Search This Blog

10.3.13

தாலி எதற்காகக் கட்டப்படுகிறது?-பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகள்

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே!

நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன். ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே, என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்ப வனாவேன்.
இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?
அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த  ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது  யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சி யடைந்து விட்டது.
தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரன் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?
100 வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.
அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கிய பின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று! நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.
பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும்  ஆக்கி விட்டான்.

 நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான். 
கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத் திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.
இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடிய வில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!
அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.
இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல், மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான், நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல், காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!
தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும்.
பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150 வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.
பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டப்படி கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.
இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21 வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல அளவு கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.
தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்கவேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.
பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
அதற்குள் ஒரு  பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை, கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.
இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுபலமானதாகும்.
நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.
மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்.
வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசை மொழிகளுக்கு என்ன பலனோ, அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும்.
அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.
--------------------------------------------9.2.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து... (விடுதலை 20.2.1968).

36 comments:

தமிழ் ஓவியா said...


அன்னையார் வாழுகிறார்! வாழ்கிறார்!! என்றும் வாழ்வார்!!!


தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவருக்குச் செயலாளராகவும், செவிலி யராகவும், சிறப்பான தொண்டு புரிந்தவருமான தொண்டற வீராங்கனை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது 93ஆவது பிறந்த நாள் இன்று.

தியாகத்தில் புடம் போட்டு, தன் பொருள், உயிர் எல்லாவற்றையும் தந்தை பெரியார் என்ற மானுடம் காணா மகத்தான புரட்சியாளர் அவர்களுக்கும் அவர் தந்த கொள்கைக்கும், அவர் கண்ட இயக்கத்திற்கும் தன் வளமை, இளமை, வலிமை, முதுமை, உழைப்பு, தொண்டு அனைத்தையும், தந்து, வசைச்சூறாவளியும் அவதூறு சுனாமிகளும் சுழன்றடித்த வேளையிலும், சிறிய சலனம்கூட காட்டாது, மானம் பாராத தொண்டற மங்கை நான், எனக்கு எல்லாமும் என் தலைவரும் கொள்கையும், இயக்கமும், தான் என்று கூறி, உடல் நலிந்தாலும் உள்ளத்தின் வலிமையால் தந்தையின் மறைவுக்குப் பின்னரும் அவர் கண்ட இயக்கமாம் திராவிடர் கழகத்தின் தலைமையேற்று அய்ந்து ஆண்டுகள் வழி நடத்தி, அனைத்திந்தியாவும் அதிர்ச்சி அடைந்த இராவண லீலா நடத்தியும், நெருக்கடிக் காலத்தின் உரிமைப் பறிப்புகளுக்கும் ஈடு கொடுத்தும், பெரியார் தொண்டர்களைக் காத்த எம் மாறாத பாசத்திற்குரிய அன்னையாரின் தொண்டு ஈடு இணையற்றது; ஒப்பிட முடியாத உயரம் சென்ற ஒன்று!

தன் பொருள், தனக்கு தலைவர் துணைவர் என்ற முறையில் ஒதுக்கியது எல்லாமும் எல்லாருக்குமே என்று அறிவிக்கும் வகையில், ஒரு அறக்கட்டளை யாக்கி, பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் ஒன்று நிறுவினார்.

அதன் சார்பில்தான், இன்று தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி, தஞ்சை வல்லத்தில் பெரியர் - மணியம்மைப் பல்கலைக் கழகம் என்று கல்வி நிறுவனங்கள் ஆல்போல் தழைத்தோங்கி, வளர்ந்திட கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறது அன்னையாரின் அறக்கட்டளை!

அன்னையாரின் அரிய, மேற்பார்வையோடு அய்யாவால் 55 ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்டு, இன்று ஏழை, எளிய ஆதரவற்ற குழந்தைகளின் அபய இல்லமான நாகம்மையார் குழந்தைகள் இல்லம் பலகட்ட வளர்ச்சி பெற்று, வரலாறு படைத்துக் கொண்டுள்ளது.

அன்னையின் தொண்டறத்தின் துளிகள் அவை; சுயமரியாதை ஒளி வீச்சுகள் அவை.

அந்தத் தொண்டற வீராங்கனை மறையவில்லை - வாழுகிறார்.

கழகத் தொண்டர்களின் கட்டுப்பாட்டின் மூலம், குழந்தைகளின் மலர்ந்த சிரிப்பின் மூலம், கழகம் குவிக்கும் வெற்றிகள் மூலம், வாழுகிறார்! வாழுகிறார்! வாழ்ந்து கொண்டே இருப்பார்.

வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!
வளர்க பகுத்தறிவு - தொண்டறம்!!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

10.3.2013

சென்னை

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி!


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1883ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் பிறந்தார் ராமாமிர்தம். குடும்பத்தின் வறுமை யைத் தாங்க முடியாத அவரின் அம்மா, ஒரு தேவதாசியிடம் விற்றுவிட்டார். நல்ல சிந்தனைகளும் முற் போக்கு குணங்களும் பெற்றவராக இருந்த ராமாமிர்தம், விரைவில் அங் கிருந்து வெளியே வந்தார்.

தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல் பட்டார் ராமாமிர்தம். எழுதினார். நாடகம் போட்டார். ஏராளமான தேவதாசிப் பெண்களை மீட்டெடுத்தார். குழந்தை திரு மணத்தை எதிர்த்தார். பெண் கல்வியை வலியுறுத்தினார். இந்திய தேசிய காங் கிரஸில் சேர்ந்து பணி செய்தார். ஏராள மான சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தார்.

1925இல் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்த போது, ராமாமிர்தம் அந்த இயக்கத் தில் சேர்ந்தார். சுயம்புபிள்ளையை சுய மரியாதை திருமணம் செய்துகொண்டார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பைச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு ராமாமிர்தம் துணையாக நின்றார். 1936இல் தன் வாழ்க்கையையே நாவலாக எழுதி, தாசிகளின் மோசவலை என்ற பெயரில் வெளியிட்டார்.

இதன் மூலம் தாசிகளின் அவலநிலை வெளிச் சத்துக்கு வந்தது. மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், தேவதாசி ஒழிப்பு முறையை ஆதரித்தும் நாடகங்கள் நடத்தி வந்தார். ஒரு நாடகத்தின் போது, மத வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பிறகு கடைசி வரை அவர் கூந்தலை வளர்க்கவே இல்லை.

1937 முதல் 1940 வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார். உறையூர் முதல் சென்னை வரை 42 நாள்கள் நடந்து சென்று, 82 கூட்டங்களில் இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசினார். இதற்காக 6 வா ரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி பல்திறமைகள் கொண்ட ராமா மிர்தம் அம்மையார் 1962இல் மறைந்தார்.

தமிழ் ஓவியா said...

இலங்கையைச் செல்லமாகக் கண்டிக்கும் இந்திய அரசு!


இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மார்ச் 12 - முழு வேலை நிறுத்தம்!

தமிழ்நாட்டு மக்களே ஆதரவு தாரீர்! டெசோ பயணம் தொடரும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

இலங்கை அரசைச் செல்ல மாகக் கண்டிக்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மார்ச்சு 12ஆம் தேதியில் தமிழ் நாட்டில் முழு வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தர வேண்டும் - டெசோ தன் பயணத்தை வெற்றிப் பயணமாக முடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக தன்னால் இயன்ற அத்துணையையும் செய்து கொண்டே இருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குக் காரண மான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குக் கண்டனம், போர் குற்றவாளியாக அவரை அறிவித்து சர்வதேச சமூகம் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும்; ஈழத் தமிழர் வாழ்வு உரிமையை மட்டுமல்ல; தமிழ்நாட்டுத் தமிழக மீனவ சகோதரர் களின் மீன்பிடி வாழ்வாதாரத்தையும், சிங்கள கடற்படை பறித்தல், தாக்குதல், மீன் வலைகளை அறுத்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல், இலங்கைச் சிறைகளில் அவர்களைக் கொண்டுபோய் அடைத்தல், சித்ரவதைக்கு ஆளாக்குதல் போன்ற பல அக்கிரமங்களை அன்றாடம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்துவருகின்றது.

இலங்கையை செல்லமாகக் கண்டிக்கும் இந்தியா!

நமது வாக்குகளால் ஆளும் மத்திய அரசு, இந்திய அரசு கவலை தெரிவிக் கிறோம் என்று, பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கோலுக்கும் நோகாமல் என்ற பழமொழிக்கொப்ப இலங்கை அரசை செல்லமாய் கோபித்துக்கொள்வதுபோல் காட்டிக்கொண்டு மீனவர்களின் வயிற் றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங் கள்மீது, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கடமைக்காக சர்வதேச சமூகத்தின் - பன்னாடுகளின் மன சாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும்; அதன்மூலம்தான் பரிகாரம் தேடவும், தமிழர் மீள்குடியேற்றம், சிங்கள மயமாக் குதலைத் தடுத்தல், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள எம் எஞ்சிய தமிழ்ச் சொந்தங்களின் மான வாழ்வை - உரிமை வாழ்வை மீட்டெடுப்பது சாத்தியம்.

அய்.நா.விலும் முறையீடு

இந்தப் பணிகளுக்காகத்தான் நியூ யார்க் சென்று அய்.நா. சபையின் பொறுப்பாளர்களிடம் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறை வேற்றிய முக்கிய வேண்டுகோள்களை, தீர்மானங்களை அளித்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்களின் எதிர்காலமாவது பாதுகாக் கப்படக்கூடியதாக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எம் ஈழத் தமிழ்ச் சொந்தகளுக்கான முயற் சியை டெசோ சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு அவர்களும் நேரில் சென்று விளக்கங்களை அளித்தனர். அதுபோலவே, அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களை ஜெனிவாவில் சந் தித்து டெசோ தீர்மானங்களை அளித்து, செய்யப்பட வேண்டியவற்றை வலியுறுத் தினர். அய்.நா. மனித உரிமை ஆணையத் தின் உறுப்புகளான 47 நாடுகளின் தூதுவர்களில் பெரும்பாலோனோர் களை சந்தித்து அடுத்த கூட்டம் (தற்போது நடை பெற்று வருகிறது) துவங்குவதற்குமுன் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவுகோரி டெசோ குழுவினர் தளபதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், ஆகியோரும், நானும், திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்களும் புதுடெல்லியில் இடைவிடாது இப்பணிகளைச் செய்தோம்.

இரத்த வெறியன் ராஜபக்சேவே திரும்பிப் போ!

அதற்கடுத்து, வடநாட்டிற்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்திய மண்ணில் இரத்தக்கறை படிந்த கால்களை வைக்க இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, திரும்பிப் போ, என்றும், இந்த இட்லரின் வாரிசுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? என்றும் டெசோ கிளந்தெ ழுந்து தலைநகரம் காணாத எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டத்தை கருப்பு உடை அணிந்து 90 வயது மூத்த தலைவரான டெசோவின் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் வாய்மைப் போருக்கு என்றும் இளையாராகி களம் கண்டனர். அதன்பிறகு, ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீனவர் சமுதாயத்திற்கு இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் பிப்ரவரி 18, 19 ஆகிய நாட்களில் டெசோ அமைப்பின் சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாங்கள் வரலாறு காணாத மக்கள் வெள் ளம் கூடிய ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தினோம்.

முற்றுகைப் போராட்டம்!

தமிழ் ஓவியா said...

அதற்கடுத்து, கடந்த மார்ச் 5ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்ட இலங்கை அரசின் சென்னைத் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். சுமார் 30,000 முதல் 50,000 பேர் வரை திரண்டனர். அவர்களைக் கைது செய்யத் திணறி சென்னையில் சுமார் 10,000 பேர்களை மட்டுமே கைது செய்தது காவல்துறை. சுமார் 5, 6 மணி நேரம் இராஜரத்தினம் ஸ்டேடியம் மரத்தடியில் அமர்த்தி, சிறை வைக்கப்பட்டோம். அன்றுமாலை விடுதலை செய்யப்பட்ட வுடன் டெசோ தலைவர் கலைஞர் தலைமையில் கூடி, உடனே மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்கு தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு அடைப்பு நடத்தி, இதில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று திரண்டுள்ளோம் என்று காட்டவே அறவழியில் நமது உணர்வுகளைக் காட்டிடவே வேலை நிறுத்த அழைப்பினையும், அறிவிப்பினையும் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் விவாதம் - டில்லியில் மாநாடு

மார்ச் 7ஆம் தேதி டெல்லியில் டெசோ சார்பில் அய்.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் - அழுத்தமானதாகவும், பயனளிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் நடந்த டெசோ மாநாட்டின் தீர்மானங்களை இந்திய அளவில் கொண்டு சென்று, கருத்து ஆதரவு தேடவுமான கருத்தரங்கத்தினை டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடத்தினோம். முன்பு கலந்துகொண்டவர்களைவிட சில கட்சிகள் கூடுதலாகத்தான் கலந்துகொண்டன. இதற்கிடையில், தி.மு.க. கொடுத்த இலங்கை ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய விவாதம் மக்களவையில் அதே மார்ச் 7இல் (எதிர்ப்பாராத விதமாக அன்றே பொருத்தமாக) நடந்தது. அதில் தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு பேசத் துவங்கி, அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைக் கட்சி, பி.ஜே.பி. மட்டுமல்லாது அகில இந்திய தேசிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு, மிகப் பெரும் அளவில் அவையே குலுங்கும் வண்ணம் பேசி, இந்திய அரசை வலியுறுத்தி, மிகப்பெரிய அழுத்தமும் கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு!

வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாமல், ஏதோ பொத்தாம் பொதுவாக, பொது அறிவுரைகளை இலங்கை அரசுக்கு இதம் அளிப்பது போன்று பிரச்சினையின் ஆழத்தை அறியாது, அவையின் கொந்தளிப்பை அடக்குவதற்குப் பதிலாக, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்வகையில் ஏதோ பேசினார். தி.மு.க. மட்டுமல்ல; அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல தேசிய கட்சிகள் உட்பட வெளிநடப்பு செய்தது - ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பம் - இந்திய நாடாளுமன்ற வரலாற்றில்! இதற்கு மூல காரணமாக அமைந்தது தி.மு.க. - இதற்குப் பிறகு அன்று மாலை ஏற்கெனவே திட்டமிட்டபடி டெசோ கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத் அவர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, தேசிய மாநாட்டுக் கட்சி, தி.மு.க. விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர்கள் முக்கியக் கருத்துக்களை வழங்கினர். இவையெல்லாம் நாடகமா?

இவையெல்லாம் நாடகம் என்றும், இதனைப் பின்னடைவு என்றும் கூறுவோர் எவராயினும் அவர் களுக்கு ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டுவதில் உண்மையான அக்கறை இல்லாமல், அரசியல் செய்ய நமது இந்த ஆயுதம் நம்மிடமிருந்து போய்விடுவதா? என்ற உள்ளெண்ணத்தில்தான் பொது எதிரி ராஜபக்சேவை மறந்துவிட்டு, இங்கேவர உள்ள தேர்தல் களத்திற்கு மூலதனம் - சீட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகளை நடத்திக்கொண்டு இந்த எழுச்சியை திரையிட்டு மறைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, தி.மு.க., தி.க., மற்றும் டெசோ மீது சேற்றை வாரி இறைக்கும் ஊடகப் படைகளின் துணையோடு முயற்சி செய்து பார்க்கின்றனர். அவர்களைப் பற்றி டெசோ கள வீரர்கள் துளியும் இலட்சியம் செய்யாமல், குடிசெய்வார்கில்லை பருவம் என்ற குறள் நெறிக்கேற்ப மான அவமானம், பாராட்டு, வசவுகள் பற்றிக் கவலைப்படாமல், டெசோவின் போராட்டங்கள் தொடருகிறது; என்றும் தொடரும்.

டெசோவின் பயணம் தொடரும்!

உண்மை உணர்வாளர்களே, வீண் விமர்சன வேலைக்கு இது நேரமல்ல; விதண்டாவாதங்களை விலக்கி வையுங்கள் என்பதே எங்களின் வேண்டுகோள்! அப்படி அவர்கள் வைக்காவிட்டாலும், இப்படை தமது பெரும் பயணத்தை என்றும் ஏற்றத்தோடு, எழுச்சியோடு நடத்திடும் - விரைந்திடுவோம். இலக்கு நோக்கி அதில் வெற்றியும் பெற்று விடுவோம் என்பதிலும் அய்யமில்லை. நமது குறி - இலக்கு - மட்டுமே!

ஆகவே தமிழினப் பெரு மக்களே! 12ஆம் தேதியை மறவாதீர். முழுவேலை நிறுத்தத்தை வெற்றியாக்கித் தாரீர்! தாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

10.3.2013

சென்னை

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை


சென்னை, மார்ச் 10- அன்னை மணியம்மை யார் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2013) அவரது சிலைக்கு மாலை அணி வித்தும், நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலை மையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

அன்னை மணியம் மையார் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமி ழகமெங்கும் உலக மகளிர் புரட்சி விழாவாக கொண் டாடப்படுகிறது.

சிலைக்கு மாலை அணிவிப்பு

திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (10.3.2013) காலை 10 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மை யார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணி சார்பில் மாலை அணிவிக்கப்பட் டது. இதையடுத்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

உறுதிமொழி

இதையடுத்து கழகத் தோழர் - தோழியர்கள் தமிழர் தலைவர் தலை மையில் வரிசையாக சென்று பெரியார் திட லில் உள்ள அன்னை மணியம்மையார் நினை விடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து கழக தோழர் - தோழியர் புடைசூழ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திராவிட மகளிர் பாசறை

பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் சார்பில் அதன் இணை துணைவேந்தர் முனைவர் மு. தவமணி தலைமையிலும், பெரி யார் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மீனாம்பாள், சார்பிலும், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்யப்பட்டது.

இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத் திலும், தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெரி யார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் அன்னை மணியம்மை யார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மற்றும் உலக மகளிர் புரட்சி விழா நடைபெற் றது.

இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயல வைத் தலைவர் சு. அறி வுக்கரசு, பொதுச் செய லாளர் வீ. அன்புராஜ், திராவிடர் கழக பிரச் சார செயலாளர் வழக் குரைஞர் அ. அருள் மொழி, திராவிட மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணி யம்மை. திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திரும கள், க. பார்வதி மோகனா வீரமணி, பொதுக் குழு உறுப் பினர்கள் மனோரஞ் சிதம், சி, வெற்றிச் செல்வி, கு. தங்கமணி, இர. ஆதிலட்சுமி, மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் உலக நாயகி பழனி, உளவியல் வல்லுநர் டாக்டர் அபிலாஷா க. வனிதா, சி. யாழினி, க. வெண்ணிலா, த. மரகதமணி.

பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. பாலு, ஒய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன், பெரியார் திடல் மேலாளர் பி. சீதாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், பேராசிரியர் மங்கள முருகேசன் பேராசிரியர் வேலுசாமி ஆடிட்டர் இராமச்சந்திரன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன், செயலாளர் சத்திய நாராயணன், திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் வெ. ஞான சேகரன், வட சென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், செய லாளர் கி. இராமலிங்கம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, இணை செயலாளர் கோ.வீ. இராகவன், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு.

திராவிடன் நல நிதி தலைமை மேலாளர் அருள்செல்வன், பெரி யார் ஆய்வு நூலகர் கோவிந்தன், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்ய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் பெரியார் திடல் பணி மனை தோழர் - தோழியர்கள் பெருந் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


ஒரு தகவல்


பழங்குடி சமுதாய மாணவர்களே! நீங்கள் வெளிநாட்டில் படிக்க வேண்டுமா? அமெரிக்கா செல்ல விரும்பினால் 14 ஆயிரம் டாலர், பிரிட்டனில் படிக்க விரும்பினால் 9 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங் உதவித் தொகை(படிப்பு: முதுநிலைப் பட்டப் படிப்பு, முது முனைவர் பட்டப்படிப்பு) விவரங்களுக்கு: www.tribal.nic.in . (மார்ச்சு 20-க்குள் விண்ணப்பிக்கவும்)

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் சிந்தனைகள்...


- இரா.இரத்தினகிரி

பெண்கள் மீதான பாது காப்பில் மத்திய அரசுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை என்று எத்தனையோ சமூக நல அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின் றன. நாடாளுமன்ற முடக்கத் தினாலும் இந்தியா பூராவும் நடைபெற்ற மக்கள் இயக்கங் களாலுமே வர்மா கமிஷன் அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

கட்டாயத் திருமணப் பதிவுச் சட்ட மசோதா 2005, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண் களுக்கான பாதுகாப்புச் சட்ட வரைவு 2005 - ஆசிட் வீச்சுக் களிலிருந்து பெண்களைப் பாது காக்கும் சட்ட முனைவடிவு, பணிபுரியும் இடங்களில் பாலி யல் தொல்லைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் மசோதா 2010 - பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களிலிருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு என ஆறு மசோதாக்களை டெல்லி, தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரைத்தது. அதுபோலவே நாடாளுமன்றத்தில் பெண்களுக் கான இட ஒதுக்கீடு என எது வுமே இந்த நாட்டில் நடை முறைக்கு வருவதற்கான சாத் தியக் கூறுகளும் இல்லை.

பெண்கள் மீதான அமில வீச்சுகளும், தான் விரும்புகிற பெண்ணை ஒருவன் அடைய முடியவில்லையாயின், அரிவாள் வீச்சு - துண்டு துண்டாக வெட் டிக் கொலை - தற்கொலைகள் என்கிற அந்த செய்திகளையெல் லாம் ஒருவன் ஒரு பெண்ணை அழைத்து அவள் அதை ஏற்கா விடில் அவள் கொல்லப்படுவாள் அல்லது காயப்படுத்தப்படுவாள், சித்திரவதைக்கு ஆட்படுத்தப் படுவாள் என்கிற எச்சரிக்கைச் செய்திகளையே அவை பறைசாற்றுகின்றன. ஒரு ஆண் போக்கிரித்தனமாக பெண்ணை நெருங்கினாலும் அவனுக்கு பாதிப்பு இல்லை. பெண்ணின் குடும்பம் தான் அவதூறுக்கும் அவமானத்துக்கும் ஆட்படு கிறது.

இது போன்ற செய்திகளுக்கு தொலைக்காட்சி, பத்திரிகைத் துறையினர் கொடுக்கின்ற விளம் பரம, இளம் தளிர்கள் நெஞ்சங் களிலே ஓர் அச்சத்தை உருவாக் கியிருக்கின்றன. ஒரு வேண்டாத பயத்தை வேண்டுமெனறே உரு வாக்கி பெண்மையை மேலும், மேலும் அடிமைப்படுத்துகி றார்கள். அதனால் பாதிக்கப் பட்டால் சம்மந்தப்பட்ட குடும் பத்தினர் சமூகத்தால் அவ மானப்படுத்தப்படுகிறார்கள்.

பெண் என்றால் அது ஆணின் போகப்பொருள், அனுபவிப்புச் சாதனம் என்பது போலவே சித்திரிக்கபடுகிறதே தவிர அது ஓர் உயிர் உடைய, உரிமையைப் பெற்ற மனித ஜீவன் என்ற எண்ணமே தோன்றாத வகையில் சமுதாய நிலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு ஆணின் நேர்மையற்ற தன் மையும், மானமற்ற தன்மையும் சுயமரியாதையற்ற விலங்கின உணர்வின் வெளிப்பாடுகள் தான் இப்படிப்பட்ட சமூக அவ லங்கள் அரங்கேறுவதற்கான அடிப்படைக் காரணம்.

மனுதர்மத்தின் மறுபதிப்பு!

இந்திய அரசமைப்பு என்பது மனுதர்மத்தின் மறு பதிப்பு தான் என்றார் தந்தை பெரியார். மனுதர்மத்தின்படி ஸ்திரீ ஜென்மா-பாப கர்மா என்பார் கள். பெண்ணானவள் பால்யத் தில் தகப்பன் சொற்படியும், யௌவனத்தில் புருஷன் சொற் படியும், வயோதிகத்தில் புத்திரன் சொற்படியும் கேட்டு அதன்படி வாழ்ந்து மடிய வேண்டியவள் ஆவாள். அவளுக்கு எந்த வகை யிலும் சுதந்திரம் கொடுக்கப்பட் டது இல்லை.

தமிழ் ஓவியா said...

அதற்குத் தகுந்தாற்போல, தான் திருமணத்திற்குப் பெண் பார்க்கிற போது அவள் மண மகளை விட வயதில் குறைந்தவ ராகவும் உயரமாக இல்லாத படியும் படிப்பு குறைவாகவும் உடல் பலம் குறைந்து நளினமாக இருப்பவராகவும் சாதுவாகவும் தேர்வு செய்கிறார்கள். மணமகன் வீட்டில் எந்தக் கொடுமையைச் செய்தாலும் பேசாது, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். கணவன் மனைவியை போ, வா என்று ஒரு மையில் அழைப்பதற்கு ஏற்ற வாறு ஆதிக்கத்தை அமைத்து க் கொள்கிறார்கள். மனைவி கண வனை போ, வா என்று அழைத் தால் அதுவே கூட விவாகரத்துக் காரணம் ஆகிவிடுகிறது. மனை வியை கணவன் போங்க, வாங்க என்று அழைத்துப் பேசுகிற பண்பு சுயமரியதைக்காரர்களி டம் வரவேண்டும். நமது கழகத்துணைத் தலைவர் கவிஞர். பூங்குன்றன் தம் வாழ்விணை யரை 45 ஆண்டுகளாக இன்றும் வாங்க, போங்க என்றே அழைத்துப் பேசுவது பண்பாட் டுப் பெட்டகமாக நினைத்து பெருமை கொண்டு கடைப் பிடிக்க வேண்டும்.

பெண்கள் தங்களை ஆரோக் கியம் உள்ளவர்களாக வைத்துக் கொள்வது போலவே முக்கியம் வலிமையுள்ளவர்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அச்சம், மடம், நாணம் என்கிற முட்டாள்தனங்களை எல்லாம் உதறி விட்டு உடற்பயிற்சியில் கவனம் வைத்து தவறாது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சட்டங்களை செயல்படுத்தும் வல்லமையை அரசாங்கத்தை வலியுறுத்தி பெறுகிற வலி மையை அவர்கள் பெற வேண் டும். பெண் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்களில் பாடத்தைப் போலவே முக்கியமாக தவறாது உடற்பயிற்சியையும் சொல்லிக் கொடுக் கவேண்டும். வலிவுள் ளவை மட்டுமே வாழும்; வலி வற்றவை வாழ்விழந்து போகும் என்பது தான் உண்மை. பெண் உடல் அழகிருந்தால் மட்டும் போதாது. உடல் வலிமை மிக முக்கியமாகும். ஒரு வாள் தான் மற்றொரு வாளை தன்னுடைய உறையிலேயே அனுமதிக்காது என்பது கிரேக்கப் பழமொழி.
தேக்குவாண்டோ, கராத்தே கற்றுக் கொண்ட ஈவ்டீசிங் செல்லுபடியாவதில்லை என்பது நடைமுறை. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சிங்காரித்துக் கொள்ளவும், கோலம் போடவும், பல்லாங்குழி ஆடவும், கும்மி, கோலாட்டம் அடிக்கவும் அனுமதிப்பதை விட மிக முக்கியம் தற்காப்புக் கலை களை பயிற்றுவிப்பது. அப்போதுதான் அவர்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளை யும் சமாளிக்கும் உள்ள உறு தியைப் பெறுவார்கள். பெண் ணின் உயர்வை ஒத்துக்கொள் ளாத சமூகம் பெண்களை விலைப்பொருள்களாக ஒரு காலத்தில் விற்றார்கள். பெண் கள் பொதுச்சந்தையில் ஏலம் விடப்பபட்டார்கள். ஆண் களின் விலங்கு உணர்ச்சிகளுக்கு இரையாக விலைமாதர் என ஆக்கப்பட்டார்கள். ஆனாலும் பெண்தான் மேன்மையானவள், வேர்களால் தான் சமுதாயம் வாழ்கிறது.
அதிக ஆயுள் பெண்களுக்கே!

தமிழ் ஓவியா said...

உலகின் எல்லா நாடுகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக ஆண்டுகள் உயிர் வாழ் கிறார்கள். ஆண் இன்றி பெண் வாழ்ந்து விடலாம். ஆனால் பெண் உதவியின்றி ஆணுயிர் தோன்ற முடியாதது மட்டுமல்ல; உயிர் வாழவே முடியாது. பெண் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பெண்கள் குறைவா கவே நோய்வாய்படுகிறார்கள். நோய்ப்பட்டாலும் விரை விலேயே அக்கறையாக தங்களை குணப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் பெண்களிடம் தான் உண்மை, அழகு, அன்பு, நேர்மை, நாணயம், உறுதியான நம்பிக்கை முதலான நோக்கம் உண்டு. பெண்களோடு நேர்மை யாக போட்டிப் போட திராணி யற்ற ஆண்கள் பெண்களை பலம் குறைந்தவர்களாக பரா மரித்து பாலியல் வன்முறையில் ஈடுபடுத்துவதுதான் கேவலம்; மனித குலத்திற்கு மகா கேவலம். கடந்த மூன்றாண்டுகளில் இந்தி யாவில் 67,775 பெண்கள் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டு அவற்றில் நீதிமனற்ங்களில் முறையான விசாரணையில் நிரூபிக்கப்டாமல் 16,672 பேர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள் ளார்கள். 121 கோடி மக்கள் வாழுகின்ற இந்த நாட்டின் தலைநகர் டில்லியில் பெண் களுக்குப் போதுமான பாது காப்பு தர இயலவில்லை என்று அமைச்சர்களே ஒப்புக் கொள் கிறார்கள்.

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீசுக்கும் அவரது மாணவர் பிளாட்டோ வுக்கும் நடைபெற்ற உரை யாடலில் முக்கிய கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. அதில் ஆண் - பெண் என்ற படைப்பு களில் யார் உயர்ந்தவர்? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார். ஆண் குதிரை செய்கிற எல்லா வேலைகளையும் பெண் குதிரை செய்துவிட முடியும். ஆனால் பெண் குதிரை செய்கிற தன் இனப்பெருக்கத்தை ஆண் குதிரையால் ஒருபோதும் செய்து விட முடியாது. அதாவது ஒரு ஆண் செய்யும் எல்லா வேலை களையும் பெண்ணால் செய்து விட முடியும். ஆனால் பெண் செய்கிற தாய்மை என்கிற ஒரு உன்னதக் கடமையை எந்த ஆணாலும் செய்ய முடியாது. ஆகவே ஆணைவிட பெண்தான் உயர்ந்தவர் என்று உறுதிப் படுத்துகிறார். அதுவேதான் உண்மையாக உலகெங்கும் உணரப்பட்டு வருகிறது.

ஆண் ஆதிக்க சமுதாயம் அமைந்து விட்ட காரணத் தினால் பெண்ணை அடிமைப் படுத்த எத்தனையோ உபாயங் களைச் செய்து வருகிறார்கள். பெண் குழந்தைகள் பிறந்த உடன் அதைக் கொன்று விடுவது - வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை ஆண்ட போதுதான் சட்டம் போட்டுத்தான் அதைத் தடுத்தார்கள். பால்ய விவாகம் தடை செய்யப்பட்டது. விதவை விவாகம் அங்கீகரிக்கப்பட்டது. 1929 முதல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தான் தந்தை பெரியார் பெண் களுக்குச் சொத்துரிமை வேண் டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். 1984 -ஆம் ஆண்டு அதை டாக்டர். கலைஞர் அவர்கள் அதை சட்டமாகச் செய்தார்கள்.

பெண்கள் என்றாலே அழகு தானா?

பெண் என்றால் அழகு. அவரது விரல்கள் மலர் போன் றவை - அவற்றின் நகங்களுக்கு சாயம் அடித்து, விரல்களில் கல்வைத்த மோதிரங்கள் பல டிசைன்களில் அணிவித்து கை களில் மருதாணியில் சித்திரங்கள் வரைந்து தங்க வளையல்களில் கல் பதித்துப்பூட்டி கழுத்துக்கு அட்டிகை முதலான நகைகள் அணிவித்து, நீளமான தலை முடியில் சடையோடு பூவைப் பின்னி தலைநிறைய வாச மலர்களை சூடிக்கொண்ட பின், அந்த பெண்களே தங்களைக் கண்ணாடியில் பார்த்து பூரித்துப் போவார்கள்! அது போலவே காலில் சலங்கை கட்டிய கொலுசு, மெட்டிகள் எல்லாம் பெண்களின் மீது சந்தேகப்பட்டு அவர் எங்கே நடந்தாலும் கணவர் காதில் சத்தம் கேட்க வேண்டும் என்ப தற்காகவே போடப்பட்ட சலங்கைதான் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இந்த அலங்காரங்கள் ஒவ்வொன் றுமே அடிமைச் சங்கிலியின் வளையங்கள் என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கும்படியாகவே அவர்கள் மூளைகளில் விளம்பர போதை ஏற்றப்பட்டிருக்கிறது. பெண்கள் நீளமான தலை முடியை வைத்துக் கொள்வதில் பெருமை கொள்வார்கள். அது தான் அதுதான் பெண். அடி மைத்தன்மையின் முதல்படி. ஒரு முரடன், ஒரு பெண்ணின் தலை முடியை கைகளில் வளைத்து பிடித்து விட்டால் அவனிட மிருந்து அந்தப் பெண் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் தப்பிக்க முடியாது. அப்படிப் பட்ட அடிமை விலங்கைப் பெண்கள் நினைத்துப் பெரு மைப்படும்படியாகச் செய்து விட்டார்கள்.

தமிழ் ஓவியா said...


சிவராத்திரியின் யோக்கியதையைப் பாரீர்!



சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங் களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் படுத்துக் கொண்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப் பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக் கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம். அன்று இரவு வேட்டை கிடைக் காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).

தமிழ் ஓவியா said...

அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின்மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ண மில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.

தமிழ் ஓவியா said...

அடுத்த கதை -

ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டி விட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பல காரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித் துக் கொன்றான். அன்று மகா சிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத் திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்ச கனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம். இந்தப் பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டி கைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத்தையும் விரயப்படுத் துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பாலியல் கொடுமைகள் ஒழிய பண்பட்ட சமூகமே தீர்வு!

திருச்சி, மார்ச் 10- பாலியல் கொடுமைகள் ஒழிய பண்பட்ட சமூகமே தீர்வு என வழக்கறிஞர் பானுமதி பேசினார். மகளிர் தினம் மற்றும் அன்னை மணியம்மையாரின் 93 ஆவது பிறந்த தின நிகழ்ச்சிகள், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது.

வரலாறு படைத்த மணியம்மையார் !

சீர்திருத்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் அன்னை மணியம்மையார். இந்நிலையை உருவாக்கி யவர் பெரியார். அரசியல் கட்சிகள் நடத்துவது எளிது, இயக்கம் அப்படியல்ல. தென்னிந்தியாவின் முதல் சீர்திருத்தவாதியாக மணியம்மையார் திகழ்ந்தார். மணியம்மையார் திருமணத்தைத் தூற்றிய பலர், பின்னாளில் அவர்களே வியக்கும் வரலாற்றைப் படைத்தவர். தன்னையே பார்ப்பது அழகல்ல

தமிழ் ஓவியா said...


ஆணும், பெண்ணும் என்றவர் பெரியார். அவர்கள் இணைந்து அமர வேண்டும். தனித் தனி நாற்காலிகள் தேவையில்லை. பெண்களுக்குத் தனி கல்லூரி, தனிப் பேருந்து எனப் பலவும் தனியாகவே இருக்கிறது. இது பாலியல் வேறுபாட்டை உறுதி செய்து கொண்டே இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக வேண்டும். பெண்கள் பிரச்சினைகள் ஆண்களுக்குத் தெரிய வேண்டும். பார்த்தவுடனே பெண் வருகிறார் என்ற சிந்தனை ஆண்களுக்கு வருகிறது. ஆண் வருகிறார் என்ற சிந்தனை இங்கு வருவதில்லை. சிந்தனைப் போக்கில் மாறுதல் வர வேண்டும். பெண்கள் அலங்கரித்துக் கொண்டு தங்களைத் தாங்களே திரும்பிப் பார்ப்பார்கள். தன்னைத் தானே திரும்பிப் பார்ப்பது அழகல்ல. தோற்றத்தை மறைப்பதற்கு மட்டும்தான் உடை தேவை. பெண்கள் அழகாக இருப்பதையே ஆணாதிக்க சமூகம் விரும்புகிறது. எனவே அலங்காரத்தை நிறுத்துங்கள். இயல்பாகவும், எளிமையாகவும் இருங்கள். பண்பட்ட சமூகம் வேண்டும்

திருமணம் முடிந்ததும், நல்ல மனைவியாகவும், நல்ல தாயாகவும் இருக்கவே பெண்கள் விரும்பு கிறார்கள். ஆனால் நல்ல கணவனாக, நல்ல தந்தையாக ஆண்கள் இருப்பதில்லை. சமூகமும் வலியுறுத்த வில்லை. நல்ல கணவர் கிடைப்பதற்காக நாம் படிக்கக் கூடாது. படித்து வெறும் தாயாக இருப்பதல்ல நம் வேலை? பெண்களுக்குப் பொருளாதாரம் கிடைத்தும், சமூகப் பங்களிப்புகள் வழங்கியும் விடுதலை கிடைக்க வில்லை. இன்னும் அடிமைதான். காரணம் மதங்கள். இந்திய ஆண்களுக்குப் பார்ப்பனப் பெண்ணடிமைத் தனம் வலுவாக ஊறிப்போயுள்ளது. பாலியல் வன்முறைகள் நித்தமும் தொடர்கிறது. அதற்கு கருத்து கூறவரும் ஆண்கள், "அரைகுறை ஆடைகளே காரணம்" என்கிறார்கள். மேலை நாடுகளை விடவா இங்கே ஆடைகள் இருக்கிறது? பெண்களுக்குத் தற்காப்புக் கலை வேண்டும் என்கிறார்கள். தற்காப்புக் கலைகளால் எத்தனைக் குற்றத்தைக் குறைத்துவிட முடியும்? காவல்துறை அதிகாரிகளால், பெண் காவலர்களுக்குப் பாலியல் கொடுமை நிகழ்கிறது. அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தும் பயன் என்ன ? எனவே ஆணுக்கும், பெண்ணுக்கும் பண்பட்ட சமூகமே பாதுகாப்பாக இருக்க முடியும். திமிர் இருக்கட்டும்!

ஒரு பெண் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால் திமிர் என்கிறார்கள், சம்பாதித்தால் திமிர், கணவனை, அவரின் பெற்றோரை, அவர் சார்ந்த குடும்பத்தைக் கவனிக்காமல் போனால் திமிர். இந்தத் திமிரை எதிர்த்தே பல கணவர்கள் விவாகரத்து வாங்கிவிட்டார்கள். திருமணம் முடிந்தால் ஒரு அடிமை கிடைக்கிறார் என்றே ஆண்கள் நினைக் கிறார்கள். அதற்கு மாறான எதுவும் இங்கே திமிராகப் பார்க்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் பெண் ஏதாவது சொன்னால், சம்பாதிக்கும் திமிர் என்கிறார்கள். இருக்கட்டுமே? பெண்களுக்குத் திமிர் இருக்கட்டுமே! ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய், ஒரு இலட்சம் என எவ்வளவு ஈட்டுகிறார்களோ அவ்வளவு திமிர் இருக்கட்டும். பணம் வைத்திருப் பவரே அதிகாரம் படைத்தவர் என்றுதானே இச்சமூகம் சொல்கிறது. காலம் காலமாய் பணமும், சொத்துரிமையும் ஆண்களுக்கு இருப்பதால்தானே அவர்களுக்குத் திமிர் இருக்கிறது. இங்கே மரியாதை என்பதே பணத்தின் மூலம் தானே வருகிறது. அதிகாரமும், திமிரும் ஆண்களுக்குப் பணத்தால் வருகிறது என்றால், அது பெண்களுக்கும் வரட்டும். பத்திரமான அடிமை!
பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் ஆண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். பெண்கள் மிகக் குறைவு. அப்படியென்றால் பெண்கள் எங்கே இருக்கிறார்கள்? வீட்டில் அடிமையாக, பத்திரமாக இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குக் கூட பத்திரமாய் அனுப்பி வைக்கிறார்கள். யாருக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்கிறார்கள் ? ஆண்களுக்கு எதிராக பாதுகாக் கிறார்கள். காரணம் இந்து மதக் கொடுமையால், பார்ப்பனிய சிந்தனையால் இங்கே ஆணாதிக்கம் தழைத்தோங்கி இருக்கிறது. இந்நிலைகள் ஒழிய வேண்டும். அதற்குப் பெரியார் கொள்கை ஒன்றுதான் வழி ! இதுபோன்ற நிகழ்சிகள் அதை முன்னோக்கி எடுத்துச் செல்லும், என வழக்கறிஞர் பானுமதி பேசினார்.

தமிழ் ஓவியா said...


வாழ்க நீ அம்மா, வையத்தின் நாட்களெல்லாம்!

எங்கள் அன்னையே,
இலட்சிய தீபமாய்
எங்கள் இதய மேடையில்,
என்றும் ஒளிரும்
அணையா விளக்கே!
பெரியார் புரட்சி
எரிமலைதான்
சிந்தனை வீச்சிலும்,
செயல்பாட்டிலும்!
மூப்பு எனும் நோய்
முட்டிச் சாய்க்காமல்
முழு வாழ்வையும் முட்டுக் கொடுத்து நிமிர்த்திய நித்திலமே!
தலைவரை 95இல்
கரை சேர்த்து
58இல் தன்னை
மூழ்கடித்துக் கொண்ட
தியாக தேசத்தின்
தலை நகரே!
நாத்திக இயக்கத்தைத்
தலைமை தாங்கி
நானிலமே அதிர
நடத்திக் காட்டிய
முதல் பெண்மணி எனும்
முத்திரையைப் பொறித்த
மூச்சுக் காற்றே!
உங்கள் எளிமையே
எங்கள் வலிமை!
உங்கள் தியாகமே!
எங்களின் பாதைக்கு
எச்சரிக்கை விளக்கு!
இராமன் கூட்டம்
இந்த மண்ணில்
இடம் பிடிக்க
இயன்ற மட்டும்
எகிறிப் பார்த்தும்
இயலவில்லை;
என்ன காரணம்
தெரியமா?
அன்னையே நீ
அன்று மூட்டிய
இராவண லீலா!
அந்த நெருப்பை
அணையவிடோம்!
முடிந்தால் அந்த
நெருப்பு நதியை
வடக்குப் பக்கமும்
திருப்புவோம்!
ஆமாம் இந்தியாவை
அடிமைப்படுத்த
ஆரியக் கூட்டம்
ராமன் வில்லை
கையில் எடுக்கிறது
இராவண லீலா எனும்
தத்துவத்தின்
எரிதழல்தான்
சாம்பல் ஊருக்கு - அதனை
அனுப்பி வைக்கும்
அணுகுண்டு!
சமுதாய தடத்தில் நீ
சமைத்துக் கொடுத்த
சமருக்கான அந்த ஆயுதம்
அரசியலுக்கும்
தேவைப்படுவதை
என்னென்போம்!
காவிமயமாக்க
கனவு காணும்
ஆரியத்தின் கர்ப்பத்தை
அடி தெரியாமல்
அழிக்கும்
பீரங்கியல்லவா
இராவண லீலா தத்துவம்!
அய்யாவின் தத்துவம்
அவர் வழி நின்ற
அன்னையின்
செயலாக்கம்
அயோத்தியின்
அடி வயிற்றையும்
கலக்கப் போகிறது!
கலகக் குரலையும்
கொடுக்கப் போகிறது!
காவியங்கள் புதிதாய்
காய்க்கப் போகின்றன
இராமாயணக் குழியில்
இராவணாயணம் மலரப் போகிறது!
யார் கண்டது?
அயோத்தி மேட்டில்
அய்யா, அம்மா சிலைகள்
முளைத்தாலும்
ஆச்சரியம் இல்இல!
அந்த நாளை எதிர்பார்த்து
அம்மா இன்றைக்கு உங்கள் சிலைக்கு
மாலை சூட்டுவோம்!
வாழ்க நீ அம்மா
வையத்தின்
நாட்களெல்லாம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


எங்களுக்கு எதிரிகள் இவர்களல்ல - ராஜபக்சேதான்! தமிழர் தலைவர் பேட்டி


சென்னை, மார்ச் 10- எங்களுக்கு எதிரிகள் குறுக்குச் சால் பாய்ச்சுபவர்களல்லர் - எங்களின் எதிரி ராஜபக்சேதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று மணியம்மையார் - பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து வெளியில் வந்த திராவிடர் கழகத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி களுக்கு அளித்த பதிலாவது.

இன்று மணியம்மையார் பிறந்த நாள், தம் வாழ்நாளையே தந்தை பெரியாரையும், அவர்தம் இலட்சியங்களையும், அய்யா உருவாக்கிய இயக்கத்தையும் கட்டிக் காத்திட தம் பொருள், உழைப்பு அத்தனையையும் அர்ப்பணித்த அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில், அவர்களின் தொண்டறத்தைத் தொடர உறுதி ஏற்கிறோம் என்று கூறிய தமிழர் தலைவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்தபோது குறிப்பிட்டதாவது:

டெசோவை குறை கூறுபவர்களைப் பற்றியோ, அது அறிவித்திருக்கும் முழு அடைப்புக்குறித்தோ குறை கூறுபவர்கள், குறுக்குச் சால் ஓட்டுபவர் களைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யவோ, விளக்கம் அளிக்கவோ எங்களுக்கு அவசியம் இல்லை. தேவையும் இல்லை, நேரமும் இல்லை.

எங்களுக்கு எதிரி எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கக் கூடிய ராஜபக்சேதான்.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் ஈனக்குரல்களைப் பற்றி நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?

டெசோவின் பயணமும், களமும் எந்த முட்டுக்கட்டைகளாலும் தடைபடாது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?



தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


வீண் விமர்சனம் வேண்டாம்; வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்!


ஈழத் தமிழர் பிரச்சினைக்கான களத்தில் ஒரு முக்கிய கால கட்டத்தில் டெசோ முகிழ்த்துக் கிளம்பியுள்ளது.

ஈழத் தமிழர்களின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், ஈழத் தமிழர் களுக்காக ஒரு சிறு புள்ளியை நகர்த்தினாலும் அதனை வரவேற்பார்கள். அப்படி வரவேற்கப் பக்கு வம் இல்லாத மூடிப் போட்ட மனம் உள்ளவர்களாக இருப்பவர்கள்கூட எதிர் விமர்சனங்கள் வைக்காமல் இருந்தாலே போதுமானது. டெசோவைப் பொறுத்த வரையில், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையில் மிகவும் தெளிவாகவே இருக் கிறார்கள்.

சென்னையில் இலங்கைத் துணைத் தூதர கத்தை முற்றுகையிடும் போராட்டம் டெசோ சார்பில் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெசோ தலைவர் மானமிகு கலைஞர் - அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்கூட (6.3.2013) வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு என்று முதிர்ச்சி கனிந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

டெசோ உறுப்பினரும் திராவிடர் கழகத் தலை வருமான மானமிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளிலும் இக்கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பிற அமைப்புகளுக்கு - அவற்றின் தலைவர்களுக்கு ஏனிந்த பொறுப் புணர்ச்சி ஏற்படவில்லை? ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் அது எமக்கே உரித்தானது என்று எப்படி காப்புரிமை கொண்டாடுகிறார்கள்? இந்த இடத்தில்தான் இவர்களின் பொறுப்பின்மையும், பொது நல நோக்கமின்மையும், பிரச்சினையின்மீது ஆழமான பிடிப்பு இன்மையும், பொதுப் பணியில் கடைப்பிடிக்க வேண்டிய தார்மீகப் பண்புகள் இன்மையும் பளிச் சென்றே புலப்படுகின்றன.

டெசோ சார்பில் சென்னையில் மாநாடு நடத்தப் பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எல்லாம் பங்கேற்கக் கூடிய மிக முக்கியமான மாநாடு இது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதற்குமுன் இந்த வகையில் மாநாடு நடத்தப்பட்டதும் இல்லை - நியாயமாக அதனை வரவேற்க வேண்டும்; முடியா விட்டால் குறைந்தபட்சம் வாயை மூடிக் கொண்டாவது இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் முதல் அந்தக் கூட்டணியில் சில எதிர்பார்ப்புகளை மனதில் பூடகமாக வைத்துக் கொண்டு இருந்தவர்கள் வரை எப்படியெல்லாம் எதிர்ப்பாட்டுப் பாடினார்கள்?

இலங்கையில் உள்ள புத்த பிக்குகள் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று கோரிக்கையை முன் வைத்ததைப் பார்த்த பிறகாவது - இலங்கை அரசின் அலறலைச் செவி மடுத்த பிறகாவது - அந்த மாநாட்டின் அருமையை புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?

காழ்ப்புணர்ச்சியின் காவலராக இருக்கக் கூடியவர்கள் இன்றுவரை அந்தக் கீழிறக்கத்தி லிருந்து தங்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என்பது வருந்தத்தக்கது. இவர்கள் எல்லாம்தான் மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஜெனிவாவில் - மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியாவை ஆதரிக்கச் செய்வது அவசியமா - இல்லையா? இதற்கு முதலில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தியாவை ஆதரிக்கச் செய்வதற்கான முயற்சியில் டெசோ செயல்பட்டு வருவது போல வேறு எவராவது - அமைப்பாவது செயல்படுவதுண்டா என்பதை சவால் விட்டே கேட்கிறது டெசோ.

நாளை தமிழ்நாடு தழுவிய அளவில் இதற்காக வேலை நிறுத்தத்திற்கு டெசோ வேண்டுகோள் விடுத்ததை வேறுவிதமாக திசை திருப்பும் கருத் துக்களைத் தெரிவிப்பது யாரை உற்சாகப்படுத்த?

இத்தகைய விமர்சனங்கள் சம்பந்தப்பட்டவர் களின் பொறுப்பற்ற மனப்போக்கைத்தான் பறை சாற்றும்; தங்களைத் தாங்களே இதன் மூலம் அம்பலப் படுத்திக் கொண்டு விட்டனர் என்றுதான் பொருள்.

இந்தப் பிரச்சினையில் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ள கருத்து - அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இது அந்த அமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடியது என்பதில் அய்ய மில்லை. சில நேரங்களில் சிலரால் திறக்கப்படும் வாய்கள் எதிர்காலத்தில் பல சிக்கல்களை வரவ ழைத்துக் கொள்ளக் கூடியவை. யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.

தமிழினப் பெருமக்களே, டெசோ கொடுத்துள்ள வேலை நிறுத்த அழைப்பு இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது - ஒத்துழைப்பைத் தாரீர்! 11-3-2013

தமிழ் ஓவியா said...


சபாஷ் கெலட்!


இராஜஸ்தான் மாநிலத்தைப் பாருங்கள்! பாருங்கள்! அம்மாநில காங்கிரஸ் அரசு ஓர் எடுத்துக்காட்டான செயலைச் செய்து, இந்தி யாவே அதனைத் திருப்பிப் பார்க்குமாறு செய்துள்ளது.

ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொள்ளும் இணையருக்கு ரூ.5 இலட்சம் வழங்குகிறது! மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது பழங்குடியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். மற்றொருவர் உயர் ஜாதியைச் சேர்ந்த வராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

ராஜஸ்தான் போன்ற ராம நாம மனப்பான்மை குடி கொண்டிருக்கும் மாநி லத்தில் ஜாதி ஒழிப்புக்காக, கவர்ச்சியான வசீகர மான வகையில் பரிசை அளித்திருப்பது அசாதார ணமானதே!

அந்த ராஜஸ்தான் மாநிலத்தில்தான் கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் வைத்துக் கொளுத்தும் உடன்கட்டை ஏறுதல் என்பது விசேடம். ரூப்கன்வர் கோயிலை மறக்கத்தான் முடியுமா? இந்த 21ஆம் நூற்றாண் டிலும் இந்துத்துவா எப்படி மதம் கொண்டு நிர்வாண ஆட்டம் போடுகிறது என்ப தற்கு அக்கோயில் கண் கண்ட சாட்சியமாகும்.

இந்தியாவில் குழந் தைகள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று, தங்குத் தடையின்றி ஏறுநடை போடுவதும் சாட்சாத் இந்த ராஜஸ்தானில்தான்.

மன்னர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் இந்த மண்ணில் மகுடந்தரித்து இன்றும் காணப்படுகின் றன. சொச்சங்களின் அந்தச் சரணாலயம்தான் இன்றைய பா.ஜ.க.,; அம்மாநிலத்தில் மன்னர் குடும்பத்தினர் இந்துத் துவா ரத்த ஓட்டமுள்ள பா.ஜ.க. என்னும் அரசியல் வேடந்தரிக்கும் அரண் மனையில் அரசோச்சு கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில், ஜாதி ஒழிப் புக்காக காங்கிரஸ் கட் சியைச் சேர்ந்த முதல் அமைச்சர் அசோக் கெலட் அட்டகாசமாக, புதிய ஆணையைப் பிறப்பித்து இந்தியத் துணைக் கண்டத் தின் பிடரியில் ஓர் அடி போட்டு அறிவித்துள்ளார்.

ஆம், வடக்கே பெரியார் தம் தாடியையும், தடியையும் காட்டத் தொடங்கி விட் டார். காங்கிரஸ் வெறும் அரசியல் சனாதனக் கட்சி யாக இல்லாமல், அசோக் கெலாட் தூக்கிப் பிடித் துள்ள சுடரை தொடர் ஓட்டமாக (Relay Race) எடுத்துச் செல்லட்டும் - காங்கிரஸ்மீது கூட முற் போக்கு முத்திரை படிய வாய்ப்புண்டே!

- மயிலாடன் 11-3-2013

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள்? எத்தனை எத்தனை குரல்கள்!


ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நேர் எதிரானவர்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன அதிகாரிகளும் என்பது உலகறிந்த உண்மை!

மத்திய அரசின் கொள்கைகளை இந்த மே(ல்)தாவிகள்தான் பெரிதும் வழிகாட்டி வகுக்கும் நிலை அங்குள்ளது!

இனமணி வைத்தியநாதய்யர் ஒரு கேள்வி கேட்கிறார் - இன்று தலையங்கத்தில்:

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்பற்றி (தீர்மான இறுதி வடிவம் முடிந்து விட்டதா என்று கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்) தீர்மானமில்லா தீர்மானம் என்று கூறுகிறார்! அவரது தீவிர உணர்வுக்கு ஷொட்டு கொடுக்கும் வேளையில், ஒன்றைக் கேட்கிறோம். இந்த தீர்மானம் இல்லா தீர்மானத்தை ரத்து செய்ய, தடுக்க, எதிலும் சம்மன் இல்லாது எங்கும் ஆஜராகும் சுப்ரமணியசாமி பார்ப்பனர்கள் இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் ஆலாய்ப் பறப்பதேன் - அனுமார் தாவல் செய்வது ஏன்?

மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு ஏடும் தலையங்கத் தடுமாற்றத்தில் வீழ்ந்து கிடக்க வேண்டிய அவசியம் என்னவோ!

பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! போற்றி!!

- என்று அண்ணா சொன்ன ஆரிய மாயை எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

தமிழ் ஓவியா said...


மறதியும் - மன்னிப்பும்!


மறதியைவிட மனிதனுக்குப் பெரும் குறைபாடு வேறொன்றுமில்லை.

கடமைகளை மறந்துவிட்டு காலங் கழித்தால் நாம் அடைய வேண்டிய இலக்குகளை கோட்டை விட்டு விடுவோம்; பிறகு வருந்துவதில் என்ன பயன்? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘It you don’t use it, you will lose it’
எதையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கத் தவறினால், அது உங்களுக்குப் பயனற்றதாக - அல்லது பயன்படுத்த லாயக்கற்றதாக ஆகி விடும்! மூளையும் அப்படித்தான்!

தந்தை பெரியார் அவர்களுக்கு 95 வயதில் கூட நல்ல நினைவு வன்மை இருந்தது; எங்களுக்கெல்லாம் மிகுந்த வியப்பாகக்கூட இருக்கும்; சில நேரங் களில் அய்யா சொல்வது எங்களுக்கு வேடிக்கையாகவும்கூட இருக்கும்.

என்னப்பா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது என்று அருகில் நின்று கொண்டி ருக்கும் எங்களைப் பார்த்துச் சொல் லுவார் அய்யா.

ஒரு முறை நான் லேசாக புன்ன கைத்தேன். அதைக் கவனித்து விட்ட தந்தை பெரியார் அய்யா ஏன் சிரிக் கிறாய்? என்று கேட்டார்.

நான் ஒன்றுமில்லை அய்யா, இந்த (95) வயதில் உங்களுக்கு மறதி உண்டு என்று சொல்லி சங்கடப்படுகிறீர்கள் ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கே ஏராள மறதி உண்டாகும்போது மறக் காது எங்களிடம் கேட்கும் நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே என்றேன். அமைதியாகச் சிரித்துக் கொண்டார்!

அருகில் இருந்த அன்னை மணியம் மையார் அவர்கள் உடனே ம் உங்கள் அய்யாவுக்கு பணம் வரவேண்டும் என்றால் மறதி இருக்காது; பணம் (எனக்கு) தர வேண்டுமென்றால் மட்டும் மறதி வந்து விடுமே! என்றார்!

அது மட்டுமா? இன்னும் வேடிக் கையாக, காது இப்போதெல்லாம் சரிவரக் கேட்பதில்லை என்று உங்க அய்யா சொல்லுவார்; ஆனால் பணம் பற்றி மெதுவாக நாம் பேசினால், அப்போது மட்டும் உங்க அய்யாவுக்கு எப்படியோ காதுகேட்கத் தவறாது; தவறவே தவறது என்றார் நகைச் சுவையாக!

அய்யாவின் மறதி வெகு அபூர்வம்! அதுபோலவே அவரது ஈரோட்டுக் குருகுல மாணவர் கலைஞர் அவர்களுக் கும் மறதி வருவதில்லை; நினைவாற்றல் அதிகம்.
பொதுவாக மறதி கூடாது என்பது வாழ்க்கைக்குத் தேவை என்ற போதிலும் கூட, மற்றவர் இழைத்த துன்பத்தை மறந்து விடுவதுதான் நல்லது.

அதற்கு மறதி எத்தகைய உற்ற துணைவன்? துன்பம் மட்டுமா? நமக்கு ஏற்பட்ட துயரத்தைக்கூட மறக்காமல் அது மனதை நிரந்தரமாக வாட்டிக் கொண்டே இருந்தால், தூக்கம் வருமா?

எனவே வாழ்க்கைக்கு மறதியும் தேவை. அகவாழ்வில் இலக்கியங்களில் தலைவன் - தலைவியை மறத்தல்தான் எத்தனைப் பெரும் சோகம்? பிரிவாற் றாமை இவற்றை உருவாக்குகிறது!

அதையும் சுட்டிக் காட்டுதல் தானே நியாயம்?

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோமால் என்ற சிலப்பதிகார தலைவியின் கூற்றுபற்றி எனது பேரா சிரியர் நண்பர்கள் கூறும், மேற்கோள் இன்னமும் என்னால் மறக்க இயல வில்லை!

மறப்பது மட்டும் போதாது; பல நேரங்களில் மன்னிக்கவும் நாம் ஆயத்தமாக வேண்டும். மறத்தல் சாதாரண குணம். மன்னிப்பது பெருங் குணம் - அருங்குணம்!
தண்டிப்பதைவிட உயர்வு மன்னிப்பது என்பது!

சில நேரங்களில் சிலர் மன்னிப் பார்கள், மறக்க மாட்டாது நினை விலேயே வைத்திருப்பார்கள். அது பழைய பாக்கியை தள்ளுபடி செய்து விட்ட பிறகும் சொல்லிக் காட்டும் கொடுமை போன்ற உறுத்தல் மனப் பாங்கு.

அதுவும் தவிர்க்கப்பட்டால் பிற ருக்கு நன்மை என்பதைவிட நமக்கு நிம்மதி; மகிழ்ச்சி, பண்பட்ட மனத்திற்கு நாம் உரியவர்களாகி உயர்ந்து நிற்போம் - இல்லையா?

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...


மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் நடந்தது என்ன?

ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேட்டில் காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காகத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் 10.3.2013 மதியம் 12 மணியளவில் அங்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் (நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது பிறகு தெரிய வந்தது) இளங்கோவனுக்கும், சுப. வீரபாண்டியனுக்கும் எதிராகக் குரல் எழுப்பினர்.

அப்போது பட்டினிப் போரில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் ஒருவரான பிரிட்டோ நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்; எங்கள் போராட்டத்திற்கு எல்லோரது ஆதரவும் தேவை. எனவே எங்கள் போராட்டத்தில் சிலர் உள்ளே புகுந்து இதனை அரசியலாக்கவேண்டாம் என்று ஒலி வாங்கி மூலம் கேட்டுக்கொண்டார். உடனே பந்தலில் இருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கலவரம் செய்தவர்களைப் பார்த்து,

வெளியேறு வெளியேறு, எங்கள் போராட்டத்தை அரசியல் ஆக்காமல், வெளியேறு வெளியேறு! என்று முழக்கமிட்டனர். அதன்பின், அந்தக் கலவரக் குழு கலைந்து சென்றது. இதுதான் அங்கு உண்மையில் நடந்தது.

தமிழ் ஓவியா said...


எது தகிடுதத்தம்?


போர் என்றால்

சாக மாட்டார்களா

என்று

தத்துவார்த்தம் பேசி

ஈழத் தமிழர்

படுகொலைக்கு

ஜெ போட்ட

கூட்டத்தினர் -

இலங்கைப் பிரச்சினையில்

இந்தியா

மூக்கை நுழைக்கலாமா?

அந்நிய நாட்டுப்

பிரச்சினையில்

இன்று நாம் நுழைந்தால்

நாளை இந்தியாவுக்குள்

அந்நியர்

தலையீடு

தலை தூக்காதா?

என்று

மேதாவித்தனத்தின்

மேளத்தைக் கொட்டியவர்கள்

ஈழத் தமிழர்களுக்காக

இருபதுக் குடம்

கண்ணீரைச்

சிந்துவது

தகிடுதத்தம் இல்லையா?

ஏமாறுவான் தமிழனெனத்

தப்புக் கணக்குப்

போட்டால்

வட்டியும் முதலுமாக

பாடம் போதிப்பர் -

துள்ள வேண்டாம்!

ஈழத் தமிழர்க்காக

எந்தமிழர் எழுந்தார்

ஏறு போல் என்றால்

ஏன் நோக்காடு?

வேலை நிறுத்தம்

வேலை செய்கிறது!

வீடணர் கூட்டம்

வெம்புகிறது

யாருக்குச் சேவகம்

செய்ய விருப்பமோ?

ராஜபக்சே விரைவில்

பாராட்டு வெகுமதி

கொடுப்பான் என்று

எச்சில் ஒழுகக்

காத்திருப்போருக்குக்

கிடைக்காமலா போகும்?

அண்ணாவின்

பெயர் வைத்து

அக்ரகாரக்

கொள்கையை

அன்றாடம்

ஆவர்த்தனம்

செய்வதும்

பூணூலுக்குப் புது

விளக்கம் கொடுத்து

தமிழர்களைச்

சூத்திரர்கள் என்று

இழிவுபடுத்துவதும்

அண்ணா சொன்ன

ஆரிய மாயையின்

அடையாளத்தைக்

காட்டுவதும்

அண்ணா தி.மு.க. என்றால்

அதன்

இலட்சணத்தை என்ன சொல்ல!

புத்த மார்க்கத்தில்

ஆரியம் அன்று

திராவிடர் இயக்கத்தில்

ஆரியம் இன்று என்று

வரலாறு வடித்து வைக்கும்

கல்வெட்டை

மறக்க வேண்டாம்!

- மின்சாரம்


(இன்றைய நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் புதுவகை தகிடுதத்தம் பொது வேலை நிறுத்தம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதைக்குப் பதிலடி இது).12-3-2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு, நீதி கோரி நடத்தும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது!


கலைஞருக்கு உலகத்தமிழ் அமைப்பு பாராட்டுக் கடிதம்!

தெற்கு கரோலினா (அமெரிக்கா) மார்ச் 12- அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப் பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெசோ அமைப்பை மீண்டும் கூட்டி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலைக்கு நீதி கோரி நீங்கள் போரட் டங்கள் நடத்தி வருவ தும் வரவேற்கத் தக்கது-பாராட்டுக்குரியது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர் களுக்கு மார்ச் 7ஆம் தேதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து எங்களுடைய அமைப்பு உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பிரச்சினை களை முன் எடுத்து வரு கிறது. உலகில் உள்ள மற்ற மக்களைப்போல தமிழ் மக்களுக்கும் அய்க் கிய நாடுகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ளபடி பிரிக்க முடியாத உரிமை களும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சுதந்திர மும் அவர்களது உயிர் களுக்கும், உடமைகளுக் கும் பாதுகாப்பும் கொண் டவர்கள் ஆவர்.

உலகத்தமிழ் அமைப்புகளில் உள்ள நாங்கள் தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சி லின் 22-வது கூட்டத் தொடரில் இலங்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வலு வான தீர்மாத்திற்கு இந் திய அரசு ஆதரவளிக்க நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மீண்டும் டெசோ அமைப்பைக் கூட்டி தமிழர்களுக்கு எதிராக சிங்கள இலங்கை அரசு தொடுத்த போர்க்குற்றங் களுக்கும் இனப் படு கொலைக்கும் நீதியும், பொறுப்பையும் கோரி போரட்டங்களை நடத்தி வருவதை நாங் கள் பாராட்டி வரவேற் கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந் தியா ஆதரிப்பதோடு மட் டும் நின்று விடாமல், ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் தீர்மானத்துக்கு திருத்தங் களையும் இந்தியா கொண்டு வர வேண்டும் என்று உங்களை அவசர மாகக் கேட்டுக் கொள் வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறாம்.
அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அதன் தலைவர் திருமதி நவ நீதம் பிள்ளை 11.2.22013 அன்று அளித்துள்ள அறிக்கையில் இலங்கை யில் உள்ள அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய பெருங்கொடுமைகளை, விசாரிக்க சுயேட்சையான நம்பகரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்திய அரசில் தங் களுக்குள்ள செல்வாக் குடனும் மற்றும் தங்க ளுக்கு தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆத ரவுடனும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரிக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து ஆதரிப் பதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

அய்.நா. மனித உரி மைகள் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இலங்கைப் பிரச்சினைகளில் இந் தியாவின் நிலையை எதிர்நோக்குகின்றன. எனவே விசாரணைக் கமிஷனுக்கு இந்தியா வின் ஆதரவு அந்த நாடு களின் வாக்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி தமிழர்களுக்கு வேண்டிய நீதி கிடைக்க உதவும்.

இது ஈழத் தமிழர்க ளுக்கு நீதியையும் ஒரு கௌரவமான அரசியல் தீர்வையும் கொண்டு வருவதற்கு ஒரு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாகும்.
இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பின் தலை வர் செல்வன் பச்சமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

(நன்றி: முரசொலி, 12.3.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே!



நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?

என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்

என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்

என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?

எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?

பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!

அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!

இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?

பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?

அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிவிடவில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?

குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே! - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?

கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?

சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?

மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!


வரும் 18 ஆம் தேதி மாவட்டத்
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

அய்.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதவேண்டும் என்ற மத்திய தேர்வாணையத்தின் புதிய விதிமுறை இந்தி பேசாத மக்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதால், அதனை எதிர்த்து வரும் 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி - ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசுவோர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தத்தம் தாய்மொழி பேசுவோர்க்கு மாபெரும் அநீதி யைச் செய்யும் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது?

இதுவரை அய்.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் எழுதலாம்.

அந்த முறை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். அதேபோல், விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும் பாடத்தையும் தமிழில் எழுத முடியும்.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது? தமிழ் இலக்கியத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்வு எழுத முடியும். அதேபோல, தாய் மொழியாகிய தமிழ் வழியில் படித்திருந்தால் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் பாடத்தினையும் தாய் மொழியாகிய தமிழிலும் எழுதலாம்.

தமிழ் ஓவியா said...


தமிழ் வழியில் படித்திருந்தால், தமிழில் எழுதுவ தற்குக் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் தேவைப் படுவர்.

இனிமேல் தமிழில் எழுதுபவர்கள், 25 பேர்களைத் தேடிப் பிடிக்கும் வேலையிலும் ஈடுபடவேண்டும் போலும்.

திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன - அவசியம்தான் என்ன?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித் திருந்தால், ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதவேண் டுமாம்.

பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒருமுறை இப்பொழுது திடீரென்று இப்படி மாற்றப்படவேண்டிய அவசியம் என்ன - தேவை என்ன?

ஏதோ ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தாய்மொழியில்தான் சிந்திக்க முடியுமே தவிர, வேறு மொழியில் அல்ல - இது கல்வி யாளர்கள் கணித்த ஒன்றாகும்.

பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புற மக்களே!

இந்தப் புதிய ஆணையினால் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களைத்தான் பெரிதும் பாதிக்கும்.

கடந்த பல ஆண்டுகாலமாக அய்.ஏ.எஸ். தேர்வு களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 35 பேர் இவ்வாண்டுகூட நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கிறார்கள்.

உயர்ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி!

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை, மனதை உறுத்துகிறது. இவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு செய்வதற்கான தந்திரம்தான் இந்தப் புதிய விதிமுறைகள்.

அய்.அய்.டி. போன்று அய்.ஏ.எஸ். என்பது அடித் தளத்து மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் சதி இதன் திரைமறைவில் உள்ளது.

ஏற்கெனவே இருந்த முறை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்கள் கூறப்பட்டுள் ளனவா?

எந்த யோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எந்தவிதமான, நியாயமான காரணங்களும் கூறப்படவில்லை.

இந்தி வாலாக்களுக்குக் கொண்டாட்டம்!

இந்தப் புதிய விதிமுறை, இந்தி வாலாக்களுக் குத்தான் கொண்டாட்டம். பல தலைமுறைகளாக ஆங்கில மொழி பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்குப் பெரிதும் பயன்படப் போகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான போக்கு இது என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்ட ரீதியாகவே நிலை நிறுத்தப்பட்டது.

இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தைக்கூடத் தந்தை பெரியார் அறிவித்து, மத்திய அரசின் உறுதிமொழியின் அடிப் படையில் அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்பொழுது மத்திய தேர்வாணையம் மறைமுக மாக இந்திக்கு ஆக்கம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தக் கொல்லைப்புற நுழைவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாடு அனுமதிக்காது - குறிப்பாக திராவிடர் கழகம் ஏற்காது.
18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

புதிய ஆணையை உடனடியாக விலக்கிக் கொண்டு இவ்வாண்டு முதற்கொண்டு, ஏற்கெனவே இருந்த முறையில் தேர்வு எழுதிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 18.3.2013 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழக மாணவரணி, இளைஞரணித் தோழர்கள் மற்ற அணிகளின் ஒத்துழைப்புடன் அதற்கான பணி களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13.3.2013

தமிழ் ஓவியா said...


இந்தியா-கறையைத் துடைத்துக் கொள்ளுமா?


டெசோவின் செயல்பாடுகள் எவ்வளவு சிறப்பானவை - காலத்திற்கு மிகவும் பொருத்த மானவை என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

வரும் 21 ஆம் தேதி ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் - அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பெரும்பாலான வாக்குகள் ஆதரவாகக் கிடைக் கும் என்று தெளிவாகி விட்டது என்றாலும், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

டெசோவின் நடவடிக்கைகள் அனைத்தும் மிக முக்கியமாக ஈழத் தமிழர்களின் நல் வாழ்வுக்காக, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிக முக்கியமான, இன்றியமையாத பணியில் மிகுந்த அக்கறையுடன், திட்டமிட்ட வகையில் தமது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருகிறது.

டெசோவில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் மீது தவறான பிரச்சாரம் ஒரு வகையில் செய்யப்பட்டு வந்தது; அவர்கள்கூட காலந்தாழ்ந்தாவது இந்தத் தலைவர்களின் உண்மையான ஈடுபாட்டை இப்பொழுது உணரும் வகையில் டெசோவின் செயல்பாடுகள் நேர்த்தி யாக அமைந்துள்ளன.

அதுவும், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தம் - முழு அடைப்பு - தமிழ் மண்ணின் உணர்வை உலகுக்கே உணர்த்திவிட்டது.

ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இடக்கு முடக்காக விமர்சனம் செய்பவர் கள் ஒரு பக்கம்; ஆட்சி அதிகாரம் தம்மிடம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்படியும் ஒடுக்கிவிடவேண்டும் என்று திமிர் முறித்து எழுந்த தமிழ்நாடு அரசு இன்னொரு பக்கம்;

தமிழர்கள் என்றாலே வேப்பங்காயாக நினைக் கும் பார்ப்பன ஊடகங்கள் மற்றுமொரு பக்கம்; இவ்வளவு அனல்களையும், மலைகளையும் கடந்து இந்தப் போராட்டம் தமிழர்களின் பேராதரவுடன் பெருவெற்றியை ஈட்டிவிட்டது.

தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் புதுச்சேரி மாநிலமும் புது அத்தியாயத்தைப் படைத்துவிட்டது.

இதற்குப் பிறகாவது புத்திக் கொள்முதல் பெறவேண்டியவர்கள் பெறவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

குதர்க்கம் பேசும் உள்ளூர்த் தமிழர்கள், தலைவர்கள், அமைப்புகள், தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய அனைத்தும் இனிமேலாவது தமிழ்நாட்டு மக்களின் உண்மையான உணர்வை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.

இந்திய அரசைப் பொறுத்தவரை அதற்கொரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்று கருதிடவேண் டும்.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஈழத் தமிழர்களுக்காக அது உதவி செய்துவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பொதுவாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியது இந்தியா என்ற நற்பெயருக்கு, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா அண்மைக்காலத்தில் அது நடந்துகொண்டு வந்துள்ள போக்கு பெருங்களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் பார்த்தாலும் இந்தியா தன் மீது படிந்துள்ள கறையைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் - அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தே தீரவேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். 13-3-2013

தமிழ் ஓவியா said...


அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...

பொது வேலை நிறுத்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
டெசோ சார்பில் டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 13- ஈழத் தமிழர் இன்னல் தீரவும், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்ககவேண்டுமென்று கோரியும்,

டெசோ இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி திங்கள் 8 ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - மார்ச் திங்கள் 5 ஆம் தேதியன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் - மார்ச் திங்கள் 7 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் கருத்தரங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து - மார்ச் 12 ஆம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

வழக்குத் தொடுத்தார்கள்

ஈழத் தமிழர்களுக்காகத்தான் இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத்திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத்திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தம் என் பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத் திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத் திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று அறிக்கை விட்டார்கள். வேறு சிலர் மறைமுகமாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத் தார்கள்.

அரசு தலைமை வழக்கறிஞரும் வேலை நிறுத்தத் திற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார். சிலர் இதனைத் திசை திருப்பும் முயற்சி என்றெல்லாம் ஊருக்கு முந்திக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டி குளிர்காய முயற்சித்தார்கள். அதையெல்லாம் மீறி கழக உடன் பிறப்புகளுக்கு உரிமையுடன் இதிலே கலந்து கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று இரண்டு நாள் உடன்பிறப்பு மடலில் கேட்டுக் கொண்டேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் அறிக்கை விடுத்தார்கள். டெசோ இயக் கத்தின் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மிகப்பெரிய வெற்றி!

அரசு சார்பில் பேருந்துகள் ஓடும் என்றார்கள். வணிகர் சங்கத்தின் சார்பில் கடைகள் திறந்து வைக்கப்படும் என்றார்கள். ஆனால், அவர்களையும் மீறி, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணே, எங்கள் ஊரில் ஒரு டீக்கடை கூடத் திறக்கவில்லை என்றும், அண்ணே எங்கள் மாவட்டத்தில் முழு வெற்றி என்றும், தலைவரே, பொது வேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றி என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள்.

தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு பேருந்துகளை ஓட்டு வதற்கு முயற்சி எடுத்தபோது கழகத் தோழர்கள் மறியல் செய்து எங்கள் மாவட்டத்தில் இத்தனை பேர் கைது, எங்கள் நகரத்திலே இவ்வளவு பேர் கைது என்று தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

தமிழகம் முழுவதிலும் அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பல ஊர்களி லிருந்து வந்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் தாங்களும் மறியல் செய்யப் புறப்பட்டுச் சென்று அவர்களும் கைதான செய்தி கிடைத்தது. இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்திய இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கித் தந்த வணிகப் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஏன் தமிழ் உணர்வு படைத்த பொதுமக்கள் அனைவருக்கும் டெசோ இயக்கத்தின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும், என் தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு; இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உரிய அக்கறை செலுத்தி, தெளிவான முடிவினை மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை, மார்ச் 14- இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம் என்று மாநிலங்களவையில் கனி மொழி எம்.பி. பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. மாநிலங்களவையில் பேசியதாவது:-

நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச் சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியி ருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன். இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட் டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில், இது எந்த மொழிக் கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற் சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழி யையும், கலாச் சாரத்தையும் பண் பாட்டையும், தங்கள் அடை யாளத்தையும் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கலைஞர் தனது 14ஆவது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதா ரண மாணவன். தனக்கு ஒரு பிரகாச மான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல மைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவ ருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர் களை நீங்கள் அவமானப்படுத்தக் கூடாது. இது போன்ற போராட்டங் களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப் பட்ட தலைவர்களின் போராட்டங் களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள். எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார்.

நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை. இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்பு கிறேன். காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்லர். இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியா விட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும். இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மை யினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல. இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், விழுமியங்கள், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.