Search This Blog

17.3.13

பார்ப்பனர்கள் கலைஞரைக் கரித்துக் கொட்டுவதேன்!? சவுண்டிகளுக்கு பதிலடி!!

 
கலைஞரைக் கரித்துக் கொட்டுவதேன்!?

ஒருவர் தன் கொள்கையில், தன் பணியில், தன் செயலில் மிகச்சரியாகவும், புரளாமலும், நழுவாமலும், உறுதியாகச் செயல்படுகிறார் என்பதற்கு அவரால் பலன் பெறுவோர் கொடுக்கும் பாராட்டுகளை விட எதிரிகள் கொடுக்கும் கடுமையான எதிர்ப்பும், தாக்குதலும், ஏச்சும் பேச்சும் தான் உண்மையான தரச்சான்று பெற்ற பாராட்டாகும்.

அவ்வகையில் கலைஞருக்கு இன எதிரிகள் தருகின்ற தாக்குதல், நெருக்கடி, சதி, கண்டனம், காழ்ப்பு, பழிப்பு, பழி சுமத்தல், இருட்டடிப்பு, இழிவு ஏராளம், அதுவும் இடைவிடாது கொடுத்துக் கொண்டிருப்பது தான் நுட்பம். மக்கள் தொடர்ந்து வெறுக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் தவறாது ஏதாவது ஒரு எதிர்ப்பை, இழிவைக் காட்டிக் கொண்டிருப்பது அவர்களின் போர் யுக்தி!

அவர் ஆட்சியில் இருக்கும்போது காட்டுகின்ற எதிர்ப்பைவிட, எதிர்க் கட்சியாய் இருக்கும்போது எதிர்ப்பை இன்னும் தீவிரப்படுத்துவர். காரணம், வீழ்ந்தவரை எழுந்திருக்காமல் செய்து, இட்டு மூடிவிடலாம், முடித்து விடலாம் என்பதற்காக.

அவர் அடிக்க அடிக்க எழும் பந்து, அழுத்த அழுத்த வேகம் கொள்ளும் விசைக்கருவி! தாக்கத்தாக்க ஊக்கம் பெறும் ஓர் அதிசய மனிதர் எதிர்ப்பிலும், இழிவிலும், ஏமாற்றத்திலும், தோல்வி யிலுமே வாழ்க்கை நடத்தி, இயக்கம் நடத்தி, ஆட்சி நடத்தி சாதனைகள் புரிந்தவர், அரணாய் நிற்பவர்.

எதிரிகள் என்ன ஆயுதம் எடுப்பர் என்று முன்னரே உய்த்துணர்ந்து, முறியடிக்கும் மூளைக்குச் சொந்தக்காரர். எங்கு தட்டினால் இனப்பகையைப் புகையாக்கலாம் என்ற நுட்பம் கற்ற பொறியாளர்.

ஆரியப் பார்ப்பனர்கள் கலைஞர் என்றாலே கரித்துக் கொட்டுவது ஏன்? ஒரு கடும் பகைமையைக் அவர்மீது காட்டுவது ஏன்? செத்துத் தொலைக்க மாட்டாரா?! என்ற வயிற்றெரிச்சலுக்கு வடிகாலாக, அவ்வப்போது வதந்தி பரப்பி அரிப்புத் தீர்க்கும் ஆத்திரம் எதனால்?

வேறொன்றும் இல்லை, இவரை ஒழித்து விட்டால், நம் கூத்தை, தாண் டவத்தை, ஆதிக்கத்தைத் தடையின்றி நடத்தலாமே என்ற ஏக்கம்!.

சூத்திரனையெல்லாம் தூக்கி நிறுத்தும் சூத்திர தாரியாய் செயல்படுகிறாரே! ஆத்திரம் அவாளுக்கு. ஒன்றா , இரண்டா, எத்தனையோ செய்திருக்கிறாரே! செய்து கொண்டேயிருக்கிறாரே! எரிச்சல்!

நீதிமன்ற வாசலைக்கூட மிதிக்க முடியாதிருந்த ஒரு சாதிக்காரனை, நீதி பதியாகவே உட்கார வைத்து விட்டாரே! அதுவும் 12ஆவது இடத்தில் இருந்த ஆதித்திராவிடர் வரதராஜனை அல்லவா நீதிபதியாய் உட்கார வைத்து, நம்மை குனிந்து கும்பிடு போட வைத்து விட்டாரே!

சமத்துவபுரம் கொண்டுவந்து சேரிக்காரனையும் நம்ம சாதிக்காரனையும் சரி சமமாக்கி விட்டாரே!

குடிசைமாற்று வாரியம் கொண்டுவந்து குடிசையில் கிடந்தவனையெல்லாம், மாடியில் குடிவைத்து விட்டாரே!

கோயிலில் குப்பனையும், சுப்பனையும் கொண்டு வந்து அர்ச்சகராக்கிவிட்டாரே!

தமிழை நீசபாசை என்று ஒதுக்கி வைத்தோம் அதை கோயிலில் பூசை பாசையாக்கிவிட்டாரே! நம் மொழிக்கு கிடைத்த செம்மொழித் தகுதியை தமிழ் மொழிக்கும் பெற்று விட்டாரே!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய், புராண கதையெல்லாம் எழுதி, பிரபவ... நந்தன, விஜய... விரோதகிருது என்று சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று நாம் ஏமாற்றி வந்ததை, ஒரு உத்தரவைப் போட்டு தூக்கிலிட்டு, தை ஒன்று தான் தமிழாண்டுப் பிறப்பு என்று சட்டம் போட்டுவிட்டாரே!

உலகத்திலே உயர்வான நூலகத்தை தமிழுக்கு உருவாக்கி விட்டாரே!
தமிழில் படிச்சவனையெல்லாம் சம மாக்கி விட்டாரே!

அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்து நம்ம ஆச்சாரத்தைக் கெடுத்து விட்டாரே!

பொம்பளைங்களுக்கு சொத்துரிமை கொடுத்து சமமாக்கி விட்டாரே!

திருவள்ளுவருக்குக் கோட்டம், சிலை, உயர்நிலை கொடுத்து விட்டாரே!
பெரியார் சிலையை ஊர் ஊராய் திறந்து வைக்கிறாரே!

மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 இடம்தந்து முடம் நீக்கி விட்டாரே!

தமிழ்ப்பண்பாட்டையெல்லாம் நொறுக்கி கொட்டியிருந்தோம். அதை யெல்லாம் பொறுக்கியெடுத்து பொலியச் செய்து விட்டாரே!

சூத்திரனை அத்தனை துறையிலும் அதிகாரியாய்அமர்த்தி விட்டாரே!

திரைப்படத்துக்கு கதை எழுதுகிறார், மேடைப்பேச்சில் சாதனைப்படைக்கிறார். இலக்கியத்தில் கலக்குகிறார், அரசியலில் ஆட்சி செய்கிறார், கட்சியை கலையாது, நிலைகுலையாது நிலை நிறுத்துகிறார். ஒவ்வொரு நூலும் எழுதுகிறார், நிற்க முடியாது போனாலும், சக்கர நாற்காலியில் நகர்ந்தப்படியே சாதனை புரிகிறார், இந்திய தலைவரெல்லாம் ஓடோடிவந்து பார்க்கிறார்கள். பகவான் சாயிபாபாவே வீடு தேடி வந்து பார்த்தார், குடியரசு தலைவரை குறித்துக் கொடுத்து குந்தவைக்கிறார். பல முறை கட்சி உடைந்தாலும் பலமாக்கிக் காட்டுகிறார், நம்ம சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் சுக்கல் நூறாக்குகிறார். சாய்த்து கீழே தள்ளி விட்டோம் என்று சற்று மூச்சு வாங்கு வதற்குள் எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்! என்ன மனுசனய்யா இவர்! இதுதானே உங்கள் வயிற்றெரிச்சல்! எரியட்டும்! நன்றாக எரியட்டும்!!
நீங்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்து எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அவரை ஒன்றும் அசைக்க முடியாது. அரசியலில் வாக்குகள் வேண்டுமானால் அறியாமையால் மாறலாம். அவர் போர் என்றென்றும் ஓயாது; தோற்காது. இனப்போரில் அவர் வெல்வார் காரணம் அவர் பாடம் கற்றது பெரியாரிடம். பெரியாரைப் பின்பற்றுகின்ற எவரும், எவரிடமும் தோற்க மாட்டார்கள், எவரையும் எளிதில் ஏற்க மாட்டார்கள்.

ஆட்சியிலிருந்து அகற்றி விட்டதை சாதனையாக நினைக்காதீர்கள்! தமிழர் கள் தவறுவார்கள், ஆனால் தடம் புரள மாட்டார்கள்! சவுண்டிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்! எச்சரிக்கை!


          ------------------- - மஞ்சை வசந்தன் அவர்கள் 17-3-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29 comments:

தமிழ் ஓவியா said...


பேசியது நிதி அமைச்சர் ப. சிதம்பரம்தான்! நாளிதழ்கள் எல்லாம் அவாள் கைகளில் இருக்கின்றன!


காரைக்குடி மார்ச்-17 நாட்டில் நடக்கும் நல்ல செய்திகளை மறைத்து வெளியிடும் பத்திரிகை கள் எல்லாம் அவாள் கைகளில் உள்ளன என்று காரைக்குடியில் நடந்த மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உணர்ச்சி பூர்வமாக உரையாற் றினார்.

காரைக்குடி பாண் டியன் திடலில் நடை பெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.இராஜ ரெத்தினம் தலைமை வகித்தார்.இந்த கூட் டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2013-2014ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக் கையினை விளக்கி உரை நிகழ்த்தினார்.அதில் மத்திய அரசு எவ்வ ளவோ பல நல்ல திட் டங்களை எல்லாம் அறி வித்து செயல்படுத்து கிறது .சட்டங்களாக இருந்ததையெல்லாம் திட்டங்களாக்கியது அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்

.அதில் குறிப்பாக கல்வி உரிமை, வேலை வாய்ப்பு, தகவல் அறியும் உரிமை, உணவுக்கு உறுதி என்று பல நல்ல திட்டங்களையெல்லாம் செயல்படுத்தி உள் ளோம். ஆனால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி தான் அமையும் என்று ஒரு சில இதழ் களைத் தவிர மற்ற அனைத்தும் எழுதின. அதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத் தினரிடம் மட்டுமே நாளிதழ்கள் இருப்ப தால் தான்.ஆனால் நடந்தது என்ன? மத்தி யில் காங்கிரஸ் தலை மையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் அமைந்தது.

அதே போல நேற்று நாடாளுமன்றத்தில் மத் திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர் சித் இலங்கை விவகாரம் குறித்துப் பேசியதை அதே நாளி தழ்கள் உள் பக்கத்தில் வெளியிட்டு மறைக்கப் பார்க்கின்றன. அதற்குக் காரணம் நாளி தழ்கள் எல்லாம் அவாள் கையில் உள்ளன. (பலத்த கை தட்டல்)

வரும் 22ஆம் தேதி வரை பொறுமை காக்க வேண்டுமென உங்களை கேட்டுக்கொள்கிறேன்.ஆம் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் சுதந் திரமான நம்பகத்தன்மை யுடன் கூடிய பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று நம்புகிறோம். அப்படி வரும் போது கண்டிப்பாய் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்.தமிழர்கள் பக்கம் இந்தியா நிற் கிறது என்று அப்பொ ழுது தெரியும்.

எப்படி கடந்த ஆண்டு அய்.நா. மன் றத்தில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களித்ததோ அதைப் போல இந்த முறையும் இந்தியா வாக்களிக்கும் இலங்கை வாழ் தமிழர் களுக்கு சம உரிமை, சம வாழ்வு கிடைக்க வேண் டும் என்பதே காங்கிரஸ் விருப்பம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறேன் என்று பேசினார். கூட்டத்தில் கடலூர் எம்.பி.கே.எஸ்.அழகிரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். இராமசாமி, வள்ளல் பெருமான், சுப்புராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.சுந்தரம் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


இருக்கிறதா இந்தியா?


கேரள மாநிலத்தின் நிதி நிலை அறிக் கையை அம்மாநில நிதி அமைச்சர் கே.எம். மானி தாக்கல் செய்துள்ளார் (16.3.2013). அதிர்ச்சி தரும் ஒரு தகவல்: முல்லைப் பெரி யாறில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. உச்சநீதிமன்றம் நிய மித்த உச்சநீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையி லான ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டு விட்டது.

இதனடிப்படையில் 142 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு உடன்படாமல் கேரள அரசு சண்டித்தனம் செய்து வருகிறது.

குதிரை கீழே தள்ளிய தோடு அல்லாமல் குழி யும் பறித்த கதையாகி விட்டது.

ஏற்கெனவே உள்ள அணை பலமாக உள்ளது. புதிய அணை கூடாது என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டுக் கூறிய நிலையிலும் கேரள காங் கிரஸ் அரசு நீதிமன்ற தீர்ப்பை குப்பைக் கூடை யில் வீசியெறிந்து விட் டது.

இப்படி அணை கட் டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதா?

அணையின் கீழ்ப் பகுதியில் உள்ள மாநிலத்தின் அனுமதி பெறாமல் அணைகள் கட்டப்படக் கூடாது என்பது இந்திய அரச மைப்புச் சட்டம் மட்டு மல்ல அனைத்துலகும் ஏற்றுக் கொள்ளகூடிய சட்ட நிலை.

ஆனால் இந்தியா வில் என்ன நடந்து கொண்டுள்ளது? கரு நாடக மாநிலம், தமிழ் நாட்டை ஒரு மாநிலம் என்றுகூட நினைக்கா மல் சட்டையில் ஒட்டிய தூசு என்று கருதி தட்டி விட்டுக் கொண்டு, சட்டம், நீதி எந்த ஒன் றையும் சட்டை செய் யாமல் தானடித்த மூப் பாக அசல் சண்டியர்த் தனமாக பேட்டை ரவுடி போல் நடந்து கொண்டு வருகிறது.

பல புதிய அணை களைத் தன் போக்கில் கட்டியுள்ளது. ஆளுநர் ஆட்சியின் போது நிதி நிலை அறிக்கையில் முன்பு நிதிகூட சட்ட விரோத மாக ஒதுக்கீடு செய் யப்பட்டதுண்டு.

சர்வதேசியம் என்றா லும், இந்தியத் தேசிய மானாலும் பாதிக்கப் படுவது மட்டும் தமிழ் நாடாகவும், பாதிக்கப் படுபவன் மட்டும் தமிழனாகவும் இருப்பது என்பது மட்டும் எழுதப் படாத - அதே நேரத்தில் நூற்றுக்கு நூறு உண் மையான நடைமுறை போலும்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பன்னாட்டு ஆணையம் அமைத்து இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்


அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொணர வேண்டும்

இல்லையேல் கூட்டணியிலிருந்து விலகுவது உறுதி!

திமுக தலைவர் கலைஞர் திட்டவட்ட அறிவிப்பு




சென்னை, மார்ச் 17- அமெரிக் காவின் ஜெனிவா தீர்மானத்தில் - நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா திருத்தம் கொடுக்க வேண்டும்; இல்லையேல் மத்திய கூட்டணியிலிருந்து திமுக வில குவது உறுதி என்று கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்தார்.

தமிழ் ஓவியா said...

இன்று 17.3.2013 செய்தியாளர்களி டம் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

தி.மு.க. தலைவர் கலைஞர் :- நேற்றிரவு இந்தியப் பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் வழிகாட்டும் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர் களுக்கும் தனித்தனியாக கடிதங் கள் எழுதி அவசரமாக அனுப்பி யிருக்கிறேன். அந்தக் கடிதங்களில் குறிப்பாக

“I am writing this letter with immense mental agony and feeling of having been let down by the Government of India. I wish to point out that the Government of India should take appropriate steps to incorporate the amendments to the Resolution as follows:-

• Declares that Genocide and War Crimes had been committed and inflicted on the Eelam Tamils by the Sri Lankan Army and the Administrators.

• Strongly urges the establishment of a credible and independent International Commission of Investigation in the time bound manner into the allegations of War Crimes, Crimes against Humanity, Violations of International Human Rights Law, Violations of International Humanitarian Law and the Crime of Genocide against the Tamil People.

இதைத் தமிழிலே கூறவேண்டு மென்றால், இலங்கை அரசா லும், அரசு நிர்வாகத்தில் உள் ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிர கடனப்படுத்த வேண்டும்.

நம்பகத் தன்மை வாய்ந்த சுதந் திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கை யில் நடைபெற்ற போர்க் குற்றங் கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர் களுக்கு எதிரான இனப்படு கொலை குறித்து விசாரணை நடத் தப்பட வேண்டும் என்று திருத்தங் கள் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் :- இந்தக் கடிதங் களை யார் மூலம் கொடுத்தனுப்பி யிருக்கிறீர்கள்?
கலைஞர் :- பிரச்சினையின் அவசரம் கருதி பேக்ஸ் மூலமாக நேற்றிரவே அனுப்பிவிட்டோம்.

செய்தியாளர் :- மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் காரைக்குடியில் நேற்று பேசும்போது, நல்ல செய்திக்காக காத்திருங்கள் என்று சொல்லி யிருக்கிறார். அவராக இருக்கட்டும், மத்திய இணை அமைச்சர் நாரா யணசாமி ஆகட்டும், அமெரிக் காவின் தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி பேசுகிறார்களே தவிர, நீங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்ற திருத்தங்களைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என்கிறார் களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த நிலையில், மத்திய அரசு திருத்தங்களைப் பற்றி தீவிரமாக (சீரியஸ்) இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர் :- மத்திய அரசை தீவிரமாக (சீரியஸ்) ஆக்க வேண்டு மென்பதற்காகத் தான் இந்தத் திருத்தங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, குறிப்பிட்டு அவற்றை இணைத்து அதன் அடிப்படையில் விசாரித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டு மென்றும், அப்படி எடுக்கப்படாத பட்சத்தில் இலங்கையிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்று தான் கனத்த இதயத்தோடு நாங்கள் முடிவுக்கு வர வேண்டிய வர்களாக இருக்கிறோம்.

செய்தியாளர் :- நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்பட வில்லை என்றால், மத்திய அமைச் சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா?

கலைஞர் :- எங்கள் கோரிக் கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக் கும் உள்ள உறவு நீடிக்குமா என் பது சந்தேகம் - நீடிக்காது என்பது உறுதி.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர்:- நீங்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறீர் கள், பேசி வந்திருக்கிறீர்கள். இந்திய அரசு வங்காளதேசப் பிரச்சினை யில் மற்ற வேறு சில நாடுகளின் பிரச்சினையிலே அக்கறை காட் டுகிறார்கள். ஆனால் என்ன கார ணத்தால் இலங்கைப் பிரச்சினை யிலே மட்டும் பிடிவாதமான நிலையை எடுத்துக் கொண்டிருக் கிறார்களே, அதற்கு என்ன காரணம்?

கலைஞர் :- அது தான் தமிழ னுடைய தலை எழுத்து.

செய்தியாளர் :- மீனவர்கள் பிரச்சினை பற்றி மத்திய அரசுக்கு எழுதி யிருக்கிறீர்களா?
கலைஞர் :- நாடாளுமன்றத் தில் எங்கள் கட்சியின் உறுப்பினர் கள் அதைப் பற்றிப் பேசியிருக் கிறார்கள். நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ஒரு சிலர் விடு தலையும்செய்யப்பட்டிருக்கிறார்கள்.

செய்தியாளர் :- நீங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பிறகு மத்திய அரசில் இருந்தோ, காங் கிரசில் இருந்தோ யாராவது பேசினார்களா?
கலைஞர் :- யாரும் பேசவில்லை. செய்தியாளர் :- கூட்டணி யிலே இருந்த திரிணாமுல் காங்கிரஸ் போன்றவர்கள் மத்திய அரசுக்கு இது போல் எச்சரிக்கை விடுத்த போது, மத்திய அரசிலி ருந்தோ, காங்கிரசிலிருந்தோ உடனடியாக யாராவது சென்று சமாதானம் செய்தார்கள். ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுடன் சமாதானம் பேச முன் வர மாட்டேன் என்கிறார்களே?

கலைஞர் :- அதற்குத் தான் முதலிலேயே சொன்னேனே!

செய்தியாளர் :- இந்தியா திருத் தங்களைக் கூறினால், அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- இந்தியா வலி யுறுத்த தவறினால், அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாததை விட அது பெரிய தவறு. அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ, அதைக் கூட இந்தியா சொல்லத் தவறினால், அது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருத்த அநீதி என்று நாங்கள் கருதுகின்ற காரணத்தினால் தான், இந்தக் கூட்டணியிலே நீடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரிய வில்லை என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதையே இப்போதும் சொல்கிறேன்.

செய்தியாளர் :- தஞ்சாவூரில் நேற்று ஒரு பவுத்த பிட்சு ஒரு சிலரால் தாக்கப்பட்டிருக்கும் செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

கலைஞர் :- அதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பொய்க்கு இறக்கை உண்டு

செய்தி: குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி 3டி மூலம் செய்த தேர்தல் பிரச்சாரம் கின்னசில் இடம் பிடித்துள்ளது.

சிந்தனை: உண்மையைவிட பொய்தானே அதிக இறக்கைகளைக் கட்டிக் கொண்டு வேகமாகப் பரவும்! (அரசு பயங்கரவாதமாக சிறுபான்மையினரை படு கொலை செய்ததில் மோடியின் கின்னஸ் சாதனையை விரைவில் எதிர்பாருங்கள்)

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வு - புது விதிகளும் பின்னணி சதிகளும்


- அறிவு ஆதனி

IAS, IP உள்ளிட்ட பதவி களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத் தில் தேர்வு முறைகளில் மாற்றங் களை வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு சார்ந்த ஒரு அமைப்பு சமூக நீதிக்கு எதிரான செயல்களில் ஒன்றாக தேர்வு முறைகளில் மாற்றங்களை செய் துள்ளது.

முதல் நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில்/படிகளில் நடைபெறும் இத்தேர்வு முறையில் முதன்மை தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தான் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

தேர்வுமுறை மாற்றம்: தாள் - I, II என தாள் IX வரை 9 தாள்கள் இருந்த பிரதான தேர்வில் தற்போது தாள் - I,II என தாள் VII வரை 7 தாள்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வட்டார மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது முன்பு 22 வட்டார மொழிகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம் எடுத்து எழுத வேண்டும் ,இதனால் அவரவர் தாய் மொழியையோ விரும்பும் வட்டார மொழியையோ ஒரு பாடமாக எடுத்து எழுத இயலாத நிலை உருவாகி யுள்ளது.

தாள் - I (ஆங்கிலம்) தவிர மற்ற அனைத்துத் தாள்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம் என்கிற முறை இருந்தது. அது தற்போது மாற்றப்பட்டு எடுத்துக்காட்டாக தமிழ்மொழி வாயிலாக பட்டம் படித்தவர்கள் மட்டுமே தமிழ் மொழியில் முதன்மைத் தேர்வு எழுத முடியும். என மாற்றப்பட் டுள்ளது. மேலும் 25 மாணவர்கள் அந்த மொழியில் அந்த குறிப்பிட்ட பாடத்தில் தேர்வு எழுத விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

முதன்மைத் தேர்வில் தமிழை ஒரு தாளாக தேர்வு செய்து எழுதலாம் என்று இருந்த நிலை தற்போது தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழை விருப்பப்பாடமாக தேர்வு செய்து எழுத முடியும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25 விருப்பப்பாடங்கள் மற்றும் 22 மொழிப்பாடங்கள் உள்ள நிலையில் மற்ற பாடங்களுக்கு இல்லாத ஒரு கட்டுப்பாடு மொழிப்பாடங்களுக்கு மட்டும் ஏன்? உதாரணமாக சட்டம் என்ற பாடத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய சட்டத்தை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை (எந்த வொரு பட்டப்படிப்பு படித்தவரும் தேர்வு செய்து எழுதலாம்) ஆனால் மொழிப் பாடங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுபாடு?

தமிழ் ஓவியா said...


இந்தியா போன்ற பல்வேறு மொழி கலாச்சார இயல்பு கொண்ட நாட்டில் வட்டார மொழிகளை நசுக்குவது எதற்காக? தமிழ் படித்தவர்கள் தேர்வில் வெற்றிபெற்று உயர்ந்த பதவிக்கு வரக்கூடாதா? பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் கிராம மக்கள் கல்வியிலும், பதவிகளி லும் உயர்ந்து வருவதைப் பொறுக்கவில்லையா?

தாய்மொழி: ஒருவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தாய் மொழியில் மட்டுமே சிந்திக்க இயலும் என உளவியல் கூறுகிறது. தாய் மொழிக்கல்வியே அறிவு வளர்ச்சிக்கு சிறந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மனித சமுதாயம் வளர அறிவு சார்ந்த வளர்ச்சி தேவை என்கிற நிலையில் ஏனிந்த இரட்டை அளவுகோல்? பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்பதவிக்கு வருவது யாருக்கோ, எங்கேயோ எரிகிறதோ?

சமூக நீதி: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்கிறநோக்கில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முகவுரையிலும், அடிப்படை உரிமையிலும் கூறப்பட்ட சமூக நீதி, கேசவானந்த பாரதி Vs கேரளா, Basic Structural (1973) என்ற வழக்கில் சமூக நீதி என்பது அடிப்படை கட்டமைப்பு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் (அடிப்படை கட்டமைப்புகளை மாற்றவோ, நீக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை) இத்தேர்வு முறை மாற்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

அரசியலமைப்பு சார்ந்த ஒரு அமைப்பே அரசியல் சட்டத்திற்கு எதிராக மாற்றதை கொண்டு வந்திருப்பது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்

தமிழ் ஓவியா said...

சமூக நீதிக்காக போராடி அதில் வெற்றியும் கண்ட தந்தை பெரியார், அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் கொண்டு வர காரணமானவர் என்பதை மறந்து விட்டார்களா? பெரியார் கண்ட இயக்கம் சமூகநீதிக் களத்தில் வடபுலத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. இந்தியாவெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து போராடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறும் நிலையில் கிராமப்புற, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவது தடுக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் இச்செயல் முதுகெலும்பை முறிக்கும் செயல் என்பது அப்பட்டமான உண்மை.

தாய்மொழிக் கல்வி சிறந்தது என்கிற நிதர்சனமான உண்மை இருக்க, வட்டார மொழி நசுக்கல் என்பது இந்தி திணிப்பின் இரண்டாவது முயற்சி, இரண் டென்ன எத்தனை முறை முயன்றாலும் இங்கு அது எடுபடாது என்பது தெரியாதா?

பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் மக்களாட்சி நாட்டில் வட்டார மொழியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல். இது அரசு தனது பொறுப்பிலிருந்து விலகு வதைக் காட்டுகிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு, நலி வடைந்தோருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியை உயர்த்திப்பிடிக்கும் ஊன்றுகோல், அனைவரும் சமம் என்கிற நிலையில் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது பின்னால் தாக்கும் கொல்லைப் புறத்தனம்.

இத்தேர்வு முறை மாற்றத்தால் கிராமப்புற, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து சீர்குலைய செய்யும் தன் தலையில் மண்ணை வாரிப்போடும் செயல்.

மொழி அறிவு: மொழி என்பது வேறு அறிவு என்பது வேறு. மொழி அறிவை வளர்க்கும் கருவிதானே தவிர மொழியே அறிவாகாது. ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி, தமிழ் பேசுபவன் அறிவாளி இல்லை என்கிற நினைப்பு முற்றிலும் தவறானது. தமிழ் மொழியில் தேர்வு எழுத நியாயமில்லாத கட்டுப்பாடு விதிப்பது அறிவின் வழி உயர்வு அடையும் வழியை மூடுவதற்கு சமம்.

நிர்வாகத் திறன்: கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்மட்ட நிர்வாகத்திற்கு வந்த பிறகு நாடுபல முன் னேற்றங்களை கண்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. மனிதனை மனிதனாய் பார்க்கும் சமுதாயம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான, அறிவுசார்ந்த, பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாட்டை உயர்த்தும் செயல், இது யாருக்கோ இடிக்கிறதோ?

ஒடுக்கப்பட்டவன் உயர்ந்து நிற்பது பொறுக்க வில்லையோ அவாளுக்கு?

குறிப்பு: புதிய விதிமுறைகள் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதன் பின்னணிகளைத் தெரிந்து கொள்வது அவசியமே!

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!



நடைவண்டி நாயகர்களும் முந்தா நாள் மழையிலே நேற்று முளைத்த காளான்களும் டெசோவை நாடகம் என்று விமர்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லி விட்டாராம். அடேயப்பா, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். தாண்டித் தோண்டி யில் விழுகிறது. தாம் தூம் என்று எகிறிக் குதிக்கிறது.

நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெ அம்மை யாரை சிக்கலில் நிறுத்தும் வேலையில் இறங்கவேண் டாம் என்று விடுதலை (21.2.2013) எச்சரித்திருந்தது.

அம்மா மீது என்ன கோபமோ? மறுபடியும், மறுபடியும் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டவைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வேடு!

நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குச் சில கேள்விகள்:

1. இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவே என்று சொன்னவர் யார்? இப்பொழுது போரினால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்களே என்று கிளிசரின் கண்ணீர் விடுவது யார்?

2. போர் என்று சொன்னால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர் யார்?
இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்துவது யார்?

3. இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா ஈடு பட்டால் நாளை இந்தியா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடாதா? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா? என்று கேள்வி கேட்டவர் யார்?
இதற்கு மாறாக முரண்பட்டுப் பேசுவது யார்?

சாட்சாத் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்தானே!

முடிந்தால் இவற்றை மறுத்துவிட்டு எழுந்து முண்டா தட்டட்டும் நமது எம்.ஜி.ஆர்.

முடியவில்லை என்றால், மூலையில் ஒடுங்கிக் கிடக்கட்டும். இல்லை என்றால் வண்டி வண்டியாக எழுத நேரிடும்.

கடைசியில் அம்மையார் அவர்களின்பாடுதான் திண்டாட்டம்!

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்க்கு விடியல் கிடைக்குமா?


சென்னை, மார்ச் 17- இலங்கைக்கு எதிராக அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு: விடுமுறை விடப்பட்டாலும்
போராட்டம் தொடரும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப் பட்டாலும், இலங்கைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடரும் என மாணவர் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளா தார தடை விதிக்க வேண்டும், இலங் கைக்கு எதிராக அய்.நா.வில் அமெ ரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை தொடங் கினர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது. கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு களை புறக்கணித்து பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை, பொறியியல், சட்டக் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக நேற்று முன்தினம் மாலை தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து விடுதிகளில் தங்கி படிக்கும் அனைத்து மாணவ, மாண விகளும் உடனடியாக வெளியேறு மாறு உத்தரவிடப்பட்டது. தேர்வு களும் ரத்து செய்யப்பட்டன.

அரசு அறிவிப்பை தொடர்ந்து நேற்று அனைத்து கல்லூரிகள் மற் றும் விடுதிகள் மூடப்பட்டு கிடந்தன. விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், வழக்கம்போல் கல்லூரிகளுக்கு நேற்று சில மாணவ மாணவிகள் வந்திருந் தனர். கல்லூரிகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர். கல்லூரிகள் மூடப்பட்ட தையொட்டி இலங்கைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் நேற்று ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், சில கல்லூரி மாணவர்கள் தொடர் பட்டினிப் போராட்டத்தை நீட்டித்து வருகிறார்கள்.

கல்லூரிகள் மூடப்பட்டது குறித்து தமிழீழத்துக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறும்போது, கல்லூரிகளை மூடுவதால் எங்களின் போராட் டத்தை நிறுத்திவிட முடியாது. அறி வித்தபடி போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப் பிட்ட பகுதியில் போராட்டம் நடத் தப்படும். சென்னையில் முக்கிய சாலைகளை முற்றுகையிடுவது, அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் பங்கேற்க இதுவரை 17 கல்லூரிகள் ஒருங்கிணைந்துள்ளன. எனவே, நிச்சயமாக மாணவர் போராட்டம் தொடரும் என்றார்.

மாணவர்கள் போராட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கருத்து

இலங்கை தமிழர்கள் பிரச்னையில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு வேண்டுகோள் விடுத்து ள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மத்தியகுழு நேற்று வெளி யிட்ட அறிக்கை:

தமிழ் ஓவியா said...

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வசதியும் இதுவரை மேற்கொள்ளப் படாத நிலையே நீடிக்கிறது. அய்.நா.மனித உரிமை ஆணையம் 2012ஆம் ஆண்டு பரிந்துரைத்த மறுசீரமைப்பு பணிகளும் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையே தொடர்கிறது. போர்குற்றம் குறித்து விசாரிக்க அய்.நா.வால் பரிந்துரைக் கப்பட்ட உயர்மட்ட விசாரணைக் குழு எந்த தடையும் இன்றி சுயேச்சை யாக விசாரணை செய்ய இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில், தமிழர் வாழும் பகுதிகளில் சுயாட்சி அதி காரம் வழங்க முடியாது என்று ராஜ பக்சே கூறியிருப்பது, தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இலங்கை அரசியல் சாசனத்தில் கொண்டு வரப் பட்ட 13 திருத்தத்தை நடைமுறைப் படுத்த மறுப்பதை தெளிவாக்குகிறது. இலங்கை அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்ட 13ஆம் திருத் தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்து வதுடன், தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வும், அதிகாரப்பரவலை யும் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) அவசர பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் அமீர் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.

இதில், இலங்கைக்கு எதிராக அய்.நா சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், ராஜபக்சேக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதோடு, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக தனி ஈழம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அரசுகள் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் பெப்சி துணை நிற்கும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. செயங்கொண்டத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம்
செயங்கொண்டம் வழக்குரை ஞர்கள் தனி ஈழம், இலங்கையில் (ஈழத்தில்) பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை செய்த ராஜபக் சேவுக்கு தண்டனை வழங்க வேண்டும். அய்.நாவில் அமெரிக்காவின் தீர் மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி யும் தேவேந்திரன், எஸ்.கே.பி. மனோ கரன், ரமேஷ்குமார், செல்ல.மணி மாறன் ஆகியோர் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை 15.3.2013 அன்று தொடங்கினர். திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.இராசா, நகர தலைவர் எம்.எஸ்.நாராயணன், ஒன்றிய தலைவர் வை.செல்வராசு, மாவட்ட ப.க. துணை செயலாளர் சு.கலைவாணன், தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், சனதா.மாணிக்கம் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்தினர்.

உங்கள் போராட்டம் தமிழினத் திற்கு தொடர்ந்து தேவை என்பதால் உடல் நலன் கருதி பட்டினிப் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு, டாஸ்மாக் ஊழியர்கள், ஓய்வூதியச் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

கோயம்பேடு மார்க்கெட்டில் 19ஆம் தேதி கடையடைப்பு

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோயம் பேடு மார்க்கெட்டில் மார்ச் 19ஆம் தேதி கடையடைப்பு மற்றும் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று சென்னை கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தி வருமாறு: தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு நிறை வேற்ற வேண்டும்.

இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணையை அய்.நா. நடத்த வேண்டும். ஈழத் தமிழ் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (மார்ச் - 19) கோயம்பேடு மார்க்கெட் வளா கம் முழுவதும் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வியாழனன்று வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிராக அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் கண்டன தீர்மானத் தின் மீது வருகிற புதன்கிழமை அல் லது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்று வரும் அய்.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இதற்கிடையே, கவுன்சில் கூட்டத் தில் இலங்கை பிரதிநிதி மகிந்தா சமரசிங்கே காலமுறை ஆய்வறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் போருக்குப் பின்னர் கடந்த 4 ஆண்டு களாக இலங்கையில் மேற்கொள்ளப் பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் மீது தற்போது உறுப்பினர்களின் விவாதம் நடை பெற்று வருகிறது.

இலங்கை அரசின் இந்த அறிக் கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், பொது மன்னிப்பு சபை, மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதி களும் இந்த அறிக்கையை கடுமையாக எதிர்த்து பேசினார்கள்.

இந்த அறிக்கையின் மீது நேற்று டன் விவாதம் முடிவடைந்தது. அறிக்கையின் மீது பேச இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்காததால், இந்திய பிரதிநிதியால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. போரின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்த 'படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' வழங்கிய 207 பரிந்து ரைகளில் 113 பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதாக வும், மீதம் உள்ள 94 பரிந்துரைகளை ஏற்க முடியவில்லை என்றும் இலங்கை அரசின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.

ஏற்கப்பட்ட பரிந்துரைகளில் மும்மொழி திட்டம், சிவில் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளுதல், ராணுவ முகாம்களில் இருப்பவர்களை திருப்பி அனுப்புதல், உயர் பாதுகாப்புப் பகுதியில் இருந்து ராணுவத்தை விரைவில் திரும்பப் பெறுதல் ஆகியவையும் அடங்கும். இவை இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏற்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் கண்டன தீர்மானத்தின் மீது ஏற்கனவே 3 முறை திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

கடைசியாக ஒருமுறை வருகிற செவ்வாய்க்கிழமை அந்த அறிக்கை யில் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு அது அய்.நா.மனித உரிமை கவுன்சில் முன்பு தாக்கல் செய் யப்படும். அந்த தீர்மானத்தின் மீது வரும் புதன்கிழமை அல்லது வியாழக் கிழமை விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


காலச் சிலாசாசனம்!


உலக வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத இனப்படுகொலை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் இனப் படுகொலை (Genocide) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.

இனப்படுகொலையை ஒரு நாடு செய்தால் அதில் எந்த நாடும் தலையிடலாம் - அது வெளிநாடு தலையிட்டக் குற்றமாகாது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அரசோ இனப்படுகொலை அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக அந்த இனப்படு கொலை நாட்டை தமது நட்பு நாடாக அறிவிக்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

இன்றைய பேட்டியில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் மிகத் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியது போல இந்தியாவும் போர்க் குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், எதிர்காலத்தில் விசாரணைக்கு இந்தியா உட்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை.

எத்தனையோ முறை இதமாக - பதமாக - போதுமானது என்பதை விடத் தாண்டி வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தும்கூட, இந்திய அரசின் போக்கில் எந்தவிதமான நேர்மை யான, மனித உரிமையுடன் மனிதநேயத் துடன் கூடிய போக்கோ, சிந்தனையோ அறவே யில்லை.

வேறு வழியில்லை என்று உறுதியாகத் தெற்றென அறிந்த நிலையில்தான் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 16ஆம் தேதி மத்திய அரசில் திமுக தொடர்வதில் இனியும் அர்த்தமில்லை என்றே அர்த்தமிக்க கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டார். அதற்குப் பிறகாவது மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு தன்போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

தி.மு.க. தலைவரின் அந்த அறிக்கையை வரவேற்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதே நாளில் (16.3.2013) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

கலைஞர் அவர்களின் அறிக்கை வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன் எந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரித்திருந்தார்.

எல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரை - செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டதால் தி.மு.க. ஓர் அறுவை சிகிச்சை முடிவினை எடுக்க நேர்ந்தது.

தி.மு.க எடுத்த இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இது காலம் கருதி எடுக்கப்பட்ட ஞாலம் வரவேற்கும் முடி வாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட் டுள்ளார்.

இனியாவது ஏற்றப்பாட்டுக்கு இறக்கப் பாடல் பாடுவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்கள் ஒரே குரலில் ஈழத் தமிழர் உரிமையின் பக்கம் நிற்பார்களாக!

தி.மு.க. இன்று எடுத்த முடிவு காலம் உள்ளவரை, உலகம் உள்ள வரை நிமிர்ந்து நிற்கும் காலக் கல்வெட்டாகும் - சிலா சாசனமும் ஆகும்! 19-3-2013

தமிழ் ஓவியா said...


காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
_ (குடிஅரசு,26.1.1936)

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!


சென்னை, மார்ச் 20- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று தாம் கூறியதைத் திரித்துக் கூறும் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்;

நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;

திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத் திருத்தங்களை, இந்திய நாடாளு மன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறை வேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன். உள்நோக்கத்துடன் திரிப்பதா?

நான் தெளிவாகச் சொன்னதை, முதல மைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங் களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத் தப்பட்டது இனப் படுகொலையே என்பதை யும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசார ணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ப தையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத் தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண் டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பு!

ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப் போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண் டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீர்த்துப்போன தீர்மானம்!

இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமள வுக்கு நீர்த்துப் போய்விட்டது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய் வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக் கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரி விக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக் கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங் களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக் கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற் கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் - வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு - திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேர்வு முறையில் தமிழ் மொழி தூக்கி எறியப்பட்டுவிட்டது - இதனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது (மார்ச் 18, 19).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு களை அறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.

நெருக்கடி முற்றியது என்றவுடன், தமிழைப் புறந்தள்ளும் திட்டத்திற்குக் கடைசி கையொப்பமிட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் இப்பொழுது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாத பாப்பாத்தி போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள்! என்கிற தோரணையில், தாம் செய்த தமிழ் ஒதுக்கலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அவாளின் இனமலரோ எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து செய்தியையும் வெளியிட் டுள்ளது.

வெண்டைக்காய் விளக்கெண்ணெய் - கத்தாழை களைக் குழைத்து சமாதானம் சொல்ல முயற்சிக்கும் திருவாளர் நட்ராஜ் அய்யர்வாளுக்குச் சில கேள்விகள்:

1. பிரிவு -2 (குரூப்-2) தேர்வில் இருந்து வந்த பொதுத் தமிழ் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

2. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் இடம் பெற்றிருந்த பொதுத் தமிழ் முழுவதும் அகற்றப்பட் டுள்ளதா - இல்லையா?

3. பிரிவு நான்கில் (குரூப்-4) இதுவரை தமிழில் கேட்கப்பட்டு வந்த 100 வினாக்களுக்குப் பதில் 50 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

அறிவு நாணயமாக சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்காமல், நேரிடையாக திருவாளர் நட்ராஜ் அய்யர்வாள் பதில் சொல்லுவாரா?

அய்யர்வாளுக்கு வக்காலத்து வாங்கும் இ(தி)னமணி, இ(தி)னமலர் அய்யர்வாள்களும்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் ஒரு பக்கம் - உள்ளூர் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம்.

இரண்டுக்குள்ளுமே ஆரியக் கொடுக்கு இருக் கிறதே - இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள 72 பக்கங்களையும் படித்துவிட்டுதான் இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துள்ளோம்.

கூடுதல் செய்தி (Tail Piece)

திடீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணைய தளத்திலிருந்து இந்தப் பகுதி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது - மாற்றம் வந்தால் சரி!

தமிழ் ஓவியா said...


தலையெழுத்தாம்


ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.

(குடிஅரசு, 6.7.1968)

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 21- ஸ்டாலினை மய்யப்படுத்தி இந்து ஏடு செய்தி வெளி யிட்டதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் - அறிக்கை வருமாறு:

தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக் காகவோ எடுப்பதில்லை. குறைந்த பட்சம் கழகத்தின் தலைமையிலே உள்ள முன்னோடிகள் கூடிக் கலந்து பேசி பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தான் முடிவெடுப் பது வழக்கம். செய்தியாளர்கள் பல முறை சில அதிமுக்கியமான பிரச் சினைகள் குறித்து கேள்வி கேட்கும் போது கூட, கழகத்தின் செயற் குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகு தான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் தொடர்ச்சி யாக; நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செய லாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கழகத்தின் மூத்த செய லாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத் தான் 19-3-2013 அன்று காலை செய்தியாளர்களுக்கு அறி வித்தேன். உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகா விட்டால், ஸ்டாலின் விலகி விடுவ தாகப் பயமுறுத்தியது தான் கார ணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை யெல்லாம், அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகா தர்மத்தைப் பாழடிக்கின்றன. ஆனால் இந்து நாளிதழும் இப்படி உண் மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் புதிய அறிவிப்பு



புதுடில்லி, மார்ச் 21- இந்திய அரசுப் பணியாளர் ஆணையம் (ருஞளுஊ) புதிதாக அறிவித்த மாநில மொழி பேசு வோர்க்குப் பாதகம் விளைவித்த தேர்வுத் திட் டத்தை கைவிட்டது. பழைய முறையே தொட ரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசும், நடு வண் பணியாளர் தேர்வு ஆணையமும் (ருஞளுஊ) மொழிகள் தொடர் பான சர்ச்சைக்குண் டான எல்லா மாற்றங் களையும் திரும்பப் பெற் றுக் கொள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் பொதுப் படிப்பிற்கான பாடங்கள் இரண்டுக் குப் பதிலாக நான்காக உயர்த்த முடிவு செய் துள்ளன.

சென்ற புதன்கிழமை யன்று, பணியாளர்களுக் கான இணை அமைச்சர் வி. நாராயணசாமியுடன் நடுவண் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அரசு தரப்பிலி ருந்து கூறப்படுகிறது.
வட்டார மொழிகளில் எழுதலாம்
இந்த திட்டத்தின் படி, தேர்வுகளை வட் டார மொழியில் எழுது வதற்கான தடைகள் திரும்பப் பெறப்படுகின் றன. தவிர, தகுதித் தரம் கணிப்பதற்கான 100 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலத் தாள் நீக்கப்படுகிறது.

சென்ற வாரம், சீறிச் சினம் கொண்டு நின்ற நாடாளுமன்ற உறுப் பினர்களுடன், அவர்கள் அறிவித்திருந்த அறி விக்கையை செயல்படா மல் நிறுத்தி வைப்ப தாகவும், முன்பிருந்த நிலைமையே தொடரும் என்றும் சொல்லியிருந் தார். ஆனால், நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வுகளுக் குச் சற்று முன்பான நேரத்தில், காலத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொள்ளாது, புதிய மாற்றங்களை வேக மாகத் திணித்தது. அத் துடன், அதன் மாற்றங் கள் முழுவதுமாக நிரா கரிக்க வேண்டாம் என் றும் கேட்டுக் கொண் டது. கடைசி சில நாட் களில் ஒரு பலமான கண்ணோட்டம் வெளிப்பட்டுள்ளதாகவும், எல்லா மாற்றங்களை யும் திரும்பப் பெற வேண்டாம் என்ற கருத்து பரவலாக வெளிப்பட் டது.
ஆனாலும் மொழி கள் பற்றிய விவரங் களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருப் திக்கேற்ப, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களது குறைகள் களையப்பட்டுள்ளன என்று ஒரு அரசு உயர் அலுவலர் குறிப்பிட்டுள் ளார். ஆனால், கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட் டுள்ள ஆணை விளக்கங் களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அரசு, நாடாளுமன்ற மக்கள் சபையில், உறுப் பினர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு முடிவை அறிவிக்கலாம் என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார்.
ஆனாலும், அது அர சியல் நிலைமையையும், தலைமை வகிக்கும் அலு வலரையும் பொறுத்தது என்றார்.
நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம் முத லில் மொழிகள் பற்றிய மாற்றங்களைக் கொண்டு வந்தபோது, பணியாளர் துறையும், அமைச்சர் நாராயண சாமியும் மொழிகள் பற்றி மாற்றங்களின் உள்ளடக்கங்களை எதிர்த்துள்ளனர்.
சிவில்துறை அதி காரிகளும் நாடாளுமன் றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய அதே கருத்துகளைத் தான் கூறியுள்ளனர். அதன்படி அந்த மாற்றங்கள் இந்தி பேசும் மக்களுக்கு ஆதர வாகவும் நகர மக்கள் ஓரடி முன்னே போக சாதகமாக இருக்கவும் அமைந்துள்ளது என்று கூறினர்.

தமிழ் ஓவியா said...


தேவை அனைத்துலக விசாரணை நவநீதம்பிள்ளை உறுதி



சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அய்.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் வலியுறுத் தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இந்த அறிக்கையை, அய்.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் குயங் வா கங் பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை.

சில தெரிவு செய்யப் பட்ட பரிந்துரைகளை மட்டுமே சிறிலங்கா அர சாங்கம் நடைமுறைப் படுத்தி வருகிறது.

குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயங் களில் இன்னமும் பல் வேறு படிநிலைகளை சிறிலங்கா தாண்ட வேண் டிய நிலை உள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

உண்மையைக் கண் டறியும் நெறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

சாட்சிகளையும் மற் றும் பாதிக்கப்பட்டோ ரையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடத்தல்கள், காணா மல் போதல்கள் தொடர் பாக அனைத்துலக சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

தேசிய நிறுவனங் களின் சுயாதீனத் தன்மையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசா ரணைகள் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப இடம்பெறுவதை உறுதிப்படுத்த, சுதந்திர ஆணைக்குழுவொன்று அதைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். என்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்



ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
(விடுதலை,18.1.1951)

தமிழ் ஓவியா said...


நெத்தியடி யாருக்கு? அ.இ.அ.தி.மு.க.வுக்கு!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் நெத்தியடி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரின் கேலிப் படத்தை வெளியிட்டு, அவர்களுக்கே உரித்தான அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி சாடியுள்ளனர் (21.3.2013).

சிரங்கு - சொறி என்றெல்லாம் தங்கள் வசம் உள்ள சரக்கை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர்.

தி.மு.க. மத்திய அரசிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் விலகியதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி விட்டாராம் - பொறுக்குமா நொய்யரிசிகளுக்கு?

பந்தை அடிக்க முடியவில்லையானால், காலை அடிக்கும் வேலை அவர்களுக்கு மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்!

தி.மு.க. விலகியது ஒரு கொள்கையின் அடிப்படையில். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிபந்தனையின் அடிப்படையில்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. அமைச்சரவையி லிருந்து விலகியதே - நினைவிருக்கிறதா? - அது எதன் அடிப்படையில்?

இதனை விடுதலை சொல்லுவதைவிட அன்றைய பிரதமர் வாஜ்பேயி (பி.ஜே.பி.) வாயால் சொல்ல வைப்பதுதான் சிலாக்கியமானது - மிகமிகப் பொருத்தமானதும்கூட!

இதோ வாஜ்பேயி பேசுகிறார், படியுங்கள் - கேளுங்கள்!!

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை. நியாயமற்ற நிபந்தனை களை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக் கப்படும்பொழுது, இதைப் போன்ற நிபந்தனை களை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் அ.தி. மு.க.வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார்.

சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங் களில் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட் டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலை யுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்கவேண்டும் என்பதுதான் அந்த விலை. அதுமட்டுமல்ல; பல ஊழல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும், அவருடைய நிபந்தனையாக இருந்தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடிபணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவ தில்லை என்பதை உணர்ந்தவுடன், அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.

குமுதம், 20.9.1999

நமது எம்.ஜி.ஆர் ஏடே! இதற்குப் பதில் என்ன?

ஒரு கொள்கைக்காக தி.மு.க. மத்திய அமைச்சர வையிலிருந்து வெளியேறுகிறது - அதற்காக திராவிடர் கழகத் தலைவர் வரவேற்கிறார் - பாராட்டுகிறார்.

தன்னலத்துக்காக - பக்கா சுயநலத்திற்காக செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படலாமா? நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெயலலிதாவை சங்கடப்படுத்த வேண்டுமென்றே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், பலே! பலே!!

தொடரட்டும் அந்தக் கைங்கரியம்

தமிழ் ஓவியா said...

இவள் கண்ணகி


- வி.சி.வில்வம்

கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது, கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக் கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.



நமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப் பிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய சிறிய கேள்வி ?

தமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.

ஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.
நாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய்ச் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

இந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு. சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு!

தமிழ் ஓவியா said...

வாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.

நாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள்.

கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர். தெய்வக்கோலம் பூண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபவத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

கண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை? எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள்? கண்ணகியா தெய்வம்? யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப் பொரிந்து தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா? கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன்? என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

கண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக் காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு? எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகி பதில் சொல்கிறார்.

நாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்குக் கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ உன் கணவர் நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் _ இரவு, நிலவு _ -கதிர், நீர் _ நெருப்பு, குளிர் _ வெப்பம், இன்பம் _ துன்பம் என்பதைப் போல காதல் _ -பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி. நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள் என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும் அகற்றப்படுகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன? எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச் செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.

இந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களையும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், நாளை கோவலன் பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடி, காற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.

இப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார்.

தெய்வமாக்குவதும் , வழிபடுவதும் தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?


- கி.தளபதிராஜ்

பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும் என்று புதிய தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்!



தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு பாப்பாத்தி என்றும் ஆண் குழந்தைகளுக்கு அய்யர் என்றும் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களை எல்லாம் இந்த வியாதிகள் பார்ப்பனர் என்றே கூறுவார்களோ?

திராவிட் என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றா? சைதாப்பேட்டையை ஆங்கிலத்தில் சைதாபேட் என்று கூறுவது போல் திராவிட் என்பது இடத்தைக் குறிக்கும்.

திராவிட என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். திராவிட என்பது இடத்தைக் குறிக்கும் சொல். திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் திராவிடர் என்பது இனத்தைக் குறிக்கும். தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கலாம். எந்தப் பார்ப்பானாவது திராவிடர் என்று தன்னை சொல்லிக் கொண்டதுண்டா?

தமிழ் ஓவியா said...

மனோன்மணியம் சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர் நீங்கள் என்ன கோத்திரம்? என்று கேட்டாராம். அதற்கு மனோன்மணியம் சுந்தரனார் அளித்த பதில் தன்மானம் மிக்க தென்னாட்டுத் திராவிடன் என்பதே! (மனோன்மணியம் சுந்தரனார் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து) இந்துக்கள், திராவிடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான், இந்து நாகரீகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. (நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது). மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டினார் என்று கூறும் இவர்கள், தமிழர் அடையாளத்தை அழிக்கவே திராவிடர் இயக்கங்கள் பயன்பட்டதாக நா கூசாது கூறத்துவங்கிவிட்டனர். தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று கூறப்படும் மறைமலை அடிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை. பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர் என்றார்.

இப்படி தாகூரும், மனோன்மணியம் சுந்தரனாரும், மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்கப் பார்க்கிறார்கள்!
பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து நமக்கு விடுதலை தேவைப்பட்டது. அவர்களிடமிருந்து நம் இனத்தைக் காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாளச் சொல் தேவைப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்.
தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை! எந்தக் கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலைத் தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச் சொல்!.

தமிழர் என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள என்றும் பின்னர் திராவிடன் என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும் ஆதாரமாகக் கொண்டு, தம்மையே திராவிடன் என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே தேயம் என்பதுதான் தேசம் ஆனது என்று எந்தப் பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்---_திரமிளர்_-திராவிடர் செய்தியும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர் போராட்டத்தின் (?) விளைவால் அமையப் போகும் தமிழ்த் தேசியத்தை எந்தத் திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில் ஈடுபடுகிறார்களா? தமிழ்த் தேசியம் கூடாது திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்தத் தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் உங்களை இப்படிப் பேசவைக்கிறதா?