கேரளக் கடற்கரைப் பகுதியில்
மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை இத்தாலியக்
கடற்படையினர் இருவர் சுட்டுக் கொன்றனர். (15.2.2012) நாடே கொந் தளித்தது.
அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு முறை
இத்தாலிக்குச் சென்று வருவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஒரு முறை
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக
இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு அளிப்ப தற்காக உச்சநீதிமன்றத்தால்
அனுமதிக் கப்பட்டனர். இரண்டாவது முறையாக அவர்கள் இருவரும் இத்தாலி சென்ற
நிலையில் மீண்டும் வாக்குறுதிப்படி இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். இத்
தாலி அரசும் அவர்கள் பக்கம் நிற்கிறது.
பிரச்சினை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்துள்ளது.
இந்தியாவுக்கான தூதர் உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில்தான் இத்தாலிய கப்பற்படை வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு மாறாக இத்தாலி நடந்து கொள்வதால் இத்தாலி யுடன் உள்ள தூதர் உறவு முறைகூட ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்குரல் கொடுக்கின்றன.
இந்தியாவுக்கான தூதர் உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில்தான் இத்தாலிய கப்பற்படை வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு மாறாக இத்தாலி நடந்து கொள்வதால் இத்தாலி யுடன் உள்ள தூதர் உறவு முறைகூட ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்குரல் கொடுக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு
நியாயமானதுதானே! இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் அதே வகையில்
தான் நாடாளுமன்றத்திலும் பதில் கூறியுள்ளார்.
நீதிமன்ற அனுமதியின்றி வெளியில் செல்லக் கூடாது என்று இந்தியாவில் உள்ள இத்தாலி தூதர் டேனியல் மன்சினி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இத்தாலி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், இத்தாலியுடனான அரசு முறையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்படும். நம்பிக்கையின் அடிப்படையில்தான் இரு தரப்பு உறவும் பலப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை முக்கியமான பிரச்சினை என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.
பிரதமரின் இந்தக் கருத்தும், அறி
விப்பும், எச்சரிக்கையும் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்து
களுக்கு இடம் இல்லை -_ இருக்கவும் முடியாது.
இதே அளவுகோல் தமிழக மீனவர்களை இலங்கையின்
கப்பற்படை படுகொலை செய்யும் பிரச்சினயில் காணாமற் போன மர்மம் என்ன என்பது
முக்கியமான கேள்வியாகும்.
கேரள மீனவர்கள் என்பதால் அவர்கள் இந்தியர்கள் -_ தமிழக மீனவர் கள் என்றால் அவர்கள் அந்நியர்களா?
கேரள மீனவர் படுகொலை செய்யப் பட்டனர்
என்றதும் இராணுவ அமைச்ச ராக இருக்கக் கூடிய கேரளத்துக்காரரான அந்தோணிகூட
துடியாய்த் துடிதுடிக் கிறாரே! அவசர அவசரமாக சட்ட நட வடிக்கைகள் இறக்கை
கட்டிக் கொண்டு பறக்கவில்லையா?
இந்தியாவுக்குள் ஏனிந்த இரட்டைப்
பார்வையும், இரட்டை அளவுகோல்களும் என்று தமிழர்கள் கேட்டால் குறுகிய
நோக்கம், - குறுகிய பார்வை என்றுகூட 22 காரட் தேசியவாதிகள் சொன்னாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தாலிக்- கப்பற்படையைச் சேர்ந்த
மாஸ்மிலியானோ லாட்டோரே, சல்வாட் டோரே சிரானே ஆகிய இருவரும் கேரள
மீனவர்களைச் சுட்டுக் கொன்றது குற்றம்தான்; கடற்கொள்ளைக்காரர்கள் என்று
கருதியதால் அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். (சுட்டதை ஒன்றும்
நியாயப்படுத்த முடியாது)
அதே நேரத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக்
கடற்படையினர் சுடுவது -_ கொலை செய்வது -_ தாக்குவது - _ சிறைக் குக் கொண்டு
செல்லுவது _- அங்கே சித்திரவதை செய்வது என்பது திட்டமிட்ட வகையில் அல்லவா
நடக்கின்றன?
இத்தாலியின் மீது வருகின்ற அந்த இயற்கை சீற்றம் _ தார்மீகக் கோபாக்னி இலங்கையின் மீது வெடிக்காதது ஏன்? ராஜபக்சே மீது வராதது ஏன்?
இரண்டு கேரள மீனவர்கள் சுடப்பட் டனர் என்பதற்காக நாடாளுமன்றமே கிடுகிடுக்கிறதே! எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழக மீன வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே -_ இந்திய நாடாளுமன்றத்தின் மீசை துடிக் காதது -_ ஏன்? ரத்தம் கொதிக்காதது _ ஏன்?
இரண்டு கேரள மீனவர்கள் சுடப்பட் டனர் என்பதற்காக நாடாளுமன்றமே கிடுகிடுக்கிறதே! எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழக மீன வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே -_ இந்திய நாடாளுமன்றத்தின் மீசை துடிக் காதது -_ ஏன்? ரத்தம் கொதிக்காதது _ ஏன்?
கேரள மீனவர்கள் இருவர் சுடப்பட் டனர்
என்கிற போது சூடாகக் கூடிய இந்தியாவின் இராணுவ அமைச்சர் அந்தோணி
800--_க்கும் மேற்பட்ட தமிழின மீனவர்களைப் பதறப் பதற பறவை களைச் சுடுவதுபோல
ஆத்திரம் தீர சுட்டுத் தீர்க்கிறார்களே அந்தோணியார் ஆத்திரப்படாதது _ -
ஏன்? இந்தக் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லப் போகிறார்களா? குறுகிய
பார்வை என்று குற்றஞ் சொல்லப் போகிறார்களா?
அப்படியாவது சொல்லட்டும் பார்க்கலாம். ஒரு
பார்ப்பனக் குடும்பம் இலங்கையில் சங்கடப்பட்டது என்றவுடன் அன்றைய
வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ், அந்தக் குடும்பத்தையே தான்
பயணம் செய்த விமானத்தில் ஏற்றிவந்ததெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?
ஏனிந்த இரட்டை அளவுகோல்? ஏனிந்த இரட்டைப் பார்வை? ஏனிந்த இரட்டை உணர்வு?
பிரான்சில் இரு சக்கர ஓட்டிகள் தலைக்கவசம்
அணிய வேண்டும் என்று சட்டம் போட்டால், பஞ்சாபியர்களுக்கு விதி விலக்கு
அளிக்க வேண்டும் (தலை முடியும், - பந்தும் இடையூறாக இருக்கு மாம்) என்று
அவர்கள் கூக்குரல் போடு வதால், இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்
ஆமாம், ஆமாம், சீக்கியர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்றும்
நேரில் சென்று கேட்டுக் கொண்டாரே _ அது எப்படி?
இன்னொரு நாட்டுச் சட்ட விதிகளில் இந்தியா தலையிடலாமா?
இந்தியாவில் இனவுணர்ச்சி என்பது தமிழர்களுக்கு மட்டும் இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமா?
தமிழர்களை, தமிழ்நாட்டை மற்றவர்கள் வஞ்சிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
ஈழத் தமிழர்களுக்காக 50 ஆயிரம் பேர்
கைதாகிறார்கள் என்றால் - அந்த வுணர்வை மனந்திறந்து வரவேற்பதில்லையே! -
அதனைச் செய்பவர்கள் டெசோ அமைப்பினர் என்கிற அழுக்காறு தமிழர்களாக இருக்கக்
கூடியவர்களுக்கே மென்னியை அடைக்கிறதே!
இந்தக் கேவலமான குணம் தமிழர்களிடையே
நிலவும் மட்டும் - 800 மீனவர்கள் என்ன? 8000 தமிழக மீனவர்களையும் குருவிகள்
போல சுட்டுத் தள்ள, சிங்களக் கடற்படை துப்பாக்கிகளைத் தயார் செய்து
கொண்டுதானிருக்கும்.
தமிழர்களைச் சுட்டுத் தாகம் தீர்க்க அந்தத்
துப்பாக்கிகளைக்கூட இந்தியாவே இலங்கைக் கடற்படைக்கு இனாமாக வாரி வழங்கிக்
கொண்டு தானிருக்கும்.
தமிழக மீனவர்களை எப்படிச் சுடுவது -_ எந்த
இடத்தில் சுடுவது என்கிற பயிற் சியையும் சிங்களக் கடற்படையினருக்கு இந்திய
அரசு இந்தியாவில் கொடுத்துக் கொண்டு தானிருக்கும்.
தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!
என்ற இரு முழக்கங்களைத் தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னது என்றைக்குத் தமிழனின் நெஞ்சில்
நேர்மையாகக் குடி கொள்ளுகிறதோ, அன்றைக்குத்தான் தமிழன் பிழைப்பான்; இல்லை
என்றால் நாதியற்ற இனம்தான் நானிலத்தில். எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஏனிந்த இரட்டை அளவுகோல்?
ஆப்பிரிக்கக் கண்டம் உகாண்டாவில் வணிகம் செய்ய சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை வெடித்த அந்தக் கணமே இந்திய அரசு துடிதுடித்தது.
பிரான்சு நாட்டின் தலைநகரில் வாழும்
சீக்கியர்கள் தலைக் கவசம் அணிய வேண்டும் (பிமீறீனீமீ) என்று ஆணை
பிறப்பிக்கப்பட்டபோது பிரான்சு அதிபரை நேரில் சந்தித்தவர் இந்தியாவின்
பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
என்று நேரிலேயே வேண்டுகோள் விடுத்தாரே _- அது எத்தகைய உணர்வு?
வியன்னாவில், சீக்கியர் கூட்டத்தில் நடந்த
துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, இந்தியாவில் பஞ்சாப் எரியத் தொடங்கியது.
ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்களில் போராட்டங்கள் தலைதூக்கின.
பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்குமாறு வேண்டு கோளுக்கு மேல் வேண்டுகோளாக
விட்டுக் கொண்டே இருந்தார்.
அப்பொழுது புதிதாக வெளியுறவுத் துறை
அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த எஸ்.எம். கிருஷ்ணா அவசர அவசரமாக
ஆஸ்திரியாவில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை
எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வியன்னாவில் ஒரே ஓருயிர்
பறிக்கப்பட்டது; 30 பேர் காயம் அடைந்தனர் அதற்கே இந்திய அரசு துடி
துடித்தது. இலங்கையிலே ஈழத் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொடூரமான
முறையிலே கொன்று குவிக்கப்பட்டனர்! இந்திய அரசு கண்டு கொண்டதா?
லெபனானில் இசுரேல் தாக்குதல் நடைபெற்றபோது
12 ஆயிரம் இந்தியர்கள் அங்கு வாழ்கிறார்கள் என்ற வுடன் இந்தியர்களை மீட்க
ஆறு போர்க் கப்பல்களை இந்தியா அனுப்பி வைக்கவில்லையா?
கப்பலில் வந்து சேர்ந்த அந்தக் கேரள
மக்களை பல்வேறு விமான நிலையங்களிலிருந்து விமானம் மூலம் அழைத்து
வரவில்லையா? (21.7.2006 செய்தி இது)
கேரள அரசுத்துறை அதிகாரிகள் அவசர அவசர மாகக் கூட்டப்பட்டு உடனடியாக இத்தகு செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. (20.7.2006).
கேரள மக்கள் மட்டும்தான் இந்தியர்கள்; தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?
கேரள மக்கள் மட்டும்தான் இந்தியர்கள்; தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?
ஏனிந்த இரட்டை அளவு கோலும் ஏற்ற இறக்கக்
கோணல் பார்வையும்? இதைக் கேட்டால் தமிழர்கள் பிரிவினைவாதிகளா?
20 ஆண்டுகள் தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பேன் என்ற கொலையாளி ராஜபக்சே
பிரேசிலில் ரியோடிஜெனிரோ நகரில் நடைபெற்ற
ரியோ பிளஸ் 20 அய்.நா. மாநாட்டில் உரையாற்றிய ராஜபக்சே தமிழக மீனவர்களை 20
ஆண்டுகள் சிறையிலடைப்பேன் என்றார் (2012 ஜூன்).
அம்மாநாட்டில் இவ்வள வுக்கும் பிரதமர்
டாக்டர் மன்மோகன்சிங் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆகியோர்
கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபரின் வெறி பிடித்த
பேச்சுக்கு எந்த விதப் பதிலையும் அளிக்கவில்லை. இந்தியத் தரப்பில்.
தமிழின மீனவர்கள் தானே அனுபவிக்கட்டும் என்று வாய் மூடி இருந்தனர் போலும்.
---------------------------- - கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 16-3-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
46 comments:
இலங்கை அரசின்மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென -அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா திருத்தம் கோர வேண்டும்!
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
இந்தக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்காவிட்டால் மத்திய அரசில் தி.மு.க. தொடர்வது கேள்விக் குறி!
திமுக தலைவர் கலைஞரின் இந்த அறிக்கையை எச்சரிக்கையாக மத்திய அரசு கருதி, செயல்படட்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசின்மீது சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்கத் தீர்மானத்தில் கொண்டு வருவதற்கு இந்திய அரசு முனைய வேண்டும்; இல்லையெனில் மத்திய அரசில் திமுக தொடர்வதில் அர்த்தமில்லை என்ற திமுக தலைவரின் அறிக்கையைச் சுட்டிக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து பல கருத்துகள் பரப்பப்படும் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வ தேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத் தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த அய்யப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில், இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட அறிக்கையினை தி.மு.க. தலைவர் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் வெளி யிட்டுள்ளார். (முரசொலி -16.3.2013).
தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் மிகவும் வேதனையுடனும் அதே நேரத்தில் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அய்க்கிய முற்போக்கு அரசு, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, இனப் படுகொலைக்கு காரணமான மனிதநேயமற்ற போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்; பல்லாயிரக்கணக்கான எம் தமிழர்களும், தமிழச்சிகளும், தமிழ்ப் பாலகர்களும், மிருகங்களை விடக் கேவலமாக சித்ரவதைக்கும், உயிரிழப்புக்கும் ஆளாகி யுள்ள அவலம் உலக வரலாற்றில் கறைபடிந்த அத்தியா யங்கள் என்பதை இன்றுதான் பற்பல உலக நாடுகளும் உணரத் தலைப்பட்டுள்ள நிலையில், தொப்புள் கொடி உறவுள்ள மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய அரசு, இலங்கை அரசினைக் காப்பாற்றிடத் துடிப்பதும், தமிழர்களின் உணர்வுகளைத் துச்சமென மதிப்பதும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.
எந்த ஒரு பொறுமைக்கும் எல்லை உண்டு
எந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துதான் பொங்கி எழுந் துள்ளது தி.மு.க.,
இத்தாலி நாட்டிடம் காட்டும் கண்டிப்பில் ஒரு சிறு துளியைக்கூட, இலங்கையின் இனப்படுகொலை அரசிடம் காட்டாமல், சர்வதேச சமூகம் காட்டும் பரிவைக்கூட இந்திய அரசு காட்டவில்லை என்றால், தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்று கருதுகிறதா?
தி.மு.க., உதவியின்றி மத்திய ஆட்சி உண்டா?
தி.மு.க.வின் உதவியின்றேல், மத்தியில் ஆட்சியை முதல் தடவையும் சரி, இரண்டாம் முறையும் சரி அடைந்திருக்க முடியுமா? அதுபற்றிக் கிஞ்சிற்றும் சிந்திக்காமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு, எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் அல்லவா இருக்கிறது!
அமெரிக்கத் தீர்மானத்திற்கு, சரியான திருத்தங் களைக் கொண்டு வந்து, போர்க் குற்றம் புரிந்த இனப் படுகொலை - இன அழிப்பு வேலை செய்த இலங்கை அரசுக்குத் தண்டனை பெற்றுத் தர அய்.நா. மனித உரிமை ஆணையம், மூலம் சுதந்திரமான சர்வதேச நடவடிக் கைகள் முக்கியமல்லவா!
LLRC என்பது என்ன வெறும் கண் துடைப்பு தானா? மற்ற எந்த நாட்டினையும்விட, இந்திய அரசுக்கு இருக்கும் உறவும், பொறுப்பும் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டதாயிற்றே!
வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல!
தி.மு.க., தலைவர் கலைஞர் அவர்களின் இந்த அறிக்கையை வெறும் பூச்சாண்டி அல்லது மிரட்டல் என்று கருதாது, சரியான தருணத்தில் விடப்பட்ட சரியான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் மத்திய அரசு.
இந்த சுவரெழுத்தைப் படித்து பாடம் பெறத் தவறினால், அரசியல் ரீதியாக கடும் விலை கொடுக்க வேண்டியி ருக்கும் என்பதை மத்தியில் ஆளுங் கட்சியான பெரியண்ணன் காங்கிரஸ் உணர வேண்டும்.
இனியும் தொடர்வது?
தி.மு.க. ஈழத் தமிழர்களுக்காக ஏற்கெனவே இரண்டு முறை ஆட்சியைத் தியாகம் செய்த இயக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போதே தாமரை இலைத் தண்ணீர் போல்தான் காங்கிரஸ் தி.மு.க. உறவு உள்ளது!
இந்நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து செய்யும் பல்வேறு அரசியல் நிலைப்பாட்டின் பழியை திமுக சுமந்து சுமந்து நிற்க முடியுமா? தேவையா?
மத்தியில் உள்ள அரசில் - அமைச்சரவையில் இனி மேலும் தொடருவது அர்த்தமற்றது என்ற வாக்கியத்திற்குப் பின்னே உள்ள வேதனைகளும், துயரங்களும், சங்கடங்களும் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டாமா?
மத்திய அரசு புத்திசாலித்தனமாகவும், பொறுப்புணர் வுடனும் எதிர்விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள அறிக்கையில் காணப்படும் ஆழத்தினையும், எச்சரிக்கையையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
அன்னையாரின் நினைவு போற்றி எஞ்சிய பணி முடிப்போம்!
தனது இளமை, வளமை, முதல் அனைத்தையும் இழந்து, தொண்டறத்தின் தூய உருவமாகி உயர்ந்துள்ள உன்னத புரட்சித்தாய் நம் அன்னையார் அவர்களது 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! (16.3.2013).
நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைப்பதற்காக, நம் அன்னையார் அவர்கள் பட்ட தொல்லை, துன்பம், வசவுகள், இழி மொழிகள் ஏராளம்! ஏராளம்!!
எதிர் நீச்சல் களத்தில் நின்று வென்று, தனக்கென வாழாது, தன் உழைப்பைத் தந்ததோடு நில்லாமல், தனது அத்தனைப் பொருளையும் பொதுத் தொண்டுக்குத் தந்து, ஒரு மாபெரும் பல்கலைக் கழகமே உருவாகும் அளவுக்கு, ஒரு அறக்கட்டளையை நிறுவி, அய்யா தந்தை பெரியாரைப் போலவே சுயநலத்தை சுட்டுப் பொசுக்கி, மானம் பாராத தொண்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நம் அன்னையார் தொண்டறத்தின் இமயமாய் உயர்ந்தவர்! அய்யாவின் பணி முடிக்க, நமக்கு அய்யா மறைவுக்குப்பின் தலைமை ஏற்று வழிகாட்டிய அன்னையாரின் நினைவு நாளான இன்று, உறுதியைப் புதுப்பித்து, லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி தொடருவோமாக!
மகளிருக்கு அன்னையார் மகத்தான கலங்கரை விளக்கன்றோ! வாழ்க அன்னையார்!
கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்
அன்னை மணியம்மையாருக்கு தாழ்த்தப்பட்ட மலைவாழ் இனத்துப் பணியாளர் கூட்டிணைவு வாழ்த்து!
தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகள் வாழச் செய்து, தம் தொண்டு அறத்தினால் பெருமை பெற்ற, தந்தை பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத்தை அய்யா காட்டிய வழியில் இம்மியும் பிசகாது நடை போடச் செய்த அன்னை மணியம்மையாரின் பெருமையை இப்போது தமிழ் மக்கள் பலரும் அறிந்து பாராட்டுகின்றனர்.
செட்யூல் கேஸ்ட், செட்டியூல் டிரைப்ஸ் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் எனும் அனைத்துத் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் பணியாளர் கூட்டிணைவு மகளிர் தினத்தை ஒட்டிச் சென்னை நகரில் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அச்சுவாரொட்டியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகளிர் நலனுக்கு உழைத்த மராத்திய மங்கை ஜோதிபா பூலே அம்மையார், தமிழகத்து மீனாம்பாள் சிவராஜ், உ.பி.யின் மாயாவதி ஆகியோரின் படத்துடன் தொண்டறத்தில் சிறந்தோங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் படத்தையும் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 10, 2013 அன்னை மணியம்மையாரின் 93ஆவது பிறந்த நாள். இந்நாளில் அன்னை மணியம்மையாரைத் திராவிட இயக்கத்தவர் மட்டுமல்லாமல், பிற மக்களும் உணர்ந்து நினைவு கூர்வது பெருமையாக இருக்கிறது.
உதைத்த காலுக்கு முத்தமிடலாமா?
புலிப் பாலில் வாய் கழுவியோர் போல புத்தியில் தோன்றியதையெல் லாம் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்; அறிக்கை வெளியிடுகிறார்கள். புலிக் குருளைகளுக்குப் பெயரிடுவதால் பெயரிட்டோர் புலி ஆகி விடுவ தில்லை. ஆண்டவர்கள் எல்லோரையும் வரலாறு பேசி விடுவதில்லை.
நமது நிரந்தர எதிரிகள் எப்போ தும் நம்மை நோக்கிக் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார்கள். எண்ணிப் பாருங்கள். வெற்றி நமக்குத்தான் வாய்த்திருக்கும்; நமது இயக்க வரலாறு அப்படித்தான் சொல்கிறது.
நமது சகோதர எதிரிகள் - தமிழர்கள் அவர்களால் நம்மைப் போல் செய்ய முடியாததை எண்ணி நம்மைக் குற்றஞ்சாற்றிக் கொண்டே இருப்பார் கள். இது அரசியல் பெருந்திணை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இருந் தாலும்,
இந்த அரசியல் பெருந்திணையர் டெசோ அமைப்பு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு மீண்டும் அதிகமாக நம்மைத் தாக்கத் தொடங் கினர். சூரியனைச் சுற்றி கருப்பு வட்டம் தோன்றியது; தற்காலிகமாக! நாம் நமது சகோதரர்களுக்கு பதில் சொல்லத்தான் வேண்டும்.
நாம் ஆட்சியில் இருந்தபோது செய்யவில்லை என்கிறார்கள்; நாம் செய்த சாதனைகளைச் சொல்லி பாராட்டுகிறவர்போல! முன்னமேயே இதைச் செய்திருக்கலாம். அதைச் செய்து இருக்கலாம் என்கிறார்கள். பதவி ஆசை, குடும்பப் பாசம் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு ஆசையும் குடும்பமும் இல்லாதது போல!
நாங்கள் இன மீட்சிக்காக எங்களுக்குத் தெரிந்ததை - சரி என்று பட்டதை பகிரங்கமாகச் சொல்லி விட்டுச் செய்கிறோம். மக்கள் எங்கள் பின்னே வருகிறார்கள். நீங்கள் எங்களுக்கு உதவ முன் வரவில்லை. உபத்திரவம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
நீங்கள் எங்களோடு வர முடியாத வர்கள். களைத்துப் போனவர்கள், பேசிப் பேசி ஓய்ந்து போனவர்கள். செல்லரித்த நோட்டுகள், செல்லாக் காசுகள் ஆகிப் போனவர்கள் - எரிச்சலின் உச்சத்திற்குப் போய்ப் புலம்புவானேன்? தொலைக்காட்சியில் குரல் கெட்டுக் கத்துவானேன்? புதிய தமிழ்த் தேசியத்தின் அப்ரன்டீ சுகள்! - நிழல் கனிந்த கனியாக இருப்பதாலா?
உருண்டுபோன அறுபது ஆண்டு களில் பல காட்சிகளைக் கண்டவர்கள் நாங்கள்! எதைத் தொட்டால் எது எழும்; விழும் என்று புரிந்தவர்கள் நாங்கள்! வீணை தடவி நல்லிசை எழுப்ப சுரமறிந்து இராகத்தை இசைப்பவர்கள் நாங்கள்!
அதனால்தான் டெசோவைப் புதுப்பித்தோம். தினமணி ஏடு ஈழ விடுதலையையும் டெசோவையும் சவப் பெட்டிகளாக கேலிச் சித்திரம் வரைந்தது. நம் எழுச்சி நமது எதிரி களுக்குச் சவப் பெட்டிகளாகத் தெரிகின்றன. சவப் பெட்டி மாநாடு கூட்டுமா? தீர்மானங்களை நிறைவேற் றுமா? இலண்டன் மாநாட்டுக்குப் போகுமா? நவநீதம் பிள்ளையைச் சந்திக்குமா? சாம்ராஜ்ஜியங்களின் சவக்குழிகள் நிரம்பிய டெல்லிப் பட்ட ணத்தில் கருத்தரங்கு நடத்தியி ருக்குமா? - தூதர்களின் சந்திப்புகள் நிகழ்ந்திருக்குமா இப்படி வேகமான பணிகள்! - இவற்றையெல்லாம் சவப்பெட்டி எப்படி செய்ய முடியும்?
அடுத்து டெசோ, பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. கடந்த மார்ச் 12ஆம் தேதி அது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்ரன்டீசுகள் அதிர்ச்சி அடைந் தார்கள் சீனியர்கள் சிலாகித்ததை வெளியில் கூறாமல் அதனை வேறுவித மாக கூறினார்கள். சரியாகச் சொல்வ தானால் தமிழ்நாடு இன்னமும் திமுகவின் கையில் தான் இருக்கிறது.
(1) ஆனால் ஒரு தமிழ் நாளேடு - கலங்கரை விளக்கத்தை முகப்பிலே போட்டு - வெல்க தமிழ் என அதன் கொள்கை முழக்கத்தை நாளும் ஒலிக்கும் ஏடு - பொது வேலை நிறுத்தத்திற்கு மறு நாள் போட்ட தலைப்பு என்ன?
டெசோ போராட்டத்தால் தமிழகத் தில் பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லை.
பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின - இது தலைப்பு!
ஆனால் உள்ளே ஓர் இடத்தில் நகரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன என வெளியாகி இருக்கிறது. இதன் பொருள் என்ன? டெசோவினர் செய்த மறியலில் 30,000 பேர் கலந்து கொண்டனர் என்றும் வெல்க தமிழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
2) தினமணி ஏடு, டெசோ வேலை நிறுத்தம்: ஸ்டாலின் உட்பட 30 ஆயிரம் பேர் கைது என்று தலைப்பு வெளியிட் டது. கடை அடைப்பு நடந்த ஊர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை - என்று எழுதியது.
3) தினமலர் ஏடு, பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன என மனசாட்சியை அடகு வைத்து செய்தி வெளியிட்டு இருந்தது.
Indian Express ஏடு, VL, ‘TESO Bandh Fails to hit normal life in Tamilnadu’ என்று தலைப்பிட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா ‘Partial response’ என்று தலைப்பில் சுட்டிக்காட்டி இருந்தது.
Hindu: ‘General strike eovkes mixed response in state’ என்று செய்தி வெளியிட்டது.
ஆனால் உண்மை நிலைகளை தொலைகாட்சிகளின் மூலம் அறிய முடிந்தது. மக்களும் முழுமையாக அறிந்து கொண்டனர். ஈழத் தமிழர் பிரச்சினையை ஜெ. அரசு உண்மையாக ஆதரிப்பதாய் இருந்தால் பேருந்துகளை இயக்கி இருக்காது. அரசுப் பேருந்து களின் இயக்கம் பொது வேலை நிறுத்தத் தின் தோற்றத்தை சற்றுக் குறைத்து காட்டியது. ஆனால் உண்மையில் டெசோ மாபெரும் வெற்றியை பொது வேலை நிறுத்தத்தினால் ஈட்டி இருக்கிறது.
ஆனந்தவிகடனும் குமுதமும் அங்கலாய்ப்பதால் தமிழுலகம் இருண்டு விடாது. அவை இன்று நேற்றா இப்பணி களை செய்து வருகின்றன? ஆக, டெசோ பொது வேலை நிறுத்தத்திலும் மாபெரும் வெற்றியை அடைந்துவிட்டது.
டாக்டர் முவவின் நாவல் ஒன்றில் வரும் பாத்திரமான திண்ணையை விட்டு இறங்காத சித்தாப்பாக்கள் இருமிக் கொண்டு தான் இருப்பார்கள். அவர் களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
@@@@
அய்.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். சிலர் அத்தீர்மானத் தால் பயன் இல்லை என்று கூறினாலும் இந்தியா திருத்தம் கொண்டு வரலாம் அல்லவா? அத்திருத்தம் என்னவாக இருக்க வேண்டும்; எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்று தலைவர் கலைஞர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாம் சிக்கெனப் பிடித் தோமே! பதவி ஆசை உள்ள நாங்கள் மாநிலங்களவையில், மக்களவையில் முழங்கினோமே! அந்த ஆசை இருந்தால் தான் உரிமை முழக்கம் எழுப்ப முடியும்.
திருச்சி சிவா, டி.எம். செல்வகணபதி, கவிஞர் கனிமொழி மாநிலங்கள் அவை யில் ஆற்றிய உரைகள் கொம்பூதி கின்னர ஒலியை எழுப்பியதே!
மக்களவையில் டி.ஆர். பாலுவும், டி.கே.எஸ். இளங்கோவனும், தொல். திருமாவளவனும், சங்கநாதம் எழுப் பினரே! இந்தியாவெங்கும் எங்கள் போர் நடைப்பாட்டு கேட்டதே!
ஆசை துன்பத்திற்குக் காரணம் என்கிற புத்தர் மொழி அறியாதவர்கள் அல்ல நாங்கள். ஆசை வாழ்க்கையை சுவைக்கும் தூண்டுகோல்! அதை அறத்தோடு அளவறிந்து பயன்படுத்தத் தெரிந்தவர்கள் நாங்கள்!
குடும்பப் பாசம் இருந்தால்தான் சமூக அக்கறையும் தேசிய உணர்வும் அதீத மாய் இருக்கும். அதைப் பட்டறிந்து பாட்டுகளாய் பாடியவர்கள் நாங்கள்!
மனிதர்கள் எவரும் அநாதைகள் இல்லை. மானுடம் தழைக்க வேண்டுமா னால் மானுடத்தைப் போற்ற வேண்டும் அல்லவா? நாம் தாய்மொழி உடைய வர்கள் - நாம் ஒரு பழம் பெரும் தேசிய இனத்தின் சொந்தக்காரர்கள் - நம் மினத்தை அழித்தொழித்து சர்வாதிகாரி யாய் காட்சியளிக்கும் ராஜபட்சேவை - இலங்கையை மத்திய அரசு பாதுகாப்பது ஏன்?
இந்திய ஒன்றியத்தின் ஓர் அங்கமாய் எங்கள் பழைய அடையாளங்களைத் தொலைத்துவிட்டு உங்களோடு நாங்கள் இருப்பதற்கு நீங்கள் மத்திய அரசு இரட்சகனாய் அல்லவா - இருக்க வேண்டும். மாறாக இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு எங்களை இம்சிப்பது ஏன்? எங்களை உதைத்த காலுக்கு அல்லவா நீங்கள் முத்தமிடுகிறீர்கள்? இது நியாயமா? என்றே இன்று டெசோ வினா எழுப்புகிறது. அதன் உறுப்பினர்கள் கேட்கிறார்கள்.
@@@@
தீப்பொறி ஜூவாலையாகி விட்டது. கல்லூரி மாணவர்கள் கொடியவன் ராஜபட்சேவை எதிர்த்துப் போர்க் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ்நாட்டின் கல்லூரிகள் எங்கும் போராட்டக் குரல்கள் - பட்டினிப் போராட்டங்கள் - சாலை மறியல்கள் நடக்கத் தொடங்கி விட்டன.
இத்தாலிப் பிரச்சினைக்கு உடன டியாகக் குரல் எழுப்பிய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கைப் பிரச்சினையில் மௌனத்தைக் கடைபிடிக்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் பதில்கள் காடையர்க்கு ஆதரவாய் இருக்கிறது. கலைஞர் சொன்னதைப் போல் அவர் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார். ஒரு எடுத்துக்காட்டைப் பாருங்கள். மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக் கிட்டு ஒரு தரகராக இந்தியா செயல்பட விரும்பவில்லை என்று நாடாளுமன் றத்தில் கூறுகிறார். நமக்கு அவரது ஆதரவு இல்லை. நாம் இந்தியாவில் இல்லை. நாம் மத்திய அரசால் அதிருப்தி உற்று இருக்கின்றோம்.
மார்ச் 15ஆம் தேதி மக்கள் அவையில் டி.ஆர்.பாலு மண்டையில் அடித்தது போல் மத்திய அரசைக் கேட்டார். 1965இல் நடந்த மொழிப் போராட்டத் தினால் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்று வரை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்கிற கருத் தில் எடுத்து வைத்து மாணவர்களின் போராட்டக் கருத்திற்கு செவி சாயுங் கள் என்று கேட்டுக் கொண்டார். அஇஅதிமுகவின் தம்பி துரையும் மாணவர்களின் போராட்டத்தை சுட்டிக் காட்டினார்.
இதே போல மாநிலங்கள் அவையில் திருச்சி சிவா மாணவர்களின் போராட் டத்தை எடுத்துரைத்து அவர்களின் வேண்டுகோளை அவையில் எடுத் துரைத்தார். மைத்ரேயன் அஇஅதிமுக 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரை நினைவூட்டினார். இரு அவைகளிலும் அஇஅதிமுகவினரின் ஆதரவு இதமாக இருந்தது. மார்ச் 15ஆம் தேதி மாலை தொலைக்காட்சி செய்தியில் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
டெசோவை இழிவாகப் பேசிய கனவான்களே! எங்கள் தீப்பொறிதான் மாணவர்களின் கரங்களில் உரிமைத் தீயாகச் சுடர் விடுகிறது. சவப்பெட்டி உரிமைத் தீயை உயிர்த் தீ ஆக்குமா?
அறிஞர் அண்ணாவிடத்திலே அவர் டெல்லியில் இருந்தபோது ஒரு காங்கிரஸ்காரர்,
சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள். பதறுகிறார்களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே, அதுவே தென்னாப் பிரிக்காவிலே ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள்? ஏன்? அங்கே வட நாட்டுக்காரன், சிலோனில் இருப்பவன் தென்னாட்டுக் காரன், அதுதான் வித்தியாசம் என்று கூறினார். இதனை அறிஞர் அண்ணா 24.6.1962 திராவிட நாடு இதழில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலை தான் இன்னமும் நீடிக்கிறது. ஆம்; அவர்கள் உதைத்த காலுக்கு முத்தமிடு கிறார்கள். நமது பொறுமையை சோதிக்கிறார்கள். 16-3-2013
காரணம்
வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)
18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் உண்டு! உண்டு!!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - கடும் எதிர்ப்புக் காரணமாக புதிதாக அறிமுகப் படுத்திட்ட மாநில மொழிகளின் உரிமைகளை வெளியில் தள்ளிய முடிவு கைவிடப்பட்டதாக - மத்திய இணை அமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளைக் கடந்து போர்க் குரலை எழுப்பினார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றிக்கும் உரியவர்கள்! மத்திய தேர்வாணையம் மாநில மொழிகளை வெளியில் தள்ளி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுதலாம் என்று எடுத்த முடிவு மேம்போக்கான ஒன்றல்ல; ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, இந்தி பேசா மாநிலங்களிலிருந்த அய்.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்கிற சதி திட்டம் அதற்குள் அடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் திரு. லாலு பிரசாத் அவர்கள் அந்தச் சதியைச் சுட்டிக் காட்டியும் பேசியுள்ளார்.
இதில் இன்னொரு நுணுக்கமான கண்ணிவெடி ஒன்றுள்ளது. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுத வேண்டும் (ஆரளவ) அதனை இந்த முறை நீக்கியதற்குக் காரணம் ஆங்கிலத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பல்ல. மாறாக வட மாநிலங்களில் இந்தி பேசுவோருக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் என்பது சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. இந்த முட்டுக்கட்டை இந்தி வாலாக்களுக்கு இருக்கக் கூடாது - 2000 மதிப்பெண்களையும் அவர்களின் தாய்மொழியான இந்தியிலேயே எழுதி, அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பமிட்டு விடலாம் என்பதே - புதிய அறிவிப்பில் உள்ள ஆழமான சதியாகும்.
நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவித்திருப்பது இப்போதைக்குத் தற்காலிகமா?
இந்தத் தொடரிலேயே உடனடியாக அதன் முழுத் தன்மையையும் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - நேற்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலும், கருத்துகளும் மிக மிக முக்கியமானவை.
சமூகநீதிக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடிய - தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலேயே, சமூகநீதிக்கு விரோதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - தமிழை வெளியே தள்ளி, கிராமப்புற மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் குழியை வெட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதே - இது எந்த வகையில் சரியானது - நியாயமானது?
கிட்டதட்ட ஒரே நேரத்தில் மத்திய, மாநில தேர்வாணையங்கள் இப்படி நடந்து கொண்டுள் ளனவே - இந்தச் சங்கிலிப் பிணைப்பின் பின்னணி என்ன?
மத்திய அரசின் புதிய முறையைக் குறைகூறி பிரதமருக்கு மடல் எழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர் தமிழ்நாட்டிலேயே இந்த அநீதி நடந்திருக் கிறதே யார் பொறுப்பு? அதற்கு என்ன பதில்? என்ன சமாதானம்?
இந்நேரம் புதிய திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இந்த நிலையில் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் 19ஆம் தேதி சென்னையிலும் திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவசியமாகி விட்டது.
மத்திய அரசு பின்வாங்கினாலும், மாநில அரசு சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்துள்ளதால் இதுவரை விலக்கிக் கொள்ளாததால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு வெற்றிகரமாக நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 16-3-2013
இலங்கை அரசின் வெண்டைக்காய் விளக்கம்!
ஜெனிவா, மார்ச் 16- சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், இலங்கை, தன் தரப்பு அறிக்கையை, நேற்று தாக்கல் செய்தது. "நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் பலவற்றை, செயல்படுத்த முடிய வில்லை' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில், 2009இல், ராணுவத் துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதிக் கட்ட போர் நடந் தது. இதில், ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்தினரிடம் சரண டைந்தனர்.
சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப் பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட வர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக் கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக் கத் தவறி விட்டதாகக் கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வ தேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22ஆவது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது.
"இலங்கையில், நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், கடந்த வாரம், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீது, வரும் 21ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது.இந்த தீர்மானம் தொடர் பாக, தற்போது, மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஆய்வறிக்கையை, அந்நாட்டு அமைச்சர் மகிந்த சமரசிங்கே, ஜெனிவாவில் நேற்று தாக்கல் செய்தார். அவர் தமது அறிக்கையில் கூறியதாவது: நல்லிணக்க ஆணைக் குழுவின், 91 பரிந்துரைகளை இலங்கை அரசால் செயல்படுத்த இயலவில்லை. போருக்குப் பின், 3 லட்சம் அப்பாவி மக்கள் மீட்கப்பட் டுள்ளனர். தலைமை நீதிபதி ஷிராணி நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை தான்.தனி நாடு அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள், சிறுபான்மை யினரை கொன்றனர். எனவே தான், இலங்கை அரசு அவர்களுக்கு எதி ரான தாக்குதலை மேற்கொண்டது. இவ்வாறு மகிந்தா சமரசிங்கே கூறினார்.
ஒலி முழக்கங்கள்
1. வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!
2. தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
மாநிலத் தேர்வு ஆணையம்
மாநிலத் தேர்வு ஆணையம்
தாய்மொழி தமிழை
தாய்மொழி தமிழை
புறக்கணிக்கும், புறக்கணிக்கும்
புதிய திட்டத்தை, புதிய திட்டத்தை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
3. தந்தை பெரியார் பிறந்த தந்தை பெரியார் பிறந்த
தமிழ் மண்ணிலே, தமிழ் மண்ணிலே
சமூக நீதிக்கு, சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக் குழியா?
4. தாழ்த்தப்பட்ட மக்களை
தாழ்த்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பழிவாங்கும் - பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
5. கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
பழிவாங்கும், பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
6. வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
மத்திய அரசு மத்திய அரசு
வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
தமிழக அரசே, தமிழக அரசே!
தூங்குவது ஏன்? தூங்குவது ஏன்?
7. போராடுவோம் போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை வெற்றிக்கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்!
8. வென்றெடுப்போம் - வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
ஆசிரியர் வீரமணி தலைமையிலே
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
சமூக நீதியை, சமூக நீதியை
வென்றெடுப்போம், வென்றெடுப்போம்!
9. வாழ்க வாழ்க வாழ்கவே
திராவிடர் கழகம் வாழ்கவே
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
10. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!
- திராவிடர் கழகம்
(18, 19.3.2013இல் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக)
தினமலர் இணையதளம்மீது திமுக புகார்
சென்னை, மார்ச் 16- அவதூறு போஸ்டர் வெளியிட்ட தினமலர் இணையதளம் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என காவல்துறை ஆணையர் அலுவலகத் தில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ புகார் கொடுத் தார். தென் சென்னை மாவட்ட திமுக செயலா ளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் வருமாறு: இலங்கை தமிழர் பிரச்சினையில், திமுக இடம் பெற்ற டெசோ அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்த போராட்டங் கள் மூலம் டெசோ இயக்கத்துக்கு தமிழக மக்களின் ஆதரவு பெரு மளவில் பெருகி வரு கிறது. இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி தின மலர் இணைய தளத்தில் மக்களிடையே திமுக வுக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் நச்சு தன்மையோடு ஒரு போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. அதில், இலங்கை தமி ழர்களுக்கு நான்கே நாள்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞ ருக்கு பாராட்டு. வாழ்க தலைவர் கலைஞர் தென் சென்னை மாவட்ட திமுக என்று குறிப்பிடப் பட்டுள்ளது. திட்ட மிட்டு அவதூறு பரப் பும் செயலில் அந்த இணைய தளம் ஈடுபட் டுள்ளது. இந்த போஸ் டரை தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் போடவில்லை. அப்படி இருக்கையில் மக்களை குழப்புகிற காரியத்தை செய்து தென் சென்னை மாவட்ட திமுகவுக்கும் இதன் மூலம் டெசோ இயக்கத்துக்கும் களங் கம் ஏற்படுத்த முயலு கிறார்கள். ஆகவே, அவதூறாக வந்துள்ள அந்த போஸ் டர் படத்தை உடனடி யாக இணைய தளத்தில் இருந்து நீக்க வேண்டும். போலியாக போஸ்டர் போட்டு மக்களை குழப் பும் தினமலர் இணைய தளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள் ளது. காவல்துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா புகாரை பெற் றுக் கொண்டு நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர், வெளியே வந்த ஜெ.அன்பழகன் கூறுகையில், ஈழத் தமிழர் களுக்காக திமுகவும் டெசோ அமைப்பும் தொடர்ந்து போராடு கிறது. இதை களங்கப் படுத்தும் வகையில் திட்ட மிட்டு சிலர் செயல்படு கின்றனர். அவதூறு போஸ்டர் விவகாரம் குறித்து ஆணையர் அலு வலகத்தில் புகார் அளித் துள்ளோம். சம்பந்தப் பட்ட தினமலர் இணைய தளம் மீது மான இழப் பீடு வழக்கு தொடர உள்ளோம் என்றார்
காங்கிரசில் இருக்க உரிமை உண்டா?
சுயராஜ்யக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களும், ஜஸ்டிஸ் கட்சி, மிதவாத கட்சி, தேசியக் கட்சி ஆகியவை களைச் சேர்ந்தவர்களும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களும், சுயராஜ்யக் கட்சி, பிராமணக் கட்சி என்று முடிவு செய்து கொண்டிருக்கிறவர்களும், பழைய ஒத்துழையாமைத் தத்துவத்திலேயே நம்பிக்கை இருக்கிறவர்களும், சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாரை ஒடுக்க வந்த கட்சியென்று நினைத்து சுயராஜ்யக் கட்சியை பகிஷ்கரிக்கவோ அதை ஒழிக்கவோ பிரச்சாரம் செய்ய வேண்டு மென்கிறவர்களும், நிர்மாணத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் காங்கிரஸில் இருக்கலாமா? என்றும் இவர்களில் யாரை யாவது காங்கிரஸை விட்டுப் போகச் சொல்ல யாருக்காவது உரிமை உண்டா? என்றும் இன்னும் பலர் பலவிதமாக நம்மை நேரிலும், எழுத்து மூலமாகவும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள். இந்தியா நீதியும் அமைதி யுமான வழிகளில் சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்ளுபவர் களான எல்லோரும் காங்கிரஸிலிருக்க பாத்தியமுடைய வர்கள். அதின் திட்டங்களில் அவநம்பிக்கையும் அபிப்பிராய பேதமும், எதிர்ப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதினாலேயே காங்கிரஸை விட்டுப் போய்விட வேண்டும் என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை. உதாரணமாக, கயா காங்கிரஸ் தீர்மானத்திற்கு விரோதமாய் பிரச்சாரம் செய்த ஸ்ரீமான் தாஸ் - நேரு கோஷ்டியாரும் தமிழ்நாட்டில் டில்லி காக்கிநாடா காங்கிரஸுக்கு விரோதமாய்ப் பிரச்சாரம் செய்த ஸ்ரீமான்கள் சி. ராஜகோ பாலாச்சாரியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன் முதலியோரின் அபிப்ராயம் கொண்ட கோஷ்டியாரும் காங்கிரஸிலிருந்து கொண்டே தங்கள் பிரச்சாரத்தைச் செய்து வந்திருக்கிறார்கள் என்பதையும், இனியும் தங்களுக்கு இஷ்டமில்லாத விஷயங்களில் செய்து கொண்டுமிருக்கிறார்கள் என்பதை யும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். - குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.02.1926
பிரச்சாரக் கூட்டங்களில் குழப்பம்
தற்காலம் சுயராஜ்யக் கட்சிப் பிரச்சாரத்திற்காக ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், கலியாணசுந்தர முதலியார் முதலியோர் ஆங்காங்கு செல்லுவதும் சட்டசபை அபேட்சகர்களைத் தங்கள் கட்சிக்கு இழுப்பதுமான பிரச்சாரங் கள் நடந்து வருவதைப் பத்திரிகை வாயிலாக அறிகிறோம். அதோடு கூடவே ஒவ்வொரு கூட்டங்களிலும் குழப்பங்களும் கூச்சல்களும் நடப்பதும் பார்க்கிறோம். உதாரணமாக, மதுரையில் மீட்டிங்கு நடக்கவிடாமற் செய்ததும் கும்பகோணத்தில் போலீஸ் உதவியினால் தலைவர்கள் என்போர் வீடு போய்ச் சேர்ந்ததும், காஞ்சீபுரத்தில் கேள்விகளும், குழப்பங்களும் நடந்ததும் பத்திரிகைகள் மூலமாகவும் நிருபர்கள் மூலமாகவும் தெரிய வருகிறது. இம்மாதிரியான காரியங்களை நாம் மனப்பூர்த்தியாக வெறுக்கிறோம். பிரசாரகர்கள் என்ன கருத்தோடு வந்த போதிலும் அவர்கள் சொல்லுவது முழுமையும் பொறுமையாய்க் கேட்டுவிட்டு மறுப்பு ஏதாவது இருந்தால் பேசுவதற்கு அவகாசம் கேட்க வேண்டியது, அக்கூட்டத்தார் அதை மறுப் பார்களானால் பேசாமலிருந்து விட்டு அடுத்தநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி தமது அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டு மேயல்லாமல், குழப்பம் செய்வதோ, பேச முடியாமற் தடுப்பதோ போலீஸ் தயவைக் கொண்டு வீடு போகச் செய்வதோ மிகவும் இழிவான காரியமென்றே சொல்லுவோம்.
- குடிஅரசு - செய்தி விளக்கம் - 14.2.1926
பேடிப் போர்
நமது நாட்டில் பிராமணரல்லாதாருக்கு விரோத மாய் ஏற்பட்டிருக்கும் பல பத்திரிகைகளின் தலை யெழுத்து உண்மையை எழுதி வீரப்போர் நடத்த யோக்கியதையின்றி பொய்யை எழுதி பேடிப் போர் நடத்தும்படியாக ஏற்பட்டுப் போய்விட்டது. உதாரண மாக, வட ஆற்காடு சட்டசபை உப தேர்தலைப் பற்றி ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடுவுக்கு விரோத மாகவும், ஸ்ரீமான் பத்மநாப முதலியாருக்கு அனுகூல மாகவும் நாம் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், அதற்குக் காரணம் முன்னவர் சுயராஜ்யக் கட்சியா ரென்றும் பின்னவர் ஜஸ்டிஸ் கட்சியாரென்றும் சொல்லிக் கொள்ளுவதுதானென்றும் எழுதியிருக் கின்றன. இப்படியே இன்னும் அநேக பொய்யான விஷயங்களை எழுதியும், மெய்யான விஷயங்களை மறைத்தும் எழுதுவதைத் தமது தொழிலாகக் கொண்டிருக்கின்றன. சட்டசபைத் தத்துவத்தில், ஸ்ரீமான்கள் வெங்கிட்டரங்கம் நாயுடுவுக்கும் பத்மநாப முதலியாருக்கும் ஒரு வித்தியாசத்தையும் கற்பிக்க இடமிருப்பதாக நாம் கருதவில்லை. ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடு சட்டசபைக்குச் செல்வதி னால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமென்றோ, ஸ்ரீமான் பத்மநாப முதலியார் சட்டசபைக்குச் செல்லுவதில் பெரிய நன்மை விளைந்துவிடுமென்றோ நாம் கருதவில்லை.
இதுவரையிலும் இதற்காக ஒருவருக்க நுகூலமாகவோ மற்றொருவருக்குப் பிரதியனுகூலம் செய்யவோ நாம் எண்ணவுமில்லை. அப்படி அனுகூலமாகவும் பிரதியனுகூலமாகவும் இவர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியது இதுசமயம் அவசியமுமில்லை என்பதே நமது முடிவு. அவசிய மென்று கருதினால் கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி பயந்து கொண்டிருக்கப் போவது மில்லை. ஸ்ரீமான் நாயுடு அவர்களை நமக்கு 6, 7 வருஷங்களாகத் தெரியும். அவர் எவ்வளவுதான் பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தாலும், அவருடைய அந்தரங்கமானது பிராமணரல்லாதார் விஷயத்தில் அனுதாபமாகவேதானிருப்பதை அறிந்திருக்கிறோம்.
இவ்வறிவுக்கு மாறுதல் ஏற்படுகிற காலத்தில் நமது கடமை என்ன வென்பது நமக்குத் தெரியும். ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி நல்லவரென்றும், பரோபகார உழைப்பில் கொஞ்ச காலமாக ஈடுபட்டவரென்றும் கேள்விப்பட்டதே யல்லாமல் நேரில் பார்த்ததே இல்லை. அல்லாமலும் ஸ்ரீமான் முதலியாருக்கு விரோ தமாயும், ஸ்ரீமான் நா யுடுவுக்கு அனுகூல மாகவும் சமீபத்தில் செய்யப்படுகிற தேர்தல் பிரச்சாரங் களிலும், பிரசாரகர்கள் ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி கண்ணியமாகவே பேசி வருவதாகவும் பத்திரிகைகளில் பார்க்கிறோம். ஆதலால் இவ்விருவர்களில் இதுசமயம் உயர்வு தாழ்வு காண முடியவில்லை.
இப்படியிருக்க பிராமணப் பத்திரிகைகளும், பிராமண ஆதரவு பெற்ற பத்திரிகைகளும் இம்மாதிரியான பொய்களைப் பரப்பிவிடுவது பலனளிக் காதென்பதையும் இப்படிப்பட்ட காரியங்களினால் அவைகளின் யோக்கியதை இன்னும் அதிகமாக தாழ்த்தப்படு மென்பதையும் குறிப்பிடுகிறோம். - குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.02.1926
காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்?
விஞ்ஞானிகள் தகவல் சென்னை, மார்ச் 16- காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்பெல்லாம் பெரும் பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப் படும் பழைய சோறுதான். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்து விடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு. கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.
இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன் பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:-
பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி-6, பி-12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன.
கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரி யாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக் கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப் பொலிவுடனும் இருக்கும். மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள். பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத் தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன. எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்வது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவு களுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.
இலங்கை - எதிரியா? நண்பனா?
- முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பிச்.டி
அண்மையில் நாடாளுமன்ற மேலவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை நம்முடைய நட்பு நாடு எதிரி நாடு அல்ல என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை உறுப்பினர்கள் கொதிப் படைந்து இலங்கை எதிரி நாடுதான் என்பதை உறுதிப்படுத்திப் பேசி யிருக்கிறார்கள். இலங்கை - நண் பனா? எதிரியா? என்பது சிலபேருக் குக் குழப்பமாக இருக்கிறது. ஆளும் கட்சியும் பார்ப்பன அதிகார மய்யமும் இலங்கையை நண்பனா கவே கருதிக் கொண்டிருக்கின்றன. இலங்கையை நண்பன் என்று சொல் வது அதன் மீதுள்ள பாசத்தினால் என்பதை விடத் தமிழர்கள் மீது கொண்டுளள வெறுப்பினால்தான் டெல்லி அரசு இந்தக்கொடூரமான நிலைப்பாட்டை மேற்கொண் டிருக்கிறது.
புரட்சிக் கவிஞர் பாடியதைப் போல நற்றமிழ் என்பது டில்லிக்கு ஆகாது. நமக்கு நினைவு தெரிந்த வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே டில்லி மேற் கொண்டு வந்துள்ளது. இடையில் இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் மட்டும் தமிழ் ஈழ மக்களுக்குச் சார்பான நிலை இருந்தது.
நெடுங்காலமாகத் தமிழ் இனம் வஞ்சிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றது. நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. தமிழகத்தின் நீர் ஆதா ரங்கள் அண்டை மாநிலங்களால் அழிக்கப்படும் நிலையை மய்ய அரசு தடுக்கவில்லை. இத்தகைய காரணங் களினால் தான் அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று சொன்னார். இன்றும் அதே நிலை, அதைவிட இழிந்த நிலையைத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1950களில் கோவாவை இந்தி யாவோடு இணைப்பதற்கு பண்டித நேரு எடுத்துக் கொண்ட அமைதி யான மென்மையான நடவடிக்கைகள் பயன் தரவில்லை. இந்தியப்படை கோவாவை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கை எடுத்து கோவாவை இந்தியவோடு இணைத்தார் நேரு. அப்போது போர்ச்சுகல் ஆளுகையின் கீழ் கோவா டையூ, டாமன் ஆகிய பகுதிகள் இருந்தன. கோவாப் பகுதி களை இந்தியாவுடன் இணைப்ப தற்கு நேரு ராணுவ நடவடிக்கை எடுத்தபோது இலங்கையின் நிலைப் பாடு என்ன?
போர்ச்சுகல் அரசின் வேண்டு கோளுக்கு இணங்கி அவற்றின் போர்க்கப்பல்களும், விமானங்களும் கொழும்பில் நிறுத்தப்படுவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அங்கிருந்து கோவாவை முற்றுகை யிட்டுள்ள இந்தியப் போர்க் கப்பல்களைத் தாக்குவதற்கும் இலங்கையின் சிங்கள அரசு அனுமதி கொடுத்ததா இல்லையா? (ஆனால் போர்ச்சுகல் கப்பல்கள் கொழும்பு வந்தடைவதற்கு முன்னதாகவே கோவா இந்தியாவோடு இணைக்கப் பட்டுவிட்டது). இந்தியாவோடு போர் தொடுக்க வருகின்ற ஒரு நாட்டின் கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கவும் தளம் அமைத்துக் கொள்ளவும் அனுமதியளித்த இலங்கை இந்தி யாவின் நண்பனா?
1962-இல் இந்தியாவுக்கும், சீனா வுக்கும் நடந்த போரின்போது இலங் கையின் நிலைப்பாடு என்ன? கோவா விடுதலைப்போரின் போது இலங்கை இந்தியாவின் மீது காட்டிய பகை உணர்ச்சி, சீனப்போரின் போதும் வெளிப்பட்டது. வெளிநாடுகளில் சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியா விற்கு எதிராகவும் கொள்கைப் பரப்புரையை இலங்கை மேற் கொண்டது. அய்.நா.அவையிலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகப் பேசியதே! அந்தப்பழைய நட்பின் அடிப்படையிலேயே இலங்கையின் வடக்கு - கிழக்குத் தமிழ் ஈழப்பகுதி களைச் சீனாவிற்கு இலங்கை இப் போது தாரை வார்த்துக் கொடுத் திருக்கிறது! இப்படிப்பட்ட இலங்கை இந்தியாவின் நண்பனா?
1972--_73-இல் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை யார் பக்கம் நின்றது? பாகிஸ்தான் விமானங்களும், போர்க்கப்பல்களும் கிழக்குப் பாகிஸ்தான் செல்வதற்குக் கொழும்புத் துறைமுகத்தையும், விமான நிலையங்களையும் பயன் படுத்திக் கொண்டன; எரிபொருள் நிரப்பிக் கொண்டன. இறுதியில் இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வையால் மத அடிப்படையில் பிரிந்த நாட்டை மொழி அடிப்படையில் பிரித்து பங்களா தேஷ் என்று ஒரு தனிநாடு உருவாக்கப்பட்டது. இலங்கை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்துள்ளது. இதனை நன்கு மனத்தில் கொண்ட இந்திராகாந்தி அம்மை யார் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.
திரிகோணமலையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைக்க இலங்கை அனுமதி கொடுத்தது. அதுவரையில் அமைதியோடிருந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கடுமை யான மொழிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார். விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று இந்திராகாந்தி அம்மையார் கூறி யவுடன் திரிகோணமலையிலிருந்து அமெரிக்க ராணுவத்தளம் உடனடி யாக அகற்றப்பட்டது. இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவிற்குப் பதிலாகச் சீனா திரிகோணமலையில் இருக்கிறது. திரிகோணமலை எவன் கையில் இருந்தாலும் அது இந்தி யாவின் பாதுபாப்பிற்கு ஏற்றதல்ல என்பதை இந்திரா அம்மையார் நன்கு உணர்ந்திருந்தார். இன்றைய டில்லி ஆட்சியாளர்கள் என்ன கருது கிறார்கள்? திரிகோணமலையிலிருந்து யார் தாக்குதல் தொடுத்தாலும் சாகப்போகிறவன் தமிழ் நாட்டுக் காரன் தானே! சாகட்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை நிறுத்து இல்லையேல் திரும்ப அடிவிழும் என்று சொல்வதற்கு இந்திராகாந்தி அம்மையார் இன்றில்லையே!
இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார் இந் திரா அம்மையார். இந்திராகாந்தியை மடக்குவதற்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா எவ்வளவோ முயன்று பார்த்தார். நாம் இருவரும் ஒரே இனத்தைச் (ஆரியர்) சேர்ந் தவர்கள்; என் மூக்கும் உங்கள் மூக்கும் அமைப்பில் ஒன்று போலவே இருக்கின்றன பார்த்தீர்களா! என்றெல்லாம் அன்பொழுகப் பேசிப்பார்த்தார். இந்திராகாந்தி அவரை நம்பவில்லை.
இலங்கையில் தமிழீழத் தாயகம் கேட்டுப் போராடி வந்தவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக் கொண்டபோது இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலி களின் இயக்கத்தலைவர் தம்பி பிர பாகரனை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவி களையெல்லாம் செய்தார். ஜெய வர்த்தனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரத மரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, நட்பு நாடான இலங்கைக்குள் அமைதிப்படை அனுப்பப்பட்டது. இந்திய விமா னங்கள் தமிழீழப் பகுதியில் தாழ் வாகப் பறந்து யாரும் கேட்காமலேயே உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுவந்தன. செய்தியாளர் கள் இதுபற்றிப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், வேறு ஒரு நாட்டுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழையலாமா? என்று கேட்டதற்கு ‘It is a lesson to Jeywardane’ என்று பதில் சொன் னார். இதற்குப் பெயர் நட்பு நாடு!
வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மார்க்கம் பற்றிய பல அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அந்த அறிவுக் கருவூலத்தை ஆரியர் கள் நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள்.
உலகப்போர் நடந்தபோது செர்மானிய விமானங்கள் லண்டன் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்கின. ஓர் இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் அறிவுக் கருவூ லத்தை அழித்துவிட்டால் போதுமே.
லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தைச் சிங்களப் படையினர் நெருப்பிட்டுச் சாம்ப லாக்கி விட்டார்கள்! தான் போற்றி வளர்த்த நூலகம் எரிவதைப் பார்த்த ஒரு பாதிரியார் நெஞ்சு வெடித்து நூலகத்தின் முன்பாக இறந்து போன தும் அவரைத் தூக்கி எரியும் நூலகத் திற்குள் சிங்களப் படையினர் வீசி விட்டுக் கைகொட்டிச் சிரிக்க வில்லையா?
லட்சக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப் பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காத டில்லி ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நண்பர்களா?
இலங்கையை இன்னும் நட்பு நாடெனக்கருதுவோரைத் தமிழினத் தின் நண்பர்களாகக் கருதுவோரை வஞ்ச நெஞ்சம் படைத்த முட்டாள் கள் என்போம்!
ஆதலின் இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இதே நிலைதான் இருந்தது. எனவே இலங்கையை நட்பு நாடென்று உரிமை பாராட்டுவோர் - இனப்படுகொலை நடத்திய நாட்டோடு நல்லுறவு வேண்டுவோர் உலகமெங்கும் பரந்து கிடக்கும் பத்துக்கோடித்தமிழர்களின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என்பது உறுதி.
இறுதியாக - ஒரு நட்பு நாட்டின் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கைக் குச் சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படுகிறது. அப்போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தன் துப்பாக்கிக் கட் டையால் ராஜீவ் காந்தியின் உயிருக் குக் குறிவைத்துத் தாக்க முற்படு கிறான். ராஜீவ் தடுமாறிச் சமாளித்துக் கொள்கிறார் இக்காட்சி உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் வெளியாகியது. ராஜீவைத் தாக்கிய அந்த ராணுவ வீரனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டது. பின்னாளில் அவன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை இங்கிருந்தல்லவா தொடங்கப் பெற வேண்டும்). இதனால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது ஒரு கேலிக்கூத்து! அடி முட்டாள்தனம்! ஒரு நட்பு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய முயன்றவனுக்குப் பதவி உயர்வும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கிறது என்றால் அந்த நாட்டை நட்பு நாடென்று சொல் வதற்கு டெல்லி வெட்கப்பட வேண் டாமா? அவர்களுக்கு அதுவெல்லாம் தெரியாது. சுப்பிரமணியசாமியைப் போன்ற புரோக்கர்கள் இருக்கும்வரை ராஜபக்சேவைப் போன்ற கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சி தானே! ஓர் அயோக்கியன் இன்னோர் அயோக்கியனை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடி விட்டு டெல்லி திரும்பியிருக்கிறான். உலகம் முழுக்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நேரத்தில் டெல்லியும், சு.சாமியும் ராஜபக் சேவோடு கை குலுக்குவது எவ்வளவு இழிந்த செயல்!
ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஆன்லைன் ஷாப்பிங் தான் இப்போதைய ட்ரெண்ட். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் நமக்கு விற்கின்றன. நிறைய தளங்கள், நிறைய பொருட்கள். எதை நம்புவது? எப்படி வாங்குவது போன்ற விசயங்களை இன்று பார்ப்போம்.
1. Return Policy
ஆன்லைன் மூலம் வாங்கும் போது இது மிக அவசியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாங்கிய பொருள் வீண் தான்.
இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிதல் அவசியம். பெரும்பாலும் பொருள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்கிய அன்றே அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கும். அதே சமயம் நீங்கள் அதை சேதாரப் படுத்தி இருக்க கூடாது.
2. Shipping Cost and Time
இது மிக மிக அவசியமாக கவனிக்க வேண்டிய விசயம். காரணம் பெரும்பாலான தளங்கள் இப்போது ஒரு டிவி வாங்கினால் கூட இலவசமாக Ship செய்கிறார்கள். இந்த சமயத்தில் shipping க்கு என்று தனியாக பணம் கட்ட சொன்னால் அந்த தளங்களை தவிர்த்தல் நலம்.
இதில் eBay மட்டும் விதிவிலக்கு, காரணம் அது ஒரு சந்தை. பொருட்களை விற்பது பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனவே விலை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, Shipping க்கு கட்டணம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது.
பல நேரங்களில் சிறு நகரங்கள். கிராமங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தளம் பொருளை நேரடியாக அனுப்ப முடியாத போது அதை Registered Post வாயிலாக அனுப்புகிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான தளங்கள் இதற்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.
அடுத்து Shipping Time. அதிகபட்சம் 15 நாட்கள் தான் எந்த ஒரு பொருளுக்கும் Shipping Time, அதற்கு மேல் காத்திருக்க சொன்னால் நீங்கள் வேறு தளத்தில் சென்று வாங்கலாம். பெரு நகரங்கள் என்றால் 4-5 நாட்களுக்குள் பொருட்கள் கிடைத்து விடும்.
உங்களுக்கு வரும் மின்னஞ்சல் உறுதிச் செய்தியில் Expected Delivery Time என்பதை விட முன்னதாகவே பொருள் உங்களுக்கு வந்து சேர வேண்டும், இல்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை Tracking மூலம் செக் செய்யும். இன்னும் Order Ship செய்யப்படவே இல்லை என்றால் Cancel செய்து விட்டு நேரடியாக கடையில் சென்று வாங்கி விடுங்கள்.
3. Cash Back
ஒரு பொருளை ஆர்டர் செய்த உடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்க தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கான்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனியுங்கள்.
அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.
4. Product Quality & Customer Review
பெரும்பாலான தளங்கள் உண்மையான நிறுவன பொருட்களையே வழங்குகின்றன. எனவே பிரபலமான தளத்தில் வாங்கும் போது போலி பொருளோ என்ற பயம் உங்களுக்கு தேவை இல்லை.
பல தளங்கள் உற்பத்தியாளர் வாரண்டி (Manufacturer Warranty) உடன் தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால் அந்த தளம் Manufacturer Warranty தருகிறதா என்று கவனித்து வாங்குங்கள். சில தளங்களில் Seller Warranty என்று இருக்கும், இதனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பொருளை விற்றவரிடம் தான் செல்ல வேண்டி இருக்கும். eBay தளத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.
குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருள் எந்த அளவிற்கு உபயோகமானது, அது எப்படிபட்டது போன்றவற்றை அறிய பல தளங்கள் Customer Review வசதியை கொடுத்துள்ளன. இதில் அந்த பொருளை வாங்கிய பலர் அதன் நிறை, குறைகளை பற்றி சொல்லி இருப்பார்கள். அதை கவனித்து வாங்க வேண்டும்.
குறிப்பிட்ட தளத்தின் சர்வீஸ் பற்றி அறிய இணையத்தில் தேடலாம், அல்லது ஏற்கனவே வாங்கிய அனுபவம் உள்ள நண்பர்களிடம் கேட்கலாம்.
eBay தளத்தில் பொருளை விற்பது யாரோ ஒருவர் என்பதால், குறிப்பிட்ட விற்பனையாளருக்கு வந்துள்ள Positive Feedback - ஐ பொறுத்து பொருளை வாங்கவும். இது Seller Info பகுதியில் இருக்கும்.
5. Payment Options
ஆன்லைன் மூலம் வாங்கும் போது தற்போது பல வகையான Payment வசதிகள் உள்ளன. ஆர்டர் செய்யும் போதே Credit Card, Debit Card (ATM Card), Net Banking மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. இதில் நீங்கள் Secured ஆகத் தான் பணம் செலுத்துகிறீர்களா என்பதை கவனியுங்கள்.
பணம் செலுத்தும் பக்க URL "HTTPS" என்று ஆரம்பித்து இருக்க வேண்டும். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.வெறும் HTTP என்று மட்டும் இருந்தால், ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.
இதில் பயம் உள்ளவர்கள் Cash On Delivery வசதி இருந்தால் அதை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் பொருள் உங்களுக்கு வந்து சேரும் நாளன்று நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.
EMI மூலம் வாங்கும் போது, பல தளங்கள் Processing Charge என்று ஒன்றை வசூலிக்கும். அப்போது மற்ற தளங்களில் குறிப்பிட்ட பொருளின் விலை மற்றும் EMI - யில் Processing Charge இல்லாமல் வருகிறதா என்று பாருங்கள். இதனால் உங்களுக்கு பணம் மிச்சம் ஆகும்.
- பிரபு கிருஷ்ணா (கற்போம்)
பழங்கள்
பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.
கொய்யா: இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளி களுக்கு அரிய மருந்து கொய்யாப் பழம். வருடம் முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
அன்னாசி: இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.
உலர் திராட்சை: தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந் தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.
சாத்துக்குடி: தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.
பலரைப் பாதிக்கும் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலிய வற்றை தடுக்க ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி, அன்னாசி முதலிய பழங்களை தினமும் பழ சாலெட்டாக 400 கிராம் சாப்பிட்டாலே போதும். நம் உணவில் 20% பழங்கள் இடம் பெற்றாலே நோய்கள் கட்டுப் பட்டு ஆரோக்கியமாக வாழலாம்
பொன் மொழிகள்
எல்லோருமே வெற்றியை விரும்பு கின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர். - சிசரோ
உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். - கார்லைல்
எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும். - மேட்டர்லிங் உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்குச் செல்வதைப் போன்றது. - எமர்சன்
வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் - மில்டன்
நூல் மதிப்புரை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இளமை எனும் பூங்காற்று
பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்கள், அறிவு என்ற செல்வத்தைத்தான் இளமை எனும் பூங்காற்று எனும் இந்தப் புத்தகத்தின் வாயிலாக இளை ஞர்களுக்கு அள்ளி வழங்கி யிருக்கிறார்.
தான் அறிந்ததை - அதன் மூலம் பெற்ற செல்வத்தை இளைய தலைமுறைக்குப் பொதுவுடைமையாக்க வேண் டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இளமை எனும் பூங்காற்று என்ற தலைப்பில் தான் அறிந்த சாதனையாளர்கள் பற்றி அறியாத தகவல்கள், நம் பார்வைக்கு அதிகம் தென்படாத சாதனையாளர்களின் ஆற்றல்கள், விடுதலைக் களத்தில் தங்களையே தந்த போராளிகள், இனத்திற்காகவும், மொழிக்காகவும் தியாகி களானவர்கள், கலைத்துறை வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள் எனப் பலதரப்பட்ட சரித்திர சாதனையாளர்கள் பற்றி பதிவு செய்துள்ளார்.
இந்த நூல், நாளைய சாதனையாளர்களுக்கான நல்வழிகாட்டி, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞன் கையிலும் இந்தப் புத்தகம் இருக்க வேண்டும். அவர் களுடைய நெஞ்சில் இந்த நூலின் கருத்துக்கள் பதிய வேண்டும். அவ்வளவு அரிய தகவல்கள் கொண்டது பேராசிரியரின் நூல்.
திராவிடர் இயக்கம் - நோக்கம் தாக்கம் - தேக்கம்
திராவிடர் இயக்கம் - நோக்கம் - தாக்கம் - தேக்கம் என்ற நூலினை திரு. கோவி. லெனின் அவர்கள் எழுதியுள் ளார்கள், திராவிடர் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தையும், அந்த இயக்கம் இன்று கண்டிருக்கும் தேக்கத்தையும் நக்கீரனின் முதன்மை துணை ஆசிரியர் கோவி லெனின் அவர்கள் ஆராய்ச்சிப் பார்வையோடு இந்த நூலில் விரித்துரைத்திருக் கிறார். ஒவ்வொரு காலகட்டம்தோறும் நிகழ்ந்த நிகழ்வு களை செம்மையாய் புரிந்துகொண்டு நூலில் பதிவு செய்திருக்கிறார். கனமான தகவல்கள்கொண்ட நூறு ஆண்டுகள் கடந்த வரலாற்றைக் கொண்ட திராவிட இயக்கத்தை உரையாடல் பாணியில் எளிமையாய் திராவிட சமூகத்தின் வரலாற்றை தமிழினம் உணர்ந்து மதித்துப் போற்ற வேண்டிய காகிதத்தாலான கருத்துக் களஞ்சியம். திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழினத்தால் எழுந்தோம் என்று கூச்சலிடுகின்ற அரசியல் ஆமைகளுக்கு ஒரு புதிய நாவல்.
பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?
பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா? என்ற நூலினை திரு. குன்றில்குமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நூல் இந்தியாவில் ஆட்சியில் உள்ள பெண் முதல்வர்களை வரிசைப்படுத்தி, பொது வாழ்வில் சாதிக்க விரும்பும் பெண்கள், அரசியலில் ஆரவாரமாக நுழையும் பெண்கள், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தபின், அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டனர், நடந்து கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
குறிப்பாக ஆறு பெண் முதல்வர்களில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1963-ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு பெண் முதல்வராகப் பதவி யேற்றார். அவர் சுசேதா கிருபளானி. அவர் முதலாவது பெண் முதல்வர் என்ற பெரு மையை பெற்றவர். தனிமனித ஒழுக்கம், உண்மை, நேர்மை, எளிமை, சகிப்புத்தன்மை, கடின உழைப்பு, சிறந்த நிர்வாக திறமை போன்ற நற்குணங்களை பொது வாழ்க்கையில் கடைப்பிடித்து அம்மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர். பொது வாழ்வில் சாதிக்க விரும்பும் பெண்கள், குறிப்பாக மாநில பெண்முதல்வர்கள் சுசேதா கிருபளானியை பின்பற்றினாலே போதும் என்று அவர்களைப்பற்றி அருமையாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
மற்ற அய்ந்து பெண் முதல்வர்கள் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? பெண்களும் அரசாளப் பிறந்தவர் களே என்ற முழக்கம் சரியானதே என்பதை நிரூபித் திருக்கிறார்களா? இதுதான் அனைவரின் முன் தற்பொ ழுது எழுந்துள்ள கேள்வி. அதனை அலசிப்பார்க்கிறது இந்த நூல். படித்துப் பாருங்கள்...
எதிர்க்குரல்
எதிர்க்குரல் என்ற நூலினை மனுஷ்யபுத்திரன் அவர்கள் எழுதி யுள்ளார். மனுஷ்யபுத்திரன் உரிமை யான பார்வை கொண்டவர், அவரது எழுத்துக்கள் சமூக அவலங்களையும், அரசியல் அவலங்களையும் தோலுரிக்கும். எதையும் மறைந்து நின்று மறுப்புச் சொல்லாமல் நேருக்கு நேராய், பட்டவர்த்தனமாய்ப் பேசும் இவரது எழுத்துக்கள் வர வேற்கத் தக்கவையாகும்.
எதிர்க்குரல் என்ற நூலில் 32 கட்டுரைத் தொடரை தொகுத்துத் தந்துள்ளார். இதிலுள்ள கட்டுரைகள் மனிதா பிமானத்தின் குரலாக அமைந்துள்ளன. முதல் கட்டுரை நக்சலைட் வேட்டை என்ற பெயரில் சட்டீஸ்கர் மாநில சர்கேகுடா கிராமத்தில் காக்கிகளால் நரவேட்டை நடத்தப் பட்டதை காயங்களோடும் வலிகளோடும் கண்டிக்கிறது அந்தக் கட்டுரை.
இரவு நேரத்தில் பார் அருகில், குடிவெறியர்கள் தனியாக சிக்கிய ஒரு இளம் பெண்ணை கசக்கி முகர்ந்து வெறி யாட்டம் போட்டதை வீடியோ காட்சிகளில் நாடே கண்டு நடுங்கியது. இந்தப் பேரவலத்தைச் சாடும் மனுஷ்ய புத்திரன், வெகுவிரைவில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் நாம் முதலிடத்தைப் பிடித்துவிடுவோம் என்பதில் சந்தேகம் இல்லை என்று மனதில் அறைகிறார். இந்தத் தொகுப்பு நூல் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ் வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய மானுடக் களஞ்சியம்.
ஆர்.என்.கே.100
பொது வாழ்வில் ஒரு அதிசயம் என்று அழைக்கப்படும் தோழர், நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை ஆர்.என்.கே.100 என்ற தலைப்பில் பசுமைக்குமார் அவர்கள், நல்லகண்ணுவின் வாழ் வில், வாழ்க்கைப் பாதையில் நடந்த அரிய 100 சம்பவங்களை தொகுத்து நூலாக்கித் தந்திருக் கிறார். தோழர் நல்லகண்ணுவைப் போலவே பசுமைக் குமாரின் மொழிநடையும் எளிமையாக, சுத்தமாக இருக் கிறது. எல்லாரும் படித்துப் பயன் கொள்ளத்தக்க நூல் இது.
கலைஞரின் காதலர் திருவாரூர் கு.தென்னன்
கலைஞரின் காதலர் திருவாரூர் கு.தென்னன் என்ற நூலினை திருவாரூர் துரைச் செல்வம் அவர்கள், இந்தியா வின் மூத்த அரசியல் தலைவர் - தமிழகத்தின் அய்ந்து முறை முதல்வர் - முத்தமிழறிஞர் எனப் பல சிறப்புகளோடு விளங்கும் கலைஞரின் உற்ற நண்பர் திருவாரூர் கு.தென் னன். பள்ளிப் பருவத்திலிருந்து இருவருமே ஒரே லட்சியப் பாதையில் பயணித்தவர்கள். அந்தப் பயணம் என்பது தென்னன் அவர்கள் மறையும் வரை தொடர்ந்துள்ளது.
இந்தத் தலைமுறைக்குத் தெரியாத - முந்தைய தலைமுறை மறந்த இத்தகைய செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து எழுதி, திருவாரூர் கு.தென்னன் - கலைஞரின் காதலர் என்ற தலைப்பில் அருமையான நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர் துரைச்செல்வம்.
புதையல் (பாகம் -9)
புதையல் (பாகம் -9) என்ற தலைப்பில் முன்னாள் முரசொலி இதழின் பொறுப்பாசிரியர் சின்னக்குத்தூசி என்கிற இரா.தியாகராஜன் அவர்கள் எழுதிய பல்வேறு காலகட்டங் களில் வெளிவந்துள்ள கட்டுரை களின் தொகுப்பே புதையல் என்று தலைப்பை கொண் டுள்ளது. புதையல் என்று கூறுகின்ற பெயருக்கு ஏற்ப அமைந்துள்ளது. ஏற்கெனவே புதையல் என்ற தலைப்பில் எட்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. இது ஒன்பதாவது பாகமாகும். இதில் 17 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அனைத்துக் கட்டுரை களும் அரசியல் தொடர்பானவையாகும். பழைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள அரிய நூல்.
நெருப்பாறு
நெருப்பாறு என்ற தலைப் பில் சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய பல்வேறு காலக் கட்டங்களில் எழுதிய கட்டுரை களின் தொகுப்பே நெருப்பாறு என்ற தலைப்பைக் கொண் டுள்ளது. தேச துரோகிகள் மீதும், சமூக விரோதிகள் மீதும், தீவிர வாதிகள் மீதும் ஏவப்பட வேண்டிய பொடா என்ற சட்ட ஆயுதத்தை தனக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் மீதும் ஈழ ஆதரவாளர்கள் மீதும் பாய்ச்சியது பொடாவின் கூரிய நகம். இதுபோன்ற துயரங்களை, கைதிகள் சுமந்த வலிகளை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து, காவல் துறையின் பாசிச குணத்தை பறைச்சாற்றியிருக்கிறார் சின்னக்குத்தூசியார்.
நூல் கிடைக்குமிடம்:
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானி ஜான்சன் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 41.
தொடர்புக்கு: 044-43993029
இந்தி நுழைப்பு
மது விலக்குப் போலவே இந்தி நுழைப்பு என்கிற திரு. ஆச்சாரியார் திட்டமும் மக்களது கல்வி அறிவைப் பாழ்படுத்த வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டதாகும்.
பார்ப்பனர்களின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் புகுத்தினால், அதற்குப் பெரிய எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதியே பார்ப்பன இன உணர்ச்சிக்கு அடிப்படையான சமஸ்கிருதத்தின் எதிரொலியான இந்தியை நுழைக்க முயற்சித்தார் திரு. ஆச்சாரியார்.
இந்தியின் ரகசியம் என்ன என்பதையும், குடிஅரசின் மூலம் விளக்கிய பிறகே உண்மையை உணரலாயினர் மக்கள்.
திரு. ஆச்சாரியார் பல முறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது, சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால், அதுதான் இந்தி என்றும், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் கூறினார்.
இந்தியை ஒழிக்க பெரிய கிளர்ச்சி செய்து, 3,000 பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், முதிய வர்கள், குழந்தைகள் உட்பட சிறை சென்று, இரண்டு உயிர்களைப் பலி கொடுக்க வேண்டி வந்தது.
செகண்டரி ஸ்கூல் அய்ஸ் ஸ்கூல் ஒழிப்பு:
கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும்,
60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களும் எடுக்கப்பட்டு விட வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
60 பிள்ளைகள் கிராமத்தில் கிடைப்பது, அதுவும் 1938இல் என் றால், அது பெரிய சிரமமான காரிய மாகும் என்பதை நாம் யூகிக்க முடியும்.
அந்த சாக்கை வைத்துக் கொண்டு பள்ளியை இழுத்து மூடச் சொன் னார் மகானுபாவர் ஆச்சாரியார் என்றால், அவரது மனுதர்ம மனப்பான்மைக்கு வேறு சான்று கூறவா வேண்டும்?
சர்க்கார் அனுமதி பெற்றுப் பொது ஜனங்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வந்த பள்ளிகளை ஒழிக்க, சரியாக நடக்காத பள்ளிகள் அத்தனையும் இழுத்து மூடப்படும் என்றார்.
திருத்தி செவ்வனே நடைபெறும் படி செய்யப்படும் என்று கூறவில்லை திரு. ஆச்சாரியார் என்பதைக் கவனியுங்கள்.
கோயம்புத்தூரில் இருந்த (ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் துவக்கப்பட்டது) காட்டுத்துறைக் கல்லூரி (Forest College) யை இழுத்து மூடி விடும்படிச் செய்தார் திரு. ஆச்சாரியார்.
இதனால் பயனடைந்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்பதே இதற்கு அடிப்படையான காரணமாகும்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒட்டி, தமிழர்களாகிய நமது பிள்ளைகளும் சரிசமமான வாய்ப்புப் பெற்றுப் படிக்க வைக்கச் செய்த காலேஜ் செலக்ஷன் கமிட்டியை (ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது) ஒரே வரியில் உத்தரவு போட்டு, ஒழித்துக் கட்டித் தமிழர்களது கல்லூரிப் படிப்பிற்குக் கல்லறை எழுப்பினார் காருண்ய சீலர் திரு. ஆச்சாரியார்.
கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு திரு. ஆச்சாரியார் ஆட்சியில் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருந்தது.
ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் நூல் பக்கம் 13
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி (கி.ஆ)
சிரிக்கலாம்...
பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி நேத்து சாமி வந்து ஆடுச்சுடா. ரொம்ப நேரமாகியும் மலை ஏறவே இல்லை.
அவன்நண்பன் : டேய்... உங்கப் பாட்டி பஸ் ஏறுவதே ரொம்ப சிரமம். இதுல எங்கடா மலை ஏறுவது?
தேநீர் கடையில் ஒருவர் : நிறைய காவடிகளைத் தூக்கிக்கிட்டு, கூட்டம் கூட்டமா போறாங்களே... இவ்வளவு காவடிகளா இருக்கு?
மற்றவர் : ஆமாம் நண்பா! புஷ்பக் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடின்னு நிறைய இருக்கு. எல்லாக் காவடியையும் தூக்கிட்டுப் போயிட்டு, கடைசியா அன்னக் காவடியா இந்த டீக்கடையில தான்உட்கார்ந்திருப்பார்கள். அய்யப்பசாமி : கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.
அறிவுச்சாமி: தம்பி அத கல்லு, முள்ளு மேல நின்னு சொல்லுங்க... சூப்பர் டீலக்ஸ் பஸ்ல இருந்து சொல்லாதீங்க... - வி.சி.வில்வம்
பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 23 வயது கல்லூரி மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க நீதிபதி வர்மா குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஓர் அவசரச் சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் கூடி விவாதித்தது. அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. அடுத்ததாக, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய உள்ளது.
இந்த அவசரச் சட்டத்தில், பலாத்காரம் என்ற வார்த்தைக்கான விளக்கத்தை பாலியல் தாக்குதல் என மாற்றுதல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து அவரது ஆயுள் காலம் வரை என்று மாற்றுதல், ஆசிட் வீசுவதைத் தனிக் குற்றமாக மாற்றி அதற்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதுபோன்ற குற்ற வழக்குகளில் குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அதைக் குற்றவாளியின் இறப்பு வரை சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனையாக மாற்றுவது நீதிமன்றத்தின் சிறப்புரிமையாக இந்த அவசரச் சட்டம் வழிவகுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி
வெள்ளைகாரங்க நாடு குளிரா இருக்குமாம்; அதனால் அவங்க நாட்டுக் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகும்போது 'சூ' (shoe) போடுறாங்க. நம்ம நாடு சூரியன் சுட்டெரிக்கிற நாடு சும்மாவே வேர்த்துக் கொட்டுது; நம்ம குழந்தைங்களுக்கு எதுக்கு 'சூ' போட்டுவிடுறாங்க?
பால் வேற்றுமை பாதிப்பா?
- சிகரம்
ஆண் பெண் பால் வேறுபாடு இயற்கையாய் அமைந்தது. இயற்கையை மாற்ற முடியாது. ஆனால், இயற்கையை எண்ணித் தளராமல், உறுதியுடன் முயன்றால் சாதனை என்பது உறுதி.
நடைமுறையில் இந்த பால் வேறுபாட்டை பச்சிளங் குழந்தையாய் இருக்கும்போது பதியச் செய்வது தவறு. பெற்றோரும் மற்றோருமே இத்தவற்றைச் செய்கின்றனர்.
பிறந்தவுடனே ஆண் என்றதும் சிறப்புக் கொஞ்சலும், சிறப்பு வசதியும், சிறப்புக் கவனிப்பும் காட்டப்படுகின்றன.
பெண் பிறந்தால் பிதுக்குகிறார்கள் உதட்டை!
பெண் பிறந்த செய்தி கேட்டால் பார்க்கக்கூட வராத தந்தை உண்டு. கள்ளிப்பால் மூலம் கதையை முடிக்கவும் சிலர் தயங்குவதில்லை. அதிலும் கொஞ்சம் இரக்கங்கொண்ட தாய், தந்தையர் குப்பையோடு சேர்த்துக் கொட்டி விடுகின்றனர். ஆக, பெண்ணைக் குப்பையாகக் கருதும் மனநிலை இன்னும் இருக்கவே செய்கிறது. இது அங்கொன்று இங்கொன்றுதானே தவிர, பொதுவாக இப்படியில்லை.
என்றாலும், உணவு கொடுக்கும்போதும், உடை கொடுக்கும்போதும், படுக்க படுக்கை தரும்போதும் ஆணுக்கு உயர்வு, பெண்ணுக்குத் தாழ்வு. இது பெரும்பாலும் நடக்கிறது.
படிப்பு என்றால் பாரபட்சம். சொத்துக் கொடுப்பதில் தயக்கம்; பலர் கொடுப்பதேயில்லை!
ஆடிப்பாடி, ஓடிப்பதுங்கி வெளியிடங்களுக்குச் சென்று விளையாட பெண்ணுக்கு அனுமதியில்லை. வீட்டுக்குள் முடக்கப்படுவதோடு, வீட்டு வேலைகளிலும் முடக்கப்படுகிறாள்.
பருவ வயது வந்து பருவம் அடைந்துவிட்டால், பெண்ணுக்கு எல்லாமே பறிக்கப்படுகிறது. அடுத்த ஆணுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. பெண்ணின் கல்வி பருவம் அடையும் வரை மட்டுமே என்ற கொடுமையான காலம் தற்போது கடந்துவிட்டது. இப்போது பெண்களின் படிப்பு தொடரப்படுகிறது. சற்றேறக்குறைய ஆண்களைப் போலவே கற்கின்றனர். வெளியிடங்களுக்குச் செல்கின்றனர்.
பெண் கற்றால், வேலைக்குச் சென்றால் அவளின் திருமணச் சுமையும், தடையும் குறைகிறது என்பது இந்த மாற்றத்திற்கான பெருங்காரணம். என்றாலும் கிராமப்புறங்களில் இம்மாற்றம் குறைவே!
பெண்களும் சரி, பெற்றோரும் சரி, மற்றவர்களும் சரி கீழ்க்கண்டவற்றை ஆழமாக உள்ளத்தில் பதிக்க வேண்டும்; செயல்படுத்த வேண்டும்.
1. பால் வேறுபாடு என்பது இயற்கையானது. இதனால் ஆணுக்குப் பெண் -எந்த வகையினும் இளைப்பு அல்ல.
2. பெண் பலம் குறைந்தவள் என்பது மூடநம்பிக்கை. பயிற்சி மேற்கொள்ளும் பெண் ஆணைவிட பலசாலி என்பதே அனுபவ உண்மை.
3. பெற்ற நம் பிள்ளைகளில் ஆண் பெண் என்று பாகுபடுத்தி நடத்துவது மிகப் பெரும் தவறு. நம் பிள்ளை எதுவானாலும் சமமாக நடத்த வேண்டும். பெற்ற பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவது மனிதத் தன்மையில்லை! ஏன், விலங்குகள்கூட வேறுபாடு காட்டுவதில்லை!
4. ஆணைப்போலவே பெண்ணுக்கும் கல்வியளிக்க வேண்டும்; உணவு உடை அளிக்கவேண்டும்.
5. பருவம் அடைதல் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. அதன்பின் பெண்ணை முடக்குதல் மூடச் செயல். மாதம் மூன்று நாள்கள். அதற்கான பஞ்சுப் பட்டைகள் வந்துவிட்டன. அணிந்து கொண்டு ஆணைப் போலவே சாதிக்கலாம்.
6. பருவத்திற்குப் பின் ஒழுக்கம் தவறினால், ஆண் பாதிக்கப்படுவதில்லை; பெண் கருச்சுமந்து பழியும் சுமக்கிறாள். இதுவே, பெண்ணுக்கு இயற்கையில் அமைந்த மாபெரும் பாதகநிலை. இதைக் கண்டே பெண்ணும் அஞ்சுகிறாள்; பெற்றோரும் அஞ்சுகின்றனர்.
இந்தப் பாதிப்பு இயற்கையாய் பெண்ணுக்கு இருப்பதால், பெண்கள்தான் கூடுதல் எச்சரிக்கையாய் இருந்து, ஆணின் மோசடிக்கு ஆளாகாமல் காத்துக் கொள்ள வேண்டும்.
தப்பான நோக்கத்தில் உறவுக்கார ஆண் பழகினாலும், வெளி ஆண் பழகினாலும் செருப்பைக் கையில் எடுத்துப் பாருங்கள். மிரண்டு ஓடுவார்கள். செருப்பைவிட சிறந்த பாதுகாப்பு பெண்ணுக்கு வேறு இல்லை.
தப்பாக தொடும்போதே வெறுத்துத் தள்ளினால் விலகிச் செல்வர். அனுமதித்தால் அடுத்தடுத்து முயன்று கெடுத்து ஒழிப்பர். இந்த நுட்பம் புரிந்து நடந்தால் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.
பலாத்காரமாய் சிதைக்கப்படுவதற்கு பெண் பொறுப்பாளியல்ல. என்றாலும் அச்சூழலை பெண் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் இளமை முதலே பெண்களைத் தற்காத்துக் கொள்ள பழக்க வேண்டும்.
விபத்துகளுக்கு அஞ்சி வாகனம் ஓட்டாமல் இருக்க முடியாது, மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதேபோல், அயோக்கியர்களின் பாலுறவு வன்முறையும் ஒரு விபத்தே! அதை தவிர்க்கவும், தற்காக்கவும் முயல வேண்டுமேயன்றி, அஞ்சி அடங்கி ஒடுங்கிவிடக்கூடாது.
7. ஆண்களுக்கு இந்த வேலை பெண்களுக்கு இந்த வேலை என்று பிரிக்காமல் பெண்களையும் அவர்கள் விருப்பப்படி எந்த வேலையும் செய்யவும், சாதிக்கவும் பழக்கவும் அனுமதிக்கவும் வேண்டும்.
8. பெண்ணின் விருப்பம் இன்றியும், விருப்பம் அறியாமலும் மணம் முடிக்கக் கூடாது. வாழ விரும்புகின்றவள் விருப்பம் முக்கியம். காரணம், வாழ்க்கை அவருடையது. பிள்ளைகள் வாழ்வை பெற்றோர்கள் வாழ்வதோ, தீர்மானிப்பதோ கூடாது. பெற்றோர் சிறந்த ஆலோசகர்களாய் மட்டுமே இருக்க வேண்டும்; ஆதிக்கவாதிகளாய் இருக்கக் கூடாது.
பெண்ணே! பெண்ணே!
துணிந்துநில்! தடைகளை தகர்!
துணிவை துணை கொள்!
துணிவே துணை
என்பார் தமிழ்வாணன். பெண்களுக்கு அதுவே துணை! கணவன்கூட துணிவுக்கு அடுத்தத் துணைதான்! துணிந்தால் துக்கமில்லை. அஞ்சுதல் அடிமைப்படுத்தும்; துணிவு தூக்கி நிறுத்தும்! இயற்கை இடர்களை ஏற்றித்தள்ளு! துணிவை துணையாக்கு! பிஞ்சுப் பிள்ளைகள் இவற்றை நெஞ்சில் நிறுத்த வேண்டும்! அஞ்சாது அனைத்தையும் சந்திக்க வேண்டும்! ஆயுள் முழுக்கச் சாதிக்க வேண்டும்!
நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!
நடைவண்டி நாயகர்களும் முந்தா நாள் மழையிலே நேற்று முளைத்த காளான்களும் டெசோவை நாடகம் என்று விமர்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லி விட்டாராம். அடேயப்பா, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். தாண்டித் தோண்டி யில் விழுகிறது. தாம் தூம் என்று எகிறிக் குதிக்கிறது.
நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெ அம்மை யாரை சிக்கலில் நிறுத்தும் வேலையில் இறங்கவேண் டாம் என்று விடுதலை (21.2.2013) எச்சரித்திருந்தது.
அம்மா மீது என்ன கோபமோ? மறுபடியும், மறுபடியும் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டவைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வேடு!
நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குச் சில கேள்விகள்:
1. இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவே என்று சொன்னவர் யார்? இப்பொழுது போரினால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்களே என்று கிளிசரின் கண்ணீர் விடுவது யார்?
2. போர் என்று சொன்னால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர் யார்?
இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்துவது யார்?
3. இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா ஈடு பட்டால் நாளை இந்தியா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடாதா? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா? என்று கேள்வி கேட்டவர் யார்?
இதற்கு மாறாக முரண்பட்டுப் பேசுவது யார்?
சாட்சாத் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்தானே!
முடிந்தால் இவற்றை மறுத்துவிட்டு எழுந்து முண்டா தட்டட்டும் நமது எம்.ஜி.ஆர்.
முடியவில்லை என்றால், மூலையில் ஒடுங்கிக் கிடக்கட்டும். இல்லை என்றால் வண்டி வண்டியாக எழுத நேரிடும்.
கடைசியில் அம்மையார் அவர்களின்பாடுதான் திண்டாட்டம்!
காலச் சிலாசாசனம்!
உலக வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத இனப்படுகொலை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் இனப் படுகொலை (Genocide) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.
இனப்படுகொலையை ஒரு நாடு செய்தால் அதில் எந்த நாடும் தலையிடலாம் - அது வெளிநாடு தலையிட்டக் குற்றமாகாது.
உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அரசோ இனப்படுகொலை அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக அந்த இனப்படு கொலை நாட்டை தமது நட்பு நாடாக அறிவிக்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்ன சொல்ல!
இன்றைய பேட்டியில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் மிகத் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியது போல இந்தியாவும் போர்க் குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், எதிர்காலத்தில் விசாரணைக்கு இந்தியா உட்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை.
எத்தனையோ முறை இதமாக - பதமாக - போதுமானது என்பதை விடத் தாண்டி வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தும்கூட, இந்திய அரசின் போக்கில் எந்தவிதமான நேர்மை யான, மனித உரிமையுடன் மனிதநேயத் துடன் கூடிய போக்கோ, சிந்தனையோ அறவே யில்லை.
வேறு வழியில்லை என்று உறுதியாகத் தெற்றென அறிந்த நிலையில்தான் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 16ஆம் தேதி மத்திய அரசில் திமுக தொடர்வதில் இனியும் அர்த்தமில்லை என்றே அர்த்தமிக்க கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டார். அதற்குப் பிறகாவது மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு தன்போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
தி.மு.க. தலைவரின் அந்த அறிக்கையை வரவேற்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதே நாளில் (16.3.2013) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
கலைஞர் அவர்களின் அறிக்கை வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன் எந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரித்திருந்தார்.
எல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரை - செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டதால் தி.மு.க. ஓர் அறுவை சிகிச்சை முடிவினை எடுக்க நேர்ந்தது.
தி.மு.க எடுத்த இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இது காலம் கருதி எடுக்கப்பட்ட ஞாலம் வரவேற்கும் முடி வாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட் டுள்ளார்.
இனியாவது ஏற்றப்பாட்டுக்கு இறக்கப் பாடல் பாடுவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்கள் ஒரே குரலில் ஈழத் தமிழர் உரிமையின் பக்கம் நிற்பார்களாக!
தி.மு.க. இன்று எடுத்த முடிவு காலம் உள்ளவரை, உலகம் உள்ள வரை நிமிர்ந்து நிற்கும் காலக் கல்வெட்டாகும் - சிலா சாசனமும் ஆகும்! 19-3-2013
காலத்துக்கேற்ற...
காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
_ (குடிஅரசு,26.1.1936)
ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!
சென்னை, மார்ச் 20- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று தாம் கூறியதைத் திரித்துக் கூறும் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்;
நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;
திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத் திருத்தங்களை, இந்திய நாடாளு மன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறை வேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன். உள்நோக்கத்துடன் திரிப்பதா?
நான் தெளிவாகச் சொன்னதை, முதல மைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங் களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத் தப்பட்டது இனப் படுகொலையே என்பதை யும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசார ணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ப தையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத் தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண் டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.
ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பு!
ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப் போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண் டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
நீர்த்துப்போன தீர்மானம்!
இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமள வுக்கு நீர்த்துப் போய்விட்டது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய் வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக் கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரி விக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக் கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.
தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங் களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக் கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற் கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் - வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு - திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேர்வு முறையில் தமிழ் மொழி தூக்கி எறியப்பட்டுவிட்டது - இதனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது (மார்ச் 18, 19).
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு களை அறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.
நெருக்கடி முற்றியது என்றவுடன், தமிழைப் புறந்தள்ளும் திட்டத்திற்குக் கடைசி கையொப்பமிட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் இப்பொழுது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாத பாப்பாத்தி போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள்! என்கிற தோரணையில், தாம் செய்த தமிழ் ஒதுக்கலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அவாளின் இனமலரோ எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து செய்தியையும் வெளியிட் டுள்ளது.
வெண்டைக்காய் விளக்கெண்ணெய் - கத்தாழை களைக் குழைத்து சமாதானம் சொல்ல முயற்சிக்கும் திருவாளர் நட்ராஜ் அய்யர்வாளுக்குச் சில கேள்விகள்:
1. பிரிவு -2 (குரூப்-2) தேர்வில் இருந்து வந்த பொதுத் தமிழ் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா - இல்லையா?
2. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் இடம் பெற்றிருந்த பொதுத் தமிழ் முழுவதும் அகற்றப்பட் டுள்ளதா - இல்லையா?
3. பிரிவு நான்கில் (குரூப்-4) இதுவரை தமிழில் கேட்கப்பட்டு வந்த 100 வினாக்களுக்குப் பதில் 50 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளதா - இல்லையா?
அறிவு நாணயமாக சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்காமல், நேரிடையாக திருவாளர் நட்ராஜ் அய்யர்வாள் பதில் சொல்லுவாரா?
அய்யர்வாளுக்கு வக்காலத்து வாங்கும் இ(தி)னமணி, இ(தி)னமலர் அய்யர்வாள்களும்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.
ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் ஒரு பக்கம் - உள்ளூர் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம்.
இரண்டுக்குள்ளுமே ஆரியக் கொடுக்கு இருக் கிறதே - இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள 72 பக்கங்களையும் படித்துவிட்டுதான் இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துள்ளோம்.
கூடுதல் செய்தி (Tail Piece)
திடீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணைய தளத்திலிருந்து இந்தப் பகுதி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது - மாற்றம் வந்தால் சரி!
தலையெழுத்தாம்
ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.
(குடிஅரசு, 6.7.1968)
Post a Comment