Search This Blog

1.7.12

மருத்துவர் இராமதாசு - பழ. நெடுமாறன் போன்றவர்கள் பார்வைக்கு


வெட்டிப்பேச்சு வீரர்கள்!திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் புறப்பட்டுள்ளனர்.

சிலர் வெளிப்படையாகப் பேசுகின்றனர். ஒரு சில தலைவர்கள் குட்டிக் குரங்குகளை விட்டு ஆழம் பார்க்கின்றனர்.

வன்னியர் கட்சி நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு என்ன செய்கிறார்? அவர் மேடையில் வீற்றிருப்பார். தமது எடுபிடிகளை விட்டு தந்தை பெரியார் அவாகளைப் பற்றித் தாறுமாறாகப் பேசவிட்டு, ரசித்துக் கொண்டு இருப்பார். கடைசியாக அவர் பேசுவார். அவர் பேச்சில் பெரியார் பற்றி ஒரு வார்த்தையும் இருக்காது.

இது ஒரு வகையான பார்ப்பனத்தனம் இன்னும் சொல்லப் போனால் கடைந் தெடுத்த கோழைத்தனமே!

பெரியாரைக் கழித்துவிட்டு, திராவிடர் இயக்கம் என்று ஒன்று இல்லை. திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசினாலும் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் பொருள்.

ஒரு சிலர் இந்த வேலையில் இறங்குகின்றனர். பெரியாரை ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிடர் இயக்கத்தைப் பற்றிப் பொய்யும் புனை சுருட்டும் நிறைந்த மொழிகளில் அர்ச்சிக்கின்றனர்.

நமது மதிப்பிற்குரிய மதுரை பழ.நெடுமாறன் அவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் கூட தந்தை பெரியாரைப் பற்றிக் கொச்சைப் படுத்திப் பேசப்படுகிறது. ஆனால் அவர் அதனைக் கண்டு கொள்வதில்லை. மருத்துவர் திரு. ச.இராமதாசு கையாளும் அதே முறையை அவரும் கையாள்வது ஆச்சரியமானதுதான்.

மருத்துவர் இராமதாசு தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசாத பேச்சா? சூட்டாத புகழாரமா?

பெரியாரைப் பேசித்தான் தான் ஒரு சமூக நீதிப் போராளி என்று மார் தட்டிக்கொள்ள முடிந்தது.

தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லித்தான் நான் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளன் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டியிருந்தது.

தந்தை பெரியார் அவர்களை முன்னி றுத்தித்தான் மருத்துவர் ச.இராமதாசு அரசியல்வாதிகளைச் சாடவும் முடிந்தது.

தேர்தல் அரசியல் களத்தில் அவர் கட்சி காலடி எடுத்து வைத்த நேரத்திலும் கூட பெரியார் கொள்கையை நெஞ்சில் தாங்கிய ஒரு வீரர் இதோ புறப்பட்டுவிட்டார்! என மக்கள் நம்பும் அளவுக்குப் பெரியாரைப் பற்றி மூச்சுக்கு முந்நூறு தடவை பேசியவரும் அவரே!

இன்னும் ஒரு கட்டத்தில் தம் கட்சிக்காரர்களைக் கறுப்புச் சட்டை கூடப் போட வைத்தார்!

மக்களிடம் அடையாளம் காட் டப்பட, விளம்பர வெளிச்சத்தில் குளிக்க, தொடக்கத்தில் பெரியார் தேவைப்படுவார். அடுத்த கட்டத்தில் விளம்பரமும், செல்வாக்கும், செல்வமும் சேர்ந்து விட்டால் எதிரியின் கால் எங்கிருக்கிறது என்று தேடிப்போய் விடுவான் தமிழன் என்று தந்தை பெரியார் சொன்னது அனுபவ மொழியாயிற்றே! அது பொய்த்துப் போய்விடலாமா?

அதனைத்தான் இவர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்களோ!

ஒவ்வொரு தேர்தலிலும் திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் அந்தச் சில்லறை இடங்களைக் கூடப் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

விழுப்புரத்திலே மாநாடு கூட்டி சிறப்பு நாற்காலி ஒன்றைத் தயார் செய்து அதில் மானமிகு கலைஞர் அவர்களை அமர வைத்து, அடுத்த முதல் அமைச்சர் நீங்கள்தான் என்று சொன்னபொழுது கலைஞர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் போயிற்றா? பெரியாரும், கலைஞரும் தெலுங்கர் என்று ஏழுகடல் மூழ்கி, அய்யிரண்டு திசை முகத்தும் தடம் பதித்து புதிய கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள் இந்த நவீன வாஸ்கோடகாமாக்கள்.

ஆரியர் - திராவிடர் என்பதே புதிதாக பெரியார் கண்டுபிடித்ததா? கைபர்,போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்ற பால பாடம் புரியாதவர்கள் எல்லாம் மைக் பிடிக்கலாமா?

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் திராவிடர் இயக் கத்தைச் சேர்ந்தவர்களா?
குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகத்தை உருவாக்கினாரே பேராசிரியர் வி.அய் சுப்பிரமணியம், அவர் என்ன திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரா?

திரவிடியன் என்சைக்ளோ பிடியாவை பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி யிடம் பேராசிரியர் வி.அய்.சுப்பிர மணியம் அவர்கள் கொடுத்த போது திராவிட என்ற சொல்லை நீக்கக் கூடாதா என்று முரளி பார்ப்பனர் கேட்ட கேள்விக்குள் புதைந்திருக்கும் உணர்வுக்குப் பொருள் புரியுமா? அந்தப் பூணூல் கூட்டத்தினரின் திராவிடர் எதிர்ப்பு உணர்வை யாசகமாக எந்தத் தேதியிலிருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் இந்தத் தமிழ்த் தேசிய வாதிகள்?

அப்படிக்கேட்ட அந்த முரளி மனோகர் ஜோஷியின் முகத்தில் பளார் என்று அறை கொடுத்தது போல தேசிய கீதத்தில் இடம் பெற்றிருக்கும் திராவிட என்ற சொல்லை எடுத்துவிட்டால் நானும் திராவிடன் என்சைக்ளோ பிடியா என்பதில் உள்ள திராவிடன் என்ற சொல்லை எடுத்து விடுகிறேன் என்று சொன்னாரே! (ஆதாரம்: DLANews 2003 பிப்ரவரி) அப்படிச் சொன்னவர் முதுபெரும் தமிழ் அறிஞர் அல்லவா!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக இருந்தவர் அல்லவா அவர்?

பார்ப்பனர்கள் தங்கள் நச்சுப் பையில் தேக்கி வைத்திருந்த திராவிட எதிர்ப்பு வெறியை மடிப்பிச்சை பெற்று ஒப்புவிக்கும் இந்த அடிமைப் புத்தியை ஒழிக்கத்தானே திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் பாடுபட்டனர்!

தமிழனைப் பயந்தாங்கொள்ளியாக ஆக்கியது பெரியார்தானாம் - ஒரு சினிமா இயக்குநர் வீரமாகப் பேசி இருக்கிறார். பெரியார் திடலுக்கு வந்து பெரியார் விருது பெற்றபோது - பரிதாபம் அவர் புத்தி எங்கே மேயப் போனது என்று தெரியவில்லை.

இப்படிப் பேசிய அந்த இயக்குநரை, தமிழ் உணர்வு படைத்தவர் என்று பாராட்டுகிறார் மருத்துவர் இராமதாசு என்றால், இவரை அடையாளங் காண்பது எளிதாகிவிட்டது.

நீங்கள் கொடுக்கும் பெயரில் சூத்திரர் அல்லாத ஒரு தூசி கூடப் புகுந்து கொள்ள வசதி இருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் ஏதாவது ஒரு தடை இருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பனர் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை. (நூல்: மொழி ஆராய்ச்சி) என்றாரே தந்தை பெரியார். இந்த வரலாற்று ரீதியான உண்மையை யதார்த்தக் கண்ணோட் டத்தோடு அணுகினால் இதன் அருமை பெருமை விளைவு - விளங்காமல் போகாது.

நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.

சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி, உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான் A,B,C,D யாகக் கொண்டேன்- கொள்கிறோம். ஆன தினாலேயேதான் நான் வகுப்புவாதி என்று சொல்லப் பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்புவாத உருவாகவே இருந்து வருகிறேன் என்கிறார் தந்தை பெரியார்.

---------------------(விடுதலை 5-3-1969)

(1) இந்தத் திராவிடர் இயக்கப் பார்ப் பன எதிர்ப்பு உணர்வில் விளைந்தது தான் இட ஒதுக்கீடு. அதற்கான முதல் ஆணையைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்க நீதிக்கட்சி ஆட்சியே! (1928).

(2) அந்தச் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புச் சொன்ன தருணத்தில் கொந் தளிக்கும் கடலாய்ப் பொங்கியெழுந்து போர் முரசினை தந்தை பெரியார் தலைமையேற்றுக் கொட்டியதால் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது -_ இதன் காரணமாகத்தானே?

கல்வியிலும் இட ஒதுக்கீடு கிடைக் கப்பெற்றது. கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதால்தான் இன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 89 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதவர்.

(சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி 95 ஆம் ஆண்டு விழாவில் (20.-10.-2010) சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் க.திருவாசகம் கூறிய தகவல்.)

(3) இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் கல்வி, வேலை வாய்ப்பினை அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா?

(4) மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தடையை நீதிக் கட்சி ஆட்சியில் பனகல் அரசர் ஒழிக்காதிருந்தால், இன்றைக்குக் குப்பன் மகனும், தொப்புளான் மகனும் டாக்டர் ஆகி இருக்க முடியுமா? (ஏன்? ராமதாசும் அவர்தம் குடும்பத்தாரும்தான் மருத்துவர்கள் ஆகியிருப்பார்களா?)

இவ்வாண்டு மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 742 இல் 678 பேர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் என்றால் சாதாரணமா? இந்தச் சாதனைக்கு அஸ்திவாரம் போட்ட வர்கள் யார்?

அதே நேரத்தில் ஆச்சாரியார் (ராஜாஜி) ஆட்சிக் காலத்தில் 1952-_53 இல் சென்னை மாநிலத்தில் மருத்துவப் படிப்பின் நிலவரம் என்ன? பார்ப்பனர் 160, ஜாதி இந்துக்கள் -_ 56, மற்றவர்கள் _ 158, 374 இடங்களில் பார்ப்பனருக்கு 160 இடங்கள் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா? தந்தை பெரியார் அல்லவா?

200 க்கு 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 16 என்றால் இரண்டே இரண்டு இடங்கள் மட்டும் உயர்ஜாதியினருக்கு, மற்ற இடங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளதே - இந்த நிலை இந் தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்தில் உண்டு? இதற்காகப் பாடுபட்டவர்கள் யார் யார்?

(5) பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் என்று பிரித்து அதற்காகத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்காக பாடுபட்டதாக மார் தட்டுகிறாரே மருத்துவர் இராமதாசு அதற்கான ஆணையைப் _ பிறப்பித்தது எந்த ஆட்சி? மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிடர் ஆட்சி யல்லவா?

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக கடந்த ஆண்டைவிட வன்னியர் களுக்கு தொழிற் கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கவில்லையா? அதனை வரவேற்று அதற்காகக் கருணாநிதி பெருமைப்பட வேண்டும் என்று மருத்துவர் ச. இராமதாசு கூற வில்லையா (தினப்புரட்சி 17.7.1989).

1967_1974 இடைப்பட்ட கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் குரூப் ஒன்று பதவிகள் 122இல் 112 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கிடைத்ததே _ அந்தக் கலைஞரையா நாம் வசைபாடுவது -_ இது திராவிட இயக்க சாதனை இல்லையா?

(6) இன்றைக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு கிடைத்தது என்றால் அதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா?

(7) தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது (50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு) அதனைப் பாதுகாக்க சட்ட வடிவம் தயாரித்துக் கொடுத்து, நிலை நாட்டியது திராவிடர் கழகத் தலைவர் அல்லவா? ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இன்று பாதுகாப்புடன் நிலை பெற்றுள்ளதே.

இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது திராவிடர் இயக்க (கலைஞர்) ஆட்சியில்தானே!

(8) இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சியல்லவா?

(9) தேவதாசி முறையை ஒழித்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றியது எந்த ஆட்சி?

(10) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் அல்லவா?

(11) பொதுச் சாலைகளை தாழ்த்தப் பட்டவர்கள் பயன்படுத்தலாம், கிணறு களிலும், குளங்களிலும் தாழ்த்தப்பட் டவர்கள் தண்ணீர் எடுக்கலாம் என்று ஆணை பிறப்பித்தது யார்?

(12) தாழ்த்தப்பட்டவர்களை பேருந்துகளில் அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தாழ்த் தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளி களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது எந்த ஆட்சி?

(13) இந்தியை எதிர்த்து விரட்டி யடித்தது யார்? தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்திக்கு இடம் இல்லை என்று சட்டம் செய்தவர் திராவிடர் இயக்கத் தீரராகிய அறிஞர் அண்ணா அல்லவா?

நாராயண சாமி நெடுஞ்செழியன் ஆனதும், ராமையன் அன்பழகனாக மாறியதும், சோமசுந்தரம் மதியழகன் என்று மாற்றிக் கொண்டதும் எந்த இயக்கம் ஊட்டிய உணர்வின் அடிப் படையில்!

(14) நமஸ்காரம் வணக்கம் ஆனது எப்போது? அக்ராசனர் தலைவராக மாற்றப்பட்டது எப்படி? பிரசங்கம் சொற்பொழிவானது எங்ஙனம்? வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்தது எந்தச் சூழ்நிலையில்?

1938_இல் தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஊட்டிய உணர்ச்சியின் விளைச்சல் அல்லவா இது?

(15) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது தி.மு.க. ஆட்சியல்லவா?

(16) தமிழன் வீட்டு நிகழ்ச்சி தமிழன் தலைமையில் நடக்க முடியாது; தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் அவன் தாய் மொழிக்கு இடமில்லை என்றிருந்த நிலையை ஒழித்து, தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் தமிழன் தலைமை தாங்கவும், அவன் தாய்மொழி இடம் பெறவுமான புரட்சியை நிகழ்த்தியவர் யார்? சுயமரியாதைத் திருமணம் வந்தது எப்படி?

கிரகப்பிரவேசம் புதுமனைபுகு விழாவாக மாறவில்லையா? உத்திர கிரியை - நீத்தார் நினைவு நாளாகப் புது உருவெடுக்கவில்லையா?

(17) தமிழ்நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லையே ஏன் என்று கேட்டு, தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு நடத்தியது யார்? (சென்னையில் திராவிடர் கழகத்தால் 25.-12.-1980 அன்று நடத்தப்பட்டது.)
தமிழிலும் வழிபாடு என்று கோயில் களில் விளம்பரப் பலகை தொங்கியதை அகற்றியது தி.மு.க.ஆட்சியல்லவா?

(18) தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதே - அதனை மாற்றி தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டம் கொண்டுவரப்பாடுபட்டது யார்? தந்தைபெரியாரும் திராவிடர் கழகமும் தானே!

அதனை ஏற்று சட்டம் இயற்றியவர் திராவிடர் இயக்க ஆட்சியாளரான கலைஞர் அவர்கள்தானே?

(19) ஈழத் தமிழர் பிரச்சினையில் யாரும் கனவு காணாத காலத்திலேயே 1939 ஆம் ஆண்டிலேயே அக்கறை காட்டியது நீதிக் கட்சியல்லவா?

ஈரோடு பெரியார் மாளிகையில் 10.-8.-1939 அன்று நடைபெற்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிரு வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டதே!

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தி யதையும் அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஊ,பு.அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் இலங்கைக்குச் சென்று அவர்களின் நிலை மையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதே!

----------------------------(விடுதலை 11.-8.-1939 - பக்கம் 3)

1983 ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழர்கள் மிகக் கொடூரமாய்த் தாக்கப்பட்ட நிலையில் கட்டிய துணிகளோடு தமிழ்நாடு வந்த மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கை யாருடையது?

உடனடியாக 14.-8.-1983 அன்று மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது திராவிடர் கழகம் அல்லவா? சென்னை அண்ணாநகரில் புல்லாரெட்டி அவென்யூவில் அனைத் துக் கட்சி முதல் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகமாயிற்றே. அலை அலையான நடவடிக்கைகள் - _ சொல்லிக்கொண்டே போக முடியுமே!

உச்சக் கட்டமாக மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே இரண்டு நாட்கள் நடத்தி குமரி நாடன் என்ற ஈழத் தமிழர் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றிடவில்லையா? ஒட்டு மொத்த உலகத் தமிழின மக்களின் உணர்ச்சி எரிமலையின் உக்கிரம் எத்தனை டிகிரி என்று அன்று காட்டப்படவில்லையா? ---------------------(மதுரை 17,18.-12.-1983).

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். டெசோ எவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. காலத்தின் அவசியம் கருதி மீண்டும் டெசோ அமைப்பு புதுப்பிக்கப் படுகிறது என்றால், பிரச்சினையின் மீது அக் கறையும், கவலையும் கொண்டவர்கள் வரவேற்பார்கள். கை முதல் பறி போகிறது என்பதால் கதறுவார்கள். அதற்கு நாம் என்ன செய்வது!

இதே ஈழப் பிரச்சினையில் இதே மருத்துவர் இராமதாசு எப்படி எல்லாம் கருத்து தெரிவித்தார்? அதை எல்லாம் அவிழ்த்துக் கொட்ட வேண்டுமா?

(20) கச்சத்தீவு மீட்பு மாநாட்டை இராமேசுவரத்தில் (25-.7-.1997) நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா? (ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களும் கலந்து கொண்டனரே! பழ.நெடுமாறன் அறி வாரே!) அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதே!

(21) வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டுக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - இராமேசுவரம் முதல் திருத்தணி வரை என்று தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டதை திரு.பழ.நெடுமாறன் அவர்கள் அறியமாட்டாரா?

(22) முக்கியமாக மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெரும் பணியை ஒப்பரிய மானுடத் தொண்டினை ஓர் இயக்கமாக நடத்துவது உலகத்திலேயே திராவிடர் கழகம் மட்டுமே அல்லவா!

(23) ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டம் வரை எரித்து ஆயிரக்கணக்கான கருஞ் சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ்சிறை ஏகினார்களே, -பலர் இன்னுயிரை ஈந்தனரே! இதன் பக்கத்தில் எந்த ஓர் அமைப்பாவது நிற்கமுடியுமா?

திராவிடர் இயக்கம் என்பதால் தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தோமா? தெட்சிணப் பிரதேசம் என்று நான்கு மாநிலங்கள் அடங்கிய ஆட்சி அமைப்பை உருவாக்க நினைத்த போது அதனை எதிர்த்து முறியடித் தவர் தந்தை பெரியார் ஆயிற்றே! சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்தோமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவிற்கும் காவிரி நீர்ப்பிரச் சினையில் கருநாடகாவுக்கும், திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ விட்டுக் கொடுத்து விட்டது என்று கூறப் போகிறார்களா?

திராவிடர் என்பது இனப்பெயர்; - தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பவையெல்லாம் தமிழின் திரிபுகள் - சமஸ்கிருத ஊடுருவலால் தனித்தனி வடிவையும் ஒலியையும் பெற்றன என்பதை பரிதிமாற் கலைஞர் போன்ற பார்ப்பன ஆய்வாளர்களே ஏற்றுக் கொள்ளவில்லையா?

தனித்தனியாகப் பிரிந்திருந்தாலும் இனப்பெயர், குடும்பப் பெயர், மாறப் போவதில்லை. இதில் காணப்பட வேண்டிய உண்மை இதுதானே தவிர, இதில் திராவிடர் இயக்கத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? இது என்ன சொல் விளையாட்டு?

திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று சுருக்கமாக சொல்லப்பட்டுள்ள இந்தப் பட்டியலின் அருகே எந்தத் தமிழ் தேசியவாதியாவது, அமைப்பாவது நெருங்கி வந்து தங்களின் பங்களிப்பு என்று மார் தட்டிக் கொள்ள முடியுமா?

செயல்பாட்டில் ஒன்றுமே இல்லாமல் காற்றோடு சிலம்பம் விளையாடும் வெத்து வேட்டுப் பேச்சுக்களால் என்ன பயன்? வெறும் விமர்சனம் மட்டுமேதான் பிழைப்பா?

எந்த வேலையும் செய்யாமல், ஊரின் மரத்தடியில் காலையில் உட்கார ஆரம்பித்தவர்கள் பொழுது போகிற வரை வெட்டிப் பேச்சுப் பேசி, வீண் அக்கப்போர்களை அட்டகாசமாகப் பேசிக் கலையும் சோம்பேறிகளுக்கும் - திராவிடர் இயக்கம் பற்றி விமர்சனம் என்ற வெட்டிப் பேச்சுக் கச்சேரி நடத்தும் செயலற்ற பேர்வழிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது -_ கிடையவே கிடையாது.

தமிழ்ச் செம்மொழி


தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது யார்?

1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லா தார் மாநாட்டில் இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜே.பி.நல்லுசாமி பிள்ளை. வழி மொழிந்தவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பி.ஏ.,பி.எல்., அவர்கள். எஸ்.பி.ஜி.கல்லூரி, திருச் சிராப்பள்ளி. ஆதரித்தவர் திருமதி அலர்மேலு மங்கைத் தாயாரவர்கள், சென்னை. இதனைத் தம் ஆட்சிக் காலத்தில் சட்டப்படி நிறைவேற்றியவர் திராவிடர் ஆட்சிக்காரர் கலைஞர் அவர்கள்தானே!

தமிழ் ஈழம்: மருத்துவரின் நிலைப்பாடு என்ன?

இன்றைக்குத் தமிழ் ஈழம் விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றியெல்லாம் வான்முட்டப் பேசும் மருத்துவர் ச. இராமதாசு ஒரு கட்டத்தில் கொண்டிருந்த கருத்து என்ன?

பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சி (15.7.1989) தலையங்கம் என்ன கூறியது?

ஈழ விடுதலையை அடகு வைத்துள்ள விடுதலைப் புலிகள் என்று எழுதியதே! உங்கள் தலைமையைத் (மாவீரன் பிரபாகரனே) தகர்த்தெறிந்து புதிய போரட்டப் பாதைக்கு முன் வாருங்கள் என்று தலையங்கமே தீட்டவில்லையா?

பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சியின் (29.6.1989) நாளிட்ட தலையங்கம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி, ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது

இது விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தது ஆகாதா? அதே நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது தி.மு.க. என்பதும் விளங்கவில்லையா?

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த ஒரு கட்சியை, அதன் தலைவர் கலைஞர் அவர்களை விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்த கட்சியின் தலைவர் ஏளனம் செய்யலாமா? ஈழத் தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு ஓரளவு தெளிவு வந்ததே திராவிடர் இயக்கத்தால் தானே!
திரும்பிப் பாருங்கள் மருத்துவர் அவர்களே!

தந்தை பெரியார் அவர்களுடைய எண்ணங்களை துணிந்து நாங்கள் பட்டி தொட்டி எங்கும் பறைசாற்றி வருகின்றோம். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை வன்னியர் சங்கத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை முழுதும் ஏற்றுக் கொள்கிறோம்.

அந்த வகையில்தான் எந்த நிகழ்ச்சி, எந்தப் போராட்டமாக இருந்தாலும் தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று வைத்து கொண்டு வருகின்றோம். அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இன்னும் சிறப்பாக மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டிய காலம் இது

_-இப்படிப் பேசியவர் வேறு யாருமல்லர் _ பா.ம.க. _ மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் சாட்சாத் திரு. ச. இராமதாசு அவர்கள்தான் வடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் (21.9.1991) தான் இவ்வாறு பேசினார். (விடுதலை 26.9.1991)

பெரியாரின் கொள்கைகளின் ஒன்று இரண்டு அல்ல; முழுவதையும் ஏற்றுக் கொள்கிறார்களாம்.

அப்படி சொன்ன மருத்துவர் - மேடையில்தான் உட்கார்ந்து கொண்டு அரைவேக்காடுகளையும் கத்துக் குட்டிகளையும் விட்டுத் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்திப் பேச வைத்து ரசிக்கிறார் என்றால் இதன் நிலை என்ன? தந்தை பெரியார் அவர்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களின் யோக்கியதை இதுதானா?

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை இன்னும் சிறப்பாக மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய காலம் இது என்று அடித்துச் சொன்னவர் _ தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை மக்கள் மத்தியில் வேகமாகப் பரப்புவதற்குப் பதிலாக தந்தை பெரியார் அவர்களையும், அவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் திசை திருப்பி, தவறான அணுகு முறையோடு, தலைகீழாகப் புரட்டி சொல்ல ஆசைப்படலாமா?

பெரியாரைத் தவறாக விமர்சிப்பதால் பலனடையப் போகிறவர்கள் யார்? இதனால் எதைச் சாதிக்கத் துடிக்கிறீர்கள்?

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் புத்தர் முதல் தம்மை எதிர்த்த தலைவர்களையும் அமைப்புகளையும் ஏதோ ஒரு வகையால் அழித்து முடித்ததே ஆரியம் -_ தந்தை பெரியார் அவர்களின் சகாப்தத்தில்தானே அதன் மூல வேர் அசைக்கப்பட்டது.

கிடைத்தற்கரிய தலைவரைப் பெற்ற நாம் _ அவர்தம் கொள்கைகளைக் கைவரப் பெற்ற நாம் அதனைக் கெட்டியாகப் பற்றி கொண்டு மேலேறுவதற்குப் பதிலாக பெரியாரை விமர்சிக்கிறேன் என்று கிளம்புவது நுனிக் கொம்பேறினார் கதைதானே!

பார்ப்பனர்கள் எதைச் சொல்லி விமர்சிக்கிறார்களோ; அதையே மருத்துவர் இராமதாசு போன்றவர்கள் பழ. நெடுமாறன் போன்றவர்கள் விமர்சிப்பது எதிரிகளின் கோட்டைக்குக் காவல் காப்பது அல்லவா!

படையே இல்லாது சென்ற ராமன் இராவணனை வென்றது எப்படி? அவனுக்குக் கிடைத்த படைகள் அனுமார், சுக்ரீவன், படைகள்தானே பெரியார் சகாப்தத்திலும் இந்த நிலையா?

தம்மைத் தேடிவந்த பதவிகளை செருப்புக் காலால் உதைத்து எறிந்து தமிழினத்தின் மான மீட்பராக, அறிவுச் செல்வத்தைத் தாயினும் பரிந்து ஊட்டி வளர்ப்பவராக, மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பால படத்தைப் பயிற்றுவித்தவராக 95 வயதிலும் மூத்திரப் பாட்டிலும் கையுமாக அலைந்து திரிந்த ஒரு தலைவரையே நாம் அடையாளம் காணத் தவறினால் சூத்திரர்களாக பஞ்சமர்களாக ஏதோ வாழ்ந்து மடிய வேண்டியதுதான்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

-------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் அவர்கள் 30-6-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

16 comments:

தமிழ் ஓவியா said...

திருநங்கையர் பார்வையில் பெரியார்நாங்கள் ஏன் ரேஷன் அரிசி மட்டுமே சாப்பிட வேண் டும், நாங்கள் ஏன் அரசாங்கம் அளிக்கும் சின்னச் சலுகை களை மட்டுமே எதிர்பார்த்து வாழ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நாங்களும் வழக் கறிஞர்களாக, மருத்துவர் களாக, தொழிலதிபர்களாக உருவாக வேண்டும். பெண்ணுரிமை பேசிய பெரியாரிடம் ஒரு முறை கேட்டார்களாம், பெண்களுக்கு உரிமை வேண்டும் என்கிறீர்களே, என்ன மாதிரியான உரிமை வேண்டும்? பெரியார் சொன்னாராம், ஆண்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனையும் பெண்களுக்கு வேண்டும் என்று! அதேபோலத்தான் ஆண்களுக் கும், பெண்களுக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனை உரிமைகளும் அரவாணிகளுக்கும் வேண்டும். ஒரே வரியில் சொல்வதனால், சமூக மதிப்பீடுகள் மாற வேண்டும்!
- ரேவதி (ஆனந்தவிகடன் 20.6.2012)

தமிழ் ஓவியா said...

ஜாதிச் சான்றிதழ் பெற குலத் தொழில் செய்யவேண்டுமா?ஜாதிச் சான்றிதழ் என்பது சம்பந்தப்பட்டவர்கள் என்ன ஜாதியில் பிறந்தவர் என்பதன் அடிப்படையில் தரப்படக் கூடியதாகும்.

ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சி எப்பொழுது ஆச்சாரியார் ஆட்சியாக மாறியது என்று தெரியவில்லை. ஜாதி சான்றிதழ் பெறவேண்டுமென்றால், சம்பந்தப்பட்டவரோ, அல்லது அவர் குடும்பத்தவரோ, ஜாதிக் குலத் தொழிலைச் செய்ய வேண்டுமாம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம் திம்மா புரத்தைச் சேர்ந்த சீ.தமிழ்ச் செல்வி (தந்தை -சீனிவாசன்) என்பவர் கிருஷ்ணகிரி வட்டாட்சியருக்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். பன்னியாண்டி (தாழ்த்தப்பட்டவர்) பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்கான சான் றினை (தந்தைக்கு அளிக்கப்பட்ட சான்றிதழை) இணைத்து விண்ணப்பித்து இருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் மீது கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் அனுப்பிய பதில் (ஓ.மு.எண். 11235/2011 நாள் 4-10-2011) தான் அதிர்ச்சிக்குரியது.

என்ன காரணம் சொல்லியுள்ளார்?

சீனிவாசன் என்பவரது குடும்பத்தவர் பன்னியாண்டி சாதியைச் சேர்ந்தவர் என்பதற்கான குலத்தொழில் எதிலும் ஈடுபடவில்லை என்று தெரிய வருகிறது. எனவே பன்னியாண்டி சாதி சான்றிதழ் வழங்க வழிவகை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிச் சான்று அளிக்கப்படுபவர்களெல்லாம் குலத் தொழில் செய்தால்தான் அளிக்கப்பட்டு வருகிறதா? இதுவரை அப்படித்தான் அளிக்கப்பட்டு வருகிறதா?

ஜாதித் தொழிலைச் செய்பவர்களுக்குத்தான் சம்பந்தப்பட்ட ஜாதிச் சான்று அளிக்க வேண்டும் என்று அதிமுக அரசு ஏதாவது தனிச் சிறப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதா? ஆம் எனில், எந்தச் சட்டத்தின்படி அப்படி ஒரு சுற்றறிக்கையை அதிமுக அரசு அனுப்பியுள்ளது? அளிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தானடித்த மூப்பாக நடந்து கொள் கிறாரா?
ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வேண்டுமானால் குலத் தொழிலை, ஜாதித் தொழிலைச் செய்துதான் தீரவேண்டும் என்று மறைமுகமாக நிர்ப்பந்தம் அளிக்கப்படுகிறதா?

இதன்மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்குமா? 1-7-2012

தமிழ் ஓவியா said...

காவல் நிலையமா? பங்காரம்மாவின் பஜனைக் கூடமா!

தருமபுரி மாவட்டம் அரூரில் வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் முன்பாக காவல் நிலையம் , மகளிர் காவல் நிலையம், காவல் துறை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகங்கள் ஒரே வளாகத்தினுள் உள்ளன.அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.,) அலுவலகமும் அதனுள் கட்டப்பட்டிருக்கும் கோயில்

காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே வேப்பமரத்திற்கு சேலைகளைக் கட்டியும், வேல்கள் குத்தி கரையான் புற்றுக்கு புடவை கட்டி, அம்மன் சிலை வைத்து, கோவி லுக்குள்ளே பங்காரு அடிகளாரின் உருவங்கள் தாங்கிய பதாகைகள் அமைத்து அரசு இடத்தில், அதுவும் சட்டத்தை காக்கும் காவல்துறையினர் அலுவலகத்திற்குள்ளே தனிப்பட்ட லட்சுமி என்ற பெண் பல சிலை களையும் கோயில்களையும் கட்டி அரசு அலுவலகத்தையே பங்காரு அடிகளாரின் பஜனை மடமாக்கி காவிகளின் கூடாரமாக்கி, திருவிழா, பூஜை என்றால் அலுவலகம் என்று கூட பார்க்காமல் மேள தாளங்கள், ஆட்டம், பாட்டம் வான வேடிக்கை பெண்களின் நடனம் என பக்தி மான்கள் கூடும் பஜனை மடமாகவும், பங்காரு அடிகளாரின் கிளை மடமாகவும் செயல்பட்டுக் கொண் டிருக்கிறார்.டி.எஸ்.பி. அலுவலகத்தினுள் கரையான்புற்றுக்கு புடவை கட்டியும் அம்மன் சிலையும் வைத்துள்ளனர். அருகில் சாமியாரிணி லட்சுமி

அங்கு நடக்கும் பக்தி பஜனையின் கூத்திற்கு டிஎஸ்பி அலுவலகத்தி லிருந்து மின் இணைப்பு கொடுத்து (அரசு வரிப் பணத்தில்) வண்ண வண்ண விளக்குகள் போட்டு வர்ண ஜாலங்களை செய்து வருகிறார் லட்சுமி.

இங்குதான் தினம் தினம் குறிசொல்லுதல், சாமி ஆடுதல், சக்தி வழிபாடு, அம்மன் அருள் என பல நூறு பெண்களை வைத்துக் கொண்டு அதிகாரிகளின் துணை யோடு பக்தி வியாபாரம் அமோக மாக காவல் நிலையத்திற்குள் இருக்கும் பங்காரு அடிகளாரின் பஜனை மடத்தில் அரங்கேறுகிறது. மக்கள் அறியாமையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்த்து பணம் பார்க்கும் இந்த சாமியாரிணியான லட்சுமியின் கட்டுப்பாட்டில்தான் அரூரில் இயங்கும் காவல் நிலை யங்கள் உள்ளன.

சாமியாரிணி லட்சுமியின் ஆசியால் மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் தட்சணை கொடுத்து தினம் தினம் பிரசாதமும் சுண்டலும் பெறுகின்றனர்.

இதுகுறித்து சாமியாரிணி லட்சுமி யிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது மேல் மருவத்தூரில் இருக்கும் சக்தி அம்மா இங்கே வந்து குடி கொண்டிருப்பதாகவும் தினம் தினம் எனக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கு என்று கனவில் சொன்னதாகவும் கூறியதுடன், காவல் நிலையத்தில் இந்த கோயில் இருப்பதால் இங்கு உள்ள காவல் அதிகாரிகள் உட்பட காவலர் அனைவரும் இந்த கோயிலுக்கு உதவி செய்கிறார்கள்.அரூர் டி.எஸ்.பி. அலுவலகத்தினுள் வேப்ப மரத்திற்கு புடவை கட்டி பூஜை செய்யும் படம்

கோயிலுக்கு தேவையான மின்சாரத்தை எந்த செலவும் இல்லாமல் காவல் நிலை யத்திலே எடுத்து கொடுத்திருக் கிறார்கள். கோயிலில் முக்கிய நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளில் கலந்துக் கொள்ள ஆயிரம் ஆயிரம் (பெண்கள்) சக்திகள் இங்கே வந்து பூஜை செய்து மேளதாளம் முழங்க ஆடிப்பாடி செல்கிறார்கள்.

இதற்கு எல்லாம் இந்த அய்யாவின் துணை யோடுதான் (டிஎஸ்பி) ஆதர வோடுதான் செய்கிறேன் என்றதுடன் வெள்ளிக்கிழமை, மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த புற்றிலிருந்து ஸர்பம் (அம்மா) வருவார் நாங்கள் எல்லாம் தவறாமல் பார்ப்போம் என்று பொய்யைக் கழற்றிவிட்டார்.காவல் நிலைய கடவுள் பங்காரு அடிகளாருக்கு கோயில் கட்டி பூஜை செய்யும் சாமியாரினி லட்சுமி

அரசுக்கு சொந்தமான இடத் திலோ, அலுவலகத்திலோ, வளாகத் திலோ எந்தவிதமான மதங்களின் கடவுளர்களுக்கு கோயில் கட்டுவதோ, படங்கள் வைப்பதோ, பூஜைகள், வழிபாடு செய்வது வழிபாட்டு தளங்கள் அமைக்க கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளதுடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பும் கூறியுள்ளது.

அத்துடன் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற வழிபாட்டுதளங்கள் இருக்குமாயின் அவற்றை அகற்றவும் 7553/66-2 என்ற அரசாணையும் உள்ள நிலையில்

அரசு ஆணையையும், உச்சநீதி மன்றத் தீர்ப்பையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது காஷாய பஜனை மடங்கள் கட்டும் சில காக்கி உடை யணியும் காவல்துறை அதிகாரிகளும் உள்ளனர் அரசு நடவடிக்கை எடுக்குமா?

விடுதலை தமிழ்ச்செல்வ 1-7-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரின் பூணூலை அறுத்ததால் விழிப்புணர்வு பெற்ற கிராமம்

(பூணூல் அறுத்ததற்கு சிறைவாசம். ஊர் மக்களுக்கு வசந்தகாலம்)

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கிராமம் புதுக்கோட்டைவிடுதி. இக்கிராமம் தான் அறந்தாங்கி கழக மாவட்டத் தின் தலைவர் அய்யா பெ.இராவ ணன்.

இன்றும் சுறுசுறுப்பாய் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருபவர். இவரது இளமை வயதில் நடந்த ஒரு சம்பவம். இவரது உறவினர் வீட்டில் காலஞ்சென்ற முதியவர்களுக்கு திவசம் செய்வது வழக்கமாயிருந்தது. அதுவும் அவரது பெரியப்பா வீட்டில்தான் நடக்கும்.இராவணன் அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டிருந்ததில் பார்ப்பனரை அவரது வீட்டுக்குள் நுழைய எதிர்ப்பு காட்டும் விதத்தில் திவசம் செய்ய வந்த பார்பனரான ராமச்சந்திரனை அழைத்து இனிமேல் திவசம் செய்ய இங்கே வரக்கூடாது என்று கண்டித்து அனுப்பி விட்டார்.

பார்ப்பனப்புத்தி சும்மாயிருக்குமா? அடுத்த ஆண்டு திவசத்திற்கு அவரது மகன் ராமனை அனுப்பினார். அவனயும் கண்டித்து அனுப்பி விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு திவசத்திற்கு வருவதற்கு அய்யா இராவணனுக்குப் பயந்து கொண்டு பார்ப்பனர் ராமன் வரத் தயக்கம் காட்டியவுடன் அவரது தம்பியான அம்பி என்பவரை அனுப்பியிருக் கிறார்கள்.

திவசம் செய்ய வீட்டுக்கு வரு வதைப் பார்த்த அய்யா இராவணனுக்கு கோபம் கோபமாய் வந்தது. அம்பியை அழைத்து கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து பூணூ லையும் அறுத்தார். பார்ப்பான் ஆலங்குடி காவல் நிலையம் சென்று அவர்மீது புகார் கொடுத் தார்.

காவல்துறை அதி காரிகள் இராவணனை அழைத்து விசாரித்தார் கள். நடந்த சம்பவத்தை ஒத்துக் கொண்டார். ஊர்ப்பெரியவர்களை யும் அழைத்து விசாரித்தார்கள். ஊர்பெரியவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் பூணூலை அறுத்து பார்ப்பானை அடித்ததற்கு காரணம் சொன்னவு டன் அத்தனைபேரும் அசந்து விட்டார்கள்.

இராவணன் சொன்னார் 'எங்கள் மக்கள் அறியாமையில் இருக்கிறார் கள் என்பதற்காக பார்ப்பான், சாணத்தையும் பசுமாட்டு மூத்திரத் தையும் கலந்து கொடுத்து எங்கள் மக்களைக் குடிக்கச்செய்து விட் டான். அதற்காகத்தான் பூணூலை அறுத்து அடித்தேன். ஊர்ப் பெரியவர்களுக்கும் அப்போதுதான் புத்தி வந்தது. இவ்வளவு காலமாக நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் நடந்த திவசத்திற்கு சாணமும் மூத்திரமும் கலந்து குடித்தது நினைவுக்கு வந்து வெட்கிப் போயினர்.

ஆனாலும் பார்ப்பானை அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்டமைக்காக இராவணனுக்கு ஒரு வார காலம் சிறை வாசம் கிடைத்து அனுபவித்து விட்டு ஊருக்கு வந்தார். அதன் பிறகு ஊராட்சி மன்றத் தலைவராக ஆனார்.

ஊர்த் தலைவராகவும் ஆனார். இன்றுவரை ஊராட்சி மன்றத் தலைவராக யார் பொறுப்புக்கு வந்தாலும் இவர்தான் ஊர்த்தலைவ ராக இருந்து வருகிறார். பூணூல் அறுத்த தினத்திலிருந்து இன்றுவரை எந்த ஒரு பார்ப்பானும் அந்த ஊருக்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வந்ததுமில்லை. யாரும் போய் அழைப்பதுமில்லை. அந்த ஊர் மக்கள் யாரும் பார்ப்பானை வைத்து திருமணம் நடத்துவது மில்லை. திதி, திவசம் என்று கொண்டாடுவதுமில்லை.

இராவணன் அவர்கள் சமீபத்தில் நடந்த ஒரு படத்திறப்பு விழாவில் பேசும்போது இந்த நினைவு கூர்ந்து 'இதுவரை புதுக்கோட்டை விடுதிக் குள் நாங்கள் நுழையமுடிவில்லை என்று வருத்தப் படும் பார்ப் பனர்கள் இராவணன் இறப்பு நிகழ்ச்சிக்குத்தான் போவோம் என்று சொல்லியிருக்கிறார்களாம். நான் உயிரோடு இருக்கும் வரை ஊருக் குள் பார்ப்பான் வரமுடியாது என்பது அவர்களுக்கே தெரிந் திருக்கிறது என்றார்.

- ம.மு.கண்ணன் 1-7-2012

தமிழ் ஓவியா said...

அண்ணா

தூத்துக்குடி துறைமுகத் திட்டக் கோரிக்கை வெற்றியடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜசாமி கோவிலுக்கு வருமாறு முதலமைச்சர் திரு. அண்ணாதுரையை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ் அழைத்தார்.

ஆனால் முதலமைச்சர் தான் கோவிலுக்கு வருவதற்கில்லையென்றும் வேண்டுமானால் தன் குடும்பத்தில் ஒருவரை அனுப்புவதாகவும் கூறிவிட்டார். இத்தகவலை மத்திய அமைச்சர் திரு. வி.கே.ஆர்.வி. ராவ் பத்திரிகையாளரிடம் வெளியிட்டார் (19.9.1967).

மத்திய அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.பி. ராவும், அண்ணாவும் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பிரஞ்சு அரசுவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நான்கு சிறப்பு அஞ்சல் தலை வெளி யிட்டுக் கவுரவித்தது பிரெஞ்சு அரசு அதில் தமிழ் ஈழத்தின் வரைபடம் விடுதலைப்புலி களின் மலர், புலிக்கொடி மற்றும் பிரபாகரனின் உருவப் படம் என நான்கு வரிசையாக அஞ்சல் தலைகளை வெளியிட்டதன் மூலம் இந்தியாவை ஒரு வகையில் அந்நாடு கேலி செய்துள்ளது என்றுதான் கருத வேண்டும்.

விடுதலைப்புலிகளின் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நெதர்லாந்து நீதிமன்றம் நெற்றியடி தீர்ப்பு வழங்குகிறது. 30-6-2012

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுக் களஞ்சியத்துக்கு


பெரியார் சிந்தனைத் திரட்டு முதல் தொகுதி பக்கம் 248இல் இருப்பது:

...பாரதத்திலே ஒரு பொம்பளைகூட யோக்கியமாய் பத்தினிதனமாய் அவள் புருஷனுக்கு பிள்ளை பெற்றவள்ன்னு கிடையாது.
பாரதத்திலே வர்ர எந்த முக்கிய புருஷனும் அவுக அப்பனுக்கு, பிறந்தான்ன அதிலே எழுதலே. பாரதம் நடந்ததோ, இல்லையோ, அது வேறு சங்கதி

தகவல்: க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி 30-6-2012

தமிழ் ஓவியா said...

வெள்ளையர் ஆட்சியில் திராவிட முழக்கம்

- புலவர் குறளன்பன்

மாவட்ட ஆட்சித் தலைவர்

காவல் துறைத் தலைவர்

வருவாய் வாரிய உறுப்பினர்

இம்மூன்று பொறுப்புகளும் அரசின் இயக்கத்திற்குத் துணை செய் பவைகும்.

வெள்ளையர் நம்மை ஆண்ட காலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்களே அப்பொறுப்புகளில் பெரும்பாலும் இருந்து வந்தனர்.

முதன்மையான பொறுப்புகளில் ஆங்கிலேயர்களை அகற்றிவிட்டு இந்தியர்களை அமர்த்த வேண்டும் - என்னும் வேண்டுகோளை எல் லோரும் ஏற்று மக்களின் முன்னர் பரப்பியும் வந்தனர்.

அன்னிபெசண்டின் இயக்கமும், மோதிலால் நேருவும், சி.ஆர். தாசும் இணைந்து உருவாக்கிய சுயராச்சியக் கட்சியும் அவ்விருப்பத்திற்குத் துணை ஆயின.

மக்கள் ஆளும் சட்டமன்றத்திலும் அவ்வணியினரின் விருப்பத்தை நிறைவேற்றி நிற்கும் பொருட்டு சுயராச்சியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது.

முதன்மையான பொறுப்புகள் இந்தியர்வயம் ஆக வேண்டும் என்பதை வரவேற்கிறேன்.

இந்தியர் என்னும் பெயரால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் (பார்ப்பனர்) அவ்வுரிமைகள் யாவற்றையும் தங்களுக்கே உரியதாய் ஆக்கிக் கொண்டு வருவதை எதிர்க்கிறேன்.

வந்துள்ள தீர்மானத்தில் காணப்படும் இந்தியர் என்னும் சொல்லை எடுத்துவிட்டு, அவ்விடத் தில் பிராமணர் அல்லாதார் என்னும் சொல்லப் போடுங்கள் என்று மருத்துவர் நடேசனர் திருத்தம் ஒன்றை முன்வைத்து முழங்கினார்.

அவ்வரிய அழுத்தமான வகுப்புவாரி உரிமைக்கு வழிவகுக்கும் அவரின் திருத்த உரை கேட்டு மன்றப் பெரு மக்கள் மகிழ்ந்து ஆர்ப்பரித்து வரவேற்று மனம் குளிர்ந்தனர்.30-6-2012

தமிழ் ஓவியா said...

கல்விப் புரட்சி!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று இந்து மதத்தின் அஸ்திவார நூலான மனுதர்மம் கூறுவது.

நம் தமிழ் மன்னர்கள் கூட பார்ப்பனர்கள் சமஸ் கிருதம் படிக்கத்தான் கல்விக் கூடங்களை ஏற் படுத்தினார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தபோதும், ஒவ்வொரு முறையும் புதிய கல்விக் கூடங்களைத் திறக்காததோடு மட்டுமல்ல, ஏற்கெனவே நடந்து வந்த பள்ளிகளையும் இழுத்து மூடினார். 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளி களையும் 1952 இல் 6,000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடி, சூத்திர, பஞ்சம மக்களின் கல்விக் கண்களைக் குத்தினார்.

பெரியார் பிறந்துவிட்ட பிறகு இது நடந்ததால் பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை; மாறாக எதிர் விளைவைத்தான் அது ஏற்படுத்தியது.

கல்விக் கண்களைக் குத்திய முதல் அமைச்சர் ஆச்சாரியார்தான் முதல் அமைச்சர் நாற்காலியைக் காலி செய்து வெளியில் ஓடும்படிச் செய்தது.

ஒரு காமராசர் கல்வி வள்ளலாக, பச்சைத் தமிழராக பெரு உருவெடுத்தது - இந்த அடிப் படையில்தான். பல்லாயிரக்கணக்கான பள்ளி களைத் திறந்து கல்வி வெள்ளத்தைக் கரை புரண்டு ஓடச் செய்ததால்தான் காமராசர் கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அதற்கான விதையை ஊன்றியது. அதனால்தான் கல்விப் பலனை இன்று நாம் சுவைக்கிறோம்.

இவ்வாண்டு தமிழ்நாட்டில் வெளி வந்துள்ள மருத்துவக் கல்லூரி சேர்க்கை - இந்தக் காட்சியைக் காண தந்தை பெரியார் இல்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் இந்த விளைச்சல்களுக்கு உரிமை கொண்டாட வேண்டிய மாபெரும் இனத்தலைவர் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் எம்.பி.,பி.எஸ்., படிப்புக்கான மொத்த இடங்கள் 2395.

தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) ஆகியவர்களுக்குரிய 69 சதவிகித இட ஒதுக்கீடு இடங்கள் அல்லாமல் மீதியுள்ள திறந்த போட்டிக்கான (31 விழுக்காடு) இடங்கள் 742. இதில் 678 இடங்களை இடஒதுக்கீட்டுக்குரிய பிரிவினரான தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள் பெற்றுள்ளனர் என்றால் இது சாதாரணமா?

இதில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் 16 பேர். இந்த 16 பேர்களில் பிற்படுத்தப்பட்டோர் 10, தாழ்த்தப் பட்டோர் 2, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 1, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 1, முன்னேறிய ஜாதியினர் 2. இந்த இருவர் கூட பார்ப்பனர்கள் என்று கூறமுடியாது. பார்ப்பனர் அல் லாதாரில் உள்ள உயர்ஜாதியினரான சைவ முதலியார், கார்காத்தார் போன்றவர்களும் இருக்கக்கூடும்.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இத்தகைய சாதனைகளைத் தமிழ் நாட்டில் மட்டுமே நிகழ்த்திட முடிகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? பின்னணி எது? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் இதற்குக் காரணமும், பின்னணியும். சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற தடையைத் தகர்த்து எறிந்தது நீதிக்கட்சி ஆட்சியே! இட ஒதுக்கீட்டு ஆணையை முதன் முதலில் நிறைவேற்றிச் செயல்படுத்தியதும் நீதிக்கட்சி ஆட்சியே!

கிராம மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் பெரிதும் பாதிக்கச் செய்யும் நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டியதும் தி.மு.க.ஆட்சியே! இன்னோ ரன்ன காரணங்களால்தான் பொதுப் போட்டியிலும் கூட பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்த முடிந்தது.

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கண் மூடித்தனமாகக் கேள்வி எழுப்பும் கபோதிகள் இதற்குப் பிறகாவது கண் விழிக்கட்டும்! 30-6-2012

தமிழ் ஓவியா said...

கழகப் போராட்டத்துக்கு வெற்றி!

சேலம் ரயில்வே கோட்டத்தின் தலைமையிடம், சேலத்திலிருந்து மாற்றப்படாது : அதிகாரி அறிவிப்பு

சேலம், ஜூன் 30- சேலம் ரயில்வே கோட் டத்தின் தலைமையிட மாக உள்ளது சேலம், அதை கேரளாவின் பாலக்காட்டுக்கு மாற் றிட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அதனை எதிர்த்துத் திரா விடர் கழகம் ஆர்ப் பாட்டம் நடத்தியது. அதற்குக் கைமேல் பலன் கிடைத்துள்ளது.

சேலத்திலிருந்து மாற் றப்படாது என்று தென் னக ரயில்வே பொது மேலாளர் அசோக் குமார் மித்தல் அறிவித் துள்ளார்.

பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலத்தில், தனி ரயில்வே கோட்டம் உதயமாவ தற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, சேலத்தில், ரயில்வே கோட்டம் ஏற் படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், இலக்கை எட்டி, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி, சாதனை படைத்தது. புதிய ரயில்களை இயக் குவது, வழித்தடங்களை ஏற்படுத்துவது உள் ளிட்ட அனைத்திலும், சேலம் கோட்டம் புறக் கணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சேலம் கோட்டத்தை கேரளா வுடன் இணைக்க முயற்சி நடப்பதாக, தகவல்கள் வெளியாயின. இதற்கு திராவிடர் கழ கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. போராட்டங் களும் நடத்தப்பட்டன.

சேலத்தில் மிகப் பெரிய போராட்டத் திற்குப் பிறகு பாலக்காடு கோட்டத்திலிருந்து, தனி ரயில்வே கோட்ட மாக சேலத்தை மய்யப் படுத்திட வேண்டு மென்று போராடி, (திரு. லாலுபிரசாத் (யாதவ்) ரயில்வே அமைச்சராக இருந்தபோது) தனியே வந்தது.

மீண்டும் பழையபடி பாலக்காடு ரயில்வே கோட்டத்திலேயே இணைத்து விட வேண்டு மென்று பல்வேறு செல் வாக்குள்ளவர்கள் முயற்சி செய்கின்றனர் என்பதும் கண்டனத்திற் குரியது! இதை மீண்டும் பாலக்காடு கோட்டத் தோடு இணைத்துவிட ஒரு போதும் இசைவு தரக்கூடாது, தடுத்து நிறுத்தியே ஆக வேண் டும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த 18.6.2012 அன்று கண்டனம் தெரி வித்து அறிக்கை விட் டார்.

சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கோட்ட ரயில்வே தலைமையிடத்தை பாலக்காடுக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப் படும் முயற்சியைக் கண் டித்து, திராவிடர் கழகத் தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் 26.6.2012 அன்று நடைபெறும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 26.6.2012 அன்று காலை11 மணியளவில் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் இரா. ஜெயக்குமார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவி டர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண்ணன், சேலம் மண்டலச் செயலாளர் மு. தியாகராசன் சேலம் மாவட்ட தலைவர் கே. ஜவகர், செயலாளர் அரங்க இளவரசன், மேட்டூர் மாவட்ட தலைவர் சி. சுப்பிரமணியம், செயலாளர் அ. சந்திரசேகரன், ஆத்தூர் மாவட்ட தலைவர் விடுதலை சந்திரன், செயலாளர் கோபி இமயவரம்பன், ஈரோடு மாவட்ட தலைவர் ப. பிரகலாதன், தருமபுரி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் சிவாஜி, வேலூர் மண்டலச் செயலாளர் பழ. வெங்கடாசலம், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில சமூகப் காப்பணி இயக்குநர் அழகு மணி ஆகியோர் முன்னிலை வகித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகவும் எழுச்சியுடன் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற் றாதே, மாற்றாதே சேலம் கோட் டத்தை பாலக்காட்டுக்கு மாற்றாதே! - கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் சேலம் கோட்டத்தை, பாலக்காட் டுக்கு மாற்ற முயற்சிப்பதைக் கண்டிக் கிறோம்! என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் ஓவியா said...

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து முனைவர் அதிரடி அன்பழகன் விளக்கவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சேலம், ஆத்தூர், தருமபுரி, கிருட்டிணகிரி, நாமக்கல், மேட்டூர், ஈரோடு, கோபி, கரூர் மாவட்டத் தோழர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண் டனர். இறுதியாக சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் பெ. சக்தி வேல் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

இணைக்கும் திட்டம் இல்லை

இந்நிலையில் நேற்று (29.6.2012) சேலம் ரயில்வே கோட்டத்திற்கு, தென்னக ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) அசோக்குமார்மித்தல் ஆய்வு செய்வதற்காக வந்தார். பின்னர் ரயில்வே கோட்டத்தில் நடந்து வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் கலந் தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் என்னென்ன வளர்ச் சிப் பணிகள் நடக்கிறது என்றும், குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப் படுகிறதா என்றும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து குறைகளை களையவும் பொது மேலாளர் அசோக்குமார் மித்தல் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கேள்வி: சேலம் ரயில்வே கோட் டத்திற்கு வந்ததன் நோக்கம் என்ன?

பதில்: வழக்கமான ஆய்வுப் பணிக்குத் தான் வந்தேன். ரயில்வே கோட்டத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கேள்வி: சேலம் ரயில்வே கோட்டத்தை கேரள மாநிலத்தில் உள்ள மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்துடன் இணைக்கப் போவதாக சொல்லப்படுகிறதே?

பதில்: சேலம் ரயில்வே கோட் டத்தை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்ற அப்படியொரு திட்டம் இல்லை.

இவ்வாறு பொது மேலாளர் அசோக்குமார் மித்தல் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

30-6-2012

தமிழ் ஓவியா said...

என்னே தோழர்களின் அணுகுமுறைகள்


விடுதலை சந்தா புதுப்பித்தல், சேர்த்தலை முன்னிறுத்தி தமிழ் நாடு முழுவதும் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றன. உற்சாகத்தோடு தோழர்கள் களத்தில் இறங்கிவிட்டனர்.

பல மாவட்டங்களில் கழகத் தோழர்கள் வெளிப் படுத்திய தகவல் கள், கருத்துக்கள் பொறிதட்டுவது போல் இருந்தன.

ஆவடி மாவட்டம், திருமுல்லை வாயில் கழகத் தோழர் இரணியன் தெரிவித்த கருத்து. 31 பேர்களிடம் விடுதலை சந்தா சேர்த்தேன். இரண்டு மாதங்கள் விடுதலையைப் படித்த நிலையில் அவர்களின் மனநிலை - கருத்தோட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய 31 பேர்களுக்கும் தனித் தனியே அஞ்சலட்டையில் எழுதிக் கேட்டேன். பெரும்பாலானவர்களிட மிருந்து பதில் வந்தது.

நாங்கள் இதுவரை எத்தனையோ ஏடுகளைப் படித்திருக்கிறோம். ஆனால் விடுதலை யை முதன் முதலாகப் படித்த அனுபவம் எங்க ளுக்கு! வேறு எந்தப் பத்திரி கைகளிலும் வெளிவராத செய்திகள் விடுதலை யில் வெளி வருகின்றன.

குறிப்பாக வாழ்வியல் சிந் தனைகள், ஒற்றைப் பத்தி, மருத் துவத் தகவல்கள், இளைஞர்கள் பகுதி (வேலை வாய்ப்பு) மகளிர் பகுதி, அறிவியல் பகுதிகள் எங் களைக் கவர்ந்தன என்று எழுதி னார்கள் என்று தோழர் இரணியன் குறிப்பிட்டுள்ளதை மற்ற மற்ற பகுதிகளில் உள்ள தோழர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் விமல்ராஜ் சொன்ன தகவல் இன்னும் சுவையானது.

நான் குடியிருக்கும் பகுதியில், திருவள்ளூரில் ஆறு கடைகளுக்கு என் சொந்தப் பொறுப்பில் விடு தலை சந்தா கட்டினேன். நான் தான் பணம் கட்டினேன் என்று அவர்களிடத்தில் நான் சொல்லவும் இல்லை. விடுதலை அவர்களுக்குப் போய்க் கொண்டே இருந்தது. எப்படி வருகிறது என்பது அவர்கள் மத்தியில் ஆச்சரியம் கூட!

இரண்டு மாதம் கழித்து ஒரு முடிதிருத்தும் கடைக்குச் சென்று விசாரித்தேன். அப்பொழுதுதான் நான் சந்தா கட்டிய விவரம் அவர்களுக்குத் தெரிந்தது.

அவர் சொன்னார்: தொடக்கத் தில் அவ்வளவு ஆர்வமாக விடு தலை யை யாரும் படிக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். சிலர் விடுதலையைப் படிப்பதற்காகவே என் கடைக்கு வர ஆரம்பித்தனர். நாளடைவில் வேறு பத்திரிகைகளை வாங்குவதை நிறுத்திவிட்டேன்.

இப்பொழுது என்ன நிலைமை என்றால் விடுதலை நாள்தோறும் வர ஆரம்பித்த நிலையில் எனக்கு வாடிக்கைக்காரர்கள் புதிதாக வர ஆரம்பித்துள்ளனர். உங்களுக்கு நன்றி அய்யா! விடுதலை தொடர்ந்து கிடைக்க ஆவன செய்யுங்கள் என்று அந்த முடி திருத்தகத் தோழர் கூறிய கருத்தினை - திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் விமல்ராஜ் கூறியதைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனோம்!

கழகத் தோழர்களே, இந்த வழி முறைகளை ஏன் நீங்கள் பின்பற்றக் கூடாது?

விடுதலையால்தான் தமிழர் களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்! வீட்டுக்கு வீடு செல்வீர்! விடுதலையின் சாதனைகளை வெளிப்படுத்துவீர்! தந்தை பெரியார் காண விரும்பிய சமூகத்தைத் தமிழர் தலைவர் தலைமையில் வென்றெடுப்போம் - விடுதலை எனும் பகுத்தறிவு ஆசானாகிய ஆயுதம் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் இடம் பெறட்டும் - இடம் பெறச் செய் வோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு !! 2-7-2012

தமிழ் ஓவியா said...

ஜூலை 4இல் நடைபெறும் தி.மு.க. மறியல் போராட்டம் அறவழிப் போராட்டம்
தந்தை பெரியார் வலியுறுத்திய கட்டுப்பாடு தவறக் கூடாது

தாம்பரம், ஜூலை 2- அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டிட ஜூலை 4இல் நடைபெறும் மறியல் அறப் போராட்டத்தில் நாம் கடைபிடிக்க வேண்டியது கடமை, கண்ணியம், கட்டுப்பாடாகும். அண்ணா விட்டுச் சென்ற அந்த மூன்று சொற்றொடரில் எல்லாவற்றை யும்விட மிக முக்கியமானது கட்டுப்பாடாகும். அந்தக் கட்டுப்பாடு தவறக் கூடாது என்று தந்தை பெரியார் வலியுறுத்தி சொல்லியிருக் கின்றார். அதைக் கொஞ்சமும் மீறாமல் நடக்க வேண்டும் என்று நேற்று தாம்பரத்தில் நடை பெற்ற போராட்ட விளக்கப் பொதுக் கூட் டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் உரை யாற்றும்போது வேண்டுகோள் விடுத்தார். அவரது உரையின் முக்கிய பகுதி வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வர லாறு, போராட்ட வரலாறு, ஆட்சிக்காக பிறந்த வர்கள் அல்ல நாங்கள். ஆட்சி நடத்துவதுதான் எங்கள் குறிக்கோள் என்று கருதி, அதற்கென பாடுபடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சி இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். இல்லாவிட்டாலும் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அந்த வாக்கிற்கு ஏற்ப, தொடர்ந்து இந்த இயக்கத்திலே உள்ள நாங்கள் இளம் வயது முதல் இன்று வரையிலே; அது தந்தை பெரியார் காலமாக இருந்தாலும், பேரறிஞர் அண்ணா அவர் களுடைய காலமாக இருந்தாலும், அவர்களுடைய மறைவிற்குப் பிறகு நாங்கள் உங்களுடைய ஆதரவோடு நடத்துகின்ற இந்த இயக்கம், மக்கள் பிரச்சினைகளுக்காக, மக்களுடைய நல்வாழ்வுக் காக, அதுவும் எந்த மக்கள் என்றால் திராவிட மக்கள்; அடிமைப்படுத்தப்பட்டு ஆரியத்தால், ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டுக் கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்ய தொடங்கி யதுதான் திராவிட இயக்கம். முதலில் திராவிட இயக்கம், திராவிட முன் னேற்றக் கழகமாக, அதற்கு முன்பு திராவிடர் கழகமாக, அதற்கு முன்பு நீதிக்கட்சியாக, அதற்கு முன்பு தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இப்படி எத்தனை பெயரிலே மக்களிடத்திலே தொடர்பு கொண்டாலும், அத்தனை பெயரிலும் நாங்கள் கொண்டிருந்த மூலக் கொள்கை திராவிடர்களை எழுச்சி பெறச் செய்வதுதான். ஆரியர்களுடைய அடிமைகள் என்று ஆக்கப்பட்ட நிலையிலே இருந்து அவர்களை விடுவிப்பது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திச் செல்கிற எங்களுடைய முக்கிய வழிமுறையாகும். அந்த வகையிலே கடந்த காலகட் டத்தில் அறிஞர் அண்ணா அவர்களுடைய காலத் திலே ஆட்சியிலே அமர்ந்து, அண்ணா அவர் களுடைய மறைவுக்குப் பிறகு அந்த ஆட்சியைத் தொடர்ந்து நானே அய்ந்து முறை முதலமைச்சராக இருந்து, இந்த ஆட்சிக் காலத்திலே பல தியாகங் களை இந்த இயக்கம் செய்து, பல போராட்டங் களில் ஈடுபட்டு, நெருக்கடி கால கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து, இன்றைக்கு உங்கள் முன்னால் நாங்கள் எதற்கும் தயார், நெருப்பிலே இறங்கவா? நெடுநாள் பட்டினி கிடக்கவா? எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறுகின்ற வீர வாலிபர்களை, இளைஞர்களை, வயது முதிர்ந் தோரை, திராவிடச் செல்வங்களை பெற்றிருக்கின்ற இந்த இயக்கத்தின் சார்பிலேதான் ஜூலை 4 ஆம் தேதி நடை பெறவிருக்கின்ற போராட்டத்திற்காக, அழைப்பை விடுக்க மாத்திரமல்ல, ஏன் இந்த போராட்டம் என்ற காரணத்தைக் கூற மாத்திர மல்ல, எப்படி நடத்தப்பட வேண்டும் இந்தப் போராட்டம் என்று விளக்கம் அளிக்கவும் இந்தக் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

மிகுந்த கவனத்தோடு இந்தப் போராட்டத்தை, ``அறப்போராட்டம் என்று நாம் குறித்திருக் கின்றோம். இந்தப் போராட்டத்திலே அறநெறியைத்தான் நாம் பின்பற்றுவோம். அமைதி வழியைத்தான் பின்பற்றுவோம். அண்ணா வழியைத்தான் நாம் கடைப்பிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்ற தாரக மந்திரத்தை நமக்குப் போதித்த காஞ்சி புத்தன் அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய இயக்கத்திற்கு வழங்கி விட்டுச் சென்றிருக்கின்ற மூன்று சொற்றொடர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. கடமை தவறாமல் கட்சிக்கு அதனுடைய ஆணைகளை நிறைவேற்ற வா! கண்ணியம் - அதை நிறைவேற்றும் போது கண்ணியம் கெடாமல் பார்த்துக்கொள். அதனால்தான் ``கண்ணி யத்திற்குரிய காவலன் என்று இஸ்மாயில் சாகிப் அவர்களை சொல்வதற்குக் கார ணம் அவர் கண்ணி யத்தை சிறப்பான குண மாகக் கொண்டவர் என்பதால்தான். மூன்றாவதாக கட்டுப்பாடு. பெரியார் சொல்வார், கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்று அண்ணா சொன்னார் - கடமை, கண்ணியம் உங்களி டத்தில் இருக்கிறதோ இல்லையோ, எல்லா வற்றையும் விட மிக முக்கியமானது கட்டுப் பாடு. அந்தக் கட்டுப்பாடு தவறக் கூடாது என்று தந்தை பெரியார் வலி யுறுத்தி சொல்லியிருக் கின்றார். ஆகவே நான்கு நான்கு பேர் 40 பேராக சேர்ந்து, நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நிற்க வேண் டும் என்று, ஆங்காங்கு உங்களுக்கு தலைமை ஏற்றிட, அல்லது உங் களுக்கு ஆணையிடு கின்ற,மாவட்டப் பொறுப்பாளரோ அல்லது செயலாளரோ சொல்வார்களேயானால், அதை கொஞ்சமும் மீறாமல் நடப்பதுதான் கட்டுப்பாடு. அந்தக் கட்டுப் பாட்டை மீறினாலும் நமக்கும் தீமை, மக்க ளுக்கும் அதனால் கஷ் டம். நம்மை கைது செய்ய வருகின்ற காவல் துறையினருக்கும் சிக்கல். ஆகவே அவர்களுக்கு சிக்கல்வராமலும், பொதுமக்களுக்கு இன்னல் நேராமலும் எல்லோருக்கும் அமை தியான முறையில் நாம் நம்முடைய போராட் டத்தை நடத்த வேண் டும்.அதனால்தான் இதை நாம் ``அறவழிப் போராட்டம் என்று சொல்லியிருக்கிறோம். இந்தப் போராட் டத்தில் கலந்து கொண்டு யாரும் ஜாமீன் கேட்டு வெளியில் வரக் கூடாது. நாம் தியாகத் திரு விளக்குகளாய் - எதை யும் தாங்குகின்ற இதயம் படைத்தவர்களாய் அண்ணாவின் உண்மையான தம்பி களாய் - பெரியாரின் உண்மையான சீடர் களாய் இருக்கிறோம் என்பதற்கு அடையா ளமாக இந்தப் போராட் டத்திலே நீங்கள் அமைதி காக்க வேண்டும். இன்றைக்கு தமிழ் நாட்டில் நடைபெறு கின்ற ஆட்சி எப்படிப் பட்ட ஆட்சி என்பதை எனக்கு முன்னால் பேசிய என்னுடைய தம்பிமார்களெல்லாம் உங்களிடத்திலே சாங்கோபாங்கமாக விவரத்தை சொல்லி யிருக்கிறார்கள். அதற்கு மேல் நான் விளக்க விரும்ப வில்லை. உங் கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று. இருளிலே மூழ் கியிருக்கிற ஆட்சி. அந்த ஒன்றுபோதும் இந்த ஆட்சிக்கு உதாரணம். எனவே இந்த ஆட்சிக்கு விடைகொடுக்க அல்ல. இந்த ஆட்சிக்கு புத்தி சொல்ல, இந்த ஆட்சிக்கு அறிவு புகட்ட , இந்தப் போராட்டம் அற வழியில் நடைபெறுவது மிக மிக அவசியம் என்ற ளவில் அதற்குத் தயாரா குங்கள். இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றி னார். 2-7-2012

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி. என்றாலே அக்கிரகார வாசிகளுக்குத்தானா?


மத்திய அரசால் நடத்தப்படும் அய்.அய்.டி., அய்.அய்.அய்.டி. மற்றும் என்.அய்.டி. முதலிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படித்தால் அவற்றிற்கு உலகத்தரம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயர் அளவிற்கு இருக் கிறது. பெரும்பாலும் அந்த இடங்கள் நிரப்பப் படுவதில்லை.

தப்பித் தவறி நுழைந்தாலும் தேர்வு பெற்று வெளியில் வருவது என்பது முயற்கொம்பே! இத்தகைய கல்வி நிறுவனங்களில் சேரும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவிகள் தற்கொலைக்கு ஆளாவது உண்டு.

மாநிலங்களில், மாநில அரசுகளால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள், தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறியவர்கள் தகுதி அற்றவர்களா? அய்.அய்.டி.களில் படித்தவர்கள் மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டவர்களா?
உண்மையைச் சொல்லப் போனால் மாநில அரசுகள் மற்றும் தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் படித்துத் தேறியவர்கள்தான் நம் நாட்டுக்குப் பயன்படக் கூடியவர்களாக உள்ளனர்.

அய்.அய்.டி. போன்ற மேல் தட்டுப் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குப் பறந்து சென்று விடுகிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் படித்தவர்கள் இந்த மக்களுக் காகச் சேவை செய்ய விரும்புவதில்லை. இதுதான் நடைமுறை உண்மை. அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களுக்குள் நுழைவு என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதுபோன்ற கடுமையான நடைமுறைகளை வைத்துள்ளார்கள்.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களோ, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாணவிகள் அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களைப்பற்றிக் கனவு காணவே முடியாது. அவ்வளவு இறுக்கமான நடைமுறைகள்!

கல்வியில் ஏன் இப்படிப்பட்ட பிராமண சூத்திர - பஞ்சம - வருணாசிரம முறை இருக்க வேண்டும்?

சமூக நீதியாளர்களின் கவனம் இந்தப் பக்கம் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் திளைக் கிறார்கள்.

அய்.அய்.டி. மற்றும் என்.அய்.டி.களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறையில் அவர்களுக்குள்ளேயே கருத்து மோதல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இப்பொழுதுள்ள முறையில், பல நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. இது மாணவர்களுக்குப் பெருஞ் சுமையாக உள்ளது. இதனை மாற்றி அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் வலியுறுத்துகிறார். இதனை சில நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. வேறு சில நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன. குறிப்பாக அய்.அய்.டி.கள் ஏற்க மறுக்கின்றன.

இரண்டு வகையான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அய்.அய்.டி.யின் வழிமுறை என்ன? +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு முதன்மை நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் சதவிகித அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில் இரண்டாவது நுழைவுத் தேர்வு (ஹனஎயஉநன நுஒயஅ) எழுதுவதற்கு அனுமதிக்கப்படும். இந்த இரண்டாவது முன்னேறிய நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.

அய்.அய்.டி. அல்லாத என்.அய்.டி. போன்ற நிறுவனங்கள் என்ன கூறுகின்றன? +2 படிப்பில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவிகிதமும், முதன்மை மற்றும் முன்னேறிய நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தலா 30 சதவிகிதமும் கூட்டப் பெற்று கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இதனை சில அய்.அய்.டி. நிறுவனங்களின் செனட் டுகள் ஏற்க மறுக்கின்றன. இதுதான் இப்பொழுது பிரச்சினை.

+2 தேர்வு மதிப்பெண்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது என்று அய்.அய்.டி.கள் கூறுகின்றன. இது ஒரு உயர் ஜாதி மனப் போக்காகும். வடமாநிலங்களில் +2 தேர்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுகிறது. அய்.அய்.டி. தேர்வு எழுதுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த கால கட்டத்திலேயே மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்.

இந்த முறைகள் மாற்றப்பட்டு +2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழ்நாட்டுப் பொறியியல் கல்லூரி களில் உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

எல்லா மாநிலங்களிலும் அய்.அய்.டி.கள் இல்லையே என்று சமாதானம் கூறலாம். மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்துக்கு இத்தனை இடங்கள் என்று நிர்ணயித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமே.

நுழைவுத் தேர்வுகள் எந்த முறையில் வந்தாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆபத்தே! 2-7-2012

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பற்றிய அமெரிக்க வாழ் தமிழ் இளைஞரின் கண்ணோட்டம்


அமெரிக்காவின் சிகாகோ நகரில் வாழும் பெரியார் பன் னாட்டு அமைப்பின் இயக்குநரான மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களின் மகள் கனி இளங் கோவன் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களைச் சந்தித்தது பற்றிய தனது கருத் தினை தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி எங்களது பெற்றோர் இல்லத்துக்கு நாங்கள் சென்றிருந்தபோது, அங்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்த திரு. கி.வீரமணி அவர்களையும், அவரது மனைவி திருமதி மோகனா அம்மையாரை யும் சந்திக்கும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சமூக நீதி இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள். ஜாதி அமைப்பு நடைமுறைக்கு எதிராக சோர் வின்றி, சுயநலமின்றி அவர் பாடுபட்டு வருகிறார்; பெண்கள், ஆதரவற்றோர், ஏழைகள், சமூக அளவில் புறக்கணிக்கப் பட்டவர்கள் ஆகியோரின் முன்னேற்றத் திற்கும் பாடுபட்டு வருகிறார். பல பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிறுவி நடத்தி வரும் அவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தரும் ஆவார். நுண்ணறிவும், பேரறிவும், எதையும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ள அவர், ஒரு கடும் உழைப்பாளி என்பதுடன் சிறந்த மனித நேயரும் ஆவார். நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சிறந்த தருணம் எது என்று அவரைக் கேட்டோம்.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்டதை எதிர்த்து 1976 இல் சிறைக்குச் சென்றதுதான் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத சிறந்த நிகழ்வு என்று கூறி எங்களை அவர் வியப்பிலாழ்த்தினார்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு, பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கும், சட்டம் ஒழுங்கை நடை முறைப்படுத்தும் காவல்துறை போன்ற அமைப்புகளுக்கும் அளவற்ற அதிகாரம் அளிக்கப் பட்டிருந்தது. மனித உரிமை மீறல்களை தடையின்றி செய்யவும், தடுப் புக் காவல் சட்டத்தின் கீழ் ஏதுமறியாத அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தனர். வாரண்டு இன்றி சோதனையிடவும், சொத்துகளைக் கைப்பற்றவும், கட்டாய குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவும், தொலைபேசி உரையாடல் களைப் பதிவு செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
தனது மனைவி, 3 குழந்தைகள் கொண்ட குடும்பத்தை விட்டுப் பிரித்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட அவர் உயிருடன் இருக்கிறாரா? இல் லையா என்பது ஒரு மாத காலம் வரை எவருக்கும் தெரியவில்லை. 8 பேருடன் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அவருக்கு, தண்ணீர் குடிக்க ஒரு பானையும், சிறுநீர்கழிக்க ஒரு பானையும் மட்டுமே அளிக்கப்பட்டது. உடுத்திக் கொண்டிருக்கும் துணிகளை மாற்றிக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவின் மீது தூசும், சிறுநீரும் தெளிக்கப்பட்டி ருந்தது. உடலாலும், மனத்தாலும் சித்திர வதை செய்யப்பட்ட அவர்கள் விடுவிக்கப் படுவது பற்றிய பேச்சே எழவில்லை. சிறைச் சுவர்களுக்குள்ளேயே தங்கள் வாழ்நாள் முடிந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சினர்.
அவர்கள் சிறையில் இருப்பது அவர் களது குடும்பத்துக்குத் தெரியப்படுத்தப் பட்டபோது, அவரைப் பார்க்க குடும்பதினர் வருவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அவர்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டன.
படிப்பதற்காகத் தனக்கு வேண்டிய நூல்களின் ஒரு பெரிய பட்டியலை அவர் அளிப்பார். சிறையில் இருக்கும்போது அவர் இத்தகைய நூல்களைப் படித்துக் கொண்டேயிருந்தார். சிறைக் கொட்டடி யின் நூலகராகவே அவர் ஆகிவிட்டார்.
தனது வாழ்விலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி என்று தனது சிறைவாசத்தை அவர் ஏன் குறிப்பிட்டார்?
இத்தகைய சூழ்நிலைகளில் அவர் தனது உண்மையான நிலையை உணர்ந் தார். சிறையில் அவர் அனுபவித்த இரக்க மற்ற அடக்குமுறை, விலங்காண்டித்தனம், நேர்மையற்ற கொடுமைகள் ஆகியவை சமத்துவம், நீதி போன்ற மதிப்பீடுகளைத் தேடும் அறிவு தாகத்தை அவருள் ஏற்படுத்தின. இவையே பின்னாட்களில் அவரது இரவுகளையும், பகல்களையும் ஒளிப்படுத்திக் காட்டின; மனதில் தெளிவையும், நோக்கத்தில் உறுதியையும் உண்டாக்கின.
சிறையில் இருந்தபோது அவர் தனது சுதந்திரத்தைக் கண்டு கொண்டார். இந்த மாபெரும் கொடையை மொத்த மனித இனத்துடன் பகிர்ந்து கொள்வதை தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளச் செய்தது இந்த சிறை வாழ்க்கை தான்.
2-7-2012