Search This Blog

4.7.12

கிரிக்கெட் விளையாட்டும்! - வாஸ்து மூடநம்பிக்கையும்!


அய்.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் நடந்தது அல்லவா? இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை யில் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற என்ன செய்தது தெரியுமா?

அணியின் ஒப்பனை அறையில் கூடுதலாகக் கண்ணாடிகள் வைக்கப் பட்டன. அப்படி வைத்தால் வாஸ்து பிரமாதமாக இருக்கும் என்று எவனோ ஒரு வாஸ்து கிறுக்கன் சொன்னதைக் கேட்டு இந்தக் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டுக் காரர்களும் நம்பினார்கள்.

கண்ணாடிகள் எல்லாம் வைக்கப்பட்டன. விளைவு. ஊத்திக்கிட்டது தான் மிச்சம். தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

விளையாட்டில் வீரத்தையும், விவேகத்தையும் காட்ட வேண்டியிருக்க, இப்படி முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையை யும் தேடி அலைகிறார்களே - காரணம் தன்னம்பிக்கையும் சுயபுத்தியும் இல்லாததுதான்.

சில கிறுக்கர்கள் குறிப்பிட்ட நிறத்தில் உள்ள கைக்குட்டையை மைதானத்தில் பயன்படுத்தினால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்குகிறார்கள்.

கடவுள் பக்தி, நம்பிக்கை என்பது எத்தனை எத்தனை வகைகளில் தான் தனி மனிதனையும், சமூகத்தையும் சீரழிக் கிறது பார்த்தீர்களா?

கடந்த முறை உலகக் கால்பந்து போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆக்டோபஸ் முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

யூரோ கப் போட்டியில் அது போன்றவை இல்லை. ஒருக்கால், உலகப் போட் டிக்குத்தான் வருமோ! இந்தியாவைப் பொருத்த வரை இந்து மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறது. எதிலும் தன்னம்பிக்கையைக் காயடிக்கக் கூடியது அது. நெருக்கடியான கால கட்டத்தில் மன உறுதியோடு விளையாட வேண்டும் என்ற துணிவு இவர்களுக்கு அறவே கிடையாது. வெட்கக் கேடு!

வானத்தையே வளைத்து எழுதும் ஏடுகள் இந்த மூட நம்பிக்கைகள்பற்றி எல்லாம் மூச்சுவிடாது - காரணம், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவை தானே இந்து ஏடுகளும்!

-------------------- மயிலாடன் அவர்கள் 4-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

தமிழ் ஓவியா said...

நித்தியானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய் வெளியே தெரியாமல் வளரும் வைரஸ் பெண் சீடரின் பரபரப்பான வாக்குமூலம்


என்னைப் பொறுத்தவரை நித்தி யானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். அவரது நடவடிக்கைகள் முற்றிலும் அழிக் கப்பட வேண்டும் என்று நித்யானந் தாவின் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்காவி லிருந்து வரவழைக்கப்பட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிகளை பதிவு செய்தேன் என்று அவரது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு காவல்துறையில் நித்தி யானந்தா விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ராவ் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். எனது பூர்வீகம் பெங்களூரு என் றாலும் பிறந்து வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தது எல்லாம் சென்னையில்தான். 1996 இல் பி.டெக். படித்து முடித்தேன். பின்னர் அமெரிக்காவில் எம்.டெக். படித் தேன். காதலித்து பெற்றோர் விருப்பத் துடன் அன்பான கணவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினேன்.

நல்ல வேலை, மாதம் ரூ.2 லட்சம் சம்பளம். எல்லாம் இருந்தும் ஆன்மீக தேடல் என்னிடம் அதிகமாக எழுந்தது. அதற்காக நித்தியானந்தாவின் போதனைகளை நம்பி அவரது ஆசிர மத்துக்கு செல்ல தொடங்கினேன்.

எனது கணவர் ஏழைகளுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக நிற்பார். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் கிடை யாது. அவரது எச்சரிக்கையையும் மீறித் தான் நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்று வந்தேன். ஆசிரமத்துக்குள் போய்விட்டால் நித்தியானந்தா சொல்வது மட்டும்தான் சரி. அவரை பரிபூரணமாக நாம் நம்ப வேண்டும் என்பதுதான் அங்கு தரப்படும் பயிற்சி.

உலகில் மிகப்பெரிய பாவம் குரு துரோகம் என்பார். அந்த மிரட்டலுக்கு பயந்துதான் எல்லோரும் ஏமாந்து போகிறார்கள். நான் எனது வேலையை உதறி தள்ளிவிட்டு ஆசிரமத்தில் தங்கினேன். அவருடைய தனியறைக்கு செல்ல எல்லோருக்கும் அனுமதி கிடையாது. தனிச் செயலாளரான ராகினிக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது என்னை சுவாமியின் சேவைக்கு என்று அனுப்பினார்கள். அங்கு சென்றதும் அவரது மூளைச்சலவை தொடங்கியது.

தமிழ் ஓவியா said...

மதுரபாவா நிலை என்று சொல்லி ராதைபோல் இருக்க வேண்டும் என்று தேனொழுக பேசி விழுங்கி விட்டார். அவரது பேச்சை நம்பி கடவுளாகவே அவரை நினைத்து பலமுறை என்னையே அவரிடம் கொடுத்துவிட்டேன்.

அவரோடு வட இந்திய சுற்றுப்பயணம் சென்றபோது புண்ணியத் தலங்களில் வைத்தும் என்னிடம் லீலை புரிந்தார். அவரோடு இணைய தயங்கிய வேளை களில் என் கன்னத்தில் அறைந்த சம் பவங்களும் உண்டு.

அவரது பிடியில் இருந்து மீள முடி யாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நித்தியானந்தா பீட பொறுப்பாளரான வினய் பரத்வாஜ் என்னை தொடர்பு கொண்டு, நித்தி யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு நிர்ப்பந் தப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டார். நீயும் அவரால் சீரழிக்கப்படுவதாக அறிந்தேன் என்றார். நான் அவரிடம் மறுத்து விட்டேன்.

ஆனால், இதே கேள்வியை லெனின் கருப்பன் கேட்டபோதும் முதலில் மறுத் தேன். பின்னர் மறைக்க முடியாமல் அழுதுவிட்டேன். அதன்பிறகுதான் படுக்கையறை தில்லுமுல்லுகளை படம் பிடிக்கும் திட்டம் உருவானது.

நித்தியானந்தாவின் அனுமதியுடன் காற்றை சுத்தப்படுத்தும் ஒரு ஏர்பியூரி பயரை அவரது அறையில் பொருத்தி னேன். அந்த பியூரிபயர் ஸ்பை காமிரா வுடன் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது ஆகும்.

காமிராவை 2 நாள் கழித்து பார்த்த போதுதான் அதில் ரஞ்சிதாவுடனான செக்ஸ் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த விஷயத்தில் ரஞ்சிதா என் இலக்கு அல்ல. அந்த சம்பவத்தோடு அவர் திருந்தி விடுவார் என நினைத்தோம். ஆனால் பலரை வழக்கு போட்டு பழி வாங்கி வருகிறார். எனவே நான் பெங் களூரு காவல்துறையில் உண்மைகளை சொன்னேன்.

ஆசிரமத்தில் என்னை இழந்த கதைகளை சொல்லி என் கணவரிடம் அழுதேன். அவரும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார். ஆனால் என்னையும், என் கணவரையும் குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தியதால் இப்போது என் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார்.

நித்தியானந்தா அமெரிக்க நீதிமன்றத் தில் போட்ட வழக்கால் 6 மாதத்தில் 30 லட்ச ரூபாயை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். அவர் எதிர்பார்ப்பது போல் நான் மூலையில் முடங்கப்போவ தில்லை. எனது போராட்டத்தால் பத்து பெண்கள் நித்தியானந்தாவிடம் சிக்காமல் தப்பினால் கூட போதும்.

என்னைப் பொறுத்தவரை நித்தி யானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். அவரது நடவடிக்கைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.

நித்தியானந்தா- ரஞ்சிதா சி.டி. உண் மையானது என்று இந்திய அதிகாரிகள் கூறிவிட்டனர். அமெரிக்காவிலும் பிரபல மான நிபுணரிடம் அந்த சி.டி.யை ஆய்வு செய்து உறுதி செய்து விட்டேன். ஒரு போதும் நித்தியானந்தா தப்பவே முடியாது என்று கூறியுள்ளார் ஆர்த்தி ராவ்.4-7-2012

தமிழ் ஓவியா said...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

தமிழ்நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 76 விழுக்காடு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளனவாம்.

மொத்த வழக்குகள் 3641 இல் 767 வழக்குகள் தான் முடித்து வைக்கப்பட்டுள்ளனவாம்; இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய நிலைப்பாடாகும்.

தீண்டாமைக் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங் களுள் - இது குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒன்றாகும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று வார்த்தையளவில்தான் நாட்டில் உலவி வருகிறதே தவிர நடைமுறையில் இது குறித்து நிருவாகமும் கவலைப் படுவதில்லை, நீதிமன்றங்களும் கவலைப்படுவதில்லை.

இன்னும் தீண்டாமைச் சுவர்களும், தேநீர்க் கடைகளில் இரட்டை தம்ளர் முறைகளும் நீடிப்பது வெட்கக்கேடானதாகும்.

இதுகுறித்து முக்கியமாக கவனிக்குமாறும் ஆங்காங்கே நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்குமாறும் கழகத் தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்புகூட ஈரோடு கொடுமுடியை ஒட்டிய நகப்பாளையப் பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதுபற்றி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல் பாட்டுக்கு உடனடியாக வெற்றி கிடைத்துள்ளது. அந்தச் சுவர் உடனடியாக இடிக்கப்பட்டுவிட்டது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுமாறு கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இது தந்தை பெரியார் பிறந்த மண்! ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனையோ தியாகத் தழும்புகளை ஏற்ற இலட்சோப லட்சங் கருஞ்சட்டையினர் வாழ்ந்து மறைந்த பூமி! இங்கு ஒரு தீண்டாமைக் குற்றம் நிகழ்கிறது என்றால், கழகத்துக்குத்தான் சவால்! வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத் துவத்தைவிட இதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமும் - அவசரமுமாகும்.

மதுரையையடுத்த மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த முருகேசன் என்ற தாழ்த்தப்பட்டவர் படுகொலை - அது தொடர்பான பிரேத பரிசோதனை மருத்துவ அறிக்கை பதற வைத்தது. 37 வயதுடைய அவரின் தலை தனியாகக் காணப்பட்டது. 4 ஆவது மற்றும் 5 ஆவது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பை வெட்டியும், அதைச் சுற்றியுள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவை வெட்டிய நிலையில் காணப்பட்டனவாம்!

என்னே ஜாதீயத்தின் அருவருக்கத்தக்க வெறித் தனம்! தீண்டாமை மட்டும் ஒழிந்தால் போதும்; ஜாதி ஒழியக்கூடாது என்று இன்றைக்குக்கூடக் கூறக் கூடிய, இதோபதேசம் செய்யக்கூடிய மே(ல்)தாவிகள், அறிவுக் கொளுந்துகள், சங்கராச்சாரியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தீண்டாமை க்ஷேமகரமானது என்று சங்கராச்சாரி சொன்ன தெல்லாம் (மறைந்த காஞ்சி - சந்திரசேகரேந்திர சரஸ்வதி) தெய்வத்தின் குரல் என்று கூறுபவர்களும் இந்த நாட்டில் உண்டு.

ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் என்பதெல்லாம் மாய்மாலமே! சுதந்திரம் இருக்கும் நாட்டில் - மனித உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டிய நிலையில் பிறவியிலேயே ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் ஜாதிக்கு ஏது இடம்?

தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்காக அரசுகள் ஒதுக்கும் நிதிகள் அவர்களுக்குப் பயன்படுத்தப்படாமல் வேறு துறைகளுக்குத் திருப்பிவிடப்படுகின்றன என்கிற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.

இது அரசு நிலையிலேயே கடைப்பிடிக்கும் இன் னொரு வகை தீண்டாமைதான் என்று சொல்லவேண்டும்.

தீண்டாமையைப் பொறுத்தவரை எந்தப் பகுதியில் அது தீய தலைகளைக் காட்டிக் கொண்டுள்ளது என்பது காவல்துறையில் உள்ள உளவுப் பிரிவுக்கு மிக நன் றாகவே தெரியும். முளையிலேயே கெல்லி எறியும் நட வடிக்கைகளை மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு காவல்துறை ஏன் எடுக்கக்கூடாது?

இந்து மதம் என்ற கொடிய அமைப்பின் மிச்ச சொச்சங்களில் ஜாதியும், அதன் தீய விளைவான தீண்டாமையும் மிகமிக மோசமானவை - பிரச்சாரம் - சட்டம் இவற்றின்மூலம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டி யவை - பிரச்சாரம் என்றால் திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியில்லையே!

கழகம் மேலும் தீவிரமாகப் பாடுபடும்; பொதுமக்கள் ஒத்துழைப்பார்களாக! 4-7-2012

தமிழ் ஓவியா said...

நித்யானந்தா பவுண்டேஷன் வசூலித்த ரூ.8.8 கோடியை வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு


பெங்களூரு, ஜூலை 4- அமெரிக்காவில், "நித் யானந்தா பவுண்டே ஷன் வசூலித்த, 1.6 மில் லியன் டாலரை (8.8 கோடி ரூபாய்), வட்டி யுடன் திரும்ப செலுத்த வேண்டும் என கலி போர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. "நித்யா னந்தா பவுண்டேஷன் ஒரு மோசடி நிறுவனம், என்றும் கூறியுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில், நித்யா னந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார்.

அமெரிக்கா கலிபோர்னியாவில், "நித்யானந்தா பவுண் டேஷன் என்ற பெய ரில், நிறுவனம் நடத்தி வந்தார். இந்த பவுண் டேஷனில், பல சட்ட விரோத செயல்பாடுகள் நடப்பதாகவும், பவுண் டேஷன் உறுப்பினர்களி டம், யோகா, தியானம் கற்று கொடுப்பதாக கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டுள்ளது என்று, 2010இல் பொபட்லால் சாவ்லா என்பவர், கலி போர்னியா நீதிமன்றத் தில், மனு தாக்கல் செய் தார்.

மனுவில், "இந்த பவுண்டேஷனில் சட்ட விரோதமாக பல முறை கேடுகள் நடக்கிறது. பெண்களிடம் "செக்ஸ் ஒப்பந்தம் போடப்பட் டுள்ளது. இந்த பவுண் டேஷனுக்கு, பல ஆயி ரம் கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளேன். வசூல் செய்து கொடுத்த, 1.6 மில்லியன் டாலரை (8.8 கோடி ரூபாய்) நித் யானந்தாவிடமிருந்து வாங்கி கொடுக்க வேண் டும்,'' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த நீதிமன்றம், தன் தீர்ப்பில், கலிபோர்னி யாவில் நடத்தி வரும், "நித்யானந்தா பவுண்டே ஷன் ஒரு மோசடி நிறு வனமாகும். இந்த பவுண் டேஷனில் "செக்ஸ் ஒப் பந்தம் போடப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த பவுண் டேஷனை நிர்வகித்து வரும், கோபால் சென் னாரெட்டியை, கைது செய்து, 19ஆம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். பக்தர் களிடம் வசூலித்த, 1.6 மில்லியன் டாலர், இந் திய மதிப்பில், 8.8 கோடி ரூபாயை வட்டியுடன் அபராதமாக செலுத்த வேண்டும்,'' என்று கூறி யுள்ளது. 4-7-2012

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் மீதான வழக்கு: பிறழ்சாட்சி தொடர்கிறது


சென்னை, ஜூலை 4- ராதாகிருஷ்ணன் தாக் கப்பட்ட வழக்கில், அப் ரூவர் ரவிசுப்பிரமணியம் ஆஜராகி பிறழ் சாட் சியம் அளித்தார்.

சென்னை மந்தை வெளியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரை, 20.9.2002 அன்று சில நபர்கள் கொலை செய்ய முயன்றனர். இது குறித்து காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதி ரவன், ரவிசுப்பிரமணி யம், மீனாட்சிசுந்தரம், ஆனந்தகுமார், லட்சு மணன், பூமிநாதன், கண் ணன், சின்னகுமார் ஆகி யோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவ ராக மாறினார். இந்த வழக்கு, சென்னை முத லாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக் கப்படுகிறது. இந்த வழக் கில் அரசு தரப்பு முதல் சாட்சியான ராதாகிருஷ் ணன் சாட்சியம் அளித்து முடித்து விட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.தட் சிணாமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக் கில் குற்றம் சுமத்தப் பட்டுள்ள சுந்தரேச அய் யர், ரகு, அப்பு, கதிரவன், லட்சுமணன், கண்ணன் ஆகியோர் ஆஜரானார் கள்.

ஜெயேந்திரர் உட் பட மற்றவர்கள் நீதிமன் றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகுவ தற்கு விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அப் ரூவர் ரவிசுப்பிரமணி யம், சாட்சியம் அளிப் பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, `இந்த வழக்கு சம்பந்தமாக எதுவும் எனக்கு தெரி யாது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரி ராஜ்குமார் என்பவர் தயாரித்த வாக்குமூலத்தை அப்படியே நீதிமன்றத் தில் தெரிவித்தேன். என்னை காவல்துறை அதிகாரிகள் மிரட்டிய தால், நான் அப்ரூவராக மாறினேன்' என்று சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து ரவிசுப் பிரமணியத்தை பிறழ் (பல்டி) சாட்சியாக அறி விக்க வேண்டும் என்று நீதிபதியிடம் அரசு வழக் குரைஞர் விஜயராஜ் கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

பின்னர் ரவிசுப்பிரம ணியத்தை அரசு வழக் குரைஞர் விஜயராஜ் குறுக்கு விசாரணை செய் தார். அவற்றின் விவரம்:-

கேள்வி:- எழும்பூர் 6ஆவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள் ளீர்கள். அப்போது நீதி மன்ற கதவுகள் மூடப் பட்டு, மாஜிஸ்திரேட்டு மற்றும் உதவியாளர் மட்டுமே இருந்தனர். அவர்களிடம், காவல் துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர் என்று புகார் செய்தீர்களா?

பதில்:- இல்லை. புகார் செய்ய எனக்கு தைரியம் இல்லை.

கேள்வி:- டி.ஜி.பி., மனித உரிமை அமைப்பு களிடம் புகார் செய்தீர் களா?

இவ்வாறு குறுக்கு விசாரணையில் ரவிசுப் பிரமணியம் கூறினார்.

இதன்பின்னர் குறுக்கு விசாரணையை வருகிற 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தர விட்டார்.4-7-2012

தமிழ் ஓவியா said...

பெண் சீடர்களை அணைத்து தீட்சை தர முடியவில்லையாம்!


திருவண்ணாமலை, ஜூலை 4-பத்திரிகை கள் படம் பிடித்து போட்டுவிடுவதால், பெண் சீடர்கள் என் மீது சாய்ந்து தீட்சை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என நித்யானந்தா கவலை யுடன் கூறினார்.

ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்தியானந்தா பவுர்ணமியை முன் னிட்டு திருவண்ணா மலை ஆசிரமத்தில் நேற்று பேசினார். நடிகை மாளவிகா உள் ளிட்ட சீடர்கள் கலந்து கொண்டனர். சீடர் களுக்கு ஆசிரமத்தின் முழுநேர ஊழியர் என்ற அங்கீகாரம் வழங்குவ தற்கு அடையாளமாக தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண் சீடர்களை கட்டி அணைத்து தீட்சை கொடுத்தார். பெண் சீடர்களின் தலையில் கை வைத்து தீட்சை கொடுத்தார். அப்போது, என் சீடர்களுக்கு இது முக்கியமான தருணம். என் மீது சாய்ந்து தீட்சை பெற முடியவில்லையே என சிஷ்யைகள் வருந்த வேண்டாம். அப்படி செய்தால் படம் பிடித்து பத்திரிகைகளில் போட்டு விடுகிறார்கள். அதனால் சிலவற்றை தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

சிம்மாசனம் போன்ற இருக்கையில் நித்தியா னந்தா அமர்ந்திருந்தார். சீடர்கள் தங்க நகை களை அணிவித்தனர். கூடை கூடையாக மலர் களை அவரது தலையில் கொட்டியது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
4-7-2012

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
பெரியார்- ”விடுதலை”, 31.3.1950