Search This Blog

14.3.13

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்காரர்களும்


காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்காரர்களும்


ஈழத் தமிழர் பிரச்சினையில் இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மனித உரிமையாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பற்றியதாகும்.

இந்தத் தீர்மானம் பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்படும் என்பது உறுதியாகி விட்டது என்றாலும் இந்தியாவின் நிலைப்பாடு எதிர்ப்பார்க்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதற்குக் காரணம் இந்தியாவின் தென் பகுதியில் வாழக் கூடிய தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர் இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்பட்ட தாலும், இனப்படுகொலைப் போருக்குப் பிறகும்கூட கடந்த நான்கு ஆண்டுகாலமாக எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் சுயமரியாதையும் வாழ்வதாரமும் சிங்கள இனவெறி அரசால் நாளும் நசுக்கப்பட்டுக் கொண்டு வருவதாலும், இந்தியா இந்தப் பிரச்சினையில் ஈழத் தமிழர் பக்கம் நிற்க வேண்டும் என்று தமிழர்கள் மட்டுமல்ல - உலகில் உள்ள மற்றவர்களும் நியாயமாக எதிர்பார்க்கின்றனர்.

இந்தப் பிரச்சினையில் இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலோ இந்தியா துணை போகுமேயானால், அதைவிட இந்தியாவுக்கான கீழிறக்கம் வேறு ஒன்றும் இருக்க முடியாது - இது கல்லின் மேல் எழுத்தாகும்.

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. தமிழ் நாட்டில் இவர்கள் கட்சி நடத்த வேண்டுமானால், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற வேண்டு மானால், ஈழத் தமிழர் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்காக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதில் வெற்றி பெற்றாக வேண்டும். அதைவிட்டு விட்டு ஏதோ சமாதானங் களைச் சொல்லும் வேலையில் தமிழ்நாடு காங்கிரஸ் ஈடுபடுமேயானால் அதன் பார தூர விளைவுகளைக் கடுமையாகச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதற்குப்பின் எதிர்க்கட்சியாகக்கூட சட்டப் பேரவையில் அமரும் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. காரணம் அவர்களுக்குத் தேவையான மாநில உணர்வுகள் இல்லாததுதான்.

கேரளாவை எடுத்துக் கொண்டால், அங்கு காங்கிரஸ் ஆட்சி செய்கிறது என்றாலும்கூட முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பிரதமர் சொன்னாலும் மாநில உணர்வோடு (நியாய விரோதமாகக்கூட) தான் நடந்து கொள்கிறது. அந்த உணர்வு தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களுக்கு இல்லாமல் போனது பரிதாப நிலையே!

ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகளவில் இன்னொரு முக்கியமானது - இடதுசாரிகள் என்று இன்னும் கருதப்படுக் கூடிய கம்யூனிஸ்ட் நாடுகளான சீனா, ருசியா, கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகள் இனப்படுகொலைக்கு ஆதரவாக, மனித உரிமைக்குப் பகையாக நடந்து கொள்வது - பெரிய கேள்விக்குறியாக உலகளவில் எழுந்து நிற்கிறது. இது ஒரு துக்ககரமான அவல நிலை என்பதில் அய்யமில்லை.

வெனிசூலாவில் அதிபர் சாவேஸ் பெரிய புரட்சிக்காரர் என்று மதிக்கப்படுபவர். புற்று நோயால் மரணமடைந்தார்; அவர் உடலை நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற அளவுக்கு அந்நாட்டு மக்கள் மனதில் அழுத்தமாகக் குடி கொண்டவர்.

அவர் ஈழத் தமிழர் பிரச்சினையில் அவமானகரமான வகையில் இன வெறியன் ராஜபக்சே பக்கம் நின்றது மரியாதைக்கு உரியதுதானா? அவர்கள் கொண்ட கம்யூனிசக் கொள்கைக்கு உகந்தது தானா?

இந்த நாடுகள் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இவ்வளவு மோசமாக அப்பட்டமாக இனப்படு கொலைக்குப் பச்சைக் கொடி காட்டிய நிலையில் எந்த முகத்தோடு கம்யூனிஸ சித்தாந்தத்தை மக்கள் முன் எடுத்துச் செல்ல முடியும்?

தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட் டுள்ள அதே பரிதாப நிலை - உலகில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் நடந்து கொண்டு வரும் முறையால் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பெருத்த தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது.

சர்வதேசியம் பேசும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஈழத் தமிழர்களின் உண்மையான நிலையை கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு எடுத்துக் கூறி அவர்களை சரியான பாதைக்குக் கொண்டு வர ஏன் முயற்சித்திருக்கக் கூடாது?

இந்தியாவை எவ்வளவுக் குறை கூறலாமோ, அதைவிட கம்யூனிஸ்ட் நாடுகள் நடந்து கொள்ளும் போக்கை மிக அதிகமாகவே குறை கூற இடம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.

                -----------------------"விடுதலை” தலையங்கம் 14-3-2013

34 comments:

தமிழ் ஓவியா said...


நன்றி! நன்றி!! நன்றி!!!


டெசோவின் அடுக்கடுக்கான அறப்போர்! பாடம் கற்றுக் கொள்க!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!

ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுக்கடுக்கான போராட்டங்களை டெசோ நடத்தி வந்திருக் கிறது - இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கான ஆக்க ரீதியான முயற்சிகளில் ஈடுபடாமல், டெசோவைக் குறை கூறித் திரி வதைக் கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டெசோ என்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு - மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் - ஈழத்தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்க தொடர் முயற்சிகளை எடுத்துவருவது, - அதற்குள்ள இன உணர்வு, மனிதநேயம் இவைகளினாலேதானே தவிர, இதைவைத்து அரசியல் லாபம் தேட அல்ல என்பதை மெல்லமெல்ல ஆனால் உறுதியாக உலகத்தமிழர்களும், பிறரும் புரிந்து கொண்டு வருகிறார்கள்.

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இனப்படுகொலையாளன் இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னைத் தலைநகரில் டெசோ சார்பில் கறுப்புச்சட்டை அணிந்து நடத்தப்பட்ட அறப்போருக்கு கலைஞர் இந்த முதுமையிலும் - இளைஞர்போல திடீரென்று தானே வந்து தலைமையேற்றதும், வழி நடத்தியதும் அவரது ஈடுபாட்டினையும், மாறா உறுதி யையும் காட்டியது. தலைநகர் கருங்கடலின் கொந்தளிப்பாகக் காட்சி அளித்தது.

இராமேசுவரத்திலும், நாகையிலும் தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்!

அதற்கு அடுத்து இராமேசுவரத்திலும், நாகையிலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படை, சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவது அன்றாட அவலமாகி வருவதை எதிர்த்து டெசோ தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் டெசோ சார்பில் நடத்தப்பட்டன.

12 வயது பாலகன் பாலச்சந்திரன் போன்ற இளந் தளிரைக்கூட ஈவிரக்கம், மனித உணர்வுகள் சிறிதும் இன்றி, போர் நெறிமுறைகளுக்கு எதிராக 5 குண்டு களால் சுட்ட படம் வெளியான கோரத்திற்குப் பின், டெசோ சார்பில் மார்ச் 5ஆம் தேதி சென்னையில் இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை அப்புறப் படுத்த வற்புறுத்தும் வகையில், மிகப்பெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது; சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் கைதாயினர்.

தமிழ் ஓவியா said...

மார்ச்சு 7 அன்று

மார்ச் 7இல் இந்திய நாடாளுமன்றமே அதிரும் வண்ணம் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அனைத்து எதிர்க் கட்சிகளும் தங்களது ஆதரவுக் குரல்கொடுத்து, அய்.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா தேவையான திருத்தங்களோடு ஆதரிக்க வேண்டும் என்ற விவாதத்தினை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் நீண்டநேரம் பேசி, அனைத்துத் கட்சிகளும் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல்வேறு தேசியக் கட்சிகளும் இதே கருத்தை வற்புறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பதிலில் திருப்தி அடையாமல் அனைவரும் வெளிநடப்பு செய்து வரலாறு படைத்தனர். டெசோவின் மூலம் அன்று மாலையே டெசோ கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 2012 ஆகஸ்ட்டில் சென்னை டெசோ கருத்தரங்க மாநாட்டில் அத்தனை முக்கிய கட்சிகளும் கலந்து கொண்டன. மார்ச்சு 7இல் டில்லியில் கூடுதலாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர் களுடன் கலந்துகொண்டு, வருகின்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், கட்சியின் சார்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதுபோல உரையாற்றிச் சென்றனர்.

மார்ச் 12இல் முழு வேலை நிறுத்தம்

ஆனால், ஆட்சியின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சரும், பிரதமரும் திட்டவட்டமான முடிவைத் தெரிவிக்காமல், இலங்கை அரசினைக் காப்பாற்றிடும் வகையிலும், தொனியிலும் பேசியது கண்டு மிகவும் வேதனையுற்ற நிலையில், டெசோ ஏற்கெனவே இந்திய அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுப்பது அவசரம் என்று கருதி எடுத்த முடிவுக்கேற்ப, 12ஆம் தேதி தமிழ்நாட்டு மக்களின் ஆதரவினை மத்திய அரசு புரிந்து கொள்ளும் வகையில் டெசோ நடத்திய பொது வேலை நிறுத்தம், முழுஅடைப்பு, பெரு வெற்றி பெற்றுள்ளது. ஊட கங்களின் ஒருதலைப்பட்சப் பார்வை எப்படியிருந்தாலும், தமிழ் மக்களின் இன உணர்வும், ஒத்துழைப்பும் அபரிமிதமாகவே இருந்தது!

டெசோ இன எழுச்சிப் போர்ப் படை!

போர்ப்படை நடத்துவோருக்கு இலக்கு எதிரிப் படைதானே தவிர, பாராட்டோ, வசவோ அல்ல. டெசோ அப்படியே நடந்து வரும் ஒரு இன எழுச்சிப் படையாகும். மனசாட்சியை அடகு வைக்காதவர்கள் உணர்வார்கள்

தமிழ் ஓவியா said...

ஏழு நாள்களுக்குள், சென்னையில் மார்ச் 5ஆம் தேதி பல்லாயிரவர் கைதாகிய, காவல் துறையே திணறிடும் நிலையில் இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலக முற்றுகைப் போராட்டம், அடுத்து டில்லித் தலைநகரில் நாடாளுமன்றத்தில் மார்ச் 7இல் சூறாவளி என்று கிளம்பிய அனைத்து எதிர்க் கட்சிகளின் ஈழத் தமிழர் ஆதரவு, தி.மு.க. துவக்கி வைத்ததன் மூலம், அன்று மாலை ஊடகங்களில் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்ட பிறகும்கூட பல தேசியக் கட்சிகளும் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் - இனப் படுகொலை கண்டனக் கருத்தரங்கம்; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் தீர்மானம் பற்றிய கலந்துரையாடல், அது முடிந்த மார்ச் 12இல் வரலாறு காணாத 50 ஆயிரம் பேர்களுக்கு மேல் அனைத்து ஊர்களிலிருந்து கைதாகியும், கடைகள் மூடியும் கிடைத்த - செய்திகள் இத்தகையவை ஈழத் தமிழர் ஆதரவுக்கான இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் அரும் சாதனைகள் அல்லவா! மனசாட்சியை அடகு வைக்காதவர்கள் உணருகிறார்களே!

டெசோவின் இந்த மகத்தான வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் டெசோவின் உறுப்பினர் என்ற வகையில் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

7 நாள்களுக்குள் இத்தகைய எழுச்சியை உண்டாக்கிய ஆற்றல் டெசோவின் அதில் பிரதான அங்கமான தி.மு.க.வுக்கும் அதன் ஆற்றல்மிகு தலைமைக்கும் செயல் வீரர்களுக்கும்தானே; அதன் பிறகு தான் உறுப்பினர்களான எங்கள் பங்கு!

தமிழ்நாட்டின் இத்தகைய உணர்ச்சி எரிமலை சீற்றத்தின் மூலம் - (மாணவர்கள் எழுச்சியையும் சேர்த்தே சொல்லுகிறோம்) பாடம் பெற்று சரியான நிலைப்பாட்டை இனியாவது எடுக்க வேண்டியவர்கள் அய்வகையோர்:

1. இனப்படுகொலையை இன்னமும் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் பல்வேறு வகைகளில் நடத்திவரும் இராஜபக்சேயின் கொடுங்கோல் அரசு.

2. அதற்குப் பலவகையிலும் துணைபோயும், போய்க் கொண்டுமிருக்கின்ற இந்திய மத்திய அரசும், அதன் தலைமையும்.

3. ஈழத் தமிழர்க்கான வேலை நிறுத்தப் போராட் டத்தை மறைந்து நின்று வாலி வதை செய்த இராமன் கதைபோல, நீதிமன்ற பொதுநல வழக்கு மற்றும் சில வழிகளில் இதைத் தோல்வியடையச் செய்ய முயன்றது அ.இ.அ.தி.மு.க. அரசு.

4. ஈழப் பிரச்சினை எங்களுக்கே ஏகபோகம் என்ற நுனிப்புல் மேயும் சிலரிடையே நாங்கள்தான் எப்போதும் சிலம்பம் ஆடுபவர்கள் என்று காட்டியது - டெசோ மூலம் பறிக்கப்பட்டு விடுகிறதே என்று கவலைப்பட்டு, டெசோவை நாடகம் என அர்ச்சிக்கும் நடைவண்டி நாயகர்கள், முந்தாநாள் மழையிலே நேற்று முளைத்த காளான்கள் இனிமேலாவது, மற்றவரை விமர்சிக்காமல் அவர்களால் முடிந்ததை செய்யவே அக்கறை காட்டட்டும்!

டெசோ நடத்திக் காட்டியுள்ள மக்கள் சக்திக்கு நிக ராகவோ, மேலாகவோ யாரேனும் நடத்திக் காட்டிய துண்டா - முடியுமா என்று சவால் விட்டுக்கூட எங்களால் கேட்க முடியும். ஆனால் இந்த மகத்தான மக்கள் சக்தியின் எழுச்சியைக்கூட, ஈழத் தமிழர்களுக்கான உணர்வைக்கூட, காலில் போட்டு மிதித்துவிட்டு, கொச்சைப்படுத்துபவர்களை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை உணர்ந்திடத் தலைப்பட் டுள்ளனர். இதுவே கொச்சைப்படுத்துபவர்களுக்கு சவுக்கடியாகும்.

5. நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழிக் கேற்ப உண்மைகளை களப்பலியாக்கியே இன எதிரி களுக்கு துணைபோன ஏடுகள்.

இவர்களுக்கு இந்தப் போராட்டங்களின் எழுச்சியை விட சரியான எச்சரிக்கை வேறு என்ன தேவை? டெசோவின் செயல்பாடுகளால் இந்தப் பிரச்சினையில் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது என்பது வெளிப்படையே! டெசோ தலைவர் கலைஞரை இவர்கள் தாக்கத்தாக்க அவர் தகத்தகாய ஒளியுடன் வந்து, வெற்றிகளைக் குவிப்பார் என்பது உறுதி; காரணம் அவர் பயிற்சி பெற்றது, எதிர்நீச்சல் பள்ளியாம் ஈரோட்டுக் குருகுலத்தில்!

தி.மு.க.வின் கதை முடிந்தது என்றவர்களே அதன் பெரு உருவை (விஸ்வரூபத்தை)ப் பார்த்தீர்கள்! இனியும்கூட பாடம் கற்றுக் கொள்ள மாட்டீர்களா?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

14.3.2013
சென்னை

தமிழ் ஓவியா said...


ஒரு தகவல்



மத்திய அரசில்பணியிடங்களான பொறியியல் உதவியாளரில் 1290 காலியிடங்கள், தொழில் நுட்ப அலுவலர் பிரிவில் 340 காலி இடங்கள் உள்ளன தெ ழில் நுட்பப் பட்டயப் படிப்புப் படித்திருக்க வேண்டும்; விண்ணப்பத்திற்கு இறுதி நாள் 22.3.2013 முழு விவரங்களுக்கு: http:/ssc-in/notice/examnation

தமிழ் ஓவியா said...


18ஆம் தேதி போராட்டம் - ஏன்?

எட்டாக் கனியாக்கும் சதி


திராவிடர் கழகத்தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 18-3-2012 , மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பாக அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கின் றார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, கிராமப்புற மாணவர்களை அய்.ஏ.எஸ்.தேர்வுகளில் பங்கு பெறா மல் செய்வதற்கான உயர் ஜாதி யினரின் சூழ்ச்சி என்பதனையும் தனது அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக் கின்றார்கள். அய்.ஏ.எஸ் . தேர்வு - முதல் நிலைத் தேர்வு -பழைய முறை:

தமிழ் ஓவியா said...

அய்.ஏ.எஸ்.தேர்வு என்பது ஏறத்தாழ 26 துறைகளில் உயர்மட்ட அதிகாரி களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகின்ற தேர்வாகும். இது மூன்று கட்டங்களை உடையது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங் களை உடையதாகும். இரண்டு ஆண்டு களுக்கு முன்புவரை முதல் நிலைத் தேர்வு என்பது 450 மதிப்பெண்களை உடையதாக இருந்தது. பொது அறிவுத் தாள் ஒன்று - 150 மதிப்பெண்களை உடையது. விருப்பப்பாடத்தாள் ஒன்று -300 மதிப்பெண்களை உடையது. விருப்பப்பாடம் என்று 25 பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதா வது ஒன்றை எடுத்துக்கொண்டு 300 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும். அது வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ... என்ற 25 பாடங்களில் ஒன்று. அய்.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பும் ஒருவர் 4, 5 ஆண்டு களுக்கு முன்பே தான் எழுத விரும்பும் விருப்பப்பாடத்தை எடுத்துக்கொண்டு படிக்க இயலும்.

அய்.ஏ.எஸ் . தேர்வு - முதல் நிலைத் தேர்வு-புதிய முறை:

புதிய முறையில் விருப்பப்பாடம் என்ற முறையே இல்லை. பொது அறிவுத்தாள்களே இரண்டும். இரண்டு தாள்களுக்கும் தலா 200 மதிப்பெண் என்று கொடுத்து , ஒடுக்கப்பட்டவர்கள், கிராமப்புற மாண வர்களுக்கு எதில் இருந்து கேள்விகள் வரும் என்ற அறிகுறியே தெரியாத வாறு ஆக்கி விட்டார்கள். முதல் நிலைத் தேர்விலேயே, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வராமல் தடுக்கும் வடிகட்டியாக புதிய முறை முதல் நிலைத் தேர்வினை ஆக்கியிருக் கின்றார்கள். இதிலும் கொடுமை என்னவென்றால் முன்பிருந்த முறை யில் நெகட்டிவ் மதிப்பெண் என்று சொல்லக்கூடியது இல்லை. எனவே தைரியமாக கேள்விகளுக்கு விடை அளிக்கலாம். 450 மதிப்பெண்ணுக் குரிய கேள்விகளுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் இல்லை, புதிய முறையில் 400 மதிப்பெண்ணுக்குரிய கேள்வி களில் 7 கேள்விகளுக்கு மட்டுமே நெகட்டிவ் மதிப்பெண் இல்லை, மற்ற அனைத்துக் கேள்விகளுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு என்று ஆக்கி வைத்திருக்கின்றார்கள். பொது அறிவு என்பது வானத்தின் கீழ் உள்ள எது பற்றியும் கேள்வி கேட்கலாம். முதன்மைத் தேர்வு பழையது:

பழைய முறையில் முதன்மைத் தேர்வு என்பது 2000 மதிப்பெண்கள் உடையது. பொது அறிவுத்தாள் 2- தாள்கள், ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண், எனவே பொது அறிவுத்தாளுக்கு 600 மதிப் பெண்கள். விருப்பப்பாடம் -1 இரண்டு தாள்கள் - 2* 300 , 600 மதிப்பெண்கள், விருப்பப்பாடம் -2 , இரண்டு தாள்கள் - 600 மதிப்பெண் என்று இருந்தது. இதில் விருப்பப்பாடம் -1-ல் வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்து 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதலாம். விருப்பப்பாடம் இரண்டாவதாக வேறு பாடங்களோ அல்லது அவர்களின் தாய்மொழி இலக்கியத்தையோ எடுத்து தேர்வு எழுதலாம். ஆக எம்.ஏ. வரலாறு படித்தவர், முதன்மைத் தேர்வில், வரலாறு, தமிழ் என இரண்டு விருப்பப்பாடங்களைத் தேர்ந்தெடுத்தால், வரலாறுக்கு 600 மதிப்பெண், தமிழுக்கு 600 மதிப்பெண், பொது அறிவுத்தாளுக்கு 600 மதிப்பெண், ஒரே ஒரு கட்டுரைக்கு 200 மதிப்பெண் ஆக 2000 மதிப்பெண்ணுக்கு அவர் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும். எந்த பாடத்தை எடுத்து படிப்பவராக இருந் தாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை இரண்டாவது விருப்பப் பாடமாக, ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் தெலுங்கை இரண்டாவது விருப்பபாட மாக எடுத்து 2000 மதிப்பெண்ணில் 600 மதிப்பெண்ணை அவர்களின் தாய்மொழி இலக்கியத்தின் மூலம் பெறமுடிந்தது, அதனால் நிறையப்பேர் தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெற் றார்கள். மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் போன்றோரின் உழைப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் திட்டமிட்டு, தேர் வினைப் புரிந்து கொண்டு விருப்பப் பாடத்தை 3, 4 ஆண்டுகளுக்கு முன் னாலேயே தேர்ந்தெடுத்து, படித்து வெற்றி பெறுவதை ஆதிக்கசாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, கொல்லைப்புற வழியாக தடுப்பதற்கான வேலைகளைச் செய்திருக்கின்றார்கள்.

தமிழ் ஓவியா said...

புதிய முறை முதன்மைத் தேர்வு:

புதிய முறை முதன்மைத் தேர்வு 1800 மதிப்பெண் உடையது. முதன்மைத் தேர்வு புதிய முறையில் பொது அறிவுத் தாள் - நான்கு தாள்கள் - ஒவ்வொன் றுக்கும் 250 மதிப்பெண்கள், எனவே பொது அறிவுக்கும் மட்டும் 1000 மதிப்பெண்கள். ஒரே ஒரு கட்டுரைக்கும் 200 மதிப்பெண்கள், ஆங்கிலத்திற்கு 100 மதிப்பெண்கள் (பழைய முறையில் கிடையாது), இரண்டு விருப்பப்பாடங்கள், ஒவ்வொன்றுக்கும் 250 மதிப்பெண்கள் மட்டும். விருப்பப்பாடத்திற்கு இருந்த 1200 மதிப்பெண்ணை வெறும் 500 மதிப் பெண்ணாக ஆக்கியிருக்கின்றார்கள். இதில் இரண்டாவது விருப்பப்பாடமாக தமிழை எடுத்தால் வெறும் 250 மதிப் பெண்ணுக்குத்தான் எழுதப் போகி றார்கள், பழைய முறையில் தமிழுக்கு 600 மதிப்பெண் உண்டு, 2000 மதிப்பெண் களில் 600 மதிப்பெண்ணாக இருந்ததை வெறும் 250 மதிப்பெண்ணாக ஆக்கி, தாய் மொழி இலக்கிய விருப்பப்பாடம் எடுத்து படித்து வெற்றி பெற இருந்தவர்களை , இப்போது வாய்ப்பில்லாமல் ஆக்கியிருக் கின்றார்கள். அதுமட்டுமல்ல, பழைய முறையில் தமிழை விருப்பப் பாடமாக எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு எது படித்திருந்தாலும் எடுக்க முடியும் . இப்போது தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே தமிழ் மொழியை விருப்பப்பாடமாக எடுக்க முடியும். பல் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கனவினை, உழைப்பினை குழி தோண்டிப் புதைப்பதாக புதிய முறை உள்ளது.

தமிழ் ஓவியா said...


தமிழ் வழியாகத் தேர்வு எழுதத்தடை முதன்மைத்தேர்வினை முழுவதையும் தமிழ் மொழியின் வழியாக முதலில் எழுத முடியும். பொது அறிவுத்தாள் 600 மதிப்பெண், விருப்பப்பாடம் 1-600 மதிப்பெண், விருப்பப்பாடம் 2- 600 மதிப்பெண், கட்டுரை -200 மதிப்பெண் என 2000 மதிப்பெண்ணிற்கும் தமிழ் வழியாகத் தேர்வு எழுத முடியும். ஆனால் இப்போது தமிழ் வழியாக் எழுதுவது என்பது தமிழில் இளங்கலைப்பட்டம் பெற்றவர்கள் மட்டுமே எழுதமுடியும் என்று ஆக்கி இருக்கின்றார்கள். இப்போது ஒருவர் பொறியியல் பட்டதாரி, ஆங்கில மீடியத்தில் படித்தவர், அவர் அய்.ஏ.எஸ் . முதன்மைத் தேர்வில் புவியியல், தமிழ் என்று விருப்பப்பாடம் எடுத்து தமிழில் முழுவதையும் முன்பு இருந்த முறையில் எழுத முடியும் . ஆனால் இப்போது அவர் ஆங்கில வழியில் பட்டதாரி என்பதால் தமிழில் எழுத முடியாது, தமிழ் வழிப் பட்டதாரிகள் மட்டுமே தமிழில் எழுத முடியும், தெலுங்கு வ்ழிப்பட்டதாரிகள் மட்டுமே தெலுங்கில் எழுத முடியும் என்று புதிய முறையில் ஆக்கியிருக்கின்றார்கள். சரி , ஒருவர் புவியியலைத் தமிழில் எழுத விரும்புகின்றார் என்றால், குறைந்தபட்சம் 25 பேர் தமிழ் வழியில் புவியியலைப் படித்தவர்கள் எழுதினால்தான் இவர் தமிழில் புவியியலை எழுதமுடியும், 23 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் தமிழில் புவியியலைப் படித்தவர், புவியி யலை ஆங்கிலத்தில் எழுத வேண்டும், அல்லது இந்தியில் எழுத வேண்டும், இதுதான் புதிய முறை. மிகப்பெரிய சூழ்ச்சி: புதிய முறையில் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது. எனவேதான் தமிழர் தலைவர் தனது 13.3.13 தேதி விடுதலை அறிக்கையில் இந்தப் புதிய ஆணை யினால் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலை முறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களைத்தான் பெரிதும் பாதிக்கும்.கடந்த பல ஆண்டுகாலமாக அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கிராமப்புறங் களைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கணிசமான எண்ணிக் கையில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 35 பேர் இவ்வாண்டுகூட நேர்முகத் தேர்வுக் குச் செல்ல இருக்கிறார்கள். இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை, மனதை உறுத்துகிறது. இவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு செய்வத ற்கான தந்திரம்தான் இந்தப் புதிய விதிமுறைகள்.அய்.அய்.டி. போன்று அய்.ஏ.எஸ். என்பது அடித் தளத்து மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் சதி இதன் திரைமறைவில் உள்ளது. என்று மிகத் தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார்கள் சூழ்ச்சி யினை வென்றெடுப்போம். 8-ஆவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் மொழிகளில் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியிலிருந்த 1968-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுமைக்கும் உள்ளது. ஏன் இந்தத் திடீர் மாற்றம் ? திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் தாய்மொழி இலக்கியத்தை விருப்பப் பாடமாக, தேர்வு எழுதும் மொழியாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். வெற்றியும் பெறுகின்றார்கள், ஏன் அகில இந்திய அளவில் முத்ன்மை பெற்றவர்கள் பட்டியலிலும் வருகின்றார்கள். இதனைப் பொறுக்க முடியாதவர்கள் இந்த சூழ்ச்சி வலையினை விரித் திருக்கின்றார்கள். அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது, அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படும் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு, மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சரியான நேரத்தில் சூழ்ச்சி வலையினை அறுக்கும் வாளினை, ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக எடுத்தி ருக்கின்றார்கள். வாருங்கள் மாண வர்களே, வாருங்கள் தோழர்களே, வாருங்கள் சமூக நீதியில் அக்கறை உள்ள இயக்கத்தினரே வாருங்கள், ஒன்றாய் குரல் கொடுப்போம், உயர் ஜாதிக் காரர்களின் சூழ்ச்சியினை வென்றெடுப்போம்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


டெசோ கேட்பதால்; வலுவில்லை என்பதா?

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே,

ஈழத் தமிழர்களின் நலன் காப்பதற்காக என்னைத் தலைவராகவும் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்பு லெட்சுமி ஜெகதீசன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட டெசோ அமைப்பை மீண்டும் உருவாக்கி, இலங் கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சிங்கள மயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது விரிவாக கலந்தாலோசனை செய்து உரிய தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அத்தோடு நில்லாமல், தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை யெல்லாம் அழைத்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து வந்து, அவர் களுடைய ஆலோசனைகளையும் பெற்று 14 தீர்மானங் களை வடிவமைத்து 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ வின் மாபெரும் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானங்களை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் நமது நாடாளுமன்றக் கழக உறுப்பினர்கள் நேரடியாகக் கொடுத்து தேவையான விளக்கமளித்து வந்தனர். பின்னர் கழகப் பொருளாளர், தளபதி தம்பி மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவும் அந்தத் தீர்மானங்களை எடுத்துச் சென்று, நேரடியாக நியூயார்க்கில் உள்ள அய்.நா. மன்றத்தின் தலைமை அலுவலகத்திலும், ஜெனீ வாவில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் ஆணையத் திலும் கொடுத்து தேவையான விவரங் களையும், அடிப்படை ஆதாரங்களையும் வழங்கி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நமது நாடாளுமன்ற -மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட குழுக்களை அமைத்து டெல்லியிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை நேரடியாகக் கொடுத்து அவர்களின் ஆதரவையும் கோரினோம்.

டெசோ இயக்கத்தின் சார்பில், பிப்ரவரி திங்கள் 8ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என்னுடைய தலைமையில், சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அந்த ஆர்ப்பாட் டத்தின் நோக்கமே சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவை சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைந்தன், பாலகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் படு கொலை செய்த கொடுமையை உலகத்தின் கவனத் திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். மார்ச் திங்கள் 5ஆம் நாளன்று சென்னையிலுள்ள இலங்கைத் தூதுரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் டெசோ சார்பில் நடத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பல்லாயிரக்கணக்கானத் தோழர்கள் அந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப் பட்டனர். மார்ச் திங்கள் 7ஆம் நாளன்று இந்தியத் தலைநகர் டில்லியில் டெசோ சார்பில் ஈழத் தமிழர்கள் மீது ஏவப்பட்டு வரும் கொடுமைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றினை நடத்தினோம்.

கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதம்கோரி, அந்த விவாதத்தின்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் கழகத்தின் கருத்தினை யொட்டிப் பெரிதும் வாதாடினர். ஆனால் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்கள் பதிலளித்துப் பேசும்போது, ஜெனீவாவில் நடைபெறும் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும் என்று சொன்னார். ஆனால் இந்தியாவின் இந்த யோச னையை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. அமெரிக்காவுடன் பேச்சு நடத்த எங்கள் நாடு உத்தேசிக்க வில்லை. அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம் சத்தை இலங்கை முற்றிலுமாக நிராகரிக்கிறது. ஒரு நாட்டுக்கு அய்.நா. பார்வையாளர்கள் வருகை புரிவது என்பதை சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் அல்லது அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கையின் சார்பில் ரவிநாதா ஆர்ய சின்ஹா அறிவித்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

இந்தியா வழங்கும் ஆலோசனையை இலங்கை ஏற்றுக் கொள்ளுமென்று மத்திய அரசிலே உள்ள வர்கள் எந்த அடிப்படையில் நம்பிக்கை கொண் டார்கள் என்று நமக்குப் புரியவில்லை. சிங்கள அரசு, இந்திய அரசுக்கு நீண்ட காலமாக கற்பித்து வரும் பாடத்தை மத்திய அரசிலே உள்ளவர்கள் எப்படித் தான் மறந்தார் களோ? பண்டாரநாயகா - செல்வ நாயகம் உடன்பாடு, டட்லி - செல்வநாயகம் உடன்பாடு, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா உடன்பாடு என்று எந்த உடன்பாட்டையும் உதாசீனப்படுத்திய இலங்கை அரசை; பண்டித நேரு அவர்களையும், இளைய தலைவர் ராஜீவ் காந்தி அவர்களையும் அவமானப்படுத்திய சிங்கள அரசை இன்னமும் இந்தியா நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டு, அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறது என்பதுதான் நமக்குப் புரியாத வேதனையாக நீடித்து வருகிறது. எனினும் அமெரிக்காவின் தீர்மானத்தையாவது கடைசி நேரத்தில் இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இன்னமும் இருக்கிறது.
இப்படி இந்திய அரசு மிகுந்த நம்பிக்கை யோடு வழங்கிய ஆலோசனையை இலங்கை அரசு அதனைப் பரிசீலித்துக் கூடப் பார்க்க மனமில்லாமல் நிராகரித்து விட்ட நிலையில், அய்.நா.மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத் தைப் பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது உறுதியாக அறிவிக்கப் போகிறது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது.
இத்தகைய சூழலில், ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம், ஈழத் தமிழர் களுக்குப் பயனளிக்காது என்றும்; இலங்கை யைத் தண்டிக்கும் அளவிற்கு அதிலே தீவிரமாக எதுவும் கூறப்படவில்லை என்றும்; தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வை விழுந்து விழுந்து நேர் முகமாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கத் துடிக்கும் சில ஏடுகளைப்போல, டெசோ நடத்திய முழு அடைப்புப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது என்று சில அரசியல் வாதிகள் கருத்து வெளியிட்டு, தாங்களும் இருக்கிறோம் என்று காட்டி வருகிறார்கள்.

தி.மு.க. அங்கம் வகித்து வரும் டெசோ அமைப்பு, அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே; காழ்ப்புணர்வு கொண்டு, அமெரிக்கத் தீர்மானத் தில் எதுவுமே இல்லை என்பதைப்போல தமிழ்நாட்டிலே சிலர் பேசி வருவதை உலகத் தமிழர்கள் கவனித்து வருகிறார்கள். அமெரிக் காவின் தீர்மானமே உறுதியானது - இறுதியானது - தீவிரமானது என்று டெசோ அமைப்பு கருதி எப்போதும் அறிவிக்கவில்லை. எனினும் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று டெசோ கோரிக்கை வைப்பதற்கு சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. ஈழத் தமிழர்களை நசுக்கி நாசமாக்கி வரும் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளின் கேந்திரமையமான அய்.நா. அவையில் மற்ற எந்த நாடும் தீர்மானம் எதையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்காத நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வரும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதை நாம் வரவேற்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பதால்தான் சென்ற முறை அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. இந்த முறையும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பெரும் பான்மையான உறுப்பு நாடுகள், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவான தொரு மன்றத்தில், இலங்கைக்கு எதிரான முதல் நகர்வை ஏற்படுத்தியது அமெரிக்க வல்லரசு தான். அந்த நகர்வுதான் உலகெங்கிலும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய அக்கறையையும், பரிவையும் - இலங்கைச் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கி யிருக்கிறது. இதனை உலகத் தமிழர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

டெசோ அமைப்பு நேரடியாக அய்.நா.மன்றத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் எதையும் முன் மொழிந்திடும் வாய்ப் பினைப் பெற்றிருக்கவில்லை. இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதே நிலைதான் என்பதை உணர வேண்டும். அதனால்தான் தமிழினப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங் களுக்குப் பொறுப்பான ராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான வலிமைமிக்க தீர்மானம் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும்; பொது வாக்கெடுப்பு குறித்த தனித் தீர்மானம் ஒன்றினை இந்தி யாவே அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் முன் னெடுத்துச் சென்று, ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு காண வேண்டும்; குறைந்தபட்சம் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை யாவது உரிய திருத்தங் களுடன் இந்தியா ஆதரித்திட வேண்டும்; என்று டெசோ சார்பில் நாம் தொடர்ந்து குரலெழுப்பியும், கோரிக்கைகள் கொடுத்தும் வருகிறோம்.

இன்றைய சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதற்கும், இந்தியாவே தனியானதொரு தீர்மா னத்தைக் கொண்டு செல்வதற்கும் அழுத்தம் தருவ தன்னியில்; நாமே உலக நாடுகள் அவையில் தீர் மானத்தை முன்மொழிய முடியுமா; நாமே நேரடியாக இலங்கைக்குக் கெடு விதித்திட இயலுமா; நாமே படை திரட்டிக் கொண்டு, இலங்கையைப் போருக்கு அழைப்பது சாத்தியமா; என்பதை யெல்லாம் இங்குள்ள சில அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். டெசோ இப்போது மேற் கொண்டுள்ள நிலைப்பாட்டைவிட, உயர்ந்த - உகந்த நிலைப்பாட்டை ஈழத் தமிழர் குறித்து; ஓயாமல் கருத்துகள் தெரிவித்து வரும் இந்தச் சில அரசியல் வாதிகள் வகுத்தளிப்பார்களேயானால், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் உவகையோடு அதனை வரவேற்பார்கள்!

அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன் மொழிய அவர் களாகவே முன் வருகின்ற நேரத்தில் - அந்தத் தீர்மானத்தை 30க்கு மேற்பட்ட உலக நாடுகள் ஆதரிக்கத் தயாராக இருக்கும்போது - குறைந்தபட்சம் அதை யாவது நாம் வரவேற்க வேண்டாமா என்ற எண்ணத்தோடுதான்; ஈழத் தமிழர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை முழுமையாகத் துடைத்திட உடனடியாக இயலாவிட்டாலும், அவர்களுக்கு ஆறுதல் வழங்கிடும் வகையிலேதான், டெசோ அமைப்பு, அமெரிக்கா, தீர்மானத்தை முன்மொழி வதை வரவேற்றும், அதை இந்திய அரசு உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வர வேண்டுமென்றும் கேட்டு வருகிறோம். ஆனால் இங்கேயுள்ள சிலர் - ஏதோ தங்களையே பெரிய வல்லரசுகள் என்பதைப் போலக் கருதிக் கொண்டு - எதற்கெடுத் தாலும் குந்தகம் சொல்வது என்ற முறையில்; அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் வேண்டாத விமர்சனம் செய்து குட்டையைக் குழப்பப் பார்க்கிறார்கள்!

அன்புள்ள,
மு.க.
(நன்றி: முரசொலி, 14.3.2013)

தமிழ் ஓவியா said...


இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு


சென்னை, மார்ச் 14- இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம் என்று மாநிலங்களவையில் கனி மொழி எம்.பி. பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. மாநிலங்களவையில் பேசியதாவது:-

நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச் சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியி ருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன். இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட் டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில், இது எந்த மொழிக் கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற் சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழி யையும், கலாச் சாரத்தையும் பண் பாட்டையும், தங்கள் அடை யாளத்தையும் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கலைஞர் தனது 14ஆவது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதா ரண மாணவன். தனக்கு ஒரு பிரகாச மான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல மைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவ ருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர் களை நீங்கள் அவமானப்படுத்தக் கூடாது. இது போன்ற போராட்டங் களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப் பட்ட தலைவர்களின் போராட்டங் களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள். எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார்.

நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை. இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்பு கிறேன். காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்லர். இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியா விட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும். இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மை யினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல. இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், விழுமியங்கள், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


பலே, பக்தி வியாபாரம்!



பக்தியே ஒரு பிசினஸ் என்று சாட்சாத் சங்கராச்சாரியாரே கூறியுள்ளார் பல நேரங்களில், அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்குவதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அடிக்க வேறு யாராலும் முடியவே முடியாது.

திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பது என்பது விசேடம். அப்படிப் பக்தர்கள் செலுத்தும் முடியை விற்பதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்குத் திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கிடைக்கக் கூடிய தொகை நூறு கோடி ரூபாயாம்.

இப்பொழுது முடி காணிக்கை செய்பவர்களுக்குச் சிறப்புப் பரிசு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. 31 அங்குலம் நீளம் கொண்ட முடியைப் பக்தர் ஒருவர் ஏழு மலையானுக்குக் காணிக்கையாகக் கொடுத் தால் 5 லட்டு இலவசமாகக் கொடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காகத் தனிக் கவுண்டராம்.

அது என்ன 31 அங்குல முடி நீளம், மார்க் கெட்டில் அதற்கு ஏதாவது மவுசு இருக்கக் கூடும். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?

இப்பொழுது ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடெங்கும் கிளைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள். ஆங்காங்கே கல்லா கட்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

சிறீரங்கத்தில் மாநாடு நடத்தும் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் குறிப்பாக அதன் தலைவர் திருவாளர் வேதாந்தம் என்பவர் கோயிலில் தரிசனம் செய்ய தட்சணை கேட்பது பாவம் - கூடவே கூடாது என்று கரடியாகக் கத்திக் கொண்டு தான் திரிகிறார்; யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் கோயிலைத் திறந்து வைத்திருக்கக் கூடாது, அது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்றெல்லாம் சங்கராச்சாரியாரிலிருந்து திருவாளர் ராம. கோபாலன் வரை ஒவ்வொரு ஆண்டும் சொல்லித் தான் பார்க்கிறார்கள். அவற்றை யார் சீந்து கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு கோயிலைத் திறந்து வைத்திருந்தால் ஏராளமான அளவுக்கு வரும்படி கிடைக்கிறதே - பக்தர்கள் வெறுங் கையோடா கோயிலுக்கு வருகிறார்கள்? அப்படி வெறுங் கையோடு வந்தாலும் எந்த அர்ச்சகப் பார்ப்பான் மதிப்பான்?

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பன்று மிகப் பெரிய அளவில் வருமானம், தட்சணை கொட்டுகிறது. ஆகமத்தைப் பார்த்தால் சம்பாதிக்க முடியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் மட்டும்தான் ஆகமங்கள் குறுக்கிடும்; மற்றபடி வருமான விடயத்தில் ஆகம மாவது மண்ணாக் கட்டியாவது! எல்லாம் அவாளுக்குத் தெரியாதா என்ன?

வரும்படி பெருந்தொகை கிடைக்குமானால் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் பிரசாதத்தைத் தூக்கிக் கொண்டு பெரும் பண முதலைகள் - தொழில் அதிபர் தங்கி இருக்கும் விடுதிகளை (Lodges)நோக்கியல்லவா பறந்தோடு கிறார்கள்!

பணம் படைத்தவர்கள் என்றால் பகவான் அவர்களைத் தேடி ஓடுகிறான் என்பது இதன் பொருள்.

கோயிலில் மூல விக்ரகத்தைத் தரிசிப்பதில்கூட பல வகுப்புகள் உள்ளன. சீக்கிரம் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமென்றால் தட்கல் முறையில் அதற்கென்றுள்ள அந்தப் பெரும் தொகையைத் தூக்கி எறிந்தால் தரிசனம் சில நிமிடங்களில் கிட்டும்.

பஞ்சைப் பராரிகள் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமானால் பல நாள்கள் பசி பட்டினி கிடந்து காத்திருக்க வேண்டிய அவல நிலைதான். அதனால் தானோ என்னவோ கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி! என்ற பழமொழி நடைமுறையில் இருக்கிறது போலும்!

அன்பே கடவுள் என்றும் அவன் உருவமற்றவன் என்றும் ஒரு பக்கத்தில் இதோபதேசம் செய்து, கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி உருவங்களை மனம் போனவாக்கில் வடித்து வைத்து, உண்டியலையும் ஏற்பாடு செய்து மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கயவாளித் தனத்தை என்னவென்று சொல்லுவது!

கோயில் அமைப்பு முறை என்பது சுரண்டலுக்கான ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமா தயக்கம்?
15-3-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தூக்கம்

செய்தி: இன்று உலக தூக்க நாள் சிந்தனை: தூக்கம் மனி தனுக்கு அவசியமே!

தூக்கம் இல்லாவிட்டால் பல வகை உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கவும் கூடாது!

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனருக்கு அழும் தானங்கள்


மத்ஸ்ய புராணத் தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகா தானங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தரு கிறது.

துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவரின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.

ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.

பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது.

கல்பதரு தானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.

கோஸ ஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்களை தானம் தருவது.

ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.

ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.

ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.

ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.

பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.

தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.

விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.

கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.

சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.

ரத்னதேனு தானம்: ஆபரணங்களை கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.

மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித் தருவது. - இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

(எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திர பேய்களும் சாதிக் கதைகளும் - (ஒரு மார்க்ஸியப் பார்வை, நூல் பக்கம் 60-61)

தமிழ் ஓவியா said...


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்; பகுத் தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக் கெல்லாம் விளக்கம் சொல்லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு. இதனை இல்லத் தலைவி வீட்டுப் பணிகள் அனைத் தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.

பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்

பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே

- எனக்காட்டும் போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச்சுவையும் தோன்ற வைக்கிறார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


பொருளே குறிக்கோள்!


பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும் மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கே யன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை, பெரியதொரு சடங்குண்டே! மந்திரமுண்டே அந்த எலாம் செய்யத்தான் வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும் கொடுக்கணுமோ குடுக்க வேணும் என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்

- எனக் கவிஞர்(- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்) மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பனனின் செயலை எள்ளி நகையாடுவது நகைப்பை விளைக்கிறது.

தமிழ் ஓவியா said...


அன்னையாரின் நினைவு போற்றி எஞ்சிய பணி முடிப்போம்!


தனது இளமை, வளமை, முதல் அனைத்தையும் இழந்து, தொண்டறத்தின் தூய உருவமாகி உயர்ந்துள்ள உன்னத புரட்சித்தாய் நம் அன்னையார் அவர்களது 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! (16.3.2013).

நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைப்பதற்காக, நம் அன்னையார் அவர்கள் பட்ட தொல்லை, துன்பம், வசவுகள், இழி மொழிகள் ஏராளம்! ஏராளம்!!

எதிர் நீச்சல் களத்தில் நின்று வென்று, தனக்கென வாழாது, தன் உழைப்பைத் தந்ததோடு நில்லாமல், தனது அத்தனைப் பொருளையும் பொதுத் தொண்டுக்குத் தந்து, ஒரு மாபெரும் பல்கலைக் கழகமே உருவாகும் அளவுக்கு, ஒரு அறக்கட்டளையை நிறுவி, அய்யா தந்தை பெரியாரைப் போலவே சுயநலத்தை சுட்டுப் பொசுக்கி, மானம் பாராத தொண்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நம் அன்னையார் தொண்டறத்தின் இமயமாய் உயர்ந்தவர்! அய்யாவின் பணி முடிக்க, நமக்கு அய்யா மறைவுக்குப்பின் தலைமை ஏற்று வழிகாட்டிய அன்னையாரின் நினைவு நாளான இன்று, உறுதியைப் புதுப்பித்து, லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி தொடருவோமாக!

மகளிருக்கு அன்னையார் மகத்தான கலங்கரை விளக்கன்றோ! வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாருக்கு தாழ்த்தப்பட்ட மலைவாழ் இனத்துப் பணியாளர் கூட்டிணைவு வாழ்த்து!

தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகள் வாழச் செய்து, தம் தொண்டு அறத்தினால் பெருமை பெற்ற, தந்தை பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத்தை அய்யா காட்டிய வழியில் இம்மியும் பிசகாது நடை போடச் செய்த அன்னை மணியம்மையாரின் பெருமையை இப்போது தமிழ் மக்கள் பலரும் அறிந்து பாராட்டுகின்றனர்.

செட்யூல் கேஸ்ட், செட்டியூல் டிரைப்ஸ் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் எனும் அனைத்துத் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் பணியாளர் கூட்டிணைவு மகளிர் தினத்தை ஒட்டிச் சென்னை நகரில் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அச்சுவாரொட்டியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகளிர் நலனுக்கு உழைத்த மராத்திய மங்கை ஜோதிபா பூலே அம்மையார், தமிழகத்து மீனாம்பாள் சிவராஜ், உ.பி.யின் மாயாவதி ஆகியோரின் படத்துடன் தொண்டறத்தில் சிறந்தோங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் படத்தையும் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 10, 2013 அன்னை மணியம்மையாரின் 93ஆவது பிறந்த நாள். இந்நாளில் அன்னை மணியம்மையாரைத் திராவிட இயக்கத்தவர் மட்டுமல்லாமல், பிற மக்களும் உணர்ந்து நினைவு கூர்வது பெருமையாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் உண்டு! உண்டு!!



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - கடும் எதிர்ப்புக் காரணமாக புதிதாக அறிமுகப் படுத்திட்ட மாநில மொழிகளின் உரிமைகளை வெளியில் தள்ளிய முடிவு கைவிடப்பட்டதாக - மத்திய இணை அமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளைக் கடந்து போர்க் குரலை எழுப்பினார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றிக்கும் உரியவர்கள்! மத்திய தேர்வாணையம் மாநில மொழிகளை வெளியில் தள்ளி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுதலாம் என்று எடுத்த முடிவு மேம்போக்கான ஒன்றல்ல; ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, இந்தி பேசா மாநிலங்களிலிருந்த அய்.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்கிற சதி திட்டம் அதற்குள் அடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் திரு. லாலு பிரசாத் அவர்கள் அந்தச் சதியைச் சுட்டிக் காட்டியும் பேசியுள்ளார்.

இதில் இன்னொரு நுணுக்கமான கண்ணிவெடி ஒன்றுள்ளது. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுத வேண்டும் (ஆரளவ) அதனை இந்த முறை நீக்கியதற்குக் காரணம் ஆங்கிலத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பல்ல. மாறாக வட மாநிலங்களில் இந்தி பேசுவோருக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் என்பது சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. இந்த முட்டுக்கட்டை இந்தி வாலாக்களுக்கு இருக்கக் கூடாது - 2000 மதிப்பெண்களையும் அவர்களின் தாய்மொழியான இந்தியிலேயே எழுதி, அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பமிட்டு விடலாம் என்பதே - புதிய அறிவிப்பில் உள்ள ஆழமான சதியாகும்.

நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவித்திருப்பது இப்போதைக்குத் தற்காலிகமா?
இந்தத் தொடரிலேயே உடனடியாக அதன் முழுத் தன்மையையும் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - நேற்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலும், கருத்துகளும் மிக மிக முக்கியமானவை.

சமூகநீதிக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடிய - தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலேயே, சமூகநீதிக்கு விரோதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - தமிழை வெளியே தள்ளி, கிராமப்புற மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் குழியை வெட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதே - இது எந்த வகையில் சரியானது - நியாயமானது?

கிட்டதட்ட ஒரே நேரத்தில் மத்திய, மாநில தேர்வாணையங்கள் இப்படி நடந்து கொண்டுள் ளனவே - இந்தச் சங்கிலிப் பிணைப்பின் பின்னணி என்ன?

மத்திய அரசின் புதிய முறையைக் குறைகூறி பிரதமருக்கு மடல் எழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர் தமிழ்நாட்டிலேயே இந்த அநீதி நடந்திருக் கிறதே யார் பொறுப்பு? அதற்கு என்ன பதில்? என்ன சமாதானம்?
இந்நேரம் புதிய திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இந்த நிலையில் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் 19ஆம் தேதி சென்னையிலும் திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவசியமாகி விட்டது.

மத்திய அரசு பின்வாங்கினாலும், மாநில அரசு சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்துள்ளதால் இதுவரை விலக்கிக் கொள்ளாததால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு வெற்றிகரமாக நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 16-3-2013

தமிழ் ஓவியா said...


ஒலி முழக்கங்கள்




1. வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

2. தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
மாநிலத் தேர்வு ஆணையம்
மாநிலத் தேர்வு ஆணையம்
தாய்மொழி தமிழை
தாய்மொழி தமிழை
புறக்கணிக்கும், புறக்கணிக்கும்
புதிய திட்டத்தை, புதிய திட்டத்தை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

3. தந்தை பெரியார் பிறந்த தந்தை பெரியார் பிறந்த
தமிழ் மண்ணிலே, தமிழ் மண்ணிலே
சமூக நீதிக்கு, சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக் குழியா?

4. தாழ்த்தப்பட்ட மக்களை
தாழ்த்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பழிவாங்கும் - பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

5. கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
பழிவாங்கும், பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

6. வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
மத்திய அரசு மத்திய அரசு
வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
தமிழக அரசே, தமிழக அரசே!
தூங்குவது ஏன்? தூங்குவது ஏன்?

7. போராடுவோம் போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை வெற்றிக்கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்!

8. வென்றெடுப்போம் - வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
ஆசிரியர் வீரமணி தலைமையிலே
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
சமூக நீதியை, சமூக நீதியை
வென்றெடுப்போம், வென்றெடுப்போம்!

9. வாழ்க வாழ்க வாழ்கவே
திராவிடர் கழகம் வாழ்கவே
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!

10. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!
- திராவிடர் கழகம்
(18, 19.3.2013இல் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக)

தமிழ் ஓவியா said...


காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்?



விஞ்ஞானிகள் தகவல் சென்னை, மார்ச் 16- காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்பெல்லாம் பெரும் பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப் படும் பழைய சோறுதான். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்து விடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு. கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன் பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:-

பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி-6, பி-12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன.

கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரி யாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக் கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப் பொலிவுடனும் இருக்கும். மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள். பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத் தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன. எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்வது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவு களுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - எதிரியா? நண்பனா?

- முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பிச்.டி

அண்மையில் நாடாளுமன்ற மேலவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை நம்முடைய நட்பு நாடு எதிரி நாடு அல்ல என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை உறுப்பினர்கள் கொதிப் படைந்து இலங்கை எதிரி நாடுதான் என்பதை உறுதிப்படுத்திப் பேசி யிருக்கிறார்கள். இலங்கை - நண் பனா? எதிரியா? என்பது சிலபேருக் குக் குழப்பமாக இருக்கிறது. ஆளும் கட்சியும் பார்ப்பன அதிகார மய்யமும் இலங்கையை நண்பனா கவே கருதிக் கொண்டிருக்கின்றன. இலங்கையை நண்பன் என்று சொல் வது அதன் மீதுள்ள பாசத்தினால் என்பதை விடத் தமிழர்கள் மீது கொண்டுளள வெறுப்பினால்தான் டெல்லி அரசு இந்தக்கொடூரமான நிலைப்பாட்டை மேற்கொண் டிருக்கிறது.
புரட்சிக் கவிஞர் பாடியதைப் போல நற்றமிழ் என்பது டில்லிக்கு ஆகாது. நமக்கு நினைவு தெரிந்த வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே டில்லி மேற் கொண்டு வந்துள்ளது. இடையில் இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் மட்டும் தமிழ் ஈழ மக்களுக்குச் சார்பான நிலை இருந்தது.

நெடுங்காலமாகத் தமிழ் இனம் வஞ்சிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றது. நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. தமிழகத்தின் நீர் ஆதா ரங்கள் அண்டை மாநிலங்களால் அழிக்கப்படும் நிலையை மய்ய அரசு தடுக்கவில்லை. இத்தகைய காரணங் களினால் தான் அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று சொன்னார். இன்றும் அதே நிலை, அதைவிட இழிந்த நிலையைத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1950களில் கோவாவை இந்தி யாவோடு இணைப்பதற்கு பண்டித நேரு எடுத்துக் கொண்ட அமைதி யான மென்மையான நடவடிக்கைகள் பயன் தரவில்லை. இந்தியப்படை கோவாவை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கை எடுத்து கோவாவை இந்தியவோடு இணைத்தார் நேரு. அப்போது போர்ச்சுகல் ஆளுகையின் கீழ் கோவா டையூ, டாமன் ஆகிய பகுதிகள் இருந்தன. கோவாப் பகுதி களை இந்தியாவுடன் இணைப்ப தற்கு நேரு ராணுவ நடவடிக்கை எடுத்தபோது இலங்கையின் நிலைப் பாடு என்ன?

போர்ச்சுகல் அரசின் வேண்டு கோளுக்கு இணங்கி அவற்றின் போர்க்கப்பல்களும், விமானங்களும் கொழும்பில் நிறுத்தப்படுவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அங்கிருந்து கோவாவை முற்றுகை யிட்டுள்ள இந்தியப் போர்க் கப்பல்களைத் தாக்குவதற்கும் இலங்கையின் சிங்கள அரசு அனுமதி கொடுத்ததா இல்லையா? (ஆனால் போர்ச்சுகல் கப்பல்கள் கொழும்பு வந்தடைவதற்கு முன்னதாகவே கோவா இந்தியாவோடு இணைக்கப் பட்டுவிட்டது). இந்தியாவோடு போர் தொடுக்க வருகின்ற ஒரு நாட்டின் கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கவும் தளம் அமைத்துக் கொள்ளவும் அனுமதியளித்த இலங்கை இந்தி யாவின் நண்பனா?

1962-இல் இந்தியாவுக்கும், சீனா வுக்கும் நடந்த போரின்போது இலங் கையின் நிலைப்பாடு என்ன? கோவா விடுதலைப்போரின் போது இலங்கை இந்தியாவின் மீது காட்டிய பகை உணர்ச்சி, சீனப்போரின் போதும் வெளிப்பட்டது. வெளிநாடுகளில் சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியா விற்கு எதிராகவும் கொள்கைப் பரப்புரையை இலங்கை மேற் கொண்டது. அய்.நா.அவையிலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகப் பேசியதே! அந்தப்பழைய நட்பின் அடிப்படையிலேயே இலங்கையின் வடக்கு - கிழக்குத் தமிழ் ஈழப்பகுதி களைச் சீனாவிற்கு இலங்கை இப் போது தாரை வார்த்துக் கொடுத் திருக்கிறது! இப்படிப்பட்ட இலங்கை இந்தியாவின் நண்பனா?

1972--_73-இல் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை யார் பக்கம் நின்றது? பாகிஸ்தான் விமானங்களும், போர்க்கப்பல்களும் கிழக்குப் பாகிஸ்தான் செல்வதற்குக் கொழும்புத் துறைமுகத்தையும், விமான நிலையங்களையும் பயன் படுத்திக் கொண்டன; எரிபொருள் நிரப்பிக் கொண்டன. இறுதியில் இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வையால் மத அடிப்படையில் பிரிந்த நாட்டை மொழி அடிப்படையில் பிரித்து பங்களா தேஷ் என்று ஒரு தனிநாடு உருவாக்கப்பட்டது. இலங்கை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்துள்ளது. இதனை நன்கு மனத்தில் கொண்ட இந்திராகாந்தி அம்மை யார் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

திரிகோணமலையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைக்க இலங்கை அனுமதி கொடுத்தது. அதுவரையில் அமைதியோடிருந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கடுமை யான மொழிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார். விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று இந்திராகாந்தி அம்மையார் கூறி யவுடன் திரிகோணமலையிலிருந்து அமெரிக்க ராணுவத்தளம் உடனடி யாக அகற்றப்பட்டது. இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவிற்குப் பதிலாகச் சீனா திரிகோணமலையில் இருக்கிறது. திரிகோணமலை எவன் கையில் இருந்தாலும் அது இந்தி யாவின் பாதுபாப்பிற்கு ஏற்றதல்ல என்பதை இந்திரா அம்மையார் நன்கு உணர்ந்திருந்தார். இன்றைய டில்லி ஆட்சியாளர்கள் என்ன கருது கிறார்கள்? திரிகோணமலையிலிருந்து யார் தாக்குதல் தொடுத்தாலும் சாகப்போகிறவன் தமிழ் நாட்டுக் காரன் தானே! சாகட்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை நிறுத்து இல்லையேல் திரும்ப அடிவிழும் என்று சொல்வதற்கு இந்திராகாந்தி அம்மையார் இன்றில்லையே!

தமிழ் ஓவியா said...

இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார் இந் திரா அம்மையார். இந்திராகாந்தியை மடக்குவதற்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா எவ்வளவோ முயன்று பார்த்தார். நாம் இருவரும் ஒரே இனத்தைச் (ஆரியர்) சேர்ந் தவர்கள்; என் மூக்கும் உங்கள் மூக்கும் அமைப்பில் ஒன்று போலவே இருக்கின்றன பார்த்தீர்களா! என்றெல்லாம் அன்பொழுகப் பேசிப்பார்த்தார். இந்திராகாந்தி அவரை நம்பவில்லை.

இலங்கையில் தமிழீழத் தாயகம் கேட்டுப் போராடி வந்தவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக் கொண்டபோது இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலி களின் இயக்கத்தலைவர் தம்பி பிர பாகரனை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவி களையெல்லாம் செய்தார். ஜெய வர்த்தனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரத மரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, நட்பு நாடான இலங்கைக்குள் அமைதிப்படை அனுப்பப்பட்டது. இந்திய விமா னங்கள் தமிழீழப் பகுதியில் தாழ் வாகப் பறந்து யாரும் கேட்காமலேயே உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுவந்தன. செய்தியாளர் கள் இதுபற்றிப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், வேறு ஒரு நாட்டுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழையலாமா? என்று கேட்டதற்கு ‘It is a lesson to Jeywardane’ என்று பதில் சொன் னார். இதற்குப் பெயர் நட்பு நாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மார்க்கம் பற்றிய பல அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அந்த அறிவுக் கருவூலத்தை ஆரியர் கள் நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள்.

உலகப்போர் நடந்தபோது செர்மானிய விமானங்கள் லண்டன் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்கின. ஓர் இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் அறிவுக் கருவூ லத்தை அழித்துவிட்டால் போதுமே.

லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தைச் சிங்களப் படையினர் நெருப்பிட்டுச் சாம்ப லாக்கி விட்டார்கள்! தான் போற்றி வளர்த்த நூலகம் எரிவதைப் பார்த்த ஒரு பாதிரியார் நெஞ்சு வெடித்து நூலகத்தின் முன்பாக இறந்து போன தும் அவரைத் தூக்கி எரியும் நூலகத் திற்குள் சிங்களப் படையினர் வீசி விட்டுக் கைகொட்டிச் சிரிக்க வில்லையா?
லட்சக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப் பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காத டில்லி ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நண்பர்களா?

இலங்கையை இன்னும் நட்பு நாடெனக்கருதுவோரைத் தமிழினத் தின் நண்பர்களாகக் கருதுவோரை வஞ்ச நெஞ்சம் படைத்த முட்டாள் கள் என்போம்!

ஆதலின் இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இதே நிலைதான் இருந்தது. எனவே இலங்கையை நட்பு நாடென்று உரிமை பாராட்டுவோர் - இனப்படுகொலை நடத்திய நாட்டோடு நல்லுறவு வேண்டுவோர் உலகமெங்கும் பரந்து கிடக்கும் பத்துக்கோடித்தமிழர்களின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என்பது உறுதி.

இறுதியாக - ஒரு நட்பு நாட்டின் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கைக் குச் சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படுகிறது. அப்போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தன் துப்பாக்கிக் கட் டையால் ராஜீவ் காந்தியின் உயிருக் குக் குறிவைத்துத் தாக்க முற்படு கிறான். ராஜீவ் தடுமாறிச் சமாளித்துக் கொள்கிறார் இக்காட்சி உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் வெளியாகியது. ராஜீவைத் தாக்கிய அந்த ராணுவ வீரனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டது. பின்னாளில் அவன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை இங்கிருந்தல்லவா தொடங்கப் பெற வேண்டும்). இதனால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது ஒரு கேலிக்கூத்து! அடி முட்டாள்தனம்! ஒரு நட்பு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய முயன்றவனுக்குப் பதவி உயர்வும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கிறது என்றால் அந்த நாட்டை நட்பு நாடென்று சொல் வதற்கு டெல்லி வெட்கப்பட வேண் டாமா? அவர்களுக்கு அதுவெல்லாம் தெரியாது. சுப்பிரமணியசாமியைப் போன்ற புரோக்கர்கள் இருக்கும்வரை ராஜபக்சேவைப் போன்ற கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சி தானே! ஓர் அயோக்கியன் இன்னோர் அயோக்கியனை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடி விட்டு டெல்லி திரும்பியிருக்கிறான். உலகம் முழுக்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நேரத்தில் டெல்லியும், சு.சாமியும் ராஜபக் சேவோடு கை குலுக்குவது எவ்வளவு இழிந்த செயல்!

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்



எல்லோருமே வெற்றியை விரும்பு கின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர். - சிசரோ

உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். - கார்லைல்

எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும். - மேட்டர்லிங் உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்குச் செல்வதைப் போன்றது. - எமர்சன்

வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் - மில்டன்

தமிழ் ஓவியா said...


இந்தி நுழைப்பு



மது விலக்குப் போலவே இந்தி நுழைப்பு என்கிற திரு. ஆச்சாரியார் திட்டமும் மக்களது கல்வி அறிவைப் பாழ்படுத்த வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டதாகும்.

பார்ப்பனர்களின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் புகுத்தினால், அதற்குப் பெரிய எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதியே பார்ப்பன இன உணர்ச்சிக்கு அடிப்படையான சமஸ்கிருதத்தின் எதிரொலியான இந்தியை நுழைக்க முயற்சித்தார் திரு. ஆச்சாரியார்.

இந்தியின் ரகசியம் என்ன என்பதையும், குடிஅரசின் மூலம் விளக்கிய பிறகே உண்மையை உணரலாயினர் மக்கள்.

திரு. ஆச்சாரியார் பல முறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது, சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால், அதுதான் இந்தி என்றும், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் கூறினார்.

இந்தியை ஒழிக்க பெரிய கிளர்ச்சி செய்து, 3,000 பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், முதிய வர்கள், குழந்தைகள் உட்பட சிறை சென்று, இரண்டு உயிர்களைப் பலி கொடுக்க வேண்டி வந்தது.

செகண்டரி ஸ்கூல் அய்ஸ் ஸ்கூல் ஒழிப்பு:

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும்,
60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களும் எடுக்கப்பட்டு விட வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

60 பிள்ளைகள் கிராமத்தில் கிடைப்பது, அதுவும் 1938இல் என் றால், அது பெரிய சிரமமான காரிய மாகும் என்பதை நாம் யூகிக்க முடியும்.

அந்த சாக்கை வைத்துக் கொண்டு பள்ளியை இழுத்து மூடச் சொன் னார் மகானுபாவர் ஆச்சாரியார் என்றால், அவரது மனுதர்ம மனப்பான்மைக்கு வேறு சான்று கூறவா வேண்டும்?

சர்க்கார் அனுமதி பெற்றுப் பொது ஜனங்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வந்த பள்ளிகளை ஒழிக்க, சரியாக நடக்காத பள்ளிகள் அத்தனையும் இழுத்து மூடப்படும் என்றார்.

திருத்தி செவ்வனே நடைபெறும் படி செய்யப்படும் என்று கூறவில்லை திரு. ஆச்சாரியார் என்பதைக் கவனியுங்கள்.

கோயம்புத்தூரில் இருந்த (ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் துவக்கப்பட்டது) காட்டுத்துறைக் கல்லூரி (Forest College) யை இழுத்து மூடி விடும்படிச் செய்தார் திரு. ஆச்சாரியார்.

இதனால் பயனடைந்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்பதே இதற்கு அடிப்படையான காரணமாகும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒட்டி, தமிழர்களாகிய நமது பிள்ளைகளும் சரிசமமான வாய்ப்புப் பெற்றுப் படிக்க வைக்கச் செய்த காலேஜ் செலக்ஷன் கமிட்டியை (ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது) ஒரே வரியில் உத்தரவு போட்டு, ஒழித்துக் கட்டித் தமிழர்களது கல்லூரிப் படிப்பிற்குக் கல்லறை எழுப்பினார் காருண்ய சீலர் திரு. ஆச்சாரியார்.

கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு திரு. ஆச்சாரியார் ஆட்சியில் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருந்தது.

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் நூல் பக்கம் 13

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி (கி.ஆ)

தமிழ் ஓவியா said...


சிரிக்கலாம்...


பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி நேத்து சாமி வந்து ஆடுச்சுடா. ரொம்ப நேரமாகியும் மலை ஏறவே இல்லை.

அவன்நண்பன் : டேய்... உங்கப் பாட்டி பஸ் ஏறுவதே ரொம்ப சிரமம். இதுல எங்கடா மலை ஏறுவது?

தேநீர் கடையில் ஒருவர் : நிறைய காவடிகளைத் தூக்கிக்கிட்டு, கூட்டம் கூட்டமா போறாங்களே... இவ்வளவு காவடிகளா இருக்கு?

மற்றவர் : ஆமாம் நண்பா! புஷ்பக் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடின்னு நிறைய இருக்கு. எல்லாக் காவடியையும் தூக்கிட்டுப் போயிட்டு, கடைசியா அன்னக் காவடியா இந்த டீக்கடையில தான்உட்கார்ந்திருப்பார்கள். அய்யப்பசாமி : கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.

அறிவுச்சாமி: தம்பி அத கல்லு, முள்ளு மேல நின்னு சொல்லுங்க... சூப்பர் டீலக்ஸ் பஸ்ல இருந்து சொல்லாதீங்க... - வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி


வெள்ளைகாரங்க நாடு குளிரா இருக்குமாம்; அதனால் அவங்க நாட்டுக் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகும்போது 'சூ' (shoe) போடுறாங்க. நம்ம நாடு சூரியன் சுட்டெரிக்கிற நாடு சும்மாவே வேர்த்துக் கொட்டுது; நம்ம குழந்தைங்களுக்கு எதுக்கு 'சூ' போட்டுவிடுறாங்க?

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!



நடைவண்டி நாயகர்களும் முந்தா நாள் மழையிலே நேற்று முளைத்த காளான்களும் டெசோவை நாடகம் என்று விமர்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லி விட்டாராம். அடேயப்பா, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். தாண்டித் தோண்டி யில் விழுகிறது. தாம் தூம் என்று எகிறிக் குதிக்கிறது.

நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெ அம்மை யாரை சிக்கலில் நிறுத்தும் வேலையில் இறங்கவேண் டாம் என்று விடுதலை (21.2.2013) எச்சரித்திருந்தது.

அம்மா மீது என்ன கோபமோ? மறுபடியும், மறுபடியும் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டவைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வேடு!

நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குச் சில கேள்விகள்:

1. இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவே என்று சொன்னவர் யார்? இப்பொழுது போரினால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்களே என்று கிளிசரின் கண்ணீர் விடுவது யார்?

2. போர் என்று சொன்னால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர் யார்?
இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்துவது யார்?

3. இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா ஈடு பட்டால் நாளை இந்தியா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடாதா? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா? என்று கேள்வி கேட்டவர் யார்?
இதற்கு மாறாக முரண்பட்டுப் பேசுவது யார்?

சாட்சாத் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்தானே!

முடிந்தால் இவற்றை மறுத்துவிட்டு எழுந்து முண்டா தட்டட்டும் நமது எம்.ஜி.ஆர்.

முடியவில்லை என்றால், மூலையில் ஒடுங்கிக் கிடக்கட்டும். இல்லை என்றால் வண்டி வண்டியாக எழுத நேரிடும்.

கடைசியில் அம்மையார் அவர்களின்பாடுதான் திண்டாட்டம்!