Search This Blog

2.3.13

அய்.நா.வின் மனித உரிமைகள் கழகத் தலைவர் நவநீதம்பிள்ளை சீறுகிறார்!


நவநீதம்பிள்ளை சீறுகிறார்! 

அய்.நா.வின் மனித உரிமைகள் கழகத் தலைவர் நவநீதம்பிள்ளை - இலங்கையில் நடைபெற்ற - நடைபெறுகிற வன்முறைகள்பற்றி மிகவும் நுணுக்க மாக அறிந்தவர்.

ஜெனிவாவில் இப்பொழுது நடந்து கொண்டிருக் கும் மனித உரிமை மாநாட்டில் உரையாற்றிய இவர் அய்.நா.வின்மீது பகிரங்கமாகக் குற்றஞ் சாற்றியுள்ளார்.

தஞ்சம் புகுந்த நாட்டில் தங்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்க இயலாத அவல நிலையில் அகதிகள் வாடுகின்றனர். போர்கள் மற்றும் பொருளாதார தேக்க நிலையில் உள்ள மக் களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

சில நாடுகளில் போரால் மரணம் அடைபவர் களைக் காட்டிலும், வன்முறை மற்றும் குற்றச் செயல்களால் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். இதுதான் கவலை தரக்கூடிய செயல். இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது அய்.நா. அமைப்பு ரீதியில் செயல்படத் தவறிவிட்டது - தோல்வி யடைந்து விட்டது என்று அய்.நா.வின் மனித உரிமைக் கழகத் தலைவரே வெட்ட வெளிச்சமாகக் கூறிவிட்டார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, இலங்கை யில் ஈழத் தமிழர்களை ஒர் அரசே முற்றிலும் அழிக்கும் கேவலத்தில் ஈடுபட்டது.

பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். அய்.நா. தட்டிக் கேட்கவில்லை.  இதன் மூலம் அய்.நா.  பொறுப்பு ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்றாகி விட்டது. இந்தியாவில் குஜராத்தில் சிறுபான்மையின மக்கள் அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட போது, குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டும், வலியுறுத்தியும் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி எப்படி கேளாக் காதினராக இருந்தாரோ. அதே நிலைதான் ஈழத் தமிழர்களை பாசிஸ்டு ராஜபக்சே பன்னாட்டு ஆயுதங்களால் படுகொலையை திட்டமிட்டுச் செய்து கொண்டு இருந்தபோது அய்.நா. தன் கடமையைச் செய்யாமல் மவுனவிரதம் அனுசரித்தது, வாளாயிருந்தது.

அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்.கீ.முனே கூட இதனை  ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் இந்த நேரத்தில், இந்த இடத்தில் நினைவூட்டத் தக்கதாகும்.

உலக நாடுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. அந்தக் கால கட்டத்தில் இப்பொழுது முனைந்து நிற்பதுபோல அமெரிக்கா கொஞ்சம் உரத்து நின்று  இருந்தால் கூட இவ்வளவு பெரிய பேரிழப்பு தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்காது என்று கருதவும் இடம் இருக்கிறது.

இந்தியா, சீனா, ருசியா போன்ற பெரிய நாடுகள் இலங்கை அரசின் பக்கம் காலூன்றி நின்றிருந்ததும் கூட, உலக நாடுகள் தலையிடாமல் இருந்ததற்குக் காரணமாகவும் இருந்திருக்கக் கூடும்.

அந்த வகையில் பார்த்தால் இந்த இனப்படு கொலையில் இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பங்கு இருக்கிறது என்பது வரலாறெங்கும் பேசப்படக் கூடிய கறைபடிந்த அத்தியாயமாகும்.
இந்த விடையத்தில் சிங்கள இனத்தில் பிறந்த விதிவிலக்காக சிந்தனை செய்து சுட்டிக் காட்டிய வர்கள் எத்தனையோ மடங்கு மேலானவர்கள்தாம்.
மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டுக்கு எதிரான சர்வதேச மக்கள் இயக்கத்தின் தலைவரு மான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித் துள்ள கருத்து, வெளிப்படுத்திய உணர்வு போற்றத் தகுந்ததாகும்.  இலங்கையில் மனித உரிமை மீறலுக்கும், போர்க் குற்றத்திற்கும் எதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டு வரப்படும் தீர்மானம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை முற்றுகையிடுவதன் மூலம் தமிழர் களின் உணர்வுகளை உலக நாடுகள் மத்தியில் உரத்த முறையில் கொண்டு செலுத்துவதற்குச் சரியான வாய்ப்பாகும்.

வரும் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட் டத்துக்கு டெசோ கொடுத்துள்ள அழைப்பு - இந்தத் திசையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.

கட்சி வண்ணங்களைக் கடந்து தமிழின உணர் வோடும், மனிதநேயப் பண்போடும் தமிழர்களே, தமிழர்களே கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!!
           -----------------------"விடுதலை” தலையங்கம் 2-3-2013

36 comments:

தமிழ் ஓவியா said...


அழைப்பது டெசோவல்ல - பாலச்சந்திரன்!


பால் வடியும்
முகத்தைப் பார்த்து
பாதகா!
எப்படியடா மனம் வந்தது -
சுட்டுப் பொசுக்க?

துப்பாக்கிக்குப் பேசும்
சக்தி யிருந்தால்
கோவென்று
கதறியிருக்காதா?

சிந்திக்கும் திறனிருந்தால்
சிங்களவனின்
கதையை யன்றோ
முடித்திருக்கும்
முடித்திருக்கும்!

அடுத்து என்ன
நடக்குமோ என்று
அறியாத பிள்ளையை
பச்சை மண்ணை
அழித்தனரே பாதகர்கள்
அட, மிருகத்துக்குத்தான்
சிங்களன் என்ற பெயரோ!

பிரபாகரனுக்குப்
பிள்ளையாய்ப் பிறந்தது
பெருங் குற்றமா?
அட, பேடிகளே
நீங்கள் எல்லாம்
மலடிகளா?

சின்னப் பையன்
பாலச்சந்திரன் தின்றது
சிறு ரொட்டித் துண்டுகளா?
சிங்களக் காடையன்கள்
தின்று கொழுத்ததெல்லாம்
பன்றியின் விட்டைகளா?
மனிதன் வளர்ந்து விட்டானா?
நடந்ததைப்
பார்க்கும் பொழுது
நம்ப முடியவில்லையே!
அட, மிருகமேயென்று
எவரையும் இனி
ஏசக் கூடாது!

அட சிங்களவனே!
என்று புது
சொலவடையை
அறிவிப்போம்!

கேடு கெட்ட உலகம்
கேட்ட பிறகும்
படத்தினைப் பார்த்த பிறகும்
இருதயத்தைப்
பூட்டி வைக்கலாமா?

இரத்தக் கண்ணீர்
வடிப்பதை நிறுத்தி
எங்கே அந்தக்
கடையனென்று
கனல் புயலேறி
கிளம்ப வேண்டாமா?

மண்ணெலாம் எரிமலை
மயமாய் மாற
வேண்டாமா?
காற்றெலாம்
கனலாகத் தகிக்க
வேண்டாமா?
நீரெலாம்
நெருப்பாய்க்
கனைக்க வேண்டாமா?

அய்.நா. என்ன கிழிக்கிறது?
ஆர்த்தெழவே - ஏன்
மறுக்கிறது?

பாலகனைச் சுட்டுப்
பசியாறியது
இந்தியத் துப்பாக்கியா?
கம்யூனிச நாடுகள்
தந்த
கைத்துப்பாக்கியா?

பாரத மாதா
பாடுவதெல்லாம்
மனுதர்மம்தானே
இரக்கத்திற்கு அங்கு
என்ன வேலை?

கம்யூனிச நாடுகளும்
கற்பிழந்து போனதென்ன -
வெட்கம், வெட்கம்!
மகா மகா வெட்கம்!!

மார்க்ஸின்
பேனா முனையும்
லெனினின்
வீரா வேசமும்
சுயநிர்ணயக் கீதத்தைப்
பாடவில்லையா?
இன உரிமை மீசையை
முறுக்க வில்லையா?

பாழ்பட்டு
போனதென்ன?
பற்றி எரிகிறதே
பாழும் வயிறு!
பாலச்சந்திரனின்
பிஞ்சு உதடுகள்
உதிர்த்த சோகம்
உலக முகத்தின்மீது
விழுந்த சவுக்கடி!
வீணர்களை
வீழ்த்த
வீரமில்லையா
என்று கொடுக்கும்
கசையடி!

மனிதநேய மெல்லாம்
மரக்கடைக்கு
மலிவு விலைக்குச் சென்றதுவோ!
அன்பெல்லாம்
அடகுக் கடைக்குள்
அடைக்கலம் தேடியதோ!

இரக்கம் எங்கே
இறந்து கிடக்கிறது?
என்று கேட்காமல்
கேட்கிறது
அந்தச் சிதைந்த
மலர்முகம்

என்னதான்
சமாதானம்
எடுத்துச் சொன்னாலும்
சீரணிக்க முடியவில்லையே!

பார்க்குமிடமெல்லாம்
பாலச்சந்திரனின்
பால்முக
நிலா வன்றோ
படமாய்த்
தெரிகிறது

அந்தக் கபடறியா
சிரிப்பு
எழுப்பும் கேள்விக்கு
விடையெங்கே -
விடையெங்கே?

பழிக்குப் பழி
வாங்கினாலும்
ஆத்திர நெருப்பு
அணையாது -
அணையாது!
ஆனால் ஒன்று
இது கடைசியாக
இருக்கட்டும் -
இருக்கவும் வேண்டும்!
என்று இதயத்தின் குரல்
விம்முகிறது - கெஞ்சுகிறது!

எழுவோம் வாருங்கள்
இலங்கைத்
தூதரகத்துக்கு
முற்றுகை! முற்றுகை!!
டெசோ அழைக்கிறது
மார்ச்சு அய்ந்து அழைக்கிறது!

நடையைக் கட்டு -
இலங்கையே
நடையைக் கட்டு!
உனக்கிங்கு என்னவேலை?
நடையைக் கட்டு!
கழுத்தைப் பிடித்துத்
தள்ளுமுன்
நடையைக் கட்டு
நடையைக் கட்டு!
என்ற
எரிமலை வெடிக்கட்டும் -
வெடிக்கட்டும்!
வாருங்கள்
மானமுள்ள தமிழர்களே!
பால் வடியும் அந்தப்
பச்சை மண்ணை
ஒரு கணம் நினையுங்கள்
உங்கள் உதிரம்
கொதிக்கும்
உணர்வுகளும் வெடிக்கும்!
தமிழீழமும் பிறக்கும்!
டெசோ அழைக்கிறது
வாருங்கள் வாருங்கள் -
தமிழர்களே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


வடநாட்டில் தந்தை பெரியாரோடு அறிஞர் அண்ணா


இதோ அண்ணாவே கூறுகிறார்: நான் பெரியார் அவர்களுடன் வட நாட்டுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந் தேன். அங்குள்ளவர்கள் நம் மக்களை விட மூடநம்பிக்கை உள்ளவர்கள்.

பெரியார் அவர்களின் தோற் றத்தைக் கண்டு, அவர் தென்னாட்டி லிருந்து வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான் அவரது சீடன் என்றும் கருதி விட்டார்கள். அப்படி நினைத்துத் தான் ஆரிய தருமத்தை வளர்ப்பதற்காக என்றே செயல்பட்டவரான - சிரத்தா னந்தா கல்லூரியின் தலைவர், பெரியார் அவர்களைப் பார்த்து, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தாங்கள் வந்து அறிவுரை கூற வேண்டும்! என்று கேட்டார். அவரும் ஒத்துக் கொண்டார்.

தாம் எதைச் சொல்லுகிறாரோ அதை மற்றவர்கள் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்று கருதுபவர் அல்லர் பெரியார். பிறர் கடைப்பிடிக்கும் நெறியில் சென்று, அவர்கள் மனம் புண்படாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான் அவர் பண்பு.

சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றதுமே எனக்குச் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அங்கு போய் நமது கருத்தைச் சொன்னால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று பயந்தேன். என்றாலும் துணிந்து பெரியார் அவர்கள் பின் சென்றேன். கல்லூரிக்குள் நுழையும் போதே அங் கிருந்த மாணவர்கள் தங்கள் வழக்கப்படி என் முகத்திலும் அவர் முகத்திலும் சந்தனத்தை அள்ளிப் பூசினார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. என் நிலைமைக் கண்ட பெரியார், நான் எங்கு தவறாக நடந்து கொண்டு விடுவேனோ என்று தொடையைக் கிள்ளிச் சாடை காட்டினார். அதன்பின் நானும் சற்று அமைதி அடைந்து பொறுமையாக இருந்தேன். பின், பெரியார் அவர்கள் பேச ஆரம்பித்து, ஒவ்வொரு சங்கதியாக எடுத்து விளக்க ஆரம்பித்ததும், அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது.

இது போன்ற கருத்தை அவர்கள் அதுவுரை கேட்டதே இல்லை. அப்போது தான் அவர்கள் புதுமையாகக் கேட் கின்றனர். ராமாயணத்தைப் பற்றி அவர் விளக்கியதைக் கேட்கக் கேட்க சற்றுத் தெளிவு ஏற்பட்டது. கூட்டம் முடிந்ததும், அம்மாணவர்கள், ராவணக்கி ஜே என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.

பெரியார் அவர்களின் கருத்துக் களை பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் நான் கேட்க நேர்ந்தபோது, என்ன இவர் இப்படி பச்சையாக பேசுகிறாரே என்று நினைத்தோம். அப்படித்தான் எல்லோருக்கும் முதலில் கசப்பாகத் தோன்றும், சிந்தித்தால் உண்மை உணர முடியும்.

பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு என்ற நூலிலிருந்து...

தொகுப்பு: தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

தமிழ் ஓவியா said...


இதுதான் பாரத புண்ணிய பூமி

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 24,206 பாலியல் வன்முறைகள் புகார்களாக பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இது போன்ற சம்பவங்களில் 94.2 சதவீதம் அந்தப் பெண்ணுக்கு வேண்டியவர்களாலேயே நடத்தப்படுகின்றன என்கிறது என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்றவியல் பதிவுத் துறை. இவற்றில் பெற்றோராலும், நெருங்கிய உறவினர்களாலும் நடப்பவை 12 சதவீதம். அக்கம் பக்கத்தினரால் நடப்பவை 34.7 சதவீதம். உறவினர்கள், நண்பர்களால் நடப்பவை 6.9 சதவீதம். பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

காவல் நிலையம், மருத்துவமனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள், தம்மிடம் அடைக்கலம் தேடி வரும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அத்து மீறுகின்றனர். தெருக்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் நடைபெறும் பாலியல் குற்றங்களைக் காட்டிலும், அறைக்குள் நடைபெறுபவையே அதிகம். பாலியல் வன்புணர்ச்சி குற்றச் சாட்டுக்களில் 26.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெறுகின்றனர் என புள்ளி விவரம் தருகிறது என்.சி.ஆர்.பி.

தமிழ் ஓவியா said...


பிரச்சினை 3 அணைகள்


வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி! இந்தப் பழமொழி நமது இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றதற்கு முன்பு உண்மையாக இருந்தது. 1947ஆம் ஆண்டிற்குப்பிறகு குறிப்பாக 1974-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தப் பழமொழி பொய்யாகிவிட்டது. வானம் தற்போது 33 சதவீதம் மழையைப் பொழியாமல் மீதியுள்ள 67 சதவீதம் மழையைப் பொழிந்தாலும், காவிரியில் தண்ணீர் வராமல் கர்நாடகா அரசாலும், மத்திய அரசாலும் தடுக்கப்பட்டு காவிரி ஆறு பொய்க்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் வாழ்வு ஆதாரமான காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. காவிரி ஆறு வறண்டு விட்டது. அனைத்துத் தமிழ்நாட்டு மக் களும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன்?... ஏன்?.. எப்படி? எப்படி?... நாட் டுக்கு நாடு கடந்து செல் கின்ற நதிகளில் நதிநீர் பங்கீடு சம்பந்தமாக சர்வ தேச அள வில் சட்டம் இருக்கின்றது. அந்த சட் டத்தை அந்த நாடுகள் கடைப்பிடிக் கின்றன. அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நமது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நதிநீர் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டன. ஒரு நதியில் மேலே உள்ள நாடு, அல்லது மாநிலம் அணைகட்ட விரும்பினால், கீழேயுள்ள நாடு அல்லது மாநிலத்தின் அனுமதியைப் பெற்றுத்தான் மேலே உள்ள நாடு அல்லது மாநிலம் அணையை கட்ட வேண்டும் என்று மேலே குறிப்பிட்டுள்ள சர்வதேச சட்டத்திலும் 1892ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தமும், 1924ஆம் ஆண்டில் மைசூர் ராசனுக்கும் அன்றைய சென்னை மாகாண கவர்னருக்கும் இடையில் ஏற் பட்ட ஒப்பந்தத்திலும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த சர்வதேச சட்டம், மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான், காவிரியில் கர்நாடகா 1910ஆம் ஆண் டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கிருஷ்ண ராசசாகர் அணையும் தமிழ்நாட்டில் 1924ஆம் ஆண்டில் கட்ட ஆரம் பிக்கப்பட்ட மேட்டூர் அணையும் கட்டப் பட்டன. இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் 1974ஆம் ஆண்டில் காவிரியில் கர்நாடகாவில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய மூன்று அணைகளையும் கர்நாடகா அரசு மேலே கூறப்பட்ட சர்வதேச சட்டங்களையும் ஒப்பந்தங்களையெல்லாம் மீறி, கீழேயுள்ள தமிழ்நாட்டு அரசின் அனுமதி பெறாமலும், மத்திய நீர்வளத்துறையின் அனுமதி பெறாமலும், மத்திய திட்டக் கமிஷனின் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக கர்நாடக அரசு கட்டியுள்ளது.

அதனால், தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும், காவிரி பாசனத்திலுள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு கர்நாடகா, அரசாலும், கர்நாடகாவின் அடாவடித்தனத்தை கண்டு கொள்ளா மல் இருக்கின்ற மத்திய அரசாலும் அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதாவது, நமது பூமி தோன் றிய போது, இயற்கையாகவே உருவான நமது காவிரியை சுமார் 100 ஆண்டு காலத் திற்குள் செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஆதிக்கம் அழித்துக் கொண்டு வருகிறது. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு அழிந்து கொண்டி ருக்க முடியாது.

ஆகவே, சட்டத்தையும், ஒப்பந்தங் களையும் மீறி, தமிழ்நாட்டு அரசிடமும், மத்திய நீர்வளத்துறை மற்றும் மத்திய திட்டக்கமிஷன் ஆகியவற்றிடமிருந்து அனுமதி பெறாமலும், காவிரி ஆற்றில் கர்நாடகா அரசால் தன்னிச்சையாகக் கட்டப்பட்ட கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய மூன்று அணைகளும் உடனடியாக முழுமையாக உடைக்கப்பட வேண்டும்.

மேற்படி மூன்று அணைகளையும், உடனடியாக உடைக்க மத்திய அரசும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதோடு, தமிழ்நாட்டு அனைத்து மக்களும் அனைத்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சோர்வ டையாமல் விழித்தெழுந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- சி. இரத்தினகிரி பொறியாளர் (ஓய்வு) அதவத்தூர் கிராமம்

தமிழ் ஓவியா said...

நுழையாதே!

மனம் மாறாதே, மதம் மாறாதே, மாறாது இருக்க வலியுறுத்துகிறது இந்து மகா சபா. கோயில் கருவறையில் நுழைந்தால் கல்லறையில் நுழைவாய் என எச்சரிக்கையும் செய்கிறது இந்து மகா சபா?....

- ச. இரணியன், திருமுல்லைவாயல்

தமிழ் ஓவியா said...

தெரியுமா?

கங்காரு ஒவ்வொரு முறை தாவும் போதும் 30 அடிக்கு மேலாக உள்ள தொலைவை தாண்டி விடுகிறது.

முயல், கிளி இரண்டிற்கும் ஒரு சிறப்பு திறன் உண்டு. விலங்கினங்களிடையே இந்த இரண்டால் மட்டும்தான் கழுத்தைத் திருப்பி பின்னால் பார்க்க முடியும்.

தமிழ் ஓவியா said...


சித்திரை முதல் நாள் அறிவிப்புக்கு வேதனை


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என
புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்குக் கோரிக்கை!
மலேசிய மாநாட்டில் தீர்மானம்!

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தலைநகர் கோலாலம்பூர், தான்சிறீசோமா அரங்கில், கடந்த ஞாயிறன்று தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் உலகப் பரந்துரை மாநாடு, அதன் தலைவர் அ. இராமன் தலைமையில் நடைபெற்றது. காப்பாளர் இரா. தமிழ ரசி தமிழ் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.

துணைச் செயலாளர் கரு. பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். சமுதாயக் காவலர் சே.பி. சாமுவேல் இராசு மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். நீண்ட வரிசையில் நின்று மாநாட்டு மலரைப் பலர் பெற்றுக் கொண்டனர்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், தமிழிய ஆய்வுக் களம், தலைவர் இர. திருச் செல்வம், மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர், திருமுறைச் செல்வர் ந. தர்மலிங்கம், தமிழ்நாடு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் பாவலர் கதிர். முத்தையன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழாலயம் சிறப்பாசிரியருமான பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மு. நிர்மலாதேவி தருமலிங்கம் தொகுத்து வழங்கிய, தொன்மை, நாகரிகம் தொடர் பான ஆவணப்படங்கள் மற்றும் குமரிக் கண்டம் ஆணவப் படங்கள் உள்ளடக்கிய வெண்திரைக்காட்சிகள் பார்வையாளர் களை வெகுவாகக் கவர்ந்தன.

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த வாழ்த்துச் செய்திகள் படிக்கப் பெற்றன.

தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் மா. கருப்பண்ணன், மாநாட்டின் தீர்மானங்களைப் படித்தார். அவை பலரால் முன்மொழியப்பட்டு வழிமொழியப் பட்டன.

துணைத் தலைவர் ந. பொன்னுசாமி நன்றி கூறினார்.

நடுவத் தலைவர் போகையா முனியாண்டி நெறியாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

1. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றி அறிவித்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

2. அச்சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக இன்றைய தமிழக அரசு சட்டம் இயற்றியதற்கு மிகுந்த வேதனையை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

3. அச்சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் புதிய சட்டம் இயற்றி அறிவிக்க இன்றைய தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தை முதல் நாளைப் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டாக, மலேசியத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அந்நாளை, பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, மலேசிய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தொன்மை வாய்ந்த மூத்த தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிச் சிறப்பித்த இந்திய நடுவணர சுக்கும் அதற்குத் துணைபுரிந்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் சென்னையில் இயங்கிவரும் செம் மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி உதவி அளிப்பதுடன், தற்போது முடங்கிக் கிடக்கும் அதன் நிருவாகத்தைச் சீர்படுத்தி மேலும் சிறப்புடன் செயற்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. தமிழர் வாழ்வியல் திருமறையாக வும் உலகப் பொதுமறையாகவும் திகழும் திருக்குறளை, தேசிய நூலாக அறிவித் துப் பெருமைப்படுத்துமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மற்றும் பல தீர்மானங்கள் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


ஏன்?


மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும் மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?
(குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...


எதிர்க்கட்சிகளுக்குத் தீனி, ஆளுக்கட்சிக்குப் பின்னடைவு!


வாரம் இருமுறை பெட்ரோல் விலையையேற்றுவதா?

விலையேற்றத்தை வணிக நிறுவனங்கள்

நிர்ணயிக்கும் உரிமை திரும்பப் பெறப்பட வேண்டும்

எதிர்க்கட்சிகளுக்குத் தீனி, ஆளுக்கட்சிக்குப் பின்னடைவு!

பெட்ரோல் விலையை வணிக நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை திரும்பப் பெறப்பட வேண்டும் - வாரம் இருமுறை விலை ஏற்றப்படுவதால் பொது மக்களின் எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆளாகும் - விலையேற்றத்தைத் திரும்பப் பெறுக என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

15 நாள்களுக்குள் மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.78 உயர்வு என்பது, மக்கள்மீது தாங்க முடியாத சுமையை ஏற்றுவதாகும். எண்ணெய் நிறுவனங்கள் 15 நாள்களில் நேற்று மீண்டும் இப்படி ஒரு ரூபாய் 40 காசுகள் உயர்த்தி, உள்ளூர் விற்பனை வரி, வாட் வரி நீங்கலானது; அதையும் சேர்த்தால் ரூபாய் 1.78 ஆகி உயர்ந்துவிடுகிறது!

15 நாள்களுக்கு முன்புதான் லிட்டருக்கு ஒரு ரூபாய் 68 காசு அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாய் 74 காசு (சென்னையில்) ஆனது! இப்படி வாரம் இருமுறை விலை ஏற்றப்படுவது - மக்களின் வெறுப்பையும், வேதனையையும் மத்திய அரசு சிந்திக்க வேண்டிய நிலையை உருவாக்குகிறது!

வியாபாரிகள் - வணிக நிறுவனங்கள் - சர்வதேச சந்தை நிலவரப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்ற உரிமையை மத்திய அரசு அந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கி, தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாம் என்பது ஒரு தவறான மத்திய அரசின் கொள்கை முடிவாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் (U.P.A.)யில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வின் மூத்த தலைவர் கலைஞர் அவர்கள் இதனை முன்பே சுட்டிக் காட்டினார். ஆனால் மத்திய அரசு இதனைப் பொருட்படுத்திடவில்லை.

விளைவு - இப்படி மத்தியில் உள்ள ஆட்சி நனைத்து சுமக்கும் அவல நிலையில்தான் உள்ளது!

பட்ஜெட்டைத் தேர்தல் கண்ணோட்டத்தோடு தயாரிக்க முனையும் மத்திய ஆட்சி, இம்மாதிரி மக்களின் மகத்தான எதிர்ப்பு, கண்டனம் வரும் செயல்களை அவ்வப்போது ஏற்படும்படிச் செய்வது அறிவுடைமையாகுமா?

கார் வைத்திருப்பவர்களை மட்டும் இது பாதிக்காது; சரக்குகள் கொண்டு வரும் லாரி மற்றும் பொருள்கள் டீசலும் ஏறிக் கொண்டுதானே வருகிறது! எனவே உடனடியாக இதைத் திரும்பப் பெறுவதோடு, பெட்ரோலிய வணிக அமைப்புக்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களே தன்னிச்சைப்படி, விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை மீண்டும் திரும்பப் பெற்று, மக்களின் அதிருப்தி எதிர்ப்பு, கண்டன அலைகளிலிருந்து ஆட்சியாளர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்றேல் மக்கள் ஆதரவு இவ்வரசுக்குக் கிடைப்பது அரிதே! வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகளுக்கும் இது வாய்ப்பான தீனியாகும்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
2.3.2013

தமிழ் ஓவியா said...


போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக் களங்கள் சேனல் 4 ஆவணப் படம் ஜெனிவாவில் ஒளிபரப்பப்பட்டது

இலங்கை அரசின் எதிர்ப்புப் புறந்தள்ளப்பட்டது

தாக்குதல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்ட பகுதியில், சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாகக் குண்டுகளை வீசியதில் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் வைத்துக்கொண்டு உறவினர்கள் தவிக்கும் நிலையை சேனல்-4 தொலைக்காட்சி, போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள துயரக் காட்சிகளில் இதுவும் ஒன்று. அடுத்த படம்: குண்டு வீச்சில் உயிரிழந்த தனது மகனின் உடலைக் கைகளில் ஏந்தியபடி கதறி அழும் தந்தை. முள்ளி வாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு வெளியே எடுத்த படங்கள் இவை.

ஜெனீவா, மார்ச் 2- இலங்கை யின் கடும் எதிர்ப்பையும் மீறி, போர்க்குற்ற ஆவணப்படம் அய்.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நேற்று காட்டப்பட் டது. சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் தொடர்பாக நாளை மறுதினம் (திங்கள் கிழமை) முக்கிய விவாதம் நடை பெறும் என தகவல்கள் கூறு கின்றன.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம், உள்நாட் டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்து, இனப்படு கொலை செய்தது. அங்கு நடந்த போர்க்குற்றங்கள் உலக நாடு களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

விடுதலைப்புலிகள்மீது வீண் பழி!

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், அய்.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து இலங் கையில் தேசிய செயல் திட்டம் என்ற ஒன்றை அதிபர் ராஜபக்சே ஏட்டளவில் கொண்டு வந்தார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை அரங்கேற்றிய சிங்கள ராணுவத்தைக் கொண்டே போர்க்குற்றங்கள் குறித்து விசா ரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங் களுக்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக சிங்கள ராணுவம், பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது.

தமிழ் ஓவியா said...

ஆனால் அய்.நா. வல்லுநர் குழு, இலங்கை போர் இறுதிநிலையை அடைந்தபோது, 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. உயிருக்குப் பயந்து போர் இல்லாத மண்டலங் களில் தஞ்சம் புகுந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டது உலக நாடுகளை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் நிர்வாண நிலையில், கைகள் கட்டப் பட்டு கூட்டம், கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது அதே சேனல்-4 தொலைக்காட்சி, போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப் பில், இயக்குநர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப் படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபா கரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை, பதுங்குகுழியில் 2 அடி தூரத்தில் நிற்க வைத்து சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பால் வழியும் முகத்துடன் காணப்பட்ட அந்த சிறுவனை, அவர் பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக சிங்கள ராணுவம் படுகொலை செய்தது, காண்போரின் குருதியை உறைய வைப்பதாக அமைந்தது.

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அய்.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி, நடந்து வரு கிறது. இந்தக் கூட்டத்தில், இலங் கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வரு கிறது. இந்தத் தீர்மானத்துக்கு அய் ரோப்பிய நாடுகள் ஆதரவு தெரி வித்துள்ளன. அய்.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் 2 நாள்களுக்கு முன் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே, இலங்கைக்கு எதிரான எந்த ஒரு விவாதத்துக்கும், தீர்மானத் துக்கும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார். சேனல்-4 ஆவணப் படத்துக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது

இந்த எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சி இடம் பெற்றுள்ள போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படம், அய்.நா. மனித உரிமை கவுன் சில் கூட்டத்தில் நேற்று திரையிடப் பட்டது. இதைக் கண்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடும் அதிர்ச் சியும், வேதனையும் அடைந்தனர். தீர்மானம் வருகிறது

போர்க் குற்றங்களால் சின்னா பின்னமாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ உலக நாடுகள் உதவ வேண்டும் என்று போர் இல்லா மண்டலம்: இலங் கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கல்லம் மெக்ரே உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் நாளை மறுதினம் திங்கள்கிழமை அன்று தாக்கலாகும் என தகவல்கள் கூறுகின்றன. அதன்பேரில் விவாதம் நடைபெறும். விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடை பெறும். இந்தத் தீர்மான விவரம் வெளியிடப்படவில்லை. இருப் பினும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டில்லி மாநிலங்களவை யில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்தத் தீர்மானத் தின் மீதான தன் நிலைப்பாட்டைக் கூட அது அறிவிக்கவில்லை. இது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என மத்திய அரசு நழுவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


மக்களின் எதிர்திசையில் பயணிப்பதும், அவர்களைச் சீர் செய்வதுமே நல்ல பத்திரிகையின் அடையாளம்!



விடுதலை வாசகர் வட்டத்தில் நந்தலாலா பேச்சு

திருச்சி, மார்ச். 2- "மக்களை மலினப்படுத்தும் வேலையை வணிகப் பத்திரிகைகள் விட வேண்டும். மக்களின் எதிர் திசையில் பயணிப்பதும், அவர் களைச் சீர் செய்வதுமே ஒரு நல்ல பத்திரிகையின் அடையாளமாகும். அந்த அடையாளம் விடுதலையில் நிறையவே இருக்கிறது," என நந்தலாலா பேசினார். திருச்சியில் விடுதலை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது. அச்சுக்கும், தமிழுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இந்திய மொழிகளில் அச்சிடப் பட்ட முதல் மொழி தமிழ். ஓர் கிறிஸ்துவப் பாதிரி யார்தான் 1527 இல் தமிழ்ப் புத்தகத்தை அச்சு வடிவத்தில் நமக்குத் தந்தவர். இன்றைக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நம்மிடையே வந்துவிட்டன. ஒரு பத்திரிகையை அகலப் படுத்துவதும், ஆழப்படுத்து வதும் அவசியமான தேவை. அதை அழகாகச் செய்தவர் பெரியார். செய்திப் பத்திரிகை கள் ஒரு மனிதரின் உறுப்பு போல என்றவர் அவர். நான் பிறந்தது புதுக்கோட்டை அருகே ஓர் கிராமம். என் அப்பா வெளி யூரில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். எனது தாத்தா திருமலை ஆசிரியராகப் பணி புரிந்தவர்.

தமிழ் ஓவியா said...


இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை மணிக்கணக்கில் பிரசங்கம் செய்பவர். இந்நிலையில் என் அப்பா பள்ளி விடுமுறைக்குக் கிராமம் வந்தவர், நண்பர்க ளோடு விளையாடிக் கொண்டி ருக்கிறார். அப்போது அந்தக் கிராமத்தின் 13 வயது நிரம்பிய குருக்கள் மகன், என் தாத்தாவை "திருமலை இங்கே வா," என அழைத்துள்ளான். இதைக் கவனித்த என் தந்தை, அந்தக் குருக்கள் மகனை ஓங்கி ஒரு அரை கொடுத்துள்ளார். அதோடு எங்கள் கிராமத்தில் பெயர் சொல்லி அழைப்பது நின்று போனது. குருக்கள் மகன் ஏதோ அன்றுதான் என் தாத்தாவைப் பெயர் சொல்லி அழைத்ததாக நான் கருதவில்லை. அது பல காலமாய் நடந்து வந்த ஒன்று. என் தாத்தாவே எதுவும் உணராத நிலையில், கிராமத்துப் பையனான என் அப்பாவுக்கு எப்படி புது உணர்வு தோன்றியது? இந்த இடத்தில் என் அப்பாவுக்கு உந்துசக்தியாக இருந்தது பெரியாரின் சுயமரி யாதை. பெண்கள் நிலை குறித்து பாரதியின் இந்தியாவும், பெரியாரின் குடியரசும் நிறையவே பேசியுள்ளன. அதுவும் பாரதி யைவிட பெரியாரின் வலிமை அதிகம் என்றே சொல்வேன். பெரியார் பயன்படுத்திய தமிழும், அவரின் சொற்களும் அழகானவை. ஒரு சொல் கூட, படிக் காத ஒருவருக்கும் புரியாமல் போகக் கூடாது என்பதில் கவ னமாக இருந்துள்ளார். அவரின் மொழி எல்லா இடத்திலும் இயங்குகிறது. பெரியார் எழுத் துகளைப் படிக்கும் போது எப்படி இருக்கும் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. பறவைகள் வானில் பறக்கும் போது இறக்கைகளை அசைக்கும். சிறிது நேரத்தில் இறக்கைகள் அசைவது நின்றுவிடும். அப்படியே மிதந்து போகும். அப்படித்தான் அவரின் எழுத்துகளில் நானும் மிதக்கிறேன்.

பத்திரிகைகளை வணிகம் மற்றும் கருத்தியல் என இரு வகைப்படுத்தலாம். வணிகப் பத்திரிகைகள் ஒரு வாசகரைப் படிக்கவும், கேட்கவும் வைக்கிறது. ஆனால் இயக்கப் பத்திரிகைகள் வாசகர்களை உணர வைத்து, செயல்பட வைக்கிறது. இயக்கப் பத்திரிகைகள் எண்ணிக்கையில் குறைவாக இருக் கலாம். அதை அதிக்கப்படுத்து வதின் நோக்கமே இது போன்ற வாசகர் வட்டங்கள். மண்டல் கமிசன் நேரத்தில் ஒரு மாணவன் தீக்குளித்ததை, இந்தியா டுடே பத்திரிகை அட்டைப் படமாக வெளியிட்டது. சாதாரண நேரங்களில் எல்லா பத்திரிகைகளும் நல்லதாகவே தோன்றும். பிரச்சினைகளின் போதுதான் யார் எந்தப் பக்கம் எனத் தெரியவரும். கொள்கை சார்ந்த பத்திரிகைகள் மக்கள் கொந்தளிப்பாக இருந்தாலும், இல்லா விட்டாலும் நியாயத்தை மட்டுமே எடுத்துச் சொல்லும். அதேபோன்று மக்கள் போகிற திசை யில் செல்வது வணிகப் பத்திரிகைகள். மக்களின் எதிர் திசையில் சென்று இயங்குவது கொள்கைப் பத்திரிகைகள். இவை எண்ணிக்கை யில் குறைவாக இருந்தாலும் சமூகச் செல்வாக்கோடு விளங்குகின்றன. நல்ல விசயங்களை வாசகர் கள் அடிக்கடி மறந்துவிடுவார்கள். விடுதலை போன்ற ஏடு கள்தான் சிங்காரவேலர், நடேசனார் இறப்பை நினைவுபடுத்தி, தொடர்ந்து சிறப்பு செய்கின்றன. இரண்டு கட்சித் தலைவர்களின் பேச்சு மட்டுமே அரசியல் ஆகிவிடாது.

அதைக் கடந்த விசயங்களை இயக்கப் பத்திரிகைகள் மட் டுமே தரமுடியும். நடிகை சிம் ரன் கன்றுக்குட்டி ஈன்றால் அது அதிசயம். ஆனால் ஆண் குழந்தை பிறந்ததை அதிசய மாய் எழுதுகின்றன பத்திரிகைகள். இந்த அதிசய செய்தியால், சில்லறை வர்த்தகப் பிரச்சினை களை அவன் படிக்காமல் போகிறான். இந்தியாவில் 4 கோடி பேர் சில்லறை வர்த்தகத் தில் ஈடுபட்டு, ஆண்டிற்கு 25 இலட்சம் கோடி ரூபாய் வணிகம் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் வால்மார்ட், தனியொரு மனிதராக ஆண்டிற்கு அதே 25 இலட்சம் கோடி வணிகம் செய்கிறார். தனி ஒரு மனிதருக்காக 4 கோடி இந்தி யர்களின் வாழ்வு முடியப் போகிறது. இதுகுறித்து எழுதாத வணிகப் பத்திரிகைகள், வெறும் நொறுக்குத் தீனிகளை மட்டுமே வாசகனுக்கு வழங்கு கிறது.

நம்மவர்களும் நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி, சத்துள்ள சாப்பாடு கிடைத்தாலும் சாப்பிட வயிறற்றவனாக ஆகிப் போனான். ஒரு காலத்தில் செய்தி ஊடகங்கள் குறைவாக இருந்தன. இப்போது மிக அதிகமாக இருக்கின்றன. ஆனாலும் தமிழன் மட்டும் குருடனாகவே இருக்கிறான். மக்களை மலினப் படுத்தும் வேலையை வணிகப் பத்திரிகைகள் விடவேண்டும். மக்களின் எதிர் திசையில் பயணிப்பதும், அவர்களைச் சீர் செய்வதுமே ஒரு நல்ல பத்திரி கையின் அடையாளமாகும். அந்த அடையாளம் விடுதலையில் நிறையவே இருக்கிறது," என நந்தலாலா பேசினார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையின் ராஜபக்சே அரசுக்கு எதிராக - ஜெனிவாவில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவரவேண்டும்


இனப்படுகொலை செய்து - எண்ணிலடங்காப் போர்க் குற்றங்கள் புரிந்து - மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய இலங்கையின் ராஜபக்சே அரசுக்கு எதிராக - ஜெனிவாவில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவரவேண்டும்
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் இரா. தாமரைச்செல்வன்

புதுடில்லி, மார்ச் 2- நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 27 ஆம் தேதியன்று நேரமில்லா நேரத்தின் போது இலங்கைப் பிரச்சினை குறித்து கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்று பேசிய தருமபுரி தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் இரா. தாமரைச்செல்வன், இலங்கையில் எண்ணிலடங்கா இனப் படுகொலைகள் செய்து போர்க் குற்றங்கள் புரிந்து - மனித உரிமைகளை அப்பட்ட மாக மீறிய இலங்கையின் ராஜபக்சே அர சுக்கு எதிராக, ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும், இலங்கைக்கு எதி ராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மா னத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மக்களவையில் அவர் பேசியதாவது:

அப்பாவி இலங்கைத் தமிழர்கள்மீது இலங்கை அரசாங்கம் நடத்திய போர்க் குற்றம் மற்றும் படுகொலைகள் தொடர் பாக ஜெனிவாவில் நடைபெறும் மனித உரி மைகள் ஆணைய மாநாட்டில் அமெ ரிக்கா தீர்மானம் கொண்டுவருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், எந்த நாட்டிலிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தார்களோ, அந்த நாட்டிற்கு; இலங்கை நாட்டின் மனித உரிமை மீறல் குறித்து தீர்மானம் கொண்டு வருவதற்கான எண்ணமோ, நேரமோ கிஞ்சிற்றும் இல்லாதது தமிழர்களாகிய எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

ஆனால், தமிழர்கள் மீது இலங்கை நடத்திய மனித உரிமைக்கு எதிரான தாக்குதல் குறித்து அமெரிக்கா, தீர்மானம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டி ருப்பது எங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இலங்கையை ஆளும் ராஜபக்சேவின் சர்வாதிகாரக் கொள்கைகளைக் கண் டித்து, ராஜபக்சே ஒரு சர்வதேச போர்க் குற்றவாளி என உலக நாடுகள் குறிப்பிடும் போது, நமது இந்திய அரசு ராஜபக்சேவைக் கண்டித்துத் தீர்மானம் கொண்டுவராததன் நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைக்கு எதிராக அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா ஏன் தயங்குகிறது என்று தெரிய வில்லை.

முகத்தில் புன்னகையையும், அகத்தில் வஞ்சத்தையும் கொண்டு இரட்டை வேடம் போடும் ராஜபக்சேவின் உண்மைச் உரு வத்தை இந்தியா எப்பொழுதுதான் புரிந்துகொள்ளும்? ராஜபக்சே ஒரு இரட்டை வேடதாரி என்பதை உணர்ந்து கொள்ள இந்தியா மறுப்பதேன்?

அண்மையில் சானல்-4 என்ற ஊடகம் வெளியிட்ட நிழற்படங்கள்மூலம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் அப்பட்டமாக நிரூபணமாகி உள்ளன.

அதில் ஒரு நிழற்படம்; பிரபாகரனின் மகன் 12 வயதே ஆன பாலச்சந்திரன் கொடூ ரமாகக் கொல்லப்பட்ட காட்சி, ராஜபக்சே அரசின் இனப்படுகொலைகளுக்கு சாட் சியாக அமைந்துள்ளது. ஆனால், நமது வெளியுறவுத் துறை அமைச்சரோ, அந்தப் புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்றவை, போலியானவை என்பது போலப் பேசி யிருப்பது, நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அத்தகைய பேச்சு தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது.

தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள், பெண் கள், முதியோர் உள்பட அப்பாவித் தமிழ் மக்கள் ஏறத்தாழ 40 ஆயிரம் பேரை சிங்கள ராணுவம் கொன்று குவித்ததை நாம் மறக்க முடியாது. மொத்தத்தில் 7 லட் சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளார்கள்.

அய்க்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி கள் கூட, இலங்கையில் தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என அளவிட முடியவில்லை என சில அறிக்கை கள் கூறுகின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம் இன்று பாலைவனம் போலக் காட்சியளிக்கின்றன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

நமது இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக் கென அனுப்பிய நிதியுதவியினை தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தாமல் சிங்கள மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இத்தகைய எண்ணிலடங்கா போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை யும் செய்த ராஜபக்சேமீது உலக நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுத்திட வாய்ப்பாக ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என இந்த நேரத்தில் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன்.

மேலும், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு மக்களவையில் இரா. தாமரைச்செல்வன் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார்


கள்ளின் வெற்றியே, வெற்றி என்ற தலைப்பின் கீழ் அரசாங் கத்தார் நடத் திவரும் பொல்லாத கள்ளுக் கடைகளை மூட வழி தேடுங்கள் என்று சொன் னேன். அதற்கு வகுப்புவாரிக் காரரும் ஜஸ்டிஸ் கட்சியாரும் இன்னும் சிலரும் தன்னைப் பற்றி, சந்தேகப்படுகிறார் கள் என்று சொல்லுகிறார்.

ஆனால், கட்சியார்கள் இவர் பேரில் சந்தேகப்படுவதற்கு சொல்லும் கார ணங்களுக்கு மாத்திரம் பதில் சொல்லு வதில்லை. சந்தடி சாக்கில் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி சொல்லும் போது நியாயக் கட்சி (=பிராமணரல் லாதார் - ஜஸ்டிஸ் கட்சி) என்று பெயர் வைத்துக் கொண்டு சிறு வகுப்பார்களை (=பிராமணர் களை) அநியாயமாய் (= யோக்கியமான பிராமணர்களின் மேல் அபாண் டமான பழிகளைச் சொல்லி) பசுபலத்தால் (=மிருக பலத்தால்) ஒடுக்கியாள (=அவர் களுக்கு மேலே போக) முயலும் (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கும்) கட்சியாரை (=பிரச்சாரம் செய்யும் கட்சியாரை) நான் ஆதரிப்பதாய் (=பிராமணராகப் பிறந்த நான் ஆதரிப்ப தாய்) ஏன் எண்ணுகிறீர்கள்)= (பிராமணர்களை பைத்தியக்காரத்தனமாய் ஏன் எண்ணுகிறீர்கள்) என்று எழுதுகிறார்.

இதி லிருந்தே ஸ்ரீமான் ஆச்சாரியாரின் பரிசுத்தத் தன்மையும், பிராமணர்களையும், பிராமண ரல்லாதாரையும் சமமாய் நினைக்கும் தன்மையும் வாசகர்கள் தான் உணர வேண்டும்.

அன்றியும் ஸ்ரீமான் ஆச்சாரியார் ஒரே அடியாய், கள்ளையே நிறுத்தி விடப் போவதாகவும் அப்புண்ணிய காரியத்தை வகுப்புவாரிக்காரரும் (ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் ஜஸ்டிஸ் காரரும் மற்றும் பல பிராமணரல்லாதாரும்) ஆட்சேப்பிப்பதாயும், பாமர வோட்டர்கள் நினைக்கும் படி மிகவும் துக்கப்படுகிறார்.

சிறீமான் ஆச்சாரியார் இதுவரை கள்ளை நிறுத்த காரியத்தில் நடக்கக் கூடியதாய் என்ன வழி சொல்லி இருக் கிறார்? சட்ட மறுப்பின் பேரால் சில பேர், முட்டுக்கட்டையின் பேரால் சில பேர், சுயராஜ்யத்தின் பேரால் சில பேர், வெற்றி மேல் வெற்றியின் பேரால் சில பேர் சட்டசபைக்குப் போகப் பார்ப்பது போல் கள்ளை ஒழிப்பதன் பேரால் தனக்கு வேண்டிய சில பேரோ அல்லது தானோ சட்டசபைக்குப் போகப் பார்க்கிறார்.

கள்ளை விலக்க சட்டசபை உதவு மானால் மகாத்மா அதை விட்டு விடு வாரா? அல்லது கள்ளுக்கடை மறி யலுக்காக ஜெயிலுக்குப் போய் மூத்திரச் சட்டியில் கஞ்சி வாங்கி குடித்தவர்கள் சட்டசபைக்குப் போக பயன்படுவார்களா? அல்லது அவர்களுக்கு யோக்கியதை இல்லையா? இதையெல்லாம் பொது ஜனங்கள் யோசிக்க மாட்டார்கள் என்றும் பொது ஜனங்களைச் சுத்த முட்டாள்கள் தானே என்றும் நினைத்துக் கொண்டதால் இவ் வித தந்திர வழிகளில் தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள துணிந்து விட்டார் என்றுதான் எண்ண வேண்டியி ருக்கிறது.

கள்ளை நிறுத்த சட்டம் செய்ய சட்டசபைக்குப் போகலாம் என்பவர் தீண்டாமை ஒழிக்க சட்டம் செய்ய சட்டசபைக்குப் போகலாம் என்று ஏன் சொல்லக் கூடாது? அப்படிச் சொன்னால் ஒரு சமயம் சர்க்காரர் தீண்டாமை ஒழிய சட்டம் செய்ய சுலபத்தில் ஒப்புக்கொள்ளுவார்கள். பிராமண சட்டசபை மெம்பர்கள் ஆட்சேபணை பலிக்காமல் போய் காரியத்தில் ஒரு சமயம் தீண்டாமை ஒழிந்தாலும் ஒழிந்து போகும்.

ஆதலால், அதை ஒழிக்க முடியாத இடமாகிய ஜனங்களிடமே சொல்லிக் கொண்டு காலத்தை நடத்தலாம். கள்ளையும் ஒழிக்க முடியாத இடமாகிய சர்க்கார் சட்டசபையிடமே சொல்லிக் கொண்டிருக் கலாம். எப்படியாவது ராஜீய பேச்சு ரதம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம் போலும்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 24.01.1926

தமிழ் ஓவியா said...


அதனால்தான் உங்கள் வீட்டின் மேல் காகம் பறந்தது


சிறு பிள்ளைகள் ஒருவருக்குகொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் போது - சரியான தோஷம் சொல்லு வதற்கு வழியில்லாத போது கோபத்தில் வெறியால் ஏதாவ தொன்றைச் சொல்லி வைவதற்கு ஒருவன் மற்றவனைப் பார்த்து அதனால்தான் உங்கள் வீட்டின் மேல் காக்காய் பறந்தது என்று சொல்லுவதுண்டு.

அதுபோலவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி குற்றம் சொல்ல வகை இல்லாமற் போனால் ஏதாவது சொல்லித் தீர வேண்டிய நிலைமைக்கு ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் வந்துவிட்டதால், சென்ற வாரத்திற்கு முந்தின பத்திரி கையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கிற தலைப்பின் கீழ் முஸ்லிம் லீக் தீர்மானத்தைப் பற்றி எழுதிவிட்டு வகுப்புவாரித் தீர்மானம் தப்பு என்கிறதற்கு ஆதாரமாக முஸ்லீக் லீக்கில் மௌலானா முகமதலிக்கும், ஸர். அப்துல் ரஹீமுக்கும் மேற்படி தீர்மான விஷயத்தில் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தை எடுத்துக் காட்டி இவ்வித அபிப்பிராய பேதம் உண்டாவதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்கிறார்.

இருவருக்கும் அபிப்ராய பேதம், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமா? வேண்டாமா? என்கிற விஷயத் தில் இல்லவே இல்லை என்பதையும், அதற்காக ஏற்படுத்தும் திட்டத்தில்தான் என்பதையும் ஸ்ரீமான் முதலியார் அறிந்திருந் தும் இதைப் பொதுஜனங்களுக்குத் திரித்துக்கூற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது பற்றி நாம் பரிதாபப்படுகிறோம்.

ஸ்ரீமான் முதலியார் கூற்றுப் போலவே அபிப்பிராய பேதம் இருந் திருந்தாலும் அதற்காக அத்தத்துவமே வேண்டாமென்று சொல்லி விடலாமா? சுயராஜ்ய விஷயமான தீர்மான விஷயத் தில், அபிப்பிராயபேத மேற்பட்டால் அதற்காக சுயராஜ்யமே வேண்டாமா? என்று நாம் கேட்கிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 24.01.1926

தமிழ் ஓவியா said...


திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம்


திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம் இம்மாதிரி நாகர் கோவிலைச் சேர்ந்த கோட்டார் டாக்டர் எம்.எம் பெருமாள் நாயுடு அவர்கள் நமக்கு எழுதியிருக்கிறார். மழைவிட்டும் தூறல் விட வில்லை என்று சொல்லுவது போல் வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்து தெருவில் நடக்கும் உரிமை பெற்றால், அது வைக்கத்திற்கு மாத்திரம் தான் செல்லும்; மற்ற இடங்களுக்குச் செல்லாது என்கிற வியாக்கியானம் செய்து கொண்டு, அங்குள்ள வர்ணா சிரமிகள் மறுபடியும் உபத்திரவம் செய்வதாய்த் தெரிகிறது.

வைக்கம் சத்தியாக்கிரகம் சம்பந்தமாய் திருவாங்கூர் அரசாங்கத்தார் எவ்விதமான உத்திரவும் போடவேயில்லை. வைக்கம் சத்தியாக் கிரகத்திற்குச் சர்க்காரர் செய்த தெல்லாம் தெருவில் ஜனங்களைத் தடுக்க நிறுத்தியிருந்த காவலர்களை எடுத்து விட்டதுதான் அவர்கள் செய்த வேலை. இதற்காக ஓர் உத்தரவு போடும்படி சர்க்காரைக் கேட்டதற்கு அவர்கள் தாங்கள் வெகு வருஷங்களுக்கு முன்ன தாகவே, பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் ஜாதிமத வித்தியாச மில்லாமல் பொது ஜனங்கள் அனுபவிக்கத்தக்கது என்று உத்திரவு போட்டிருக் கிறோம் என்று மறுமொழி சொல்லி விட்டார்கள்.

ஆதலால், இப்பொழுது சர்க்காரர் பேரில் குற்றம் கூற இடமில்லை. பிராமணர்களொழிந்த நாயர் முதலிய பிராமணரல்லாத உயர்ந்த ஜாதியாரென்று சொல்லப்படுகிறவர்களும் தங்கள் வகுப்பு மகாநாடுகளின் மூலமாக பொது ரஸ்தாக்களிலும், பொதுக் குளங்களிலும், சகல இந்துக்களும் தாராளமாய் நடமாடலாமென்கிற தீர்மானத்தையும் ஏகமனதாய்த் தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆதலால், இப்பொழுது சம உரிமைக்கு இடைஞ்சலாயிருப்பவர்கள் பிராமணர்களென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இம்மாதிரி ஒவ்வொரு காரியங் களுக்கும் சம உரிமைக்கு விரோதமாய் நின்று கொண்டு மனிதர்களைக் கொடுமைப் படுத்தும் இந்த ஜாதியார், எத்தனை நாளைக்கு இப்படியே வாழக்கூடுமென்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. தமிழ்நாட்டுச் சகோதரர்களே!

சுசீந்திரத்தில் டாக்டர் எம்.எம்.பெருமாள் நாயுடு அவர்கள் எழுதியிருப்பது போல் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியமேற்படுமே யானால், வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு நமது கடமையைச் செய்தது போலவே சுசீந்திரம் சத்தியாக் கிரகத்துக்கும் நாம் தயாராயிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சார்பாக டாக்டர் எம்.எம். பெருமாள் நாயுடு அவர்களுக்குத் தமிழ்நாடு தனது கடமை யைச் செய்யத் தவறாது என்று வாக்குக் கொடுக்கிறோம். (ப.ர்)

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 17.01.1926

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசிற்கு பீதியை ஏற்படுத்தியது லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாடு!


லண்டன், மார்ச் 2- உலகத் தமிழர் பேர வையின் இவ் ஆண்டிற்கான சர்வதேச மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தில் 27.02.2013 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலை யில், சர்வதேசத்தின் இலங்கை மீதான அழுத்தங்களும் அதிகரித்துவரும் சூழலில் இம் மாநாடு மேலும் இலங்கை அரசிற்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் முகமாக அமைந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த இம் மாநாட்டில் பிரித்தானியா வின் மூன்று பெரும் அரசியல் கட்சிகளை யும் சேர்ந்த முக்கிய அமைச்சர்களான, பிரித்தானியத் துணைத் தலைமை அமைச் சரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான NICK CLEGG, பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ED MILIBAND, லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்தத் தலைவரும், அமைச்சருமான ED DAVEY மற்றும் அய்க்கிய நாடுகள் சபை நிபுணர் குழு உறுப்பினர் YASMIN SOOKA, முன்னாள் இலங்கைக்கான அய்.நா பிரதிநிதி GORDON WISE , Channel 4 தொலைக்காட்சியின் “NO FIRE ZONE” ஆவணப் படத்தின் தயாரிப்பாளர் CALLUM MACRAE, பி.பி.சி செய்தி யாளர் FRANCIS HARRISON, நார்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ERIK SOLHIM, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி Professor WILLIAM SCHABAS, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான LEE SCOTT மற்றும் DOUGLAS ALEXANDER, உறுப் பினர்கள் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பிரித்தானிய நாடா ளுமன்ற உறுப்பினர்களான SIOBHAIN McDONAGH, VIRENDRA SHARMA, SIMON HUGHES, KEITH VAZ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் R.SAMPANTHAN உட்பட்ட 36 பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான தமது கருத்துக்களை தெரி வித்ததோடு இவ்வாறான ஒரு மாநாட்டை ஒழுங்கமைத்தமைக்காக உலகத் தமிழர் பேரவைக்கு (GTF) நன்றிகளையும், வாழ்த் துகளையும் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


முக்கிய விடையமாக அனைத்துப் பிரமுகர்களின் உரைகளில் இலங்கையில் நடைபெற்ற கொடூர கொலைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றத்திற்குமான சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு போர் முடிவுற்ற பின்னரும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதை உணர முடிவதாகவும், அவ்வாறான நிலை நீங்கி சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் தாம் வலியுறுத்து வதோடு அது தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்படுவது பற்றி இம் மாநாட்டின் மூலமாக அனைத்துக் கட்சி ஒற்றுமை உருவாகியுள்ளதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்தனர்.

இம் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறீதரன், சந்திரனேரு சந்திரகாந்தன், சுமந் திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இம் மாநாட்டில் காணொளி மூலமான DAVID CAMERON இன் உரையில், இலங் கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இம் மாநாட்டில் பிரித்தானியா, அமெ ரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சுவீடன், நார்வே, டென்மார்க், ஜெர்மனி, போன்ற நாடுகளில் இருந்து தமிழ் அமைப்புப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு மாநாடு ஆரம்பமான காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்கு நிறைவடையும் வரை தொடர்ச்சியான உரைகளும், மண்டபம் நிறைந்த மக்களுமாக காட்சியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இம் மாநாட்டில் சானல் 4 தொலைக் காட்சியின் CALLUM MACRAE-யின் “NO FIRE ZONE” ஆவணப்படத்தின் இதுவரை வெளிவராத முக்கிய சில காட்சிகள் திரையிடப்பட்டன.

பிரித்தானிய பிரதமர் DAVID CAMERON அவர்களும், பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் DAVID MILIBAND அவர்களும் இந்த மாநாட்டிற்கு தமது வாழ்த்துகளை காணொளி வடிவில் அனுப்பியிருந்தமையும், அவை அங்கு அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டமையும், ஊட கவியலாளர்களும், மக்களும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், கலந்துரையாடவும் சுதந்திரமான முறையில் அனுமதிக்கப் பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த மாநாட்டின் முடிவில் முன்னாள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களின் குரலாக உள்ளும், வெளியும் தொடர்ந்து குரலெழுப்பி வருபவருமான JOAN RYAN அவர்கள் நன்றி உரையினை வழங்கினார்.

இம் மாநாடு தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் தமிழர்கள், மற்றும் தமிழர்கள் அல்லாதோரையும் ஒன்றி ணைத்த சிறந்த மாநாடாகவும், அய்.நா அதிகாரி, மனித உரிமை அமைப்பு பிரதி நிதிகள், உட்பட ஒரே மேடையில் கட்சி வேறுபாடின்றி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமர்த்தி அவர்களினூடாக இலங்கையில் நடைபெற்ற போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதப் படுகொலைகள் என்பவற்றிற்கு சர்வதேசத்தின் சுயாதீன விசாரணையை வலியுறுத்திய மாநாடாகவும் அமைந்தமை அனைவரையும் மகிழ்வ டைய வைத்ததோடு, சர்வதேசத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் மாற்றங்களும், நகர்வுகளும் இடம் பெறுவதை வெளிப்படுத்தியும் இருந்தது.

இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அரசு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளதாக வும், கொழும்புத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

தமிழ் ஓவியா said...


சேனல் 4 ஆவணப்படம்: நீதிபதி உள்ளிட்டோர் வெளியிட்ட கருத்து


புதுடில்லி, மார்ச் 2- இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் தமிழர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையை நிரூபிக்கும் ஆவணப்படம் டில்லியில் அண்மையில் திரையிடப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.

சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ மற்றும் நிழற்படங்கள் அடங்கிய இந்த குறும் படத்தை இயக்குநர் கெலம் மெக்ரே, தயாரிப்பாளர் ஜோ செல் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இலங்கைப் போர்க்களத்தில் செய்தி சேகரித்த சேனல்-4 தொலைக்காட்சி நிகழ்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இலங்கை இனப் படுகொலை தொடர்பான உண்மை நிகழ்வுகளை மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விளக்கும் வகையில், சேனல்-4 குழுவினருடன் ஜோ செல் இந்தியா வந்துள்ளார்.

இவர்கள் உருவாக்கிய வீடியோ குறும்படத்தை டில்லியில் வெளியிட ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் அமைப்பு உதவியுள்ளது. இந்த குறும் படம், டில்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப் அரங்கில் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரி கையாளர்கள் ஆகியோருக்கு திரையிட்டுக் காட்டப் பட்டது. ஆவணப்பட விவரம் வருமாறு:

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற 2009 மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சண்டை நிறுத்தப் பகுதி (நோ ஃபயர் ஸோன்) என அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக் கானோர் தஞ்சம் அடைகின்றனர்.

அவர்களுக்கு அய்க்கிய நாடுகள் சபையின் மறுவாழ்வுப் பிரிவு ஊழியர்கள் நிவாரண உதவி களை வழங்கி வருகின்றனர்.

திடீர் திடீரென குண்டு மழை!

அந்தப் பகுதிகளில் திடீர், திடீரென குண்டு மழை பொழிந்து, அதன் தொடர்ச்சியாக அங்குள்ள மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழக்கின்றனர். மரண ஓலத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடும் மக்கள் மீதும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்கள் கதறியழும் நிலையில், அவர்கள் ராணுவ லாரிகளில் ஏற்றப்படுவதையும், பின்னர் அவர்களின் கதி என்ன ஆனது என்றும் தெரியவில்லை என்றும் ஆவணப்படம் கூறுகிறது.

ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆடைகள் அகற்றப்பட்டு, கைகள் பின்னுக்குக் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

விடுதைலைப் புலிகள் நடத்திய தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்ற பெண் உள்பட பல பெண்கள் அவ்வாறே கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

அரசாங்கம் அளிக்கும் சிகிச்சை சரியாக இல்லை' என்று சேனல்-4 தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த நபர் மறுநாள் சுட்டுக் கொல்லப் பட்டு முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்ப தாகவும் ஆவணப்படம் கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், பிஸ்கெட் சாப்பிடுவது போலவும், அப்போது தன்னைச் சுற்றிலும் தெரிந்த முகம் ஏதாவது உள்ளதா என தேடுவது போலவும், பின்னர், உடலில் அய்ந்து துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டு பாலச்சந்திரன் சரிந்து கிடக்கும் படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

படம் திரையிட்ட பிறகு, இலங்கைப் போரின் போது மனித உரிமைகளை அந்த நாட்டு ராணுவம் அப்பட்டமாக மீறியுள்ளது என்பதை படத்தின் கடைசியில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் இயக்குநர் கெலம் மெக்ரே விளக்கினார். இலங்கை இனப்படுகொலையை நிரூபிக்கும் ஆவணப் படத்தைப் பார்வையிட்ட பின் அது குறித்து சமூக ஆர்வலர்கள் பேசியது:

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தலைமை அலுவலர் ஜி. அனந்தபத்மநாபன்:

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட வில்லை என்று அந்த நாட்டு அரசு கூறிவருவதை பொய்யாக்கும் வகையில் கெலம் மெக்ரே குழுவினர் ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பக்கத்து நாட்டில் வாழும் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியைத் தட்டிக் கேட் கும் தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.


தமிழ் ஓவியா said...

அன்புள்ள அப்பாக்களுக்கு . . .


சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஒரு குடும்பம் என்கிற போது ஆண் என்கிற அந்த அப்பாக்களின் செயல்கள் அக்குடும்பத்தையே சிதைக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல் அவர்களின் மனைவிகள் வெந்துச் சாகிறார்கள்.

இவைகள் பொறுக்க முடியாமல் போகிற போதுதான் வன்முறைகளும், கொலைகளும் தீர்வாக வந்து நிற்கின்றன. மனைவிகளுக்குக் கோபம் வராததும், அவமானமாய்த் தெரியாததும் அப்பாக்களுக்குச் சாதகமாய் இருந்து வருகிறது.



தன்னுடன் சேர்ந்து நட்பாய், துணையாய், தோழராய், எல்லாமுமாய் வாழ வந்த அந்த மனைவியை, ஒரு பொருளாய் மிருகமாய், கேவலமாய் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் ?

நீங்கள் சிரித்தால் மனைவியும் சிரிக்க வேண்டும்; நீங்கள் அழுதால் அவர்களும் சேர்ந்து அழவேண்டும்! அப்பாக்களுக்குக் கோபம் வந்தால் மனைவிகள் நிலை பரிதாபம். சம்பந்தமே இல்லாத விசயங்களுக்கும் சித்திரவதைச் செய்துவிடுவார்கள்.

அப்பாக்கள் முறைத்தால் மனைவிகள் தள்ளி நிற்க வேண்டும்; சிரித்தால் அருகில் வர வேண்டும்! அதாவது குறிப்பால் உணர்ந்து சேவை செய்ய வேண்டும். இல்லையெனில் அப்பாக்கள் குதறிவிடுவார்கள். நாய் கூட நாம் சொல்வதைச் சிலநேரம் கேட்பதில்லை. இங்கு நாய்களைவிட, தாய்களின் நிலை மோசமாய் இருப்பதாய்ச் சேய்கள் கண்ணீர் விடுகின்றன.

பாதிக்கும் மேற்பட்ட அப்பாக்களுக்குத் திறமைகளே இருப்பதில்லை. ஆண் என்கின்ற ஒரே காரணத்திற்காக தேவையற்ற அதிகாரத்தைச் இச்சமூகம் அ(ழி)ளித்து வைத்திருக்கிறது. இன்னும் தன் உடையைத் துவைக்கத் தெரியாது, சாப்பிட்ட தட்டை, தேநீர்க் குடித்த குவளையைக் கழுவியது கிடையாது.

மனைவிகள் இறுமி, இறுமி நோய் வாய்ப்பட்டாலும் ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்துப் பழக்கமில்லை. ஆனால் அவர்களது வெள்ளை வேட்டிகளும், வெள்ளைச் சட்டைகளும், பொது இடங்களில் அவர்கள் பேச்சுகளும் அருமையாக இருக்கும். வீட்டில் ஒன்று, வெளியில் ஒன்று என பெரும்பாலான அப்பாக்களுக்கு இரண்டு முகங்கள்!

சில அப்பாக்களின் அராஜகம் இது மட்டுமா ? பொது இடங்களில் பார்த்தால் தெரியும்! அடிப்படை நாகரிகமே இன்றி, பலர் மத்தியில் மனைவிகளைக் கொத்திக் கொண்டே இருப்பார்கள். சில அப்பா விலங்குகள் பொது இடங்களில் கை நீட்டி அடித்துக் கொண்டிருக்கும். பொது ஒழுக்கம், பொது நாகரிகம் எதுவுமே தெரியாது. ஆனால் அப்பா என்கிற ஆணவம் மட்டும் அதிகம் இருக்கும்.

அப்பாக்களுக்கு வருகிற கோபங்களில் பாதிக்கும் மேல் அர்த்தமே இருக்காது. இவர்களின் கோபங்கள் குடும்ப மகிழ்ச்சியைச் சீரழித்திருக்கிறதே தவிர, வேறு யாதொரு பயனும் இல்லை.

இங்கே சில அப்பாக்களுக்கு ஒன்றை நாம் சொல்ல விரும்புகிறோம் உங்கள் மனைவிகளுக்கு எல்லாம் வாழ்நாளில் ஒரு சாவு கிடையாது. உங்களால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களோடு வாழ வந்த பெண்ணை, நெருப்பில் வேக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்பாக்களே! கொஞ்ச நேரம் ஓரமாய் அமர்ந்து யோசித்துப் பாருங்கள். மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரியவரும். இன்னும் சொல்லப்படாத உண்மைகள் ஏராளம் இருக்கிறது என்பதும் தெரியவரும். உங்களின் ஆதிக்கக் குணத்தை, அதிகாரக் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குணங்களால் குடும்பமே அழிகிறது, குடும்ப அழிவால் சமூகம் சிதைகிறது, சமூகச் சிதைவால் இனமே பாழ்படுகிறது. ஏனெனில் தனி மனித குணங்களில்தான் சமூக வளர்ச்சி உள்ளது.

ஆகவே, மாற்றிக் கொள்ளுங்கள். அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடுங்கள். இல்லையேல், இனிவரும் காலங்களில் எதுவும் நிகழலாம். அப்பாக்கள் கைநீட்டி அடித்த போது, அந்தக் கைகள் வெட்டப்பட்டன, தேவையற்ற முறையில் திட்டிய போது நாக்குகள் அறுத்தெறியப்பட்டன எனும் செய்திகள் வருவதற்கு முன் திருந்திக் கொள்ளுங்கள்; உண்மை நிலையை உணர்ந்துக் கொள்ளுங்கள்!

பேசத் தெரிந்த ஊமைகளின் சார்பாக

- வி.சி.வில்வம்
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

அன்றும் இன்றும் கலப்பு மணம்


- சி.இராஜாராம்

மனுதர்மம் எழுதப்பட்ட காலத்தில் நான்கு முக்கிய ஜாதிகளுக்குள்ளும், ஜாதி விட்டுச் ஜாதியில் ஏற்பட்ட திருட்டுத் திருமண உறவால் பல புதிய ஜாதிகள் உருவாயின. இப்படிப்பட்டவர்களை ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்க எந்த முறையைக் கையாள்வது என்று ஜாதி வெறியர்களுக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு எந்தத் தொழில், சமூகப் பணிகளை வழங்குவது என்று தெரியாத காரணத்தால் மனு என்பவன் ஜாதி முறையை விளக்கிப் புதிய கோட்பாடுகளை நிர்ணயிக்க மனுஸ்மிருதி என்ற நூலை எழுதினான். மனுவின் காலத்தில் தீண்டாமையே இல்லை. தூய்மையற்ற மக்களை மனு சண்டாளர்கள் என்றுதான் அழைத்தான். இவர்கள் அடிமைகள். மனுஸ்மிருதி நான்கு வர்ணத்தை நாட்டுச் சட்டமாக்கியது. பார்ப்பனர்களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை இறைவனின் வாக்கு என்ற வகையில் வெளியிட்டுள்ளான். (மனு நூல், மனு என்பவரால் கி.மு. 185ல் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.)

அசுத்தமான தொழில் புரிந்தவர்களும், ஓர் இனமாகத் தனித்து வாழ்ந்தவர்களும், பின்னர் போரில் தோற்றுப் போனவர்களும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும், புத்த மதத்தவர்களும், வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்களும், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும், சமூக வாழ்வில் வராத நாடோடி மக்களும், மேல்ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கீழ்ஜாதி ஆண்களும் அவர்களது சந்ததிகளும் மனுஸ்மிருதி மூலம் தீண்டப்படாதவர்களென்று ஒதுக்கப்பட்டனர்.

கேடுகெட்ட இந்த நால்வர்ண அமைப்பின் காரணமாக இந்துக்களில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் எந்த நேரடி நடவடிக்கையிலும் இறங்க முடியாதவர்களாக முடக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்க முடியாது. ஆயுதம் இல்லாமல் அவர்களால் கிளர்ச்சி செய்ய முடியாது. அவர்கள் எல்லோருமே கலப்பை பிடிப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், கலப்பையை மட்டுமே பிடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். கலப்பையைக் கொழுவாக வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு எப்போதுமே அனுமதி அளிக்கப்பட்டதில்லை. அவர்களிடம் துப்பாக்கி இல்லை. எனவே, அவர்களை அடக்கி ஒடுக்க விரும்பிய அனைவருக்குமே இவ்வாறு செய்வது சாத்தியமாயிற்று. அப்படியே நடக்கவும் நடந்தது.

நால்வர்ண அமைப்பின் காரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதியினரால் கல்வியறிவு பெற முடியவில்லை. எனவே, தங்கள் விடிவுக்கான வழியைப் பற்றிய எண்ணவோ, அறியவோ அவர்களால் முடியாமல் போனது. தாழ்த்தப்பட்ட நிலையில்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த நிலையிலிருந்து வெளியேறுவதற்கான வழி அவர்களுக்குத் தெரியாது. அதற்கான கருவியும் அவர்களிடம் இல்லை. எனவே, நிரந்தரமான அடிமைகளாக இருப்பதே தங்கள் தலை எழுத்து என்று அவர்கள் சரணாகதி அடைந்துவிட்டனர்.

டில்லியில் தேசிய சிறுபான்மை கமிஷனின் அய்ந்தாவது கூட்டத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் பேசும்போது நம் நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்களிடையே இன, மொழி, பிராந்திய அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன. அதனால்,இந்துக்களில் சிறுபான்மையினர் உள்ளனர். இக்காரணத்தால் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரும் தங்களை பெரும்பான்மையினர் என்று கூற இயலாது. கர்நாடகாவிலும், மேற்கு வங்கத்திலும் உள்ள பிராமணர்கள் ஒரே மாதிரியான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் பிராந்திய அடிப்படையில் அவர்களிடையே வேற்றுமை காணப்படுகிறது. நம் நாட்டில் 22 மொழிகளும், 22 ஆயிரம் பேச்சு வழக்குகளும், 85 அரசியல் கட்சிகளும் உள்ளன. இதனால் எதையும் பொதுமைப்படுத்திக் கூற முடியாது. நம் அனைவரிடமும் வெவ்வேறு கொள்கைகளும், கருத்துகளும் இருக்கின்றன. இதை அனைவரும் மதிக்கின்றோம். அந்த வகையில் நாம் அனைவரும் சிறுபான்மையினரே என்றார்.

40, 45 ஜாதி அமைப்புகளை உள்ளடக்கி ஒரு மிகப்பெரிய ஜாதிக் கூட்டணியை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுகிறவர்களே கேளுங்கள். ஜாதியை வைத்து ஆட்சி செய்ய நினைக்கிறவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 24.11.2008ஆம் தேதி இவ்வாறு பேசியிருக்கிறார். பிரித்தாளும் அரசியல், சிலர் ஆட்சிக்கு வர உதவியாக அமையும். ஆனால் நாட்டின் எதிர்காலத்தை இருளில் தள்ளிய செயல்லுக்கு அவர்கள் பொறுப்பேற்றாக வேண்டும். ஜாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி அதிகாரத்தைக் கைப்பற்றிச் சில காலம் ஆட்சி புரியலாம். ஆனால்,நாட்டை பிற்போக்குப் பாதையில் அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். இந்தக் கருத்தை அடக்கி ஆள நினைக்கும் ஜாதி வெறியர்கள் உணரவேண்டும்.

தமிழ் ஓவியா said...

கலப்பு மணம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஆதிக்க ஜாதியினர் பேசுகின்றனர். கலப்பு இல்லாத குலம் ஏது? மனித இனங்களில்! 1. நீக்ரோ _ ஆஸ்திரேலிய வகை அல்லது, ஆப்பிரிக்க _ ஓஷனிய வகை அல்லது நிலநடுக்கோட்டு வகை. 2. அய்ரோப்பிய வகை அல்லது அய்ரோப்பிய ஆசிய வகை. 3. மங்கோலிய வகை அல்லது ஆசிய _ அமெரிக்க வகை என்று உலக மனித இனங்களே கலந்துக் கிடக்கிறது. கலப்பற்ற ஒரு மனித இனம் எங்கும் இல்லை. உலகம் தோன்றிய முதலாய் உலகின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா இனங்களுக்கிடையிலும் கலப்பு இருந்தே வந்துள்ளது. குறிப்பாக இந்துக்களுக்கு இது முற்றிலும் பொருந்தும். இந்திய சமூகத்தில் அந்நியர் கலப்பு என்னும் நூலில் திரு. பந்தார்க்கர் கூறுகிறார்.

அந்நியக் கலப்பு இல்லாத ஜாதியோ, வகுப்போ இந்தியாவில் இல்லவே இல்லை. சத்திரிய வகுப்பினரிடையே மட்டுமல்ல; தங்கள் ஜாதி எவ்வித அந்நிய ரத்தக் கலப்புக்கும் ஆளாகவே இல்லை என்கிற ஆனந்த மாயையிலே ஆழ்ந்து கிடக்கிற பார்ப்பன ஜாதியிலும் கூட, அந்நிய ரத்தக்கலப்பு இருக்கவே செய்கிறது என்கிறார்.

இனத் தூய்மையில் நம்பிக்கை கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் கூட வெவ்வேறு இனங்களை (Races) வெவ்வேறு உயிரினங்கள் (Species) என்று கூறுவதில்லை. அவை ஒரே மனித இனத்தின் பல்வேறு வகைகள் மட்டுமே. வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மனிதர்களும் தங்களுக்கு இடையில் மணம் புரிந்து தலைமுறையைப் பெருக்க முடியும். அந்தத் தலைமுறையும் இனப்பெருக்கம் செய்யும் திறன் உள்ளதாக இருக்கும், மலடாக இருக்காது என்கின்றனர். ஜாதி வெறிப்பிடித்தவர்கள் இந்த அறிவியல் உண்மையை புறந்தள்ளியே வைக்கின்றனர்.

பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தமக்குள் கலப்பு மணம் புரிவதைத் தடுக்கும் எதிர்மறை அமைப்பாகவே ஜாதி அமைப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த எந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற அமைப்பாக அது இல்லை. அப்படித் தேர்ந்தெடுக்கிறவர்களை ஆதிக்க ஜாதியினர் விடுவதாகவும் இல்லை. கவுரவக் கொலைகள் நடத்தி தன் ஜாதி கவுரவம் காப்பாற்றுபவர்களாகவே உள்ளனர். இப்படிப்பட்டவர்களை கேட்பதற்கு நாதியற்றவர்களாகவே நாமும் இருக்கிறோம். என்ன செய்வது மாரிசின் (Morris) வார்த்தைகளில் கூறுவதானால் இந்து மதத்தில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்களை மிதிக்கின்றனர். வலுத்தவன் இளைத்தவனை அடித்து நொறுக்குகின்றான். கொடியவர்களுக்கோ அச்சம் என்பதே இல்லை. அன்பு மனம் கொண்டவர்களுக்கோ துணிச்சல் இல்லை. அறிவாளிகளுக்கோ பிறர்மேல் அக்கறை இல்லை.

தங்கள் அந்தஸ்தை ஜாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணுகின்றன. ஜாதிகளைத் தகர்த்தெறிவதற்கான உண்மையான வழி ஜாதி மறுப்பு மணமே என்பதை அறிந்த ஜாதி வெறியர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடக் கூடாது என்பதில் கண்டிப்போடு இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


ரத்தக் கலப்பு மட்டுமே எல்லாரும் நம்மவரே என்கிற உணர்வை உருவாக்கும். சமூகத்தை ஒன்றிணைக்க பல்வேறு காரணிகள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் திருமணம் என்பது சமூகத்தில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் சமூகமென்பது பல்வேறு கூறுகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இந்தக் கூறுகளை இணைக்கும் சக்தியாக திருமணம் மட்டுமே இருப்பதால் அது அவசரத் தேவையாகிறது.
கலப்பு மணத்தை நடைமுறைப் படுத்தும் ஒரு சம்பிரதாயம் புலைப்பேடி சம்பிரதாயம். இது ஒரு காலங்கடந்து போன சம்பிரதாயம் தான்! என்றாலும் கூட, நம் சமூகத்தில் காணப்படும் மேடு பள்ளங்களை அகற்ற மனிதகுலம் தேர்ந்தெடுத்த சில அற்புதமான மார்க்கங்களும் இதனுள் அடங்கி இருக்கிறது.

இச்சம்பிரதாயங்கள் சுமார் 500 ஆண்டுகாலமாவது வழக்கில் இருந்திருக்க வேண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்கள்தான் இப்புலைப்பேடி காலமாகக் கருதப்பட்டு வந்தது (இதுபோல வண்ணாப்பேடி, பறைப்பேடி காலமும் இருந்து வந்திருக்கிறது). புலைப்பேடி என்றால் புலையர்கள் பிடித்துக் கொள்ளல் அல்லது புலையர் அச்சம் என்பது. அப்புலைப்பேடி சம்பிரதாயத்தைப் பற்றி கி.பி.1517இல் இந்தியாவுக்கு வந்திருந்த பெர்போசா என்ற போர்ச்சுக்கீசியர் குறிப்பிட்டிருப்பதாவது, ............. புலையர்கள் ஆண்டுதோறும் சில மாதங்களில் தங்களால் முடிந்த அளவு மேல் ஜாதியினரான நம்பூதிரி _நாயர் குலப்பெண்களைத் தொட முயலுகிறார்கள். ராத்திரிக் காலங்களில், ரகசியமாக அவர்களை நெருங்கிச் சென்று தொந்தரவு பண்ண எத்தனிப்பதுண்டு.

தமிழ் ஓவியா said...


அந்தி நேரங்களில், அப்பெண்களைத் தொடுவதற்காக வேண்டி நாயர்கள் அல்லது நம்பூதிரி குலத்தவர்கள் வாழும் வீட்டோரமாகச் சென்று, புலையர்கள் ஒளிந்திருப்பர். மேல்ஜாதிப் பெண்கள் இம்மாதிரி தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள, கூடிய மட்டும் முயற்சிக்கவும் செய்கிறார்கள். இவற்றுக்கிடையே அவர்கள் ஏதாவது ஒரு நாயர் அல்லது நம்பூதிரி குலத்தைச் சேர்ந்த பெண்ணைத் தொட்டுவிட்டால், அதை வேறு எவராவது கவனிக்கவில்லையென்றாலும் கூட, தொட்ட புலையர்கள் பிறரைக் கூவி அழைத்து, இதைத் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு அப்பெண் திரும்பத் தன் வீட்டுக்குள்ளே நுழைய முடியாது. அந்தப் புலையனுடன் அவன் வீட்டுக்குப் போவதைத் தவிர அவளுக்கு வேறு வழி கிடையாது. குடும்பத்தினர் பார்த்தால் அவளைக் கொன்று போடுவார்கள். எனவே, அப்பெண் தன்னைத் தொட்ட அதே புலையன் அல்லது வண்ணான் அல்லது பறையனோடு ஓடிப்போய் விடுகிறாள் (டி.எச்.பி.செந்தாரச்சேரி, 1989; 174). மேற்கண்ட தீண்டலின் மூலம் தங்கள் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களுக்குத் தீங்கு ஏதாவது ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அப்பெண்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இச்செயல்களுக்கு அவர்களுடைய அடிமனதில் உறைந்து கிடக்கக் கூடிய ஆசார சம்பந்தமான நம்பிக்கைகளும் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அது மட்டுமன்றி அவர்களுடைய உறவினர்கள் இதையறிந்து வந்து பிடித்துக்கொண்டு போய் கொன்றுவிடுவார்கள் என்பதால் இம்மாதிரி செய்யத் துணிகிறார்கள்.

இது சம்பந்தமாக மலபாரிலுள்ள பொன்னானிக் கரையிலிருந்து ஷெய்க் சைனூதின் தரும் சேதி (காலம் 17ஆம் நூற்றாண்டு). ஓர் ஆண்டில் சில பிரத்தியேக ராத்திரிகளில், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஆண்கள், உயர்ந்த ஜாதியிலுள்ள பெண்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தாலோ _ அவளுடன் உடலுறவு கொண்டாலோ (இதன் மூலம் அவள் கர்ப்பம் தரித்துவிட்டாலும் கூட) அப்பெண் கெட்டுப் போனதாகத்தான் பொருள். இந்நிலைமையில் அந்தப் பெண்ணை அந்நியர்கள் பிடித்துக்கொண்டு போய் விற்பனை செய்து விடுவார்கள் அல்லது அப்பெண் நம்மிடம் (இஸ்லாமியர்களிடம்) வந்து சேருவாள் அல்லது கன்னியாஸ்திரியாகிவிடுவாள்.

தமிழ் ஓவியா said...

இதுபோல, உயர்ந்த ஜாதியிலுள்ள ஆண்கள் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களுடன் உடலுறவு கொண்டாலும்கூட மேற்குறிப்பிட்டவைகளில் ஏதாவது ஒன்றை அவன் மேற்கொள்ள வேண்டிவரும் (இந்த இடத்தில் சைனூதின் அவர்களால் குறிப்பிடப்படும் மலபார் அன்றைய சென்னை மாகாணத்தின் அரவணைப்பிலிருந்த பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்) _ கலாகவுழுதி மலையாள வாரப்பத்திரிகை, டிசம்பர் 7, 1997.

இனி, இதுபோல இவற்றைப் பற்றி ஆய்வு செய்த டாக்டர் சேலநாட்டு அச்சுதமேனன் குறிப்பிடுவதாவது: தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தெருவழியாக நடந்து செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தொடர்ந்து காடுகளில் திருவிழாவும் வேலையும் (வேல் கொண்டு குத்தி நடத்தும் சடங்கு) நடைபெறக் கூடிய வேளைகளில், புலையர்களுக்கு ஒருவகை சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வேளைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், மேல்ஜாதியினர் குளிக்கக்கூடிய குளத்தில் குளிக்கலாம். காவுகளுக்குள் கடந்து சென்று அவர்கள் அர்ச்சனை நடத்திக் கொள்ளலாம்! வேண்டுமானால் அப்போதே அவர்கள் வழியில் காணக்கூடிய மேல்ஜாதிப் பெண்களைத் தொட்டுக் கொள்ளலாம்! அப்படி அவர்களால் தொடப்பட்ட பெண்கள், அந்த ஆண்களுடனேயே போய்விடவேண்டும். பிறகு அப்பெண்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி செல்லக்கூடாது என்பது அன்றைய கொச்சி, திருவிதாங்கூர் வழக்கம்.

இப்படி அவர்களுக்கு சர்வ சுதந்திரம் கொடுக்கப்பட்ட நாட்களன்று முன்கூட்டிய அந்நாட்டு ஜனங்களுக்கு முரசறைந்து அறிவிப்பார்கள். இந்த முரசறைவதன் நோக்கம் என்னவெனில், விருப்பமுள்ள மேல்ஜாதிப் பெண்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், விருப்பமில்லா மேல்ஜாதிப் பெண்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கொள்ள இந்த அறிவிப்பு துணைசெய்தது எனக் கொள்ளலாம்.

புலைப்பேடி மாதங்களைத் தவிர, வலம் வரும் அரசர்களைத் தரிசிக்கச் செல்லும் வேலைகளிலும்கூட, முடிந்தால் மேல்ஜாதிப் பெண்களை கூட்டிக் கொண்டு போவதற்குரிய அனுமதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இப்புலைப்பேடி சம்பிரதாயம் மலபாரில் இருந்து வந்தது. ஆனால், அதே வேளையில், இது திருவிதாங்கூரில் கொல்ல வருடம் 871இல், (கி.பி.1695) உண்ணி கேரளவர்மா என்ற அரசரால் தடை செய்யப்பட்டது.

இந்த சம்பிரதாயத்தின் தொடக்கம் எப்படியிருந்த போதிலும், இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, நிலவுடைமைக் காலத்தில் குடும்ப சுகத்தில் அதிருப்தியான மேல்ஜாதிப் பெண்களும், மறுமணத்தைத் தங்கள் கனவில்கூட காணமுடியாத விதவைப் பெண்களும் இச்சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
வர்ணாசிரம தர்மத்தின்படி அறுபது அடி தூரத்திற்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தலித் மக்களும்கூட, தங்களுக்கு சாதகமான இச்சம்பிரதாயத்தை மிக நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்! இதனால் ஜாதி சமத்துவமும் கூடவே வர்ணங்களும், ஒன்று மற்றொன்றுடன் கலந்து வர்ணவேதம் அல்லது ஜாதிபேதம் நீங்கிவிடுமோ என, அன்றைய நிலவுடைமைவாதிகளும், ராஜாவும், மேல்ஜாதிக்காரர்களும் பயப்பட்டு இப்புலைப்பேடி சம்பிரதாயத்தை தடைசெய்திருக்கின்றனர்.
எது எப்படி இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பிற ஜாதியினரோடு கலப்பதை எந்தக் காலத்திலும் ஆதிக்கம் புரிவோர் அங்கீகரிப்பதில்லை. தனிமனித சுதந்திரம் இங்கே தடை செய்யப்படுகிறது. விரும்பி சேருவோரை வெட்டிப் பிரிக்க தயங்குவதில்லை. ஜாதி, இன பேதமற்ற சமத்துவ சமுதாயம் என்றுதான் அமையுமோ?

உதவிய நூல்கள்:

1. தீண்டாமையைத் தீயிடு -_ பேராசிரியர் டாக்டர் ப. சீனிவாசன்
2. தலித் முரசு, அக்டோபர் 2007.
3. ஜூனியர் விகடன்
4. தலித் பண்பாடு _ சில பார்வைகள் _ ஏ.எம். சாலன்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி(ரெட்டியார்)ஒரு குழு அமைத்தார்.அந்தத் திட்டத்தைப் பின்னால் முதலமைச்சரான ராஜகோபாலாச்சாரியார் கை கழுவினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


பாவம் ராஜாக்கள்!


கேள்வி: தகாத வழி களில் பணத்தைச் சம் பாதித்து ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுபவர்கள் உண்மை யான கடவுள் பக்தி உள்ள வர்களா?

இளையராஜா (இசை இயக்குநர்) பதில்: அந்தப் பணம் அவர்களிடமிருந் தால் மேலும் தகாத வழி களில் அவர்கள் உபயோ கித்து விடலாம் என்று கடவுள் தனது டோல் கேட்டின் மூலம் வசூலிக் கிறது போலும் என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? (குமுதம் 27.2.2013 பக்கம் 85).

திருப்பதி உண்டியலில் அப்படிப் போடப்படும் பணம் 5000 கோடி ரூபாய் ஒன்றுக்கும் பயன்படாமல் வங்கிகளில் தூங்குவதால் யாருக்கு என்ன பயனாம்?

பகுதி பணத்தை உண்டியலில் போட்டவன், தகாத வழியில் மறுபடியும் சம்பாதிக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தர வாதம்? அவ்வாறு செய் வதற்குத்தானே ஒரு பகு தியைக் கோயில் உண்டிய லில் போடுகிறான்! பணம் உண்டியலில் போடாத வர்கள் எல்லாம் தக்க வழியில் சம்பாதிக்காத வர்களா?

ஏன் இவ்வளவு தூரம் மூக்கைத் தொட சுற்றி வளைப்பானேன்? தக்க வழியில் சம்பா தித்து தக்க வழியில் செல வழிக்கும் நல்ல புத்தியை அந்த ஏழுமலையான் கொடுக்கக் கூடாதா?

ஏன் நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை? அப்படி யென்றால் ஏழுமலையான் நல்லவன் கிடையாதா?

ஏழுமலையான் என்பது உண்மையாக இருந்து அந் தக் கடவுளுக்குச் சக்தி யிருந்தால் நல்ல புத்திதான் கொடுத்திருப்பான். அதெல் லாம் சுத்த கப்சா, யாரோ சிற்பி செதுக்கிய சிலையை வைத்து இல்லாதது பொல் லாததுகளைக் கற்பித்து, புத்தியைப் பறி கொடுத்த மக்களின் பக்தியைப் பயன் படுத்தி சுரண்டல் தொழிலை நடத்துகிறார்கள் என்பது தானே உண்மை!

ஏழுமலையானுக்கு சக்தியிருப்பது உண்மை யானால் உண்டியல் பணத்தை எண்ணும்போது நாலு பக்கமும் கேமிராவைப் பொருத்தி வைப்பது ஏன்? உண்டியலின் பக்கத்தில் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்தி காவலாளி நாலு பக்கமும் கண்களைச் சுழற்றிச் சுழற் றிப் பார்த்துக் கொண்டு நிற்பானேன்?

அரசர் கிருஷ்ணதேவ ராயன் அன்பளிப்பாக திருப்பதி கோயிலுக்குக் கொடுத்த நகைகளைக் காணவில்லை என்ற புகார் எழுவானேன்? நகைகள் கணக்குப் பார்த்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடு வானேன்?

பாவம் இளையராஜாக் கள்? சிறீரங்கம் கோயில் திருப்பணிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து என்ன பயன்? வெளியில்தானே நிற்க வைத்தனர்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வருமா?


கொண்டு வந்தால் இந்தியாவின் கடமை உணர்வையும்
உலகத் தமிழர்களின் உணர்வையும் அது எதிரொலிக்கும்

சென்னை, மார்ச் 3- ஜெனி வாவில் மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவே இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தால் அது இந்திய நாட்டின் கடமை உணர்வையும் உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொ லிப்பதாக அமையும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சென் னையில் இன்று காலை (3.3.2013) அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மணி விழா மலரினை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். அதுபோது செய்தியாளர்களை கலை ஞர் சந்தித்த விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- டெசோ சார்பில் நீங்கள் 5ஆம் தேதியன்று இலங்கை துதுவரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4ஆம் தேதி யன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக் கிறார்களே?

தலைவர் கலைஞர் :- நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால்தான்!

செய்தியாளர் :- மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை யில் தி.மு.கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?

கலைஞர் :- அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக் கிறோம். தொடர்ந்து வலியுறுத்து வோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனை வரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர் :- 7ஆம் தேதி டில்லி யில் நடைபெறும் டெசோ கருத்தரங் கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?

கலைஞர்:- அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர் :- தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவாக வும், டில்லியில் பேசும்போது எதி ராகவும் பேசுகிறார்களே?

கலைஞர்:- யார் அப்படி பேசு கிறார்கள்?

செய்தியாளர் :- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அவர்களே அப்படி பேசியிருக்கிறாரே?

டி.ஆர். பாலு :- இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேசவில்லை.

செய்தியாளர் :- அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற் குப் பதிலாக, இந்தியாவே தீர்மா னத்தை முன் மொழியுமா?

கலைஞர் :- இந்தியாவே தீர்மா னத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வு களையும் எதிரொலிப்பதாக அமை யும். இந்தத் தீர்மானத்தின் மீது இந் தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக் கறையோடு கவனிக் கிறார்கள்; நாங்களும் தான்!

செய்தியாளர் :- மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசி பெருமாள் 33 நாட்களாக உண்ணா விரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்க னவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங் களை விட்டு விட முடியாது. அள வுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன் படுத்துவதையும் அனு மதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

செய்தியாளர் :- நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

கலைஞர்:- எப்படி இருக்கவேண் டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

செய்தியாளர் :- ஒவ்வொரு முறை யும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?

கலைஞர் :- அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. செய்தியாளர் :- இலங்கையில் ராஜபக்ஷேயை சுப்பிரமணிய சுவாமி சந்தித்ததைப் பற்றி?

கலைஞர் :- நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே!

இவ்வாறு பேட்டியில் கலைஞர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


டெசோ கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி


இலங்கைக்கு சர்வதேசக் குழுவை அனுப்ப வேண்டும்
அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது

ஜெனிவா, மார்ச் 3- இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண் காணித்து சர்வதேச குழுவினரை அனுப்ப வேண்டும் என்கிற புது தீர்மானம் ஒன்றை ஜெனிவா மனித உரி மைக் குழுவில் அமெ ரிக்கா ஒன்றைக் கொண்டு வர உள்ளது. டெசோ மாநாட்டில் இத்தகையதோர் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறிப் பிடத்தக்கதாகும். இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங் களை கண்டித்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நாளை 2ஆவது தீர்மானத்தை கொண்டு வருகிறது. இதை இந்தியா உள்பட பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதிகட்ட போர் நடந் தது. அப்போது, பல ஆயிரக்கணக்கான அப் பாவி தமிழர்கள் கொல் லப்பட்டனர். மேலும், குழந்தை கள், பெண்கள் என்றும் பாராமல், எல்லோரை யும் ராணுவத்தினர் மிகக் கொடூரமாக நடத்திய தும் தெரிய வந்தது. இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற டி.வி, இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின ரின் அத்துமீறல்களை வெளிகாட்டும் பல காட் சிகளை வெளியிட்டது. இதனால், உலக அளவில் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் எழுந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் 19ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர் மானம் கொண்டு வந் தது. தமிழர்கள் மறு வாழ்வு தொடர்பாக இலங்கையை நிர்ப்பந் தம் செய்யும் அந்த தீர் மானம், 47 உறுப்பினர் கள் கொண்ட கவுன்சி லில் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தது. இதனால், இலங்கையில் முள் வேலி முகாம்களில் அடைக்கப் பட்டி ருந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் பகுதிகளில் குடியேற்றி, மறுவாழ்வு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சட்டப் படி விசாரிக்க அறிவுறுத் தப்பட்டது. ஆனால், இதுவரை இலங்கை அரசு அவற்றை முறைப் படி மேற்கொள்ளவில்லை. இந் நிலையில், இங்கிலாந் தின் சேனல் -4, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சில காட்சி களை வெளி யிட்டது. அதில், பிரபாகரனின் 12வயது இளைய மகன் பாலச் சந்திரன் எப்படி ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டான் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இது உலக மக்களி டையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக போராட் டங்கள் நடத்தின.

இதற்கிடையே, ஜெனிவாவில் அய்.நா. பாது காப்பு கவுன்சிலின் 22ஆவது கூட்டம், கடந்த வாரம் துவங்கியது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எஸ்தர் பிரிம்மர் பேசுகையில், இலங் கையை பொறுத்தவரை இந்த கவுன்சிலின் பணி இன்னும் முடியவில்லை. அங்கு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அங்குள்ள நிலைமைகளை கண்காணிக்க சர்வதேசக் குழுவினரை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக, இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா இங்கு கொண்டு வர உள்ளது என்றார். இதன்படி, இலங்கைக்கு எதிரான 2ஆவது தீர்மானத்தை அமெரிக்கா, அய்.நா. கவுன்சிலில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், போர்க் குற்றங்களை சர்வதேச சட்டப் படி விசாரிக்கவும், தமிழர் மறுவாழ்வு பணி களை சர்வதேச குழுவினர் கண்காணிப்பில் மேற்கொள்ளவும் வலியுறுத்தப் படும் என தெரிகிறது. இந்த தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெறும். இதனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுவ தாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர் களைச் சரிப் படுத்தும் வேலையில் இலங்கை அரசு ஈடு பட்டு வருகிறது.

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டின் 2ஆவது தீர்மானத்தில் காணப் படும் வாசகமாவது.

அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப் பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

பெரியார் -(விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...


எங்கு நோக்கினும் தலைகள்! தலைகள்!!


சுனாமியாக எழுந்தது தமிழினம்!
தளபதி மு.க. ஸ்டாலினின் எச்சரிக்கையும் காவல்துறை நடவடிக்கையும்


முற்றுகைப் போராட் டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். வள்ளுவர் கோட்டம் வட்டாரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

தி.மு.க., தி.க., விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக் கத் தமிழர் பேர வையைச் சேர்ந்தவர் களும், பொது மக் களும் தமிழின உணர் வாளர்களும் சுனாமி போல பொங்கி எழுந் தனர். மாவட்ட வாரி யாக அறிவிக்கப்பட்டு தோழர்கள் கைதாக அணி வகுத்து நின்ற னர். பல்லாயிரக் கணக் கான இம்மக்களை எப்படி கைது செய் வது? எத்தனை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவது? எங்கு கொண்டு போய் வைப் பது என்பதறியாமல் காவல்துறையினரே திகைத்தனர்.

அந்த நேரத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கைது செய் யும் பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்தது. காவல்துறைக்கு எல்லா வகையிலும் ஒத் துழைப்புக் கொடுக்க நாங்கள் தயார். வாகனங்களை ஏற்பாடு செய்யாவிட்டால் எங் களைக் கைது செய்ய முன் வராவிட்டால் இலங்கைத் தூதரகத் திற்கு நாங்கள் நடந்து செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தார்.

அதன் பிறகு வள்ளு வர் கோட்டத்திற்கு அனைவரும் செல்லு மாறு கேட்டுக் கொண் டதற்கிணைங்க, ஆயிரக் கணக்கான போராட்ட வீரர்களும் அமைதி யாக வள்ளுவர் கோட்டத் திற்கு நடந்து சென் றனர். இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. தமி ழீழம் தமிழர் தாகம்!

தமிழ் ஓவியா said...

இந்திராகாந்தி கடைபிடித்ததை
இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் கைதான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த போராட்டம் காவல்துறையினரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தின் நோக்கங்களை ஆசிரியர் வீரமணி விரிவாக குறிப்பிட்டுள்ளார். அய்.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும் சில நாடுகளில் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 1971-இல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும். - கைதான தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் இலங்கைத் தூதரகம் முன் முற்றுகை! பல்லாயிரம் தமிழர்கள் கைது!

இலங்கை தூதரகத்தைக் முற்றுகையிட, சென்ற டெசோ அமைப்பினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். (சென்னை -5.3.2013)

சென்னை, மார்ச் 5- கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, எடுத்த முடிவுக்கேற்ப, இன்று (5.3.2013) காலை, டெசோவின் சார்பில், இலங்கைக் கொடுங்கோலன் இராஜபக்சே நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மீறல், போர் நெறிகளுக்கெதிராக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தும், பிரபாகரனின் 12 வயது பச்சிளம் பாலகனின் மார்பில் அய்ந்து குண்டுகளால் துளைத்து அந்தப் பழியைக்கூட பிறர்மீது போட முயற்சிக்கும் பொல்லாத ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பதோடு, அவரது அரசின் துணைத் தூதரகம் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தேசிய அவமானம்; எனவே இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மூட வைக்கும் போராட்டம், இன்று காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். காவல்துறை கைது செய்யவே திணறிய நிலை இருந்தது என்றாலும் வள்ளு வர் கோட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வந்து, கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டம் மார்ச் 7இல் டில்லியில் தேசிய தலைவர்கள், மனித உரிமை ஆணையம், உலக பொது மன்னிப்பு சபை அனைத்தும் கலந்து கொண்டு மாபெரும் மாநாடு நடத்தவிருப்பதில் மேலும் தனி சுதந்திர உரிமைகள், பொருளாதாரத் தடை இவற்றை வற்புறுத்து வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினர். பிறகு கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியம் கொண்டு சென்றனர். 49 ஆவது முறையாக தமிழர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


தமிழர்களே, தி(இ)னமலரைப் புரிந்துகொள்வீர்!


நேற்று சென் னையில் ஈழத் தமி ழர்களின் மீள் வாழ்வுக்காக நடைபெற்ற இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம்பற்றி செய்தி வெளி யிட்ட பார்ப்பன இனமலர் ஏடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரை மட்டும் மிகவும் விழிப்பாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளியிட்டது.

தினமலர் என்பது இனமலர்தான், பார்ப்பன மலர்தான் என்பதைத் தமிழர்களே, புரிந்துகொள்வீர்!