்திரிகையில் போட்டுக் கொண்டதோடு பகிஷ்காரம் முடிவு பெற்றுவிட்டதென்றே சொல்லுவோம்.
ஒரு சமயம் பகிஷ்காரக் கூச்சல்காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லவருவார்களானால் அவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பகிஷ்காரக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களில் அதாவது, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஷாபிமுகமது, குழந்தை, வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரம், இரத்தினசபாபதி, அமீத்கான், ஜெயவேலு முதலிய கூட்டத்தார்களை விட எந்தவிதத்திலாவது அதாவது, தேசியப் பொறுப்பிலோ ஒழுக்கத்திலோ, தியாகத்திலோ, செல்வத்திலோ குறைந்த யோக்கியதை உடையவர்கள் ஒருவராவது சைமன் கமிஷனை வரவேற்ற பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் இருந்தார்களா என்று கேட்கின்றோம்.
குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24-02-1929
Read more: http://viduthalai.in/page-7/78591.html#ixzz2yixU8QTX
திரு.ராஜகோபாலாச்சாரியின் பஞ்ச நிவாரணப் புரட்டு
சேலம் ஜில்லா திருச்செங்கோட்டுக்குப் பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியைவிட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபாரிசின் மீது வெளி இடங்களிலே யிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்.
இந்த சூழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள்.
இவர் சென்ற தேர்தலின் போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரச்சாரங்களும் அவற்றின் மூலம் திரு.சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர்களுக்கே ஓட்டு கொடுங்கள் என்று எழுதச் செய்த சூழ்ச்சியும் மக்கள் அறிந்ததேயாகும். ஆனால் அந்தத் தேர்தல் நடந்த பிறகு அச்சூழ்ச்சிகளால் ஓட்டுப்பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியாரோ அல்லது காங்கிரசுக்காரரோ அல்லது சுதந்திரக் கட்சியாரோ செய்த வேலை என்ன என்று கேட்கின்றோம்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பெரிய பூசாரி ஆய்விடுவதைப் போல், திரு.காந்தியைக் கொண்டு பணம் வசூலிப்பதும், அப்பணத்தைக் கொண்டும் மாதம் 50, 100, 150, 200- என்பதாக பார்ப்பனர்களுக்குச் சம்பளம் கொடுத்து பல பார்ப்பனர்களை வளர்ப்பதும், பார்ப்பனரல்லாதாரில் ஏதாவது ஒன்று இரண்டு பேர்களை அதுவும் முட்டாள்களாகத் தேடிப்பிடித்து அவர்களை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் தான் சேர்த்துக் கொண்டிருப்பதாக பொது ஜனங்களை ஏமாற்றுவதும் ஆகிய இந்த பித்தலாட்ட காரியத்தினாலேயே பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய் ஏமாற்றலாம் என்று கருதி இருக்கின்றார்.
ஆதியில் இந்த ஆசிரமம் பெரிதும் பஞ்சமர்கள் என்பவர்களையே பிரதானமாகக் காட்டி ஏற்படுத்திய தாகும். அந்தப் பெயராலேயே பொதுஜனங் களிடையே! பணமும் வசூலிக்கப்பட்டது.
எனவே அப்பேர்ப்பட்ட ஒரு ஆசிர மத்தில் தீண்டாதார் என்பவர்கள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றார் என்பதும், பார்ப்பனரல்லாதாராரிடமிருந்தே கொடுக்கப்பட்ட பூமியால் பார்ப்ப னரல்லாதாரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் நடைபெறும் ஆசிரமமான புதுப்பாளையம் ஆசிரமமென்பதில் இப்போது இருக்கும் பார்ப்பனர் எண்ணிக்கை எவ்வளவு?
அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு? பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு? ஆகிய இவைகளைக் கவனித்தால் ஆசிரமப்புரட்டும் ஆச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டும் தீண்டாமை விலக்குப் புரட்டும் கதர்த் தொண்டு புரட்டும் தானாகவே ஒரு மூடனுக்குக் கூட விளங்கிவிடும் நிற்க.
இச்சூழ்ச்சிகள் நடக்கும் இவ்வாச்சிரமத்திற்காக திரு.காந்தியின் சிபாரிசை கேட்டுக் கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் சில பயித்தியக்காரர்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதைப் பற்றியோ அவைகளை பொது நலத்தின் பெயரால் சில பார்ப்பனர்களை தின்று கொழுக்கச் செய்யும் அக்கிரமங்களைப் பற்றியோ நமக்குச் சிறிதும் கவலை இல்லை.
ஆனால் இந்தப் புரட்டுகளும் யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும் சமீபத்தில் வரப்போகும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிப்பதற்கு என்று செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அறியாமல் எங்கு பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்துபோய்ப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவார்களோ என்கின்ற விஷயத்தில் தான் நாம் கவலைப்படுவதோடு பொதுமக்களையும் உஷாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடிஅரசு - கட்டுரை - 10-03-1929
Read more: http://viduthalai.in/page-7/78592.html#ixzz2yixd28TP
பசு மாமிசம்பற்றி குரல் கொடுப்போர் மாநிலத்தில்தான்...
நரேந்திர மோடி கடந்த ஒன்றரை ஆண்டாக இந்தியா முழுவதும் சுற்றி குஜராத் வளர்ச்சி என்ற பொய்யான தகவலை பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரது பொய் முகம் தற்போது வெளிவரத்துவங்கியவுடன், இதுநாள் வரை நாட்டு வளர்ச்சி என்ற பொய்வேசத்தைக் களைந்து தனது உண்மையான இந்துத்துவா முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
பசுவதை என்ற பெயரில் கர்மவீரரை உயிரோடு எரிக்க துணிந்த கும்பல் இன்று அதே பசுவதையை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. தற்போதைய அரசு பசுவதையை ஆதரிக்கும் அரசு, பசுப் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பசுக் கொலை செய்யும் மாட்டிறைச்சி தொழிலுக்கு மானியம் கொடுத்துவருகிறது, என்ற மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஓட்டு வாங்க முற்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் பசுவதை மாட்டிறைச்சி தடை என்று பேசிவரும் மோடியின் உண்மை முகம் குஜராத் அரசின் மாட்டிறைச்சி ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானத்தின் புள்ளி விவரத்தில் இருந்தே தெரியவரும். குஜராத்தில் 2001-02ஆண்டு 10,600 டன்னாக இருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி 2010-11ஆம் ஆண்டு 22,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 27 விழுக்காடு ஆகும். இந்திய தொழில் வர்த்தக மய்யம் கொடுத்துள்ள புள்ளி விவரப்படி மாமிசம் ஏற்றுமதியில் அதிக லாபம் பார்க்கும் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்கிறது, பால் பொருட்கள் உற்பத்தி பெருகி வரும் அதே வேளையில் மாமிச ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.
குஜராத்தில் சூரத், அகமதாபாத், வதோதரா, ஜாம் நகர், ராஜ்கோட் ஹப்பா, ஜூனாகட் போன்ற நகரங்களில் மாநக ராட்சியின் துணையுடன் மாட்டிறைச்சிக் கூடம் இயங்கிவருகிறது. இதற்கான அனைத்து உதவிகளும் அரசு மூலம் மாநராட்சிக்கு கிடைக்கிறது.
இங்கு ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்படுகின் றன. இதன் மூலம் மாநகராட்சிகளுக்கு அதிக வருமானமும் வருகிறது, உண்மை இப்படி இருக்க மோடி ஊர் ஊராகச் சென்று பொய்பேசிவருகிறார். பசுமாமி சத்தில் எளிதில் ஜீரணமாகி புரதத்துடன் கலக்கும் சொல்லுலோஸ் அதிகம் உள்ள தால் ஏற்றுமதியாளர்கள் பசுமாமிசம் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.
சிவசேனாவும் தான்
மும்பை மாநகராட்சியின் தேவ்நாட் மாட்டிறைச்சிக்கூடம் தான் ஆசியா விலேயே மிகப்பெரிய மாட்டிறைச்சிக் கூடமாகும். அதேபோல் யூனியன் பிரதேச வரவுசெலவு தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேவ்னார் மாட்டிறைச்சிக் கூடத்தின் வருவாய் உள்ளது. இங்கிருந்து ரஷ்யா மற்றும் சில அய்ரோப்பிய நாடு களின் இராணுவத்தினருக்குத் தேவை யான மாட்டிறைச்சிகளும் இந்திய இரா ணுவத்திற்கு தேவையான இறைச்சிகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியைத் தன்வசம் வைத்தி ருக்கும் சிவசேனா வெளியில் பசுப்பாது காப்பு பேசினாலும் தனது மாநகராட்சி யில் நடக்கும் இந்த மிருகவதைபற்றி மறைந்த சிவசேனைத்தலைவர் பால் தாக்கரே அவர்களும் பேசவில்லை, அதே போல் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரேயும் பேசவில்லை.
Read more: http://viduthalai.in/page3/78581.html#ixzz2yizGJiHz
புள்ளிகள் பேசுகின்றன
கடந்த 50 ஆண்டுகளில் பேச்சு வழக்கிலிருந்து காணாமற் போன மொழிகளின் எண்ணிக்கை 220.
சென்னைப் பெரு நகரில் மக்கள் தொகை 46.8 லட்சம் (2011 கணக்குப்படி) படித்தவர்கள் 90.3 சதவிகிதம்.
124 கோடி இந்திய மக்கள் தொகையில் ஏதோ ஒரு வகையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட் டோர் 10 சதவிகிதமாகும்.
நாள் ஒன்றுக்குச் சிறுநீரகப் பாதிப்பால் ரத்தச் சுத்திகரிப்பு (டயலி ஸிஸ்) செய்து கொண்டோர் எண் ணிக்கை 20 ஆயிரமாம்!
80 வயதுக்கு மேற்பட்ட வாக் காளர் தமிழ்நாட்டில் 9.27 லட்சம்.
உலக நாடுகளின் வரிசையில் குழந்தைகளுக்கான பசி குறியீட்டில் இந்தியாவுக்குள்ள இடம் 15.
இந்தியாவில் நபர் ஒருவருக்கும் தேவைப்படும் மின்சாரம் 800 யூனிட் டுகள் - மின்சார விளக்குகள் பயன்படுத்தும் மக்கள் 67 சதவிகிதம்.
16ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 3 லட்சம்.
உலகெங்கும் 2013இல் மேலும் 50 லட்சம் பேர் வேலையில்லாதார் கணக்கில் சேர்ந்துள்ளனர்.
Read more: http://viduthalai.in/page3/78582.html#ixzz2yizRVQVx
தாய்ப்பால் வங்கி
சென்னையில் விரைவில் இரண்டாம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட உள்ளது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் சுகாதார பயிற்சி நிறுவனத்தில் (மிஸீவீமீ ஷீயீ சிலீவீறீபீ பிமீணீறீலீ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. தற்போது, தனியார் மருத்துவமனையாகிய விஜயா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இந்த வார இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
பிறக்கும் குழந்தைக்கு புகட்டப்பட வேண்டிய தாய்ப்பால் மிகச் சிறப்பான உணவாகும். பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. தாய்க்கு பல காரணங்களால் பால்சுரக்காமல் உள்ளது. குறிப்பாக குறைப்பிரசவம், ஆரோக்கி யமில்லாத குழந்தைகளால் தாய்ப்பாலை அருந்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இதுபோன்ற தானே அருந்த முடியாத குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை வற் புறுத்தி அளிக்க மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது என்று விஜயா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் பொறுப்பாளராகிய அனில் குமார் கூறினார். தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் கொடையாக வங்கியில் அளிக்கலாம். அப்படிக் கொடுக்கப்படும் தாய்ப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வில் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிரிகளைக் களைவதற்கு சூடு படுத்தப்பட்டு, வங்கியில் பாதுகாக்கப் படும். ஆறு மாதங்கள் வரை வங்கியில் பாதுகாக்கப்படுகிறது என்று மருத்துவர் குமார் தாய்ப்பால் வங்கியின் பயன்குறித்து குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே கொல்கத்தா, குஜராத், உதய்ப்பூர் மற்றும் பூனா ஆகிய நகரங் களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதற்கு முன்ன தாகவே தாய்ப்பால் வங்கிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, செயல்படுத்த முடி யாமல் இருந்தது.
இதுதான் முதல் தனியார் மருத்துவ மனையில் தொடங் கப்பட்டுள்ள தாய்ப் பால் வங்கியாகும். குறைப் பிரச வத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (மிசிஹி) உள்ள குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியிலிருந்து அளிக்கப்படும்.
முறைப்படி தாய்ப்பாலை கொடை யாக அளிக்க விருப்பம் தெரிவிப்பவர் களின் தாய்ப்பால் மாதிரி எடுக்கப்பட்டு கிருமித்தொற்று, நுண்ணுயிரிகள் உள் ளனவா என்று ஆய்வு செய்யப்படும். கூடுதலாக சுரக்கும் தாய்ப்பாலை சேக ரித்து வைப்பதற்கு, தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தாய்ப்பாலைப் பெறுவதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் தாய்ப் பாலை அளிப்பதற்கும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறோம். தாய்ப்பாலை அளிக் கும் தாய்மார்கள் பட்டியலை பதிவு செய்கிறோம். தகுந்த விலையுடன் தாய்ப் பாலை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று மருத்துவர் குமார் கூறினார். எழும்பூர் குழந்தைகள் சுகாதாரப் பயிற்சி நிறுவனத்தின் பிறக்கும் குழந்தை களுக்கான பிரிவான நியூனாடாலஜி தலைவரும், பேராசிரியருமாகிய ஜெ.குமுதா கூறும்போது, எழும்பூரில் உள்ள தாய்ப்பால் வங்கி நன்றாக செயல்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை 800மிலியிலிருந்து ஒரு லிட்டர்வரை கொடையாகப் பெறுகி றோம். தீவிரசிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களிட மிருந்து தாய்ப்பாலைப் பெற்றுக் கொள்கிறோம் என்றார். மேலும் அவர் கூறும்போது, பாலின் பாதுகாப்பு பலமுறை செய்யப்படும் ஆய்வின்மூலம் உறுதி செய்யப்படுகிறது. குறைப்பிரசவத் தில் பிறக்கும் 1.00 கி.கி, 1.20 கி.கி. அளவில் எடை குறைந்த குழந்தைகளுக்கும், போதுமான அளவு பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
Read more: http://viduthalai.in/page5/78590.html#ixzz2yj0J8xZz
வேலை தேடி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!
விப்புல் பாண்டியா (பொதுச் செயலாளர், பங்கத்தன் மஸ்தூர் சங்கம், அகமதாபாத்); குஜராத்தில் வேலை இல்லாத் திண்டாட்டமே இல்லை என்பதுபோல சித்திரிக்கவே அரசு முனைகிறது. அதனால், வேலை இல்லாமல் இருப்பவர் களை எல்லாம் வெளி மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்தவர்களாக அது சித்திரிக்க முயல்கிறது.
வெளிமாநிலத்தில் இருந்து மட் டுமல்ல, வளர்ச்சி காணாத பகுதி களில் இருந்து அதிக வளர்ச்சி கண்டுவரும் சூரத், அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா போன்ற நகரங்களுக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான பலர் வேலை தேடி குடி பெயர்ந்து வருகிறார்கள்.
விவசாய நிலங்களை எல்லாம் அரசு தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டதால்...
நிலச்சுவான்தார்களுக்கு வேண்டு மானால் பணம் கிடைத்திருக்கலாம். விவசாயக் கூலிகள்எங்கே வேலைக் குப் போவார்கள்? ஆனால், அரசு அவர்களை கண்டு கொள்வதே இல்லை. நகர்ப்புறங்களில் ஆபத் தான கட்டுமான வேலைகளில் வேலை செய்பவர் களுக்குப் பணி பாதுகாப்பு இல்லை.
ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு தலைக் கவசம், ஷூ ஆகியவைகூட இந்த மாநிலத்தில் பல இடங்களில் வழங்கப்படுவது இல்லை. அதனால், கட்டட சாரம் சரிந்து தொழிலாளர் பலி, உயரத்தில் இருந்து கால் தவறி விழுந்து இருவர் பலி என்று தினம் தினம் இங்கே செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. அமைப்புசாரா தொழி லாளியைப் பொறுத்த மட்டில், அவன்தான் அவனது குடும்பத்துக்கு ஆதாரம்.
அவன் இப்படி திடீர் என்று இறந்துவிட்டால் அவனது குடும்பம் என்னாகும்? ஒரு தொழிலாளி உயிருடன் இருக்கும்போதே அவனது குழந் தைகள் படிக்க இங்கே வழியில்லை. இந்த நிலையில் அவன் இறந்து விட்டால், அவனது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்? இது போன்ற செலவுகளுக்காக தொழி லாளர் நலநிதி வரி என்ற பெயரில் அரசிடம் 500 கோடி ரூபாய் இருந்தும் அதில் இருந்துஒரு சதவிகிதத்தைக் கூட இந்த அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ கொடுப்பது இல்லை. இந்தப் பணம் முழுவதையும் அது செலவு செய்யம லேயேதான் வைத்திருக்கிறது. தொழிற்சங்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் இங்கு நசுக்கப்பட்டு வெகு காலம் ஆகி விட்டது.
- ஜூனியர் விகடன் 6.4.2014
Read more: http://viduthalai.in/page7/78598.html#ixzz2yj0V9O9Z
மோடி மனைவியின் மனக் குமுறல்!
தன்னை மிகவும் பிரபல மானவர் என்று உலகிற்கு தெரியும் வகையில் நடந்து கொள்பவர் மோடி, அதிலும் நான் சுயம்சேவகன்(ஆர் எஸ் எஸ் தொண்டன்) என்று எல்லா பொதுகூட்டமேடையிலும் பேசுவதை வழக்கமாக கொண்டு இருப்பவர். பொது வாக சுயம்சேவகர்கள் திரு மணம் செய்யக்கூடாது என்று விதிமுறை உண்டு. இதன் காரணமாக நரேந்திரமோடி உலகத்தாருக்கு திருமணமாகாதவர் என்ற பிம்பத்தையே ஏற்படுத்திவந்தார். சுமார் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டவர் தான் திருமணமானவர் என்று குறிப் பிடவில்லை. இவர் திருமணமானவர் என்று சொன்ன தகவல் எல்லாம் வதந்தி என்றும் நரேந்திரமோடி உறுதியான மனப்பான்மையுள்ள உண்மையான சுயம்சேவக் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தே 2013-மார்ச் நாக்பூரில் நடந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனுடைய உண்மையான விளக்கம் கடு மையான பிரம்மச்சரியத்தைக் கடை பிடிக்கும் திருமணமாகாத தொண்டர் என்பதாகும். கடந்த வருடம் நரேந்திர மோடி பாஜக பிரதமவேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரது திருமணம் குறித்த விவாதமும் துவங்கிவிட்டது, ஏற்கனவே 2008 ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் நரேந்திரமோடியின் மனை வியைப் பேட்டி கண்டு செய்திவெளியிட்டு பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த செய்தி அதிகம் பரவாமல் மறைக்கப்பட்டு விட்டது. இந்த வருடம் பெண்கள் தினம் அன்று நரேந்திரமோடியின் டீக்கடை விவாதம் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினம் குறித்த நரேந்திர மோடியின் பேச்சிற்கு தன்னுடைய மனைவியை சரியாக கவனிக்காதவர் பெண்களின் நலன் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்திருந்தது, மேலும் 2002ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது தான் திருமணமாகாதவர் என்று வேட்பாளர் பிரமாணபத்திரத்தில் எழுதியிருந்ததைக் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று வழக்கை தள்ளிவைத்துவிட்டது. இம்முறை ஆம் ஆத்மி தலைவர்களும் நரேந்திரமோடியின் திருமண வாழ்க்கை குறித்து பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். தனது திருமண விவகாரம் குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்த பிறகு தனது மவுனத்தைக் கலைத்து தான் திருமணமா னவர் என்று குறிப்பிட்டார் நரேந்திரமோடி.
நேற்று பாஜகவின் சார்பில் வதோதராவில் போட்டியிடும் நரேந்திர மோடி தனது வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் ஜசோதாபென் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
கடந்த 3 சட்ட மன்றத்தேர்தலின் போது தன்னை திருமணமாகாதவர் என்று குறிக் கும் விதமாக தனது பிரமாணப்பத்திரத்தில் திருமண பகுதியை நிரப்பாமல் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்டிருப் பதை நகலாக எடுத்து வதோதரா ஆட்சியாளர் அலுவலக சுவரில் யாரோ ஒட்டி விட்டனர். இதை சிலர் பார்த்த பின்பு மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்ட செய்தி இரவு செய்தி ஊடகங்கள் மூலம் பரவியது. ஆனால் இதுவரை ஆட்சியாளர் அலுவலக இணையதளத்தில் மோடியின் பிரமாண பத்திர தகவல் குறித்து எந்த தகவலையும் சேர்க்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு ஜசோதா பென் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த செய்தியின் தமிழாக்கம் “I am Narendra Modi’s Wife” | OPEN Magazine 2009
மார்ச்.
.”Joshodaben claims she was deserted and never given the privileges of a wife”...........
......
......நான் ஒரு சராசரி இந்தியப்பெண்ணிற்கு உண்டான மகிழ்ச்சிகளைக்கூட பெற முடியாத பாவப்பட்ட ஜென்மம் ஆகிவிட் டேன், எனது திருமணவாழ்க்கை துவக்கத் தில் இருந்தே பாலைவனமாகிப்போனது. மனைவிக்கான எந்த ஒரு அதிகாரமும் வழங்கவில்லை, மோடி அவர்கள் என்னை ஒரு மனைவியாகவே நினைக்கிறாரா இல்லையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார். இது பேட்டி கேட்கும் முன்பு கூறியவார்த்தை பேட்டி கொடுக்க வெளியே வந்தவரை மிரட்டிய பள்ளி நிர்வாகம், செய்தியாளர்களை விரட்டிவிட்டதுடன், சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பத்தி ரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பி இருக்கிறார்........
Read more: http://viduthalai.in/page8/78600.html#ixzz2yj1AEJJr
பூனைக்குட்டி வெளியில் வந்தது ஆர்.எஸ்.எஸின் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்பட்டதுதான் தேர்தல் அறிக்கை அறிக்கைத் தயாரிப்புக் குழுத் தலைவர் ஜோஷி ஒப்புதல்
டில்லி, ஏப்13- பாஜக வின் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டங்கள் இடம் பெற் றுள்ளன அதன் ஆலோச னைகளும் பெறப்பட்டன என்று டில்லியில் செய் தியாளர்களிடம் பாஜக தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி விரிவாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
"எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தா லும், அதற்கு முன், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின், அறிவுரையை கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு வரும், அந்த கட்சியின் தேர் தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளிமனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கலாச்சார அமைப்பு மட்டும் தான். இருப்பினும், தேச பக்தி, பண்பாடு விஷயங் களில் தலைசிறந்து விளங் கும் அமைப்பு அது. அந்த அமைப்பின் தாக்கம் பா.ஜ.க.வில் இருப்பதை பெருமையாகவே கருதுகி றோம். மஸ்தூர் சபா, கிசான் சபா என்று ஆர்.எஸ்.எஸ். சார்ந்த பல அமைப்பு களின் கருத்துகளை கேட்டு த்தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டது.
எந்தவொரு விஷயத் தில் இறங்குவதாக இருந் தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம் தான். அந்த அமைப்பின் வழிகாட்டுதலை ஏற்பதா, வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. தேர்தல் அறிக்கை உருவாக்கியதி லும் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப் பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நரேந் திர மோடிக்கு வாரணாசி தொகுதியை நான் விட்டுக் கொடுக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. நரேந்திர மோடி எங்கள் கட்சியின் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட வர். அப்படிப்பட்ட தலை வருக்கு தொகுதியை தர மறுப்பேனா? அவ்வளவு தூரம் நான் என்ன முட் டாளா? என்றார்.
Read more: http://viduthalai.in/e-paper/78652.html#ixzz2yofa4d2A
வெளிப்படைத் தன்மையும், கபடத் தன்மையும்
- குடந்தை கருணா
மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவாக யார் முன் வந்தாலும் அதற்கு திமுக கை கொடுத்து, கை குலுக்கி வரவேற்கும் என கலைஞர் பொதுக் கூட்டத்தில் கூறினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, திமுகவின் தலைவர் கலைஞர் சொன்ன செய்தி, இந்த தேர்தலில், மதசார்பின்மை, சமூக நீதி என்ற இரண்டு கொள்கையையும் முன் வைத்து, திமுகவும் தோழமை கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கொள்கைக்கு ஆதரவாக யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறினார்.
பாஜகவை திமுக விமர்சிக்கவில்லை என சிலர் வேண்டுமென்றே கூறிய நிலையில், தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து, கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய மதசார்பின்மையைக் குலைக்கும் கொள்கைகளை விமர்சித்து திமுக வெளிப்படையாகப் பேசி வருகிறது.
கம்யூனிஸ்டுகளை எந்த காரணமும் சொல்லாமல் கழற்றி விட்ட நிலையில், மதசார்பின்மை கொள் கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் திமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என கலைஞர் உள்ளிட்ட திமுக அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
திமுகவின் இந்த வேண்டுகோள் வெளிப் படையாக, கொள்கை அடிப்படையில் வெளியிடப் பட்ட வேண்டுகோள். மதசார்பின்மை கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், திமுக மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவினை வலுப் படுத்துவது இயற்கையானது; நியாயமானது.
அதே நேரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு எப்படி உள்ளது? கம்யூனிஸ்டுகள் எந்தக் காரணத்துக் காக விரட்டப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை ஜெயலலிதாவோ, அதிமுகவோ எந்த காரணத்தையும் சொல்லவில்லை; பாஜகவோடு, தேர்தல் முடிந்து கூட்டு வைத்துக்கொள்ள அதிமுக முடிவு செய்துதான் இத்தகைய நிலையை எடுத்துள்ளது என இப்போது கம்யூனிஸ்டுகள் காரணம் சொல்கிறார்கள். இதற்கும் ஜெயலலிதா எந்தப் பதிலையும் சொல்லவில்லை;
ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி யைப்பற்றியோ, பாஜக பற்றியோ ஒரு விமர்சனம்கூட இதுவரை சொல்லவில்லை; பாஜக தலைவர்களும், மோடி உட்பட, தமிழ் நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதா வையும் அதிமுகவையும் எந்த விமர்சனமும் செய்யவில்லை;
எதற்கெடுத்தாலும், கலைஞரைக் கேள்வி கேட் கும் ஊடகங்கள், ஜெயலலிதாவின் இந்த மவுனத் தைப்பற்றி அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை; மாறாக, சோ ராமசாமி மூலமாக கேள்வி பதில் என்கிற முறையில், பாஜக நிற்கும் இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வேட்பா ளர்களை ஆதரிக்காமல், அதிமுகவை ஆதரியுங்கள்.
அதிமுக வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு உதவிகரமாக இருக்கும் என கபடத் தனமாக, சோவை விட்டு இந்த செய்தியை சொல்லி யிருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வும், மோடியை முன்னிறுத்தும் பாஜகவும்.
மதசார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்த வெளிப்படையாக, நேர்மையாக ஆதரவு திரட்டும் திமுக அணிக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? அல்லது தங்களோடு கூட்டணி அமைத்துள்ள கட்சி களை காவு கொடுத்து, கள்ள உறவு வைத்துள்ள பாஜக வையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமா?
Read more: http://viduthalai.in/page-2/78650.html#ixzz2yofpSnaV
குடும்ப தர்மத்தையே காப்பாற்றாத மோடி நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? லாலு பிரசாத் கேள்வி
பட்னா ஏப்.13- தன் மனைவியை மறைத்து, குடும்பத் தர்மத்தையே காப்பாற்றத் தவறிய மோடி நாட்டை எப்படி காப்பாற் றுவார் என்ற வினாவை எழுப்பினார் லாலு பிரசாத். ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சிதலைவர் லாலு பிர சாத் - தலைநகர் பாட்னா வில் தனது கட்சி ஆதர வாளர்களுடன் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட் டம் நடத்தினார்.
கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகை யாளர்கள் பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் திருமணம் விவாதம் குறித்து கேள்வி கேட்டனர். குடும்ப தர்மம் காப் பாற்றுபவர் தான் தேசத்தின் தலைமை ஏற்க தகுதியான வர் என்றார் லாலு. நேற்று மாலை சமூக இணையதளத்தில் மோடி யின் திருமணவிவகாரம் குறித்து பதிலளித்த லாலு பிரசாத், மோடி போன்ற ஒரு முக்கியமான தலைவர் பல முறை அரசு விண்ணப்பங் களில் தனது திருமணத்தை மறைத்துவிட்டார்.
இம் முறை நீதிமன்ற தீர்ப்பின் படி வேறு வழியில்லாமல் தனக்கு திருமணமானதை யும், தனது மனைவி பெய ரையும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப தர்மமும் நாட் டைக்காப்பாற்றும் தர்ம மும் ஒன்றுதான் வீட்டிற் குத் தலைவனாக இருக் கிறவர். குடும்பத்தை சரி வர கவனிக்கவேண்டும்;
தனக்கு குடும்பம் உள் ளதையே மறைத்து இத் தனைக் காலம் வாழ்ந்தவர் எப்படி தேசத்தை காப் பாற்றும் பணியை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/page-2/78645.html#ixzz2yofzABkv
Post a Comment