Search This Blog

31.3.13

தமிழர்கள் என்றால் பார்ப்பனர்களுக்குப் பகைவர்கள்-

தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் கைபர் கணவாய்கள்!

கேள்வி: அய்.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.களிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளாராமே? சென்ற முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தவர், இந்த முறை இப்படி நடந்து கொள்வார் என்று நினைக்கிறீர்களா?

பதில்: இலங்கையை ஒரு விரோத நாடாக மாற்றிக்  கொள்ள வேண்டும் என்று இந்தியா நினைப்பதற்கு வாய்ப் பில்லை. இது சரியாகவும் இருக்காது. ஆகையால் அய்.நா. தீர்மானம் இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு தேள் என்று வைத்துக் கொண்டால் அதனுடைய கொடுக்கை வெட்டுகின்ற மாதிரி ஏதாவது செய்து, அந்தத் தேளுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கலாம்.

                   -------------------------------------------------(துக்ளக்  20.3.2013 பக்கம் 27)

திருவாளர் சோ ராமசாமி அய்யர் வாளின் பதில் இது; தமிழர்களுக்கு யார் விரோதிகளோ அவர்கள் எல்லாம் இந்தப் பார்ப்பனர்களுக்குக் கெழுதகை நண்பர்கள்தாம்!

(அவரை அறியாமலேயே இலங்கை என்பது விஷக் கொடுக்கு என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்!)

அதுவும் சிங்களவர்கள் தங்களை ஆரிய இன வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவர்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே முன்பு சொன்னது நினைவிருக்கிறதா?

நீங்களும் நாங்களும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்; நம் இருவரின் மூக்குகளும் ஆரிய இனத்திற்கே உரித்தானவை என்று சொன்னதை நினை வூட்டிக் கொண்டால், சோ ராமசாமிகள் தமிழர்களின் விரோதிகளான சிங்களவர் களை ஆதரிப்பதன் ரகசியம் தெற்றென விளங்குமே!

இப்பொழுது இலங்கைக்கான இந்தியத் தூதர் (டெல்லி) கரியவாஸம் என்பவர் சிங்களவர்கள் வட இந்திய பூர்வீக வாசிகள் எனக் குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சல் வெளியாகியுள்ளது

12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவிகித சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர் களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என்று மின்னஞ்சல் வாயிலாக டில்லியில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். இதனை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லை. சம்பந்தப்பட்ட தூதரை அழைத்துக் கண்டனத்தைத் தெரிவிக்க வில்லை.

இது சாதாரணமான ஒன்றல்ல. வெளிநாட்டுத் தூதர் ஒருவர் உள்நாட்டில் குழப் பத்தை ஏற்படுத்தும் வேலையில், மித்திரபேதம் செய்யும் வேலையில், தமிழர்களுக்கும், இந்திய அரசுக்கும் மோதலை உண்டாக்கும் போக்கிரித் தனமான வேலையில் ஈடுபட் டவரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியிருக்க வேண் டாமா?

இதைச் செய்யாவிட்டால் முன்பு ஜெயவர்த்தனே கூறியது உண்மையாகி விடும். சிங்கள ஆரியர்களும்,  இந்திய ஆரியர் களும் தமிழர்களை ஒழிக்கக் கூட்டுச் சதியில் இறங்கி விட் டனர் என்று கருதும் நிலை யைத் தான் ஏற்படுத்தும்.

ஏற்கெனவே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும் அதையேதான் செய்து வரு கிறார்கள்.

இலங்கையை ஒரு விரோத நாடாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா நினைப்பதற்கு வாய்ப்பில்லையாம் எழுதுகிறார் திருவாளர் சோ. என்ன காரணம்? -விளக்கவில்லையே!

இந்தியா - சீனா போரின்போது (1962)  இலங்கை யார் பக்கம் நின்றது? இந்தியா வுடன் நட்பு நாடாக நடந்து கொண்டதா? அய்.நா.வில் சீனாவுக்கு ஆதரவாக இலங் கைப் பிரதிநிதி நீட்டி முழங்கவில்லையா?

இந்தியா - பாகிஸ்தான் போரின்போது கூட (1972-73) பாகிஸ்தான் விமானங்கள், போர்க் கப்பல்கள் கொழும்பு விமான நிலையத்தையும், துறைமுகத்தையும் பயன்படுத் திக் கொள்ளவில்லையா?

திரிகோணமலையில் ஏவுகணை அமைத்துக் கொள்ள சீனாவுக்கு இலங்கை உதவப் போகிறது - அப்பொழுது தெரியும் இந்தியாவின் நிலைமை!

ஹிட்லர்  இந்தியாவைப் பிடிக்கப் போகிறான் என்று நம்பி ஜெர்மன் மொழி படிக்க ஆரம்பித்தவர்கள் அல்லவா பார்ப்பனர்கள்! (இதைக் கல்கியே அலைவோசை நாவலில் ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே!)

சீனாக்காரன் வந்தாலும் அந்த மொழியை சமத்தாகப் படித்துண்டு, அர சாங்கப் பணிகளில் அமர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கலாம் அல்லவா!

உலகிலேயே தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாதவர்கள் பார்ப்பனர்கள்; அதனால் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அதனால் சு.சாமி பார்ப்பானிலிருந்து (அவசர அவசரமாக இலங்கைக்கு ஓடிச் சென்று ராஜபக்சே வைச் சந்திக்கிறார் - அமெரிக்கா பறந்து சென்று அங்குள்ள ஓர் உதவி செயலாளரைச் சந்தித்துத் தூபம் போடுகிறார்) கல்கி ஆனந்த விடகன் இந்து பார்ப்பனர்கள் வரை ஈழத் தமிழர்கள் முற்றிலும் அழிக்கப்படுவதை ஆனந்தமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் - மறக்கவே வேண்டாம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழிலேயே பத்திரிகை நடத்திக் கொண்டு, தமிழர்களிடையே விற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டு அந்தத் தமிழர்களையே காட்டிக் கொடுக்கும் இந்தக் கைபர் கணவாய்களை என்றைக்கு நம் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கப் போகிறார்களோ தெரியவில்லையே!

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியின் போது புலிகளின் ஆதரவு மாவீரர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?

பதில்: ஜெயலலிதா ஆட்சியின்போது, புலி  ஆதரவாளர்கள், தாங்கள் எங்கே போக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். மவுனம் சாதித்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள் என்று நீங்கள் இப்போது கேட்கிறீர்கள்.

                                -------------------------------------------------------------- துக்ளக் 25.2.2009

இலங்கைப் பேரினவாத அரசு ஈழத் தமிழர்களை அழித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இப்படி எழுதினார் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
இலங்கையில் தமிழர்கள் சிங்கள அரசால் கொடுமைப்படுத்தப்படுவது குறித்துத் திசை மாற்றிப் பேனாவைப் பயன்படுத்தும் திருவாளர் சோ காஷ்மீர்ப் பண்டிட்டுகளான பார்ப்பனர்கள் பற்றி என்ன எழுதுகிறார் என்பதையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதி களிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக் கிறது. சொந்த நாட்டிலேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்த தும்; அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை.

                                -----------------------------------------------------------(துக்ளக் 20.8.2008)

இதுவும் சோ எழுதியதுதான். இலங்கைத் தீவிலே பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் அகதிகளாக வாழும் நிலை - வெளிநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்ற நிலையை இதே கண்ணோட்டத்தில் காஷ்மீர் பண்டிட்டுகளான பார்ப்பனர்கள்பற்றிய கண்ணோட்டத்தில் எழுதுகிறாரா?

காரணம் என்ன? தமிழர்கள் என்றால் பார்ப்பனர்களுக்குப் பகைவர்கள் _- காஷ்மீர் பண்டிட்டுகள் என்றால் பார்ப்பனர்கள் என்ற உணர்வு தானே?
எவ்வளவு சாமர்த்தியமாக சோ போன்ற பார்ப்பனர்கள் எழுதினாலும் அவர்களை அறியாமலேயே உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளத் தான் படுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த நியாயம் சொல்கிறேன் என்ற தலைப்பில் திரு. சோ ராமசாமி துக்ளக்கில் (15.4.1985) எழுதியது என்ன?

அவருடைய கட்சியில் இன்று ஒரு மவுனக் கலகம் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயவர்த்தனேயின் பதவியை அவருக்குப்பின் யார் அடைவது என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டிருக்கிறது - அந்தப் பதவியின் மீது குறி உள்ள அவர் கட்சியினர் ஒரு சிலர், மெஜாரிட்டி மக்களாகிய சிங்களவர்களிடையே தங் களுடைய புகழைப் பரப்பிக் கொள்வ தற்காக, தமிழ்ப் பேசும் மக்களை ஒடுக் குவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்.

எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் சிரீமாவோ பண்டார நாயகாவைப் பற்றிக் கேட்க வேண்டாம்.

சிங்கள வெறிதான் அவருடைய அரசியல் மேடை. ஆகையால் ஜெயவர்த்தனேவுக்குப் பிறகு இருந்தாலும் சரி அவர்கள் ஜெயவர்த்தனேவைவிடப் பல மடங்கு அதிகமான வெறியைத்தான் காட்டுவார்கள். அதன் பிறகு தனி நாடு தானே தவிர, வேறு தீர்வே கிடையாது என்ற நிலைதான் தோன்றும். இப்போதே இந்தப் பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தைகளின் மூலமாக ஒரு நல்ல முடிவு ஏற்பட்டால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட காரியம் என்று சொல்லி அதை ஏற்பது, அடுத்து வரும் ஆட்சியாளருக்கு வசதியாகி விடும் என்று சோ எழுதினாரே!
ஜெயவர்த்தனேக்குப் பிறகு வருபவர்கள் அதிக அளவு சிங்கள வெறியர்களாகத்தான் இருப்பார்கள். அந்த நிலையில் தனியீழம் கேட்பது தவிர்க்கப்படாததாகி விடும் என்று 1985ஆம் ஆண்டிலேயே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே!

அதுதானே இப்பொழுது நடக்கிறது? நியாயமாக இதனை ஏற்றுக் கொண்டு, நாணயமான முறையில் ஈழத் தமிழர்கள் தனியீழம் கேட்டதை வரவேற்று எழுதிட சோ கூட்டம் தயங்குவது ஏன்?

1985இல் எழுதியதை இன்னொருமுறை புரட்டிப் பார்க்கட்டும்!

***********************************************************************
ஜெர்மன் படித்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்

இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் (1939_45) உயிர் இழந்தோர் எண்-ணிக்கை அய்ந்தரை கோடியாகும். அது போக அவன் சித்-திர-வதை செய்து அநியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். இரக்கமென்று ஒரு பொருள் இலாத அத்தகைய கொடிய-வன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று இந்திய நாட்டிற்குள் எப்-பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடை பாவாடை விரிக்கத் துடித்துக் கொண்டு இந்தியாவில் ஒரு தேசத் துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருந்தது! அக்கூட்டத்தினர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள். இரண்டாவது உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன் மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளார். இச் செய்தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட விருப்பதால், அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான்!) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.*

பின்னர் 1942 முற்பகுதி-யில் இட்லரின் கூட்டாளி-களான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன்(!) பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டனராம்.** பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய ஜப்பானியப் போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
* “When France fell . . . some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover.”
PP. 74-75 of “India Remembeld” by Percival and Margaret Spear,Orient Longman: 1981
** The “German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma.)
P.78 of the above book.

*************************************************************************
டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கூறியது என்ன?
டில்லியில் உள்ள இலங்கை நாட்டுத் தூதர் பிரசாத் கரிய வாஸத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து இலங்கையைத் தலைமையிட மாகக் கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19ஆம் தேதி இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் மூலம் இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தற்போது டில்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ் சலின் விவரம் வருமாறு:  "அசோகச் சக்ரவர்த்தி ஆட்சி நடை பெற்ற கிறிஸ்து பிறப்பதற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே (கி.மு.300) கலிங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பதிவாகியுள்ளன. புத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட அசோகர், தனது மகன் அர்ஹத் மஹிந்தாவையும், மகள் சங்கமித்ராவையும் இலங்கைக்கு புத்த மதச் செய்தியைப் பரப்ப அனுப்பி வைத்தார். இலங்கையில் புத்த நிலையங்களை அவர்கள் நிறுவினர்.

இந்தியாவில் புத்த கயையில் போதி மரத்தடியில் புத்தர் ஞானோதயம் பெற்ற மரத்தின் கன்றை இலங்கையின் அனு ராதபுரத்தில் சங்கமித்ரா நட்டார். புனிதம் மிக்க அந்த மரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய மரமாகத் திகழ்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந் தாவும், சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின் பூர்வீகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதி யில் இருந்தும் உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம் ஆகியவற்றை பூர்வீக மாகக் கொண்டவர்கள்.

மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்தியாவின் வட மாநிலத்தை குறிப்பாக கலிங்கத்தை சிங்கள மக்கள் தற்போது இணைத்து வருகின் றனர். ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.

சமஸ்கிருதம்

ஆனால், தமிழ்நாட்டில் இன ரீதியாக தொடர்பில் உள்ள 12 சதவீத இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஒடிசா, வட இந்தியாவுடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டவர்கள் சிங்களர்கள். ஹிந்தி, ஒரியா, வங்காளி ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழியான சம்ஸ்கிருதத்தை சிங்களர்களால் பேசவும் எழுதவும் முடியும்.
இந்தியா அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் கவலைப்பட வேண்டும். இலங்கையில் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்கி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகளை அழித்த அதிபர் மகிந்த ராஜபக்சே பாராட்டுக்குரியவர்'' என்று பிரசாத் கரியவாஸம் மின்னஞ்சலில் கூறியுள்ளார்.
 ******************************************************************
 ------------------------------------ மின்சாரம் அவர்கள் 30-3-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

33 comments:

தமிழ் ஓவியா said...


அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது!


தி.மு.க. தலைவர் கலைஞர் திட்டவட்ட அறிவிப்பு


சென்னை, மார்ச் 30- மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வெளியிலி ருந்தும் ஆதரவு கிடை யாது என்று திட்ட வட்டமாக அறிவித்து விட்டார் திமுக தலை வர் கலைஞர். இது குறித்து இன்றைய முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:

கேள்வி:- இலங்கையில் நடை பெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்து வதற்கான முன் முயற் சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேட்டி அளித் திருக்கிறாரே?

கலைஞர்:- நாம் பாராட்ட வேண்டிய ஒரு அறிவிப்பு இது. ஆனால் அவர் இந்த அறிவிப்பை தனிப்பட்ட கருத்து என்று தெரி வித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமில்லா மல், அவருடைய கட்சி யின் பொதுக் கருத்தாக அமையுமேயானால், அப்போதுதான் நம் முடைய பாராட்டு முழுமை பெறும்.

கேள்வி :- ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச் சரவையிலிருந்து விலகிய தோடு, கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை யும் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் மத்தி யில் உள்ள ஆட்சியைக் கவிழ்க்கத் துணை போக மாட்டோம், வெளியி லிருந்து ஆதரவு என் றெல்லாம் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றனவே; அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

கலைஞர்:- இந்தக் கருத்துக்கள் எல்லாம் வேண்டுமென்றே திரித்து வெளியிடப் படும் விஷமத்தனங்கள். ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன் படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் பதவியில் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அய்க் கிய முற்போக்குக் கூட் டணி அமைச்சரவையி லிருந்து தி.மு. கழகம் உடனடியாக விலக முடிவு செய்து கழகத் தின் சார்பில் 19-3-2013 அன்று அறிவிக்கப்பட் டது.
வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது

அப்போதே செய்தி யாளர்கள் என்னிடம் அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆத ரவு தரப்படுமா? என்று கேட்டனர்.

அதற்கு நான் எது வும் கிடையாது என்று தான் பதிலளித்தேன். தொடர்ந்து செய்தியா ளர்கள் நீங்கள் ஆதர வைத் திரும்பப் பெறுவ தால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடும் அல்லவா? என்று கேட்ட நேரத்தில்கூட, அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல என்று பதிலளித்திருக் கிறேன். ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியினால் தடை செய்யப்பட்டு, பிறகு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சென் னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் - ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யிலிருந்து வெளியே வரும்போது மேற் கொண்ட தீர்மானம் - தொடர்ந்து கழகச் செயற்குழுவில் எடுக்கப் பட்ட முடிவுகளான; இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளுடன்; இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் - இனப்படுகொலை குறித்து விசாரணை செய்ய நம்பகத்தன்மை வாய்ந்த, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்தல் போன்றவைகளை மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அவர் கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

மேலே சொன்ன இந்தக் கருத்துகளை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையில்தான், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்தே விலகி வெளியே வந்து விட்டோம்.

டெசோ மாநாட்டுத் தீர்மானம்தான்!

கேள்வி:- இப்போது ஈழத் தமிழர் பிரச்சினை யில் ஜெயலலிதா அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறதே?

கலைஞர் :- ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மா னம், நாங்கள் ஏற்கனவே டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங் களையொட்டித் தான் வந்துள்ளது.

அதனால் தான் தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், திருமாவளவன் அவர் களும் அதை வரவேற் றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா அரசால் தடை செய்யப் படவிருந்த டெசோ மாநாட்டுத் தீர்மானங் களால்தான் அ.தி.மு.க. அரசு பேரவையிலே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து இப்போது நிறை வேற்றியுள்ளது.

தமிழ் ஓவியா said...


கோவிலுக்குச் சென்றவர் வீட்டில் கொள்ளை

சென்னை, மார்ச் 30-பிஎஸ்என்எல் அதிகாரி யின் வீட்டை உடைத்து 8 லட்சம் மதிப்பிலான 35 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை சில ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

முகப்பேர் மேற்கு நொளம்பூர் 5ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (56). மயிலாப்பூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் துணை பொது மேலாளராக உள்ளார். இவரது மனைவி வளர்மதி (52), அண்ணாநகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இருவரும் கடந்த புதன்கிழமை நாகை மாவட் டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு காரில் சென்றனர். சாமி தரிசனம் முடிந்து நேற்று அதி காலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 35 பவுன் நகைகள், மற்றொரு அறையில் தட்டு, பூஜை பொருட்கள் என 15 கிலோ வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 8 லட்சம் என கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

பித்தம் தெளியுமா?

விழுப்புரம் மாவட்டம் திரு. வெண் ணெய் நல்லூரையடுத்த ஒட்டனந் தல் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோயில் ஒன்று இருக்கிறது. கோயில் விழா நடந்து கொண்டு இருக்கிறது. கோயில் கருவறையில் நட்டு வைக்கப்பட்டு இருந்த வேலில் செருகப்பட்டிருந்த எலுமிச்சம்பழம் ஒன்று ரூ.23500க்கு ஏலம் போயிற் றாம். எப்படி இருக்கிறது? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை!

பெருந் தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட அந்த எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்த மாட்டார்களா? அப்படி பயன்படுத்தப்படாத அந்த எலுமிச்சம் பழம் கெட்டே போகாதா? பந்தயம் கட்டிப் பார்க்கலாமா? சவாலை ஏற்கத் தயாரா?

பக்தி முற்றிவிட்டதால் அந்த எலுமிச்சம் பழத்தை அந்தப் பக்தரின் தலையில் பிழிந்து ஸ்நானம் செய்ய வைக்க வேண்டியதுதான். அப்பொ ழுதாவது பித்தம் தெளிகிறதா என்று பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

வெடிக்கிறார்! கரியவாசம்

கச்சத்தீவு பிரச்சினை முடிந்து போன ஒன்று அதை இப்போது எழுப்ப தேவை யில்லை என இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்தார். இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில்இலங்கைக்கான இந்திய தூதர் பிரகாஷ் கரியவாசம் சர்ச்சைக் குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, இலங்கை தமிழர் களுக்கு இந்தியாவின் தென் பகுதியிலும், சிங்களவர்களுக்கு வடகிழக்கு பகுதியோடும் தொடர்பு இருக்கிறது.

இதை மறுக்க முடியாது.. அப்படி குடியேறியவர்களுக்கு அப்போதே அரசாளும் உரிமை இருந்தது. இப்போது அனைவரும் இலங்கை குடிமகன்களாக இருக் கிறோம். கச்சத்தீவு பிரச்சினையில் கடந்த 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு களில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதால் அந்தப் பிரச்சினையை இப்போது மீண்டும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை. சென்னையில் நடைபெறும் அய்பிஎல் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்திருப் பது துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறிய கரியவாசம் விளையாட்டுடன் அரசியலை இணைத்துப் பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.

இவர் என்ன இலங்கைத் தூதரா? - ராஜபக்சேயின் அதிகாரப் பூர்வ மற்ற கட்சிப் பேச்சாளரா? யார் கொடுத்த தைரியம்? இதன் பின்னணியில் ராஜபக்சே இருக்க வாய்ப்பு இருக்கிறது.
வீராதி வீர சூராதி சூர பாரத மாதா புத்திரர்கள் எங்கே போனார் களாம்

தமிழ் ஓவியா said...

ஏன் இந்தக் குரோதமோ!

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கமுகக்குடி - அபிவிருத் தீஸ்வரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கும் பாலத்திற்கு திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட் டது. கவிஞர் கனிமொழி தம் - எம்.பி., நிதியிலிருந்தும் ரூ.2 கோடியே 40 லட்சம் ஒதுக்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள் ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் இது வரை அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனை எதிர்த்து இரு கிராம மக்களும் பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஓர் ஆட்சி வரும் போகும்; அடுத்த ஆட்சியும் வரும் போகும்; அதே நேரத்தில் நிருவாகம் செயல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும், அதுதான் ஒரு ஜன நாயக ஆட்சிக்கு அழகு; திமுக ஆட்சியில் எது நடந்திருந்தாலும் அதைத் தலைகீழாக ஆக்குவது தான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் நிலைப்பாடா? எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

பக்கா வியாபாரம்

கோயில்கள் தங்கள் வியாபா ரத்தைப் புதிய முறையில் பெருக்கி யுள்ளன. கோயில்களுக்கு எம்.ஓ. மூலம் பணம் அனுப்பினால், பார்சல் மூலம் பிரசாதம் அனுப்பப்படுமாம்.

திருவையாற்றிலிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள திங் களூரில் உள்ளது கைலாசநாதசாமி கோயில், இலட்சார்ச்சனை நடை பெற்றுள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளில் பிறந்த பக்தர்கள் நேரில் கலந்து கொண்டு ரூ.50 கட்டணம் செலுத்தி சாமி தரிசனம் செய்யலாம். அப்படி வர முடியாத வர்கள் எம்.ஓ. மூலம் பணம் அனுப் பிப் பிரசாதம் பெற்றுக் கொள்ள லாமாம்.

பணம் அனுப்பி பார்சலில் புத்த கங்களை, துணிகளை, காலணி களை பெற்றுக் கொள்வதுபோல, கோயில் பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்றால் இது அசல் பிசினஸ் அல்லாமல் வேறு என்ன வாம்?

இவையெல்லாம் எந்த ஆகம விதியில் எத்தனையாவது அத்தியா யத்தில் கூறப்பட்டுள்ளதாம்? பார்ப் பான் நினைப்பதும், பிழைப்பதும்தான் ஆகமம் - சாஸ்திரம் - மண்ணாங் கட்டி - அப்படித்தானே! இங்கே ஒரு சுவையான தகவல்:

கேள்வி: சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும்; அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங் கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?

பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால், வெங்கடேஸ் வரப் பெருமாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து, ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறைவு.
(துக்ளக் 23.4.2008 பக்கம் 7)

சோ போன்ற இந்துத்துவாவாதி களாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், இந்தப் பக்திப் பிசினஸைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்களேன்.

தமிழ் ஓவியா said...


செய்தியும்-சிந்தனையும்


ஜாக்கிரதை!

செய்தி: குஜராத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டால் திருமணங்கள் ரத்து ஆகின்றன.

சிந்தனை: ஹி... ஹி.... இந்த மோடிதான் பிரதமராகப் போகிறாராம். குடிக்கத் தண்ணீர் கிடைக்காது - ஜாக்கிரதை!

தமிழ் ஓவியா said...


டாக்டர் கைது - கலைஞர் கண்டனம்!
சென்னை, மார்ச் 30- தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டரை கைது செய்ததற்காக முதல் அமைச்சரைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டாக்டர் கருணாநிதி! அவருடைய வயது 70! அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்! மருத்துவத் துறை பேராசிரியராக அரசுப் பணியிலே நீண்ட காலம் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர்! தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளரான திரு. சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவ ராகப் பணியாற்றி வருகிறார். பாவம்! என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ; 27-3-2013 அன்று அ.தி.மு.க. அரசின் காவல் துறையினரால் அவர் கைது செய்யப் பட்டு, அன்று இரவு முழுவதும் காவல் துறையினரின் கண்காணிப் பில் லாக்கப்பில் கழித்திருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன?

டாக்டர் கருணாநிதி மீது சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்ப வர் புகார் கொடுத்துள்ளார். முதல மைச்சர் ஜெயலலிதா அந்த மருத்துவ மனைக்கு வருவது பற்றிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற போது, டாக்டர் அவரைத் திட்டிய தாகவும், தள்ளியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக அதிமுக அரசின் காவல் துறை டாக்டர் கருணாநிதி மீது; அரசுப் பணியில் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அதிகாரியை அடித்துக் காயப்படுத்துதல்; அரசு அதிகாரி மீது பலமாகத் தாக்குதல்; தடுத்து நிறுத்துதல்; பணியாற்ற விடாமல் குறுக்கீடு செய்தல் போன்ற கடுமை யான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தோடு, அந்த மருத்துவர் கருணா நிதியை 18வது மெட்ரோபலிடன் நீதிபதி திரு. ஆனந்தவேலு அவர்கள் முன்னால் ஆஜர் செய்து, புழல் சிறைச்சாலையிலே கொண்டு போய் அடைத்திருக்கிறார்கள்.

70 வயதான ஒரு மூத்த மருத்து வருக்கு அ.தி.மு.க. ஆட்சியில் என்ன கதி தெரிகிறதா? அதுவும் ஜெய லலிதா, மருத்துவ மனைக்குச் சென்று சிவந்தி ஆதித்தன் உடல்நிலையைப் பார்த்து விட்டு வந்த அன்றிரவே இவ்வளவும் நடைபெற்றிருக்கின்றது.

திருச்சியில் ராமஜெயமும், மது ரையில் பொட்டு சுரேஷும் படு கொலை செய்யப்பட்டு மாதங்கள் எத்தனை ஆகிறது? அவர்களைக் கொன்ற குற்றவாளி களைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. அரசின் காவல் துறைக்கு இயலவில்லை. ஆனால் வயதான ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? யாரையாவது கொலை செய்து விட்டாரா? கொள்ளை அடித்து விட்டாரா? அல்லது யாரையாவது கடத்தித் தான் சென்றுவிட்டாரா?

அவர் செய்த குற்றம் எல்லாம், முதலமைச்சர் அந்த மருத்துவ மனைக்கு வருவதற்கு முன்பு, அந்தக் குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர், மருத்துவ மனைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வந்த போது, டாக்டர் கருணாநிதி, தீவிர சிகிச்சைப் பிரிவிலே (அய்.சி.யு.) உள்ள சிவந்தி ஆதித்தன் அறைக்குள் பூட்ஸ் அணிந்த கால்களுடன் உள்ளே செல்ல வேண்டாம் என்று அந்தக் காவல் துறை அதிகாரியிடம் கூறியது தான் குற்றமாம்! அதற்காகத்தான் இரவோடு இரவாக அந்த வயதான மருத்துவர் கைது செய்யப்பட்டு, நீதிபதியின் முன்னால் உடனடியாகக் கொண்டு போய் ரிமாண்ட் செய்து, அன்றிரவே அவசர அவசரமாக புழல் சிறையிலே அடைத்திருக்கிறார் களாம். என்ன கொடுமை இது? தமிழ் நாட்டிலே என்ன நடக்கிறது? இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசமா? இது தான் அ.தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கைப் பாது காக்கும் இலட்சணமா? ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குக் கடுமையாக காவல் துறை எடுத் துள்ள நடவடிக்கையை வன்மை யாகக் கண்டிக்கின்றேன். இதுவே கழக ஆட்சியிலே நடைபெற்றிருக்கு மானால், காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பார்! ஆனால் நான் அப்படியெல்லாம் கூற விரும்ப வில்லை. தவறுக்குக் காரணமானவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தோடு, அந்த மருத்துவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் மீது தொடுக் கப்பட்டுள்ள வழக்கினை உடனடி யாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டுமென்றும் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டுச் சர்ச்சை


2013 நவம்பரில் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து உரத்த முறையில் எழுந்துள்ளது.

இனப் படுகொலையைச் செய்த நாடு இலங்கை என்ற கருத்து உலகளவில் வலிமை பெற்றுள்ள நிலையில், எந்த நிலையிலும் இலங்கை அரசுக்கு மதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்குத் துணை போகக் கூடாது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகள் 54 காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கின்றன.

வர்த்தகத் தொடர்புகள் இந்த நாட்டுக்குள் அமைத்துக் கொள்வது போன்ற ஒப்பந்தங்கள் இருந்தாலும் 1997ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கென்று சில குறிக்கோள்கள், கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன.

சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயக உரிமைகள், ஊழலற்ற நிலை, இவற்றுடன் இனம், நிறம் பாராட்டாது அனை வருக்கும் சம உரிமை என்னும் கோட்பாடுகள் காமன்வெல்த் அமைப்புக்கென்று உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில், இனப்படுகொலை செய்த, பேரினவாத அரசு நடக்கும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனை முதன்மைப் படுத்தி இயங்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரிட்டன், கனடா போன்ற நாடுகளே கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல் உண்டு. எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுகிறதோ, அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தான் அடுத்த ஈராண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக இருப்பார் என்பது விதிமுறை. அதன்படி இனப்படுகொலையாளன், இட்லரின் மறுபதிப்பான ராஜபக்சே காமன் வெல்த்துக்குத் தலைமை தாங்குவதைவிட தலைக் குனிவு வேறு ஒன்று இருக்க முடியுமா? காமன்வெல்த்தில் அங்கம் பெறாத நாடுகள் கேலி செய்யாதா?

நிறவெறி ஆட்சி நடத்திய தெ. ஆப்பிரிக் காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலக்கி வைத்த நிலைப்பாடெல்லாம் உண்டே!

இலங்கைப் பிரச்சினையில் மேலும் மேலும் இந்தியா தவறு செய்து கொண்டே போகும் நிலையில், அவற்றிற்குக் கழுவாய் தேடும் வகையில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இந்த மனிதநேய மனித உரிமைக் கருத் தையும் இந்தியா புறக்கணிக்குமேயானால், இதற்குமேலும் இந்தியாவைக் காப்பாற்ற எந்த சக்தியாலும் முடியவே முடியாது.

போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற, மனித உரிமைக் குரல் உலகளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில், காமன்வெல்த் அமைப்புக்கு இனப்படுகொலையாளன் - சிங்களவெறியன் காமன்வெல்த் அமைப்பின் கோட்பாடுகளுக்கு விரோதமான நோக்கும் போக்கும் கொண்ட போர்க் குற்றவாளி எப்படி காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை தாங்க முடியும்? அது தடுக்கப்பட வேண்டுமானால் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் கருத்தூன்றிச் செயல்பட்டாக வேண்டும்.

இந்தியா இதற்காகக் குரல் கொடுக்குமா? குறைந்தபட்சம் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமா? எங்கே பார்ப்போம்!30-3-2013

தமிழ் ஓவியா said...


அரசு கவனத்தில் கொள்ளுமா?

இப்படி ஒரு கார்ட்டூனைப் போட்டுள்ளது கருமாதி ஏடு.

யார் நல்லது செய்தாலும் தம் கொள்கைக்கு உடன்பாடு என்றால் அதனை முன்வந்து ஆதரிப்பதும் கொள்கைக்குக் குந்தகம் என்றால் அதனை எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் கொள்கை வழிப்பட்ட அணுகு முறையாகும்.

தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இனமலருக்கு முக்கால் நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் ஓர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த பொது அறிவுகூட இல்லாமல் அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஒன்று சொன்னால் அதனைக் கொச்சைப்படுத்தியே தீர வேண்டும் என்ற பார்ப்பனர் கொழுப்பெடுத்துக் கிறுக்குவதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? கண்மூடித்தனமான எதிர்ப்பு கண்மூடித்தனமான ஆதரவு தான் சரி என்பது இனமலர்களின் புத்தியா?

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கும் ஜகத் குருக்களைப் பற்றி இந்த இனமலர் ஏடுகளின் கண்ணோட்டம் என்ன?

பக்கம் பக்கமாக இந்த ஏடுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசு - ஆட்சி செய்யும் நல்லதுகளை பாராட்டி சொல்லுவதைக்கூட கொச்சைப்படுத்தி எழுது கிறதே - இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 30-3-2013

தமிழ் ஓவியா said...


சுயராஜ்யக் கட்சியும் மகமதியரும்மகமதியர்கள் பெரும்பான்மையாயுள்ள இந்தியாவின் வட எல்லைப்புற மாகாணங்களுக்கு இந்தியாவின் மற்ற பாகங்களைப் போலாவது சீர்திருத் தங்கள் வழங்கப்படவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை இந்தியா சட்டசபையில் ஒரு மகமதிய கனவான் பிரேரேபித்தபோது சுயராஜ்யக் கட்சியார் அதை எதிர்த்துத் தோற்கடிப்பதற்கு அனுகூலமா யிருந்தார்களாம். சில மகமதிய கனவான்கள் சுயராஜ் யக் கட்சித் தலைவரான பண்டித நேருவை எங்கள் விஷயத்தில் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்ட தற்கு சீர்திருத்தமே போதுமானதல்ல, உபயோகப்படக் கூடியதல்ல; ஆதலால் அது உங்களுக்கு ஆகாது; அதனால் தான் நாங்கள் ஆட்சேபித்தோம் என்று பதில் சொன்னாராம். சுயராஜ்யக் கட்சி பிராமணருக்கு மாத்திரம் சீர்திருத்தத்தின் பலனாய் ஏற்பட்ட சட்டசபை யும் அதில் ஏற்படும் கமிட்டி அங்கத்தினர் பதவியும் 4000, 5000 சம்பளமுள்ள சட்டசபை அக்கிராசனம் முதலிய ஸ்தானங்களும் சுயராஜ்யம் பெற உபயோகப் படுத்திக் கொள்ளக்கூடியதும் அதற்குப் போதுமானது மாயிருக்கிறது. ஆனால், எல்லைப்புற மகமதியர் களுக்கு மாத்திரம் பிரயோஜனமில்லையாம், போறா தாம். இது சிறு குழந்தைகள் ஏதாவது கேட்டால் தொடாதே கடித்துவிடும் என்று சொல்லுவது போலி ருக்கிறது. இம்மாதிரி சுயராஜ்யக் கட்சியில் எப்படித்தான் உண்மையான மகமதியர்கள் சேருகிறார்களோ தெரியவில்லை. ஆனால் இரண்டொரு ஆசாமிகளைத் தவிர பெரும்பாலும் புத்தியுள்ள மகமதியர்களெல்லாம் சுயராஜ்யக் கட்சியினின்றும் விலகி விட்டார்களென்றே சொல்லலாம். அந்த இரண்டொருவர்களைப் பற்றிக்கூட நாம் ஆச்சரியப்படக் காரணமில்லை. ஏனென்றால் பிராமணரல்லாதாரிலேயே பிராமணர்களின் சூழ்ச்சி அறிந்த சிலர் தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு பிராமணர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவார்களேயானால் மகமதியரைப்பற்றி நாம் ஆச்சரியப்பட என்ன நியாயமிருக்கிறது?
- குடிஅரசு - செய்தி விளக்கம் - 18.04.1926

தமிழ் ஓவியா said...


சர்.செட்டியாரும் டாக்டர் அம்மையாரும்


ஒத்துழையாமையின் போது ஜெயிலுக்கு ஜனங்கள் போய்க் கொண்டிருந்ததை ஒப்புக் கொள்ளாத சர்.பி. தியாகராய செட்டியார் ஜெயிலுக்குப் போன ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களுக்குப் பிரத்யேக சௌகரியம் செய்து கொடுக்க சம்மதிக்க வில்லையாம். இது குற்றமல்ல வென்று கஷ்டப்பட்ட ஸ்ரீமான் எஸ். ராமநாதனே ஒப்புக் கொண்டாலும் மறைந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டி ருந்த நமது பிராமணர்களுக்கு சர்.செட்டியார் டையராய் விட்டார். அவருடைய கட்சி தேசத்துரோக கட்சியாய்ப் போய்விட்டது. ஆனால் பஞ்சாப் படுகொலையானபோது ஸ்ரீமதி பெசண்டம்மையார் ஜாலியன் வாலாபாக்கில் நிரபராதிகளை டயர் சுட்டது சரி; இவர்கள் கல்லு போட் டார்கள்; அதற்கு டையர் குண்டு போட்டார்; இதிலொன்றும் தப்பில்லை என்று சொன் னார். அதைப்பற்றி கேட்பாரில்லை. அவருடனும், அந்தம்மாள் கட்சியிலும் அநேக பெரிய மதிப்பு வாய்ந்த பிராமணர்கள் சூழ்ந்து கொண்டு சபை நடுவிலிருத்தி ஆட்டத்துக்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஏன்? அந்தம்மாள் பிராமணர்களுக்கு அனு கூலமாய் இருந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்கிறார். தனக்குள்ள செல்வாக்கை பிராமணர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும் அதற்குத் தகுந்த திட்டம் போடுவதிலும் செலவிடுகிறார். அல்லாமலும் ஜாலியன் வாலாபாக்கில் குண்டுபட்டு இறந்த குழந்தைக் குட்டிகளும் அவமானப்படுத்தப்பட்ட பெண்களும் ஏறக்குறைய எல்லோரும் பிராமணரல்லாதவர்கள். ஆதலால், அந்தம்மாளுக்குப் பிராமண அனு சரணை தாராளமாய் இருக்கிறது. அப்படி இல்லாததால் சர். செட்டியாருக்குப் பிராமணர் களைத் தவிர பிராமணரல்லாதாரிலும் சில துரோகிகள் இருக்கிறார்கள். என்னே காலத்தின் கோலம்.
- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 18.04.1926

தமிழ் ஓவியா said...


டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சுற்றுப் பிரயாணம்


டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தனது சுற்றுப் பிரயாணத்தில் நாகப்பட்டணம் முனிசிபல் உபசாரப் பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று பேசினார். அதாவது பஞ்சமர் முதலிய சிறுபான்மை யோருக்குத் தனித்தொகுதி வகுத்து தேர்தல் முறையை அளிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். (இது 21-3-26 தமிழ்நாடு பத்திரிகையின் 7-வது பக்கம் 23, 24, 25, 26 - ஆவது வரிகளில் பிரசுரமா யிருக்கிறது) நாம் கேட்கும் முதல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இதேதான். இது சமயம் பஞ்சமர்களுக்கு டாக்டர் நாயுடு சொல்லுகிற படி செய்தால்கூட போதுமானது. ஆனாலும் பஞ்சமர் சிறுபான்மை யோரல்ல என்பதை டாக்டர் நாயுடு அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். பஞ்சமர் என்போர் இந்தியாவில் அய்ந்தாவது வகுப்பார் என்று சொல்லுவது நிஜமல்லாம லிருந் தாலும் தேச மொத்த ஜனத் தொகையில் 5-இல் ஒன்றுக்கு மேலாயிருக்கிறார்கள். இந்தக் கணக்கு டாக்டர் நாயுடு அவர் களுக்குத் தெரிந்ததுதான். ஜஸ்டிஸ் கட்சி யாருடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தத்து வமும் இதுதான். அதாவதுதனித் தொகுதி வகுத்து, தேர்தல் முறையை அளிக்க வேண்டு மென்றுதான் கேட்கிறார்கள். நாமும் அதைத் தான் ஆதரிக்கிறோம். டாக்டர் நாயுடு அவர்கள் சொல்லுவது பஞ்சமருக்கும் சிறுபான் மையோருக்கும் என்கிறார். நாம் சொல்லுவதும் அதேதான். அதாவது பிராமணர், பிராமணரல்லாதார், பஞ்சமர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கும்படி கேட்கி றோம். டாக்டர் நாயுடு அவர்கள் சொல்லுவது போல் இம்மூன்று பிரிவில் பஞ்ச மருக்கும் சிறுபான்மையோராகிய பிராமணருக்கும் தனித் தொகுதி வகுத்து தேர்தல்முறை அளித்துவிட்டால் பாக்கியிருப்பவர்களுக்குத் தானாகவே தனித் தொகுதியும் தேர்தல் முறையும் ஏற்பட்டுவிடுகிறது. மற்றபடி கிறிஸ் தவர், மகமதியர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலிய வகுப்பார்களுக்கு ஏற் கெனவே ஏற்பட்டுப் போயிருக்கிறது. மற்றபடி எந்த விதத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிராமணரல் லாதார் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்திற்கும், டாக்டர் நாயுடு போன்ற சுயராஜ்யக் கட்சியை ஆதரிக்கும் பிராமணரல் லாதார் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்திற்கும் ஸ்ரீமான்கள் எஸ்.ராம நாதன், ஆரியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணிப் பிள்ளை, ஈ.வெ. இராமசாமி நாயக்கர் முதலியோர் போன்ற பிராமணரல் லாதார் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்திற்கும் வித்தி யாசமிருக்கிறதோ நமக்கு விளங்கவில்லை. இதையறிந்தேதான் நாம் பலதடவைகளில் டாக்டர் நாயுடு அவர்கள் தனது அந்தரங்கத் தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதியல்லவென்றும் ஏதோ சிற்சில சந்தர்ப்பங்களில் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களோடு போட்டி போட்டு பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்கிற சமயங்களில் டாக்டர் நாயுடுவும் முதலியாரைப் போலவே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்று சொல்லவேண்டியதாய்ப் போய் விடுகிறது என்று கருதியே எழுதியிருக்கிறோம். ஆனாலும் ஸ்ரீமான் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் தான் கொஞ்ச காலத்திற்கு முன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்டது ஜஸ்டிஸ் கட்சியை ஒடுக்குவதற்காக என்று இப்போது சொல்வதுபோல் நமது டாக்டரும் நாகப்பட்டணத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் வேண்டுமென்பதற்கு ஏதாவது காரண மோ வியாக்கியானமோ சொல்லி மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திலேறினாலும் ஏறலாம். ஆதலால், டாக்டர் நாயுடு முதலியோர் சந்தர்ப்பத்தை உத்தேசித்துச் சொல்லும் வியாக்கியானங்களில் கருத்தைச் செலுத் தாமல் அவர்களின் அந்தரங்கத்தை மாத்திரம் தெரிந்துக் கொள்ளும்படி வேண்டுகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை - 18.04.1926

தமிழ் ஓவியா said...


அவதாரங்கள் அவ்வளவுதானா? - சிவகாசி மணியம்

திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய புளுகு மூட்டைகள் நமக்குத் தெரியும். அந்தப் பத்தில் சிறந்தது எது என்று ஒரு பக்தனிடம் கேட்டால் என்ன சொல்வான்? இராமாவதாரம் என்பான். அல்லது கிருஷ்ணாவதாரம் என்பான். அதெல்லாம் இல்லை பன்றி அவதாரம் தான் சிறந்தது என்று நாம் சொன்னால் நிச்சயம் நம் மீது பாயத்தான் செய்வான். வம்புவந்து சேரும். ஆனால் இதையே பக்திப் போர்வையில் பாகவதம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதும் வேளுக்குடி சொன்னால் அது சரியாக இருக்கும். பன்றி அவதாரம் தான் பெருமை வாய்ந்தது என்று அடித்துச் சொல்கிறார் அவர். அதைச் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

மற்ற அவதாரங்களைக் குறைத்துக் கூறுவதற்காக சொல்லப்படவில்லை. பன்றி அவதாரத்தின் பெருமையை நிலை நாட்டவே கூறப்படுகிறது. இதனை இலக்கியக் கண்கொண்டு மட்டும் ரசித்திட வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறார். (இலக்கியக் கண் இதற்கு மட்டும் தான். மற்ற அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுக்களுகெல்லாம் குருட்டு நம்பிக்கை ஒன்றே போதும் என்கிறார் போலும்),
சிறப்பைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பன்றியின் பிறப்பு பற்றித் தெரிந்து வைப்போம். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மாவின் நான்கு பிள்ளைகளும் அத்தொழிலில் உதவிக்கு வர மறுத் தார்களாம். உடனே சுவாயம்புவ மனு என்ற இன்னொரு மகனை நான்முகன் உருவாக்கினான். உலகைப் படைக்கத் தொடங்கிய இந்த மகனும் அதைத்தொடர முடியாமல் நிறுத் தினான். ஏனென்றால் இரண்யாட் சன் என்ற அசுரன் பூமாதேவியை எடுத்து பிரளய ஜலத்துக்குள்ளே (கடல்) ஒளித்து வைத்துவிட்டான். மக்களைப் படைத்தால் அவர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது என்ப தால் சுவாயம்புவ மனு தன் தந்தை யான பிரம்மாவிடம் வந்து பூமியை விடுதலை செய்யுங்கள். அதன் பின்னர்தான் படைப்புத் தொழிலைச் செய்ய முடியும் என்றான்.

இதை எப்படிச் செய்யலாம் என்று பிரம்மன் யோசித்துக் கொண்டி ருக்கும் போதே அவருடைய ஒரு மூக்கிலிருந்து பன்றி ரூபம் ஒன்று தோன்றியது. (மூக்கிலிருந்து சளி தானே வரும், பன்றி எப்படி வரும்? பிரம்மாவோ நான்கு தலை கொண்ட நான்முகன். நான்கு மூக்கில் எந்த மூக்கிலிருந்து பன்றி வந்தது? என் றெல்லாம் ஏடா கூடமாகக் கேட்கக் கூடாது. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் என்பதை மறந்து விடக்.கூடாது)

மூக்கின் வழியே வந்த பன்றி ஆயிரக்கணக்கான யானைகள் அளவுக்கு உயர்ந்து பருத்தது. அவரே வராகப் பெருமாள்! திருமாலின் முக்கியமான அவதாரம்! பன்றியின் தனிச்சிறப்பு; அதனால் நிலத்தில் நடக்க முடியும். நீரில் நீந்தவும் முடியும்! சகதியிலும் சுலபமாக நடக்க முடியும். பூமாதேவி கடலுக்குள் இருந்தபடியால் இந்தத் திறமைகள் எல்லாம் இருந்தால் தான் அவளைக் காக்க முடியும். அதனால் தான் பன்றி அவதாரம்!

முதல் அவதாரமான மச்ச அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக் கரை ஏற முடியாது. மீனாக இருக் கும்போது சம்சாரக் கடலிலிருந்து நம்மை அது கரை ஏற்ற முடியுமா? இயலாது.

தமிழ் ஓவியா said...

அடுத்து கூர்மம். ஆமை அவ தாரம்! அதன முதுகையே மந்தர மலை அழுத்துகிறவோது சம்சார பாரத்தை சுமந்து அதனால் அழுத்தப்படும் நம்மை அது மீட்க முடியுமா? இயலாது.

கழுத்துக்கு மேலே சிங்க உருவ மும், கழுத்துக்கு கீழே மனித உருவ மும் கொண்ட உருவம்தான் நரசிம்ம அவதாரம். இரண்டு உருவங்கள் கொண்டவனை நம்பமுடியுமா? விட்டு விடுவோம்!

அடுத்து உலகத்தையே தாவி அளந்த வாமன அவதாரம், ஆனால் சிறிய காலைக் காட்டி மூன்றடி மண் வேண்டி, பின்னால் பெரிதாக வளர்ந்து அளந்து கொண்டவன். அதனால் அவனிடத்தில் யாருக்கும் நம்பிக்கை பிறக்காது.

அடுத்து ஆவேச அவதாரமான பரசுராமனைப் பற்றலாம் என்றால் அவரே பெரும் கோபக்காரர். நாமோ கோபத்திலிருந்து விடுதலை அடையத் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவரை எப்படி பற்ற முடியும்? இயலாது.

அடுத்து இராமனைப் பற்றலாம் என்றால் அவனே சக்கரவர்த்தி திருமகன் மிக உயர்ந்தவன். எளிதில் நாம் அவரை அண்டிவிட முடியாது.

கண்ணன் எளியவன் ஆயிற்றே! அவனைப் பற்றலாமா? ஏலாப் பொய்களை உரைப்பான். சொல் லொன்று செயலொன்றாக இருப் பான். அவனை நம்ப முடியாது.

அவன் அண்ணன் பலராமனோ எப்போதும் சண்டைக்காரன். பாரதப்போரின் போது தம்பியையே கைவிட்டு விட்டு தீர்த்த யாத்திரை சென்று விட்டவர். நம்மையும் கைவிட்டு விடுவாரோ என்னவோ!

கடைசியான கல்கி அவதாரமோ இன்னும் ஏற்படவே இல்லை. எங்கே பற்ற? ஆகவே இவை அனைத்தையும் விடுத்து கடலில் மூழ்கிக் கிடந்த பூமாதேவியைக் கிளர்ந்து எடுத்த பன்றியையே நாம் பற்றவேண்டும் என்று சமாளிக்கிறார் கட்டுரை ளாளர் (துக்ளத் 20.3.2013) இன்னும் இந்நாள் வரை ஏற்படாத கல்கி அவதாரம் தாசாவதாரப் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட மர்மம் யாருக்கும் தெரியாது.

ஒரு மனிதனுள் இருப்பது நவதுவாரங்கள். அதாவது ஒன்பது ஓட்டைகள், மூக்கின் வழியே பன்றி வந்தாயிற்று! மிச்சமிருக்கும் எட்டு ஓட்டைகளை கழுதை, கரடி, காண்டா மிருகம், கரப்பான் பூச்சி என்று அவதாரங்கள் பல சேர்த்து சதாவதாரம் என்ற பெயரிட்டு மனிதர்களை மத போதையில், மடமையில் மூழ்கடித்து இன்னும் நிறைய காசு பண்ணலாமே. கயிறு திரிக்க பூணூல்களுக்கா பஞ்சம்?

வெறுமனே விட்டு வைக்கலாமா? அவதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாமே

தமிழ் ஓவியா said...


சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?

சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.

சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன் சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.

மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.

மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.

தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.

பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?

சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?

ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப் பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.

நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.

- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013

தமிழ் ஓவியா said...


IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி


உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம்.

இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன்.

லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம்.


அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும்.

இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில் Magic Autofill என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.இதில் பயணிகள் குறித்த தகவல்களை முதலில் நிரப்பி விடுங்கள். பின்னர் I'm Feeling Lucky என்பதை கிளிக் செய்து அதற்கடுத்து "Magic Autofill" என்பதை உங்கள் உலவியில் Drag செய்து Bookmark Toolbar பகுதியில் விடவும்.

செய்யும் முறை:

கவனிக்க நீங்கள் இந்த பக்கத்தை Bookmark செய்யகூடாது. Firefox மற்றும் Chrome உலவியில் Bookmark Toolbar Enable செய்து இருக்க வேண்டும், அப்போது தான் இது அங்கே Add ஆகும். Bookmar Toolbar Enable செய்ய.

Firefox - இதில் URL பகுதிக்கு மேல் Right Click செய்து Bookmark Toolbar என்பதை Enable செய்ய வேண்டும்.


Chrome - இதில் Wrench Icon >> Bookmarks >> Show Bookmarks bar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


இப்போது Drag செய்து Bookmark பகுதியில் விட்டால் Magic Autofill - ஐ விட்டால், அது கீழே உள்ளது போல தோன்றும்.

In Chrome
In Firefox
இப்போது IRCTC தளத்தில் பயணிகள் தகவலை நிரப்பும் போது இந்த Magic Fill என்பதை அழுத்தினால், அது ஒரே நொடியில் அனைவருக்கும் தகவல்களை நிரப்பி விடும்.

இது கூடுதலாக உள்ள Food, ID Card No, ID Card Type என்பதை குறித்த கவலை வேண்டாம், நீங்கள் புக் செய்யும் போது அது கேட்கப்படவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை.

என்ன நடக்கிறது ?

இந்த Magic Autofill ஒரு Java Script ஆகும் நீங்கள் நிரப்பும் தகவல்கள் உங்கள் உலவியில் சேமிக்கப்படும், நீங்கள் கிளிக் செய்யும் போது IRCTC தளத்தில் உள்ள கோடிங் உடன் மேட்ச் ஆகி தகவல்கள் ஒரே நொடியில் நிரப்பப்பட்டு விடும்.

நன்றி - Digital Inspiration

- பிரபு கிருஷ்ணா

தமிழ் ஓவியா said...


பெரியார் பெருந்தொண்டர்கள் பாரீர்!


திராவிடர் கழகத்தில் இருக்கக் கூடிய பெரியார் பெருந்தொண்டர்களின் பெருமையை, கொள்கை உறுதி பேணும் பண்பாட்டை என்னவென்று சொல்ல.

எடமேலையூர் ஆர். சண்முகம் எண்பது வயது கடந்த இவர் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளராக இருந்தார். சிறு நீரகப் பாதிப்பின் காரணமாக வெளியில் வர முடியவில்லை என்றாலும், அந்த சுயமரியாதை உணர்வு கொஞ்சமும் குறையவில்லை ஒரு குறைபாடே தவிர மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். 60 ஆண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக்காரன் அந்த ஊட்டம் என்னை விட்டு அகலாது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அவரின் இளைய மகள் விடுதலைக்கு ஓர் ஆண்டு சந்தா தொகையும் அளித்தார். அவரின் இணையரும் அன்புடன் வரவேற்றார்.

எடமேலையூர் காசிநாதன் 82 வயதைக் கடந்த இளைஞர் இவர். அன்றாடம் விடுதலையை படிக்கத் தவறுவது கிடை யாது. அவரது தம்பி மேக நாதன் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் இப் பொழுது ஆற்றும் பணி போதாது இன்னும் தீவிரமாக ஆற்ற வேண்டும் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆரோக்கியமாக இருக்கிறார். இணையர் அவர் களும் அன்புடன் வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் நிகழ்ச்சிகளுக்காக சென்ற போது இந்தப் பெரியார் பெருந் தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக் குமார் ஒன்றிய தலைவர் கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

திண்டிவனம் அருகே தழுதாளி ஊர். 85 வயது. தழு தாளி சண்முகம் எப்பொழுதும் கருப்புச்சட்டைதான். வீட்டு வாசலில் ஒரு பெட்டி இருக்கும். அதில் விடுதலை இருக்கும். யாரும் வந்து படித்துப் போகலாம். கருப்புச்சட்டை அணிவதே ஒரு பிரச்சாரம் தான் என்று தந்தை பெரியார் சொன்னது முதல் எப்பொழுதும் அந்த உடையுடன்தான் காணப்படுவார். மகன் அன்புச்செல்வன் கழகப் பொறுப்பாளர் ஆக உள்ளார். இணையர் நலமுடன் உள்ளார்.

தமிழ் ஓவியா said...


தினமலர் விமர்சனம்


பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை!

ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது. பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும் என்ற நூல், அதிலிருந்து சில பகுதிகள்:

இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட் டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண் மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர்.

ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.

இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப் பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது.

கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.

அதிக பெண்களைப் பெற்ற தந் தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது.

ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.

- இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

(தினமலர்கள் வாரமலர் 17.9.2013)

தமிழ் ஓவியா said...


பேசும் காலணிகள்


அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், கணினி தொடர்பான விற்பனை மற்றும் சேவைகள் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனமாகும். இக்கம்பெனி, தங்களுடைய புதிய விளம்பர உத்தியான கலை, நகலெடுத்தல் மற்றும் குறியீடு தொடர்புகளை சிறப் பிக்கும் வண்ணம் புதுமைகளைப் புகுத்தி வருகின்றது.

கூகுள் கண்ணாடி மூலம் கைகளின் உதவி இல்லாமல், வலைத்தள தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்று காட்டிய இந்நிறுவனம் தற்போது பேசும் காலணிகளை இவர்களின் விளம்பர உத்திக்காக வெளியிட்டுள்ளனர்.

அடிடாஸ் கம்பெனியின் விளையாட்டுக் காலணிகளைத் தேர்வு செய்து, சிறிய கம்ப்யூட்டர், ஆக்சிலரோமீட்டர், கைராஸ்கோப், அழுத்தத்தைக் குறிக்கும் சென்சார்கள், ஒலிபெருக்கி மற்றும் புளூ டூத் போன்றவற்றைப் பொருத்தியுள்ளனர்.

ஒருவர் இந்தக் காலணிகளை அணிந்துகொண்டால், அவர்கள் செய்துகொண்டிருப்பதை புளூ டூத் மூலம் அவரின் தொலைபேசிக்கோ, ஒலிபெருக்கி மூலம் அவருக்கோ தகவல் பெறமுடியும்.

இந்த முயற்சி, ஒருவர், தான் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் வலைத்தளத்தில் தகவல்கள் கூறலாம் என்பதை தெரிவிப்பதாக, இந்த விளம்பர மையத்தின் அதிகாரி, அமான் கோவில் கூறுகின்றார். இதனை நகலெடுத்து உருவகப்படுத்தினால், இந்தக் காலணிகள் பேசும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


இவர்தான் பூரி சங்கராச்சாரி!

கேரளத்தில் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று காலடி என்ற ஊரில் நடைபெற்ற அகில இந்திய பிரா மணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூரி சங்கராச்சாரி குறிப்பிட்டதாவது:

ஆண்டவன் ஒரு மனிதனுக்குச் செய்யும் உயர்ந்த சிறப்பு அவனைப் பிராமணனாகப் பிறக்க வைப்பது; அப்பெருமைக்குத் தகுந்த வகையில் நடந்து கொள்வது பிராமணர்களது கடமையாகும்.
(ஆதாரம்: இந்து 8.12.1965 பக்கம் -12)

அது மட்டுமா? பச்சையான ஒரு வர்ணாசிரமவாதி என்று பகிரங்கமாக முழங்கியதும் இதே பூரிதான்.

எப்போது வர்ணாசிரமம் தழைக் கிறதோ அப்போதுதான் பாரதம் க்ஷேமம் அடைய முடியும். உலகமும் க்ஷேமம் அடையும்.

எல்லோரும் சமம் என்று வாழும் பிரச்சாரம் இக்காலத்தில் பரவிக் கிடக் கிறது. ஜாதி வகுப்புக்களற்ற சமுதாயம் என்றெல்லாம் சிருஷ்டியில் சமம் என்று வாதிப்பது சரியானதா? பிறக்கும்போதே ஆண் பெண் என்ற வித்தியாசத்துடன் தானே பிறக்கின்றோம்? ஒரே சமயத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளேயே தோற்றம் குணம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே. பஞ்சேந்திரியங்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனமாகப் பார்த்தால் எத்தனையோ பேதங்கள் இருப்பது புலப்படும். இரட்டைக் குழந்தைகள் இடையேகூட பல பேதங்கள் இருக்கின்றன.

நமது தேகத்தில் ஓடும் இரத்தத்தில் கூட அல்லவா வேறுபாடுகள் காணப்படு கிறது. மேனாட்டு ரத்தப் பரிசோதனை நிபுணர்கள் மனுஷ்ய சரீரங்களில் ஓடும் ரத்தத்தை நான்கு வகையாகப் பிரித் திருக்கிறார்கள்.

ஓ, ஓஏ, ஏபி, பி என்பவையே அவை

இவற்றில் ஓ என்பது உயர்ந்த வகையான ரத்தம். இன்று ரத்த ஓட்டத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்பத்தான் நமது முன்னோர்கள் மனித சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்திருக்கின்றனர் இதை ஆதார மாகக் கொண்ட வர்ணாசிரமம் தழைக் குமானால் பாரதம் க்ஷேமம் அடையும்; உலகமும் க்ஷேமமுறும்.

பூரி சங்கராச்சாரியார் (கோவர்த்தன பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியாள் நிரஞ்சனா என்ற தீர்த்த சுவாமிகள்).

18.3.1965 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சிருங்கேரி சங்கரர் மடத்தில் பேசினார்.
(ஆதாரம்: சுதேசமித்திரன் பக்கம் 2 22.3.1965)

தமிழ் ஓவியா said...


எண்ணத்தில் எதை வைப்பது!

ஆத்திகன்: எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்.

நாத்திகன்: எண்ணத்தில் எண்ணிய செயலை வைத்தால் எடுத்த (எண்ணிய) காரியம் (செயல்) வெற்றியாகும்.

- சு. ஆறுமுகம், நன்னிலம்

தமிழ் ஓவியா said...


டில்லி பெரியார் மய்யத்தில் கழக குடும்பம்


ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பொன். மொழியன்பன் குடும்பத்தினர் துணைவர் சிவசுந்தரி, மகன் தமிழன்பன், மகள் தேன்மொழி நால்வரும் 15.3.2013 வெள்ளிக்கிழமை மாலை 16.45 மணிக்கு புதுடில்லி விமான நிலையத்திலிருந்து குடும்பத்துடன் மகிழுந்து மூலம் ஜெரு சோலா என்ற இடத்தில் உள்ள நம் முடைய கழக கொள்கையின் முழு உருவமான பெரியார் மய்யம் சென் றோம் - எங்களை தோழர்கள் இருதயநாத், ஆனந்த் வரவேற்றனர். அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் மார்பளவு சிலை எங்களை வரவேற்றது. தோழர் இருதயநாத் எங்கள் குடும்பத்தினரை அழைத்து அந்த பிரமாண்டமான நான்கு மாடி கட்டடத்தின் கொள்கை விளக்க பாசறை இடங்களை சுற்றி காண்பித்து விளக்கி கூறினார். கீழ்த்தளம் புத்தரின் பெயரிலும் முகப்புதளம் அறிஞர் அண்ணாவின் பெயரிலும் முதல் தளம் காமராசர் பெயரில் ஒரு தளம், அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஒரு தளம், சமூகநீதி காவலர் வி.பி. சிங் பெயரில் ஒரு தளமும், சமூகநீதிக்காக போராடிய தமிழ்நாட்டு தலைவர்கள், இந்தியாவின் முற்போக்கு தலைவர்கள் படமும், விபரமும் அடங்கிய படமும் கட்டடத்தின் முழுவதும் காண முடிந்தது. கொள்கைக் களஞ்சியமான முழு விவரத்தையும், தோழர் இருதயநாத் விளக்கி கூறினார்.

பழைய கட்டடம் சூழ்ச்சிகாரர்களால் இடித்து தள்ளப் பட்டாலும் சமூகநீதி காவலர் வி.பி. சிங் முயற்சியாலும் மற்றும் தமிழக, இந்தியா வின் தலைவர்களாலும், புதிய இடமான இக்கட்டடம் முன்பாக நூறு அடியும், பின்புறமாக நூறு அடிச்சாலை அமைந்து மிகக் கம்பீரமான முற்போக்கு கொள் கையுடன் திகழ்கிறது. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் புகைபடத்துடன் சுருக்கமாக, விளக்கமாக அமைக்கப்பட்டி ருந்ததை மொழியன்பன் குடும்பத்தினர் கண்டு மகிழ்ந்தனர்.

ஆனந்த் முயற்சி செய்து மகிழுந்து ஏற்பாடு செய்து கொடுத்தார். பெரியார் சிலை முன்பு நிழற்படம் எடுத்துக் கொண்டு டில்லி மின் தொடர் வண்டி நிலையம் வந்து 17.3.2013 ஞாயிறு அன்று சென்னை வந்தடைந்தனர்.

தமிழ் ஓவியா said...


சிங்கள மரியாதை!


கடந்த வாரம் இலங் கையில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரரின் முகத்தில் அங்குள்ள வெறியர்கள் திராவகத்தை வீசி விட்டார்கள். இதனால் பார்வை பாதிக்கப்பட்டு, முகம் முழுவதும் வெந்துவிட்டது அந்தத் தமிழ் வீரருக்கு!

மிக மோசமான நிலையில் அவரை உடனே சென்னைக்கு அனுப்பி விட்டார்கள். மீனம் பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அந்த வீரரை நண்பர்களும், உறவினர் களும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

அவர் ஊர் பெயரைக்கூட நம் அதிகாரிகள் சொல்ல மறுத்துவிட்டார்கள். ஏனோ?

தகவல்:
தேவி 6.4.1983

தமிழ் ஓவியா said...


அற்ப நினைவை ஆதிக்க உணர்வை தமிழகம் புறக்கணிக்குமே!


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பெருமான்
வள்ளுவர் தோன்றிய நாட்டில்
பிறவிப்பேதமு ரைக்கும் பெருங் கொடுமை எதனால் யாரால் வந்தது?
தொட்டால் தோசம் நிழல்பட்டால் தீட்டு
தீண்டாமை அண்டாமை வந்ததேன்?
இட்டுக் கட்டிய கதைகளால் இதிகாச
புராணத்தால் பார்ப்பனரால் வந்ததே!
சாதிக்குள் திருமணம் சனாதனம் காக்க
இந்து மதத்தின் ஏற்பாடு
சாதிகள் ஒழிந்து சமத்துவம் கூடாது
என்பதில் குறியாய் இருக்கும்
பழம்பஞ் சாங்கங்கள் பழைமை யாண்டியரைத்
தோற்கடிக்கும் நவீன சனாதனிகள்
பழமை பாராட்டி பார்ப்பனி யத்தின்
அடிவருடி யாய்வலம் வருகின்றார்!

தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப் பட்டோர்
என்பார் உழைக்கும் மக்கள்
உழைக்கும் மக்கள் ஒன்று படாமல்
இருக்க பார்ப்பனப் பதடிகள்
படிநிலைச் சாதிகள் பகுப்பு முறைமையை
நாளும் கட்டிக் காத்திட
அடிப்படை புரியா அரைவேக் காடுகள்
ஆரியத் திற்கரண் சேர்க்கின்றார்!

உழைக்கும் மக்களாம் பார்பபனரல் லாதாரை
ஒருங்கிணைத்து உரிமை மீட்டிட
உழைத்தனர் ஓங்குயர் உயர்தரச் சிந்தனையில்
மேம்பட்ட நீதிக்கட்சித் தலைவர்கள்
பார்ப்பன மயமான கல்விவேலை வாய்ப்பை
பார்ப்பன ரல்லாதார் நுகர்ந்திட
போராடிப் பெற்றது நீதிக்கட்சியும்
திராவிட இயக்கமும் அறியீர்!

காதல் என்பது சாதிமதம் கடந்த
சமத்துவ நோக்கம் கொண்டது
காதலின் மேன்மை கல்நெஞ்சர்க் கெல்லாம்
பணம் பறிக்கும் நாடகமாய்த் தோன்றும்
அரசியலில் அடிக்கடி நிலைமாற்றிக் கடை
விரித்ததால் கொள்வா ரில்லை
அற்ப நினைவும் ஆதிக்க உணர்வு
கொண்டோரை தமிழகம் புறக்கணித்ததே!
கவிஞர் இனியன், திருச்சி -13

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே போகிறது?

நாடு எங்கே செல்லுகிறது? தவளைக்கும் தவளைக்கும், கழுதைக்கும், கழுதைக்கும் நாய்க்கும், நாய்க்கும் வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்றார்கள். பெண்கள் நிர்வாணமாக ஏர் உழுதால் மழை பெய்யும் என்றனர். இப்பொழுது இரு சிறுவர்களுக்குக் கல்யாணமாம் மழை பெய்வதற்கு.

மனிதனுக்குப் பகுத்தறிவு வளராவிட்டால் இன்னும் இது போன்ற காட்டு விலங்காண்டித்தனச் செயல்களில் தானே ஈடுபடுவார்கள்? இன்னொரு வகையில் குழந்தைத் திருமணத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் சட்ட விரோத செயல் அல்லவா? இதனைக் கண்டிக்க வேண்டிய கடமையுடைய ஏடே வண்ணக் கலவையில் படத்தைப் போட்டு, சாங்கோ, பாங்கமாக செய்தியை அட்டகாசமாக வெளியிட்டுக் கல்லாப் பெட்டியை நிரப்புகிறதே-_ இது வெட்கக்கேடு அல்லவா!

தமிழ் ஓவியா said...


தினமணிக்கு...


முட்டாள்களின் கீழ் உலகம் எனும் சிறப்புக் கட்டுரை இன்றைய தின மணியில் (1.4.2013 பக்கம் 6) வெளி வந்துள்ளது.

அதில் ஒன்று: அட முட்டாள் புருனோ! நீ சொல்வதைப் போல உலகம் உருண்டையா னது என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்? இது மத குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில், அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?

இப்படி புருனோ கேள்வி கேட்டு கிறித்துவ மதக் குருமார்களை மடக்கியதை எல்லாம் சாங்கோ பாங்கமாக விவ ரித்து எழுதும் தினமணி அய்யர்வாள்களைக் கேட்க விரும்புவதெல் லாம் இதுதான்.

இரண்யாட்சதன் என் பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான்; பன்றி(வராக) அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கடலில் குதித்துப் பூமியை மீட்டார் என்று தீபா வளிக்குக்கதை சொல் கிறீர்களே. அந்தத் தீபா வளிக்குச் சிறப்பு மல ரையும் வெளியிடுகிறீர் களே! தந்தை பெரியாரும், அவர் வழி வந்த கருஞ்சட் டைத் தொண்டர்களும் உங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதுதானே!

அட முட்டாள்களே! உருண்டையான பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு போய் கடலில் எப்படி விழ முடியும்? என்று தானே அன்று முதல் இன்றுவரை கேட்டு வருகிறோம்.

இதுவரை யோக்கியமான முறையில் தினமணி தினமலர் துக்ளக், கல்கி, ஆனந்த விக டன் வகையறாக்களிட மிருந்து பதில் இல்லையே!

அதே நேரத்தில் கிறித் துவப் பாதிரியார்களை முட்டாள்கள் என்று சொல்லுவதற்கு பயன் படுமேயானால் பகுத்தறிவுவாதி போல வினா தொடுக்கத் தோள் தட்டி வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வைத்தியரே முதலில் உமது நோயைக் குணப் படுத்திக் கொள்க!

கருஞ்சட்டைக்காரர்களைப் பொறுத்தவரை உங்களை நோக்கியும் வினா எரிமலை வெடிக்கும்!

கிறித்தவர் உட்பட எந்த மத மூடத்தனத்தை நோக்கியும் எங்கள் வினாக்கள் முட்டி மோதிக் கிளம்பத்தான் செய்யும்.

- மயிலாடன்-1-4-2013

தமிழ் ஓவியா said...


டார்பிடோ ஏ.பி.ஜே எனும் சுயமரியாதைச் சுடரொளி

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமைப்புச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் மாணவர் கழகத்தை வளர்த்தவர்களில் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனமும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அக்கால விடுதலை ஏடுகளைப் எடுத்துப் பார்த்தால், திராவிடர் மாணவர் கழகப் பணிகளில் அவர் பொறுப் பேற்று நடத்தியது வியப்பளிக்கிறது. பிற்காலத்தில், நம் இயக்கத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த பொழுதும், அதன் பிறகு அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பொழுதும் அவர் தன் பகுத் தறிவுக் கொள்கையை - சுயமரியாதைக் கொள்கையை கை விடவே இல்லை. எந்த நிலையிலும் தானொரு பெரியார் தொண்டன் என்று வெளிப்படுத்திக் கொள்ளத் தவறவே யில்லை. ஒரு முறை நாடாளுமன்றத் தில் பேசும் பொழுது, நாங்கள் பெரியார் ஈ.வெ.ராவின் திராவிடர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள்- எனக் கூறினார்.

1970 - ஆம் ஆண்டு, அவர் தி.மு.க. வில் இருந்தாலும், அவரை அழைத்து அண்ணாமலை நகரில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடத்தினோம். அப்பொழுது அவர் பேசுகையில், மதியழகன், தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன், வி.வி. சுவாமிநாதன் போன்றோர் காலங்களில் திராவிடர் மாணவர் கழகம் செயல்பட்ட விதம் குறித்து விளக்கமாக உரையாற் றினார். அறிஞர் அண்ணா தன்னை தமிழக மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததைச் சொல்லிச் சொல்லி குழந்தை போல், மகிழ்வார். அது போலவே, 1977ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தமிழக சட்ட மன்றத்தின் மூலம் சில உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்தலில், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமது பெயரைத் தான் முதலா வதாக எழுதினார். பிறகுதான் மற்றவர் களின் பெயரை எழுதினார் என்று குழந்தை போலச் சொல்லி மகிழ்வார்.

எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமல் பேசவே மாட்டார். தமது பெயரை முதல் பெயராக எழுதினார் எம்.ஜி.ஆர். என்ற, அதே டார்பிடோ அவரோடு கருத்து மாறுபாடு கொண்டு, முதல்வர் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானதுண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர் சிலரின் தவறான வழி காட்டுதலால், பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு பொருளாதார அளவுகோல் (9000 ரூபாய் வருமானம் வந்தால், அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையைப் பெற முடியாது) என்ற தீர்மானம் கொண்டு வந்தபொழுது, டார்பிடோ ஏ.பி.ஜெ அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து, இந்தப் பொருளாதார அளவுகோல், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் கருத்துக்கு மாறானது என்று கூறி னார். அதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்க எல்லாம் தி.க.காரர்கள் இப்படித் தான் சொல்லுவீர்கள் என்று கடிந்து கொண்டார். தனக்கு நாடாளுமன்ற உறுப் பினர் பதவி கொடுத்தவரை, இன் றைக்கு யாராவது இதுபோல் எதிர்த்து பேச முடியுமா? டார்பிடோ பேசினார் என்றால், அவரைப் பேச வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையாகும்.

தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டராக வாழ்ந்ததால் தான், ஒரு முறை தமிழக மேலவை உறுப்பினர்; ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் என்று பதவி வகித்திருந்தாலும், ஒரு சொந்த வீடுகூட இல்லாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். அரசியல் பதவி பெயரால் குடும்பத் தேவைகளைக்கூட நிறை வேற்றிக் கொள்ளவில்லை. வாழ்க ஏ.பி.ஜே. புகழ்!

- (இன்று ஏ.பி.ஜே. நினைவு நாள் - 1987).

தமிழ் ஓவியா said...


உரிமையுண்டு


எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம். - (விடுதலை, 2.4.1950)

தமிழ் ஓவியா said...


ஓ, முரளிதரனா!


அய்.பி.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதியில்லை என்று முதல் அமைச்சர் அறிவித்தாலும் அறிவித்தார்; சில சர்ச்சைகளை எழுப்பியது.

இலங்கை அணியில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்தையா முரளிதான். உலகளவில் சாதனைகளை நிகழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் அவர்.

இவ்வளவு திறமை இருந்தும். இலங்கை அணியின் துணைத் தலைவர் (கேப்டன்) பொறுப்பில்கூட நியமனம் செய்யப்பட்டதில்லை. காரணம் அவர் தமிழர்.

மாமனார் வீடு சென்னையில் இருந்தும் என்ன? உள் நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை - சென்னையில் மட்டும் உரிமை கொண்டாடி என்ன பயன்?

தமிழ் ஓவியா said...


மோடி முன்னிறுத்தப்படுவதன் முக்கிய நோக்கம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோதிடம் பார்த்து, நல்ல நாள், நல்ல நேரத்தைப் தேர்ந்தெடுத்து பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் பிஜேபிக்கான நிருவாகிகளின் பட்டியலை வெளியிட்டு விட்டார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கருத்துத் தானங்களை ஏடுகள் வாரி வழங்க ஆரம்பித்து விட்டன.

மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அரசல் புரசலாகக் கருத்துக்களை பிஜேபி வெளியிட்டு வந்ததுண்டு, அதில் மாறுபட்ட கருத்துகளும்கூட பிஜேபிக்குள் இருக்கத்தான் செய்தன.

இந்த நிலையில் மோடி பிஜேபியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமிக்கப்பட்டதால் கிட்டத் தட்ட அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற இடத்துக்குக் காய் நகர்த்தப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு வீரராக தம்மை முன்னி றுத்திக் கொண்டு கடைசியில், தானே ஊழலில் சிக்கிக் கொண்ட யோகக் குரு என்ற அழைக் கப்பட்டு வரும் ராம்தேவ் சபாஷ்! மோடிதான் பிரதமருக்கான சரியான வேட்பாளர் என்று கை தட்டி வரவேற்றுள்ளார்.

இதற்கிடையில் விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான பீரவீண் தொகாடியா குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்; வரும் 2015ஆம் ஆண்டுக்குள் குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களிலும் வி.எச்.பி. கிளைகள் தொடங்கப்பட்டு, அதற்குப்பிறகு இந்து மாநிலமாக குஜராத்தை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமன் கோயிலை பிரம்மாண்ட மாக கட்ட வேண்டும்; வருங் காலத்தில் ஒட்டு மொத்த உலகமே இந்துக்களைப் பின்பற்றப் போகிறது என்று தனது நம்பிக்கைகளைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதச் சார்பின்மை என்பது ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்படும்; ஹிந்து ராஜ்ஜியம் உருவாக்கப்படும் என்பதை மறைமுகமாக பிரகடனப்படுத்தி விட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஊழல் ஒழிப்பு வீரர் காந்திக்குல்லாய் அன்னா ஹசாரே காங்கிரசை எதிர்த்து ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இவற்றின்மூலம் அப்பட்டமான அடை யாளங்கள் அய்யப்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.

இதில் இன்னொரு தகவலும் முக்கியமானது - கவனிக்கத்தக்கது. பீகாரில் பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது நிதிஷ்குமாரை முதல்வராகக் கொண்ட அய்க்கிய ஜனதா தளம்.

மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர்தான் பிரதமருக்கான வேட் பாளராக வரவேண்டும் என்று நிதிஷ்குமார் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார்.
மோடி ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட இந்த நேரத்தில்கூட, அய்க்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் அழுத்தம் திருத்தமாக தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார். மதச் சார்பற்றவரே பிரதமராக வேண்டும் என்று அழுத்திக் கூறி இருக்கிறார்.

மோடி பிரதமருக்கான வேட்பாளராக பிஜேபி யால் அறிவிக்கப்படும்பொழுது மதச் சார் பின்மையா? ஹிந்து ராஜ்யமா? என்ற கேள்வி இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கும்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தின் - கொள்கையின் அருமை அப்பொழுதுதான் புரியப் போகிறது - பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 2: ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்


ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

சென்னை, ஏப். 2- மனவளர்ச்சி... மூளை வளர்ச்சி குறைபாடுகளை போல, ஒரு விதமான வளர்ச்சி குறைபாட்டுடன் (ஆட்டிசம் பாதிப்பு) குழந்தைகள் பிறக்கின் றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதி கரித்து கொண்டே வருகிறது.

ஆட்டிசம் பாதிப்பு குழந் தைகளுக்காக 2007ஆம் ஆண்டு அய்நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஆட்டிசம் பாதிப் புடன் குழந்தைகள் பிறப்பதற் கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியை ஆட்டிசம் விழிப் புணர்வு தினமாக அறிவித்தது.

இதுக்குறித்து ராயப்பேட்டை ஸ்கோப் மறுவாழ்வு மைய இயக்குநர் பா.சுகுமார், வி.கேன் ஆட்டிசம் பள்ளி இயக்குநர் கீதா ஆகியோர் கூறியதாவது:

ஆட்டிசம் ஒரு நோயல்ல; வளர்ச்சி குறைபாடுதான். இது பிறவியிலேயே வரக்கூடியது. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை, அதன் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்து ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கலாம். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மட்டும் 40, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன. இதேபோல தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டி சம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளை நடத்துகின்ற னர். ஆனால், அரசு மருத்துவ மனைகளில் தனியாக ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை பிரிவு என்பதே இல்லை. ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளையும் நடத்தவில்லை.

அதனால், அரசு மருத்துவ மனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அந்த பிரிவில், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டை நியமிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு என்று சிறப்பு பள்ளிகளை அரசு நடத்த வேண்டும். ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பராம ரித்து மற்றும் சிகிச்சை அளித் தால், அந்த குழந்தைகள் 4 ஆண்டு களுக்குள் சாதாரண குழந்தைகள் போல மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தை களை மாற்றுத்திறனாளிகள் பட் டியலில் சேர்த்து சிறப்பு அந் தஸ்து கொடுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசின் சலுகை கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருந்து, மாத் திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான மருந்து, மாத்திரை கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மாவட்டங் களில் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அறிகுறிகள் என்ன?

ஆட்டிசம் குழந்தைகள் துரு துருவென இருப்பார்கள். ஆனால், பேச மாட்டார்கள். காது நன்றாக கேட்கும். கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார் கள். தனியாகவே இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும்.

ஆட் டிசம் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கூர்மை அதிகம். அவர்களை முறையாக பராம ரித்து, சிகிச்சை அளித்தால் மிகப் பெரிய அளவில் சாதனை புரிவார் கள். உலக அளவில் சாதனை படைத்தவர்களில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.