தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஒன்றிணைந்த மதச்சார்பற்ற சமூக நீதி அணி இது!
- கொள்கையற்ற கூடாரம் எதிர் அணி!
- உதயசூரியன் சின்னம் உள்ள பொத்தானை அழுத்துங்கள்
- உங்கள் வீட்டு விளக்கு எரியும்-நாட்டின் இருளும் விலகும்
திராவிடர்
கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார். உடன்: திருவள்ளுவன்,
பெ. செல்வராசு, பேராயர் எஸ்றா சற்குணம், வடசென்னை தி.மு.க. பொறுப்பாளர்
ஆர்.டி. சேகர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மண்டல
செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்.
(சென்னை திருவொற்றியூர் - 14.4.2014)
திராவிடர்
கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார். உடன்: இரா.வில்வநாதன்,
செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, சேகர்பாபு (தி.மு.க.), துணைத் தலைவர்
கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் தஞ்சை செயக்குமார் முதலியோர் உள்ளனர்.
(சென்னை தம்புச்செட்டித் தெரு - 14.4.2014)
சென்னை, ஏப்.15- உதயசூரியன் சின்னத்திற்கு
வாக்களித்தால் நாட்டின் இருள் விலகி ஓடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி அவர்கள்.
திருவொற்றியூரிலும், மண்ணடியிலும்
நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நேற்று (14.4.2014) அவர் உரையாற்
றுகையில் குறிப்பிட்டதாவது:
இன்று பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்
களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாள்; தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட உரிமை
மறுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் பாடுபட்டது போலவே, வடபுலத்தில்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தக்
கால கட்டத்தில் அம்பேத்கர் அவர்களின் சிந்தனை மிகவும் தேவைப்படக்
கூடியதாகும்.
இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம்
என்று கூறிப் புறப்பட்டுள்ள மதவாத சக்திகளுக்கு அம்பேத்கர் அவர்களின்
கருத்தியல் என்பது சரியான எதிர்ப்புக் கருவியாகும் என்று மிகச் சரியான
துவக்கத்தோடு தொடங் கினார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி
அவர்கள்.
தி.மு.க.வின் கோட்டை
வடசென்னை மக்களவைத் தொகுதி என்பது
எப்பொழுதுமே திமுகவின் கோட்டையாகும் என்று குறிப்பிட்ட கழகத் தலைவர் கடந்த
கால வரலாற்றினை தொகுத்துக் கூறினார்.
மிசா கைதிகளாக சென்னை சிறைச்சாலையில்
இருந்தபோது ஏ.வி.பி. ஆசைத் தம்பி அவர்களிடம் தாம் சொன்ன கருத்தினை
நினைவூட்டினார். நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள்; அடுத்து
நீங்கள் நாடா ளுமன்றம் செல்ல வேண்டும்; அதற்குப் பொருத்தமான தொகுதி
வடசென்னை என்று தாம் சொன்னதையும், அதன் படியே ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள்
வடசென்னை உறுப்பினராக வெற்றி பெற்று, தனி ஒருவராக இருந்தே முத்திரை
பொறித்ததையும் பொருத்தமாக நினைவூட்டி, வடசென்னைத் தொகுதியைப் பொறுத்தவரை
தொழிற் சங்கத் தலைவர் செ. குப்புசாமி அவர்களைத் தொடர்ந்து பல முறை
வடசென்னையில் தேர்வு செய்யப்பட்டதையும், டி.கே.எஸ். இளங்கோவன் இந்த
வடசென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றதையும் நினைவூட்டி, நடக்கவிருக்கும்
தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வழக்குரைஞர் கிரிராஜன் மகத்தான
வெற்றி பெறுவார் என்று சொன்னபோது பலத்த கரஒலி!
தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம் ஏன் பிரச்சாரம் செய்கிறது?
தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம் ஏன்
தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்பதற்கும் திராவிடர்
கழகத் தலைவர் சரியான விடையைத் தந்தார்.
நடக்கவிருக்கும் தேர்தல் என்பது வெறும்
அரசியல் மாற்றமல்ல; அடுத்து வரும் நமது தலைமுறையைப் பாதுகாக்கும் தேர்தல்;
மதவெறியும், ஜாதி வெறியும் கைகோத்து வருகின்றன. பண பலம், இனபலம்,
பத்திரிகைப் பலம் இவற்றின் பின்னணியில் நடக்கவிருக்கும் தேர்தல் இது.
கொஞ்சம் ஏமாந்தால் எல்லாமே தலைகீழாக மாறக் கூடிய ஆபத்து இருப்பதால்
சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தேர்தல் பற்றி கவலைப்பட வேண்டிய
அவசியத்தில் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் கடந்த 31ஆம் தேதி
தொடங்கப்பட்ட தமது சுற்றுப் பயணம் ஏப்ரல் 22ஆம் தேதி வரை தொடர்கிறது என்று
குறிப் பிட்டார்.
வெற்றி முகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.
தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி முகத்தில்
இருப்பதை அழுத்தமாக அவர் குறிப்பிட்டபோது கூடியிருந்த ஆயிரக்கணக்கான
மக்களின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி ரேகை படர்ந்ததைக் காண முடிந்தது.
சென்னை திருவொற்றியூர், தம்புசெட்டித்
தெரு (மண்ணடி) ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்
கூட்டங்களில் நேரத்தின் நெருக்கடியை உணர்ந்து பந்தயக் குதிரை வேகத்தில்
கருத்துக்களையும், தகவல்களையும் வாரி வழங்கினார்.
இது கொள்கை கூட்டணி
இந்தக் கூட்டணி தான் கொள்கைக் கூட்டணி
சமூக நீதிக்கான அணியாகும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் -
சிறுபான்மையினர் ஒன்றிணைந்து நிற்கும் கூட்டணியாகும். மற்ற தரப்புகளில்
உள்ள அணி கொள்கை அணியல்ல - மாறாக சீட்டணி என்று திராவிடர் கழகத் தலைவர்
சொன்னபோது ஒரே ஆரவாரம்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்,
சிறுபான்மை யினர் ஒன்றிணைந்து சமூகநீதி அணியாக கலைஞர் தலைமையில்
ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். கருத்து வேறுபாடுகளுக்கு இந்த அணியில் இடம்
இல்லை.
அ.இ.அ.தி.மு.க.வும், காங்கிரசும் தனியாக
நிற்கின்றன. இன்னொரு அணி இருக்கிறது. அதில் பிஜேபி பா.ம.க., தே.மு.தி.க.,
மதிமுக, அய் ஜே.கே. என்ற கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இவைகளிடையே கொள்கை
உடன் பாடுகள் உண்டா? ஒருவர் கொள்கையை இன்னொருவர் ஏற்றுக் கொள்வார்களா?
முரண்பட்ட கொள்கைகள் அந்தக் கூட்டணியில்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனியீழம்
பேசுகிறார். அப்படி ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொன்ன போது, ஈரம் காயுமுன்
பி.ஜே.பி.யின் முன்னாள் தலைவர் வெங்கையநாயுடு பதிலடிகொடுக்கிறார். தனியீழம்
எங்களுக்கு உடன்பாடானதல்ல, இலங்கை இன்னொரு நாடு - அதன் இறையாண்மையில்
நாங்கள் தலையிட மாட்டோம் என்று சொல்லி விட்டாரே!
பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் ஈழத்
தமிழர் பற்றியோ தமிழக மீனவர்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவே இல்லை.
தமிழ்நாட்டுக்கென ஒரு தேர்தல் அறிக்கை அதற்குப் பின்னர் வெளியிட்டுள்ளது
பிஜேபி. அதிலும் அந்த நிலைதான்.
(ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியெல்லாம் அடுத்த பிஜேபி வெளியிடவிருக்கும் துணைத் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்
என்று திருவாளர் இல. கணேசன் அய்யர்வாள் குறிப்பிட்டு இருந்தாரே - அப்படி
வெளியிட்டப் பட்டியலிலும் தமிழ்நாடு சம்பந்தமான எந்தக் குறிப்பும் இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது; இதனை திராவிடர் கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்)
மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் இப்படி
தமிழ்நாடு தொடர்பான எந்த உரிமைபற்றியும் பிஜேபி தேர்தல் அறிக்கையில்
காணப்படாத நிலையில், அதனோடு கூட்டுச் சேர்ந்த மார்க் கெட்டிங் ஏஜெண்டுகளை
நினைத்தால் வெட்கப்பட வேண்டியுள்ளது - இன் னொரு வகையில் பரிதாபமும்பட
வேண்டியுள்ளது.
பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் ராமன்
கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய
அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சிறப்பு சலுகைகள் நீக்கம் குறித்து பிஜேபி
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தும், பிஜேபியின்
மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் அதுபற்றி கேள்வி எழுப்பவில்லையே ஏன்? கொள்கையற்ற
கூட்டணி என்பதற்கு இது ஒன்று போதாதா?
பி.ஜே.பி.யை விமர்சிக்காதது ஏன்?
பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி இப்படி
என்றால், அ.இ.அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுகிறதே. அக்கட்சியின் பொதுச்
செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காங்கிரசைக் கடுமையாக கண்டித்துப்
பேசுகிறார்; திமுகவை பற்றி வசை மாரி பொழிகிறார் ஆனால் இவர்கள் தமது கட்சி
வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் பிஜேபியைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட
விமர்சிக்கவில்லையே ஏன்?
அ.இ.அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும்
இடையே இருக்கும் மறைமுகக் கூட் டணியைதான் இது வெளிப்படுத்துகிறது.
இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறோம்; திமுகவும் குற்றம்
சுமத்தியிருந்தும் இதுவரை அம்மையார் ஏன் வாய்த் திறக்கவில்லை? மவுனம்
சம்மதத்துக்கு அடையாளம் என்று தானே பொருள்?
இரகசியம் அம்பலமானது
ஆர்.எஸ்.எஸ்.காரரும், ஜெயலலிதா அவர்களின்
ஆலோசகருமான திருவா ளர் சோ ராமசாமி இவ்வார துக்ளக் ஏட்டில் (16.4.2014)
கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த மறைமுகக்
கூட்டை உறுதி படுத்துகிறது.
(கேள்வி: பா.ஜ.க. நிற்காத தொகுதி களிலாவது
எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடலாம் என்று எங்களுக்கு நல்ல ஆலோசனையைக்
கூறவும் (மழுப்பலான பதிலைக் கூறி நழுவ வேண்டாம்)
சென்னையைச் சேர்ந்த தோழர் ஒருவரின் கேள்விக்கு சோ என்ன பதில் சொல்லியிருக்கிறார்?
இதில் குழப்பத்திற்கே இடம் இல்லை.
பா.ஜ.க., போட்டியிடாத தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதுதான்
நல்லது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய அது உதவி செய்யும். மாறாக
பா.ஜ.க.வினர் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் அது
அவர்களிடையே வெற்றியை உறுதி செய்யாது. ஓட்டுப் பிளவைத் தான் ஏற்படுத்தும்
என்று கூறியுள்ளாரே.)
ஜெயலலிதா பி.ஜே.பி.யைப்பற்றி பேசாததும்,
பி.ஜே.பி. ஜெயலலிதாவைப் பற்றியும் ஏன் விமர்சிப்பதில்லை என்பது இப்பொழுது
விளங்கி விட்டது அல்லவா! இதன் மூலம் மக்களை ஏமாற்றும் நயவஞ்சகம் இதற்குள்
ஊடாடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது!
நீலகிரியில் பிஜேபி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்று கூறிக் கொண்டாலும் விலை போயிருக் கிறது. இலை விலையா என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது.
இந்த சூழலில் பிஜேபி கூட்டணிக்காக
பெரும்பாடுபட்ட காந்தீய மக்கள் கட்சித் தலைவர் என்ன சொல்லுகிறார்? நீலகிரி
தொகுதியில் பிஜேபியினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று
கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? இவர்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்
இருக்கிறது என்பது விளங்கவில்லையா? திமுகவையும், அ.இ.அ.தி.மு.கவையும்
தோற்கடிப்பது தான் தமது நோக்கம் என்று தோள் தட்டியவரின் யோக்கியதை இந்த
லட்சணத்தில் இருக்கிறது. கூட்டணியில் ஒரு நேர்மை இல்லை என்பது இதன் மூலம்
விளங்கவில்லையா?
அவர்களுக்குள்ளேயே குடைச்சல்!
மோடி அலை வீசுகிறது, மோடி அலை வீசுகிறது
என்றார்கள். அலை ஒன்றும் வீசவில்லை; மோடிதான் வலை வீசிக் கொண்டு அலைகிறார்.
ஆங்காங்கே பதவிப் பசி எடுத்துக் கிடக்கிறவர்களைத் தேடி வலை வீசுகிறார்.
அலையா வலையா?
மோடி அலை வீசுகிறது என்றால் மோடி ஏன் அலைய
வேண்டும்? மோடியை நோக்கித் தானே மற்றவர்கள் வர வேண்டும். ஒரு நடிகரை
நோக்கி ஏன் ஓடுகிறார் மோடி!
மோடியே ஏன் இரண்டு இடங்களில் போட்டியிட வேண்டும்? என்ற கேள்வி களுக்கு இதுவரை பதில் இல்லையே!
இப்பொழுது அவர்களுக்குள்ளேயே மோதல்! மோடி
அலை என்றெல்லாம் கிடையாது; பிஜேபி அலைதான் உண்டு என்று பி.ஜே.பி.யின் மூத்த
தலைவர் களுள் ஒருவரும்; பிஜேபி தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவருமான முரளி
மனோகர் ஜோஷி வெளிப்படையாகவே கூறி விட்டாரே!
1992 திரும்ப வேண்டுமா?
தேர்தலுக்கு முன்பாகவே இவ்வளவுக்
குளறுபடிகள். இவர்கள் வெற்றி பெற்றால் குழப்பம்தான் விஞ்சும். 1992
டிசம்பரில் பாபர் மசூதியை இடித்தார்கள் 22 ஆண்டுகள் ஓடி விட்டன.
பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் எல்லாம் இதில் குற்றவாளிகள்; ஒழுங்காக
வழக்கு நடத் தப்பட்டு இருந்தால் இவர்கள் எல்லாம் வெளியில் நடமாட முடியாது.
தேர்தல் அறிக்கையில் மீண்டும் அந்தப்
பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். நாடெங்கும் மதக் கலவரம்
நடக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் அண்ணன் தம்பி களாக மாமன் மச்சானாகப் பழகி வருகிறார்கள்.
1992 டிசம்பரில் பாபர் மசூதி
இடிக்கப்பட்டபொழுது இந்தியா பூராவும் மதக் கலவரம் வெடித்தது; அந்த நேரத்
திலும் அமைதிப் பூங்காவாக இருந்தது தமிழ்நாடு மட்டும்தான்., அதற்குக்
காரணம் தந்தை பெரியார் இந்தப் பூமியைப் பக்குவப்படுத்தியதுதான் என்று ஊட
கங்களே கூட எழுதின.
இந்த நிலையையெல்லாம் சீர் குலைத்து நாடு
எங்கும் ரத்த ஆறு ஓட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்கு நாம் இடம்
கொடுக்கக் கூடாது. இந்தக் கண்ணோட்டத்தில் தான் நாங்கள் சொல்லுகிறோம். நடக்க
இருக்கும் தேர்தல் நமது தலைமுறையைப் பொறுத்த ஒன்று என்று கூறுகின்றோம்.
இந்த வகையில் திராவிடர் கழகத்துக்கு சமுதாய பொறுப்பும், கவலையும்
இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
90 வயதிலும் கலைஞர் சுற்றுப் பயணம்!
மதவாதத்தை எதிர்த்தும், சமூக நீதியை
வலியுறுத்தியும் சிறுபான்மை மக்களும், தாழ்த்தப்பட்டோரும்,
பிற்படுத்தப்பட்டோ ரும் ஒன்றிணைந்துள்ளோம். எனவே நமது வெற்றி
உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
18 வயது உள்ள இளைஞர்கள் இணைய தளங்களில்
மொய்த்துக் கிடக் கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் உண்மை நிலையை எடுத்துக் கூற
வேண்டும். கலைஞர் 90 வயதில் சுற்றுப் பயணம் செய்து மக்கள் மத்தியிலே
பிரச்சாரம் செய்து வருகிறார். பேராசிரியரும் சுற்றுப் பயணம் செய்து
வருகிறார். 95 வயதிலும் தந்தை பெரியார் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டு
இருக்கவில்லையா?
நாம் மக்களைச் சந்தித்துக் கொண்டு
இருக்கிறோம் மக்களோடு மக்களாக இருக்கிறோம் - சிலரோ ஆகாயத்தில் பறந்து
கொண்டு இருக்கின்றனர். மக்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது
தேர்தல் மூலம் தெரிந்து விடும்.
அங்கம் வகிப்பதுபற்றி விளக்கம் கூறுவாரா?
ஆரம்பத்தில் அம்மையாரின் பிரச்சா
ரத்திற்கும், பிற்பாடு பேசும் பேச்சுக்கும் இடையே முரண்பாடுகள் உண்டு.
மத்தியில் அங்கம் வகிப்பது பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.
அப்படிப் பார்த்தாலும் அதனைத்
தெளிவுபடுத்த வேண்டாமா? அங்கம் வகிக்கும் அந்த அணியின் தலைவர் யார்? அதில்
யார் யார் இடம் பெறு வார்கள்? அந்தக் கூட்டணியின் கொள்கை என்ன என்று வெளிப்
படையாகத் தெரிவித்து அல்லவா வாக்குக் கேட்க வேண்டும்? அப்படி நடந்து
கொள்ளா விட்டால் ஏதோ சூழ்ச்சியாகவும் ரகசியமாகவும் திட் டத்தை மனதில்
வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இதில் வாக்காளர்கள் ஏமாந்து
விடக் கூடாது.
வரும் 24ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச்
சென்று உதயசூரியனுக்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வெளிச்சம்
வரும். அந்த வெளிச்சம் வெளி வந்தால் வீட்டிலும் விளக்கு எரியும்; நாட்டைப்
பீடித்த இருளும் நீங்கும்.
2004இல் தமிழ்நாடு 40-க்கு 40 என்ற
முடிவைக் கொடுத்தது. அந்த நிலை மீண்டும் திரும்ப வேண்டும் அப்படி
திரும்பும்போது கலைஞர் சுட்டிக் காட்டுபவர்தான் இந்தியாவின் பிரதமர்; சமூக
நீதிக் காவலர் வி.பி.சிங் யார்? கலைஞரால் அடையாளங் காட்டப் பட்டவர்தானே?
மத்தியில் அங்கம் வகித்த திமுக சாதிக்கவில்லையா?
அம்மையார் கேட்கிறார்; மத்தியில் திமுக இருந்தபோது எதைச் சாதித்தது என்று கேட்கிறார்.
பெண்களுக்குச் சொத்துரிமை வர வில்லையா?
குடும்பப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வரவில்லையா? மண்டல் குழுப்
பரிந்துரை அமலாக்கப்பட வில்லையா? ரூ.2427 கோடியில் சேது சமுத்திரத் திட்டம்
வரவில்லையா? அந்தத் திட்டம் நிறைவேறும் ஒரு கால கட்டத்தில் உச்சநீதிமன்றம்
சென்று முடக் கிய அம்மையாரா இந்தக் கேள்வியைக் கேட்பது?
துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும்
பாலம் திட்டத்தை திமுக கொண்டு வரவில்லையா? அதனை முடக்கும் வேலையைச்
செய்தவர்தானே செல்வி ஜெயலலிதா.
கறுப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்
இவற்றையெல்லாம் மக்கள் மறந் தாலும்
கறுப்புச் சட்டைக்காரன் காவலுக் குக் கெட்டிக்காரன் - நினைவூட்டிக் கொண்டே
இருப்பான் என்று குறிப்பிட்டார்.
--------------------------"விடுதலை” 15-04-2014
29 comments:
மோடி பற்றி கலைஞர் கருத்து
சென்னை, ஏப்.15- திமுக - அதிமுக பற்றி மோடி தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:
செய்தியாளர்: நேற்றைய தினம் மோடி ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததைப் பற்றி, ரஜினிகாந்த் அவரை நல்ல நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர்: ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ நோ கமெண்ட்ஸ், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
செய்தியாளர்: இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?
கலைஞர்: நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.
செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?
கலைஞர்: அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகி விட்டது. ஆகவே எங்களைச் சாடுகிறார்கள்.
செய்தியாளர்: முதன் முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சி களுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர்: தமிழ்நாட்டில் முதன் முதலாக பிரச் சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன் முதலாக வெளியிட் டிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை.
இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/78726.html#ixzz2z0KhxsRx
சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீது பவார் தாக்கு!
டில்லி.ஏப்.15- மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவ ருமாகிய சரத் பவார் சமூக வலைதளமான டிவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அப்பதி வில் சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப் பிட்டு, சிலர் ஹிட்லராக வருவதற்கு கனவு காணு கிறார்கள் என்று தாக்கி உள்ளார்.
காங்கிரசே இல்லாத நாடாக இந்தியா வரும் என்று மோடி கூறியிருந்தார். பவார் அதைக்கண்டித்துக் கூறும்போது, மனநல மருத் துவமனையில் இருக்க வேண் டியவர் என்று சாடினார்.
தற்போது சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஹிட்லராக உருவாக கனவு காண்கிறார் கள். அப்படிப்பட்ட சக்தி களை வெற்றிபெற அனும திக்கக் கூடாது. அப்படிப் பட்டவரின் முயற்சிகளை நசுக்கிட வேண்டும் என் றார். மராட்டிய மாநிலத்தில் விதர்பாவில் தொடர்ச்சி யான இரு கூட்டங்களில் மோடி பேசும்போது, விவ சாயிகளைப் பாதுகாக்க வில்லை என்று பவார்மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.
அதற்குப் பதிலடியாக பவார், நாம் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்று கூறுகிறோம். ஆனால், பாஜக தலைவர் கள் தனிப்பட்ட முறையில் பெண்களை கேலிப் பொரு ளாக்குகிறார்கள். நாட்டை எப்படி அவர்கள் நடத்து வார்கள்? என்று கேட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கை, காங்கிரசு தேர்தல் அறிக் கையிலும் நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மோடியின் வரலாறு குறித் தும், அறிவு குறித்தும் கேலி செய்துள்ளார். காந்தி ஒத் துழையாமை இயக்கத்தை அகமதாபாத்திலிருந்து தொடங்கியதாக கூறாமல், வார்தாவிலிருந்து தொடங் கினார் என்றாரே என்று கேலி செய்துள்ளார். பவார் கட்சியான தேசியவாதக் காங்கிரசுக் கட்சி கடந்த பத்து ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணியான காங்கிரசு அணியில் 1999லி ருந்து அங்கம் வகித்து வருகிறது.
-ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14-4-2014, டில்லி பதிப்பு
Read more: http://viduthalai.in/e-paper/78727.html#ixzz2z0L42SVv
இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின் குரல்!
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இடையில் எட்டு நாள்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இயற்கைத் தட்ப வெப்ப நிலையோடு போட்டிப் போட்டுக் கொண்டு அனல் பறக்கிறது.
வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர். தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று இரு கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் திரண்டு அவர் உரையைக் கேட்கிறார்கள்.
இவருடைய கருத்தும், உரையும் வித்தியாசமாகவே இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலின் தனித் தன்மை என்ன? என்பது குறித்துத் தமக்கே உரித்தான ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.
ஒரு காலத்தில் ஜன சங்கமாக இருந்த அமைப்புதான் இன்றைய பாரதீய ஜனதா கட்சி; இதற்கு முன் தனது இந்துத்துவா திட்டத்தை இலை மறை காயாகத் தான் வைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற அவர்களின் தாய் நிறுவனம் பின்புலத்தில் இருந்தது. நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அது முன்னுக்கு வந்து, பிஜேபியைக் கட்டளையிடும் இடத்திற்கு நகர்ந்துள்ளது.
பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கி விடும். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷியே அந்த உண்மையைப் பட்டாங்கமாய் ஒப்புக் கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் ஆலோசனைகளின்படிதான் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.
அதன் காரணமாக ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் இவை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இதனையும் தாண்டி ஆர்.எஸ்.எஸின் முக்கிய கோட்பாடான பசுவதைத் தடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பசு பாதுகாப்புக்கென்று தனித் துறையே உருவாக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கென்றுள்ள சிறப்புச் சலுகைகளும் மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியம் என்கிற ஆர்.எஸ்.எஸின் அடிநாதக் கொள்கை என்பதை அரங்கேற்றக் கூடிய ஒரு திட்டத்தோடு தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்தக் கோணத்தில் தான் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் வழக்கம் போல வந்து போகும் தேர்தல் அல்ல; நமது தலை முறையைப் பாதிக்கச் செய்யக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன.
குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைத்து இந்தத் தேர்தலைப் பார்க்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நாட்டில் மதக் கலவரங்களைத் திட்டமிட்டு அது நடத்தி வந்துள்ளது.
நாடு தழுவிய அளவில் மதக் கலவரங்களின் பின்னணியில் சங்பரிவார் இருந்திருக்கிறது என்பதை இந்தியாவின் உள் துறையே சொல்லியிருக்கிறது. காவி பயங்கரவாதம் என்ற ஒரு சொலவடையையே கூட உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் சொன்ன துண்டு.
மாலேகான் குண்டுவெடிப்பைக் கவனித்தால் சங்பரிவார்க் கும்பல் இந்திய இராணுவம் வரை ஊடுருவி இருப்பதை அறிய முடிகிறது. இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி மருந்தை இவர்கள் கையாண்டுள்ளனர். இது சாதாரணமானதல்ல; மிகப் பெரிய சதித் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே மிகப் பெரிய சதித் திட்டத்தை வகுத்து நாட்டில் கலவரத்தைச் செய்துள்ளது மதவெறிப் பிடித்த ஒரு கும்பல் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் எப்படி யெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸின் பாடத் திட்டங்கள் இடம் பெற்று விட்டன. மனு தர்மத்தைப் பாடமாக வைக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அரசு நிருவாகத் துறைகளிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி விட்டன. இராணுவத் துறையிலும் பெரும் அளவுக்கு ஊடுருவி விட்டதாக கப்பல் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் கூறியுள்ளார்.
ஏதோ வாக்குச் சாவடிக்குள் சென்று ஒரு பொத்தானை அழுத்துகிறோம் என்ற சம்பிரதாயக் கடமை என்று நினைக்காமல், இந்தியாவின் எதிர் காலத்தையே அச்சுறுத்தும், குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைக்கும், சமூக நீதிக்கும் எதிரான சக்திதான் பிஜேபி என்பதை மனதிற் கொண்டு அதனையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சி களையும் அடையாளம் கண்டு, ஒரே கல்லால் பல காய்களை வீழ்த்தும் வாக்களிப்புக் கடமையைச் செய்ய வேண்டும்; திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பிரச்சாரம், வேண்டுகோள் தமிழ்நாட்டு அளவில் இருந்தாலும் - இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படுவதாகும்.
Read more: http://viduthalai.in/page-2/78730.html#ixzz2z0LO7v7r
நிழல் யுத்தம்?
ஒரு வழியாக, ஜெயலலிதா பாஜகவை கண்டித்துவிட்டாராம்; ஓட்டு போடாதீர்கள் என்றும் சொல்லி விட்டாராம். கர்நாடகத்தில் காவிரி தண்ணீர் விடுவதற்கு, பாஜக, காங் கிரஸ் இரண்டுமே துரோகம் செய்து விட்டதை நேற்றுதான் கண்டுபிடித்தது போல எதிர்ப்பு காட்டுகிறார் ஜெயலலிதா. உடனே, மோடி சும்மா இருப்பாரா? ரஜினியை சந்தித்து டீ சாப்பிட்டுவிட்டு வந்தவர், தமிழ் நாட்டில் அதிமுக, திமுக இரண்டுமே அவர்களுக்குள் சண்டை போடுவதைத்தான் செய்கிறார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை என சொல்லிவிட்டார்.
எல்லோரும் சொன்னீங்களே. இருவரும் ஒருவரை ஒருவர் இது வரை தாக்கிப்பேசவில்லை என்று. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஜெய லலிதாவும் பாஜகவை கண்டித்து விட்டார்; மோடியும் அதிமுகவை கண்டித்து விட்டார்.
சரி; திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அதிமுக முடக்குகிறது என்பது ஊரறிந்த செய்தி. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக எப்போது முடக்கியது. அதிமுக புதிதாக ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை என்பதும் உண்மை. இரண்டையும் ஒரே தட்டில் வைத்து மோடி பேசு கிறார். இங்கே வைகோ, ராமதாஸ் இருவரும் கூறும் அதே கருத்தைத் தான் மோடியும் சொல்லி இருக்கிறார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.
ஆட்சிக்கு வந்து மூன்றாண் டுகளில், ஜெயலலிதா ஒரு உருப்படி யான திட்டமும் கொண்டு வர வில்லை; சொத்துக்குவிப்பு வழக்கில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது அரசு வழக்கறிஞரால் ஆதாரத்துடன்;
முந்தைய பாஜகவின் ஆட்சிக்கு இடையில் ஆதரவை விலக்கியது என எதைப்பற்றியும் பேசாமல், திமுகவும், அதிமுகவும் ஒன்று என்பது போல போலியாக ஒரு அதட்டலை விட்டுச் சென்றுள்ளார் மோடி.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ராமர் கோவில், 370 பிரிவு, பொது சிவில் சட்டம் இதைப் பற்றி ஜெயலலிதாவின் நிலை என்ன? ஏற்றுக்கொள்கிறாரா அல்லது எதிர்க் கிறாரா? என்று சொல்லவில்லை.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி ஜெயலலிதா எதுவும் பேசவில்லை.
மாறாக, கர்நாடகத்தில் காவிரி தண்ணீர் பிரச்சினைப்பற்றி பாஜகவின் நிலைப்பாட்டைப்பற்றி இப்போது பேசுகிறார். கர்நாடகத்தில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான் என்று கூறும் ஜெயலலிதாவிற்கு ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும்.
இதே கர்நாடகத்தில் ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று எஸ்.ஆர். பொம்மை முதல்வராக இருக்கிறார். அதே ஜனதா தளத்தைச் சேர்ந்த வி.பி.சிங் மத்திய அரசில் பிரதமராக உள்ளார். தமிழ் நாட்டில் கலைஞர் முதல்வராக உள்ளார். கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, காவிரி நடுவர் மன்றம் அமைத்திட, எஸ்.ஆர். பொம்மை எதிர்ப்பையும் மீறி, வி.பி.சிங் அமைத்தார். அத்தகைய வி.பி.சிங் ஆட்சியை கண்டித்தவர் ஜெயலலிதா; வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது பாஜக ஆட்சி.
மோடியும், ஜெயலலிதாவும், இத்தகைய நிழல் யுத்தம் நடத்துவது தேர்தலுக்காகத்தான் என்பதுகூடவா தெரியாது மக்களுக்கு?
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/78733.html#ixzz2z0LY2t3D
மூட மக்கள்
ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
- (விடுதலை, 24.9.1950)
Read more: http://viduthalai.in/page-2/78728.html#ixzz2z0LfXMr2
பி.ஜே.பி. அணியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டா? வேலூர் - அரக்கோணம் தொகுதிகளில் தமிழர் தலைவர் உரை
வேலூர், ஏப்.15- பி.ஜே.பி. அணியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டா? என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி களில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து 13.4.2014 அன்று தமிழர் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
நேற்றைக்குக்கூட தருமபுரியில் பிரச்சாரம் செய்து விட்டுதான் வந்தேன். அங்கு ஒருவர் இருக்கிறார். அவர் அந்த தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு கிளம்புவ தாக இல்லை. காரணம், தன் மகனை எப்படியாவது, என்ன செய்தாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, பாவம் சிரசாசனம் போட்டு இருக்கிறார். சிரசாசனம் என்றால் என்ன? என்பது உங்களுக்கு தெரியும். தலைகீழ் நின்று கொண்டிருக்கிறார். எதை வேண்டுமானாலும், செய்வேன் என்கிறார். இவர்கள் எல்லாம் ஒத்துப்போவதாக தெரியவில்லை. எப்படி ஒத்துப்போகமுடியும்? சர்க்கஸ் கம்பெனியில் நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்களே!
திமுக மக்களுக்கான கூட்டணி - சர்க்கஸ் கூடாரமல்ல
வேலூரில் முன்பு சர்க்கஸ் கூடாரம் எல்லாம் போட்டு இருப்பார்கள். அதிலே ஒரு விசித்திரமான காட்சி இருக் கும். புலி வந்து நிற்கும், ரிங் மாஸ்டர் கையில் சாட்டை யோடு வந்து நிற்பார். கூண்டு திறந்தவுடனேயே! புலி மேல் ஆட்டுக்குட்டி நிற்கும். எல்லோரும் கைதட்டி மகிழ்வார்கள். அது காட்சிக்காக தவிர, அதை நீங்கள் உண்மையாகவே நம்ப முடியுமா? புலியும் - ஆடும் அவ்வளவு சினேகிதர்கள் ஆகிவிட்டார்கள் என்றால் நம்ப முடியுமா? முடியாது.
காரணம், ரிங் மாஸ்டர் கையில் இருக்கிற சாட்டை இருக்கிறது பாருங்கள்; அதைப் பார்த்தவுடன் அவை அந்த மாதிரி இருக்கும். ஒருவேளை புலி சைவமாகி விட்டதோ; அதனால் இரண்டு பேரும் நண்பர்களாக ஆகிவிட்டார்களோ! என்று இரண்டையும் ஒன்றாக விட்டுவிட்டுப் போனால் என்ன ஆகும்.
அதே மாதிரிதான் இந்த கூட்டணி. அப்படி சர்க்கஸ் கம்பெனியின் கூடாரத்தில் இருக்கிற கூட்டணி போல இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியான - இந்தக் கூட்டணி (திமுக) மக்களுக்காக இருக்கிற கூட்டணி.
மோடி அலை வீசுகிறது, அலை வீசுகிறது என்று சொல்கிறார்களே! அது உண்மையா? என்று செய்தி யாளர்கள் என்னிடம் கேட்டார்கள். செய்தியாளர்களிடம் நான் சொன்னேன்.
எங்கும் மோடி அலை வீசவில்லை. எங்கும் மோடி அலைந்து கொண்டு இருக்கிறார். காலையில் வடகிழக்கு மாநிலத்தில் இருப்பார். மாலையில் வண்டலூரில் இருப் பார். அதே மாதிரி அடுத்த நாள் பஞ்சாபிலே இருப்பார். இன்று காலையில் டில்லியில் இருந்தார். மாலையில் சென்னைக்கு வந்திருக்கிறார்.
மோடி அலை வீசினால், அவர் ஏன்? இப்படி அலைந்து கொண்டு இருக்கவேண்டும்.
மோடி பிரதமர் வேட்பாளர். மோடிக்கு நாற்காலி தயாராகி விட்டது என்று மோடிக்கு மார்க்கெட்டிங் ஏஜெண்டாக இருக்கிறவர்கள் சில பேர் சொல்வார்கள். இப்போது புதிதாக நிறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் இப்போது பிரமாதமாகப் பேசுகிறார்கள். மோடிக்கே தெரியாத உண்மைகளை பேசுகிறார்கள். மோடியை நிறுத்தி வைத்திருக்கின்றதே ஆர்.எஸ்.எஸ்.க்குக்கூட தெரியாத உண்மையை பேசுகிறார்கள்.
1. மோடி அலை வீசினால், அவர் ஏன் இப்படி அலைந்து கொண்டிருக்கவேண்டும்?
2. மோடி அலை வீசினால், ஏன் இரண்டு தொகுதிகளில் மோடி நிற்க வேண்டும்?
3. இப்போது பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடிய வருக்கு அலை அடித்தது என்றால், எல்லாரும் அவரிடம் தானே செல்வார்களே தவிர, அவர் மற்றவரிடம் பேசுவாரா? போவாரா? ஒரு சினிமா நடிகரைப் பார்க்க வீட்டிற்கே போய் விட்டார். அவர் வாய்ஸ் (குரல்) கொடுப்பாரா? கொடுக்க மாட்டாரா? என்பதை பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கூட்டணியில் மோடி அலை வீசுகிறது என்றால், ஏன் பாண்டிச்சேரியில் கூட்டணி உடையவேண்டும் - அவர்களுக்கே வெற்றியில் சந்தேகம் இருக்கிறது - அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.
கடைசி நேரத்தில் என்ன செய்தாவது வெற்றியைப் பெற மாட்டோமா என்று அங்குமிங்கும் அலைகிறார் கள். மோடி அலை வீசினால் ஏன் பாண்டிச்சேரியில் கூட்டணி உடைந்தது?
இராஜ்நாத் சிங் இங்கு வந்து கை தூக்கி இருந்தது போன்று படம் எடுத்து இருந்தார்கள்.
பாண்டிசேரியில் - மோடி அலை இல்லையா?
அதேபோன்று தமிழ்நாட்டுக்கும், பாண்டிச்சேரிக்கும் சேர்ந்துதான் 40-40 தொகுதி பிரித்தார்கள்- இராஜ்நாத்தும் மற்றவர்களும். பிரசவம் நடந்த மாதிரி. சுகப் பிரசவம் கூட இல்லை. சிசேரியன் மாதிரி அந்த ஆபரேசன் நடந்தது. ஆனால், பிள்ளை பேசவில்லையே.
பாண்டிச்சேரிக்கும் சேர்த்துதானே 40-க்கும் கூட்டணி என்று கையெழுத்து போட்டார்கள். அங்கு இரண்டு பேரும் (பா.ஜ.க. - பா.ம.க) தனித்தனியாக நிற்கிறார்களே! அங்கு கூட்டணி கிடையாதே! ரெங்கசாமியோடு கூட்டணி சேர்ந்தார்களே, இருக்கிறதா? இவர்களின் கூட்டணி நிலை என்ன?
தேர்தலுக்கு இன்னும் 10 நாள்கள் இருக்கிறது. அதற் குள் அலங்கோலம். அங்கே கூட்டணிக்கு பெயர் அலங் கோலக் கூட்டணி இந்தக் கூட்டணி (திமுக) எழில்கோலம் (கூட்டணி). கட்சிகள் நாட்டில் உச்சவரம்பு இல்லாமல் போய் கொண்டு இருக்கின்றன. நம் நாட்டில் சுலபமான வேலை தொழிற்சாலை, பள்ளிக்கூடம் தொடங்குவதை விட கட்சிகள் தொடங்குவது. யாரும் தேவையில்லை. இரண்டு நபர்கள் இருந்தால் போதும். ஒருவர் இருந்தால் கூட போதும்.
பெரம்பலூரில் ஒருவர் கட்சி வைத்திருக்கிறார். ஜனநாயகத்தையே நான்தான் காப்பாற்றுவேன் என்கிறார். அந்தக் (பா.ஜ.க.) கட்சியே ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. பாவம் அவர்.
பா.ஜ.க. 6 இல் இரண்டு பார்ப்பனர்கள், 2 சதவிகிதம் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு. ஆனால் பெண்களுக்கு அந்தக் கட்சியில் வாய்ப்புண்டா?
பெண்களுக்கு இடமுண்டா?
மோடிக்கு பத்திரிகையில் ஒரு பக்கம் விளம்பரம் போடுகிறார்கள். கார்ப்ரேட் முதலாளிகள். பெண்களைப் பற்றி விளம்பரம் போடுகிறார்கள் “Empowerment of Women” பெண்களுக்கு சக்தி அளிக்கக் கூடியவர் மோடி தான் என்று. ஆனால் பெண்களுக்கு தேர்தலில் போட்டி யிட இடமில்லை. இதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை.
மோடி அலை வீசவில்லை - பாஜக
இரவு 7 மணி செய்தியை இப்பொழுதுதான். கேட்டு விட்டு வந்தேன். மோடி அலையை பற்றி சொல்லும் போதுகூட முரளி மனோகர் ஜோஷி மூத்த தலைவர்; அத்வானிக்கு அடுத்த தலைவர். கல்வியை காவிமயமாக் கிய தலைவர். அவர் சொல்லி இருக்கிறார். மோடி அலை எல்லாம் எங்கும் வீசவில்லை என்று. அங்கு உள்ள தலைவர் சொல்கிறார். பாஜக தலைவர் சொல்கிறார். ஆனால் இங்கு (தமிழ்நாட்டில்) இருக்கும் இராஜாவை மிஞ்சிய இராஜவிசுவாசிகள், கூட்டணியில் இடம் பெற்றவர்கள் 5, 6 சீட்டு வாங்கியவர்கள் மோடி! மோடி! என்று சொல்கிறார்கள். ஆனால் ஜோஷியோ, மோடி அலை வீசவில்லை என்று சொல்லிவிட்டாரே! “The Gujarath Model” குஜராத் வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்கிறார்கள் என்னிடம் பத் திரிகையாளர்கள், ஒரு நடிகர் மோடியையும் - பெரி யாரையும் ஒப்பிட்டாரே! என்று கேள்வி கேட்டார்கள். நான் ரொம்ப சுருங்கச் சொன்னேன். பாவம் அவரைப் பார்த்து பரிதாபப்பட வேண்டும். ஏனென்று கேட்டால் அவருக்கு மோடியைப் பற்றியும் தெரியாது; தந்தை பெரியாரைப் பற்றியும் தெரியாது. அரசியலே அவருக்குத் தெரியாது. அதனால் இதற்கு மேலே அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்றேன்.
மோடியை முன்நிறுத்துவது ஏன்? பாஜக தலைவர் களே விரும்பவில்லை. 272 மெஜாரிட்டி அறுதிப் பெரும் பான்மை எங்களுக்குக் கிடைக்காது, அத்வானி சொல் கிறார். அத்வானிக்கு இல்லாத அனுபவமா? அவரே வேட்பாளர். மத்தியப் பிரதேசத்திற்கு போகிறேன், குஜராத்திற்கு போனால் தோல்வியடைந்து விடுவேன் என்றார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். நாங்கள் சொல்லும் இடத்தில் தான் நிற்கவேண்டும் என்றது.
அயோத்தியில் ராமனுக்கு கோவில் இல்லாமல், மழையில் ராமன் ஒன்றும் நனைந்து கொண்டு இருக்க வில்லை. 7000 கோவில் இருக்கிறது. அங்கு, ஆனால், பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமன் கோவிலை கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டியது ஆர்.எஸ்.எஸ். 1992 மிகப் பெரிய மதக் கலவரத்தை நடத்தினார்கள்.
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து 370 ரத்து ஆனால் என்ன ஆகும்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று பேச முடியுமா? எங்களைப் பார்த்து சொன்னாங்க அய்யா, இவர்கள் எல்லாம் பிரிவினை வாதி, தேச விரோதிகள் என்றார்கள். இப்போது யார் தேச விரோதி, பிரிவினைவாதி என்று புரிகிறதா? காஷ்மீரே பற்றி எரியவேண்டும் என்கிறான். இப்படி அங்கு சிக்கல் இருக்கிற நேரத்தில் மீண்டும் பிரச்சினையைத் தொடங்குவேன் என்றால், நாடே மதக்கலவரம், ரத்தக்களறி அல்லவா நடக்கும் என்றார் தமிழர் தலைவர்.
Read more: http://viduthalai.in/page-4/78748.html#ixzz2z0MNlmu5
பா.ஜ.க.வுக்கும் - அ.தி.மு.க.வுக்கும் இடையில் ரகசிய உறவு! தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாற்று
நாமக்கல், ஏப்.15- பா.ஜ.க. வுக்கும் - அ.தி.மு.க.வுக்கும் இடையில் ரகசிய உறவு உள்ளது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் குற்றம்சாற்றினார்.
நாமக்கல் நாடாளுமன் றத் தொகுதி தி.மு.க. வேட் பாளர் செ.காந்திசெல்வன் அவர்களை ஆதரித்து மாபெ ரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
நான் கன்னியாகுமரியில் எனது பிரச்சாரத்தைத் தொடங்கி இப்போது நாமக் கல் வரை சென்ற இடங் களில் எல்லாம் நடைபெற்ற கூட்டங்களில் ஒன்றை தொடர்ந்து குறிப்பிட்டு பேசி வருகிறேன். பா.ஜ.க. - அ.தி.மு.க.வுக்கு இடையில் ரகசிய உறவு உள்ளது என்பது தான் அது.
இதற்கு பா.ஜ.க. வுடன் தொடர்பு இல்லை என வெளிப்படையாக அறி விக்காமல், காவிரி நீர் விவ காரம் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இல்லை, இதே காரணத்துக்காக வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசை கவிழ்த்ததாக ஜெய லலிதா பேசியுள்ளார். காவிரி நீர் பிரச்சினை என்பது இரு மாநிலங்களுக்கு இடையி லான பிரச்சினை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம், தமி ழக மீனவர் பிரச்சினைகள் குறித்தும் எதுவும் குறிப் பிடப்படவில்லை. அது பற்றி ஜெயலலிதா விமர் சனம் செய்துள்ளாரா?
கச்சத்தீவு குறித்து ஒரு வார்த்தைகூட பி.ஜே.பி. குறிப்பிடவில்லை, ராமர் கோயில் கட்டும் விவகாரம் ஆகியவை குறித்து ஜெய லலிதா ஏன் குறிப்பிடவில்லை?
400 ஆண்டுகால பாபர் மசூதியை இடிப்பதில் பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா ஒத்து ஊதுகிறாரா?
பொது சிவில் சட்டம் குறித்து ஜெயலலிதா எதுவும் குறிப்பிடவில்லையே?
நியாயமாக இதையெல் லாம் குறித்து கேட்க வேண் டியதை விட்டுவிட்டு, இரு மாநிலங்களுக்கு இடையி லான காவிரி நீர்பற்றி ஜெய லலிதா பேசுவதில் இருந்தே பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கள்ளத் தொடர்பு இருப்பது உறுதியாகிறது. அதை மறைக்கவே இப் போது ஜெயலலிதா நாடகம் நடத்துகிறார்.
பத்திரிக்கை யாளர் சோ அவர்கள் பா.ஜ. க.வின் பிரதமர் வேட்பாள ராக உள்ள மோடிக்கு நெருக் கமானவர். அதேபோல ஜெயலலிதாவுக்கும் நண் பர். அதுமட்டுமல்ல அவர் எனக்கும் நண்பர் என்ப தோடு, தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நண்பரா கவே இருக்கிறார்.
இன்று அவர் தனது பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் என்ன குறிப்பிட்டு இருக்கி றார் என்றால், பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் பா.ஜ.க. வேட் பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும், மற்ற இடங் களில் அதிமுகவிற்கு வாக் களிப்பதுதான் நல்லது. மற் றக் கட்சிகளுக்கு வாக்களித் தால் அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது. ஓட்டுப் பிளவைத்தான் உண் டாக்கும் என்று தெரிவித் துள்ளார்.
அதாவது பா.ஜ.க. கூட்ட ணியில் உள்ள மற்ற கட்சி களை சேர்ந்த வேட்பாளர் களுக்கு ஓட்டுகளைப் போடு வதைவிட, அந்தக் கூட்டணி யில் இல்லாத அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். இதி லிருந்தே பாஜகவிற்கும்- அதிமுகவிற்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லையா? குஜராத் முதல்வராக பொறுப்பு ஏற்ற போது அந்த நிகழ்ச்சிக்கு சென்றவர் ஜெயலலிதா. அதேபோல ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்ற போது அதற்கு வந்தவர் மோடி. இதிலிருந்து என்ன வேறுபாட்டை நாம் காண வேண்டும்?
அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் கடைசி நிமி டம் வரை இருந்த இரு கட் சிகள் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள். அவர்களை கூட்ட ணியில் இருந்து விரட்டி விடுகிறார்கள். என்ன கார ணம்?
தேர்தல் உடன்பாட்டில் தகராறா? தொகுதி பங்கீட் டில் தகறாரா? தொகுதிகள் எண்ணிக்கையில் தகராறா? இல்லை.
ஆக, இறுதியில் பா.ஜ.க. கூட்டணிக்கு இவர்கள் போகப் போகிறார்கள். கம்யூனிஸ்டுகள் இருந்தால் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக போக முடியாது என்பதால், கடைசி நேரத்தில் அவர் களை வெட்டி விடுகிறார் கள். இதை நான் சொல்ல வில்லை. கம்யூனிஸ்ட் கட் சித் தலைவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
ஆக, இதையெல்லாம் மறைப்பதற்காக இப்போது கொஞ்சம் மாற்றி பேசியுள் ளார். புதிதாக ஒரு சப் ஜெக்டை பேசியுள்ளார். அது என்னவென்றால், எனக்கு எல்லாமே மக்கள்தான். எல் லாமே நீங்கள்தான், மக்கள் நலனே எனக்கு முக்கியம், என்று இப்போது முதல்வர் ஜெயலலிதா திடீரென்று இன்று பேசியிருக்கிறார்.
அவரை நான் கேட்கி றேன், எல்லாமே மக்கள் நலன்தான் என்றால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களை இன்னும் ஏன் தொடர வில்லை? இதுதான் மக்கள் நலனா?
பேருந்துக் கட்டணத்தை குறைப்பேன் என்றீர்களே? குறைத்தீர்களா? இதைத்தான் மக்கள் நலன் என்கிறீர்களா?
2011 ஆம் ஆண்டு தேர் தல் அறிக்கையிலே 20 லிட் டர் பாதுகாக்கப்பட்ட குடி நீர் கொடுப்பேன்னு சொல் லிட்டு, இப்போ 10 ரூபாய்க்கு மினரல் வாட்டர் விக்கறீங் களே, இதுதான் மக்கள் நலனா?
தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் கிட் டத்தட்ட 20 விவசாயிகள் வாழ வழியில்லை என்று தற்கொலை செய்து கொண் டார்களே, இதுதான் உங்கள் மக்கள் நலனா?
மாற்றுத் திறனாளிக ளுக்கு 3 சதவிகித இட ஒதுக் கீடு தருவேன்னு அறிவிச் சீங்களே, தந்தீங்களா? இப்போ உங்களை எதிர்த்து, உங்கள் ஆட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட் டம் நடத்தினார்களே பார் வையற்றவர்கள், கால் நடக்க முடியாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள், அவர் கள் மீது தடியடி நடத்தி, துன் புறுத்தி மருத்துவமனை களில் கொண்டு சென்று உயி ருக்கு ஆபத்தான நிலை யிலே போட்டீர்களே, இது தான் ஜெயலலிதா சொல் லும் மக்கள் நலனா?
நான் இன்னும் கேட்கி றேன், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ரூ.5000 கோடிக்கும் மேல் நீங்கள் சொத்து குவித்து வைத்துள்ள தாக சொல்கிறார்களே, இது தான் உங்கள் மக்கள் நலனா?
மக்கள் நலன், மக்கள் நலன் என்கிறீர்களே, நீங்கள் கொள்ளையடித்து வைத் துள்ள ரூ.5000 கோடி சொத்தை மக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறீர்களா? அப்படி ஒப்படைத்தால் ஜெயலலிதாவின் மக்கள் நலனை நானும் ஒப்புகொள் கிறேன், அதற்கு ஜெயலலிதா தயாரா?
இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், கழகம் சார்பில் போட்டி யிடும் வெற்றி வேட்பாளர் செ.காந்திசெல்வன் அவர் களுக்கு உதயசூரியன் சின் னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page-5/78709.html#ixzz2z0Mgzj75
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார்
இந்திய சுதந்திரப் போர்க்களத்தில் சுதேசி சிந்தனை யுடன் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய வீரர்கள் அநேகம்பேர். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! காரணம் தம் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்க, அம்மண்ணின் மைந்தர்கள் போராடுவது இயல்பானதும் யாராலும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.
ஆனால், வேற்று நாட்டில் பிறந்து, இந்த மண்ணுக்கு வந்து, இந்தியா என் தாய்நாடு என்று உள்ளத்தால் ஒன்றிப்போய், இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தார் ஓர் அன்னிய நாட்டுப் பெண்மணி, என்றால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும். ஆம். அப்படி ஒருவர்தான் புகழ்பெற்ற ஹோம்ரூல் இயக்கம் தொடங்கிய அய்ரிஷ் பெண்மணியான அன்னிபெசன்ட் அம்மையார்.
அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்ட அன்னிவுட் பிறந்தது லண்டனில். 1847 அக்டோபர் முதல் தேதி பிறந்தவர் அன்னிவுட். அவருடைய தந்தை டாக்டர் வில்லியம் பேஜ்வுட் என்பவர். தாயார் பெயர் எமிலி என்பது. எமிலியின் முன்னோர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அன்னியின் தந்தை மருத்துவ வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மேதையாகவும் திகழ்ந்தார். அரசியல் மற்றும் சமூக எண்ணம் கொண்டிருந்த அன்னிபெசன்ட் 1913 இல் நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1918 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரே தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இப்படி காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றார் அன்னி பெசன்ட் அம்மையார். 1917 இல் மாதர் சங்கம் அமைத்தார். அதன்மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வுகளைப் பரப்பினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடப்பதால், அவர்களில் பெரும்பாலோர் இளவயதிலேயே விதவைகளாக ஆகி விடும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து பால்ய விவாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார். இறுதியில் அவர் 1933 செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தம் 86 ஆம் வயதில் இறந்தார்.
Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0N2CJML
பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட போராடிய பெண்
பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.
1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக் காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.
1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத் தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.
1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.
1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற் சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர் களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென போராடினர்.
1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கவுரவம் குலைக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினார். 1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சம உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.
1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வா றெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.
Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0NDX5gj
அணையா நெருப்பு டீஸ்டா செடல்வாட்
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனிதஉரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான்.
அப்படி குஜராத்தில் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டப் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் சார்பில் செயல்படும் டீஸ்டா செடல்வாட்டும் ஒருவர்.
பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
டீஸ்டா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கை யின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.
1993இல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரி கையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.
கம்யூனலிசம் காம்பாட் (மத அடிப்படை வாதத்துக்கு எதிரான போர்) என்ற மாத இதழைக் கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான்.
தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளையும் மனச்சிதைவையும் அம்பலப்படுத் துவதை நோக்கமாகக் கொண்டு டீஸ்டா செயல்பட்டு வருகிறார்.
இப்படி மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தளராத உறுதியுடன் டீஸ்டா போராடினாலும், ஒருபுறம் அவருக்கு எதிரான அவப் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது.
Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NKPAIy
முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்
சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம் பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர். நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம்.
எங்கள் வீட்டுக்கு நான் 8ஆவது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன்.
அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார். பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.
முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.
ஆனால், பார்வையற்றவர் களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராதாபாய்.
Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NVA32r
பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன? - கி.வீரமணி
பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?
பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி
ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;
நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.
பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!
அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?
இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.
2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.
3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)
இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?
இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.
இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.
1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?
மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.
எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!
கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?
இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?
ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்
இ) பொது சிவில் சட்டம்.
இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?
2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?
வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!
3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)
மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?
வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
8.4.2014முகாம்: கோவை
Read more: http://viduthalai.in/headline/78340-2014-04-08-09-20-55.html#ixzz2z0OVfI00
பாஜ ஆட்சியமைத்தால் மதக்கலவரம் வெடிக்கும்: ப. சிதம்பரம்
காரைக்குடி, ஏப். 16-பாஜ கையில் ஆட்சி சென்றால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்தார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்குகள் சேகரித்து காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள்பட பல்வேறு பகுதிகளில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய அரசை அமைக்கக்கூடிய சக்தி, வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. 1999இல் பாஜ ஆட்சி அமைத்து, இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி மீண்டும் தேர்தலை சந்தித்தது. ஆனால் தோல்வியையே சந்தித்தது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜ முகமூடியுடன் வருகிறது. இது மத, மொழி வெறியர்கள் நடத்தும் நச்சு இயக்கம். பாஜ சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆர்.எஸ்.எஸ். நினைத்தது எல்லாம் பாஜ தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் என்று கூறி தடுத்தவர்கள். இவர்கள் கையில் ஆட்சி சென்றால் மதக்கலவரம் ஏற்படும். பாஜ தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து சொல்லவில்லை. இவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
மோடியின் போலி வாக்குறுதிகளால் நல்லது நடக்காது: அசோக் கெலாட்
ஜெய்ப்பூர், ஏப். 16-''பா.ஜ.க.வின் போலியான வாக்குறுதிகள் நாட்டிற்கு எந்த நன்மையையும் அளிக் காது. ராகுல் காந்தியின் வளர்ச்சிக்கான பாதைகளும், திட்டங்களுமே நாட்டிற்கு நன்மையை வழங்கும்'' என முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மோடி இருவரும் வழங்கி வரும் போலியான வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவர்கள் தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனது பேச்சுக்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மோடி, போலி வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் பதவி நாற்காலியை அடைவதையே தனது குறிக் கோளாக கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான எந்த மாற்றுத் திட்டங்களும் அவரிடம் இல்லை. அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்.' என்றார்.
குஜராத்தில் பெண்களின்
தொலைபேசி ஒட்டு கேட்பு
மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
புனே, ஏப்.16- பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பெண் அதிகாரம் பற்றி பேசி வரு கிறார். ஆனால், அங்கு பெண்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்று காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட் டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதமை ஆதரித்து நடந்த நேற்று பிரச்சாரக் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது: குஜராத் முதலமைச்சர் பெண்களின் தொலை பேசியை ஒட்டுக்கேட்கிறார். அம்மாநில காவல் துறையினர் பெண்களை வேவு பார்ப்பதற்காக அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளட்டும். அதன்பின்னர் அவர்கள் பெண் அதிகாரம் பற்றி பேசலாம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளன. ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் இது மிக, மிக குறைவாக உள்ளது. சட்டீஸ்கரில் 20,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.
நரேந்திர மோடி தன்னுடைய ஒரு பொதுக் கூட்டத்துக்கு 10கோடி செலவழிக்கிறார். இதுதவிர கூட்டத்தை பிரபலப்படுத்த பத்திரி கைகளில் பெருமளவில் பணம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த பணம் முழுவதும் குஜராத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் மிட்டாயை போன்றதுதான். இதன் மூலம் ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைந் துள்ளனர் என்றார்
Read more: http://viduthalai.in/e-paper/78764.html#ixzz2z6Ixw200
அடைய முடியும்
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
- (விடுதலை, 13.8.1961)
Read more: http://viduthalai.in/page-2/78766.html#ixzz2z6JWkho4
திருநங்கைகள் 3ஆம் பாலினம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கலைஞர் வரவேற்பு
சென்னை, ஏப். 16- திருநங்கைகளை 3ஆம் பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவித்ததை திமுக தலைவர் கலைஞர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிடப் பட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்து சமுதாயத் தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாது காக்கத்தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவு கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந் தோம்.
சொன்னதைச் செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதற்கிணங்க, திமுக ஆட்சியில் 15-4-2008இல் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங் களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக் களும், 585 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.
20-08-2009இல் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் ரூ. 25 லட்சத்து 53 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. அரவாணிகளுக்காக 150 சுயஉதவிக் குழுக்கள் அமைப்பதற்கு ரூ. 6 லட்சத்து 9 ஆயிரமும், சுய தொழில் தொடங்க ரூ. 64 லட்சமும் வழங்கப்பட் டுள்ளது. 20-10-2011இல் அரவாணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென ரூ 1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
திருநங்கைகளின் நலனுக்காக திமுக ஆட்சியில் இருந்த போது, இவ்வளவையும் செய்ததோடு, அண்மையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும், அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கு வழங்க திமுக பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை 3ஆம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம். தேர்தல் அறிக்கையில் கூறி, அதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன் பாகவே, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது நிறைவேறு கின்ற வகையில் திருநங்கைகளை 3ஆம் பாலினமாக அறிவித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி யுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.
இந்தத் தீர்ப்பு திருநங்கைகள் வாழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு உள்ள எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத் திலும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுக் காலமாக குரல் கொடுத்த திமுகவிற்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகி யோருக்கும், இந்த வழக்கைத் தொடுத்த லட்சுமி நாராயணன் திரிபாதிக்கும் நம் இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை திமுக சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டு கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
Read more: http://viduthalai.in/page-2/78779.html#ixzz2z6K3oO4p
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து சலுகைகள் வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஏப்.16-திரு நங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட் டியலில் சேர்த்து அவர் களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திருநங்கைகளை மூன் றாம் பாலினமாக அங்கீ கரித்து அவர்களுக்கு மற்ற வர்களைப் போல் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகை களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல் எஸ்ஏ) பொது நலன் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
ஆண், பெண் என்ற பாலினங்களுக்கு அடுத்த படியாக மூன்றாம் பாலின மாக திருநங்கைகளை பட்டி யலில் சேர்க்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களும் நாட்டின் குடி மக்கள்தான். அவர்களுக்கு மற்றவர்களை போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உட்பட அரசின் அனைத்து சலுகைகளை பெற சம உரிமை உண்டு. சமூகத்தில் முன்பு திருநங் கைகள் மதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் பிரிக்கப் பட்டு அவர்கள் தொந்தர வுக்கு ஆளாகின்றனர்.
இந்திய தண்டனை சட் டத்தின் 377 ஆவது பிரிவும் திருநங்கைகளுக்கு எதிராக காவல்துறையினரால் தவ றாக பயன்படுத்தப்படு கிறது. அவர்களின் சமூக பொருளாதார நிலை திருப்தி கரமாக இல்லை.
அவர்கள் சமூகத்தின் ஒரு பங்கு என் பதால், அவர்களுக்கும் வாக் காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரி மம் உள்ளிட்ட அனைத்து உரிமைகள், சலுகைகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவு திருநங்கைகளுக்கு மட் டுமே பொருந்தும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பொருந்தாது. - இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த உத்தரவை வர வேற்றுள்ள திருநங்கைகள் உரிமை அமைப்பை சேர்ந்த லட்சுமி நாராயண் திரிபாதி, மனித உரிமையை அடிப் படையாக வைத்துதான் நாட்டின் முன்னேற்றமே உள்ளது. எங்களுக்கு சம உரிமை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி ருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
Read more: http://viduthalai.in/page-5/78755.html#ixzz2z6Kcgvl9
எதிர்ப்பு! எதிர்ப்பு!! மோடிக்கு சர்வதேச ஊடகங்களும் எதிர்ப்பு
புதுடில்லி, ஏப்.17- பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு பிரதம ராக வாய்ப்பில்லை என்று சர்வதேச அளவில் ஊடகங் கள் கருத்துக்களை வெளி யிட்ட வண்ணம் உள்ளன.
அண்மையில் வெளிவந் துள்ள தி எக்கனாமிஸ்ட் அதன் அட்டையில் நம்பிக் கையான பிரதமர் என்ற தலைப்பிட்டுள்ளது. தன் னுடைய தலையங்கத்தில் கடுமையான வார்த்தை களாகவே, இந்தியாவின் மிக உயர்ந்த அலுவல கத்தை திரு.மோடிக்கு இந்த செய்தித்தாளில் பெற்றுத்தர முடியாது என்று எழுதி உள்ளது. இதுபோன்றே சிறிதுசிறிதாக உருவாக்கி, மோடி அலை என்று இருப் பதாக மோடியின் ஆதரவா ளர்களிடையே கருத்து ஏற் படுத்தப்பட்டது. அதனா லேயே அவரைத் தாக்கும் அறிக்கைகளும், தலையங் கங்களும் வந்தன.
தி கார்டியன் ஏட்டின் ஏப்ரல் 14 ஆம் தேதியிட்ட இதழில், நரேந்திர மோடி என்று தலைப்பிட்டு மோடி யின் ஹிந்துத்துவா தீவிர வாதத்துக்கு பிரிட்டன் தோள் கொடுக்காது என்று எழுத்தாளர் பிரியம்வதா கோபால் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி அய்க்கிய ராஜ்ஜியம் (இங்கிலாந்து) அம்மனிதருடனான தொடர்புகளைத் துண் டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை உருவாக்கி உள்ளார். அவர் எழுதும் போது, உலகமே அறிந் துள்ள, முக்கியமாக வலது சாரித்தன்மையில் மீண்டும் தீவிரத்துடன் இருப்பதை அறிந்து நாம் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிட்டன் பாசி சத்துக்கு எதிராக உள்ள நிலையில், நாட்டின் நீதி, நிர்வாகம் போன்ற அதிகா ரத்தை கண்டிப்பாக மோடி போன்றவர்கள் பெற அனு மதிக்கக் கூடாது.
கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில், தானேரிச் சார்டு சுருக்கமாக மோடி குறித்து எழுதும்போது, படிகம்கூட வைரஸ் பாதிப் புக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி பிரதமரானால் இந்தியா நீதியின் பாதைக்கு வரவே முடியாது. வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி தரப்பில் கூறுவது குறித்து கூறும்போது,
குஜராத் மாநிலத்தில், பொருளாதார வளர்ச்சி என் பதைவிட மோடியின் செயல் அதிபயங்கரமானது. அடிப்படை மனிதத் தன்மை குறித்து மறக்கலாமா? வளர்ச்சி விகிதத்தை உயர்த் துவதில் பெரும்பான்மை இந்தியர் சகிப்புத்தன்மை யற்ற, கருணையற்ற, ஒரு சார்பு நிலையில் இருப்பது தான் என்றால் நீதி இல் லையே என்று குறிப்பிட் டுள்ளார்.
மோடி தன் திரும ணத்தை தேர்தல் உறுதி ஆவ ணத்தில் ஒப்புக்கொண் டுள்ள தகவலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தி பாகிஸ்தான் பிரஸ் குறிப்பாக மோடியின் காஷ் மீர் நிலைப்பாடு குறித்து எழுதியுள்ளது. தி எக்ஸ் பிரஸ் டிரிபியூனில் சஞ்சய் குமார் மோடி தென் ஆசி யாவில் பொது நியதி களுக்கு சவால் விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீரின் நிலையில் மாற்றம் செய்ய நினைத்தாலோ, அணுக் கொள்கையை பின்னுக்குத் தள்ளினாலோ கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் கேடா னவர் மோடி என்றும் கூறியுள்ளார்.
ஹஃப்ஃபிங்டன் போஸ்ட்டில் மூன்று முறை சுனில் ஆடம்ஸ் என்பவர் மோடிக்கு ஆதரவாக எழுதி யிருந்தாலும், மார்ச் 31 அன்று மோடி ஒரு கருவி தான் என்கிறார். இந்தியா வின் பின்னணியை விட்டு விட்டு அல்லது பாதுகாப்பு இல்லாத பகுதிகளையா வது நீக்கிவிட்டு, பிரபல பார்ப்பனர் கூறுவதுபோல, கணவன் - மனைவியி டையே கொடுத்தலும், பெறுதலும் போல் இருக்கவேண்டும் என்று ஆடம்ஸ் கூறுகிறார்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16.4.2014
Read more: http://viduthalai.in/e-paper/78801.html#ixzz2zC96RLay
காஞ்சி சங்கராச்சாரியாரின் முகமூடியும் மோடியின் கல்யாண பந்தத்தின் மர்மமும்!
15.4.2014 நாளிட்ட தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்துள்ள - இதுவரை மற்ற நாளேடு களிலோ, வார ஏடுகளிலோ வெளிவந்திராத ஒரு செய்தி இதோ, படியுங்கள்!
மோடி தனது மனைவி பெயரை அறிவித்தது எப்படி?: பின்னணியில் காஞ்சி காமாட்சி அம்மனின் அருள் எனத் தகவல் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிட்டவுடன், அது நாடு முழுவதும் மாபெரும் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இந்த விவாதத்தின் தீவிரம் குறைந்துவரும் நிலையில், மோடி தனது மனைவியின் பெயரை அறிவிக்கும் முடி வுக்கு பின்னணியில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் இருப்பதாக அக்கோயில் வட் டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி தசமஹா வித்யா ஹோ மம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டில்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத்துள் ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மனின் பட்டுப்புடவையும் இருந் துள்ளது. இந்தப் பட்டுப் புடவையைக் கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று மோடியிடம் கூறினா ராம். சற்று மவுனம் காத்து பின்னர் வியந்து போய் நரேந்திரமோடி பிரசாதத்தை பெற்றுக்கொண்டாராம். அம்பாள் பக்த ரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப்புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்கு மாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக்கொண்டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவியின் பெயரை குறிப் பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங் களில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து நடராஜ சாஸ்திரியிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந் தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவித் துள்ளார் என்றார் அவர்.
காஞ்சி காமாட்சி மோடிக்காக அருள்பாலித் துள்ளார் போலும்; (அவாள் காஞ்சி காமாட்சி யம்மன்) முழுக்க முழுக்க காஞ்சி மடத்தின்கீழ் - அதாவது ஜெயில் - பெயில் புகழ் ஜெயேந் திர சரசுவதி அன்ட் கோவின் நிர்வாகத்தின்கீழ் நடைபெறுவதால், இந்த ஏற்பாடே பெரிய வாள், சிறியவாள் அனுமதியோடோ அல்லது முழு ஆதரவோடுதானே நடந்திருக்க முடியும்; இல்லையா! (காசி விசாலாட்சியம்மையார் என்ன செய்வாளோ).
காஞ்சி மடத்தின் அருள், நித்திய கல்யாண குணங்களோடு ஆசிகள் வழங்கியுள்ளார், நாளைய பிரதமர் என்ற பூரிப்பில், புளகாங் கிதத்தில் உள்ள ஹரஹர நரேந்திரருக்காக!
இந்த ஹரஹர நரே சத்தம் வடக்கேயுள்ள (ரூப் ஆனந்த்) சங்கராச்சாரிக்கு ஏக கோபத்தை உண்டாக்கி, மோடியை வாரணாசியில் ஒரு வகையாக தேர்தல் வேலை பார்க்க முடிவு செய்துவிட்ட நிலையில்,
இங்கே காஞ்சிப் பெரியவாள் யாகம், யோகம் எல்லாம் செய்து, முந்தைய அத் வானியை வர வழைத்ததுபோல, காஞ்சிக்கு மோடியை தம்பதி சமேதராக வரவழைத்துத் தர முன்னேற்பாடு திட்டமோ!
இதற்காக, செருப்புப் பேச்சுப் புகழ் காரைக் குடி அய்யரும் தனி ஏற்பாடு செய்துள்ளாராம்!
பலே, பலே, யாகம் கைகொடுக்குமா?
மே 16 இல் தெரியும்!
- ஊசிமிளகாய்
Read more: http://viduthalai.in/e-paper/78802.html#ixzz2zC9HNYWD
மோடியை எதிர்த்துக் கிளம்புகிறார்கள் உள்நாட்டு - வெளிநாட்டு அறிஞர்கள்
புதுடில்லி, ஏப்.17- பாஜக தலைவர் மோடி, தன்னு டைய பிரதமர் பதவிக்கான ஓட்டத்தின் இறுதிக்கட் டத்தை எட்டும் நிலையில் உள்ளார். இந்நிலையில் உள் நாட்டிலும், வெளிநாடுகளி லும் உள்ள சுதந்திர சிந்த னையாளர்கள், அறிஞர்கள் மோடிக்கு எதிராக உள்ள னர் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.
அவதார புருஷர்போல் உருவகம் பெற்று பிரச் சாரக்களத்தில் உள்ள மோடி மீதான எதிர்தாக்குதல் அவ ரைச்சுற்றி முழுவடிவத்தை அடைந்துவருகின்றது. சுமார் 25 கலைஞர்கள், கல்வியா ளர்கள், எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக கள மிறங்கியுள்ளனர்.
எழுத்தாளரும், நாவலா சிரியருமான சல்மான் ருஷ்டி இங்கிலாந்திலிருந்து வெளி வரும் தி கார்டியன் செய்தித்தாளில் மோடி பிரத மர் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளதுகுறித்து தீர்க்க முடியாத கவலை என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.
நீதிக்கான நடத்தையிலி ருந்தும், அரசியல் நாகரிகங் களில் மாறுபட்டும் முற்றி லும் முரண்பட்டுள்ள மோடி யின் நடத்தை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசமைப் புக்கு பல்வேறு வகைப் பட்ட விளக்கங்களைக் கூறு வதற்கு ஒப்பாக உள்ளது என்று ருஷ்டி எழுதுகிறார். அதைப்போலவே கலைஞ ராகிய அனீஷ் கபூரும் எழுதி யுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள பிரியம்வதா கோபால், மேற்கத்திய ஊடகங்கள் யாவும் சரியாக மோடியை விமர்சித்தே எழுதி வரு கின்றன. 2002 ஆம் ஆண் டில் குஜராத்தில் நடை பெற்ற கலவரங்களில் மோடியின் பங்குபற்றி மட்டு மின்றி, அமைதிக்கு உதவாத, மோசமான வெளி நாட்டுக்கொள்கையும் மோடி பிரதமராக நிறுத்தப் படும்போது, அவர் முன் னுள்ள கேள்விகளாகும். ஹிந்து தீவிரவாதத்துக்கு பிரிட்டன் என்றுமே தோள் கொடுக்காது. கலவரங்களில் தாக்குதல் சம்பவங் களைப் பற்றிக்கூறும்போது, உணர்ச் சிவசத்தால் ஏற்பட்டதாக பாஜக கூறிவரு கிறது என்று கார்டியன் இதழில் எழுதி யுள்ளார்.
இலண்டனில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட எழுத்தாளர் இயக்கமாகிய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், மோடி போட்டியிடும் வாரணாசி யில், மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ள தாகவும், கவிஞர் குல்சார், ஷப்னம் ஆஸ்மி மற்றும் இயக்குநர் மகேஷ் பட் உள் ளிட்ட பிரபலமானவர் களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட அழைக்கப்பட்டுள் ளனர்.
இயக்குநர் பட் கூறும் போது, வளர்ச்சி என்று ஓங்கி ஒலிப்பது, இலைமறை யாக உள்ள சங்கத்தின் (ராஷ் டிரிய சுயம் சேவக் சங்கம்) கொள்கைகளை மறைப்ப தற்கு வேண்டுமானால் பயன் படக்கூடும். சர்வாதிகாரிக்கு பெரும்பான்மை ஆதரவு என்பது மக்களுக்கு எதிரா கவே இருக்கும்.
மோடி பங்கேற்கும் ஹிந் துத்துவாவை முதன்மைப் படுத்தும் பிரச்சார நிகழ்ச்சி களை, இனவெறியுடன் கூடிய ஹிந்துத்துவா நிகழ்ச்சி களைப் புறக்கணிக்க வேண் டும். மாற்றங்களை ஏற்காத வலதுசாரிகள் கலாச்சாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு பிரதமராக வருவது குறித்து பலரும் அச்சத்துடன் உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் இயக்குநர் பட், மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். அவர் கூறும்போது, ஒரு படத்தயாரிப்பாளர் என்கிற வகையில், விளம்பரத்துக்கு உள்ளதெல்லாம் நல்ல படங்களாக இருப்பதில்லை என்று என்னால் கூற முடி யும் என்றார். அன்ஹட் என்கிற தொண்டு நிறுவனத் தை நடத்திவரும் ஷப்னம் ஆஸ்மி கூறும்போது, 50 அமைப்புகள், நூற்றுக்கணக் கான தொகுதிகளை சுற்றி வருவது, இரண்டாயிரம் தொண்டர்களுடன் அதி வேகத்துடன் இயக்கிவரும் மோடி என்று அனைத்தையும் கண்டாலும், நம் அரசமைப் பையும், ஜனநாயகத்தையும் காக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.
- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 15.4.2014, புதுடில்லி பதிப்பு
Read more: http://viduthalai.in/e-paper/78800.html#ixzz2zC9T2SzZ
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்- உஷார்!
பாபர் மசூதி இடிப்புப்பற்றி கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய ஏடு வெளியிட்டுள்ள தகவல் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பி.ஜே.பி. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் காவடி எடுத்துப் பார்த்தார்கள். அதைத் தடை செய்யவேண்டும் என்றனர் - தேர்தல் ஆணையம் உடன்படவில்லை.
23 முக்கிய தலைவர்கள் பேட்டி எடுக்கப்பட்டனர் - இரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்துவிட்டனர்.
இந்த இரகசிய வீடியோ பதிவில் இடம்பெற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டால் ஒரு வகையில் ஆச்சரியமாகவும் - ஏன் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.
வினய் கட்டியார், உமாபாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த், சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி, சாத்வி ரிதம்பரா, மஹந்த் அவைத்யநாத், சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்ட மேலும் பி.ஜே.பி. பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தனர்.
17 ஆண்டு விசாரணைக்குப் பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பாபர் மசூதி இடிப்பில் 68 பேர் குற்றவாளி கள் என்று அறுதியிட்டுக் கூறியது. வாஜ்பேயி பெயரை எப்படி சேர்க்கலாம் என்று நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்த யோக்கிய சிகாமணிகள்தான் இந்தப் பி.ஜே.பி.யினர் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் அவர்களின் அகராதியில் கிடையாதே!
ரேபரேலி (உத்தரப்பிரதேசம்) நீதிமன்றம் ஏற்கெ னவே அத்வானி உள்பட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஜி), 149, 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தது.
கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளை வித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்ற குற்றங்களின் பிரிவுகள் இவை.
அத்வானியே தலைமை தாங்கிதான் பாபர் மசூதியை இடித்தார். அத்வானிபற்றிய குற்றப் பத்திரிகையில் சி.பி.அய். பகிரங்கமாகக் கூறியுள்ளது.
நீங்களும், மற்றவர்களும் பாபர் மசூதியை இடிக்க ஒரு சதித் திட்டம் தீட்டி இருக்கிறீர்கள். சம்பவ இடத்தில் அன்று காலை (1992, டிசம்பர் 6) பத்தரை மணியளவில் பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிரமாகப் பங்கெடுத்திருக் கிறீர்கள். பல தலைவர்களும் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கு என்று ஆவேசமாகப் பேசி, கரசேவகர் களை, தொண்டர்களைத் தூண்டினீர்கள், காலை 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு தொண்டர்களுக் குக் கட்டளையிட்டீர்கள். மசூதியை இடிக்க டிராக்டர் களோ, புல்டோசர்களோ வேண்டாம். ஆளுக்கொரு தடியை எடுத்தாலே போதும் - மசூதி இடிந்துவிடும் என்று ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள்.
மசூதி இடிக்கப்படும் வரை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கல்யாண்சிங் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று சொன்னீர்கள். அப்பொழுது தான் மத்தியப் படை, மசூதி இடிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்று முதலமைச்சர் கல்யாண்சிங்குக்கு யோசனை சொன்னீர்கள்.
கரசேவை என்றால் பஜனையும், பக்திக் கீர்த்தனை யும் பாடுவதல்ல. சர்ச்சைக்குரிய, தகராறுக்குரிய 2.73 ஏக்கர் நிலத்தில் செங்கல் கொண்டு ராமர் கோவில் கட்டுவதாகும் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று அத்வானிமீது சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் பிற்பகல் 3.15 மணிக்கு மத்தியப் படையினர் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்க மசூதிகளின் வாயில்களை இழுத்து மூடுங்கள் என்று உத்தரவிட் டீர்கள் என்ற தகவலும் அதில் அடக்கம்.
பி.ஜே.பி.யில் இருந்து விலகிய நிலையில், கல்யாண் சிங்கும், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களை நம்பி ஏமாந்தேன் என்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினாரே! (தினமணி, 3.6.2009).
அதுமட்டுமல்ல, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா அய்.பி.எஸ். என்பவரும், அத்வானிதான் கரசேவகர்களுக்குக் கட்டளையிட்டார் என்று லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் கூறினாரே!
பிசினஸ் இந்தியா ஏட்டின் செய்தியாளர் ருச்சிரா குப்தாவும் அத்வானியின் கட்டளைகள்பற்றி லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் சொன்னதுண்டே!
பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் - அவர் களைக் காப்பாற்றுங்கள் என்று அத்வானியிடம் கேட்டுக் கொண்டேன்; அவரோ அசைந்து கொடுக்கவில்லை. மாறாக எனக்கு இனிப்பு வழங்கினார் என்று அந்தப் பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, நாடாளுமன்றத் திலேயே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சித் தலைவ ராகிய சுஷ்மா சுவராஜ் என்ன கூறினார் தெரியுமா? பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்ட னையை ஏற்கத் தயார்! என்று சொன்னாரே! (தினமலர், 9.12.2009).
இவ்வளவுக்குப் பிறகும் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள் என்றால், இதனைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) உரிய முறையில் வழக்கை நடத்தியிருந்தால், இந்தப் பிஜேபி தலைவர்கள் எல்லாம் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியையே இழந்து இருப்பார்களே!
கோப்ரா போஸ்ட் புலனாய்வு இணைய தள நிறுவனம், தேர்தல் நேரத்தில் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பாபர் மசூதியை இடித்த மதவெறியர்களை ஆளவிடலாமா? என்ற வினாவை வாக்காளர்கள் மத்தியில் எழுப்புவது அவசியமாகும்.
Read more: http://viduthalai.in/page-2/78797.html#ixzz2zC9nw2v6
கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் திமுக தான் பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு
அருள்புரம், ஏப். 17- கைத் தறி நெசவாளர்களின் வளர்ச்சி என்றென்றும் உற்ற துணை யாக இருப்பது திராவிட முன் னேற்றக்கழகம் தான் என்று சுப.வீரபாண்டியன் குறிப் பிட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல் லடம் ஒன்றியத்திற்குட்பட்ட அருள்புரத்தில் (14.4.2014) அன்று மாலை 6 மணியள வில் ஜனநாயக முற்போக் குக் கூட்டணியின் சார்பில் திறந்த ஜீப்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பல்ல டம் ஒன்றிய திமுக செயலா ளர் ராஜசேகர் தலைமை தாங் கினார்.
இப்பிரச்சாரத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பா ளர் வழக்குரைஞர் கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பேசியதாவது: தமிழகத்தில் காலங்காலமாக தொன்று தொட்டு இருந்து வரும் தொழில்கள் உழவு, நெசவு, மீன்பிடிப்பு ஆகிய வைகளாகும். இந்த அடிப் படையான தொழில்களுக்கு கலைஞர் ஆட்சி என்னென்ன நன்மைகளைச் செய்தது! இன்றைய ஆட்சி என்ன செய் துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற் குத்தான் இந்தக்கூட்டம்.
கடன் நீக்கம்
விவசாயிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய் விவசாயக்கடன் ரத்து செய் யப்பட்டது. இதன் மூலம் 2,26,000 குடும்பங்கள் பயன் பெற்றன. மிகமுக்கியமாக இதில் அதிமுகவைச் சார்ந்த நிலவுடைமையாளர் தான் அதிக அளவில் பயன்பெற் றுள்ளார்கள். பாரபட்சமின்றி அனைத்துக் கட்சி நண்பர் களும் இலாபமடைந்திருக் கின்றார்கள். இதற்கு நன்றி காட்ட வேண்டாமா?
இலவச மின்சாரம்
மின்சாரமே இல்லாத நாட்கள் தான் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இலவச மின்சாரம் எப்படி வரும்? தமிழகம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. மின் சாரக் கம்பியில் துணிகாயப் போடும்நிலை ஏற்பட்டுள் ளது. தண்ணீரை ஒரு அரசாங் கம் விற்பனை செய்கிற தென்றால் உலகிலேயே அது தமிழ்நாட்டு அரசாங்கம் தான். கலைஞர் இலவச மின் சாரம் தந்தாரே! விவசாயப் பெருங்குடிமக்கள் நினைத் துப் பார்க்க வேண்டாமா?
உழவர் சந்தை
விவசாயிகளின் உற்பத் திக்கு சரியான விலை கிடைக்க கலைஞர் அவர்கள் உழவர் சந்தையைக் கொண்டு வந் தார். இதன் வரவால் எத் தனை விவசாயக் குடும்பங் கள் மகிழ்ச்சிக் கடலில் தத் தளித்தார்கள் தெரியுமா? முதலில் 117 சந்தைகளை கலைஞர் கொண்டு வந்தார். பிறகு அதிக எண்ணிக்கை யில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது 13 காய் கறிக்கடைகளை கோடிக் கணக்கான மக்கள் வாழ் கின்ற நாட்டில் தற்போதைய அரசு திறந்துள்ளது. இது போன்றவர்களுக்கு இனியும் வாக்களிக்கலாமா?
கைத்தறித்தொழில் கைத்தறித்தொழிலுக்கு எப்போதும் துணை நிற்பது திமுக தான். கைத்தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்டி ருந்த மத்திய மதிப்புக் கூட்டு வரியை நீக்கிய ஆட்சி திமுக வின் பொற்கால ஆட்சி, ஆனால் இப்போது இப்பகு தியில் விசைத்தறிகள் ஓட வில்லை. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி, உரிமை யாளர்களின் வேலை நிறுத் தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜவுளி உற்பத்தியா ளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப் பந்தப்படி விசைத்தறி உரி மையாளர்களுக்கு உயர்வு தரவில்லை. இப்பிரச்சினை யைத்தீர்க்க தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அன்றாடம் தொழில் நிமித்தமாகப் பய ணித்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், பேருந்து கட்டண உயர்வைப் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நீங்களே நன்றாகச் சிந்தித் துப்பாருங்கள்.
மீன்பிடி தொழிலுக்கு எவ்வித நன்மைகளையும், பாதுகாப்பையும் வழங்காத அரசாக தற்போதைய அரசு இருந்து வருகிறது. இந்த நிலைமாற அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் கணேஷ் குமார் அவர்களை நீங்களெல் லாம் பெற்றிபெற வைக்க வேண்டும் என்று சுப.வீ. அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் யாழ்.ஆறுச் சாமி, பேராசிரியர் அவர்க ளுக்கு சிறப்பு செய்தார். திரா விட இயக்கத் தமிழ் பேரவை யின் மாநில இணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராசு, சேகாம்பாளையம் ரங்கசாமி, ரமேஷ், திருப்பூர் பிரகாசு, சிவாசலமூர்த்தி, சரவண மூர்த்தி, திமுக இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, தி.க இளைஞரணியைச் சார்ந்த மணிகண்டன் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட் டணியின் செயல் வீரர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.
Read more: http://viduthalai.in/page-3/78827.html#ixzz2zCAumyBS
கோவை தொண்டறச் செம்மல் மருத்துவர் பக்தவத்சலத்துக்கு வாழ்த்து
டாக்டர் பக்தவத்சலம், தமிழர் தலைவர் கி.வீரமணி, கோவை வசந்தம் இராமச்சந்திரன் மற்றும் டாக்டரின் அலுவலக நிர்வாகி
கோவையின் சிறந்த தொண்டறச் செம்மலான மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்களது கே.ஜி.பி. மருத்துவமனை என்பது மருத்துவத் தொழிலை தொண்டாகவும் செய்து வரும் அரிய சிறப்பான நிறுவனம் ஆகும்.
அதன் நிறுவனர் மதிப்பிற்குரிய மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்கள் அதனைத் துவக்கி 50 ஆண்டுகள் நிறைவு என்பதும், அவரது திருமணம் நடந்தது 50 ஆண்டு நிறைவு என்பதும் அவர்கள் கோவையில் நம்மை நேரில் சந்தித்து 8.4.2014 அன்று தெரிவித்தபோது மிகவும் மகிழ்ந்து, சிறப்பாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தேன்.
அதை விட முக்கியம் எனது உளப்பூர்வ நன்றியையும் தெரிவித்தேன்; காரணம் முதலில் எனக்கு இதய நோய் தாக்கியபோது, அவருடைய மருத்துவமனையும் மருத்துவர்களும் தான் காப்பாற்றினார்கள்;
எனது பணி தொடர அப்போது செய்த அரிய உதவி மறக்க முடியாதது, எனவே நன்றியும் தெரிவித்தோம். அம்மருத்துவமனையும், மனித நேயரும் பண்பாளருமான மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலனாரும் வாழ்க! வளர்க!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
Read more: http://viduthalai.in/page-8/78824.html#ixzz2zCBeDO2q
தேர்தல்: தா.பாண்டியன் கணிப்பு இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
திமுகவுக்குத் தொடக்கத்தில் இருந்த தைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அதிமுக எடுத்த நிலை காரணமாக திமுகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப் பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது திமுக முன்னேறி இருக்கிறது.
அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அதிமுக வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளி வாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி, வெற்றிபெற மாட் டோம் என்பதை அவர்களாகவே அறிவித்து விட்டார்கள். தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பி.ஜே.பி ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று நானும் நினைத் தது உண்டு.
ஆனால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர் களும், அவர்களோடு கூட்டு சேர்ந்தவர்க ளும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீரவசனம் பேசமாட்டேன். ஏனென் றால் தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை.
- தா.பாண்டியன் - ஜூனியர் விகடன் (20.4.14) பேட்டியிலிருந்து
Read more: http://viduthalai.in/page-8/78823.html#ixzz2zCCGml24
Post a Comment