Search This Blog

6.3.13

வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

பொது வேலை நிறுத்தம்
ஜெனிவா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்க அரசால் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக டெசோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் தி.மு.க. கொடுத்த கடும் அழுத்தத்தின் காரணமாக, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தொடர்ந்து வலியுறுத்தல் காரணமாக இந்திய அரசு அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
அந்தத் தீர்மானத்தின் காரணமாக உலக அரங்கில் இலங்கை சிங்களவாத இனவெறி அரசு அம்பலப்படுத்தப்பட்டது என்பதுதான் அதன் திரண்ட பலனாகும். அந்த விளைவும் மிக முக்கியமானதே!

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை இலங்கை அரசே விசாரணை நடத்தவேண்டும் என்ற அந்தத் தீர்மானம் ஏற்புடையதல்ல என்ற நிலையில், இப்பொழுது அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தில் அய்.நா.வின் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு இலங்கையில்  விசாரணை நடத்தும் என்று உத்தேச தீர்மானம் கூறுகிறது - இது வரவேற்கத்தக்கதாகும்.

இதற்கு முன்பே இந்தோனேசியாவைச் சேர்ந்த மார்சுகிடாரூஸ்மன் என்பவரைத் தலைவராகவும், அமெரிக்காவின் ஸ்டீபன் ரட்னர், தென்னாப்பிரிக் காவின் மேடம் யாஸ்மின் குகா ஆகியோர் குழு இலங் கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றச்சாற்றுகளை வெளிச்சத்திற்கும் கொண்டு வந்துவிட்டது.

இலங்கையில் சிங்கள அரசால் நடத்தப்பட்ட அரச பயங்கரவாதங்களை அது வெளியிட்டது.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் அய்.நா. சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்பட்சத்தில் இலங்கை அரசு உலக அளவில் கடும் அதிருப்திக்கு ஆளாகியே தீரும்.

இது நடக்கவேண்டுமானால் இந்திய அரசு - அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்கவேண்டும்.

இதனை வலியுறுத்தி இந்திய அரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கச் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

அதற்கான முயற்சிகளை கலைஞர் அவர்களின் தலைமையிலான டெசோ தன் தோளில் போட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
இந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் (8.2.2013); நேற்று சென்னையில் உள்ள இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம்.

இதே நாளில் டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில்  தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதுபற்றி விவாதிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

நாளை (7.3.2013) டில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் மாநாடும் நடைபெற உள்ளது.

நேற்றுப் போராட்டம் நடத்தப்பட்ட கையோடு சற்றும் தாமதிக்காமல் அடுத்த கட்டப் போராட்டத்தை டெசோ அறிவித்துவிட்டது.

வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கான ஏற்பாடு அது.

அடுத்து ஒரு வாரத்தில் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்துகிறபடியால், இந்தியாவின் கவனத்தை ஈர்க்கவும், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்குத் துணை புரியும் வகையிலும் போர்க் குற்றவாளி ராஜபக்சேவை குற்றக் கூண்டில் நிறுத்தவும் இது நல்ல முறையில் பயன்படும்.

டெசோ இரண்டாவது முறை புதுப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயல்பாடுகள் உள்ளூர் முதல், உலகம்வரை நல்ல அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்களின் மீள் வாழ்வுக்கு டெசோவே உத்தரவாதம் என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.

இதற்குப் பிறகாவது டெசோமீது கல்லெறியும் போக்கைக் கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

வரும் 12 ஆம் தேதி நடத்தப்பட உள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே எழுந்து நிற்கட்டும்!


                       -------------------------”விடுதலை”  தலையங்கம் 6-3-2013

25 comments:

தமிழ் ஓவியா said...


மார்ச் 12 இல் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் டெசோ தீர்மானம்


அமெரிக்கா கொண்டுவரும் ஜெனிவா தீர்மானம்: இந்தியா ஆதரிக்க வலியுறுத்திட
மார்ச் 12 இல் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் டெசோ தீர்மானம்சென்னை, மார்ச் 6- ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெ ரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் மார்ச் 12 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் செய்வது என்று டெசோவில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்று (5.3.2013) நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அண்ணா அறி வாலயத்தில், நேற்று மாலை டெசோ உறுப் பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர், தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமா வளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண் டியன், துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சிங்கள அதிபர் ராஜபக்சே அவர் களை எதிர்த்தும் தீக்குளித்து; சிகிச்சை பலனின்றி மறைந்த கடலூர் திரு. மணி அவர்களின் மறைவுக் காக டெசோ சார்பில் அவர்களுடைய குடும் பத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கின்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்து கின்ற வகையில் டெசோ இயக்கத்தின் சார்பில் வருகின்ற 12.3.2013 அன்று தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.

இந்தப் பொது வேலைநிறுத்த அறப்போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வியாபார நிறுவனங்கள், மாண வர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும்.
(விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி சிதம்பரத்தில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம்


அய்.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர் (சிதம்பரம், 5.3.2013).

சிதம்பரம், மார்ச் 6- அய்.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ரயில் மறி யல் போராட்டம் நடத்தினார்கள்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், அய்.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவுதர வலியுறுத் தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் பல கட்ட போராட் டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், அய்.நா.வில் இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரியும், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப் புகளை புறக்கணிப்பு செய்து கல் லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசை கண்டித்தும், ராஜபக்சேவை கண்டித்தும் மாணவர்கள் முழக் கங்களை எழுப்பினார்கள். இதைதொடர்ந்து, மாணவர்கள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலை யத்திற்கு சென்று அங்கு திருச்சி- சென்னை நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயிலை மதியம் 12.35 மணிக்கு மறியல் செய்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அதன்பின், காவல்துறை யினர் மாணவர்களை சமாதானப் படுத்தினார்கள். இதையடுத்து, போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் நேற்று மதியம் 12.35 முதல் 12.45 வரை 10 நிமிடம் சிதம்பரத்தில் சோழன் விரைவு ரயில் நின்று சென்றது.

தமிழ் ஓவியா said...


சேனல்-4 இயக்குநர் கெலாம் மெக்ரே பாராட்டு


சென்னை, மார்ச் 6- ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக `சேனல் 4 தொலைக்காட்சி தயாரிப் பாளர் `கெலாம் மெக்ரே தொலைப்பேசி மூலம் நன்றி கூறினார். ஈழத் தமிழர்களுக்காக `சேனல்-4 அளித்த ஆதரவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நன்றி கூறினார்.

இது குறித்த செய்தி வருமாறு :-

கலைஞருக்குப் பாராட்டு

சிங்கள அரசால் ஈழத் தமிழர் இனப் படுகொலை செய்யப்பட்ட கொடூரக் காட்சிகளை சேனல்-4 மூலமாக படம் பிடித்துக்காட்டிய அதன் தயாரிப் பாளர் கெலாம் மெக்ரே தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் சேனல்-4 வெளியிட்ட துயரக் காட்சிகள் எங்கள் மனதை ரண மாக்கி கண்களை குளமாக்கியது. உலக அளவில் இந்தக் காட்சிகளை கொண்டு சென்று ஈழத் தமிழர் களுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கும், பிரச்சாரத் திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கெலாம் மெக்ரேவிடம் கூறினார்.

மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு

இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைக் கண்டித்தும், 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரக்கொலையைக் கண்டித்தும், ஜெனி வாவில்உள்ள மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மா னத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கூட்டத்தில் கண்டன முழக் கங்களை எழுப்பிய போது சேனல்-4 தொலைக் காட்சித் தயாரிப்பாளர் கெலாம் மெக்ரே சுவிட்சர் லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவிலிருந்து தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு டெசோ சார்பில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

உரிய நேரத்தில் இப்போராட்டத்தை அறிவித்த டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் அவர் களுக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக் கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அப்போது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், கெலாம் மெக்ரே அவர்களிடம், தாங்கள் இலங்கை யில் நடைபெற்ற ஈழப் போரில் இலங்கை ராணு வத்தின் அத்துமீறல்களையும், ஈழத்தமிழர்களின் துயரங்களையும் சேனல்-4 மூலமாக உலகத்திற்கு உண்மை நிலையை வெளிப்படுத்தியதற்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள் வதாகக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர்களே, தி(இ)னமலரைப் புரிந்துகொள்வீர்!


நேற்று சென் னையில் ஈழத் தமி ழர்களின் மீள் வாழ்வுக்காக நடைபெற்ற இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம்பற்றி செய்தி வெளி யிட்ட பார்ப்பன இனமலர் ஏடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரை மட்டும் மிகவும் விழிப்பாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளியிட்டது.

தினமலர் என்பது இனமலர்தான், பார்ப்பன மலர்தான் என்பதைத் தமிழர்களே, புரிந்துகொள்வீர்!

தமிழ் ஓவியா said...


சனிக் கோளில் மறைந்துள்ள நிலவுகள்


சனிக்கோள், ஏற்கெனவே 62 பெரிய நிலவுகளை உள்ளடக்கி வைத்திருக்கிறது. அதன் ஊடே பனிக்கட்டி வளையங்களின் மேலும் பல துணைக்கோள்கள் புதைந்து கிடக்கலாம் என கருதப்படுகிறது. வியாழன் கோளைப் போல, சனியையும் நிலவுக் குடும்பத்தைச் சேர்ந்த பல கோள்கள் சுற்றி வருகின்றன. பேரளவு பரப்பு கொண்ட 5150 கிலோ மீட்டர் அகலமுள்ள டிட்டான் முதல் 302 கிலோ மீட்டர் அகலமுள்ள மீதோன் வரையிலான கோள்கள் சுற்றி வருகின்றன. இருந்தாலும், சனி வளையத்தின் வரிசையில் இன்னும் பல நிலவுகள் உள்ளன. பனி வளையங்களில் சிறு உலகங்கள் புதைந் துள்ளன. இவ்விவரங்களை டிஸ்கவரி தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


சவமாகி விட்டதா? பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத்தமிழர் பிரச்சினை?


என்ன செய்வது! தமிழ் நாட்டில் இருந்துகொண்டு, தமிழிலேயே ஏடு நடத்தி, தமிழர்களிடையே விற்று காசாக்கிப் பிழைப்பு நடத் திக்கொண்டு இருந்தாலும் தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்றாலே விஷம் கக்கும் பார்வையில் பார்த்து நாச மாகப் போக! என்று சபித்து, தமிழர்களைக் காட்டிக் கொடுத்து, தமிழின விரோத நச்சுக் கருத்துகளைச் சன் னமாக தமிழர்களிடையே பரப்பும் பாசிச வேலையில் பார்ப்பனர்கள் நயவஞ் சக மாக ஈடுபட்டு வருவதும், அதற்கு அப்பாவித் தமிழர்கள் பலிகடா ஆவதும் தொடர் கதை, இவற்றை யெல்லாம் தமிழினத் தலை வர்கள் ஊர் ஊராகத் தூக்கிச் சுமந்து கொண்டுதான் இருக்கவேண்டும்.

நாளை டில்லியில் டெசோ சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கு அவாளை வெகு பாடுபடுத்தி யிருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

ஈழத் தமிழர் படுகொலை பற்றிய சிந்தனை என்பது பார்ப்பனர்களைப் பொறுத்தவரை செத்துப் போன ஒன்று என்று, இந்தக் கார்ட்டூன் தெரிவிக்க வில்லையா?

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதநேயம் உள்ளவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினைக்காகக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் - பாலகன் பாலச்சந்திரனின் படுகொலையை தாங்க முடியாமல் பதறி ரத்தக்கண்ணீர் வடிக்கும் ஒரு காலக்கட்டத்தில், அது ஒரு செத்துப் போன பிரச்சினை என்று பார்ப்பனப் பதர்கள் கேலி செய்வதை இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் தமிழர்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை.

எங்கே பிணம் விழும்? கருமாதி செய்து காசு பறிக்கலாம் என்கிற புரோகிதப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா, என்ன? இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்தார். இலங்கையிலே தமிழர்கள் தாக்கப்பட்ட நேரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அங்கு சென்ற அவர், ஒரு பார்ப்பனக் குடும்பம் பாதிக்கப்பட்டது என்று சொல்லி, அந்தப் பார்ப்பனக் குடும்பத்தையே தன்னோடு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வரவில்லையா?

ஈழத்திலே பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டு இருந் தால், தினமணிகள் இப்படியெல்லாம் கார்ட்டூன் போடுமா?

ஈழத் தமிழர்களுக்காக பதறுபவர்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் காட்டிக் கொடுத்தும், கேலி செய்தும் அன்றாடம் பிழைப்பு நடத்தும் இந்தப் பார்ப்பனர்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பாதது ஏனோ?

கூடுதல் தகவல் (TAIL-PIECE):

சவப்பெட்டி ஊழல் கட்சியை ஆதரிக்கக் கூடிய கூட்டம் - இப்படியெல்லாம் கார்ட்டூன் போடுகிறது என்பதும் கூடுதல் தகவல்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான்


பார்ப்பான் தன் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் எவனோ, அவனை எல்லாம் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்களாக ஆக்கி விடுகின்றான். பார்ப்பனர்கள் தம் காலைக் கழுவ மறுப்பவனை ஒழித்தே கட்டி இருக்கின்றார்கள்.
(விடுதலை, 2.9.1960)

தமிழ் ஓவியா said...


மகளிர் தின வாழ்த்துகடந்த மகளிர் ஆண்டு பெண்களுக்கு - இந்தியாவைப் பொறுத்தவரை வேதனை - சோதனைகள் நிறைந்த ஆண்டாகும்.

அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, களையப்பட்டு, பெண்களின் சுயமரியாதையும், சம உரிமையும் காப்பாற்றப்படுவதற்கான எல்லா முயற்சிகளும் ஆக்க ரீதியான செயல்பாடுகளும் முகிழ்த்துக் கிளம்ப வேண்டும்.

இந்தியாவில் சட்டமன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடங்களுக்கான சட்டம் எக்காரணம் கொண்டும் இனியும் அலமாரியில் தூங்கிட அனுமதிக்கப்படக் கூடாது.ஆண்கள் இதற்குத் தோள் கொடுப்பார்கள் என்று நம்பி தாய்க்குலம் இனியும் ஏமாற வேண்டாம்!

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆழ்ந்த பட்டறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையை நெஞ்சில் ஏந்தி வீதிக்கு வந்து போராட வேண்டும் பெண்கள்!

திராவிடர் கழகம் இதற்கு எல்லா வகைகளிலும் தோன்றாத் துணையாக இருக்கும். இதுவே திராவிடர் கழகத்தின் உலக மகளிர் நாள் செய்தி.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்புதுடில்லி
8.3.2013

தமிழ் ஓவியா said...

டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் : அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுக் கருத்துரை!


இந்திய அரசின் கடமை வலியுறுத்தப்பட்டது

டில்லியில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைவர்கள் (7.3.2013)

புதுடில்லி, மார்ச் 8- புதுடில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் நேற்று (7.3.2013) மாலை சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கட்சிகளும் பங்கேற்று, இந்தியாவின் கடமை வலியுறுத்தப் பட்டது.

மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதுவரகத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம் மிக வெற்றிகரமாக - பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கொடுங்கோலன் இராஜபக்சேவைப் போர்க் குற்ற வாளியாக அறிவிக்க டெசோ அமைப்பு வற்புறுத் தியது.

பொது வேலை நிறுத்தம்

அன்று மாலையே டெசோவின் தலைவர், கலைஞர் அவர்களது சீரிய தலைமையில் கூடி, இந்திய அரசு அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தின் சார்பில் ஜெனிவாவில் இலங்கை அரசைக் கண்டித்து மனித உரிமை மீறல்களுக்காக - அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை மேலும் தர வேண்டும்; அதன் மூலம் தமிழர்களது உணர்வு களைக் காட்ட 12.3.2013 அன்று முழு அடைப்பு பொது வேலை நிறுத்தம் - ஆகியவைகளை நடத் துவது என்று தீர்மானித்தது.

உடனடியாக ஏற்கெனவே முடிவு செய்தபடி டில்லித் தலைநகரில் டெசோவின் சார்பில் ஒரு கருத்தரங்கம் - கலந்துரையாடல் நிகழ்வு - மிகவும் சிறப்புடன் புதுடில்லி கான்ஸ்டிடியூவின் கிளப்பில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் 7.3.2013 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

சென்னையிலிருந்து முதல் நாளே 6ஆம் தேதியே புதுடில்லி வந்தடைந்த டெசோ அமைப் பினர்கள், தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருமதி சுப்பு லட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப. வீரபாண் டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), டெசோ ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு முதலிய பலரும் கலந்து ஆலோசித்து அடுத்த நாள் கருத்தரங்க நிகழ்வுகளை ஆய்வு செய்து இறுதி வடிவம் தந்து ஆயத்தப்படுத்தினார்கள்.

பல தரப்பினரும் பங்கேற்பு

தமிழ் ஓவியா said...

டெசோ கருத்தரங்கம் - ஆய்வரங்கம் டெசோ உறுப்பினர்களோடு, திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கவிஞர் கனிமொழி, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியவர்களும் தி.மு.க. முதன்மைச் செயலாளர், துரை. முருகன், முன்னாள் அமைச்சர்கள் ஆ. இராசா, தயாநிதிமாறன், செஞ்சி இராமச்சந்திரன், புதுக்கோட்டை ரகுபதி, இணையமைச்சர்கள் பழனி மாணிக்கம், நாமக்கல் காந்திசெல்வன், டாக்டர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற இரு அவையின் திமு.க. உறுப்பினர்கள் ஏ.கே.எஸ். விஜயன், செல்வ கணபதி, ஆதிசங்கர், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஜின்னா, எலன் டேவிட்சன், வேலூர் ரகுமான் (முஸ்லீம் லீக்) தாமரைசெல்வன், தங்கவேல், வழக்கறிஞர்கள் இராதாகிருஷ்ணன், சட்டக்கதிர் சம்பத், த. வீரசேகரன், முன்னாள் நீதிபதி பரஞ்சோதி, தொ.மு.ச. துணைத் தலைவர், சண்முகம் மற்றும் பலரும் 7.3.2013 மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

ஏராளமான தொலைக்காட்சிகள், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர் கள் வருகை தந்திருந்தனர். பல்வேறு தேசியக் கட்சிகளுக்கு டெசோ அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் அதன் பிரதிநிதியாக தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் ஆன அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர் கள் கலந்து கொண்டார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ஞானதேசிகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ராம்விலாஸ் பஸ்வான் அவர் களின் லோக்தளக் கட்சி செயலாளர், சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் சார்பில் மாநிலங்கள் அவை உறுப் பினர் சுப்ரீயா சூலு, டாக்டர் ஷாபீர், தேசிய மாநாட்டுக் கட்சியினர், மனித உரிமை அமைப்புப் போராளி சுவாமி அக்னிவேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

டில்லியில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைவர்கள் (7.3.2013)

வரவேற்புரை கவிஞர் கனிமொழி எம்.பி.,

வரவேற்புரையை கவிஞர் கனி மொழி அவர்கள் நிகழ்த்தினார். கருத்தரங்கத்தின் அறிமுக உரையை திரு. டி.ஆர். பாலு, வழங்கிய பின்னர் கருத்தரங்கில் முக்கிய உரை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்தி, டெசோவின் நிலைப்பாடு, மனித உரிமை ஆணையத்தின் மூலம் போர்க் குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டிய அழுத்தம்பற்றி தெரி வித்தார்.

தமிழ் ஓவியா said...


தொடர்ந்து டெசோ உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இலங்கையில் உயிர்நீத்த உயிர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க கருத்தரங்கத்தில் அனை வரும் எழுந்து நின்று வீரவணக்கம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் சூடி குசைந ஷ்டிநே என்ற ஆங்கில குறும்படம், (இலங்கையில் நடைபெற்ற வன்முறைகளை விளக்கி உருவாக்கப்பட்டதை) காண்பிக்கப் பட்டது.

நிகழ்ச்சியின் தொடர் நிகழ்வாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டையும், இலங்கைப் பிரச்சினை தொடர்பான ஆழ்ந்த மனக் கவலையையும் தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பை நல்குவதோடு, இந்திய அரசின் கடமையை எவ்வாறு ஆற்ற வேண் டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர். உலக பொது மன்னிப்புச் சபை இயக்குநர் திரு. அனந்த பத்ம நாபன் தங்களது அமைப்பின் சார் பாக உரையாற்றினார்.

பின்னர் டெசோ அமைப்பு சென் னையில் உருவாக்கப்பட்ட தீர்மானங் களை, அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் இந்திய அரசுக்கு வேண்டு கோளைத் தெரிவித்த தீர்மானங்களை டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார். அதேபோல அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்திற்கான வேண்டுகோள் தீர்மானங்களை திருச்சி சிவா கருத்தரங்கத்தில் கலந்து கொண்டோருக்கு அறியும் வண்ணம் வாசித்தளித்தார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

இறுதியாக, கருத்தரங்க முடிவுரை யினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றினார்கள். அப்போது, அவர் டெசோ அமைப்பாளர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ் விற்கு வந்து கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், அனைவருக்கும் அமைப் பின் சார்பில் நன்றியினைத் தெரி வித்து, இன்று நல்வாய்ப்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் இலங்கைப் பிரச்சினை வெகு சிறப்பாக நடை பெற்றதையும், அமெரிக்க அரசு கொண்டு வரவுள்ள தீர்மான முக்கிய அம்சங்களை தாம் அறிந்த சமீபத்திய தகவலின்படி சேர்த்து விளக்கி சிறப்பாக தனது உரையை ஆற்றினார்.

தமிழர் தலைவரின் உரை ஆங்கி லத்தில் சிறிய புத்தக வடிவில் அனை வருக்கும் வழங்கப்பட்டது. இறுதி யாக கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பேரா சுப. வீரபாண்டியன் தனது உரையை ஆற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. தொடர்ந்து செய்தி மற்றும் ஊடகத்துறையினரின் வினாக்களுக்கு நிகழ்வில் தலைவர் டாக்டர் மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி, நிகழ் வாளர் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் பதிலளித் தனர். நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டு மிகச் சிறப்பாக இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது. - புதுடில்லியிலிருந்து நமது சிறப்புச் செய்தியாளர்

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்க்கு வாழ்வாதாரம்: இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு

புதுடில்லி, மார்ச் 8-இலங்கை பிரச்னையில் இந்தியா உறுதியான நிலையை எடுக்க வேண் டும் என்று மக்களவை யில் நடந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆவேசமாக பேசினர். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலை ஏற்காமல் திமுக, அதி முக, பா.ஜ. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையில் ராணு வத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த கடைசி கட்ட போரின் போது ஏராளமான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். மனித உரி மைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மக்க ளவையில் நேற்று கார சார விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் ஆவேச மாக கருத்து தெரிவித் தனர். விவாதத்தை தொடங்கி வைத்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு, பேசுகையில், இலங்கை பிரச்னையில் இந்திய அரசின் நிலை என்ன? பிரதமர் மன் மோகன் சிங் என்ன நினைக்கிறார்? என்று வெளிநாடுகளின் தூதர்கள் கேட்கின்றனர். இந்த விவகாரத்தில் இந் தியாவின் நிலை என்ன? என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் மீண் டும் தமிழ் ஈழ கோரிக்கை எழுப்பும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.

பா.ஜ. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேசு கையில், இலங்கையில் போர்க்குற்ற அநீதிகள் நடந்துள்ளன. 12வயது சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் படத்தை பார்க் கும் யாரும் துயரமடை வதை தவிர்க்க முடியாது என்றார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும்போது, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை உலகமே பார்க்கிறது. இந்த பிரச்னையில் இந்தியா உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். அதிமுக உறுப்பினர் தம்பித்துரை பேசுகை யில், இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுவது தவறு. உண் மையில் 3 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை யின் நட்புக் காக தமிழர்களின் நலனை இந்தியா விட்டுக் கொடுக்க கூடாது என்றார். இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலி யுறுத்தினார். மேலும் தமிழக எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரி, பி.ஆர். நடராஜன், லிங்கம், கணேச மூர்த்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் ஆகியோரும் விவாதத் தில் கலந்து கொண்டு பேசினார்.

விவாதத்துக்கு பதில் அளித்து வெளி யுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா சாத்தியமான சிறந்த முடிவை எடுக்கும். நிலைமை களை ஆராய்ந்து நிதானமாக முடிவு செய்வோம் என்றார்.

அமைச்சரின் பதில் திருப்தியளிக்க வில்லை என்று கூறி திமுக, அதிமுக, மதிமுக, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கட்சி களின் உறுப்பினர் கள் வெளிநடப்பு செய் தனர். உறுப்பினர்களின் ஆவேச பேச்சா லும் வெளிநடப்பாலும் அவையில் பரபரப்பு ஏற் பட்டது.

தமிழ் ஓவியா said...


துக்ளக் பேட்டி: வாசகர் பாராட்டு கொள்கை வேறு - மானுடம் வேறு


நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வீரமணியின் சமகாலத்திய மாணவன். அவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களும் உண்டு. அன்று அண்ணாமலை பல்கலைக் கழகம் பகுத்தறிவுப் பாசறை என பெயர் பெற்றது. பல திராவிடத் தலைவர்கள் உருவாகிய இடம் என்று பேசப்பட்ட காலம் அது.

திராவிட இயக்க விசுவாசிகளுக்கு நிகராக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், காங்கிரஸ் அபிமானி களான நாஞ்சில் மாணவர்கள், இருசாராரும் மோதிக் கொள்வது வழக்கம். நானும், வீரமணியும் கடலூரிலிருந்து ரயிலில் தினமும் பயணிப்பதுண்டு. எங்களுடன் பயணித்தவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். விபூதி சகிதம் எப்பொழுதும் சிவப் பழமாகக் காட்சியளிப்பார். வீரமணி அந்தப் பேராசிரியரிடம் மிக்க மரியாதையுடன், தனது கடவுள் மறுப்புக் கொள்கையை வெளிப்படுத்தாது உரையாடிய பண்பை நான் மறக்க முடியாது.

வீரமணி தன் வாழ்நாள் அனுபவங்களை விருப்பு வெறுப்பின்றி எழுதுகிறார். அது பெரிதும் போற்றுதற்குரியது. கொள்கை வேறு, மானுடம் வேறு என்ற எண்ணம் அவரிடம் அதிகம். அதைப் பிரதிபலிக்கும் வகையில் துக்ளக் பத்திரிகையில் அவரை எழுத வைத்து, வாசகர்களுக்கு அவரை அறிய வாய்ப்பளித்த சோவுக்குப் பாராட்டுக்கள்.

- சி.ஆர். நாராயணன், கடலூர்-2

நன்றி: துக்ளக் 13.3.2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் மனித உரிமை மீறல் : தேவை சர்வதேச விசாரணை! அய்.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை


ஜெனீவா, மார்ச்.8- இலங்கை மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்கா கண்டன தீர் மானம் கொண்டு வர இருக்கிற நிலையில், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமை யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அய்.நா. சபையின் மனித உரிமை கள் கவுன்சில் கூட்டத்தில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை, மனித உரிமைகள் கவுன் சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில், 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க, இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மத் திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவர இருக்கிற நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே இலங் கைக்கு எதிராக ஒரு அறிக்கையை தயாரித்து உள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. 38 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை, அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை கடந்த (பிப்ரவரி) மாதம் 11-ந் தேதி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கை நடத்திய போர் குற்றங் கள், தற்போது இலங்கை செயல் படுத்தி வரும் திட்டங்கள் உள்பட அதில் கூறப்பட்டு உள்ள சில முக்கியமான விவரங்கள் வருமாறு:- இலங்கையில் போர் நடந்த சமயத்தில் பெரியவர்களும், சிறுமிகளு மாக பல ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடி கண்டு பிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப் பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாக செயல்படுத்த வில்லை.

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில், அங்கு போர் முடி வுக்கு வந்த பின்னரும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஏன் திரும்பப் பெறப்பட வில்லை? அதிகாரிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பார் களா? அல்லது வெளியேறி விடு வார்களா? என்று அறிவிக்கப்பட வில்லை. மேலும் அவர்கள் அங்கு நிர் வாகத்திலும் பங்கெடுத்து வருகி றார்கள். சிறுபான்மை தமிழர்கள் நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ராணுவம் வாபஸ் பெறப்படாத துடன், மேலும் மேலும் ராணுவம் குவிக்கப்படுவதாலும், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஈடுபடுவதாலும், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது. பொது மக்களும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்துடன் உள்ளனர். உள்நாட்டு போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்பட வில்லை. இலங்கை அரசின் தேசிய செயல் திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை தமிழர்களின் பிரச் சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது. சிறுபான்மை தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிறைய சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழு மையாக விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களை குடிய மர்த்தும் பணியை முழுமையாக செயல்படுத்த வில்லை. இலங்கை அரசு நியமித்த குழு சமர்ப்பித்த (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு) பரிந்துரை களில் ஒரு சிலவற்றை மட்டுமே இலங்கை அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆகவே, சில பரிந்துரைகளை செயல்படுத்தும்படி இந்த கவுன்சில் இலங்கைக்கு வலியுறுத்துகிறது. 2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக் கையை வெளியிட வேண்டும். சிறு பான்மையினரான தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளையும், நிவா ரணப் பணிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சிறுபான் மையினரான தமிழர்களுக்கு அதிகா ரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். தமிழர்களின் பகுதியில் குவிக்கப் பட்டு உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப் பட்டுள்ள விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.

போருக்குப் பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசா ரணை தேவை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப் பட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல முக் கிய குற்றச்சாட்டுகள், பல முக்கிய பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து

சென்னை, மார்ச் 8 - உலக மகளிர் நாளையொட்டி (மார்ச்சு 8) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: மார்ச் திங்கள் 8ஆம் நாள்! உலக மகளிர் நாள்! மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப் படும் எழுச்சித் திருநாள்!

ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது நீதிக் கட்சி. அந்த நீதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர் சமுதாயம் முன் னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் காலங்களில் உருவாக்கிச் செயல் படுத்திய பல்வேறு திட்டங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாகக் காவல் துறையில் மகளிர் நியமனம்; 1975இல் விதவை மகளிர் மறுவாழ்வுத் திட்டம்; இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்; 8ஆம் வகுப்புவரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல்5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டம்; அத்திட்டத்தை மேம்படுத்தி 1996இல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி; 2001இல் அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்த இத்திட்டத்தை 2006இல் மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாய் என்றும்; 2008இல் 20 ஆயிரம் ரூபாய் என்றும், 2010இல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியமை; பெண்கள் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; அதனை 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மகளிர் பயன்பெற வழி வகுத்தமை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு

இவை தவிர, 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில், கல்வி நிறுவ னங்களில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு; பெண்களுக்குச் சம சொத்துரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு; 2006இல் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங் களைப் புதிதுபுதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்திய தால் பெண் கள் சமுதாயம் இன்று சமூக, அரசி யல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டு வருவதை எண்ணி எண்ணி இறும் பூதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவி லும், ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித் திட எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த் துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...

உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது.

- விடுதலை, 26.2.1968

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள்


இன்று உலக மகளிர் நாள். மக்கள் தொகையில் சரி பகுதியிலிருந்த பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் கூட பெரும் வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

உலக மகளிர் நாளில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விழுமிய கருத்து இது. இந்தியாவில் பெண் சிசுக் கொலை என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது; சட்டங்கள் நகமும், பல்லும் இல்லா தவைகளாகவே அவை உள்ளன.
இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமானால் ஆட்சி அதிகாரம். நிருவாகம், பிரதிநிதித்துவ சபைகள், நீதித்துறைகளில் பெண்களுக்கான இடங்கள் உரிய வகையில் அமைய உறுதிபடுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்கள் 10 விழுக்காடு என்ற சராசரி நிலையில்தான் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இது முசுலிம் நாடுகளைவிட குறைவானது.

பொதுவுடைமை - இடதுசாரி நாடுகளில்கூட ஆட்சி அதிகாரம், பொலிட்பீரோ என்று சொல்லப் படுகிற கட்சியின் உயர் மட்டக் குழுவில்கூட உரிய இடங்கள் அளிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி மிக முக்கியமானது.

இவைகளையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கம் செங்குத்தாக எழுந்து நிற்கிறது. ஆண்கள் தங்கள் தசைப் பலத்தின் மூலமும் (Muscle Power) பெண்களை ஒடுக்கி வருகின்றனர்.

கல்வி வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், உடல் பலத்திலும் பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.

பெண்களை ஆண்கள் போலவே வளர்க்க வேண்டும் - ஆண் பெண் உடையில் மாற்றம் கூடாது. பெயர் வைப்பதில்கூட யார் ஆண்? யார் பெண்? என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரன்றி வேறு யார் தெரிவித்துள்ளார்கள்?

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் - என்கிறார் சமுதாய விஞ்ஞானியாகிய தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியவை எவை? அதற்கு அருமையான பதில் அறிவுலக ஆசான் அய்யா அவர்களிடமிருந்து வந்துள்ளது.

கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து, ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டாக்கச் செய்ய வேண்டும். (குடிஅரசு 26.4.1931) என்று இன்றைக்கு 82 ஆண்டுகளுக்கு முன் சொன்னார் என்றால் அவர்தம் தொலைநோக்கை அறிஞர்கள்தான் சுவைக்க வேண்டும்.

இன்றைக்கும் பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படும் கேவலமான பண்பு மூக்கு முட்ட எழுந்து நிற்கிறது. பெண்களைச் சீண்டுதல் பொழுது போக்காகியுள்ளது.

இதற்கு ஒரே வழி - அடுத்தவர்களை நம்பிப் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதல்ல. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் குஸ்தி, குத்து பழக வேண்டும் என்று சொன்னார் என்றால், இந்தக் காலத்துக்கேற்ப கராத்தே போன்ற பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால் கொஞ்ச காலத்திற்காவது பெண்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் அளிக்கப்பட வேண்டும். நான்கு இடங்களில் காம வெறிக் காலிகள் சீண்டும் இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டால், பிரச்சினைக்குத் தீர்வு கை நுனியில் வந்து சேர்ந்து விடுமே.

தங்களுடைய பிரச்சினைகளை, உரிமைகளை எடுத்து வைக்கும் உரிமை பெண்களுக்குத் தேவை; சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு சட்டம் இன்னும் எத்தனை ஆண்டு காலம் நிலுவை எனும் ஊறுகாய்ப் பானையில் கிடக்கப் போகிறது? பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அடுத்தவர் பார்த்துக் கொடுப்பதல்ல உரிமைகள்! உரிமைகள் வெறும் பிச்சைக் காசல்ல; எந்த நியாயமான உரிமையும் இனாமாகக் கிடைத்து விடாது - அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.

மகளிர் உரிமை நாளில் இந்த உறுதி மொழியை மேற்கொள்ளட்டும் பெண்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. உரிமைகளும் அப்படித்தான்! 9-3-2013

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணிப் போன்றது.

- தந்தை பெரியார்

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை

- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.

- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே

- வால்விச்மன்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.

- பெர்னாட்சா

தமிழ் ஓவியா said...


மதத்திற்கு எதிராக!


தன்னுடைய அடிமைத்தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந்தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான். தொழிற் சாலை அமைப்பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான்.

சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறான். இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது. மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

தமிழ் ஓவியா said...


இந்தியாவை நாசமாக்கும் இந்து மதம்


எவ்வளவு முதலீடு போட்டாலும் எவ்வளவு தூரம் அதைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்தாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பதற்குக் காரணம் வளர்ந்து வரும் இந்து மத மக்கள் தொகைதான் என்பதாக காலஞ்சென்ற பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா சொல்லி இருக்கிறார்.

இந்து மதத்திலுள்ள கொள்கைகள்தான்- சில வழி முறைகள்தான் இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதாக அவர் சொல்கிறார். இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்தியப் பொருளாதார நிபுணர்களைக் கேட்டால் அவர்கள், முதலீடு வருவாய் பங்கீடு விவசாயம் காரணம் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இந்து மத சமுதாயத்திலுள்ள அமைப்புகளையே ஒதுக்கிவிட்டு தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பல வகுப்புகளை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இந்தியாவில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் போட்டுக் குழப்புகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இப்பொழுதும் இந்திய பொருளாதாரம் இருக்கிறது என்றாலும் மக்கள் முன்னேறத் துடிக்கிறார்கள்.

வாய்ஸ் ஆஃப் தி வீக் (நவ.1988)

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்?

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா?

மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டு வதை விடு, அத்துடன் பாட்டை யும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயி களிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக் கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு


இந்து பத்திரிகையில் 10வயது பெண்ணோ அல்லது 12வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே!

இந்தக் காலத்தில் கூட 10வயது அல்லது 12வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத் தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10வயதிலும் 12வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்?

அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் -7)