Search This Blog

7.4.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - கி.வீரமணி


புராணங்கள் என்பவை எவை? அவைகள் எப்படி உருவாயின.

1. வேதங்களை - சூத்திரர்களோ, பெண்களோ படிக்கக் கூடாது என்ற தடை உண்டு.

ஏன் சமஸ்கிருத பாஷையே தேவ பாஷை - அவை சூத்திரர் அறியக் கூடாது.

வேதங்கள் ஓதுவதை காதால் கேட்கும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும்.

ஆரியர்கள் - பிராமணர்கள் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப வழிவேண்டுமே!
இதோ அதற்காக நவாலியூர் நடராஜன் கூறுகிறார்:


வேதங்களோடு ஒத்த பெருமையுடைய புராண இதிகாசங்கள், சூத்திரரும், பெண்டிரும் படிப்பதற்கே ஏற்பட்டவை என்றார்.

இவை பாபங்களைப் போக்குமாம்!
வேதம் - வேதியர் - கீழ்ஜாதி
புராணம் - புரோகிதர் - மற்றவை

வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் அய்ந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தைப் போலவே புராணங்களும் சமய இலுக்கியமாகக் கருதப்பட்டு வந்துள்ளன. வேதங்களைப் போலவே அமையும் பழைமையுடைனவென்பது ஆன்றோர் கருத்து. உருவத்திலும், பொருளிலும் அவை இதிகாசங்களோடும், ஸ்மிருதிகளோடும் ஒப்பிடத்தக்கன. இந்திய தரிசனங்களின் வரலாற்றையும், விரதானுட்டானங்களையும் அறிவதற்குப் புராணங்கள் மிகப் பயனுடையன. இந்திய நாகரிகத்தின் கருவூலம் புராணங்களே எனலாம். புராதனமாக இருந்து வருவது புராணம் எனப்படுகிறது. புராணம் செவி வாயிலாக வந்த புராதனச் செய்திகளெனவும் கூறலாம். வேத காலந்தொட்டு வந்த கதைகளும், வரலாறுகளும் மக்களிடையே பிரபலம் பெற்றுப் புராணமாக வடிவெடுத்தன. இவை சூதர் என்ற பாடகர்களால் ஆதியிற் பாடப்பட்டு வந்தன. அதனாலேதான் புராணங்கள் சூதபவுராணிகராற் கூறப்பட்டன என வழங்கும். புராணங்கள் மக்களிடையே பிரபலமடைந்து வந்ததால், புரோகிதர்கள் புராணங்களைப் பயன்படுத்திச் சமய போதனை செய்யவும், விரதானுட்டானங்களைப் பற்றிப் பிரசாரஞ் செய்யவும் முயன்றனர்.

பிரமாணங்களிற் புராணம் பற்றிய செய்தி

புராணம் என்ற சொல் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகின்றது. பண்டைக் கதைகள், உலக வரலாறுகள் என்ற பொருளிலேயே அங்கு இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. வேத சுருதிகளுக்கு முன்னரே இத்தகைய புராணக் கதைகள் இருந்திருக்கலாம். ஆனால், இன்று உள்ளதுபோலத் தனிப்பட்டதோர் இலக்கியமாகப் புராணங்கள் இருக்கவில்லை. அதர்வ வேதத்திலே புராணத்தைப்பற்றி, றூச: சாமானி சந்தாம்னி புராணம் எனத் தனிப்பட்டுக் கூறப்பட்டபோதிலும், அவை புராண இலக்கியங்களே எனக் கூறிக் கொள்ள முடியாது. சாந்தோக்கிய உபநிடதம் சதுர்த்த கிதிஹாச புராணம் பஞ்சமம் வேதானாம் வேத மிதி எனக் குறிப்பிடுகிறது. இதிகாசம் புராணம் என்பன பழைய சரித்திரக் கதைகளையும், ஆக்கியானங்களையும் குறிப்பிட்டன. பின்னர், சூத்திர இலக்கியங்களிலே புராணம் திட்டமாக ஒரு தனி இலக்கியமாய்க் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலே இருடிகளின் பாரம்பரியம் தேவர்களின் விருத்தாந்தம் முதலியவற்றைக் குறிப்பிடப் புராணமென்ற சொல் வழங்குவதாயிற்று. வேதங்களை விளக்குவதற்கு (உப பிராமணம்) புராணங்கள் பயன்படுவதாக ஸ்மிருதிகள் குறிப்பிடுகின்றன. இருக்கு வேத சூக்தங்களிலே பரிச்சயமான புரூரவன், ஊர்வசி, சரண்யூ, முட்கலன் போன்ற கதைகள் புராணங்களிலே காணப்படுகின்றன. அரசன் வேதத்தையும், தர்ம சூத்திரங்களையும், வேதாங்கங்களையும் பிரமாணமாகக் கொள்வது போலவே, புராணங்களையும் நீதி பரிபாலனத்துக்குப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். ஒழுக்கம், வழக்கு, தண்டம் எனப் பரிமேலழகர் திருக்குறள் உரையிற் கூறிய நீதி பரிபாலனத்துக்கு இப்புராணங்களும் பிரமாண நூல்களாய்க் கருதப்பட்டு வந்தன என அறிந்துகொள்ளலாம்.

சூத்திர இலக்கியத்திற் புராண மேற்கோள்கள்

ஆபஸ்தம்ப தரும சூத்திரத்திலே புராணங்களிலிருந்தும் பவிஷ்ய புராணத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. இத்தரும சூத்திரங்கள் கி.மு. 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கௌடிலிய அர்த்த சாத்திரத்திலே, அரசர்க்குக் கல்வி புகட்டுவதற்குப் புராணக் கதைகளைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுகின்றது. இது கி.பி. 3 ஆம் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்.

மகாபாரதம், ஒரு புராணமாகவே தன்னை வருணித்துக் கொள்கின்றது. அத்துடன் புராணங்கள் கதையை ஆரம்பிப்பது போலவே, புராணங்களிற் புலமை பெற்றவரும் லோமஹர்ஷணர் மகனுமான சூதர் சொன்னார் எனப் பாரதம் ஆரம்பிக்கின்றது. இவற்றிலிருந்து மகாபாரதம் இப்போதைய உருவத்தைப் பெறுவதற்கு முன்னரே புராணங்கள் தனி இலக்கியமாக இருந்தன என்று சொல்லலாம். புராணங்களும், மகாபாரதமும் போலவே பல ஆசிரியராற் காலத்துக்குக் காலம் விரித்தும் புதுக்கியும் செய்யப்பட்டன. எனவே, புராணங்களிற்கூட முந்திய பகுதி, பிந்திய இடைச் செருகல் என்றெல்லாமுண்டு. மகாபாரதக் கதைகளுக்கும், புராணக் கதைகளுக்கும் ஒற்றுமை காணப்பட்டால், அது ஒருகால் இரண்டுக்கும் பொதுவானதொரு கதைக் களஞ்சியத்திலிருந்து வந்திருக்க வேண்டுமென்று கருதவேண்டும். அல்லது ஒன்றை மற்றொன்று பின்பற்றியதென்று கொள்ளவேண்டும்.

கதைமூலம்

பொதுவான கதையூற்று கேள்வியாக வந்திருக்கலாம். அதிலே, வேத காலத்திலிருந்து வாய்மொழியாக வந்து பிராமணத்திற் கலந்த கதைகளிலிருக்கலாம். அரசர் அவைக் களங்களிலே சூதர் என்ற பாணர் வகையினராற் பாடப்பட்ட கதைகளிருக்கலாம். சில திட்டமான புராண உருவில் இருந்திருக்கலாம். விஷ்ணு புராணத்திலே ஆதியில் நான்கு புராணங்களே இருந்தனவெனக் கூறப்படுகின்றது. இந்தப் புராணங்களில் மூல சங்கிதையைச் சூதலோமஹர்ஷணரும் அவருடைய மாணாக்கர் மூவரும் கூறினர். சில ஆசிரியர்கள் எல்லாப் புராணங்களும் ஆதியானதாம் புராணமொன்றிலிருந்தே கிளைத்திருக்க வேண்டுமெனப் பலர் கூறுகின்றனர். அஃது அத்துணைப் பொருத்தமுடைய கருத்தன்று. பழைய கிரந்தங்களிலே புராணம் என்று குறிக்கப்பட்டால், அது பழைய மரபு என்றே கொள்ளவேண்டும். வேதம், மிருதி, சுருதி என்பவற்றிற்குச் சாதாரணமாக என்ன பொருளுண்டோ அதே பொருளையே புராணத்துக்கும் கொடுக்கவேண்டும். ஆதியிலே புராணம் என வழங்கப்பட்டவற்றுக்கும் இக்காலத்திற் புராணமென நாம் கொள்ளும் நூல்களுக்கும் பல பேதங்களுண்டு.

புராண இலக்கணம்

புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் அய்ந்து இலக்கணத்தைக் குறிப்பிடுவர். அவை சர்க்கம் (சிருட்டி), பிரதி சர்க்கம் (அழித்து மறுமடி உண்டாக்குவது), வம்சம் (தெய்வபரம்பரை), மன்வந்தரம் (மனுக்களின் காலம்), வம்சியானு சரிதம் (அரச வமிசங்களின் வரலாறு) என்பனவாகும்.

இன்று நிலவும் புராணம் எதிலும் இந்த இலக்கணங்களை முற்றாய்க் காண முடியாது. சில புராணங்களிலே இவற்றைவிட வேறுபல விஷயங்களும் காணப்படுகின்றன. வேறு சில இந்த இலக்கணங்கள் சிறிதுமின்றி வேறு விஷயங்களைக் குறிப்பிடுகின்றன. இன்றுள்ள புராணங்களிலே பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.

பிற்காலத்திற் புராணத்துக்கு இலக்கணம் வகுத்தவர்கள் பஞ்சலக்கணம் உபபுராணங்களுக்கே யுரியனவென்றும், மகாபுராணங்கள் தசலக்கணம் பெற்றிருக்க வேண்டுமென்றும் விதித்தனர். இவை விருத்தி (தொழில்), ரக்ஷா (தெய்வங்களின் அவதாரம்), முத்தி (வீடு), ஹேது (அவ்யக்தமான உயிர்), அபாச்ரய (பிரமம்) என்பனவாகும்.

இவற்றைவிட, பிரமா, விட்டுணு, சூரியன், உருத்திரன் என்ற தெய்வங்களின் பராக்கிரமத்தைக் கூறுவனவாயும், உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும், அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும் கூறுகின்றனவாயுமிருக்கின்றன. இது கூடப் பூரணமான இலக்கணம் எனச் சொல்ல முடியாது. புராணங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அடக்கியுள்ளன என்று ஹரிப்பிரசாத சாஸ்திரி என்னும் அறிஞர் கூறுகிறார்.

பதினெண் புராணங்கள்

பரம்பரையாகக் கூறப்பட்டு வந்த புராணங்கள் 18. இவை மகாபுராணங்கள். பின்வருமாறு:

பிரமம், பதுமம், விஷ்ணு, வாயு, பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், அக்கினி, பவிஷ்யம், பிரம்மவைவர்த்தம், வராகம், லிங்கம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மத்ஸ்யம், கருடம், பிரமாண்டம் என்பன.

வாயு புராணத்துக்குப் பதிலாகச் சிவபுராணமும், பாகவதத்துக்குப் பதிலாக தேவீபாகவதமும் பேசப்படுகின்றன.

----------------- தொடரும்-- கி.வீரமணி -”உண்மை” 1-15 2012

4 comments:

Jeevanandam. S. said...

Dear Sir,

The articles and facts which posted in this blog is very relevant to the society.

I need to give a suggestion regarding the blog. Kindly use some visible colors for the content. The Most of the time I am not able to read it, due the colors which is not even show the sentences.I hope the changes will helpful to others.

தமிழ் ஓவியா said...

திருமலை வெங்கடாசலபதி கோவிலில் நடக்கும் தில்லுமுல்லுகள்


இந்தியாவிலேயே அதிக அளவில் பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்லும் கோவில்களில் முதல் இடத்தைப் பெற்றிருப்பது திருப்பதி-திருமலை வெங்க டேசப் பெருமாள் கோவிலாகும். அதே போல் அதிக வருமானம் கொண்ட பணக்காரக் கோவிலாகவும் இது விளங் குகிறது. இதன் ஆண்டு வரவுசெலவு திட்டம் ஒரு சிறு மாநிலத்தைப் போன்று 2000 கோடி ரூபாய் அளவில் இருப்ப தாகும். இக்கோவில் நிர்வாகத்தில் 98 துறைகளில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கி, தரிசனத்துக்காக திருமலை செல்லும் பேருந்தைப் பிடிப்பது முதல், தங்குமிட ஒதுக்கீட்டை இணை நிருவாக அலுவலரிடமிருந்து பெறுவது, மொட்டை அடித்துக் கொள்வது, தரிசனம் செய்வது, லட்டு பிரசாதம் வாங்குவது என்று அனைத்திலும் யாருக்காவது லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற அள வில் இக்கோவில் நிருவாகத்தில் லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது.

தரிசனம் காணவரும் பக்தர்கள் படும் பாடு

ஆர்ஜித சேவை, நைவேத்தியம், சுப்ரபாதசேவை, தோமாலை சேவை என்பது போன்ற பலவகைகளான வழி பாடுகள் மற்றும் சடங்குகளுக்காக தினமும் எட்டு மணி நேரம் ஒதுக்கப் படுகிறது. முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்கு என்று நாள்தோறும் 3-4 மணி நேரம் செலவாகிறது. இவை யெல்லாம் போக பொதுபக்தர்களின் தரிசனத்துக்கு நாள்தோறும் 10-12 மணி நேரமே கிடைக்கிறது. கோவில் நிரு வாகம், செயல் முறைகள் பற்றி வெளிப் படையாகவும், நியாயமாகவும் தேவஸ் தானம் நடந்து கொள்ளாமல் போனால், பெரும் அளவிலான பக்தர்களின் மனதில் எரிச்சலும், கோபமும் எழத்தான் செய்யும். பெருமாள் சிலை இருக்கும் இடத்தி லிருந்து 100 மீட்டர் தொலைவில், ஒரு மணி நேரத்தில் 5000 - 6000 பக்தர்கள் மின்னல் வேகத்தில் தரிசனம் செய்து வைக்கப்படுகின்றனர். எந்த பக்தரும் ஒரு நிமிடம் கூட நிற்கமுடியாது. ஜருகண்டி, ஜருகண்டி என்று கோவில் ஊழியர்கள் பக்தர்களைத் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.

தமிழ் ஓவியா said...

கடந்த வைகுண்ட ஏகாதசி அன்று திருமலை கோவில் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தது. 15,000 முக்கிய பிரமுகர் களுக்கு தேவஸ்தானம் பாஸ் வழங்கிய தால், சாதாரண பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேர்ந்தது. அலிபிரி, சீனிவாசமங்காபுரம் வழியாக கால் நடையாக வந்த பக்தர்கள், அவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப் பட்டிருந்தபோதிலும், தரிசனம் செய்யா மலேயே திரும்பிச் செல்ல வேண்டிய தாயிற்று.

தரிசனத்துக்கான டோக்கனை நான் ஜனவரி 4 ஆம் தேதி இரவு வாங்கினேன். ஜனவரி 7 ஆம் தேதி பிற்பகலில் எனக்கு தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று பெங்களூரு அய்.பி.எம். நிருவாக அதிகாரி எல்.வி.கிஷோர் நினைவு கூர்கிறார். 1940-களின் இடைக்காலத்தில்தான் திருமலை கோவில் வரை பேருந்தில் செல்ல மலைப்பாதை அமைக்கப் பட்டது. அதுவரை பக்தர்கள் மலை அடிவாரத்தி லிருந்து திருமலைக்கு நடந்துதான் சென்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் திருமலையின் தோற்றமே முற்றிலுமாக மாறிப்போனது. தேவஸ்தானத்தின் அதிகாரத்தில் இருந்த அலுவலர்கள், இடைத்தரகர்களின் துணையோடு எதற்கெடுத்தாலும் கையூட்டு பெறுவது, தருவது என்ற நடைமுறையை உருவாக்கி வளர்த்து விட்டனர். திருமலைக்கு இப்போது வரும் பக்தர்கள் அவர்களது கருணையில் உள்ளவர்களே என்று ஆந்திர உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பர்வதராவ் கூறுகிறார். அதிகாரிகளின் குறுக்கீடுகள், இடை யூறுகள், செல்வாக்கு மிகுந்த, உயர் பதவிகளில் உள்ள அரசியல்வாதிகளின் தலையீட்டினால் பின்பற்றப்படும் ஏறு மாறான கொள்கைகள் திருமலையின் பெயருக்கே பெருங்களங்கத்தை ஏற் படுத்திவிட்டன.

தரிசனத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களால் பக்தர்கள் படும் பாடு

பெருமாளுக்கு முன் பக்தர்கள் அனைவரும் சமமே என்று கூறப்படுகிறது. ஆனால், தேவஸ்தான அதிகாரிகளின் கண்களுக்கு பொதுமக்களை விட முக்கியப் பிரமுகர்களே முக்கியமானவர் களாக ஆகிவிட்டனர். கோவிலின் வைகுந்தம் பகுதியில் வரிசையில் உட் கார்ந்து காத்திருந்த பக்தர்கள் பொறுமை இழந்து மார்ச் 18 அன்று அங்கேயே முழக்கங்கள் எழுப்பினர். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அன்று தரிசனத்திற்கு வந்திருந்ததால், பக்தர்கள் நீண்ட நேரம் காக்க நேர்ந்ததே இதன் காரணம். இந்த ஆண்டில் மட்டும் இதற்கு முன் ஜனவரி 8, 25, மற்றும் பிப்ரவரி 5, 6 என்று பலமுறை தரிசனத்துக்காக ஆளுநர் வந்திருக்கிறார்.

காலை, மாலை இரு வேளைகளிலும் தரிசனத்துக்கென அதிக அளவாக 1500 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக் கப்படலாம் என்ற அளவு 3000 - 4000 என்று உயர்ந்து கொண்டே போகிறது. அதனால் சாதாரண பக்தர்கள் 3-4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட முக்கிய பிரமுகர்கள் யார், யார்? தேவஸ்தான விதிகள்படி அதற்கென அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், அய்.ஏ.எஸ்.,அய்.பி.எஸ். அதிகாரிகள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. 1 கோடி ரூபாய்க்கும் மேலாக நன்கொடை அளித்தவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்களும் முக்கிய பிரமுகர்களாகவே கருதப் படுகின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் கோவிலுக்கு வந்துவிடுவதில்லை என்பதால், அவர்கள் வருவதைப் பற்றி எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அவர்களுடன் வரும் ஒரு பட்டாளத்துடன் நீண்ட நேரம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது, சாதாரண பக்தர் களைப் பெரும் சிரமங்களுக்குள்ளாக்கு கிறது. இது போதாதென்று, அவர்கள் தரும் பரிந்துரைக் கடிதங்களுடன் வருபவர்கள் ஒரு பெரும் பட்டாளமாகும். முக்கிய பிர முகரின் பரிந்துரைக் கடிதம் வைத்திருப்ப வரும் முக்கியப் பிரமுகராகவே கருதப் படுகிறார். முக்கிய பிரமுகர்களின் கால் களில் விழுந்து வணங்குவதே தேவஸ் தானத்தின் தற்போதைய தலைவர் கனிமூரி பாபிராஜூவுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். முக்கிய பிர முகர்களின் கடிதங்களுடன் வருபவர் களுக்கும் அவர் முக்கிய பிரமுகர்களின் பாஸை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி வாரி வழங்குகிறார் என்று இந்து தேவாலய பரிரட்சன சமிதியைச் சேர்ந்த கமலானந்த பாரதி சாமி குற்றம் சாட்டு கிறார். பெருமாளின் பல்வேறுபட்ட சேவை நிகழ்ச்சிகளுக்கும், தரிசனத்திற்கும் அனுமதி அளிப்பதற்கான முக்கிய பிர முகர்களின் பரிந்துரைக் கடிதங்களைக் கையாள்வதற்கென்றே ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு விசேட அனுமதி வழங்கப் படும் பிரமுகர்களின் எண்ணிக்கையை 1500-க்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இப்போ தெல்லாம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தினமும் எவ்வளவு முக்கிய பிரமுகர்கள் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்று ஏன் தேவஸ்தான அறிக்கை வெளியிடக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் சமஞ்சி சீனிவாஸ் கேட்கிறார். கோவில் முன் னேற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட் டுள்ள பணிகளுடன் இந்த முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களுக்கு இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரமுகர்களின் பட்டியலை மாற்றி அமைக்காதவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக் காது என்று தேவஸ்தான நிருவாக அதி காரியாக உள்ள அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

- (தொடரும்) 7-4-2012