Search This Blog

3.3.13

நாஸ்திகமும் சமதர்மமும் - பெரியார்



என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதா பிரியர்கள் சொல்லித்திரிவார்கள்.

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது. 

கிறிஸ்துவையும், மகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன் னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்  காரணமாகும். 

துருக்கியில் பாட்சாவும், ஆப்கானி ஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப் பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்தவையென்றும், கடவுள் கட்டளை என்றும், கட வுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகி யவைகளின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கின்றோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும்  அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட் டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத் ததேயாகும்.

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கை களும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படு கையில், அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப் பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால் தான் கிறிஸ்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதியரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகின்றது. அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?

ஜாதி, உயர்வு-தாழ்வு, செல்வம்-தரித்திரம், எஜமான்-அடிமை ஆகியவை களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?

கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய, அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திக மான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச் சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோத மான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது.

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமே யாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள். 

அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம், ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீஸ்வரராய்  இருந்துகொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியனவேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப்பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். உதார ணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக் கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்சகாலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். 

இனி கொஞ்சநாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும், அப்படியிருந் தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய, இப்போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட் டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலை களும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம்.

இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம், நாளைக்கு அதர்மமாகி, தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமைவரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறுக்கத்துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத் திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி. ஏனெனில் அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமை யான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக் கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளை யாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங் களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ் விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.

--------------------------------- தந்தை பெரியார் --”குடிஅரசு’ - கட்டுரை - 21.05.1949

15 comments:

தமிழ் ஓவியா said...


பாவம் ராஜாக்கள்!


கேள்வி: தகாத வழி களில் பணத்தைச் சம் பாதித்து ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுபவர்கள் உண்மை யான கடவுள் பக்தி உள்ள வர்களா?

இளையராஜா (இசை இயக்குநர்) பதில்: அந்தப் பணம் அவர்களிடமிருந் தால் மேலும் தகாத வழி களில் அவர்கள் உபயோ கித்து விடலாம் என்று கடவுள் தனது டோல் கேட்டின் மூலம் வசூலிக் கிறது போலும் என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? (குமுதம் 27.2.2013 பக்கம் 85).

திருப்பதி உண்டியலில் அப்படிப் போடப்படும் பணம் 5000 கோடி ரூபாய் ஒன்றுக்கும் பயன்படாமல் வங்கிகளில் தூங்குவதால் யாருக்கு என்ன பயனாம்?

பகுதி பணத்தை உண்டியலில் போட்டவன், தகாத வழியில் மறுபடியும் சம்பாதிக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தர வாதம்? அவ்வாறு செய் வதற்குத்தானே ஒரு பகு தியைக் கோயில் உண்டிய லில் போடுகிறான்! பணம் உண்டியலில் போடாத வர்கள் எல்லாம் தக்க வழியில் சம்பாதிக்காத வர்களா?

ஏன் இவ்வளவு தூரம் மூக்கைத் தொட சுற்றி வளைப்பானேன்? தக்க வழியில் சம்பா தித்து தக்க வழியில் செல வழிக்கும் நல்ல புத்தியை அந்த ஏழுமலையான் கொடுக்கக் கூடாதா?

ஏன் நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை? அப்படி யென்றால் ஏழுமலையான் நல்லவன் கிடையாதா?

ஏழுமலையான் என்பது உண்மையாக இருந்து அந் தக் கடவுளுக்குச் சக்தி யிருந்தால் நல்ல புத்திதான் கொடுத்திருப்பான். அதெல் லாம் சுத்த கப்சா, யாரோ சிற்பி செதுக்கிய சிலையை வைத்து இல்லாதது பொல் லாததுகளைக் கற்பித்து, புத்தியைப் பறி கொடுத்த மக்களின் பக்தியைப் பயன் படுத்தி சுரண்டல் தொழிலை நடத்துகிறார்கள் என்பது தானே உண்மை!

ஏழுமலையானுக்கு சக்தியிருப்பது உண்மை யானால் உண்டியல் பணத்தை எண்ணும்போது நாலு பக்கமும் கேமிராவைப் பொருத்தி வைப்பது ஏன்? உண்டியலின் பக்கத்தில் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்தி காவலாளி நாலு பக்கமும் கண்களைச் சுழற்றிச் சுழற் றிப் பார்த்துக் கொண்டு நிற்பானேன்?

அரசர் கிருஷ்ணதேவ ராயன் அன்பளிப்பாக திருப்பதி கோயிலுக்குக் கொடுத்த நகைகளைக் காணவில்லை என்ற புகார் எழுவானேன்? நகைகள் கணக்குப் பார்த்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடு வானேன்?

பாவம் இளையராஜாக் கள்? சிறீரங்கம் கோயில் திருப்பணிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து என்ன பயன்? வெளியில்தானே நிற்க வைத்தனர்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வருமா?


கொண்டு வந்தால் இந்தியாவின் கடமை உணர்வையும்
உலகத் தமிழர்களின் உணர்வையும் அது எதிரொலிக்கும்

சென்னை, மார்ச் 3- ஜெனி வாவில் மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவே இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தால் அது இந்திய நாட்டின் கடமை உணர்வையும் உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொ லிப்பதாக அமையும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சென் னையில் இன்று காலை (3.3.2013) அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மணி விழா மலரினை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். அதுபோது செய்தியாளர்களை கலை ஞர் சந்தித்த விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- டெசோ சார்பில் நீங்கள் 5ஆம் தேதியன்று இலங்கை துதுவரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4ஆம் தேதி யன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக் கிறார்களே?

தலைவர் கலைஞர் :- நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால்தான்!

செய்தியாளர் :- மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை யில் தி.மு.கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?

கலைஞர் :- அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக் கிறோம். தொடர்ந்து வலியுறுத்து வோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனை வரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர் :- 7ஆம் தேதி டில்லி யில் நடைபெறும் டெசோ கருத்தரங் கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?

கலைஞர்:- அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர் :- தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவாக வும், டில்லியில் பேசும்போது எதி ராகவும் பேசுகிறார்களே?

கலைஞர்:- யார் அப்படி பேசு கிறார்கள்?

செய்தியாளர் :- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அவர்களே அப்படி பேசியிருக்கிறாரே?

டி.ஆர். பாலு :- இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேசவில்லை.

செய்தியாளர் :- அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற் குப் பதிலாக, இந்தியாவே தீர்மா னத்தை முன் மொழியுமா?

கலைஞர் :- இந்தியாவே தீர்மா னத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வு களையும் எதிரொலிப்பதாக அமை யும். இந்தத் தீர்மானத்தின் மீது இந் தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக் கறையோடு கவனிக் கிறார்கள்; நாங்களும் தான்!

செய்தியாளர் :- மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசி பெருமாள் 33 நாட்களாக உண்ணா விரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்க னவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங் களை விட்டு விட முடியாது. அள வுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன் படுத்துவதையும் அனு மதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

செய்தியாளர் :- நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

கலைஞர்:- எப்படி இருக்கவேண் டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

செய்தியாளர் :- ஒவ்வொரு முறை யும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?

கலைஞர் :- அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. செய்தியாளர் :- இலங்கையில் ராஜபக்ஷேயை சுப்பிரமணிய சுவாமி சந்தித்ததைப் பற்றி?

கலைஞர் :- நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே!

இவ்வாறு பேட்டியில் கலைஞர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


டெசோ கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி


இலங்கைக்கு சர்வதேசக் குழுவை அனுப்ப வேண்டும்
அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது

ஜெனிவா, மார்ச் 3- இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண் காணித்து சர்வதேச குழுவினரை அனுப்ப வேண்டும் என்கிற புது தீர்மானம் ஒன்றை ஜெனிவா மனித உரி மைக் குழுவில் அமெ ரிக்கா ஒன்றைக் கொண்டு வர உள்ளது. டெசோ மாநாட்டில் இத்தகையதோர் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறிப் பிடத்தக்கதாகும். இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங் களை கண்டித்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நாளை 2ஆவது தீர்மானத்தை கொண்டு வருகிறது. இதை இந்தியா உள்பட பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதிகட்ட போர் நடந் தது. அப்போது, பல ஆயிரக்கணக்கான அப் பாவி தமிழர்கள் கொல் லப்பட்டனர். மேலும், குழந்தை கள், பெண்கள் என்றும் பாராமல், எல்லோரை யும் ராணுவத்தினர் மிகக் கொடூரமாக நடத்திய தும் தெரிய வந்தது. இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற டி.வி, இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின ரின் அத்துமீறல்களை வெளிகாட்டும் பல காட் சிகளை வெளியிட்டது. இதனால், உலக அளவில் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் எழுந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் 19ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர் மானம் கொண்டு வந் தது. தமிழர்கள் மறு வாழ்வு தொடர்பாக இலங்கையை நிர்ப்பந் தம் செய்யும் அந்த தீர் மானம், 47 உறுப்பினர் கள் கொண்ட கவுன்சி லில் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தது. இதனால், இலங்கையில் முள் வேலி முகாம்களில் அடைக்கப் பட்டி ருந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் பகுதிகளில் குடியேற்றி, மறுவாழ்வு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சட்டப் படி விசாரிக்க அறிவுறுத் தப்பட்டது. ஆனால், இதுவரை இலங்கை அரசு அவற்றை முறைப் படி மேற்கொள்ளவில்லை. இந் நிலையில், இங்கிலாந் தின் சேனல் -4, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சில காட்சி களை வெளி யிட்டது. அதில், பிரபாகரனின் 12வயது இளைய மகன் பாலச் சந்திரன் எப்படி ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டான் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இது உலக மக்களி டையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக போராட் டங்கள் நடத்தின.

இதற்கிடையே, ஜெனிவாவில் அய்.நா. பாது காப்பு கவுன்சிலின் 22ஆவது கூட்டம், கடந்த வாரம் துவங்கியது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எஸ்தர் பிரிம்மர் பேசுகையில், இலங் கையை பொறுத்தவரை இந்த கவுன்சிலின் பணி இன்னும் முடியவில்லை. அங்கு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அங்குள்ள நிலைமைகளை கண்காணிக்க சர்வதேசக் குழுவினரை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக, இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா இங்கு கொண்டு வர உள்ளது என்றார். இதன்படி, இலங்கைக்கு எதிரான 2ஆவது தீர்மானத்தை அமெரிக்கா, அய்.நா. கவுன்சிலில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், போர்க் குற்றங்களை சர்வதேச சட்டப் படி விசாரிக்கவும், தமிழர் மறுவாழ்வு பணி களை சர்வதேச குழுவினர் கண்காணிப்பில் மேற்கொள்ளவும் வலியுறுத்தப் படும் என தெரிகிறது. இந்த தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெறும். இதனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுவ தாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர் களைச் சரிப் படுத்தும் வேலையில் இலங்கை அரசு ஈடு பட்டு வருகிறது.

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டின் 2ஆவது தீர்மானத்தில் காணப் படும் வாசகமாவது.

அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப் பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் மணி விழா மலர் வெளியீட்டு விழா



முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெளியிட தமிழர் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்


தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் மணி விழா மலர் வெளியீட்டு விழா இன்று (3.3.2013) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்றது. தி.மு.க. தலைவர் கலைஞர் மலரினை வெளியிட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முதல் மலரைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இந்திய யூனியன் முசுலிம் லீக் தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, எ.வ. வேலு, ஆற்காடு வீராசாமி, க. பொன் முடி, ஆ. இராசா, முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன்; தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி. தயாநிதிமாறன் எம்.பி., இரகுமான்கான், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநா வுக்கரசு, திமுக. அமைப்புச் செயலாளர் கலியாண சுந்தரம், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் முதலியோர் பெற்றுக் கொண்டனர்.

மலரின் குழுவினருக்குச் சிறப்பு

மலர் வெளியிட்டுக் குழுவைச் சேர்ந்த டி.ஆர். பாலு, பேராசிரியர்கள் அ. இராமசாமி, கிருஷ்ணசாமி மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியேருக்கு சால்வை அணி வித்து கலைஞர் சிறப்பு செய்தார்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சரிதான்!

செய்தி: 2ஜி வழக்கில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின்முன் (ஜே.சி.பி.) ஆ. இராசா ஆஜராக விரும்புவது எந்தப் பலனையும் தராது. - சு.சாமி

சிந்தனை: இதிலிருந்தே தெரிகிறது. இராசா ஜே.சி.பி. முன் ஆஜராவது சரியானதுதான் என்பது.

தமிழ் ஓவியா said...


வீரமணியும் அழைக்கிறார்!



பைந்தமிழ்ச் செல்வன் பாலச்சந் திரனைப் - பண்பிலா
பாதகர் படுகொலை ஓநாய் சிங்களர்
அணியுடை அகற்றி அகன்றபெண் மார்பை - அந்தோ!
துணிவுடன் துளைத்தனர் குண்டுகள் அய்ந்தால்
இனிப்பினைக் கொடுத்தே இனக்கொலை புரிந்த - விலங்கு
மனிதனுக்(கு) இன்றும் வரவேற் பெதற்கு?
குனிந்தது போதும் குமுறிடும் தமிழா - இனியும்
இனப்படு கொலைக்கோர் இசைவளிப் போரைத்
தனிமைப் படுத்தித் தடுத்து நிறுத்திட - நாமும்
துணிவாய்க் கிளர்ந்து துடிப்புடன் எழுவோம்.
இலங்கைத் தூதுவர் அகத்தை இழுத்தே - மூட
நவமதை நாடும் தம்டெசோ வினுடனே
களமதில் இறங்கக் கடுகியே வாரீர்! - எனநம்
களங்க மில்லாக் கரும்படைத் தலைவர்
வீர மணியும் வெகுண்டே அழைக்கிறார் - நாளை
தீர முடன்நாம் திரள்வோம் சென்னையில்

- கவிஞர் கருவை இராமன் ஒன்னான்

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்க நூறாண்டு - வரலாற்றுச் சுவடுகள்!


- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிடர் இயக்க நூறாம் ஆண்டினையொட்டி, 2012 ஆம் ஆண்டு, பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியுள்ள, திராவிடர் இயக்க நூறாண்டு - வரலாற்றுச் சுவடுகள் என்னும் நூல் குறிக்கத்தக்க பெருமைகளை உடையதாக அமைந்துள்ளது.

இந்நூல் ஒரு விதத்தில் சற்று வேறுபாடானது. ஆசிரியரின் மூன்று உரைகளே நூலாக ஆக்கப் பட்டுள்ளது. ஆனால், நூலை விடப் பின்னிணைப்பு களே கூடுதல் ஆகும். முதல் 40 பக்கங்களில் நூலும், இறுதி 70 பக்கங்களில் 10 பின்னிணைப்புகளும் இடம் பெற்றுள்ளன. அத்தனை பின்னிணைப்பு களும் வரலாற்று ஆவணங்கள். நீதிக்கட்சியின் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு ஆணைகளின் எண்கள், தேதிகள் மற்றும் அவற்றின் சுருக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. 1916 டிசம்பரில் வெளியிடப்பட்ட பிராமணர் அல்லாதோர் கொள்கை அறிக்கை (Non Brahmin Manifesto) 9ஆவது பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது.

நீதிக்கட்சி, திராவிட இயக்கமெல்லாம் என்ன செய்துவிட்டன என்று கேட்கும் அறிவு ஜீவிகள் பலர் இன்று உள்ளனர். அவர்களுள் பலரே, திராவிட இயக்கப் போராட்டங்களினால்தான் வாழ்வில் உயர்வு பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக் கெல்லாம், உரிய விடைகளை முன் வைக்கும் ஆவணமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

திராவிட இயக்கம் என்பது சாதி ஆதிக்கத்தை மட்டுமின்றி, ஆண் - பெண் என்னும் பால் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போரிட்ட இயக்கம். பெண்கள் வாழ்வில் பேரொளியை ஏற்படுத்திய இயக்கம். ஒரு நூற்றாண்டிற்கு முன்பு தமிழகத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது என்பதையும், இன்று எவ்வாறு உள்ளது என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களால் உண்மை நிலையை அறிய முடியும். பார்ப்பனர் அல்லாதவர் வீட்டுப் பெண்களுக்கு மட்டு மின்றிப் பார்ப்பனர் வீட்டுப் பெண்களுக்காகவும் கூட உழைத்த இயக்கம் நம் இயக்கம். கணவரை இழந்த பெண்கள், பார்ப்பன சமூகத்தில்தான் கூடுதலாகக் கொடுமைப்படுத்தப்பட்டனர். மொட்டை அடித்து, அவர்களை மூலையில் உட்கார வைக்கும் பழக்கம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில்கூட இருந்தது.

பெண்கள் இங்கே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை அற்றவர்களாகத்தான் இருந்தனர். அந்த நிலையை அரசு ஆணை எண்.108 (Law - Legislative) நாள் 10.5.1921 மூலம் நீதிக்கட்சி அரசு நீக்கியுள்ளது. இதுபோன்ற பல சான்றுகளை இந்நூல் தருகின்றது.

நீதிக்கட்சி பணக்கார, மேல் சாதியினரின் கட்சி. திராவிட இயக்கமோ, பிற்படுத்தப்பட்டவர்களுக் காகத் தொடங்கப்பட்ட இயக்கம். இரண்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று சற்றும் கூசாமல் பேசும் நண்பர்கள் நம்மிடையே உள்ளனர். அந்த வாதங்கள் எவ்வளவு உண்மைக்கு மாறானவை என்பதை இந்நூல் நமக்கு விளக்குகின்றது.

25.3.1922 ஆம் நாளிட்ட அரசு ஆணை (817 சட்டம் - பொது) மூலம், பஞ்சமர், பறையர் என்று அழைக்கும் மரபினை மறுத்து, அவர்கள் அனைவரையும் ஆதி திராவிடர் என்றே அழைக்க வேண்டும் என ஆணையிட்டது நீதிக்கட்சி.

சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள், மாவட்ட நாட்டாண்மைக் கழகங்கள் போன்றவை நடத்தும் பள்ளிகளில், இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், பள்ளியில் பயில் வோர் பட்டியலை அனுப்பும்போது, பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் அரசு ஆணை எண் 205 (சட்டம் - கல்வி) 11.2.1924 இல் பிறப்பிக்கப்பட்டது.

இன்று நம் பிள்ளைகளில் பலர் அரசின் ஆட்சித் துறை, காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். தமிழ்நாடு பொதுப்பணிச் சேவை ஆணையத்தின் (Tamilnadu Public Service Commission) தேர்வுகளை எழுதி, வெற்றி பெற்றுப் பொறுப்பு களுக்கு அவர்கள் வந்துள்ளனர். ஆனால் இப்படி ஓர் ஆணையமே நீதிக்கட்சி ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது என்பதை அவர்களுள் பலரே அறியாமல் உள்ளனர்.

அந்தந்தக் துறைகளுக்கு, அந்தந்தத் துறை அதிகாரிகள் மூலமே, அரசுப் பணிக்குத் தேர்வுகள் நடைபெற்றன. அந்நிலையை மாற்றி, அரசுப் பணிகளுக்கான தேர்வை ஒருமுகப்படுத்தி, ஓர் ஆணையத்தையே அதற்காக ஏற்படுத்தி, நம் பிள்ளைகளும் அரசுப் பணிகளில் அமர வழிவகை செய்தது, அரசு ஆணை எண் 484 (சட்டம் - சட்டமன்றம்) நாள் 18.10.1929 என்பதை இந்நூல் சான்றுகளுடன் முன்வைக்கிறது.

27.2.2012 அன்று, சென்னை அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் திராவிடர் இயக்க நூறாம் ஆண்டுத் தொடக்க விழாவிலும், 13.2.2012 அன்று சென்னை காமராசர் அரங்கத்தில் தளபதியின் பிறந்த நாள் விழாவிலும், 6.3.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியிலும் ஆசிரியர் ஆற்றிய மூன்று உரைகள் நூலுள் முழுமையாக இடம் பெற்றுள்ளன. அவ்வுரைகளில் அன்று இருந்த சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அவற்றை நீக்கிச் சமூக நீதியைக் கொண்டுவர, திராவிட இயக்கம் எடுத்த முயற்சி களையும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

1927 ஆம் ஆண்டு, சர் ஏ.டி.பன்னீர்செல்வமும், உமாமகேஸ்வரம் பிள்ளையும், காந்தியாரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். அந்த உரையாடல், சுதேசமித் திரன் , நாளேட்டில் வெளியாகியுள்ளது. அதிலிருந்து ஒரு சுவையான பகுதியை ஆசிரியர் தன் நூலில் (உரையில்) எடுத்துக்காட்டியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், நான் சென்னை வந்த போது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டில், தாழ் வாரத்தில்தான் உட்கார வைக்கப்பட்டேன். இன்று அவ்வீட்டை என் வீடாகவே எண்ணிப் பழகுகின் றேன். என் மனைவி, அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள். எனவே, இப்போது பிராமணர் களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைப் பார்க்கிறேன் என்கிறார், அந்த உரையாடலில் காந்தியார்.

இடைப்பட்ட சில ஆண்டுகளில் என்ன பெரிய மாற்றம் நடந்தது என்பதைக் காந்தியார் அறியாதி ருக்கலாம். அந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் உருவாகி யிருந்தது. அது ஒரு மிகப் பெரிய தாக்கத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. அதன் விளை வாகவே, முன்பு தாழ்வாரம் வரை மட்டுமே அனு மதிக்கப்பட்டிருந்த, பார்ப்பனர் அல்லாத காந்தியார், பிறகு அடுக்களை வரை அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, காந்தியாருக் கே உரிமை வாங்கிக் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம் தான் என்கிறார் ஆசிரியர்.

டி.எம்.நாயர் எடுத்துக்காட்டிய, கேரளாவிலே நடைபெற்ற ஒரு நிகழ்வையும் ஆசிரியர் தன் உரையிலே சுட்டிக்காட்டுகின்றார்.

சங்கரன் நாயர் என்பவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது, கேரளா வில் உள்ள தன் சொந்தச் சிற்றூருக்கு அவர் சென்றிருந்தபோது, அவரைக் கண்ட ஒரு நம்பூதிரிப் பார்ப்பனர், ஏடா சங்கரா, நீ அய்க்கோர்ட் ஜட்ஜா மேடா? என்று கேட்டிருக்கிறார். உடனே நீதிபதி, ஆமாம் சாமி, எல்லாம் உங்கள் கடாட்சம் என்று கூறி, நம்பூதிரியின் காலைத் தொட்டு வணங்கியுள்ளார்.

இதுதான் அன்றைய நிலை. இன்று யாரேனும், எந்த ஒரு நீதிபதியையும் பார்த்து அப்படிக் கேட்டுவிட முடியுமா? திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுப் பணி, எத்தனையோ மாற்றங்களை நம் சமூகத்தில் கொண்டு வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

நடேசனார் தொடங்கிக் கலைஞர் வரையில், நாம் கண்ட தலைவர்கள் பலர் நமக்காக உழைத்துள் ளனர். ஆனால் நாம்தான் அவர்களின் தொண் டுள்ளத்தை இன்னும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. அந்தத் தலைவர்களின் பெயர் களால் அமைந்த ஊர், பகுதிப் பெயர்களைக் கூடச் சுருக்கி அழைக்கிறோம் என்னும் உண்மையை ஆசிரியர் முன் வைக்கின்றார்.

தம் சொத்துகளை எல்லாம் இழந்து, நமக்காகப் பாடுபட்டு உழைத்த தியாகராயர் பெயரில் ஒரு பகுதி சென்னையில் உள்ளது. அதற்குத் தியாகராயர் நகர் என்று பெயர். ஆனால், நாமோ அதனைத் தி.நகர் என்று அழைக்கின்றோம். அவ்வாறே, முதல் சுய மரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்ற று.ஞ.ஹ.ளு. சௌந்தர பாண்டியனார் பெயரில், சௌந்தர பாண்டி யனார் அங்காடி உருவாக்கப்பட்டது. ஆனால் அது இன்று உருத்தெரியாமல் பாண்டி பசார் ஆக்கப்பட்டு விட்டது.

கலைஞர்தான் அழகாகக் குறிப்பிடுவார், திரு வல்லிக்கேணியைச் சுருக்கம் கருதி டி.வி.கேணி என்று யாரும் அழைப்பதில்லை. தியாகராயர் நகரை மட்டும் தி.நகர் என்று கூறித் தீயை வைத்து விடுகிறார்கள் என்று!

திராவிட இயக்க வரலாற்றை அறியவும், பரப்பவும் இந்நூல் ஒவ்வொரு தி.மு.க. தொண்டன் கைகளிலும் இருக்க வேண்டாமா?

வெளியீடு : திராவிடர் கழகம், பெரியார் திடல், 84/1, ஈ.வே.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7. விலை : ரூ.40.

நன்றி: முரசொலி (3.3.2013)

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

பெரியார் -(விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...


எங்கு நோக்கினும் தலைகள்! தலைகள்!!


சுனாமியாக எழுந்தது தமிழினம்!
தளபதி மு.க. ஸ்டாலினின் எச்சரிக்கையும் காவல்துறை நடவடிக்கையும்


முற்றுகைப் போராட் டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். வள்ளுவர் கோட்டம் வட்டாரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

தி.மு.க., தி.க., விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக் கத் தமிழர் பேர வையைச் சேர்ந்தவர் களும், பொது மக் களும் தமிழின உணர் வாளர்களும் சுனாமி போல பொங்கி எழுந் தனர். மாவட்ட வாரி யாக அறிவிக்கப்பட்டு தோழர்கள் கைதாக அணி வகுத்து நின்ற னர். பல்லாயிரக் கணக் கான இம்மக்களை எப்படி கைது செய் வது? எத்தனை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவது? எங்கு கொண்டு போய் வைப் பது என்பதறியாமல் காவல்துறையினரே திகைத்தனர்.

அந்த நேரத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கைது செய் யும் பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்தது. காவல்துறைக்கு எல்லா வகையிலும் ஒத் துழைப்புக் கொடுக்க நாங்கள் தயார். வாகனங்களை ஏற்பாடு செய்யாவிட்டால் எங் களைக் கைது செய்ய முன் வராவிட்டால் இலங்கைத் தூதரகத் திற்கு நாங்கள் நடந்து செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தார்.

அதன் பிறகு வள்ளு வர் கோட்டத்திற்கு அனைவரும் செல்லு மாறு கேட்டுக் கொண் டதற்கிணைங்க, ஆயிரக் கணக்கான போராட்ட வீரர்களும் அமைதி யாக வள்ளுவர் கோட்டத் திற்கு நடந்து சென் றனர். இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. தமி ழீழம் தமிழர் தாகம்!

தமிழ் ஓவியா said...

இந்திராகாந்தி கடைபிடித்ததை
இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் கைதான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த போராட்டம் காவல்துறையினரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தின் நோக்கங்களை ஆசிரியர் வீரமணி விரிவாக குறிப்பிட்டுள்ளார். அய்.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும் சில நாடுகளில் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 1971-இல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும். - கைதான தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் இலங்கைத் தூதரகம் முன் முற்றுகை! பல்லாயிரம் தமிழர்கள் கைது!

இலங்கை தூதரகத்தைக் முற்றுகையிட, சென்ற டெசோ அமைப்பினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். (சென்னை -5.3.2013)

சென்னை, மார்ச் 5- கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, எடுத்த முடிவுக்கேற்ப, இன்று (5.3.2013) காலை, டெசோவின் சார்பில், இலங்கைக் கொடுங்கோலன் இராஜபக்சே நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மீறல், போர் நெறிகளுக்கெதிராக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தும், பிரபாகரனின் 12 வயது பச்சிளம் பாலகனின் மார்பில் அய்ந்து குண்டுகளால் துளைத்து அந்தப் பழியைக்கூட பிறர்மீது போட முயற்சிக்கும் பொல்லாத ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பதோடு, அவரது அரசின் துணைத் தூதரகம் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தேசிய அவமானம்; எனவே இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மூட வைக்கும் போராட்டம், இன்று காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். காவல்துறை கைது செய்யவே திணறிய நிலை இருந்தது என்றாலும் வள்ளு வர் கோட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வந்து, கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டம் மார்ச் 7இல் டில்லியில் தேசிய தலைவர்கள், மனித உரிமை ஆணையம், உலக பொது மன்னிப்பு சபை அனைத்தும் கலந்து கொண்டு மாபெரும் மாநாடு நடத்தவிருப்பதில் மேலும் தனி சுதந்திர உரிமைகள், பொருளாதாரத் தடை இவற்றை வற்புறுத்து வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினர். பிறகு கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியம் கொண்டு சென்றனர். 49 ஆவது முறையாக தமிழர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


தமிழர்களே, தி(இ)னமலரைப் புரிந்துகொள்வீர்!


நேற்று சென் னையில் ஈழத் தமி ழர்களின் மீள் வாழ்வுக்காக நடைபெற்ற இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம்பற்றி செய்தி வெளி யிட்ட பார்ப்பன இனமலர் ஏடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரை மட்டும் மிகவும் விழிப்பாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளியிட்டது.

தினமலர் என்பது இனமலர்தான், பார்ப்பன மலர்தான் என்பதைத் தமிழர்களே, புரிந்துகொள்வீர்!