Search This Blog

27.3.13

ஹோலிப் பண்டிகை-பங்குனி உத்தரம்!இந்து மதக் கடவுள்களுள் கிருஷ்ணன் என்னும் கடவுள் பலே கில்லாடி! பெண் ணென்று அடையாளம் தெரிந்து விட்டால் போதும் - அவ்வளவுதான் - காமக் குரூரன்! அவாள் பாஷையில் லீலை என்று சொல்லி விஷயத்தை வேறு ஜிகினா ஒட்டித் திசைமாற்றி விடுவார்கள்.

பதினாயிரம் கோபிகா ஸ்திரீகளுடன் கூடிக் குலாவினான் என்று சொல்லுவதற்கு வெட்கப் படாமல், அதனையே பெரிய சாதனை போல பக்திக்கான பெரிய நிலை என்பது போல உருட்டல் புரட்டல் செய்து வைத் துள்ள தந்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆசையை அறு உள்ளிட்ட பல ஒழுக்க ரீதியான வழி முறைகளை கவுதமப் புத்தர் மக்களிடம் பரப்பி, ஆபாச வேத மத மான இந்து மதத்தின் ஆணி வேர்களை சுட்டுப் பொசுக்கினார்.

இதற்கு மாறாக, நேர் எதிர்ப்பாக - எப்படி இப்பொழுது சினிமாவைக் காட்டி, வசீகரங்களைக் காட்டி மக்களை, இளைஞர்களை மயக்குகிறார்களோ, அரசியலில் தூண்டில் போட இந்த வலையை விரிக்கிறார்களே, அதுபோலவே கவுதமப் புத்தரின் ஒழுக்கப் பத்தியங்களைப் புறந் தள்ளுவதற்கு காம இச்சைக் கதாநாயகனாக கிருஷ்ணன் என்ற கட வுளைக் கற்பித்து மக்களி டத்திலே உலாவ விட்டார் கள் என்பதுதான் உண்மை.

அந்தக் கிருஷ்ணன் பிறந்த  ஒரு ஊரைக் கற்பித்துள்ளனர். உ.பி. மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் தான் கில்லாடிக் கிருஷ்ணன் கடவுளின் ஊராம். விதவைப் பெண்கள் அதிகம் இருப்பது இந்த ஊரில் தான்! (கடவுளின் கிருபையோ!)

அங்கு ஒரு வேடிக்கை வினோதம்! ஹோலிப் பண்டிகை என்னும் பெய ரில் - இந்து மதத்தில் விதவைப் பெண்கள் என்றால் பூ வைக்கக் கூடாது; பொட்டு வைக்கக் கூடாது, நல்ல விதமாக துணி மணிகளை உடுத்தவும் கூடாது, சுபகாரியங்களில் கலந்து கொள்ள வும் கூடாது. அப்படித்தானே?

ஹோலிப் பண்டிகை என்பது முட்டாள்தன மானது என்றாலும் அதில் ஒரு திருப்பம் என்ன தெரியுமா?

விதவைப் பெண்கள் ஒருவர்மீது ஒருவர் பூக்களையும் வண்ணப் பொடிகளையும் தூவி மகிழ்ந்து இவ்வாண்டு ஹோலியைக் கொண் டாடினார்களாம்.

மதப் பண்டிகை என்றாலும், விதவைப் பெண்கள் இதன்மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் கருத வேண்டும். விதை ஏதோ ஒரு வகையில் ஊன்றப்பட்டதாகவே கருத வேண்டும்.

அடுத்தடுத்து விளைவுகளைப் பார்ப்போம்!

             ------------------ மயிலாடன்  அவர்கள் 26-3-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
*******************************************************

எதையாவது சொல்லி, புராணப் பொய்களைக் கொட்டி பண்டிகை, திருவிழா, உற்சவம், தேரோட்டம் என்று கதையளந்து மக்கள் பணத்தைச் சுரண்டுவது தானே பக்தி!

இப்பொழுது பங்குனி உத்தரமாம்! இந்த நாளில் ஏகப்பட்ட கடவுள்களுக்குக் கலியாணங்களாம்!

மதுரை மீனாட்சியம்மன்  சுந்தரப் பெருமான், ஆண்டாள் - அரங்கநாதன் - ராமன் - சீதைக் கல்யாணம் எல்லாம் இந்த நாளில்தானாம்.

இந்த நாளில் விரதம் இருந்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல் யாணம் நடக்குமாம். (கடவுள் என்ன கல்யாண புரோக்கரா?) குழந்தை பிறக்காதவர்களுக்கு குழந்தை பிறக்குமாம் (மருத்துவமனைகளை இழுத்து மூடி விடலாமா?)

இப்படி எல்லாம் விஞ்ஞான உதவியைப் பயன்படுத்தி அச்சிட்டு வெளியிடப்படும் இதழ்கள்தான் சற்றும் வெட்கமின்றிப் பறைசாற்றுகின்றன.
உருவமற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இப்படி கடவுள்களுக்கு புருஷன் - பெண்டாட் டிக் கதைகளை எழுதி வைத்து, விழா கொண்டாடுவது சரியானதுதானா? இவர்கள் கூறும் கடவுள் தத்து வத்தையே கொச்சைப்படுத்திக் காலில் போட்டு மிதிப்பது ஆகாதா?

புருஷன் - பெண்டாட்டி, வைப்பாட்டி,  விபச்சாரம் என்று கடவுள்கள் பெயரால் பிரச்சாரம் செய்தால் நாட்டில் ஒழுக்கம் வளருமா?

பாலியல் வன்முறை பற்றியெல்லாம் வக்கணையாகக் கருத்துக்களைக் கூறும் கனவான்கள், கட்டுரைகளைத் தீட்டும் அறிவு சீவிகள் கடவுள் மதத்தின் பெயரால் மிகக் கீழ்த்தரக் கூவமாக, ஆபாசச் சாக்கடையாக எழுதிக் குவிக்கிறார்களே - பிரச்சாரம் செய்கிறார்களே, பக்கம் பக்கமாக ஆன்மீக சிறப்பிதழ்களை வெளியிடு கிறார்களே - இவற்றைக் கண்டிக்க  முன் வராதது ஏன்?

ஓ, அவர்களும் அந்த ஆபாசக் குட்டையில் ஊறிய மகாவிஷ்ணுவின் வராக அவதாரங்கள் தானோ? வெட்கக் கேடு! வெட்கக்கேடு!! வெட்கத்துக்குப் பிறந்த ஆபாசக் கேடு! ஆபாசக் கேடு!!

இனமலர் எழுதுகிறது - பங்குனி பெருவிழாவை காண வந்திருந்த பக்தர்கள் அனைவரும் கபாலீஸ்வரர் கையில் இருப்பது என்ன என ஆவலுடன் பார்த்தனர். அவர் கையில் இருப்பது சந்திராயுதம். சந்திரன் வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. சந்திரனின் ஒளி உயிரினங்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் தீய சக்தி, இயலாமை, தாழ்வு மனப் பான்மை போன்ற துஷ்ட சக்திகளை ஒடுக்கக் கூடியது; இவற்றை உணர்த் துவதாக கபாலீஸ்வரர் கையில் சந்திராயுதம் இருப்பதாக சிவாச்சாரியார் ஒருவர் கூறினார் என்று கூறித் தப்பித்து ஓடுகிறது இனமலர்.

இப்படி ஒரு கருவி கபாலீஸ்வரர் கையில் இருக்கும்போது அரசு ஏன்? காவல்துறை ஏன்? நீதிமன்றம்தான் ஏன்?

சந்திராயுதத்தைக் கையில் வைத்துள்ள கபாலீஸ்வரன் எந்தத் தீய சக்தியை அழித்தான்? எந்தத் துஷ்ட சக்திகளை, ஏற்றத் தாழ்வுகளை அழித்தான்?
நாள் ஒன்றுக்கு சென்னையில் மட்டும் எத்தனைக் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள், விபச் சாரங்கள்? கபாலீஸ்வரன் கையில் இருக்கும் அந்த சந்திராயுதம் குறைந்த பட்சம் முகச் சவரம் செய்யவாவது பயன்படுமா என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் யாரோ ஒரு சிவாச்சாரியார் கூறினாராம். ஏன், அவர் பெயரைச் சொல்லுவதுதானே. அக்கப்போர் பேர் வழிகள் இப்படித்தான் மொட்டைத் தலையன் குட்டை யில் விழுந்தான் என்று எழுதுவார்கள்.
அடேயப்பா, இந்தக் கூட்டம் அரசியல் பிரச்சினை என்றால் எப்படி யெல்லாம், முடி பிளந்து ஆராய்ச்சி (?)களை எல்லாம் செய்கின்றன? ஆன்மீக விடயங்கள் என்றால் மட்டும் என்று ஒரு சிலாச்சாரியார்  சொன் னார்... என்பது நம்பிக்கை... என்பது அய்தீகம்... என்று சொல்லித் தப்பிக்கும் அறிவு நாணயமற்ற தன்மையை யோசித்துப் பாரீர்!

         -----------------------”விடுதலை” 26-3-2013

46 comments:

தமிழ் ஓவியா said...


கச்சத் தீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் இல்லையேல் வழக்குத் தொடுக்கப்படும்! சட்டப் பேரவையில் அறிவிப்பு


சென்னை, மார்ச் 26- கச்சத் தீவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அறிவித்தார்.

தமிழர் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக் கப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு உடன்படிக் கையை திரும்பப் பெற் றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக இந்தப் பிரச்சினைக்கு உச்சநீதி மன்றத்தை அணுகி நிரந்தர தீர்வு காணப் படும் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறி வித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (26.3.2013) கேள்வி நேரம் முடிந்தவுடன் இலங்கை கடற்படை யினரால் தமிழக மீன வர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின்மீது அனிதா ராதாகிருஷ் ணன் (திமுக), நாகை மாலி (சிபிஎம்), பெ.உலக நாதன் (சிபிஅய்), கணேஷ் குமார் (பாமக), ஜவ ஹர்ல்லா (மமக) ஆகி யோர் இச்சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசுகையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு இதுவரை 600 மீனவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர் களின் வலைகள் அறுக் கப்பட்டு மீன்களை இலங்கைக் கடற்படை யினர் கொள்ளையடித்துச் செல்கின்றனர். மத்திய அரசு இதுவரை இதைக் கண்டுகொள்ளாத வண்ணம் இருக்கிறது. எனவே மத்திய அரசு தனக்கு இருக்கும் அதி காரத்தை பயன்படுத்தி இனி தமிழக மீனவர் கள் இலங்கைக் கடற் படையினரால் தாக்கப் படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது மேற்கண்ட உறுப்பினர் கள் பேசியதற்கு, முதல் வர் செல்வி ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகை யில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தப் படுவது குறித்து அவை யில் இன்று மாண்புமிகு உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தங்களது ஆதங் கத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற் படையினரின் தொடர் தாக்குதல்களை இந்திய அரசு கடுமையாக கண் டிக்கவேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப் படுவதற்கும், கொடூர மாக துன்புறுத்தப்படுவ தற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வலு வான நடவடிக்கைகளை இராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என்றும், டில்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தருணத்தில் மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத் திற்கு எதிராக ஏற்படுத் தப்பட்ட இந்தியா-இலங்கை நாடுகளுக்கி டையேயான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற் றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்து கிறேன்.

இல்லையெனில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத் திய அரசிதழில் வெளி யிட செய்ய உச்சநீதி மன்றத்தை அணுகி வெற்றி பெற்றதைப் போல் கச்சத்தீவு பிரச்சினையில் என்னால் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும்போது வலுவான வாதங்களை முன் வைத்து சட்டரீதியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப் படும் என்பதை தெரி வித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரி வித்தார்.

தமிழ் ஓவியா said...

தேமுதிக உறுப்பினர்கள் நேற்று தேமுதிக சட் டமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் அளித்த ஓர் ஆண்டு கால தண்டனை ஆறு மாதமாக முதலமைச்சர் பரிந்துரையின் பேரில் குறைக்கப்பட்டது. ஆறு மாத கால தண்டனையே பெரும் தண்டனை என்று அதைக் கண் டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று (26.3.2013) கேள்வி நேரம் முடிந்தவுடன் நேற்று சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரால் தேமுதிகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப் பினர்களுக்கு அளிக்கப் பட்ட ஓர் ஆண்டு தண்டனையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கள் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), ஜவஹருல்லா (மமக), குணசேகரன் (சி.பி.அய்), ரங்கராஜன் (காங்), சவுந்தரராஜன் (சி.பி.எம்), மு.க.ஸ்டா லின் (திமுக) ஆகியோர் வேண்டுகோள் விடுத் தனர்.

மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்: தேமுதிக கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப் பினர்களுக்கு அளிக்கப் பட்ட ஓர் ஆண்டு கால தண்டனை பெரும் தண்டனையாக இருக் கிறது என நாங்கள் அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்து எங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளோம். நேற்று நீங்கள் வழங்கிய தண்டனையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து முதல மைச்சர் ஜெயலலிதா பேசுகையில், சட்ட மன்றத்தில் ஒழுங்கீன மாக நடந்து கொண்ட தேமுதிக உறுப்பினர் களுக்கு ஓர் ஆண்டு தண்டனை பேரவை தலைவர் வழங்கினார். எதிர்க் கட்சிகளின் வேண்டுக்கோளுக்கு இணங்க அவர்களின் தண்டனையை ஆறு மாதமாக குறைக்க பரிசீ லிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தமிழ் ஓவியா said...


இதையடுத்து தே முதிக உறுப்பினர்க ளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஆறு மாதமாக குறைக்க அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தன பால், நேற்று தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேருக்கு அளிக்கப் பட்ட தண்டனையை ஆறு மாத கால தண் டனையாக குறைக்கப் படுகிறது. அவர்களுக்கு இந்தத் தண்டனைக் காலத்தில் எந்தவித சலுகையும் கிடையாது என்ற தீர்மானத்தை முதல் வரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள் ளப்பட்டு அவையின் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மா னத்தை நிறைவேற்றி னார் பேரவைத் தலைவர்.

இந்த தண்டனை குறைப்பு போதாது என திமுக சட்டமன்ற உறுப் பினர்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்திற்கு வெளியே திமுக சட்ட மன்ற கடசித் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து செய்தியாளர் களிடையே கூறிய தாவது:

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு அளிக்கப் பட்ட ஓர் ஆண்டு கால தண்டனையே பெரிய தண்டனை. எனவே அவை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர்களின் தண்டனை ஆறுமாதமாக குறைக் கப்பட்டது. இந்த ஆறு மாத கால தண்ட னையை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவும் மிகப் பெரிய அநியாயம் என்று நாங்கள் வெளி நடப்பு செய்திருக்கி றோம் என்று தெரிவித்தார்.


அன்று சொன்னது...

15.8.1991 அன்று சென்னைக் கோட்டையில் சுதந்திர தின விழா கொடியை ஏற்றியபோதே கச்சத் தீவை மீட்போம் என்று இதே முதல் அமைச்சர் ஜெயலலிதா சங்கநாதம் செய்தார் என்றாலும் 22 ஆண்டுகளுக்குப் பின்பும் அதே குரலைக் கொடுத்துள்ளார் என்பது நினை வூட்டத்தக்கது. இதுவும் வெற்றுச் சொல்லாக ஆகி விடக் கூடாது.

கச்சத் தீவு மீட்பு மாநாட்டை திராவிடர் கழகம் இராமேசுவரத்தில் நடத்தியது (26.7.1997). கச்சத்தீவை இந்தியா மீட்கக்கோரும் வழக் கொன்றை திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். (29.7.1997) வழக்கு நிலுவையில் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


தி.மு.க.வின் தீர்மானம்


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டுள்ளன.

குறிப்பாக மத்திய அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலக வேண்டிய அவசியம் குறித்துத் தன்னிலை விளக்கம் அளிக்கும் தீர்மானமாக அது அமைந்துள்ளது.

மத்திய அரசின்மீது தி.மு.க. வைத்துள்ள குற்றச்சாற்றுகள் சாதாரணமானவையல்ல - முடிந்தால் அவற்றிற்கு காங்கிரசோ, மத்திய அரசோ விளக்கம் அளிக்கட்டும் பார்க்கலாம்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் - இனப் படுகொலை களை பகிரங்கமாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம் இந்திய அரசுக்கு?

பிரதமராக இருந்த நிலையில் இந்திரா காந்தி அவர்களால் 1983-இல் இலங்கை அரசுமீது வெளிப் படையாக அறிவிக்கப்பட்ட குற்றச்சாற்றுதானே அது? இலங்கையில் நடப்பது பச்சையான இனப்படு கொலை (Genocide) என்று சொன்னாரா - இல்லையா?

1983ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2009இல் சிங்கள இனப் பேரினவாத அரசால் நடத்தப்பட்டது மிகப் பெரிய கொடுமையும், போர்க் குற்றங்களைச் சார்ந்ததாகும்.

இந்த நிலையில் இன்னும் கடுமையான சொற் களால் இனப்படுகொலை என்பதையும் தாண்டிக்கூட இந்திய அரசால் சொல்லப்படுவதற்கும், கண்டிக்கப் படுவதற்கும் அதிக வாய்ப்புண்டே!

உலகில் உள்ள மற்ற நாடுகள் கண்டிக்கும் நிலையில், இப்பிரச்சினையில் அதிக உரிமை உடைய இந்தியா மவுன சாமியாராக ஆன மர்மம் என்ன? இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா சொல்லுவதன் மூலம் நட்பு என்ற சொல்லையே இந்தியா கொச்சைப்படுத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

நட்பு நாட்டுக்குச் சொந்தமான - தொப்புள் கொடி உறவு கொண்ட மக்களை, (ஈழத் தமிழர்களை) நட்பு நாடு - யுத்த நெறிகளை மீறிக் கொத்துக் குண்டுகள் மூலம் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்திருக்குமா?

இனி ஒருமுறை இந்தியா இலங்கையை நட்பு நாடு என்று சொல்லுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்தச் சொல் உலகில் உள்ள பல கோடி தமிழர்களின், மனித உரிமை வேட்கையாளர்களின் ஈர உள்ளங் களை ரணப்படுத்தும் மோசமான சொல்லாகும்.

இன்னொரு நாட்டின்மீது அபாண்டமான குற்றச் சாற்றுகளை சுமத்த வேண்டும் என்று நாங்கள் எந்தக் கட்டத்திலும் சொல்லவில்லை. நடந்தவற்றை சுட்டிக்காட்டக்கூட இந்தியா தயாராக இல்லை என்கிறபோது, சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக் கும் என்ன வேறுபாடு என்ற கேள்விதான் எழுகிறது.

இந்தப் பிரச்சினையில் இந்தியத் தேசியத்தின் பொய் முகம் கிழிந்து தொங்கிப் போய் விட்டது.

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டுக் கொண்டே இருந்த போது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது? வேறு எந்த மாநில உறுப் பினர்கள் நாடாளுமன்றத்தில் கர்ச்சனை செய்ய வேண்டாம் - கண்டனக் குரல் எழுப்பியதுண்டா? அப்புறம் என்ன இங்கு வாழ்கிறது இந்தியத் தேசியம்?

மத்திய அமைச்சரவையிலிருந்தும், முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலகி விட்டாலும், ஈழப் படுகொலை தொடர்பான பிரச்சினையை தி.மு.க.வோ, டெசோவோ கைவிடப் போவதில்லை.

அதன் அடையாளம் தான் - தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வடிக்கப்பட் டுள்ள தீர்மானத்தில், முன்பு வைத்த அதே கோரிக் கையை முன் வைத்து இந்திய அரசை வலியுறுத்தி யுள்ளதாகும்.

அரசியல், தேர்தல், இலாப - நட்டங்களைப் பார்த்துக் காய்களை நகர்த்தும் பிரச்சினையில்லை இது. எல்லாவற்றையும் கடந்த மனிதநேய - மனித உரிமைப் பிரச்சினையாகும்.

கூட்டணியில் இருந்த போதாவது கொஞ்சம் நெருடல் இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை என்று ஆகி விட்டபிறகு தி.மு.க. - டெசோவின் பணிகள் மேலும், மேலும் பயனுள்ள வகையில் தீவிரமாகத்தான் இருக்கும் என்பதில் அய்யமில்லை. மத்திய அரசு கடுமையான விலையைக் கொடுத்த பிறகாவது அதன் போக்கிலே மாற்றம் வருகிறதா என்று உலகமே எதிர்பார்க்கிறது. படிப்பினையிலி ருந்து பாடம் என்பது மிகவும் உயர்ந்த பண்பாடா யிற்றே!

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே, தமிழில் பேசுங்கள்!


- க.திருநாவுக்கரசுஇந்திய அரசியல் சட்டத்தினால் ஏற்பளிப்பு செய்யப்பட்ட தேசிய மொழி தமிழ்! 14 மொழிகள் தேசிய மொழிகளாக இருந்த காலம்போய் இன்று 22 மொழிகள் இந்தியாவின் அரசியல் சட்ட 8 - ஆவது அட்ட வணையில் இடம் பெற்று இருக்கின்றன. மக்களவையிலும், மாநிலங்கவையிலும் நமது தமிழ்நாட்டு உறுப்பினர்கள் மொழி தொடர்பான விவாதங்களில் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். அப் போது நமது உரிமைகளை அங்கே வலியுறுத்தி இருக்கிறார்கள். அவ் விவாதங்களை ஏடுகளில் படித்தபோது மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.
கடந்த மார்ச் 15ஆம் தேதி மக்கள வையில் யூ.பி.எஸ்.சி தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது ம.தி.மு.க. உறுப்பினர் அ.கணேச மூர்த்தி தமிழில் பேசினார். அவர் பேசுகிறபோது, அவையின் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஓய்வு பெற்று ஓராண்டு ஆகியும் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. தமிழ் மொழி பெயர்ப்பாளரை நியமிக்க மக்களவைத் தலைவர், செகரட்டரி ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதே விவாதத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், அவையில் தமிழில் பேச விரும்பினா லும், மொழி பெயர்ப்பாளர் இல்லாத தால் ஆங்கிலத்தில் பேச வேண்டி யுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அஇஅதிமுக உறுப்பினர் க.தம்பிதுரை பேசுகிறபோது, மொழி பெயர்ப்பு வசதி இல்லாததால் என்னால் தமிழில் பேச முடியவில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பேசுகிறேன். இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவையில் அனைத்து மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

நமது தமிழ் நாட்டு உறுப்பினர் களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்கிற அவா இருக்கிறது. ஆனால் மத்திய அரசு - மக்களவைத் தலைவரின் கீழ் உள்ள நிர்வாகம் ஓராண் டுக்கு மேலாகியும் மொழி பெயர்ப்பாளரை நியமிக்கவில்லை. மத்திய அரசை மிகச்சிறிய பிரச்சினையிலிருந்து மிகப் பெரிய பிரச்சினை வரை அங்குசத்தால் குத்த வேண்டியுள்ளது. இயல்பாக ஓர் அரசுக்கு உள்ள பொறுப்பின்படி ஒரு போதும் மத்திய அரசு நடந்து கொண் டதில்லை.

தமிழ் ஓவியா said...

ஆனால் அதிகாரத்தைக் குவித்து வைத்துக் கொள்வதிலும், அதிகாரத்தை செலுத்துவதிலும் அதிகாரிகள், முதல் நிலை அமைச்சர்கள் கருத்தாய் இருக் கிறார்களே தவிர உரிமைகள் பகிர்ந் தளிக்கப்படுவதில்லை. பல பிரச்சினை களில் அவர்களது முடிவுகள் நகைப்பூட் டுவனவாக இருக்கும். முதல் நிலை அமைச்சர்கள், கிளை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என்று 70க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர் களுக்குள் நல்ல அறிமுகம் இருக்குமா? பிரதமர் இவர்களை அறிந்து வைத்தி ருப்பாரோ என்பதெல்லாம் அய்யப்பாடாக இருக்கிறது.

மாநிலங்கள் அவையில் திருச்சி சிவா ஆட்சி மொழிகள் சட்ட மசோதா விவாதத்தில் கலந்து கொண்டு மிக அரியதோர் உரையை ஆற்றியிருக்கிறார். பல அரிய கருத்துக்களை அவர் எடுத்து வைத்து இருக்கிறார். தற்போதுள்ள 22 தேசிய மொழிகளையும், ஆட்சிமொழி களாக ஆக்க வேண்டும் என்று உறுதிபட கூறிய அவர் மூன்று குறிப்புகளை அவையில் முன் வைக்கிறார்.

1) அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவனையில் உள்ள அனைத்து மொழி களையும், மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ தேவைகளுக்கும் பயன் படுத்துவதை உறுதி செய்ய 1963-ஆம் ஆண்டின் ஆட்சி மொழிகளின் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

2) திருச்சி சிவா ஓர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை எடுத்துரைத்தார். பிறகு நகரில் நடைபெற்ற மார்ச்சிஸ்ட் கட்சியின் ஆவணம் அது! - அதன் உள்ளடக்கத் தின் கூறாக,இந்தியாவின் ஒற்றுமைக்கும் சமத் துவ உணர்வுக்கும் மக்களது மொழிகள் பற்றி ஒரு சரியான அணுகுமுறை வேண் டும். நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் இந்திய மொழிகளின் அனைத்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை வேண்டும், அவை உடனுக்குடன் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து சட்டங்கள், அரசானைகள், தீர்மானங்கள் ஆகி யவை அனைத்து இந்திய மொழிகளி லும் கிடைக்க வேண்டும் என்று மாநி லங்களவையில் எடுத்து கூறியிருந்தார்.

3) ராஜமன்னார் குழுவின் பரிந் துரையில் உள்ள கீழ்க்காணும் கருத்தை அவையில் எடுத்து சொன்னார்.

இது பொதுமக்களை மத்திய அரசின் நிர்வாக அமைப்புக்கு உணர்ச் சிப் பூர்வமாக கொண்டு வந்து மத்திய நிர்வாகம், மாநில மட்டத்திலுள்ள நிர்வாகம் போல தங்களுடையது தான் என்று மக்களை உணர வைக்கும், திருச்சி சிவா மாநிலங்களவையில் மிக விரிவாகப் பேசி இருக்கிறார். அவை நம் உள்ளத்தை தொட்டு உணர்ச்சி மேலிடச் செய்கிற உரை, அதில் அய்யமில்லை. நாம் மேலே எடுத்துக் கூறி இருக்கிற மூன்று அம்சங்கள் அவரது உரையில் வெளிப் பட்டு இருக்கிற கருத்துக்கள் மக் களிடையே மத்திய அரசை நெருக்க மாகக் கொண்டு வருபவையாகும். ஆனால் அவர்கள்தான் எப்போதும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்ப வர்களாகக் காட்சியளிப்பார்கள். இவை ஒரு பக்கம் இருந்தாலும் நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் மக்களவையிலும், மாநிலங் களவையிலும் ஆற்றி இருக்கின்ற மேற்சொன்ன உரைகள் - எமக்கு ஒர் எண்ணத்தை தோற்றுவித்தது.

இனி நாடாளுமன்றத்தில் நமது தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழில் பேசினால் என்ன? என்பது தான் அது!

தமிழ் ஓவியா said...


போகாதே!


அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தேவை!


ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த

இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில்

இந்தியா பங்கேற்கக் கூடாது

தி.மு.க. தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்

சென்னை, மார்ச் 26- தமிழக மீனவர் கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசு முன்னின்று இலங்கை யில் நடத்தும் காமன் வெல்த் மாநாட் டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங் கள் திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன (25.3.2013)

தீர்மானம் : 5

இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இலங்கைச் சிங்களக் கடற்படை யினரும், சிங்கள மீனவர்களும், மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர் களை காரணமின்றி கடுமையாகத் தாக்கியும், உயிரைப் பறித்தும், அவர் கள் பிடித்த மீன்களை கொள்ளை யடித்தும், அவர்களது மீன்பிடி வலை களைச் சேதப்படுத்தியும், படகுகளை நாசப்படுத்தியும் பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் நாள்தோறும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள். அதனால் தமிழகம் சார்ந்த கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதா ரங்கள் முற்றிலும் தடுக்கப் படுகின்றன. அண்மைக்காலமாக தமிழகக் கடல் எல்லைக்குள்ளேயே நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற அராஜக மான நடவடிக்கைகளில் சிங்கள மீனவர்களும், சிங்களக் கடற் படை யினரும் தீவிரம் காட்டி வருகின்றார் கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, தமிழக மீனவர்களுக்கு தக்க பாதுகாப்பு கோரி மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை இதுவரை எடுத்ததாகத் தெரிய வில்லை. டெசோ அமைப்பின் சார்பில் இராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத் திலும் தமிழக மீனவர்களைக் காப் பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்குரிய வலிமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண் டும் என்று இச்செயற்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் : 6

காமன்வெல்த் மாநாடு

2013, நவம்பர்த் திங்களில் காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் அம்மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக் கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
நம் வேண்டுகோளையும் மீறி, மாநாடு இலங்கையில் நடத்தப்படுமா னால், உலகத் தமிழர்களின் உணர்வு களை எதிரொலிக்கும் வகையிலும், ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இந்தியா அம்மாநாட் டில் கலந்து கொள்ளாமல், அதனைப் புறக்கணிக்க வேண்டுமென்று இச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத் துகின்றது.

ஏற்கனவே சில நாடுகள் இலங் கையில் நடைபெறக்கூடிய அம்மாநாட் டில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பிற நாடுகளே அத்தகைய முடிவுக்கு வரும்போது, இந்தியா எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக அந்த முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டு மென்று இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 9

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அவலநிலை.

தமிழ் ஓவியா said...

காவிரித் தண்ணீரை உரிய நேரத் தில் தேவையான அளவிற்கு ஜெய லலிதா பெற்றுத் தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பெரு மளவிற்கு பொய்த்துப் போய் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், ஜெயலலிதா அரசு அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம்கூட இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை. இதற்கிடையில் தஞ்சையில் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அப் பொழுது, கணக்கெடுப்பில் விடுபட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயி களுக்கு நிவாரணத் தொகை, விவசா யக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் - குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்த்து வந்திருந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதிக் கப்பட்ட பகுதியாக அ.தி.மு.க. அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகி யும், இதுவரை எந்தவிதமான நிவா ரணப் பணியும் துவக்கப்படாமல், அமைச்சர்கள் குழு மாவட்டங்களில் சாலையோர நிலங்களைப் பார்வை யிடுவதிலேயே, காலம் போய்க் கொண் டிருக்கிறது. டெல்டா மாவட்ட விவ சாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவார ணத் தொகையிலும் முறைகேடு; அரைகுறையான கணக்கெடுப்பு; பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனை வருக்கும் நிவாரணம் கிடைக்காதது போன்ற குளறுபடிகள் தொடர் கின்றன.

டெல்டா மாவட்டங்களில் மறு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; 50 சதவிகிதத்திற்கும் குறைவான பயிரிழப்புக்கு நிவாரணம்; தண்ணீர் வராதென்று விவசாய நிலங்களைத் தரிசாகவே போட்டு வைத்திருந்த விவசாயிகளுக்கு நிவாரணம்; விவ சாயத் தொழிலாளர்களுக்கு நிவார ணம்; தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தார்க்குத் தலா 10 இலட்ச ரூபாய் நிவாரணம் - குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; டெல்டா மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்துமாவட்ட விவசாயிகளுக் கான நிவாரணம்; நெற் பயிர் தவிர, பாதிக்கப்பட்ட கரும்பு போன்ற பிற பயிர்களுக்கும் தோட்டக் கலைப் பயிர்களுக்கும் நிவாரணம்; கூட்டுறவுக் கடன் ரத்து; போன்ற கோரிக்கைகளை வைத்துப் பல மாதங்களாகக் காத்தி ருக்கும் தமிழக விவசாயிகள் வேதனை களில் உழன்று, விரக்தியின் விளிம் பிற்கே சென்று விட்டார்கள். 2013-14ஆம் ஆண்டிற்கான அ.தி.மு.க. அர சின் நிதிநிலை அறிக்கையிலும் நிவா ரண விபரங்கள் அறிவிக்கப்படாத சூழ்நிலையில், விவசாயிகள் அ.தி.மு.க. அரசு தங்களை வஞ்சித்து விட்ட தாகவே கருதுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

எனவே பாதிக்கப்பட்ட விவசாயி களைத் தொடர்ந்து பழிவாங்கி வாட்டி வதைத்து வரும் ஜெயலலிதா வின் அரசை இச் செயற்குழு வன் மையாகக் கண்டிப்பதோடு; தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணங் களை மேலும் தாமதிக்காமல் அறி வித்து, முழு நிவாரணமும் அவர்களுக் குக் கிடைப்பதற்கான நடவடிக்கை களைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 11

நதி நீர் இணைப்பு

இந்திய நாட்டில் உள்ள நதிகள் யாவும் தேசியமயமாக்கப்பட வேண் டும். கங்கை - மகாநதி - கிருஷ்ணா - காவேரி - வைகை - தாமிரபரணி யோடு இணைத்து, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளை திருப்பி, அந்தத் திட்டத்தோடு கேரளாவிலி ருந்து அச்சன்கோவில் - பம்பை நதி களை தமிழகத்திலுள்ள வைப்பாற் றோடு இணைக்க வேண்டும் என கழக வழக்கறிஞர் திரு. கே.எஸ்.இராதா கிருஷ்ணன் 1983இல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து; மேல் முறையீட்டினை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுவந்திர குமார் ஆகி யோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்; அந்த வழக்கில் 27.2.2012 அன்று பின்வருமாறு தீர்ப்பு வழங்கியது:

1. மத்திய நீர்வளத் துறை அமைச் சரின் தலைமையில், மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர், சுற்றுச் சூழல் நிபுணர்கள், நீர்ப்பாசன நிபு ணர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக் கிய குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

2. இந்தக் குழு மூன்று மாதத் திற்கு ஒருமுறை கூடி குறிப்பிட்ட தேசிய நதிகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும், அதற்குத் தேவைப்படும் கால நிர்ணயம் குறித் தும் ஆலோசனை நடத்தி ஆராயப் வேண்டும்.

3. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் குறித்த அறிக்கையை உடனுக்குடன் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஓராண் டுக் காலமாகியும் நடைமுறைப்படுத் தப் படவில்லை. இந்தப் பரிந்து ரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தலைவர் கலைஞர் அவர்களின் அறிவுரைப்படி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு இந்திய நதி களைத் தேசிய மயமாக்குவது குறித் தும், நதிகளை இணைப்பது குறித்தும் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள பரிந்துரைகளின்படி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலைமை யில் உடனடியாக குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆய்ந்து, நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமென்று இக் கூட்டம் மத்திய அரசை வலியுறுத்து கிறது.

தமிழ் ஓவியா said...


ராமன் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை தடுப்பதா?தலைமைச் செயற்குழுவில் தி.மு.க. தீர்மானம்

சென்னை, மார்ச் 26- அறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்ட மான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வந்ததன் காரணமாக, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது, உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், மத்திய அரசு சேதுக் கால்வாய்த் திட்டப் பணிகள் தொட ரலாம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது.

சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது பா.ஜ.க. அரசுதான். ஆனால் தற்பொழுது அந்தக் கட்சியினுடைய தேசியக் கவுன்சில் கூட்டத்தில் 3.3.2013 அன்று ராமர் பாலத்தை தேசிய முக்கியத் துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்க தமிழக அ.தி.மு.க. அரசு அளித்து வரும் ஒத்துழைப்பைப் பாராட்டுவதாகத் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று உச்ச நீதிமன்றத்திலும் ஜெய லலிதா அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது.

ராமன் பெயரைச் சொல்லி...

தென் மாவட்ட மக்களின் முன் னேற்றத்திற்கான சேது சமுத்திரத் திட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணாக ஜெயலலிதா கருத்துக் களைச் சொல்லி வருகிறார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தின் தலை யாய நோக்கம் என்றும்; 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் நிறை வேற்றிட வேண்டுமென்று வலியுறுத்து வோம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லி விட்டு; தற்போது ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று ஜெயலலிதா சொல்வது, தென்மாவட்டங்களின் வளர்ச்சியி லும், முன்னேற்றத்திலும் ஜெயலலிதா எந்த அளவுக்கு அக்கறையில்லாமல் நடந்து கொள்கிறார் என்பதையே காட்டுகிறது.

மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, தாமதமாகி வரும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென இச்செயற் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

(தீர்மானம் எண் 15 - சென்னை, 25.3.2013

தமிழ் ஓவியா said...


மகத்தான மக்கள் போராளி!


சாப்பிடாமல் எத்தனை நாள்கள் இருக்க முடியும்? ஒரு நாள்? ஒரு வாரம்? ஒரு மாதம்? ஒரு வருடம்? 12 வருடங்களாக ஒருவர் ஒரு துளி தண்ணீர் குடிக்காமல், ஒரு கவளம் உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார். அதுவும் நாம் வசிக்கும் இதே நாட்டில். உலகிலேயே அதிக காலம் உண்ணாவிரதம் இருக்கிற அந்த மனுஷி அய்ரோம் ஷர்மிளா சானு.

இந்தியாவில் பின்தங்கிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரைச் சேர்ந்தவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ ஷர்மிளா பட்டினிப் போராட்டத்தில் இறங்கவில்லை.மக்களுக்காகவே இந்த நெடிய, கொடிய போராட்டத்தை நடத்தி வருகிறார்!

1958 செப்டம்பர் 11 அன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றப்பட்டது. கலவரம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் இச்சட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு கூறுகிறது. இச்சட்டத்தின்படி பொது இடங்களில் 5 பேர் கூடி நின்றால், எவ்வித விசாரணையும் இன்றி அவர்களைச் சுட்டு வீழ்த்தலாம்.

எந்நேரத்திலும் யாரையும் வாரன்ட் இல்லாமல் கைது செய்யலாம். இந்தக் காரியங்களைச் செய்யும் ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

மணிப்பூரில் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் கண்டு வருத்தமடைந்த ஷர்மிளா, இச்சட்டத்துக்கு எதிராகப் போராடும் அமைப்புகளோடு சேர்ந்தார்.

அப்போது லேம்டென் கிராமத்தில் ஆயுதப்படையினரால் ஓர் இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான செய்தி 28 வயது ஷர்மிளாவை மிகவும் கலங்கடித்தது. போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் களமிறங்கினார் ஷர்மிளா.

2000 நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மாலோம் கிராம பேருந்து நிறுத்தம். 62 வயது மூதாட்டி, வீரதீர விருது பெற்ற 18 வயது சிறுவன், அவனுடைய அண்ணன் உள்பட 10 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவ்வழியே வந்த ஆயுதப்படை, இவர்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளியது. உயிருடன் நின்றுகொண்டிருந்தவர்கள் நொடியில் சடலங்களாக மாறிப்போயிருந்தனர்.

மாலோம் படுகொலையை அறிந்த ஷர்மிளா துன்பத்தில் மூழ்கினார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை யோடு, உடனே பட்டினிப் போராட்டம் தொடங்கினார். மக்கள் மத்தியில் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது.

தமிழ் ஓவியா said...

அதைக் கண்ட அரசாங்கம் தற்கொலை முயற்சி என்று காரணம் கூறி, நவம்பர் 6 அன்று அவரைக் கைது செய்தது. இம்பால் ஜவஹர்லால் மருத்துவமனையில் மூக்கு வழியே நீர் ஆகாரத்தைக் கட்டாயப்படுத்தி அளித்தது. அன்று முதல் இன்று வரை ஷர்மிளா மூக்குக்குழாயுடன்தான் இருக் கிறார். தற்கொலை முயற்சி செய்பவரை ஓராண்டு வரையே காவலில் வைக்க முடியும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு, உடனே மீண்டும் கைது செய்யப் படுகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தண்ணீர் குடிப்பதில்லை. உணவு சாப்பிடுவதில்லை. தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை. வாரிக்கொள்வதில்லை. கண்ணாடி பார்ப்பதில்லை. செருப்பு அணிவதில்லை. தன் அன்பான அம்மாவைச் சந்திப்ப தில்லை. இப்படி உறுதியோடு உள்ளம் கலங்காமல் இருக்கிறார் ஷர்மிளா.

பல் தேய்க்கும்போது தண்ணீர் உபயோகித்தால், தன் உறுதி குலைந்துவிடுமோ என்று பஞ்சு வைத்தே பற்களைச் சுத்தம் செய்கிறார் ஷர்மிளா. பகல் நேரத்தில் அவர் அறையை விட்டு வெளியே வர அனுமதி இல்லை. ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்படுகிறார். படிப்பு, எழுத்து, கவிதை என்று அவருடைய நேரம் கடந்து செல்கிறது.

2006ஆம் ஆண்டு விடுதலையானபோது இம்பாலில் இருந்து டில்லிக்குத் தப்பி வந்தார் ஷர்மிளா. காந்திய கொள்கையைப் பின்பற்றி போராடி வரும் ஷர்மிளா ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்றார். பிறகு ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினார். ஷர்மிளாவின் போராட்டம் பெரிய அளவில் வெளி உலகுக்குத் தெரிய வந்தது அப்போதுதான். ஏராளமான மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் இறங்கினர். அச்சம் அடைந்த அரசாங்கம் மீண்டும் ஷர்மிளாவைக் காவலில் வைத்தது.

எத்தனையோ எதிர்ப்புகள். மிரட்டல்கள். துன்புறுத் தல்கள்... எதுவுமே அவருடைய போராட்டத்தைப் பலவீனப்படுத்தவில்லை. உடல்நிலை மோசமானாலும் நாளுக்கு நாள் அவருடைய உள்ளம் உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.

ஷர்மிளாவின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அவரு டைய உடல்நிலை கண்டு அஞ்சுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஷர்மிளா சொல்லும் பதில்... நியாயம், உண்மை, அன்பு, அமைதிக்காகத்தான் போராடிக்கொண்டிருக் கிறேன். இது எனக்கான போராட்டம் இல்லை. மக்களுக்கான போராட்டம். இப்போராட்டத்தில் நான் என்னைத் தண்டித்துக் கொள்வதாக நினைக்கவில்லை. போராடுவது என் கடமை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று நம்புகிறேன்!

ஒன்பது குழந்தைகளில் இளையவள் ஷர்மிளா. எந்தத் தாயும் தன் குழந்தை பட்டினி கிடப்பதை விரும்ப மாட்டாள். ஒரு தாயாக நான் அவளது போராட்டத்தைக் கைவிடுமாறு பொறுப்பற்றவளாகக் கூறமாட்டேன். நான், அவளைப் பார்த்து அவளைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. என்னையும் நான் பலவீனப்படுத்திக்கொள்ளவில்லை.

எந்தச் சூழ்நிலையிலும் போராட்டதை விடுமாறு அவளுக்கு நெருக்கடி கொடுக்கமாட்டேன். அவள் மக்களுக்காகப் போராடுகிறாள். இவள் இந்தத் தேசத்தின் குழந்தை என்கிறார் ஷர்மிளாவின் வயதான அம்மா. இன்று ஷர்மிளா உடலின் பல பாகங்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. எந்த நேரத்திலும் அவரது உடல்நிலை மிக மோசமடையலாம்.

உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஷர்மிளாவை விடுதலை செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றன. பல்வேறு அமைப்புகள் அவருக்கு விருதுகள் வழங்கிவருகின்றன. காந்திய கொள்கையில் அமைதியாகப் போராடிக்கொண்டி ருக்கும் ஷர்மிளாவுக்கு என்ன செய்யப் போகிறது இந்தக் காந்தீய தேசம்? உயிருடன் இருக்கும்போது ஷர்மிளாவின் போராட்டத்தை மதிக்காமல், பிறகு தியாகி என்று கொண்டாடப் போகிறோமா!

தமிழ் ஓவியா said...


தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் படையைத் திரட்டுகிறாராம் பார்ப்பன சு.சாமி

துரோணாச்சாரி என்ற பார்ப்பனர் யுத்தத்திற்கு அர்ஜுனனைத் தயார் செய்ததுபோல தமிழர்களைத் தீர்த்துக் கட்ட பார்ப்பனப் படை ஒன்றைத் தயாரிக்கப் போகிறாராம்! தமிழர்கள் யார் தெரியுமா? பொறுக்கிகளாம்- சொல்லுவது யார்? ஒரு பூணூல் திருமேனி!

இது வன்முறை தூண்டுதல் அல்லவா? தமிழ்நாடு அரசு அடக்கப் போகிறதா? அல்லது தமிழர்கள் அடக்க வேண்டுமா? (வன்முறையால் அல்ல!)

தமிழ் ஓவியா said...


சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!


சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலி யுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறு வனம் சிங்களத்தில் துண்டறிக்கை அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பிரச்சினையில் சரவணா ஸ்டோர் சிக்கியுள்ளது.

இந்தக் கடைகளில் பலவகையான சிங்களப் பொருள்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இந்தக் கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருள்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களுக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிருவாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.

கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருள்கள் மற்றும் எந்தத் தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களையும் சிங்கள மொழியிலேயே அச்சடித்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டி வருகிறது.

Prem S said...

நல்ல அலசல் கிருஷ்ணர் பற்றி

தமிழ் ஓவியா said...


கச்சத்தீவுப் பிரச்சினை


கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற ஒரு வேண்டு கோளைத் தமிழக முதலமைச்சர் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இல்லையேல் உச்சநீதி மன்ற வழக்கின்மூலம் அதனைச் சாதிப்போம் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது தேவையில்லாமல் தி.மு.க.வையும், அதன் தலைவரையும் குறைகூறியது தேவையானது தானா? அப்படி சொன்ன தகவல்களும் சரியானவை தானா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.

1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தபோது, அன்றைய சட்ட அமைச்சர் மாதவன் (தி.மு.க.) அவர்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டு, நேரிலும், எழுத்து வடிவத்திலும் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டதெல்லாம் ஆவண ரீதியான சான்றாகும்.

1974 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்கூட தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தது.

நெருக்கடி நிலை காலத்தில் - 1976 இல் அந்த உரிமை பறிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 1976 முதல் 1989 வரை அ.இ.அ.தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது -அதுவும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டுதானே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தம் செல் வாக்கைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்டிருக்க லாமே; செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ளாரே - இந்தப் பிரச்சினை யில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கவேண்டியதுதானே!

முதன் முதலில் (1991 இல்) இவர் முதலமைச்சராக வந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது கச்சத்தீவை மீட்பேன்! என்று சூளுரைத்தாரே - அதற்குப் பின் எத்தனைத் தடவை தேசியக் கொடியை ஏற்றி யிருப்பார்? 22 ஆண்டுகளுக்குமுன் கொடுத்த அந்த முழக்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழாதா?

2008 இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே 1997 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் (29.7.1997).

அதற்கு இரு நாள்களுக்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடத்தப்பட்ட தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் அறிவித்தபடி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு அது.

நீதியரசர் ஜெயசிம்மபாபு அவர்களால் விசா ரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்மனுதார ருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டது.

ரிட் மனுவில் தெளிவான சட்டப் பிரிவு சுட்டிக் காட்டப்பட்டது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(சி) என்ன கூறுகிறது?

எந்த ஒரு மாநிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட வேண்டுமானாலும், குடியரசுத் தலைவரின் பரிந் துரைப்படி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய அரசமைப்புப் பிரிவு 3 இல் இணைப்புப் பகுதியில் குறிப்பிடப்பட் டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவையின் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும்.

சட்ட ரீதியான இந்த வழிமுறைகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிரச்சினையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், தமிழர் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி என்ற அடிப்படையில் கச்சத்தீவின் உள்ளும், புறமும் உள்ளிட்ட இந்தியக் கடல் எல்லைக் குள் மீன் பிடிக்கும் வகையிலும் மாண்புமிகு நீதி மன்றம் உடனடியாக இடைக்கால ஆணை பிறப்பிக் குமாறும் அந்த ரிட் மனுவில் கேட்டுக்கொள் ளப்பட்டது.

16 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இது நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!27-3-2013

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


இட ஒதுக்கீடே வழங்கப்படாமல் 21,000 பணி நியமனங்கள்! அம்பலமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடி


நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கூறி வருகின்றனராம் முகநூலில்!

அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன என்றும் தெரியாது. ஏன் என்றும் தெரியாது. இதில் தகுதிக் குறைவு என்பதற்கு பேச்சே கிடையாது என்பதும் புரியாது. ஆயிரம் முறை சொன்னாலும் அதுகள் பேசுவதைப் பேசிக் கொண்டுதானிருக்கும். அவர்களுக்கும் இறுதியில் நாம் விளக்கம் சொல்வோம்.

முதலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்திருக்கும் மோசடிகள் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படையாகச் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. இடைநிலை ஆசிரியர்கள் (Secondary grade)

2. பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate assistants / BT assistants)

3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate assistants)

இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அவசியமில்லை. நேரடிப் போட்டித் தேர்வோ அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் செய்து கொள்ளலாம் (முன்பிருந்த முறைப்படியே).

இது குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை.

ஃ மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு, அவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர்களாகப் பணிபுரியத் தகுதியானவர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் - அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான முறைகேடு அரங்கேறியிருக்கிறது. நாமும் ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.

முதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த விவரங்கள். பணி நியமனங்கள் என்று வரும்போது எவ்வளவு காலிப் பணியிடங்கள்? அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு? என்பதைக் குறிப்பிட்டு அறிவிக்கை (Notification) வெளியாகும். நாமும் இந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளதா என்பதைப் பார்த்தாலே போதுமானது.

ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று மொத்தமாக 21,000 பேருக்கு வேலை. அதில் 10,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 8000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 3000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்று செய்தி வெளிவந்த போது, நாமும் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டி ருக்கிறதா என்ற பார்வையுடன் தான் இப்பிரச்சினையை அணுகத் தொடங்கினோம்.

அப்போதுதான் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் கொண்ட அறிவிக்கை கூட வெளியிடப்படாதது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையின் வேர் இன்னும் ஆழத்தில் இருப்பதும் புரியவந்தது.

சரி, இதெல்லாம் இருக்கட்டும். அதென்ன தகுதித் தேர்வு? போட்டித் தேர்வு? தனித்தனியாகவா இருக் கிறது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் நீங்கள் விழித்துக் கொண்டீர்கள் என்று பொருள். ஏனென்றால் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் குழம்ப வைத்ததுதான் இந்தப் பணி நியமன மோசடியில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி!

UPSC, TNPSC, TRB என்றெல்லாம் நடத்தப்படுகின்ற னவே அவைதான் போட்டித் தேர்வுகள். அதாவது மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதை அறிவித்து அதற்காகவென்றே நடத்தப்படுவதுதான் போட்டித் தேர்வு.

NET, SLET, SET, TET போன்றவையெல்லாம் தகுதித் தேர்வுகள் (Eligibility Test). இவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது வேலை பெறுவதற்கான தகுதித் தேர்வே தவிர, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை என்பது கிடையாது.

போட்டித் தேர்வு

1. வேலை வாய்ப்பிற்கான அறிவிக்கைகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு.

2. ஒவ்வொரு ஆண்டும் நடத்த அவசியம் இல்லை (எ.கா. TNPSC)

3. பெற்றுள்ள மதிப்பெண்களைப் பொறுத்து ஒவ்வோ ராண்டும் வகுப்பு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் மாறும்.

தமிழ் ஓவியா said...


4. இதில் வெற்றி பெறுவோருக்கு தேர்ச்சிச் சான்றிதழ் தரப்படாது. மதிப்பெண்களை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய முடியாது.

5. கட்-ஆப்க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி.

6. இதிலிருந்து நேரடியாக பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.

தகுதித் தேர்வு

1. வேலை வாய்ப்புக்கான அறிவிக்கைக்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பில்லை

2. ஒவ்வோராண்டும் நடத்தப்படும் (TET ஒன்றுக்கு மேலும் நடத்தப்படலாம்).

3. மொத்த இடங்கள் எவ்வளவு என்ற பிரச்சினை இல்லை. எனவே வகுப்பு வாரியான தனித்தனி தகுதி அளவுகோல்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல்கள் மாறாது.

4. வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்ட தனித்தனி தகுதி அளவுகோலுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

5. தகுதித் தேர்வில் பெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை என்பது உறுதி கிடையாது. இதில் வெற்றி பெற்றோரை தனியே விண்ணப்பிக்கச் சொல்லி, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முறை என்னவோ அதற்கேற்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டித் தேர்வு மதிப்பெண் கட்-ஆப் / பதிவு மூப்பு தேதி கட்-ஆப் ஆகியன வகுப்பு வாரியாக அறிவிக்கப்படும். மற்றபடி இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே!

6. இதிலிருந்து நேரடியாகப் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்க முடியாது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்து வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வதுபோல தகுதித் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

அதற்குள் அரசு அறிவிக்கும் ஆசிரியர் பணிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இந்தத் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். (தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணியில் இடம் பெற முடியும் என்பதுதான் இப்போதைய சட்டப்படியான நடைமுறை) அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க இத்தகுதி மதிப்பெண்கள் பயன்படும். பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வோ / பதிவு மூப்போ / வெயிட்டேஜ் மதிப்பெண்ணோ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரியான கட்-ஆப் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.

இப்படியான தகுதித் தேர்வுகள் பல ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படுகிறது. NET / SLET தேர்வுகளில் வெற்றி பெற்றோர் தான் கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோ ராவர்.

அதேபோலத்தான் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு)ல் பெற்ற தேர்ச்சி பெற்றோர் தான் பள்ளி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவதற்கு மட்டும்தான் TET பயன்படும்; பயன்படுத்தப்பட வேண்டும். மற்றபடி பணி நியமனத்திற்கும் TET-க்கும் நேரடித் தொடர்பே கிடையாது.

தமிழ் ஓவியா said...


சரிங்க அப்படின்னாலும் TET-ல தகுதி மதிப் பெண் ணுக்கு மேலே தானே வேலை கொடுத்திருக்காங்க. தகுதி பெறாதவங்களையெல்லாம் வேலைக்கு எப்படி எடுக்க முடியும்? கல்வித்தரம் கெட்டுப் போயிடாதா? வேணும்னா அடுத்த வருசம் எழுதி தகுதிப்படுத்திக்க வேண்டியது தான்.

இந்த மாதிரிப் பிரச்சினையெல்லாம் NET/SLET-ன்னு சொன்னீங்களே அங்கேயெல்லாம் வருதா? என்று இந்த தகுதித் தேர்வில் தோல்வியடைந் தாகச் சொல்லப் படும் சிலரே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி தகுதியானவர்கள், தகுதியில்லாத வர்கள் என்று பிரித்துச் சொல்லும் மாபெரும் அளவுகோலான தகுதி மதிப்பெண் என்பது எவ்வளவு?

60 விழுக்காடு

அதாவது 100-க்கு 40 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் தகுதியு டையவர்கள் என்பது தானே உயர்ந்தபட்ச தகுதிக்கான அளவு கோல்!

ஆமாம். அதேதான்.

இந்த 60 விழுக்காடு மதிப்பெண் என்பது யார் யாருக்கு?

அனைவருக்கும்தான். அதிலென்ன சந்தேகம்?

அனைவருக்கும் எப்படி ஒரே அளவுகோல்? இந்திய அரசியல் சட்டத்தில் சமூகநீதி அடிப்படை யிலான தனித்தனி அளவுகோல்கள்தான் நிர்ணயிக்கப் பட வேண்டும். திறந்த போட்டிப் பிரிவினருக்குத்தானே 60 விழுக்காடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியெனில் பிற்படுத்தப்பட்டோருக்கு...? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு...? தாழ்த்தப்பட்டோருக்கு...?

பழங்குடியினருக்கு...?

மாற்றுத் திறனாளிகளுக்கு...?

பார்வையற்றோர்களுக்கு...?

60, 60, 60, 60, எல்லோருக்கும் 60 விழுக்காடுதான், யாருக்கும் தனித்தனியாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட வில்லை.

இப்போது புரிகிறதா? பார்ப்பனர்கள் முதல் பார்வையற்றோர் வரை அனைவருக்கும் ஒரே அளவுகோல்! எப்படி இருக்க முடியும்? சமூக நீதியில் மோசடி என்றோமே அதன் அடிப்படை புரிகிறதா இப்போது? இதுவரை இந்தியாவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கவே முடியாது.

அரசியல் சட்டத்திற்கு விரோத மாக, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை வழங்கியிருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளுக்கு மாறாக, இந்த தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்திற்கும் ஆணைக்குமே புறம்பாக இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதி அரங்கேறியிருக்கிறது.

NCTE எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆணைய விதிப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தகுதித் தேர்வுகளை நடத்தி வகுப்புவாரியான தனித்தனியான கல்வி அளவுகோல்களை வெளியிட்டு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்ணே கிடையாது என்று சமூகநீதிக்கும், அரசியல் சட்டத்திற்குமே எதிரான நிலைப்பாடு எப்படி எடுக்கப்பட்டது?

ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்று கேட்பதற் கான அடிப்படை வாய்ப்பையே இல்லாமல் செய்து, சமூகநீதிப்படி வேலை பெறும் தகுதிக்கான ஊற்றுக் கண்ணையே அடைத்தது யார்?

முன்னேறிய ஜாதியினரும், அனைத்து வாய்ப்புகளும் பெற்றவர்களே 40 விழுக்காடு குறைவாக 60 விழுக்காடு எடுத்திருந்தாலும் தகுதியானவர்கள்தான் என்னும்போது அவர்களை விட வாய்ப்புக் குறைந்த, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் சமூகநீதிப்படி நிர்ண யிக்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் ஏன் நிர்ணயிக்கப்பட வில்லை? திறந்த போட்டியைத் தவிர 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வெற்றிருக்க வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களுக் கான இடங்கள் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் விளங்கவில்லையா? இடஒதுக்கீடே வழங்கப்பட வில்லை என்பது புரியவில்லையா?

சட்டமும், நீதிமன்றமும் TET விசயத்தில் சொல்லியிருப் பவை என்ன? நடந்திருப்பது என்ன? நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? நடந்துள்ள சதியின் விவரங்கள் நாளைய விடுதலையில்!

தோழர்களே, பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்த்து விட்டீர்களா? அவர்களை ஒன்று திரட்டத் தயாராகி விட்டீர்களா?

தமிழ் ஓவியா said...


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!
எழுத்துரு அளவு Larger Font

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

ஆளும் கட்சி எப்படி இருக்க வேண்டும்? எதிர்க்கட்சி களுக்குப் போதுமான வாய்ப்பினை அளித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைபாடுகளைக் கவனமாக கருத்தூன்றிக் கேட்டு அந்தத் தவறுகளைக் களைந்திட முனைய வேண்டும் அதுதான் ஒரு நல்ல ஆளும் கட்சியின் பொறுப்பான கடமையாகவும் இருக்க முடியும்.

ஆனால், தமிழ்நாடு சட்டமன்றமே இதற்கு நேர் எதிராக உள்ளது. முக்கியமான தீர்மானத் தைக் கொண்டு வரும்போது, அந்தத் தீர்மானத் தின் நோக்கத்தை எடுத்துக் கூறி முதல் அமைச்சர் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.

தீர்மானத்தின்மீது கருத்துக்களைக்கூற எதிர்க் கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுதான் சிறப்பான, ஆரோக்கிய மான நிலைப்பாடாக இருக்க முடியும்.
தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்ன தாகவே முக்கிய எதிர்க்கட்சியையும், அதன் முக்கிய தலைவரையும் சாடுவதற்கே அதிக நேரத்தை எடுத்துக் கொள்வது சரியானது தானா?

அப்படி குற்றங் கூறும் பொழுது சம்பந்தப் பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியைக் குற்றம் கூறினால் அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது அதே நேரத்தில் ஆளும் கட்சி தரப்பினர் குற்றங்களை அடுக்கினால் அவற்றை அட்சரம் பிறழாமல் அவைக் குறிப்பில் ஏற்றுவது என்பதெல்லாம் எந்தவூர் ஜனநாயகமோ தெரியவில்லை.

இந்தியாவிலேயே சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆளும் கட்சியாக இருந்தபோது சென்னை மாநில சட்டசபை நடக்கும் நேர்த் தியைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரர்கள் வருவார்களாம்.

சரியாகவோ தவறாகவோ திராவிடப் பாரம்பரியம் பேசும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உயர்ந்த புகழைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ஜெயலலிதா அம்மையாரா பேசுவது? யார் எதைப் பேசுவது என்ற வரை முறையே இல்லையா?

ஒரு கணம் அசை போட்டுப் பார்க்க வேண்டாமா?

2009இல் ஈழத்தில் இலங்கை சிங்கள இனவாத அரசால் நடத்தப்பட்ட இனப்படு கொலையை எதிர்த்தவரா அம் மையார்?

ஒரு யுத்தம் ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர் களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக் கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

- (Dr. நமது எம்.ஜி.ஆர். 18.1.2009)

இவ்வளவுப் பச்சையாக ஈழத் தமிழர் படுகொலையை நியாயப்படுத்தியவர், தி.மு.க. வையும், டெசோவையும் மனம் போன போக்கில் குறை கூறுவது சரியானதுதானா?

அதுவும் ஒரு தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியும்போது, அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் ஈர்க்கும் வகையில் அது இருக்க வேண்டாமா? மாறாக சீண்டுவதாக இருப்பது எந்த வகையில் சரி?

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது. ஒரே நாமாவளியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்
(திருக்குறள் 448)
28-3-2013

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)

தமிழ் ஓவியா said...


விபச்சார விடுதி


கோயில்களை விபச்சார விடுதி என்று காந்தியார் சொன்னார் என்று நாம் சொன்னால் அதற்கு ஆதாரம் உண்டா என்று வினா தொடுப்பவர்கள் உண்டு.

ஆதாரம் இல்லாமல் எதையாவது திராவிடர் கழகம் சொன்னதுண்டா?

இதோ காந்தியார் பேசு கிறார்: தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக் கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களிலும் இருக் கிறார் என்று நீங்கள் சொல் வதைபற்றிப் பலர் குறைபட் டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக்கூட நான் விரும்பவில்லை. ஒரு வகை யில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான். கடவுள் எங் கும் இருக்கிறார்.

திருடர்கள் வாழும் குகைகளில்கூட இருக்கிறார். ஆனால் அதற் காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவ தில்லையே? அதற்குப் பதி லாக ஆலயங்களுக்குத் தானே போகிறோம்? ஆல யங்களில் தூய்மையான சூழ் நிலை நிலவும் என்பதற்காகத் தானே செல்கிறோம்? அந்தப் பொருளில்தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆல யங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன். அத னால் தான் அப்படியே அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்ட வன் இருப்பாரோ, அப்படித் தான் இருப்பார் என்று நான் சொன்னேன். இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத் துவதாக இருந்தால், அதற் காக நான் மிகவும் வருந்து கிறேன். ஆனால் இந்து சம யத்தின் நலனுக்காகவாகி லும், என்னுடைய அறிக்கை யைத் திரும்பிப் பெறவோ, மாற்றவோ முடியாது என் றார் காந்தியார். (நூல்: தமிழ்நாட்டில் காந்தி - காந்தி நூற்றாண்டு வெளியீடு - பக்கம் 586-587)

இது ஏதோ இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல - வெளிநாடுகளில் இருக்கும் இந்துக் கோயில்களின் யோக் கிதை இதைவிட ஆபாசம்!

9.3.2013 நாளிட்ட தின மலர் இணையதளத்தில் வெளி வந்த ஒரு செய்தி இதோ: ஜகார்த்தா : கோயில்களில், உடலுறவு கூடாது' என்ற எச்சரிக்கை பலகையை வைக்க, இந்தோனேசிய அரசு, முடிவு செய்துள்ளது. இந்தோனேசி யாவின் பாலி தீவில் உள்ள, சரசேடா கிராமத்தின், இந்து கோயிலில், பராமரிப்புப் பணி நடந்து வந்தது. அதைப் பார்வையிடச் சென்ற உள்ளூர் இளைஞர் குழு தலைவர், கோயிலுக்குள், எஸ்டோனியா நாட்டு காதல் ஜோடி ஒன்று, உடலுறவில் ஈடுபட்டதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார். அவர்களைப் பிடித்து விசாரித்த போது, "கோயிலுக்குள் உடலு றவு கொள்ளக் கூடாது என்பது, எங்களுக்கு தெரியாது' என, அவர்கள் கூறியுள்ளனர். "வெளி நாட்டினர் என்பதால், விஷ யத்தை பெரிதுபடுத்த வேண் டாம்' என, போலீசார் கேட்டுக் கொண்டனர். எனினும், கோயி லின் புனிதம் கெட்டு விட்டதால், அதை புனிதப்படுத்தும் சடங்கு செய்வது என, முடிவு செய்யப் பட்டது. இதற்காக, 1 லட்சம் ரூபாய் தர அந்த ஜோடி, ஒப்புக் கொண்டது. (அதிலும் சுரண்டல் தானோ!) இச்சம்பவத்தை தொடர்ந்து, புகைப்பிடிக்க கூடாது' என, எச்சரிக்கை பலகை வைப்பது போல், கோயில் களில், உடலுறவு கூடாது' என்ற அறிவிப்புப் பலகை வைக்க, இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
(தினமலர் 9.3.2013)

இதற்கு விளக்கமும் வேண் டுமோ? இந்துக் கோயில்களின் தேர்களில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள்தான் எவ்வளவு ஆபாசமானவை - கீழ்த்தரமான உறவுகள்!

சீற்றம் வேண்டாம் சிந்தியுங்கள்!

- மயிலாடன் 28-3-2013

தமிழ் ஓவியா said...


10-க்கு ஒன்பது


மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர் வட மாநிலத் தவர்கள்; மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டிலிருந்து ஒரு வரும் இலர் - இந்தத் தகவலை தருமபுரி மக்க ளவை உறுப்பினர் இரா. தாமரைச் செல்வன் மக்க ளவையில் ஆதாரப்பூர்வ மாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்தியாவில் முதல் நிலை அதிகாரம் படைத்த அய்.ஏ.எஸ். போன்ற பதவிகளுக்கான தேர்வாணையத்தில் பெரும் பாலும் இந்தி பேசும் மாநி லங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது நீதிக்கு விரோதமான தாகும்.

இந்தி பேசுவோர் ஆதிக் கத்தில் இந்த ஆணையம் இருப்பதால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண் டவர்களுக்குச் சாதகமான முறையில் தேர்வு முறைகள் சிந்திக்கப்பட்டு செயல் வடிவமும் அளிக்கப்படு கிறது. புதிய திட்டம் என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர் கள் தத்தம் தாய் மொழி களில் தேர்வு எழுத முடியாத ஒரு நிலை திணிக்கப்பட் டுள்ளது.

கடந்த பல ஆண்டு காலமாக தாய்மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எஃப். எஸ். போன்ற பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்களா?

இந்தியிலும், இங்கிலீ லும் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் திற மையின் கிரீடமாக ஜொலிக்கிறார்களா?

வட மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு டிஸ்டிரிக்ட் மேஜிஸ்ட்ரேட் என்று பெயர். இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் தான் இதற்குள் அடங்கிய சூழ்ச்சியின் கூர்முனை என்னவென்று விளங்கும்.

இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு அளிக்கப் பட்ட பொழுது, இந்தி பேசாத மாநிலங்களிலி ருந்தும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலைதான் பெரும்பாலும் இந்தி வாலாக்களாக இருக்கக் கூடிய தேர்வாணையத்தின் கண்களை கருவேல முள் ளாக உறுத்தியிருக்கிறது. அதன் தீய விளைவுதான் புதிய திட்டம். இது போன்ற பதவிகளில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
திராவிடர் கழகம் இதற் காக களத்தில் இறங்கிப் போராடியது. மக்களவையி லும் எதிர்ப்புப் புயல் வீசியது!
முக்கியமான பிரச் சினைமீது சிறப்பாகக் கருத்துக்களை எடுத்து வைத்த இரா. தாமரைச் செல்வன் எம்.பி. பாராட் டுதலுக்கு உரியவரே! - மயிலாடன் 29-3-2013

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு உதவும் இந்தியா


இலங்கையில் இருந்து வரியில் லாமல் இறக்குமதி செய்யும் ஆயத்த ஆடைகளின் அளவை இந்தியா அதிக ரித்துள்ளது. அண்மையில் இலங்கை சென்ற இந்திய தொழிற் துறை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம், வரிவிலக் குடன் ஏற்றுமதி செய்யப்படும் ஆடை களின் அளவை அதிகரிக்க அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனடிப்படையில், வரியில் லாமல் இறக்குமதி செய்யக்கூடிய பருத்தி ஆயத்த ஆடைகளின் அளவை 50 லட்சத்தில் இருந்து 80 லட்சமாக இந்தியா உயர்த்தியுள்ளது.
இதுதவிர, தெற்காசிய சுதந்திர வணிக உடன்படிக்கைப்படி, இலங் கையில் இருந்து இறக்குமதியாகும் ஆடை வகைகளுக்கு விதிக்கப்படும் வரியை 11 சதவீதத்தில் இருந்து 5 சதவீ தமாக இந்தியா குறைத்திருக்கிறது.

மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்தை 6 மாதங்களில் இருந்து ஓராண்டாக இந்தியா அதிகரித்துள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசும் அரசி யல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலை யில், இலங்கை அரசுக்கு புதிய சலுகை களை வழங்கியிருக்கிறது இந்தியா.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊடுருவும் சீனா...


யாழ்ப்பாணம், மார்ச். 29- இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத் துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதி களைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங் கையில் சீனாவின் ஆதிக் கம் கடந்த சில ஆண்டு களாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங் கையில் திறக்கப்பட்டுள் ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற் போது மன்னார் வளை குடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனா வுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 20 மில்லி யன் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை சீன அரசு அளித்துள்ளது. இந்த நிதியில் ஏசி, கணினி நகல், இயந்திரங்கள், உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டன. யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ் வரி பற்குணராசா தலை மையில் நடைபெற்ற விழாவில் அவரிடம் சீன அரசின் முதலாவது செய லாளர் கியூ, ஸ்கியூபிங் இந்த உதவிகளை வழங் கினார். சிங்களர்கள் வாழும் பகுதியில் மட் டுமே ஆதிக்கம் செலுத் திய சீனா, மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை தனது ஆதிக்கத் தினை வளர்த்துக் கொண் டுள்ளது. இந்த நாட் டைத் தான் இந்தியா வின் நண்பன் என்கிறது மத்திய அரசு.

தமிழ் ஓவியா said...


அன்று தமிழர் தலைவர் எழுதியது - இதற்கும் பொருந்தும்!


இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதருக்கு இந்தியாவுக்குள் தலையிடும் அளவுக்கும், பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசக் கூடிய துணிவு வந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் இந்தியாவின் பலகீனமே!

வேறு எந்த நாட்டிலாவது இந்த நிலை ஏற்பட்டு விட முடியுமா? அப்படி கருத்துச் சொல்லியிருந்தால் அந்தத் தூதர் அடுத்த கணமே விமானத்தில் ஏற்றப்பட்டு இருப்பாரே!

இலங்கையில் 75 சதவிகிதமாக உள்ள சிங்கள வர்களின் பூர்வீகம் என்பது இந்தியா என்பதால், அந்தச் சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப் பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும். டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத்கரிய வாஸம் கூறி இருக்கிறார். (இந்தியாவின் செயல் பாட்டைப் பார்க்கும் போது அந்த அடிப்படையில் தான் காரியங்கள் நடந்ததோ, நடக்கிறதோ என்ற அய்யமும் ஏற்படுகிறது)

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மூக்கோடு ஒப்பிட்டு ஆரிய இனவழி வந்தவர்கள் நாம் என்று ஒப்பிட்டுச் சொன்னவராயிற்றே ஜெயவர்த்தனே!

இலங்கைத் தூதரின் விஷமமான பிரச் சாரத்தைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டனக் கணைகள் வெடித்தும்கூட, இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை.

120 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை சுண்டைக்காய் தீவான இலங்கை இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் சிறுமைப்படுத்துமோ தெரியவில்லை.

இந்தியாவின் இந்த மவுனத்தால் நேற்று ஒருபடிமேலே சென்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேவலமான சொற்களில் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் (9.6.2011) ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையின்மீது பொரு ளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தரக் குறைவாக விமர்சனம் செய்த போது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டாரே! இது வெளிநாட்டவர் கூற்று என்பதால் இதற்காக உரிய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையது அல்லவா என்ற வினாவையும் அந்த அறிக்கையில் எழுப்பி இருந்தார். கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது - மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல் அமைச்சரிடம் மாறுபடுபவர்கள்தான் நாம் பல்வேறு பிரச்சினைகளில், அவரது அணுகுமுறைகளில் என்றாலும் அது வேறு - இது வேறு.

இப்படி இங்குள்ள எவராவது பேசினால் அது சட்டமன்ற உரிமைப் பிரச்சினையாகி, அத்தகை யவர்களை சட்டமன்றத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுத்திருக்க முடியும்!

இது வெளிநாட்டவர் கூற்று என்பதால், இதற்காக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையதல்லவா? மத்திய அரசு இதில் மவுன குருவாக இருக்கலாமா? கூடாது! கூடவே கூடாது!! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார்களே! (விடுதலை 12.8.2011)
கோத்தபய ராஜபக்சேகூட ஓர் அரசியல்வாதி - இந்தியாவில் உள்ள இலங்கைக்கான தூதர் அரசியல்வாதியா? ஓர் அதிகாரியல்லவா? அதிகாரி களுக்கென்று ஒரு வரம்பு உண்டே! எல்லா வற்றையும் தூக்கி எறிந்து தெருச் சண்டை போடும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் இதைவிட கேவலம் இந்தியாவுக்கு உண்டா?
இது 120 கோடி மக்களையும் துச்சமாக மதிக்கும் போக்கிரித்தனமாகும்.
இந்தியா செயல்படும் அரசாக இருக்க வேண் டும் - இதற்குமேல் என்னதான் சொல்ல முடியும்? 29-3-2013

தமிழ் ஓவியா said...


முதல்வர் குற்றச்சாற்று: டி.ஆர்.பாலு பதிலடி

சென்னை, மார்ச் 29- டி.ஆர்.பாலு ரயில்வே போர்டு தலைவராக இருப்பது குறித்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாற்றுக்கு டி.ஆர்.பாலு எம்.பி., அளித்த பதில் வருமாறு:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா (27.03.2013) தமிழக சட்டமன்றத்தில் பேசிய போது இலங்கைப் பிரச்சினைக் காக ரயில்வே நிலைக்குழுவில் இருந்து டி.ஆர்.பாலு ராஜினாமா செய்யவில்லையே ஏன்? என்று பேசியுள் ளார். தமிழக முதல்வர் அவர்கள் ஒரு முறை பாராளு மன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். இப்போது மூன்றாம் முறை தமிழக முதல்வராக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சட்ட மன்ற நடவடிக்கைகளும் எப்படி நடைபெறுகின்றன என் பதையும் அவற்றின் நெறி முறைகளையும் அவர் அறிந்திருப்பார் என்று கருதுகிறேன். அதிமுக உறுப்பினர்கள் இடம்பெறவில்லையா?

பாராளுமன்ற உறுப்பினராக இருக் கும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட ஒவ் வொருவருக் கும் ஏதாவது ஒரு துறைக் கான நிலைக்குழுவிலும் மற்றொரு துறைக் கான கலந்தாய்வுக் குழுவிலும் இருப்பதற்கு அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து அந்த மரபுப்படி பாராளு மன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவிலும் நிதித் துறையிலும் மற்றும் சில குழுக்களிலும் நான் பணியாற்றி வருகிறேன். பாராளு மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் ரயில்வே நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்ற அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து இருக் கிறார்.

பொதுவாக நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் அவையில் படித்த பிறகு சம்மந்த பட்ட துறைக்கான மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் அவைத் தலை வரால் நியமிக்கப்படும் இரு சபைகளின் உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு ஆய்வு செய்து நாடாளுமன்றத் திற்கு அறிக்கை அனுப்பிவைக்கும். இந்த நடை முறையின் அடிப்படையில்தான் என்னை போன்ற பலர் நிலைக்குழு உறுப்பினர்களாகவும் குழுக்களின் தலைவர்களாகவும் பணியாற்றி வருகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து அறிக்கைகளைத் தயாரித்து நாடாளு மன்றத்தின் ஒப்புதலுக்கு வழங்கும் ஒரு ஏற்பாடாகத்தான் நிலைக் குழு செயல்படுகிறது. இதில் அமைச்சர்களின் குறுக்கீடும் கிடையாது அரசியல் தலையீடுகளும் இருக்க முடியாது என்பது குறைந்தபட்ச அரசியல் அறிந்தவர் களுக்குக்கூட தெரியும். நான் அங்கம் வகிக்கும் ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் நியமனத் திற்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமைச்சர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நிலைக்குழு மற்றும் இலாக்காக்கள் சம்மந்தப்பட்ட ஆலோசனைக் குழுக்களை நாடாளு மன்றத்தின் சபைத் தலைவர்கள் நியமிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தம்பிதுரை உள்ளார்.

அ.தி.மு.க. குழுவின் தலைவர் தம்பிதுரை கூட பாராளுமன்றத்தின் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரத்தில் அவை நடவடிக்கைகளை நடத்தும் மாற்று தலைவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். பல நேரங்களில் அவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை நடத்துகிறார். இதைப் போலவே நாடாளுமன்ற மேலவை யில் எங்கள் இயக்க உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்ற மேலவையின் நட வடிக்கைகளை நடத்தும் பொறுப்பு வகிக்கிறார்.

சபாநாயகரின் வரம்புக்கு உட்பட்டவை

அரசியல் கூட்டணி அமைப்புகள் - அமைச்சர் பொறுப்புக்கள் என்பவை பிரதமரின் அதிகார வரம்பு களுக்கு உட்பட்டவை. நாடாளுமன்ற நடவடிக்கைகள் - அதன் குழுக்களின் நடவடிக்கைகள் என்பவை சபாநாயகர் அவர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.

ரயில்வே நிலைக்குழு வில் இருந்து டி.ஆர்.பாலு விலக வேண்டும் என்று ஜெயலலிதா சாடி இருக்கி றார். இது நாடாளுமன்ற அவைத் தலைவரின் அதிகாரத் திற்கு சவால் விடுவது மட்டுமல்ல; எனது நாடாளுமன்ற உரிமைப் பிரச்சினையில் தலையிடுவதும் ஆகும் என்பதை ஜெயலலிதா அவர்களுக்கு முதலும் முடிவுமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மத்திய அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கழகம் முடிவு செய்து, தலைவர் கலைஞர் அவர் கள் ஆணையிட்ட போது, பன்னிரண்டு மணி நேரத்திற்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து அமைச்சர் பதவியை துறந்தவன் நான்.

இழப்புக்கு ஆளானவர்கள் தி.மு.க.வினர்

ஈழத் தமிழர் பிரச்சினையில், பல்வேறு கட்டங்களில் இழப்புக்கு ஆளானவர் கள்தான் தி.மு. கழகத்தினர் என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!

திருவாரூரில் ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது உருத்ர கோட்டீசுவரர் ஆலயம்.

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன. பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் - வாடையும் சகிக்க முடியாததாக இருக்கிறது என்றும் - குடியிருப்புகள் பெருகி விட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப் புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் - நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இப்பகுதியில் உள்ள உருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம்.

எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா? உயிரில்லாக் கற்சிலைக்கும் - உதவாத அய்தீகத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்றுதான் திருந்துவார்களோ?

- சி.நா. திருமலைசாமி, சின்னநெகமம்
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 1983.

தமிழ் ஓவியா said...


இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!


இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை? தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகிலே கோடியக்கரை என்ற ஒரு ஊர் இருக்கிறது. ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதங்கள் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையை பார்த்தார் என்று சொல் கிறார்கள்.

திரவுபதை மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்ல புரம்; மகாபலிபுரம் என்றுதான் சொல் வழக்கு. ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்ட நகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளை பார்த்தால் ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும். அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டு பார்த்து பாறை யையும் தொட்டுப்பார்த்து அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்கமுடியுமா? என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? என்று கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம் - ஒரு விளக்கம். இவை அத்த னையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக் கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.1983 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


அறிவுப்பூர்வ ஆதாரம்!


பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விடும் என்று கருதும் பழக்கம் படித்தவர், படியாதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள்

சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியை தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், விக்டோரியா - நீண்டகாலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத், காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல் மார்க்ஸ் - புதியசமதர்ம சமுதாயக் கருத்தை தந்த கம்யூனிசத் தந்தை, டார்வின் - பரிணாம வாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோ தத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக் - பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி. - குமுதம், தகவல்: சம்பத்ராஜ், பேட்டவாய்த்தலை

தமிழ் ஓவியா said...


உண்மை

உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய்.

உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, ரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...


செய்தியும்-சிந்தனையும்


ஜாக்கிரதை!

செய்தி: குஜராத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டால் திருமணங்கள் ரத்து ஆகின்றன.

சிந்தனை: ஹி... ஹி.... இந்த மோடிதான் பிரதமராகப் போகிறாராம். குடிக்கத் தண்ணீர் கிடைக்காது - ஜாக்கிரதை!

தமிழ் ஓவியா said...


டாக்டர் கைது - கலைஞர் கண்டனம்!
சென்னை, மார்ச் 30- தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டரை கைது செய்ததற்காக முதல் அமைச்சரைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டாக்டர் கருணாநிதி! அவருடைய வயது 70! அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்! மருத்துவத் துறை பேராசிரியராக அரசுப் பணியிலே நீண்ட காலம் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர்! தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளரான திரு. சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவ ராகப் பணியாற்றி வருகிறார். பாவம்! என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ; 27-3-2013 அன்று அ.தி.மு.க. அரசின் காவல் துறையினரால் அவர் கைது செய்யப் பட்டு, அன்று இரவு முழுவதும் காவல் துறையினரின் கண்காணிப் பில் லாக்கப்பில் கழித்திருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன?

டாக்டர் கருணாநிதி மீது சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்ப வர் புகார் கொடுத்துள்ளார். முதல மைச்சர் ஜெயலலிதா அந்த மருத்துவ மனைக்கு வருவது பற்றிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற போது, டாக்டர் அவரைத் திட்டிய தாகவும், தள்ளியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக அதிமுக அரசின் காவல் துறை டாக்டர் கருணாநிதி மீது; அரசுப் பணியில் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அதிகாரியை அடித்துக் காயப்படுத்துதல்; அரசு அதிகாரி மீது பலமாகத் தாக்குதல்; தடுத்து நிறுத்துதல்; பணியாற்ற விடாமல் குறுக்கீடு செய்தல் போன்ற கடுமை யான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தோடு, அந்த மருத்துவர் கருணா நிதியை 18வது மெட்ரோபலிடன் நீதிபதி திரு. ஆனந்தவேலு அவர்கள் முன்னால் ஆஜர் செய்து, புழல் சிறைச்சாலையிலே கொண்டு போய் அடைத்திருக்கிறார்கள்.

70 வயதான ஒரு மூத்த மருத்து வருக்கு அ.தி.மு.க. ஆட்சியில் என்ன கதி தெரிகிறதா? அதுவும் ஜெய லலிதா, மருத்துவ மனைக்குச் சென்று சிவந்தி ஆதித்தன் உடல்நிலையைப் பார்த்து விட்டு வந்த அன்றிரவே இவ்வளவும் நடைபெற்றிருக்கின்றது.

திருச்சியில் ராமஜெயமும், மது ரையில் பொட்டு சுரேஷும் படு கொலை செய்யப்பட்டு மாதங்கள் எத்தனை ஆகிறது? அவர்களைக் கொன்ற குற்றவாளி களைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. அரசின் காவல் துறைக்கு இயலவில்லை. ஆனால் வயதான ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? யாரையாவது கொலை செய்து விட்டாரா? கொள்ளை அடித்து விட்டாரா? அல்லது யாரையாவது கடத்தித் தான் சென்றுவிட்டாரா?

அவர் செய்த குற்றம் எல்லாம், முதலமைச்சர் அந்த மருத்துவ மனைக்கு வருவதற்கு முன்பு, அந்தக் குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர், மருத்துவ மனைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வந்த போது, டாக்டர் கருணாநிதி, தீவிர சிகிச்சைப் பிரிவிலே (அய்.சி.யு.) உள்ள சிவந்தி ஆதித்தன் அறைக்குள் பூட்ஸ் அணிந்த கால்களுடன் உள்ளே செல்ல வேண்டாம் என்று அந்தக் காவல் துறை அதிகாரியிடம் கூறியது தான் குற்றமாம்! அதற்காகத்தான் இரவோடு இரவாக அந்த வயதான மருத்துவர் கைது செய்யப்பட்டு, நீதிபதியின் முன்னால் உடனடியாகக் கொண்டு போய் ரிமாண்ட் செய்து, அன்றிரவே அவசர அவசரமாக புழல் சிறையிலே அடைத்திருக்கிறார் களாம். என்ன கொடுமை இது? தமிழ் நாட்டிலே என்ன நடக்கிறது? இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசமா? இது தான் அ.தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கைப் பாது காக்கும் இலட்சணமா? ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குக் கடுமையாக காவல் துறை எடுத் துள்ள நடவடிக்கையை வன்மை யாகக் கண்டிக்கின்றேன். இதுவே கழக ஆட்சியிலே நடைபெற்றிருக்கு மானால், காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பார்! ஆனால் நான் அப்படியெல்லாம் கூற விரும்ப வில்லை. தவறுக்குக் காரணமானவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தோடு, அந்த மருத்துவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் மீது தொடுக் கப்பட்டுள்ள வழக்கினை உடனடி யாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டுமென்றும் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டுச் சர்ச்சை


2013 நவம்பரில் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து உரத்த முறையில் எழுந்துள்ளது.

இனப் படுகொலையைச் செய்த நாடு இலங்கை என்ற கருத்து உலகளவில் வலிமை பெற்றுள்ள நிலையில், எந்த நிலையிலும் இலங்கை அரசுக்கு மதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்குத் துணை போகக் கூடாது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகள் 54 காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கின்றன.

வர்த்தகத் தொடர்புகள் இந்த நாட்டுக்குள் அமைத்துக் கொள்வது போன்ற ஒப்பந்தங்கள் இருந்தாலும் 1997ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கென்று சில குறிக்கோள்கள், கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன.

சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயக உரிமைகள், ஊழலற்ற நிலை, இவற்றுடன் இனம், நிறம் பாராட்டாது அனை வருக்கும் சம உரிமை என்னும் கோட்பாடுகள் காமன்வெல்த் அமைப்புக்கென்று உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில், இனப்படுகொலை செய்த, பேரினவாத அரசு நடக்கும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனை முதன்மைப் படுத்தி இயங்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரிட்டன், கனடா போன்ற நாடுகளே கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல் உண்டு. எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுகிறதோ, அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தான் அடுத்த ஈராண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக இருப்பார் என்பது விதிமுறை. அதன்படி இனப்படுகொலையாளன், இட்லரின் மறுபதிப்பான ராஜபக்சே காமன் வெல்த்துக்குத் தலைமை தாங்குவதைவிட தலைக் குனிவு வேறு ஒன்று இருக்க முடியுமா? காமன்வெல்த்தில் அங்கம் பெறாத நாடுகள் கேலி செய்யாதா?

நிறவெறி ஆட்சி நடத்திய தெ. ஆப்பிரிக் காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலக்கி வைத்த நிலைப்பாடெல்லாம் உண்டே!

இலங்கைப் பிரச்சினையில் மேலும் மேலும் இந்தியா தவறு செய்து கொண்டே போகும் நிலையில், அவற்றிற்குக் கழுவாய் தேடும் வகையில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இந்த மனிதநேய மனித உரிமைக் கருத் தையும் இந்தியா புறக்கணிக்குமேயானால், இதற்குமேலும் இந்தியாவைக் காப்பாற்ற எந்த சக்தியாலும் முடியவே முடியாது.

போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற, மனித உரிமைக் குரல் உலகளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில், காமன்வெல்த் அமைப்புக்கு இனப்படுகொலையாளன் - சிங்களவெறியன் காமன்வெல்த் அமைப்பின் கோட்பாடுகளுக்கு விரோதமான நோக்கும் போக்கும் கொண்ட போர்க் குற்றவாளி எப்படி காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை தாங்க முடியும்? அது தடுக்கப்பட வேண்டுமானால் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் கருத்தூன்றிச் செயல்பட்டாக வேண்டும்.

இந்தியா இதற்காகக் குரல் கொடுக்குமா? குறைந்தபட்சம் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமா? எங்கே பார்ப்போம்!30-3-2013

தமிழ் ஓவியா said...


அரசு கவனத்தில் கொள்ளுமா?

இப்படி ஒரு கார்ட்டூனைப் போட்டுள்ளது கருமாதி ஏடு.

யார் நல்லது செய்தாலும் தம் கொள்கைக்கு உடன்பாடு என்றால் அதனை முன்வந்து ஆதரிப்பதும் கொள்கைக்குக் குந்தகம் என்றால் அதனை எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் கொள்கை வழிப்பட்ட அணுகு முறையாகும்.

தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இனமலருக்கு முக்கால் நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் ஓர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த பொது அறிவுகூட இல்லாமல் அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஒன்று சொன்னால் அதனைக் கொச்சைப்படுத்தியே தீர வேண்டும் என்ற பார்ப்பனர் கொழுப்பெடுத்துக் கிறுக்குவதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? கண்மூடித்தனமான எதிர்ப்பு கண்மூடித்தனமான ஆதரவு தான் சரி என்பது இனமலர்களின் புத்தியா?

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கும் ஜகத் குருக்களைப் பற்றி இந்த இனமலர் ஏடுகளின் கண்ணோட்டம் என்ன?

பக்கம் பக்கமாக இந்த ஏடுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசு - ஆட்சி செய்யும் நல்லதுகளை பாராட்டி சொல்லுவதைக்கூட கொச்சைப்படுத்தி எழுது கிறதே - இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 30-3-2013

தமிழ் ஓவியா said...

அவதாரங்கள் அவ்வளவுதானா? - சிவகாசி மணியம்

திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய புளுகு மூட்டைகள் நமக்குத் தெரியும். அந்தப் பத்தில் சிறந்தது எது என்று ஒரு பக்தனிடம் கேட்டால் என்ன சொல்வான்? இராமாவதாரம் என்பான். அல்லது கிருஷ்ணாவதாரம் என்பான். அதெல்லாம் இல்லை பன்றி அவதாரம் தான் சிறந்தது என்று நாம் சொன்னால் நிச்சயம் நம் மீது பாயத்தான் செய்வான். வம்புவந்து சேரும். ஆனால் இதையே பக்திப் போர்வையில் பாகவதம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதும் வேளுக்குடி சொன்னால் அது சரியாக இருக்கும். பன்றி அவதாரம் தான் பெருமை வாய்ந்தது என்று அடித்துச் சொல்கிறார் அவர். அதைச் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

மற்ற அவதாரங்களைக் குறைத்துக் கூறுவதற்காக சொல்லப்படவில்லை. பன்றி அவதாரத்தின் பெருமையை நிலை நாட்டவே கூறப்படுகிறது. இதனை இலக்கியக் கண்கொண்டு மட்டும் ரசித்திட வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறார். (இலக்கியக் கண் இதற்கு மட்டும் தான். மற்ற அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுக்களுகெல்லாம் குருட்டு நம்பிக்கை ஒன்றே போதும் என்கிறார் போலும்),
சிறப்பைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பன்றியின் பிறப்பு பற்றித் தெரிந்து வைப்போம். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மாவின் நான்கு பிள்ளைகளும் அத்தொழிலில் உதவிக்கு வர மறுத் தார்களாம். உடனே சுவாயம்புவ மனு என்ற இன்னொரு மகனை நான்முகன் உருவாக்கினான். உலகைப் படைக்கத் தொடங்கிய இந்த மகனும் அதைத்தொடர முடியாமல் நிறுத் தினான். ஏனென்றால் இரண்யாட் சன் என்ற அசுரன் பூமாதேவியை எடுத்து பிரளய ஜலத்துக்குள்ளே (கடல்) ஒளித்து வைத்துவிட்டான். மக்களைப் படைத்தால் அவர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது என்ப தால் சுவாயம்புவ மனு தன் தந்தை யான பிரம்மாவிடம் வந்து பூமியை விடுதலை செய்யுங்கள். அதன் பின்னர்தான் படைப்புத் தொழிலைச் செய்ய முடியும் என்றான்.

தமிழ் ஓவியா said...

இதை எப்படிச் செய்யலாம் என்று பிரம்மன் யோசித்துக் கொண்டி ருக்கும் போதே அவருடைய ஒரு மூக்கிலிருந்து பன்றி ரூபம் ஒன்று தோன்றியது. (மூக்கிலிருந்து சளி தானே வரும், பன்றி எப்படி வரும்? பிரம்மாவோ நான்கு தலை கொண்ட நான்முகன். நான்கு மூக்கில் எந்த மூக்கிலிருந்து பன்றி வந்தது? என் றெல்லாம் ஏடா கூடமாகக் கேட்கக் கூடாது. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் என்பதை மறந்து விடக்.கூடாது)

மூக்கின் வழியே வந்த பன்றி ஆயிரக்கணக்கான யானைகள் அளவுக்கு உயர்ந்து பருத்தது. அவரே வராகப் பெருமாள்! திருமாலின் முக்கியமான அவதாரம்! பன்றியின் தனிச்சிறப்பு; அதனால் நிலத்தில் நடக்க முடியும். நீரில் நீந்தவும் முடியும்! சகதியிலும் சுலபமாக நடக்க முடியும். பூமாதேவி கடலுக்குள் இருந்தபடியால் இந்தத் திறமைகள் எல்லாம் இருந்தால் தான் அவளைக் காக்க முடியும். அதனால் தான் பன்றி அவதாரம்!

முதல் அவதாரமான மச்ச அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக் கரை ஏற முடியாது. மீனாக இருக் கும்போது சம்சாரக் கடலிலிருந்து நம்மை அது கரை ஏற்ற முடியுமா? இயலாது.

அடுத்து கூர்மம். ஆமை அவ தாரம்! அதன முதுகையே மந்தர மலை அழுத்துகிறவோது சம்சார பாரத்தை சுமந்து அதனால் அழுத்தப்படும் நம்மை அது மீட்க முடியுமா? இயலாது.

கழுத்துக்கு மேலே சிங்க உருவ மும், கழுத்துக்கு கீழே மனித உருவ மும் கொண்ட உருவம்தான் நரசிம்ம அவதாரம். இரண்டு உருவங்கள் கொண்டவனை நம்பமுடியுமா? விட்டு விடுவோம்!

அடுத்து உலகத்தையே தாவி அளந்த வாமன அவதாரம், ஆனால் சிறிய காலைக் காட்டி மூன்றடி மண் வேண்டி, பின்னால் பெரிதாக வளர்ந்து அளந்து கொண்டவன். அதனால் அவனிடத்தில் யாருக்கும் நம்பிக்கை பிறக்காது.

அடுத்து ஆவேச அவதாரமான பரசுராமனைப் பற்றலாம் என்றால் அவரே பெரும் கோபக்காரர். நாமோ கோபத்திலிருந்து விடுதலை அடையத் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவரை எப்படி பற்ற முடியும்? இயலாது.

அடுத்து இராமனைப் பற்றலாம் என்றால் அவனே சக்கரவர்த்தி திருமகன் மிக உயர்ந்தவன். எளிதில் நாம் அவரை அண்டிவிட முடியாது.

கண்ணன் எளியவன் ஆயிற்றே! அவனைப் பற்றலாமா? ஏலாப் பொய்களை உரைப்பான். சொல் லொன்று செயலொன்றாக இருப் பான். அவனை நம்ப முடியாது.

அவன் அண்ணன் பலராமனோ எப்போதும் சண்டைக்காரன். பாரதப்போரின் போது தம்பியையே கைவிட்டு விட்டு தீர்த்த யாத்திரை சென்று விட்டவர். நம்மையும் கைவிட்டு விடுவாரோ என்னவோ!

கடைசியான கல்கி அவதாரமோ இன்னும் ஏற்படவே இல்லை. எங்கே பற்ற? ஆகவே இவை அனைத்தையும் விடுத்து கடலில் மூழ்கிக் கிடந்த பூமாதேவியைக் கிளர்ந்து எடுத்த பன்றியையே நாம் பற்றவேண்டும் என்று சமாளிக்கிறார் கட்டுரை ளாளர் (துக்ளத் 20.3.2013) இன்னும் இந்நாள் வரை ஏற்படாத கல்கி அவதாரம் தாசாவதாரப் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட மர்மம் யாருக்கும் தெரியாது.

ஒரு மனிதனுள் இருப்பது நவதுவாரங்கள். அதாவது ஒன்பது ஓட்டைகள், மூக்கின் வழியே பன்றி வந்தாயிற்று! மிச்சமிருக்கும் எட்டு ஓட்டைகளை கழுதை, கரடி, காண்டா மிருகம், கரப்பான் பூச்சி என்று அவதாரங்கள் பல சேர்த்து சதாவதாரம் என்ற பெயரிட்டு மனிதர்களை மத போதையில், மடமையில் மூழ்கடித்து இன்னும் நிறைய காசு பண்ணலாமே. கயிறு திரிக்க பூணூல்களுக்கா பஞ்சம்?

வெறுமனே விட்டு வைக்கலாமா? அவதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாமே

தமிழ் ஓவியா said...


சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?

சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.

சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன் சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.

மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.

மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.

தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.

பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?

சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?

ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப் பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.

நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.

- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013

தமிழ் ஓவியா said...


பெரியார் பெருந்தொண்டர்கள் பாரீர்!


திராவிடர் கழகத்தில் இருக்கக் கூடிய பெரியார் பெருந்தொண்டர்களின் பெருமையை, கொள்கை உறுதி பேணும் பண்பாட்டை என்னவென்று சொல்ல.

எடமேலையூர் ஆர். சண்முகம் எண்பது வயது கடந்த இவர் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளராக இருந்தார். சிறு நீரகப் பாதிப்பின் காரணமாக வெளியில் வர முடியவில்லை என்றாலும், அந்த சுயமரியாதை உணர்வு கொஞ்சமும் குறையவில்லை ஒரு குறைபாடே தவிர மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். 60 ஆண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக்காரன் அந்த ஊட்டம் என்னை விட்டு அகலாது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அவரின் இளைய மகள் விடுதலைக்கு ஓர் ஆண்டு சந்தா தொகையும் அளித்தார். அவரின் இணையரும் அன்புடன் வரவேற்றார்.

எடமேலையூர் காசிநாதன் 82 வயதைக் கடந்த இளைஞர் இவர். அன்றாடம் விடுதலையை படிக்கத் தவறுவது கிடை யாது. அவரது தம்பி மேக நாதன் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் இப் பொழுது ஆற்றும் பணி போதாது இன்னும் தீவிரமாக ஆற்ற வேண்டும் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆரோக்கியமாக இருக்கிறார். இணையர் அவர் களும் அன்புடன் வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் நிகழ்ச்சிகளுக்காக சென்ற போது இந்தப் பெரியார் பெருந் தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக் குமார் ஒன்றிய தலைவர் கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

திண்டிவனம் அருகே தழுதாளி ஊர். 85 வயது. தழு தாளி சண்முகம் எப்பொழுதும் கருப்புச்சட்டைதான். வீட்டு வாசலில் ஒரு பெட்டி இருக்கும். அதில் விடுதலை இருக்கும். யாரும் வந்து படித்துப் போகலாம். கருப்புச்சட்டை அணிவதே ஒரு பிரச்சாரம் தான் என்று தந்தை பெரியார் சொன்னது முதல் எப்பொழுதும் அந்த உடையுடன்தான் காணப்படுவார். மகன் அன்புச்செல்வன் கழகப் பொறுப்பாளர் ஆக உள்ளார். இணையர் நலமுடன் உள்ளார்.

தமிழ் ஓவியா said...


தினமலர் விமர்சனம்


பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை!

ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது. பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும் என்ற நூல், அதிலிருந்து சில பகுதிகள்:

இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட் டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண் மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர்.

ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.

இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப் பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது.

கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.

அதிக பெண்களைப் பெற்ற தந் தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது.

ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.

- இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

(தினமலர்கள் வாரமலர் 17.9.2013)

தமிழ் ஓவியா said...


இவர்தான் பூரி சங்கராச்சாரி!

கேரளத்தில் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று காலடி என்ற ஊரில் நடைபெற்ற அகில இந்திய பிரா மணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூரி சங்கராச்சாரி குறிப்பிட்டதாவது:

ஆண்டவன் ஒரு மனிதனுக்குச் செய்யும் உயர்ந்த சிறப்பு அவனைப் பிராமணனாகப் பிறக்க வைப்பது; அப்பெருமைக்குத் தகுந்த வகையில் நடந்து கொள்வது பிராமணர்களது கடமையாகும்.
(ஆதாரம்: இந்து 8.12.1965 பக்கம் -12)

அது மட்டுமா? பச்சையான ஒரு வர்ணாசிரமவாதி என்று பகிரங்கமாக முழங்கியதும் இதே பூரிதான்.

எப்போது வர்ணாசிரமம் தழைக் கிறதோ அப்போதுதான் பாரதம் க்ஷேமம் அடைய முடியும். உலகமும் க்ஷேமம் அடையும்.

எல்லோரும் சமம் என்று வாழும் பிரச்சாரம் இக்காலத்தில் பரவிக் கிடக் கிறது. ஜாதி வகுப்புக்களற்ற சமுதாயம் என்றெல்லாம் சிருஷ்டியில் சமம் என்று வாதிப்பது சரியானதா? பிறக்கும்போதே ஆண் பெண் என்ற வித்தியாசத்துடன் தானே பிறக்கின்றோம்? ஒரே சமயத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளேயே தோற்றம் குணம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே. பஞ்சேந்திரியங்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனமாகப் பார்த்தால் எத்தனையோ பேதங்கள் இருப்பது புலப்படும். இரட்டைக் குழந்தைகள் இடையேகூட பல பேதங்கள் இருக்கின்றன.

நமது தேகத்தில் ஓடும் இரத்தத்தில் கூட அல்லவா வேறுபாடுகள் காணப்படு கிறது. மேனாட்டு ரத்தப் பரிசோதனை நிபுணர்கள் மனுஷ்ய சரீரங்களில் ஓடும் ரத்தத்தை நான்கு வகையாகப் பிரித் திருக்கிறார்கள்.

ஓ, ஓஏ, ஏபி, பி என்பவையே அவை

இவற்றில் ஓ என்பது உயர்ந்த வகையான ரத்தம். இன்று ரத்த ஓட்டத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்பத்தான் நமது முன்னோர்கள் மனித சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்திருக்கின்றனர் இதை ஆதார மாகக் கொண்ட வர்ணாசிரமம் தழைக் குமானால் பாரதம் க்ஷேமம் அடையும்; உலகமும் க்ஷேமமுறும்.

பூரி சங்கராச்சாரியார் (கோவர்த்தன பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியாள் நிரஞ்சனா என்ற தீர்த்த சுவாமிகள்).

18.3.1965 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சிருங்கேரி சங்கரர் மடத்தில் பேசினார்.
(ஆதாரம்: சுதேசமித்திரன் பக்கம் 2 22.3.1965)

தமிழ் ஓவியா said...


எண்ணத்தில் எதை வைப்பது!

ஆத்திகன்: எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்.

நாத்திகன்: எண்ணத்தில் எண்ணிய செயலை வைத்தால் எடுத்த (எண்ணிய) காரியம் (செயல்) வெற்றியாகும்.

- சு. ஆறுமுகம், நன்னிலம்