Search This Blog

8.3.13

வைகோ - ஓர் அலசல்! நிஜப்புலியும்-வேஷப் புலியும்! -2 - அவசியம் படியுங்கள்!!

முன்னவர் பிராமணாள் பின்னவர் சூத்திராள்!
-
இனப் படுகொலையாளன் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி சர்வதேசப் பிரதிநிதிகள் அடங்கிய சுயேச்சையான குழு விசாரணை நடத்த வேண்டும்; தனியீழமே தீர்வு என்கிற கோரிக் கைகளில் எந்த ஒன்றிலும் டெசோ யாருக்கும் குறைந்ததல்ல.
ஆனால், இவையனைத்தும் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று சொல்லுவ தெல்லாம், எதிர்பார்ப்பதெல்லாம் எப்படி சரியாகும்?

அதேநேரத்தில் நாம் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம்!
ஈழத் தமிழர் பிரச்சினை உறைபனியாக இருந்த நேரத்தில் கடந்த ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் அந்தக் கெட்டித் தன்மையை உடைத் தெறிந்துவிட்டது. அதன் காரணமாக உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மைதானே!

அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு செயல்பட வில்லை என்பதால்தான் அதே அமெரிக்கா இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறது - வரவேற்கப்படவேண்டியதுதானே!
முதலாளித்துவ அமெரிக்காவாவது இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந் துள்ளது. ஆனால், இடதுசாரி நாடுகளான கம்யூனிச நாடுகளான சீனா, ருசியா, கியூபா நாடுகள் எப்படி நடந்துகொண்டு வருகின்றன?

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி லெனின் சொல்லாத கருத்துக்களா? அதைப்பற்றி இவர்கள் எவரும் ஏன் பேசுவதில்லை?

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியோ, இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியோ தனியீழத்துக்கு எதிர்ப்பானவைகள்தானே - இது குறித்து என்றாவது வைகோ அவர்கள் குறைந்தபட்சம் ஒரு விமர்சனத்தை வைத்த துண்டா? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா?

இலங்கையில் உள்ளது ஜெ.வி.பி. என்ற கம்யூனிஸ்டுக் கட்சி (ஜனதா விமுக்த பெர முனா) இனவெறியில் ராஜபக்சே இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும். இந்தக் கட்சியின் பிரதிநிதிகள் இந்தியாவில் நடக்கும் கம்யூ னிஸ்டுக் கட்சி மாநாடுகளுக்கு சிறப்பு அழைப் பாளர்களாக அழைக்கப்பட்டு உச்சிமோந்து புரட்சியின் அடையாளமாக சிகப்பு வண்ண சால்வை போர்த்துகிறார்களே, இதைப்பற்றி மூச்சுவிட்டதுண்டா?

ராஜீவ் ஜெயவர்த்தனே உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஈழத்தில் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்ததே இந்த ஜெ.வி.பி.தான்.

ராஜபக்சேவின் ஆதரவோடு அந்த வழக்கில் வெற்றியும் பெறப்பட்டது என்பது சாதாரணமானதுதானா?

ஒரு கொடுமை என்ன தெரியுமா?

 

கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். அதை கைவிட வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்டு நிபந்தனை விதித்துள்ளதே?

வைகோ பதில்: குறைந்தபட்ச திட்டங்கள் எவை என்ற உடன்பாடு அடிப்படையில் கூட்டு மந்திரி சபை அறிவிப்பு இல்லை. உடன்பட முடியாத கருத்துகளை பிரச்சினையாக்க யாரும் முன்வரமாட்டோம். எந்தத் தரப்பிலும் ஒருவர் கருத்தை இன்னொருவர்மீது திணிக்க முன்வர மாட்டோம்.

                                 ----------------------வைகோ பேட்டி (தினகரன், 18.2.1996)

பதவியைப் பிடிப்பதற்காக ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது எங்கள் உயிர்ப் பிரச்சினை என்று மார்தட்டு பவர்கள் தேர்தலில் அதனை முன்வைக்க மாட்டோம் என்று இன்னொரு கட்சி வைக்கும் நிபந்தனைக்கு ஆட்படுபவர்கள் எல்லாரும் சவடால் விடுவது சரியான நகைச்சுவையே!

காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது - ஆட்சியிலும் பங்கு கொண்டுள்ளது - அதனால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் செயல்பாடு குற்றமுடையது என்றுகூட இவர்கள் சொல்வதுண்டு.
(காங்கிரசோடு மோத வேண்டிய பிரச்சினையில் மோதாமலும் இல்லை).
பி.ஜே.பி.யோடு ம.தி.மு.க. கூட்டணி வைத்ததுண்டு. பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது பி.ஜே.பி. ஆட்சியில்தான். அந்தப் பொடா சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது சாட்சாத் இதே வைகோதான்!

அதே பொடா சட்டத்தின்கீழ்தான் வைகோவும், அவரின் அருமைத் தோழர்களும் வைகோ அடிக்கடி குறிப்பிடுவாரே புரட்சித்தலைவி என்று - அந்த அம்மையார் ஆட்சியில்தான் வேலூர், மதுரை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கூட்டணி தர்மத்துக்காக பொடாவை ஆதரித்தவரை அந்தப் பொடாவே பதம் பார்த்துவிட்டது என்பதுதான் வேடிக்கை!

கூட்டணி தர்மத்துக்காகக் கொள்கையைக் கைகழுவ எப்பொழுதும் தயார் ஆனவர்தான் நம் அன்புக்குரிய வைகோ அவர்கள்.

பிகாரில் ராப்ரிதேவி தலைமையிலான அரசைக் கலைக்க 356 விதியை வாஜ்பேயியின் பி.ஜே.பி. ஆட்சி பயன்படுத்தியபோது அதற்கு ஆதரவாக வாக்களித்தவர் வைகோ.

"கம்யூனிஸ்டுகள் கேட்கக்கூடும். பிகார் பிரச்சினையில் என்னவென்று? வாஜ்பேயி சர்க்கார் தோற்கடிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் ஒத்துக்கொண்டேன்"

                                                   ----------------------------------(சங்கொலி, 23.7.1999)

என்று வைகோ அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லையா?
இப்படிப்பட்டவர்தான் காங்கிரசுடன் தி.மு.க. இருக்கும் கூட்டணிபற்றி கூக்குரலிடுவது!

வாடகை ஒலிப்பெருக்கியா?

கூட்டணி தர்மத்துக்காக வாடகை ஒலிப் பெருக்கியான கதை மிகவும் சுவாரஸ்யமானது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன் றத்தில் ஒன்பதாவது நாள் விவாதம் நடைபெற்றுக் கொண் டிருந்தது. அப்போது நான் டில்லியில் வீட்டிலிருந்தேன். காலை 9 மணிக்கு பிரதமர் வாஜ்பேயியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. 10 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று பிரதமர் அழைத்தார்.

எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு அரசின் சார்பில் அருண்ஜெட்லி பதி லளிப்பார். அதற்கடுத்து நீங்கள் பதிலளித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிரிகளின் வியூகத்தை எளிதில் உடைக்கக் கூடியவன் இந்த வைகோ என்ற நம்பிக்கையில் என்னிடம் அந்தப் பொறுப்பு ஒப் படைக்கப்பட்டது என்று பெருமைப் பொங்கப் பேசினாரே!

இதன் பொருள் என்ன?

கொள்கையாவது புடலங்காயாவது - பெரிய பதவியில் உள்ள பிரதமர் அழைத்தார் என்றவுடன் வாடகை ஒலிப் பெருக்கியாகி விட்டாரா - இல்லையா?

இப்படிப் பேசிய திரு. வைகோ அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது என்னவெல்லாம் பேசினார்?

இதோ:

பாபர் மசூதியை இடித்து, தகர்த்து தரை மட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச்சார் பின்மைமீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்கு தலாகும். பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங் பரிவார் எனும் மத வெறிக் கூடாரத் தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளி கள் என்று எல்.கே. அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியையும் குற் றம் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப் பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக் களின் ஓசையை நினைவூட்டியது.

                                                         ------------------------------------(தினகரன், 25.12.1992)

எல்.கே. அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியை யும் குற்றம் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம் காந்தியடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக்களின் ஓசையை நினைவூட்டியது என்று குற்றப் பத்திரிகை படித்த அதே வைகோ, இந்தப் பிரச்சினைக் காக பதவி விலகக் கூடாது என்று வக்காலத்துப் போட்டும் பேசும் வக்கீலாக மாறிய கொடுமையை என்னவென்று சொல்லுவது!

பெரியார், அண்ணாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு இன்னொரு பக்கத்தில் ராமன் பஜனையா?

எதிலும் நிலையான கொள்கை இல்லை. எல்லாம் சந்தர்ப்பவாதந்தானே - ஈழத் தமிழர் பிரச்சினையில்கூட  -விடுதலைப்புலிகள் பிரச்சினையில்கூட அடித்திருக்கிற பல்டிகள் கொஞ்சமா நஞ்சமா?

வைகோ அவர்கள் பெருமதிப்பு வைத்துள்ள செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ கட்சி ஏடான நமது எம்.ஜி.ஆரில் (24.5.1999) வெளிவந்த பெட்டிச் செய்தி இதோ:

பொய் கட்சி வை.கோ., தற்போது யார் பக்கம்?

மனிதன் எத்தனை நிறம் மாறுகிறான் பார்த்தீர்களா? எத்தனை வர்ணம் பூசிக் கொள்கிறான் பார்த்தீர்களா? எப்படியெல்லாம் மனிதர்கள் தடு மாறுகிறார்கள் பார்த்தீர்களா? எதற்காக? பதவிக்காக மாத்திரமல்ல, பதவி வருமோ, வாராதோ - இடையிலே வருகிற பணத்திற்காகவும்கூட பல பேர் இன்றைக்குப் பச்சோந்திகளாக மாறுகிற காட்சியை தமிழ்நாட்டிலே பார்க்கிறோம்.

                                     ----------------------------மு. கருணாநிதி, முரசொலி, 10.2.1998)

கருணாநிதி அன்று யாரைக் குறிப்பிட்டாரோ, அவரே இன்று கோபாலபுரத்தின் படியேறிவிட்டார். இதில் யார் பச்சோந்தி என்று கருணாநிதி விளக்குவாரா?

பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்னொருவரைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. பொய் சாட்சி என்று. அப்படிக்கூட அல்ல பல்டி அடிக்கின்ற சாட்சி அது என்றே கூறப்பட்டிருக்கின்றது. பிரபாகரனை தன்னுடைய தலைவர் என்று பேசினார். அது வீடியோ படம் எடுக்கப்பட்டது. அப்படிப் பேசினீர்களா? என்று கேட்டபோது, பேசவில்லை என்று சொன்னார். உடனே வீடியோ படத்தை எடுத்துக் காட்டியபோது, உருவம் நான்தான். ஆனால் பேச்சு என்னு டையது அல்ல. வேறு ஏதோ குரல் என்று சொன்னார்.

உடனே நீதிமன்றம் அந்தக் குரல் யாருடையது என்பதுபற்றி ஆராய்ச்சி செய்து பார்த்தது. அந்த ஆராய்ச்சியில், அது அவருடைய குரல் என்று மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே, அவருடைய சாட்சி பொய் சாட்சி. பல்டி அடிக்கிற சாட்சி என்று சொன்னார்கள். யார் என்று கேட்கிறீர்களா? போர்வாள்! நான் வளர்த்தேனே அந்தப் போர்வாள்! (பலத்த சிரிப்பு). அந்தக் கொலைக்காக பொய்ச் சாட்சி சொல்லியிருக் கிறார். அன்றைக்கு அப்படி பொய் சொன்னவர் எங்கள் பக்கமா இருக்கிறார், இல்லை.
                                     -------------------------(மு.கருணாநிதி, முரசொலி, 11.2.1998)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும், வைகோ வைப்பற்றி கருணாநிதி பேசியது. தற்போது வைகோ, யார் பக்கம் இருக்கிறார் என்பதை கருணாநிதி விளக்குவாரா?

                               --------------------------(நமது எம்.ஜி.ஆர்., 25.5.1999)

கலைஞர் அவர்களும், ஜெயலலிதாவும் குற்றம் சொன்னாலும் சரி, சொல்லப்பட்டுள்ள தகவல்களோ, விடுதலைப்புலிகள் பிரச்சினையில்கூட, தம்பி பிரபாகரன் பிரச்சினையில்கூட வைகோ உண்மையாக இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே!

நான் ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்; விடுதலைப்புலிகளை அல்ல என்று சட்டத்திலிருந்து தப்பிக்க வாக்குமூலம் கொடுத்ததும் நினைவுப்படுத்தத்தக்கதே! (ஆதாரம்: தினமணி, 14.10.1993)

இதோ ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட பல வண்ணத் துண்டறிக்கைகளில் இருந்து சில பகுதிகள்:

வைகோ - கழக முன்னணியினர் சிறையில் அடைப்பு -
செய்த குற்றம் என்ன?
நாட்டோரே, நல்லோரே தீர்ப்புக் கூறுங்கள்!

தமிழ்ப் பெருமக்களே வணக்கம்!

ஜூலைத் திங்கள் 11 ஆம் நாள் (2002) சென்னை விமான நிலையத்தில் வைகோ அவர்களும், ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஈரோடு அ.கணேசமூர்த்தி, சிவகங்கை செ.செவந்தியப்பன், மதுரை புறநகர் வீர.இளவரசன், மதுரை மாநகர் மு.பூமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்கறிஞர் அழகுசுந்தரம், திருமங்கலம் நாகராஜன், மதுரை கணேசன் ஆகியோரும் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர், மதுரை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொடா சட்டம் ஏன்?

இந்தியாவில் வெளிநாட்டின் தீவிரவாத இயக்கங் களின் சதி வேலைகளைத் தடுத்து நிறுத்தி அடியோடு ஒழிப்பதற்காகத்தான் பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.

இவர்கள் செய்த குற்றம் என்ன?

ஜூன் திங்கள் 29 ஆம் நாள் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பிரச்சினைகளைக் கூறி வருகிறபோது, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதையே மக்கள் மன்றத்திலும் வைகோ பேசினார். மற்ற எட்டு கழக முன்னணியினரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியது குற்றமா?

கடந்த அரை நூற்றாண்டு காலமாக கண்ணீரில் பரிதவித்து வரும் ஈழத் தமிழர்களின் துன்பம் நீங்கிட, அவர்களின் வாழ்வில் விடியல் பிறந்திட, அறிஞர் அண்ணா அவர்கள் ஊட்டி வளர்த்த சகோதர பாச உணர்வினைக் கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவது நாடறிந்த உண்மையாகும். இது எப்படி குற்றமாகும்?
அண்ணாவின் அறவழிதான் மறுமலர்ச்சி தி.மு.க. வின் வழி
இப்போக்கைக் கண்டித்து ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள், நாட்டின் நலம் நாடுவோர் தமது கண் டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். நாளேடுகள், வார இதழ்கள் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடும் கண்டனங்களை வெளியிட்டிருக் கின்றன.

வைகோ மற்றும் கழக முன்னணியினரைக் கைது செய்ததைக் கண்டித்து அறப்போர் மறியல் செய்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் சிறை சென்றனர். இப்போராட்டத்தை சிறிதும் வன்முறையின்றி அறவழியில் மக்கள் பாராட்டும் வண்ணம் கழகத்தினர் நடத்தியுள் ளனர். மறுமலர்ச்சி தி.மு.க. தொடங்கி கடந்த 9 ஆண்டு களில் வன்முறையைத் தூண்டுதல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தல், அரசு சொத்துகளுக்குச் சேதம் விளை வித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து அறிஞர் அண்ணா வழியில் இயங்கி வரும் இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.
தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த போது பேருந்துகள் கொளுத்தப்பட்டன; கடைகள் சூறையாடப்பட்டன; மூன்று கல்லூரி மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்; பொதுமக்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது; ஆளுங்கட்சியின் இத்தகைய அராஜகச் செயல்களைத் தமிழக மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

நாட்டை நல்வழிப்படுத்திட அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை; இலட்சியத்தில் உறுதி கொண்டு உழைத்துவரும் வைகோ அவர்களையும், தோழர்களையும்  ஜெயலலிதாவின் மக்கள் விரோத பாசிச அரசு கைது செய்தது நியாயமா?

பிற தேசிய இனங்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் குரல் எழுப்புகிறபோது சொந்த தேசிய இனத்தானின் துன்பங்கண்டு ஆதரவுக் குரல் எழுப்பக்கூடாதா?

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் எங்களால் இருக்க முடியவில்லை.

இது தீவிரவாத சதியா?
நாட்டின் இறையாண்மைக்குப் பங்கமா?
நாட்டோரே! நல்லோரே! சிந்தியுங்கள்.

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!!

-------------------------------------------------- தலைமைக் கழகம், மறுமலர்ச்சி தி.மு.க.

இந்தத் துண்டறிக்கைக்கு விளக்கம் தேவையா? அன்று வெளியிட்ட அந்தத் துண்டறிக்கை உண்மைதான் என்றால், இன்று வைகோ எடுத்துள்ள நிலைப்பாடு பொய்யாய், புனை சுருட்டாய் சுருண்டுவிடும்.

இப்பொழுது எடுத்த நிலைப்பாடுதான் நிதர்சனம் என்று சாதிக்க முன்வருவாரேயானால், அன்று ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை தூக்கு மாட்டித்தான் தொங்கவேண்டும்.

விடுதலைப்புலிகளின் தலைமைக்குத் தவறாக வழிகாட்டியவர் இந்த வைகோ என்ற குற்றச்சாற்று ஒரு காலகட்டத்தில் வெடித்துக் கிளம்பியது.
ஏதோ கே.பி. சொன்னார் என்பதோடு அது நிற்க வில்லை. நார்வே அரசே அந்தக் குற்றச்சாற்றை வைத்ததுண்டு.

போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தொடர்புகொண்டு ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த அறிக்கையை ஏற்று, ஆயுதங்களைக் கீழே போடுமாறு ஆலோசனை வழங்கினார். அதைத் தெரிந்துகொண்ட வைகோ புலிகளிடம் இது காங்கிரஸ் சதி இதற்கு உடன்பட வேண்டாம். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும். அவர்கள் புலிகளுக்கு உதவி செய்வார்கள் என்று சொன்னார் என்று நார்வே அரசின் அறிக்கை கூறியது.

திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில் வைகோவும், அதற்குப் பொருத்தமாகவே பேசவும் செய்தார்.

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனியீழம் அமைத்துக் கொடுப்போம்.

                         --------------------------------------------------(தினமணி, 1.5.2009)

என்று திருப்பத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலின் போது பேசியவர்தான் வைகோ.

இவற்றையெல்லாம் வெளிப்படுத்தவேண்டும் என்பது நமது விருப்பமல்ல. அவர் ஒருவர்தான் கொள்கைவாதி - இலட்சிய வேங்கை - ஈழத்துக்காக இன்னுயிர் தரச் சித்தமானவர்; மற்றவர்கள் எல்லாம் போலிகள் என்ற இறுமாப்போடு பேசுவதற்கு ஒரு பாடம் தேவைப்படுவ தால்தான் இந்தக் கட்டுரை.

இவ்வளவும் நடந்ததற்குப் பிறகு, விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதற்கு நானே காரணம் என்று செல்வி ஜெயலலிதா தம்பட்டம் அடித்த பிறகு, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்காக வைகோ வையும், அந்த மேடையில் இருந்தார்கள் என்பதற்காக ம.தி.மு.க. பொறுப்பாளர்களையும் பொடாவின்கீழ் சிறைக் கொட்டடியில் தள்ளியதற்குப் பிறகு - பிணையில் வெளிவந்த பிறகும் அவர்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்ட பிறகு, திரு. பழ.நெடுமாறன் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியைத் தடை செய்த பிறகு, ம.தி.மு.க.வையும் தடை செய்யவிருப்பதாக சொன்னதற்குப் பிறகு, ஈழத்தில் யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று கூறுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்காக என்று கறாராக அம்மையார் சொன்ன பிறகு, ஜெயலலிதாவை - ஈழத் தமிழர்களின் பாதுகாவலர் என்று ஒருவர் நினைக்கிறார் - நம்புகிறார் என்றால், இதன் உள்ளீடு என்ன? ஏதோ சுயநலம் அப்படித்தானே! இல்லை இலட்சியப் பிடிப்பின்மை என்று கருதலாமா?

ஈழத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததும், அதனை வைகோ அவர்கள் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்ததும் யாரை ஏமாற்ற? அத்தோடு விட்டாரா? அப்போது என்ன பேசினார்?

"உலகத்தின் பல்வேறு நாடுகளை வேதனைத் தீயில் பொங்கி தவிக்கிற கோடிக்கணக்கான தமிழர்கள் தங்கள் கவனத்தை புரட்சித்தலைவியின் பக்கம் இன்றைக்குத் திருப்பி இருக்கின்றனர். ஈழத்தின் நம்பிக்கை வெளிச்சமாக தனது நிலையை புரட்சித்தலைவி உண்ணாவிரதம் அறப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
                            --------------------------------------------( டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 10.3.2009)

இப்படி எல்லாம் ஒருவரால் எப்படிப் பேச முடிகிறது?

உண்மைக்கு ஒரு துளி விஷம் கொடுத்து, மனச்சான்றுக்கும் மரண வோலை எழுதி வைத்துவிட்டு, கொள்கைக்கும்  ஆழ குழிவெட்டி வைத்துப் புதைத்து விட்ட பிறகுதானே இப்படியெல்லாம் பேச முடியும் - எழுதவும் முடியும்? இவர்தான் மற்றவர்களைப் பார்த்து நாடகமாடு கிறார்கள் என்று நாகோணாமல் விமர்சனம் செய்கிறார்.

சரி, இந்த அளவோடு முடிந்ததா இந்த நாடகம்? இன்னும் டர்னிங் சீன்கள் எல்லாம் உண்டே - இரசிக்க வேண்டாமா?

அவருடைய (ஜெயலலிதாவினுடைய) போக்கிலும், அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகு முறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும் எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப்போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க.வுக்கு இல்லை.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத் தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டத்தில் (19.3.2011) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - சங்கொலி, 1.4.2011).

2009 மார்ச்சில் ஈழத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜெயலலிதா 2011 மார்ச்சில் வேறு விதமாகத் தெரிவது எப்படி?

சட்டமன்றத் தேர்தலில் எத்தனை இடம் என்ற பேரத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் இப்படி ஒரு விமர்சனம். சுயமரியாதை - தன்மானம் என்ற தடபுடல்! அங்கே பெரியார் வந்து விடுகிறார் - அண்ணாவும்வந்து குதித்து விடுகிறார். எல்லாம் சூ மந்திரக்காளி வித்தை தான். சினிமாவில் விட்டாலாச்சாரியா செய்யும் வினோதக் காட்சிகள்தான்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. 22 இடங்களைத் தந்தது; அதனை ஏற்காமல் 35 இடங்கள் தந்த அ.தி.மு.க. கூட்டணிக்குத் தாவினார். (இதில் என்ன கொள்கை இருக்கிறதோ!) 2011 தேர்தலிலோ அதே ஜெயலலிதா வெறும் ஏழு இடங்கள் அளிப்பதாகக் கூறி அவமானப்படுத்தினார். இந்தச் சீட்டு எண்ணிக்கை அரசியலில் சிக்கி கூடுவிட்டுக் கூடு பாயும் வைகோ அவர்கள் சில சமயங்களில் கொள்கை ஆவேசப் புயலாகச் சுழன்று வீசுவதுதான் வேடிக்கையின் உச்சம்!

இப்பொழுது மறுபடியும் ஜெயலலிதாவுடன் நெருக்கம் - கடந்த வார ஆனந்தவிகடனே சாட்சி (6.3.2013):

நடைபயணம் சென்றார் வைகோ. எதிரில் வந்த முதலமைச்சர் காரிலிருந்து இறங்கிக் குசலம் விசாரித்தார். ஆகா, எப்படி மாறிவிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா என்று வைகோ பாராட்டு! வெறும் சந்திப்பிலேயே சரணாகதியா?
நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி நாடகம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்கவேண்டும்.

இன்றைய மார்க்கெட் நிலவரம் என்று சொல்வார்களே - அதுதான் நமது வைகோவைப் பொருத்தவரை -

2011-க்கும் 2013-க்கும் இடையே என்ன அப்படி நடந்துவிட்டது?

2011 வைகோ என்ன சொல்கிறார்?

அதையும் கேளுங்கள்! கேளுங்கள்!!

அ.தி.மு.க. தலைமையின் உள்மனதுக்குள் ஓர் ரகசியமான அஜெண்டா இருந்தது. நானோ அல்லது என்னைச் சார்ந்தவர்களோ - தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிடக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். இப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது நல்லதாப் போச்சு என்றுதான் நினைக்கிறேன். முதல்வரின் செயல்பாடுகள் அப்படித்தானே இருக்கின்றன?

எனக்கு வாக்களித்தால் தனியீழம் வாங்கித் தருவேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழங்கியவர் இன்றைய முதலமைச்சர் - ராஜபக் சேவின் போர்க் குற்றங்கள் குறித்து அறிக்கையும் விட்டார். ஆனால், இன்று அதுபற்றிப் பேசுவதே இல்லை. போர்க் குற்றத்துக்குத் துணை போன காங்கிரஸ் அரசாங்கத்தையும் கண்டிப்பது இல்லை. இது வெளிநாட்டுப் பிரச்சினை என்று கருணாநிதி எதைச் சொல்லித் தப்பிப்பாரோ - அதையே இப்போது இவரும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.

மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு மன நிறைவைத் தர ஜெயலலிதா முயற்சிக்கவில்லை என்பதே இப்போதைய நிலவரம்.

-------------------------------*(வைகோவின் ஆனந்தவிகடன் பேட்டி, 15.6.2011)

இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த பேட்டிதான்.

முன்னுக்குப் பின் முரணாக, இதற்குமேல் அந்தர்பல்டி அடிக்க முடியாது என்கிற அளவுக்குச் சந்தர்ப்பவாத சங்கீதப் புலிகள் புள்ளிகளை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். அதனைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்களேயானால் அது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏற்பாடே!

இன்றைக்குக் கலைஞரைப்பற்றி நாக்கில் நரம்பின்றித் திட்டும் விமர்சிக்கும் புரட்சிப் புயல் பொடா சிறையிலி ருந்து வெளியே வருவதற்கு யார் காரணம்? அதையும் வைகோ வாயால் கேட்டால்தானே சூடும் - உறைப்பும்!

கேள்வி: எண்பது வயதிலும் இரண்டு முறை உங்களை வேலூர் சிறைக்கு கலைஞர் நேரில் வந்து பார்த்தாரே!

வைகோ பதில்: என் வாழ்நாளில் நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் நான் வார்க்கப்பட்டேன்; வளர்க்கப்பட்டேன். காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்து பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துபோனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால், இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது.

                            -------------------------------(ஆனந்தவிகடன், 28.9.1993, பக்கம் 140)

ஆனந்தவிகடனின் பேட்டி என்பதாலோ என்னவோ வைகோவைப் பொருத்தவரை எல்லாம் விகடக் கச்சேரியாகவே இருக்கிறது.

வைகோ அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினர் எட்டுப் பேரையும் பொடா சட்டத்தில் சிறையில் அடைத்த தமிழக அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை அநீதியானது என்று எங்களின் ஆழ்ந்த வேதனையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம் என்ற அச்சிட்ட படிவத்தில் ம.தி.மு.க.வால் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில் முதல் கையொப்பம் யாரிடம் பெறப்பட்டது? இன்றைக்கு வைகோவால் வசைப் பாடப்படும் கலைஞர்தானே முதல் கையொப்பம் போட்டவர்.

பொடாவில் அடைத்தவர், கட்சியைத் தடை செய்ய நினைத்தவர் நல்லவராகப் போய்விட்டார். பொடாவி லிருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்று துடித்தவர் பொல்லாதவராகப் போய்விட்டார்.

முன்னவர் பிராமணாள், பின்னவர் சூத்திராள் ஆயிற்றே! அந்த அடிமைப்புத்தி அவ்வளவு சுலபத்தில் போய்விடுமா என்ன?
ம.தி.மு.க. தடை செய்யப்படுமா?

கேள்வி: ம.தி.மு.க.வைத் தடை செய்யும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா?

முதல்வர் ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறான கேள்வி. திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா என்றால், யாரையும் தடை செய்யவேண்டுமென்று நாங்கள் திட்டமிடவில்லை. திட்டமிடவேண்டிய அவசியமும் இல்லை. ம.தி.மு.க. தடை செய்யப்பட வேண் டிய ஒரு இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம்.
அண்மையில் ம.தி.மு.க. நடத்திய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் அவர்கள் நிறைவேற்றிய முக்கியமான தீர்மானத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால், ம.தி.மு.க. செயல்படுவதன் நோக்கமே, மேலும் மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க. பங்குபெறுவதன் நோக்கமே ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதற்கு மேலும் தங்களுக்கு வலிமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்ற பொருள்பட தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

மேலும் தொடர்ந்து விடுதலைப்புலிகளை - எல்.டி.டி.ஈ.யை ஆதரிக்கப் போவதாக அவர்கள் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார்கள். ஆக, இந்திய நாட்டிற்காக எதுவும் செய்யும் திட்டம் ம.தி.மு.க.விடம் இல்லை. இந்தியாவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்காக எதுவும் செய்யும் திட்டம் ம.தி.மு.க.விடம் இல்லை. இந்தியா விற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்காக எதையும் செய்யும் எண்ணம் அவர்களுக்கு இல்லை.

தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுக்க வில்லை. அவர்கள் இந்தியாவில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்தாலும், இந்தியாவிற்காகவோ, தமிழ் நாட்டிற்காகவோ எதுவும் செய்ய விரும்பவில்லை. ஈழத் தமிழர்களுக்காகத்தான் செயல்படுவோம் என்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து என்ன வந்தாலும் சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறுகிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். Unlawful Prevention Activities-ன் கீழ் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது பொடா சட்டத்தின்கீழும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இத்தகைய ஒரு பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று ஒரு இயக்கம் கூறுகிறது என்று சொன்னால், அது நிச்சயமாக அபாயகரமான விஷயம். நாட்டுக்கு நல்லதல்ல. அது தடை செய்யப்படவேண்டிய ஒரு இயக்கம் என்று இந்த அரசு கருதுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்குவோம்.

கேள்வி: தங்களை இலங்கைப் பிரதமர் சந்தித்தபோது அமைதிப் பேச்சுவார்த்தையில் உங்கள் ஒத்துழைப்பை நாடினாரா?

முதல்வர் ஜெயலலிதா: இலங்கையில் மேற் கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எனது ஒத்துழைப்பை அவர் கோரவில்லை. இலங்கைப் பிரதமர் ஒரு அரசு விருந்தினராக இங்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். என்னைச் சந்தித்தார். அவர் இலங்கையில் எடுத்துவரும் நட வடிக்கைகளை என்னிடம் விளக்கிக் கூற விரும்பி னார். அதை என்னிடம் எடுத்துக் கூறினார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே எனக்கு நல்ல நண்பர் என்ற முறையிலும், விடுதலைப்புலிகளின் நம்பிக்கை துரோகம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றும், அது நம்பத்தகுந்த இயக்கமல்ல என்றும், அதனால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தினேன்.

                                   -------------------------(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 13.7.2002, பக்கம் 8)

இப்படிப்பட்ட ஜெயலலிதாதான் ஈழத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம்! நம்பத்தான் வேண்டும் - சொல்பவர் புரட்சிப்புயல் ஆயிற்றே!

  --------------------------------கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் - அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” 8-3-2013

51 comments:

தமிழ் ஓவியா said...


மகளிர் தின வாழ்த்து



கடந்த மகளிர் ஆண்டு பெண்களுக்கு - இந்தியாவைப் பொறுத்தவரை வேதனை - சோதனைகள் நிறைந்த ஆண்டாகும்.

அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, களையப்பட்டு, பெண்களின் சுயமரியாதையும், சம உரிமையும் காப்பாற்றப்படுவதற்கான எல்லா முயற்சிகளும் ஆக்க ரீதியான செயல்பாடுகளும் முகிழ்த்துக் கிளம்ப வேண்டும்.

இந்தியாவில் சட்டமன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடங்களுக்கான சட்டம் எக்காரணம் கொண்டும் இனியும் அலமாரியில் தூங்கிட அனுமதிக்கப்படக் கூடாது.ஆண்கள் இதற்குத் தோள் கொடுப்பார்கள் என்று நம்பி தாய்க்குலம் இனியும் ஏமாற வேண்டாம்!

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆழ்ந்த பட்டறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையை நெஞ்சில் ஏந்தி வீதிக்கு வந்து போராட வேண்டும் பெண்கள்!

திராவிடர் கழகம் இதற்கு எல்லா வகைகளிலும் தோன்றாத் துணையாக இருக்கும். இதுவே திராவிடர் கழகத்தின் உலக மகளிர் நாள் செய்தி.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



புதுடில்லி
8.3.2013

தமிழ் ஓவியா said...

டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் : அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுக் கருத்துரை!


இந்திய அரசின் கடமை வலியுறுத்தப்பட்டது

டில்லியில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைவர்கள் (7.3.2013)

புதுடில்லி, மார்ச் 8- புதுடில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் நேற்று (7.3.2013) மாலை சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கட்சிகளும் பங்கேற்று, இந்தியாவின் கடமை வலியுறுத்தப் பட்டது.

மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதுவரகத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம் மிக வெற்றிகரமாக - பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கொடுங்கோலன் இராஜபக்சேவைப் போர்க் குற்ற வாளியாக அறிவிக்க டெசோ அமைப்பு வற்புறுத் தியது.

பொது வேலை நிறுத்தம்

அன்று மாலையே டெசோவின் தலைவர், கலைஞர் அவர்களது சீரிய தலைமையில் கூடி, இந்திய அரசு அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தின் சார்பில் ஜெனிவாவில் இலங்கை அரசைக் கண்டித்து மனித உரிமை மீறல்களுக்காக - அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை மேலும் தர வேண்டும்; அதன் மூலம் தமிழர்களது உணர்வு களைக் காட்ட 12.3.2013 அன்று முழு அடைப்பு பொது வேலை நிறுத்தம் - ஆகியவைகளை நடத் துவது என்று தீர்மானித்தது.

உடனடியாக ஏற்கெனவே முடிவு செய்தபடி டில்லித் தலைநகரில் டெசோவின் சார்பில் ஒரு கருத்தரங்கம் - கலந்துரையாடல் நிகழ்வு - மிகவும் சிறப்புடன் புதுடில்லி கான்ஸ்டிடியூவின் கிளப்பில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் 7.3.2013 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

சென்னையிலிருந்து முதல் நாளே 6ஆம் தேதியே புதுடில்லி வந்தடைந்த டெசோ அமைப் பினர்கள், தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருமதி சுப்பு லட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப. வீரபாண் டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), டெசோ ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு முதலிய பலரும் கலந்து ஆலோசித்து அடுத்த நாள் கருத்தரங்க நிகழ்வுகளை ஆய்வு செய்து இறுதி வடிவம் தந்து ஆயத்தப்படுத்தினார்கள்.

பல தரப்பினரும் பங்கேற்பு

டெசோ கருத்தரங்கம் - ஆய்வரங்கம் டெசோ உறுப்பினர்களோடு, திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கவிஞர் கனிமொழி, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியவர்களும் தி.மு.க. முதன்மைச் செயலாளர், துரை. முருகன், முன்னாள் அமைச்சர்கள் ஆ. இராசா, தயாநிதிமாறன், செஞ்சி இராமச்சந்திரன், புதுக்கோட்டை ரகுபதி, இணையமைச்சர்கள் பழனி மாணிக்கம், நாமக்கல் காந்திசெல்வன், டாக்டர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற இரு அவையின் திமு.க. உறுப்பினர்கள் ஏ.கே.எஸ். விஜயன், செல்வ கணபதி, ஆதிசங்கர், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஜின்னா, எலன் டேவிட்சன், வேலூர் ரகுமான் (முஸ்லீம் லீக்) தாமரைசெல்வன், தங்கவேல், வழக்கறிஞர்கள் இராதாகிருஷ்ணன், சட்டக்கதிர் சம்பத், த. வீரசேகரன், முன்னாள் நீதிபதி பரஞ்சோதி, தொ.மு.ச. துணைத் தலைவர், சண்முகம் மற்றும் பலரும் 7.3.2013 மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

ஏராளமான தொலைக்காட்சிகள், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர் கள் வருகை தந்திருந்தனர். பல்வேறு தேசியக் கட்சிகளுக்கு டெசோ அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் அதன் பிரதிநிதியாக தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் ஆன அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர் கள் கலந்து கொண்டார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ஞானதேசிகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ராம்விலாஸ் பஸ்வான் அவர் களின் லோக்தளக் கட்சி செயலாளர், சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் சார்பில் மாநிலங்கள் அவை உறுப் பினர் சுப்ரீயா சூலு, டாக்டர் ஷாபீர், தேசிய மாநாட்டுக் கட்சியினர், மனித உரிமை அமைப்புப் போராளி சுவாமி அக்னிவேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

டில்லியில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைவர்கள் (7.3.2013)

வரவேற்புரை கவிஞர் கனிமொழி எம்.பி.,

தமிழ் ஓவியா said...


வரவேற்புரையை கவிஞர் கனி மொழி அவர்கள் நிகழ்த்தினார். கருத்தரங்கத்தின் அறிமுக உரையை திரு. டி.ஆர். பாலு, வழங்கிய பின்னர் கருத்தரங்கில் முக்கிய உரை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்தி, டெசோவின் நிலைப்பாடு, மனித உரிமை ஆணையத்தின் மூலம் போர்க் குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டிய அழுத்தம்பற்றி தெரி வித்தார்.

தொடர்ந்து டெசோ உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இலங்கையில் உயிர்நீத்த உயிர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க கருத்தரங்கத்தில் அனை வரும் எழுந்து நின்று வீரவணக்கம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் சூடி குசைந ஷ்டிநே என்ற ஆங்கில குறும்படம், (இலங்கையில் நடைபெற்ற வன்முறைகளை விளக்கி உருவாக்கப்பட்டதை) காண்பிக்கப் பட்டது.

நிகழ்ச்சியின் தொடர் நிகழ்வாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டையும், இலங்கைப் பிரச்சினை தொடர்பான ஆழ்ந்த மனக் கவலையையும் தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பை நல்குவதோடு, இந்திய அரசின் கடமையை எவ்வாறு ஆற்ற வேண் டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர். உலக பொது மன்னிப்புச் சபை இயக்குநர் திரு. அனந்த பத்ம நாபன் தங்களது அமைப்பின் சார் பாக உரையாற்றினார்.

பின்னர் டெசோ அமைப்பு சென் னையில் உருவாக்கப்பட்ட தீர்மானங் களை, அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் இந்திய அரசுக்கு வேண்டு கோளைத் தெரிவித்த தீர்மானங்களை டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார். அதேபோல அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்திற்கான வேண்டுகோள் தீர்மானங்களை திருச்சி சிவா கருத்தரங்கத்தில் கலந்து கொண்டோருக்கு அறியும் வண்ணம் வாசித்தளித்தார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

இறுதியாக, கருத்தரங்க முடிவுரை யினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றினார்கள். அப்போது, அவர் டெசோ அமைப்பாளர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ் விற்கு வந்து கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், அனைவருக்கும் அமைப் பின் சார்பில் நன்றியினைத் தெரி வித்து, இன்று நல்வாய்ப்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் இலங்கைப் பிரச்சினை வெகு சிறப்பாக நடை பெற்றதையும், அமெரிக்க அரசு கொண்டு வரவுள்ள தீர்மான முக்கிய அம்சங்களை தாம் அறிந்த சமீபத்திய தகவலின்படி சேர்த்து விளக்கி சிறப்பாக தனது உரையை ஆற்றினார்.

தமிழர் தலைவரின் உரை ஆங்கி லத்தில் சிறிய புத்தக வடிவில் அனை வருக்கும் வழங்கப்பட்டது. இறுதி யாக கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பேரா சுப. வீரபாண்டியன் தனது உரையை ஆற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. தொடர்ந்து செய்தி மற்றும் ஊடகத்துறையினரின் வினாக்களுக்கு நிகழ்வில் தலைவர் டாக்டர் மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி, நிகழ் வாளர் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் பதிலளித் தனர். நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டு மிகச் சிறப்பாக இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது. - புதுடில்லியிலிருந்து நமது சிறப்புச் செய்தியாளர்

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்க்கு வாழ்வாதாரம்: இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு

புதுடில்லி, மார்ச் 8-இலங்கை பிரச்னையில் இந்தியா உறுதியான நிலையை எடுக்க வேண் டும் என்று மக்களவை யில் நடந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆவேசமாக பேசினர். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலை ஏற்காமல் திமுக, அதி முக, பா.ஜ. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையில் ராணு வத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த கடைசி கட்ட போரின் போது ஏராளமான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். மனித உரி மைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மக்க ளவையில் நேற்று கார சார விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் ஆவேச மாக கருத்து தெரிவித் தனர். விவாதத்தை தொடங்கி வைத்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு, பேசுகையில், இலங்கை பிரச்னையில் இந்திய அரசின் நிலை என்ன? பிரதமர் மன் மோகன் சிங் என்ன நினைக்கிறார்? என்று வெளிநாடுகளின் தூதர்கள் கேட்கின்றனர். இந்த விவகாரத்தில் இந் தியாவின் நிலை என்ன? என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் மீண் டும் தமிழ் ஈழ கோரிக்கை எழுப்பும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.

பா.ஜ. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேசு கையில், இலங்கையில் போர்க்குற்ற அநீதிகள் நடந்துள்ளன. 12வயது சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் படத்தை பார்க் கும் யாரும் துயரமடை வதை தவிர்க்க முடியாது என்றார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும்போது, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை உலகமே பார்க்கிறது. இந்த பிரச்னையில் இந்தியா உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். அதிமுக உறுப்பினர் தம்பித்துரை பேசுகை யில், இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுவது தவறு. உண் மையில் 3 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை யின் நட்புக் காக தமிழர்களின் நலனை இந்தியா விட்டுக் கொடுக்க கூடாது என்றார். இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலி யுறுத்தினார். மேலும் தமிழக எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரி, பி.ஆர். நடராஜன், லிங்கம், கணேச மூர்த்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் ஆகியோரும் விவாதத் தில் கலந்து கொண்டு பேசினார்.

விவாதத்துக்கு பதில் அளித்து வெளி யுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா சாத்தியமான சிறந்த முடிவை எடுக்கும். நிலைமை களை ஆராய்ந்து நிதானமாக முடிவு செய்வோம் என்றார்.

அமைச்சரின் பதில் திருப்தியளிக்க வில்லை என்று கூறி திமுக, அதிமுக, மதிமுக, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கட்சி களின் உறுப்பினர் கள் வெளிநடப்பு செய் தனர். உறுப்பினர்களின் ஆவேச பேச்சா லும் வெளிநடப்பாலும் அவையில் பரபரப்பு ஏற் பட்டது.

தமிழ் ஓவியா said...


துக்ளக் பேட்டி: வாசகர் பாராட்டு கொள்கை வேறு - மானுடம் வேறு


நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வீரமணியின் சமகாலத்திய மாணவன். அவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களும் உண்டு. அன்று அண்ணாமலை பல்கலைக் கழகம் பகுத்தறிவுப் பாசறை என பெயர் பெற்றது. பல திராவிடத் தலைவர்கள் உருவாகிய இடம் என்று பேசப்பட்ட காலம் அது.

திராவிட இயக்க விசுவாசிகளுக்கு நிகராக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், காங்கிரஸ் அபிமானி களான நாஞ்சில் மாணவர்கள், இருசாராரும் மோதிக் கொள்வது வழக்கம். நானும், வீரமணியும் கடலூரிலிருந்து ரயிலில் தினமும் பயணிப்பதுண்டு. எங்களுடன் பயணித்தவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். விபூதி சகிதம் எப்பொழுதும் சிவப் பழமாகக் காட்சியளிப்பார். வீரமணி அந்தப் பேராசிரியரிடம் மிக்க மரியாதையுடன், தனது கடவுள் மறுப்புக் கொள்கையை வெளிப்படுத்தாது உரையாடிய பண்பை நான் மறக்க முடியாது.

வீரமணி தன் வாழ்நாள் அனுபவங்களை விருப்பு வெறுப்பின்றி எழுதுகிறார். அது பெரிதும் போற்றுதற்குரியது. கொள்கை வேறு, மானுடம் வேறு என்ற எண்ணம் அவரிடம் அதிகம். அதைப் பிரதிபலிக்கும் வகையில் துக்ளக் பத்திரிகையில் அவரை எழுத வைத்து, வாசகர்களுக்கு அவரை அறிய வாய்ப்பளித்த சோவுக்குப் பாராட்டுக்கள்.

- சி.ஆர். நாராயணன், கடலூர்-2

நன்றி: துக்ளக் 13.3.2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் மனித உரிமை மீறல் : தேவை சர்வதேச விசாரணை! அய்.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை


ஜெனீவா, மார்ச்.8- இலங்கை மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்கா கண்டன தீர் மானம் கொண்டு வர இருக்கிற நிலையில், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமை யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அய்.நா. சபையின் மனித உரிமை கள் கவுன்சில் கூட்டத்தில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை, மனித உரிமைகள் கவுன் சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில், 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க, இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மத் திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவர இருக்கிற நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே இலங் கைக்கு எதிராக ஒரு அறிக்கையை தயாரித்து உள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. 38 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை, அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை கடந்த (பிப்ரவரி) மாதம் 11-ந் தேதி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கை நடத்திய போர் குற்றங் கள், தற்போது இலங்கை செயல் படுத்தி வரும் திட்டங்கள் உள்பட அதில் கூறப்பட்டு உள்ள சில முக்கியமான விவரங்கள் வருமாறு:- இலங்கையில் போர் நடந்த சமயத்தில் பெரியவர்களும், சிறுமிகளு மாக பல ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடி கண்டு பிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப் பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாக செயல்படுத்த வில்லை.

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில், அங்கு போர் முடி வுக்கு வந்த பின்னரும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஏன் திரும்பப் பெறப்பட வில்லை? அதிகாரிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பார் களா? அல்லது வெளியேறி விடு வார்களா? என்று அறிவிக்கப்பட வில்லை. மேலும் அவர்கள் அங்கு நிர் வாகத்திலும் பங்கெடுத்து வருகி றார்கள். சிறுபான்மை தமிழர்கள் நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ராணுவம் வாபஸ் பெறப்படாத துடன், மேலும் மேலும் ராணுவம் குவிக்கப்படுவதாலும், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஈடுபடுவதாலும், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது. பொது மக்களும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்துடன் உள்ளனர். உள்நாட்டு போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்பட வில்லை. இலங்கை அரசின் தேசிய செயல் திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை தமிழர்களின் பிரச் சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது. சிறுபான்மை தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிறைய சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழு மையாக விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களை குடிய மர்த்தும் பணியை முழுமையாக செயல்படுத்த வில்லை. இலங்கை அரசு நியமித்த குழு சமர்ப்பித்த (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு) பரிந்துரை களில் ஒரு சிலவற்றை மட்டுமே இலங்கை அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆகவே, சில பரிந்துரைகளை செயல்படுத்தும்படி இந்த கவுன்சில் இலங்கைக்கு வலியுறுத்துகிறது. 2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக் கையை வெளியிட வேண்டும். சிறு பான்மையினரான தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளையும், நிவா ரணப் பணிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சிறுபான் மையினரான தமிழர்களுக்கு அதிகா ரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். தமிழர்களின் பகுதியில் குவிக்கப் பட்டு உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப் பட்டுள்ள விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.

போருக்குப் பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசா ரணை தேவை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப் பட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல முக் கிய குற்றச்சாட்டுகள், பல முக்கிய பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து

சென்னை, மார்ச் 8 - உலக மகளிர் நாளையொட்டி (மார்ச்சு 8) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: மார்ச் திங்கள் 8ஆம் நாள்! உலக மகளிர் நாள்! மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப் படும் எழுச்சித் திருநாள்!

ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது நீதிக் கட்சி. அந்த நீதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர் சமுதாயம் முன் னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் காலங்களில் உருவாக்கிச் செயல் படுத்திய பல்வேறு திட்டங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாகக் காவல் துறையில் மகளிர் நியமனம்; 1975இல் விதவை மகளிர் மறுவாழ்வுத் திட்டம்; இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்; 8ஆம் வகுப்புவரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல்5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டம்; அத்திட்டத்தை மேம்படுத்தி 1996இல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி; 2001இல் அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்த இத்திட்டத்தை 2006இல் மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாய் என்றும்; 2008இல் 20 ஆயிரம் ரூபாய் என்றும், 2010இல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியமை; பெண்கள் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; அதனை 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மகளிர் பயன்பெற வழி வகுத்தமை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு

இவை தவிர, 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில், கல்வி நிறுவ னங்களில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு; பெண்களுக்குச் சம சொத்துரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு; 2006இல் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங் களைப் புதிதுபுதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்திய தால் பெண் கள் சமுதாயம் இன்று சமூக, அரசி யல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டு வருவதை எண்ணி எண்ணி இறும் பூதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவி லும், ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித் திட எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த் துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...

உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது.

- விடுதலை, 26.2.1968

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள்


இன்று உலக மகளிர் நாள். மக்கள் தொகையில் சரி பகுதியிலிருந்த பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் கூட பெரும் வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

உலக மகளிர் நாளில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விழுமிய கருத்து இது. இந்தியாவில் பெண் சிசுக் கொலை என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது; சட்டங்கள் நகமும், பல்லும் இல்லா தவைகளாகவே அவை உள்ளன.
இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமானால் ஆட்சி அதிகாரம். நிருவாகம், பிரதிநிதித்துவ சபைகள், நீதித்துறைகளில் பெண்களுக்கான இடங்கள் உரிய வகையில் அமைய உறுதிபடுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்கள் 10 விழுக்காடு என்ற சராசரி நிலையில்தான் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இது முசுலிம் நாடுகளைவிட குறைவானது.

பொதுவுடைமை - இடதுசாரி நாடுகளில்கூட ஆட்சி அதிகாரம், பொலிட்பீரோ என்று சொல்லப் படுகிற கட்சியின் உயர் மட்டக் குழுவில்கூட உரிய இடங்கள் அளிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி மிக முக்கியமானது.

இவைகளையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கம் செங்குத்தாக எழுந்து நிற்கிறது. ஆண்கள் தங்கள் தசைப் பலத்தின் மூலமும் (Muscle Power) பெண்களை ஒடுக்கி வருகின்றனர்.

கல்வி வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், உடல் பலத்திலும் பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.

பெண்களை ஆண்கள் போலவே வளர்க்க வேண்டும் - ஆண் பெண் உடையில் மாற்றம் கூடாது. பெயர் வைப்பதில்கூட யார் ஆண்? யார் பெண்? என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரன்றி வேறு யார் தெரிவித்துள்ளார்கள்?

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் - என்கிறார் சமுதாய விஞ்ஞானியாகிய தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியவை எவை? அதற்கு அருமையான பதில் அறிவுலக ஆசான் அய்யா அவர்களிடமிருந்து வந்துள்ளது.

கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து, ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டாக்கச் செய்ய வேண்டும். (குடிஅரசு 26.4.1931) என்று இன்றைக்கு 82 ஆண்டுகளுக்கு முன் சொன்னார் என்றால் அவர்தம் தொலைநோக்கை அறிஞர்கள்தான் சுவைக்க வேண்டும்.

இன்றைக்கும் பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படும் கேவலமான பண்பு மூக்கு முட்ட எழுந்து நிற்கிறது. பெண்களைச் சீண்டுதல் பொழுது போக்காகியுள்ளது.

இதற்கு ஒரே வழி - அடுத்தவர்களை நம்பிப் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதல்ல. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் குஸ்தி, குத்து பழக வேண்டும் என்று சொன்னார் என்றால், இந்தக் காலத்துக்கேற்ப கராத்தே போன்ற பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால் கொஞ்ச காலத்திற்காவது பெண்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் அளிக்கப்பட வேண்டும். நான்கு இடங்களில் காம வெறிக் காலிகள் சீண்டும் இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டால், பிரச்சினைக்குத் தீர்வு கை நுனியில் வந்து சேர்ந்து விடுமே.

தங்களுடைய பிரச்சினைகளை, உரிமைகளை எடுத்து வைக்கும் உரிமை பெண்களுக்குத் தேவை; சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு சட்டம் இன்னும் எத்தனை ஆண்டு காலம் நிலுவை எனும் ஊறுகாய்ப் பானையில் கிடக்கப் போகிறது? பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அடுத்தவர் பார்த்துக் கொடுப்பதல்ல உரிமைகள்! உரிமைகள் வெறும் பிச்சைக் காசல்ல; எந்த நியாயமான உரிமையும் இனாமாகக் கிடைத்து விடாது - அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.

மகளிர் உரிமை நாளில் இந்த உறுதி மொழியை மேற்கொள்ளட்டும் பெண்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. உரிமைகளும் அப்படித்தான்! 9-3-2013

தமிழ் ஓவியா said...


சேதுத் திட்டத்தைச் சீரழிக்க நினைப்பது நியாயமா? கலைஞர் கடிதம்


உடன்பிறப்பே,

சேது சமுத்திரத் திட்டத்தின் பெயரால் ராமர் பாலத்துக்குச் சேதம் விளைவிக்க மத்திய அரசு முயற்சித்தால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும் என்றும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. ஏற்காது என்றும், ராமர் பாலம் இல்லாமல் ராமாயணம் கிடையாது என்றும், இந்தியாவின் அடையாளமும் முழுமையாகாது என்றும்; அந்தக் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் 3-3-2013 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கூட்டத்தில், ராமர் பாலத்தை தேசிய முக்கியத் துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கத் தமிழக அரசு அளித்து வரும் ஒத்துழைப்பை பா.ஜ.க. பாராட்டுகிறது என்றும் தீர்மானம் கூறுகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தில் பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க.வின் நிலை குறித்தும், அவர்கள் இந்தத் திட்டம் பற்றிக் கடந்த காலத்தில் என்ன நிலைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்கள் என்பது பற்றியும் ஏற்கனவே நான் பல முறை விளக்கியிருந்த போதிலும்; பா.ஜ.க. தற்போது அதன் தேசியக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அது பற்றி மேலும் ஒரு முறை தெளிவாக்குவது அவசியமென்று கருதுகிறேன். 2004ஆம் ஆண்டு மே திங்களில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைந் தது. அந்தக் கூட்டணியில் தி.மு.க.வும் இடம் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது குறைந்தபட்சத் திட்டத்தில் சேர்க்க வேண்டு மென்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டது.

அதனையொட்டி, 27-5-2004 அன்று அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் சார்பில் வைக்கப் பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தில், ‘Long Pending Schemes in specific States that have national signifecance, like the Sethu Samuthiram Project....will be completed expeditiously’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. மேலும், அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு, மதுரையில் நடந்த சேது சமுத்திரத் திட்டத்தின் பிரம் மாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் அவர்களும், அய்க்கிய முற்போக்குக் கூட் டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டோம்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்...

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டு மொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்ற விருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்று வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்து ஆண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும்.

இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்'' என்று சொல்லி யிருந்தார்கள்.
இப்படி சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்ட ஜெயலலிதா தான், தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடப் படாத பாடு படுகிறார்.

தமிழ் ஓவியா said...

1955ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும்; தொழில் நுட்ப ரீதியாக இந்தத் திட்டம் சாத்தியமானதுதான் என்றே நிரூபித்திருக்கின்றன. இதில் எள்ளளவு ஐயமும் யாருக்கும் இருந்தது இல்லை.

புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், பா.ஜ.க. வைச் சேர்ந்த திரு. அருண் ஜேட்லி, 9-3-2001 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆய்வுப் பொறுப்பு, 2001 அக்டோபரில் நீரி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் `நீரி (NEERI) என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மய்யம் அதனை ஆய்வு செய்து, எந்தக் கேடும் வராத- குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற - சிறந்த தடம்; ஆறாம் வழித்தடமான, ஆதாம் பாலம் பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது.

இவ்வாறு கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம் மற்றும் விரிவான செயல்முறைகள் வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு, 6ஆவது எண் பாதை - அதாவது ஆதாம் பாலம் வழியிலான பாதை என முடிவு செய்யப்பட்டது.

இப்படி பா.ஜ.க. வினரே இந்தப் பாதைக்கு அன்றே ஒப்புதல் தந்து விட்டு, தற்போது ராமர் பாலம் என்று; எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்களை நான் கேட்க விரும்புவது, பா.ஜ.க.வின் மத்திய அரசு 2002ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு உரிய பின்னணி ஆய்வுகளையெல்லாம் பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்கிய போது, இது ராமர் பாலம் உள்ள இடம், இங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை? அவர்கள் ஆட்சியிலேயே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டி ருந்தால், அப்போது இது ராமர் பாலம் இல்லை என்று சொல்லியிருப்பார்களா?

சேது சமுத்திரத் திட்டத்திற்குச் சுற்றுச் சூழல் ஒப்புதல் பெறுவதற்காக, 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரை 6 கடலோர மாவட்டங்களில் பொது மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டன; இக்கூட்டங்கள் 3 சுற்றுகளாக 14 இடங்களில் நடைபெற்றன. இந்தக் கூட்டங்கள் எதிலும் ஒரு முறைகூட யார் ஒருவராலும் ராமர் பாலம் என்ற பெயர்கூட உச்சரிக்கப்பட வில்லை.

இறுதியாக 31.3.2005 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் தனது முறையான நடைமுறை களுக்கும், விரிவான ஆய்வுகளுக்கும் பிறகு, இத்திட்டத் திற்கான சுற்றுச் சூழல் ஒப்புதலை வழங்கியது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் ஆகியவற்றின் மூலம் இந்த ஆதாம் பாலம் கடல் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இருப்பதற்கான உருப்படியான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகி யிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தொல்பொருள் துறை ஆய்வுகள்

தொல்பொருள் துறை ஆய்வுகள் வெளிப் படுத்தும் விவரங் களின்படி, இப்பகுதியில் தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இல்லை என்பதும் தெளிவாகி இருக்கிறது.

உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத காரணத்தால்தான், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உட்பட அடுத்தடுத்து வந்த எந்த ஒரு அரசும் இத்திட்டப் பகுதியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் இல்லை; அதற்கான நடவடிக் கைகள் எதையும் மேற்கொள்ளவும் இல்லை. பி.ஜே.பி. கட்சியினர், இன்று ராமர் பாலம் என்று கூச்சல் கிளப்பி, இத்திட்டத்தைக் கிடப்பில் போட முயற்சி செய்கின்றனர். இதே பி.ஜே.பி., ஆட்சியில் இருந்த கப்பல் துறை அமைச்சர்கள் கையொப்பமிட்டுத்தான், நன்கு ஆராய்ந்த பின்னரே, மற்ற வழித் தடங்களைவிட இதுவே எளிதானது-சிக்கனமானது - விரைந்து செய்யக் கூடியது - என்று உறுதி செய்துள்ளனர். இதை பி.ஜே.பி.யினர் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. 9.3.2001 இல் அமைச்சர் அருண் ஜேட்லி; 25.10.2002இல் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர்; 29.10.2002 இல் அமைச்சர் வி.வி. கோயல்; அதற்கு முன் அமைச்சர் சத்ருகன் சின்கா ஆகியோர் ஆதாம் பாலம் வழியிலான 6ஆவது எண் வழித்தடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இராமர் பாலம் என்று கூறி அ.தி.மு.க. இன்று இத்திட்டத்தை எதிர்க்கிறது. ஆனால் 2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 83-84 இல் ஜெயலலிதா கூறியுள்ளது என்ன?

தமிழ் ஓவியா said...

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் - என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை யில் ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும், மணல் மேடுகள் என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று ராமர் பாலம் எனக் கூறுவது எப்படி? ஏன்?

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தில்...

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுக்களில் இராமர், இராமாயணம் பற்றி உண்மைக்கு மாறான எத்தகவலும் யாரையும் புண்படுத்தும் வகையில் சொல்லப்பட வில்லை. ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்குப் பொருந்தாத பல கதைகளைப் புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று பண்டித நேரு அவர்கள் இந்திரா காந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்களில் (டிஸ்கவரி ஆப் இண்டியா) குறிப்பிட்டுள்ளார். The Ramayana is not history or biography. It is a part of Hindu mythology
என்று ஆழ்ந்த ராமபக்தரான மூதறிஞர் இராஜாஜி அவர்களே குறிப்பிட் டுள்ளார்.

1963ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, பண்டித நேரு அவர்களின் அமைச்சரவைக் கூட்டத்தில், சேது திட்டத்தை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முன் நடவடிக்கைப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.

1972ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் வ.உ.சி. சிலையை திருமதி இந்திரா காந்தி அம்மையார், முதல்வராக இருந்த என் தலைமையில் திறந்து வைத்தார். அப்போதும் நான் தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர, சேதுக் கால்வாய் திட்டம் மிக மிக அவசியம் என்று பேசினேன்.

10-5-1986 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச் சராக இருந்தபோது சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 15-9-1998 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பாய் அறிஞர் அண்ணா அவர் களின் பிறந்த நாள் விழாவில், நான் அறிவிக்க விரும்புகிறேன்; சேது சமுத்திரத் திட்டத்தை இந்த அரசு விரைவில் நிறைவேற்றும் என்று பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அளித்த வாக்குறுதியையே மீறுகின்ற வகையில், பா.ஜ.க. தேசியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, வாஜ்பாய் அவர்களுக்கே செய்கின்ற துரோகம் அல்லவா?

நான் குறிப்பிட்டுள்ள இந்தக் கால கட்டங்களில் ஆடம்ஸ் பாலம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ராமர் பாலம் என்று எந்தக் குறிப்பும் கிடையாது. மேலும் அந்த ஆடம்ஸ் பாலத்தை அகற்றி விட்டு, சேதுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் வலியுறுத்தப்பட்டி ருக்கிறதே தவிர, புதிய பிரச்சினை எதுவும் பகுத்தறிவு பூர்வமான நிலையிலே எழுப்பப்படவில்லை. பண்டித நேரு - பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்தே பரிசீலனையில் இருந்த இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை இப்போது கேள்விக் குறியாக ஆக்கியிருப்பது ராமர் பாலம் பிரச் சினைதான். 2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு, பெருமளவுப் பணிகள் முடிவுற்ற நிலையில் திடீரென்று புதியதாக ஒரு காரணத் தைக்கூறி செந்தமிழ் நாட்டுக்குச் செழிப்பும் சிறப்பும் தர வல்ல ஒரு மாபெரும் திட்டத்தை மனம் போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா என்பதுதான்!

அன்புள்ள,
மு.க.

(நன்றி: முரசொலி, 8.3.2013)

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணிப் போன்றது.

- தந்தை பெரியார்

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை

- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.

- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே

- வால்விச்மன்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.

- பெர்னாட்சா

தமிழ் ஓவியா said...


மதத்திற்கு எதிராக!


தன்னுடைய அடிமைத்தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந்தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான். தொழிற் சாலை அமைப்பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான்.

சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறான். இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது. மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

தமிழ் ஓவியா said...


இந்தியாவை நாசமாக்கும் இந்து மதம்


எவ்வளவு முதலீடு போட்டாலும் எவ்வளவு தூரம் அதைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்தாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பதற்குக் காரணம் வளர்ந்து வரும் இந்து மத மக்கள் தொகைதான் என்பதாக காலஞ்சென்ற பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா சொல்லி இருக்கிறார்.

இந்து மதத்திலுள்ள கொள்கைகள்தான்- சில வழி முறைகள்தான் இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதாக அவர் சொல்கிறார். இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்தியப் பொருளாதார நிபுணர்களைக் கேட்டால் அவர்கள், முதலீடு வருவாய் பங்கீடு விவசாயம் காரணம் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இந்து மத சமுதாயத்திலுள்ள அமைப்புகளையே ஒதுக்கிவிட்டு தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பல வகுப்புகளை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இந்தியாவில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் போட்டுக் குழப்புகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இப்பொழுதும் இந்திய பொருளாதாரம் இருக்கிறது என்றாலும் மக்கள் முன்னேறத் துடிக்கிறார்கள்.

வாய்ஸ் ஆஃப் தி வீக் (நவ.1988)

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்?

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா?

மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டு வதை விடு, அத்துடன் பாட்டை யும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயி களிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக் கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு


இந்து பத்திரிகையில் 10வயது பெண்ணோ அல்லது 12வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே!

இந்தக் காலத்தில் கூட 10வயது அல்லது 12வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத் தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10வயதிலும் 12வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்?

அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் -7)

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர்களுக்கான நீதி தாமதிக்கப்படுகிறது:சுதந்திரமான விசாரணை உடனடியாக தேவை
டில்லி கருத்தரங்கில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை உரை

புதுடில்லி, மார்ச்.8- தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதியாகும். இனியும் தாமதப்படுத்தப் படக்கூடாது. நம்பகமான - சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்கிறார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின்.

புதுடில்லியில் `டெசோ அமைப்பின் கருத் தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்தக் கருத் தரங்கை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றிய தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், ``ஈழத் தமிழர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப் படவில்லை. அவர்களுக்கு உடனடியாக மறுகுடி யமர்வும், மறுவாழ்வும் தேவை என்று குறிப்பிட்ட தோடு, இலங்கையில் நடைபெற்ற கொடூர சம்பவங்களுக்கு சுதந்திரமான, சர்வ தேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதுடில்லியில் ``டெசோ சார்பில் நடைபெற்ற `இலங்கைத் தமிழர்கள் மீதான இனக் கொடுமைகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய தலைமை உரை வருமாறு:-

தமிழ் ஈழ இலட்சியத்திற்காக தங்கள் இன்னு யிர்களை ஈந்த தியாகிகளுக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்து கிறேன். இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் என்னு டைய கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் முடிவைத் தொடர்ந்து, மிக முக்கியமான தருணத்தில் நாட்டின் தலைநகரில் இன்று இந்த ``டெசோ மாநாடு நடைபெறுகிறது. ஈழத் தமிழர்களின் வரலாறு பல சோதனையான கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணை யத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பரிசீலினைக்காக தாக்கல் செய்யப்பட் டுள்ள நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுவது முக் கியத்துவம் வாய்ந்தது.

2600 ஆண்டுகளுக்கு முன் புத்தபிரான்

2600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தபிரான் யாழ்ப் பாணத்துக்கு அரச தமிழ்க் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க சென்றிருந் தார். தமிழ்க் காப்பியமான மணிமேகலை, இலங்கை பாலி மொழி யில் உள்ள மகா வம்சா, சீன யாத்திரீகர் யுவான் சுவாங் எழுதிய ஆவணங்கள் ஆகியவை புத்தர் யாழ்ப்பா ணத்துக்கு சென்றதை உறுதி செய்கின்றன. மேலும் பல இலக்கிய மற்றும் வர லாற்றுக் குறிப்பு கள் உள்ளன. இந்த சாட்சியங்கள் அனைத்தும் கிறிஸ்துவ காலத் துக்கு முன்பிருந்தே இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்கள் வாழ்ந்து வந்ததைக் காட்டு கின்றன.

1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி யன்று பிரிட்டிஷாரால் ஆக்கிரமிக்கப்பட்ட யாழ்ப் பாணம், கோட்டே மற்றும் கண்டி ஆகிய ராஜ்ஜி யங்கள் ஒரே நிர்வாக அமைப்பாக அளிக் கப்பட்டது. அப்போதிருந்து சிங்களர்கள், தமி ழர்கள் உட்பட மற்றவர்கள் மீது தங்களது மேலாண் மையை செலுத் தத் தொடங்கினர். தொன்மையான மொழி, கலாச் சாரம், மதம் ஆகியவற்றைக் கொண்ட தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். சிங்கள இன மேலாதிக்கம் கலகத் துக்கும் புரட்சிக்கும் இட்டுச் சென்றது.

1983-ல் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை நான்கு ஈழப் போர்கள் நடந்துள்ளன. லட்சக்கணக் கான தமிழர்கள் - ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டனர். முற்றிலும் அழிக்கப்பட்ட குடும்பங்கள் உண்டு. தங்களது குழந்தைகள் அனைவரையும் இழந்த பெற் றோர்கள் இருக்கிறார்கள். தங்களது பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இருக்கிறார்கள். தங்களது மனைவிகள் கற்பழிக்கப்பட்டு கொல் லப்பட்ட கணவன்மார்கள் உள்ளனர். விதவைகள் ஆக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான பெண்கள் இருக் கிறார்கள்.

தமிழர்கள் இடப்பெயர்ச்சி

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந் துள்ளனர். தங்கள் வாழ்க்கைக்கான ஆதாரம் தேடி பல லட்சம் தமிழர்கள் இதர நாடுகளுக்கு சென்றுள் ளனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அவர்களது பாரம்பரிய நிலம், வீடுகள், சொத்து, வணிகம் போன்ற அனைத் தையும் இழந்துள்ளனர். திட்டமிட்டு தமிழர்ப் பகுதிகள் சிங்களமய மாக்கப்பட்டு வருகின்றன. ``ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம் என்பதை சவுகரியமாக நிலைநாட்ட இலங்கைத் தீவிலிருந்து தமிழ் தேசிய இனத்தை துடைத்தெறிய திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சி களுக்கு ஆதரவு அளிப்பதற் காக தலைவர் கலைஞர் அவர்கள் 13.5.1985 அன்று ``டெசோ அமைப்பைத் தொடங் கினார்.

தமிழ் ஓவியா said...


1950 ஆம் ஆண்டிலிருந்து ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஆதரவு அளித்தும், பிரச்சாரம் செய்தும் வருகிறது. எங்களது கட்சியான தி.மு.க. ஆர்ப் பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மனிதச் சங்கிலிகள், உண்ணாவிரதங்கள், வேலை நிறுத்தங்கள் போன்றவற்றை நடத்தியுள்ளது.

1956ஆம் ஆண்டு எங்களை உருவாக்கிய பேரறி ஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழக பொதுக்குழுக் கூட்டத் தில் எங்களது தலைவர் கலைஞர் அவர்கள், ``சிங்களர்கள் மட்டும் என்ற கொள்கையைக் கண்டித்தும் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்குவதைக் கண் டித்தும், உணர்வுபூர்வமாக ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அப்போதிருந்து எங்களது தலைவர் ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான நெருப்பை தனது நெஞ்சில் சுமந்து உள்ளார்.

ஈழத்தமிழர்கள் சிந்திய கண்ணீர்

ஈழத் தமிழர்கள் சிந்தும் கண்ணீர் காய்ந்து விட வில்லை. தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. அவர்களுடைய துன்பங்களும், துயரங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கு செல் வது, எப்படி வாழ்வது என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. எனவே 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆதரவு தளத்தை வலுப்படுத்துவதற்காக ``டெசோ அமைப்பை கலைஞர் அவர்கள் மீண்டும் புத்துயிர் ஊட்டினார்.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்

தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் கடந்த 12.8.2012 அன்று சென்னையில் புத்துயிர் ஊட்டப்பட்ட ``டெசோவின் முதல் மாநாடு நடை பெற்றது. அதில் 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட் டன. அவை ஐக்கிய நாடுகள் மன்றம், அய்க்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அய்க்கிய மனித உரிமைகள் ஆணையத் தின் உறுப்பு நாடுகள் ஆகியவற்றிடம் அளிக்கப் பட்டுள்ளன.

ஈழத் தமிழர் களின் பிரச்சி னைகளது ஆழம் பற்றி விவாதிக்கப் பட்டுள்ளது. உலகைச் சுற்றி நடைபெறுன்றவற்றைப் பார்க் கும்போது ஏராளமான நாடுகள் இனப் படுகொ லையின் கோரம் பற்றியும், அதன் பின் விளைவுகள் பற்றியும் உணரத் தொடங்கியுள்ளதை எங்களால் உணர முடிகிறது. அதிர்ச்சியூட்டும் பல சாட்சியங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண் டிருக்கும் நிலையில் இந்த விழிப்புணர்வு பளிச்சென தெரிகிறது.

லண்டன் மாநகரைச் சேர்ந்த `சேனல் 4 தொலைக் காட்சி, ``போர் நிறுத்தப் பகுதி - இலங்கையின் கொலைக் களங்கள் என்ற டாக்குமென்டரி படத்தை எடுத்துள்ளது. ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்களுக்கு வலு வான ஆதாரங்கள் பலவற்றை அது காட்டுகிறது. இந்த டாக்குமென்டரி படத்தில் உள்ள காட்சிகள் உள்ளத்தை உறைய வைக்கும் கதைகளை வெளிப்படுத்துகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிரபாகரன் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொலை யைக் காணும்போது, நமது உள்ளம் வேதனையில் நடுங்குகிறது.

தமிழ் ஓவியா said...

அவர் கோழைத் தனமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த டாக்குமென்டரி படம் இலங்கை ராணுவத்தால் செய்யப்பட்ட ஒட்டுமொத்த மாக சுட்டுக் கொல்லுதல், படுகொலைகள், சித்திர வதைகள் மற்றும் தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வன்முறைகள் போன்ற படு பாதகமான குற்றங்களை அம்பலப் படுத்துகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் 1400 பக்க அறிக்கை

இலங்கையில் தொடரும் மனிதாபிமானமற்ற கொடுமைகளுக்கு இன்னொரு சாட்சியமாக ``மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் 140 பக்க அறிக்கை உள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவப் படைகள் சித்திர வதையின் வன்முறை வடிவங்கள் மற்றும் கற்பழிப்பு ஆகிய வற்றை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு போது மான நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் உள்ளது என் றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள ``சர்வதேச பொது மன்னிப்பு (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) என்ற அமைப்பின் தலைமை இயக்குநர் ஜி.ஆனந்த பத்மநாபன் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடுமை கள், மோசமாக நடத்தப்படுதல், துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து நடப்பதாக பிரிட்டன் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் டேவிட் கூறி யுள்ளார். அமெரிக்கா இலங்கைக்கு இரண்டு முறை உண்மை கண்டறியும் குழுவை அனுப்பியுள்ளது. அந்தக் குழு நிவாரணப் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளன.

தமிழ் ஓவியா said...

அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை யத்தின் ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை 16 பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அந்த அறிக்கை இலங்கையில் மனித உரிமைகள் மீறல் கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ராஜபக்சே தான் பொறுப்பு

சர்வதேச அமைப் புகள், விசாரணைகள், சாட்சியங்கள் ஆகி யவை அனைத்து அவ மானகரமான நடவடிக் கைகள், போர்க் குற்றங் கள், இனப்படுகொ லைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் ஆகியவற்றுக்கு மகிந்த ராஜபக்சே பொறுப்பானவர், பதில் அளிக்க வேண்டி யவர் என்று காட்டு கின்றன.

கடந்த நூற்றாண்டு பல கொடுங்கோல் சர்வாதி காரிகளைக் கண்டுள்ளது. அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஜெர்மனியின் ஹிட்லர், லிபியாவின் கடாபி, இத்தாலியின் முசோலினி, கம்போடியாவின் போல் பார்ட், உகாண்டாவின் இடி அமீன், பெருகுவே நாட்டின் ஆல்பிரட்டோ, எகிப்தின் முபாரக் ஆகியோர் ஆவர். அவரது கொடுங்கோன்மை செயல் களால் அவர்கள் உலகத்திற்கு அவமானத்தைத் தேடித் தந்தனர். இந்த சர்வாதிகாரிகளில் ராஜபக்சே, ஹிட் லருடன் மட்டுமே ஒப்பிடக் கூடியவர்.

ஹிட்லர் யூதர்களை கூட்டம் கூட்டமாகக் கொல்வதில் குதூகலமடைந்தார். ராஜபக்சே அத்தீவிலிருந்து ஒரு தேசிய இனத்தைத் துடைத்தெறிவதற்காக தமிழர் களுக்கு எதிரான இனப் படுகொலைகள், போரை ராஜபக்சே நடத்தினார். இந்தியாவில் உள்ள தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவுகள் உள்ள தொன்மையான வரலாற்று இனம் ஒன்றை அழித்தொழிப்பதற்கான முயற்சிகளை மிக மிகக் பொறுமையாக, மகாவீரர், புத்தர், திருவள்ளுவர், காந்தி, நேரு, தந்தை பெரியார், அம் பேத்கர், அண்ணா ஆகியோரின் பூமியான இந்தியா கண்டு வருகிறது.

நிரந்தரமான தீர்வு

ஈழத் தமிழர்கள் நீதியைக் கோருகின்றனர். ``தாமதிக் கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி காத் திருந்த நீண்ட காலங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்ன மும் நீதி வழங்கப்படவில்லை. தமிழர்களுக்கு மிக அவசரமாக மறுகுடியமர்வும், மறுவாழ்வும் தேவைப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு நம்பகரமான, சுதந்திரமான சர்வதேச விசார ணையை உருவாக்குவது பற்றி உலக சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

நிரந்தர மான அரசியல் தீர்வு என்பது பொதுவாக்கெடுப்பில் உள்ளது. நீதி, உயிர் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள், கௌரவம், சுயமரியாதை, சுதந்திரமான விசாரணை, பொது வாக்கெடுப்பு என்பவையெல்லாம் நீண்ட கால மாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் தாமதப்படுத்து வதை வரலாறு மன்னிக்காது. இந்தியாவும் உலக அமைப் புகளும் இவற்றின் அவசரத்தை உணர வேண்டும்.

இந்த மாநாட்டிற்கு சரியான தருணத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்ததற்காக அமைப்பாளர் களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். திராவிட முன் னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மிகச் சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டி யவராவார். அவருடைய சோர்வற்ற முயற்சிகளும், அசாதாரணமான முன்முயற்சியும் இந்த மாநாட்டை மிகப் பெரிய வெற்றியாக்கியுள்ளது. ``டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் அவரது கடுமையான உழைப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


முட்டுக்கட்டை போடும் ராமனைத் தோலுரிப்போம்!



காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என்று தமிழ்நாடு சுற்றிச் சுற்றி இதற்குள்ளாகவே நின்று போராடும் ஒரு பரிதாப நிலையை என்னென்று சொல்லுவது!

இந்தியத் தேசியம் நமக்கு அளிக்கும் பரிசு இது தானா என்ற வேதனை விலாவைத் துளைக்கிறது.

இவ்வளவுக்கும் நியாய விரோதமாக, சட்ட விரோதமாக எதையும் தமிழ்நாடு எதிர்பார்க்க வில்லை; வலியுறுத்தவும் இல்லை. தமிழர்களுக்கு உரிய நியாயமான, சட்டத்திற்குட்பட்ட உரிமை களுக்காகத் தான் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த அடிப்படை உரிமைப் பிரச்சினைகளில் இந்நாட்டில் சுரண்டிவாழும் உயர்ஜாதி ஆதிக்கக் கூட்டமோ, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்தத் தமிழ் மக்களின் உழைப்பை - பொருளைச் சுரண்டித் தின்னுகிறோம் - தின்ற சோற்றுக்காவது நன்றியோடு இருப்போம் என்கிற அளவுக்கு இல்லாமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; நரி எப்படியோ போய்த் தொலையட்டும்; விழுந்து பிராண்டாமல் இருந்தாலே போதும் என்று நினைப்பதற்கு இடமில்லாமல், தமிழர்களின் உரிமை உணர்வுகளுக்கும், போராட் டங்களுக்கும் எதிராகக் காட்டிக் கொடுக்கும் பிணம் தின்னும் கழுகுகளாக அல்லவா நடந்து கொள்கிறது.

நம்முடைய போராட்டம் இந்திய அரசை நோக்கி இருக்கிற காரணத்தால், இவர்கள் பக்கம் நம் பார்வை திரும்பாது என்கிற தைரியத்தில், கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி, இதையும் தமிழ் மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இவர்களைக் கொஞ்சம் கண்காணியுங்கள் என்று கூற வேண்டிய நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வன்முறையில் அல்ல - தர்க்க வாதங்களின் அடிப்படையிலேயே தகர்க்க வேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டம் - ஒன்றரை நூற்றாண்டைக் கடந்தது. இதில் தேவையில்லாமல் பார்ப்பன சக்திகள் மதத்தைக் கொண்டு வந்து போட்டு முட்டுக்கட்டை போடுகின்றன.

மதமும், பக்தியும் அவரவர்களின் வீட்டுக் குள்ளேயே இருப்பதுபற்றிக் கவலையில்லை. பொதுப் பிரச்சினையில் மக்களின் வளர்ச்சிப் பிரச்சினையில், வாழ்வாதாரப் பிரச்சினையில் கொண்டு வந்து குறுக்கே போட்டால் அதனை உடைத்துத் தள்ளு வதைத் தவிர, வேறு மார்க்கம் இருந்தால் மேதாவிமார்கள் அருள்கூர்ந்து சொல்லட்டும்.

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினான் என்று ஒரு கும்பல் பாழடைந்து போன தங்கள் மூட மதக் கருத்தைச் சொல்லுவதும், இந்தியாவிலேயே மிகப் பெரிய அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம் அதற்குச் செவி சாய்த்துக் காலம் கடத்துவதும் ஏற்புடையதுதானா? நாம் 2013இல் இருக்கிறோமா என்று நமது உடம்பை நாமே கிள்ளிப் பார்த்து சோதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெட்கக் கேடு! மானக் கேடு!!

மற்ற மதங்களைப் பற்றிப் பேசுவதில்லையே என்று மாய்மாலம் பேசும் கபோதிகள், மற்ற மதங்கள் இப்படியா மக்களின் பொருளாதார வளர்ச்சியோடு, வேலை வாய்ப்பு திட்டத்தோடு மல்லுக்கட்டி நிற்கின்றன.

இதில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்ன வென்றால், சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதலில் ஒப்புதலும், கருத்துருவும், தொழில் நுட்ப ரீதியான அனுமதியும் வழங்கியவர்களே இந்தப் பிஜேபியினர். அந்தப் பிஜேபியினர்தான் இப்பொழுது இந்தப் பிரச்சினையில் ராமனைக் கொண்டு வந்து போட்டுக் குளிர் காய்கின்றனர்.

காலந்தாழ்ந்தாலும் இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு எந்த விலையும் கொடுப்போம் என்பது ஒருபுறம்; அதே நேரத்தில் இந்து மதம் அதன் நம்பிக்கைகள் மக்கள் வளர்ச்சிக்குக் கேடானவை. முட்டுக்கட்டையானவை - முடை நாற்றம் எடுக்கும் கசமாலக் குப்பைகள் என்பதை நார் நாராகக் கிழித்து மக்கள் மத்தியிலே தோரணங்களாகத் தொங்க விடுவோம் - அந்த வகையிலே இந்த சனாதனப் பார்ப்பனக் கும்பல் வகையாக நம்மிடம் வந்து மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்த தொடர் பிரச்சாரத் திட்டத்தைத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அறிவித்துவிட்டது தோழர்களே தயாராவீர்! தமிழர்களே ஒத்துழைப்புத் தாரீர்!

தமிழ் ஓவியா said...


மாணவிகள்


தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி மாநிலங்களில் இப்பொழுது +2 தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும் மாணவர் மற்றும் மாணவி களின் எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர்; இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 746; மாணவர் களின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 788.

இந்தப் புள்ளி விவரம் தந்தை பெரியார் பார்வையில், திராவிடர் கழகத்தின் பார் வையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பெண்களை ஏன் படிக்கக் கூடாது என்று கட் டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக் குவதற்காக (குடிஅரசு 16.11.1930) என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பாகும்.

ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் முதலில் பெண்ணைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

அதற்கான காரணத் தையும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெய ரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால் முதலில் நமது பெண்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெ னில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர் அவர் களுடைய தாய்மார்களே! அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார் களே தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (குடிஅரசு 1.5.1927)

இந்தக் கருத்தை யெல்லாம் 86 ஆண்டு களுக்கு முன் தந்தை பெரியார் சொல்லியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர் கள், தம்மால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளின் சார்பில் தொடங்கப்பட்ட கல்விக் கூடங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களுக்கே என்பதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும்.

அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பு எதற்கு? என்று ஒருபழ மொழியையே இங்கு உண்டாக்கி வைத் துள்ளனர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அவர் கண்ட இயக்கம் பாடுபட்டதன் பல னாகவும், காமராசர் போன் றவர்கள் ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததாலும் இங்கே கல்விப் புரட்சி ஏற்பட்டது.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க ஆரம்பித்ததற்கு பிறகு அவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2 தேர்வுகளில் மாணவர் களைவிட சதவிகிதத்தில் அதிக தேர்ச்சி பெறுவோர் பெண்களாகவே இருந்து வருகின்றனர். கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று ஒரு பெண் ணுக்கு இலாகா பிரித்து வைத்திருந்தாலும், பெண்கள் கல்வி பெறாத நிலையில், கடவுளைக் கிழித்தெறிந்த கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் சகாப்தத்தில் பெண் கல்வி ஓகோ என்று ஓங்கி நிற்கிறது.
மேலும் வளரட்டும்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இணையதளத்தில் ஈழத் தமிழர்களின் இதயக் குரல்கள்!

சமீபத்தில், ஈழத்தில் உள்ள 89 தமிழ் நகரங்களின் பெயர்கள் சிங்கள அரசால் மாற்றப்படவுள்ளது என்ற விடயத்தை கலைஞர் அய்யா அவர்கள் ஒரு கடிதமாக எழுதி இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தார். பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத் தமிழர்களுக்கு இச்செய்தி அதிர்வு இணையம் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்செய்தியை வாசித்ததோடு, இவை ஆங்கில இணையங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. கலைஞர் அய்யா அவர்கள் கடிதமும் அய்ரோப்பிய ஆங்கில இணையங்களில் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான செய்திகளுக்கு கிடைக்கப் பெற்ற சில பின்னூட்டங் களை நாம் இங்கே தருகிறோம். ஈழத் தமிழர்கள் இன்று என்ன சொல் கிறார்கள் என்று பார்ப்போமா?

-சுதாகரன் (ஜெர்மனி)



உங்கள் செய்தியைப் பார்த்தேன். மிகவும் கவலையாக உள்ளது. இனி நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட இருக்கிறதா? என் பிள்ளைகளுக்கு நான் இனி எங்கே பிறந்தேன் என்று சொல்ல முடி யாத நிலை. ஆனால் இதனைச் சுட்டிக் காட்டி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி!

- ஜெயசங்கரி (சுவிஸ்)

சில இணையத்தின் செய்திகளை பார்த்து, நானும் கலைஞர் அவர்களை குறைசொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் இப்போது செய்வது எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியை தருகிறது.

- திருநாவுக்கரசு (லண்டன்)

2009-ல் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதைவிட்டு விட்டு, இனியாவது கலைஞர் அய்யா செய்வதை ஏற்று அவருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்!

- ஷோபனா (லண்டன்)

நல்ல விசயத்தை கலைஞர் அய்யா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவர் செயல்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. இதனை வேறு தமிழக தலைவர்கள் ஏன் செய்யவில்லை?

- நிதர்ஷன் (அமெரிக்கா)

89 தமிழ் நகரங்களையும் சிங்களத்தில் மாற்றினால், இனி அம்மாவை நாம் அம்மே என்று சிங்களத்தில் தான் கூப்பிட வேணும் போல இருக்கே அண்ணா. இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டதக்கது. அவராவது கடிதம் எழுதினார். அங்கே சீமான் எங்கே? வைகோ எங்கே? இல்லை.. பழ. நெடுமாறன்தான் எங்கே? இவர்கள் ஈழப் பிரச்சனையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?

- நிலாசுதன் (முன்னாள் போராளி) ஈழம்

மட்டக் களப்பில் நாம் காலம் காலமாக கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை தொப்பிகல என்று சிங்களம் மாற்றி விட்டதே. இப்ப தமிழ் ஊடகங்கள்கூட தொப்பிக்கல என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக கலைஞர் அய்யா அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.

தமிழ் ஓவியா said...


கடவுள் மறுக்க மாட்டார்!


கடா வெட்டுகிறேன், மொட்டை போடுகிறேன், அலகு குத்துகிறேன் எனப் பக்தர்கள் வேண்டுவதற்குப் பதிலாக இப்படி வேண்டினால் என்ன ?

''கடவுளே எனது வேண்டுகோள் நிறைவேறினால் முதியோர் இல்லத்திற்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுக்கிறேன், ஒரு ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்கிறேன், புற்றுநோய் தடுப்புக் கழகத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கிறேன் என வேண்டிக் கொள்ளலாமே? ஏழை பக்தராக இருந்தால் சாலையில் உள்ள பள்ளங்களை மூடுகிறேன், சாலையோரம் 10 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கிறேன்", என வேண்டலாம் தானே ?

உங்கள்கடவுள் என்னமறுக்கவா போகிறார்?

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...


அறிவு தழுவிய அணுகுமுறையால்... அனைத்தையும் வெல்லலாம்!


அய்யா அவர்கள்மீதும்... தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் மீதும் திராவிடர் கழகக் கொள்கைமீதும் நிரம்ப மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும், விடுதலை எழுத்தாளர் மானமிகு கி.இராமநாதன் அவர் களின் மகன் இரா. ராசா என்பவர் புதிதாக ஒரு வீடு கட்டி புதுமனை புகுவிழா கடந்த 7.2.2013 அன்று நடத்தினார்.

தந்தையார் வழியிலே.. கழகத் தலைவர்களை வைத்து திறப்பு விழா செய்ய வேண்டுமென அவர் விரும் பினாலும், அவரது இணையரின் வழி உறவினர் அதனை ஏற்க வில்லை!.. அய்யரை வைத்துத்தான நடத்த வேண்டும் எனக் கூறி.. அய்யரையும் வரவழைத்து விட்டனர்.

பக்கத்து வீடாக இருந்தாலும், அதில் இராமநாதன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் வற்புறுத்தவே அவர், கோபப் படாமல்.. இருந்தால், நான் சில நிமிடங்கள் அய்யரோடு பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

அவர்களும் அதற்கு சம்மதிக்கவே.. மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யரிடம் சென்று.. அமைதியாக அய்யா! உங்கள்மீது எனக்கு கோபமில்லை, ஆனால், இந்த மந்திரம் சடங்குகளில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இந்த வீட்டை மிகுந்த சிரமத்திற்கிடையே கட்டி, முடித்தது என் மகனுடைய அயரா உழைப்பும்..

கட்டிய கட்டிடத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியும்தான்!.. ஆனால், எதிலுமே சம்பந்தமில்லாத நீங்கள், இப்போது வந்திருக்கிறீர்கள்.. நீங்கள் இங்குள்ளதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் மட்டும், ஈடுபடாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள் என்றார்!
உறவினர்கள் திகைத்து நின்றனர். ஆனால் எதுவும் பேசவில்லை. இவர் பேசியதும் சரியென்றே உணர்ந்தனர்!

அய்யர், உடனே எழுந்தார். நீங்கள் யார் என்பது எனக்கும் தெரியும். உங்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் வந்தேன். உங்கள் பிரியப்படியே பேஷா செய்யுங்கோ.. நேக்கும் இதிலே பூரண சம்மதந்தான் என்ன செய்யறது? வழி வழியா வந்துடுத்து...நேக்கு இதை விட்டா வேறு எதுவும் தெரியாது. அதனாலே தான் இவா கூப்பிட் டதும் வந்துட்டேன்.. தப்பா நினைக் காதேள்...! என்று சொல்லிவிட்டு...

அவர் பொருள்களை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார். பிறகு, என் நண்பர், வந்திருந்து, வியப்போடு இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள், உறவினர் அனை வருக்கும் இனிய விருந்து தந்து மகிழ்ந்தார்! கொரநாட்டுக் கருப்பூர் ஒரு புதுமையை அன்று சந்தித்தது!

அறிவு தழுவிய இனிய அணுகு முறையால் அனைத்தையும் வெல்லலாம் என்பதை என் நண்பர் இராமநாதன் தனது செய்கையால் மெய்ப்பித்துக் காட்டியதை அனை வரும் பாராட்டி மகிழ்ந்தனர்!

- நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்


மிருகங்களைப் போல நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது. - காந்தியார்

நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர் முன்னிலையில் பாராட்டுங்கள். - ஜவஹர்லால் நேரு

மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். - வள்ளலார்

எவருடைய மனம் குழப்பம் அடையாமல் இருக்கிறதோ, அவருக்கு அச்சம் என்பதே சிறிதளவும் இல்லை. - புத்தர்

ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை. - அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர்பற்றி..


கி.வீரமணி அய்யாவை நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் சித்ரகுப்தன் வீரமணி Key
என்கிறாரே...?

அப்துல்கனி Ex. . கவுன்சிலர், விழுப்புரம்

உண்மைதானே... சமூகநீதி கஜானாவின் சாவி தானே அய்யா அவர்கள்!

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டு 1994ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் குடியரசு தலைவர் மேதகு சங்கர் தயாள் சர்மா அவர் களால் ஒப்புதல் வழங்கப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஒப்புதல் பெறப்படுவதற்கு முன்பு எத்தனை தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் சந்தித்தது என்பதையும், தமிழக முதல்வர் அந்த தடைகளை சட்ட ரீதியாக உடைத்தெறிந்திட அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தகைய பேருதவிகளைச் செய்து பக்கபலமாக இருந்தார் என்பதையும் வரலாற்று ஏடுகள் சாட்சியங் கூறிக் கொண்டிருக்கின்றன.

மேலும், அச்சட்டத்தை 31 (சி) இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திடுவதற்காக அய்யா எவ்வளவு கடுமையாக உழைத்தார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை சமூகநீதி பயணம் மேற்கொண்டு அதன் பலனாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 1994ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி விவாதம் எதுவுமின்றி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் அய்யாவை சமூகநீதி கஜானாவின் தங்கச் சாவி (கீ) என்றே கூறுவார்கள்.

(நன்றி: ராஜாளி பிப்ரவரி 2013)

தமிழ் ஓவியா said...


கம்யூனிச நாடுகளின் கேவலத்தைப் பாரீர்! அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறார்களாம்!

ஜெனிவா, மார்ச் 9- மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கம்யூனிஸ்டு நாடுகள் எதிர்க்கும் என்று கூறியுள் ளனர்.

இதன்மூலம் கம்யூனிசம் பிற்போக் குத்தனத்துக்கு இனப்படுகொலைக்கும் துணை போகும் வரலாற்றுப் பிழை பதிவாகி விட்டது.

இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானம் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. 'இலங்கையில் நல்லிணக்கத் தையும் பொறுப்பு கூறும் கடமையை யும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கையின் பொறுப் புக் கூறும் கடமைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் யோசனையை இத் தீர்மானம் வரவேற்றிருக்கிறது. இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத் தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்குமுறை களும் நீடித்து வருவதற்கும் அமெரிக்காவின் தீர்மானம் கவலை தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக் கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனிவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ் தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலி யோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஆனால் கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கா வின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம் பெற வேண்டும்.. மேலும் வலுவான தாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


உழைப்பு



எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.
(விடுதலை, 11.4.1947)

தமிழ் ஓவியா said...


அன்னையார் வாழுகிறார்! வாழ்கிறார்!! என்றும் வாழ்வார்!!!


தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவருக்குச் செயலாளராகவும், செவிலி யராகவும், சிறப்பான தொண்டு புரிந்தவருமான தொண்டற வீராங்கனை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது 93ஆவது பிறந்த நாள் இன்று.

தியாகத்தில் புடம் போட்டு, தன் பொருள், உயிர் எல்லாவற்றையும் தந்தை பெரியார் என்ற மானுடம் காணா மகத்தான புரட்சியாளர் அவர்களுக்கும் அவர் தந்த கொள்கைக்கும், அவர் கண்ட இயக்கத்திற்கும் தன் வளமை, இளமை, வலிமை, முதுமை, உழைப்பு, தொண்டு அனைத்தையும், தந்து, வசைச்சூறாவளியும் அவதூறு சுனாமிகளும் சுழன்றடித்த வேளையிலும், சிறிய சலனம்கூட காட்டாது, மானம் பாராத தொண்டற மங்கை நான், எனக்கு எல்லாமும் என் தலைவரும் கொள்கையும், இயக்கமும், தான் என்று கூறி, உடல் நலிந்தாலும் உள்ளத்தின் வலிமையால் தந்தையின் மறைவுக்குப் பின்னரும் அவர் கண்ட இயக்கமாம் திராவிடர் கழகத்தின் தலைமையேற்று அய்ந்து ஆண்டுகள் வழி நடத்தி, அனைத்திந்தியாவும் அதிர்ச்சி அடைந்த இராவண லீலா நடத்தியும், நெருக்கடிக் காலத்தின் உரிமைப் பறிப்புகளுக்கும் ஈடு கொடுத்தும், பெரியார் தொண்டர்களைக் காத்த எம் மாறாத பாசத்திற்குரிய அன்னையாரின் தொண்டு ஈடு இணையற்றது; ஒப்பிட முடியாத உயரம் சென்ற ஒன்று!

தன் பொருள், தனக்கு தலைவர் துணைவர் என்ற முறையில் ஒதுக்கியது எல்லாமும் எல்லாருக்குமே என்று அறிவிக்கும் வகையில், ஒரு அறக்கட்டளை யாக்கி, பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் ஒன்று நிறுவினார்.

அதன் சார்பில்தான், இன்று தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி, தஞ்சை வல்லத்தில் பெரியர் - மணியம்மைப் பல்கலைக் கழகம் என்று கல்வி நிறுவனங்கள் ஆல்போல் தழைத்தோங்கி, வளர்ந்திட கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறது அன்னையாரின் அறக்கட்டளை!

அன்னையாரின் அரிய, மேற்பார்வையோடு அய்யாவால் 55 ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்டு, இன்று ஏழை, எளிய ஆதரவற்ற குழந்தைகளின் அபய இல்லமான நாகம்மையார் குழந்தைகள் இல்லம் பலகட்ட வளர்ச்சி பெற்று, வரலாறு படைத்துக் கொண்டுள்ளது.

அன்னையின் தொண்டறத்தின் துளிகள் அவை; சுயமரியாதை ஒளி வீச்சுகள் அவை.

அந்தத் தொண்டற வீராங்கனை மறையவில்லை - வாழுகிறார்.

கழகத் தொண்டர்களின் கட்டுப்பாட்டின் மூலம், குழந்தைகளின் மலர்ந்த சிரிப்பின் மூலம், கழகம் குவிக்கும் வெற்றிகள் மூலம், வாழுகிறார்! வாழுகிறார்! வாழ்ந்து கொண்டே இருப்பார்.

வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!
வளர்க பகுத்தறிவு - தொண்டறம்!!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

10.3.2013

சென்னை

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி!


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1883ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் பிறந்தார் ராமாமிர்தம். குடும்பத்தின் வறுமை யைத் தாங்க முடியாத அவரின் அம்மா, ஒரு தேவதாசியிடம் விற்றுவிட்டார். நல்ல சிந்தனைகளும் முற் போக்கு குணங்களும் பெற்றவராக இருந்த ராமாமிர்தம், விரைவில் அங் கிருந்து வெளியே வந்தார்.

தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல் பட்டார் ராமாமிர்தம். எழுதினார். நாடகம் போட்டார். ஏராளமான தேவதாசிப் பெண்களை மீட்டெடுத்தார். குழந்தை திரு மணத்தை எதிர்த்தார். பெண் கல்வியை வலியுறுத்தினார். இந்திய தேசிய காங் கிரஸில் சேர்ந்து பணி செய்தார். ஏராள மான சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தார்.

1925இல் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்த போது, ராமாமிர்தம் அந்த இயக்கத் தில் சேர்ந்தார். சுயம்புபிள்ளையை சுய மரியாதை திருமணம் செய்துகொண்டார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பைச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு ராமாமிர்தம் துணையாக நின்றார். 1936இல் தன் வாழ்க்கையையே நாவலாக எழுதி, தாசிகளின் மோசவலை என்ற பெயரில் வெளியிட்டார்.

இதன் மூலம் தாசிகளின் அவலநிலை வெளிச் சத்துக்கு வந்தது. மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், தேவதாசி ஒழிப்பு முறையை ஆதரித்தும் நாடகங்கள் நடத்தி வந்தார். ஒரு நாடகத்தின் போது, மத வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பிறகு கடைசி வரை அவர் கூந்தலை வளர்க்கவே இல்லை.

1937 முதல் 1940 வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார். உறையூர் முதல் சென்னை வரை 42 நாள்கள் நடந்து சென்று, 82 கூட்டங்களில் இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசினார். இதற்காக 6 வா ரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி பல்திறமைகள் கொண்ட ராமா மிர்தம் அம்மையார் 1962இல் மறைந்தார்.

தமிழ் ஓவியா said...

இலங்கையைச் செல்லமாகக் கண்டிக்கும் இந்திய அரசு!


இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மார்ச் 12 - முழு வேலை நிறுத்தம்!

தமிழ்நாட்டு மக்களே ஆதரவு தாரீர்! டெசோ பயணம் தொடரும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

இலங்கை அரசைச் செல்ல மாகக் கண்டிக்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மார்ச்சு 12ஆம் தேதியில் தமிழ் நாட்டில் முழு வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தர வேண்டும் - டெசோ தன் பயணத்தை வெற்றிப் பயணமாக முடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக தன்னால் இயன்ற அத்துணையையும் செய்து கொண்டே இருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குக் காரண மான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குக் கண்டனம், போர் குற்றவாளியாக அவரை அறிவித்து சர்வதேச சமூகம் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும்; ஈழத் தமிழர் வாழ்வு உரிமையை மட்டுமல்ல; தமிழ்நாட்டுத் தமிழக மீனவ சகோதரர் களின் மீன்பிடி வாழ்வாதாரத்தையும், சிங்கள கடற்படை பறித்தல், தாக்குதல், மீன் வலைகளை அறுத்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல், இலங்கைச் சிறைகளில் அவர்களைக் கொண்டுபோய் அடைத்தல், சித்ரவதைக்கு ஆளாக்குதல் போன்ற பல அக்கிரமங்களை அன்றாடம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்துவருகின்றது.

இலங்கையை செல்லமாகக் கண்டிக்கும் இந்தியா!

நமது வாக்குகளால் ஆளும் மத்திய அரசு, இந்திய அரசு கவலை தெரிவிக் கிறோம் என்று, பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கோலுக்கும் நோகாமல் என்ற பழமொழிக்கொப்ப இலங்கை அரசை செல்லமாய் கோபித்துக்கொள்வதுபோல் காட்டிக்கொண்டு மீனவர்களின் வயிற் றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங் கள்மீது, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கடமைக்காக சர்வதேச சமூகத்தின் - பன்னாடுகளின் மன சாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும்; அதன்மூலம்தான் பரிகாரம் தேடவும், தமிழர் மீள்குடியேற்றம், சிங்கள மயமாக் குதலைத் தடுத்தல், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள எம் எஞ்சிய தமிழ்ச் சொந்தங்களின் மான வாழ்வை - உரிமை வாழ்வை மீட்டெடுப்பது சாத்தியம்.

அய்.நா.விலும் முறையீடு

இந்தப் பணிகளுக்காகத்தான் நியூ யார்க் சென்று அய்.நா. சபையின் பொறுப்பாளர்களிடம் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறை வேற்றிய முக்கிய வேண்டுகோள்களை, தீர்மானங்களை அளித்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்களின் எதிர்காலமாவது பாதுகாக் கப்படக்கூடியதாக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எம் ஈழத் தமிழ்ச் சொந்தகளுக்கான முயற் சியை டெசோ சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு அவர்களும் நேரில் சென்று விளக்கங்களை அளித்தனர். அதுபோலவே, அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களை ஜெனிவாவில் சந் தித்து டெசோ தீர்மானங்களை அளித்து, செய்யப்பட வேண்டியவற்றை வலியுறுத் தினர். அய்.நா. மனித உரிமை ஆணையத் தின் உறுப்புகளான 47 நாடுகளின் தூதுவர்களில் பெரும்பாலோனோர் களை சந்தித்து அடுத்த கூட்டம் (தற்போது நடை பெற்று வருகிறது) துவங்குவதற்குமுன் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவுகோரி டெசோ குழுவினர் தளபதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், ஆகியோரும், நானும், திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்களும் புதுடெல்லியில் இடைவிடாது இப்பணிகளைச் செய்தோம்.

இரத்த வெறியன் ராஜபக்சேவே திரும்பிப் போ!

அதற்கடுத்து, வடநாட்டிற்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்திய மண்ணில் இரத்தக்கறை படிந்த கால்களை வைக்க இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, திரும்பிப் போ, என்றும், இந்த இட்லரின் வாரிசுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? என்றும் டெசோ கிளந்தெ ழுந்து தலைநகரம் காணாத எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டத்தை கருப்பு உடை அணிந்து 90 வயது மூத்த தலைவரான டெசோவின் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் வாய்மைப் போருக்கு என்றும் இளையாராகி களம் கண்டனர். அதன்பிறகு, ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீனவர் சமுதாயத்திற்கு இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் பிப்ரவரி 18, 19 ஆகிய நாட்களில் டெசோ அமைப்பின் சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாங்கள் வரலாறு காணாத மக்கள் வெள் ளம் கூடிய ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தினோம்.

முற்றுகைப் போராட்டம்!

தமிழ் ஓவியா said...

அதற்கடுத்து, கடந்த மார்ச் 5ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்ட இலங்கை அரசின் சென்னைத் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். சுமார் 30,000 முதல் 50,000 பேர் வரை திரண்டனர். அவர்களைக் கைது செய்யத் திணறி சென்னையில் சுமார் 10,000 பேர்களை மட்டுமே கைது செய்தது காவல்துறை. சுமார் 5, 6 மணி நேரம் இராஜரத்தினம் ஸ்டேடியம் மரத்தடியில் அமர்த்தி, சிறை வைக்கப்பட்டோம். அன்றுமாலை விடுதலை செய்யப்பட்ட வுடன் டெசோ தலைவர் கலைஞர் தலைமையில் கூடி, உடனே மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்கு தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு அடைப்பு நடத்தி, இதில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று திரண்டுள்ளோம் என்று காட்டவே அறவழியில் நமது உணர்வுகளைக் காட்டிடவே வேலை நிறுத்த அழைப்பினையும், அறிவிப்பினையும் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் விவாதம் - டில்லியில் மாநாடு

மார்ச் 7ஆம் தேதி டெல்லியில் டெசோ சார்பில் அய்.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் - அழுத்தமானதாகவும், பயனளிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் நடந்த டெசோ மாநாட்டின் தீர்மானங்களை இந்திய அளவில் கொண்டு சென்று, கருத்து ஆதரவு தேடவுமான கருத்தரங்கத்தினை டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடத்தினோம். முன்பு கலந்துகொண்டவர்களைவிட சில கட்சிகள் கூடுதலாகத்தான் கலந்துகொண்டன. இதற்கிடையில், தி.மு.க. கொடுத்த இலங்கை ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய விவாதம் மக்களவையில் அதே மார்ச் 7இல் (எதிர்ப்பாராத விதமாக அன்றே பொருத்தமாக) நடந்தது. அதில் தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு பேசத் துவங்கி, அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைக் கட்சி, பி.ஜே.பி. மட்டுமல்லாது அகில இந்திய தேசிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு, மிகப் பெரும் அளவில் அவையே குலுங்கும் வண்ணம் பேசி, இந்திய அரசை வலியுறுத்தி, மிகப்பெரிய அழுத்தமும் கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு!

வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாமல், ஏதோ பொத்தாம் பொதுவாக, பொது அறிவுரைகளை இலங்கை அரசுக்கு இதம் அளிப்பது போன்று பிரச்சினையின் ஆழத்தை அறியாது, அவையின் கொந்தளிப்பை அடக்குவதற்குப் பதிலாக, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்வகையில் ஏதோ பேசினார். தி.மு.க. மட்டுமல்ல; அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல தேசிய கட்சிகள் உட்பட வெளிநடப்பு செய்தது - ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பம் - இந்திய நாடாளுமன்ற வரலாற்றில்! இதற்கு மூல காரணமாக அமைந்தது தி.மு.க. - இதற்குப் பிறகு அன்று மாலை ஏற்கெனவே திட்டமிட்டபடி டெசோ கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத் அவர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, தேசிய மாநாட்டுக் கட்சி, தி.மு.க. விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர்கள் முக்கியக் கருத்துக்களை வழங்கினர். இவையெல்லாம் நாடகமா?

இவையெல்லாம் நாடகம் என்றும், இதனைப் பின்னடைவு என்றும் கூறுவோர் எவராயினும் அவர் களுக்கு ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டுவதில் உண்மையான அக்கறை இல்லாமல், அரசியல் செய்ய நமது இந்த ஆயுதம் நம்மிடமிருந்து போய்விடுவதா? என்ற உள்ளெண்ணத்தில்தான் பொது எதிரி ராஜபக்சேவை மறந்துவிட்டு, இங்கேவர உள்ள தேர்தல் களத்திற்கு மூலதனம் - சீட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகளை நடத்திக்கொண்டு இந்த எழுச்சியை திரையிட்டு மறைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, தி.மு.க., தி.க., மற்றும் டெசோ மீது சேற்றை வாரி இறைக்கும் ஊடகப் படைகளின் துணையோடு முயற்சி செய்து பார்க்கின்றனர். அவர்களைப் பற்றி டெசோ கள வீரர்கள் துளியும் இலட்சியம் செய்யாமல், குடிசெய்வார்கில்லை பருவம் என்ற குறள் நெறிக்கேற்ப மான அவமானம், பாராட்டு, வசவுகள் பற்றிக் கவலைப்படாமல், டெசோவின் போராட்டங்கள் தொடருகிறது; என்றும் தொடரும்.

டெசோவின் பயணம் தொடரும்!

உண்மை உணர்வாளர்களே, வீண் விமர்சன வேலைக்கு இது நேரமல்ல; விதண்டாவாதங்களை விலக்கி வையுங்கள் என்பதே எங்களின் வேண்டுகோள்! அப்படி அவர்கள் வைக்காவிட்டாலும், இப்படை தமது பெரும் பயணத்தை என்றும் ஏற்றத்தோடு, எழுச்சியோடு நடத்திடும் - விரைந்திடுவோம். இலக்கு நோக்கி அதில் வெற்றியும் பெற்று விடுவோம் என்பதிலும் அய்யமில்லை. நமது குறி - இலக்கு - மட்டுமே!

ஆகவே தமிழினப் பெரு மக்களே! 12ஆம் தேதியை மறவாதீர். முழுவேலை நிறுத்தத்தை வெற்றியாக்கித் தாரீர்! தாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

10.3.2013

சென்னை

தமிழ் ஓவியா said...


வாழ்க நீ அம்மா, வையத்தின் நாட்களெல்லாம்!

எங்கள் அன்னையே,
இலட்சிய தீபமாய்
எங்கள் இதய மேடையில்,
என்றும் ஒளிரும்
அணையா விளக்கே!
பெரியார் புரட்சி
எரிமலைதான்
சிந்தனை வீச்சிலும்,
செயல்பாட்டிலும்!
மூப்பு எனும் நோய்
முட்டிச் சாய்க்காமல்
முழு வாழ்வையும் முட்டுக் கொடுத்து நிமிர்த்திய நித்திலமே!
தலைவரை 95இல்
கரை சேர்த்து
58இல் தன்னை
மூழ்கடித்துக் கொண்ட
தியாக தேசத்தின்
தலை நகரே!
நாத்திக இயக்கத்தைத்
தலைமை தாங்கி
நானிலமே அதிர
நடத்திக் காட்டிய
முதல் பெண்மணி எனும்
முத்திரையைப் பொறித்த
மூச்சுக் காற்றே!
உங்கள் எளிமையே
எங்கள் வலிமை!
உங்கள் தியாகமே!
எங்களின் பாதைக்கு
எச்சரிக்கை விளக்கு!
இராமன் கூட்டம்
இந்த மண்ணில்
இடம் பிடிக்க
இயன்ற மட்டும்
எகிறிப் பார்த்தும்
இயலவில்லை;
என்ன காரணம்
தெரியமா?
அன்னையே நீ
அன்று மூட்டிய
இராவண லீலா!
அந்த நெருப்பை
அணையவிடோம்!
முடிந்தால் அந்த
நெருப்பு நதியை
வடக்குப் பக்கமும்
திருப்புவோம்!
ஆமாம் இந்தியாவை
அடிமைப்படுத்த
ஆரியக் கூட்டம்
ராமன் வில்லை
கையில் எடுக்கிறது
இராவண லீலா எனும்
தத்துவத்தின்
எரிதழல்தான்
சாம்பல் ஊருக்கு - அதனை
அனுப்பி வைக்கும்
அணுகுண்டு!
சமுதாய தடத்தில் நீ
சமைத்துக் கொடுத்த
சமருக்கான அந்த ஆயுதம்
அரசியலுக்கும்
தேவைப்படுவதை
என்னென்போம்!
காவிமயமாக்க
கனவு காணும்
ஆரியத்தின் கர்ப்பத்தை
அடி தெரியாமல்
அழிக்கும்
பீரங்கியல்லவா
இராவண லீலா தத்துவம்!
அய்யாவின் தத்துவம்
அவர் வழி நின்ற
அன்னையின்
செயலாக்கம்
அயோத்தியின்
அடி வயிற்றையும்
கலக்கப் போகிறது!
கலகக் குரலையும்
கொடுக்கப் போகிறது!
காவியங்கள் புதிதாய்
காய்க்கப் போகின்றன
இராமாயணக் குழியில்
இராவணாயணம் மலரப் போகிறது!
யார் கண்டது?
அயோத்தி மேட்டில்
அய்யா, அம்மா சிலைகள்
முளைத்தாலும்
ஆச்சரியம் இல்இல!
அந்த நாளை எதிர்பார்த்து
அம்மா இன்றைக்கு உங்கள் சிலைக்கு
மாலை சூட்டுவோம்!
வாழ்க நீ அம்மா
வையத்தின்
நாட்களெல்லாம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


எங்களுக்கு எதிரிகள் இவர்களல்ல - ராஜபக்சேதான்! தமிழர் தலைவர் பேட்டி


சென்னை, மார்ச் 10- எங்களுக்கு எதிரிகள் குறுக்குச் சால் பாய்ச்சுபவர்களல்லர் - எங்களின் எதிரி ராஜபக்சேதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று மணியம்மையார் - பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து வெளியில் வந்த திராவிடர் கழகத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி களுக்கு அளித்த பதிலாவது.

இன்று மணியம்மையார் பிறந்த நாள், தம் வாழ்நாளையே தந்தை பெரியாரையும், அவர்தம் இலட்சியங்களையும், அய்யா உருவாக்கிய இயக்கத்தையும் கட்டிக் காத்திட தம் பொருள், உழைப்பு அத்தனையையும் அர்ப்பணித்த அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில், அவர்களின் தொண்டறத்தைத் தொடர உறுதி ஏற்கிறோம் என்று கூறிய தமிழர் தலைவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்தபோது குறிப்பிட்டதாவது:

டெசோவை குறை கூறுபவர்களைப் பற்றியோ, அது அறிவித்திருக்கும் முழு அடைப்புக்குறித்தோ குறை கூறுபவர்கள், குறுக்குச் சால் ஓட்டுபவர் களைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யவோ, விளக்கம் அளிக்கவோ எங்களுக்கு அவசியம் இல்லை. தேவையும் இல்லை, நேரமும் இல்லை.

எங்களுக்கு எதிரி எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கக் கூடிய ராஜபக்சேதான்.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் ஈனக்குரல்களைப் பற்றி நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?

டெசோவின் பயணமும், களமும் எந்த முட்டுக்கட்டைகளாலும் தடைபடாது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்.

தமிழ் ஓவியா said...


வீண் விமர்சனம் வேண்டாம்; வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்!


ஈழத் தமிழர் பிரச்சினைக்கான களத்தில் ஒரு முக்கிய கால கட்டத்தில் டெசோ முகிழ்த்துக் கிளம்பியுள்ளது.

ஈழத் தமிழர்களின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், ஈழத் தமிழர் களுக்காக ஒரு சிறு புள்ளியை நகர்த்தினாலும் அதனை வரவேற்பார்கள். அப்படி வரவேற்கப் பக்கு வம் இல்லாத மூடிப் போட்ட மனம் உள்ளவர்களாக இருப்பவர்கள்கூட எதிர் விமர்சனங்கள் வைக்காமல் இருந்தாலே போதுமானது. டெசோவைப் பொறுத்த வரையில், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையில் மிகவும் தெளிவாகவே இருக் கிறார்கள்.

சென்னையில் இலங்கைத் துணைத் தூதர கத்தை முற்றுகையிடும் போராட்டம் டெசோ சார்பில் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெசோ தலைவர் மானமிகு கலைஞர் - அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்கூட (6.3.2013) வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு என்று முதிர்ச்சி கனிந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

டெசோ உறுப்பினரும் திராவிடர் கழகத் தலை வருமான மானமிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளிலும் இக்கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பிற அமைப்புகளுக்கு - அவற்றின் தலைவர்களுக்கு ஏனிந்த பொறுப் புணர்ச்சி ஏற்படவில்லை? ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் அது எமக்கே உரித்தானது என்று எப்படி காப்புரிமை கொண்டாடுகிறார்கள்? இந்த இடத்தில்தான் இவர்களின் பொறுப்பின்மையும், பொது நல நோக்கமின்மையும், பிரச்சினையின்மீது ஆழமான பிடிப்பு இன்மையும், பொதுப் பணியில் கடைப்பிடிக்க வேண்டிய தார்மீகப் பண்புகள் இன்மையும் பளிச் சென்றே புலப்படுகின்றன.

டெசோ சார்பில் சென்னையில் மாநாடு நடத்தப் பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எல்லாம் பங்கேற்கக் கூடிய மிக முக்கியமான மாநாடு இது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதற்குமுன் இந்த வகையில் மாநாடு நடத்தப்பட்டதும் இல்லை - நியாயமாக அதனை வரவேற்க வேண்டும்; முடியா விட்டால் குறைந்தபட்சம் வாயை மூடிக் கொண்டாவது இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் முதல் அந்தக் கூட்டணியில் சில எதிர்பார்ப்புகளை மனதில் பூடகமாக வைத்துக் கொண்டு இருந்தவர்கள் வரை எப்படியெல்லாம் எதிர்ப்பாட்டுப் பாடினார்கள்?

இலங்கையில் உள்ள புத்த பிக்குகள் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று கோரிக்கையை முன் வைத்ததைப் பார்த்த பிறகாவது - இலங்கை அரசின் அலறலைச் செவி மடுத்த பிறகாவது - அந்த மாநாட்டின் அருமையை புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?

காழ்ப்புணர்ச்சியின் காவலராக இருக்கக் கூடியவர்கள் இன்றுவரை அந்தக் கீழிறக்கத்தி லிருந்து தங்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என்பது வருந்தத்தக்கது. இவர்கள் எல்லாம்தான் மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஜெனிவாவில் - மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியாவை ஆதரிக்கச் செய்வது அவசியமா - இல்லையா? இதற்கு முதலில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தியாவை ஆதரிக்கச் செய்வதற்கான முயற்சியில் டெசோ செயல்பட்டு வருவது போல வேறு எவராவது - அமைப்பாவது செயல்படுவதுண்டா என்பதை சவால் விட்டே கேட்கிறது டெசோ.

நாளை தமிழ்நாடு தழுவிய அளவில் இதற்காக வேலை நிறுத்தத்திற்கு டெசோ வேண்டுகோள் விடுத்ததை வேறுவிதமாக திசை திருப்பும் கருத் துக்களைத் தெரிவிப்பது யாரை உற்சாகப்படுத்த?

இத்தகைய விமர்சனங்கள் சம்பந்தப்பட்டவர் களின் பொறுப்பற்ற மனப்போக்கைத்தான் பறை சாற்றும்; தங்களைத் தாங்களே இதன் மூலம் அம்பலப் படுத்திக் கொண்டு விட்டனர் என்றுதான் பொருள்.

இந்தப் பிரச்சினையில் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ள கருத்து - அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இது அந்த அமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடியது என்பதில் அய்ய மில்லை. சில நேரங்களில் சிலரால் திறக்கப்படும் வாய்கள் எதிர்காலத்தில் பல சிக்கல்களை வரவ ழைத்துக் கொள்ளக் கூடியவை. யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.

தமிழினப் பெருமக்களே, டெசோ கொடுத்துள்ள வேலை நிறுத்த அழைப்பு இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது - ஒத்துழைப்பைத் தாரீர்! 11-3-2013

தமிழ் ஓவியா said...


சபாஷ் கெலட்!


இராஜஸ்தான் மாநிலத்தைப் பாருங்கள்! பாருங்கள்! அம்மாநில காங்கிரஸ் அரசு ஓர் எடுத்துக்காட்டான செயலைச் செய்து, இந்தி யாவே அதனைத் திருப்பிப் பார்க்குமாறு செய்துள்ளது.

ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொள்ளும் இணையருக்கு ரூ.5 இலட்சம் வழங்குகிறது! மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது பழங்குடியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். மற்றொருவர் உயர் ஜாதியைச் சேர்ந்த வராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

ராஜஸ்தான் போன்ற ராம நாம மனப்பான்மை குடி கொண்டிருக்கும் மாநி லத்தில் ஜாதி ஒழிப்புக்காக, கவர்ச்சியான வசீகர மான வகையில் பரிசை அளித்திருப்பது அசாதார ணமானதே!

அந்த ராஜஸ்தான் மாநிலத்தில்தான் கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் வைத்துக் கொளுத்தும் உடன்கட்டை ஏறுதல் என்பது விசேடம். ரூப்கன்வர் கோயிலை மறக்கத்தான் முடியுமா? இந்த 21ஆம் நூற்றாண் டிலும் இந்துத்துவா எப்படி மதம் கொண்டு நிர்வாண ஆட்டம் போடுகிறது என்ப தற்கு அக்கோயில் கண் கண்ட சாட்சியமாகும்.

இந்தியாவில் குழந் தைகள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று, தங்குத் தடையின்றி ஏறுநடை போடுவதும் சாட்சாத் இந்த ராஜஸ்தானில்தான்.

மன்னர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் இந்த மண்ணில் மகுடந்தரித்து இன்றும் காணப்படுகின் றன. சொச்சங்களின் அந்தச் சரணாலயம்தான் இன்றைய பா.ஜ.க.,; அம்மாநிலத்தில் மன்னர் குடும்பத்தினர் இந்துத் துவா ரத்த ஓட்டமுள்ள பா.ஜ.க. என்னும் அரசியல் வேடந்தரிக்கும் அரண் மனையில் அரசோச்சு கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில், ஜாதி ஒழிப் புக்காக காங்கிரஸ் கட் சியைச் சேர்ந்த முதல் அமைச்சர் அசோக் கெலட் அட்டகாசமாக, புதிய ஆணையைப் பிறப்பித்து இந்தியத் துணைக் கண்டத் தின் பிடரியில் ஓர் அடி போட்டு அறிவித்துள்ளார்.

ஆம், வடக்கே பெரியார் தம் தாடியையும், தடியையும் காட்டத் தொடங்கி விட் டார். காங்கிரஸ் வெறும் அரசியல் சனாதனக் கட்சி யாக இல்லாமல், அசோக் கெலாட் தூக்கிப் பிடித் துள்ள சுடரை தொடர் ஓட்டமாக (Relay Race) எடுத்துச் செல்லட்டும் - காங்கிரஸ்மீது கூட முற் போக்கு முத்திரை படிய வாய்ப்புண்டே!

- மயிலாடன் 11-3-2013

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள்? எத்தனை எத்தனை குரல்கள்!


ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நேர் எதிரானவர்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன அதிகாரிகளும் என்பது உலகறிந்த உண்மை!

மத்திய அரசின் கொள்கைகளை இந்த மே(ல்)தாவிகள்தான் பெரிதும் வழிகாட்டி வகுக்கும் நிலை அங்குள்ளது!

இனமணி வைத்தியநாதய்யர் ஒரு கேள்வி கேட்கிறார் - இன்று தலையங்கத்தில்:

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்பற்றி (தீர்மான இறுதி வடிவம் முடிந்து விட்டதா என்று கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்) தீர்மானமில்லா தீர்மானம் என்று கூறுகிறார்! அவரது தீவிர உணர்வுக்கு ஷொட்டு கொடுக்கும் வேளையில், ஒன்றைக் கேட்கிறோம். இந்த தீர்மானம் இல்லா தீர்மானத்தை ரத்து செய்ய, தடுக்க, எதிலும் சம்மன் இல்லாது எங்கும் ஆஜராகும் சுப்ரமணியசாமி பார்ப்பனர்கள் இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் ஆலாய்ப் பறப்பதேன் - அனுமார் தாவல் செய்வது ஏன்?

மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு ஏடும் தலையங்கத் தடுமாற்றத்தில் வீழ்ந்து கிடக்க வேண்டிய அவசியம் என்னவோ!

பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! போற்றி!!

- என்று அண்ணா சொன்ன ஆரிய மாயை எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

தமிழ் ஓவியா said...


மறதியும் - மன்னிப்பும்!


மறதியைவிட மனிதனுக்குப் பெரும் குறைபாடு வேறொன்றுமில்லை.

கடமைகளை மறந்துவிட்டு காலங் கழித்தால் நாம் அடைய வேண்டிய இலக்குகளை கோட்டை விட்டு விடுவோம்; பிறகு வருந்துவதில் என்ன பயன்? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘It you don’t use it, you will lose it’
எதையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கத் தவறினால், அது உங்களுக்குப் பயனற்றதாக - அல்லது பயன்படுத்த லாயக்கற்றதாக ஆகி விடும்! மூளையும் அப்படித்தான்!

தந்தை பெரியார் அவர்களுக்கு 95 வயதில் கூட நல்ல நினைவு வன்மை இருந்தது; எங்களுக்கெல்லாம் மிகுந்த வியப்பாகக்கூட இருக்கும்; சில நேரங் களில் அய்யா சொல்வது எங்களுக்கு வேடிக்கையாகவும்கூட இருக்கும்.

என்னப்பா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது என்று அருகில் நின்று கொண்டி ருக்கும் எங்களைப் பார்த்துச் சொல் லுவார் அய்யா.

ஒரு முறை நான் லேசாக புன்ன கைத்தேன். அதைக் கவனித்து விட்ட தந்தை பெரியார் அய்யா ஏன் சிரிக் கிறாய்? என்று கேட்டார்.

நான் ஒன்றுமில்லை அய்யா, இந்த (95) வயதில் உங்களுக்கு மறதி உண்டு என்று சொல்லி சங்கடப்படுகிறீர்கள் ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கே ஏராள மறதி உண்டாகும்போது மறக் காது எங்களிடம் கேட்கும் நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே என்றேன். அமைதியாகச் சிரித்துக் கொண்டார்!

அருகில் இருந்த அன்னை மணியம் மையார் அவர்கள் உடனே ம் உங்கள் அய்யாவுக்கு பணம் வரவேண்டும் என்றால் மறதி இருக்காது; பணம் (எனக்கு) தர வேண்டுமென்றால் மட்டும் மறதி வந்து விடுமே! என்றார்!

அது மட்டுமா? இன்னும் வேடிக் கையாக, காது இப்போதெல்லாம் சரிவரக் கேட்பதில்லை என்று உங்க அய்யா சொல்லுவார்; ஆனால் பணம் பற்றி மெதுவாக நாம் பேசினால், அப்போது மட்டும் உங்க அய்யாவுக்கு எப்படியோ காதுகேட்கத் தவறாது; தவறவே தவறது என்றார் நகைச் சுவையாக!

அய்யாவின் மறதி வெகு அபூர்வம்! அதுபோலவே அவரது ஈரோட்டுக் குருகுல மாணவர் கலைஞர் அவர்களுக் கும் மறதி வருவதில்லை; நினைவாற்றல் அதிகம்.
பொதுவாக மறதி கூடாது என்பது வாழ்க்கைக்குத் தேவை என்ற போதிலும் கூட, மற்றவர் இழைத்த துன்பத்தை மறந்து விடுவதுதான் நல்லது.

அதற்கு மறதி எத்தகைய உற்ற துணைவன்? துன்பம் மட்டுமா? நமக்கு ஏற்பட்ட துயரத்தைக்கூட மறக்காமல் அது மனதை நிரந்தரமாக வாட்டிக் கொண்டே இருந்தால், தூக்கம் வருமா?

எனவே வாழ்க்கைக்கு மறதியும் தேவை. அகவாழ்வில் இலக்கியங்களில் தலைவன் - தலைவியை மறத்தல்தான் எத்தனைப் பெரும் சோகம்? பிரிவாற் றாமை இவற்றை உருவாக்குகிறது!

அதையும் சுட்டிக் காட்டுதல் தானே நியாயம்?

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோமால் என்ற சிலப்பதிகார தலைவியின் கூற்றுபற்றி எனது பேரா சிரியர் நண்பர்கள் கூறும், மேற்கோள் இன்னமும் என்னால் மறக்க இயல வில்லை!

மறப்பது மட்டும் போதாது; பல நேரங்களில் மன்னிக்கவும் நாம் ஆயத்தமாக வேண்டும். மறத்தல் சாதாரண குணம். மன்னிப்பது பெருங் குணம் - அருங்குணம்!
தண்டிப்பதைவிட உயர்வு மன்னிப்பது என்பது!

சில நேரங்களில் சிலர் மன்னிப் பார்கள், மறக்க மாட்டாது நினை விலேயே வைத்திருப்பார்கள். அது பழைய பாக்கியை தள்ளுபடி செய்து விட்ட பிறகும் சொல்லிக் காட்டும் கொடுமை போன்ற உறுத்தல் மனப் பாங்கு.

அதுவும் தவிர்க்கப்பட்டால் பிற ருக்கு நன்மை என்பதைவிட நமக்கு நிம்மதி; மகிழ்ச்சி, பண்பட்ட மனத்திற்கு நாம் உரியவர்களாகி உயர்ந்து நிற்போம் - இல்லையா?

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...


மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் நடந்தது என்ன?

ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேட்டில் காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காகத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் 10.3.2013 மதியம் 12 மணியளவில் அங்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் (நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது பிறகு தெரிய வந்தது) இளங்கோவனுக்கும், சுப. வீரபாண்டியனுக்கும் எதிராகக் குரல் எழுப்பினர்.

அப்போது பட்டினிப் போரில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் ஒருவரான பிரிட்டோ நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்; எங்கள் போராட்டத்திற்கு எல்லோரது ஆதரவும் தேவை. எனவே எங்கள் போராட்டத்தில் சிலர் உள்ளே புகுந்து இதனை அரசியலாக்கவேண்டாம் என்று ஒலி வாங்கி மூலம் கேட்டுக்கொண்டார். உடனே பந்தலில் இருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கலவரம் செய்தவர்களைப் பார்த்து,

வெளியேறு வெளியேறு, எங்கள் போராட்டத்தை அரசியல் ஆக்காமல், வெளியேறு வெளியேறு! என்று முழக்கமிட்டனர். அதன்பின், அந்தக் கலவரக் குழு கலைந்து சென்றது. இதுதான் அங்கு உண்மையில் நடந்தது.

தமிழ் ஓவியா said...


எது தகிடுதத்தம்?


போர் என்றால்

சாக மாட்டார்களா

என்று

தத்துவார்த்தம் பேசி

ஈழத் தமிழர்

படுகொலைக்கு

ஜெ போட்ட

கூட்டத்தினர் -

இலங்கைப் பிரச்சினையில்

இந்தியா

மூக்கை நுழைக்கலாமா?

அந்நிய நாட்டுப்

பிரச்சினையில்

இன்று நாம் நுழைந்தால்

நாளை இந்தியாவுக்குள்

அந்நியர்

தலையீடு

தலை தூக்காதா?

என்று

மேதாவித்தனத்தின்

மேளத்தைக் கொட்டியவர்கள்

ஈழத் தமிழர்களுக்காக

இருபதுக் குடம்

கண்ணீரைச்

சிந்துவது

தகிடுதத்தம் இல்லையா?

ஏமாறுவான் தமிழனெனத்

தப்புக் கணக்குப்

போட்டால்

வட்டியும் முதலுமாக

பாடம் போதிப்பர் -

துள்ள வேண்டாம்!

ஈழத் தமிழர்க்காக

எந்தமிழர் எழுந்தார்

ஏறு போல் என்றால்

ஏன் நோக்காடு?

வேலை நிறுத்தம்

வேலை செய்கிறது!

வீடணர் கூட்டம்

வெம்புகிறது

யாருக்குச் சேவகம்

செய்ய விருப்பமோ?

ராஜபக்சே விரைவில்

பாராட்டு வெகுமதி

கொடுப்பான் என்று

எச்சில் ஒழுகக்

காத்திருப்போருக்குக்

கிடைக்காமலா போகும்?

அண்ணாவின்

பெயர் வைத்து

அக்ரகாரக்

கொள்கையை

அன்றாடம்

ஆவர்த்தனம்

செய்வதும்

பூணூலுக்குப் புது

விளக்கம் கொடுத்து

தமிழர்களைச்

சூத்திரர்கள் என்று

இழிவுபடுத்துவதும்

அண்ணா சொன்ன

ஆரிய மாயையின்

அடையாளத்தைக்

காட்டுவதும்

அண்ணா தி.மு.க. என்றால்

அதன்

இலட்சணத்தை என்ன சொல்ல!

புத்த மார்க்கத்தில்

ஆரியம் அன்று

திராவிடர் இயக்கத்தில்

ஆரியம் இன்று என்று

வரலாறு வடித்து வைக்கும்

கல்வெட்டை

மறக்க வேண்டாம்!

- மின்சாரம்


(இன்றைய நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் புதுவகை தகிடுதத்தம் பொது வேலை நிறுத்தம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதைக்குப் பதிலடி இது).12-3-2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு, நீதி கோரி நடத்தும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது!


கலைஞருக்கு உலகத்தமிழ் அமைப்பு பாராட்டுக் கடிதம்!

தெற்கு கரோலினா (அமெரிக்கா) மார்ச் 12- அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப் பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெசோ அமைப்பை மீண்டும் கூட்டி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலைக்கு நீதி கோரி நீங்கள் போரட் டங்கள் நடத்தி வருவ தும் வரவேற்கத் தக்கது-பாராட்டுக்குரியது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர் களுக்கு மார்ச் 7ஆம் தேதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து எங்களுடைய அமைப்பு உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பிரச்சினை களை முன் எடுத்து வரு கிறது. உலகில் உள்ள மற்ற மக்களைப்போல தமிழ் மக்களுக்கும் அய்க் கிய நாடுகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ளபடி பிரிக்க முடியாத உரிமை களும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சுதந்திர மும் அவர்களது உயிர் களுக்கும், உடமைகளுக் கும் பாதுகாப்பும் கொண் டவர்கள் ஆவர்.

உலகத்தமிழ் அமைப்புகளில் உள்ள நாங்கள் தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சி லின் 22-வது கூட்டத் தொடரில் இலங்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வலு வான தீர்மாத்திற்கு இந் திய அரசு ஆதரவளிக்க நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மீண்டும் டெசோ அமைப்பைக் கூட்டி தமிழர்களுக்கு எதிராக சிங்கள இலங்கை அரசு தொடுத்த போர்க்குற்றங் களுக்கும் இனப் படு கொலைக்கும் நீதியும், பொறுப்பையும் கோரி போரட்டங்களை நடத்தி வருவதை நாங் கள் பாராட்டி வரவேற் கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந் தியா ஆதரிப்பதோடு மட் டும் நின்று விடாமல், ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் தீர்மானத்துக்கு திருத்தங் களையும் இந்தியா கொண்டு வர வேண்டும் என்று உங்களை அவசர மாகக் கேட்டுக் கொள் வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறாம்.
அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அதன் தலைவர் திருமதி நவ நீதம் பிள்ளை 11.2.22013 அன்று அளித்துள்ள அறிக்கையில் இலங்கை யில் உள்ள அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய பெருங்கொடுமைகளை, விசாரிக்க சுயேட்சையான நம்பகரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்திய அரசில் தங் களுக்குள்ள செல்வாக் குடனும் மற்றும் தங்க ளுக்கு தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆத ரவுடனும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரிக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து ஆதரிப் பதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

அய்.நா. மனித உரி மைகள் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இலங்கைப் பிரச்சினைகளில் இந் தியாவின் நிலையை எதிர்நோக்குகின்றன. எனவே விசாரணைக் கமிஷனுக்கு இந்தியா வின் ஆதரவு அந்த நாடு களின் வாக்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி தமிழர்களுக்கு வேண்டிய நீதி கிடைக்க உதவும்.

இது ஈழத் தமிழர்க ளுக்கு நீதியையும் ஒரு கௌரவமான அரசியல் தீர்வையும் கொண்டு வருவதற்கு ஒரு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாகும்.
இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பின் தலை வர் செல்வன் பச்சமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

(நன்றி: முரசொலி, 12.3.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே!



நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?

என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்

என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்

என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?

எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?

பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!

அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!

இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?

பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?

அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிவிடவில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?

குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே! - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?

கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?

சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?

மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?