Search This Blog

24.3.13

ஈழத் தமிழர் பிரச்சினயில் காங்கிரஸ் மட்டும்தான் துரோகம் செய்கிறதா?

அன்று இந்திரா என்ன சொன்னார்?

நினைவிருக்கிறதா? அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய திருமதி சோனியா காந்தி அவர்கள் வங்க தேசத்தின் தலைநகரமான டாக்காவுக்குக் கம்பீரமாகச் சென்றாரே - நினைவிருக்கிறதா?

அந்த நாள் 2011 ஜூலை 25; எதற்காகச் சென்றார்? வங்கதேசத்தின் ஸ்வதீனாடா சம்மனோனா? (Swadhinata Sommanona) என்ற அந்நாட்டின் மிகப் பெரிய விருதினைப் பெற்றுத் கொள்ளத்தான் சென்றார்.


எதற்காக? வங்கதேசத்தைப் பெறுவதற்கு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பேருதவி புரிந்ததற்காக?


இந்திய நாடாளுமன்றத்திலேயே பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் இன்னொரு நாட்டுப் பிரச்சினையாயிற்றே என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்நாட்டில் இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) நடக்கிறது என்று கூறினாரே. அந்தப் பெண்மணிக்கான விருதினைப் -  பெறுவதற்காகத்தான் அவரின் மருமகளும் இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவருமான சோனியாகாந்தி சென்றார்.


மறுபடியும் நினைவூட்டுகிறோம் இன்னொரு நாட்டில் இனப்படுகொலை நடப்பதை கொஞ்சம்கூடப் பொறுத்துக் கொள்ளாமல் பூகம்பமாய், புயலாய் புறப்பட்டு பொங்கி எழுந்து ஒரு நாட்டையே பெற்றுக் கொடுத்தார்.

ஏன் சுற்றி வளைப்பானேன்? இதே இலங்கையின்மீது பகிரங்கமான குற்றச் சாற்றை வைக்கவும் தயங்கவில்லையே!


அது 1983 ஆகஸ்டு 16 அந்நாள் மிக முக்கியமான நாள்! இலங்கையிலே நடப்பது இனப்படுகொலையே என்று அதே இந்திராகாந்தி தான் பிரதமர்தான் நாடாளுமன்றத்திலே நறுக்கென்று குட்டு வைத்ததுபோலவே சொன்னாரே!

இதற்குமேல் என்ன வேண்டும் இந்திய தேசிய காங்கிரஸ்காரர்களுக்கும் அதன் தலைவருக்கும்?


இரும்புப் பெண்மணி என்று இந்திரா காந்தியை தங்கத் தட்டில் வைத்து தாலாட்டினால் போதுமா?


அந்த அம்மையாரின் துணிவையும் சிந்தனை நோக்கையும் சிக்கெனப் பிடித்துக் கொள்ளத் தவறியது ஏன்?


மிகப் பெரியதோர் பிரச்சினையை அணுகியபோது சொந்த பந்தம் பிரச்சினைகளை முன்னெடுத்துத் தம் கண்களை இருட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்பது பொது வாழ்வில் பால பாடம் ஆயிற்றே!


ஏற்கெனவே பலகீனப்பட்டு தள்ளு வண்டியைத் தேட வேண்டிய நெருக் கடிக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் ஒரு மனிதநேயப் பிரச்சினைச் சுடரைக் கையில்  எடுத்துக் கொண்டு புறப்பட்டு, உலக நாடுகள் மத்தியில் கம்பீரமாக வலம் வரக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டதே!


சுடரைக் கையில் ஏந்துவதற்குப் பதிலாக அதனைத் தனக்குத்தானே வைத்துக் கொண்டு கருகிப் போய் விட்டார்களே!

இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டது என்ற உண்மை உலகெலாம் தெரிந்து விட்டது; போதும் போதாதற்கு பிரிட் டனின் சேனல் 4 ஈழத்திலே தமிழர்களைக் கொன்று குவித்துக் குப்பை மேடாக மனித உடல்கள் குவிக்கப்பட்டதை படம் எடுத்துக் காட்டி விட்டதே! 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பினிலே அய்ந்து குண்டுகளை வீசி பதறப் பதற உயிரைக் குடித்தனரே!


உலகில் உள்ள மனிதர்களின் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கி விட்டது. உடல் அணுக்கள் எல்லாம் குத்திட்டு நின்றன. கண்கள் குளமாகின.


ஆனால் இந்தியாவை ஆளும் அதிகார வர்க்கத்துக்கோ தேசிய காங்கிரசின் தலைமைப் பீடத்துக்கோ.. அந்த நேயம் மருந்துக்கும் இல்லாமற் போனது ஏன்?


உலக நாடுகள் முன்பும் தலைக் குனிவு உள் நாட்டிலும் தலைக் குனிவா?
இது தேவைதானா? ஒன்பதாண்டுகள் மத்திய கூட்டணி ஆட்சியிலே அறிவு நாணயத்தோடு நடந்து கொண்ட திமுகவை இழந்து விட்டார்களே..


இரண்டு முறை மத்தியில் ஆட்சிப் பீடம் ஏறியதற்குக் காரணமாக இருந்தது தமிழ்நாடு அல்லவா - திமுக அல்லவா!


கைப் பொருளை இழந்து விட்டனர்! விதை நெல்லை இழந்து விட்டனரே!

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பறி கொடுத்த காங்கிரஸ் தோல்விக்குப் பொன் விழா கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே!


காங்கிரசை கிட்டே சேர்க்க இங்கு யார் இருக்கிறார்கள்?


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வது என்பதை ஒரு முடிவாக எடுத்துக் கொண்டு விட்டனர் என்பதுதான் உண்மை.


அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர் மீது  விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு - வாழ்வுரிமைக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் (26.5.2009).


அந்த மனித நேய தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்த மகத்தான இழிநிலை மகுடத்தைச் சூட்டிக் கொண்டதும் இதே இந்தியாதான்; இந்தியாவின் பிரதிநிதியான கோபிநாத் அச்சங்குளங்கரே  பவள வாய் திறந்து பகன்றது என்ன தெரியுமா?


இந்தக் கூட்டமே அவசியமற்றது -_ உலகில் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்த தற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, தண்டிக்க, - கண்டிக்க முயற்சி எடுக்கக் கூடாது என்று பேசவில்லையா?


எந்தப் பிரதமர் இந்திராகாந்தி இலங்கை அரசில் ஈவு இரக்கமற்ற நடடிக்கைகளை இனப்படுகொலை என்று வருணித்தாரோ - அந்தக் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலை யில் இப்படியொரு காட்டிக் கொடுத்துப் பேசும் கீழ் நிலையா? இலங்கை என்றாலே விபீஷணர்களுக்கு இடம் இல்லாமல் போகுமா, என்ன?

இந்திரா காந்தியை விட்டுத் தள்ளுங்கள் - அவர் மறைவிற்குப் பிறகு திடீர் பிரவேசம் செய்து பிரதமர் நாற் காலியையும் அலங்கரித்தவர் ராஜீவ்காந்தி அவர்கள் தானே!


அவரும்கூட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களை அம்பேத்கர் நூற்றாண்டு விழா பற்றிய கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடில்லி சென்றபோது (2.6.1990) ராஜீவ்காந்தி அவர்கள் திராவிடர் கழகத் தலைவரை தனிமையில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி விவாதித்த போது இலங்கையில் நடப்பது இனப் படுகொலைதான்! என்று கூறிய துண்டே!

அவர் காலத்தில் _ ராஜீவ் ஜெயவர்த் தனே ஒப்பந்தம் முக்கியமான (29.7.1987)  ஒன்று தானே?


வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதே - இதுவரை நடந்திருக்கிறதா? இது குறித்துஒரே ஒரு வினா இந்தியத் தரப்பில் எழுப்பப் பட்டதுண்டா?


அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்பட்ட கதி என்ன தெரியுமா? ஜெ.வி.பி என்ற இனவெறியில் புழுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்திலே வழக்கொன்றைத் தொடுத்து, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்பையும் பெற்றுக் கொண் டனர் (எல்லாம் ராஜபக்சே ஏற்பாடுதான்)


தமக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டார நாயகாவை தூக்கி எறிந்துவிட்டாரே இலங்கை அதிபர்.

எந்த உறுதி மொழியையும் நிறை வேற்றாத இலங்கை அதிபரிடம் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று வீணையின் நரம்பினை மெல்ல மீட்டுவது போல கெஞ்சுவது - கொஞ்சுவது யாரை ஏமாற்ற? பன்றிகள் முன் முத்துக்களை வாரி இறைத்து என்ன பயன்?


அய்.நா. சார்பில் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய வல்லுநர் குழு கொடுத்த அறிக்கையையே (13.4.2011) ஒரு வரியில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எத்திவிடவில்லையா?


இவ்வளவுக்கும் பிறகும் போர்க் குற்றவாளி என்று ராஜபக்சே அறிவிக்கப் படாவிட்டால் அய்.நா. இருந்து என்ன பயன்?

உலகில் பல நாடுகளிலும் ஆட்சிகள் இருந்துதான் என்ன பயன்?


ராஜபக்சே தண்டிக்கப்படா விட்டால் உலகில் எந்த அநீதியையும் அக்கிரமத் தையும் கொடுமையையும், வன்முறை யையும் யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பது கல்லில் வடிக்கப்பட்ட எழுத்து.


எதிர்க்கட்சிகள் மட்டும் என்ன வாழ்கிறது? 

ஈழத் தமிழர் பிரச்சினயில் ஏதோ காங்கிரஸ் மட்டும்தான் துரோகம் செய்கிறது என்று நினைக்கக் கூடாது!


இங்கு தேசிய கட்சிகள் தான் என்ன வாழ்கிறது? கடந்த 20ஆம் தேதி இரவு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டினார்.


காங்கிரஸ் பி.ஜே.பி. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ,சமாஜ் வாடி, அய்க்கிய ஜனதா தளம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது.


தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வைத் தவிர்த்து மற்ற அத்தனைக் கட்சிகளும் ஒருமுகமாக அது கூடாது. தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்று சொன்னார்களே!


முன்னுதாரம் எதற்கும் தேவையா? அந்த முன் உதாரணத்தை இப்பொழுது ஏன் நாம் துவக்கி வைக்கக் கூடாது? இது என்ன புது மூடநம்பிக்கை?


மார்ச்சு 7ஆம் தேதி மக்களவையில்  பிஜேபியைச் சேர்ந்த யஷ்வந்த சின்கா என்ன முழக்கம் முழங்கினார்?


அதே கட்சியைச் சேர்ந்த மக்களவையில் அதி காரப் பூர்வ எதிர்க்கட்சித் தலைவரான சுஸ்மா ஸ்வராஜ் மீராகுமார் கூட்டிய

கூட்டத்தில் அந்தர் பல்டி அடித்து விட்டாரே!


அப்சல்குரு இந்தியாவில் தூக்கிலிடப்பட்டது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் போட்டதைக் குறை கூறிவிட்டு நாம் இங்கே இலங்கைப் பிரச்சினைக்காக தீர்மானம் போடுவது சரியா என்று கேட்டுள்ளார்.

அதையேதான் நாம் திருப்பிக் கேட்கிறோம்; தன் நாட்டுப் பிரச்சினைக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் போடும்போது இந்தியா ஏன் அதனைக் கையாளக் கூடாது?


நாடாளுமன்றம் என்பது எதற்கு இருக்கிறது? இது போன்ற பிரச்சினைகளில் அழுத்தமாகக் கருத்தைப் பதிவு செய்வதற்குத்தானே; சட்ட ரீதியாக அதற்குத் தடை ஏதும் இல்லையே!

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இது அரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான பிரச் சினை என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

அப்படி என்றால் இந்தப் பிரச்சினை நாடாளு மன்றத்தில் வந்த போது இந்தக் கருத்தை பிஜேபி சொல்லியிருக்க வேண்டியதுதானே!


அங்கு மட்டும் நீட்டி முழங்கி விட்டு ஒரு முக்கியமான கட்டத்தில் ஓர் இனத்தையே படுகொலை செய்த மாபெரும் மனித உரிமைப் பிரச்சினையில் இவ்வளவு கேவலமாக பொறுப்பற்ற தன்மையில் கருத்தைச் சொல்லும் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன ஆகப் போகிறதாம்?


பிஜேபி தான் இப்படி சொல்லித் தொலைத்தது;- அது ஒரு பிற்போக்கு மதவாதக் கட்சி, விட்டுத் தொலையுங்கள்.


இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய முக்கிய தலைவரான குருதாஸ் குப்தா பிஜேபியை ஒட்டி அதே கருத்தை திருவாய் மலர்ந்து சொல்லியிருக்கும் வெட்கக் கேட்டை எங்கே போய் சொல்லுவது? எதில் போய்தான் முட்டிக் கொள்வது?


அரசுக்கும் - திமுகவுக்கும் உள்ள பிரச்சினை என்று ஒரு வரியில் தன் கடமையை முடித்துக் கொண்டு விட்டார். இந்த இடதுசாரி!


ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இந்திய அரசுக்கும் திமுகவுக்கும் உள்ள பிரச்சினைதானா?


தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளின் நிலைப் பாடு இதுதானா?

குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இதற்கு விளக்கம் அளிக்கக் கடமைபட்டுள்ளது.


தோழர் தா. பாண்டியன் அடேயப்பா எப்படியெல்லாம் குதி குதிக்கிறார் இங்கே.

ஜெனிவா தீர்மானம் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் இலங்கை ஒன்றும் செய்ய முடியாது என்கிற அளவுக்கு இதில் மிகப் பெரிய கருத்துகளை வைத்துக் கொண்டுள்ளார் தோழர் தா. பாண்டியன்.


ஈழத்திலே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொடுங்கோலன் ராஜபக்கேவால் படுகொலை செய்யப் பட்ட பிரச்சினை என்பது திமுகவுக்கும், இந்திய அரசுக்கும் இடையே உள்ள பிரச்சினைதானா?


(தி.மு.க.வை எவ்வளவுக் கொச்சைப்படுத்தினாலும் இன்னொரு வகையில் இந்தப் பிரச்சினை என்பது திமுகவுக்கு மட்டுமே உரியது என்கிற கருத்தின் மூலம் திமுகவுக்குரிய முக்கியத்துவத்தை அவர்கள் அறியாமலேயே ஒத்துக் கொண்டு விட்டனர் என்று கருதலாமா?)


உலக அளவில் இருக்கும் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் சரி, ஈழத் தமிழர் பிரச் சினையில் காங்கிரசைவிட இந்திய அரசைவிட எந்த வகையிலும் மேல் என்று சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

திமுகவை விட்டால் டெசோவை விட்டால் வேறு நாதியில்லை- -தமிழர்களே புரிந்து கொள்வீர்!
 ------------------------------ கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள்  23-3-2013 "விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

36 comments:

தமிழ் ஓவியா said...


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும். நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?

இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்

இதோ!

1. வைரப் பிள்ளையார் ரூ.1.25 லட்சம்

2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார் ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில் ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7. லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில் ஜெராக்ஸ் செய்யப்பட்டது ரூ.3 * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!

தமிழ் ஓவியா said...


அறிவு கேட்ட கேள்வி


அன்பு நண்பனே! அன்றொரு நாள்,
இருவரும் இணைந்து உரையாடி மகிழ,
இனிதாய் வாய்த்த ரயில் பயணம்,
அறிவுக்கு வழி விடும் அறிவியல் குறித்தும்,
மூளையை முடிக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,
மூளையை முடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,
இடஒதுக்கீடு, பெண்ணுரிமை இவைபற்றி வாதித்தும்,
பேசினோம்! பேசினோம்! பேசிக் கொண்டே இருந்தோம்!
நான் சொன்னவற்றை எல்லாம் நீ மறுத்தாய்!
நீ சொன்னவற்றை எல்லாம் நான் மறுத்தேன்!
எதிலும் உடன்படவில்லை. எனினும், இறுதியில்
பிரியமுடன் தான் பிரிந்தோம்!
உன்னை விட்டு விலகி தனியாக வந்ததும்
என் அறிவு என்னிடம் ஒரு கேள்வி கேட்டது!
உன் நண்பன் சொன்னவற்றில் சில
சரியாகத்தானே இருந்தது. எதற்காக மறுத்தாய்?
ஈகோ பிரச்சினையா? என்றது.
அரை நிமிடம் அதிர்ந்து தான் போனேன்.
ஆயினும் அடுத்த நொடி அக மகிழ்ந்தேன்.
இதே கேள்வியை, உன்னுடைய அறிவும்
கேட்டிருக்கும் உன்னிடம்! என
என் உள்ளம் நம்பியதால்!
கொள்ள வேண்டியதை கொள்ளுங்கள்!
தள்ள வேண்டியதை தள்ளுங்கள்!
தந்தை பெரியார் குரல் எங்கோ
ஒலித்துக் கொண்டிருந்தது ஒலி பெருக்கியில்!

- தகடூர் தமிழ்ச்செல்வி

தமிழ் ஓவியா said...


பெருமைக்குரியதா ஜாதி? சிறுமைக்குரியதே!


- மா. பால்ராசேந்திரம்

எந்த மனிதனும் எனக்குக் கீழான வன் அல்லன்; அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன் என்பார் சமத்துவம் விரும்பிய தந்தை பெரியார் அவர்கள்
சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமயம், சாதி தவிர்வது எந்நாள்?
என்று வேதனை கொண்டார் - புரட்சிக் கவிஞர்

அண்ணல் அம்பேத்கர், வருணமே ஜாதி அமைப்பின் தாய், இந்துமதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை. அடிமைத்தனத்தை அங்கீகரிப்பது. அதுவும் மோசமானதே. பிராமணன் நான்கு வருணங்களில் எந்த வகுப்பைச் சேர்ந்தவரையும் தனது அடிமையாகக் கொள்ளமுடியும் என்று எடுத்துக் காட்டுவார்.

உழைக்க விரும்பாதவன், மனித இனத்தில் உழைக்கும் விலங்குகளை உருவாக்கினான். அதனால் விளைந் ததே வருணம், ஜாதி என்பதெல்லாம் என்பதனை ஜாதியற்ற தமிழர் சமுதாயம் உணர்தல் வேண்டும்.

அதிலும் கூட ஒரு பார்ப்பனன் மற்றொரு பார்ப்பனனுக்கு அடிமை யாகலாமேயொழிய இதர வருணத் தார்க்கு அடிமையாக மாட்டான். சத்திரிய, வைசியர் தம் வருணத்தாரை யும் தமக்குக் கீழான வருணத்தையும் அடிமையாகக் கொள்ளலாம். ஆனால் சூத்திரரோ சூத்திரரை மட் டுமே அடிமையாகக் கொள்ள வேண் டும். பார்ப்பனர், அனைவரையும் அடிமையாகக் கொள்ளலாம்.
இதனைத்தான் கடற்மேற்குமிழி யில் புரட்சிக்கவிஞர் புலித்திறல் மன் னன் பாத்திரப் படைப்பின் மூலமாக, என்னருந் தந்தை வேட ரினத்தவள் தன்னைக் கூடி உன்னையீங்கீன்றார்; என்பால் என்று தன் தம்பி செம்மறித்திறலின் பிறப்பினை இழிவுபடுத்துவதாகக் காட்டுவார்.

தனக்கு நிகராக எவரும் உருக் கொண்டு எழக்கூடாது என்பதற் காகவே ஆரியப் பார்ப்பனர் செய்த சதியே ஜாதி என்பதனைத் தமிழர் களே! நீங்கள், உணர்ந்து கொள்வது எ;போது? ஜாதி என்பது நாற்பெரும் மூல வருணங்களின் ஆண், பெண் களின் கூடா ஒழுக்கக் கேட்டில் உரு வெடுத்ததே, என்று மனுவே குற்றம் சுமத்துகிறார். ஏற்பரா உயர்ந்தோ ரென்று இன்று மார்தட்டுவோர்?

பிராமணப் பெண்ணுக்கும், சூத்திர ஆடவனுக்கும் பிறந்த மக்களே சண்டாளர் ஆவர். அப்படியாயின் பார்ப்பனத்தியிடம் பிறந்த இவர்கள் உயர்வாகவல்லவா கருதப்பட்டிருக்க வேண்டும்! மாறாக, சண்டாளர் இழி வானவர், கேடுகெட்டவர், வெறுக் கத்தக்கவர் என்றல்லவா நடத்தப்பட்டு வருகின்றனர். ஏன் இந்நிலை? இதற்குக் காரணி யார்?

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஓழுக்கமுடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை யாகும் என்பார் திருவள்ளுவர். ஆனால் இந்நெறிக்கு மாறாக ஒழுக்கங்கெட்டுத் திரிந்த பார்ப்பனர் குலம் இன்றும் உயர்குடியாகத்தானே தமிழரால் கருதப்படுகின்றது. பார்ப் பனர்கள் தமக்குள் 1886 உள் ஜாதி களைக் கொண்டவர்கள். அது வெளியே தெரிகின்றதா? அவர்களுக் குள் இழிவு கற்பிக்கப்பட்டு உலகிற்குக் காட்டப்படுகின்றதா? ஏனைய இந்துக்கள் மட்டும் ஏன் ஜாதி இந்துக்கள், மீதி இந்துக்கள் என ஓலமிட்டுக் கலவரப்படுத் துகின்றனர். இந்துக்கள் கடைப்பிடிக் கும் சடங்குகளே அவர்களை இழிஜாதியாகப் பறைசாற்றுகின்றது. வேதோக்த முறை எனும் வேதமந்திரம் ஓதிச் சடங்கு செய்வோர் உயர் ஜாதியாம். பிராணோக்த எனும் புராணங்களின் மந்திரங்களை ஓதிச்சடங்கு செய்வோர் இழி ஜாதியினராம். இதில் புரோகிதம் செய்பவர் பார்ப்பன ரென்றால் மட்டுமே முழுப்பயன் கிட்டும் என்ற போலித்தனமான நம் பிக்கை மக்களிடம் ஊட்டப்பட்டது. புரோகிதம் செய்திடும் பார்ப்பனரும் எங்கு எவர் அழைத்துச் செல்கிறாரோ, எவர் தரும் உணவைப் பெறுகிறாரோ அவரே உயர்ஜாதி எனக் கருதப் பட்டது. அப்படியாயின் பார்ப்பனப் புரோகிதரே ஜாதி உயர்வு தாழ்வைச் சமுதாயத்தில் நிலைநாட்டிடும் சதிகாரராய்த் திகழ்ந்துள்ளார். தானாக முளைத்துத் தழைத்து நிலைத்ததல்ல ஜாதி என்பதனை உணர்ந்திடல் வேண்டும் இன்று ஜாதிவேண்டிப் பேசுவோர்.

தமிழ் ஓவியா said...

மனுவுங்கூட 10:3 இல் பிறப்பினால் உயர்ந்த இடத்தில் தோன்றியதால், (பிரம்மா என்ற ஆண்கடவுள் நெற்றியிலிருந்து பிறப்பு) உயர்ந்த குலத்தால், வேதங்களைப் பிழையறக் கற்றுணர்ந்த அறிவால், (கலியாணத் தில் கருமாதி மந்திரம் ஓதுபவனும்) பூணூல் தரித்துள்ளதால் (கழற்றி விட்டுக் கள் குடிப்பவன்!) பிராம ணன், அனைத்து வர்ணத்தார்க்கும் தலைவன், என்று மனுவின் தயவால் தங்களை உயர்ந்தோராய்ச் செய்து கொண்டவர்கள். உயர்ந்தோர் பார்ப் பனரென்றால், புரோகிதராய், இழி ஜாதியெனத் தன்னால் முத்திரை யிடப்பட்ட மக்களிடம்தானே கைநீட்டிப் பிச்சை வாங்கி உயிர் வாழ்கின்றனர் என்றால், அதற்கும் மனு 1:101 இல் அவனுடைய உண வையே, ஆடையையே, பொருளையே அவன் பெறுகிறான். ஏனையோர் அவனிடமிருந்து ஏற்கெனவே இவைகளைப் பெற்று துய்ப்போராய் உள்ளனர் என்று வக்காலத்து வாங்கிச் சட்டமே செய்துள்ளான்.

பார்ப்பனருக்குக் கொடுப்போர், உயர்ந்தோரல்லர். பார்ப்பனர்க்கு இழிந்தோரேயாவர். பெறத் தகுதி யுடையோன் என்பதனால் தமிழ் நாட்டில் பார்ப்பனர் உயர்ந்தோரு மல்லர். ஈயென இரத்தல் இழிந்தோர் செயலே இங்கு ஆயினும், உயர்ஜாதி யெனத் தம்மைப் பறையறைந்து கொள்வோர், பார்ப்பனர் போட்ட பிச்சையைத்தான் அனுபவிக்கும் இழிதகைமையோரென்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆத்திரம் வருமேயாயின் எழுதிக் காட்டி நடைமுறைப்படுத்திய பார்ப் பனர் மீது உங்கள் கோபக்கனலைக் கக்குங்கள். இதற்குப்பிறகும் என்ன உயர்வு என்ற கித்தாப்பு வேண்டிக் கிடக்கிறது?

இழிஜாதிகளாம் (சூத்திரர்) சண்டாளர்களிடம் பார்ப்பனர் புரோகிதராய்ச் சென்று எந்தப் பொருளையும் கேட்பதுமில்லை, பெறுவதுமில்லை. அவன் கொடுத்த பொருளாயின் திரும்பக் கேட்டி ருப்பான், கேட்கவில்லை. எனவே, சண்டாளர்களிடமுள்ளவை அவர் களின் உழைப்பினில் அவர்களுக்குக் கிடைத்த பொருளே. ஆனால், உயர்ஜாதி என்போரிடம் பார்ப்பனர் வாங்கித் தின்கின்றனர். உஞ்ச விருத்தியை வேண்டிய அளவு விருத்தி செய்து கொள்கின்றனர். கேட்டால் தான் கொடுத்துவைத்த பொருளே என்கின்றனர். அப்படி யாயின் பார்ப்பனர் பொருளைப் பெற்றவர் யார்? சிந்தித்துப் பார்ப்பீர். மேல்ஜாதி என்போரே, உங்களை வாங்கித்தின்கின்ற விலங்குகளாகப் பார்ப்பான் கருதுகின்றான். இந்நிலையில் நீங்களோ யாரையோ இழிஜாதி, தீண்டாதவன் என்று கூறி வெறுத்து ஒதுக்குகிறீர்கள்.

ஊர் இரண்டு பட்டால் கூத் தாடிக்குக் கொண்டாட்டம் என் பதைப் போல ஆரியப் பார்ப்பனர் திராவிடர் மக்களை ஜாதி என்ற சதியில் விழவைத்து, எழமுடியாது செய்து விட்டனர். என்பதனை விளங்க வேண்டியோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வலுத்தவன், இளைத்தவனை அடக்கி வைக்கும் தர்மமே ஜாதி வித்தியாசமாகும். எதேச்சதிகாரமாய்ச் செய்யப்பட்ட கொடுமை. ஜாதியின் காரணமாகப் பிறவியிலாவது, வாழ்க் கையிலாவது, ஒழுக்கங்களிலாவது, அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றனவா? என்று மண்டையில் உரைக்குமளவிற்கு அய்யா பெரியார் கேட்டார். சொல்ல இயலுமா உயர்ந்தோர்க்கான காரணங்களை?

இந்நில மக்கள் எல்லோரும் நிகர் என்பார் புரட்சிக்கவிஞர். இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் என்பது முதுமொழி. தம்மைச்சார்ந்த சமூகத்தை நீதி வழுவா நல்வழியில் இட்டுச்செல்வோர் எவரோ, அவரே உயர்குலத்தாராவர், அவரே நம் தலைவர் தந்தை பெரியார் ஒருவரே. உண்டு கொழுத்து உயர்ஜாதிப் பெருமை பேசித் தீயிட்டுக் கொளுத்தித் திமிராய் நடந்திடுவோரே சில மணித்துளிகள் சிந்திப்பீர்! ஜாதி உண்டாமா? நாம் யார்? நம்மைப் பார்ப்பான் எந்நிலையில் வைத்துள்ளான்? என்பதனை எண்ணிப்பார்ப்போமாகில் நமக்குள் பகையில்லை, வெறுப்பில்லை, சண்டையில்லை. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
என மகிழ்வோடு தமிழராய், ஒருகுலமாய் வாழலாம்.

தமிழ் ஓவியா said...


மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி?


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்

Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.

Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.

Language Bar க்கு வரவும்.

Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.

இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.

6.Windows XP பயனாளிகள்

Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.

முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.


7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:

Amma - அம்மா,
karpom - கற்போம்


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
- பிரபு கிருஷ்ணா (கற்போம்

தமிழ் ஓவியா said...


எடை மேடை தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான்தி.மு.க தலைமைக் கழகப் பேச் சாளர் - எண்ணிய எண்ணத்தைத் துணிவாய்ச் சொல்லும் வல்லமையர் _- பெரியார் தொண்டர் மதுரைக் கவிஞர் இரா. ஜீவா.

பொறுக்குமணிகளாய்த் தேர்ந் தெடுத்த சொற்களில் நறுக்குக் கவிதைகளை கலகக்காரர் பெரியார் என்ற பெயரில் புத்தகமாய் வடித் துள்ளார்.

ஒவ்வொரு கவிதையும் கருத்துக் கருவை சூல்தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது என்று மானமிகு தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டுப் பட்டயம் பெற்ற புத்தகம்.

கவிஞர் ஜீவாவின் உள்ளத்து உணர்ச்சிகளின் ஒருசில துளிகள் இதோ உங்களுக்காக.

மூடத்தனம்
அழிந்தால்தான்
மூலதனம் வெல்லும் என
முடிவாய்ச் சொன்னவன்
தீப்பந்தம் இன்றி
தீண்டாமை
கொளுத்தியவன்
தமிழைச்
சீர்திருத்தியவர்
தமிழனைச்
சீர்படுத்தியவர்

உன்மீது
செருப்பை வீசினார்கள்
நாங்கள்
அக்ரஹாரத்திலும்
செருப்பணிந்து
நடந்தோம்.

தந்தையே உன்மீது
நரகலை வீசினார்கள்
நாங்கள் நாடாளவே
வந்துவிட்டோம்.
உன்மீது
அடிவிழ விழ
உயர்ந்தது தமிழ்இனம்
உருக்குலைந்தது
ஆரிய இனம்.
இவை போன்ற எண்ணற்ற கவிதைகளின் வழியாக தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான் என்பதை உணர்த்தும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. கவிஞர் ஜீவாவை அழைத்து வாழ்த்த அழுத்த வேண்டிய எண்கள் 09443925216 கலகக்காரர் பெரியார் புத்தகம் கிடைக்குமிடம்: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி திருப்பரங்குன்றம், மதுரை -625 005.
விமர்சகர்
பா. சடகோபன்,
பகுத்தறிவாளர் கழகம்
மதுரை - 94433 62300

தமிழ் ஓவியா said...


குரங்குக்குக் கோயிலா?


தினகரன் (வேலூர்) 8.3.2013ஆம் தேதிய இதழில் 4ஆம் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வேலூர் - சத்துவாச்சாரியில் 7.3.2013 அன்று ஒரு ஆட்டோ மோதி குரங்கு ஒன்று இறந்தது. பின்னர் மூடநம்பிக்கையில் ஊறிப்போன பக்தர்கள் குரங்குக்கு மாலை போட்டு ஊது வத்தி ஏற்றி வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்! பின்னர் 2 அடி ஆழம். பள்ளம் தோண்டி அதில் உப்பு, விபூதி, சந்தனம் ஆகியவற்றைப் போட்டு அங்கே குரங்கு புதைக்கப் பட்டது. இந்து மக்கள் கட்சியினர், ஸ்ரீராம ஆஞ்ச நேயர் கோயில் கட்ட முடிவு எடுத்தனர்!

தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் நூற்றுக்கணக் கான குரங்குகள் மாண்டு போகின்றன. ஒவ்வொரு குரங்குக்கும் கோயில் கட்டுவது என்றால் இதுவே பல கோடி ரூபாய்கள் ஆகலாம். கோயில் கட்டிய பிறகு பார்ப்பன அர்ச்ச கரை நியமித்து அன்றாடம் பூசை செய்வார்கள். ஏழை நாட்டில் சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பச்சிளம் குழந்தைகளோடு நடைபாதைகளில் வாழ்கிறார்கள்.

நடுவண், அரசின் வீட்டு வசதி அமைச்சர் அஜய்மேகன் 7.3.2013 அன்று மாநிலங்கள் அவையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாட்டில் 5.3 லட்சம் குடும்பங்களுக்குச் சொந்த வீடு இல்லை என்று செய்தி வெளியிட்டிருக்கிறார்! மனிதர்களுக்கே வாழ்வதற்கு வீடு இல்லாத ஏழை நாட்டில் குரங்கு களுக்கு கோயில் வேண்டுமா? இதே குரங்குகள் வீடுகளில் உணவுப் பொருள்களை சேதம் செய்து விட்டால் தடியையும், கல்லையும் கொண்டு அடித்து விரட்டுகிறார்கள். ஆஞ்சநேயர் அவதாரம் என்று உணவுப் பொருள்களை குரங்குகளுக்குக் கொடுக்க ஏன் முன்வரவில்லை?

பசு மாட்டின் பாலை நாம் நம் அன்றாட உணவில் இன்றியமையாததாகப் பயன்படுத்துகிறோம். வள்ளுவப் பெருந்தகை உழவர்களின் பெருமையைப் பற்றிக் கூறும்போது

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

என்று புகழ்கிறார். அத்தகைய உழவர்களுக்கு உழவுத் தொழிலில் இன்றியமையாத துணையாக விளங்குவது காளை மாடுகள் உழுது பயிர் வைப் பதில் இருந்து நிலத்தில் அறுவடையான நெல்லை நெல் மண்டிகளுக்கு எடுத் துச் செல்வது வரை காளை மாடுகளின் உதவி உழவர் களுக்குத் தேவை. ஆனால் இறந்து போன குரங்கு களுக்குக் கொடுக்கின்ற மரியாதை பசுக்கள், காளைகளுக்கு மனிதர்கள் கொடுப்பது இல்லை.

இறந்துபோன குரங்கு களுக்குக் கோயில் கட்டு வதை அரசாங்கம், அரசு ஆணை முலம் தடை செய்ய வேண்டும்.

அதை 8.3.2013 தேதிய தினகரன் 8ஆம் பக்கத்தில் திருச்சியில் உய்ய கொண்டான், கோறையாறு, குடமுருட்டி ஆறுகள் இணையும் பகுதியில் புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் சார்பில் நடந்த குட்டிக்குடி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக 1000 ஆடுகளைப் பலியிட்டனர்! கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் கடா (சர்க்கார் கடா) பலியிடப்பட்ட தாம்! மத சார்பற்ற நாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் கடா பலியிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இவை போன்ற வெட்கக் கேடான நிகழ்ச்சிகள் நடப்பது பகுத் தறிவுக்குப் புறம்பான செயல்கள் ஆகும்.

- இர. செங்கல்வராயன், செய்யாறு

தமிழ் ஓவியா said...


பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள்எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள நுண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.

பெண்களுக்குத் தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும் பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழ ரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண் டும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்து வத்தில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ.பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண் பார்வை தெளிவடைய: வைட்டமின் ஏ குறைவினால்தான் கண் பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்ட வர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு: பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச் சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள கால கட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண் களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரி செய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும் பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. சளி இருமலுக்கு: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க: அதிக வேலைப்பளு மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்ப முள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:

றீ இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

றீ எலும்புகளை பலப்படுத்தும்.

றீ இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

றீ முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர் களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக்

குறைக்கும்.

றீ புண்கள் ஆறும், மூட்டு வலி நீங்கும்.

றீ பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.

- புதிய பார்வை 2013 மார்ச் (1-15)

தமிழ் ஓவியா said...

தூணில் இருந்தவன் ஏன் துரும்பில் இல்லை! துரும்பில் இருப்பது என்ன?


- அ. பாலகிருட்டிணன்

2012ஆம் ஆண்டின் இயற்பிய லுக்கான நோபல் பரிசு இதற்கான விடையை அளிக்கிறது.

மனித மூளையைக் கிளறச்செய்யும் தந்தை பெரியாரின் முழக்கம் இதுதான்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை.

இது போன்ற நறுக்குத் தெரித்த முழக்கத்தை வேறு யாரேனும் எழுப்பியுள்ளனரா?

ஆம். பல ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பு திராவிடத்தை ஆண்ட அரசன் இரண்யன் எழுப்பினான்.

எனவே இரண்யனை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கடவுள் நம்பிக் கையாளர்கள் முடிவு செய்தனர்.

யாரைக் கொண்டு அவனை ஒழித்துக் கட்டுவது?

இரண்யனின் மகன் பிரகலாதனே அதற்கு ஏற்ற ஆள் என்ற முடிவுக்கு வந்தனர். பிரகலாதனுக்குப் பல கவர்ச்சி யான வழிகளில் போதனை செய்து கடவுள் உண்டு என்று நம்பச் செய்தனர்.

தந்தை இரண்யனுக்கும் மகன் பிரகலாதனுக்கும் கடவுளைப் பற்றிய விவாதங்கள் அடிக்கடி எழுந்தன. தந்தை யின் கடவுள் மறுப்புக் கோட்பாட் டினைத் தளர்த்திட தனையனால் சிறிதும் இயலவில்லை.

ஒரு குறிப்பிட்ட நாளன்று அரண் மனை முற்றத்தில் தந்தைக்கும் மகனுக் கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
கோபத்தின் உச்சியில் பிரகலா தனை நோக்கி இரண்யன் கேட்டார், கடவுள் எங்கிருக்கிறார் என்று கூற முடியுமா?
கடவுள் எங்கும் இருக்கிறார் என்று பிரகலாதனின் பதில் அமைய வில்லை.
பிரகலாதன் அதற்குப் பதிலாக கூறியது.

கடவுள் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான்
இதைக்கேட்ட இரண்யன் வெகுண்டெழுந்தான், அப்படியா செய்தி! தூணைப் பிளக்கிறேன் எங்கே கடவுளைக் காட்டு என்று உரத்த குரலில் கூறி தன்னுடைய தண் டாயுதத்தால் தூணைப் பிளந்தான்.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, தூணுக்குப் பின்னால் சிங்கவேட மிட்டு மறைந்திருந்த கொடூரன் ஒருவன், சூலாயுதத்தால் மின்னல் வேகத்தில் இரண்யனைக் குத்தி வீழ்த்தினான்.

கடவுள் இல்லை என்று சொன்ன இரண்யனை கடவுளே நரசிம்ம அவதாரம் எடுத்து கொன்றழித்தான் என்று எதிரிகள் செய்தி பரப்பி மக்களை நம்ப வைத்தனர்.

தூணைப் பிளந்தவன் துரும்பை ஏன் பிளக்கவில்லை!

தூணுக்குப் பின்னே மறையலாம். துரும்புக்குப் பின்னே மறைய முடியாதே. இதுதான் காரணம்.

துரும்பிலும், இருக்கும் கடவுளைக் காண கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் முயலவில்லை.

மேல்நாட்டு அறிவியல் அறிஞர்கள் துரும்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதனை ஆராயத் தொடங்கினர்.
துரும்பை உடைத்தார்கள்
மூலக்கூறுகள் கிடைத்தன.

மூலக்கூறை உடைத்தார்கள் அணுக்கள் கிடைத்தன.

அணுவுக்குள்ளே எலக்ட்ரான்களும் புரோட்டான்களும், நியூட்ரான்களும், குவார்ட்ஸ்களும், நிரம்பியிருந்தன.

அணுவைத் துளைத்து ஆய்வு செய்த தற்கு இற்றைநாள் வரை அய்ம்பதுக்கும் மேற்பட்ட நோபல் பரிசுகள் தரப் பட்டுள்ளன.

இதுவரை நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி களின் பலனாக
குவாண்டம் இயற்பியல் என்கிற தனித்துறை ஒன்றே வழக்கத்திற்கு வந்துவிட்டது.

குவாண்டம் கோட்பாட்டின் முக்கிய கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிட லாம்.

குவாண்டம் துகள்கள் தனித்த நிலை யில் உள்ளன. அணுக்கள், எலெக்ட் ரான்கள், புரோட்டான்கள் போன்றவை குவாண்டம் துகள்களாகும்.

ஒரு குவாண்டம் துகள் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் இரு இடங்களில் இருக்கும். அலை வடிவம், துகள் வடிவம் ஆகிய இரு நிலையைப் பெற்றுள்ளன.

அவைகளின் நிலைப்பாட்டையும் வேகத்தையும் ஒரே சமயத்தில் அளக்க முடியாது. இதற்கு உறுதியற்ற தன்மை என்று பெயர்.
குவாண்டம் துகள்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விதமான பண்பைப் பெற்றிருக்கும்.
விலங்கொன்று ஒரு கணம் உயிருள் ளதாகவும் மறுகணம் உயிரற்றதாகவும் இருக்க முடியுமா? முடியும். அவ்விலங்கு குவாண்டம் நிலையில் இருந்தால்.

இத்தகைய குவாண்டம் பண்புகள் நம்ப முடியாதவைகளாக இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் ஆய்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

பல கோடிக்கணக்கில் இருக்கும் குவாண்டம் துகள்களின் கூட்டத்தி லிருந்து தனி ஒரு துகளைப் பிரித்து அதன் பண்பினை ஆய்ந்து அறிந்தமைக் காக இந்த ஆண்டு (2012) இயற்பிய லுக்கான நோபல் பரிசு வழங்கப்பட் டுள்ளது. இந்த ஆண்டில் இயற்பியலுக் கான நோபல் பரிசு பெற்றவர்கள் இருவர்.

டேவிட் ஒயின் ஃபீல்டு (David Wine Feild)
செர்ஜ் ஹரோச் (Serge Haroche)

பரிசு தொகையின் மதிப்பு ஆறு கோடியே முப்பத்தொரு லட்சமாகும். பரிசுத் தொகையை இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வர்.

குவாண்டம் துகள்களைப்பற்றிய இத்தகைய ஆராய்ச்சிகளால் கிடைத்த நன்மைகள் என்ன?

முக்கியமான இரண்டு நன்மைகள்

1. அதிவேகக் கணினி (Superfast Computer)

2. மிகத் துல்லியமான நேரங் காட் டிகள்(Precise Clocks)

தற்போதுள்ள கணினிகளில் ஒரு சமயத்தில் ஒரெயொரு துடிப்பு (Bit) தான் கிடைக்கும். (O அல்லது I)
ஆனால் குவாண்டம் துகள்களைத் தனித்த நிலையில் உள்ளடக்கிய கணினி களில் ஒரே சமயத்தில் இரண்டு துடிப் புகள் இருக்கும் (O அல்லது I)

எனவே, இனி எதிர்வரும் காலங் களில் கணினிகள் அதி வேகத்தில் செயல்படும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சீசியம் எனும் தனிமத்தை உள்ளடக்கிய நேரங் காட்டிகள் மிகத் துல்லியம் என அறியப்படுகிறது.
ஆனால் இனி வருங் காலத்தில் குவாண்டம் துகள்கள் அடங்கிய மிகத் துல்லிய நேரங் காட்டிகள் பயன்பாட் டிற்கு வந்துவிடும்.
இத்தகைய வருங்கால நேரங்காட் டிகள் 1400 கோடி ஆண்டுகளில் அய்ந்து நொடிகள் மட்டுமே மெதுவாகச் செல்லும்.
ஆக புராணிகர்கள் துரும்பை உடைத்தாரில்லை. கடவுளைக் கணடாரில்லை.
ஆனால், இன்றைய அறிவியலா ளர்கள் துரும்பை உடைத்து ஏராள மான ஆற்றலைப் படைத்து அதன் பயனைத் துய்க்கத் தொடங்கி விட்டார்கள்.
அதனால்தான் அறிவியல் மனப் பான்மை வேண்டும் என தந்தை பெரியார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வாசிக்க புதுசு....

தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்

நூலாசிரியர்: முனைவர் ந..க. மங்களமுருகேசன்

வெளியீடு: தென்றல் பதிப்பகம், 13/3 பீட்டர் சாலை குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை--14

பக்கம் 204, விலை ரூ..150.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்னும் வாக்கிற்கு, உயிரோட்டம் தரும் வகையில் ஈ.வெ.ரா. முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கியவர், அவரது துணைவியார் ஈ.வெ.ரா. நாகம்மையார்.

நான் சுயநல வாழ்வில், மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாயிருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில், ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவா இருந்தார் என்பது, மறுக்க முடியாத காரியம் (பக்.23) என்று ஈ.வெ.ரா. வால், குடியரசு தலையங்கத்திலேயே எழுதப்பட்ட பெருமை வாய்ந்தவர் நாகம்மையார்.

நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது, உலகம் அறிந்ததாகும் (பக்.48) என்றும் போற்றப்பட்டவர். இப்பெண்மணி.

பெண்ணுரிமை, பொதுப்பணி என்றெல்லாம் பேசும், இன்றைய புதுமைப் பெண்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய, ஒரு புரட்சிப் பெண்ணின் சுயமரியாதைச் சுடரின வரலாறு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தவறிப் போன வரலாற்றை, மீட்டுருவாக்கம் செய்துள்ள, ஆசிரியரின் பணி பாராட்டத்தக்கது.

பின்னலூரான்

(நன்றி: தினமலர் 17.3.2013 பக்கம் 8)

தமிழ் ஓவியா said...


யக்ஞவல்கியா கூறுகிறார்!


ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்த பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.

சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத் தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பகத்சிங்


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)

1924 - பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டம். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன் னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.

சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!

நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல், நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.

வெறிபிடித்த இந்துத்து வாவாதிகள் முட்டாள்தன மாகப் புரட்சியாளர்கள் என்று கருதப்பட்ட காலம் அது.

மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எனும் பார்ப்பனர் சனாதன வெறிக் கண்ணோட்டத்தோடுதான் அதனைச் செய்தான்.

1908இல் வங்காளத்தில் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குதிர்ராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது, பகவத் கீதையைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருந்தான்.

ஆனால் பகவத்சிங் எப்படி? சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகவத் சிங் மறுத்து விட்டான்! (இளை ஞர்களே எண்ணிப் பாருங்கள்!)

ஜாலியன் வாலாபாக் படுகொலை - அவனைப் புரட்சிவாதியாக்கிற்று.

தாங்கள் பயங்கரவாதி கள் அல்லர் - புரட்சியா ளர்கள் என்ற முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் வெடி குண்டுகளை வீசி, காவல் துறையிடம் தங்களை ஒப் படைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வாய்ப்பாகத்தான் இதனை செய்தனர் என்பது சாதாரணமா?

இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யான சமத்துவமும், சாந்தமும் அளிக்கத்தக்கப் பாதையை பகத்சிங் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் - எவரும் அடைய முடியாத பேரை பகத்சிங் அடைந்தார் என்று குறிப் பிட்டு விட்டு பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்.

மாகாணத்துக்கு இது போன்ற 4 பேர்களைத் தூக்கிலிட வேண்டுமென்று நமது அரசாங்கத்தை மனமார வேண்டுகிறேன் என்ற (குடிஅரசு 29.3.1931) தந்தை பெரியாரின் சிந்தனை சாதாரணமானதுதானா? இளை ஞர்களே எண்ணிப் பாரீர்!

- மயிலாடன் 23-3-2013

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் மறைக்கப்பட்டது - ஏன்?


தமிழ்நாட்டு டெல்டா விவசாயிகளின் பரிதாப நிலை!

விவசாயிகளுக்குப் போதிய நிவாரணமும் அளிக்கப்படவில்லை

ஏப்ரல் முதல் வாரத்தில் காலை திருவாரூரிலும், மாலை தஞ்சையிலும் தி.வி.தொ.ச. சார்பில் பேரணி - ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கைதமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகள் விவசாயம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. முதல் அமைச்சரின் நிவாரணம் போதுமானதாக இல்லை - உதவிடும் வகையிலும் இல்லை. தஞ்சைப் பாராட்டு விழாவிலும் அறிவிப்புகள் இல்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விவசாய தொழிற் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் முற்பகல் திருவாரூரிலும், பிற்பகல் தஞ்சாவூரிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

காவிரி நதி நீர்வரத்து தமிழக டெல்டா விவசாயி களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதாகும்.

இடைக் காலத் தீர்வுப்படி ஒருமுறைகூட கர்நாடக அரசு காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்கு முறையாக அளித்ததே இல்லை.

இதனைத் தொடர்ந்து நாம் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி - இரண்டுமே டெல்டா விவசாயிகளுக்கு பெரும் சோதனையாகவும், வேதனையாகவுமே முடிந்தது.

இதன் விளைவாக, கொஞ்ச நஞ்சம் உள்ள முதலீட்டையும் இறுதிப் பந்தயத்தில் வைத்து இழக்கும் போட்டியாளன்போல் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் கை முதலை இழந்தனர்.

கருகிய பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் இதுவரை 13 பேர்களுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்!

தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் மறைக்கப்பட்டது - ஏன்?

தமிழ் ஓவியா said...


இதனை உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மீதும் மத்திய அரசு மீதும் தமிழ்நாடு அரசு வழக்குப் போட்டு வாதாடியபோது மறுத்தது; மறைத்தது - தேவையற்ற முறையில்; தமிழ்நாட்டில் இதுவரை 10 விவசாயிகள் பயிருக்குத் தண்ணீர் வராததால் மனமுடைந்து தற் கொலை செய்துள்ளனர் என்று கூறியிருந்தால், அதற்குப் பலன் மேலும் கிடைத்திருக்கலாம்; உச்சநீதிமன்றமும் இன்னமும் தாராளமான நீர்ப் பங்கீடு பற்றிக் கூறியிருக்கக் கூடும்; ஏனோ தமிழகத்து அதிமுக அரசு தவறியது! அதன் பிறகு ஒரு முறை தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் - அவை முன்னவர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பட்டினிச் சாவே நிகழவில்லை என்று கூறினார். டெல்டா விவசாயிகளின் நிலைமையை ஆராய்ந்து அறிக்கை தர, முதல் அமைச்சர் 4 சக அமைச்சர்கள் குழுவை, நிதியமைச்சர் தலைமையில் அனுப்பி, பயிர்ப் பாதிப்பு சம்பந்தமாக அறிக்கை தருமாறு பணித்தார்.

அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு டெல்டா விவசாயிகளுக்கு அளித்த நிவாரணம் பெரும்பாலான, உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அமையவில்லை.

இதனை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அரசுக்குப் பல முறை சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்தார்.

அவர்கள் மட்டுமல்ல; பல அரசியல் கட்சிகள் அறிக்கை - வேண்டுகோள் விடுத்தன முதல் அமைச்சருக்கு.

தஞ்சையில் முதல் அமைச்சருக்கு மிகப் பெரும் பாராட்டு விழாவை நடத்தினார்களே, அப்பொழுது ஏதாவது அறிவிப்பார் முதல்வர் என்று எண்ணி ஏமாந்தார்கள் டெல்டா விவசாயிகள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் முத்தரசன், முதல்வர் தஞ்சை விழாவிற்கு வருவதற்கு சில நாள்கள் முன்பு, தஞ்சை விழாவில் ஏதாவது அறிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டு கடிதம் எழுதினார்; இது ஜனசக்தி நாளேட்டில்கூட வெளி வந்துள்ளது.

முதல் அமைச்சருக்கு நமது வேண்டுகோள்!

விழாவில் வெளிச்சம், பாண்டியன்களின் பலமான பாராட்டு மழைகள் எல்லாம் இருந்தன; ஆனால் விவசாயிகளுக்கு பசியைப் போக்க, புதிய நிவாரணம் கிஞ்சித்தும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரிகளைக் கொண்டு ஒரு புதிய சர்வே செய்து, இனிமேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூட எந்த அறிவிப்பும் அம்மையாரிடம் இருந்து வரவில்லை.

சரி போகட்டும்; டெல்டா விவசாயிகள் மீண்டும் மீண்டும் நாமம் போட்டு, கோவணம் கட்டிக்கூட போராடி விட்டார்களே - அதற்குப் பிறகாவது, பட்ஜெட் உரையில் ஏதாவது மின்னல் போன்று நிவாரணம் பற்றிய அறிவிப்பு இருந்ததா என்றால் அதுவும் ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போலவே ஆயிற்று!

முதல் அமைச்சருக்கு நமது வேண்டுகோள்: இன்னமும் காலந் தாழ்ந்துவிடவில்லை; சட்டமன்றத்தில் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்!

ஏப்ரல் முதல் வாரத்தில் பேரணி - ஆர்ப்பாட்டம்

இதனை வலியுறுத்தி, காவிரி டெல்டா திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் (முதல் வாரத்தில்) விவசாயிகள் பேரணி, ஆர்ப்பாட்டம் காலையில் 11 மணியளவில் திருவாரூரிலும் (கீழ்த் தஞ்சை சார்பில்) மாலை தஞ்சை நகரிலும் நடைபெறும்.

இரண்டு ஊர்களிலும் அநேகமாக நான் கலந்து கொள்ளக் கூடும். கழக விவசாய அணிப் பொறுப்பாளர்கள் மாவட்ட, வட்ட நகர, கிராமக் கிளைக் கழகத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டும் பணியை நாளை முதலே துவக்கிட வேண்டும்.

நகரங்களில் தெருமுனை, கிராமப் பிரச்சாரம் இவைகளை நமது பிரச்சாரகர்களும், பொறுப்பேற்று இதை மய்யப்படுத்தி அடைமழை பொழிவதுபோல செய்து கொண்டே இருக்க வேண்டும்

கடமையாற்றுவோம் வாரீர்! விவசாயம் சூத்திரர்களின் தொழிலாகவே மனு கால முதல் இன்றைய நவீன இராம இராஜ்ய காலம் வரை இருப்பதால் இப்படி பசி, பட்டினி, ஏழ்மை, தற்கொலை எல்லாம்!

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் எவை என்ற அறிவுமில்லார்

என்று பாடி வாடிடும் விவசாயிகள் கண்ணீர் துடைக்க கடமையாற்றுவோம் - வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

23.3.2013

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?


கடைசி நேரத்தில் இந்தியா எப்படியும் எங்களை ஆதரிக்கும் - எதிராக வாக்களிக்காது என்று இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் போக்குகள் இருந்தன.

இலங்கை எதிர் பார்த்ததற்கு மாறாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்து கொண்டாலும் அடிப்படையில் இலங்கைக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மூவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் சற்று நம்பிக்கை அளிப்பது போல் இருந்தன.

இந்தப் பிரச்சினை பெரும் நெருக்கடியில் சிக்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று போதிய அவகாசம் இருந்தும், குறித்த நேரத்தில் பிரச்சினை மீது கவனம் செலுத்தி செயல்படாததேயாகும். கடைசி நேரத்தில் தான் மத்திய அரசுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலும்.

போக்குகளை மிகவும் துல்லியமாகக் கணித்த கலைஞர் அவர்கள் அவருக்கே உரித்தான அனுபவம், முதிர்ச்சி காரணமாக, மத்திய அரசிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தை மட்டுமல்ல உலக நாடுகளிடையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

கலைஞர் அவசரப்பட்டு விட்டார்; மேலும் காத்திருந்திருக்க வேண்டும், இந்தியா அமெரிக்கா வின் தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நடந்ததைப் பார்க்கும் போது கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந் திருக்கிறது என்று பேசப்படும் நிலை ஆகிவிட்டது.

இந்தியாவின் சார்பில் மனித உரிமை ஆணையத் தில் பேசிய திலிப் சின்கா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை; வெறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல் லுவது - திருடன் கையில் சாவியை ஒப்படைத்த கதைதான்.

மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை

இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று செல்லமாகத் தாலாட்டுப் பாடியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை, இத்தாலிய கடற்படைக்காரர்கள் கடற் கொள்ளைக் காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றதற்கு உலகத்தையே குலுக்கியதும் இதே இந்தியாதான்!

அதே நேரத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழினத்தைச் சேர்ந்த - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும் சரி, படுகொலை செய்யப்படும் பொழுது ஏனிந்த பதற்றம் இல்லை? என்ற கேள்வி நியாயமானதல்லவா? இதனைக் குறுகிய பார்வை என்ற குண்டாந்தடியால் அடிக்க நினைக்கக்கூடாது; தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்களோ, புரியாதவர்களோ இல்லை.

ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசு கணக்கிடவே முடியாத அளவுக்குக் கடும் கோபத் தீக்கு இரையாகி விட்டது. அது சார்ந்த அரசியல் கட்சியான காங்கிரசும் பெரும் சேதாரத்துக்கு ஆளாகி விட்டது.

உலக நாடுகளும் இந்தியாவைக் கேலியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.

இதற்கிடையில் ஒன்றைத் தவறாமல் குறிப்பிட்டாக வேண்டும்; இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் மட்டுமல்ல; அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்து விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பது கோடி பொன் பெறும் கணிப்பாகும்.

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லா விட்டால் இன்னும் என்னென்ன இன்னல்களோ - கொடுமைகளோ தெரியவில்லை.23-3-2013

தமிழ் ஓவியா said...


இப்படிச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் எவை? (3)


5. கோபத்தோடு நாளைக் கழித்தால் என்ன விளைவு ஏற்படும்?

வாழ்வில் கோபப்படுவதும் எப்போ தாவது ஒருமுறை தேவைதான். இவருக்குக் கோபமே வராதுங்க. எப்பவும் எதைச் சொன்னாலும் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பாருங்க.. என்று ஒருவரை எமக்கு அறிமுகப்படுத்தினால் நான் அவரை எளிதில் நம்ப மாட்டேன். காரணம் மனித இயல்புக்கு மாறாகச் சிலர் நடந்து கொண்டால் அது ஏதோ ஒரு வகைச் சுதேசி நடிப்பு என்று கருதியே ஒதுக்கி வைப்பேன்.

ஒப்பனை மனிதர்களுக்கும், உண்மை மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கண்டறியும் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையில் பிறரிடம் எளிதில் ஏமாறாதவர்களாக நாம் வாழ முடியும்.

மனதும், சுற்றுப்புறத்தவர்களும் கோபப்படும் நம்மைக் கண்டு எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது அப்புறம் இருக்கட்டும். நமது உடல் நலம் அதனால் பெரிதும் பாதிப்பது உறுதி.

சர்க்கரை நோயும், எடை அதிகரித்தலும் அதனால் அதிகமாகும்; காரணம் கோபம் என்பது ஒரு வகையான உணர்ச்சி பூர்வ மனஉளைச்சல். (Mental Emotional Stress) - இது நமது உடலில் அட்ரினலைன் (Adrenaline and other Stress hormones)

இதனால் கோபப்படுவதினால் - ரத்தக் கொதிப்பு (B.P.) ) ஏறுகிறது.

அது மட்டுமா? சில தவறான பழக்க மான - விரும்பத்தகாத உணவுகளை (Junk food) இவைகளையும் உண்ணும் வாய்ப்பு ஏற்பட்டு நமது உடல் நலம் அதன் மூலமும் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே கோபத்தை சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிக்கு இடம் தராது வாழ முயலுங்கள்.

6. மகிழ்ச்சியுடனேயே ஒரு நாள் முழுவதும் செலவழித்தால் என்ன - விளைவுகள்?

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பின் அப்போது உங்கள் உடல் முழுவதும் அமைதியாக இருப்பதால், மன அமைதி, உற்சாகம், ஊக்கம் புது வெள்ளம் பாய்வது போல் பாய்கிறது!

மன உளைச்சலுக்கு இடமே இல்லை! இதயம் சீராக இயங்குகிறது!

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கும்போது தொற்று நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளாது! எதிர்ப்பு சக்திக்குப் பெரிதும் துணை புரிகிறது.

பிரபல அமெரிக்க கார்னிக மெலான் பல்கலைக் கழகம் இதுபற்றிய மிகப் பெரிய ஆராய்ச்சி ஒன்றினைச் செய்துள்ளது.

இப்படி மகிழ்ச்சிகரமாக உள்ள போது, உடலில் (Cytokines) சைக் டோக்கின்ஸ் என்ற ஒரு வகை புரதச் சத்து ஊறி, நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அதற்கு ஊட்டுகிறது என்று அப்பல் கலைக் கழகத்தினர் கூறுகிறார்கள்!

நம்முடைய நடத்தையையும்கூட அந்த மகிழ்ச்சி மேம்படுத்துகிறது;

சரியான மகிழ்வுடன் வாழுகிறவர் கள் எவரும் உடற்பயிற்சியிலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் தங்களது எல்லையுடன் நிற்பார்கள் வேலி தாண்டிய வெள்ளாடாக, ஒரு போதும் ஆக மாட்டார்கள்!

சிரிக்கும்போது நமது தசைகள் விரிந்து ஒளிர்கின்றன; கோபப்படும் போது அதற்கு நேர்மாறாக அல்லவா ஆகி விடுகிறது?

7. ஒரு நாளில் 5 மணி நேரம் மட்டுமே தூங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

நம் அனைவர் உடலுக்கும் உணவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், தூக்கமும், உடற்பயிற்சியும் கூட; குறைந்த தூக்கம் என்றால் அதன் பாரதூர விளைவுகள் மிகவும் விபரீதமானவை.

பசியின்மை, உடற்சோர்வு, அல்லது அதிகமாக உண்ணுதல் (சிற்சில நேரங்களில்)

தூக்கமின்மை, உடலில் மன உளைச் சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டி விட்டு, உற்சாகமின்மைக்கு வித்திடுகிறது!

குளுக்கோஸ் என்ற சர்க்கரைச் சத்தை இரத்தத்திற்கு அதிகமாக அனுப்புகிறது. சர்க்கரை நோயை அதிகப்படுத்துகிறது; காரணம் இன்சூ லினின் (சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மைக்குரியது -செயல்படாமல் தடுக்கப்படுகிறது)

நமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மைகளில் இராணுவ வீரர்களைப் போன்ற சில ரசாயனக் கலவைகள் (Certain Chemicals) உற்பத்தியையும் தூக்கமின்மை வெகுவாகக் குறைத்து நோய் தடுப்பை குறைத்துவிடும் அபாயத்திற்கு நம் உடலை ஆக்கி விடுகிறது.

2002இல் ஒரு ஆய்வு. 7 மணி நேரத் திற்குக் குறைவாகத் தூங்கும் பலருக்கு சளித் தொல்லை - தடுமன் அதிகமாக வர வாய்ப்பு ஏற்படுகிறதாம் (மூன்று மடங்கு).

எனவே 8 மணி நேரம் தூங்கா விட்டாலும் குறைந்தது ஏழு மணி (7 மணி) நேரமாவது தூங்குங்கள்.

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லைசரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


பக்தியின் பன்னாடைத் தனம் பாரீர்!

ராமேசுவரத்தில் தீர்த்தக் கிணற்றில் தண்ணீர் எடுத்து ஊற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில், ராமேசுவரம் - தனுஷ்கோடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டப முகப்பிலிருந்த பந்தல், ஜெனரேட்டர் உள்ளிட்டவை கொளுத்தப்பட்டன

சென்னை, மார்ச் 23- பக்தியின் பெயரால் அன்றாடம் அவலங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் சில,
அம்மன் சிலையில்
தாலி சங்கிலி திருட்டு
சென்னையை அடுத்த குரோம்பேட்டை லட்சுமி புரத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் நிர்வாகியின் உறவுக்காரப் பெண், கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய ஒரு நபர், சாமி கும்பிட்டாராம். பின்னர் கோவிலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம், குங்குமம் எடுத்துத் தரும்படி கேட்டாராம்.

எனவே, அந்தப் பெண் குங்குமம் கொடுக்க முயன்றாராம். அப்போது அந்த நபர், திடீரென்று அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த அய்ந்தரை பவுன் தாலி சங்கிலியைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

திருமலை: பெண் பக்தரின்

உடல் வெந்தது திருமலையில் வெந்நீர் என்று தெரியாமல் குளித்த கோவை பெண் பக்தரின் உடல் வெந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கோவையை சேர்ந்த பெண் பக்தர் சத்யா என்பவர் தனது குடும்பத்தினருடன் திருமலை வந்திருந்தார். அங்கு அவர் தேவஸ்தானத்தின் வராகசாமி தங்கும் விடுதியில் 16 ஆம் எண் அறையை எடுத்து குடும் பத்துடன் தங்கி இருந்தார். கடந்த வியாழக்கிழமை அவர் சாமி தரிசனம் செய்வதற்காக தனது தலை முடியை காணிக்கை செலுத்திவிட்டு குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்தார். அப்போது அவர் குளிர்ந்த தண்ணீருக்கு பதில் வெந்நீர் வரும் சுடுநீர் குழாயை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. வாளியில் பெருகிய அந்தத் தண்ணீரை குளிர்ந்த தண்ணீர் என நினைத்துப் பிடித்து அதனை தலையில் ஊற்றிக்கொண்டார். தண்ணீர் கொதி நிலையில் இருந்ததால் அவரது கை, முதுகு உள்பட பல இடங்கள் வெந்துவிட்டது. இதனால் அவர் வெப்பம் தாளாமல் கதறி துடித்தார். அக்கம் பக்கம் பக்தர்கள் ஓடிவந்து பார்த்தபோது அவரது உடலில் கொப்பளங்கள் தோன்றி இருந்தன. உடனடியாக தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ் ஓவியா said...

வாஸ்து சரியில்லையாம் - நாவல்மரம் வெட்டி சாய்ப்பு

கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், துடி யலூர் ரயில்வே நிலைய சாலையில் உள்ளது. இந்த அலுவலகக் கட்டுமான பணியின் போதே, அப்பகுதி யில், நாவல் மரங்கள் இருந்தன. இந்த மரங்கள், அலுவலகத்துக்கு அழகு கொடுத்தன. அலுவலகம் கட்டியபின், ச.ம.உ.களாக இருந்த, எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், கண்ணப்பன், கந்தசாமி பயன்படுத்தி வந்தனர். தற்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வான ஆறுகுட்டி, இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், வாஸ்துப்படி நாவல் மரங்கள் இருந்தால், பிரச்சினை ஏற்படும் என, எம்.எல்.ஏ., விடம், சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதை யடுத்து, ச.ம.உ. அலுவலக வளாகத்தில் உள்ள நாவல் மரங்களை, வெட்டும் பணி துவங்கியது. இதற்கு, அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மரம் வெட்டுவது கைவிடப்பட்டது.

இது குறித்து, ச.ம.உ. ஆறுகுட்டி கூறுகையில், மரம் வெட்டுவதற்கும், வாஸ்துக்கும் தொடர் பில்லை. இருந்தாலும், இயற்கை ஆர்வலர்களின் கருத்தை ஏற்று, மரம் வெட்டுவது கைவிடப் பட்டுள்ளது என்றார்.

ராமேசுவரம் கோவில் தீர்த்தம் பெட்ரோல் குண்டுகள் வீச்சு; பக்தர்கள் ஓட்டம்! ராமேசுவரத்தில் நேற்று தீர்த்தக் கிணற்றில் தண்ணீர் எடுத்து ஊற்றுவது தொடர்பாக இரு தரப்பினர் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டு பெட் ரோல் குண்டுகளை வீசினர். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை விரட்டி அடித்தனர். நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ராமேசுவரம் கோவிலில் தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடுவதற்காக தண்ணீரில் நனையாத அடையாள வில்லை அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி யாத்திரை பணியாளர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றும் பணியை மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மோதல் தொடங்கியது

நேற்று மதியம் கோவில் பகுதியில் இந்த பிரச்சினை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு ஆட்டோ சேதப்படுத்தப்பட்டது. மாலை 4 மணியளவில் மேட்டுத்தெருவை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர், பக்தர்களை ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றார். அவர் வேர்க்கோடு சென்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் விநாயகமூர்த்தி யையும், மற்றும் ஒரு ஓட்டுநரையும் பிடித்து அடித்து உதைத்தனர். அவர்கள் தங்கள் உறவினர் களுக்கும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தகவல் கொடுத்தனர். காவல்துறையினருக்கும் தகவல் பறந்தது. காவல்துறையினர் வேர்க்கோடுக்கு விரைந்தனர்.

அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரிவாள், கம்புகளுடன் ராமேசுவரம் கீழவாசலில் இருந்து வடக்குவாசல், மேல வாசல், நடுத்தெரு, கடைத் தெரு பகுதிகளுக்குச் சென்று கடைகளை அடைக்குமாறு சத்தம் போட்டுக்கொண்டே வந் தனர். பதற்றம் ஏற்பட்ட தால் வியாபாரிகள் கடை களை அடைத்தனர். பக்தர்களும் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அப்போது தனுஷ் கோடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவி லுக்கு வந்தது. கலவர கும்பல் அந்தப் பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண் ணாடியை உடைத்தது.

ராமேசுவரம் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் கலவர கும்பல் திட்டக்குடி பகுதியில் புதிதாக கட்டப்படும் தனியார் தங்கும் விடுதி கட்டடத்தின் முன்பகுதியில் இருந்த கூரைக்கு தீ வைத்தனர்.
வேர்க்கோடு பகுதியில் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் விநாயகமூர்த்தி உள்பட 2 பேரை காவல் துறையினர் மீட்டு ராமேசுவரம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு கலவரத்தை கட்டுப்படுத்தப் போராடினர். கலவர கும்பல் வேர்க்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியது. அப்போது கலவர கும்பல் இரு தரப்பும் ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டுகளை வீசி பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. கற்களும், பாட்டில்களும் சரமாரியாக வீசப்பட்டன.

காவல்துறை டி.அய்.ஜி.ராமசுப்பிரமணியன், காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் அதிரடிப்படை, கலவர தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை 3 முறை வீசியும், தடியடி நடத்தியும் கலவர கும்பலை விரட்டினர். வரலாறு காணாத வகையில் நடந்த இந்தக் கல வரத்தால் ராமேசுவரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 4 அடி உயரமுள்ள கடவுளர் சிலை திருட்டு கும்பகோணம் அருகே 4 அடி உயரமுள்ள கடவுளர் சிலை திருட்டு போனது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பணி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரி ஊராட்சி இணைப்பிரியாள் வட்டத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை தர்மலிங்கம் (வயது 50) கோவிலுக்குச் சென்றபோது அந்த சிலைகளை வைத்து வழிபட்ட குடிசையின் கதவு திறந்த கிடந்தது. மெகூம்வரதராஜபெருமாள், சிறீதேவி, பூதேவி ஆகிய மூலவர் சிலைகளில் சுமார் 4 அடி உயரமுள்ள சிறீதேவி சிலையைக் காணவில்லை. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள், பக்தர்களை எப்படி காப்பாற்றுவார்?

VOICE OF INDIAN said...

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத காங்கிரஸ் துரோகம் செய்கிறதா?"விசாரணை நடத்தி வருகின்றனர்

தமிழ் ஓவியா said...


ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு


கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணம், குருணேகலா ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க தீர்மானம் குறித்து கருத்து வெளியிட் டார். அப்போது அவர் ஆணவத் துடன் கூறியதாவது:-

இந்த தாக்குதல் (அமெரிக்க தீர்மான ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி) எங்களுக்கு வியப்பை அளிக்கவில்லை. இந்த தாக்குதல் எங்களை அடக்கி விட முடியாது. இவை எங்களை தோற்கடித்து விடவும் இயலாது. எந்த விதத்திலும் எங்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது. விடுதலைப்புலிகளை எனது தலைமையிலான ராணுவம் வீழ்த்தி விட்ட நிலையில், இந்த தாக் குதல்களை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப் பிடம் இருந்தும், இலங்கை எதிர்ப்பு சக்தி களிடமிருந்தும் எதிர் பார்த்தேன். எனது அரசு மீதான அனைத்து குற்றச் சாட்டுகளும் தவறானவை. உண் மைக்கு அப்பாற்பட்ட நோக்கம் கொண்டவை.

இந்த நாட்டின் ஒரு பகுதி 2009-க்கு முன்பு (தமிழ்) ஈழம் என அடையாளம் காணப்பட்டது. இது போர் நிறுத்த உடன்படிக்கையிலும் ஏற்கப்பட்டு, சிறிது அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் வழிவகுத்த போர் நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் ஒழிக்க முடியாமல் போயிருந்தால், இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மக்களை ஏமாற்றும் ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!


திரிபுரா அரசு முடிவு!!


அகர்தலா, மார்ச் 24- ஜோசியர்களும், சாமி யார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

திரிபுரா மாநிலத் தில் சில ஜோசியர்கள் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சி களை நடத்து கின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என் றும் தங்களை அழைத் துக் கொள்ளும் சில ரும் தொலைக்காட்சி யில் நிகழ்ச்சி நடத்து கின்றனர்.

இந்த நிகழ்ச்சி களின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின் றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும் பத்தின் நலனுக்காக சில சித்து வேலை களை செய்ய வேண் டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந் திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத் துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

சாமியார்களும், மந் திரவாதிகளும் ஜோசியர் களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம் பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சி களை தொலைக்காட்சி யில் செய்து காட்டுகின் றனர். தொலைபேசி யில் கேள்வி கேட்டு இறுதி யில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசி யர்களும் மந்திரவாதி களும் அழைப்பு விடுக் கின்றனர்.

இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படு கின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.
சட்டமன்ற தேர் தல் போன்ற சில முக் கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என் றும் தற்போது சட்ட மன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்தி ரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழிப்பறி திருட்டு


ஆவடி, மார்ச் 24- ஆவடி காந்தி நகர் வேதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி ராதா (53). நேற்று இரவு ராதா தனது மாமியார் அம்முகுட்டியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து இரவு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர்களை மறித்து நிறுத்தினர். ராதா அணிந்திருந்த அய்ந்து பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

திருநின்றவூர் லட்சுமிபுரம் 4ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராகிணி (40). இவர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ராகிணி, மகன் கார்த்திக்குடன் முருகேசன் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு திரும் பினார். 12ஆவது குறுக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை பகுதியில் அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மறித்தனர். ராகிணியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். இரண்டு வழிப்பறியிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ஆவடி, திருநின்றவூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அம்மன் கோவிலில் நகை கொள்ளை

திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழண்டியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை திருடினர். பின்னர் உண்டியலை கடப் பாரையால் உடைக்க முயற்சித்தனர். சத்தம்கேட்டு அருகில் வீட்டில் வசிக்கும் ஒருவர் குரல் கொடுக்கவே கொள்ளையர்கள் தப்பிசென்று விட்டனர்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சி.பி.அய்.

செய்தி: மாணவர்களாகிய நீங்கள் நடத்திய போராட்டம்தான் தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறச் செய்தது. 2009இல் வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டிருக்காது. - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு

சிந்தனை: 2009 மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுதோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.அய்.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள், மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளிய கருத்து என்ன தெரியுமா?

இலங்கைப் பிரச்சினை - மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்குமிடையே உள்ள பிரச்சினை - இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டாரே!

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு சொல்லி நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?

ஆக, கம்யூனிஸ்டு பார்வையில் இலங்கைப் பிரச்சினை ஒட்டு மொத்தமான நாட்டுப் பிரச்சினை இல்லை, அப்படித்தானே? இனி மேலாவது தோழர் தா.பா. நீட்டி முழக்க மாட்டார் என்று நம்புவோமாக! ஈழத் தமிழர் பிரச்சினையை ஏகடியம் செய்யும் கட்சியினர் தி.மு.க.வையே சதா குற்றம் சுமத்துவது தான் வேடிக்கை - விநோதம்!

தமிழ் ஓவியா said...

நெஞ்சுக்கு நஞ்சு

கேள்வி: திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தி யில. நீங்க எப்படி அல்லா.. அல்லானு பாட்டுப் பாடினீங்க?

எம்.எஸ்.வி: அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங் களுக்குப் பக்கத்துலேயே இருப் பாங்க. முகமது பின் துக்ளக் படத்துல அல்லா.. அல்லா பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன்.

ஆனா, சோ அந்தப் பாட்டை நான் தான் பாடனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியா துன்னு சொல்லிட்டேன். சரி... யாரையெல்லாம் நீ பாட வைக் கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப் போம்னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான் போலனு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டிலாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண் மையைச் சொன்னார் அது. சீட்டு எழுதுனப்போ எல்லா சீட்டு லயுமே என் பேரைத்தான் எழுதி வெச்சிருக் கார் அந்த மனுஷன்!

இசை இயக்குநர் எம்.எஸ். விசுவநாதன் ஆனந்தவிகடன் இதழுக்கு (27.2.2013) அளித்த பேட்டி தான் மேலே கண்டது.

மேம்போக்காக பார்த்தால் இதில் மறைந்திருக்கும் நாகப் பாம்பு என்ன என்று தெரியாது.

அந்தப் பாடல் நாகூர் அனிபா வால் பாடப்பட்டால் சிறப்பாக இருக் கும் என்று இசை இயக்குநர் எம்.எஸ்.வி. நினைக்கிறார். விட்டு விட வேண்டியதுதானே? எம்.எஸ்.வி.யைவிட இசை மேதையா திருவாளர் சோ ராமசாமி?

நாகூர் அனிபா முசுலிம் ஆயிற்றே - அவரைக் கொண்டு பாடச் செய்தால் எப்படி என்கிற இந்துத் துவா விஷப்பூனை தான் சோ மன தின் ஆழத்தில்.

யார் பாடுவது என்ற முடிவைச் செய்ய சீட்டுக் குலுக்கிப் போடும் தந்திரம் கையாளப்பட்டு, எல்லா சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரையே எழுதி வைத்திருந்தார் சோ என்றால் இவர்களின் அறிவு நாணயத்தையும், மோசடியையும் நம் தமிழர்கள் என் றைக்கு உணரப் போகிறார்களோ!

தமிழ் ஓவியா said...

புதிய போப்

வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டது - மூப்பின் காரண மாக பெனெடிக்ட் தாமாக முன் வந்து பதவி விலகி வழி விட்டார். அடுத்த போப் யார் என்பது உலக அரங்கில் கேள்வியாக எழுந்தது. ஜனநாயக அடிப்படையில் போப் தேர்வு என்பது கூட ஒரு சிறப்புதான் (அது என்ன சங்கராச்சாரி மடமா?)

புதிய போப் ஜார்ஜ் மேரியோ பெர் கோக்லியோ (இப்பொழுது பிரான் சிஸ் என்று பெயர் மாற்றம்!) எளிமையானவர், பேருந்தில் பயணம் செய்யக் கூடியவர் என்பதெல்லாம் வித்தியாசமானதுதான்.

பக்தர்களுக்கு இவர் வாழ்த்துச் சொல்லுவதற்குப் பதிலாக பக்தர்கள் இவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக் கிறார்கள்.

மற்றவர்களைவிட போப் உயர் வானவர் என்பதற்காக ஸ்டூல்மீது போப் நிறுத்தப்படுவது வழக்கமாம் - அதையும்கூட இவர் தவிர்த்து இருக்கிறார்.

இந்தப் பக்கம் கொஞ்சம் கவனத் தைத் திருப்புக! எங்கே உட்கார்ந் திருந்தாலும் சங்கராச்சாரியார் உயரமான மேடையில்தான் பீடத்தில் உட்கார்ந்திருப்பார் - காரணம் ஜகத் குருவாம்.

சென்னையில் 1983இல் இந்திய சமய கலை விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் அவ்விழாவில் பங்கு கொண்டார். அப்பொழுதுகூட சங்கராச்சாரி யாருக்கு உயரமான மேடை!

முதல் அமைச்சருக்கு சால்வை யைக்கூட அவர் கையால் போர்த் திடவில்லை தம் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்துதான் போர்த்தச் செய்தார்.

போப்பையும் - சங்கராச்சாரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

இசை இயக்குநர் இளையராஜா

எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் என்று நான் நம்பியிருந்த ஒருவரிடம் என்னுடைய வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத் தையும் ஒப்படைத்திருந்தேன். ஆனால், அவரோ என்னை மோசம் செய்துவிட்டு ஒரு கணிசமான தொகையுடன் ஓடித் தலைமறைவாகி விட்டார். நல்லவனாய் நடித்து இதுபோல் மோசம் செய்யலாமா? தெய்வம் இதைக் கேட்காதா?

- ராமசாமி, கோபிசெட்டிபாளையம்

இளையராஜா பதில்: இதை நாம் எடுத்துக் கொள்ளும் விதம்தான் நம்மை பாதிக்காமல் இருக்க வைக்கும். பகவான் சிறீ ரமண மகரிஷியிடம் - அவருடன் அருகில் இருந்து நாட்களைக் கழிக்க முடிவு செய்த ஒரு அயல் நாட்டுப் பெண் மணி, பகவானிடம் புகார் செய்தாள், பாவம் ஏழைப் பையனாய் இருக் கிறானே என்று என்னுடனேயே தங்க வைத்து எனக்கு ஏவல் வேலை செய்ய வைத்திருந்த பையன் என் நகையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டான் என்று.

பகவான் சொன்னார். பார்த் தாயா? நீ எப்போதோ போட்டுக் கொள்வதற்காக வாங்கி வைத்த நகையே - உன்னுடன் எப்போதும் துணைக்கு இருந்த பையனை நீ பிரியக் காரணமாகி விட்டது? என்று; ஆக எல்லாமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான இருக் கிறது! என்கிறார் இளையராஜா. (குமுதம் 27.3.2013)

அர்த்தம் கொழுத்த இந்து மதத்தில் தத்துவார்த்தங்களை இப்படி எல்லாம் இசை இயக்குநர் இளையராசா தொடர்ந்து குமுதத் திலே உதிர்த்துத் தள்ளுகிறார்.

இருந்தும் இருந்தும் ரமண ரிஷியைத் துணைக் கழைத்தாரே - அதுதான் படு தமாஷ்!
தம்முடன் தங்கி இருந்த சீடர் தன் நகைகளை திருடிக் கொண்டு ஓடியதற்கு ரமண ரிஷியையா எடுத் துக் காட்டுக்காகக் கூற வேண்டும்? - அவர் என்ன ஆசா பாசமற்றவரா? - பொருள்கள்மீதான பற்றினைத் துறந்தவரா?

ரிஷி வேடம் போட்டு ஏராளமான சொத்துக்களைக் குவித்த அந்த ஆசாமி, அத்தனை திரண்ட சொத் துகளையும், தன் சகோதரர் மகனுக் குத்தானே எழுதி வைத்தார்.

வழக்குத் தொடுக்கப்பட்டதே - துறவிக்கு அண்ணன் தம்பி பாச மெல்லாம் இருக்கலாமா? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்பொழுது துறவி யானேன்? அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது! என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லையா ரமண ரிஷி?

(நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற அருள்பாலித்த அந்த ரமணரிஷி எந்த நோய் கண்டு இறந் தார் என்றெல்லாம் சொல்லுவது உகந்ததல்ல என்பதால் அதனைப் புறந்தள்ளுகிறோம்).

தமிழ் ஓவியா said...

திரிபுரா வழிகாட்டுகிறது!


ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்று கின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் தொலைக் காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச் சிகளை தொலைக்காட்சியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.

இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத் தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.

இந்தத் தகவல் இந்தியா முழுமையும் நல்லதோர் சிந்தனை - பகுத்தறிவு மனப்பான்மை முகிழ்த்துக் கிளம்புவதற்கு வித்திடும் என்று எதிர் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய திரிபுரா மாநில அரசையும் முதல் அமைச்சரையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

சாமியார்கள்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அவர்கள் மோசக்காரர்கள். காமக் கொடூரர்கள் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபித்துக் கொண் டுள்ளன.

விளம்பரம் பெற்ற சந்திரா சாமியார் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் - அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களின் ஆலோசகர்களாக இருந்து ஆயுத பேர ஊழல் வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு!

தமிழ் ஓவியா said...


ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் சாரியார்கள் கொலைக் குற்றத்தில் சிக்கி சிறைச்சாலைக்குச் சென்று வந்து விட்டார்கள். இவர்களின் காவி வேடம் என்பது இவர்கள் செய்யும் காலித்தனங்களுக்கு, மோசடிகளுக்கு மூடு திரையாக உள்ளது என்பதுதான் உண்மை.

அதேபோல சோதிடம் என்பதும் இந்த நாட்டைப் பீடித்த கேடாகும். மக்களைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.

பூமியிலிருந்து எத்தனையோ லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் இங்குள்ள மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பதெல்லாம் எத்தகைய பைத்தியக்காரத்தனம்?

சோதிடத்துக்கும், அறிவியலுக்கும் ஏதாவது சம்பந்த முண்டா? கோள்களின் பட்டியலில் நட்சத்திரமாகிய சூரியனை இணைத்து சோதிடம் கூறிக் கொண்டு திரிகிறார்களே - இதைவிட நகைச்சுவை வேறு ஏதேனும் உண்டா?

பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளின் பட்டியலில் சேர்த்து பூமியைக் கை விட்டுவிட்ட இந்தப் புத்திசாலிகள்பற்றி எப்படி மதிப்பிடுவது!

உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடைபெற்ற நேபாளத்தில் இந்து மன்னர் குடும்பமே சோதிட நம்பிக்கை யால் படுகொலை செய்யப்பட்டதை எல்லாம் பார்த்த பிறகும் கூட சோதிடத்தை அனுமதிக்கலாமா?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சோதி டத்தைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்த்தது. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைக்க முனைந்ததும் (திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது) நாம் இன்னும் காட்டு விலங்காண்டி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51(ய)) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி சோதிடம், சாமியார் குப்பை களை அறிவியல் கருவியான தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வெளியிடலாமா?
திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்காரை வெகுவாகப் பாராட்டுகிறோம். பல எதிர்ப்புகள் வரும், விமர்சனங்கள் வெடிக்கும்; அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உறுதியாக நின்று முறியடித்து இந்தியாவுக்கே பகுத்தறிவு வெளிச்சம் கொடுத்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதற்குப் பிறகாவது மத்திய - மாநில ஆட்சிகள் அறிவுக் கொள்முதல் பெறட்டும்! செயல்படட்டும்!!

தமிழ் ஓவியா said...


போகாதே!


அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...


தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் படையைத் திரட்டுகிறாராம் பார்ப்பன சு.சாமி

துரோணாச்சாரி என்ற பார்ப்பனர் யுத்தத்திற்கு அர்ஜுனனைத் தயார் செய்ததுபோல தமிழர்களைத் தீர்த்துக் கட்ட பார்ப்பனப் படை ஒன்றைத் தயாரிக்கப் போகிறாராம்! தமிழர்கள் யார் தெரியுமா? பொறுக்கிகளாம்- சொல்லுவது யார்? ஒரு பூணூல் திருமேனி!

இது வன்முறை தூண்டுதல் அல்லவா? தமிழ்நாடு அரசு அடக்கப் போகிறதா? அல்லது தமிழர்கள் அடக்க வேண்டுமா? (வன்முறையால் அல்ல!)

தமிழ் ஓவியா said...


சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!


சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலி யுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறு வனம் சிங்களத்தில் துண்டறிக்கை அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பிரச்சினையில் சரவணா ஸ்டோர் சிக்கியுள்ளது.

இந்தக் கடைகளில் பலவகையான சிங்களப் பொருள்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இந்தக் கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருள்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களுக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிருவாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.

கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருள்கள் மற்றும் எந்தத் தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களையும் சிங்கள மொழியிலேயே அச்சடித்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டி வருகிறது.

தமிழ் ஓவியா said...


கச்சத்தீவுப் பிரச்சினை


கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற ஒரு வேண்டு கோளைத் தமிழக முதலமைச்சர் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இல்லையேல் உச்சநீதி மன்ற வழக்கின்மூலம் அதனைச் சாதிப்போம் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது தேவையில்லாமல் தி.மு.க.வையும், அதன் தலைவரையும் குறைகூறியது தேவையானது தானா? அப்படி சொன்ன தகவல்களும் சரியானவை தானா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.

1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தபோது, அன்றைய சட்ட அமைச்சர் மாதவன் (தி.மு.க.) அவர்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டு, நேரிலும், எழுத்து வடிவத்திலும் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டதெல்லாம் ஆவண ரீதியான சான்றாகும்.

1974 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்கூட தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தது.

நெருக்கடி நிலை காலத்தில் - 1976 இல் அந்த உரிமை பறிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 1976 முதல் 1989 வரை அ.இ.அ.தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது -அதுவும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டுதானே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தம் செல் வாக்கைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்டிருக்க லாமே; செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ளாரே - இந்தப் பிரச்சினை யில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கவேண்டியதுதானே!

முதன் முதலில் (1991 இல்) இவர் முதலமைச்சராக வந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது கச்சத்தீவை மீட்பேன்! என்று சூளுரைத்தாரே - அதற்குப் பின் எத்தனைத் தடவை தேசியக் கொடியை ஏற்றி யிருப்பார்? 22 ஆண்டுகளுக்குமுன் கொடுத்த அந்த முழக்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழாதா?

2008 இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே 1997 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் (29.7.1997).

அதற்கு இரு நாள்களுக்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடத்தப்பட்ட தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் அறிவித்தபடி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு அது.

நீதியரசர் ஜெயசிம்மபாபு அவர்களால் விசா ரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்மனுதார ருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டது.

ரிட் மனுவில் தெளிவான சட்டப் பிரிவு சுட்டிக் காட்டப்பட்டது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(சி) என்ன கூறுகிறது?

எந்த ஒரு மாநிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட வேண்டுமானாலும், குடியரசுத் தலைவரின் பரிந் துரைப்படி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய அரசமைப்புப் பிரிவு 3 இல் இணைப்புப் பகுதியில் குறிப்பிடப்பட் டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவையின் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும்.

சட்ட ரீதியான இந்த வழிமுறைகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிரச்சினையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், தமிழர் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி என்ற அடிப்படையில் கச்சத்தீவின் உள்ளும், புறமும் உள்ளிட்ட இந்தியக் கடல் எல்லைக் குள் மீன் பிடிக்கும் வகையிலும் மாண்புமிகு நீதி மன்றம் உடனடியாக இடைக்கால ஆணை பிறப்பிக் குமாறும் அந்த ரிட் மனுவில் கேட்டுக்கொள் ளப்பட்டது.

16 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இது நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!27-3-2013

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)