Search This Blog

11.3.13

வீண் விமர்சனம் வேண்டாம்! 12ஆம் தேதி வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்!


ஈழத் தமிழர் பிரச்சினையில் கூட்டணிக் கட்சிகளின்
கருத்தைக் கேட்டு இந்திய அரசு முடிவு செய்ய வேண்டும்
நாளை முழு அடைப்பை வெற்றியாக்கித் தாரீர்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளில் தலையிடுவது இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதாகும் என்கிறது மத்திய அரசு. 

வங்கதேசத்துக்காக முஜிபுர் ரகுமானுக்கு பிரதமர் இந்திராகாந்தி உதவி செய்தது எந்த அடிப்படையில்? என்று டெசோ தலைவர் கலைஞர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு, நாளை நடக்கவுள்ள முழு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு எழுதியுள்ள அறிக்கை வருமாறு:

இந்திய அரசு வருகின்ற ஜெனிவாவில் அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமைப் பறிப்புக் கொடுமைகள், இனப்படுகொலை போன்றவற்றை மய்யப்படுத்தியும் உள்ளடக்கியும், இலங்கை அதிபர் கொடுங்கோலன் இராஜ பக்சேவை சர்வதேச சுதந்திர நீதி விசாரணைக்கு ஆளாக்கிடும் வகையில் வரும் தீர்மானத்தை - இந்திய அரசு ஆதரிக்க முன் வர வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை டெசோ பல்வகை அறப் போராட்டங்கள்மூலம் கொடுத்து வருகிறது!

மற்ற பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும், உலகின் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து தந்தும் வருகின்றனர்.

ஒட்டு மொத்தமான கருத்து - வெளிநடப்பு!

இந்திய நாடாளுமன்த்தின் மக்கள் அவையில் தி.மு.க. கொடுத்திருந்த தீர்மானத்தினையொட்டி நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசைத் தவிர, மற்ற அத்துணைக் கட்சிகளும், இந்திய அரசின் நிலைப்பாடு உறுதியாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, இறுதியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களது உரை உப்புச்சப்பு இல்லாத, இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடாகவே அமைந்த காரணத்தால், தி.மு.க., துவங்கி அனைத்துக் கட்சிகளும் வெளிநடப்புச் செய்து தங்களது ஒட்டு மொத்த எதிர்ப்பினைக் காட்டும் வகையில், அதைப் பதிவு செய்தனர்.

இந்த சுவரெழுத்தைப் பாடமாகக் கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா - ஆளும் காங்கிரஸ்?

இன்னும் கேட்டால், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கையாக ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையோ, உள்நாட்டுத் திட்டங் களோ அமைய வேண்டுமே தவிர, பெரிய கட்சியாகிய காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுக் கொள்கையாகவே இருக்கலாமா?

கூட்டணி தர்மமா?

இது கூட்டணி தர்மமாகுமா? கூட்டணி அரசு இருப்பதற்கு முக்கிய ஆதரவுக் கட்சியாகிய தி.மு.க.வின் கருத்தை அறிந்து, கூட்டணிக் கட்சிகளை, அதன் தலைவர்களை அழைத்து விவாதித்து, இலங்கைப் பிரச்சினை - ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற தமிழ்நாட்டுத் தமிழர்கள் முதல் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலரும் வேதனைப் படக் கூடிய தமிழர் இன அழிப்பு, போர்க் குற்றங்கள், போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில்கூட, ஏற்கெனவே இந்திய அரசுக்கும் உலகத்திற்கும் இராஜபக்சே அரசு கொடுத்த எந்த வாக்குறுதியும் அரசியல் தீர்வு - தமிழர் மீள் குடியேற்றம் போன்ற எதையும் செய்யாதது மட்டுமல்ல, அதன் பிறகும் முள்வேலி சிறை, இராணுவத்தின் கொடும்பிடி, சிங்களர் களை தமிழர்கள் பகுதிகளில் குடியேற்றுவது, தமிழ்க் கிராமங்கள், நகரங்கள் சிங்களமயமாக் குதல் - இப்படிப் பலப் பல கொடுமைகள் தொடரு கின்றன!

போரின்போது இலங்கை என்ன சொன்னது?

போரின் போது இந்திய அரசுக்கும், உலகத் திற்கும்  அது  என்ன சொன்னது?
No Fire Zone  குண்டு வீசாத பகுதி என்று அறிவித்து, பொது மக்களை - சிவிலியன்களை கூடும்படிச் செய்து பல்லாயிரம் தமிழர்களை கொத்துக் குண்டுகளை வீசி இனப்படுகொலை யாகவே நிகழ்த்தியதே - அதுபற்றி டுடுசுஊ ஏதாவது மேல் நடவடிக்கைத் துரும்பைக்கூட அசைக்க வில்லையே!

இரண்டாவது முறையும் ஆட்சிக்கு எப்படி வந்தனர்?

போர் என்று அதைக் கூறுவதே வெட்கம் இல்லையா? சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் வெளி நாட்டவரா? இல்லை இலங்கையின் - சொந்தக் குடிமக்களான ஈழத் தமிழர்கள்தானே! போரே குற்றம்; அதற்கு மேலும் போர்க் குற்றங்கள்.

இந்நிலையில் உலக நாடுகள் இதனைக் கண்டிக்க விழிகளை அகலத் திறந்து, நட வடிக்கைகளைத் துவங்கும் நிலையில், தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்குகளால் டில்லி சிம்மாசனத்தை இரண்டாவது முறையும் அலங்கரிப்போர், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக பேசுவதா?
இராஜபக்சேவை வரவழைக்கிறீர்கள் - தமிழர்களின் உணர்வுகளை மிதிப்பதுபோல.

மேலும் நாடாளுமன்றத்தில் இதோபதேசம் அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று பொறுப்பற்ற முறையில், தமிழர் களின் பொறுமையை, துச்சமாக எண்ணி விளக் கம் கூறலாமா?

டெசோ தலைவரின் உருக்கமான வேண்டுகோள்!

டெசோவின் தலைவர், இந்தியாவின் மூத்த அரசியல் ஞானி, அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசு இரண்டாம் முறையும் ஆட்சிக்கு வர உதவியதோடு, பல நேரங்களில் அதற்கு ஏற்பட்ட சோதனைகள், ஆபத்துகளி லிருந்து அதனைக் காப்பாற்றிய மானமிகு கலைஞர் அவர்கள், நேற்று மத்திய அரசுக்கு உருக்கமாக விடுத்துள்ள  அறிக்கையில் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்குப் பிறகாவது சரியான பாதைக்கும், உரிய தீர்வு காணுவ தற்கும் முன்வர வேண்டாமா?

மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால், பண்டித நேரு அவர்கள் தென்னாப்பிரிக்காவின் நிற வெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா? வங்காளதேசத்தில் விடுதலை வீரர் முஜிபூர் ரகுமானுக்கு அன்னை இந்திரா காந்தி அம்மை யார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற கேள்விகளை யெல்லாம் வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வரும் உலகத் தமிழர்கள் கேட்க மாட்டார்களா? (டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை)

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்னாயிற்று?

அது மட்டுமா? இதற்குமுன் இந்தியா போட்ட ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்னாச்சு? (1987 ஜூலை 29) 40 ஆண்டுகளில் ஈழத் தமிழர்ப் பிரச்சினக்குத் தீர்வு என்பதாகத் தானே இந்திய அரசு அப்போது தம்பட்டம் அடித்தது?

அது வெறும் குப்பைக் கூடைக்குப் போனது என்றாலும், அது உள்நாட்டு விவகாரத் தலையீடு ஆகாதா?

இராஜீவ்காந்தி இந்திய அமைதிப் படையை (IPKF) அனுப்பி, அங்குள்ள உள்நாட்டவரிடம் போரிடச் செய்தது; அதை இலங்கை அரசு SOS ஆக கருதியும் - இரு தரப்பும் உள்நாட்டு விவகாரத் தலையீடு என்று கூறி தடுத்து விட்டார்களா? தவிர்த்து விட்டார்களா? இது என்ன சொத்தை வாதம்?
அய்.நா.வின் அறிக்கை மற்றும் மனித உரிமை ஆணையமும் சுட்டிக் காட்டிய பிறகும் யாருக்கோ வந்த விருந்து என்பது போல இந்திய அரசு - மத்திய அரசு நடந்து கொள்வதா?

கோழியைக் கேட்டு மிளகாய் அரைக்க முடியுமா?

கோழியைக் கேட்டு மிளகாய் அரைக்க முடியுமா? என்று கிராமங்களில் ஒரு பழமொழி கூறுவதுண்டு. குற்றவாளிகளை நீதிபதியாக்க முடியுமா? அதுபோல அப்பட்டமான போர்க் குற்றம், இன அழிப்பு வேலைகளைச் செய்ததோடு, போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமான வாழ்வுரிமை களை வழங்க மறுப்பது அரசியல் தீர்வா?

அண்ணா சொன்ன உதாரணம்!

அண்ணா முன்பு அருமையானதொரு உதாரணம் சொன்னார்; வீட்டில் உள்ள கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் காதலில் கொஞ்சிக் கொள்ளும்போது எட்டிப் பார்ப்பதுதான் குற்றமேயொழிய, ஒருவர் கழுத்தை மற்றவர் பிடித்து நெரித்துக் கொல்லும்போது, பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்றுங்கள் என்றவுடன் காவல்துறைக்குக் கூறி, அவர்களை நல்வழிப் படுத்துவது உள் விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாதே என்று சொன்னார் அண்ணா.

12ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தாரீர்!

அதுதானே இன்றைய நிலை? இதில் மத்திய அரசு தனது இலங்கை ஆதரவுப் போக்கை மாற்றிக் கொள்ளவே 12ஆம் தேதி (நாளை) பொது வேலை நிறுத்தம் முழு அடைப்பு என்ற அறவழி, அன்பு வழிப் போராட்டம்! அரசியல் பார்வை இன்றி மனித நேயத்தோடு இதற்கு ஆதரவு தர அனைவரையும் வேண்டிக் கொள்கி றோம்.

----------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்  சென்னை  "விடுதலை” 11.3.2013

41 comments:

தமிழ் ஓவியா said...


வீண் விமர்சனம் வேண்டாம்; வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்!


ஈழத் தமிழர் பிரச்சினைக்கான களத்தில் ஒரு முக்கிய கால கட்டத்தில் டெசோ முகிழ்த்துக் கிளம்பியுள்ளது.

ஈழத் தமிழர்களின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், ஈழத் தமிழர் களுக்காக ஒரு சிறு புள்ளியை நகர்த்தினாலும் அதனை வரவேற்பார்கள். அப்படி வரவேற்கப் பக்கு வம் இல்லாத மூடிப் போட்ட மனம் உள்ளவர்களாக இருப்பவர்கள்கூட எதிர் விமர்சனங்கள் வைக்காமல் இருந்தாலே போதுமானது. டெசோவைப் பொறுத்த வரையில், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையில் மிகவும் தெளிவாகவே இருக் கிறார்கள்.

சென்னையில் இலங்கைத் துணைத் தூதர கத்தை முற்றுகையிடும் போராட்டம் டெசோ சார்பில் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெசோ தலைவர் மானமிகு கலைஞர் - அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்கூட (6.3.2013) வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு என்று முதிர்ச்சி கனிந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

டெசோ உறுப்பினரும் திராவிடர் கழகத் தலை வருமான மானமிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளிலும் இக்கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பிற அமைப்புகளுக்கு - அவற்றின் தலைவர்களுக்கு ஏனிந்த பொறுப் புணர்ச்சி ஏற்படவில்லை? ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் அது எமக்கே உரித்தானது என்று எப்படி காப்புரிமை கொண்டாடுகிறார்கள்? இந்த இடத்தில்தான் இவர்களின் பொறுப்பின்மையும், பொது நல நோக்கமின்மையும், பிரச்சினையின்மீது ஆழமான பிடிப்பு இன்மையும், பொதுப் பணியில் கடைப்பிடிக்க வேண்டிய தார்மீகப் பண்புகள் இன்மையும் பளிச் சென்றே புலப்படுகின்றன.

டெசோ சார்பில் சென்னையில் மாநாடு நடத்தப் பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எல்லாம் பங்கேற்கக் கூடிய மிக முக்கியமான மாநாடு இது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதற்குமுன் இந்த வகையில் மாநாடு நடத்தப்பட்டதும் இல்லை - நியாயமாக அதனை வரவேற்க வேண்டும்; முடியா விட்டால் குறைந்தபட்சம் வாயை மூடிக் கொண்டாவது இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் முதல் அந்தக் கூட்டணியில் சில எதிர்பார்ப்புகளை மனதில் பூடகமாக வைத்துக் கொண்டு இருந்தவர்கள் வரை எப்படியெல்லாம் எதிர்ப்பாட்டுப் பாடினார்கள்?

இலங்கையில் உள்ள புத்த பிக்குகள் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று கோரிக்கையை முன் வைத்ததைப் பார்த்த பிறகாவது - இலங்கை அரசின் அலறலைச் செவி மடுத்த பிறகாவது - அந்த மாநாட்டின் அருமையை புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?

காழ்ப்புணர்ச்சியின் காவலராக இருக்கக் கூடியவர்கள் இன்றுவரை அந்தக் கீழிறக்கத்தி லிருந்து தங்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என்பது வருந்தத்தக்கது. இவர்கள் எல்லாம்தான் மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஜெனிவாவில் - மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியாவை ஆதரிக்கச் செய்வது அவசியமா - இல்லையா? இதற்கு முதலில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தியாவை ஆதரிக்கச் செய்வதற்கான முயற்சியில் டெசோ செயல்பட்டு வருவது போல வேறு எவராவது - அமைப்பாவது செயல்படுவதுண்டா என்பதை சவால் விட்டே கேட்கிறது டெசோ.

நாளை தமிழ்நாடு தழுவிய அளவில் இதற்காக வேலை நிறுத்தத்திற்கு டெசோ வேண்டுகோள் விடுத்ததை வேறுவிதமாக திசை திருப்பும் கருத் துக்களைத் தெரிவிப்பது யாரை உற்சாகப்படுத்த?

இத்தகைய விமர்சனங்கள் சம்பந்தப்பட்டவர் களின் பொறுப்பற்ற மனப்போக்கைத்தான் பறை சாற்றும்; தங்களைத் தாங்களே இதன் மூலம் அம்பலப் படுத்திக் கொண்டு விட்டனர் என்றுதான் பொருள்.

இந்தப் பிரச்சினையில் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ள கருத்து - அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இது அந்த அமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடியது என்பதில் அய்ய மில்லை. சில நேரங்களில் சிலரால் திறக்கப்படும் வாய்கள் எதிர்காலத்தில் பல சிக்கல்களை வரவ ழைத்துக் கொள்ளக் கூடியவை. யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.

தமிழினப் பெருமக்களே, டெசோ கொடுத்துள்ள வேலை நிறுத்த அழைப்பு இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது - ஒத்துழைப்பைத் தாரீர்! 11-3-2013

தமிழ் ஓவியா said...


சபாஷ் கெலட்!


இராஜஸ்தான் மாநிலத்தைப் பாருங்கள்! பாருங்கள்! அம்மாநில காங்கிரஸ் அரசு ஓர் எடுத்துக்காட்டான செயலைச் செய்து, இந்தி யாவே அதனைத் திருப்பிப் பார்க்குமாறு செய்துள்ளது.

ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொள்ளும் இணையருக்கு ரூ.5 இலட்சம் வழங்குகிறது! மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது பழங்குடியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். மற்றொருவர் உயர் ஜாதியைச் சேர்ந்த வராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

ராஜஸ்தான் போன்ற ராம நாம மனப்பான்மை குடி கொண்டிருக்கும் மாநி லத்தில் ஜாதி ஒழிப்புக்காக, கவர்ச்சியான வசீகர மான வகையில் பரிசை அளித்திருப்பது அசாதார ணமானதே!

அந்த ராஜஸ்தான் மாநிலத்தில்தான் கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் வைத்துக் கொளுத்தும் உடன்கட்டை ஏறுதல் என்பது விசேடம். ரூப்கன்வர் கோயிலை மறக்கத்தான் முடியுமா? இந்த 21ஆம் நூற்றாண் டிலும் இந்துத்துவா எப்படி மதம் கொண்டு நிர்வாண ஆட்டம் போடுகிறது என்ப தற்கு அக்கோயில் கண் கண்ட சாட்சியமாகும்.

இந்தியாவில் குழந் தைகள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று, தங்குத் தடையின்றி ஏறுநடை போடுவதும் சாட்சாத் இந்த ராஜஸ்தானில்தான்.

மன்னர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் இந்த மண்ணில் மகுடந்தரித்து இன்றும் காணப்படுகின் றன. சொச்சங்களின் அந்தச் சரணாலயம்தான் இன்றைய பா.ஜ.க.,; அம்மாநிலத்தில் மன்னர் குடும்பத்தினர் இந்துத் துவா ரத்த ஓட்டமுள்ள பா.ஜ.க. என்னும் அரசியல் வேடந்தரிக்கும் அரண் மனையில் அரசோச்சு கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில், ஜாதி ஒழிப் புக்காக காங்கிரஸ் கட் சியைச் சேர்ந்த முதல் அமைச்சர் அசோக் கெலட் அட்டகாசமாக, புதிய ஆணையைப் பிறப்பித்து இந்தியத் துணைக் கண்டத் தின் பிடரியில் ஓர் அடி போட்டு அறிவித்துள்ளார்.

ஆம், வடக்கே பெரியார் தம் தாடியையும், தடியையும் காட்டத் தொடங்கி விட் டார். காங்கிரஸ் வெறும் அரசியல் சனாதனக் கட்சி யாக இல்லாமல், அசோக் கெலாட் தூக்கிப் பிடித் துள்ள சுடரை தொடர் ஓட்டமாக (Relay Race) எடுத்துச் செல்லட்டும் - காங்கிரஸ்மீது கூட முற் போக்கு முத்திரை படிய வாய்ப்புண்டே!

- மயிலாடன் 11-3-2013

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள்? எத்தனை எத்தனை குரல்கள்!


ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நேர் எதிரானவர்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன அதிகாரிகளும் என்பது உலகறிந்த உண்மை!

மத்திய அரசின் கொள்கைகளை இந்த மே(ல்)தாவிகள்தான் பெரிதும் வழிகாட்டி வகுக்கும் நிலை அங்குள்ளது!

இனமணி வைத்தியநாதய்யர் ஒரு கேள்வி கேட்கிறார் - இன்று தலையங்கத்தில்:

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்பற்றி (தீர்மான இறுதி வடிவம் முடிந்து விட்டதா என்று கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்) தீர்மானமில்லா தீர்மானம் என்று கூறுகிறார்! அவரது தீவிர உணர்வுக்கு ஷொட்டு கொடுக்கும் வேளையில், ஒன்றைக் கேட்கிறோம். இந்த தீர்மானம் இல்லா தீர்மானத்தை ரத்து செய்ய, தடுக்க, எதிலும் சம்மன் இல்லாது எங்கும் ஆஜராகும் சுப்ரமணியசாமி பார்ப்பனர்கள் இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் ஆலாய்ப் பறப்பதேன் - அனுமார் தாவல் செய்வது ஏன்?

மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு ஏடும் தலையங்கத் தடுமாற்றத்தில் வீழ்ந்து கிடக்க வேண்டிய அவசியம் என்னவோ!

பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! போற்றி!!

- என்று அண்ணா சொன்ன ஆரிய மாயை எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

தமிழ் ஓவியா said...


ஆபாசம்


மகன்: சினிமாவில் ஆபாச குத்து பாடல் களுக்கு ஏ சான்று வழங்கப்படுமாமே, அப்பா?

அப்பா: அப்படியே கோயில்களில், தேர் களில் செதுக்கப்பட் டுள்ள ஆபாச சிற்பங் களை அகற்றுவது பற்றியும் அவசரமாக முடிவு செய்யலாமே, மகனே!

தமிழ் ஓவியா said...


மறதியும் - மன்னிப்பும்!


மறதியைவிட மனிதனுக்குப் பெரும் குறைபாடு வேறொன்றுமில்லை.

கடமைகளை மறந்துவிட்டு காலங் கழித்தால் நாம் அடைய வேண்டிய இலக்குகளை கோட்டை விட்டு விடுவோம்; பிறகு வருந்துவதில் என்ன பயன்? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘It you don’t use it, you will lose it’
எதையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கத் தவறினால், அது உங்களுக்குப் பயனற்றதாக - அல்லது பயன்படுத்த லாயக்கற்றதாக ஆகி விடும்! மூளையும் அப்படித்தான்!

தந்தை பெரியார் அவர்களுக்கு 95 வயதில் கூட நல்ல நினைவு வன்மை இருந்தது; எங்களுக்கெல்லாம் மிகுந்த வியப்பாகக்கூட இருக்கும்; சில நேரங் களில் அய்யா சொல்வது எங்களுக்கு வேடிக்கையாகவும்கூட இருக்கும்.

என்னப்பா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது என்று அருகில் நின்று கொண்டி ருக்கும் எங்களைப் பார்த்துச் சொல் லுவார் அய்யா.

ஒரு முறை நான் லேசாக புன்ன கைத்தேன். அதைக் கவனித்து விட்ட தந்தை பெரியார் அய்யா ஏன் சிரிக் கிறாய்? என்று கேட்டார்.

நான் ஒன்றுமில்லை அய்யா, இந்த (95) வயதில் உங்களுக்கு மறதி உண்டு என்று சொல்லி சங்கடப்படுகிறீர்கள் ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கே ஏராள மறதி உண்டாகும்போது மறக் காது எங்களிடம் கேட்கும் நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே என்றேன். அமைதியாகச் சிரித்துக் கொண்டார்!

அருகில் இருந்த அன்னை மணியம் மையார் அவர்கள் உடனே ம் உங்கள் அய்யாவுக்கு பணம் வரவேண்டும் என்றால் மறதி இருக்காது; பணம் (எனக்கு) தர வேண்டுமென்றால் மட்டும் மறதி வந்து விடுமே! என்றார்!

அது மட்டுமா? இன்னும் வேடிக் கையாக, காது இப்போதெல்லாம் சரிவரக் கேட்பதில்லை என்று உங்க அய்யா சொல்லுவார்; ஆனால் பணம் பற்றி மெதுவாக நாம் பேசினால், அப்போது மட்டும் உங்க அய்யாவுக்கு எப்படியோ காதுகேட்கத் தவறாது; தவறவே தவறது என்றார் நகைச் சுவையாக!

அய்யாவின் மறதி வெகு அபூர்வம்! அதுபோலவே அவரது ஈரோட்டுக் குருகுல மாணவர் கலைஞர் அவர்களுக் கும் மறதி வருவதில்லை; நினைவாற்றல் அதிகம்.
பொதுவாக மறதி கூடாது என்பது வாழ்க்கைக்குத் தேவை என்ற போதிலும் கூட, மற்றவர் இழைத்த துன்பத்தை மறந்து விடுவதுதான் நல்லது.

அதற்கு மறதி எத்தகைய உற்ற துணைவன்? துன்பம் மட்டுமா? நமக்கு ஏற்பட்ட துயரத்தைக்கூட மறக்காமல் அது மனதை நிரந்தரமாக வாட்டிக் கொண்டே இருந்தால், தூக்கம் வருமா?

எனவே வாழ்க்கைக்கு மறதியும் தேவை. அகவாழ்வில் இலக்கியங்களில் தலைவன் - தலைவியை மறத்தல்தான் எத்தனைப் பெரும் சோகம்? பிரிவாற் றாமை இவற்றை உருவாக்குகிறது!

அதையும் சுட்டிக் காட்டுதல் தானே நியாயம்?

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோமால் என்ற சிலப்பதிகார தலைவியின் கூற்றுபற்றி எனது பேரா சிரியர் நண்பர்கள் கூறும், மேற்கோள் இன்னமும் என்னால் மறக்க இயல வில்லை!

மறப்பது மட்டும் போதாது; பல நேரங்களில் மன்னிக்கவும் நாம் ஆயத்தமாக வேண்டும். மறத்தல் சாதாரண குணம். மன்னிப்பது பெருங் குணம் - அருங்குணம்!
தண்டிப்பதைவிட உயர்வு மன்னிப்பது என்பது!

சில நேரங்களில் சிலர் மன்னிப் பார்கள், மறக்க மாட்டாது நினை விலேயே வைத்திருப்பார்கள். அது பழைய பாக்கியை தள்ளுபடி செய்து விட்ட பிறகும் சொல்லிக் காட்டும் கொடுமை போன்ற உறுத்தல் மனப் பாங்கு.

அதுவும் தவிர்க்கப்பட்டால் பிற ருக்கு நன்மை என்பதைவிட நமக்கு நிம்மதி; மகிழ்ச்சி, பண்பட்ட மனத்திற்கு நாம் உரியவர்களாகி உயர்ந்து நிற்போம் - இல்லையா?

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...

வெற்றியடையச் செய்வாய் வேலை நிறுத்தத்தை! டெசோ தலைவர் கலைஞர் அழைக்கிறார்!

கலைஞர் கடிதம்

சென்னை, மார்ச் 11- நாளை நடக்கவிருக்கும் வேலைநிறுத்தம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

உடன்பிறப்பே,

டெசோ சார்பில் ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்தவிருக்கின்ற பொதுவேலை நிறுத்தத்திற்கு இடையிலே இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கின்றது.

ஈழத் தமிழர் பிரச்சினை உலக நாடுகளின் கேந்திர மய்யமான அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்திலும், இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யிலும் பரபரப்போடு பேசப்பட்டு, பல்வேறு வகையான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக் கிற நிலையில், அதற்கு முன்பே அய்.நா. மனித உரிமை கள் ஆணையமே, 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கை யைத் தயாரித்து, அதன் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்கள் 11-2-2013 அன்று சமர்ப்பித் திருக்கிறார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விவரங்கள் :-

காணாமற்போன தமிழர்கள்

இலங்கையில் போர் நடந்த நேரத்தில் பெரிய வர்களும், சிறார், சிறுமிகளுமாக பல ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர் களைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாகச் செயல் படுத்தவில்லை. எனவே காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது; அவர்கள் ஏன் திரும்பப் பெறப்படவில்லை? ராணுவம் வாபஸ் பெறப் படாததுடன், மேலும் மேலும் குவிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது. உள்நாட்டுப் போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன் றவை சரியாக நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை அரசு முழுமையான விசாரணையை நடத்தியதா?

மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழுமையான விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தும் பணியைக் கூடச் செயல்படுத்தவில்லை.

தமிழ் ஓவியா said...

இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு, அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக் கின்ற நிலையில் - ஈழத் தமிழர்களுக்காக - அவர்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் சோகங்களை எண்ணி, இரவும் பகலும் நாம் துடித்துக் கொண் டிருக்கின்ற நேரத்தில், நமக்கு ஆறுதல் அளித்து - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் ஒருசில நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்துபவையாக அல்லவா உள்ளன! குறிப் பாக நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுடைய ஈரமில்லாத உரைகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ஜெனீவாவில் நடைபெறும் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும் என்று சொல்லி யிருக்கிறார். மேலும் அவர், அந்தத் தீர்மானம் தொடர் பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு எட்டும் வாய்ப்பை ஆராயும்படி இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸைக் கேட்டுக் கொண்டுள்ளேன். தனக்கு எதிரான தீர் மானத்தை முன்மொழியாமல் அமெரிக்காவைத் தடுக்கும் வாய்ப்புகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதுவரை சம்பந்தப் பட்டவர்கள் காத்தி ருக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. நமது படை வரிசையில் முன் நின்று நமக்காகப் போரிட வேண்டிய தளபதி, எதிரிப் படையின் முன் வரிசையில் நின்று அவர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கு வதைப் போலத்தான் இந்த அமைச்சரின் பதில் அமைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்!

செய்தியாளர்களிடம் மட்டுமல்ல; நாடாளு மன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற அகில இந்தியக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசைக் கண்டித்து கடுமையாக வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு பேசும்போது இலங் கையில் போரின் போது 90 ஆயிரம் பெண்கள் விதவை களாக ஆக்கப்பட்டனர்; சுமார் இரண்டு லட்சம் ஆண்களும், குழந்தைகளும் காணா மல் போயினர்; ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்; இரண்டாவது உலகப்போர், போஸ்னியா, ஈராக், தெற்கு சூடான் உள்நாட்டுப் போர்கள் ஆகியவற்றை விட இலங்கை உள்நாட்டுப் போர் மிக மோசமானது என்று வேதனை களைக் கொட்டினார். தம்பி தயாநிதி மாறன் பேசுகையில், ராஜீவ்காந்தி ஆட்சியின்போது இலங்கையில் தமிழர் களுக்காக இந்தியா உணவுப் பொட்டலங்கள் போட்டபோது, இந்தியன் என்பதற்காகப் பெருமைப் பட்டேன். இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை `சேனல் - 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் நடவடிக்கைகளை இளைஞர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் உன்னிப்பாகக் கவனித் துக் கொண்டுள்ளனர். இந்தியா என்ன செய்யப் போகிறது என்று உலகமே பார்க்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று உருக்கத்தோடு வேண்டிக் கொண்டார்.
பா.ஜ.க. சார்பில் பேசிய அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திரு.யஷ்வந்த் சின்கா அவர்கள், இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை உடனே அகற்ற இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக வெளியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பாரபட்சமில்லாத சர்வதேச விசாரணைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். அய்.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நாடாக மட்டும் இந்தியா விளங்கக் கூடாது ; இந்தியாவே அந்தத் தீர்மானத்தை முன் னெடுத்துச் செல்லும் நாடாக இருக்க வேண்டும் என்றே பேசினார்.

காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரியின் பேச்சு

தமிழ் ஓவியா said...

ஏன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய நமது நண்பர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதை இந்தியாதான் செயல்படுத்த முடி யும் என அவர்கள் நம்புகின்றனர். அதனால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தம்பி தொல்.திருமாவளவன் பேசும்போது, நாம் நினைக்கிற படி இலங்கை ஒரு நாளும் நட்பு நாடாக இருந்தது இல்லை. இலங்கைத் தலைவர்கள் இங்கே வருகிற போது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறோம், ஆனால் நமது தலைவர்கள் அங்கே சென்றால் தாக்கு தலுக்கு ஆளாகிறார்கள். இந்தியாவை இலங்கை பல்வேறு கட்டங்களில் அவமதித்து இருக்கிறது. எனவே இந்தியா, இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முழக்கமிட்டிருக்கிறார்.

அனைத்துக் கட்சிகளின் ஒருமித்தக் குரல்

மேலும் அ.தி.மு.க.வின் சார்பில் திரு. தம்பிதுரையும், ராஷ்ட்ரீய ஜனதா சார்பில் திரு.லாலு பிரசாத் யாதவ் அவர்களும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் திரு. முலாயம் சிங் யாதவ் அவர்களும், மார்க்சிஸ்ட் உறுப்பினர் திரு. பி.ஆர். நடராசன் அவர்களும், இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் திரு.லிங்கம் அவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சவுக்கத்தா ராய் அவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாராசிங் அவர்களும், இலங்கைத் தமிழர் களுக்காக அங்கே குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஏமாற்றந்தானா?

ஆனால் நாம் யாரிடமிருந்து ஒரு உறுதியான - திடமான அறிவிப்பு கிடைக்குமென்று எதிர்பார்த் திருந்தோமோ, அவர்களிடமிருந்து ஏமாற்றம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. விவாதத்திற்குப் பதிலளித்த சல்மான் குர்ஷித் பேசும்போது, நட்பு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டு அங்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என நெருக்குதல் கொடுப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியண்ணன் போலவும், சூப்பர் போலீஸ் போலவும் செயல்படுவது இந்தியாவின் வெளியுறவுக் கொள் கைக்கு உகந்தது அல்ல என்றெல்லாம் பேசியிருப் பதும்; காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், அபிஷேக் சிங்வி பெங்களூரில் அளித்த பேட்டியில், இந்திய அரசு இந்தப் பிரச்சினையை நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்க்கிறது. நாங்கள் எந்த ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை யிலும் தலையிடமாட்டோம். அதுவும், அண்டை நாடு, இந்தியாவின் மதிப்பு மிக்க நட்பு நாடான இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று கூறியிருப்பதும், உலகத் தமிழ் மக்களிடையே மிகப் பெரிய வருத்தத்தையும், வேதனையையும் ஏற் படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் உரைக்குப் பதிலளித்த பிரதமர் பேச்சிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து எந்த விதமான உறுதியும் தரப்படவில்லை. இலங்கை யிலே உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள் கையைக் கடைப்பிடித்திருந்தால் பண்டித நேரு அவர்கள் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் பிரச் சினையில் தலையிட்டிருக்க முடியுமா? வங்காளதேசத் தில் விடுதலை வீரர் முஜிபூர் ரகுமானுக்கு, அன்னை இந்திரா காந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற கேள்விகளை யெல்லாம் வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வரும் உலகத் தமிழர்கள் கேட்கமாட் டார்களா? நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு, தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகளின் உறுப் பினர்கள் அவையிலிருந்தே வெளிநடப்புச் செய் திருக்கிறார்கள். இலங்கையின் போர்க் குற்றங் களுக்குப் போதுமான, நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. அய்க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் சுதந்திர மானதொரு விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியாவில் உள்ள சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் தலைமை இயக்குநர் திரு. அனந்த பத்மநாபன் கூறியிருக்கிறார்.

நிவாரணப் பணிகள் நிறைவளிக்கவில்லை

தமிழ் ஓவியா said...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகக் கொடுமை கள், மோசமாக தமிழர்கள் நடத்தப்படுதல், தமிழர்களைத் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து நடப்பதாக பிரிட்டன் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர், திரு.டேவிட் தெரிவித்திருக்கிறார். அமெ ரிக்கா இலங்கைக்கு இரண்டு முறை உண்மை கண் டறியும் குழுவை அனுப்பியும், அந்தக் குழு; நிவா ரணப்பணிகள் நிறைவளிப்பதாக இல்லை என்றே கூறியுள்ளது. இவ்வாறு சர்வதேச அமைப்புகள், விசா ரணைகள், சாட்சியங்கள் ஆகியவை இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலை ஆகியவற்றுக்கு அதிபர் மகிந்தர் ராஜபக்சேவே பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டியவர் என்றுதான் காட்டுகின்றன. இதையெல்லாம் முன் வைத்தும்; மத்திய அரசின் அணுகுமுறை மாற வேண்டும் என்பதற்காகவும், ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொள்ள வேண்டு மென்பதற்காகவும், தேவையான அழுத்தத்தைத் தருவதற்காகத்தான் டெசோ இயக்கத்தின் சார்பில் வருகின்ற 12ஆம் தேதி - 12 மணி நேரம் - அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை - பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம். அந்த வேலை நிறுத்தத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாகப் பங்கேற்று வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ச் சொந்தம் என்ற உரிமையோடு கேட்கிறேன்

உடன்பிறப்பே, உன்னைத் தவிர நான் வேறு யாரைப் போய்க் கேட்கப் போகிறேன்? நீ தொண் டனாக இருந்தாலும் - தொழிலாளியாக இருந்தாலும் - அல்லது ஆசிரியராக இருந்தாலும் - மாணவராக இருந்தாலும் - விவசாயியாக இருந்தாலும் - அரசு அலுவலராக இருந்தாலும் - யாராக இருந்தாலும் தமிழ்ச் சொந்தம் என்ற உரிமையோடு தம்பி என்ற முறையில், தழுதழுத்தக் குரலில் - தமையன் நான் கேட்கிறேன்!

தமிழ் ஓவியா said...

தமிழனாகப் பிறந்த நீ; ஒட்டுமொத்தத் தமிழின மும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டிய தருணமிது என்பதைத் தவறாமல் உணர்ந்து தடந்தோள் உயர்த்திப் புறப்படுக!

அலுவலகம் செல்வோரை அறவழியில் கெஞ்சிக் கேட்டு - அமைதியாகக் கோரிக்கை விடுத்து - அவர் களும் நீயும் இணைந்து நின்று இந்த அறவழி, ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய முடியாதா? முடியும்! நிச்சயமாக முடியும்! எதிராகக் கப்பியிருக்கும் இருள் கிழித்து; வெளிக் கிளம்பும் உதய விடியலாக உன் பணி திகழட்டும்; ஒரு நாள் தான்! ஒரு நாள் கூட அல்ல; காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை; தமிழ் ஈழத்தில் ரத்தம் சிந்தியவர் களுக்கு - உயிர் இழந்தோர்க்கு - வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்போர்; ஆம்; நம் உடன் பிறப்புகளுக்கு உற்றுழி உதவிட நாம் இயற்றும் தவம்தான் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம்!

வெற்றியடைச் செய்வாய் வேலை நிறுத்தத்தை!

கோடிக்கணக்கான தமிழர்களில் - இங்கு வாழ் வோர் - அவர்கள் எங்கு வாழ்வோராயினும்; அவர் கள் இதயம் குளிர, நாம் இயற்றப் போகும் வேள்வி இது என்ற சங்கல்பத்தோடு விடியும், விடியும், இங் குள்ள தமிழர்க்கு மட்டுமல்ல; இலங்கை வாழ் ஈழத் தமிழர்களுக்கும் நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக் கையோடு நாளை நடைபெறும் அறவழி வேலை நிறுத்தத்தை - அன்பு வழி வேலை நிறுத்தத்தை - அமைதி வழி கடைப்பிடித்து வெற்றியடையச் செய் வோம்; வாராய் என்று என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே, உன்னை அழைக் கிறேன் வா!

அன்புள்ள,
மு.க.

(முரசொலி, 11.3.2013)

தமிழ் ஓவியா said...


தமிழுக்கு ஆட்சிமொழித் தகுதி வழங்கவேண்டும் மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு


புதுடில்லி, மார்ச் 11- தமிழ் மொழிக்கு ஆட்சி மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து டில்லி மாநிலங் களவையில் திருச்சி சிவா எம்.பி. (தி.மு.க.) பேசினார்.

அனைத்து மாநில மொழிகளுக்கும், மத்திய அரசின் ஆட்சிமொழித் தகுதி வழங்க வகை செய் யும் ஆட்சி மொழிகள் மசோதா-2012 என்ற பெயரில் தனி நபர் தீர் மானத்தை டில்லி மாநி லங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்து நேற்று (8.3.2013) பேசினார். அப் போது அவர் கூறியதா வது:-

எங்கே தமிழ் மொழியை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தி மொழி ஆதிக்கம் செலுத் திவிடுமோ என்ற அச் சத்தில், இந்தித் திணிப் புக்கு எதிராக தமிழ்நாடு தான் முன்னின்று போராட்டம் நடத்தி யது. தமிழ்நாட்டில் இந் தித் திணிப்புக்கு எதிரான மாபெரும் போராட் டத்தை அண்ணாவும், கலைஞரும் தொடங்கி நடத்தினார்கள். 1950-களில், வியட்நாமில் புத் தத் துறவிகள் தீக்குளித்த சம்பவத்துக்கு பின்பு, தீக் குளிப்பு என்பது இந்த இந்தி எதிர்ப்புப் போராட் டத்தின்போதுதான் நடைபெற்றது.

அப்போது நாட்டின் முதல் பிரதமரான பண் டித ஜவகர்லால் நேரு, மாநிலங்களின் விருப்பத் துக்கு மாறாக எந்தவொரு மொழியும் திணிக்கப் படமாட்டாது என்ற உறுதிமொழியை தந்தார்.

பன்மொழி கொண்ட நாடு என்பதால், இந்தி திணிப்புக்கு எதிராகவும், பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கக்கோரியும் தமிழ் நாடு போராட்டக் களத் தில் குதித்தது. தமிழ் மொழி இலக் கியங்களின் ஆழம் மற் றும் பரப்பெல்லையை, தமிழ்நாட்டு மக்கள் பெரு மிதமாகக் கருதினர். தமிழ் இலக்கியங்கள் எந்த மொழி இலக்கியத் தையும்விட குறைந்தது அல்ல. ஆனால் அதற் கான அங்கீகாரம் கிடைத்தபாடில்லை.

ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளுக் கெல்லாம் முந்தைய பழ மையான மொழி தமிழ் மொழி. இப்போதுதான் தமிழ் மொழிக்கு செம் மொழித் தகுதி கிடைத் திருக்கிறது. மக்களை இணைப் பது மொழிதான் என்ற கருத்து ஏற்புடையது அல்ல.

மக்களை இணைப் பது மொழி என்பது தான் உண்மை என்றால், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண் டும், மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்காரும் பிரிக்கப் பட்டு தனி மாநிலங்கள் ஆகி இருக்க முடியாது. எனவே தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி வழங்க வேண்டும்.

- இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவுடன் பேசமாட்டார்களாம்... இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை


கொழும்பு, மார்ச் 11- அய்.நா. மனித உரிமைகள் தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியா அளித்த ஆலோ சனையை இலங்கை நிராகரித்து விட்டது.

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந் தது. இது குறித்தும், போர்க் குற்றங்கள் குறித்தும் சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தி யுள்ளது.

தீர்மானத்தின் நகல்கள் கடந்த ஏழாம் தேதி பல்வேறு நாடு களின் பிரதிநிதிகளுக்கும் விநியோகிக் கப்பட்டன. இது குறித்து அமெரிக் காவுடன் பேச்சு நடத்தி இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்மானம் நிறைவேற வழிகாணுமாறு இலங்கைக்கு, இந் தியா ஆலோசனை தெரிவித்தது. ஆனால், இந்த யோசனையை இலங்கை திட்டவட்டமாக நிரா கரித்து விட்டது.

இது தொடர்பாக, அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் டான்ஹு வெள்ளிக் கிழமை ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த ரவிநாதா ஆர்யசின்ஹா பேசியதாவது: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த எங்கள் நாடு உத்தேசிக்கவில்லை. அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம் சத்தை இலங்கை முற்றிலுமாக நிரா கரிக்கிறது. கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் அமெரிக்க ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அத்தீர்மானத்தில், சாதகமான ஓர் அம்சம் இருந்தது.

இலங்கை அரசின் ஒப்புதலின் பேரில் மட்டுமே மனித உரிமைகளுக்கான ஆணையர் அலுவ லகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே அது. இந்த விஷயத்தில் என்ன நட வடிக்கை எடுத்தோம் என்பது குறித்து அறிக்கை தருமாறு மனித உரிமை கவுன்சில் மேற்கண்ட அலுவலகத் தைக் கேட்டுக் கொண்டது. ஆனால், இதற்கு மாறாக மனித உரிமைகளுக் கான ஆணையர் நவி பிள்ளை செயல் பட்டுள்ளார். அவர் மனித உரிமை கவுன்சிலுக்கு அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் தன்னிச்சையாகவும், தேவையின்றித் தலையிடுவதாகவும், அரசியல் உள் நோக்கம் கொண்டவையாகவும் உள் ளன.

இலங்கையில் போர்ப் படிப்பி னைகள் மற்றும் நல்லிணக்க ஆணை யத்தின் பரிந்துரைகளை அமல்படுத் தும் செயல்திட்டம் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் மறுசீர மைப்புப் பணிகளுக்கு நவி பிள்ளை உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.

நவி பிள்ளை அளித்த பாரபட்ச மான அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா இப் போது கொண்டுவந்துள்ள வரைவுத் தீர்மானம் கோருகிறது. இது, கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தைக் கருத்தில் கொள்ளாததோடு, அதிலிருந்து முற்றிலுமாக விலகிச் சென்றுள்ளது.

ஒரு நாட்டுக்கு அய்.நா. பார்வை யாளர்கள் வருகை புரிவது என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் அல்லது அழைப்பின் பேரில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று அய்.நா. பொதுச் சபை மற்றும் மனித உரிமை கவுன்சில் இயற்றிய தீர்மானங் களுக்கு மாறாக அமெரிக்காவின் இப் போதைய தீர்மானம் அமைந்துள்ளது. பல்வேறு மனித உரிமைகள் விவகா ரத்தில், அய்.நா. பார்வையாளர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி இலங் கைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கத் தீர் மானம் கூறுகிறது.

தீர்மானம் என்ற பெயரில், சில நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவமானப்படுத்தி அவற்றை தனி மைப்படுத்துவது தேவையற்றது. குறிப்பாக, இலங்கை 30 ஆண்டு காலப் போருக்குப் பின் மறுசீரமைப்புப் பணிகளில் கணிசமான முன்னேற் றத்தை எட்டியுள்ள நிலையில், இந்த அணுகுமுறை தேவையில்லை என்றார் ரவிநாதா ஆர்யசின்ஹா.

தமிழ் ஓவியா said...


மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் நடந்தது என்ன?

ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேட்டில் காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காகத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் 10.3.2013 மதியம் 12 மணியளவில் அங்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் (நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது பிறகு தெரிய வந்தது) இளங்கோவனுக்கும், சுப. வீரபாண்டியனுக்கும் எதிராகக் குரல் எழுப்பினர்.

அப்போது பட்டினிப் போரில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் ஒருவரான பிரிட்டோ நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்; எங்கள் போராட்டத்திற்கு எல்லோரது ஆதரவும் தேவை. எனவே எங்கள் போராட்டத்தில் சிலர் உள்ளே புகுந்து இதனை அரசியலாக்கவேண்டாம் என்று ஒலி வாங்கி மூலம் கேட்டுக்கொண்டார். உடனே பந்தலில் இருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கலவரம் செய்தவர்களைப் பார்த்து,

வெளியேறு வெளியேறு, எங்கள் போராட்டத்தை அரசியல் ஆக்காமல், வெளியேறு வெளியேறு! என்று முழக்கமிட்டனர். அதன்பின், அந்தக் கலவரக் குழு கலைந்து சென்றது. இதுதான் அங்கு உண்மையில் நடந்தது.

தமிழ் ஓவியா said...


நாளை முழு வேலை நிறுத்தம்:பல தரப்பிலும்பேராதரவு!


சென்னை, மார்ச் 11- இலங்கை அரசைச் செல்லமாகக் கண்டிக்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மார்ச் 12 ஆம் தேதி (நாளை) தமிழ்நாட்டில் டெசோ அமைப்பின் சார்பில் நடைபெறும் முழு வேலை நிறுத்தத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண் டிருக்கிற அய்.நா. மனித உரிமைப் பேர வைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன் மொழியவுள்ள வரை வுத் தீர்மானத்தில் சுயேச்சையான சர்வ தேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி இந்திய அரசை வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் 12-3-2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

அய்.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளில் ஏறத்தாழ 30 நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந் துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக வெளிப்படை யாக அறிவித்துள்ளன.

ஆனால் இந்திய அரசு தம்முடைய உறுதியான நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களும் அகில இந்திய அளவிலான பிற கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.

இந்திய அரசின் சிங்கள ஆதரவு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன், மக்களவையில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அளித்த பதிலுரை மனநிறைவு அளிக்க வில்லை எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள், திமுக, அதிமுக, தேசிய கட்சிகளான பாஜக மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வெளிநடப்புச் செய்தனர். இதன் பின்னரும் இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டினை தெளிவு படுத்தவில்லை.

ஆகவே, இந்திய அரசு, சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவிடக்கூடாது என்கிற அடிப் படையிலும், அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர் மானத்தை ஆதரிப்பதுடன், சர்வதேச விசாரணைக் கான திருத்தத்தையும் கொண்டுவர வேண்டுமென வற்புறுத்துகிற வகையிலும் இந்தப் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. கட்சி மாறுபாடு களின்றி தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டு மென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அமைதியான முறையிலும், அற வழியிலும் நடைபெறவுள்ள இந்த அறப்போராட் டத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் ஈழத் தமிழர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு முழு மையாக ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பொது வேலை நிறுத்தத்தின் மூலம் இந்திய அரசை, தமிழினத்திற்கு ஆதரவான நிலைப் பாட்டை மேற்கொள்ள வைப்பது சர்வதேசச் சமூக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்கும்.

ஆகவே, இந்தப் பொது வேலை நிறுத்தத்தை ஓர் இயக்கத்தின் போராட் டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


தமிழ் ஓவியா said...

தேசிய லீக் கட்சி

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள வெறியர்களால் படு கொலை செய்யப்பட் டார்கள். இன்றைய ராஜபக்சே அரசு மிகவும் அதிகமாக மனித உரிமை மீறல் கொலை களை செய்துள்ளது. இதை சேனல்-4 உலக அளவிலே உறுதிப்படுத்தியிருக்கிறது. மனித நேயம் படைத்த எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகள் உலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது.

சிறு பாலகனான பாலச்சந்திரனின் படுகொலை தமிழக மக்களின் இதயங்களை உருகச் செய்துள்ளது. வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா கொண்டுவர உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக 12.03.2013 அன்று தமிழகத்தில் டெசோ நடத்தும் முழு அடைப்பிலே ஒவ்வொரு தமிழனும் பங்கேற்க வேண்டும்.

இந்த முழு ஒரு நாள் அடைப்பை தமிழக அரசே முன்நின்று நடத்தி வைத்து இலங்கையில் வாழும் தமிழக மக்களின் உரிமைகளை காத்திட வேண்டும் என தேசிய லீக் கட்சித் தலைவர் பஷீர் அஹமது அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள் ளார்.

உழவர் உழைப்பாளர் கட்சி

டெசோ அமைப்பின் தலைவரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சியும் பங்கேற்று ஆதரவு தரும் என்பதை தெரி வித்துக் கொள்கிறேன் என்று உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய அறிக்கை வருமாறு:

ஜெனிவா நகரில் அமெரிக்கா கொண்டுவரும் இலங்கைக்கு எதி ரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக் சேவை போர்க்குற்ற வாளியாக அறிவித்து விசாரணை செய்து தண்டிக்க வேண்டும். இலங்கைவாழ் தமிழர்களுக்கு சிங் களர்களுக்கு வழங்கும் அத்தனை வாழ்வுரிமை யையும் தமிழர்க்கும் சமமாக வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு அளிப்பதுடன் பங்கேற்கும் என்பதை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு கு.செல்லமுத்து தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

டெசோ அமைப்பின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் மார்ச் 12 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத் தத்தில் ஜீவா கம்யூ னிஸ்ட் கட்சி பங்கேற் கிறதென்று இக்கட்சி யின் பொதுச்செய லாளர் அ.அயூப்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப்படுவதும் தமிழ் பெண்கள் பாலியல் வன்முறை செய்து கொல்லப்படுவதும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவதும் மீன் வலை களை அறுத்துவிடுவதுமான செயல்களைத் தொடர் கதையாக ராஜபக்சே அரசு செய்துவருவதும் தொடர்ந்து நடந்து வருவதும் நாடு அறியும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் ராஜபக் சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளி ராஜ பக்சே நிறுத்தப்பட வேண்டும் போன்ற விசயங்களுக் காக டெசோ அமைப்பு நடத்துகிற அனைத்துப் போராட்டங்களிலும் ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும்.

வரும் 12.3.2013 அன்று டெசோ அமைப்பு சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அ.அயூப்கான் கூறியுள்ளார்.

பார்வர்டு பிளாக்

டெசோ அமைப்பு அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் வல்லரசு பார்வர்டு பிளாக் பங்கேற்கிறது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி அறிவித்துள்ளார்.

அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறு வனத்தலைவர் பி.என்.அம்மாவாசி தமது அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தமிழ் ஈழத்தில் தமிழினத்தைப் படுகொலை செய்து வரும் சிங்கள இன வெறியன் ராஜபக்சே வின் கொடுஞ்செய லைக் கண்டித்து 12.3.2013 தேதியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு (டெசோ) சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் வல்லரசு பார்வர்டு பிளாக் பங்கேற்கிறது.

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மா னத்தை தமிழர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு இந்திய அரசு ஆதரவுதர வேண்டும் என வலியுறுத்தி நடைபெற இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக இந்த பொது வேலை நிறுத்தத்தை தமிழ் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.என்.அம்மாவாசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

தமிழ் மாநில தேசிய லீக்

டெசோ அமைப்பின் சார்பில் நாளை நடை பெறும் பொது வேலை நிறுத்தத்தில் தமிழ் மாநில தேசிய லீக் பங்கேற்கிறது. மேலும் ஈழத்தமிழர்களின் இன்னல்களை களைய நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தை இஸ்லாமிய பெருமக்கள், வர்த்தகர்கள் பங்கேற்று வெற்றியடையச் செய்வீர் என தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஆண்டுகள் பலவாகியும் இலங்கைத் தமிழர் களின் வாழ்வாதார உரிமைகளை பெறுவதற்கு இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்மக்கள், வந்தேறிய சிங்களர்களிடம் கையேந்தும் நிலை மாறவில்லை. வஞ்சனை, துரோகம், சூழ்ச்சிகளை எதிர்த்து ஆங்கிலேயர் காலத்திலிருந்து போராடி மடிந்தவர்கள் எண்ணற்ற தமிழர்கள். ஆனால் இழந்த உரிமை திரும்பபெற இயலவில்லை.

போராடும் தமிழர்களை அழித்து இனப்படு கொலை செய்து உலக சமாதான கொள்கைகளுக்கு முரணாக மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், வழிப்பாட்டுத் தளங்கள் மீதும் குண்டு வீசி பெண்கள், பச்சிளங்குழந்தைகள் என்றும் பாராமல் போர் எனும் பெயரால் கொலைக்குற்றம் செய்துள்ள இலங்கை அரசையும், ராஜபக்சேவையும் சர்வதேச நீதிமன்றம் முன்நிறுத்தி விசாரித்து தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழவும், இலங்கை போரால் அகதிகளாக உலகெங்கும் பரவிக்கிடக்கும், இலங்கை தமிழர்கள் உரிமையுடன், தாம் விட்டுச் சென்ற சொந்த நிலத்தில் கால் பதித்து சுயமரியாதை சம அந்தஸ்துடன் வாழவும், இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக 1956 ஆம் ஆண்டு முதல் போரா டியும், குரல் கொடுத்துவரும் தி.மு.கழகமும், இலங் கைத் தமிழர்களுக்காக ஆதரவு நல்கி வரும் அமைப்புகளும் இணைந்து விடுத்துள்ள வேண்டு கோளினை ஏற்றும் இன்னும் தமிழுணர்வு அழிந்து போகவில்லை, உலகத்தில் தமிழன் எங்கு வாழ்ந் தாலும் அவர்கள் நல்வாழ்வுக்காக தாய் தமிழகம் ஒற்றுமையாக குரல் எழுப்புவோம் என்பதை நிலை நாட்டிட டெசோ சார்பில் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் இஸ்லாமிய பெருமக் கள் வர்த்தகர்கள் தொழிலாளர்கள் பங்கேற்று ஆதரவு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்

தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் சென்னை மாநகர ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்கின்றனர் என்று சங்கத்தின் தலைவர் டி.தயாளரங்கன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இலங்கைத் தமிழர் நலன் காக்க டெசோ அமைப்பின் சார்பில் மார்ச் 12 அன்று தமிழகம் தழுவிய பொதுவேலை நிறுத்தத்தில் சென்னை மாநகர ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தில் செயல்படும் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு சென்னை மாநகர ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கதலைவர் டி.தயாளரங்கன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பரமணியன் வேண்டுகோள்

டெசோ அமைப்பின் சார்பில் புதுச்சேரியில் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு பொது மக்கள் வர்த் தக பெருமக்கள் ஆத ரவு நல்கிடுவீர் என மாநில அமைப்பா ளர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில் சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவால் நடத்தப்பட்டதெல்லாம் தமிழினப் படுகொலையே, அவர் அடுக்கடுக்காக செய்ததனைத் தும் போர்க்குற்றங்களே, அவர் மீறியதெல்லாம் மனித உரிமைகளையே, எனவே அவரைச் சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங் கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி நம்பகத் தன்மையுடன் கூடிய சர்வதேச விசா ரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் நடை பெற்ற இனப் படுகொலையைக் கண்டிக்கும் வகை யில் அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் மீது இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெசோ அமைப்பின் சார்பாக வரும் 12.3.2013 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட் டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த முழு அடைப்புப் போராட்டம் புதுவை மாநிலத்திலும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த குழுவில் உள்ள கழகத்தினர்கள் இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றிபெறும் வகையில் தோழமைக்கட்சி நிர்வாகி கள், இன உணர்வுள்ள இயக்கங்களின் தோழர் களோடு இணைந்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 9.3.2013 அன்று முரசொலி யில் எழுதி உள்ள கடிதத்தை துண் டறிக்கையாக அச்சிட்டு பொதுமக் களிடம் வழங்கி இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு செயலாற்றிட வேண் டும் என வேண்டுகோள் வைக்கின் றேன்.

அனைத்துப் பஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கி றேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மின் கழக ஊழியர்கள் பங்கேற்க முடிவு

மின்கழக ஊழியர்கள் முன்னேற்ற சங்கப் பொது செயலாளர் ரத்தின சபாபதி நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

இலங்கைக்கு எதிரான தீர் மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்த திமுக தலைவர் அழைப்பு விடுத்துள் ளார். எனவே, தொ.மு.ச. பேரவையில் இணைந்துள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம், மின் கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப் பினர்கள் பங்கேற்பர்.

விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி

இலங்கை அதிபர் ராஜ பக்சேவை உலக அரங் கில் போர்க் குற்றவாளி யாக அறி வித்து உரிய தண்டனை வழங்கிடவும், ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்களுக்குச் சுதந்திர வாழ்வு கிடைத்திடவும் வலி யுறுத்திவரும் 12ஆம் தேதி டெசோ அமைப்பின் சார்பில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட் டுள்ள பொது வேலை நிறுத்தத்தை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி யும், கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கமும் வரவேற்று பங்கு கொள்கின்றது என்று இதன் தலைவர் பொன்.குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

போர் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களை, குழந்தைகள், பெண் கள் முதியோர் எனப்பாராமல் லட் சக்கணக்கில் கொன்று குவித்த ராஜ பக்சே இலங்கையில் ஒரு கொடுங் கோல் அரசை நடத்தி வருகிறார். தாய்க்குமுன் மகனையும், தந்தைக்கு முன் மகளையும், அண்ணனுக்கு முன் தங்கையையும், அக்காவுக்கு முன் தம்பியையும் நிர்வாணமாக நடக்க வைத்து கொடூரமாக அவர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலையை இலங்கை அரசு செய்துள்ளது.

பிரபாகரனின் மகனான பாலச்சந் திரன் என்ற பச்சிளம் தளிரைக் கைது செய்து மனசாட்சியின்றி சுட்டுக் கொன்ற செய்தியை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் உலகுக்கு அறிவித்தது. இதை விட இலங்கை அரசின் ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களுக்கு சாட்சியங் கள் தேவையில்லை.

எனவே அய்.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை உலக நாடு களோடு சேர்த்து இந்தியாவும் ஆதரித்து இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என நிரூபித்திட முன்வரவேண்டும். அதன் மூலம் இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர் களுக்கு மறுவாழ்வு கிடைத்திட வேண்டும். சொந்த மண்ணில் குடியேற முடியாமல், காணாமல் போனவர் களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வடிகாலாக அமைந்திட வேண்டும்.

எனவே அய்.நா.சபையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்திடக்கோரியும், எஞ்சிய இலங்கைத் தமிழர்களைப் பாது காத்திடக்கோரியும் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை அரசியல் கலப்பின்றி அனைவரும் ஆதரித்திட வேண்டும்.

கலைஞர் அவர்களின் வேண்டு கோளை ஏற்று அரைகோடி கட்டு மானத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் அன்று ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் இந்தப் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி யடையப் பாடுபடுவார்கள்.

- இவ்வாறு பொன்குமார் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


எது தகிடுதத்தம்?


போர் என்றால்

சாக மாட்டார்களா

என்று

தத்துவார்த்தம் பேசி

ஈழத் தமிழர்

படுகொலைக்கு

ஜெ போட்ட

கூட்டத்தினர் -

இலங்கைப் பிரச்சினையில்

இந்தியா

மூக்கை நுழைக்கலாமா?

அந்நிய நாட்டுப்

பிரச்சினையில்

இன்று நாம் நுழைந்தால்

நாளை இந்தியாவுக்குள்

அந்நியர்

தலையீடு

தலை தூக்காதா?

என்று

மேதாவித்தனத்தின்

மேளத்தைக் கொட்டியவர்கள்

ஈழத் தமிழர்களுக்காக

இருபதுக் குடம்

கண்ணீரைச்

சிந்துவது

தகிடுதத்தம் இல்லையா?

ஏமாறுவான் தமிழனெனத்

தப்புக் கணக்குப்

போட்டால்

வட்டியும் முதலுமாக

பாடம் போதிப்பர் -

துள்ள வேண்டாம்!

ஈழத் தமிழர்க்காக

எந்தமிழர் எழுந்தார்

ஏறு போல் என்றால்

ஏன் நோக்காடு?

வேலை நிறுத்தம்

வேலை செய்கிறது!

வீடணர் கூட்டம்

வெம்புகிறது

யாருக்குச் சேவகம்

செய்ய விருப்பமோ?

ராஜபக்சே விரைவில்

பாராட்டு வெகுமதி

கொடுப்பான் என்று

எச்சில் ஒழுகக்

காத்திருப்போருக்குக்

கிடைக்காமலா போகும்?

அண்ணாவின்

பெயர் வைத்து

அக்ரகாரக்

கொள்கையை

அன்றாடம்

ஆவர்த்தனம்

செய்வதும்

பூணூலுக்குப் புது

விளக்கம் கொடுத்து

தமிழர்களைச்

சூத்திரர்கள் என்று

இழிவுபடுத்துவதும்

அண்ணா சொன்ன

ஆரிய மாயையின்

அடையாளத்தைக்

காட்டுவதும்

அண்ணா தி.மு.க. என்றால்

அதன்

இலட்சணத்தை என்ன சொல்ல!

புத்த மார்க்கத்தில்

ஆரியம் அன்று

திராவிடர் இயக்கத்தில்

ஆரியம் இன்று என்று

வரலாறு வடித்து வைக்கும்

கல்வெட்டை

மறக்க வேண்டாம்!

- மின்சாரம்


(இன்றைய நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் புதுவகை தகிடுதத்தம் பொது வேலை நிறுத்தம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதைக்குப் பதிலடி இது).12-3-2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு, நீதி கோரி நடத்தும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது!


கலைஞருக்கு உலகத்தமிழ் அமைப்பு பாராட்டுக் கடிதம்!

தெற்கு கரோலினா (அமெரிக்கா) மார்ச் 12- அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப் பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெசோ அமைப்பை மீண்டும் கூட்டி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலைக்கு நீதி கோரி நீங்கள் போரட் டங்கள் நடத்தி வருவ தும் வரவேற்கத் தக்கது-பாராட்டுக்குரியது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, கலைஞர் அவர் களுக்கு மார்ச் 7ஆம் தேதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து எங்களுடைய அமைப்பு உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பிரச்சினை களை முன் எடுத்து வரு கிறது. உலகில் உள்ள மற்ற மக்களைப்போல தமிழ் மக்களுக்கும் அய்க் கிய நாடுகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ளபடி பிரிக்க முடியாத உரிமை களும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சுதந்திர மும் அவர்களது உயிர் களுக்கும், உடமைகளுக் கும் பாதுகாப்பும் கொண் டவர்கள் ஆவர்.

உலகத்தமிழ் அமைப்புகளில் உள்ள நாங்கள் தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சி லின் 22-வது கூட்டத் தொடரில் இலங்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வலு வான தீர்மாத்திற்கு இந் திய அரசு ஆதரவளிக்க நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மீண்டும் டெசோ அமைப்பைக் கூட்டி தமிழர்களுக்கு எதிராக சிங்கள இலங்கை அரசு தொடுத்த போர்க்குற்றங் களுக்கும் இனப் படு கொலைக்கும் நீதியும், பொறுப்பையும் கோரி போரட்டங்களை நடத்தி வருவதை நாங் கள் பாராட்டி வரவேற் கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந் தியா ஆதரிப்பதோடு மட் டும் நின்று விடாமல், ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் தீர்மானத்துக்கு திருத்தங் களையும் இந்தியா கொண்டு வர வேண்டும் என்று உங்களை அவசர மாகக் கேட்டுக் கொள் வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறாம்.
அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அதன் தலைவர் திருமதி நவ நீதம் பிள்ளை 11.2.22013 அன்று அளித்துள்ள அறிக்கையில் இலங்கை யில் உள்ள அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய பெருங்கொடுமைகளை, விசாரிக்க சுயேட்சையான நம்பகரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்திய அரசில் தங் களுக்குள்ள செல்வாக் குடனும் மற்றும் தங்க ளுக்கு தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆத ரவுடனும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரிக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து ஆதரிப் பதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

அய்.நா. மனித உரி மைகள் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இலங்கைப் பிரச்சினைகளில் இந் தியாவின் நிலையை எதிர்நோக்குகின்றன. எனவே விசாரணைக் கமிஷனுக்கு இந்தியா வின் ஆதரவு அந்த நாடு களின் வாக்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி தமிழர்களுக்கு வேண்டிய நீதி கிடைக்க உதவும்.

இது ஈழத் தமிழர்க ளுக்கு நீதியையும் ஒரு கௌரவமான அரசியல் தீர்வையும் கொண்டு வருவதற்கு ஒரு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாகும்.
இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பின் தலை வர் செல்வன் பச்சமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

(நன்றி: முரசொலி, 12.3.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே!



நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?

என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்

என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்

என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?

எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?

பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!

அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!

இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?

பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?

அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிவிடவில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?

குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே! - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?

கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?

சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?

மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்தின் முடைநாற்றம்


கடவுள் என்கிற பெயரில் கோவில்களுக்குள் இருக்கும் கற்சிலைகள் தலையில் உடைத்து இருக்கலாமே!

சிலை உடைந்து போனால் இன்னொரு சிலை செய்துகொள்ளலாம்..

இருக்கும் ஒரு மண்டை உடைந்து போனால் இன்னொரு மண்டையை நமால் செய்ய முடியுமா.. ??

தேங்காயைக் கையால் உடைக்கும் போது எலும்பு, சதைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங் காயைத் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். கராத்தே பயிற்சியில் கை யால் உடைப்பதுபோல் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் உள்ள எலும்பு மட்டுமல்ல; உள்ளே மிகவும் மிருது வான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையைத் தூக்கிக் குலுக்கினால்கூட மூளை ஆடலாம்.

மூளையில் மூன்று நிலை உண்டு. முதலில் அதிர்ச்சி (Concussion) அடுத்து அடிபடுவதால் கண்ணிப்போகுதல் (Contusion) மூன்றாவது Nuronal Damage, Oxonal Damage.

ஆக்சோனல் என்பது தான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது.

குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடி வாங்கியவர் தள்ளாடி தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விடுவான். இந்த நிலை தலையில் தேங்காய் உடைக்கும் பொழுதுகூட நிகழலாம்.

- ராஜேஷ் எம்.குமார்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக டெல்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் இராமலீலாவுக்கு எதிராக 24.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தி இராமன், இலட்சுமணன்,சீதை உருவ பொம்மைகளைக் கொளுத்தியவர் அன்னை மணியம்மையார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!


வரும் 18 ஆம் தேதி மாவட்டத்
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

அய்.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதவேண்டும் என்ற மத்திய தேர்வாணையத்தின் புதிய விதிமுறை இந்தி பேசாத மக்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதால், அதனை எதிர்த்து வரும் 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி - ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசுவோர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தத்தம் தாய்மொழி பேசுவோர்க்கு மாபெரும் அநீதி யைச் செய்யும் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது?

இதுவரை அய்.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் எழுதலாம்.

அந்த முறை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். அதேபோல், விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும் பாடத்தையும் தமிழில் எழுத முடியும்.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது? தமிழ் இலக்கியத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்வு எழுத முடியும். அதேபோல, தாய் மொழியாகிய தமிழ் வழியில் படித்திருந்தால் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் பாடத்தினையும் தாய் மொழியாகிய தமிழிலும் எழுதலாம்.

தமிழ் வழியில் படித்திருந்தால், தமிழில் எழுதுவ தற்குக் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் தேவைப் படுவர்.

இனிமேல் தமிழில் எழுதுபவர்கள், 25 பேர்களைத் தேடிப் பிடிக்கும் வேலையிலும் ஈடுபடவேண்டும் போலும்.

திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன - அவசியம்தான் என்ன?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித் திருந்தால், ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதவேண் டுமாம்.

பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒருமுறை இப்பொழுது திடீரென்று இப்படி மாற்றப்படவேண்டிய அவசியம் என்ன - தேவை என்ன?

ஏதோ ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தாய்மொழியில்தான் சிந்திக்க முடியுமே தவிர, வேறு மொழியில் அல்ல - இது கல்வி யாளர்கள் கணித்த ஒன்றாகும்.

பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புற மக்களே!

தமிழ் ஓவியா said...


இந்தப் புதிய ஆணையினால் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களைத்தான் பெரிதும் பாதிக்கும்.

கடந்த பல ஆண்டுகாலமாக அய்.ஏ.எஸ். தேர்வு களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 35 பேர் இவ்வாண்டுகூட நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கிறார்கள்.

உயர்ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி!

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை, மனதை உறுத்துகிறது. இவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு செய்வதற்கான தந்திரம்தான் இந்தப் புதிய விதிமுறைகள்.

அய்.அய்.டி. போன்று அய்.ஏ.எஸ். என்பது அடித் தளத்து மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் சதி இதன் திரைமறைவில் உள்ளது.

ஏற்கெனவே இருந்த முறை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்கள் கூறப்பட்டுள் ளனவா?

எந்த யோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எந்தவிதமான, நியாயமான காரணங்களும் கூறப்படவில்லை.

இந்தி வாலாக்களுக்குக் கொண்டாட்டம்!

இந்தப் புதிய விதிமுறை, இந்தி வாலாக்களுக் குத்தான் கொண்டாட்டம். பல தலைமுறைகளாக ஆங்கில மொழி பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்குப் பெரிதும் பயன்படப் போகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான போக்கு இது என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்ட ரீதியாகவே நிலை நிறுத்தப்பட்டது.

இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தைக்கூடத் தந்தை பெரியார் அறிவித்து, மத்திய அரசின் உறுதிமொழியின் அடிப் படையில் அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்பொழுது மத்திய தேர்வாணையம் மறைமுக மாக இந்திக்கு ஆக்கம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தக் கொல்லைப்புற நுழைவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாடு அனுமதிக்காது - குறிப்பாக திராவிடர் கழகம் ஏற்காது.
18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

புதிய ஆணையை உடனடியாக விலக்கிக் கொண்டு இவ்வாண்டு முதற்கொண்டு, ஏற்கெனவே இருந்த முறையில் தேர்வு எழுதிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 18.3.2013 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழக மாணவரணி, இளைஞரணித் தோழர்கள் மற்ற அணிகளின் ஒத்துழைப்புடன் அதற்கான பணி களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13.3.2013

தமிழ் ஓவியா said...


இந்தியா-கறையைத் துடைத்துக் கொள்ளுமா?


டெசோவின் செயல்பாடுகள் எவ்வளவு சிறப்பானவை - காலத்திற்கு மிகவும் பொருத்த மானவை என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

வரும் 21 ஆம் தேதி ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் - அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பெரும்பாலான வாக்குகள் ஆதரவாகக் கிடைக் கும் என்று தெளிவாகி விட்டது என்றாலும், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

டெசோவின் நடவடிக்கைகள் அனைத்தும் மிக முக்கியமாக ஈழத் தமிழர்களின் நல் வாழ்வுக்காக, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிக முக்கியமான, இன்றியமையாத பணியில் மிகுந்த அக்கறையுடன், திட்டமிட்ட வகையில் தமது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருகிறது.

டெசோவில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் மீது தவறான பிரச்சாரம் ஒரு வகையில் செய்யப்பட்டு வந்தது; அவர்கள்கூட காலந்தாழ்ந்தாவது இந்தத் தலைவர்களின் உண்மையான ஈடுபாட்டை இப்பொழுது உணரும் வகையில் டெசோவின் செயல்பாடுகள் நேர்த்தி யாக அமைந்துள்ளன.

அதுவும், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தம் - முழு அடைப்பு - தமிழ் மண்ணின் உணர்வை உலகுக்கே உணர்த்திவிட்டது.

ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இடக்கு முடக்காக விமர்சனம் செய்பவர் கள் ஒரு பக்கம்; ஆட்சி அதிகாரம் தம்மிடம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்படியும் ஒடுக்கிவிடவேண்டும் என்று திமிர் முறித்து எழுந்த தமிழ்நாடு அரசு இன்னொரு பக்கம்;

தமிழர்கள் என்றாலே வேப்பங்காயாக நினைக் கும் பார்ப்பன ஊடகங்கள் மற்றுமொரு பக்கம்; இவ்வளவு அனல்களையும், மலைகளையும் கடந்து இந்தப் போராட்டம் தமிழர்களின் பேராதரவுடன் பெருவெற்றியை ஈட்டிவிட்டது.

தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் புதுச்சேரி மாநிலமும் புது அத்தியாயத்தைப் படைத்துவிட்டது.

இதற்குப் பிறகாவது புத்திக் கொள்முதல் பெறவேண்டியவர்கள் பெறவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

குதர்க்கம் பேசும் உள்ளூர்த் தமிழர்கள், தலைவர்கள், அமைப்புகள், தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய அனைத்தும் இனிமேலாவது தமிழ்நாட்டு மக்களின் உண்மையான உணர்வை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.

இந்திய அரசைப் பொறுத்தவரை அதற்கொரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்று கருதிடவேண் டும்.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஈழத் தமிழர்களுக்காக அது உதவி செய்துவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பொதுவாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியது இந்தியா என்ற நற்பெயருக்கு, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா அண்மைக்காலத்தில் அது நடந்துகொண்டு வந்துள்ள போக்கு பெருங்களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் பார்த்தாலும் இந்தியா தன் மீது படிந்துள்ள கறையைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் - அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தே தீரவேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். 13-3-2013

தமிழ் ஓவியா said...


அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...

பொது வேலை நிறுத்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
டெசோ சார்பில் டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 13- ஈழத் தமிழர் இன்னல் தீரவும், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்ககவேண்டுமென்று கோரியும்,

டெசோ இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி திங்கள் 8 ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - மார்ச் திங்கள் 5 ஆம் தேதியன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் - மார்ச் திங்கள் 7 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் கருத்தரங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து - மார்ச் 12 ஆம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

வழக்குத் தொடுத்தார்கள்

ஈழத் தமிழர்களுக்காகத்தான் இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத்திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத்திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தம் என் பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத் திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத் திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று அறிக்கை விட்டார்கள். வேறு சிலர் மறைமுகமாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத் தார்கள்.

அரசு தலைமை வழக்கறிஞரும் வேலை நிறுத்தத் திற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார். சிலர் இதனைத் திசை திருப்பும் முயற்சி என்றெல்லாம் ஊருக்கு முந்திக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டி குளிர்காய முயற்சித்தார்கள். அதையெல்லாம் மீறி கழக உடன் பிறப்புகளுக்கு உரிமையுடன் இதிலே கலந்து கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று இரண்டு நாள் உடன்பிறப்பு மடலில் கேட்டுக் கொண்டேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் அறிக்கை விடுத்தார்கள். டெசோ இயக் கத்தின் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மிகப்பெரிய வெற்றி!

அரசு சார்பில் பேருந்துகள் ஓடும் என்றார்கள். வணிகர் சங்கத்தின் சார்பில் கடைகள் திறந்து வைக்கப்படும் என்றார்கள். ஆனால், அவர்களையும் மீறி, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணே, எங்கள் ஊரில் ஒரு டீக்கடை கூடத் திறக்கவில்லை என்றும், அண்ணே எங்கள் மாவட்டத்தில் முழு வெற்றி என்றும், தலைவரே, பொது வேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றி என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள்.

தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு பேருந்துகளை ஓட்டு வதற்கு முயற்சி எடுத்தபோது கழகத் தோழர்கள் மறியல் செய்து எங்கள் மாவட்டத்தில் இத்தனை பேர் கைது, எங்கள் நகரத்திலே இவ்வளவு பேர் கைது என்று தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

தமிழகம் முழுவதிலும் அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பல ஊர்களி லிருந்து வந்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் தாங்களும் மறியல் செய்யப் புறப்பட்டுச் சென்று அவர்களும் கைதான செய்தி கிடைத்தது. இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்திய இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கித் தந்த வணிகப் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஏன் தமிழ் உணர்வு படைத்த பொதுமக்கள் அனைவருக்கும் டெசோ இயக்கத்தின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும், என் தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு; இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உரிய அக்கறை செலுத்தி, தெளிவான முடிவினை மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை, மார்ச் 14- இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம் என்று மாநிலங்களவையில் கனி மொழி எம்.பி. பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. மாநிலங்களவையில் பேசியதாவது:-

நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச் சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியி ருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன். இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட் டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில், இது எந்த மொழிக் கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற் சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழி யையும், கலாச் சாரத்தையும் பண் பாட்டையும், தங்கள் அடை யாளத்தையும் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கலைஞர் தனது 14ஆவது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதா ரண மாணவன். தனக்கு ஒரு பிரகாச மான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல மைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவ ருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர் களை நீங்கள் அவமானப்படுத்தக் கூடாது. இது போன்ற போராட்டங் களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப் பட்ட தலைவர்களின் போராட்டங் களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள். எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார்.

நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை. இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்பு கிறேன். காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்லர். இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியா விட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும். இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மை யினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல. இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், விழுமியங்கள், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


பலே, பக்தி வியாபாரம்!



பக்தியே ஒரு பிசினஸ் என்று சாட்சாத் சங்கராச்சாரியாரே கூறியுள்ளார் பல நேரங்களில், அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்குவதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அடிக்க வேறு யாராலும் முடியவே முடியாது.

திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பது என்பது விசேடம். அப்படிப் பக்தர்கள் செலுத்தும் முடியை விற்பதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்குத் திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கிடைக்கக் கூடிய தொகை நூறு கோடி ரூபாயாம்.

இப்பொழுது முடி காணிக்கை செய்பவர்களுக்குச் சிறப்புப் பரிசு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. 31 அங்குலம் நீளம் கொண்ட முடியைப் பக்தர் ஒருவர் ஏழு மலையானுக்குக் காணிக்கையாகக் கொடுத் தால் 5 லட்டு இலவசமாகக் கொடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காகத் தனிக் கவுண்டராம்.

அது என்ன 31 அங்குல முடி நீளம், மார்க் கெட்டில் அதற்கு ஏதாவது மவுசு இருக்கக் கூடும். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?

இப்பொழுது ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடெங்கும் கிளைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள். ஆங்காங்கே கல்லா கட்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

சிறீரங்கத்தில் மாநாடு நடத்தும் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் குறிப்பாக அதன் தலைவர் திருவாளர் வேதாந்தம் என்பவர் கோயிலில் தரிசனம் செய்ய தட்சணை கேட்பது பாவம் - கூடவே கூடாது என்று கரடியாகக் கத்திக் கொண்டு தான் திரிகிறார்; யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் கோயிலைத் திறந்து வைத்திருக்கக் கூடாது, அது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்றெல்லாம் சங்கராச்சாரியாரிலிருந்து திருவாளர் ராம. கோபாலன் வரை ஒவ்வொரு ஆண்டும் சொல்லித் தான் பார்க்கிறார்கள். அவற்றை யார் சீந்து கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு கோயிலைத் திறந்து வைத்திருந்தால் ஏராளமான அளவுக்கு வரும்படி கிடைக்கிறதே - பக்தர்கள் வெறுங் கையோடா கோயிலுக்கு வருகிறார்கள்? அப்படி வெறுங் கையோடு வந்தாலும் எந்த அர்ச்சகப் பார்ப்பான் மதிப்பான்?

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பன்று மிகப் பெரிய அளவில் வருமானம், தட்சணை கொட்டுகிறது. ஆகமத்தைப் பார்த்தால் சம்பாதிக்க முடியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் மட்டும்தான் ஆகமங்கள் குறுக்கிடும்; மற்றபடி வருமான விடயத்தில் ஆகம மாவது மண்ணாக் கட்டியாவது! எல்லாம் அவாளுக்குத் தெரியாதா என்ன?

வரும்படி பெருந்தொகை கிடைக்குமானால் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் பிரசாதத்தைத் தூக்கிக் கொண்டு பெரும் பண முதலைகள் - தொழில் அதிபர் தங்கி இருக்கும் விடுதிகளை (Lodges)நோக்கியல்லவா பறந்தோடு கிறார்கள்!

பணம் படைத்தவர்கள் என்றால் பகவான் அவர்களைத் தேடி ஓடுகிறான் என்பது இதன் பொருள்.

கோயிலில் மூல விக்ரகத்தைத் தரிசிப்பதில்கூட பல வகுப்புகள் உள்ளன. சீக்கிரம் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமென்றால் தட்கல் முறையில் அதற்கென்றுள்ள அந்தப் பெரும் தொகையைத் தூக்கி எறிந்தால் தரிசனம் சில நிமிடங்களில் கிட்டும்.

பஞ்சைப் பராரிகள் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமானால் பல நாள்கள் பசி பட்டினி கிடந்து காத்திருக்க வேண்டிய அவல நிலைதான். அதனால் தானோ என்னவோ கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி! என்ற பழமொழி நடைமுறையில் இருக்கிறது போலும்!

அன்பே கடவுள் என்றும் அவன் உருவமற்றவன் என்றும் ஒரு பக்கத்தில் இதோபதேசம் செய்து, கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி உருவங்களை மனம் போனவாக்கில் வடித்து வைத்து, உண்டியலையும் ஏற்பாடு செய்து மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கயவாளித் தனத்தை என்னவென்று சொல்லுவது!

கோயில் அமைப்பு முறை என்பது சுரண்டலுக்கான ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமா தயக்கம்?
15-3-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தூக்கம்

செய்தி: இன்று உலக தூக்க நாள் சிந்தனை: தூக்கம் மனி தனுக்கு அவசியமே!

தூக்கம் இல்லாவிட்டால் பல வகை உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கவும் கூடாது!

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனருக்கு அழும் தானங்கள்


மத்ஸ்ய புராணத் தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகா தானங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தரு கிறது.

துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவரின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.

ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.

பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது.

கல்பதரு தானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.

கோஸ ஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்களை தானம் தருவது.

ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.

ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.

ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.

ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.

பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.

தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.

விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.

கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.

சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.

ரத்னதேனு தானம்: ஆபரணங்களை கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.

மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித் தருவது. - இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

(எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திர பேய்களும் சாதிக் கதைகளும் - (ஒரு மார்க்ஸியப் பார்வை, நூல் பக்கம் 60-61)

தமிழ் ஓவியா said...


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்; பகுத் தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக் கெல்லாம் விளக்கம் சொல்லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு. இதனை இல்லத் தலைவி வீட்டுப் பணிகள் அனைத் தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.

பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்

பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே

- எனக்காட்டும் போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச்சுவையும் தோன்ற வைக்கிறார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


பொருளே குறிக்கோள்!


பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும் மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கே யன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை, பெரியதொரு சடங்குண்டே! மந்திரமுண்டே அந்த எலாம் செய்யத்தான் வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும் கொடுக்கணுமோ குடுக்க வேணும் என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்

- எனக் கவிஞர்(- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்) மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பனனின் செயலை எள்ளி நகையாடுவது நகைப்பை விளைக்கிறது.