வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வந்தால் தான் இரண்டாம் முறையாகப் புதுப்பிக் கப்பட்ட டெசோவுக்கு ஓராண்டு வயது.
ஒரு வயதுக்குள் அவன் சாகசம் அபரிமிதமானது. ஆச்சரியத்திற்குரியது.
டெசோ தொடக்கப்பட்டபின் பல்வேறு விமர்சனப் புயல்கள் கிளப்பப்பட்டன. டெசோ மாநாடு ஒரு நயவஞ்சக நாடகம் என்றார் வழக்கம்போல் அன்பர் வைகோ.
குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினை என்பது
எங்களுக்கு மட்டுமே உள்ள கைமுதல் என்று கருதிக் கொண்டு இருந்த வர்கள்
காழ்ப்பு நெருப்பை அள்ளிக் கொட்டினர்.
அவற்றையெல்லாம் புறந்தள்ளி டெசோ வெற்றிப் புரவியில் தன் வீச்சான பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தது - இருக்கிறது.
குறிப்பாக டெசோ சார்பில் சென்னை யில் மாநாடு ஒன்று கூட்டப் பெற்றது (12.8.2012).
இதனைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை
சிலரால். குறிப்பாக ஆட்சியில் இருக்கும் அண்ணா திமுகவின் முதல் அமைச்சர்
ஆட்சி அதிகாரச் சவுக் கெடுத்து மிரட்டிக் கொண்டு இருந்தது.
மாநாடு நடத்திட அனுமதி மறுக்கப் பட்டது. கடைசியில் உயர்நீதிமன்றம் ஆட்சியாளரின் காதைத் திருகி அனு மதியை அளிக்க ஆணை பிறப்பித்தது.
எதிர்ப்புகள் நான்கு கால்களோடு பாய்ந்ததென்றால் டெசோவோ ஆயிரங் கால் சிங்கமாகக் கர்ச்சித்து எழுந்தது.
டெசோ மாநாடு ஈழத் தமிழர் பிரச்சினையை
இந்தியாவையும் கடந்து உலக அளவில் எடுத்துச் சென்ற சாதனையைச் செய்தது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு டெசோ
மாநாட்டுக்குக் கட்டியம் கூறினர்.
ஈழத் தமிழர்கள் என்ற நிலையையும் தாண்டி
இலங்கைத் தீவில் மனித உரிமை களுக்கு எதிரான காட்டுவிலங்காண்டித் தனம்
கட்டவிழ்த்து விடப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றும் அதனதன் கண்ணோட்டத்தில் கனமான கருத்தினைக் கொண்டவை.
படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களின் ஒவ்வொரு
பிரச்சினையும் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, கவனத்துக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டு, தேவை யான நடவடிக்கைகள் குறித்து விரிவான தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிரதமரைச் சந்தித்து, டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப்
பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அளிக்கப்பட்டு, இந்தப்
பிரச்சினையில் நீதி கிடைக்க இந்திய அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும்
என்று வற்புறுத்தப்பட்டன.
குறிப்பாக மாநாட்டுத் தீர்மானங்கள்மீது
டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில் கீழ்க்
கண்ட கருத்துருகள் முன் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த காலத்தில் இந்திய
அரசால் செய்யப்பட்ட இந்தக் குறுக்கீடுகளை நாங்கள் நினைவுபடுத்தும் போது,
இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் இதர நிலைமைகளைக் கருத்தில் கொண்டு,
இந்தப் பிரச்சினை தற்போது அய்.நா. அமைப்பின் மூலமாக சர்வ தேசக்
கண்ணோட்டத்துடன் தீர்க்கப்பட வேண்டிய தெற்காசியப் பிரச்சினையாக மாறி
விட்டது என்று டெசோ நம்புகிறது.
எனவே, நாங்கள் இந்திய அரசிடம் கீழ்க்கண்ட வேண்டுகோள்களை வலி யுறுத்துகிறோம்.
1. மாநாடு முடிவு செய்தபடி இலங்கையிலுள்ள
தமிழர்கள் கோரி வரும் அரசி யல் தீர்வை அவர்களே முடிவு செய்ய அவர்களுக்கு
உரிமைகள் வழங்கும் தீர் மானத்தை - அய்.நா. பொதுச் சபையிலும், அய்.நா. மனித
உரிமைகள் மன்றத்திலும் கொண்டு வர வேண்டும்.
2. அதைத் தொடர்ந்து இந்திய அரசால்
முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக அய்.நா. அமைப்பின் இதர உறுப்பு
நாடுகளைக் கொண்டுவர சாத்திய மான அனைத்து ராஜீய உத்திகளையும் எடுக்க
வேண்டும்.
3. இந்தியாவில் வாழும் அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடி யுரிமை அல்லது நிரந்தர வசிப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.
4. தமிழர்களுக்கான மறுவாழ்வு உதவியாக
இந்திய அரசு வழங்கிய ரூ.500 கோடி மற்றும் இதர பொருள் உதவிகள்
இப்பணிகளுக்காக முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க ஒரு
குழுவை அனுப்ப வேண் டும்.
5. சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர் களின்
விடுதலை. வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும்
பாதுகாப்பாகவும் தாய்நாடு திரும்புதல், தமிழர் பாரம்பரியம், கலாச் சாரம்
ஆகியவற்றை மீட்டல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்தல், மருத்துவ வசதிகள்
விரிவாக்கம் மற்றும் 10 ஆவது தீர்மானத்தில் கோரியவாறு மறுவாழ்வுப் பணிகளை
மேற்கொள்ளுதல் ஆகியவை உட்பட தீர்வுகளை நடை முறைப்படுத்துவதில் அதன்
முன்னணிப் பாத்திரத்தை வகித்தல்;
6. இந்திய அரசின் கட்டுப்பாட்டில்
கச்சத்தீவை மீண்டும் எடுத்தும் தனுஷ் கோடி அல்லது மண்டபத்தில் இந்திய
கடற்படை தளம் அமைத்தல் (தீர்மானம் 11) ஆகியவை மூலமாக இலங்கைக் கடற்படை
தாக்குதல்களிலிருந்து இந்திய மீனவர்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.
7. இந்த மாநாடு கோரியவாறு (தீர் மானம் 12) இலங்கைப் பாதுகாப்புப் படை யினருக்கு பயிற்சி அளிப்பதைத் தவிர்த்தல்.
இவ்வாறு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தமது
கடிதத்தில் முக்கியமாகக் குறிப்பிட்டு இருந்தார். பிரதமரிடமிருந்து வந்த
25.9.2012 நாளிடப்பட்ட கடிதம் ஈழத் தமிழர்களின் மீள் குடியேற்றம் உள்ளிட்ட
பிரச்சினைகளில் இந்தியா அரசு உரிய கவனம் செலுத்தும் உத்தரவாதம் இருந்தது.
தமிழ்நாடு, இந்தியா, அடுத்து உலகின் காதுகளில் எட்ட அடுத்த அடி எடுத்து
வைக்கப் பட்டது முறையாக.
தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் - டெசோ ஒருங்கிணைப்பாள ருமான
டி.ஆர். பாலு ஆகியோர் நியூ யார்க் சென்று அய்.நா. மன்றத்தில் துணைச்
செயலாளர் யான்லிசான் அவர் களைச் சந்தித்து, டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை
அளித்து தக்கவகையில் விளக்கம் அளித்தனர் (1.11.2012).
ஜெனிவா சென்று மனித உரிமை ஆணையத்தின்
இயக்குநர் நவநீதம் பிள்ளை அவர்களையும் சந்தித்து (7.11.2012) ஈழத்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்தினர். பொது
வாக்கெடுப்பின் அவசியமும் எடுத்துக் கூறப்பட்டது.
இலண்டன் மாநகரில் இங்கிலாந்து
நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட
(7.11.2012) உலகத் தமிழர் பன்னாட்டு மாநாட்டிலும் கலந்து கொண்டனர்.
டெசோ மாநாட்டுத் தீர்மானத்தை
எதிரொலிக்கும் வகையில், இலங்கை ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
இனப்படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட
குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா.வுக்கு வேண்டு கோள் விடுக்கும்
அம்மாநாட்டு தீர்மானம் டெசோவுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.
அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப்
பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் இந்தியாவிற்கான
தூதர்களையும் டெசோ சார்பில் நேரில் சந்தித்து, அந்நாடுகள் டெசோ மாநாட்டுத்
தீர்மானங்களுக்கு ஆதரவாக அய்க்கிய நாடுகள் அவை யின் மனித உரிமைப்
பாதுகாப்பு ஆணை யத்தில் குரல் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்
கொள்ளப்பட்டது.
இனப்படுகொலை செய்த கொடுங் கோலன் ராஜபக்சே
இந்தியா வருவதைக் கண்டிக்கும் வகையில் டெசோ சார்பில் கறுப்புடை அணிந்து
கண்டன ஆர்ப் பாட்டமும் சென்னையில் நடத்தப்பட்டது (8.2.2013).
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை -
சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதைக் கண்டித்து, அது தடுக்கப்பட இந்திய
அரசு உதவி புரிய வேண்டும் என்று வலியுறுத்தி இராமேசு வரத்திலும்
(18.2.2013) நாகப்பட்டினத்திலும் (19.2.2013). டெசோ சார்பில் எழுச்சி
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த இரு ஆர்ப்பாட்டங்களிலும் திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், டெசோ
உறுப்பினர்கள் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.
வீரபாண்டியன் ஆகியோரும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகங்களின்
பொறுப்பாளர்களும் பங் கேற்றனர். பல்லாயிரக்கணக்கில் மீன வர்கள் உட்பட
தமிழர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன்
பிரபாகரன் அவர்களின் மகன் 12 வயது பாலகனான பாலச்சந்திரனின் மார்பில் 5
குண்டுகளைப் பாய்ச்சி, ஈவு இரக்க மற்ற முறையில் யுத்த நெறி களுக்கு
முரணாகக் காட்டு விலங்காண் டித்தனமாகச் செயல்பட்ட இன வெறியன் ராஜபக்சேமீது
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 5.3.2013 அன்று
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் டெசோ
சார்பில் நடத்தப் பட்டது.
கட்டுக்கடங்காத தமிழர் கூட்டம்! காவல் துறையோ கலங்கிப் போய் விட்டது. கைது செய்ய போதிய வாகனங்கள் இல்லாமல் திணறி நின்றனர்.
போராட்ட வீரர்களின் ஒத்துழைப்பால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கைதுக்கு ஒத்துழைத்தனர். மாலை விடுதலையும் செய்யப்பட்டனர்.
அதே நாளில் டில்லியில் தி.மு.க.
நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டெசோ ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு
அவர்களின் தலைமையில் நாடா ளுமன்ற வளாகத்தில் இதே காரணங்களுக்காக
நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து
கொண்டு எழுச்சி முழக்கமிட் டனர்.
சற்றும் ஓய்வில்லை; அடுத்த நட வடிக்கை _
நேற்று முதல்நாள் (7.3.2013) டில்லியில் கான்ஸ்டிடியூசன் கிளப்பில் டெசோ
சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய காங்கிரஸ் அமைச்சர் குலாம் நபி ஆசாத்
உட்படப் பங்கு கொண்டனர். தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்
திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி செகதீசன் மற்றும்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பங்கு ஏற்றனர்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, சமாஜ்வாடி கட்சி, தேசிய
மாநாட்டுக் கட்சிகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பான கருத்துகளை
எடுத்துக் கூறினர்.
ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத்தில்
அமெரிக்கா கொண்டு வரவி ருக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக் கும் என்று
காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய மத்திய அமைச்சர் குலாம்
நபி ஆசாத் தெரி வித்தது சிறப்பானது.
பொன் மலர் மணம் வீசியது போல் அதே நாளில்
(7.3.2013) நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களின்
முயற்சியால் இப்பிரச்சினை பற்றி சிறப்பு விவாதத்துக்கு வழி கோலப்பட்டது.
நான்கு மணி நேரம் சூடுபிடிக்கும் விவாதம் நடந்தது. பி.ஜே.பி. சார்பிலும்
(யஷ்வந்த் சின்கா) சமாஜ்வாடி சார்பில் முலாயம் சிங், ராஷ்ட்ரிய ஜனதாதளம்
சார்பில் அதன் தலைவர் லாலு பிரசாத், திமுக சார்பில் டி.ஆர். பாலு,
டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதிமாறன், அதிமுக சார்பில் தம் பித்துரை என்று
பிரச்சினையைப் பீரங்கிபோல முழங்கினர். ஈழத் தமிழர் பிரச்சினை நான்கு மணி
நேரம் நாடாளுமன்றத்தில் சூடு பிடித்தது என்பது இதுதான் முதல் தடவை.
மாநிலங்களவையிலும் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா உட்பட பல கட்சியினரும்
ஓங்கி ஒலித்தனர்.
டெசோவின் இத்தகைய இடை விடாத தொடர்
நடவடிக்கைகள் உலக அரங்கில் ஈழத் தமிழர்களின் உரிமை வாழ்வுக்கு, சுயமரியாதை
வாழ்வுக்கான புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்பதைத் திறந்த மனத்தோடு
அணுகு பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
டெசோவின் தொடர் செயல் பாட்டையும் ஈழத்
தமிழர் பிரச்சினை புதிய கட்டத்திற்கு வந்ததையும் பொறுக்க முடியாத
பார்ப்பனச் ச(க்)திகள், ஈழப் பிரச்சினையைக் கை முதலாகக் கருதிக்
கொண்டிருந்த சிலரும், - அமைப்புகளும் டெசோவின்மீது சகதிவாரி இறைக்கும்
முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை
இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதற்குத் தொடர் அழுத்தம் கொடுத்தே தீர
வேண்டும் எனும் சர்வ ஜாக்கிரதைக் கண்ணோட் டத்தில் வரும் 12ஆம் தேதி தமிழகம்
தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தத்திற்கு டெசோ அழைப்பும் கொடுத் துள்ளது.
ஈழப் பிரச்சினையில் குறிப்பிட்ட
கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தான் பாடுபடுகிறார்கள் என்றும் டெசோவில்
இடம் பெற்றுள்ள கட்சிகள் தலைவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யாதது போலவும்
உலகம் தழுவிய அளவில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு இருந்தது.
அம் மாயையை டெசோ உடைத்துத் தூள் துளாக்கி விட்டது.
ஈழத் தமிழர்களுக்கான விடியல் டெசோவால்தான்
ஆகும் என்ற நம்பிக்கை உலகத் தமிழர்கள் மத்தியில் உறுதியான எண்ணமாக உருவாகி
விட்டது. அந்த உறுதி; உறுதி செய்யப் படும் _ டெசோ வீரன் தன் வீரப் பராக்
கிரமங்களை அன்றாடம் முத்திரை யாகப் பொறித்து வருகிறான்.
இப்பொழுது கூட நம் கனிவான வேண்டுகோள்
ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக்
கூறும் தலைவர்கள், அமைப்புகள் டெசோவைத் தாண்டித் தாராளமாகச் செயல்படட்டும்
வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம். அதைவிட்டு விட்டு ராஜபக்சே மனம் குளிரும்
வகையில், எதிரி யார்? நண்பர் யார்? என்ற வகை தொகை தெரியாமல்
துப்பாக்கியைத் திசை மாற்றிப் பிடிக்க வேண்டாம் என்பதே டெசோ வீரனின் கனிவான
வேண்டுகோள்!
டெசோ வீரன் பராக்! பராக்!!
டெசோ வீரன் பராக்! பராக்!!
-------------------கவிஞர் கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் அவர்கள் 9-3-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
55 comments:
முட்டுக்கட்டை போடும் ராமனைத் தோலுரிப்போம்!
காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என்று தமிழ்நாடு சுற்றிச் சுற்றி இதற்குள்ளாகவே நின்று போராடும் ஒரு பரிதாப நிலையை என்னென்று சொல்லுவது!
இந்தியத் தேசியம் நமக்கு அளிக்கும் பரிசு இது தானா என்ற வேதனை விலாவைத் துளைக்கிறது.
இவ்வளவுக்கும் நியாய விரோதமாக, சட்ட விரோதமாக எதையும் தமிழ்நாடு எதிர்பார்க்க வில்லை; வலியுறுத்தவும் இல்லை. தமிழர்களுக்கு உரிய நியாயமான, சட்டத்திற்குட்பட்ட உரிமை களுக்காகத் தான் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த அடிப்படை உரிமைப் பிரச்சினைகளில் இந்நாட்டில் சுரண்டிவாழும் உயர்ஜாதி ஆதிக்கக் கூட்டமோ, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்தத் தமிழ் மக்களின் உழைப்பை - பொருளைச் சுரண்டித் தின்னுகிறோம் - தின்ற சோற்றுக்காவது நன்றியோடு இருப்போம் என்கிற அளவுக்கு இல்லாமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; நரி எப்படியோ போய்த் தொலையட்டும்; விழுந்து பிராண்டாமல் இருந்தாலே போதும் என்று நினைப்பதற்கு இடமில்லாமல், தமிழர்களின் உரிமை உணர்வுகளுக்கும், போராட் டங்களுக்கும் எதிராகக் காட்டிக் கொடுக்கும் பிணம் தின்னும் கழுகுகளாக அல்லவா நடந்து கொள்கிறது.
நம்முடைய போராட்டம் இந்திய அரசை நோக்கி இருக்கிற காரணத்தால், இவர்கள் பக்கம் நம் பார்வை திரும்பாது என்கிற தைரியத்தில், கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனி, இதையும் தமிழ் மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இவர்களைக் கொஞ்சம் கண்காணியுங்கள் என்று கூற வேண்டிய நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வன்முறையில் அல்ல - தர்க்க வாதங்களின் அடிப்படையிலேயே தகர்க்க வேண்டும்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டம் - ஒன்றரை நூற்றாண்டைக் கடந்தது. இதில் தேவையில்லாமல் பார்ப்பன சக்திகள் மதத்தைக் கொண்டு வந்து போட்டு முட்டுக்கட்டை போடுகின்றன.
மதமும், பக்தியும் அவரவர்களின் வீட்டுக் குள்ளேயே இருப்பதுபற்றிக் கவலையில்லை. பொதுப் பிரச்சினையில் மக்களின் வளர்ச்சிப் பிரச்சினையில், வாழ்வாதாரப் பிரச்சினையில் கொண்டு வந்து குறுக்கே போட்டால் அதனை உடைத்துத் தள்ளு வதைத் தவிர, வேறு மார்க்கம் இருந்தால் மேதாவிமார்கள் அருள்கூர்ந்து சொல்லட்டும்.
17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினான் என்று ஒரு கும்பல் பாழடைந்து போன தங்கள் மூட மதக் கருத்தைச் சொல்லுவதும், இந்தியாவிலேயே மிகப் பெரிய அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம் அதற்குச் செவி சாய்த்துக் காலம் கடத்துவதும் ஏற்புடையதுதானா? நாம் 2013இல் இருக்கிறோமா என்று நமது உடம்பை நாமே கிள்ளிப் பார்த்து சோதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெட்கக் கேடு! மானக் கேடு!!
மற்ற மதங்களைப் பற்றிப் பேசுவதில்லையே என்று மாய்மாலம் பேசும் கபோதிகள், மற்ற மதங்கள் இப்படியா மக்களின் பொருளாதார வளர்ச்சியோடு, வேலை வாய்ப்பு திட்டத்தோடு மல்லுக்கட்டி நிற்கின்றன.
இதில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்ன வென்றால், சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதலில் ஒப்புதலும், கருத்துருவும், தொழில் நுட்ப ரீதியான அனுமதியும் வழங்கியவர்களே இந்தப் பிஜேபியினர். அந்தப் பிஜேபியினர்தான் இப்பொழுது இந்தப் பிரச்சினையில் ராமனைக் கொண்டு வந்து போட்டுக் குளிர் காய்கின்றனர்.
காலந்தாழ்ந்தாலும் இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு எந்த விலையும் கொடுப்போம் என்பது ஒருபுறம்; அதே நேரத்தில் இந்து மதம் அதன் நம்பிக்கைகள் மக்கள் வளர்ச்சிக்குக் கேடானவை. முட்டுக்கட்டையானவை - முடை நாற்றம் எடுக்கும் கசமாலக் குப்பைகள் என்பதை நார் நாராகக் கிழித்து மக்கள் மத்தியிலே தோரணங்களாகத் தொங்க விடுவோம் - அந்த வகையிலே இந்த சனாதனப் பார்ப்பனக் கும்பல் வகையாக நம்மிடம் வந்து மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்த தொடர் பிரச்சாரத் திட்டத்தைத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அறிவித்துவிட்டது தோழர்களே தயாராவீர்! தமிழர்களே ஒத்துழைப்புத் தாரீர்!
மாணவிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி மாநிலங்களில் இப்பொழுது +2 தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும் மாணவர் மற்றும் மாணவி களின் எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர்; இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 746; மாணவர் களின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 788.
இந்தப் புள்ளி விவரம் தந்தை பெரியார் பார்வையில், திராவிடர் கழகத்தின் பார் வையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பெண்களை ஏன் படிக்கக் கூடாது என்று கட் டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக் குவதற்காக (குடிஅரசு 16.11.1930) என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பாகும்.
ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் முதலில் பெண்ணைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!
அதற்கான காரணத் தையும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெய ரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால் முதலில் நமது பெண்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெ னில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர் அவர் களுடைய தாய்மார்களே! அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார் களே தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (குடிஅரசு 1.5.1927)
இந்தக் கருத்தை யெல்லாம் 86 ஆண்டு களுக்கு முன் தந்தை பெரியார் சொல்லியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
தந்தை பெரியார் அவர் கள், தம்மால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளின் சார்பில் தொடங்கப்பட்ட கல்விக் கூடங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களுக்கே என்பதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும்.
அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பு எதற்கு? என்று ஒருபழ மொழியையே இங்கு உண்டாக்கி வைத் துள்ளனர்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அவர் கண்ட இயக்கம் பாடுபட்டதன் பல னாகவும், காமராசர் போன் றவர்கள் ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததாலும் இங்கே கல்விப் புரட்சி ஏற்பட்டது.
பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க ஆரம்பித்ததற்கு பிறகு அவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2 தேர்வுகளில் மாணவர் களைவிட சதவிகிதத்தில் அதிக தேர்ச்சி பெறுவோர் பெண்களாகவே இருந்து வருகின்றனர். கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று ஒரு பெண் ணுக்கு இலாகா பிரித்து வைத்திருந்தாலும், பெண்கள் கல்வி பெறாத நிலையில், கடவுளைக் கிழித்தெறிந்த கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் சகாப்தத்தில் பெண் கல்வி ஓகோ என்று ஓங்கி நிற்கிறது.
மேலும் வளரட்டும்! - மயிலாடன்
இணையதளத்தில் ஈழத் தமிழர்களின் இதயக் குரல்கள்!
சமீபத்தில், ஈழத்தில் உள்ள 89 தமிழ் நகரங்களின் பெயர்கள் சிங்கள அரசால் மாற்றப்படவுள்ளது என்ற விடயத்தை கலைஞர் அய்யா அவர்கள் ஒரு கடிதமாக எழுதி இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தார். பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத் தமிழர்களுக்கு இச்செய்தி அதிர்வு இணையம் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்செய்தியை வாசித்ததோடு, இவை ஆங்கில இணையங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. கலைஞர் அய்யா அவர்கள் கடிதமும் அய்ரோப்பிய ஆங்கில இணையங்களில் வெளியாகியுள்ளது.
தமிழில் வெளியான செய்திகளுக்கு கிடைக்கப் பெற்ற சில பின்னூட்டங் களை நாம் இங்கே தருகிறோம். ஈழத் தமிழர்கள் இன்று என்ன சொல் கிறார்கள் என்று பார்ப்போமா?
-சுதாகரன் (ஜெர்மனி)
உங்கள் செய்தியைப் பார்த்தேன். மிகவும் கவலையாக உள்ளது. இனி நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட இருக்கிறதா? என் பிள்ளைகளுக்கு நான் இனி எங்கே பிறந்தேன் என்று சொல்ல முடி யாத நிலை. ஆனால் இதனைச் சுட்டிக் காட்டி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி!
- ஜெயசங்கரி (சுவிஸ்)
சில இணையத்தின் செய்திகளை பார்த்து, நானும் கலைஞர் அவர்களை குறைசொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் இப்போது செய்வது எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியை தருகிறது.
- திருநாவுக்கரசு (லண்டன்)
2009-ல் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதைவிட்டு விட்டு, இனியாவது கலைஞர் அய்யா செய்வதை ஏற்று அவருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்!
- ஷோபனா (லண்டன்)
நல்ல விசயத்தை கலைஞர் அய்யா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவர் செயல்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. இதனை வேறு தமிழக தலைவர்கள் ஏன் செய்யவில்லை?
- நிதர்ஷன் (அமெரிக்கா)
89 தமிழ் நகரங்களையும் சிங்களத்தில் மாற்றினால், இனி அம்மாவை நாம் அம்மே என்று சிங்களத்தில் தான் கூப்பிட வேணும் போல இருக்கே அண்ணா. இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டதக்கது. அவராவது கடிதம் எழுதினார். அங்கே சீமான் எங்கே? வைகோ எங்கே? இல்லை.. பழ. நெடுமாறன்தான் எங்கே? இவர்கள் ஈழப் பிரச்சனையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?
- நிலாசுதன் (முன்னாள் போராளி) ஈழம்
மட்டக் களப்பில் நாம் காலம் காலமாக கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை தொப்பிகல என்று சிங்களம் மாற்றி விட்டதே. இப்ப தமிழ் ஊடகங்கள்கூட தொப்பிக்கல என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக கலைஞர் அய்யா அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.
கடவுள் மறுக்க மாட்டார்!
கடா வெட்டுகிறேன், மொட்டை போடுகிறேன், அலகு குத்துகிறேன் எனப் பக்தர்கள் வேண்டுவதற்குப் பதிலாக இப்படி வேண்டினால் என்ன ?
''கடவுளே எனது வேண்டுகோள் நிறைவேறினால் முதியோர் இல்லத்திற்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுக்கிறேன், ஒரு ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்கிறேன், புற்றுநோய் தடுப்புக் கழகத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கிறேன் என வேண்டிக் கொள்ளலாமே? ஏழை பக்தராக இருந்தால் சாலையில் உள்ள பள்ளங்களை மூடுகிறேன், சாலையோரம் 10 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கிறேன்", என வேண்டலாம் தானே ?
உங்கள்கடவுள் என்னமறுக்கவா போகிறார்?
- வி.சி.வில்வம்
நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இவை Screen Capture என்ற மென்பொருட்களின் உதவியுடன் செய்யபப்டுகின்றன. இந்தப் பதிவில் அது எவ்வாறு என்று பார்ப்போம்.
இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று.
1. Freez Screen Video Caputre
2. HyperCam
3. http://camstudio.org/
4. http://www.totalscreenrecorder.com/
5. Camtasia - சிறந்த மென்பொருள்
இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
எப்படி ரெகார்ட் செய்வது?
ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.
இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.
நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும். இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கும்(உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.). ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.
நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும். உங்கள் வீடியோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர்களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள். வீடியோ சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB )எனவே ஏதேனும் Video Converter பயன்படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ ஆக Convert செய்வது நல்லது. (After Conversion 30MB)
- See more at: http://www.karpom.com/2011/08/blog-post.html#sthash.x8dPPUAr.dpuf
பழங்கள்
ஆப்பிள்: இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது.பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது
வாழைப்பழம்: உடல் நலக் குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும் ,உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப்பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.
ஆரஞ்சு: 3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு ஜீரண உறுப்புகளும்,நோய் எதிர்ப்புச் சக்தியும் வல்லுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை: இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்.
மாதுளம் பழம்: இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம்பழம்.
அறிவு தழுவிய அணுகுமுறையால்... அனைத்தையும் வெல்லலாம்!
அய்யா அவர்கள்மீதும்... தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் மீதும் திராவிடர் கழகக் கொள்கைமீதும் நிரம்ப மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும், விடுதலை எழுத்தாளர் மானமிகு கி.இராமநாதன் அவர் களின் மகன் இரா. ராசா என்பவர் புதிதாக ஒரு வீடு கட்டி புதுமனை புகுவிழா கடந்த 7.2.2013 அன்று நடத்தினார்.
தந்தையார் வழியிலே.. கழகத் தலைவர்களை வைத்து திறப்பு விழா செய்ய வேண்டுமென அவர் விரும் பினாலும், அவரது இணையரின் வழி உறவினர் அதனை ஏற்க வில்லை!.. அய்யரை வைத்துத்தான நடத்த வேண்டும் எனக் கூறி.. அய்யரையும் வரவழைத்து விட்டனர்.
பக்கத்து வீடாக இருந்தாலும், அதில் இராமநாதன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் வற்புறுத்தவே அவர், கோபப் படாமல்.. இருந்தால், நான் சில நிமிடங்கள் அய்யரோடு பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
அவர்களும் அதற்கு சம்மதிக்கவே.. மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யரிடம் சென்று.. அமைதியாக அய்யா! உங்கள்மீது எனக்கு கோபமில்லை, ஆனால், இந்த மந்திரம் சடங்குகளில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இந்த வீட்டை மிகுந்த சிரமத்திற்கிடையே கட்டி, முடித்தது என் மகனுடைய அயரா உழைப்பும்..
கட்டிய கட்டிடத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியும்தான்!.. ஆனால், எதிலுமே சம்பந்தமில்லாத நீங்கள், இப்போது வந்திருக்கிறீர்கள்.. நீங்கள் இங்குள்ளதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் மட்டும், ஈடுபடாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள் என்றார்!
உறவினர்கள் திகைத்து நின்றனர். ஆனால் எதுவும் பேசவில்லை. இவர் பேசியதும் சரியென்றே உணர்ந்தனர்!
அய்யர், உடனே எழுந்தார். நீங்கள் யார் என்பது எனக்கும் தெரியும். உங்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் வந்தேன். உங்கள் பிரியப்படியே பேஷா செய்யுங்கோ.. நேக்கும் இதிலே பூரண சம்மதந்தான் என்ன செய்யறது? வழி வழியா வந்துடுத்து...நேக்கு இதை விட்டா வேறு எதுவும் தெரியாது. அதனாலே தான் இவா கூப்பிட் டதும் வந்துட்டேன்.. தப்பா நினைக் காதேள்...! என்று சொல்லிவிட்டு...
அவர் பொருள்களை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார். பிறகு, என் நண்பர், வந்திருந்து, வியப்போடு இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள், உறவினர் அனை வருக்கும் இனிய விருந்து தந்து மகிழ்ந்தார்! கொரநாட்டுக் கருப்பூர் ஒரு புதுமையை அன்று சந்தித்தது!
அறிவு தழுவிய இனிய அணுகு முறையால் அனைத்தையும் வெல்லலாம் என்பதை என் நண்பர் இராமநாதன் தனது செய்கையால் மெய்ப்பித்துக் காட்டியதை அனை வரும் பாராட்டி மகிழ்ந்தனர்!
- நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்
பொன் மொழிகள்
மிருகங்களைப் போல நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது. - காந்தியார்
நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர் முன்னிலையில் பாராட்டுங்கள். - ஜவஹர்லால் நேரு
மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். - வள்ளலார்
எவருடைய மனம் குழப்பம் அடையாமல் இருக்கிறதோ, அவருக்கு அச்சம் என்பதே சிறிதளவும் இல்லை. - புத்தர்
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை. - அறிஞர் அண்ணா
பொன் மொழிகள்
மிருகங்களைப் போல நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது. - காந்தியார்
நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர் முன்னிலையில் பாராட்டுங்கள். - ஜவஹர்லால் நேரு
மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். - வள்ளலார்
எவருடைய மனம் குழப்பம் அடையாமல் இருக்கிறதோ, அவருக்கு அச்சம் என்பதே சிறிதளவும் இல்லை. - புத்தர்
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை. - அறிஞர் அண்ணா
அண்ணாவை அவமதிக்கலாமா அண்ணா பெயரில் உள்ள ஆட்சி?
பரமத்தி சண்முகம்,
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர்,
சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையில் உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை என்றா லும் அண்ணா அவர்களின் பெயரால் கட்சி வைத்திருக்கும் அ.தி.மு.க. அரசின் கொள்கைப் பிடிப்பை? பறைசாற்றும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பராமாயணத்தின் உயரிய?
கருத்துக்களைப் பரப்பும் அறிஞர்களுக்குக் கம்பர் விருதும் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களுக்கு
சொல்லின் செல்வர் விருதும்
இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்
என்பதே அந்த அறிவிப்பாகும்.
ஜெயலலிதா தலைமையில் இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணாவையே சவாலுக்கு அழைப்பது போல கம்பராமாயணத்தைப் பரப்புவோர்க்கு கம்பர் விருது வழங்குவேன் என்று தனது கொள்கை அறிக்கையிலேயே கூறியிருப்பது ஆணவமும் ஆரியத் திமிரும் கொண்ட அறிவிப்பல்லவா?
கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மேற்கொண்ட புரட்சி, மாபெரும் புயலைக் கிளப் பியது தமிழகத்திலே!
மாபெரும் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், புலவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு போர்க் கொடி தூக்கி னார்கள். அரசாங்கம் திணறியது. செய்வதறியாமல் கைபிசைந்து நின்றது. பெரியாரும், அண்ணாவும் மேற் கொண்ட அறிவுப் புரட்சிக்கு முன் னால் ஆரியம் விழி பிதுங்கி நின்றது.
இராஜாஜி அவர்கள் இராமா யணத்தைச் சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலே ஒரு நூலாக எழுதி, தான் வகுத்த பெரும் பதவிகளின் துணை கொண்டு அந்த நூலை இலட்சக் கணக்கிலே பரப்பினார் பின்னாளில், ஆனால் அய்யாவும், அண்ணாவும் கம்பராமாயணத் தையும், பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற தங்கள் பிரச்சாரத்தை நாடெங்கும் பரப்பிய நேரத்தில் கம்பதாசர் களாலோ, பெரியபுராணப் பிரசங்கி களாலோ எதிர் கொள்ள முடிய வில்லை?
அண்ணா அவர்களின் சொற் பொழிவைக் கேட்க மக்கள் அலை அலையாய்த் திரண்டனர்.
இரத்தப் புரட்சியைவிடக் கோடி மடங்கு உயர்ந்தது கருத்துப்புரட்சி என்றார் தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார். அப்படி பரவியது அண்ணாவின் கருத்துப் புரட்சி!
அண்ணாதுரை கடல் போன்ற பெருங்கூட்டங்களில் பேசுவதைக் கேட்டுக் கொண்டு கடல் ஒரே அமைதியாக இருக்கும். இடை யிடையே கை தட்டும் ஆரவாரம் ஒன்றே அந்தக் கடலிடையே கேட்கப்படும் மணிக்கணக்கில் பேச்சு நிகழும். ஆகையால் அவரு டைய சொற்பொழிவு கற்றோருக்கு அறிவு விருந்து ஆகிறது. கல்லா தாருக்கு பகுத்தறிவுத் தூண்டுதல் ஆகின்றது. கருத்து வேறுபாடு உடையவர்களுக்கு ஆராய்ச்சிச் சுடர் விளக்கு ஆகின்றது என்கிறார் டாக்டர் மு.வ. அறிஞர் டாக்டர் மு.வரதராசனா ரின் இந்தப் புகழுரை அண்ணா கம்பராமாயணத்தை எதிர்த்து அதன் இன விரோத, ஆபாச, ஆரியத் துதிபாடும் கருத்துக்களை எதிர்த்து ஆற்றிய அரிய பேருரைகளைக் கேட்டுத் தான். எதற்காக இதைக் குறிப்பிடுகிறோம் என்றால் கம்பனை விமர்சித்தும், கண்டித்தும் அண்ணா அவர்கள் ஆற்றிய உரைகள் இன உணர்வை ஆரிய மாயையை விளக்கியதால்தான் கம்பனுக்கு ஆதரவாகப் பல்வேறு தமிழறிஞர்கள் வாதாடிப் பார்த்தார்கள் கம்பரா மாயணத்தின் கவிதை நயத்தை சொல்லழகை, வர்ணனைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற இலக்கிய நோக்கில் அவர்களுக்கெல்லாம் அண்ணா அவர்கள் தக்க விடை யிறுத்தார்கள்.
ஆக, அண்ணா அவர்கள் கம்பராமாயணம் தமிழர் நலனுக்கு எதிரானது, தமிழனின் கலாசாரத்தை அழிக்க ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்பதை யாரும் மறுக்க முடியாத ஆதராங்களோடு தமிழ் மக்களுக்கு எடுத்து விளக் கினார்.
09.-02.-1943 அன்று சென்னை சட்டக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சொற்போரில் கம்ப ராமாணயத்தைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் வாதிட்டார்கள்.
தமிழறிஞர் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் கம்பரா மாயணத்தை தீயிட்டுக் கொளுத்தக் கூடாது என்று வாதிட்டார். இரா.பி.சேதுப்பிள்ளை கம்பரா மாயணத்தில் கரை கண்டவர். கம்பராமாணயத்தை ஆழமாக அறிந்து ஆய்ந்து தோய்ந்தவர். ஆனாலும் சொற்போரில் அண்ணா அவர்களே வெற்றிபெற்றார்கள். அண்ணாவிடம் சொற்போரில் வெற்றி பெற முடியாதவர்களை நெஞ்சில் தேக்கி வைத்திருந்த கலைஞர் அவர்கள் உரையாடல் எழுதிய இராஜாராணி திரைப் படத்தில் வரும் சாக்ரடீஸ் நாடகத் தில் சாக்ரடீசை விட்டே பேசித் தோற்றவர்கள் என்று எதிரியை ஏளனம் செய்ய வைத்தார்.
அதே போல இன்னொரு விவாத மன்றத்திலும், மாபெரும் தமிழறிஞர் பேராசிரியர் சோமசுந்தர பாரதி யாரிடமும் வாதிட்டு அண்ணாவே வென்றார் அந்தக் காலத்தில்.
இந்தப் பிரச்சினை தமிழகத்தையே குலுக்கிப் போட்டது. தமிழ் புலவர் கள் இலக்கிய அறிஞர்கள், கவிஞர் கள், ஆராய்ச்சியாளர்கள் புராணப் பிரசங்கிகள் ஆகியோரிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த விவாதத்தில், அறிஞர் அண்ணா அவர்கள் கம்பனைப் பற்றிக் குறிப்பிடும்போது,இச்சபையில் சீத்தலைச் சாத்தனா ரும் ஒட்டக்கூத்தரும் புகழேந்தி போன்றோரும் கூடிக் கம்பன் கவிதையிலே திறமை உள்ளதா, இல்லையா என ஆராய்வதற்கு நாம் கூடவில்லை.
திறமை வேறு, தன்மைவேறு, விளைவு வேறு கம்பனின் கவித் திறமை கண்டு நாங்கள் வியக்கிறோம்,அந்தத் திறமை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம். அவரது கவிதையின் விளைவாக தமிழ் இனம் தாழ்ச்சியுற ஆரியத்திடம் அடிமைப் படும் விளைவு நேரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திறமையல்ல அதன் தன்மையை, விளைவை என்பதை அறிஞர்கள் தெரிய வேண்டுகிறேன். கம்பர் இராமகாதை பாடியதன் நோக்கம் யாது? என்று கேட்கிறேன் என்று மனம் நொந்து அறிஞர்கள் கூடிய சபையிலே அறைகூவுகிறார். இதனை, நம் தலைவர் முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்கள் தமது 20 வயதிலேயே எழுதிய நச்சுக்கோப்பை ஆபாசத்தை அழகுத்தட்டில் ஊற்றி பாயாசமென் றால் பருகுவோர் பண்டிதர்?
கம்பரும் கிழாரும் நம் அரும் தமிழகத்தில்
வெம்பிய கலை வகுத்தனர்
கருத்துக்குக் கலையா?
கட்டுப்பாட்டுக்குக் கலையா?
வெறுத்தொதுக்கும் காலமே
வேகமாய் வா
என்று கவிதை நடையில் உரையாடல் தீட்டியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வழங்கும் விருதும், பரிசும் அண்ணாவுக்கு எதிரான தல்லவா? தந்தை பெரியாரைப் பழிக்கும் செயல் அல்லவா? புரட்சிக் கவிஞர் அவர்கள் புரட்சி உணர்ச்சிக்கு எதிரான தல்லவா?
அண்ணா பெயரில் கட்சி, கொடியில் அண்ணா உருவம் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் ஜெயலலிதா, யாருக் காவது விருது வழங்கவேண்டும் என்று விரும்பினால், அதனை அவர் தனி மேடையில் தன் கட்சித் கூட்டத்தில் அறிவிக்கட்டும். அரசு அறி விப்பாக, அதுவும் கொள்கை அறிவிப்பாகச் செய்வது எவ் வளவு பெரிய துரோகம்!
தமிழக மக்கள் விரும்பாத செயல்
தமிழ் இனம் ஏற்காத செயல்!
நீங்கள் ஒரு கம்பர் மாநாடு கூட்டி அதில் யாரை வேண்டு மானாலும் பாராட்டுங்கள், பரிசு கொடுங்கள்.
கசாப்புக் கடைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து காந்தி ஜெயந்தி விழா நடத்தி பிரி யாணி விருந்தும், பீர், பிராந்தி பானம் வழங்குவது போலல்லவா இருக்கிறது!
கொடியவன் இராஜ பக்ஷே
புத்த கயை சென்று வணங் குவது போலும்
திருப்பதி போய் ஏழுமலை யானுக்கு
அர்த்த ஜாமப் பூஜை நடத் துவது போலும் அல்லவா இருக் கிறது முதலமைச்சரின் செய்கை.
கம்பராமாயணத்தைக் கற்றுத் தெரிந்து செய்யும் காரியமல்ல.
யாரோ சொல்லிக் கொடுத் துத் தாங்கள் உருவாக்கிய கட்சிக்கு அண்ணா திமுக என்று பெயரை வைத்து, அண் ணாவின் உருவத்தை கட்சிக் கொடியில் அச்சடித்துத் தமிழகத்தில் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நாடு மன்னிக்காது. அண்ணாவை வணிக விளம் பரப் பொருளாக்கி, அவரையே தங்கள் சாதி, மத, இன வெறிக் குப் பயன்படுத்தும் அக்கிர மத்தை காலம் வெகுவிரைவில் தக்க தண்டனை தரும்.
மானமும் அறிவும் மனிதனுக் கழகு என்ற அய்யாவின் அறிவுரையை என்று அண்ணா வழியில் கலைஞர் தலைமையில் தமிழ் இனங்காக்கத் துடிக்கும் இலட்சக் கணக்கான திராவிட இளைஞர்கள், இன உணர் வாளர்கள் இந்த அக்ரகார ஆட்சியால் ஏற்பட்டு வரும் களங்கங்களை, அசிங்கங்களைத் துடைத்தெரிய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்.
ஆரியம் அரியணையில்!
ஆணவம், அதிகாரத் தாண் டவமாடுகிறது. திராவிடத்தையே
திரை போட்டு மறைக்கும் சூழ்ச்சி?
தமிழர் தலைவர்பற்றி..
கி.வீரமணி அய்யாவை நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் சித்ரகுப்தன் வீரமணி Key
என்கிறாரே...?
அப்துல்கனி Ex. . கவுன்சிலர், விழுப்புரம்
உண்மைதானே... சமூகநீதி கஜானாவின் சாவி தானே அய்யா அவர்கள்!
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டு 1994ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் குடியரசு தலைவர் மேதகு சங்கர் தயாள் சர்மா அவர் களால் ஒப்புதல் வழங்கப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஒப்புதல் பெறப்படுவதற்கு முன்பு எத்தனை தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் சந்தித்தது என்பதையும், தமிழக முதல்வர் அந்த தடைகளை சட்ட ரீதியாக உடைத்தெறிந்திட அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தகைய பேருதவிகளைச் செய்து பக்கபலமாக இருந்தார் என்பதையும் வரலாற்று ஏடுகள் சாட்சியங் கூறிக் கொண்டிருக்கின்றன.
மேலும், அச்சட்டத்தை 31 (சி) இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திடுவதற்காக அய்யா எவ்வளவு கடுமையாக உழைத்தார்.
தனது கோரிக்கையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை சமூகநீதி பயணம் மேற்கொண்டு அதன் பலனாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 1994ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி விவாதம் எதுவுமின்றி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் அய்யாவை சமூகநீதி கஜானாவின் தங்கச் சாவி (கீ) என்றே கூறுவார்கள்.
(நன்றி: ராஜாளி பிப்ரவரி 2013)
நான் இப்போ மேஜர்!
- சிவகாசி மணியம்
ஆடையின்றி பிறந்த பிள்ளைக்கு
ஆசை ஆசையாய் அணிமணிகள் சேர்த்து
பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்த
பாசமிகு பெற்றோரே கேளீர் ஒரு சொல்!
தூய நற்றமிழ் பெயர் பல இருந்தும்
சுப்ரமணி எனும் பெயரிட்டீர். சாமி பெயராம்!
கேட்டதை வாங்கித் தந்தீர்கள்
கேட்காததையும் திணித்தீர்கள் எம்மீது
கோயிலுக்குக் கூட்டிப் போனீர்கள்
கும்பிட்டு விழக் கற்றுத் தந்தீர்கள்
மொட்டையடித்து சந்தனம் பூசினீர்கள்
காது குத்தி கடாவெட்டி கறிச்சோறு போட்டீர்கள்
தலைவாரி முகம் கழுவி சீருடைதரித்து
தடையின்றி பள்ளி செல்ல துணை நின்றீர்கள்
என்ன பேசுகிறான் எப்படி படிக்கிறான்
என்பதையும் கண்காணித்தீர்கள் அது மட்டுமா...
கனவிலும் கருதாத கடுகளவும் உதவாத
கடவுள் காரியத்தில் கண்டிப்பு காட்டினீர்கள்
இனியும் இது தொடர வாய்ப்பில்லை. ஏன் தெரியுமா?
எனக்கு இப்போது அகவை பதினெட்டு!
இன்று என் பெயர் வாக்காளர் பட்டியலில்...!
பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் முதல்
பாராளுமன்ற உறுப்பினர் வரை வாக்களிக்கும்
உரிமையும் சுதந்திரமும் இப்போது என் கையில்!
ஆறாம் அறிவு ஏற்காத அர்த்தமற்ற ஜாதியை
மதத்தை இறையை ஆட்கொள்ள அடிகோலியது
அப்பாவி அப்பாவும் அம்மாவும் அன்றி
வேறு யாராக இருக்க முடியும்?
திணிப்பில் காட்டீனீர்களே தீவிரம் அது எங்கிருந்து
வந்தது? உங்கள் தாய் தந்தையரிடமிருந்தா?
என் தாத்தாவும் பாட்டியும் குற்றவாளிகளா? புரிகிறது
வழிவழியாய் வந்ததுதான் இந்த வன்கொடுமை என்று!
அதிகப் பிரசங்கியும் இல்லை அத்து மீறலும் இல்லை
பழுதுபட்ட கண்களுக்கு அப்படித் தெரிவதில் வியப்பொன்றும் இல்லை
சிந்திக்கத் தெரிந்த மனிதர் கூட்டத்தில் இவனும் ஒருவன்
ஆம். நான் இப்ப மேஜர்! குழந்தையல்ல
நன்மை எது கொடியவர் யார் எனக்
கண்டறியும் தெளிவும் துணிவும்
சேர்ந்துவிட்ட வயதில் தள்ள வேண்டியதைத்தள்ளி
கொள்ள வேண்டிய கொள்கை மட்டும் போதுமே!
கடவுளை மற மனிதனைநினை என்றுரைத்த
பகுத்தறிவுப் பகலவன் ஈரோட்டுச் செம்மலை
அறிவூட்டும் தந்தை பெரியார் என மக்கள்
கொண்டாடும் ரகசியம் இப்போது புரிகிறதா?
லியாக ஒரு ஜமீன்
(ந.சி. கந்தையா பிள்ளையின் புரோகிதர் ஆட்சி நூலில் 32ஆம் பக்கத்தில் இருப்பது)
பாக்கர் குஞ்சி என்னும் நாட்டைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆண்ட சிற்றரசனின் வீட்டுக் கூரையில் பருந்து ஒன்று விழுந்து இறந்தது. அதனால் நேர்ந்த தீமையைப் போக்குவதற்கும் கண்ணோஜியிலிருந்து வைதீகப் பிராமணர் ஒருவர் அழைக்கப்பட்டார். பெருந்தொகைப் பொருட் செலவில் கிரியை செய்யப்பட்டது. வைதீகர் தனது கூலியாக ஒரு ஜமீனைப் பெற்றார்.
அது இன்றும் அவர்களின் சந்ததியாரிடம் இருந்து வருகிறது.
தேர்வு வந்தது... தோல்வி தந்தது
பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணிக்கு ஜோதிடம், வாஸ்து போன்ற விஷயங்களில் நம்பிக்கை அதிகம். நம்பிக்கை என்பதைவிட வெறி என்றே கூறலாம். லேசாக தலைவலி வந்தால்கூட, என் ராசிப்படி, இன்று நான் அணிந்திருக்கும் இந்த புடவையின் நிறம் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ! என்னவோ?! அதனால்தான் தலைவலிக்கிறது போல! என்று கூறிக் கொண்டு, அணிந்திருக்கும் புடவையை மாற்றி விட்டு, அவரின் ராசிக்குரிய நிறத்திலான புடவையை அணிந்து கொள்வார். அந்தப் பெண்மணிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் சென்ற வருடம் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சரிவர படிக்காமல், பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில் பெயிலாகிக் கொண்டிருந்தான். இதை அந்தப் பெண்மணி என்னிடம் வருத்தமாகக் கூறியபோது, கவலைப்படாதீர்கள் அவனை நல்ல டியூசன் சென்டரில் சேர்த்து படிக்க வையுங்கள். நிச்சய மாக பொதுத் தேர்வில் பாஸாகி விடுவான் என்று கூறனேன். அதற்கு அந்தப் பெண்மணி, தற்போது அவனுக்கு நேரம் சரியில்லை, அதனால்தான் அவனுக்கு இப்படி நடக்கிறது. அவன் ராசிக்குரிய கல்லை மோதிரமாக அணிவித்தால் தேர்வில் பாஸாகி விடுவான் என்று கூறினார். அதற்கு நான், உங்கள் மகனை படிக்க வைத்தாலே போதும், நிச்சயம் பாஸாகி விடுவான் என்றேன். அதற்குள் அவர், என் பேச்சை இடைமறித்து, சொன் னதையே திரும்பச் சொன்னார். இதற்கு மேல் நாம் பேசக் கூடாது என்று அமைதியாகி விட்டேன். அவர் கூறியதுபோலவே, மகனுக்கு ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிவித்தார். பொதுத் தேர்வு வந்தது. அவர் மகன், மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் தோல்வியடைந்துவிட்டான். அந்தப் பெண்மணி தாமதமாகவே தன் தவறை உணர்ந்தார். மனிதர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தின்மீது நம்பிக்கை இருக்கும். ஆனால் அந்த நம்பிக்கை, தீவிரமடைந்து நம்மை முழுதாக ஆக்கிரமித்து விட்டால், அது நம் மூளையை மழுங்கச் செய்து விடும்.
- டி. திவ்யப்பிரியா, சோழிங்கநல்லூர்
நன்றி: தினத்தந்தி குடும்ப மலர் 30.12.2012
டெசோ கருத்தரங்கத்திற்கு பின்னடைவில்லை - தன் நிலைப்பாட்டிலிருந்து டெசோ பின் வாங்காது
பிரதமர் மன்மோகன்சிங் எவ்வித உறுதிமொழியையும் தராதது - ஏன்?
12ஆம் தேதி வேலை நிறுத்தம் நடந்தே தீரும்!
டெசோ அறிவிப்பும், வேண்டுகோளும் சென்னை, மார்ச் 9- டெசோவுக்குப் பின்ன டைவு கிடையாது - ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உறுதிமொழியைத் தராத நிலையில், வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு அளவில் பொது வேலை நிறுத்தம் நடந்தே தீரும் என்று டெசோ அறிவித்துள்ளது.
இது குறித்து டெசோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
7-3-2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட் டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக் கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.
டெசோவுக்குப் பின்னடைவா?
நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன. இவர்கள் அனைவரும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் நடை பெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுதில்லி கருத்தரங்கில் சர்வதேச பொது மன்னிப்பு அவையின் Amnesty International) இந்தியச் சார்பாளர், திரு. அனந்தபத்மநாபன் கலந்து கொண்டார்.
கூடுதலாக மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் அவர்களும் கலந்து கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். உண்மை இவ்வாறிருக்க, டெசோ கருத்தரங்கத் திற்குப் பின்னடைவு என்பது எவ்விதத்தில் பொருந்தும்?
எனினும், காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப் பிரச்சினையில் வெவ் வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது. 7-3-2013 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், அய்.நா. அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால், அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம் என்பதாக உரையாற்றினார். ஆனால், 8-3-2013 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவித்து உரையாற்றிய, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல், தமிழ்ஈழத் தலைவர்களோடு சிறீலங்கா அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பின் வாங்காது - டெசோ!
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங் கிக் கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகின் றோம். எனவே, இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலைநிறுத்தம் வருகிற 12ஆம் நாள் நடைபெற்றே தீரும் என்று தெரிவித் துக் கொள்கிறோம்.
அவ்வேலை நிறுத்தத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு டெசோ அறிக்கை கூறுகிறது.
கம்யூனிச நாடுகளின் கேவலத்தைப் பாரீர்! அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறார்களாம்!
ஜெனிவா, மார்ச் 9- மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கம்யூனிஸ்டு நாடுகள் எதிர்க்கும் என்று கூறியுள் ளனர்.
இதன்மூலம் கம்யூனிசம் பிற்போக் குத்தனத்துக்கு இனப்படுகொலைக்கும் துணை போகும் வரலாற்றுப் பிழை பதிவாகி விட்டது.
இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானம் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. 'இலங்கையில் நல்லிணக்கத் தையும் பொறுப்பு கூறும் கடமையை யும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கையின் பொறுப் புக் கூறும் கடமைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் யோசனையை இத் தீர்மானம் வரவேற்றிருக்கிறது. இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத் தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்குமுறை களும் நீடித்து வருவதற்கும் அமெரிக்காவின் தீர்மானம் கவலை தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக் கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனிவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ் தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலி யோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஆனால் கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கா வின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம் பெற வேண்டும்.. மேலும் வலுவான தாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
சிங்கள ராணுவத்தின் அத்துமீறல் - வீடியோ காட்சிகள்: அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் 11-ஆம் தேதி காட்டப்படுகிறது
எழுத்துரு அளவு Larger Font
கொழும்பு, மார்ச். 9-இலங்கை இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவம் நடத்திய தமிழ் இனப்படு கொலையை சேனல்-4 தொலைக்காட்சி அம் பலப்படுத்தியது. தமி ழர்கள் கொன்று குவிக் கப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சிகளும் சித்ரவதை காட்சிகளும் உலக நாடுகளை அதிர வைத்தன.
இதையடுத்து இலங் கைக்கு எதிராக அய்.நா. மனித உரிமை கவுன் சிலில் அமெரிக்கா கண் டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இலங்கை மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
சேனல்-4 தொலைக் காட்சியானது இலங்கை போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக அடுத் தடுத்த மேலும் பல வீடியோ காட்சிகளை யும் வெளியிட்டது. இவை அய்.நா. மனித உரிமை கவுன்சில் அதி காரிகளுக்கு போட்டு காட்டப்பட்டது. டில்லியில் இந்திய எம். பி.க்களுக்கும் போட்டு காட்டப்பட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது மகன் பாலச்சந்திரனை பிடித்து வைத்து அருகில் இருந்து சுட்டு கொன்றதற்கான ஆதா ரங்களும் வெளியாயின
இதற்கிடையே சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் புதிய வீடியோ காட்சிகள் வருகிற 11-ஆம் தேதி அய்.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போட்டு காட்டப்படு கிறது. இதில் பெண் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் கள் என சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல் லப்பட்ட இளம்பெண் களும் ராணுவ முகாம் களில் சித்ரவதை செய் யப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பெண்கள் பேட்டி!
ராணுவத்தின் பாலி யல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் களின் பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. தாங்கள் அனுபவித்த சித்ரவதைகளையும், கொடுமைகளையும் விளக்கி உள்ளனர். இது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இதன் மூலம் இலங்கைக்கு எதி ரான போர் குற்றச்சாட் டுகள் மேலும் தீவிரம் அடைகிறது.
"முந்தைய நாட்களில் நடந்த மனித வேட்டை" என்ற தலைப்பிட்டு இந்த வீடியோ காட்சி கள் டாக்குமெண்டரி படமாக தயாரிக்கப் பட்டுள்ளது. டில் லியைச் சேர்ந்த பிரபல ஆங்கில தொலைக் காட்சி ஒன்றும் இந்த வீடியோ காட்சிகளை பிரத்தியேகமாக ஒளி பரப்பு செய்ய பேச்சு நடத்தி வருகிறது.
செய்தியும் சிந்தனையும்:
செய்தி: காஞ்சீபுரம் ஏனாத்தூரில் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரில் உள்ள வித்யாலயத்தில் கல்வி உதவித் தொகையுடன் சமஸ்கிருதத்தில் முதுநிலைப் படிப்பு.
சிந்தனை: சங்கரமடம் அல்லவா? அங்கே நீஷப் பாஷையான தமிழை சொல்லிக் கொடுப்பார்களா என்ன?
இந்தியர்களின் கல்வி செலவு குறைவு : ஆய்வுத் தகவல்
புதுடில்லி, மார்ச்,-9 இந்தியர்கள் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக செலவிடும் தொகை மிகவும் குறைவு என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் பயணம் மற்றும் சாப்பாட்டிற்காக இந்தியர்களே அதிகம் செலவு செய்கின்றனர். ஆரோக்கியத்திற்காக 3.9 சதவீத தொகையையும், கல்விக்காக 1.3 சதவீதம் தொகையையும் மட்டுமே இந்தியர்கள் செலவிடுகின்றனர். அதே சமயம் உணவுக்காக 30.1 சதவீதமும், பயணத்திற்காக 8.3 சதவீதமும் செலவிடுகின்றனர். இவ்வாறு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
சபாஷ் சாந்தாராம்...
ஒரு மனிதனை அறியாமை எனும் இருளில் இருந்து மீட்டெடுக்க அவ னுக்கு கல்வி என்கின்ற அறிவு வெளிச்சத்தை ஊட்டினால்தான் அவனால் வீறுகொண்டு விழித்தெழ இயலும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டில் உள்ள மக்களின் கல்வி அறிவையும், வேலை வாய்ப்பினையும் பொறுத்தது ஆகும். சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சீர்கேடு களையும், பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கைகளையும், நாட்டில் புரையோடிப்போயுள்ள சாதி மத வேறுபாடுகளையும் களைந்தெரிய கல்வியால் மட்டுமே முடியும் என்பதே பேருண்மை.
இதனை கருத்தில் கொண்டுதான் உலகத்தலைவர் தந்தைபெரியார் அவர்கள் அல்லும், பகலும் அயராது சிந்தித்ததன் பயனாய் கல்வி வள்ளல் காமராசரின் துணையோடு கிராமங் கள் தோறும் பாடசாலைகள் திறந்து அறியாமையில் மூழ்கிக்கிடந்த பாமர மக்களை கல்வி அறிவு பெறச் செய்தார்.
அதன் பயனாய், பாமர மக்கள் படித்து பட்டம் பெற்று தற்போது வழக் குரைஞர்களாகவும், பொறியாளர் களாகவும், மனித உயிர்காக்கும்; மருத்துவர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர் என்பது பெருமைபடத் தக்க இனிய செய்தியாகும்.
செய்யும் தொழில்கள் எதுவாயினும் அவற்றை உயர்வாக எண்ணிப் போற்றப்படும் அதேவேளையில்; குறிப் பாக சமுதாய மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றுள்ள மருத் துவர்கள் அனைத்து தரப்பு மக்களா லும், மதிக்கப்படுகின்றனர், பாராட் டப்படுகின்றனர், போற்றப்படுகின் றனர்.
ஆனால், இத்தனை உயர்வாக மதிக்கப்படுகின்ற மருத்துவப் படிப்புக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமெ னில், அதற்கு செத்தமொழியான சமஸ்கிருதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்கின்ற சமூக அநீதி பல ஆண்டுகளாக பார்ப்பனர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.
அத்தகைய சமூக அநீதிக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி அதனை அடி யோடு அழித்து ஒழித்தவர் கல்லூரிக்குப் போகாத சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.
இதன் பயனாய், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகளில் ஒரு சிலர் தற்போது மருத்துவப்படிப்பு படித்து தலைசிறந்த மருத்துவர்களாக நன்முறையில் நாளும் பாமர மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் மகத்தான பணியினை மேற்கொண்டுள்ள மருத்து வர்கள், இரவு பகல் பாராமல் மனித நேயத்துடன் விலைமதிப்பற்ற உயிரைப் பாதுகாக்கும் உன்னதமான பணியினை மேற்கொண்டு வருவதை எண்ணி சமு தாய நல ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர்.
இத்தகைய மகிழ்ச்சியான தருணத் தில்தான், தமிழ்நாடு டா
க்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக மயில்வாகனன் நடராஜன் அவர்கள் இருந்தபோது, யாரும் எதிர்பாராத நிலையில்; மருத்துவ மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தேர்விலும் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சிபெற முடியும் என்று மாணவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை அறிவித்தார். இவ்வறிப்பு மாணவர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்தது. இதனால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கும் மிகுந்த சிரமத் திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளா யினர். செய்வதறியாது திகைத்து நின் றனர். மேற்கண்ட அதிர்ச்சி தரும் தகவல் அறிந்து மருத்துவ மாணவர்கள் மட்டு மின்றி, சமூகநீதிச் சிந்தனையாளர்கள், மனிதநேயப் பண்பாளர்கள், கல்வி யாளர்கள், பகுத்தறிவாளர்கள், நடு நிலையாளர்கள் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்! பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் பெரும் எதிர்ப்பு அலைகள் உருவாயின!
இத்தகைய இக்கட்டான சூழ்நிலை யில்தான், நல்வாய்ப்பாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் டாக்டர் டி.சாந்தாராம் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற முப்பது நாட்களிலேயே பழைய நடைமுறைக்கு விடைகொடுத்து புதிய நடைமுறைக்கு வழிவகுத்தார். அதாவது எழுத்துத்தேர்வில் 40 சதவீதமும், எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் மொத்த சராசரியில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தாலே அவர் தேர்ச்சி பெற்ற மாணவராக கருதப் படுவார் என்கின்ற தேனினும் இனிய செய்தியினை வெளியிட்டார்.
இத்தகு தேனினும் இனிய செய்தியை அறிந்து, மருத்துவ மாணவர்கள், மருத் துவப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மனிதநேய மாண்பாளர்கள், சமூக நல ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர் கள் ஆகியோர் இன்ப வெள்ளத்தில் திளைக்கின்றனர்.
ஆனால், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பன ஏடுகள் மருத்துவ மாணவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு தங்களது கோரமுகத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், புதிய துணைவேந்தரின் தற் போதைய நடைமுறை, தரமற்ற இளம் மருத்துவர்களை உருவாக்கத்தான் உதவும் என்று தங்களுடைய வஞ்சகத்தை, காழ்ப்புணர்ச்சியை, பொறாமை மிகுந்த நஞ்சை தனது பேனாமுனையின் மூலம் கொட்டித் தீர்க்கின்றனர்.
தந்தை பெரியார் அவர்களால், பச்சைத்தமிழர் என்று போற்றப்பட்ட காமாராசர் அவர்கள் தகுதி திறமையைப் பற்றி பேசும் பார்ப்பனர்களைப் பார்த்து; தனக்கே உரிய பாணியில் உனது திறமையும், தகுதியும் எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டு தாழ்த்தப்பட்ட மருத் துவர் ஊசிபோட்டு எந்த நோயாளி இறந்தான், பிற்படுத்தப்பட்ட பொறியா ளர் பாலம் கட்டி எந்த பாலம் இடிந்து விழுந்தது என்று நறுக்கென்று கேள்வி களைக் கேட்டு பார்ப்பனர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தார்.
ஆனால், ஆண்டாண்டு காலமாக சூத்திர மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களது உழைப்பை, உதிரத்தை அட்டை போன்று உறிஞ்சி உண்டு கொழுத்து வருகின்ற பார்ப்பனர்கள் எதற்கும் செவிசாய்க்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அவ்வப்போது செயல்பட்டு அவர்களை பின்னுக்குத் தள்ளுகின்ற சதிகாரச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம் அவர்கள் இவ்விடயத்தை சமூகநல நோக்கோடு அணுகி, இவற்றை மருத் துவ மாணவர்களின் எதிர்கால பிரச் சினையாக மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயப் பிரச்சினையாகக் கருதி சரியான நேரத்தில், கவனத்தில் எடுத்துக்கொண்டு பார்ப்பனர்களின் சூழ்ச்சியை, சதிச்செயலை முறியடிக்கும் வகையில்; மருத்துவ மாணவர்களின் தரப்பில் உள்ள நியாத்தைப் புரிந்து கொண்டு மனிதநேயத்துடனும், சமுதாயச் சிந்தனையுடனும் பரிசீலித்து அவர்களுக்கு சமூக நீதி கிடைக்க வழிகோலிய டாக்டர் சாந்தாராம் அவர்களை மருத்துவ மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர் அமைப்பின ரும், மருத்துவப் பேராசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிணைந்து சபாஷ் சாந்தாராம் என்று கையொலி எழுப்பி வாயார, மனதாரப்பாராட்டி மகிழ்கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.
வாழ்க பெரியார்
வளர்க பகுத்தறிவு
- சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.
ஈழவர்களின் கோவிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி
கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களில் சென்ற சில வருஷங்களாக கவர்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும் ஆலயங்களுக் குள் சென்று தொழ தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள் கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. எனினும், இவர்களுக்குச் சொந்தமான கோவில்கள் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ் தானங்களிலிருந்த போதிலும், இவர்கள் தங்களிலும் கீழ்ப்பட்டவர் களாகக் கருதப்படும் புலையர்களை அவற்றுள் அனுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம் பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுவதற்காக அவர்கள் தங்களுடைய எல்லா கோவில்களுக்குள்ளும் புலையர் முதலிய தாழ்ந்த ஜாதியார் என்போரை விட முயற்சி செய்து வருகின்றார்கள். அல்லாமலும் ஏற்கனவே சில கோவில் களுக்குள் புலையர்கள் செல்ல அனுமதியளித்து விட்டனர். மற்ற கோவில்களிலும் இதே மாதிரி புலையர் களை அனுமதிக்கும்படி வைதீக கோஷ்டி யாரைத் தூண்ட சீர் திருத்தக் கோஷ்டியார் சகல முயற்சி களையும் செய்து வருகின்றார்கள். பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத் தெற்கே, ஸ்ரீமான் கே. நாராயணனுக்குச் சொந்த மான ஈழவக் கோவிலுக்குள் செல்ல புலையர் களுக்கு முதல் முதலாக அனுமதி யளிக்கப்பட்டது. ஸ்ரீமான் நாராயணகுருவின் பிரதம சீடரான சுவாமி போதானந்தர் தானே புலையர்களைக் கோவிலுக்குப் பிரதட்சணமாக அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கினார். சுவாமி சத்திய விரதன் என்பவரும் ஸ்ரீமான் கே. அய்யப்பனும் தங்களுக்கும், தங்களுக்கும் கீழ் நிலையிலுள்ளவர்களுக் கும் உள்ள வித்தியாசங் களைப் போக்கிக் கொள்ளக்கூடிய அவசியத்தைப் பற்றிப் பேசுகையில் சமீபத்தில் பல்லுருத் தியில் புலையருடன் சமபந்தி போஜனம் செய்த தற்காக ஈழவர்களுக்கு ஏற் பட்டிருந்த மனஸ்தாபங்களைத் தாங்கள் போக்கி விட்டதாகவும் கூறினார். கும்ப மாதத்தில் தங்கள் தோட்டத்தில் பறிக்கும் எல்லா தேங்காய்களையும் இவ்வூரிலுள்ள (கொச்சி) ஈழவர்கள் பள்ளிக்கூடங்கட்கு செலவிற்கு நிதி சேர்ப்பதற்காக கொடுத்துவிட வேண்டு மென்று தீர்மானிக்கப் பட்டதாகத் தகவல் எட்டியிருக்கிறது. - குடிஅரசு - செய்தி விளக்கம் - 24.01.1926
தலைவர்களின் யோகம்
சட்டசபை வோட்டுப் பிரசாரத்திற்கு மாதம் 30 ரூபாய் சம்பளத்திலும் மாதம் 30 ரூபாய் பத்தாவிலும் ஆக மாதம் 60 ரூபாயில் பிரசாரகர்களை நியமிக்க தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அதன் அக்ராசனருக்குப் பூரண அதிகாரம் கொடுத் திருக்கிறது. இனி தேசியத் தொண்டர் என்போருக்கு இது கை முதலில்லாத வியாபாரமாய்ப் போய்விட்டது. ஒத்துழையாமை மும்முரமாக நடந்த காலத்தில் ஆவேசத்தின் காரணமாய் ஜெயிலுக்குப் போய்வந்து பட்டணங்களிலும், கிராமங்களிலும் செல்வாக்குப் பெற்று இப்போது கஞ்சிக்கில்லாமல் திருடவும், ஒருவரிடம் கூலி வாங்கிக் கொண்டு ஒருவரைத் திட்டவும், அடிக்கவும் செய்துகொண் டிருக்கும் தொண்டர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது தொண்டர்களின் யோகம்தான்.
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் போன்ற தலைவர்கள், இப்படி ஒரு தீர்மானமில்லாமலிருக்கும் போதே இம் மாதிரியான தொண்டர்களைக் கொண்டு தலைவராகி யிருக்க, காங்கிரஸிலே இம்மாதிரி ஓர் தீர்மானமும் அதன் அதிகாரமும் அவர் கையிலே இருக்க ஏற்பட்டதானது, தொண்டர்களின் யோகத்தைவிட தலைவர்களின் யோகமே பெரிதெனச் சொல்ல வேண்டும்.
இனி ஒவ்வொரு ஊரிலும் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு ஜெய் சப்தம் வானத்தைப் பிளக்கும். ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டும் சப்தம் மேல் உலகத்தையும் நடுக்குறச் செய்யும். சுயராஜ்யக் கட்சியை ஒப்புக் கொள்ளாத வர்கள் வெளி ஊர்களில் மீட்டிங்கு போட முடியாது, போட்டாலும் விளக்கு வராது, வந்தாலும் கல்லுகளும், மண்ணுகளும், கேள்விகளும் பறக்கும். மிஞ்சி இத்தனையும் சகித்துக் கொண்டு நடத்தினாலும் பத்திரிகைகளில் வராது. கூச்சலும் குழப்பமும் மீட்டிங்கைக் கலைக்கும். இதெல்லாம் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணமும், காங்கிரஸ் பணமும் செய்தாலும் பிராமணப் பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியும் சுயராஜ்யக் கட்சியை ஒப்புக் கொள்ளாதவர்களும் செய்ததெனப் பிரசாரங்கள் செய்யும். ஆதலால் சுயராஜ்யக் கட்சிக்கு இனி மேல் என்ன குறை! இம்மாதிரி சுயராஜ்யக் கட்சியே! நீ நீடுழி வாழ்க!! - குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07-02-1926
நன்றி பாராட்டுதல்
உண்மைச் சகோதரர்களே!
குடிஅரசு 34-வது இதழ் (27.12.25) ஒன்பதாவது பக்கத்தில் குடிஅரசுக்குப் புது ஆண்டு சன்மானம் என்பதாக ஒரு சிறு வேண்டுகோள் விடுத்திருந் தோம். அவ்வேண்டுகோளைச் சகோதரர்கள் மதித்துக் கனப்படுத்தியதற்கு அதாவது 1-1-26ஆம் தேதியிலிருந்து 31-1-26ஆம் தேதி முடிய ஜனவரி மாதத்தில் 307 சந்தாதாரர்கள் மேற்படி வேண்டுகோளை உத்தேசித் துத் தாங்களாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் சந்தாதாரர் களாகச் சேர்த்தும், இரண்டொருவர் சிறு தொகை உதவியும் கனப்படுத்தியதோடு கொழும்பு, மதுரை, திருச்சி, நாகை, கோவை முதலிய ஊர்களில் குடிஅரசின் அபிமான ஏஜண்டுகள், தங்கள் சில்லரை விற்பனையை ஜனவரி மாதத்தில் ஒன்று இரண்டாய், மூன்றாய்ப் பெருக்கியும், குடிஅரசின் முன்னேற்றத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டதற்கும் குடிஅரசின் சார்பாகவும், பிராமணரல்லாதார் பாமர மக்கள் - தீண்டப்படாத மக்கள் சார்பாகவும் நாம் நெஞ்சார நன்றி பாராட்டுகிறோம்.
குடிஅரசு வாரம் இருமுறை - மும்முறை - தினப் பதிப்பு ஆகியவைகளாக மாறவேண்டும் என்ப தாக ஆசைப்பட்டு, அதற்குற்ற வழிகளைச் சொன்ன வர்களுக்கும், பலவிதங்களில் உதவி செய்வதாகச் சொன்னவர்களுக்கும், மற்றும் குடிஅரசினிடம் தங்களுக்குப் பூரண நம்பிக்கையிருப்பதாகச் சொல்லி நமக்கு ஊக்கமூட்டியவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தவிர குடி அரசை வாரப் பதிப்பிலிருந்து இது சமயம் எவ்விதமாகவும் மாற்ற சக்தியற்றவராய் இருக்கிறோம். ஏனெனில்,
1. நமது குடிஅரசு வியாபாரப் பத்திரிக்கையில்லாமல் பிரச்சாரப் பத்திரிகை என்பதை உத்தேசித்து குறைந்த சந்தா வைத்திருப்பதால் நஷ்டமடைய நேரிட்டிருப்ப தோடு அதிக நஷ்டமடையவும் இதுசமயம் சௌகரியமில்லா திருக்கிறது.
2. அன்றியும் அதன் பத்திராதிபரான ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 பிரச்சாரத்திற்கு வெளியூர்களுக்குப் போக வேண்டியதாயுமிருக்கிறது.
3. கதர் வேலைக்கும் காலத்தைச் செலவிட வேண்டியிருக்கிறதோடு இன்னும் பல காரணங்களாலும் இது சமயம் மாற்ற முடியாமலிருப்பதற்கு மன்னிக்கவும்.
வேண்டுமானால் வேறு கனவான்கள் யாராவது ஏற்றுக்கொண்டு நடத்துவதாய் இருந்தால் அவர்களிடம் சர்வ சுதந்திரத்துடன் குடிஅரசு பத்திரிக்கையை ஒப்புக் கொடுத்துவிட்டு குடிஅரசுக்கு ஊதியமில்லாத உதவியைச் செய்வதில் யாதொரு ஆட்சேபனையும் இல்லை என்பைதயும் உண்மையாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 07.02.1926
ஈழவர்களின் கோவிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி
கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களில் சென்ற சில வருஷங்களாக கவர்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும் ஆலயங்களுக் குள் சென்று தொழ தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள் கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. எனினும், இவர்களுக்குச் சொந்தமான கோவில்கள் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ் தானங்களிலிருந்த போதிலும், இவர்கள் தங்களிலும் கீழ்ப்பட்டவர் களாகக் கருதப்படும் புலையர்களை அவற்றுள் அனுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம் பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுவதற்காக அவர்கள் தங்களுடைய எல்லா கோவில்களுக்குள்ளும் புலையர் முதலிய தாழ்ந்த ஜாதியார் என்போரை விட முயற்சி செய்து வருகின்றார்கள். அல்லாமலும் ஏற்கனவே சில கோவில் களுக்குள் புலையர்கள் செல்ல அனுமதியளித்து விட்டனர். மற்ற கோவில்களிலும் இதே மாதிரி புலையர் களை அனுமதிக்கும்படி வைதீக கோஷ்டி யாரைத் தூண்ட சீர் திருத்தக் கோஷ்டியார் சகல முயற்சி களையும் செய்து வருகின்றார்கள். பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத் தெற்கே, ஸ்ரீமான் கே. நாராயணனுக்குச் சொந்த மான ஈழவக் கோவிலுக்குள் செல்ல புலையர் களுக்கு முதல் முதலாக அனுமதி யளிக்கப்பட்டது. ஸ்ரீமான் நாராயணகுருவின் பிரதம சீடரான சுவாமி போதானந்தர் தானே புலையர்களைக் கோவிலுக்குப் பிரதட்சணமாக அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கினார். சுவாமி சத்திய விரதன் என்பவரும் ஸ்ரீமான் கே. அய்யப்பனும் தங்களுக்கும், தங்களுக்கும் கீழ் நிலையிலுள்ளவர்களுக் கும் உள்ள வித்தியாசங் களைப் போக்கிக் கொள்ளக்கூடிய அவசியத்தைப் பற்றிப் பேசுகையில் சமீபத்தில் பல்லுருத் தியில் புலையருடன் சமபந்தி போஜனம் செய்த தற்காக ஈழவர்களுக்கு ஏற் பட்டிருந்த மனஸ்தாபங்களைத் தாங்கள் போக்கி விட்டதாகவும் கூறினார். கும்ப மாதத்தில் தங்கள் தோட்டத்தில் பறிக்கும் எல்லா தேங்காய்களையும் இவ்வூரிலுள்ள (கொச்சி) ஈழவர்கள் பள்ளிக்கூடங்கட்கு செலவிற்கு நிதி சேர்ப்பதற்காக கொடுத்துவிட வேண்டு மென்று தீர்மானிக்கப் பட்டதாகத் தகவல் எட்டியிருக்கிறது. - குடிஅரசு - செய்தி விளக்கம் - 24.01.1926
தந்தை பெரியார் பொன்மொழி
தமிழர்கள் கல்வி உத்யோக வாய்ப்புக்களில் விகிதாசாரப்பங்கும், உரி மையும் பெற வேண்டும் என்பதுதான் எனது வாழ் நாள் லட்சியத் தொண்டு; எனது பொது வாழ்க் கையே இதை வைத்துத் தான் சுற்றிச் சுழன்று கொண்டு வந்துள்ளது.
அன்னையார் வாழுகிறார்! வாழ்கிறார்!! என்றும் வாழ்வார்!!!
தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவருக்குச் செயலாளராகவும், செவிலி யராகவும், சிறப்பான தொண்டு புரிந்தவருமான தொண்டற வீராங்கனை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது 93ஆவது பிறந்த நாள் இன்று.
தியாகத்தில் புடம் போட்டு, தன் பொருள், உயிர் எல்லாவற்றையும் தந்தை பெரியார் என்ற மானுடம் காணா மகத்தான புரட்சியாளர் அவர்களுக்கும் அவர் தந்த கொள்கைக்கும், அவர் கண்ட இயக்கத்திற்கும் தன் வளமை, இளமை, வலிமை, முதுமை, உழைப்பு, தொண்டு அனைத்தையும், தந்து, வசைச்சூறாவளியும் அவதூறு சுனாமிகளும் சுழன்றடித்த வேளையிலும், சிறிய சலனம்கூட காட்டாது, மானம் பாராத தொண்டற மங்கை நான், எனக்கு எல்லாமும் என் தலைவரும் கொள்கையும், இயக்கமும், தான் என்று கூறி, உடல் நலிந்தாலும் உள்ளத்தின் வலிமையால் தந்தையின் மறைவுக்குப் பின்னரும் அவர் கண்ட இயக்கமாம் திராவிடர் கழகத்தின் தலைமையேற்று அய்ந்து ஆண்டுகள் வழி நடத்தி, அனைத்திந்தியாவும் அதிர்ச்சி அடைந்த இராவண லீலா நடத்தியும், நெருக்கடிக் காலத்தின் உரிமைப் பறிப்புகளுக்கும் ஈடு கொடுத்தும், பெரியார் தொண்டர்களைக் காத்த எம் மாறாத பாசத்திற்குரிய அன்னையாரின் தொண்டு ஈடு இணையற்றது; ஒப்பிட முடியாத உயரம் சென்ற ஒன்று!
தன் பொருள், தனக்கு தலைவர் துணைவர் என்ற முறையில் ஒதுக்கியது எல்லாமும் எல்லாருக்குமே என்று அறிவிக்கும் வகையில், ஒரு அறக்கட்டளை யாக்கி, பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் ஒன்று நிறுவினார்.
அதன் சார்பில்தான், இன்று தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி, தஞ்சை வல்லத்தில் பெரியர் - மணியம்மைப் பல்கலைக் கழகம் என்று கல்வி நிறுவனங்கள் ஆல்போல் தழைத்தோங்கி, வளர்ந்திட கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறது அன்னையாரின் அறக்கட்டளை!
அன்னையாரின் அரிய, மேற்பார்வையோடு அய்யாவால் 55 ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்டு, இன்று ஏழை, எளிய ஆதரவற்ற குழந்தைகளின் அபய இல்லமான நாகம்மையார் குழந்தைகள் இல்லம் பலகட்ட வளர்ச்சி பெற்று, வரலாறு படைத்துக் கொண்டுள்ளது.
அன்னையின் தொண்டறத்தின் துளிகள் அவை; சுயமரியாதை ஒளி வீச்சுகள் அவை.
அந்தத் தொண்டற வீராங்கனை மறையவில்லை - வாழுகிறார்.
கழகத் தொண்டர்களின் கட்டுப்பாட்டின் மூலம், குழந்தைகளின் மலர்ந்த சிரிப்பின் மூலம், கழகம் குவிக்கும் வெற்றிகள் மூலம், வாழுகிறார்! வாழுகிறார்! வாழ்ந்து கொண்டே இருப்பார்.
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!
வளர்க பகுத்தறிவு - தொண்டறம்!!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
10.3.2013
சென்னை
மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி!
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1883ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் பிறந்தார் ராமாமிர்தம். குடும்பத்தின் வறுமை யைத் தாங்க முடியாத அவரின் அம்மா, ஒரு தேவதாசியிடம் விற்றுவிட்டார். நல்ல சிந்தனைகளும் முற் போக்கு குணங்களும் பெற்றவராக இருந்த ராமாமிர்தம், விரைவில் அங் கிருந்து வெளியே வந்தார்.
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல் பட்டார் ராமாமிர்தம். எழுதினார். நாடகம் போட்டார். ஏராளமான தேவதாசிப் பெண்களை மீட்டெடுத்தார். குழந்தை திரு மணத்தை எதிர்த்தார். பெண் கல்வியை வலியுறுத்தினார். இந்திய தேசிய காங் கிரஸில் சேர்ந்து பணி செய்தார். ஏராள மான சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தார்.
1925இல் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்த போது, ராமாமிர்தம் அந்த இயக்கத் தில் சேர்ந்தார். சுயம்புபிள்ளையை சுய மரியாதை திருமணம் செய்துகொண்டார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பைச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு ராமாமிர்தம் துணையாக நின்றார். 1936இல் தன் வாழ்க்கையையே நாவலாக எழுதி, தாசிகளின் மோசவலை என்ற பெயரில் வெளியிட்டார்.
இதன் மூலம் தாசிகளின் அவலநிலை வெளிச் சத்துக்கு வந்தது. மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், தேவதாசி ஒழிப்பு முறையை ஆதரித்தும் நாடகங்கள் நடத்தி வந்தார். ஒரு நாடகத்தின் போது, மத வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பிறகு கடைசி வரை அவர் கூந்தலை வளர்க்கவே இல்லை.
1937 முதல் 1940 வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார். உறையூர் முதல் சென்னை வரை 42 நாள்கள் நடந்து சென்று, 82 கூட்டங்களில் இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசினார். இதற்காக 6 வா ரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி பல்திறமைகள் கொண்ட ராமா மிர்தம் அம்மையார் 1962இல் மறைந்தார்.
இலங்கையைச் செல்லமாகக் கண்டிக்கும் இந்திய அரசு!
இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மார்ச் 12 - முழு வேலை நிறுத்தம்!
தமிழ்நாட்டு மக்களே ஆதரவு தாரீர்! டெசோ பயணம் தொடரும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
இலங்கை அரசைச் செல்ல மாகக் கண்டிக்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மார்ச்சு 12ஆம் தேதியில் தமிழ் நாட்டில் முழு வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தர வேண்டும் - டெசோ தன் பயணத்தை வெற்றிப் பயணமாக முடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக தன்னால் இயன்ற அத்துணையையும் செய்து கொண்டே இருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குக் காரண மான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குக் கண்டனம், போர் குற்றவாளியாக அவரை அறிவித்து சர்வதேச சமூகம் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும்; ஈழத் தமிழர் வாழ்வு உரிமையை மட்டுமல்ல; தமிழ்நாட்டுத் தமிழக மீனவ சகோதரர் களின் மீன்பிடி வாழ்வாதாரத்தையும், சிங்கள கடற்படை பறித்தல், தாக்குதல், மீன் வலைகளை அறுத்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல், இலங்கைச் சிறைகளில் அவர்களைக் கொண்டுபோய் அடைத்தல், சித்ரவதைக்கு ஆளாக்குதல் போன்ற பல அக்கிரமங்களை அன்றாடம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்துவருகின்றது.
இலங்கையை செல்லமாகக் கண்டிக்கும் இந்தியா!
நமது வாக்குகளால் ஆளும் மத்திய அரசு, இந்திய அரசு கவலை தெரிவிக் கிறோம் என்று, பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கோலுக்கும் நோகாமல் என்ற பழமொழிக்கொப்ப இலங்கை அரசை செல்லமாய் கோபித்துக்கொள்வதுபோல் காட்டிக்கொண்டு மீனவர்களின் வயிற் றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங் கள்மீது, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கடமைக்காக சர்வதேச சமூகத்தின் - பன்னாடுகளின் மன சாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும்; அதன்மூலம்தான் பரிகாரம் தேடவும், தமிழர் மீள்குடியேற்றம், சிங்கள மயமாக் குதலைத் தடுத்தல், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள எம் எஞ்சிய தமிழ்ச் சொந்தங்களின் மான வாழ்வை - உரிமை வாழ்வை மீட்டெடுப்பது சாத்தியம்.
அய்.நா.விலும் முறையீடு
இந்தப் பணிகளுக்காகத்தான் நியூ யார்க் சென்று அய்.நா. சபையின் பொறுப்பாளர்களிடம் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறை வேற்றிய முக்கிய வேண்டுகோள்களை, தீர்மானங்களை அளித்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்களின் எதிர்காலமாவது பாதுகாக் கப்படக்கூடியதாக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எம் ஈழத் தமிழ்ச் சொந்தகளுக்கான முயற் சியை டெசோ சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு அவர்களும் நேரில் சென்று விளக்கங்களை அளித்தனர். அதுபோலவே, அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களை ஜெனிவாவில் சந் தித்து டெசோ தீர்மானங்களை அளித்து, செய்யப்பட வேண்டியவற்றை வலியுறுத் தினர். அய்.நா. மனித உரிமை ஆணையத் தின் உறுப்புகளான 47 நாடுகளின் தூதுவர்களில் பெரும்பாலோனோர் களை சந்தித்து அடுத்த கூட்டம் (தற்போது நடை பெற்று வருகிறது) துவங்குவதற்குமுன் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவுகோரி டெசோ குழுவினர் தளபதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், ஆகியோரும், நானும், திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்களும் புதுடெல்லியில் இடைவிடாது இப்பணிகளைச் செய்தோம்.
இரத்த வெறியன் ராஜபக்சேவே திரும்பிப் போ!
அதற்கடுத்து, வடநாட்டிற்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்திய மண்ணில் இரத்தக்கறை படிந்த கால்களை வைக்க இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, திரும்பிப் போ, என்றும், இந்த இட்லரின் வாரிசுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? என்றும் டெசோ கிளந்தெ ழுந்து தலைநகரம் காணாத எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டத்தை கருப்பு உடை அணிந்து 90 வயது மூத்த தலைவரான டெசோவின் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் வாய்மைப் போருக்கு என்றும் இளையாராகி களம் கண்டனர். அதன்பிறகு, ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீனவர் சமுதாயத்திற்கு இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் பிப்ரவரி 18, 19 ஆகிய நாட்களில் டெசோ அமைப்பின் சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாங்கள் வரலாறு காணாத மக்கள் வெள் ளம் கூடிய ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தினோம்.
முற்றுகைப் போராட்டம்!
அதற்கடுத்து, கடந்த மார்ச் 5ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்ட இலங்கை அரசின் சென்னைத் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். சுமார் 30,000 முதல் 50,000 பேர் வரை திரண்டனர். அவர்களைக் கைது செய்யத் திணறி சென்னையில் சுமார் 10,000 பேர்களை மட்டுமே கைது செய்தது காவல்துறை. சுமார் 5, 6 மணி நேரம் இராஜரத்தினம் ஸ்டேடியம் மரத்தடியில் அமர்த்தி, சிறை வைக்கப்பட்டோம். அன்றுமாலை விடுதலை செய்யப்பட்ட வுடன் டெசோ தலைவர் கலைஞர் தலைமையில் கூடி, உடனே மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்கு தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு அடைப்பு நடத்தி, இதில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று திரண்டுள்ளோம் என்று காட்டவே அறவழியில் நமது உணர்வுகளைக் காட்டிடவே வேலை நிறுத்த அழைப்பினையும், அறிவிப்பினையும் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் விவாதம் - டில்லியில் மாநாடு
மார்ச் 7ஆம் தேதி டெல்லியில் டெசோ சார்பில் அய்.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் - அழுத்தமானதாகவும், பயனளிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் நடந்த டெசோ மாநாட்டின் தீர்மானங்களை இந்திய அளவில் கொண்டு சென்று, கருத்து ஆதரவு தேடவுமான கருத்தரங்கத்தினை டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடத்தினோம். முன்பு கலந்துகொண்டவர்களைவிட சில கட்சிகள் கூடுதலாகத்தான் கலந்துகொண்டன. இதற்கிடையில், தி.மு.க. கொடுத்த இலங்கை ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய விவாதம் மக்களவையில் அதே மார்ச் 7இல் (எதிர்ப்பாராத விதமாக அன்றே பொருத்தமாக) நடந்தது. அதில் தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு பேசத் துவங்கி, அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைக் கட்சி, பி.ஜே.பி. மட்டுமல்லாது அகில இந்திய தேசிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு, மிகப் பெரும் அளவில் அவையே குலுங்கும் வண்ணம் பேசி, இந்திய அரசை வலியுறுத்தி, மிகப்பெரிய அழுத்தமும் கொடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு!
வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாமல், ஏதோ பொத்தாம் பொதுவாக, பொது அறிவுரைகளை இலங்கை அரசுக்கு இதம் அளிப்பது போன்று பிரச்சினையின் ஆழத்தை அறியாது, அவையின் கொந்தளிப்பை அடக்குவதற்குப் பதிலாக, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்வகையில் ஏதோ பேசினார். தி.மு.க. மட்டுமல்ல; அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல தேசிய கட்சிகள் உட்பட வெளிநடப்பு செய்தது - ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பம் - இந்திய நாடாளுமன்ற வரலாற்றில்! இதற்கு மூல காரணமாக அமைந்தது தி.மு.க. - இதற்குப் பிறகு அன்று மாலை ஏற்கெனவே திட்டமிட்டபடி டெசோ கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத் அவர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, தேசிய மாநாட்டுக் கட்சி, தி.மு.க. விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர்கள் முக்கியக் கருத்துக்களை வழங்கினர். இவையெல்லாம் நாடகமா?
இவையெல்லாம் நாடகம் என்றும், இதனைப் பின்னடைவு என்றும் கூறுவோர் எவராயினும் அவர் களுக்கு ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டுவதில் உண்மையான அக்கறை இல்லாமல், அரசியல் செய்ய நமது இந்த ஆயுதம் நம்மிடமிருந்து போய்விடுவதா? என்ற உள்ளெண்ணத்தில்தான் பொது எதிரி ராஜபக்சேவை மறந்துவிட்டு, இங்கேவர உள்ள தேர்தல் களத்திற்கு மூலதனம் - சீட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகளை நடத்திக்கொண்டு இந்த எழுச்சியை திரையிட்டு மறைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, தி.மு.க., தி.க., மற்றும் டெசோ மீது சேற்றை வாரி இறைக்கும் ஊடகப் படைகளின் துணையோடு முயற்சி செய்து பார்க்கின்றனர். அவர்களைப் பற்றி டெசோ கள வீரர்கள் துளியும் இலட்சியம் செய்யாமல், குடிசெய்வார்கில்லை பருவம் என்ற குறள் நெறிக்கேற்ப மான அவமானம், பாராட்டு, வசவுகள் பற்றிக் கவலைப்படாமல், டெசோவின் போராட்டங்கள் தொடருகிறது; என்றும் தொடரும்.
டெசோவின் பயணம் தொடரும்!
உண்மை உணர்வாளர்களே, வீண் விமர்சன வேலைக்கு இது நேரமல்ல; விதண்டாவாதங்களை விலக்கி வையுங்கள் என்பதே எங்களின் வேண்டுகோள்! அப்படி அவர்கள் வைக்காவிட்டாலும், இப்படை தமது பெரும் பயணத்தை என்றும் ஏற்றத்தோடு, எழுச்சியோடு நடத்திடும் - விரைந்திடுவோம். இலக்கு நோக்கி அதில் வெற்றியும் பெற்று விடுவோம் என்பதிலும் அய்யமில்லை. நமது குறி - இலக்கு - மட்டுமே!
ஆகவே தமிழினப் பெரு மக்களே! 12ஆம் தேதியை மறவாதீர். முழுவேலை நிறுத்தத்தை வெற்றியாக்கித் தாரீர்! தாரீர்!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
10.3.2013
சென்னை
வாழ்க நீ அம்மா, வையத்தின் நாட்களெல்லாம்!
எங்கள் அன்னையே,
இலட்சிய தீபமாய்
எங்கள் இதய மேடையில்,
என்றும் ஒளிரும்
அணையா விளக்கே!
பெரியார் புரட்சி
எரிமலைதான்
சிந்தனை வீச்சிலும்,
செயல்பாட்டிலும்!
மூப்பு எனும் நோய்
முட்டிச் சாய்க்காமல்
முழு வாழ்வையும் முட்டுக் கொடுத்து நிமிர்த்திய நித்திலமே!
தலைவரை 95இல்
கரை சேர்த்து
58இல் தன்னை
மூழ்கடித்துக் கொண்ட
தியாக தேசத்தின்
தலை நகரே!
நாத்திக இயக்கத்தைத்
தலைமை தாங்கி
நானிலமே அதிர
நடத்திக் காட்டிய
முதல் பெண்மணி எனும்
முத்திரையைப் பொறித்த
மூச்சுக் காற்றே!
உங்கள் எளிமையே
எங்கள் வலிமை!
உங்கள் தியாகமே!
எங்களின் பாதைக்கு
எச்சரிக்கை விளக்கு!
இராமன் கூட்டம்
இந்த மண்ணில்
இடம் பிடிக்க
இயன்ற மட்டும்
எகிறிப் பார்த்தும்
இயலவில்லை;
என்ன காரணம்
தெரியமா?
அன்னையே நீ
அன்று மூட்டிய
இராவண லீலா!
அந்த நெருப்பை
அணையவிடோம்!
முடிந்தால் அந்த
நெருப்பு நதியை
வடக்குப் பக்கமும்
திருப்புவோம்!
ஆமாம் இந்தியாவை
அடிமைப்படுத்த
ஆரியக் கூட்டம்
ராமன் வில்லை
கையில் எடுக்கிறது
இராவண லீலா எனும்
தத்துவத்தின்
எரிதழல்தான்
சாம்பல் ஊருக்கு - அதனை
அனுப்பி வைக்கும்
அணுகுண்டு!
சமுதாய தடத்தில் நீ
சமைத்துக் கொடுத்த
சமருக்கான அந்த ஆயுதம்
அரசியலுக்கும்
தேவைப்படுவதை
என்னென்போம்!
காவிமயமாக்க
கனவு காணும்
ஆரியத்தின் கர்ப்பத்தை
அடி தெரியாமல்
அழிக்கும்
பீரங்கியல்லவா
இராவண லீலா தத்துவம்!
அய்யாவின் தத்துவம்
அவர் வழி நின்ற
அன்னையின்
செயலாக்கம்
அயோத்தியின்
அடி வயிற்றையும்
கலக்கப் போகிறது!
கலகக் குரலையும்
கொடுக்கப் போகிறது!
காவியங்கள் புதிதாய்
காய்க்கப் போகின்றன
இராமாயணக் குழியில்
இராவணாயணம் மலரப் போகிறது!
யார் கண்டது?
அயோத்தி மேட்டில்
அய்யா, அம்மா சிலைகள்
முளைத்தாலும்
ஆச்சரியம் இல்இல!
அந்த நாளை எதிர்பார்த்து
அம்மா இன்றைக்கு உங்கள் சிலைக்கு
மாலை சூட்டுவோம்!
வாழ்க நீ அம்மா
வையத்தின்
நாட்களெல்லாம்!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
எங்களுக்கு எதிரிகள் இவர்களல்ல - ராஜபக்சேதான்! தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, மார்ச் 10- எங்களுக்கு எதிரிகள் குறுக்குச் சால் பாய்ச்சுபவர்களல்லர் - எங்களின் எதிரி ராஜபக்சேதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அன்னை மணியம்மையார் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று மணியம்மையார் - பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து வெளியில் வந்த திராவிடர் கழகத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி களுக்கு அளித்த பதிலாவது.
இன்று மணியம்மையார் பிறந்த நாள், தம் வாழ்நாளையே தந்தை பெரியாரையும், அவர்தம் இலட்சியங்களையும், அய்யா உருவாக்கிய இயக்கத்தையும் கட்டிக் காத்திட தம் பொருள், உழைப்பு அத்தனையையும் அர்ப்பணித்த அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில், அவர்களின் தொண்டறத்தைத் தொடர உறுதி ஏற்கிறோம் என்று கூறிய தமிழர் தலைவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்தபோது குறிப்பிட்டதாவது:
டெசோவை குறை கூறுபவர்களைப் பற்றியோ, அது அறிவித்திருக்கும் முழு அடைப்புக்குறித்தோ குறை கூறுபவர்கள், குறுக்குச் சால் ஓட்டுபவர் களைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யவோ, விளக்கம் அளிக்கவோ எங்களுக்கு அவசியம் இல்லை. தேவையும் இல்லை, நேரமும் இல்லை.
எங்களுக்கு எதிரி எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கக் கூடிய ராஜபக்சேதான்.
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் ஈனக்குரல்களைப் பற்றி நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
டெசோவின் பயணமும், களமும் எந்த முட்டுக்கட்டைகளாலும் தடைபடாது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
வீண் விமர்சனம் வேண்டாம்; வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்!
ஈழத் தமிழர் பிரச்சினைக்கான களத்தில் ஒரு முக்கிய கால கட்டத்தில் டெசோ முகிழ்த்துக் கிளம்பியுள்ளது.
ஈழத் தமிழர்களின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், ஈழத் தமிழர் களுக்காக ஒரு சிறு புள்ளியை நகர்த்தினாலும் அதனை வரவேற்பார்கள். அப்படி வரவேற்கப் பக்கு வம் இல்லாத மூடிப் போட்ட மனம் உள்ளவர்களாக இருப்பவர்கள்கூட எதிர் விமர்சனங்கள் வைக்காமல் இருந்தாலே போதுமானது. டெசோவைப் பொறுத்த வரையில், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையில் மிகவும் தெளிவாகவே இருக் கிறார்கள்.
சென்னையில் இலங்கைத் துணைத் தூதர கத்தை முற்றுகையிடும் போராட்டம் டெசோ சார்பில் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெசோ தலைவர் மானமிகு கலைஞர் - அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்கூட (6.3.2013) வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு என்று முதிர்ச்சி கனிந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
டெசோ உறுப்பினரும் திராவிடர் கழகத் தலை வருமான மானமிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளிலும் இக்கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பிற அமைப்புகளுக்கு - அவற்றின் தலைவர்களுக்கு ஏனிந்த பொறுப் புணர்ச்சி ஏற்படவில்லை? ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் அது எமக்கே உரித்தானது என்று எப்படி காப்புரிமை கொண்டாடுகிறார்கள்? இந்த இடத்தில்தான் இவர்களின் பொறுப்பின்மையும், பொது நல நோக்கமின்மையும், பிரச்சினையின்மீது ஆழமான பிடிப்பு இன்மையும், பொதுப் பணியில் கடைப்பிடிக்க வேண்டிய தார்மீகப் பண்புகள் இன்மையும் பளிச் சென்றே புலப்படுகின்றன.
டெசோ சார்பில் சென்னையில் மாநாடு நடத்தப் பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எல்லாம் பங்கேற்கக் கூடிய மிக முக்கியமான மாநாடு இது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதற்குமுன் இந்த வகையில் மாநாடு நடத்தப்பட்டதும் இல்லை - நியாயமாக அதனை வரவேற்க வேண்டும்; முடியா விட்டால் குறைந்தபட்சம் வாயை மூடிக் கொண்டாவது இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் முதல் அந்தக் கூட்டணியில் சில எதிர்பார்ப்புகளை மனதில் பூடகமாக வைத்துக் கொண்டு இருந்தவர்கள் வரை எப்படியெல்லாம் எதிர்ப்பாட்டுப் பாடினார்கள்?
இலங்கையில் உள்ள புத்த பிக்குகள் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று கோரிக்கையை முன் வைத்ததைப் பார்த்த பிறகாவது - இலங்கை அரசின் அலறலைச் செவி மடுத்த பிறகாவது - அந்த மாநாட்டின் அருமையை புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?
காழ்ப்புணர்ச்சியின் காவலராக இருக்கக் கூடியவர்கள் இன்றுவரை அந்தக் கீழிறக்கத்தி லிருந்து தங்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என்பது வருந்தத்தக்கது. இவர்கள் எல்லாம்தான் மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஜெனிவாவில் - மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியாவை ஆதரிக்கச் செய்வது அவசியமா - இல்லையா? இதற்கு முதலில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
இந்தியாவை ஆதரிக்கச் செய்வதற்கான முயற்சியில் டெசோ செயல்பட்டு வருவது போல வேறு எவராவது - அமைப்பாவது செயல்படுவதுண்டா என்பதை சவால் விட்டே கேட்கிறது டெசோ.
நாளை தமிழ்நாடு தழுவிய அளவில் இதற்காக வேலை நிறுத்தத்திற்கு டெசோ வேண்டுகோள் விடுத்ததை வேறுவிதமாக திசை திருப்பும் கருத் துக்களைத் தெரிவிப்பது யாரை உற்சாகப்படுத்த?
இத்தகைய விமர்சனங்கள் சம்பந்தப்பட்டவர் களின் பொறுப்பற்ற மனப்போக்கைத்தான் பறை சாற்றும்; தங்களைத் தாங்களே இதன் மூலம் அம்பலப் படுத்திக் கொண்டு விட்டனர் என்றுதான் பொருள்.
இந்தப் பிரச்சினையில் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ள கருத்து - அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இது அந்த அமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடியது என்பதில் அய்ய மில்லை. சில நேரங்களில் சிலரால் திறக்கப்படும் வாய்கள் எதிர்காலத்தில் பல சிக்கல்களை வரவ ழைத்துக் கொள்ளக் கூடியவை. யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.
தமிழினப் பெருமக்களே, டெசோ கொடுத்துள்ள வேலை நிறுத்த அழைப்பு இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது - ஒத்துழைப்பைத் தாரீர்! 11-3-2013
சபாஷ் கெலட்!
இராஜஸ்தான் மாநிலத்தைப் பாருங்கள்! பாருங்கள்! அம்மாநில காங்கிரஸ் அரசு ஓர் எடுத்துக்காட்டான செயலைச் செய்து, இந்தி யாவே அதனைத் திருப்பிப் பார்க்குமாறு செய்துள்ளது.
ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொள்ளும் இணையருக்கு ரூ.5 இலட்சம் வழங்குகிறது! மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது பழங்குடியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். மற்றொருவர் உயர் ஜாதியைச் சேர்ந்த வராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
ராஜஸ்தான் போன்ற ராம நாம மனப்பான்மை குடி கொண்டிருக்கும் மாநி லத்தில் ஜாதி ஒழிப்புக்காக, கவர்ச்சியான வசீகர மான வகையில் பரிசை அளித்திருப்பது அசாதார ணமானதே!
அந்த ராஜஸ்தான் மாநிலத்தில்தான் கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் வைத்துக் கொளுத்தும் உடன்கட்டை ஏறுதல் என்பது விசேடம். ரூப்கன்வர் கோயிலை மறக்கத்தான் முடியுமா? இந்த 21ஆம் நூற்றாண் டிலும் இந்துத்துவா எப்படி மதம் கொண்டு நிர்வாண ஆட்டம் போடுகிறது என்ப தற்கு அக்கோயில் கண் கண்ட சாட்சியமாகும்.
இந்தியாவில் குழந் தைகள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று, தங்குத் தடையின்றி ஏறுநடை போடுவதும் சாட்சாத் இந்த ராஜஸ்தானில்தான்.
மன்னர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் இந்த மண்ணில் மகுடந்தரித்து இன்றும் காணப்படுகின் றன. சொச்சங்களின் அந்தச் சரணாலயம்தான் இன்றைய பா.ஜ.க.,; அம்மாநிலத்தில் மன்னர் குடும்பத்தினர் இந்துத் துவா ரத்த ஓட்டமுள்ள பா.ஜ.க. என்னும் அரசியல் வேடந்தரிக்கும் அரண் மனையில் அரசோச்சு கின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில், ஜாதி ஒழிப் புக்காக காங்கிரஸ் கட் சியைச் சேர்ந்த முதல் அமைச்சர் அசோக் கெலட் அட்டகாசமாக, புதிய ஆணையைப் பிறப்பித்து இந்தியத் துணைக் கண்டத் தின் பிடரியில் ஓர் அடி போட்டு அறிவித்துள்ளார்.
ஆம், வடக்கே பெரியார் தம் தாடியையும், தடியையும் காட்டத் தொடங்கி விட் டார். காங்கிரஸ் வெறும் அரசியல் சனாதனக் கட்சி யாக இல்லாமல், அசோக் கெலாட் தூக்கிப் பிடித் துள்ள சுடரை தொடர் ஓட்டமாக (Relay Race) எடுத்துச் செல்லட்டும் - காங்கிரஸ்மீது கூட முற் போக்கு முத்திரை படிய வாய்ப்புண்டே!
- மயிலாடன் 11-3-2013
பார்ப்பனர்களுக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள்? எத்தனை எத்தனை குரல்கள்!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நேர் எதிரானவர்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன அதிகாரிகளும் என்பது உலகறிந்த உண்மை!
மத்திய அரசின் கொள்கைகளை இந்த மே(ல்)தாவிகள்தான் பெரிதும் வழிகாட்டி வகுக்கும் நிலை அங்குள்ளது!
இனமணி வைத்தியநாதய்யர் ஒரு கேள்வி கேட்கிறார் - இன்று தலையங்கத்தில்:
அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்பற்றி (தீர்மான இறுதி வடிவம் முடிந்து விட்டதா என்று கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்) தீர்மானமில்லா தீர்மானம் என்று கூறுகிறார்! அவரது தீவிர உணர்வுக்கு ஷொட்டு கொடுக்கும் வேளையில், ஒன்றைக் கேட்கிறோம். இந்த தீர்மானம் இல்லா தீர்மானத்தை ரத்து செய்ய, தடுக்க, எதிலும் சம்மன் இல்லாது எங்கும் ஆஜராகும் சுப்ரமணியசாமி பார்ப்பனர்கள் இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் ஆலாய்ப் பறப்பதேன் - அனுமார் தாவல் செய்வது ஏன்?
மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு ஏடும் தலையங்கத் தடுமாற்றத்தில் வீழ்ந்து கிடக்க வேண்டிய அவசியம் என்னவோ!
பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! போற்றி!!
- என்று அண்ணா சொன்ன ஆரிய மாயை எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?
மறதியும் - மன்னிப்பும்!
மறதியைவிட மனிதனுக்குப் பெரும் குறைபாடு வேறொன்றுமில்லை.
கடமைகளை மறந்துவிட்டு காலங் கழித்தால் நாம் அடைய வேண்டிய இலக்குகளை கோட்டை விட்டு விடுவோம்; பிறகு வருந்துவதில் என்ன பயன்? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘It you don’t use it, you will lose it’
எதையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கத் தவறினால், அது உங்களுக்குப் பயனற்றதாக - அல்லது பயன்படுத்த லாயக்கற்றதாக ஆகி விடும்! மூளையும் அப்படித்தான்!
தந்தை பெரியார் அவர்களுக்கு 95 வயதில் கூட நல்ல நினைவு வன்மை இருந்தது; எங்களுக்கெல்லாம் மிகுந்த வியப்பாகக்கூட இருக்கும்; சில நேரங் களில் அய்யா சொல்வது எங்களுக்கு வேடிக்கையாகவும்கூட இருக்கும்.
என்னப்பா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது என்று அருகில் நின்று கொண்டி ருக்கும் எங்களைப் பார்த்துச் சொல் லுவார் அய்யா.
ஒரு முறை நான் லேசாக புன்ன கைத்தேன். அதைக் கவனித்து விட்ட தந்தை பெரியார் அய்யா ஏன் சிரிக் கிறாய்? என்று கேட்டார்.
நான் ஒன்றுமில்லை அய்யா, இந்த (95) வயதில் உங்களுக்கு மறதி உண்டு என்று சொல்லி சங்கடப்படுகிறீர்கள் ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கே ஏராள மறதி உண்டாகும்போது மறக் காது எங்களிடம் கேட்கும் நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே என்றேன். அமைதியாகச் சிரித்துக் கொண்டார்!
அருகில் இருந்த அன்னை மணியம் மையார் அவர்கள் உடனே ம் உங்கள் அய்யாவுக்கு பணம் வரவேண்டும் என்றால் மறதி இருக்காது; பணம் (எனக்கு) தர வேண்டுமென்றால் மட்டும் மறதி வந்து விடுமே! என்றார்!
அது மட்டுமா? இன்னும் வேடிக் கையாக, காது இப்போதெல்லாம் சரிவரக் கேட்பதில்லை என்று உங்க அய்யா சொல்லுவார்; ஆனால் பணம் பற்றி மெதுவாக நாம் பேசினால், அப்போது மட்டும் உங்க அய்யாவுக்கு எப்படியோ காதுகேட்கத் தவறாது; தவறவே தவறது என்றார் நகைச் சுவையாக!
அய்யாவின் மறதி வெகு அபூர்வம்! அதுபோலவே அவரது ஈரோட்டுக் குருகுல மாணவர் கலைஞர் அவர்களுக் கும் மறதி வருவதில்லை; நினைவாற்றல் அதிகம்.
பொதுவாக மறதி கூடாது என்பது வாழ்க்கைக்குத் தேவை என்ற போதிலும் கூட, மற்றவர் இழைத்த துன்பத்தை மறந்து விடுவதுதான் நல்லது.
அதற்கு மறதி எத்தகைய உற்ற துணைவன்? துன்பம் மட்டுமா? நமக்கு ஏற்பட்ட துயரத்தைக்கூட மறக்காமல் அது மனதை நிரந்தரமாக வாட்டிக் கொண்டே இருந்தால், தூக்கம் வருமா?
எனவே வாழ்க்கைக்கு மறதியும் தேவை. அகவாழ்வில் இலக்கியங்களில் தலைவன் - தலைவியை மறத்தல்தான் எத்தனைப் பெரும் சோகம்? பிரிவாற் றாமை இவற்றை உருவாக்குகிறது!
அதையும் சுட்டிக் காட்டுதல் தானே நியாயம்?
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோமால் என்ற சிலப்பதிகார தலைவியின் கூற்றுபற்றி எனது பேரா சிரியர் நண்பர்கள் கூறும், மேற்கோள் இன்னமும் என்னால் மறக்க இயல வில்லை!
மறப்பது மட்டும் போதாது; பல நேரங்களில் மன்னிக்கவும் நாம் ஆயத்தமாக வேண்டும். மறத்தல் சாதாரண குணம். மன்னிப்பது பெருங் குணம் - அருங்குணம்!
தண்டிப்பதைவிட உயர்வு மன்னிப்பது என்பது!
சில நேரங்களில் சிலர் மன்னிப் பார்கள், மறக்க மாட்டாது நினை விலேயே வைத்திருப்பார்கள். அது பழைய பாக்கியை தள்ளுபடி செய்து விட்ட பிறகும் சொல்லிக் காட்டும் கொடுமை போன்ற உறுத்தல் மனப் பாங்கு.
அதுவும் தவிர்க்கப்பட்டால் பிற ருக்கு நன்மை என்பதைவிட நமக்கு நிம்மதி; மகிழ்ச்சி, பண்பட்ட மனத்திற்கு நாம் உரியவர்களாகி உயர்ந்து நிற்போம் - இல்லையா?
- கி.வீரமணி
பொது மக்கள் நலன்!
இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)
மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் நடந்தது என்ன?
ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேட்டில் காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காகத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் 10.3.2013 மதியம் 12 மணியளவில் அங்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் (நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது பிறகு தெரிய வந்தது) இளங்கோவனுக்கும், சுப. வீரபாண்டியனுக்கும் எதிராகக் குரல் எழுப்பினர்.
அப்போது பட்டினிப் போரில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் ஒருவரான பிரிட்டோ நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்; எங்கள் போராட்டத்திற்கு எல்லோரது ஆதரவும் தேவை. எனவே எங்கள் போராட்டத்தில் சிலர் உள்ளே புகுந்து இதனை அரசியலாக்கவேண்டாம் என்று ஒலி வாங்கி மூலம் கேட்டுக்கொண்டார். உடனே பந்தலில் இருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கலவரம் செய்தவர்களைப் பார்த்து,
வெளியேறு வெளியேறு, எங்கள் போராட்டத்தை அரசியல் ஆக்காமல், வெளியேறு வெளியேறு! என்று முழக்கமிட்டனர். அதன்பின், அந்தக் கலவரக் குழு கலைந்து சென்றது. இதுதான் அங்கு உண்மையில் நடந்தது.
எது தகிடுதத்தம்?
போர் என்றால்
சாக மாட்டார்களா
என்று
தத்துவார்த்தம் பேசி
ஈழத் தமிழர்
படுகொலைக்கு
ஜெ போட்ட
கூட்டத்தினர் -
இலங்கைப் பிரச்சினையில்
இந்தியா
மூக்கை நுழைக்கலாமா?
அந்நிய நாட்டுப்
பிரச்சினையில்
இன்று நாம் நுழைந்தால்
நாளை இந்தியாவுக்குள்
அந்நியர்
தலையீடு
தலை தூக்காதா?
என்று
மேதாவித்தனத்தின்
மேளத்தைக் கொட்டியவர்கள்
ஈழத் தமிழர்களுக்காக
இருபதுக் குடம்
கண்ணீரைச்
சிந்துவது
தகிடுதத்தம் இல்லையா?
ஏமாறுவான் தமிழனெனத்
தப்புக் கணக்குப்
போட்டால்
வட்டியும் முதலுமாக
பாடம் போதிப்பர் -
துள்ள வேண்டாம்!
ஈழத் தமிழர்க்காக
எந்தமிழர் எழுந்தார்
ஏறு போல் என்றால்
ஏன் நோக்காடு?
வேலை நிறுத்தம்
வேலை செய்கிறது!
வீடணர் கூட்டம்
வெம்புகிறது
யாருக்குச் சேவகம்
செய்ய விருப்பமோ?
ராஜபக்சே விரைவில்
பாராட்டு வெகுமதி
கொடுப்பான் என்று
எச்சில் ஒழுகக்
காத்திருப்போருக்குக்
கிடைக்காமலா போகும்?
அண்ணாவின்
பெயர் வைத்து
அக்ரகாரக்
கொள்கையை
அன்றாடம்
ஆவர்த்தனம்
செய்வதும்
பூணூலுக்குப் புது
விளக்கம் கொடுத்து
தமிழர்களைச்
சூத்திரர்கள் என்று
இழிவுபடுத்துவதும்
அண்ணா சொன்ன
ஆரிய மாயையின்
அடையாளத்தைக்
காட்டுவதும்
அண்ணா தி.மு.க. என்றால்
அதன்
இலட்சணத்தை என்ன சொல்ல!
புத்த மார்க்கத்தில்
ஆரியம் அன்று
திராவிடர் இயக்கத்தில்
ஆரியம் இன்று என்று
வரலாறு வடித்து வைக்கும்
கல்வெட்டை
மறக்க வேண்டாம்!
- மின்சாரம்
(இன்றைய நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் புதுவகை தகிடுதத்தம் பொது வேலை நிறுத்தம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதைக்குப் பதிலடி இது).12-3-2013
இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு, நீதி கோரி நடத்தும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது!
கலைஞருக்கு உலகத்தமிழ் அமைப்பு பாராட்டுக் கடிதம்!
தெற்கு கரோலினா (அமெரிக்கா) மார்ச் 12- அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப் பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெசோ அமைப்பை மீண்டும் கூட்டி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலைக்கு நீதி கோரி நீங்கள் போரட் டங்கள் நடத்தி வருவ தும் வரவேற்கத் தக்கது-பாராட்டுக்குரியது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர் களுக்கு மார்ச் 7ஆம் தேதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து எங்களுடைய அமைப்பு உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பிரச்சினை களை முன் எடுத்து வரு கிறது. உலகில் உள்ள மற்ற மக்களைப்போல தமிழ் மக்களுக்கும் அய்க் கிய நாடுகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ளபடி பிரிக்க முடியாத உரிமை களும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சுதந்திர மும் அவர்களது உயிர் களுக்கும், உடமைகளுக் கும் பாதுகாப்பும் கொண் டவர்கள் ஆவர்.
உலகத்தமிழ் அமைப்புகளில் உள்ள நாங்கள் தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சி லின் 22-வது கூட்டத் தொடரில் இலங்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வலு வான தீர்மாத்திற்கு இந் திய அரசு ஆதரவளிக்க நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மீண்டும் டெசோ அமைப்பைக் கூட்டி தமிழர்களுக்கு எதிராக சிங்கள இலங்கை அரசு தொடுத்த போர்க்குற்றங் களுக்கும் இனப் படு கொலைக்கும் நீதியும், பொறுப்பையும் கோரி போரட்டங்களை நடத்தி வருவதை நாங் கள் பாராட்டி வரவேற் கிறோம்.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந் தியா ஆதரிப்பதோடு மட் டும் நின்று விடாமல், ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் தீர்மானத்துக்கு திருத்தங் களையும் இந்தியா கொண்டு வர வேண்டும் என்று உங்களை அவசர மாகக் கேட்டுக் கொள் வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறாம்.
அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அதன் தலைவர் திருமதி நவ நீதம் பிள்ளை 11.2.22013 அன்று அளித்துள்ள அறிக்கையில் இலங்கை யில் உள்ள அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய பெருங்கொடுமைகளை, விசாரிக்க சுயேட்சையான நம்பகரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்திய அரசில் தங் களுக்குள்ள செல்வாக் குடனும் மற்றும் தங்க ளுக்கு தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆத ரவுடனும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரிக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து ஆதரிப் பதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.
அய்.நா. மனித உரி மைகள் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இலங்கைப் பிரச்சினைகளில் இந் தியாவின் நிலையை எதிர்நோக்குகின்றன. எனவே விசாரணைக் கமிஷனுக்கு இந்தியா வின் ஆதரவு அந்த நாடு களின் வாக்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி தமிழர்களுக்கு வேண்டிய நீதி கிடைக்க உதவும்.
இது ஈழத் தமிழர்க ளுக்கு நீதியையும் ஒரு கௌரவமான அரசியல் தீர்வையும் கொண்டு வருவதற்கு ஒரு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாகும்.
இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பின் தலை வர் செல்வன் பச்சமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
(நன்றி: முரசொலி, 12.3.2013)
மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)
மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே!
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?
என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்
என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்
என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?
எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?
பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!
அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!
இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?
பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?
அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிவிடவில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?
குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே! - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?
கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?
சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?
மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.
கி.வீரமணி,
ஆசிரியர்
உங்களுக்குத் தெரியுமா?
தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
வரும் 18 ஆம் தேதி மாவட்டத்
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் அறிவிப்பு
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
அய்.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதவேண்டும் என்ற மத்திய தேர்வாணையத்தின் புதிய விதிமுறை இந்தி பேசாத மக்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதால், அதனை எதிர்த்து வரும் 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி - ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசுவோர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தத்தம் தாய்மொழி பேசுவோர்க்கு மாபெரும் அநீதி யைச் செய்யும் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.
புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது?
இதுவரை அய்.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் எழுதலாம்.
அந்த முறை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். அதேபோல், விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும் பாடத்தையும் தமிழில் எழுத முடியும்.
புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது? தமிழ் இலக்கியத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்வு எழுத முடியும். அதேபோல, தாய் மொழியாகிய தமிழ் வழியில் படித்திருந்தால் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் பாடத்தினையும் தாய் மொழியாகிய தமிழிலும் எழுதலாம்.
தமிழ் வழியில் படித்திருந்தால், தமிழில் எழுதுவ தற்குக் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் தேவைப் படுவர்.
இனிமேல் தமிழில் எழுதுபவர்கள், 25 பேர்களைத் தேடிப் பிடிக்கும் வேலையிலும் ஈடுபடவேண்டும் போலும்.
திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன - அவசியம்தான் என்ன?
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித் திருந்தால், ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதவேண் டுமாம்.
பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒருமுறை இப்பொழுது திடீரென்று இப்படி மாற்றப்படவேண்டிய அவசியம் என்ன - தேவை என்ன?
ஏதோ ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தாய்மொழியில்தான் சிந்திக்க முடியுமே தவிர, வேறு மொழியில் அல்ல - இது கல்வி யாளர்கள் கணித்த ஒன்றாகும்.
பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புற மக்களே!
இந்தப் புதிய ஆணையினால் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களைத்தான் பெரிதும் பாதிக்கும்.
கடந்த பல ஆண்டுகாலமாக அய்.ஏ.எஸ். தேர்வு களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 35 பேர் இவ்வாண்டுகூட நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கிறார்கள்.
உயர்ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி!
இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை, மனதை உறுத்துகிறது. இவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு செய்வதற்கான தந்திரம்தான் இந்தப் புதிய விதிமுறைகள்.
அய்.அய்.டி. போன்று அய்.ஏ.எஸ். என்பது அடித் தளத்து மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் சதி இதன் திரைமறைவில் உள்ளது.
ஏற்கெனவே இருந்த முறை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்கள் கூறப்பட்டுள் ளனவா?
எந்த யோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எந்தவிதமான, நியாயமான காரணங்களும் கூறப்படவில்லை.
இந்தி வாலாக்களுக்குக் கொண்டாட்டம்!
இந்தப் புதிய விதிமுறை, இந்தி வாலாக்களுக் குத்தான் கொண்டாட்டம். பல தலைமுறைகளாக ஆங்கில மொழி பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்குப் பெரிதும் பயன்படப் போகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான போக்கு இது என்பதில் அய்யமில்லை.
தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை
தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்ட ரீதியாகவே நிலை நிறுத்தப்பட்டது.
இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தைக்கூடத் தந்தை பெரியார் அறிவித்து, மத்திய அரசின் உறுதிமொழியின் அடிப் படையில் அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இப்பொழுது மத்திய தேர்வாணையம் மறைமுக மாக இந்திக்கு ஆக்கம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
இந்தக் கொல்லைப்புற நுழைவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாடு அனுமதிக்காது - குறிப்பாக திராவிடர் கழகம் ஏற்காது.
18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
புதிய ஆணையை உடனடியாக விலக்கிக் கொண்டு இவ்வாண்டு முதற்கொண்டு, ஏற்கெனவே இருந்த முறையில் தேர்வு எழுதிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 18.3.2013 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழக மாணவரணி, இளைஞரணித் தோழர்கள் மற்ற அணிகளின் ஒத்துழைப்புடன் அதற்கான பணி களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
13.3.2013
இந்தியா-கறையைத் துடைத்துக் கொள்ளுமா?
டெசோவின் செயல்பாடுகள் எவ்வளவு சிறப்பானவை - காலத்திற்கு மிகவும் பொருத்த மானவை என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
வரும் 21 ஆம் தேதி ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் - அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பெரும்பாலான வாக்குகள் ஆதரவாகக் கிடைக் கும் என்று தெளிவாகி விட்டது என்றாலும், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
டெசோவின் நடவடிக்கைகள் அனைத்தும் மிக முக்கியமாக ஈழத் தமிழர்களின் நல் வாழ்வுக்காக, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிக முக்கியமான, இன்றியமையாத பணியில் மிகுந்த அக்கறையுடன், திட்டமிட்ட வகையில் தமது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருகிறது.
டெசோவில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் மீது தவறான பிரச்சாரம் ஒரு வகையில் செய்யப்பட்டு வந்தது; அவர்கள்கூட காலந்தாழ்ந்தாவது இந்தத் தலைவர்களின் உண்மையான ஈடுபாட்டை இப்பொழுது உணரும் வகையில் டெசோவின் செயல்பாடுகள் நேர்த்தி யாக அமைந்துள்ளன.
அதுவும், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தம் - முழு அடைப்பு - தமிழ் மண்ணின் உணர்வை உலகுக்கே உணர்த்திவிட்டது.
ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இடக்கு முடக்காக விமர்சனம் செய்பவர் கள் ஒரு பக்கம்; ஆட்சி அதிகாரம் தம்மிடம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்படியும் ஒடுக்கிவிடவேண்டும் என்று திமிர் முறித்து எழுந்த தமிழ்நாடு அரசு இன்னொரு பக்கம்;
தமிழர்கள் என்றாலே வேப்பங்காயாக நினைக் கும் பார்ப்பன ஊடகங்கள் மற்றுமொரு பக்கம்; இவ்வளவு அனல்களையும், மலைகளையும் கடந்து இந்தப் போராட்டம் தமிழர்களின் பேராதரவுடன் பெருவெற்றியை ஈட்டிவிட்டது.
தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் புதுச்சேரி மாநிலமும் புது அத்தியாயத்தைப் படைத்துவிட்டது.
இதற்குப் பிறகாவது புத்திக் கொள்முதல் பெறவேண்டியவர்கள் பெறவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.
குதர்க்கம் பேசும் உள்ளூர்த் தமிழர்கள், தலைவர்கள், அமைப்புகள், தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய அனைத்தும் இனிமேலாவது தமிழ்நாட்டு மக்களின் உண்மையான உணர்வை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.
இந்திய அரசைப் பொறுத்தவரை அதற்கொரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்று கருதிடவேண் டும்.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஈழத் தமிழர்களுக்காக அது உதவி செய்துவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பொதுவாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியது இந்தியா என்ற நற்பெயருக்கு, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா அண்மைக்காலத்தில் அது நடந்துகொண்டு வந்துள்ள போக்கு பெருங்களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
அந்த வகையில் பார்த்தாலும் இந்தியா தன் மீது படிந்துள்ள கறையைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் - அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தே தீரவேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். 13-3-2013
அவசியம்
கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)
பொது வேலை நிறுத்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
டெசோ சார்பில் டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை
சென்னை, மார்ச் 13- ஈழத் தமிழர் இன்னல் தீரவும், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்ககவேண்டுமென்று கோரியும்,
டெசோ இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி திங்கள் 8 ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - மார்ச் திங்கள் 5 ஆம் தேதியன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் - மார்ச் திங்கள் 7 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் கருத்தரங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து - மார்ச் 12 ஆம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
வழக்குத் தொடுத்தார்கள்
ஈழத் தமிழர்களுக்காகத்தான் இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத்திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத்திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தம் என் பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத் திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத் திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று அறிக்கை விட்டார்கள். வேறு சிலர் மறைமுகமாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத் தார்கள்.
அரசு தலைமை வழக்கறிஞரும் வேலை நிறுத்தத் திற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார். சிலர் இதனைத் திசை திருப்பும் முயற்சி என்றெல்லாம் ஊருக்கு முந்திக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டி குளிர்காய முயற்சித்தார்கள். அதையெல்லாம் மீறி கழக உடன் பிறப்புகளுக்கு உரிமையுடன் இதிலே கலந்து கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று இரண்டு நாள் உடன்பிறப்பு மடலில் கேட்டுக் கொண்டேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் அறிக்கை விடுத்தார்கள். டெசோ இயக் கத்தின் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மிகப்பெரிய வெற்றி!
அரசு சார்பில் பேருந்துகள் ஓடும் என்றார்கள். வணிகர் சங்கத்தின் சார்பில் கடைகள் திறந்து வைக்கப்படும் என்றார்கள். ஆனால், அவர்களையும் மீறி, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணே, எங்கள் ஊரில் ஒரு டீக்கடை கூடத் திறக்கவில்லை என்றும், அண்ணே எங்கள் மாவட்டத்தில் முழு வெற்றி என்றும், தலைவரே, பொது வேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றி என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள்.
தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு பேருந்துகளை ஓட்டு வதற்கு முயற்சி எடுத்தபோது கழகத் தோழர்கள் மறியல் செய்து எங்கள் மாவட்டத்தில் இத்தனை பேர் கைது, எங்கள் நகரத்திலே இவ்வளவு பேர் கைது என்று தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.
பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்
தமிழகம் முழுவதிலும் அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பல ஊர்களி லிருந்து வந்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் தாங்களும் மறியல் செய்யப் புறப்பட்டுச் சென்று அவர்களும் கைதான செய்தி கிடைத்தது. இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்திய இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கித் தந்த வணிகப் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஏன் தமிழ் உணர்வு படைத்த பொதுமக்கள் அனைவருக்கும் டெசோ இயக்கத்தின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும், என் தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு; இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உரிய அக்கறை செலுத்தி, தெளிவான முடிவினை மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
- இவ்வாறு கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.
Post a Comment