அறிவின் பயன்
பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப்படுத்தப்படுவதாகும்.
மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய
திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும்,
மற்ற ஜீவன்களின் உயிர் போலவே
மனிதனுடைய உயிரும் ஒரு உயிரேயானாலும், மற்ற ஜீவன்களுக்குக் குறிப்பிடும்
சரீர தத்துவம், ஜீவ தத்துவம் போலவே மனிதனுக்கும் உடையது என்றாலும்,
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரம் உண்டு என்று சொல்லப்படுவதனாலே தான்
மனிதன் மற்ற ஜீவப் பிராணிகளைவிட வேறு பட்டவனாகவும் மேலானவனாகவும் உலக
வழக்கில் மதிக்கப்படுகிறான்.
இப்படி மதிக்கப்படுவது சரியா தவறா என்பது
விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனா யிருப்பதன்
காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும்
தரப்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்ல
வேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்டதாலேயே மனித சமூகத்துக்குச்
சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்றுகூடச் சொல்ல
வேண்டியது இருக்கிறது. ஆனால், இதைச் சரியென்று யாராவது ஒப்புக் கொள்ள
முடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்குச் சுகமும்,
திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும்
பிரத்தியட்சத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது.
ஆகவே, இதற்கு ஏதாவது காரணம் இருந்தாக
வேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச்
சரியானபடி பயன்படுத்தாமலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன்
ஏற்றுக் கொள்வதாலும், மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும்
இல்லாமல் போய்விட்டன.
மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய்
நிர்ணயித்துக் கொண்டு, மனித ஜென்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும்,
வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது சாகரம், துக்கம் என்று கருதுவதன்
மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து
வருகிறான்.
இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும்,
எண்ணங்களுமே மனித சமூக துக்கத்துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து
வருகின்றன என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கு பகுத்தறிவைச்
சுதந்திரத்தோடும், துணிவோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்.
இந்தப்படி சுதந்திரத்தோடும், துணிவோடும்
பகுத்தறிவு என்பதைப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற நிபந்தனைகள்
வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக்
கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும். என்றாலும் அதிலிருந்து விடுதலை பெற
முடியாது என்று தீர்மானித்துவிடுதல் கூடாது. இப்பொழுதுகூட மனிதன் தன்னைக்
கட்டுப்படுத்தியும், தன்னைச் சூழ்ந்து, தனக்குள் புகுத்தப்பட்டும்
இருக்கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக்
கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கி விட்டுத்
தனியாகச் சுதந்திர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும்
நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத்
துணிவோடு உபயோகப்படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக் கூடிய உண்மையையும்,
பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது.
இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக்
கொண்டிருப்பவைகளில் முக்கியமானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து
வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன் ஜென்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற
உபதேசங்களேயாகும். இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின்
பயனான இயற்கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு சந்தோஷமும்,
திருப்தியும், அடையும் பேற்றை எவனும் அடையவே முடியாது. ஆதலால், ஒவ்வொரு
மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும், திருப்தியுமான வாழ்க்கைக்குப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப்படி பயன்படுத்திக் கொள்ளுவதற்கு
ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத்தையும், நிர்வாணமாகவும்,
பரிசுத்தமாகவும் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
இந்த நிலைமையையும், தன்மையையும் ஒவ்வொரு
மனிதனும் அடையவே பகுத்தறிவு உலகில் உலவி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய
வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
-------------------------------------(பகுத்தறிவு ஜூலை 1, 1935)
-------------------------------------(பகுத்தறிவு ஜூலை 1, 1935)
மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி.
கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள்
விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு
விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடுநாமம் (தங்கத்தில் வைத்தது)
திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப் பட்டை மற்ற
விக்கிரகங்களைக் கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம்
திருட்டுப் போகின்றது. இவற்றின் வாகனத்தில் தேரில் நெருப்புப்
பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவற்றின் பயனாய் பலர் சாகின்றார்கள்.
மூடர்களே! இவற்றைப் பார்த்தும், கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த
விக்கிரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில், புனிதத் தன்மை, தெய்வத் தன்மை,
அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவை இருக்கின்றதாக
நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் என்றாகிலும் உண்டா? தயவு
செய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி. வட்டி
வாங்குகின்றவர்கள் கோடீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய்,
பாப்பராய்ப் போகின்றான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப்
போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்? இன்னும் ஒன்றுதான்
அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி; காவடி எடுத்துக் கொண்டு போனவன்
காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு
நினைக்கின்றீர்கள்?
மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.
பதில்: சரி அப்படியானால், அந்தக் காரணத்தை
- கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை
இயக்கம். (பகுத்தறிவு).
மூடர்: கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள்தனமாகும்.
பதில்: அப்படியானால், உலகப் படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடன்: உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில்: சரி, நல்ல காரியமாச்சுது சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலை(ரை)க்காதே.
21 comments:
ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு
கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணம், குருணேகலா ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க தீர்மானம் குறித்து கருத்து வெளியிட் டார். அப்போது அவர் ஆணவத் துடன் கூறியதாவது:-
இந்த தாக்குதல் (அமெரிக்க தீர்மான ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி) எங்களுக்கு வியப்பை அளிக்கவில்லை. இந்த தாக்குதல் எங்களை அடக்கி விட முடியாது. இவை எங்களை தோற்கடித்து விடவும் இயலாது. எந்த விதத்திலும் எங்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது. விடுதலைப்புலிகளை எனது தலைமையிலான ராணுவம் வீழ்த்தி விட்ட நிலையில், இந்த தாக் குதல்களை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப் பிடம் இருந்தும், இலங்கை எதிர்ப்பு சக்தி களிடமிருந்தும் எதிர் பார்த்தேன். எனது அரசு மீதான அனைத்து குற்றச் சாட்டுகளும் தவறானவை. உண் மைக்கு அப்பாற்பட்ட நோக்கம் கொண்டவை.
இந்த நாட்டின் ஒரு பகுதி 2009-க்கு முன்பு (தமிழ்) ஈழம் என அடையாளம் காணப்பட்டது. இது போர் நிறுத்த உடன்படிக்கையிலும் ஏற்கப்பட்டு, சிறிது அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் வழிவகுத்த போர் நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் ஒழிக்க முடியாமல் போயிருந்தால், இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.
மக்களை ஏமாற்றும் ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!
திரிபுரா அரசு முடிவு!!
அகர்தலா, மார்ச் 24- ஜோசியர்களும், சாமி யார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுரா மாநிலத் தில் சில ஜோசியர்கள் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சி களை நடத்து கின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என் றும் தங்களை அழைத் துக் கொள்ளும் சில ரும் தொலைக்காட்சி யில் நிகழ்ச்சி நடத்து கின்றனர்.
இந்த நிகழ்ச்சி களின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின் றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும் பத்தின் நலனுக்காக சில சித்து வேலை களை செய்ய வேண் டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந் திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத் துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
சாமியார்களும், மந் திரவாதிகளும் ஜோசியர் களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.
இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம் பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சி களை தொலைக்காட்சி யில் செய்து காட்டுகின் றனர். தொலைபேசி யில் கேள்வி கேட்டு இறுதி யில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசி யர்களும் மந்திரவாதி களும் அழைப்பு விடுக் கின்றனர்.
இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படு கின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.
சட்டமன்ற தேர் தல் போன்ற சில முக் கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என் றும் தற்போது சட்ட மன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்தி ரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.
கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழிப்பறி திருட்டு
ஆவடி, மார்ச் 24- ஆவடி காந்தி நகர் வேதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி ராதா (53). நேற்று இரவு ராதா தனது மாமியார் அம்முகுட்டியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து இரவு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர்களை மறித்து நிறுத்தினர். ராதா அணிந்திருந்த அய்ந்து பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
திருநின்றவூர் லட்சுமிபுரம் 4ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராகிணி (40). இவர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ராகிணி, மகன் கார்த்திக்குடன் முருகேசன் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு திரும் பினார். 12ஆவது குறுக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை பகுதியில் அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மறித்தனர். ராகிணியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். இரண்டு வழிப்பறியிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ஆவடி, திருநின்றவூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அம்மன் கோவிலில் நகை கொள்ளை
திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழண்டியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை திருடினர். பின்னர் உண்டியலை கடப் பாரையால் உடைக்க முயற்சித்தனர். சத்தம்கேட்டு அருகில் வீட்டில் வசிக்கும் ஒருவர் குரல் கொடுக்கவே கொள்ளையர்கள் தப்பிசென்று விட்டனர்.
செய்தியும் சிந்தனையும்
சி.பி.அய்.
செய்தி: மாணவர்களாகிய நீங்கள் நடத்திய போராட்டம்தான் தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறச் செய்தது. 2009இல் வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டிருக்காது. - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு
சிந்தனை: 2009 மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுதோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.அய்.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள், மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளிய கருத்து என்ன தெரியுமா?
இலங்கைப் பிரச்சினை - மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்குமிடையே உள்ள பிரச்சினை - இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டாரே!
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு சொல்லி நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?
ஆக, கம்யூனிஸ்டு பார்வையில் இலங்கைப் பிரச்சினை ஒட்டு மொத்தமான நாட்டுப் பிரச்சினை இல்லை, அப்படித்தானே? இனி மேலாவது தோழர் தா.பா. நீட்டி முழக்க மாட்டார் என்று நம்புவோமாக! ஈழத் தமிழர் பிரச்சினையை ஏகடியம் செய்யும் கட்சியினர் தி.மு.க.வையே சதா குற்றம் சுமத்துவது தான் வேடிக்கை - விநோதம்!
நெஞ்சுக்கு நஞ்சு
கேள்வி: திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தி யில. நீங்க எப்படி அல்லா.. அல்லானு பாட்டுப் பாடினீங்க?
எம்.எஸ்.வி: அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங் களுக்குப் பக்கத்துலேயே இருப் பாங்க. முகமது பின் துக்ளக் படத்துல அல்லா.. அல்லா பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன்.
ஆனா, சோ அந்தப் பாட்டை நான் தான் பாடனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியா துன்னு சொல்லிட்டேன். சரி... யாரையெல்லாம் நீ பாட வைக் கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப் போம்னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான் போலனு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டிலாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண் மையைச் சொன்னார் அது. சீட்டு எழுதுனப்போ எல்லா சீட்டு லயுமே என் பேரைத்தான் எழுதி வெச்சிருக் கார் அந்த மனுஷன்!
இசை இயக்குநர் எம்.எஸ். விசுவநாதன் ஆனந்தவிகடன் இதழுக்கு (27.2.2013) அளித்த பேட்டி தான் மேலே கண்டது.
மேம்போக்காக பார்த்தால் இதில் மறைந்திருக்கும் நாகப் பாம்பு என்ன என்று தெரியாது.
அந்தப் பாடல் நாகூர் அனிபா வால் பாடப்பட்டால் சிறப்பாக இருக் கும் என்று இசை இயக்குநர் எம்.எஸ்.வி. நினைக்கிறார். விட்டு விட வேண்டியதுதானே? எம்.எஸ்.வி.யைவிட இசை மேதையா திருவாளர் சோ ராமசாமி?
நாகூர் அனிபா முசுலிம் ஆயிற்றே - அவரைக் கொண்டு பாடச் செய்தால் எப்படி என்கிற இந்துத் துவா விஷப்பூனை தான் சோ மன தின் ஆழத்தில்.
யார் பாடுவது என்ற முடிவைச் செய்ய சீட்டுக் குலுக்கிப் போடும் தந்திரம் கையாளப்பட்டு, எல்லா சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரையே எழுதி வைத்திருந்தார் சோ என்றால் இவர்களின் அறிவு நாணயத்தையும், மோசடியையும் நம் தமிழர்கள் என் றைக்கு உணரப் போகிறார்களோ!
புதிய போப்
வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டது - மூப்பின் காரண மாக பெனெடிக்ட் தாமாக முன் வந்து பதவி விலகி வழி விட்டார். அடுத்த போப் யார் என்பது உலக அரங்கில் கேள்வியாக எழுந்தது. ஜனநாயக அடிப்படையில் போப் தேர்வு என்பது கூட ஒரு சிறப்புதான் (அது என்ன சங்கராச்சாரி மடமா?)
புதிய போப் ஜார்ஜ் மேரியோ பெர் கோக்லியோ (இப்பொழுது பிரான் சிஸ் என்று பெயர் மாற்றம்!) எளிமையானவர், பேருந்தில் பயணம் செய்யக் கூடியவர் என்பதெல்லாம் வித்தியாசமானதுதான்.
பக்தர்களுக்கு இவர் வாழ்த்துச் சொல்லுவதற்குப் பதிலாக பக்தர்கள் இவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக் கிறார்கள்.
மற்றவர்களைவிட போப் உயர் வானவர் என்பதற்காக ஸ்டூல்மீது போப் நிறுத்தப்படுவது வழக்கமாம் - அதையும்கூட இவர் தவிர்த்து இருக்கிறார்.
இந்தப் பக்கம் கொஞ்சம் கவனத் தைத் திருப்புக! எங்கே உட்கார்ந் திருந்தாலும் சங்கராச்சாரியார் உயரமான மேடையில்தான் பீடத்தில் உட்கார்ந்திருப்பார் - காரணம் ஜகத் குருவாம்.
சென்னையில் 1983இல் இந்திய சமய கலை விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் அவ்விழாவில் பங்கு கொண்டார். அப்பொழுதுகூட சங்கராச்சாரி யாருக்கு உயரமான மேடை!
முதல் அமைச்சருக்கு சால்வை யைக்கூட அவர் கையால் போர்த் திடவில்லை தம் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்துதான் போர்த்தச் செய்தார்.
போப்பையும் - சங்கராச்சாரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
இசை இயக்குநர் இளையராஜா
எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் என்று நான் நம்பியிருந்த ஒருவரிடம் என்னுடைய வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத் தையும் ஒப்படைத்திருந்தேன். ஆனால், அவரோ என்னை மோசம் செய்துவிட்டு ஒரு கணிசமான தொகையுடன் ஓடித் தலைமறைவாகி விட்டார். நல்லவனாய் நடித்து இதுபோல் மோசம் செய்யலாமா? தெய்வம் இதைக் கேட்காதா?
- ராமசாமி, கோபிசெட்டிபாளையம்
இளையராஜா பதில்: இதை நாம் எடுத்துக் கொள்ளும் விதம்தான் நம்மை பாதிக்காமல் இருக்க வைக்கும். பகவான் சிறீ ரமண மகரிஷியிடம் - அவருடன் அருகில் இருந்து நாட்களைக் கழிக்க முடிவு செய்த ஒரு அயல் நாட்டுப் பெண் மணி, பகவானிடம் புகார் செய்தாள், பாவம் ஏழைப் பையனாய் இருக் கிறானே என்று என்னுடனேயே தங்க வைத்து எனக்கு ஏவல் வேலை செய்ய வைத்திருந்த பையன் என் நகையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டான் என்று.
பகவான் சொன்னார். பார்த் தாயா? நீ எப்போதோ போட்டுக் கொள்வதற்காக வாங்கி வைத்த நகையே - உன்னுடன் எப்போதும் துணைக்கு இருந்த பையனை நீ பிரியக் காரணமாகி விட்டது? என்று; ஆக எல்லாமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான இருக் கிறது! என்கிறார் இளையராஜா. (குமுதம் 27.3.2013)
அர்த்தம் கொழுத்த இந்து மதத்தில் தத்துவார்த்தங்களை இப்படி எல்லாம் இசை இயக்குநர் இளையராசா தொடர்ந்து குமுதத் திலே உதிர்த்துத் தள்ளுகிறார்.
இருந்தும் இருந்தும் ரமண ரிஷியைத் துணைக் கழைத்தாரே - அதுதான் படு தமாஷ்!
தம்முடன் தங்கி இருந்த சீடர் தன் நகைகளை திருடிக் கொண்டு ஓடியதற்கு ரமண ரிஷியையா எடுத் துக் காட்டுக்காகக் கூற வேண்டும்? - அவர் என்ன ஆசா பாசமற்றவரா? - பொருள்கள்மீதான பற்றினைத் துறந்தவரா?
ரிஷி வேடம் போட்டு ஏராளமான சொத்துக்களைக் குவித்த அந்த ஆசாமி, அத்தனை திரண்ட சொத் துகளையும், தன் சகோதரர் மகனுக் குத்தானே எழுதி வைத்தார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதே - துறவிக்கு அண்ணன் தம்பி பாச மெல்லாம் இருக்கலாமா? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்பொழுது துறவி யானேன்? அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது! என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லையா ரமண ரிஷி?
(நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற அருள்பாலித்த அந்த ரமணரிஷி எந்த நோய் கண்டு இறந் தார் என்றெல்லாம் சொல்லுவது உகந்ததல்ல என்பதால் அதனைப் புறந்தள்ளுகிறோம்).
திரிபுரா வழிகாட்டுகிறது!
ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்று கின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் தொலைக் காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.
இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச் சிகளை தொலைக்காட்சியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.
இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத் தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.
இந்தத் தகவல் இந்தியா முழுமையும் நல்லதோர் சிந்தனை - பகுத்தறிவு மனப்பான்மை முகிழ்த்துக் கிளம்புவதற்கு வித்திடும் என்று எதிர் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய திரிபுரா மாநில அரசையும் முதல் அமைச்சரையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
சாமியார்கள்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அவர்கள் மோசக்காரர்கள். காமக் கொடூரர்கள் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபித்துக் கொண் டுள்ளன.
விளம்பரம் பெற்ற சந்திரா சாமியார் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் - அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களின் ஆலோசகர்களாக இருந்து ஆயுத பேர ஊழல் வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு!
ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் சாரியார்கள் கொலைக் குற்றத்தில் சிக்கி சிறைச்சாலைக்குச் சென்று வந்து விட்டார்கள். இவர்களின் காவி வேடம் என்பது இவர்கள் செய்யும் காலித்தனங்களுக்கு, மோசடிகளுக்கு மூடு திரையாக உள்ளது என்பதுதான் உண்மை.
அதேபோல சோதிடம் என்பதும் இந்த நாட்டைப் பீடித்த கேடாகும். மக்களைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.
பூமியிலிருந்து எத்தனையோ லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் இங்குள்ள மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பதெல்லாம் எத்தகைய பைத்தியக்காரத்தனம்?
சோதிடத்துக்கும், அறிவியலுக்கும் ஏதாவது சம்பந்த முண்டா? கோள்களின் பட்டியலில் நட்சத்திரமாகிய சூரியனை இணைத்து சோதிடம் கூறிக் கொண்டு திரிகிறார்களே - இதைவிட நகைச்சுவை வேறு ஏதேனும் உண்டா?
பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளின் பட்டியலில் சேர்த்து பூமியைக் கை விட்டுவிட்ட இந்தப் புத்திசாலிகள்பற்றி எப்படி மதிப்பிடுவது!
உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடைபெற்ற நேபாளத்தில் இந்து மன்னர் குடும்பமே சோதிட நம்பிக்கை யால் படுகொலை செய்யப்பட்டதை எல்லாம் பார்த்த பிறகும் கூட சோதிடத்தை அனுமதிக்கலாமா?
பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சோதி டத்தைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்த்தது. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைக்க முனைந்ததும் (திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது) நாம் இன்னும் காட்டு விலங்காண்டி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் அல்லவா!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51(ய)) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி சோதிடம், சாமியார் குப்பை களை அறிவியல் கருவியான தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வெளியிடலாமா?
திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்காரை வெகுவாகப் பாராட்டுகிறோம். பல எதிர்ப்புகள் வரும், விமர்சனங்கள் வெடிக்கும்; அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உறுதியாக நின்று முறியடித்து இந்தியாவுக்கே பகுத்தறிவு வெளிச்சம் கொடுத்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதற்குப் பிறகாவது மத்திய - மாநில ஆட்சிகள் அறிவுக் கொள்முதல் பெறட்டும்! செயல்படட்டும்!!
போகாதே!
அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969
தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் படையைத் திரட்டுகிறாராம் பார்ப்பன சு.சாமி
துரோணாச்சாரி என்ற பார்ப்பனர் யுத்தத்திற்கு அர்ஜுனனைத் தயார் செய்ததுபோல தமிழர்களைத் தீர்த்துக் கட்ட பார்ப்பனப் படை ஒன்றைத் தயாரிக்கப் போகிறாராம்! தமிழர்கள் யார் தெரியுமா? பொறுக்கிகளாம்- சொல்லுவது யார்? ஒரு பூணூல் திருமேனி!
இது வன்முறை தூண்டுதல் அல்லவா? தமிழ்நாடு அரசு அடக்கப் போகிறதா? அல்லது தமிழர்கள் அடக்க வேண்டுமா? (வன்முறையால் அல்ல!)
சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!
சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலி யுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறு வனம் சிங்களத்தில் துண்டறிக்கை அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பிரச்சினையில் சரவணா ஸ்டோர் சிக்கியுள்ளது.
இந்தக் கடைகளில் பலவகையான சிங்களப் பொருள்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இந்தக் கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருள்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களுக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிருவாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.
கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருள்கள் மற்றும் எந்தத் தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களையும் சிங்கள மொழியிலேயே அச்சடித்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டி வருகிறது.
கச்சத்தீவுப் பிரச்சினை
கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற ஒரு வேண்டு கோளைத் தமிழக முதலமைச்சர் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இல்லையேல் உச்சநீதி மன்ற வழக்கின்மூலம் அதனைச் சாதிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினையைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது தேவையில்லாமல் தி.மு.க.வையும், அதன் தலைவரையும் குறைகூறியது தேவையானது தானா? அப்படி சொன்ன தகவல்களும் சரியானவை தானா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.
1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தபோது, அன்றைய சட்ட அமைச்சர் மாதவன் (தி.மு.க.) அவர்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டு, நேரிலும், எழுத்து வடிவத்திலும் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டதெல்லாம் ஆவண ரீதியான சான்றாகும்.
1974 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்கூட தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தது.
நெருக்கடி நிலை காலத்தில் - 1976 இல் அந்த உரிமை பறிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 1976 முதல் 1989 வரை அ.இ.அ.தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது -அதுவும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டுதானே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தம் செல் வாக்கைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்டிருக்க லாமே; செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ளாரே - இந்தப் பிரச்சினை யில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கவேண்டியதுதானே!
முதன் முதலில் (1991 இல்) இவர் முதலமைச்சராக வந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது கச்சத்தீவை மீட்பேன்! என்று சூளுரைத்தாரே - அதற்குப் பின் எத்தனைத் தடவை தேசியக் கொடியை ஏற்றி யிருப்பார்? 22 ஆண்டுகளுக்குமுன் கொடுத்த அந்த முழக்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழாதா?
2008 இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே 1997 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் (29.7.1997).
அதற்கு இரு நாள்களுக்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடத்தப்பட்ட தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் அறிவித்தபடி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு அது.
நீதியரசர் ஜெயசிம்மபாபு அவர்களால் விசா ரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்மனுதார ருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டது.
ரிட் மனுவில் தெளிவான சட்டப் பிரிவு சுட்டிக் காட்டப்பட்டது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(சி) என்ன கூறுகிறது?
எந்த ஒரு மாநிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட வேண்டுமானாலும், குடியரசுத் தலைவரின் பரிந் துரைப்படி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய அரசமைப்புப் பிரிவு 3 இல் இணைப்புப் பகுதியில் குறிப்பிடப்பட் டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவையின் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும்.
சட்ட ரீதியான இந்த வழிமுறைகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிரச்சினையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், தமிழர் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி என்ற அடிப்படையில் கச்சத்தீவின் உள்ளும், புறமும் உள்ளிட்ட இந்தியக் கடல் எல்லைக் குள் மீன் பிடிக்கும் வகையிலும் மாண்புமிகு நீதி மன்றம் உடனடியாக இடைக்கால ஆணை பிறப்பிக் குமாறும் அந்த ரிட் மனுவில் கேட்டுக்கொள் ளப்பட்டது.
16 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இது நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!27-3-2013
பரிதாபமே!
இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)
இட ஒதுக்கீடே வழங்கப்படாமல் 21,000 பணி நியமனங்கள்! அம்பலமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடி
நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கூறி வருகின்றனராம் முகநூலில்!
அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன என்றும் தெரியாது. ஏன் என்றும் தெரியாது. இதில் தகுதிக் குறைவு என்பதற்கு பேச்சே கிடையாது என்பதும் புரியாது. ஆயிரம் முறை சொன்னாலும் அதுகள் பேசுவதைப் பேசிக் கொண்டுதானிருக்கும். அவர்களுக்கும் இறுதியில் நாம் விளக்கம் சொல்வோம்.
முதலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்திருக்கும் மோசடிகள் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படையாகச் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இடைநிலை ஆசிரியர்கள் (Secondary grade)
2. பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate assistants / BT assistants)
3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate assistants)
இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அவசியமில்லை. நேரடிப் போட்டித் தேர்வோ அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் செய்து கொள்ளலாம் (முன்பிருந்த முறைப்படியே).
இது குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை.
ஃ மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு, அவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர்களாகப் பணிபுரியத் தகுதியானவர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் - அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான முறைகேடு அரங்கேறியிருக்கிறது. நாமும் ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.
முதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த விவரங்கள். பணி நியமனங்கள் என்று வரும்போது எவ்வளவு காலிப் பணியிடங்கள்? அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு? என்பதைக் குறிப்பிட்டு அறிவிக்கை (Notification) வெளியாகும். நாமும் இந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளதா என்பதைப் பார்த்தாலே போதுமானது.
ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று மொத்தமாக 21,000 பேருக்கு வேலை. அதில் 10,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 8000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 3000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்று செய்தி வெளிவந்த போது, நாமும் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டி ருக்கிறதா என்ற பார்வையுடன் தான் இப்பிரச்சினையை அணுகத் தொடங்கினோம்.
அப்போதுதான் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் கொண்ட அறிவிக்கை கூட வெளியிடப்படாதது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையின் வேர் இன்னும் ஆழத்தில் இருப்பதும் புரியவந்தது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். அதென்ன தகுதித் தேர்வு? போட்டித் தேர்வு? தனித்தனியாகவா இருக் கிறது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் நீங்கள் விழித்துக் கொண்டீர்கள் என்று பொருள். ஏனென்றால் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் குழம்ப வைத்ததுதான் இந்தப் பணி நியமன மோசடியில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி!
UPSC, TNPSC, TRB என்றெல்லாம் நடத்தப்படுகின்ற னவே அவைதான் போட்டித் தேர்வுகள். அதாவது மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதை அறிவித்து அதற்காகவென்றே நடத்தப்படுவதுதான் போட்டித் தேர்வு.
NET, SLET, SET, TET போன்றவையெல்லாம் தகுதித் தேர்வுகள் (Eligibility Test). இவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது வேலை பெறுவதற்கான தகுதித் தேர்வே தவிர, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை என்பது கிடையாது.
போட்டித் தேர்வு
1. வேலை வாய்ப்பிற்கான அறிவிக்கைகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு.
2. ஒவ்வொரு ஆண்டும் நடத்த அவசியம் இல்லை (எ.கா. TNPSC)
3. பெற்றுள்ள மதிப்பெண்களைப் பொறுத்து ஒவ்வோ ராண்டும் வகுப்பு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் மாறும்.
4. இதில் வெற்றி பெறுவோருக்கு தேர்ச்சிச் சான்றிதழ் தரப்படாது. மதிப்பெண்களை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய முடியாது.
5. கட்-ஆப்க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி.
6. இதிலிருந்து நேரடியாக பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.
தகுதித் தேர்வு
1. வேலை வாய்ப்புக்கான அறிவிக்கைக்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பில்லை
2. ஒவ்வோராண்டும் நடத்தப்படும் (TET ஒன்றுக்கு மேலும் நடத்தப்படலாம்).
3. மொத்த இடங்கள் எவ்வளவு என்ற பிரச்சினை இல்லை. எனவே வகுப்பு வாரியான தனித்தனி தகுதி அளவுகோல்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல்கள் மாறாது.
4. வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்ட தனித்தனி தகுதி அளவுகோலுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
5. தகுதித் தேர்வில் பெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை என்பது உறுதி கிடையாது. இதில் வெற்றி பெற்றோரை தனியே விண்ணப்பிக்கச் சொல்லி, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முறை என்னவோ அதற்கேற்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டித் தேர்வு மதிப்பெண் கட்-ஆப் / பதிவு மூப்பு தேதி கட்-ஆப் ஆகியன வகுப்பு வாரியாக அறிவிக்கப்படும். மற்றபடி இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே!
6. இதிலிருந்து நேரடியாகப் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்து வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வதுபோல தகுதித் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதற்குள் அரசு அறிவிக்கும் ஆசிரியர் பணிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இந்தத் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். (தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணியில் இடம் பெற முடியும் என்பதுதான் இப்போதைய சட்டப்படியான நடைமுறை) அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க இத்தகுதி மதிப்பெண்கள் பயன்படும். பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வோ / பதிவு மூப்போ / வெயிட்டேஜ் மதிப்பெண்ணோ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரியான கட்-ஆப் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
இப்படியான தகுதித் தேர்வுகள் பல ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படுகிறது. NET / SLET தேர்வுகளில் வெற்றி பெற்றோர் தான் கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோ ராவர்.
அதேபோலத்தான் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு)ல் பெற்ற தேர்ச்சி பெற்றோர் தான் பள்ளி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவதற்கு மட்டும்தான் TET பயன்படும்; பயன்படுத்தப்பட வேண்டும். மற்றபடி பணி நியமனத்திற்கும் TET-க்கும் நேரடித் தொடர்பே கிடையாது.
சரிங்க அப்படின்னாலும் TET-ல தகுதி மதிப் பெண் ணுக்கு மேலே தானே வேலை கொடுத்திருக்காங்க. தகுதி பெறாதவங்களையெல்லாம் வேலைக்கு எப்படி எடுக்க முடியும்? கல்வித்தரம் கெட்டுப் போயிடாதா? வேணும்னா அடுத்த வருசம் எழுதி தகுதிப்படுத்திக்க வேண்டியது தான்.
இந்த மாதிரிப் பிரச்சினையெல்லாம் NET/SLET-ன்னு சொன்னீங்களே அங்கேயெல்லாம் வருதா? என்று இந்த தகுதித் தேர்வில் தோல்வியடைந் தாகச் சொல்லப் படும் சிலரே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி தகுதியானவர்கள், தகுதியில்லாத வர்கள் என்று பிரித்துச் சொல்லும் மாபெரும் அளவுகோலான தகுதி மதிப்பெண் என்பது எவ்வளவு?
60 விழுக்காடு
அதாவது 100-க்கு 40 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் தகுதியு டையவர்கள் என்பது தானே உயர்ந்தபட்ச தகுதிக்கான அளவு கோல்!
ஆமாம். அதேதான்.
இந்த 60 விழுக்காடு மதிப்பெண் என்பது யார் யாருக்கு?
அனைவருக்கும்தான். அதிலென்ன சந்தேகம்?
அனைவருக்கும் எப்படி ஒரே அளவுகோல்? இந்திய அரசியல் சட்டத்தில் சமூகநீதி அடிப்படை யிலான தனித்தனி அளவுகோல்கள்தான் நிர்ணயிக்கப் பட வேண்டும். திறந்த போட்டிப் பிரிவினருக்குத்தானே 60 விழுக்காடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியெனில் பிற்படுத்தப்பட்டோருக்கு...? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு...? தாழ்த்தப்பட்டோருக்கு...?
பழங்குடியினருக்கு...?
மாற்றுத் திறனாளிகளுக்கு...?
பார்வையற்றோர்களுக்கு...?
60, 60, 60, 60, எல்லோருக்கும் 60 விழுக்காடுதான், யாருக்கும் தனித்தனியாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட வில்லை.
இப்போது புரிகிறதா? பார்ப்பனர்கள் முதல் பார்வையற்றோர் வரை அனைவருக்கும் ஒரே அளவுகோல்! எப்படி இருக்க முடியும்? சமூக நீதியில் மோசடி என்றோமே அதன் அடிப்படை புரிகிறதா இப்போது? இதுவரை இந்தியாவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கவே முடியாது.
அரசியல் சட்டத்திற்கு விரோத மாக, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை வழங்கியிருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளுக்கு மாறாக, இந்த தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்திற்கும் ஆணைக்குமே புறம்பாக இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதி அரங்கேறியிருக்கிறது.
NCTE எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆணைய விதிப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தகுதித் தேர்வுகளை நடத்தி வகுப்புவாரியான தனித்தனியான கல்வி அளவுகோல்களை வெளியிட்டு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்ணே கிடையாது என்று சமூகநீதிக்கும், அரசியல் சட்டத்திற்குமே எதிரான நிலைப்பாடு எப்படி எடுக்கப்பட்டது?
ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்று கேட்பதற் கான அடிப்படை வாய்ப்பையே இல்லாமல் செய்து, சமூகநீதிப்படி வேலை பெறும் தகுதிக்கான ஊற்றுக் கண்ணையே அடைத்தது யார்?
முன்னேறிய ஜாதியினரும், அனைத்து வாய்ப்புகளும் பெற்றவர்களே 40 விழுக்காடு குறைவாக 60 விழுக்காடு எடுத்திருந்தாலும் தகுதியானவர்கள்தான் என்னும்போது அவர்களை விட வாய்ப்புக் குறைந்த, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் சமூகநீதிப்படி நிர்ண யிக்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் ஏன் நிர்ணயிக்கப்பட வில்லை? திறந்த போட்டியைத் தவிர 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வெற்றிருக்க வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களுக் கான இடங்கள் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் விளங்கவில்லையா? இடஒதுக்கீடே வழங்கப்பட வில்லை என்பது புரியவில்லையா?
சட்டமும், நீதிமன்றமும் TET விசயத்தில் சொல்லியிருப் பவை என்ன? நடந்திருப்பது என்ன? நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? நடந்துள்ள சதியின் விவரங்கள் நாளைய விடுதலையில்!
தோழர்களே, பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்த்து விட்டீர்களா? அவர்களை ஒன்று திரட்டத் தயாராகி விட்டீர்களா?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!
எழுத்துரு அளவு Larger Font
தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.
ஆளும் கட்சி எப்படி இருக்க வேண்டும்? எதிர்க்கட்சி களுக்குப் போதுமான வாய்ப்பினை அளித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைபாடுகளைக் கவனமாக கருத்தூன்றிக் கேட்டு அந்தத் தவறுகளைக் களைந்திட முனைய வேண்டும் அதுதான் ஒரு நல்ல ஆளும் கட்சியின் பொறுப்பான கடமையாகவும் இருக்க முடியும்.
ஆனால், தமிழ்நாடு சட்டமன்றமே இதற்கு நேர் எதிராக உள்ளது. முக்கியமான தீர்மானத் தைக் கொண்டு வரும்போது, அந்தத் தீர்மானத் தின் நோக்கத்தை எடுத்துக் கூறி முதல் அமைச்சர் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
தீர்மானத்தின்மீது கருத்துக்களைக்கூற எதிர்க் கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுதான் சிறப்பான, ஆரோக்கிய மான நிலைப்பாடாக இருக்க முடியும்.
தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்ன தாகவே முக்கிய எதிர்க்கட்சியையும், அதன் முக்கிய தலைவரையும் சாடுவதற்கே அதிக நேரத்தை எடுத்துக் கொள்வது சரியானது தானா?
அப்படி குற்றங் கூறும் பொழுது சம்பந்தப் பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியைக் குற்றம் கூறினால் அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது அதே நேரத்தில் ஆளும் கட்சி தரப்பினர் குற்றங்களை அடுக்கினால் அவற்றை அட்சரம் பிறழாமல் அவைக் குறிப்பில் ஏற்றுவது என்பதெல்லாம் எந்தவூர் ஜனநாயகமோ தெரியவில்லை.
இந்தியாவிலேயே சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆளும் கட்சியாக இருந்தபோது சென்னை மாநில சட்டசபை நடக்கும் நேர்த் தியைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரர்கள் வருவார்களாம்.
சரியாகவோ தவறாகவோ திராவிடப் பாரம்பரியம் பேசும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உயர்ந்த புகழைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ஜெயலலிதா அம்மையாரா பேசுவது? யார் எதைப் பேசுவது என்ற வரை முறையே இல்லையா?
ஒரு கணம் அசை போட்டுப் பார்க்க வேண்டாமா?
2009இல் ஈழத்தில் இலங்கை சிங்கள இனவாத அரசால் நடத்தப்பட்ட இனப்படு கொலையை எதிர்த்தவரா அம் மையார்?
ஒரு யுத்தம் ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர் களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக் கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
- (Dr. நமது எம்.ஜி.ஆர். 18.1.2009)
இவ்வளவுப் பச்சையாக ஈழத் தமிழர் படுகொலையை நியாயப்படுத்தியவர், தி.மு.க. வையும், டெசோவையும் மனம் போன போக்கில் குறை கூறுவது சரியானதுதானா?
அதுவும் ஒரு தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியும்போது, அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் ஈர்க்கும் வகையில் அது இருக்க வேண்டாமா? மாறாக சீண்டுவதாக இருப்பது எந்த வகையில் சரி?
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது. ஒரே நாமாவளியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்
(திருக்குறள் 448)
28-3-2013
பக்குவமடையாதவன்
அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)
விபச்சார விடுதி
கோயில்களை விபச்சார விடுதி என்று காந்தியார் சொன்னார் என்று நாம் சொன்னால் அதற்கு ஆதாரம் உண்டா என்று வினா தொடுப்பவர்கள் உண்டு.
ஆதாரம் இல்லாமல் எதையாவது திராவிடர் கழகம் சொன்னதுண்டா?
இதோ காந்தியார் பேசு கிறார்: தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக் கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களிலும் இருக் கிறார் என்று நீங்கள் சொல் வதைபற்றிப் பலர் குறைபட் டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக்கூட நான் விரும்பவில்லை. ஒரு வகை யில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான். கடவுள் எங் கும் இருக்கிறார்.
திருடர்கள் வாழும் குகைகளில்கூட இருக்கிறார். ஆனால் அதற் காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவ தில்லையே? அதற்குப் பதி லாக ஆலயங்களுக்குத் தானே போகிறோம்? ஆல யங்களில் தூய்மையான சூழ் நிலை நிலவும் என்பதற்காகத் தானே செல்கிறோம்? அந்தப் பொருளில்தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆல யங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன். அத னால் தான் அப்படியே அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்ட வன் இருப்பாரோ, அப்படித் தான் இருப்பார் என்று நான் சொன்னேன். இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத் துவதாக இருந்தால், அதற் காக நான் மிகவும் வருந்து கிறேன். ஆனால் இந்து சம யத்தின் நலனுக்காகவாகி லும், என்னுடைய அறிக்கை யைத் திரும்பிப் பெறவோ, மாற்றவோ முடியாது என் றார் காந்தியார். (நூல்: தமிழ்நாட்டில் காந்தி - காந்தி நூற்றாண்டு வெளியீடு - பக்கம் 586-587)
இது ஏதோ இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல - வெளிநாடுகளில் இருக்கும் இந்துக் கோயில்களின் யோக் கிதை இதைவிட ஆபாசம்!
9.3.2013 நாளிட்ட தின மலர் இணையதளத்தில் வெளி வந்த ஒரு செய்தி இதோ: ஜகார்த்தா : கோயில்களில், உடலுறவு கூடாது' என்ற எச்சரிக்கை பலகையை வைக்க, இந்தோனேசிய அரசு, முடிவு செய்துள்ளது. இந்தோனேசி யாவின் பாலி தீவில் உள்ள, சரசேடா கிராமத்தின், இந்து கோயிலில், பராமரிப்புப் பணி நடந்து வந்தது. அதைப் பார்வையிடச் சென்ற உள்ளூர் இளைஞர் குழு தலைவர், கோயிலுக்குள், எஸ்டோனியா நாட்டு காதல் ஜோடி ஒன்று, உடலுறவில் ஈடுபட்டதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார். அவர்களைப் பிடித்து விசாரித்த போது, "கோயிலுக்குள் உடலு றவு கொள்ளக் கூடாது என்பது, எங்களுக்கு தெரியாது' என, அவர்கள் கூறியுள்ளனர். "வெளி நாட்டினர் என்பதால், விஷ யத்தை பெரிதுபடுத்த வேண் டாம்' என, போலீசார் கேட்டுக் கொண்டனர். எனினும், கோயி லின் புனிதம் கெட்டு விட்டதால், அதை புனிதப்படுத்தும் சடங்கு செய்வது என, முடிவு செய்யப் பட்டது. இதற்காக, 1 லட்சம் ரூபாய் தர அந்த ஜோடி, ஒப்புக் கொண்டது. (அதிலும் சுரண்டல் தானோ!) இச்சம்பவத்தை தொடர்ந்து, புகைப்பிடிக்க கூடாது' என, எச்சரிக்கை பலகை வைப்பது போல், கோயில் களில், உடலுறவு கூடாது' என்ற அறிவிப்புப் பலகை வைக்க, இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
(தினமலர் 9.3.2013)
இதற்கு விளக்கமும் வேண் டுமோ? இந்துக் கோயில்களின் தேர்களில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள்தான் எவ்வளவு ஆபாசமானவை - கீழ்த்தரமான உறவுகள்!
சீற்றம் வேண்டாம் சிந்தியுங்கள்!
- மயிலாடன் 28-3-2013
Post a Comment