Search This Blog

12.3.13

இந்து அற நிலையத் துறையின் வேலை என்ன?



தமிழ்நாட்டில் இந்து சமய அற நிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதி முதல் ஆன்மீகச் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று இந்து அற நிலையத்துறை ஆணை பிறப்பித் துள்ளது.


இது இந்து அற நிலையத்துறைக்குத் தேவை இல்லாத வேலை. இந்து அற நிலையத்துறையின் வேலை கணக்கு வழக்குப் பார்க்க வேண்டியது, கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பது, திருடாமல் பார்த்துக் கொள்வது தானே தவிர,  கோயில்களில் ஆன்மீகச் சொற்பொழிவை நடத்திக் கொண்டு இருப்பதல்ல.

ஏற்கெனவே இந்துக் கோயில்களை ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தங்களின் சங்கக் கட்டடமாகப் பாவித்துக் கொண்டு இருக்கின்றன. கோயில் திருவிழாக்கள் நடக்கும் போது இவர்கள் முன்னின்று சில காரியங்களில் ஈடுபடுகின்றனர்; பார்க்கிறவர்களுக்கு இவர்கள்தான் அந்தக் கோயில் திருவிழாவையே நடத்துவது போன்ற தோற்றத்தை எண்ணத்தை உருவாக்கி வருகின்றனர்.


இந்த நிலையில், கோயில்களில் ஆன்மீகச் சொற்பொழிவு என்ற பெயரால் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கொள்கைப் பிரச்சார மாகத்தான் அவை இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்களும் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவர்களாகத் தான் பொறுக்கி அழைக்கப்படுவார்கள். இது தேவை யில்லாத சர்ச்சையை உண்டு பண்ணும்!

இதன் மூலம் கோயில் என்பது பிரச்சினைக் குரிய இடமாக - வாதப் பிரதிவாதம் செய்யப்படும் மேடையாக மாறக் கூடிய நிலை ஏற்பட, அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

கோயிலில் சொற்பொழிவு என்று வரும்போது, கோயிலை வழிப்பாட்டு இடம் என்பதற்கு மாறாக பொதுக் கூட்ட மேடையாக மாறக் கூடிய நிலை தான் ஏற்படும்.

பழுத்த அனுபவம் பெற்ற கிருபானந்த வாரியாரே நெய்வேலியில் இரட்டைப் பொருளில் பேசப் போய், சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்பதெல்லாம் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

கோயில்களில் கந்த புராணத்தைப் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் பெண்களை வைத்துக் கொண்டு கந்தன் பிறப்பைப் பற்றி எல்லாம் பேச முடியுமா என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஸ்கந்தன் என்பதிலிருந்து தொடங்கும். அது இந்திரியம் என்ற பொருளை உடையது.

சிவபெருமானும், பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்தனர் என்றெல்லாம் பாகவதர் உபந்நியாசம் செய்ய ஆரம்பித்தால் அதன் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண் டாமா?


தமிழ் வருடப் பிறப்பு சித்திரை முதல் தேதியி லிருந்து தொடங்கப்பட வேண்டுமாம். இந்த தமிழ் வருடப் பிறப்புக் கதையே ஆபாசத்தில் புழுத்தது.

நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 குழந்தைகள்தான் பிரபவ என்று தொடங்கி அட்சய என்று முடியும் 60 வருஷங்கள் என்று உபந்நியாசம் செய்தால், பக்திச் சொற்பொழிவு கேட்க வரும் பெண்கள், கூனிக் குறுக மாட்டார்களா? பிள்ளைகளுக்குப் பக்தியின் பெயரால் ஆபாச நஞ்சை ஊட்டுவதாகாதா?


வைணவக் கோயில்களில் ஆண்டாளின் விரக தாபம் எடுத்த விகாரங்களை எல்லாம் பிரச்சாரம் செய்தால் புழுத்த நாய்கூட குறுக்கே போகாதே!

இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த டாக்டர்  நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் சிதம்பரம் கோயிலுக்கு அமைச்சர் என்ற முறையில் சென்ற நேரத்தில்கூட, அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கையால் கீழே போட்டு விட்டு, இந்து அறநிலையத் துறை அமைச்சரின் வேலை ஆறு மரக்கால் அரிசி சமையல் என்றால் அந்த அளவோடு மட்டும் இருக்கிறதா - அதற்குக் குறைவாகப் போட்டுக் கணக்குக் காட்டுகிறார்களா என்று பார்ப்பது தானே தவிர பக்திப் பரவசம் அடைவதல்ல  - சாமி கும்பிடுவதல்ல என்று சொன்னாரே - இந்து அற நிலையத்துறை அமைச்சர் சொன்னது அதிகாரி களுக்கும் பொருந்தக் கூடியதுதானே!


                 ------------------------ ”விடுதலை” தலையங்கம் 12-3-2013

55 comments:

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழருக்காக தமிழகம் எழுச்சி முழு வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி!



தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், பேரா. சுப.வீ. உட்பட தலைவர்கள் கைது

கைதாகுமுன் டெசோ தலைவர்களும், தோழர்களும்

தமிழ்நாடே ஸ்தம்பித்தது - இலட்சக்கணக்கில் தமிழர்கள் கைதுசென்னை, மார்ச் 12- சென்னையில் ஈழத் தமிழர்களின் உரிமை வாழ்வுக்காகவும், இனப்படு கொலையாளன் ராஜபக்சேவைக் கூண்டிலேற்ற வற்புறுத்தியும் ஜெனிவா மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் டெசோ விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (12.3.2013) தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம், கடையடைப்பு முழு வெற்றி பெற்று, தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி எரி மலையை உலக நாடுகளுக்கே உணர்த்தி விட்டது.

புதுச்சேரி மாநிலத்திலும் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றது.

சென்னையில் டெசோ தலைவர்கள் கைது

சென்னையில் இன்று 11.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை சந்திப்பில் மறியல் செய்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் உட்பட ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 49ஆவது முறையாக திராவிடர் கழகத் தலைவர் கைது செய்யப்பட்டார். கைதாகுமுன்னர் ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜபக்சேவுக்கு எதிரிகள் யார்? நண்பர்கள் யார் என்பதை இந்த அறப்போராட்டம் உணர்த்தி விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

கோவை - திருப்பூர் ஸ்தம்பித்தது

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெசோ பந்த்துக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 30,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இன்று காலை டெசோ அமைப்பு அழைப்பு விடுத்த முழு அடைப்புக்கு தமிழகத்தில் பேராதரவு கிடைத்து விட்டது. கடைகள் பெருமளவில் அடைக்கப்பட் டுள்ளன. தொழில் மாவட்டங் களான கோவை, திருப்பூரில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. கோவையில் ஆட்டோக்கள் பெருமளவில் ஓடவில்லை. கடைகளும் பெருமளவில் அடைக்கப் பட்டுள்ளன. திருப்பூரைப் பொறுத்தவரை அங்கு மட்டும் 10,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட் டுள்ளன. கடைகள் பரவலாக அடைக்கப்பட் டுள்ளன. அதேபோல பிற வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன

தமிழ் ஓவியா said...

வாகை சூடிய வாலாஜா

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற திமுகவினர் கைதாகி யுள்ளனர். சென்னை பீச் செல்லும் ரயிலை மறிக்க முயன்ற 100 பேரை காவல்துறை கைது செய்தது. இலங்கைக்கு எதிராக டெசோ சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. அய்.நா சபையில் அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரம் விழுந்தது

நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 500 பேர் கைதாகியுள்ளனர். விழுப்புரம் போராட்டத்தின் கை ஓங்கியதால் விழுந்தது.

திகைக்க வைத்த திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை கணக்குப்படி டெசோ அமைப்பு நடத்திய பொதுவேலைநிறுத்தம் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, ஜமுனாமத்தூர், போளூர், செங்கம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்து 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகரில் மட்டும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, செங்கம் இப்பகுதிகளில் 70 சதவீத கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. போளூர், ஜமுனா மத்தூர், கண்ண மங்களம் பகுதிளில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கைதிகள் காட்டிய உணர்வு
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து மதுரை சிறையில் விவேக், சத்தியமூர்த்தி ஆகிய இரண்டு கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண் டனர். சிறைத்துறை அதிகாரிகள் சமாதானம் பேசியும், அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர். டெசோ அமைப்பு சார்பில் நடத்தப் படும் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரி வித்தும் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள் வதாக தெரிவித்துள்ளனர் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்துறை சீறியது

செந்துறையில் ஒன்றிய செயலாளர் எம்.ஞான மூர்த்தி தலைமையில், திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் டெசோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேருந்து மறியல் செய்த அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பினர். மத்திய அரசு இலங்கை தமிழர் விவகாரத்தில் டெசோ அமைப்பின் வேண்டு கோளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். பின்னர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு எழுந்தது!

ஈரோடு மாவட்டத்தில் டெசோ அமைப்பு அறிவித்தப்படி வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடை கள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட இடங்களிலும் வணிகர்கள் தங்களு டைய கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர். ஈரோடல்லவா எழுச்சியுடன் எழுந்தது.

திடுக்கிட வைத்த திண்டுக்கல்

டெசோ அமைப்பின் பொதுவேலை நிறுத்ததை யொட்டி, திண்டுக்கல் நகரில் நேற்று திமுகவினர் கடைவீதிகளில் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் இன்று திண்டுக்கல் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே முன்னாள் அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட திமுகவினர் டெசோ அமைப் பின் கோரிக்கைகளை முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலம் வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரபாண்டி தலைமையில் கழகத் தோழர்கள் கைதாயினர்.

பலே, பலே பண்ருட்டி

பண்ருட்டியில் டெசோ அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கைதுபண்ருட்டி நான்குமுனை சந்திப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெசோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

திமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட டெசோ அமைப்பினர் திமுக அலுவலகத்தில் இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு வந்தனர். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

புதுக்கோட்டையில் போர்முரசு

புதுக்கோட்டையில் பந்த் நடத்துவதன் அவசி யத்தை விளக்கியமைக்காக திமுக திக தோழர்கள் மாவட்டச் செயலாளர் தலைமையில் கைது செய்யப் பட்டனர். இன்று பந்த் நடத்துவதற்காக கடந்த சில தினங்களாக திமுக மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் புதுக்கோட்டையின் கடைவீதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவரகளிடமும் விளக்கி வந்தனர். அதனை முடக்கும் விதமாக இன்று காலை திமுக மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு திக மாவட்டத் தலைவர மு.அறிவொளி உட்பட ஏராளமானோர் கணேஷ்நகர் காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப் பட்டனர்.

கைது செய்யப் பட்டோர் விவரம் திமுக மாவட்ட செயலாளர் பெரியண்ணன்அரசு திக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி நகரத் தலைவர் சு.கண்ணன் திமுக நகர செயலாளர் அரு.வீரமணி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்வரி முன்னாள் நகரமன்றத் துணைத் தலைவர் நைனாமுகம்மது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முரசொலிபாலு தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராசா தொழிலாளர் முன்னேற்றக் கவுன்சில் தலைவர் அ.ரெத்தினம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கமலா, நகர துணைச் செயலாளர் அப்புக்காளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் பண்பாட்டுக்கலை அணி துணை அமைப்பாளர் நாகராசன் நகர இளைஞரணி அமைப்பாளர் அரிகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சசிக்குமார் பிரபாகரன் நகர இளைஞரணி துணை அமைப்பாளரகள் கார்த்தி ஷாஜகான் என்கிற சேட்டு நகர துணை செயலாளர் கமலாபாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட அமைப்பாளர் என்.சாத்தையா ஹென்றி மகளிரணியைச் சேரந்த அமுதா வசந்தா உட்பட எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். இரண்டாவது கைதில் திக மாவட்ட செயலாளர் ப.வீரப்பன் நகர செயலாளர் ரெ.மு.தருமராசு மற்றும் திமுக தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடி காட்டிய தீரம்

கடைகளை அடைக்கச் சொல்லி ஊர்வலமாக சென்று காலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமையில தி.மு.க , தி.க தோழர்கள் மறியலில் ஈடுபட்டபோது நூற்றுக்கணக் கானோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டோர் விவரம். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி .திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் பிராட்லா, நகர திக செயலாளர் கலைமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் எஸ்.முரளி, நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டித்துரை, பாலசுப்பிரமணியம், நகர செயலாளர் துரை. கண்ணன், நகர துணைச் செயலாளர் துரை.நாக ராசன், மாணவரணி அமைப்பாளர் ஆனந்தன், செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜான் பீட்டர், ராம.அன்பழகன், சன்சுப்பையா, மாண வரணி பொறுப்பாளர் எஸ்.தங்கராசு, மும்பை மாநில தி.மு.க செயலாளர் ஜேசுதாசு, தி.மு.க ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் சிதம்பரம், எஸ்.அய்யப்பன் முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துசாமி, முனீஸ்வரன், மெ.பழனியப்பன் உள் ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

அனகாபுத்தூரில் அனல்

அனகாபுத்தூர் மாவட்ட செயலாளர் அனகை ஆறுமுகம், பெரியார் பெருந்தொண்டர் அனகாபுத் தூர் தலைவர் நாத்திக அரங்க சிவா, இளைஞரணி மண்டல அமைப்பாளர் சுரேஷ், இளைஞரணி செயலாளர் கே.விஜயகுமார், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சன் சரவணன் ஆகிய 5 கழகத் தோழர்கள் சங்கர் நகர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலை நிமிர்ந்த தாம்பரம்

தாம்பரம் மாவட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் தி.மு.க, தி.க ,வி.சி, திராவிட இயக்க தமிழர் பேரவை கழகத் தோழர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். தி.க மாவட்ட தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.சிகாமணி ஆகி யோருடன் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளர். தமிழர் இனவுணர்வின் தலை நிமிர்ந்த தாம்பரத்தில் பார்க்க முடிந்தது.

கடலூர் களை இழந்தது தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தலைமையில் தி.க நகர செயலாளர் தென்.சிவக்குமார் தலைமையிலும் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ.தாமரைச்செல்வன் தலைமையில் வி.சி தோழர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். சுப்பராயலு ரெட்டி திருமண மண்டபத்திலும் செங்குந்தார் திருமண மண்டபத்திலும் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடைகள் எங்கும் மூடப்பட்டுக் கிடந்ததால் நகரே களை இழந்து காணப்பட்டது.

நெய்வேலி நிமிர்ந்தது நகரில் தி.மு.க நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. தி.க.நகர தலைவர் ச.கண்ணன், நகர செயலாளர் இசக்கிமுத்து, கடலூர் மாவட்ட தி.க தலைவர் தண்டபாணி, வே.ராவணன், இரா.மாணிக்கவேல், இராசா, சிதம்பரம் ராமதாசு உள்பட கழகத்தோழர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. ஈழத் தமிழர்க்கான போராட்ட உணர்வில் நெய்வேலி நிமிர்ந்து நின்றது.

அரூர்

தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் 60 பேர் கைது. திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் முழு அடைப்பு வெற்றி. அண்ணா மலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பு களைப் புறக்கணித்து ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் திராவிடர் மாணவர் கழகத்தின் முயற்சியில் சரபோஜி கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரிக்குச் செல்லவில்லை. கல்லூரியின் வெளி யில் ராஜபக்சேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வடலூர்

வடலூரில் தி.மு.க. தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேர் கைது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகத் தோழர்கள் பாஸ்கரன், கண்ணன், குணா, ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் டி.வி.எம்.ஆர். சேகர் தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் கே. ஆறுமுகம், முன்னிலை யிலும், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன் தலைமையிலும், முகிலன் முன்னிலை யிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா நாராயணன் தலைமையிலும், நகர செயலாளர் திருமாதாசன் முன்னிலையிலும் ஏராளமான தோழியர் - தோழியர்கள் காஞ்சிபுரம் சாந்தி சாலையில் ஊர்வலமாக சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

இராசபாளையம்

தி.மு.க. தோழர் - திராவிடர் கழக மாநில இளைஞ ரணி செயலாளர் இல. திருப்பதி தலைமையில் திராவிடர் கழகத் தோழர்கள் 90 பேர் இராசபாளையத்தில் கைது.

தமிழ் ஓவியா said...


தீரமிக்க தென் சென்னை

தென் சென்னையில் தி.முக.. மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையில் 4000 பேர்கள் கைது. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் கடற்கரை சாலையில் கழகத் தோழர்கள் கைது. சென்னை சைதைப் பகுதியில் ஒரே ஒரு டீக்கடைகூட திறக்கப்படவில்லை. தென் சென்னை மாவட்டம் காமராஜர் சாலை குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பு தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட தி.க. மாவட்ட தலைவர் வில்வநாதன் இரா. பிரபாகரன், க. சதீஷ்குமார், விக்னேஷ், அப்துல்லா, கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், அரவிந்தன், சேட்டு, பெரியார் சேகர், துணைவேந்தன். மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வடசென்னை வழிகாட்டுகிறது

வடசென்னையில் ஆர்.டி. சேதுபதி தலைமையில் எட்டு இடங்களில் நடைபெற்ற மறியலில் 3000 பேர் கைது. கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.

மதுரையில் மகத்தான வெற்றி

மதுரை மாநகரத்திலும், புறநகரிலும் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது. திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே. செல்வம் தலைமையில் கழகத் தோழர்கள் கைது உசிலம்பட்டியலில் மண் டல தலைவர் மீ. அழகர்சாமி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பவுன் ராசா தலைமையில் கழகத் தோழர்கள் கைது.

கிருஷ்ணகிரி


கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தி.மு.க , தி.க.வி.சி, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சுமார் 2000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரியில் மாவட்ட செயலாளர் தி.செங்குட்டுவன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கைதானர்.

தமிழ் ஓவியா said...

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் பிவிஎஸ்.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் க.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கைது.

திராவிடர் கழகம் சார்பில் சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன்,மாவட்ட செயலாளர், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய தலைவர் மு.ராமசாமி, புலியாண்டியூர் கிளைக்கழக தலைவர் கி.ராஜா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

ஒசூர்

ஒசூரில் ஒன்றிய நகர செயலாளர் நிதியகுமார் , தி.க மாவட்ட துணை செயலாளர் வனவேந்தன் , பொதுக்குழு உறுப்பினர் மு.துக்காராம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது.

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் கைதாயினர். திராவிடர் கழக மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கைதாயினர்.

நேமேலி

வேலூர் மாவட்டம் நேமேலியில் காலை மணிக்கு நேமிலி ஒன்றிய செயலாளர் பி.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சு.லோகநாதன் கைதானார்.

ஆலங்குடி

ஆலங்குடியில் அறந்தாங்கி மாவட்ட தலைவர் பெ.ராவணன், ஒன்றிய தி.க தலைவர் இரா.இளங்கோ, நகர தி.க செயாளர் து.குமார் மற்றும் கழகத் தோழர் கள் தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.து.கே.தங்கமணி நகர தி.மு.க செயலாளர் எஸ்.வி.செல்வம், தி.மு.க தோழர்கள் ,விடுதலை சிறுத்தை கட்சி தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மங்கள மஹாலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் களேபரம்

டெசோ அமைப்பின் சார்பாக இன்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

கரூர் மாவட்ட தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. சார்பாக மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் இராஜேந்திரன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பரமத்தி சண்முகம், மாவட்ட துணை செயலாளர் இரா.பிரபு, தொழிலாளர் அணி கண்ணதாசன், மகளிர் அணி சிவகாம சுந்தரி, மகேஷ்வரி சுப்பிரமணி, பூவை ரமேஷ் பாபு. திராவிடர் கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மு.க.இராஜசேகரன், மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, மாவட்ட இளைஞரணி தே.அலெக்ஸ், ம.செகநாதன், காமராஜ், பெருமாள் உள்ளிட்ட 1594 பேர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து காவேரியம்மாள் திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்தனர்.

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் தி.மு.க. நகர செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் மற்றும் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கைது, வி.சி. நகர செயலாளர் செல்வம் தலைமையில் 30 மேற்பட்ட தோழர்கள் கைது. தி.க. மாவட்ட தலைவர் விடுதலை சந்திரன், நகர தலைவர் அண்ணாதுரை, நகர செயலாளர் விஜய் ஆனந்தன், மாவட்ட செயலாளர் கோபி. இமயவரம்பன், 610-க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டன

நாட்டின் நாலாத் திசைகளிலும் நடந்தது மறியல்

கொளத்தூர் பகுதியில் முரளிதரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது

மதுரவாயலில் சண்முகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது

ராமநாதபுரத்தில் ஜே.கே.ரித்திஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தி.மு.க. நகர செயலாளர் தலைமையில் 300 பேர் கைது சேலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் செய்த 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது. விழுப்புரம் - திருக்கோவிலூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.பி. ஆதிசங்கர் உள்ளிட்ட 300 பேர் கைது

உதகையில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது.

தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா தலைமையில் மறியல் செய்த 500 பேர் கைது

தென்சென்னையில் 9 இடங்களில் மறியல் செய்த சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஜெ. அன்பழகன் உள்பட நான்காயிரம் பேர் கைது.

திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது.

அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். திருவள்ளூரில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுதர்சனம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது.

கோவையில் மு. ராமநாதன் தலைமையில் மறிய லில் ஈடுபட்ட 300 பேர் கைது

தமிழ் ஓவியா said...


பொது வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி! டெசோ தலைவர்கள் பேட்டி


தமிழர் தலைவர் கி.வீரமணி

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, உரிமை வாழ்வுக்காக டெசோ முன் னின்று நடத்தும் முழு வேலை நிறுத்தம், தமிழ்நாடு அளவில் பரவலாக, வெகு சிறப்பாக நடந்திருப்பது வரவேற்கத் தக்கது.

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டுள்ளபடி எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் இல்லாத அளவுக்கு, வேலை நிறுத்தம், முழு அடைப்பு நடைபெற்றிருப்பது, மகிழ்ச்சியை அளிக்கிறது.

டெசோ இன்று நடத்தும் இந்தப் போராட்டம் அரசியலுக்கு அப்பாற் பட்டது. ராஜபக்சேவை நோக்கி எங்கள் போராட்டம் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் அமெரிக்கா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்ற இலக்கு நோக்கி எங்கள் போராட்டம்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி முடியா விட்டால் ஒதுங்கி இருக்க வேண்டும். ராஜபக்சேவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ராஜபக்சேவைப் பலப்படுத்தும் வேலையில் மற்றவர்கள் ஈடுபடக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

டெசோ தன் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

தளபதி மு.க. ஸ்டாலின் பேட்டி

டெசோவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தக் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நல் ஆதரவு கொடுத்துள்ளனர். அதற்காக டெசோ சார்பில் அதன் தலைவர் கலைஞர் சார்பில் நன்றி யினைத் தெரிவித்து கொள்கிறோம்.

காழ்ப்புணர்வு கொண்டு இந்தப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்து பார்க் கிறார்கள்.

ஏற்கெனவே ஜெனிவாவில் அமெ ரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுகவும் அதன் தலைவரும் கொடுத்த அழுத்தத்தினாலும் இந்தியா ஆதரவு கொடுத்தது.

இப்பொழுதும் இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக டெசோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண் டும் என்று கூறினார்.

எழுச்சித் தமிழர் தொல் - திருமாவளவன்

வேலை நிறுத்தம் பரவலாக வெற் றியை ஈட்டியுள்ளது பேருந்துகளும் பெரும்பாலும் ஓடவில்லை.

இந்தப் போராட்டம் ஏதோ திமுக நடத்துகிறது என்பதுபோல அரசியல் நோக்கோடு குறுக்குச்சால் ஓட்டுகின் றனர். இந்தப் போராட்டம் பிசுபிசுத்து போக வேண்டும் என்று ஆசைப் படுகின்றனர்.

இவற்றை எல்லாம் மீறிப் போராட்டம் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் காட்டும் இந்த உணர்வை இந்திய அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை: நாடாளுமன்றம் கிடுகிடுத்தது


ஜெனிவா தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன் றத்தில் இரு அவைகளிலும் திமுக உறுப்பினர் ஒலி முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பினர். இதன் காரணமாக இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப் பட்டன.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


ஆட்சியாளர்களின் பழிவாங்கும் போக்கா? அல்லது அலட்சியப் போக்கா?

டெசோ அமைப்பு போதிய கால அவகாசத்தில் 5.3.2013 அன்று ஈழத் தமிழர் இனப்படுகொலையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நடத்துவோம் என அரசுக்கும் காவல்துறைக்கும் அறிவிப்புக் கொடுத்தபின் ஜனநாயக முறையில் அமைதியாக எந்த சட்ட சீரழிவுக்கும் இடம் தராது நடந்து முடிந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண் டுள்ளனர். எவ்வளவு பேர் வருவார்கள் என்பது காவல்துறையின் புலனாய்வு துறைக்கும் தெரிந்திருக்கும். காவல்துறை யின் தடையை மீறி ஆயிரக்கணக் கானோர் கைதாவதற்கும் தயாராக இருப்பார்கள் எனவும் காவல் துறைக்கும் தெரிந் திருக்கும்.

தடையை மீறி ஊர்வலம் செல்பவர் களைக் கைது செய்வது, கைது செய்த பின் அவர்களை எங்கு கொண்டு செல்வது எப்படியெல்லாம் அவர்களுக்கு சட்டப் படியான வசதிகளைச் செய்து தருவது என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கும், திறமை மிகுந்த காவல்துறையினருக்கும் தெரியும்.

ஆனால் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயலுபவர்களை கைது செய்து அழைத்துச்செல்ல போதுமான வாகன வசதி செய்யவில்லை. காவல்துறையினர் தடையை மீறிச் செல்லும் கட்சிகளின் தலைவர்களை மட்டும் கைது செய்வது எனவும் தொண்டர்களை விட்டுவிடுவது என்ற மனப்போக்கில் இருந்தனர் காவல்துறையினர்.

தி.மு.க பொருளாளர் தளபதி திரு. மு,க.ஸ்டாலின் இதை அறிந்து தொண்டர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர்தான் நாங்கள் மேடையை விட்டு இறங்குவோம் என அறிவித்தபின் தொண்டர்களை வள்ளுவர் கோட்டத்தில் இருந்திட அனுமதித்தார்கள்.

பின்னர் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்து எழும்பூரில் உள்ள இராஜ ரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வர்கள் கோடை கடும் வெயிலில் மர நிழல் கூட இல்லாத இடத்தில் வெட்ட வெளியில் மாலைவரை நிற்க வைத் தார்கள். கலந்து கொண்ட கட்சித் தொண்டர்களில் மகளிர் கைக்குழந் தையுடன் வெயிலில் பட்ட கொடுமை சொல்ல முடியாதது. வெயிலில் நின்ற வர்கள் குடிக்கக்கூட தண்ணீர் இல் லாமல் அவதியடைந்தார்கள்.

மூத்த குடிமக்கள் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் துன்பப்பட்டார்கள். மகளிர் கழிவு அறை வசதியில்லாமல் சிரமப் பட்டார்கள். கைதாகி வைத்துள்ள அனை வரும் அரசியல் கைதிகள், அவர்களுக்கு சட்டப்படியான வசதிகள் செய்து தருவது ஆட்சியாளர்களின் காவல் துறையினரின் கடமை. அவசர காலத்தில் ஆட்சியாளர் கூட செய்ய துணியாத அளவு அரசியல் கைதிகளை இந்த அளவுக்கு இன்னலுக்கு ஆளாக்கியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

- சி.செங்குட்டுவன்
துணைத் தலைவர்,
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம், சென்னை

தமிழ் ஓவியா said...


எது தகிடுதத்தம்?


போர் என்றால்

சாக மாட்டார்களா

என்று

தத்துவார்த்தம் பேசி

ஈழத் தமிழர்

படுகொலைக்கு

ஜெ போட்ட

கூட்டத்தினர் -

இலங்கைப் பிரச்சினையில்

இந்தியா

மூக்கை நுழைக்கலாமா?

அந்நிய நாட்டுப்

பிரச்சினையில்

இன்று நாம் நுழைந்தால்

நாளை இந்தியாவுக்குள்

அந்நியர்

தலையீடு

தலை தூக்காதா?

என்று

மேதாவித்தனத்தின்

மேளத்தைக் கொட்டியவர்கள்

ஈழத் தமிழர்களுக்காக

இருபதுக் குடம்

கண்ணீரைச்

சிந்துவது

தகிடுதத்தம் இல்லையா?

ஏமாறுவான் தமிழனெனத்

தப்புக் கணக்குப்

போட்டால்

வட்டியும் முதலுமாக

பாடம் போதிப்பர் -

துள்ள வேண்டாம்!

ஈழத் தமிழர்க்காக

எந்தமிழர் எழுந்தார்

ஏறு போல் என்றால்

ஏன் நோக்காடு?

வேலை நிறுத்தம்

வேலை செய்கிறது!

வீடணர் கூட்டம்

வெம்புகிறது

யாருக்குச் சேவகம்

செய்ய விருப்பமோ?

ராஜபக்சே விரைவில்

பாராட்டு வெகுமதி

கொடுப்பான் என்று

எச்சில் ஒழுகக்

காத்திருப்போருக்குக்

கிடைக்காமலா போகும்?

அண்ணாவின்

பெயர் வைத்து

அக்ரகாரக்

கொள்கையை

அன்றாடம்

ஆவர்த்தனம்

செய்வதும்

பூணூலுக்குப் புது

விளக்கம் கொடுத்து

தமிழர்களைச்

சூத்திரர்கள் என்று

இழிவுபடுத்துவதும்

அண்ணா சொன்ன

ஆரிய மாயையின்

அடையாளத்தைக்

காட்டுவதும்

அண்ணா தி.மு.க. என்றால்

அதன்

இலட்சணத்தை என்ன சொல்ல!

புத்த மார்க்கத்தில்

ஆரியம் அன்று

திராவிடர் இயக்கத்தில்

ஆரியம் இன்று என்று

வரலாறு வடித்து வைக்கும்

கல்வெட்டை

மறக்க வேண்டாம்!

- மின்சாரம்


(இன்றைய நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் புதுவகை தகிடுதத்தம் பொது வேலை நிறுத்தம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதைக்குப் பதிலடி இது).12-3-2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு, நீதி கோரி நடத்தும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது!


கலைஞருக்கு உலகத்தமிழ் அமைப்பு பாராட்டுக் கடிதம்!

தெற்கு கரோலினா (அமெரிக்கா) மார்ச் 12- அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப் பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெசோ அமைப்பை மீண்டும் கூட்டி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலைக்கு நீதி கோரி நீங்கள் போரட் டங்கள் நடத்தி வருவ தும் வரவேற்கத் தக்கது-பாராட்டுக்குரியது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர் களுக்கு மார்ச் 7ஆம் தேதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து எங்களுடைய அமைப்பு உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பிரச்சினை களை முன் எடுத்து வரு கிறது. உலகில் உள்ள மற்ற மக்களைப்போல தமிழ் மக்களுக்கும் அய்க் கிய நாடுகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ளபடி பிரிக்க முடியாத உரிமை களும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சுதந்திர மும் அவர்களது உயிர் களுக்கும், உடமைகளுக் கும் பாதுகாப்பும் கொண் டவர்கள் ஆவர்.

உலகத்தமிழ் அமைப்புகளில் உள்ள நாங்கள் தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சி லின் 22-வது கூட்டத் தொடரில் இலங்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வலு வான தீர்மாத்திற்கு இந் திய அரசு ஆதரவளிக்க நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மீண்டும் டெசோ அமைப்பைக் கூட்டி தமிழர்களுக்கு எதிராக சிங்கள இலங்கை அரசு தொடுத்த போர்க்குற்றங் களுக்கும் இனப் படு கொலைக்கும் நீதியும், பொறுப்பையும் கோரி போரட்டங்களை நடத்தி வருவதை நாங் கள் பாராட்டி வரவேற் கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந் தியா ஆதரிப்பதோடு மட் டும் நின்று விடாமல், ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் தீர்மானத்துக்கு திருத்தங் களையும் இந்தியா கொண்டு வர வேண்டும் என்று உங்களை அவசர மாகக் கேட்டுக் கொள் வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறாம்.
அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அதன் தலைவர் திருமதி நவ நீதம் பிள்ளை 11.2.22013 அன்று அளித்துள்ள அறிக்கையில் இலங்கை யில் உள்ள அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய பெருங்கொடுமைகளை, விசாரிக்க சுயேட்சையான நம்பகரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்திய அரசில் தங் களுக்குள்ள செல்வாக் குடனும் மற்றும் தங்க ளுக்கு தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆத ரவுடனும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரிக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து ஆதரிப் பதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

அய்.நா. மனித உரி மைகள் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இலங்கைப் பிரச்சினைகளில் இந் தியாவின் நிலையை எதிர்நோக்குகின்றன. எனவே விசாரணைக் கமிஷனுக்கு இந்தியா வின் ஆதரவு அந்த நாடு களின் வாக்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி தமிழர்களுக்கு வேண்டிய நீதி கிடைக்க உதவும்.

இது ஈழத் தமிழர்க ளுக்கு நீதியையும் ஒரு கௌரவமான அரசியல் தீர்வையும் கொண்டு வருவதற்கு ஒரு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாகும்.
இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பின் தலை வர் செல்வன் பச்சமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

(நன்றி: முரசொலி, 12.3.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

S. Arul Selva Perarasan said...

பகுத்தறிவு?... பகுத்தறிவு?... உங்கள் பதிவெங்கும் பகுத்தறிவே!!!!!

தமிழ் ஓவியா said...



மனதை பிழிந்தெடுத்த காட்சி ஒன்று. ஒரு தாய் தனது இரண்டு பெண்களை அழைத்து வந்து ஒரு பூங்காவில் விளையாட வைத்து அழைத்து சென்றதை காண நேரிட்டது.

அந்த இரண்டு பெண்களும் பருவ வயதை எட்டியவர்களாக இருப்பார்கள், இருவருமே மன வளர்ச்சி குன்றியவர்கள்.

மனதிற்குள் பல கேள்விகள், இருவருக்கும் காலைக்கடன் முதல் குளிப்பது, உடைமாற்றுவது, மாதவிடாய் என பல பிரச்சினைகளுக்கும் அந்த தாயின் உதவி தேவை. இது குறித்து கவலை அந்த தாயின் முகத்திலே உணர முடிகிறது.

அந்த குழந்தைகளின் பெற்றோர் இருக்கும் வரை அவர்களுக்கு ஒரு ஆதரவு இருக்கும். அவர்களுக்கும் வயதாகி போனாலோ அல்லது அவர்கள் மறைவிற்குப் பிறகோ அந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நிலை????????????????

படைத்தவன் கடவுள் என்றால் அவனை..............அடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

- ராஜேஷ் தீனா

தமிழ் ஓவியா said...

செய்தியும்... சிந்தனையும்...

சிறீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து உற்செவர் நம்பெருமாள் நேற்று பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி (தெருத் தெருவாய் பிச்சையெடுத்தபடி) மேளதாளத்துடன் வர, ஆம்புலன்ஸ் ஒன்று இறந்தவர் உடலை ஏற்றியபடி எதிரே வந்ததைக் கண்டதும் சுவாமி புறப்பாடு பாதிவழியில் நிறுத்தப்பட்டு பெருமாள் மீண்டும் கோவில் வந்து சேர்ந்தார்!

சிந்தனையும்...

செத்துப்போனா இறைவனடி சேர்ந்தார்னு சொல்றீங்க! ஆம்புலன்ஸ்ல வந்த சடலத்தை பார்த்துட்டு அப்புறம் ஏன்டா அலறியடிச்சு ரிவர்ஸ் கீர் போட்டு ஆலயத்துக்கு ஓடுனார் பெருமாள்?

-கி.தளபதிராஜ் -

தமிழ் ஓவியா said...

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்




1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

நாம் மனிதர் வலைத்தளத்திலிருந்து...

தமிழ் ஓவியா said...

மகளிர் பெருமை மணியம்மையார்


வரலாற்றை ஆழ்ந்து படித்தால் ஆதிச் சமூகம் என்பது தாய் வழிச்சமூகமாகத்தான் இருந்ததுள்ளது என்பதை அறியமுடியும்.ஆனால்,காலப் போக்கில் பெண்களை இல்லத்தரசி(?)ஆக்கிவிட்டு குடும்பத்தலைவர்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள்.பொருள் தேடல் பின்னால் வருவாய் ஈட்டல் என்கிற முக்கியப் பணியை மட்டும் ஆண்கள் எடுத்துக்கொண்டனர். அதேநேரம் குழந்தைகளை ஈன்றல், வளர்த்தல், சமைத்தல், பெரும்பகுதி நேரம் பராமரித்தல் என பல பணிகள் பெண்களுக்கென ஆனது.

பெண்ணுரிமைக் குரல் ஒலிக்கத் தொடங்கிய காலத்தில்கூட பொது வாழ்க்கைக்குப் பெண்கள் வராமலேயே இருந்தனர். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்; அவையும் அரச மரபுப் பெண்களாக இருந்தனர். இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சில பெண்கள் ஈடுபட்டதுண்டு. அவர்களும் முழுமையாக ஈடுபட்டதாகச் சொல்லமுடியாது.அக்காலகட்டத்தில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில்,வைக்கம் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் பெரியாரின் மனைவி நாகம்மையாரும், கண்ணம்மையாரும்தான் தீவிரமாகக் களத்தில் குத்தித்தவர்கள் என்பதற்கு காந்தியாரின் வாக்குமூலமே ஆதாரம்.

இத்தகைய பின்புலத்தில் தமிழக வரலாற்றில்...அல்ல...அல்ல...இந்திய வரலாற்றிலேயே ஒரு பெண் தன்னை முழுமையாக பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்தார் என்றால், அவர் அன்னை மணியம்மையார்தான் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் ஒன்றுபட்ட உணர்வின் அடிப்படையில் அமைந்த சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர் என்பது அதிசயமல்ல; ஏனென்றால், உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திரப் போராட்டங்களிலும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏற்காத சமூகப் புரட்சி இயக்கத்தில் ஒரு பெண் தனது 23 ஆம் வயதில் இணைத்துக் கொண்டார் என்பது உலகில் வேறெங்கும் காணமுடியாத தனிச் சரித்திரம்.

கடவுள் ஒழிக, மதம் ஒழிக, ஜாதி ஒழிக என ஆயிரங்காலத்து மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடும் ஓர் இயக்கத்தில் இணைகிறார்; மூடநம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் பெண்ணினத்திலிருந்து ஒருவர் மட்டும் வருகிறார் என்பதைத் தமிழக வரலாறு அப்போதுதான் பதிவுசெய்கிறது.

தமிழ் ஓவியா said...

மணியம்மையாரின் பொதுவாழ்க்கை நுழைவு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது.இளம்வயதிலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் மணியம்மையார். தன் தந்தை வழியாக பெரியாரின் கொள்கைகளை அறிந்த அவர், அந்தக் காலப் பெண்கள் எவருக்கும் நாட்டம் இருந்திராத சமுதாயப் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தார் என்பதும் இதற்கு முன் தமிழகம் காணாதது. மணியமையாரின் தந்தையார் கனகசபை சுயமரியாதை இயக்கத்தவர். எனவே, அவர் அடிக்கடி பெரியாருக்கு கடிதம் எழுதுவது வழக்கம். பெரியாரின் 54 ஆம் வயதில் தனது உடல்நிலை குறித்து சலிப்புடன் இருந்த காலம்.அப்போது கனகசபை எழுதிய கடிதம் ஒன்றில் தங்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார். அதற்கு பதில் எழுதிய பெரியார், ``எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் மீஎன்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை. என்னவோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன், என்று தனது மனநிலையை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெரியாரின் மனநிலையை அறிந்த கனகசபை, மணியம்மையாரை (அப்போது அவரது பெயர் காந்திமதி)அழைத்துச் சென்று`இந்தப் பெண் தங்கள் கூட இருந்து தொண்டு செய்ய்யட்டும்என்று கூறினார்.பெரியாரிடம் இப்படி வந்தவர்தான் மணியம்மையார்.

பெரியாரிடம் தான் கொண்டிருந்த ஈடுபாட்டை அன்னை மணியம்மையாரே சொல்கிறார் கேளுங்கள்.``

``எனது இளம் வயதிலிருந்து அதாவது எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகிப் பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சிறிது நாள் களுக்குள்ளாகவே அய்யா அவர்களிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க ஆளாக்கி அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனத்தில் இறுத்தி அக்குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன். அவரும் என்னை ஒரு நாளும் பெயரிட்டு அழைக்காமல் அவர் உயிர் பிரியும் வரையிலும் அம்மா! அம்மா! என்று ஆயிரம் அம்மாக்களாய்த் தினமும் அழைத்த வண்ணமே இருப்பார். அந்த மழலை மொழியைத்தான் இனி நான் கேட்க முடியாதே தவிர, என் உள்ளம் மட்டும் மானசீகமாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அவரோடு நான் 30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அவரை விட்டுப் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11ஆம் நாள் வந்தடைந்த நான் அன்று முதல் இன்று வரை ஒரு நாளும் விட்டுப் பிரியாது மகிழ்ந்த நான் ஓர் ஆண்டாக இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடுநடுவே பிரிய நேர்ந்தது. 1972 செப்டம்பர் 17-ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே என்றும் இல்லாத அளவுக்கு வெகுசிறப்புடன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி அவரது திரு உருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு நானும், அது முடிந்ததும் அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதய வலி முதன் முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பும் என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும் அன்று வந்திருந்த நமதியக்க அன்புத் தோழர்கள் பட்டபாட்டையும், பின்னர் உடல் நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும் அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து அய்யா அவர்களிடம் சென்று, நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத் தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன்.

எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான் வேறில்லை என்று கூறி அவரை மகிழ்வித்தேன். அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனத்தில் அப்படியே இருக்கின்றன. இயற்கையை, வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் - வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய் விடுவாயோ என்றுதான் கலங்கினேன் என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார். அப்போது நான் அவரை ஊக்கப்படுத்துவதற்காகச் சொன்னேன்: இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா, எல்லோருக்கும் மரணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப் பற்றி வண்டிவண்டியாய்ச் சொல்வீர். கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது; எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு என்று சற்றுப் பொய்க் கோபத்துடன் கடினமாகச் சொன்னேன். உடனே தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும். மறக்க முடியாததும்கூட.

தமிழ் ஓவியா said...

சில சமயங்களிலே எனக்கும் அய்யா அவர்களுக்கும் சிறு சிறு சம்பவங்களுக் கெல்லாம்கூடச் சங்கடம் ஏற்படுவதுண்டு. அதுவும் அவர் நலத்தைப் பற்றிய அக்கறையினால் கடுமையாகக் கூட நடந்து கொள்வேன். அது தவிர அவர் மனது நோகும்படியாகவோ துயரம் தரும்படியாகவோ ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒன்று, இரண்டு சம்பவங்கள் நேர்ந்ததுண்டு. உடனே ஒரு சிறிது நேரத்தில் அய்யா அவர்களே முதலில் முந்திக் கொண்டு நான் கொண்டிருந்த வருத்தத்தைக் களைய முன் வந்து விடுவார். மற்றபடி பெரும்பாலும் அவர் குறிப்பறிந்து நடந்து கொண்டு அவர் தம் வேலைகளுக்கு எந்தவிதமான இடையூறும் தொந்தரவும் இன்றி கவனித்துத் தான் வந்தேன்.(விடுதலை 4.1.1974)

இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயச் சூழலில் பொது வாழ்வுக்கு வரும் பெண்கள் மீதான விமர்சனம் நேர்மையாக இருப்பதில்லை; நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இதே நிலைதான்.

சமுதாய,அரசியல் பணிகளின் மீதோ,சொல்லப்படும் கருத்துகள் மீதோ விமர்சனங்களை வைக்காமல், தனிப்பட்ட வாழ்வின் மீது வைக்கப்படும் விமர்சனங்களே அதிகமுள்ளன. (ஆண்களின் மீதும் இதே பார்வையில் விமர்சனக்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் குறைவு.) நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளும் மக்களின் பொதுப் புத்திக்குத் தீனி போடும் வன்மத்தில் ஈடுபட்டு, தனி மனித தாக்குதல்களைத் தொடுக்கின்றன.இந்தச் சூழ்நிலை சென்ற நூற்றாண்டில் அதிகம் இருந்திருக்கும்.காரணம் அப்போது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரத் தயங்கிய காலம்.அந்நிலையில் ஒரு பெண் தன்னைவிட 42 வயது அதிகமுள்ள ஒரு ஆணுடன் இணைந்து சமுதாயப் பணியாற்ற ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்துவந்த காலத்தில் அப்பெண் எத்தகைய இழிவுகளைத் தாங்கியிருக்கவேண்டும். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கொண்ட கொள்கைக்காக சளைக்காமல் போராடி வந்துள்ளார் என்பதே மணியம்மையாரின் சிறப்பு.

எலிகளுக்குக் கூட பூனையிடமிருந்து விடுதலை கிடைக்கலாம். ஆனால், பெண்களுக்கு ஆண்களால் ஒரு போதும் விடுதலை கிடைக்காது என்ற பெரியாரின் கருத்து. தமக்காக ஆண்கள் போராடவரமாட்டார்கள் என்ற கருத்து, பெரியாரின் இடையறாத பிரச்சாரத்தால் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டதன் விளைவே அரசியல் சமுதாயக் களங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதற்குக் காரணமாகும்.இத்தகைய சூழலில் பெண்கள் எப்படி இயங்க வேண்டும்-யாரை தமது முன்னோடியாகக் கொள்ளவேண்டும் என்பது முக்கியமாகும்.வெறுமனே தமது கணவருக்கு பதிலாளாக உள்ளாட்சிப் பொறுப்புகளில் வெற்றிபெறும் பெண்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதைப் பார்க்கிறோம். வெற்றிச் சான்றிதழ் பெற்ற கையோடு வீட்டிலேயே முடங்கிவிடுவதும், கூட்டங்களில் மட்டும் பெயருக்குப் பங்கேற்றுத் திரும்புவதுமாக இத்தகையவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை பெண்களின் சமுதாயப் பணிகளை வளர்க்க உதவாது.

பாதுகாத்த பெருமை!

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.

- அறிஞர் அண்ணா

தொடர்களுக்காக,ஆன்மீக மற்றும் சமையல் நிகழ்ச்சிகளுக்காக தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களாகவும், சினிமா செய்திகளைக் காண பத்திரிகைகளைப் புரட்டுபவர்களாகவும் பெண்கள் இருப்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு நீடிக்கப்போகிறது?

முகநூல்களிலும்,இணையப் பொழுது போக்குகளிலும் தமது நேரத்தைத் தொலைக்கும் இளம் தலைமுறைப் பெண்களின் நிலை மாறுவது எப்போது?

நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் சிக்கல்களை அறிந்துகொள்ளாமலும்,நம் இனத்தின் எதிர்காலம்,நம்மை உயர்த்திய இயக்கங்களின் வரலாறு,நம்முடைய இன்றைய உயர் நிலைக்குக் காரணமான தலைவர்களின் போராட்டங்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ளாமல் இருப்பதும் சரியா?

சினிமா நடிகைகளின் வாழ்வை அறிந்துள்ளதில் நூறில் ஒரு பங்காவது மணியம்மையார் போன்ற தலைவர்களின் சமுதாயப் பணியை அறிந்ததுண்டா? ஒரே ஒரு மாற்றுடையோடு, ஒரு குண்டுமணி அளவுத் தங்கத்தைக் கூட அணிந்து கொள்ளாமல், தமது தனி வாழ்க்கைக்கு என எழுதிவைக்கப்பட்ட சொத்தினைக் கூட தம் உறவினர்க்கு அளிக்காமல் பொதுவுக்கு என ஆக்கி, தம் மீதான இழிவுகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு துறவிக்கும் மேலாக வாழ்ந்து மகளிர் இனத்துக்கே பெருமை சேர்த்த மணியம்மையாரின் வாழ்க்கையே பெண்ணினத்தின் விடியலுக்குப் பயன்படும் பாடமாகும்

- மணிமகன்

தமிழ் ஓவியா said...

மனித இன நாகரிகத்தின் மலர்ச்சித் தட(ய)ங்கள்!!


மனித இனம், அடுத்தடுத்து, உருமலர்ச்சி (Evolution) பெற்ற நிலையில் உச்சகட்ட உயர்நிலையில் இருப்பது மதிமனிதன் அல்லது அறிவு மனிதன் (Homo sapien).

சேப்பியன் (Sapien) என்பதற்கு அறிவு என்பது பொருள். ஹோமோ என்பதன் பொருள் மனிதன் என்பதாகும்.

ஹோமோ சேப்பியன் என்றால் அறிவு மனிதன் (Man, the wise) என்பதாகும்.

மதி மனிதனின் வழித்தோன்றல் ஆகிய இன்றைய மனிதன் (Modern Man) வளர்ச்சி பெற்று, வளர்மதி மனிதன் (Homo Sapiens Sapien) எனப்படுகிறான். இந்த மனிதன் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவன்.

தமிழ் ஓவியா said...


மொழியின் முன்னோடி

வளர்மதி மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது.

வேளாண்மையில் மேலாண்மை

இந்நிலையில், வேளாண்மை பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்துகொண்டான்.

பயிர்த்தொழில்_அவன் உயிர்த்தொழில்:

முதலில், உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான்.

அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை. நிலநடுக்கடல் நாடுகளிலும், மய்யக் கிழக்கு நாடுகளிலும் 10 ஆயிரம் ஆண்டுகட்குமுன் இதைப் பயிரிடத் தொடங்கிவிட்டான்.

முதல் பயிர்த்தொழில் தொடங்கப்பட்டது தாய்லாந்தில்.

இதன் காலம் கி.மு. 9700ஆம் ஆண்டு. அதாவது, இற்றைக்கு 11700 ஆண்டுகட்கு முன்னர் வேளாண்மை அங்கு தோன்றிவிட்டது. இற்றைக்கு, 9000 ஆண்டுகட்குமுன் அய்ரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் மிகுதியாக விளையும் பார்லி லெவெண்டர் என்னுமிடத்தில் பயிரிடத் தொடங்கிவிட்டது. 8000 ஆண்டுகட்குமுன், மக்காச் சோளம் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது.

அரிசியின் அறிமுகம்

அரிசியை (நெல்) விளைவித்து, உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழகம். இது. 5000 ஆண்டுகட்கு முன்னர். ஆஃபிரிக்காவில் சோளம் பயிரிடப்பட்டது.

இற்றைக்கு, 8000 ஆண்டு (கி.மு. 6000) வாக்கில் ஆசியப் பகுதியில் சோயா பயிரிடப்பட்டது.

சுட்டாரய்யா ரொட்டி சுட்டாரய்யா!

மெசபடோமியர்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரொட்டி சுடத் தொடங்கினர்.

ஏரு பூட்டிப் போவாயே, அண்ணே! சின்னண்ணே!!
ஏர்த்தொழிலுக்கு உதவிய கலப்பை தோன்றி 10

ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கும்.

எருதுகள் பூட்டி உழும் வழக்கம் தோன்றி, 4000 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

தமிழ் ஓவியா said...

வீட்டுக்குப் பூட்டு

பூட்டு _ சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து, பழக்கத்துக்குக் கொண்டு வந்தவர்கள் அசீரியர்கள். அந்தக் காலத்து அசீரியா, தற்போதைய ஈராக்கின் வடபகுதியாகும். ஏறத்தாழ, 4000 ஆண்டுகளுக்கு முன்பே மரத்தாலான மிகப்பெரிய பூட்டு_சாவியை அவர்கள் பயன்படுத்தி வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலோகத்தால் பூட்டு_சாவி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் உரோமானியர்கள். அவர்கள் கையாண்ட முறையின் அடிப்படையில்தான் தற்போதைய பூட்டுசாவிகள் உருவாகின்றன.

வீட்டு விலங்குகள்

செம்மறியாடுதான் முதன்முதலாக வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது. இற்றைக்கு 11 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர். எருது போன்ற கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியது இற்றைக்கு 8500 ஆண்டுகளுக்கு முன்னர்.

நட்பின் நாயகம்

மனிதன், வேட்டையாடி உணவு திரட்டிய காலங்களில் அவனுக்கு உற்ற நண்பன் ஆக விளங்கிய நாற்கால் விலங்கு நாய்தான்! ஏறத்தாழ, 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே, மனிதனைப் பின்தொடர்ந்து அவனது முதல் நண்பனாய்த் திகழ்ந்த இனம் நாய்தான்!

நகரங்களின் அடிப்படையில் நாகரிகம் ஆற்றங்கரை ஓரத்திலே:

நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது; நிலையான இடத்தில் வாழ்க்கை தொடங்கியது. கூடாரங்கள் மறைந்தன; குடிசைகள் பிறந்தன; ஊர்கள் உருவாயின; நாளடைவில், நகரங்கள் எழுந்தன; வேளாண் பொருளியல், தொழிற்பொருளியலைப் போற்றி முன்னேற்றம் ஏற்பட்டது; ஆற்றங்கரைகளில் அமைந்த நகரங்களின் பின்னணியில் நாகரிகம் தோன்றி வளரத் தொடங்கியது. வளரும் நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணை

கி.மு.3100ஆம் ஆண்டு வாக்கில், ஓவிய எழுத்துகள் உருவாயின. நாகரிகத்தின் நல்லதொரு வளர்ப்புப் பண்ணையாக மெசபடோமியா கூறப்படுகிறது. எழுத்துகள் செம்மையாக உருவாயின. உருளைகள் (Wheels) இங்குதான் தோன்றியிருக்கலாம் என்பர் ஆய்வறிஞர்கள். நகர நாடுகள் (City States) முதலியவற்றின் பிறப்பிடம் இதுவே.

தனியுடைமைத் தத்துவம்

எகிப்து உழவர்கள் மண் வீடு கட்டினர். கி.மு. 3000 (இற்றைக்கு 5000)இல் மெசபடோமியா, சிரியாவைச் சேர்ந்தவர்கள் செங்கல் செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்தனர். மாபெருங் கட்டடங்கள் மாளிகைகள் ஆக எழும்பின. முடியாட்சி முறை முகிழ்த்தது; அடிமைகளை வைத்து வேலைவாங்கும் முறை (Serfdom) தோன்றியது. தனியுடைமைத் தத்துவம் பிறந்தது; தழைத்தது; நிலைத்தது.

சிற்றரசும் பேரரசும்

நகரங்கள் காலப்போக்கில் பலப்பல தோன்றின. இவை, சிற்றரசுகள் ஆயின; உலகின் முதல் நகரம் யூரக்; 7000_8000 ஆண்டு வாக்கில் யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையில் இது தோன்றியது; நகரை ஆள மன்னர்கள் உருவாயினர்; அவர்கள் வாழ அழகிய அரண்மனைகள்; அங்கே, கோட்டை -_ கொத்தளங்கள் எழும்பின. கி.மு. 2400ஆம் ஆண்டில் மெசபடோமியப் பேரரசு (Empire) சார்கான் என்பவரால் நிறுவப்பட்டது.

நானொரு சிந்து - திராவிடச் சிந்து:

4500 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளியில் மொகஞ்சதாரோ அரப்பா நகர நாகரிகங்கள் மலர்ந்தன. சிந்துவெளி நாகரிகம் திராவிடர் இனத்தின் சீரிய நாகரிகமாக விளங்கியது.

இந்த நாகரிகத்தை உலகறியச் செய்தவர். வணக்கத்துக்குரிய ஈராசுப் பாதிரியார் அவர்கள் ஆவர் (Rev. Fr. Heros).திட்டமிட்ட முறையில் (Planning System) நகரமைப்பு, கழிவு நீர், வடிகால் வசதிகள் கொண்ட உலகின் முதல் நகரமாக மொகஞ்சதாரோ அமைப்பு சீரிய வகையில் ஈடும் எடுப்பும் இல்லாது திகழ்ந்திருந்தது.

தமிழ் ஓவியா said...

உலோகங்களும் - உபயோகங்களும்

கி.மு-.6500இல் துருக்கியில் செம்புத்தாது (Copper Ores) கண்டெடுக்கப்பட்டது. கி.மு.5000இல் செம்பை உருக்கி எடுக்கத் தெரிந்திருந்தனர் மக்கள். மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் செம்புதான்! கி.மு. 3500_3000இல், உலோகத் தொழில்நுட்பம் மெசபடோமியாவில் தோன்றியது.

கி.மு. 3600இல், தாய்லாந்தில், பான்சியாங் சிற்றூரில் புதைகுழியில் வெண்கல ஈட்டிமுனை, வெண்கலச் சிலம்பு, கடகம் முதலியன கண்டுபிடிக்கப்பட்டன.

பொன்னை விரும்பும் பூமியிலே...

கி.மு.5000 ஆண்டு வாக்கில் பொன் (தங்கம்), வெள்ளி முதலான உலோகங்களையும் மெசபடோமியோ, எகிப்துப் பகுதிகளில் பயன்படுத்தத் தொடங்கினர். ஏறத்தாழ, கி.மு.1400 வாக்கில், இரும்பினாலான ஆயுதங்களும் அவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டன.

உழைக்கும் கைகளே! உருவாக்கும் கைகளே!

மரங்களைப் பயன்படுத்தி, பல கருவிகள் செய்யும் கைத்தொழில்கள் தோன்றின. கி.மு. 7000_6000 ஆண்டுவாக்கில், தானியங்கள் சேகரித்துவைக்கும் மண்பாண்டங்கள் செய்யப்பட்டன. முதலில், பச்சைக் களிமண்பாண்டங்களும், பின்னர் சுட்ட களிமண் பாண்டங்களும் செய்ய சுமேரியர்கள் வழிகாட்டினர்.

சக்கரங்களின் சாகசம்

விரைந்து சுழலும் சக்கரங்களின் உதவியால் யூரக் நகரில் கி.மு.3800 ஆண்டு வாக்கில், மண்பாண்டங்கள் வனையப்பட்டன.

சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னி...

கம்பளி, சணல் மூலம் துணி நெய்யப்பட்டது. சிந்துவெளிப் பகுதியில், பருத்தி பயிரிடத் தொடங்கியதும், அதிலிருந்து துணி நெய்யத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான்!

இறந்த உடலுக்கு இறுதி மரியாதை

இறந்த உடலைப் புதைக்கும் வழக்கம் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே! தோன்றிவிட்டது. இறந்த உடலுக்கு மலர்க்கொத்து வைத்து இறுதி மரியாதை செய்யும் வழக்கம் 60 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே! தோன்றிவிட்டது.

மெல்லப் புகுந்தது கடவுள்

தமிழ் ஓவியா said...

கி.மு.7000_6000 ஆண்டு வாக்கில் பெண் தெய்வ வழிபாடு நடைமுறைக்கு வந்துவிட்டது. இற்றைக்கு, ஏறத்தாழ 6000 முதல் 7000 ஆண்டுகளுக்குமுன் கடவுள் வழிபாடு தோன்றியது. சடங்குகள், வழிபாடுகள், மதங்கள் முதலானவை அன்றைய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு ஏற்கத் தொடங்கின. வீரம், செல்வம், கலை இவற்றிற்கெனவும், ஆக்கல், காக்கல், அழித்தல் இவற்றிற்கெனவும் தனித்தனிக் கடவுள்கள் கற்பிக்கப்பட்டன.

நாகரிக வளர்ச்சிப் பாதையில் நடைபோட்ட மனித இனம் கையும் கையும் பேசியது அன்பால் அன்றோ?

முதலில், நாக்கு செய்யும் பணியைக் கை செய்தது; இந்தச் செய்கை மருவி சைகை எனப்பட்டது. கைகளைக் கொண்டே கருத்துப் பரிமாற்றம் கனகச்சிதமாக நடந்துவந்தது!

நண்பேண்டா

இன்றும், நாம், கைகூப்பி வணங்குவது, வலக்கையை உயர்த்தி அசைப்பது, ஒருவகை சைகை மொழிதான்? கையோடுகை குலுக்குவதும் சைகை மொழிதான்! உன்னுடன் இணைந்து நட்பாக _ நண்பனாக இருக்க விரும்புகிறேன்! என்பது இதன் பொருள் ஆகும். பின்னர், கைமொழி வாய்மொழி ஆனது.

தமிழ் ஓவியா said...

கூடி வாழும் குடும்பம்

கைமொழி வாய்மொழியாக மாறுதல் அடையும்போதே, நாகரிகமும் பண்பாடும் படிப்படியாக வளர்ந்துகொண்டே வந்தது. ஆடை அணிகலன்கள், முடி ஒப்பனை முதலானவற்றில் மாற்றங்கள் தோன்றின. ஆண்_பெண் பிணைப்பால் குடும்பம் உருவாகியது. குடும்பத்தில் புதிய உறுப்பினராகக் குழந்தை(கள்) தோன்றியது; தோன்றின. சிற்றூர், பேரூர், நகரம், மாநகரம் உருவாகக் குடும்பம் அடிப்படையாயிற்று; குடும்பம் குடி ஆயிற்று.

பண்பாட்டு வளர்ச்சிப் பயணம்

தன்னலமும், பொதுநலமும் கொண்ட நடைமுறைச் சமுதாயம் உருப்பெறலாயிற்று. மனிதனின் எண்ண ஓட்டம், கற்பனை வளம் முதலியன, கோட்பாடுகள், அறநெறிகள், ஒழுங்குமுறைகள் பண்பாட்டு வளர்ச்சியின் சின்னமாக விளங்கியது. இயற்கையிலிருந்து, பல வகைகளில், பல நிலைகளில் ஆற்றல் பெறும் அரிய திறன்களை வளர்த்துக் கொண்டது.

சரித்திரம் தொடங்கும் சந்தர்ப்பம்

மனிதனின் மற்றுமொரு சாதனை எழுதக் கண்டுபிடித்தது. எப்பொழுது எழுதக் கற்றுக் கொண்டானோ அப்பொழுது முதலே வரலாறும் தொடங்கிவிட்டது. பேச்சு _ எழுத்து, மாந்த இன முன்னேற்றப் பாதையில் விரைவு நடை போட உதவின.

அறிவியல் வளர்ச்சியின் அரவணைப்பில்:

பொறிகளின் கண்டுபிடிப்புகளும் அறிவியல் வளர்ச்சியும் அவற்றின் பயன்பாடும் மனித இனத்தின் மாபெரும் மலர்ச்சியாகவும் நாகரிக வளர்ச்சியாகவும் திகழ்ந்தன. மின்னணுக்களின் (Electronics) பயன்பாடு, மின்சாரத்தின் (Electricity) தாக்கம் நாகரிகத்தின் உச்சகட்டமாக இன்று நடனமிடுகிறது.

இனியும் வளர்ச்சிகள் தொடரட்டுமே!

இந்த மலர்ச்சியும், வளர்ச்சியும் தொடர்ந்து கொண்டே, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது; இருக்கிறது; இருக்கும். மேலும் மேலும், மனித இனத்தின் நாகரிகத்தின் வளர்ச்சி தொடரும்; தொடர வேண்டும். தொடரட்டுமே!!

தமிழ் ஓவியா said...

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே!



நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?

என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்

என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்

என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?

எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?

பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!

அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!

இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?

பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?

அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிவிடவில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?

குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே! - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?

கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?

சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?

மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!


வரும் 18 ஆம் தேதி மாவட்டத்
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

அய்.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதவேண்டும் என்ற மத்திய தேர்வாணையத்தின் புதிய விதிமுறை இந்தி பேசாத மக்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதால், அதனை எதிர்த்து வரும் 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி - ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசுவோர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தத்தம் தாய்மொழி பேசுவோர்க்கு மாபெரும் அநீதி யைச் செய்யும் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது?

இதுவரை அய்.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் எழுதலாம்.

அந்த முறை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். அதேபோல், விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும் பாடத்தையும் தமிழில் எழுத முடியும்.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது? தமிழ் இலக்கியத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்வு எழுத முடியும். அதேபோல, தாய் மொழியாகிய தமிழ் வழியில் படித்திருந்தால் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் பாடத்தினையும் தாய் மொழியாகிய தமிழிலும் எழுதலாம்.

தமிழ் வழியில் படித்திருந்தால், தமிழில் எழுதுவ தற்குக் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் தேவைப் படுவர்.

இனிமேல் தமிழில் எழுதுபவர்கள், 25 பேர்களைத் தேடிப் பிடிக்கும் வேலையிலும் ஈடுபடவேண்டும் போலும்.

திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன - அவசியம்தான் என்ன?

தமிழ் ஓவியா said...


தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித் திருந்தால், ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதவேண் டுமாம்.

பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒருமுறை இப்பொழுது திடீரென்று இப்படி மாற்றப்படவேண்டிய அவசியம் என்ன - தேவை என்ன?

ஏதோ ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தாய்மொழியில்தான் சிந்திக்க முடியுமே தவிர, வேறு மொழியில் அல்ல - இது கல்வி யாளர்கள் கணித்த ஒன்றாகும்.

பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புற மக்களே!

இந்தப் புதிய ஆணையினால் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களைத்தான் பெரிதும் பாதிக்கும்.

கடந்த பல ஆண்டுகாலமாக அய்.ஏ.எஸ். தேர்வு களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 35 பேர் இவ்வாண்டுகூட நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கிறார்கள்.

உயர்ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி!

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை, மனதை உறுத்துகிறது. இவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு செய்வதற்கான தந்திரம்தான் இந்தப் புதிய விதிமுறைகள்.

அய்.அய்.டி. போன்று அய்.ஏ.எஸ். என்பது அடித் தளத்து மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் சதி இதன் திரைமறைவில் உள்ளது.

ஏற்கெனவே இருந்த முறை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்கள் கூறப்பட்டுள் ளனவா?

எந்த யோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எந்தவிதமான, நியாயமான காரணங்களும் கூறப்படவில்லை.

இந்தி வாலாக்களுக்குக் கொண்டாட்டம்!

இந்தப் புதிய விதிமுறை, இந்தி வாலாக்களுக் குத்தான் கொண்டாட்டம். பல தலைமுறைகளாக ஆங்கில மொழி பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்குப் பெரிதும் பயன்படப் போகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான போக்கு இது என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்ட ரீதியாகவே நிலை நிறுத்தப்பட்டது.

இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தைக்கூடத் தந்தை பெரியார் அறிவித்து, மத்திய அரசின் உறுதிமொழியின் அடிப் படையில் அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்பொழுது மத்திய தேர்வாணையம் மறைமுக மாக இந்திக்கு ஆக்கம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தக் கொல்லைப்புற நுழைவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாடு அனுமதிக்காது - குறிப்பாக திராவிடர் கழகம் ஏற்காது.
18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

புதிய ஆணையை உடனடியாக விலக்கிக் கொண்டு இவ்வாண்டு முதற்கொண்டு, ஏற்கெனவே இருந்த முறையில் தேர்வு எழுதிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 18.3.2013 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழக மாணவரணி, இளைஞரணித் தோழர்கள் மற்ற அணிகளின் ஒத்துழைப்புடன் அதற்கான பணி களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13.3.2013

தமிழ் ஓவியா said...


இந்தியா-கறையைத் துடைத்துக் கொள்ளுமா?


டெசோவின் செயல்பாடுகள் எவ்வளவு சிறப்பானவை - காலத்திற்கு மிகவும் பொருத்த மானவை என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

வரும் 21 ஆம் தேதி ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் - அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பெரும்பாலான வாக்குகள் ஆதரவாகக் கிடைக் கும் என்று தெளிவாகி விட்டது என்றாலும், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

டெசோவின் நடவடிக்கைகள் அனைத்தும் மிக முக்கியமாக ஈழத் தமிழர்களின் நல் வாழ்வுக்காக, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிக முக்கியமான, இன்றியமையாத பணியில் மிகுந்த அக்கறையுடன், திட்டமிட்ட வகையில் தமது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருகிறது.

டெசோவில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் மீது தவறான பிரச்சாரம் ஒரு வகையில் செய்யப்பட்டு வந்தது; அவர்கள்கூட காலந்தாழ்ந்தாவது இந்தத் தலைவர்களின் உண்மையான ஈடுபாட்டை இப்பொழுது உணரும் வகையில் டெசோவின் செயல்பாடுகள் நேர்த்தி யாக அமைந்துள்ளன.

அதுவும், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தம் - முழு அடைப்பு - தமிழ் மண்ணின் உணர்வை உலகுக்கே உணர்த்திவிட்டது.

ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இடக்கு முடக்காக விமர்சனம் செய்பவர் கள் ஒரு பக்கம்; ஆட்சி அதிகாரம் தம்மிடம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்படியும் ஒடுக்கிவிடவேண்டும் என்று திமிர் முறித்து எழுந்த தமிழ்நாடு அரசு இன்னொரு பக்கம்;

தமிழர்கள் என்றாலே வேப்பங்காயாக நினைக் கும் பார்ப்பன ஊடகங்கள் மற்றுமொரு பக்கம்; இவ்வளவு அனல்களையும், மலைகளையும் கடந்து இந்தப் போராட்டம் தமிழர்களின் பேராதரவுடன் பெருவெற்றியை ஈட்டிவிட்டது.

தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் புதுச்சேரி மாநிலமும் புது அத்தியாயத்தைப் படைத்துவிட்டது.

இதற்குப் பிறகாவது புத்திக் கொள்முதல் பெறவேண்டியவர்கள் பெறவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

குதர்க்கம் பேசும் உள்ளூர்த் தமிழர்கள், தலைவர்கள், அமைப்புகள், தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய அனைத்தும் இனிமேலாவது தமிழ்நாட்டு மக்களின் உண்மையான உணர்வை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.

இந்திய அரசைப் பொறுத்தவரை அதற்கொரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்று கருதிடவேண் டும்.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஈழத் தமிழர்களுக்காக அது உதவி செய்துவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பொதுவாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியது இந்தியா என்ற நற்பெயருக்கு, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா அண்மைக்காலத்தில் அது நடந்துகொண்டு வந்துள்ள போக்கு பெருங்களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் பார்த்தாலும் இந்தியா தன் மீது படிந்துள்ள கறையைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் - அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தே தீரவேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். 13-3-2013

தமிழ் ஓவியா said...


அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...

பொது வேலை நிறுத்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
டெசோ சார்பில் டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 13- ஈழத் தமிழர் இன்னல் தீரவும், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்ககவேண்டுமென்று கோரியும்,

டெசோ இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி திங்கள் 8 ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - மார்ச் திங்கள் 5 ஆம் தேதியன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் - மார்ச் திங்கள் 7 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் கருத்தரங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து - மார்ச் 12 ஆம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

வழக்குத் தொடுத்தார்கள்

ஈழத் தமிழர்களுக்காகத்தான் இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத்திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத்திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தம் என் பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத் திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத் திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று அறிக்கை விட்டார்கள். வேறு சிலர் மறைமுகமாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத் தார்கள்.

அரசு தலைமை வழக்கறிஞரும் வேலை நிறுத்தத் திற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார். சிலர் இதனைத் திசை திருப்பும் முயற்சி என்றெல்லாம் ஊருக்கு முந்திக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டி குளிர்காய முயற்சித்தார்கள். அதையெல்லாம் மீறி கழக உடன் பிறப்புகளுக்கு உரிமையுடன் இதிலே கலந்து கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று இரண்டு நாள் உடன்பிறப்பு மடலில் கேட்டுக் கொண்டேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் அறிக்கை விடுத்தார்கள். டெசோ இயக் கத்தின் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மிகப்பெரிய வெற்றி!

அரசு சார்பில் பேருந்துகள் ஓடும் என்றார்கள். வணிகர் சங்கத்தின் சார்பில் கடைகள் திறந்து வைக்கப்படும் என்றார்கள். ஆனால், அவர்களையும் மீறி, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணே, எங்கள் ஊரில் ஒரு டீக்கடை கூடத் திறக்கவில்லை என்றும், அண்ணே எங்கள் மாவட்டத்தில் முழு வெற்றி என்றும், தலைவரே, பொது வேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றி என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள்.

தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு பேருந்துகளை ஓட்டு வதற்கு முயற்சி எடுத்தபோது கழகத் தோழர்கள் மறியல் செய்து எங்கள் மாவட்டத்தில் இத்தனை பேர் கைது, எங்கள் நகரத்திலே இவ்வளவு பேர் கைது என்று தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

தமிழகம் முழுவதிலும் அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பல ஊர்களி லிருந்து வந்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் தாங்களும் மறியல் செய்யப் புறப்பட்டுச் சென்று அவர்களும் கைதான செய்தி கிடைத்தது. இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்திய இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கித் தந்த வணிகப் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஏன் தமிழ் உணர்வு படைத்த பொதுமக்கள் அனைவருக்கும் டெசோ இயக்கத்தின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும், என் தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு; இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உரிய அக்கறை செலுத்தி, தெளிவான முடிவினை மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை, மார்ச் 14- இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம் என்று மாநிலங்களவையில் கனி மொழி எம்.பி. பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. மாநிலங்களவையில் பேசியதாவது:-

நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச் சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியி ருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன். இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட் டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில், இது எந்த மொழிக் கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற் சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழி யையும், கலாச் சாரத்தையும் பண் பாட்டையும், தங்கள் அடை யாளத்தையும் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கலைஞர் தனது 14ஆவது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதா ரண மாணவன். தனக்கு ஒரு பிரகாச மான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல மைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவ ருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர் களை நீங்கள் அவமானப்படுத்தக் கூடாது. இது போன்ற போராட்டங் களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப் பட்ட தலைவர்களின் போராட்டங் களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள். எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார்.

நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை. இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்பு கிறேன். காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்லர். இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியா விட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும். இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மை யினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல. இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், விழுமியங்கள், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


பலே, பக்தி வியாபாரம்!



பக்தியே ஒரு பிசினஸ் என்று சாட்சாத் சங்கராச்சாரியாரே கூறியுள்ளார் பல நேரங்களில், அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்குவதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அடிக்க வேறு யாராலும் முடியவே முடியாது.

திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பது என்பது விசேடம். அப்படிப் பக்தர்கள் செலுத்தும் முடியை விற்பதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்குத் திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கிடைக்கக் கூடிய தொகை நூறு கோடி ரூபாயாம்.

இப்பொழுது முடி காணிக்கை செய்பவர்களுக்குச் சிறப்புப் பரிசு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. 31 அங்குலம் நீளம் கொண்ட முடியைப் பக்தர் ஒருவர் ஏழு மலையானுக்குக் காணிக்கையாகக் கொடுத் தால் 5 லட்டு இலவசமாகக் கொடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காகத் தனிக் கவுண்டராம்.

அது என்ன 31 அங்குல முடி நீளம், மார்க் கெட்டில் அதற்கு ஏதாவது மவுசு இருக்கக் கூடும். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?

இப்பொழுது ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடெங்கும் கிளைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள். ஆங்காங்கே கல்லா கட்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

சிறீரங்கத்தில் மாநாடு நடத்தும் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் குறிப்பாக அதன் தலைவர் திருவாளர் வேதாந்தம் என்பவர் கோயிலில் தரிசனம் செய்ய தட்சணை கேட்பது பாவம் - கூடவே கூடாது என்று கரடியாகக் கத்திக் கொண்டு தான் திரிகிறார்; யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் கோயிலைத் திறந்து வைத்திருக்கக் கூடாது, அது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்றெல்லாம் சங்கராச்சாரியாரிலிருந்து திருவாளர் ராம. கோபாலன் வரை ஒவ்வொரு ஆண்டும் சொல்லித் தான் பார்க்கிறார்கள். அவற்றை யார் சீந்து கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு கோயிலைத் திறந்து வைத்திருந்தால் ஏராளமான அளவுக்கு வரும்படி கிடைக்கிறதே - பக்தர்கள் வெறுங் கையோடா கோயிலுக்கு வருகிறார்கள்? அப்படி வெறுங் கையோடு வந்தாலும் எந்த அர்ச்சகப் பார்ப்பான் மதிப்பான்?

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பன்று மிகப் பெரிய அளவில் வருமானம், தட்சணை கொட்டுகிறது. ஆகமத்தைப் பார்த்தால் சம்பாதிக்க முடியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் மட்டும்தான் ஆகமங்கள் குறுக்கிடும்; மற்றபடி வருமான விடயத்தில் ஆகம மாவது மண்ணாக் கட்டியாவது! எல்லாம் அவாளுக்குத் தெரியாதா என்ன?

வரும்படி பெருந்தொகை கிடைக்குமானால் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் பிரசாதத்தைத் தூக்கிக் கொண்டு பெரும் பண முதலைகள் - தொழில் அதிபர் தங்கி இருக்கும் விடுதிகளை (Lodges)நோக்கியல்லவா பறந்தோடு கிறார்கள்!

பணம் படைத்தவர்கள் என்றால் பகவான் அவர்களைத் தேடி ஓடுகிறான் என்பது இதன் பொருள்.

கோயிலில் மூல விக்ரகத்தைத் தரிசிப்பதில்கூட பல வகுப்புகள் உள்ளன. சீக்கிரம் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமென்றால் தட்கல் முறையில் அதற்கென்றுள்ள அந்தப் பெரும் தொகையைத் தூக்கி எறிந்தால் தரிசனம் சில நிமிடங்களில் கிட்டும்.

பஞ்சைப் பராரிகள் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமானால் பல நாள்கள் பசி பட்டினி கிடந்து காத்திருக்க வேண்டிய அவல நிலைதான். அதனால் தானோ என்னவோ கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி! என்ற பழமொழி நடைமுறையில் இருக்கிறது போலும்!

அன்பே கடவுள் என்றும் அவன் உருவமற்றவன் என்றும் ஒரு பக்கத்தில் இதோபதேசம் செய்து, கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி உருவங்களை மனம் போனவாக்கில் வடித்து வைத்து, உண்டியலையும் ஏற்பாடு செய்து மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கயவாளித் தனத்தை என்னவென்று சொல்லுவது!

கோயில் அமைப்பு முறை என்பது சுரண்டலுக்கான ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமா தயக்கம்?
15-3-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தூக்கம்

செய்தி: இன்று உலக தூக்க நாள் சிந்தனை: தூக்கம் மனி தனுக்கு அவசியமே!

தூக்கம் இல்லாவிட்டால் பல வகை உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கவும் கூடாது!

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனருக்கு அழும் தானங்கள்


மத்ஸ்ய புராணத் தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகா தானங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தரு கிறது.

துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவரின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.

ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.

பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது.

கல்பதரு தானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.

கோஸ ஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்களை தானம் தருவது.

ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.

ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.

ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.

ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.

பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.

தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.

விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.

கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.

சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.

ரத்னதேனு தானம்: ஆபரணங்களை கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.

மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித் தருவது. - இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

(எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திர பேய்களும் சாதிக் கதைகளும் - (ஒரு மார்க்ஸியப் பார்வை, நூல் பக்கம் 60-61)

தமிழ் ஓவியா said...


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்; பகுத் தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக் கெல்லாம் விளக்கம் சொல்லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு. இதனை இல்லத் தலைவி வீட்டுப் பணிகள் அனைத் தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.

பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்

பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே

- எனக்காட்டும் போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச்சுவையும் தோன்ற வைக்கிறார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


பொருளே குறிக்கோள்!


பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும் மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கே யன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை, பெரியதொரு சடங்குண்டே! மந்திரமுண்டே அந்த எலாம் செய்யத்தான் வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும் கொடுக்கணுமோ குடுக்க வேணும் என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்

- எனக் கவிஞர்(- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்) மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பனனின் செயலை எள்ளி நகையாடுவது நகைப்பை விளைக்கிறது.

தமிழ் ஓவியா said...


அன்னையாரின் நினைவு போற்றி எஞ்சிய பணி முடிப்போம்!


தனது இளமை, வளமை, முதல் அனைத்தையும் இழந்து, தொண்டறத்தின் தூய உருவமாகி உயர்ந்துள்ள உன்னத புரட்சித்தாய் நம் அன்னையார் அவர்களது 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! (16.3.2013).

நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைப்பதற்காக, நம் அன்னையார் அவர்கள் பட்ட தொல்லை, துன்பம், வசவுகள், இழி மொழிகள் ஏராளம்! ஏராளம்!!

எதிர் நீச்சல் களத்தில் நின்று வென்று, தனக்கென வாழாது, தன் உழைப்பைத் தந்ததோடு நில்லாமல், தனது அத்தனைப் பொருளையும் பொதுத் தொண்டுக்குத் தந்து, ஒரு மாபெரும் பல்கலைக் கழகமே உருவாகும் அளவுக்கு, ஒரு அறக்கட்டளையை நிறுவி, அய்யா தந்தை பெரியாரைப் போலவே சுயநலத்தை சுட்டுப் பொசுக்கி, மானம் பாராத தொண்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நம் அன்னையார் தொண்டறத்தின் இமயமாய் உயர்ந்தவர்! அய்யாவின் பணி முடிக்க, நமக்கு அய்யா மறைவுக்குப்பின் தலைமை ஏற்று வழிகாட்டிய அன்னையாரின் நினைவு நாளான இன்று, உறுதியைப் புதுப்பித்து, லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி தொடருவோமாக!

மகளிருக்கு அன்னையார் மகத்தான கலங்கரை விளக்கன்றோ! வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாருக்கு தாழ்த்தப்பட்ட மலைவாழ் இனத்துப் பணியாளர் கூட்டிணைவு வாழ்த்து!

தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகள் வாழச் செய்து, தம் தொண்டு அறத்தினால் பெருமை பெற்ற, தந்தை பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத்தை அய்யா காட்டிய வழியில் இம்மியும் பிசகாது நடை போடச் செய்த அன்னை மணியம்மையாரின் பெருமையை இப்போது தமிழ் மக்கள் பலரும் அறிந்து பாராட்டுகின்றனர்.

செட்யூல் கேஸ்ட், செட்டியூல் டிரைப்ஸ் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் எனும் அனைத்துத் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் பணியாளர் கூட்டிணைவு மகளிர் தினத்தை ஒட்டிச் சென்னை நகரில் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அச்சுவாரொட்டியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகளிர் நலனுக்கு உழைத்த மராத்திய மங்கை ஜோதிபா பூலே அம்மையார், தமிழகத்து மீனாம்பாள் சிவராஜ், உ.பி.யின் மாயாவதி ஆகியோரின் படத்துடன் தொண்டறத்தில் சிறந்தோங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் படத்தையும் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 10, 2013 அன்னை மணியம்மையாரின் 93ஆவது பிறந்த நாள். இந்நாளில் அன்னை மணியம்மையாரைத் திராவிட இயக்கத்தவர் மட்டுமல்லாமல், பிற மக்களும் உணர்ந்து நினைவு கூர்வது பெருமையாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் உண்டு! உண்டு!!



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - கடும் எதிர்ப்புக் காரணமாக புதிதாக அறிமுகப் படுத்திட்ட மாநில மொழிகளின் உரிமைகளை வெளியில் தள்ளிய முடிவு கைவிடப்பட்டதாக - மத்திய இணை அமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளைக் கடந்து போர்க் குரலை எழுப்பினார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றிக்கும் உரியவர்கள்! மத்திய தேர்வாணையம் மாநில மொழிகளை வெளியில் தள்ளி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுதலாம் என்று எடுத்த முடிவு மேம்போக்கான ஒன்றல்ல; ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, இந்தி பேசா மாநிலங்களிலிருந்த அய்.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்கிற சதி திட்டம் அதற்குள் அடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் திரு. லாலு பிரசாத் அவர்கள் அந்தச் சதியைச் சுட்டிக் காட்டியும் பேசியுள்ளார்.

இதில் இன்னொரு நுணுக்கமான கண்ணிவெடி ஒன்றுள்ளது. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுத வேண்டும் (ஆரளவ) அதனை இந்த முறை நீக்கியதற்குக் காரணம் ஆங்கிலத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பல்ல. மாறாக வட மாநிலங்களில் இந்தி பேசுவோருக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் என்பது சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. இந்த முட்டுக்கட்டை இந்தி வாலாக்களுக்கு இருக்கக் கூடாது - 2000 மதிப்பெண்களையும் அவர்களின் தாய்மொழியான இந்தியிலேயே எழுதி, அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பமிட்டு விடலாம் என்பதே - புதிய அறிவிப்பில் உள்ள ஆழமான சதியாகும்.

நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவித்திருப்பது இப்போதைக்குத் தற்காலிகமா?
இந்தத் தொடரிலேயே உடனடியாக அதன் முழுத் தன்மையையும் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - நேற்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலும், கருத்துகளும் மிக மிக முக்கியமானவை.

சமூகநீதிக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடிய - தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலேயே, சமூகநீதிக்கு விரோதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - தமிழை வெளியே தள்ளி, கிராமப்புற மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் குழியை வெட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதே - இது எந்த வகையில் சரியானது - நியாயமானது?

கிட்டதட்ட ஒரே நேரத்தில் மத்திய, மாநில தேர்வாணையங்கள் இப்படி நடந்து கொண்டுள் ளனவே - இந்தச் சங்கிலிப் பிணைப்பின் பின்னணி என்ன?

மத்திய அரசின் புதிய முறையைக் குறைகூறி பிரதமருக்கு மடல் எழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர் தமிழ்நாட்டிலேயே இந்த அநீதி நடந்திருக் கிறதே யார் பொறுப்பு? அதற்கு என்ன பதில்? என்ன சமாதானம்?
இந்நேரம் புதிய திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இந்த நிலையில் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் 19ஆம் தேதி சென்னையிலும் திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவசியமாகி விட்டது.

மத்திய அரசு பின்வாங்கினாலும், மாநில அரசு சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்துள்ளதால் இதுவரை விலக்கிக் கொள்ளாததால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு வெற்றிகரமாக நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 16-3-2013

தமிழ் ஓவியா said...


ஒலி முழக்கங்கள்




1. வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

2. தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
மாநிலத் தேர்வு ஆணையம்
மாநிலத் தேர்வு ஆணையம்
தாய்மொழி தமிழை
தாய்மொழி தமிழை
புறக்கணிக்கும், புறக்கணிக்கும்
புதிய திட்டத்தை, புதிய திட்டத்தை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

3. தந்தை பெரியார் பிறந்த தந்தை பெரியார் பிறந்த
தமிழ் மண்ணிலே, தமிழ் மண்ணிலே
சமூக நீதிக்கு, சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக் குழியா?

4. தாழ்த்தப்பட்ட மக்களை
தாழ்த்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பழிவாங்கும் - பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

5. கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
பழிவாங்கும், பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

6. வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
மத்திய அரசு மத்திய அரசு
வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
தமிழக அரசே, தமிழக அரசே!
தூங்குவது ஏன்? தூங்குவது ஏன்?

7. போராடுவோம் போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை வெற்றிக்கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்!

8. வென்றெடுப்போம் - வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
ஆசிரியர் வீரமணி தலைமையிலே
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
சமூக நீதியை, சமூக நீதியை
வென்றெடுப்போம், வென்றெடுப்போம்!

9. வாழ்க வாழ்க வாழ்கவே
திராவிடர் கழகம் வாழ்கவே
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!

10. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!
- திராவிடர் கழகம்
(18, 19.3.2013இல் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக)

தமிழ் ஓவியா said...


காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்?



விஞ்ஞானிகள் தகவல் சென்னை, மார்ச் 16- காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்பெல்லாம் பெரும் பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப் படும் பழைய சோறுதான். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்து விடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு. கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன் பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:-

பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி-6, பி-12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன.

கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரி யாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக் கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப் பொலிவுடனும் இருக்கும். மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள். பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத் தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன. எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்வது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவு களுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - எதிரியா? நண்பனா?

- முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பிச்.டி

அண்மையில் நாடாளுமன்ற மேலவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை நம்முடைய நட்பு நாடு எதிரி நாடு அல்ல என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை உறுப்பினர்கள் கொதிப் படைந்து இலங்கை எதிரி நாடுதான் என்பதை உறுதிப்படுத்திப் பேசி யிருக்கிறார்கள். இலங்கை - நண் பனா? எதிரியா? என்பது சிலபேருக் குக் குழப்பமாக இருக்கிறது. ஆளும் கட்சியும் பார்ப்பன அதிகார மய்யமும் இலங்கையை நண்பனா கவே கருதிக் கொண்டிருக்கின்றன. இலங்கையை நண்பன் என்று சொல் வது அதன் மீதுள்ள பாசத்தினால் என்பதை விடத் தமிழர்கள் மீது கொண்டுளள வெறுப்பினால்தான் டெல்லி அரசு இந்தக்கொடூரமான நிலைப்பாட்டை மேற்கொண் டிருக்கிறது.
புரட்சிக் கவிஞர் பாடியதைப் போல நற்றமிழ் என்பது டில்லிக்கு ஆகாது. நமக்கு நினைவு தெரிந்த வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே டில்லி மேற் கொண்டு வந்துள்ளது. இடையில் இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் மட்டும் தமிழ் ஈழ மக்களுக்குச் சார்பான நிலை இருந்தது.

நெடுங்காலமாகத் தமிழ் இனம் வஞ்சிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றது. நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. தமிழகத்தின் நீர் ஆதா ரங்கள் அண்டை மாநிலங்களால் அழிக்கப்படும் நிலையை மய்ய அரசு தடுக்கவில்லை. இத்தகைய காரணங் களினால் தான் அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று சொன்னார். இன்றும் அதே நிலை, அதைவிட இழிந்த நிலையைத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1950களில் கோவாவை இந்தி யாவோடு இணைப்பதற்கு பண்டித நேரு எடுத்துக் கொண்ட அமைதி யான மென்மையான நடவடிக்கைகள் பயன் தரவில்லை. இந்தியப்படை கோவாவை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கை எடுத்து கோவாவை இந்தியவோடு இணைத்தார் நேரு. அப்போது போர்ச்சுகல் ஆளுகையின் கீழ் கோவா டையூ, டாமன் ஆகிய பகுதிகள் இருந்தன. கோவாப் பகுதி களை இந்தியாவுடன் இணைப்ப தற்கு நேரு ராணுவ நடவடிக்கை எடுத்தபோது இலங்கையின் நிலைப் பாடு என்ன?

போர்ச்சுகல் அரசின் வேண்டு கோளுக்கு இணங்கி அவற்றின் போர்க்கப்பல்களும், விமானங்களும் கொழும்பில் நிறுத்தப்படுவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அங்கிருந்து கோவாவை முற்றுகை யிட்டுள்ள இந்தியப் போர்க் கப்பல்களைத் தாக்குவதற்கும் இலங்கையின் சிங்கள அரசு அனுமதி கொடுத்ததா இல்லையா? (ஆனால் போர்ச்சுகல் கப்பல்கள் கொழும்பு வந்தடைவதற்கு முன்னதாகவே கோவா இந்தியாவோடு இணைக்கப் பட்டுவிட்டது). இந்தியாவோடு போர் தொடுக்க வருகின்ற ஒரு நாட்டின் கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கவும் தளம் அமைத்துக் கொள்ளவும் அனுமதியளித்த இலங்கை இந்தி யாவின் நண்பனா?

1962-இல் இந்தியாவுக்கும், சீனா வுக்கும் நடந்த போரின்போது இலங் கையின் நிலைப்பாடு என்ன? கோவா விடுதலைப்போரின் போது இலங்கை இந்தியாவின் மீது காட்டிய பகை உணர்ச்சி, சீனப்போரின் போதும் வெளிப்பட்டது. வெளிநாடுகளில் சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியா விற்கு எதிராகவும் கொள்கைப் பரப்புரையை இலங்கை மேற் கொண்டது. அய்.நா.அவையிலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகப் பேசியதே! அந்தப்பழைய நட்பின் அடிப்படையிலேயே இலங்கையின் வடக்கு - கிழக்குத் தமிழ் ஈழப்பகுதி களைச் சீனாவிற்கு இலங்கை இப் போது தாரை வார்த்துக் கொடுத் திருக்கிறது! இப்படிப்பட்ட இலங்கை இந்தியாவின் நண்பனா?

தமிழ் ஓவியா said...

1972--_73-இல் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை யார் பக்கம் நின்றது? பாகிஸ்தான் விமானங்களும், போர்க்கப்பல்களும் கிழக்குப் பாகிஸ்தான் செல்வதற்குக் கொழும்புத் துறைமுகத்தையும், விமான நிலையங்களையும் பயன் படுத்திக் கொண்டன; எரிபொருள் நிரப்பிக் கொண்டன. இறுதியில் இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வையால் மத அடிப்படையில் பிரிந்த நாட்டை மொழி அடிப்படையில் பிரித்து பங்களா தேஷ் என்று ஒரு தனிநாடு உருவாக்கப்பட்டது. இலங்கை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்துள்ளது. இதனை நன்கு மனத்தில் கொண்ட இந்திராகாந்தி அம்மை யார் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

திரிகோணமலையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைக்க இலங்கை அனுமதி கொடுத்தது. அதுவரையில் அமைதியோடிருந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கடுமை யான மொழிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார். விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று இந்திராகாந்தி அம்மையார் கூறி யவுடன் திரிகோணமலையிலிருந்து அமெரிக்க ராணுவத்தளம் உடனடி யாக அகற்றப்பட்டது. இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவிற்குப் பதிலாகச் சீனா திரிகோணமலையில் இருக்கிறது. திரிகோணமலை எவன் கையில் இருந்தாலும் அது இந்தி யாவின் பாதுபாப்பிற்கு ஏற்றதல்ல என்பதை இந்திரா அம்மையார் நன்கு உணர்ந்திருந்தார். இன்றைய டில்லி ஆட்சியாளர்கள் என்ன கருது கிறார்கள்? திரிகோணமலையிலிருந்து யார் தாக்குதல் தொடுத்தாலும் சாகப்போகிறவன் தமிழ் நாட்டுக் காரன் தானே! சாகட்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை நிறுத்து இல்லையேல் திரும்ப அடிவிழும் என்று சொல்வதற்கு இந்திராகாந்தி அம்மையார் இன்றில்லையே!

இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார் இந் திரா அம்மையார். இந்திராகாந்தியை மடக்குவதற்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா எவ்வளவோ முயன்று பார்த்தார். நாம் இருவரும் ஒரே இனத்தைச் (ஆரியர்) சேர்ந் தவர்கள்; என் மூக்கும் உங்கள் மூக்கும் அமைப்பில் ஒன்று போலவே இருக்கின்றன பார்த்தீர்களா! என்றெல்லாம் அன்பொழுகப் பேசிப்பார்த்தார். இந்திராகாந்தி அவரை நம்பவில்லை.

தமிழ் ஓவியா said...

இலங்கையில் தமிழீழத் தாயகம் கேட்டுப் போராடி வந்தவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக் கொண்டபோது இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலி களின் இயக்கத்தலைவர் தம்பி பிர பாகரனை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவி களையெல்லாம் செய்தார். ஜெய வர்த்தனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரத மரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, நட்பு நாடான இலங்கைக்குள் அமைதிப்படை அனுப்பப்பட்டது. இந்திய விமா னங்கள் தமிழீழப் பகுதியில் தாழ் வாகப் பறந்து யாரும் கேட்காமலேயே உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுவந்தன. செய்தியாளர் கள் இதுபற்றிப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், வேறு ஒரு நாட்டுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழையலாமா? என்று கேட்டதற்கு ‘It is a lesson to Jeywardane’ என்று பதில் சொன் னார். இதற்குப் பெயர் நட்பு நாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மார்க்கம் பற்றிய பல அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அந்த அறிவுக் கருவூலத்தை ஆரியர் கள் நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள்.

உலகப்போர் நடந்தபோது செர்மானிய விமானங்கள் லண்டன் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்கின. ஓர் இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் அறிவுக் கருவூ லத்தை அழித்துவிட்டால் போதுமே.

லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தைச் சிங்களப் படையினர் நெருப்பிட்டுச் சாம்ப லாக்கி விட்டார்கள்! தான் போற்றி வளர்த்த நூலகம் எரிவதைப் பார்த்த ஒரு பாதிரியார் நெஞ்சு வெடித்து நூலகத்தின் முன்பாக இறந்து போன தும் அவரைத் தூக்கி எரியும் நூலகத் திற்குள் சிங்களப் படையினர் வீசி விட்டுக் கைகொட்டிச் சிரிக்க வில்லையா?
லட்சக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப் பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காத டில்லி ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நண்பர்களா?

இலங்கையை இன்னும் நட்பு நாடெனக்கருதுவோரைத் தமிழினத் தின் நண்பர்களாகக் கருதுவோரை வஞ்ச நெஞ்சம் படைத்த முட்டாள் கள் என்போம்!

ஆதலின் இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இதே நிலைதான் இருந்தது. எனவே இலங்கையை நட்பு நாடென்று உரிமை பாராட்டுவோர் - இனப்படுகொலை நடத்திய நாட்டோடு நல்லுறவு வேண்டுவோர் உலகமெங்கும் பரந்து கிடக்கும் பத்துக்கோடித்தமிழர்களின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என்பது உறுதி.

இறுதியாக - ஒரு நட்பு நாட்டின் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கைக் குச் சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படுகிறது. அப்போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தன் துப்பாக்கிக் கட் டையால் ராஜீவ் காந்தியின் உயிருக் குக் குறிவைத்துத் தாக்க முற்படு கிறான். ராஜீவ் தடுமாறிச் சமாளித்துக் கொள்கிறார் இக்காட்சி உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் வெளியாகியது. ராஜீவைத் தாக்கிய அந்த ராணுவ வீரனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டது. பின்னாளில் அவன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை இங்கிருந்தல்லவா தொடங்கப் பெற வேண்டும்). இதனால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது ஒரு கேலிக்கூத்து! அடி முட்டாள்தனம்! ஒரு நட்பு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய முயன்றவனுக்குப் பதவி உயர்வும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கிறது என்றால் அந்த நாட்டை நட்பு நாடென்று சொல் வதற்கு டெல்லி வெட்கப்பட வேண் டாமா? அவர்களுக்கு அதுவெல்லாம் தெரியாது. சுப்பிரமணியசாமியைப் போன்ற புரோக்கர்கள் இருக்கும்வரை ராஜபக்சேவைப் போன்ற கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சி தானே! ஓர் அயோக்கியன் இன்னோர் அயோக்கியனை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடி விட்டு டெல்லி திரும்பியிருக்கிறான். உலகம் முழுக்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நேரத்தில் டெல்லியும், சு.சாமியும் ராஜபக் சேவோடு கை குலுக்குவது எவ்வளவு இழிந்த செயல்!

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்



எல்லோருமே வெற்றியை விரும்பு கின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர். - சிசரோ

உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். - கார்லைல்

எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும். - மேட்டர்லிங் உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்குச் செல்வதைப் போன்றது. - எமர்சன்

வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் - மில்டன்

தமிழ் ஓவியா said...


இந்தி நுழைப்பு



மது விலக்குப் போலவே இந்தி நுழைப்பு என்கிற திரு. ஆச்சாரியார் திட்டமும் மக்களது கல்வி அறிவைப் பாழ்படுத்த வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டதாகும்.

பார்ப்பனர்களின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் புகுத்தினால், அதற்குப் பெரிய எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதியே பார்ப்பன இன உணர்ச்சிக்கு அடிப்படையான சமஸ்கிருதத்தின் எதிரொலியான இந்தியை நுழைக்க முயற்சித்தார் திரு. ஆச்சாரியார்.

இந்தியின் ரகசியம் என்ன என்பதையும், குடிஅரசின் மூலம் விளக்கிய பிறகே உண்மையை உணரலாயினர் மக்கள்.

திரு. ஆச்சாரியார் பல முறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது, சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால், அதுதான் இந்தி என்றும், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் கூறினார்.

இந்தியை ஒழிக்க பெரிய கிளர்ச்சி செய்து, 3,000 பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், முதிய வர்கள், குழந்தைகள் உட்பட சிறை சென்று, இரண்டு உயிர்களைப் பலி கொடுக்க வேண்டி வந்தது.

செகண்டரி ஸ்கூல் அய்ஸ் ஸ்கூல் ஒழிப்பு:

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும்,
60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களும் எடுக்கப்பட்டு விட வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

60 பிள்ளைகள் கிராமத்தில் கிடைப்பது, அதுவும் 1938இல் என் றால், அது பெரிய சிரமமான காரிய மாகும் என்பதை நாம் யூகிக்க முடியும்.

அந்த சாக்கை வைத்துக் கொண்டு பள்ளியை இழுத்து மூடச் சொன் னார் மகானுபாவர் ஆச்சாரியார் என்றால், அவரது மனுதர்ம மனப்பான்மைக்கு வேறு சான்று கூறவா வேண்டும்?

சர்க்கார் அனுமதி பெற்றுப் பொது ஜனங்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வந்த பள்ளிகளை ஒழிக்க, சரியாக நடக்காத பள்ளிகள் அத்தனையும் இழுத்து மூடப்படும் என்றார்.

திருத்தி செவ்வனே நடைபெறும் படி செய்யப்படும் என்று கூறவில்லை திரு. ஆச்சாரியார் என்பதைக் கவனியுங்கள்.

கோயம்புத்தூரில் இருந்த (ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் துவக்கப்பட்டது) காட்டுத்துறைக் கல்லூரி (Forest College) யை இழுத்து மூடி விடும்படிச் செய்தார் திரு. ஆச்சாரியார்.

இதனால் பயனடைந்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்பதே இதற்கு அடிப்படையான காரணமாகும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒட்டி, தமிழர்களாகிய நமது பிள்ளைகளும் சரிசமமான வாய்ப்புப் பெற்றுப் படிக்க வைக்கச் செய்த காலேஜ் செலக்ஷன் கமிட்டியை (ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது) ஒரே வரியில் உத்தரவு போட்டு, ஒழித்துக் கட்டித் தமிழர்களது கல்லூரிப் படிப்பிற்குக் கல்லறை எழுப்பினார் காருண்ய சீலர் திரு. ஆச்சாரியார்.

கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு திரு. ஆச்சாரியார் ஆட்சியில் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருந்தது.

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் நூல் பக்கம் 13

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி (கி.ஆ)

தமிழ் ஓவியா said...


சிரிக்கலாம்...


பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி நேத்து சாமி வந்து ஆடுச்சுடா. ரொம்ப நேரமாகியும் மலை ஏறவே இல்லை.

அவன்நண்பன் : டேய்... உங்கப் பாட்டி பஸ் ஏறுவதே ரொம்ப சிரமம். இதுல எங்கடா மலை ஏறுவது?

தேநீர் கடையில் ஒருவர் : நிறைய காவடிகளைத் தூக்கிக்கிட்டு, கூட்டம் கூட்டமா போறாங்களே... இவ்வளவு காவடிகளா இருக்கு?

மற்றவர் : ஆமாம் நண்பா! புஷ்பக் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடின்னு நிறைய இருக்கு. எல்லாக் காவடியையும் தூக்கிட்டுப் போயிட்டு, கடைசியா அன்னக் காவடியா இந்த டீக்கடையில தான்உட்கார்ந்திருப்பார்கள். அய்யப்பசாமி : கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.

அறிவுச்சாமி: தம்பி அத கல்லு, முள்ளு மேல நின்னு சொல்லுங்க... சூப்பர் டீலக்ஸ் பஸ்ல இருந்து சொல்லாதீங்க... - வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி


வெள்ளைகாரங்க நாடு குளிரா இருக்குமாம்; அதனால் அவங்க நாட்டுக் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகும்போது 'சூ' (shoe) போடுறாங்க. நம்ம நாடு சூரியன் சுட்டெரிக்கிற நாடு சும்மாவே வேர்த்துக் கொட்டுது; நம்ம குழந்தைங்களுக்கு எதுக்கு 'சூ' போட்டுவிடுறாங்க?