Search This Blog

21.3.13

ஆரிய சூழ்ச்சி தான் என்பதை ஆரிய ஏடான தினமணி ஏற்றுக் கொள்ளுமா?தினமணி எதிர்ப்பது ஏன்? 

அய்.ஏ.எஸ். தேர்வில் தாய்மொழி புறக்கணிக்கப்படுவது தொடர்பாக கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்திய அளவிலும் கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதன் எதிரொலியைக் கேட்கவும் முடிந்தது.

அதன் விளைவாக மத்தியப் பணியாளர் தொடர்பான இணை அமைச்சர்  மாண்புமிகு வி. நாராயணசாமி அவர்கள் அந்தத் திட்டம் - புதிய முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சமூகநீதி சிந்தனை உடைய அனைவரும் புதிய திட்டத்தை எதிர்த்ததற்கான காரணம் வெளிப்படை!

1) முதலில் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்படலாம் என்றிருந்த உரிமை புதிய திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

2) இந்தியிலும், இங்கிலீஷிலும் எழுதலாம் என்பதற்கு வசதி
செய்துகொடுக்கப்பட்டுள் ளது. இதன் மூலம் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குக் கூடுதல் வசதியும், சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

3) தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து முதன்மைத் தேர்வு எழுதலாம். வேறுபாடங்களை எடுத்துப் படித்தவர்கள் தமிழ் இலக்கியங்கள் தொடர் பான பாடப் பிரிவைத் தேர்வு செய்ய முடியாது.

4) தாய் மொழியைப் பயிற்று மொழியாகப் படித்தவர்கள் அந்த மொழியிலே எழுத வேண்டுமானால் குறைந்த பட்சம் 25 பேர் அதற்குக் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இவற்றிற்கு இந்தியா முழுமையும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், தினமணி மட்டும் பூணூலைப் பேனாவாக்கி, வழக்கமான அக்ரகாரச் சிந்தனையோடு தலையங்கம் தீட்டி யுள்ளது (18.3.2013)

தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் படிக்கா மலேயே முனைவர் பட்டம் பெற முடியுமே என்று குறுக்குச்சால் ஓட்டுகிறது; அதனை எதிர்த்துக் களம் இறங்கத் தயார் - தினமணி கூட்டம் தயாரா?

மத்திய தேர்வாணையத்தின் புதிய முடிவால் பல மாநிலங்களும் பாதிக்கப்படுவது உண்மை தான் என்று தன்னை அறியாமலேயே தினமணி ஒப்புக் கொண்டுள்ளது.

செம்மொழி மாநாட்டுக் குழுவில் ஓர் உறுப் பினராக இருக்கக்கூட முரண்டு பிடித்தவர் தினமணி ஆசிரியரான அய்யர்வாள்.

அத்தகையவர் தமிழைப் பற்றிக் கவலை கொள்வதுபோல உருகுவதுதான் வேடிக்கை!

மத்திய தேர்வாணையம் ஆங்கிலத்  திறனுக்குத் தேர்வு மதிப்பீட்டில் அதிக முக்கியத்துவம் தருவது சரியானதுதான் என்று வக்காலத்து வாங்கும் தினமணி-

மாநில மொழியான தமிழுக்கு மட்டுமல்ல குஜராத்தி, வங்காளி, பஞ்சாபியானாலும் இந்த நிலைதான் - பொதுதான் என்று தினமணி கூறுவதன் பொருள் என்ன?


தாய் மொழியாக தமிழைக் கொண்டவர்கள் மட்டுமல்ல; வேறு மாநில மக்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுவது சமாதானமா என்று தலையங்க எழுத்தாளரைக் கேட்கிறோம்.

வடமாநிலங்களில் இந்தியில் தேர்வு எழுது வதற்கு ஆங்கிலத்திற்குரிய முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கியதன் மர்மம் என்ன?

தாய்மொழியில் தேர்வு எழுதுவதுபோல இன்னொரு மொழியில் என்னதான் திறன் பெற்றிருந்தாலும் வசதி வருமா?

ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப் பகுதி மக்களும் அய்.ஏ.எஸ். போன்ற தேர்வுகளில் அதில் தேர்ச்சி பெறுவதைத் தடுக்கும்ஆரிய சூழ்ச்சி தான் என்பதை ஆரிய ஏடான தினமணி ஏற்றுக் கொள்ளுமா, என்ன?

                   -------------------------"விடுதலை” தலையங்கம் 20-3-2013

35 comments:

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!


சென்னை, மார்ச் 20- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று தாம் கூறியதைத் திரித்துக் கூறும் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்;

நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;

திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத் திருத்தங்களை, இந்திய நாடாளு மன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறை வேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன். உள்நோக்கத்துடன் திரிப்பதா?

நான் தெளிவாகச் சொன்னதை, முதல மைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங் களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத் தப்பட்டது இனப் படுகொலையே என்பதை யும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசார ணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ப தையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத் தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண் டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பு!

ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப் போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண் டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீர்த்துப்போன தீர்மானம்!

இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமள வுக்கு நீர்த்துப் போய்விட்டது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய் வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக் கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரி விக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக் கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங் களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக் கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற் கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் - வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு - திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகல்: முறைப்படி கடிதம் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டது


புதுடில்லி, மார்ச் 20- மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டதையடுத்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய ஆதரவு விலகலுக்கான கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் நேற்றிரவு (19.3.2013) தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு நேரில் அளித்தார்.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முன்வரவேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தியது.

ஆனால், மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று அறிவித்தார்.

இதனையடுத்து மத்திய அரசுக்கான ஆதரவு விலகல் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தை தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் நேற்றிரவு (19.3.2013) நேரில் அளித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்குத் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தி.மு.க. உடனடியாக விலக்கிக் கொள்கிறது என்று இன்று (19.3.2013) எடுத்துள்ள முடிவை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை தாங்கள் அளித்து வந்த ஒத்துழைப்புகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகல் கடிதம் பிரதமரிடம்...

புதுடில்லியில் இன்று (20.3.2013) தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பிரமதர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தினை அளித்தனர்.

தமிழ் ஓவியா said...


சுண்டைக்காய் இலங்கை அரசு நாகை மீனவர்கள்மீது அரிவாள் வெட்டு


வேதாரண்யம், மார்ச் 20- தமிழக மீனவர் கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்கு தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நாகை, காரைக்கால் மீன வர்கள் மீது இலங்கைக் கடற்படை துப் பாக்கியால் சுட்டதில் மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதவிர, ராமேஸ்வரம், தூத்துக்குடி மீனவர்கள் மீதும் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் தூத்துக் குடி மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறை பிடித்து சென்றனர். தற்போது நாகை மீனவர்களை சிங்களக் கடற்படை அரிவா ளால் வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்தவர் கண்ணையன் (45). இவரது தலை மையில் அதே பகுதியை சேர்ந்த செல்வ குமார், பொன்னுசாமி, சசிகுமார், அசோக், அருண் ஆகிய 5 பேர் நேற்று பகல் 12 மணி யளவில் படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது இலங்கைக் கடற்படையின் ரோந்து கப்பல் அங்கு வந்தது. அதில் இருந்த சிங் களக் கடற்படையினர் நாகை மீனவர்கள் படகை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் நாகை மீனவர் கள் மீது சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் கண்ணை யன், செல்வக்குமார், பொன்னுசாமி, சசி குமார் ஆகிய நான்கு பேருக்கு பலத்த வெட்டு விழுந்தது. கை, கால் தொடைப் பகுதியில் காயம் ஏற் பட்டது. அதன் பிற கும் சிங்களக் கடற் படை அட்டூழியம் அடங்கவில்லை. நாகை மீனவர்கள் படகையும் சரமாரியாக வெட்டினார்கள். அவர்கள் பிடித்து வைத் திருந்த மீன்களையும், வலைகளையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

சிங்களக் கடற்படை சரமாரியாக அரி வாளால் வெட்டியதில் படகும் சேதம் அடைந்தது. அரிவாள் வெட்டில் காயம டைந்த 4 மீனவர்களும் மற்ற மீனவர்கள் துணையுடன் ஆறுகாட்டுத்துறை கடற் கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலத்த வெட்டுக் காயமடைந்த மீனவர் கள் கண்ணையன், பொன்னுசாமி, சசி குமார் ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். செல்வக்குமார் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீனவர்கள் சிங்களக் கடற்படையால் வெட்டப்பட்ட சம்பவம் கிடைத்ததும் வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ. காம ராஜ், நகர் மன்ற தலைவர் மலர்கொடி நமச்சிவாயம், ஓன்றியக் குழுத் தலைவர் சுசிலா சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் ஆகியோர் வேதாரண்யம் மருத்துவமனைக்கு சென்று மீனவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

நாகை மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையின் தாக்குதல் அடிக்கடி நடை பெற்று வருகிறது. இதனால் நாகை மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. சிங் களக் கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


அட, பத்மநாபா! உன் சக்தி இம்புட்டுதானா?

திருவனந்தபுரம், மார்ச் 20- மின்னல் தாக்கியதால் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த 32 கேமராக்கள் எரிந்தன.

பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரூ.10கோடி மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் உட்பட பாதுகாப்பு கருவிகள் கோயிலில் பொருத்தப்பட் டுள்ளன.

கோயிலைச் சுற்றி மொத்தம் 59 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகளைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் நகரில் பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோயிலின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த 32 கேமராக்கள் எரிந்தன. இந்த சம்பவத்தால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. கேமராக்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

சிறீதேவி அம்மனின் கலசமே கோவிந்தா!

ஆவடி, மார்ச் 20-ஆவடி அருகே சேக்காட்டில் சிறீதேவி சின்னம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி வைத்தீஸ்வர நாதர் சிவசாமி இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிச் சென்றார்.

நேற்று காலையில் வழக்கம்போல் கோயிலை திறக்க வந்தார். உள்ளே சென்று கோபுரத்தை நோக்கி கும்பிட்டார். அப்போது, கோபுரத்தில் இருந்த 6 கலசங்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு திடுக்கிட்டார். ஆசாமிகள் இரவு நேரத்தில் சுவர் ஏறி, குதித்து கலசங்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன கோபுரக் கலசத்தின் மதிப்பு ரூ.30ஆயிரம் என கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவம்: அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காவல்துறை சோதனைச் சாவடி அருகே ராமபக்த அனுமன் கோயில் உள்ளது. பூசாரி ராஜகோபால் பட்டாச்சாரி நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப் பட்டுக் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் இருந்த வெள்ளி ஜடாரி, தட்டு மற்றும் பூஜை பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. புகாரின்படி, ஆவடி, திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேர்வு முறையில் தமிழ் மொழி தூக்கி எறியப்பட்டுவிட்டது - இதனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது (மார்ச் 18, 19).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு களை அறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.

நெருக்கடி முற்றியது என்றவுடன், தமிழைப் புறந்தள்ளும் திட்டத்திற்குக் கடைசி கையொப்பமிட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் இப்பொழுது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாத பாப்பாத்தி போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள்! என்கிற தோரணையில், தாம் செய்த தமிழ் ஒதுக்கலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அவாளின் இனமலரோ எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து செய்தியையும் வெளியிட் டுள்ளது.

வெண்டைக்காய் விளக்கெண்ணெய் - கத்தாழை களைக் குழைத்து சமாதானம் சொல்ல முயற்சிக்கும் திருவாளர் நட்ராஜ் அய்யர்வாளுக்குச் சில கேள்விகள்:

1. பிரிவு -2 (குரூப்-2) தேர்வில் இருந்து வந்த பொதுத் தமிழ் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

2. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் இடம் பெற்றிருந்த பொதுத் தமிழ் முழுவதும் அகற்றப்பட் டுள்ளதா - இல்லையா?

3. பிரிவு நான்கில் (குரூப்-4) இதுவரை தமிழில் கேட்கப்பட்டு வந்த 100 வினாக்களுக்குப் பதில் 50 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

அறிவு நாணயமாக சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்காமல், நேரிடையாக திருவாளர் நட்ராஜ் அய்யர்வாள் பதில் சொல்லுவாரா?

அய்யர்வாளுக்கு வக்காலத்து வாங்கும் இ(தி)னமணி, இ(தி)னமலர் அய்யர்வாள்களும்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் ஒரு பக்கம் - உள்ளூர் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம்.

இரண்டுக்குள்ளுமே ஆரியக் கொடுக்கு இருக் கிறதே - இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள 72 பக்கங்களையும் படித்துவிட்டுதான் இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துள்ளோம்.

கூடுதல் செய்தி (Tail Piece)

திடீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணைய தளத்திலிருந்து இந்தப் பகுதி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது - மாற்றம் வந்தால் சரி!

தமிழ் ஓவியா said...


தலையெழுத்தாம்


ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.

(குடிஅரசு, 6.7.1968)

தமிழ் ஓவியா said...


இப்படிச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் எவை? (2)


2. அடிக்கடி சாக்லேட்டை சிறு தீனியாகச் சாப்பிடுவது நல்லதுதானா?

எல்லா இனிப்புகளிலும் சர்க்கரை என்பது இருக்கும் என்பது நாமறிந் ததே. மிட்டாய்களையும், இனிப்பு வகைகளையும்கூட நாம் ஏராளம் சாப்பிடுவதை, பொதுவாக அனைவருமே தவிர்ப்பது நல்லது. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!

சர்க்கரை நோயாளிகளில் பலருக்கும் இனிப்புகளைக் கண்டால் அதனைவிட்டுவிட மனம் வராது; அதனால் மிகுந்த சுயக்கட்டுப்பாடு அவர்களுக்குத் தேவை. மீறினால் மற்ற உணவின் அளவைப் பெரிதும் குறைத்துக் கொண்டு சம ஈவுக்குக் கொண்டுவர முயலுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின் றனர்.

மற்ற இனிப்புகளில் உள்ளதைவிட, சாக்லேட்டுகள்மூலம் கிடைக்கும் சர்க்கரை - நேரிடையாக ரத்தத்தில் உடனடியாகக் கலந்துவிடாமல், சற்று தாமதமாகக் கூடும் - என்பதால், மற்ற இனிப்புகளைவிட சாக்லேட் பரவாயில்லை. கறுப்பு சாக்லேட்டுகள் மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றன என்பது பெரிதும் நிலவுகின்ற கருத்தாகும்.

சர்க்கரை நோயாளிகள் பழரசங் களை நேரிடையாக அருந்தாமல், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங் களைச் சாப்பிடும்போது, அதன்மூலம் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவு மெதுவாகவே கலப்பதால், அது பரவாயில்லை என்பதும் மருத்துவரின் கருத்து.

3. ஆப்பிளை சிறு தீனியாகச் சாப்பிடுவது நல்லதா?

நல்லது, வரவேற்கத்தக்கது. ஆப்பிளைக் கடித்துத் தின்னும்போது ஒவ்வொரு கடியின்மூலமும் பெறப்பட்டு உணவாக உள்ளே போகும் ஆப்பிள், நமது உடலின் பல்வேறு கூறுகளைச் சரியாக வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. பசியை அடக்குகிறது; இருதயத்திற்குச் சத்தைக் கொடுக்கிறது!

இது நார்ச்சத்து ஆதலால், இது ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

குடலுக்குள் சென்று செரிமானம் ஏற்பட பெரிதும் இது துணை செய் கிறது. இதில் உள்ள இனிப்புச் சர்க்கரை அளவு மிகவும் மெதுவாக ரத்தத்தில் கலப்பதால், அதிக சர்க்கரைத் தாக்கு தல் இல்லை இதன்மூலம் என்றே சொல்லலாம்!

ஆப்பிளில் உள்ள ‘Quercetin’ க்ய வர்சிடென் என்ற Antioxident உடல் நலத்திற்கு உதவும் சத்து ஏராளம் உள்ளது. (இந்த சத்து கிரீன் டீ, வெங்காயம் ஆகியவற்றிலும் உள்ள தாம்). ஆஸ்துமா, இதயநோய், சில வகை புற்றுநோய் இவற்றைத் தடுக்கும் குணம் கொண்டவைகளாகவும் இருக் கின்றது.

மேலும் ஆப்பிள் சாப்பிட்டால் அது நம் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவி செய்கிறது.

ஆப்பிள் சாப்பிட வாய்ப்பு உள்ள வர்கள் மற்ற பழங்களைப் போலவே ஆப்பிளையும் தவறாமல் சாப்பிடுங்கள்.

4. பகலில் அதிக நேரம் வெறுமனே உட்கார்ந்தே இருப்பது நல்லதா?

சோம்பலுடன் சும்மா மணிக் கணக் கில் உட்கார்ந்தே இருத்தல் கூடாது; கூடவே, கூடாது.

மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் எவரும்கூட (கணிப் பொறிகளில் அல்லது அலுவலக எழுத்துப் பணிகளில் உள்ளவர்கள்) அடிக்கடி எழுந்து நடமாட வேண்டும். இல்லாவிட்டால் உடல் எடை கூடும் - காரணம் கொழுப்புச் சேர்ந்து ஊளைச் சதை கூடிவிடுமே!

எந்நேரமும் அமர்ந்து தொலைக் காட்சிப் பெட்டிகளில் கட்டுண்டு கிடப் போரை, அமெரிக்காவில் இருக்கை உருளைக் கிழங்குகள்(Couch Potatoes) என்றுதான் அழைப்பார்கள். இதன்மூலம் இதய நோய், மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு வர வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்!

நாளெல்லாம் அமர்ந்தே இருப்பது இரத்தச் சர்க்கரையைச் சேர்த்து வைத்து, அதுவே நம் உடலில் பல நோய்களுக்கு அடித்தளம் ஆகும்!

உடற்பயிற்சி செய்தால்தான் நம் உடல்நலம் சீராக, தேவையற்றுச் சேரும் கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும். குறைந்தபட்சம் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டும். செய்வீர்களா?

(மற்றவை நாளை)

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வும் - மாற்றங்களும் சி. வாஜித் ஷா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாவட்ட ஆட்சியர் ஆகவேண்டும் என்கிற இலட்சிய வேட்கை காரன் வாலிஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த போது ஆங்கில அரசாங்கம் ஏற்படுத் தியது. இன்றுவரை அது தொடர்கிறது. உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீஸ் தேர்வில் மனப்பாடத் தகவல்களுக்கு முக்கியத்துவம் குறைந்து ஆழமான அறிவாற்றல் புரிதலுக்கு முக் கியத்துவம் அதிகரித்துள்ளது. எனினும் சிறப்பு அறிவுக்கு ஒரு மதிப்பெண்ணும் ஒதுக்கப்படவில்லை. மிக நேர்த்தியான, சீரான, மிகச் சரியான பதிலுக்கு வெற்றி கிடைக்குமாறு தேர்வு முறை உள்ளது.

இங்கு அறிவாற்றல் என்று -குறிப் படப்படுவது எது என்கிற கேள்வி எழு கிறது. கான்பூர் அய்.அய்.டி. போன்ற இடத்தில் இயல்பாக மாணவர்கள் பெறும் அறிவா அல்லது சாதாரண கலைக் கல் லூரிகளில் மனப்பாடம் செய்வதன் மூலம் பெறப்படும் அறிவா என்பதில் அய்யம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி சூழலில் கற்பவர்க்கு ஏற்ப, பாடமுறையும் தேர்வு முறையும் மாற்றப்படுவதால் கிராமப்புற, தாய்மொழி பற்றுள்ளவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வின் வெற்றி கடினமாக்கப் படுகிறதா என்கிற கேள்விகள் எழுந் துள்ளன.

1960இல் தமிழ்நாட்டின் சிவில் சர்வீஸ் தேர்ச்சி 30 சதவீதமாக இருந்தது. 1980 இல் வேறுமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டின் உயர் அதிகாரியாக நியமிக்கபடுமள விற்கு தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி குறைந்துவிட்டது.

1990-க்குப் பிறகு ஏற்பட்ட விழிப் புணர்வில் மெல்ல மெல்ல தமிழ்நாட்டு மாணவர்களின் வெற்றி அதிகரித்தது. அப்பொழுது தமிழ் இலக்கிய பாடத்தில் மாற்றம் ஏற்படுத்தி தமிழ் இலக்கிய பாடம் கடினமாக்கப்பட்டது.

2010-க்குப் பிறகு முதன்மை நிலையை நோக்கி தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றி பெற்றபோது பிரிலிமினரி தேர்வில் சி-சாட் பாடமுறை அறிமுகப்படுத்தி விருப்பப் பாடத்தை நீக்கியதால் பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்தகட்டமாக முதன்மை தேர்வில் மாற்றம் ஏற்படுத்தி கடுமையான விதி களை கொண்டுவந்துள்ளனர். இந்நிலை களை முற்றிலுமாக நிரந்தரமாக நீக்க வேண்டும்.


தமிழ் ஓவியா said...

இந்திய விடுதலைப் போராட்டத் தின்போது இந்தியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்றால் கிரேக்கம் மற்றும் இலத்தீன் செவ்வியல் மொழிப் புல மையை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய உயர் பதவிகளுக்கு இவை தேவையா என்பதைவிட ஆங்கிலேயர்கள் போட்டித் தேர்வில் வெல்வதற்கு தேவை யாக இருந்தது. இந்தியர்களுக்கு குடிமைப் பணி தேர்வு மிகக் கடினமாக இருந்தது. மிதவாத காங்கிரஸ் போராட்ட காலகட்டத்தில் இந்தப் பிரச்சினை பெரிதும் பேசப்பட்டது. 130 ஆண்டு களுக்குப் பிறகு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.

தற்பொழுது பிராந்திய மொழியில் தேர்வு எழுதுவதற்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந் தது 25 பேராவது விருப்பம் தெரிவித்தால் தமிழ் மொழியில் எழுத அனுமதிக் கப்படுவார்கள் என்கிறது புதிய விதி. உயர்தரத்தை மேம்படுத்துவதற்கான இந்த விதி என்று நோட்டிபிகேஷனில் (Notification) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முற்றிலுமாக, நிரந்தரமாக நீக்கவேண்டும்.

தமிழில் எழுதுவது ஏன்?

தமிழ்மொழியில் சிவில் சர்வீஸ் தேர் வெழுதுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தங்களது கருத்துகளைச் சிறப்பாக எழுத முடியும் என்பது முக்கிய காரணம். ஆங்கிலத்தில் பலவீனமாக இருப்பதால் தமிழ்மொழியில் எழுதுப வர்கள் மிகமிகக் குறைவு. பலமுறை ஆங்கில மொழியில் எழுதி அதிக மதிப் பெண் பெற முடியவில்லை. எனவே, மொழியை மாற்றி முயற்சிக்கலாமே என்பதுகூட ஒரு காரணம். தமிழ் மொழி யில் முதன்மைத் தேர்வு எழுதினால் மட்டுமே நேர்காணலில் தமிழில் பேச முடியும்.

ஆயினும், நேர்காணலை ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்படும் போது ஆங்கிலத்திலேயே பேசினால் நல்லது என்று ஆங்கிலத்திலேயே பதிலை சொல்வதுதான் பெரும்பாலும் நடை பெறும். மொழிபெயர்ப்பாளர்கள் இருப் பார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் ஓரி ரண்டு பதிலை மொழிபெயர்க்கும் விதத்தைக் கவனிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்திலேயே நேர்காணலைத் தொடர்வார்கள்.

எனவே, ஆங்கில மொழி யில் பலவீனம் என்பதற்காக இன்றி தமிழில் அதிக வலிமையானவர்கள் என்ப தால்தான் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியில் சிவில் சர்வீஸ் தேர்வெழுத விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பைத் தடுக்கக்கூடாது.

தமிழ் ஓவியா said...

2006ஆம் ஆண்டு முதன்மை தேர் வெழுதியவர்கள 7493 பேர். இதில் இந்தி மொழியில் தேர்வை எழுதியவர்கள் 3296 பேர். தமிழ் மொழியில் எழுதியவர்கள் 70 பேர். மராத்தியில் எழுதியவர்கள் 69 பேர். தெலுங்கில் எழுதியவர்கள் 53 பேர். ஆங்கிலத்தில் எழுதியவர்கள் 3931 பேர். அதாவது, பொது அறிவு பாடத்தைப் பிராந்திய மொழியில் எழுதியவர்கள்.

பெங்காலியில் 6 பேர், கன்னடாவில் 8 பேர், உருதுவில் ஒருவர் மட்டுமே எழுதி னர். தேர்வெழுதும் மொழி குறித்த நிச்சயத்தன்மை நிலவ வேண்டும். எனவே, 25 பேர் இருந்தால் மட்டுமே பிராந்திய மொழியில் அனுமதிக்கப்படுவார்கள் என்கிற விதியை நீக்க வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்தில்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது உயர் பதவிகளில் இந்தியர் களை நியமிப்பதில்லை. ஆங்கிலேயர்கள் மட்டும்தான் உயர்பதவி வகிக்க தகுதி யானவர்கள் என்கிற எண்ணம் ஆங்கி லேயரிடம் இருந்தது. 1859-க்குப் பிறகு இலண்டனில் நடந்த போட்டித் தேர்வின் மூலம் குடிமைப் பணிக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தனர். இப்பதவிக்கு இந்தி யர்கள் தகுதியற்றவர்கள் என்கிற எண் ணம் ஆங்கிலேயரிடம் இருந்தபோதிலும், இந்தியர்களைத் தேர்வெழுத அனுமதித் தனர். இதற்கு முக்கிய காரணம் 1857ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராகும்.

இந்தியர்களின் மனநிலையை அறியாமல் போனதுதான் 1857ஆம் ஆண்டு கலவரத் திற்குக் காரணம் என்கிற முடிவால் இந்தியரின் மனநிலையை அறிவதற்கு உயர் பதவிகளில் ஒரு சில இந்தியர்களை நியமிக்க ஆங்கிலேயர்கள் இசைந்தனர்.

ஆனால், 23 வயதுக்குள் தேர்வெழுதி வென்றாக வேண்டும். ஆங்கிலத்தில் தேர்வெழுத வேண்டும். பெரும் பொருட் செலவில்தான் இந்தக் கல்வியைக் கற்க முடியும் என்கிற இடர்கள் இருந்தன. சந்தியேந்திரநாத் தாகூர் இத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நபர் என்கிற சிறப்பைப் பெற்றார்.

இவர் இரவீந்திரநாத் தாகூரின் சகோ தரர் ஆவார். குடிமைப் பணி, படித்த இந்தியர்களின் மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. இனவெறி ஆங்கிலேயர்கள் முடிந்த அளவிற்கு இந்தியர்களை விலக்கி வைத்தனர். மிகப்பெரிய தொல்லைகளைத் தந்தனர். குறிப்பாக சுரேந்திரநாத் பேனர் ஜிக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிவது இன்றியமையாதது. 1869இல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சுரேந்திரநாத் பேனர்ஜி வெற்றி பெற்ற போதிலும் பிறந்த தேதி பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.

- தொடரும் 20-3-2013

தமிழ் ஓவியா said...


டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு மதுரையில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மாபெரும் வெற்றி


மணமகள் - மணமகன் அறிமுகம் (மதுரை, 17.3.2013)

தகுந்த இணையர்களைத் தேடி, பல ஜாதிகளின் பின்புலத்தைக் கொண்ட பலர், 100-க்கும் மேற் பட்ட அளவில், ஞாயிறன்று மதுரையில் கூடினர். திராவிடர் கழகத்தின் ஓர் உறுப்பாகிய பெரி யார் சுயமரியாதைத் திருமண நிலை யத்தின் மாற்று ஜாதி இணை தேடும் திருவிழா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் பலன் நிறைவு பெறுவதை அதன் அமைப்பாளர் கள் விவரித்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவகிரியைச் சேர்ந்த நவநீதபாபுவும், விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகவூர், ஆர்.உமா சுகந்தியும், அன்று மாலை நடந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.

2012ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இணையர்கள் இரு வரும், சென்னையில் நடந்த இதே போன்ற ஒரு விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஞாயிறன்று நடந்த திருமணம், இது போன்ற மற்றவர்களை ஊக்குவிப் பதற்காக நடத்தப்பட்டதாக, அதன் அமைப்பாளர்கள் கூறினார்கள். மணம் செய்துகொண்ட நவநீத பாபுவிற்கு 44 வயதும், உமாசுகந் திக்கு 40 வயதும் ஆகிறது. ஏற் கெனவே திருமணம் செய்து மணமுறிவு பெற்றுக் கொண்ட இவர் களுக்குக் குழந்தைகள் இல்லை. இந்த நிகழ்ச்சியின் விளைவாகவே தாங்கள் இணைந்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

ஞாயிறன்று காலையிலிருந்தே நிகழ்ச்சி மன்றத்திற்கு நிறைய பேர் பங்கேற்க வந்திருந்தனர். பெரும் பாலானோர், துணை இழந்த வர்களாகவும் மணமுறிவு பெற்ற வர்களாகவும் இருந்தனர்.

தவிர, ஏராளமான நல்ல சம்பளம் வாங்குபவர்களும், மற்ற தகுதி படைத்த இளைஞர்களும் கன்னியர்களும் வந்திருந்தனர். அவர்களும் மாற்று ஜாதியில் பெண்ணெடுக்க இந்நிகழ்வில் பங் கெடுத்துக் கொண்டனர். அவர் கள் தவிரவும் அதிகபட்சமான மாற்றுத் திறனாளிகளும் வந்திருந் தனர். அவர்கள் தங்கள் பெயர் களைப் பதிவு செய்து கொண்டதுடன், தங்கள் விருப்பத்திற்கேற்ற இணையர்களைப் பற்றிய விவ ரங்கள் பயனுள்ளதாக இருந்த தாக அறிவித்தனர்.

தென் மாவட்டங்களின் பல பகுதிகளிலிருந்தும், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் பலர் வந்திருந்ததாக அமைப்பா ளர்கள் கூறினார்கள். மொத்தத் தில் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும், வந்திருந்தவர் களைத் தவிர பலர் தொலைபேசி மூலமும் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த 32 வயதுடைய தனியார் கம்பெனி நிருவாகி எஸ்.சுரேஷ்குமார், தான் தேனி மாவட்டத்திலுள்ள சின்ன மனூரில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். மாதம் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கி வரும் அவர் மாற்று ஜாதியிலிருந்து ஒரு பெண் வேண்டும் என்று தேடி வந்துள்ளார். வேறு ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பியதால், அவ்விதம் செய்து பிறருக்கு ஒரு முன் மாதிரியாக விளங்க விரும்பி யதாலும் தான் நிகழ்ச்சிக்கு வந்த தாக அவர் கூறினார்.

27 வயது செல்வபாரதி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிபவர். தன்னைப் போல ஒருவர், கல்வித் துறையிலேயே இருக்க விரும்பியும் மாற்று ஜாதி இணையர் வேண்டியும் இந்த விழாவிற்கு வந்துள்ளார்.

தங்கள் ஜாதிக்குள்ளே விரும்பி மணம் செய்து கொள்ள விரும்பு பவர்களுக்கு நாங்கள் உதவுவ தில்லை. மாற்று ஜாதிகளுக்கும் மணம் நடப்பதை ஊக்குவிக்கவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் இருந் தாலும், இவ்விழாவில் ஆண் - பெண்கள் பங்கெடுத்து, அவர் களுக்குள்ளேயே அறிமுகப்படுத் திக் கொள்வதோடு, மற்றவர்கள் பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். பிறகு அவர் களுக்குள் தொடர்பு கொண்டு, மற்ற பின்னணி விவரங்களையும் உறுதி செய்து கொண்டு, எல்லாம் பொருந்தி இருந்தால் அடுத்த கட்டத்துக்குப் போவார்கள் என்று அமைப்பாளர்களில் ஒரு வராகிய இறைவி குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விழாவிற்கு உடனே வர பங்காளர்களால் இயலவில்லை. விவரங்களைப் பெற்றுக் கொண்டு உறவினர்களின் ஒப்புத லோடு அவர்கள் செயல்பட, தொடர்பு விவரங்களைப் பெற இந்த நிகழ்ச்சி உதவுவதாக ஒரு அமைப்பாளர் சொன்னார்.

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 8.3.2013

தமிழ் ஓவியா said...


தி.மு.க. விலகலின் எதிராலி: விமர்சனங்கள் - கருத்துகள் வெடித்துக் கிளம்புகின்றன


புதுடில்லி, மார்ச் 20-இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயேச்சையான, நம்ப கமான விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

சோனியா பேசுகிறார்

காங்கிரஸ் எம்.பி.கள் கூட்டம் டில்லியில் நேற்று காலை நடந்தது. இதில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

இலங்கையில் தமிழர்களின் நிலைமை நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தமிழர்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே காங்கிரஸ் வலியுறுத்தி வந்துள்ளது. தமிழர்களுக்கு அரசியல் உரிமை மறுக்கப்படுவதை பார்க்கும் போது வேதனை ஏற்படுகிறது.

கடந்த 2009இல் நடந்த இறுதிக்கட்ட சண்டையில் கடைசி நாட்களின்போது அப்பாவி தமிழர்களுக்கு குறிப்பாக, குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கும் அறிக்கைகள் மனவேதனை அளிக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்தியே தீரவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சுயேச்சை யான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண் டும் என்று கோருகிறோம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை யினர் தினமும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி விட்டது. மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பிடித்துச் செல்வது அல்லது துப்பாக் கியால் சுடுவது கவலை தருகிறது. இந்தப் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம்?

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நாடாளு மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து, இது தொடர்பாக நாடளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுக தலைவர் கலைஞர் நேற்று அறிவித்திருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. திமுகவை சமாதானப் படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.


தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மக்களவையில் விவாதிக்க தயார்!

இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி மக்களவை யில் விவாதிக்க தயார் என்று நாடாளுமன்ற விவ காரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார். விவாதத்துக்கான நாள் மற்றும் நேரத்தை முடிவு செய்யுமாறு சபாநாயகர் மீராகுமாரை அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி மக்களவையில் நேற்று திமுக, அதிமுக எம்.பி.கள் முழக்கமிட்டனர். பின்னர் பேசிய திமுக எம்.பி. இளங்கோவன், அய்.நா. சபையில் தீர்மானம் குறித்து நாங்கள் கவலைப்பட வில்லை. ஆனால், இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்று பார்க்கும் கடமையும் தார்மீக பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது.

மத்திய அரசு ஏன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது? இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் அதிகாரபகிர்வு, ராணுவத்தை திரும்ப பெறுவது ஆகியவை குறித்து மத்திய அரசுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வாக்குறுதி அளித்தார். ஆனால், அவற்றை நிறைவேற்றவில்லை. இலங்கை பிரச்சினையால் தமிழகம் எரிகிறது. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர் என்றார்.

தமிழ் ஓவியா said...

அதிமுக எம்.பி. தம்பித்துரை பேசும்போது, அய்.நா.சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை கடுமையானதாக ஆக்க உரிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் அளித்த பதிலில், இலங்கைவிவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இந்த பிரச்சினைப் பற்றி விவாதிப்பதற்கான நாள், நேரம் குறித்து அவைத் தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் அமளி!

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்ற வாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, அதிமுக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது (19.3.2013).

அய்நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர் மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்பிரச்சினையை இவை தினமும் கிளப்பி வருகின்றன.

மக்களவை நேற்று காலை கூடியதும், வழக்கம்போல் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்பிரச்சினையை கிளப்பின. பன்னாட்டு நீதிமன்றத்தில் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணைக் நடத்த வேண்டும் என்றும், அய்நா மனித உரிமைக் கழகத்தில் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டது என்றும் வாசகம் அடங்கிய அட்டைகளை இரு கட்சி உறுப்பினர் களும் கைகளில் ஏந்தி, அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 21- ஸ்டாலினை மய்யப்படுத்தி இந்து ஏடு செய்தி வெளி யிட்டதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் - அறிக்கை வருமாறு:

தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக் காகவோ எடுப்பதில்லை. குறைந்த பட்சம் கழகத்தின் தலைமையிலே உள்ள முன்னோடிகள் கூடிக் கலந்து பேசி பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தான் முடிவெடுப் பது வழக்கம். செய்தியாளர்கள் பல முறை சில அதிமுக்கியமான பிரச் சினைகள் குறித்து கேள்வி கேட்கும் போது கூட, கழகத்தின் செயற் குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகு தான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் தொடர்ச்சி யாக; நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செய லாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கழகத்தின் மூத்த செய லாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத் தான் 19-3-2013 அன்று காலை செய்தியாளர்களுக்கு அறி வித்தேன். உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகா விட்டால், ஸ்டாலின் விலகி விடுவ தாகப் பயமுறுத்தியது தான் கார ணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை யெல்லாம், அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகா தர்மத்தைப் பாழடிக்கின்றன. ஆனால் இந்து நாளிதழும் இப்படி உண் மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் புதிய அறிவிப்புபுதுடில்லி, மார்ச் 21- இந்திய அரசுப் பணியாளர் ஆணையம் (ருஞளுஊ) புதிதாக அறிவித்த மாநில மொழி பேசு வோர்க்குப் பாதகம் விளைவித்த தேர்வுத் திட் டத்தை கைவிட்டது. பழைய முறையே தொட ரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசும், நடு வண் பணியாளர் தேர்வு ஆணையமும் (ருஞளுஊ) மொழிகள் தொடர் பான சர்ச்சைக்குண் டான எல்லா மாற்றங் களையும் திரும்பப் பெற் றுக் கொள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் பொதுப் படிப்பிற்கான பாடங்கள் இரண்டுக் குப் பதிலாக நான்காக உயர்த்த முடிவு செய் துள்ளன.

சென்ற புதன்கிழமை யன்று, பணியாளர்களுக் கான இணை அமைச்சர் வி. நாராயணசாமியுடன் நடுவண் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அரசு தரப்பிலி ருந்து கூறப்படுகிறது.
வட்டார மொழிகளில் எழுதலாம்
இந்த திட்டத்தின் படி, தேர்வுகளை வட் டார மொழியில் எழுது வதற்கான தடைகள் திரும்பப் பெறப்படுகின் றன. தவிர, தகுதித் தரம் கணிப்பதற்கான 100 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலத் தாள் நீக்கப்படுகிறது.

சென்ற வாரம், சீறிச் சினம் கொண்டு நின்ற நாடாளுமன்ற உறுப் பினர்களுடன், அவர்கள் அறிவித்திருந்த அறி விக்கையை செயல்படா மல் நிறுத்தி வைப்ப தாகவும், முன்பிருந்த நிலைமையே தொடரும் என்றும் சொல்லியிருந் தார். ஆனால், நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வுகளுக் குச் சற்று முன்பான நேரத்தில், காலத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொள்ளாது, புதிய மாற்றங்களை வேக மாகத் திணித்தது. அத் துடன், அதன் மாற்றங் கள் முழுவதுமாக நிரா கரிக்க வேண்டாம் என் றும் கேட்டுக் கொண் டது. கடைசி சில நாட் களில் ஒரு பலமான கண்ணோட்டம் வெளிப்பட்டுள்ளதாகவும், எல்லா மாற்றங்களை யும் திரும்பப் பெற வேண்டாம் என்ற கருத்து பரவலாக வெளிப்பட் டது.
ஆனாலும் மொழி கள் பற்றிய விவரங் களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருப் திக்கேற்ப, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களது குறைகள் களையப்பட்டுள்ளன என்று ஒரு அரசு உயர் அலுவலர் குறிப்பிட்டுள் ளார். ஆனால், கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட் டுள்ள ஆணை விளக்கங் களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அரசு, நாடாளுமன்ற மக்கள் சபையில், உறுப் பினர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு முடிவை அறிவிக்கலாம் என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார்.
ஆனாலும், அது அர சியல் நிலைமையையும், தலைமை வகிக்கும் அலு வலரையும் பொறுத்தது என்றார்.
நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம் முத லில் மொழிகள் பற்றிய மாற்றங்களைக் கொண்டு வந்தபோது, பணியாளர் துறையும், அமைச்சர் நாராயண சாமியும் மொழிகள் பற்றி மாற்றங்களின் உள்ளடக்கங்களை எதிர்த்துள்ளனர்.
சிவில்துறை அதி காரிகளும் நாடாளுமன் றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய அதே கருத்துகளைத் தான் கூறியுள்ளனர். அதன்படி அந்த மாற்றங்கள் இந்தி பேசும் மக்களுக்கு ஆதர வாகவும் நகர மக்கள் ஓரடி முன்னே போக சாதகமாக இருக்கவும் அமைந்துள்ளது என்று கூறினர்.

தமிழ் ஓவியா said...


தேவை அனைத்துலக விசாரணை நவநீதம்பிள்ளை உறுதிசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அய்.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் வலியுறுத் தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இந்த அறிக்கையை, அய்.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் குயங் வா கங் பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை.

சில தெரிவு செய்யப் பட்ட பரிந்துரைகளை மட்டுமே சிறிலங்கா அர சாங்கம் நடைமுறைப் படுத்தி வருகிறது.

குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயங் களில் இன்னமும் பல் வேறு படிநிலைகளை சிறிலங்கா தாண்ட வேண் டிய நிலை உள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

உண்மையைக் கண் டறியும் நெறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

சாட்சிகளையும் மற் றும் பாதிக்கப்பட்டோ ரையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடத்தல்கள், காணா மல் போதல்கள் தொடர் பாக அனைத்துலக சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

தேசிய நிறுவனங் களின் சுயாதீனத் தன்மையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசா ரணைகள் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப இடம்பெறுவதை உறுதிப்படுத்த, சுதந்திர ஆணைக்குழுவொன்று அதைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். என்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
(விடுதலை,18.1.1951)

தமிழ் ஓவியா said...


நெத்தியடி யாருக்கு? அ.இ.அ.தி.மு.க.வுக்கு!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் நெத்தியடி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரின் கேலிப் படத்தை வெளியிட்டு, அவர்களுக்கே உரித்தான அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி சாடியுள்ளனர் (21.3.2013).

சிரங்கு - சொறி என்றெல்லாம் தங்கள் வசம் உள்ள சரக்கை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர்.

தி.மு.க. மத்திய அரசிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் விலகியதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி விட்டாராம் - பொறுக்குமா நொய்யரிசிகளுக்கு?

பந்தை அடிக்க முடியவில்லையானால், காலை அடிக்கும் வேலை அவர்களுக்கு மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்!

தி.மு.க. விலகியது ஒரு கொள்கையின் அடிப்படையில். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிபந்தனையின் அடிப்படையில்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. அமைச்சரவையி லிருந்து விலகியதே - நினைவிருக்கிறதா? - அது எதன் அடிப்படையில்?

இதனை விடுதலை சொல்லுவதைவிட அன்றைய பிரதமர் வாஜ்பேயி (பி.ஜே.பி.) வாயால் சொல்ல வைப்பதுதான் சிலாக்கியமானது - மிகமிகப் பொருத்தமானதும்கூட!

இதோ வாஜ்பேயி பேசுகிறார், படியுங்கள் - கேளுங்கள்!!

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை. நியாயமற்ற நிபந்தனை களை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக் கப்படும்பொழுது, இதைப் போன்ற நிபந்தனை களை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் அ.தி. மு.க.வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார்.

சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங் களில் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட் டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலை யுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்கவேண்டும் என்பதுதான் அந்த விலை. அதுமட்டுமல்ல; பல ஊழல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும், அவருடைய நிபந்தனையாக இருந்தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடிபணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவ தில்லை என்பதை உணர்ந்தவுடன், அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.

குமுதம், 20.9.1999

நமது எம்.ஜி.ஆர் ஏடே! இதற்குப் பதில் என்ன?

ஒரு கொள்கைக்காக தி.மு.க. மத்திய அமைச்சர வையிலிருந்து வெளியேறுகிறது - அதற்காக திராவிடர் கழகத் தலைவர் வரவேற்கிறார் - பாராட்டுகிறார்.

தன்னலத்துக்காக - பக்கா சுயநலத்திற்காக செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படலாமா? நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெயலலிதாவை சங்கடப்படுத்த வேண்டுமென்றே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், பலே! பலே!!

தொடரட்டும் அந்தக் கைங்கரியம்

தமிழ் ஓவியா said...

இவள் கண்ணகி


- வி.சி.வில்வம்

கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது, கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக் கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.நமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப் பிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய சிறிய கேள்வி ?

தமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.

ஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.
நாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய்ச் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

இந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு. சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு!

வாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.

நாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள்.

கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர். தெய்வக்கோலம் பூண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபவத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

தமிழ் ஓவியா said...


கண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை? எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள்? கண்ணகியா தெய்வம்? யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப் பொரிந்து தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா? கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன்? என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

கண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக் காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு? எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகி பதில் சொல்கிறார்.

நாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்குக் கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ உன் கணவர் நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் _ இரவு, நிலவு _ -கதிர், நீர் _ நெருப்பு, குளிர் _ வெப்பம், இன்பம் _ துன்பம் என்பதைப் போல காதல் _ -பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி. நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள் என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும் அகற்றப்படுகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன? எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச் செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.

இந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களையும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், நாளை கோவலன் பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடி, காற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.

இப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார்.

தெய்வமாக்குவதும் , வழிபடுவதும் தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?


- கி.தளபதிராஜ்

பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும் என்று புதிய தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்!தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு பாப்பாத்தி என்றும் ஆண் குழந்தைகளுக்கு அய்யர் என்றும் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களை எல்லாம் இந்த வியாதிகள் பார்ப்பனர் என்றே கூறுவார்களோ?

திராவிட் என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றா? சைதாப்பேட்டையை ஆங்கிலத்தில் சைதாபேட் என்று கூறுவது போல் திராவிட் என்பது இடத்தைக் குறிக்கும்.

திராவிட என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். திராவிட என்பது இடத்தைக் குறிக்கும் சொல். திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் திராவிடர் என்பது இனத்தைக் குறிக்கும். தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கலாம். எந்தப் பார்ப்பானாவது திராவிடர் என்று தன்னை சொல்லிக் கொண்டதுண்டா?

தமிழ் ஓவியா said...

மனோன்மணியம் சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர் நீங்கள் என்ன கோத்திரம்? என்று கேட்டாராம். அதற்கு மனோன்மணியம் சுந்தரனார் அளித்த பதில் தன்மானம் மிக்க தென்னாட்டுத் திராவிடன் என்பதே! (மனோன்மணியம் சுந்தரனார் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து) இந்துக்கள், திராவிடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான், இந்து நாகரீகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. (நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது). மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டினார் என்று கூறும் இவர்கள், தமிழர் அடையாளத்தை அழிக்கவே திராவிடர் இயக்கங்கள் பயன்பட்டதாக நா கூசாது கூறத்துவங்கிவிட்டனர். தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று கூறப்படும் மறைமலை அடிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை. பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர் என்றார்.

இப்படி தாகூரும், மனோன்மணியம் சுந்தரனாரும், மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்கப் பார்க்கிறார்கள்!
பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து நமக்கு விடுதலை தேவைப்பட்டது. அவர்களிடமிருந்து நம் இனத்தைக் காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாளச் சொல் தேவைப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்.
தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை! எந்தக் கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலைத் தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச் சொல்!.

தமிழர் என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள என்றும் பின்னர் திராவிடன் என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும் ஆதாரமாகக் கொண்டு, தம்மையே திராவிடன் என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே தேயம் என்பதுதான் தேசம் ஆனது என்று எந்தப் பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்---_திரமிளர்_-திராவிடர் செய்தியும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர் போராட்டத்தின் (?) விளைவால் அமையப் போகும் தமிழ்த் தேசியத்தை எந்தத் திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில் ஈடுபடுகிறார்களா? தமிழ்த் தேசியம் கூடாது திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்தத் தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் உங்களை இப்படிப் பேசவைக்கிறதா?

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு வினாக்கள்

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்த போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம்முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள்செய்தமையால் இத்தலத்திற்கு தாடகையீச்சரம் என்று பெயர் வந்தது.

இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

- மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29-31
உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா! -பாரதிதாசன்-


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதை விட வேறே என்னவேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியை சேர்ப்பதற்கும் பெரு நாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்து தீர்ப்பதற்கும், பெரு நோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களை பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழ்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலை யவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அறியாமக்கள்; தமைக் காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

உண்மை - 15.6.1983

தமிழ் ஓவியா said...


வர்க்கப் பார்வையை சிதைக்கும் சாதி


பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் தத்துவம் வேத சாஸ்திரக் கருத்துக்களோடு இணைந்து இந்தியாவில் சமூக ஆதிபத்தியக் கருத்தாக நிலைநாட்டி வருவது பிராமணியம் என்பதாகும்.

இந்தியாவைத் தவிர உலகில் மற்றெல்லா நாடுகளிலும், குறிப்பாக மேலை நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் அடிப்படையில் ஆதிபத்தியம் நிலவியது. பொருள் உற்பத்தி உறவு முறையில் - அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகார ஆதிக்கம் வகிக்கும் வர்க்கம் மேலான வர்க்கமாகக் கருதப்பட்டது.

உதாரணமாக மன்னர்கள் நிலப்பிரபுக்கள் முதலாளிகள் உயர்வான சமூக அந்தஸ்து படைத்தவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில் மேற்கூறியவாறு வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு எனும் சமூக அந்தஸ்து நிலவி வந்த போதிலும் இவை அனைத்திற்கும் மேலாக - முதன்மையாக பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் சாதிய முறை ஏற்படுத்தப்பட்டது வேத சாத்திர கருத்துக் களேயாகும்.

இந்தியாவில் அடிமை முறையும், நிலப்பிரபுத் துவ உற்பத்தி உறவுமுறையும், பின்னிப் பிணைந் திருந்த சமுதாயத்தில் பொருள் உற்பத்தி உறவு முறையில் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் என்ற அமைப்பில் ஏற்படும் வர்க்கப் பாகுபாடு அல்லது வர்க்க பிரிவுகளை மக்கள் பார்க்க விடாது தடுத்தும், தடைப்படுத்தியும் வந்தது பிராமணியம் எனும் தத்துவமாகும்.

-எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திரப் பேய்களும், சாதிக்கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை) நூலின் பக்கம் 54-55

(சாதியா, பொருளாதார பார்வையா என்று நாம் இதுகாறும் எழுப்பி வந்த கேள்விக்கு பொருளாதாரமே என்று கிளிப்பிள்ளைப் பாடம் சொல்லி வந்த மார்க்ஸிஸ்டுகள் இன்றைய தினம் நம் கருத்தின் பக்கம் நெருங்கி வந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.)

உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும். நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?

இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்

இதோ!

1. வைரப் பிள்ளையார் ரூ.1.25 லட்சம்

2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார் ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில் ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7. லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில் ஜெராக்ஸ் செய்யப்பட்டது ரூ.3 * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!

தமிழ் ஓவியா said...


மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி?


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்

Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.

Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.

Language Bar க்கு வரவும்.

Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.

இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.

6.Windows XP பயனாளிகள்

Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.

முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.


7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:

Amma - அம்மா,
karpom - கற்போம்


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
- பிரபு கிருஷ்ணா (கற்போம்

தமிழ் ஓவியா said...


எடை மேடை தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான்தி.மு.க தலைமைக் கழகப் பேச் சாளர் - எண்ணிய எண்ணத்தைத் துணிவாய்ச் சொல்லும் வல்லமையர் _- பெரியார் தொண்டர் மதுரைக் கவிஞர் இரா. ஜீவா.

பொறுக்குமணிகளாய்த் தேர்ந் தெடுத்த சொற்களில் நறுக்குக் கவிதைகளை கலகக்காரர் பெரியார் என்ற பெயரில் புத்தகமாய் வடித் துள்ளார்.

ஒவ்வொரு கவிதையும் கருத்துக் கருவை சூல்தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது என்று மானமிகு தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டுப் பட்டயம் பெற்ற புத்தகம்.

கவிஞர் ஜீவாவின் உள்ளத்து உணர்ச்சிகளின் ஒருசில துளிகள் இதோ உங்களுக்காக.

மூடத்தனம்
அழிந்தால்தான்
மூலதனம் வெல்லும் என
முடிவாய்ச் சொன்னவன்
தீப்பந்தம் இன்றி
தீண்டாமை
கொளுத்தியவன்
தமிழைச்
சீர்திருத்தியவர்
தமிழனைச்
சீர்படுத்தியவர்

உன்மீது
செருப்பை வீசினார்கள்
நாங்கள்
அக்ரஹாரத்திலும்
செருப்பணிந்து
நடந்தோம்.

தந்தையே உன்மீது
நரகலை வீசினார்கள்
நாங்கள் நாடாளவே
வந்துவிட்டோம்.
உன்மீது
அடிவிழ விழ
உயர்ந்தது தமிழ்இனம்
உருக்குலைந்தது
ஆரிய இனம்.
இவை போன்ற எண்ணற்ற கவிதைகளின் வழியாக தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான் என்பதை உணர்த்தும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. கவிஞர் ஜீவாவை அழைத்து வாழ்த்த அழுத்த வேண்டிய எண்கள் 09443925216 கலகக்காரர் பெரியார் புத்தகம் கிடைக்குமிடம்: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி திருப்பரங்குன்றம், மதுரை -625 005.
விமர்சகர்
பா. சடகோபன்,
பகுத்தறிவாளர் கழகம்
மதுரை - 94433 62300

தமிழ் ஓவியா said...


யக்ஞவல்கியா கூறுகிறார்!


ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்த பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.

சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத் தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பகத்சிங்


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)

1924 - பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டம். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன் னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.

சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!

நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல், நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.

வெறிபிடித்த இந்துத்து வாவாதிகள் முட்டாள்தன மாகப் புரட்சியாளர்கள் என்று கருதப்பட்ட காலம் அது.

மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எனும் பார்ப்பனர் சனாதன வெறிக் கண்ணோட்டத்தோடுதான் அதனைச் செய்தான்.

1908இல் வங்காளத்தில் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குதிர்ராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது, பகவத் கீதையைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருந்தான்.

ஆனால் பகவத்சிங் எப்படி? சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகவத் சிங் மறுத்து விட்டான்! (இளை ஞர்களே எண்ணிப் பாருங்கள்!)

ஜாலியன் வாலாபாக் படுகொலை - அவனைப் புரட்சிவாதியாக்கிற்று.

தாங்கள் பயங்கரவாதி கள் அல்லர் - புரட்சியா ளர்கள் என்ற முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் வெடி குண்டுகளை வீசி, காவல் துறையிடம் தங்களை ஒப் படைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வாய்ப்பாகத்தான் இதனை செய்தனர் என்பது சாதாரணமா?

இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யான சமத்துவமும், சாந்தமும் அளிக்கத்தக்கப் பாதையை பகத்சிங் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் - எவரும் அடைய முடியாத பேரை பகத்சிங் அடைந்தார் என்று குறிப் பிட்டு விட்டு பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்.

மாகாணத்துக்கு இது போன்ற 4 பேர்களைத் தூக்கிலிட வேண்டுமென்று நமது அரசாங்கத்தை மனமார வேண்டுகிறேன் என்ற (குடிஅரசு 29.3.1931) தந்தை பெரியாரின் சிந்தனை சாதாரணமானதுதானா? இளை ஞர்களே எண்ணிப் பாரீர்!

- மயிலாடன் 23-3-2013

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?


கடைசி நேரத்தில் இந்தியா எப்படியும் எங்களை ஆதரிக்கும் - எதிராக வாக்களிக்காது என்று இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் போக்குகள் இருந்தன.

இலங்கை எதிர் பார்த்ததற்கு மாறாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்து கொண்டாலும் அடிப்படையில் இலங்கைக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மூவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் சற்று நம்பிக்கை அளிப்பது போல் இருந்தன.

இந்தப் பிரச்சினை பெரும் நெருக்கடியில் சிக்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று போதிய அவகாசம் இருந்தும், குறித்த நேரத்தில் பிரச்சினை மீது கவனம் செலுத்தி செயல்படாததேயாகும். கடைசி நேரத்தில் தான் மத்திய அரசுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலும்.

போக்குகளை மிகவும் துல்லியமாகக் கணித்த கலைஞர் அவர்கள் அவருக்கே உரித்தான அனுபவம், முதிர்ச்சி காரணமாக, மத்திய அரசிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தை மட்டுமல்ல உலக நாடுகளிடையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

கலைஞர் அவசரப்பட்டு விட்டார்; மேலும் காத்திருந்திருக்க வேண்டும், இந்தியா அமெரிக்கா வின் தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நடந்ததைப் பார்க்கும் போது கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந் திருக்கிறது என்று பேசப்படும் நிலை ஆகிவிட்டது.

இந்தியாவின் சார்பில் மனித உரிமை ஆணையத் தில் பேசிய திலிப் சின்கா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை; வெறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல் லுவது - திருடன் கையில் சாவியை ஒப்படைத்த கதைதான்.

மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை

இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று செல்லமாகத் தாலாட்டுப் பாடியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை, இத்தாலிய கடற்படைக்காரர்கள் கடற் கொள்ளைக் காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றதற்கு உலகத்தையே குலுக்கியதும் இதே இந்தியாதான்!

அதே நேரத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழினத்தைச் சேர்ந்த - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும் சரி, படுகொலை செய்யப்படும் பொழுது ஏனிந்த பதற்றம் இல்லை? என்ற கேள்வி நியாயமானதல்லவா? இதனைக் குறுகிய பார்வை என்ற குண்டாந்தடியால் அடிக்க நினைக்கக்கூடாது; தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்களோ, புரியாதவர்களோ இல்லை.

ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசு கணக்கிடவே முடியாத அளவுக்குக் கடும் கோபத் தீக்கு இரையாகி விட்டது. அது சார்ந்த அரசியல் கட்சியான காங்கிரசும் பெரும் சேதாரத்துக்கு ஆளாகி விட்டது.

உலக நாடுகளும் இந்தியாவைக் கேலியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.

இதற்கிடையில் ஒன்றைத் தவறாமல் குறிப்பிட்டாக வேண்டும்; இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் மட்டுமல்ல; அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்து விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பது கோடி பொன் பெறும் கணிப்பாகும்.

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லா விட்டால் இன்னும் என்னென்ன இன்னல்களோ - கொடுமைகளோ தெரியவில்லை.23-3-2013

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லைசரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)