Search This Blog

28.6.10

நடிகர் சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு என்ன பதில்?


கோவிலும் தீண்டாமையும்

கோவைஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்தரங்குகளும், ஆய்வரங்கங்களும், கவியரங்குகளும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன. பெருந்திரளாகக் கூடிப் பொது மக்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக நேற்று முற்பகல் (27.6.2010) நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற வித்தாக விளங்கும் தமிழர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் சிவகுமார் அவர்களின் உரையும் முத்தாய்ப்பாகவே ஒலித்தது.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியி லேயே நிற்கும் நிலைதான்.

இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.

ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடை பிடித்து நடந்துவரும் அப்பாவி பக்தன் 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவி லுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.

தந்தை பெரியாரும், கோவிலையும், சாமி யையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத் தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நடிகர் சிவகுமார் ஓர் அருமையான கருத்தை சொல்லவேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.

மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியி ருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.

பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பியிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நடிகர் சிவகுமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைக்கும் கோவிலுக்கும் மூல விக்கிரத்தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வதற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?

நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்? என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.

இதில் காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?

--------------------”விடுதலை” தலையங்கம் 28-6-2010

12 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Sri said...

உள்ளத்திலிருந்து உங்கள் ஜாதி ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை ரொம்ப பிடித்து இருக்குது.நானும் அப்படித்தான்.அது மட்டுமில்லாது தமிழனின் தலை விதியை மாற்றுவதற்கு தமிழலராகிய நாம் ஒன்றுப்படவேண்டும்.

goma said...

’எனக்கு இவ்வளவு தெரியும் பார் ”,என்ற தொனியில் மேடை ஏறும் பலருக்கு மத்தியில்,”எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்” என்ற அடக்கமுடன் உரை ஆற்றுவது,
திரு.சிவகுமார் மட்டுமே.

Anonymous said...

என்ன கேள்வி:

“இது என்ன நியாயம்?’

அதாவது, பணம் படைத்தவனுக்கு இறைவனை அருகில் நின்று கும்பிட்டு செல்ல உதவுகிறார்கள். மற்றவர்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.

இதற்காக சிவக்குமார் கோயிலுக்குச்செல்வதில்லையாம்!

நான் கேட்கிறேன்: ஏன் திருப்பதிக்குப் போய் கால்கடுக்க நிற்க வேண்டும் சிவக்குமார் போன்றவர்கள்?

திருமலைவையாவூர் சென்று வாருங்கள் சிவக்குமார். அதற்கு தென் திருப்பதி என்ற திருநாமம் உண்டு. அங்கே எவ்ரும் எதுவும் கேட்க மாட்டார்கள். விருப்பமிருந்தால் கொடுக்கலாம். இல்லாவிட்டால் வெளியே போ எனச்சொல்ல மாட்டார்கள்.

அது கிடக்கட்டும். திருப்பதிக்கு வருவோம். உண்மைதான். பணம் படைத்தவர்க்ள், அரசியல்வாதிகளுக்குத் தனிச்சலுகை.

காரணம். அவர்க்ள் உதவி தேவைப்படுகிறது கோயிலை ஓட்ட. ஆயிரந்தான் கடவுளென்றாலும் மனிதன் தானே மணியாட்ட வேண்டும்? எனவே அவர்க்ள் பணம் படைத்தோரை விலக்கமுடியாது.

எனினும், பணமில்லா பாராரிகளை வெளியே போ என்றா சொன்னாரக்ள்? அவர்களுக்கு இலவச தரிசனம் உண்டல்லவா?

அவர்கள் எண்ணிக்கையில் மெத்து இருப்பதால், வரிசையில்தானே விட முடியும்? குமப்லாக ஒரேயடியாக விட்டால், நெருக்கடியில் அல்லவா மடிவார்கள்?

ஆரையும் திருப்பதிக்கு வா, வந்தால்தான் உனக்கு மோட்சம் என நிர்பந்தம் உண்டா?

எல்லாவற்றும் மாற்றுப்பரிகாரம் உண்டு சிவக்குமார்.

தெரியுமா, அரியக்குடி செட்டியார் கதை? இதே கதைதான். தன்னால் திருப்பதி வரயியலவில்லை என்றதனால், உன் ஊரிலேயே கட்டிக்கொள் ஒரு திருப்பதியை என்ற பதில். அதனால், அரியக்குடி உண்டானது.

சிவக்குமாரும் ஒரு அரிக்குடியை உருவாக்கலாமே?

என்ன நியாயம் என்ற கேள்விக்கு என்பதில்.

நியாயமே.

Thamizhan said...

ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து வருவதுதான்.
திருப்பதிக்குச் சென்று படும் பாட்டைப் பார்த்தால் ஆண்டவனே அய்யோ இப்படி ஏமாற்றிக் கொள்ளையடிப்பவர்களை நம்பி, முடியை இழந்து,மூளையை இழந்து,பணத்தையும் நேரத்தையும் வீண்டிக்கிறீர்களே என்று வருத்தப்படுவார்.குழந்தைகளையுமா கொண்டுவந்து இப்படி அவதிப் படுத்துவது என்று நொந்துதான் போவார்.
இரு விநாடிகள் சிலையைப் பார்க்க இந்தப் பாடா?

tamil4true said...

மனநிலை பாதிக்கப்பட்ட ஒவியாவே, அண்ணா கேட்ட இந்த கேள்விகளுக்கு, உண்மையில் உனக்கு (பகுத்தறிவு) இருந்தால் பதில் சொல்

பெரியாரின் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில் பேசினார் அண்ணா.
அவர் திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு மடலின்
கடைசியில் இப்படிச் சொல்கிறார்:

"அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர கேட்போர்
காது குளிரக் கூறுவதும் அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும்
பெருமையும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும்
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப்
பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது. அந்த
வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத்
திருமணமாம்.

'கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு' என்று ஊரார்
பரிகாசம் செய்கிறார்களே. 'ஊருக்குத்தானய்யா உபதேசம்' என்று
இடித்துரைக்கிறார்களே.

'எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒருகாலை வீட்டிலும், ஒரு
காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ
ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை' என்றெல்லாம்
பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி
தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.

வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப் படுகிறோம்
தனிமையிலே!

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு
காரசாரமாக, எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்!

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும்
கொள்கையையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது
தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.
நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டுமக்களின்
நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன
என்று தெரிவித்து விட்டார்.

இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால்
துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான்
சாதாரணமானதென்று சொல்ல முடியும்?

நூற்றுக் கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம்
பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ
தாத்தாவைப் பார், வணக்கம் சொல்லு!' என்று கூறுவர். கேட்டோம்
களித்தோம்.

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மனியம்மையைக் காட்டி 'தாத்தா
பெண்ணு' என்று கூறுவர்.

இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம். பனிவிடை செய்துவந்த
பாவையுடன்.

சரியா முறையா என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி.என்.அண்ணாதுரை"

தமிழ் ஓவியா said...

//மனநிலை பாதிக்கப்பட்ட ஒவியாவே, அண்ணா கேட்ட இந்த கேள்விகளுக்கு, உண்மையில் உனக்கு (பகுத்தறிவு) இருந்தால் பதில் சொல்//

அட அறிவுக் கொழுந்தே tamil4true

பெரியார் ஒன்றும் காம இச்சைக்காக திருமணம் செய்ய வில்லை. இயக்க நலன் கருதியே பெரியார் அப்படிச் செய்தார்.

நீ சுட்டிக்காட்டும் கட்டுரை 1949 வாக்கில் அண்ணாவல் எழுதப்பட்டது. அப்போது அண்ணா கூட பெரியாரை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அப்படி எழுதினார். அதன் பின் பெரியாரைச் சரியாகப் புரிந்து கொண்டு 1967 ஈல் அண்ணா எழுதியது இதோ

“அன்னை மணியம்மையார் பற்றி அண்ணா

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.

நூல்: “அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிந்தனை முத்துகள் –பக்கம் 284

இப்போது புரிகிறதா.

முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு எதையாவது தத்துப் பித்துன்னு எழுதாமல் அறிவுபூர்வமாக எழுதவும்.

தமிழ் ஓவியா said...

tamil4true

மணியம்மையார் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1960 இல் எழுதிய கட்டுரையை தருகிறேன். படியுங்கள்!தெளியுங்கள்!!




”தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒருகுன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம்.தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம்.தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல,தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அதுமட்டுமல்ல

குன்றூடைக்கும் தோளும், நெருப்புமழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் காண்போம். – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பது கண்டோம்.

யாரைப் புகழ்ந்து எழுதினோம்,புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ – நம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார்.தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு;மக்களின் மீது வைத்திருக்கும் அருள் மற்றொன்று.

ஆயினும்

காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றி பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது;அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது.பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப்பெண்ணை,
அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப்பொருளாலும் அழகு பெறக்கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி – அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளிக் தம் தலையில் வைத்தார் என்பதுமில்லை.

----------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் - 10-4-1960 – “குயில்” இதழில் எழுதிய கட்டுரை

virutcham said...

செமொழி மாநாட்டில் கலைஞரும், கலைஞர் குடும்பமும் கலைஞர்களும், கழகத் தோழர்களும், கழிப்பறை கழுகுபவனும், சாதாரண மக்களும் ஒன்றாகத் தான் நடத்தப் பட்டார்களா ?
அங்கே மேடையில் பேசியவர்களை விட சிறந்த பேச்சாளர்கள் தமிழ் நாட்டில் இல்லையோ? எல்லோரும் சமம் என்றால் ஏன் திராவிட அரசியலே பல்லாண்டுகளாக நடக்கும் தமிழ் நாட்டில் இன்னும் ஒத்தை ரூபாய் அரிசிக்கு தமிழ் மக்களை கையேந்த விட்டு, ஒரு குடும்பம் மொத்த பதவியையும் சுருட்டி வைத்து இருக்கிறது? இந்து அறநிலையத் துறை அரசிடம் தானே இருக்கிறது? அப்போ பொறுப்பு அரசுக்குத் தானே.
கிராமத்தில் இரெட்டை குவளை முறையை மாத்த ஒட்டு வங்கி அரசால் முடிந்ததா?

எங்கள் வீட்டுக் கழிப்பறையை எங்கள் வீட்டு உறுப்பினர்கள் தான் சுத்தம் செய்கிறோம். காந்திக்குப் பின் எந்தத் தலைவரும், எந்த கலைஞனும் தன வீட்டுக் கழிப்பறையை என்ன தான் உண்ட தட்டைக் கூட சுத்தம் செய்ததாகக் கேட்டு இருக்கிறீர்களா?

சும்மா இருட்டு அறையில் புழுக்கத்தில் மணி அடிக்கும் ஒரு சிறு கூட்டம் மொத்த நாட்டையும அடக்கிக் கொண்டு இருப்பதாக சொல்லிக் கொண்டு அதில் குளிர் காய்ந்து கொண்டு இருக்கும் தலைகளை சிறிது சிறிதாக நாங்கள் (மக்கள்) புரிந்து கொள்ளத் துவங்கி விட்டோம்.

தமிழ் ஓவியா said...

//தெரியுமா, அரியக்குடி செட்டியார் கதை? இதே கதைதான். தன்னால் திருப்பதி வரயியலவில்லை என்றதனால், உன் ஊரிலேயே கட்டிக்கொள் ஒரு திருப்பதியை என்ற பதில். அதனால், அரியக்குடி உண்டானது.

சிவக்குமாரும் ஒரு அரிக்குடியை உருவாக்கலாமே?//

சிவக்குமாருக்கு ஒரு கோயில் விஜய குமாருக்கு ஒரு கோயில், அருண்குமாருக்கு ஒரு கோயில் என்று ஒவ்வொருவரும் இப்ப்டியே கட்டிக் கொண்டு போனால் விளங்கி விடும். இப்போது மக்கள் தொகையை மிஞ்சும் அளவுக்கு கடவுள்கள் என்ணிக்கை அதிகமாக உள்ளது.
இனி ஆளாலுக்கு கோயிலை உண்டாக்கினால் ...நிலை என்ன?

விமர்சித்தாலும் பொருத்தமாக விமர்சிக்க வேண்டமா?
Jo Amalan Rayen Fernando

மணிகண்டன் said...

இந்த பதிவுக்குக் கூட ஏன் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் என்று புரியவில்லை. கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மிகவும் நியாயமானவை. அதுவும் கடவுள் நம்பிக்கையாளர் கேட்டிருப்பது கூடுதல் தார்மீக உரிமையும் கூட சேருகிறது. நல்ல தலையங்கம்.

ஏன் சார் ? கட் & பேஸ்ட் செய்து போடும் பதிவுகளுக்கு விளம்பர பக்கங்களை சேர்க்கிறீர்கள் ? உங்கள் ப்ளாக் வந்தாலே பாப் அப் வருகிறது.

நம்பி said...

Blogger Jo Amalan Rayen Fernando said
//அதாவது, பணம் படைத்தவனுக்கு இறைவனை அருகில் நின்று கும்பிட்டு செல்ல உதவுகிறார்கள். மற்றவர்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.

இதற்காக சிவக்குமார் கோயிலுக்குச்செல்வதில்லையாம்!//

வேறு எதற்காக கோயில் செல்ல வேண்டும்...நிம்மதிக்காக, மனஅமைதிக்காக கோயில் செல்கிறேன் என்று கூறும் சாமான்யனின் நம்பிக்கைகாகவா..? அல்லது அங்கே போயும் மனவுளைச்சல் பெறுவதற்காகவா...?

//ஆயிரந்தான் கடவுளென்றாலும் மனிதன் தானே மணியாட்ட வேண்டும்? //

கோயிலுக்கு வெளியே நின்று பெரிய மணியை ஆட்டுபவனை மனிதன் எனகிறீரா...? இல்லை கோயில் கருவறைக்குள்ளேயே அழுக்குடன் இருந்து கொண்டு அந்த கோயிலை கட்டியவனையே உள்ளே செல்வதை, தீட்டு எனக்கூறித் தடுக்கும் பார்ப்பனனை மனிதன் என்று கூறுகிறீரா...? யார் மனிதன்?

ஆயிரந்தான் கற்பனை கடவுளாயிருந்தாலும் அங்கேயே தொழிலை வச்சு ஜாதி பிரிச்சுடறியே இப்படி போடனும் பதிவை...

சரி சிவக்குமார் விஷயத்திற்கு வருவோம்...அதற்காக மட்டும் கோயிலுக்கு போவதில்லை என்று அவர் கூறவில்லை...இதற்கு முன்னமே ஒரு கூட்டரங்கில் பேசியிருக்கிறார்...அவரை தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய கோயிலில் உள்ள சாமியின் பட்ம, கோயில் படம் என்று வரைபடம் வரைய பார்ப்பனர்கள விடவில்லை...அவரை பார்ப்பனர்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினர்....தள்ளிவிட்டு என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று அனைத்து பார்ப்பனர்களும் ஓன்று சேர்ந்து அகங்காரமாக குரல் கொடுத்தனர். அவர் எவ்வளவு மன்றாடியும்..விடவில்லை..முதலில் அவர் தோற்றத்தை பார்த்து அவரையும் பார்ப்பனர் என்று முடிவு செய்துவிட்டனர். பின்னர் அவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்தவுடன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினர். எல்லாவற்றையும் வாரிக்கொண்டு வந்தார் அன்று தெரிந்தது...பெரியாரின் போராட்டம் ஏன்? என்று, அன்றுதான் உணர்ந்தார் தந்தை பெரியாரைப்பற்றி..

என்ன இதற்கும் பதில் வைத்திருக்கிறீரா? ஏன் இந்த கோயிலைப்போய் வரையவேண்டும் (எல்லாக் கோயிலிலும் இந்த எழவுதானே...கோயிலை திராவிடன் கட்டினால் உள்ளே நோகாமல் மணியாட்டிவிட்டு தட்டில் தட்சணை வாங்குபவன் பார்ப்பனன் தானே...இது செட்டியார் கட்டிய கோயிலுக்கும் பொருந்தியிருக்கும் போய் பாரும்) ...தனியாக கோயில் கட்டி வரைந்திருக்கலாமே...என்று பதில் வைக்கப்போகிறீரா...

கேரளாவிலாவது மணியாட்டுதற்கும் அர்ச்சனை செய்வதற்கும் ஒரு சில கோயில்களில் ரோபாட் வைத்திருப்பதாக செய்தி முன்பே வந்தது...இங்கு கோயில் மணி ஆட்டுவது வரைதான் எந்திரம் வந்துள்ளது.