Search This Blog

6.3.13

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத்தமிழர் பிரச்சினை?

சவமாகி விட்டதா? பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத்தமிழர் பிரச்சினை?
என்ன செய்வது! தமிழ் நாட்டில் இருந்துகொண்டு, தமிழிலேயே ஏடு நடத்தி, தமிழர்களிடையே விற்று காசாக்கிப் பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்தாலும் தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்றாலே விஷம் கக்கும் பார்வையில் பார்த்து நாச மாகப் போக! என்று சபித்து, தமிழர்களைக் காட்டிக் கொடுத்து, தமிழின விரோத நச்சுக் கருத்துகளைச் சன்னமாக தமிழர்களிடையே பரப்பும் பாசிச வேலையில் பார்ப்பனர்கள் நயவஞ் சக மாக ஈடுபட்டு வருவதும், அதற்கு அப்பாவித் தமிழர்கள் பலிகடா ஆவதும் தொடர் கதை, இவற்றை யெல்லாம் தமிழினத் தலை வர்கள் ஊர் ஊராகத் தூக்கிச் சுமந்து கொண்டுதான் இருக்கவேண்டும்.
நாளை டில்லியில் டெசோ சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கு அவாளை வெகு பாடுபடுத்தி யிருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
ஈழத் தமிழர் படுகொலை பற்றிய சிந்தனை என்பது பார்ப்பனர்களைப் பொறுத்தவரை செத்துப் போன ஒன்று என்று, இந்தக் கார்ட்டூன் தெரிவிக்க வில்லையா?
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதநேயம் உள்ளவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினைக்காகக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் - பாலகன் பாலச்சந்திரனின் படுகொலையை தாங்க முடியாமல் பதறி ரத்தக்கண்ணீர் வடிக்கும் ஒரு காலக்கட்டத்தில், அது ஒரு செத்துப் போன பிரச்சினை என்று பார்ப்பனப் பதர்கள் கேலி செய்வதை இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் தமிழர்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை.
எங்கே பிணம் விழும்? கருமாதி செய்து காசு பறிக்கலாம் என்கிற புரோகிதப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா, என்ன? இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்தார். இலங்கையிலே தமிழர்கள் தாக்கப்பட்ட நேரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அங்கு சென்ற அவர், ஒரு பார்ப்பனக் குடும்பம் பாதிக்கப்பட்டது என்று சொல்லி, அந்தப் பார்ப்பனக் குடும்பத்தையே தன்னோடு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வரவில்லையா?
ஈழத்திலே பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், தினமணிகள் இப்படியெல்லாம் கார்ட்டூன் போடுமா?
ஈழத் தமிழர்களுக்காக பதறுபவர்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் காட்டிக் கொடுத்தும், கேலி செய்தும் அன்றாடம் பிழைப்பு நடத்தும் இந்தப் பார்ப்பனர்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பாதது ஏனோ?
கூடுதல் தகவல் (TAIL-PIECE): 
சவப்பெட்டி ஊழல் கட்சியை ஆதரிக்கக் கூடிய கூட்டம் - இப்படியெல்லாம் கார்ட்டூன் போடுகிறது என்பதும் கூடுதல் தகவல்.

                   ----------------------"விடுதலை” 6-3-2013

26 comments:

kambathasan said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...


பொறுமைக்கும் எல்லை உண்டே!


நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து தி.மு.க., அ.இ.அ. தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல; இன்னும் சொல்லப் போனால் வெறும் தமிழர்கள் பிரச்சினை மட்டுமல்ல; தேசியக் கண்ணோட்டம் கண்ணோட்டம் என்று கூறுகிறார்களே - அதன்படிப் பார்த்தால்கூட இந்திய மீனவர்கள் இன்னொரு நாட்டு அரசால் தாக்கப்படும் பிரச்சினை. மற்றொரு வகையில் பார்த்தால் இது மனித உரிமைப் பிரச்சினை!

இதுவரை எத்தனைத் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத அளவுக்குத் தொடர் கொலைகள் - கொள்ளைகள் - தாக்குதல்கள் - இழப்புகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று மட்டுமல்ல; இதே இந்திய நாடாளு மன்றத்தில் எத்தனையோ முறை கிளப்பப்பட்ட பிரச்சினை!

கடலில் கோடு போட்டு மீன்பிடிக்க வேண்டும் என்று சொல்லுவதெல்லாம் எத்தகைய பிற்போக்குத்தனம்? இவ்வளவுக்கும் இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் அந்தக் கடல் எல்லைக் கோட்டின் பின்னணி என்ன?

இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை யாருக்கும் தெரியாமல் கை உறைப் போட்டு அதிகாரிகள் மத்தியில் காதும் காதும் வைத்தாற்போல எதையோ எழுதிக் கொண்டு, கச்சத்தீவு பகுதியில் - தமிழ்நாட்டுக்குரிய கச்சத் தீவுப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கட்டளை இடுவார்களேயானால், இதனைவிட பெரிய வஞ்சகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே முதல் தவறு. குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியையும் பறித்த கதையாக அல்லவா இருக்கிறது?

நாட்டுப்பற்றைப்பற்றி எல்லாம் உச்சக் குரலில் தான் கதறுகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டுக்குள் கச்சத்தீவை இன்னொரு நாட்டுக்கு யுத்தம் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருட்டில் தூக்கிக் கொடுத்தது எத்தனைக் கேரட் நாட்டுப்பற்று?

பட்டுப் புடவையை இரவல் கொடுத்த பெண்மணி, ஈச்சம்பாயைத் தூக்கிக் கொண்டு பட்டுப் புடவையை இரவல் பெற்றுக் கட்டிக் கொண்ட பெண்மணி செல்லும் இடமெல்லாம் ஓடுவதைப் போல் அல்லவா இந்தக் கதை இருக்கிறது?

உலகில் உள்ள மீனவர்களெல்லாம் கடலில் சென்று மீன் பிடிக்கிறார்களே, எல்லைகளைக் கடந்து அங்கெல்லாம் படுகொலைகளா நடக்கின்றன? பறிமுதலா நடக்கிறது?

ஜப்பானும், கொரியாவும் தமக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் இரு நாடுகளும் மீன்பிடிக்க வழி செய்து கொள்ளவில்லையா?

நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, ருசியா ஆகிய நாடுகளிடையேயும்கூட எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்கும் உரிமங்கள் உண்டு.

இங்கு என்னடா என்றால் நமக்கென்று இருந்து வந்த பகுதிகளில் சென்று மீன்பிடிக்கக் கூட உரிமை இல்லை என்றால் தமிழர்களை இந்திய அரசு எந்த கண் கொண்டு பார்க்கிறது என்ற கேள்வி எழாதா? உங்களுக்கு யார் தோழர்கள்? இலங்கை அரசா, இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழர்களா என்று மாநிலங்களவையில் தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா அவர்கள் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது.

எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை இன்னும்கூடப் பொறுமையாகத்தான் சொல் லிக் கொண்டு இருக்கிறோம் - அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டே!
7-3-2013

தமிழ் ஓவியா said...


பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும்

மக்களவையில் டி.ஆர். பாலு போர் முழக்கம்

புதுடில்லி, மார்ச் 7- இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார். தி.மு.க. நாடா ளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு.

தனித் தமிழீழத்துக் காக திமுக போராடும் என்று மக்களவை சிறப்பு விவாதத்தின் போது அக்கட்சி எம்.பியான. டி.ஆர் பாலு கூறியுள் ளார். மக்களவையில் இன்று (7.3.2013) நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய விவாதத் தில் டி.ஆர். பாலு பேசுகையில் , நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களாக யார் இருந்தாலும் இலங்கை தொடர்பான கொள்கை ஒன்றும் மாறவில்லை. டெசோ தீர்மானங்களை நாங்கள் கொடுத்த போது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தி யாவின் நிலை என்ன என்பதே அய்.நா மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர் நவநீதம் பிள்ளை உள்ளிட்ட வெளிநாட்டவர் பலரது கேள்வியாக இருக் கிறது. இப்போதாவது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும். நாங்கள் தமிழீழம் கோருகிறோம். திமுகவின் நிலைப்பாடும் சரி.. அனைத்துக் கட்சி களின் நிலையும் அதுவே. நாங்கள் ஒருமித்த குர லில் தமிழீழத்தைத் தவிர வேறு தீர்வு இல்லை என்கிறோம். அதற்கு முன்பாக புனர்வாழ்வுப் பணிகள் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டியது அவசி யம். புலம் பெயர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் கதி என்ன? இலங்கை அரசு தமது சொந்த மக்களையே இனப்படுகொலை செய் திருக்கிறது. இலங்கை தமிழர் பிரதேசங்களில் 49 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக் கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் சித்திர வதைக்குள்ளாகினார்.

தமிழ்ப் பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அண்மையில் மனித உரி மைகள் கண்காணிப்ப கம் அம்பலப்படுத்தியி ருக்கிறது. பொதுமக்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறது இனப் படுகொலையை வெளிப் படுத்துகிறது. பெண் களுக்கு எதிராக திட்ட மிட்ட சித்ரவதையும் படுகொலையும் இனப் படுகொலையே. இதே போல் தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கை ராணுவம் திட்டமிட்டு சீரழித்ததும் இனப்படு கொலையே. இலங்கை யில் 367 இந்து கோயில் கள் அழிக்கப்பட்டு விட் டன.

தமிழ் ஊர்கள் சிங்களத்தில் 89 தமிழ் கிராமங் களின் பெயர்கள் சிங்க ளத்தில் மாற்றப்பட்டுள் ளன. இது ஒரு கலாச்சார இனப்படுகொலை. பெர்லின் நூலகத்தில் யூதர்களின் கலாச்சா ரத்தை சொல்லக் கூடிய பல்லாயிரக்கணக்கான நூல்களை ஹிட்லர் எரித்தார். இதுதான் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து சர்வதேச போர் விதிகளையும் இலங்கை மீறி அப்பாவி பொதுமக்களை, பெண் களை படுகொலை செய்தது. அப்படிப் பட்ட போர்க் குற்றம் புரிந்த நபருக்கு தமி ழரின் ரத்தக் கறைபடிந்த கையோடு வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு எப் படி கொடுத்தது இந்திய அரசு? பிரபாகரனின் 12 வயது மகன் பாலச் சந்திரனுக்கு சாப்பிடு வதற்கு பொருட்களை கொடுத்துவிட்டு 10 நிமிடத்திலேயே கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கிறது இலங்கை ராணுவம். ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்துவிட்டான் பாலச்சந்திரன். ஆனால் அதற்கும் மேல் 4 முறை சுட்டு படுகொலை செய்திருக்கிறது இலங்கை ராணுவம், யூகோஸ்லோவியாவில் 1991-ஆம் ஆண்டு நிகழ்த் தப்பட்ட இனப்படு கொலைக்காக 1992-ஆம் ஆண்டு அய்.நா. சர்வ தேச விசாரணைக்கு உத்தர விட்டது.

போர்க் குற்ற நடவடிக்கை

சிரியா, போஸ்னியா, வடக்கு சூடான் அதிபர் களுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது லட்சக்கணக் காக தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு எதி ரான ஏன் போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? இலங்கையில் தமிழர் களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்னவானது? 25 ஆண்டுகளாகிவிட்டதே.. என்ன நடந்தது.. ஒன் றுமே நடைபெற வில்லையே.. இந்தியா-இலங்கை ஓப்பந்தப் படிக்கையான 13ஆவது அரசியல் சாசன திருத் தம் என்னவானது? இலங்கை அதிபர் உட் பட அனை வருமே 13-ஆவது அரசியல் சாசன திருத்தத்தை ஏற்க மறுக்கின்றனரே.. அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கையின் போர்க் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இலங் கையை நிறுத்த வேண் டும் என்றார் அவர்.

யஷ்வந்த் சின்ஹா

இலங்கைத் தமிழர் களுக்கு நேர்ந்த சோகம், நாம் வாழும் காலக் கட்டத்தில் நேர்ந்த மிகவும் கொடுமையான சோகமாகும் என பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் கள் கொல்லப்பட்டனர், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர், மனித உரி மைகள் மீறப்பட்டன, 12 வயது சிறுவன் மார்பில் குண்டுகள் துளைக்கப் பட்டு இறந்தான். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான வீடியோக் கள் கண் கலங்க வைக் கின்றன.
இவை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட இன்னமும் மனித உரிமை மீறல்கள் நடை பெற்று வருகின்றன என வருத்தம் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியாவின் நிலை? நாடாளுமன்றத்தில் மன்மோகன்சிங் பதில்


புதுடில்லி, மார்ச் 7- நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் மன்மோகன்சிங், அய்.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி சபையில் உறுப்பினர் கள் பிரச்சினையை எழுப்பினார்கள். அவர் களுடைய இந்த உணர்வு களை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்கிறது. 13-ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதா வில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் செயல் படுத்தப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அரசை இந்திய அரசு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருகி றோம். இலங்கையில் அமைதியையும், நல்லி ணக்கத்தையும் ஏற் படுத்துவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டின் அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இலங்கை தமிழர் களுக்கு சமநீதி, சம தகுதி, சம உரிமைகள் வழங் கப்படவேண்டும் என்ப தில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

தமிழர்கள் சுயகவு ரவத்துடனும், சம தகுதியு டனும் வாழ்வதை உறு திப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். வடக்கு மாகாணத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பம் ஆகும். மேலும் தமிழர்கள் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இலங்கைக்கு எதிராக அய்.நா.மனித உரிமை கவுன்சில் கூட் டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்ய இருக் கும் தீர்மானத்தை ஆதரிக்கும் பிரச்சினை குறித்து இந்தியா இன் னும் முடிவு எடுக்க வில்லை. அந்த தீர்மானத் தின் இறுதி வடிவம் குறித்தும், அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பது தொடர்பாக, இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வரு கிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

சல்மான் குர்ஷித்

நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் இலங் கைக்கு எதிரான அமெ ரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கை யில், இந்த பிரச்சினை யில் அரசு தனது நிலைப்பாட்டை தெரி விக்கும் என்றார். மேலும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் விஷயத் தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படு மாறும், மனித உரிமை களை பாதுகாக்கும் விஷயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது முன் னேற்றம் ஏற்பட்டுள் ளதா? என்பது பற்றி தெரிவிக்குமாறும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீசை தான் கேட்டுக் கொண்டு இருப்பதாக அப்போது சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இது மனித உரிமை கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும், இதில் யாரும் அகந்தை யுடன் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


ஒரு தரம் இரண்டு தரம்


ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்டார். கடும் எதிர்ப்புக் காரணமாக வெளியேற்றப்பட்டார். இப்பொழுது இரண்டாவதாக கருநாடகாவில் மகாலிங்கேஸ்வரர் பீடத்துக்கு மடாதிபதியாக்க பேரம் பேசப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் மடாதிபதியான ராஜேந்திர சுவாமிகள் எனப்படுபவரும் இணக்கம் தெரிவித்தார். ஆதீனத்துக்குள் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்ப - அந்த முயற்சியும் தோல்வி அடைந்து விட்டது. ஒரு தரம், இரண்டாம் தரம் இன்னும் எத்தனை தரம் அவமானப்படுவாரோ இந்த ரஞ்சிதா புகழ் நித்திய ஆனந்தம்?

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!

காச நோய்க்காக விற்கப்படும் மாத்திரைகள் காலாவதி தேதியைத் திருத்தி சந்தையில் விற்கப்படுகிறதாம். மருந்துள்ள உறையில் (அலுமினியம் ஃபாயில்) காலாவதியாகும் தேதி, உட்பொருள்கள் குறிக்கப்பட்டு இருக்கும். அந்த எழுத்துகள் அழிக்கப்பட முடியாதவை. இண்ட்ஸ்ட்ரியல் பெட்ரோலி யம் என்ற இரசாயனத்தின் மூலம் காலாவதி தேதியை அழித்து விடுகிறார்களாம். எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடையா? தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 7- காணாமற் போன தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி அறிந்து கொள்ள மனு கொடுக்கச் சென்ற ஈழத் தமிழர்களைத் தடுத்து அனுமதி மறுத்த சிங்களக் காவல் துறையைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2009ஆம் ஆண்டு இலங்கை யில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரில், சிங்கள ராணு வத்தினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்; பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் காணா மல் போயினர். காணாமல் போன வர்கள் என்ன ஆனார்களோ, அவர்களின் கதி என்னவாயிற்றோ என்று இன்றளவும் காணாமல் போன தமிழர்களின் குடும்பங்கள் கலக்கத்திலும், வேதனையிலும் ஆழ்ந்திருக்கின்றன. இந்தத் துயர மான நிலையில் காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டுமென்றும், போர்க் கைதி களாக இன்னமும் அடைபட்டி ருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றும் கோரி; கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்து, அதில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் தமிழ் மக்கள் அணி அணியாகப் புறப் படத் தயாராயினர்.

ஆனால் அவர் கள் கோரிக்கைப் பயணத்தை மேற்கொள்ள முடியாதபடி சாலைகளில் இலங்கைக் காவல் துறையினர் தடைகளை ஏற் படுத்தியிருந்தனர். மேலும் கொழும்பு நகரத்திற்குள் அவர்கள் செல்ல முடியாதபடி காவல் துறையினர் தொடக்கத்திலேயே தடுத்து விட்டனர். இலங்கையில் ஜனநாயக மரபு களுக்கு முரணான இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக; கொழும்பு நகரிலே ஆர்ப்பாட் டம் நடத்த முயற்சித்த தமிழ் மக்கள் வவுனியாவிலேயே ஆர்ப் பாட்டம் நடத்தி முடித்து, அங்கேயிருந்த ஒரு அதிகாரியிடம் கோரிக்கை மனுவினை அளித் திருக்கின்றனர்.

அமெரிக்கா கண்டனம்

இலங்கை அரசின் இந்த அட் டூழிய நடவடிக்கையை அமெ ரிக்கா கண்டித்திருக்கிறது. கொழும்பில் உள்ள அமெரிக்க துதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை அறிய காத்திருக்கிற மக்கள், சுதந்திரமாகச் சென்று வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்; சுதந்திரமாகச் சென்று தங்களது கோரிக்கையைத் தெரி விக்கும் உரிமை பொதுவானது; இதற்கு இலங்கை மற்றும் சர்வ தேச சட்டங்கள் அனுமதி அளிக் கின்றன என்று இலங்கை அரசுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.

அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்து, முழுச் சர்வாதிகார நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங் களப் பேரினவாத அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரிய தாகும்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான்


பார்ப்பான் தன் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் எவனோ, அவனை எல்லாம் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்களாக ஆக்கி விடுகின்றான். பார்ப்பனர்கள் தம் காலைக் கழுவ மறுப்பவனை ஒழித்தே கட்டி இருக்கின்றார்கள்.
(விடுதலை, 2.9.1960)

தமிழ் ஓவியா said...


மகளிர் தின வாழ்த்துகடந்த மகளிர் ஆண்டு பெண்களுக்கு - இந்தியாவைப் பொறுத்தவரை வேதனை - சோதனைகள் நிறைந்த ஆண்டாகும்.

அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, களையப்பட்டு, பெண்களின் சுயமரியாதையும், சம உரிமையும் காப்பாற்றப்படுவதற்கான எல்லா முயற்சிகளும் ஆக்க ரீதியான செயல்பாடுகளும் முகிழ்த்துக் கிளம்ப வேண்டும்.

இந்தியாவில் சட்டமன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடங்களுக்கான சட்டம் எக்காரணம் கொண்டும் இனியும் அலமாரியில் தூங்கிட அனுமதிக்கப்படக் கூடாது.ஆண்கள் இதற்குத் தோள் கொடுப்பார்கள் என்று நம்பி தாய்க்குலம் இனியும் ஏமாற வேண்டாம்!

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆழ்ந்த பட்டறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையை நெஞ்சில் ஏந்தி வீதிக்கு வந்து போராட வேண்டும் பெண்கள்!

திராவிடர் கழகம் இதற்கு எல்லா வகைகளிலும் தோன்றாத் துணையாக இருக்கும். இதுவே திராவிடர் கழகத்தின் உலக மகளிர் நாள் செய்தி.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்புதுடில்லி
8.3.2013

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து

சென்னை, மார்ச் 8 - உலக மகளிர் நாளையொட்டி (மார்ச்சு 8) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: மார்ச் திங்கள் 8ஆம் நாள்! உலக மகளிர் நாள்! மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப் படும் எழுச்சித் திருநாள்!

ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது நீதிக் கட்சி. அந்த நீதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர் சமுதாயம் முன் னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் காலங்களில் உருவாக்கிச் செயல் படுத்திய பல்வேறு திட்டங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாகக் காவல் துறையில் மகளிர் நியமனம்; 1975இல் விதவை மகளிர் மறுவாழ்வுத் திட்டம்; இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்; 8ஆம் வகுப்புவரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல்5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டம்; அத்திட்டத்தை மேம்படுத்தி 1996இல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி; 2001இல் அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்த இத்திட்டத்தை 2006இல் மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாய் என்றும்; 2008இல் 20 ஆயிரம் ரூபாய் என்றும், 2010இல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியமை; பெண்கள் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; அதனை 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மகளிர் பயன்பெற வழி வகுத்தமை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு

இவை தவிர, 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில், கல்வி நிறுவ னங்களில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு; பெண்களுக்குச் சம சொத்துரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு; 2006இல் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங் களைப் புதிதுபுதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்திய தால் பெண் கள் சமுதாயம் இன்று சமூக, அரசி யல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டு வருவதை எண்ணி எண்ணி இறும் பூதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவி லும், ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித் திட எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த் துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...

உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது.

- விடுதலை, 26.2.1968

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள்


இன்று உலக மகளிர் நாள். மக்கள் தொகையில் சரி பகுதியிலிருந்த பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் கூட பெரும் வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

உலக மகளிர் நாளில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விழுமிய கருத்து இது. இந்தியாவில் பெண் சிசுக் கொலை என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது; சட்டங்கள் நகமும், பல்லும் இல்லா தவைகளாகவே அவை உள்ளன.
இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமானால் ஆட்சி அதிகாரம். நிருவாகம், பிரதிநிதித்துவ சபைகள், நீதித்துறைகளில் பெண்களுக்கான இடங்கள் உரிய வகையில் அமைய உறுதிபடுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்கள் 10 விழுக்காடு என்ற சராசரி நிலையில்தான் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இது முசுலிம் நாடுகளைவிட குறைவானது.

பொதுவுடைமை - இடதுசாரி நாடுகளில்கூட ஆட்சி அதிகாரம், பொலிட்பீரோ என்று சொல்லப் படுகிற கட்சியின் உயர் மட்டக் குழுவில்கூட உரிய இடங்கள் அளிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி மிக முக்கியமானது.

இவைகளையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கம் செங்குத்தாக எழுந்து நிற்கிறது. ஆண்கள் தங்கள் தசைப் பலத்தின் மூலமும் (Muscle Power) பெண்களை ஒடுக்கி வருகின்றனர்.

கல்வி வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், உடல் பலத்திலும் பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.

பெண்களை ஆண்கள் போலவே வளர்க்க வேண்டும் - ஆண் பெண் உடையில் மாற்றம் கூடாது. பெயர் வைப்பதில்கூட யார் ஆண்? யார் பெண்? என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரன்றி வேறு யார் தெரிவித்துள்ளார்கள்?

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் - என்கிறார் சமுதாய விஞ்ஞானியாகிய தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியவை எவை? அதற்கு அருமையான பதில் அறிவுலக ஆசான் அய்யா அவர்களிடமிருந்து வந்துள்ளது.

கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து, ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டாக்கச் செய்ய வேண்டும். (குடிஅரசு 26.4.1931) என்று இன்றைக்கு 82 ஆண்டுகளுக்கு முன் சொன்னார் என்றால் அவர்தம் தொலைநோக்கை அறிஞர்கள்தான் சுவைக்க வேண்டும்.

இன்றைக்கும் பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படும் கேவலமான பண்பு மூக்கு முட்ட எழுந்து நிற்கிறது. பெண்களைச் சீண்டுதல் பொழுது போக்காகியுள்ளது.

இதற்கு ஒரே வழி - அடுத்தவர்களை நம்பிப் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதல்ல. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் குஸ்தி, குத்து பழக வேண்டும் என்று சொன்னார் என்றால், இந்தக் காலத்துக்கேற்ப கராத்தே போன்ற பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால் கொஞ்ச காலத்திற்காவது பெண்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் அளிக்கப்பட வேண்டும். நான்கு இடங்களில் காம வெறிக் காலிகள் சீண்டும் இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டால், பிரச்சினைக்குத் தீர்வு கை நுனியில் வந்து சேர்ந்து விடுமே.

தங்களுடைய பிரச்சினைகளை, உரிமைகளை எடுத்து வைக்கும் உரிமை பெண்களுக்குத் தேவை; சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு சட்டம் இன்னும் எத்தனை ஆண்டு காலம் நிலுவை எனும் ஊறுகாய்ப் பானையில் கிடக்கப் போகிறது? பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அடுத்தவர் பார்த்துக் கொடுப்பதல்ல உரிமைகள்! உரிமைகள் வெறும் பிச்சைக் காசல்ல; எந்த நியாயமான உரிமையும் இனாமாகக் கிடைத்து விடாது - அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.

மகளிர் உரிமை நாளில் இந்த உறுதி மொழியை மேற்கொள்ளட்டும் பெண்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. உரிமைகளும் அப்படித்தான்! 9-3-2013

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணிப் போன்றது.

- தந்தை பெரியார்

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை

- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.

- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே

- வால்விச்மன்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.

- பெர்னாட்சா

தமிழ் ஓவியா said...


மதத்திற்கு எதிராக!


தன்னுடைய அடிமைத்தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந்தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான். தொழிற் சாலை அமைப்பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான்.

சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறான். இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது. மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

தமிழ் ஓவியா said...


இந்தியாவை நாசமாக்கும் இந்து மதம்


எவ்வளவு முதலீடு போட்டாலும் எவ்வளவு தூரம் அதைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்தாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பதற்குக் காரணம் வளர்ந்து வரும் இந்து மத மக்கள் தொகைதான் என்பதாக காலஞ்சென்ற பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா சொல்லி இருக்கிறார்.

இந்து மதத்திலுள்ள கொள்கைகள்தான்- சில வழி முறைகள்தான் இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதாக அவர் சொல்கிறார். இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்தியப் பொருளாதார நிபுணர்களைக் கேட்டால் அவர்கள், முதலீடு வருவாய் பங்கீடு விவசாயம் காரணம் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இந்து மத சமுதாயத்திலுள்ள அமைப்புகளையே ஒதுக்கிவிட்டு தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பல வகுப்புகளை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இந்தியாவில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் போட்டுக் குழப்புகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இப்பொழுதும் இந்திய பொருளாதாரம் இருக்கிறது என்றாலும் மக்கள் முன்னேறத் துடிக்கிறார்கள்.

வாய்ஸ் ஆஃப் தி வீக் (நவ.1988)

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்?

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா?

மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டு வதை விடு, அத்துடன் பாட்டை யும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயி களிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக் கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு


இந்து பத்திரிகையில் 10வயது பெண்ணோ அல்லது 12வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே!

இந்தக் காலத்தில் கூட 10வயது அல்லது 12வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத் தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10வயதிலும் 12வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்?

அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் -7)

தமிழ் ஓவியா said...


முட்டுக்கட்டை போடும் ராமனைத் தோலுரிப்போம்!காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என்று தமிழ்நாடு சுற்றிச் சுற்றி இதற்குள்ளாகவே நின்று போராடும் ஒரு பரிதாப நிலையை என்னென்று சொல்லுவது!

இந்தியத் தேசியம் நமக்கு அளிக்கும் பரிசு இது தானா என்ற வேதனை விலாவைத் துளைக்கிறது.

இவ்வளவுக்கும் நியாய விரோதமாக, சட்ட விரோதமாக எதையும் தமிழ்நாடு எதிர்பார்க்க வில்லை; வலியுறுத்தவும் இல்லை. தமிழர்களுக்கு உரிய நியாயமான, சட்டத்திற்குட்பட்ட உரிமை களுக்காகத் தான் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த அடிப்படை உரிமைப் பிரச்சினைகளில் இந்நாட்டில் சுரண்டிவாழும் உயர்ஜாதி ஆதிக்கக் கூட்டமோ, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்தத் தமிழ் மக்களின் உழைப்பை - பொருளைச் சுரண்டித் தின்னுகிறோம் - தின்ற சோற்றுக்காவது நன்றியோடு இருப்போம் என்கிற அளவுக்கு இல்லாமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; நரி எப்படியோ போய்த் தொலையட்டும்; விழுந்து பிராண்டாமல் இருந்தாலே போதும் என்று நினைப்பதற்கு இடமில்லாமல், தமிழர்களின் உரிமை உணர்வுகளுக்கும், போராட் டங்களுக்கும் எதிராகக் காட்டிக் கொடுக்கும் பிணம் தின்னும் கழுகுகளாக அல்லவா நடந்து கொள்கிறது.

நம்முடைய போராட்டம் இந்திய அரசை நோக்கி இருக்கிற காரணத்தால், இவர்கள் பக்கம் நம் பார்வை திரும்பாது என்கிற தைரியத்தில், கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி, இதையும் தமிழ் மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இவர்களைக் கொஞ்சம் கண்காணியுங்கள் என்று கூற வேண்டிய நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வன்முறையில் அல்ல - தர்க்க வாதங்களின் அடிப்படையிலேயே தகர்க்க வேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டம் - ஒன்றரை நூற்றாண்டைக் கடந்தது. இதில் தேவையில்லாமல் பார்ப்பன சக்திகள் மதத்தைக் கொண்டு வந்து போட்டு முட்டுக்கட்டை போடுகின்றன.

மதமும், பக்தியும் அவரவர்களின் வீட்டுக் குள்ளேயே இருப்பதுபற்றிக் கவலையில்லை. பொதுப் பிரச்சினையில் மக்களின் வளர்ச்சிப் பிரச்சினையில், வாழ்வாதாரப் பிரச்சினையில் கொண்டு வந்து குறுக்கே போட்டால் அதனை உடைத்துத் தள்ளு வதைத் தவிர, வேறு மார்க்கம் இருந்தால் மேதாவிமார்கள் அருள்கூர்ந்து சொல்லட்டும்.

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினான் என்று ஒரு கும்பல் பாழடைந்து போன தங்கள் மூட மதக் கருத்தைச் சொல்லுவதும், இந்தியாவிலேயே மிகப் பெரிய அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம் அதற்குச் செவி சாய்த்துக் காலம் கடத்துவதும் ஏற்புடையதுதானா? நாம் 2013இல் இருக்கிறோமா என்று நமது உடம்பை நாமே கிள்ளிப் பார்த்து சோதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெட்கக் கேடு! மானக் கேடு!!

மற்ற மதங்களைப் பற்றிப் பேசுவதில்லையே என்று மாய்மாலம் பேசும் கபோதிகள், மற்ற மதங்கள் இப்படியா மக்களின் பொருளாதார வளர்ச்சியோடு, வேலை வாய்ப்பு திட்டத்தோடு மல்லுக்கட்டி நிற்கின்றன.

இதில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்ன வென்றால், சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதலில் ஒப்புதலும், கருத்துருவும், தொழில் நுட்ப ரீதியான அனுமதியும் வழங்கியவர்களே இந்தப் பிஜேபியினர். அந்தப் பிஜேபியினர்தான் இப்பொழுது இந்தப் பிரச்சினையில் ராமனைக் கொண்டு வந்து போட்டுக் குளிர் காய்கின்றனர்.

காலந்தாழ்ந்தாலும் இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு எந்த விலையும் கொடுப்போம் என்பது ஒருபுறம்; அதே நேரத்தில் இந்து மதம் அதன் நம்பிக்கைகள் மக்கள் வளர்ச்சிக்குக் கேடானவை. முட்டுக்கட்டையானவை - முடை நாற்றம் எடுக்கும் கசமாலக் குப்பைகள் என்பதை நார் நாராகக் கிழித்து மக்கள் மத்தியிலே தோரணங்களாகத் தொங்க விடுவோம் - அந்த வகையிலே இந்த சனாதனப் பார்ப்பனக் கும்பல் வகையாக நம்மிடம் வந்து மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்த தொடர் பிரச்சாரத் திட்டத்தைத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அறிவித்துவிட்டது தோழர்களே தயாராவீர்! தமிழர்களே ஒத்துழைப்புத் தாரீர்!

தமிழ் ஓவியா said...


மாணவிகள்


தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி மாநிலங்களில் இப்பொழுது +2 தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும் மாணவர் மற்றும் மாணவி களின் எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர்; இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 746; மாணவர் களின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 788.

இந்தப் புள்ளி விவரம் தந்தை பெரியார் பார்வையில், திராவிடர் கழகத்தின் பார் வையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பெண்களை ஏன் படிக்கக் கூடாது என்று கட் டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக் குவதற்காக (குடிஅரசு 16.11.1930) என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பாகும்.

ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் முதலில் பெண்ணைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

அதற்கான காரணத் தையும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெய ரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால் முதலில் நமது பெண்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெ னில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர் அவர் களுடைய தாய்மார்களே! அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார் களே தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (குடிஅரசு 1.5.1927)

இந்தக் கருத்தை யெல்லாம் 86 ஆண்டு களுக்கு முன் தந்தை பெரியார் சொல்லியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர் கள், தம்மால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளின் சார்பில் தொடங்கப்பட்ட கல்விக் கூடங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களுக்கே என்பதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும்.

அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பு எதற்கு? என்று ஒருபழ மொழியையே இங்கு உண்டாக்கி வைத் துள்ளனர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அவர் கண்ட இயக்கம் பாடுபட்டதன் பல னாகவும், காமராசர் போன் றவர்கள் ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததாலும் இங்கே கல்விப் புரட்சி ஏற்பட்டது.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க ஆரம்பித்ததற்கு பிறகு அவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2 தேர்வுகளில் மாணவர் களைவிட சதவிகிதத்தில் அதிக தேர்ச்சி பெறுவோர் பெண்களாகவே இருந்து வருகின்றனர். கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று ஒரு பெண் ணுக்கு இலாகா பிரித்து வைத்திருந்தாலும், பெண்கள் கல்வி பெறாத நிலையில், கடவுளைக் கிழித்தெறிந்த கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் சகாப்தத்தில் பெண் கல்வி ஓகோ என்று ஓங்கி நிற்கிறது.
மேலும் வளரட்டும்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இணையதளத்தில் ஈழத் தமிழர்களின் இதயக் குரல்கள்!

சமீபத்தில், ஈழத்தில் உள்ள 89 தமிழ் நகரங்களின் பெயர்கள் சிங்கள அரசால் மாற்றப்படவுள்ளது என்ற விடயத்தை கலைஞர் அய்யா அவர்கள் ஒரு கடிதமாக எழுதி இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தார். பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத் தமிழர்களுக்கு இச்செய்தி அதிர்வு இணையம் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்செய்தியை வாசித்ததோடு, இவை ஆங்கில இணையங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. கலைஞர் அய்யா அவர்கள் கடிதமும் அய்ரோப்பிய ஆங்கில இணையங்களில் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான செய்திகளுக்கு கிடைக்கப் பெற்ற சில பின்னூட்டங் களை நாம் இங்கே தருகிறோம். ஈழத் தமிழர்கள் இன்று என்ன சொல் கிறார்கள் என்று பார்ப்போமா?

-சுதாகரன் (ஜெர்மனி)உங்கள் செய்தியைப் பார்த்தேன். மிகவும் கவலையாக உள்ளது. இனி நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட இருக்கிறதா? என் பிள்ளைகளுக்கு நான் இனி எங்கே பிறந்தேன் என்று சொல்ல முடி யாத நிலை. ஆனால் இதனைச் சுட்டிக் காட்டி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி!

- ஜெயசங்கரி (சுவிஸ்)

சில இணையத்தின் செய்திகளை பார்த்து, நானும் கலைஞர் அவர்களை குறைசொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் இப்போது செய்வது எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியை தருகிறது.

- திருநாவுக்கரசு (லண்டன்)

2009-ல் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதைவிட்டு விட்டு, இனியாவது கலைஞர் அய்யா செய்வதை ஏற்று அவருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்!

- ஷோபனா (லண்டன்)

நல்ல விசயத்தை கலைஞர் அய்யா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவர் செயல்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. இதனை வேறு தமிழக தலைவர்கள் ஏன் செய்யவில்லை?

- நிதர்ஷன் (அமெரிக்கா)

89 தமிழ் நகரங்களையும் சிங்களத்தில் மாற்றினால், இனி அம்மாவை நாம் அம்மே என்று சிங்களத்தில் தான் கூப்பிட வேணும் போல இருக்கே அண்ணா. இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டதக்கது. அவராவது கடிதம் எழுதினார். அங்கே சீமான் எங்கே? வைகோ எங்கே? இல்லை.. பழ. நெடுமாறன்தான் எங்கே? இவர்கள் ஈழப் பிரச்சனையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?

- நிலாசுதன் (முன்னாள் போராளி) ஈழம்

மட்டக் களப்பில் நாம் காலம் காலமாக கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை தொப்பிகல என்று சிங்களம் மாற்றி விட்டதே. இப்ப தமிழ் ஊடகங்கள்கூட தொப்பிக்கல என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக கலைஞர் அய்யா அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.

தமிழ் ஓவியா said...


கடவுள் மறுக்க மாட்டார்!


கடா வெட்டுகிறேன், மொட்டை போடுகிறேன், அலகு குத்துகிறேன் எனப் பக்தர்கள் வேண்டுவதற்குப் பதிலாக இப்படி வேண்டினால் என்ன ?

''கடவுளே எனது வேண்டுகோள் நிறைவேறினால் முதியோர் இல்லத்திற்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுக்கிறேன், ஒரு ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்கிறேன், புற்றுநோய் தடுப்புக் கழகத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கிறேன் என வேண்டிக் கொள்ளலாமே? ஏழை பக்தராக இருந்தால் சாலையில் உள்ள பள்ளங்களை மூடுகிறேன், சாலையோரம் 10 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கிறேன்", என வேண்டலாம் தானே ?

உங்கள்கடவுள் என்னமறுக்கவா போகிறார்?

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...


அறிவு தழுவிய அணுகுமுறையால்... அனைத்தையும் வெல்லலாம்!


அய்யா அவர்கள்மீதும்... தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் மீதும் திராவிடர் கழகக் கொள்கைமீதும் நிரம்ப மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும், விடுதலை எழுத்தாளர் மானமிகு கி.இராமநாதன் அவர் களின் மகன் இரா. ராசா என்பவர் புதிதாக ஒரு வீடு கட்டி புதுமனை புகுவிழா கடந்த 7.2.2013 அன்று நடத்தினார்.

தந்தையார் வழியிலே.. கழகத் தலைவர்களை வைத்து திறப்பு விழா செய்ய வேண்டுமென அவர் விரும் பினாலும், அவரது இணையரின் வழி உறவினர் அதனை ஏற்க வில்லை!.. அய்யரை வைத்துத்தான நடத்த வேண்டும் எனக் கூறி.. அய்யரையும் வரவழைத்து விட்டனர்.

பக்கத்து வீடாக இருந்தாலும், அதில் இராமநாதன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் வற்புறுத்தவே அவர், கோபப் படாமல்.. இருந்தால், நான் சில நிமிடங்கள் அய்யரோடு பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

அவர்களும் அதற்கு சம்மதிக்கவே.. மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யரிடம் சென்று.. அமைதியாக அய்யா! உங்கள்மீது எனக்கு கோபமில்லை, ஆனால், இந்த மந்திரம் சடங்குகளில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இந்த வீட்டை மிகுந்த சிரமத்திற்கிடையே கட்டி, முடித்தது என் மகனுடைய அயரா உழைப்பும்..

கட்டிய கட்டிடத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியும்தான்!.. ஆனால், எதிலுமே சம்பந்தமில்லாத நீங்கள், இப்போது வந்திருக்கிறீர்கள்.. நீங்கள் இங்குள்ளதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் மட்டும், ஈடுபடாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள் என்றார்!
உறவினர்கள் திகைத்து நின்றனர். ஆனால் எதுவும் பேசவில்லை. இவர் பேசியதும் சரியென்றே உணர்ந்தனர்!

அய்யர், உடனே எழுந்தார். நீங்கள் யார் என்பது எனக்கும் தெரியும். உங்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் வந்தேன். உங்கள் பிரியப்படியே பேஷா செய்யுங்கோ.. நேக்கும் இதிலே பூரண சம்மதந்தான் என்ன செய்யறது? வழி வழியா வந்துடுத்து...நேக்கு இதை விட்டா வேறு எதுவும் தெரியாது. அதனாலே தான் இவா கூப்பிட் டதும் வந்துட்டேன்.. தப்பா நினைக் காதேள்...! என்று சொல்லிவிட்டு...

அவர் பொருள்களை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார். பிறகு, என் நண்பர், வந்திருந்து, வியப்போடு இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள், உறவினர் அனை வருக்கும் இனிய விருந்து தந்து மகிழ்ந்தார்! கொரநாட்டுக் கருப்பூர் ஒரு புதுமையை அன்று சந்தித்தது!

அறிவு தழுவிய இனிய அணுகு முறையால் அனைத்தையும் வெல்லலாம் என்பதை என் நண்பர் இராமநாதன் தனது செய்கையால் மெய்ப்பித்துக் காட்டியதை அனை வரும் பாராட்டி மகிழ்ந்தனர்!

- நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர்பற்றி..


கி.வீரமணி அய்யாவை நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் சித்ரகுப்தன் வீரமணி Key
என்கிறாரே...?

அப்துல்கனி Ex. . கவுன்சிலர், விழுப்புரம்

உண்மைதானே... சமூகநீதி கஜானாவின் சாவி தானே அய்யா அவர்கள்!

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டு 1994ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் குடியரசு தலைவர் மேதகு சங்கர் தயாள் சர்மா அவர் களால் ஒப்புதல் வழங்கப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஒப்புதல் பெறப்படுவதற்கு முன்பு எத்தனை தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் சந்தித்தது என்பதையும், தமிழக முதல்வர் அந்த தடைகளை சட்ட ரீதியாக உடைத்தெறிந்திட அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தகைய பேருதவிகளைச் செய்து பக்கபலமாக இருந்தார் என்பதையும் வரலாற்று ஏடுகள் சாட்சியங் கூறிக் கொண்டிருக்கின்றன.

மேலும், அச்சட்டத்தை 31 (சி) இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திடுவதற்காக அய்யா எவ்வளவு கடுமையாக உழைத்தார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை சமூகநீதி பயணம் மேற்கொண்டு அதன் பலனாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 1994ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி விவாதம் எதுவுமின்றி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் அய்யாவை சமூகநீதி கஜானாவின் தங்கச் சாவி (கீ) என்றே கூறுவார்கள்.

(நன்றி: ராஜாளி பிப்ரவரி 2013)

தமிழ் ஓவியா said...


கம்யூனிச நாடுகளின் கேவலத்தைப் பாரீர்! அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறார்களாம்!

ஜெனிவா, மார்ச் 9- மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கம்யூனிஸ்டு நாடுகள் எதிர்க்கும் என்று கூறியுள் ளனர்.

இதன்மூலம் கம்யூனிசம் பிற்போக் குத்தனத்துக்கு இனப்படுகொலைக்கும் துணை போகும் வரலாற்றுப் பிழை பதிவாகி விட்டது.

இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானம் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. 'இலங்கையில் நல்லிணக்கத் தையும் பொறுப்பு கூறும் கடமையை யும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கையின் பொறுப் புக் கூறும் கடமைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் யோசனையை இத் தீர்மானம் வரவேற்றிருக்கிறது. இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத் தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்குமுறை களும் நீடித்து வருவதற்கும் அமெரிக்காவின் தீர்மானம் கவலை தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக் கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனிவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ் தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலி யோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஆனால் கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கா வின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம் பெற வேண்டும்.. மேலும் வலுவான தாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


உழைப்புஎவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.
(விடுதலை, 11.4.1947)