Search This Blog

27.7.12

டெசோவும் பார்ப்பனர்களும்

தனியீழம் தேவைதான் என்று துக்ளக்-சோ போன்ற பார்ப்பனர்கள் கருதுவார்களேயானால் டெசோவை ஆதரிக்க வேண்டும் - வரவேற்று எழுதி யிருக்க வேண்டும். டெசோ மாநாட்டில் தனி ஈழத் தீர்மானம் கொண்டு வரப்பட வில்லையே என்று ஆதங்கப்படக் கொஞ்சம் யோக்கியதையும் இருக்கலாம்.

தனி ஈழம் கூடாது என்பதுதான் இந்தக் கூட்டத் தினரின் கருத்து என்றால் இந்தக் கூட்டம் டெசோ அமைப்பை எதிர்த்து எழுதலாம். டெசோ மாநாட்டில் தனி ஈழத் தீர்மானம் கொண்டுவரப்படாதது சற்று ஆறுதல் அளிக்கிறது என்று எழுதுகோல் பிடிக்கலாம்.

ஆனால் தனி ஈழம் என்று சொன்னாலும் எதிர்ப்பது, தனி ஈழத் தீர்மானம் இல்லை என்று சொன்னாலும் எதிர்ப்பது என்றால் இதற்குப் பெயர் என்ன?

கலைஞர் அவர்கள் கொண்டிருக்கும் பார்ப்பன எதிர்ப்புணர்வு என்ற கருத்தை அவர்களால் ஜீரணிக்க முடியாத காரணத்தால்தான், கலைஞர் அவர்கள் எதைச் சொன்னாலும் எதிர்ப்பது, கிண்டலடிப்பது, ஆத்திரம் தீர விமர்சிப்பது என்பதைப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் தேவைப்படும்போதெல்லாம் பார்ப்பனர்களை விமர்சிக்கிறார் அல்லவா, அந்தக் கோபம்தான் அவர்களுக்கு!

இதனைப் புரிந்து கொள்ளாத பார்ப்பனர் அல்லாத நம் தமிழர்கள் கூட பார்ப்பனர்களுடன் சேர்ந்து சேற்றை வாரி இறைப்பதுதான் வருந்தத்தக்கது.

தமிழ் செம்மொழி ஆனால் பிரியாணிப் பொட்டலம் வருமா என்று கேட்கிறார்கள். வணிக விளம்பரப் பலகைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என்றால் அதனை மொழி நக்சலிசம் என்று முத்திரை குத்துகிறார்கள்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப் பட்டது பற்றிக் கேட்டால், யாரும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்களே அதுவரை சந்தோஷம் என் கிறார்கள்.

தை முதல் நாள்தான் புத்தாண்டுத் தொடக்கம் என்றால் கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணையில் வை என்கிறார்கள்.

தனி ஈழம் என்றாலும் அதே கருத்துதான். தங்களுக்கென்று நாடு இல்லாதவர்கள் பார்ப்பனர்கள். அதனால் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு கிடைப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற விடயங்களில் பார்ப்பனர்கள் நியாய அநியாயங்களைப் பார்ப்பதில்லை. கண்மூடித் தனமாக தமிழ், தமிழர், தமிழ்நாடு எதிர்ப்பு என்பதை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு செயல் படுகிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்றாலும் அப்படித்தான்!

தனி ஈழம் பற்றி கலைஞர் சொன்னால் சீறி எழும் இந்தப் பூணூல்கள் தனி ஈழம் பற்றி செல்வி ஜெயலலிதா பேசினால் அந்த இடத்தில் எப்படி யெல்லாம் தடுமாறுகிறார்கள் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

கேள்வி: போர் என்றால் அப்பாவி மக்களும் பலியாகத்தான் செய்வார்கள், அதைத் தவிர்க்க முடியாது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறிய ஜெயலலிதா, இப்போது திடீரென்று தனது கருத்தை மாற்றிக் கொண்டு இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: போர் நடந்தால் அப்பாவிகள் பலியாகத்தான் செய்வார்கள்; போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவதில் ஒன்றைத் தொடர்ந்து அதை ஒட்டி மற்றொன்று வருகிறது. அவர் ஏற்கெனவே போர் நிறுத்தம் பற்றிச் சொல்லியும் இருக்கிறார். ஆகையால் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

(துக்ளக் 25-3-2009)

ஏதாவது புரிகிறதா? என்ன சொல்ல வருகிறார் இந்த மே(ல்)தாவி? ஏன் இப்படிக் குழப்புகிறார்? தத்தளிக்கிறார்? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற முறையில் ஏன் பதில் சொல்ல முடியவில்லை? வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் குழைத்து எழுதுவானேன்? இதற்குப் பெயர்தான் இனப்பாசம் என்பது.

ஒரே பிரச்சினையில் கலைஞர் என்றால் எழுதுகிற பதிலுக்கும், ஜெயலலிதா என்றால் எழுதுகிற பதிலுக்கும் இடையில் ஏன் இந்தத் தடுமாற்றம்?

பொதுமக்கள் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். தமிழர் தேசியம் என்று கூறிக் கொள்ளும் தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ளட்டும்!

----------------”விடுதலை” தலையங்கம் 27-7-2012

12 comments:

தமிழ் ஓவியா said...

நாவலர் பாரதியார்


இவர் கடவுள் மறுப் பாளர் அல்லர் - மத மறுப் பாளரும் அல்லர். உண் மையைச் சொல்லப்போ னால் சைவ மெய்யன்பர்.

கம்ப இராமாயணத்தை யும், பெரிய புராணத்தையும் தீயிடக்கூடாது என்று அறிஞர் அண்ணாவுடன் சேலத்தில் விவாதப் போர் புரிந்தவர்.

அந்த சேலம் சொற் போரில் அவர் என்னதான் பேசினார்?

என்னுடைய 14 வயதில் எனக்குக் கல் யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல் கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஒரு கிராமத்திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன், நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன் றதல்ல. என்னுடைய சிவநெறி வேறு.

இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சைவம்! எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறி னார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்திற்கு அப்புறம் நுழையக் கூடாது.

வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல் யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள் கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையில் இருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மை தான். ஆகமம் அப்படித் தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.

-என்று நாவலர் சோம சுந்தர பாரதியார் பேசினார் சேலத்தில். (14-3-1948)

அந்த நாவலர் சோம சுந்தரபாரதியர் அவர்களின் பிறந்தநாள் இந்நாள் (1879).

1938 இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் சேனையில் தளகர்த்தராகத் திகழ்ந்தவர்.

ஒரு நாயக்கரும், புலவரும்தானே (நாவலர் பாரதியார்) இந்தியை எதிர்க்கிறார்கள் என்று பிரதமர் ராஜாஜி சட்டசபை யில் சொன்னபோது, சர் ஏ.டி.பன்னீர்செல்வம் சொன்னது என்ன தெரியுமா? ஆமாம், இந் தியை எதிர்ப்பவர்கள் இந்த இரண்டு பேர்கள்தான். ஆனால் ஆதரிப்போர் நீங்கள் ஒரே ஒருவர்தானே என்றாரே பார்க்கலாம்!

- மயிலாடன் 27-7-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் புத்தி என்பது இதுதான்


டெசோ மாநாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிலிருந்தோ முக்கிய தலைவர்கள் யாரும் வரப் போவதில்லை என்று தங்கள் ஆசையைக் குதிரையாக்கி அக்கப் போர் செய்திகளை வெளியிட்டு வந்தது தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள்.

மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியானவுடன் சரத்பவார் வந்தாலும்கூட பருக் அப்துல்லா, சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், முதலியோர் வருவார்களா? சந்தேகம் தான் என்று தினமலர் எழுதுகிறதே - இதற்குப் பெயர்தான் வெட்கம் - விவஸ்தையில்லாத பார்ப்பனத்தனம் என்பது! தினமலர் - செய்தி தரும் நாளேடா? பார்ப்பனர் சங்கத்தின் அதிகாரப் பூர்வப் பத்திரிகையா? 27-7-2012

தமிழ் ஓவியா said...

ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!


சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம்.

வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் இந்த ட்ரீட்மென்டில் முக்கியத் திருப்பமாக அமைந்தது, சிகிச்சைக்கு வந்த கவுசல்யா சிஷ்யையாக மாறிப் போனதுதான்!

வலிக்கு சிகிச்சை வேணும் சாமி என வந்து, நிரந்தர பக்தையானவர்தான் ரஞ்சிதாவும். இவரைத் தவிர, மாளவிகா, ராகசுதா, யுவராணி, அண்ணி சீரியல் மாளவிகா என நடிகைகள் பலரும் இந்த குரூப்பில் உள்ளனர்.

எப்போ யார் மூலம் அடுத்த டேப்போ.. எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.. தென்னாடுடைய சிவனே போற்றி!
----------http://tamil.oneindia.in/movies/heroines/2012/07/now-kousalya-joins-the-club-nithyananda-158533.html

தமிழ் ஓவியா said...

தூக்கில் போடலாமே!

தூக்குத் தண்டனை தூக்கி எறியப்படும் வரை - அந்தத் தண்டனை வழங்கப் பெற முழுத் தகுதி உள்ளவர்தான் குஜராத் மாநில முதல்அமைச்சர் நரேந்திர தாஸ் தாமோதரதாஸ் மோடி.

அவருடைய ஆட்சியில்தான் 2000 முசுலிம்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன. 203 தர்க் காக்கள், 205 மசூதிகள் சாம்பலாக்கப்பட்டன. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகளும் நெருப்பின் பசியை ஆற்றின. ரூ 3,800 கோடி இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 70 ஆயிரம் முசுலிம்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 10,000 தோட் டக்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இவ்வளவும், மோடி முதல் அமைச்சராக இருந்த நிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன. குறைந்த பட்சம் இவற்றிற்குப் பொறுப்பேற்று, நரேந்திர மோடி முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா? அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு லால்பகதூர் சாஸ்திரியும், ஓ.வி.அளகேசனும் பதவி விலகி இருக்கும்போது, இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும் ஒரு மாநிலத்தில் அவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் என்பது, அரசியலில் பாலபாடமாகும்.

அதனைக் கூடச் செய்ய முன்வராத ஒருவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தவறு செய் திருந்தால், என்னைத் தூக்கில் போடுங்கள்! என்று குரல் கொடுப்பது அசல் பசப்பும், நயவஞ்சகமும், நரித்தனமும் கொண்டதே!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சரும், பிரபல சட்ட வல்லுநருமான கபில் சிபல் கிளப்பிய வினாவுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.

10 வருடங்களாக மோடி மீது ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி நாணயமான கேள்வி அல்லவா?

ஏதாவது நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறினால் அதனை வீரவாளாகச் சுழற்றுவார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள். இதே மோடி மீது உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட வார்த் தைகளால் விமர்சனம் செய்தது? முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னனுககு ஒப்பிட்டுக் கூற வில்லையா? அப்போது தம் வீரத்தைக் காட்டாமல் மவுனிகள் ஆனது ஏன்?

மனித நேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான், மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய்விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் என்பதற் காகவா, இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வியை எழுப்ப வில்லையா?

மொத்தம் 4,252 வழக்குகளில் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளுக்கும் புலனாய்வு மீண் டும் செய்யப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வைத்த குட்டு, மோடியின் தலையில் அல்லவா?

மோடியின் அமைச்சரவையில். முக்கியப் பொறுப் பில் இருந்தவர் ஹரேன் பாண்டியா; மக்கள் விசா ரணை ஆணையத்திடம் நடந்தவற்றை அப்படியே வெளியிட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப் பட்டதன் பின்னணி என்ன?

தனது மகன் படுகொலைக்குக் காரணம், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தாரே!

குஜராத் கலவரம் நடைபெற்றபோது காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அதி காரிகளான ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ் பட் முதலி யோர், வன்முறையின் பின்னணியில் முதல் அமைச்சர் மோடி இருந்தார் என்று கூறி இருக் கிறார்களே - நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனரே! இவ்வளவுக்குப் பிறகும் நான் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார் என்றால், எவ்வளவு அசட்டுத் துணிவும், நீதித் துறையின் மீது ஏளன உணர்வும் இருக்க வேண்டும்?

இப்படிப்பட்ட நரவேட்டைப் பேர்வழியை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் சொல்லு கிறார்கள் - எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய காட்டு மிருக உணர்வைக் கொண்ட வர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாரீர்! - வாய்ப்பு இருந்தால் முதலில் இத்தகையவர்களைத் தூக்கில் போட வேண்டுமே! 287-2012

தமிழ் ஓவியா said...

தமிழ் செம்மொழி: நீதிக்கட்சியின் தீர்மானம்தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம்.

1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பன ரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:

தீர்மானம் 8(ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல திறப்பட்ட இலக்கியங் களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை

வழிமொழிந்தவர்: திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணை யிலும் பதிவு செய்யப்பட்டது.

(தகவல்: பேராசிரியர் பு.இராசதுரை, விடுதலை 29.6.2008)

தமிழ் ஓவியா said...

சொர்க்கத்திற்கு குறுக்குவழி

பார்ப்பனர்களே நீங்கள் சொர்க்கத்திற்கு போக வேண்டுமா? இதோ ஒரு சார்ட்கட் என்ற தலைப்பில் 1555இல் விடுதலையில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி திருவிளை யாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம் அதன் சுருக்கம்:

அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகு டையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான். அவளும், நாணம், வெட்கம் எல்லா வற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை அவள் மகன் ஒரு இரவில் கொன்று மயானத்தில் இறுதிச் சடங்கை செய்தான். ஊரில் உள்ளவர்கள் தகப்பனைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானைப் பற்றி இழிவாகப் பேசவும், தாயும், மகனும் சொந்த ஊரை விட்டு ஓடி ஊர், ஊராக சுற்றிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது சோமசுந்தர கடவுள் வேடன் உருவத்தில் வந்து இவனிடம் சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி 108 முறை கோவிலை வலம் வரும் படி சொன்னார். அந்தப் பார்ப்பானும் அப்படியே செய்து அவன் செய்த பாவமெல்லாம் தீர்ந்து சொர்க் கத்திற்கு போனானாம்.

தாயைப்புணர்ந்து தகப்பனை கொன்ற பார்ப்பானுக்குச் சொர்க்கம்

சொர்க்கத்திற்கு குறுக்கு வழி 2

சொர்க்கத்திறகு போக இதோ இன்னொரு சுலபமான வழி பார்ப்பனர்களே, ரிக்வேதத்தில் குறிப் பிட்டுள்ளபடி நடந்தால் போதும் சுலபமாக சொர்க் கத்திற்கு போய் விடலாம். ரிக்வேதம் தாத்தாக்கிரி மெய் சகத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்யுங்கள். நீங்கள் உடனே மோட்சத்திற்கு போய் விடலாம். இதோ அந்த சுலோகம்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண் ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவ மெல்லம் போய்விடும். நாசமாகிவிடும். கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

வேதம் படித்து, பூஜை புனஸ்காரங்களை செய்யும் பார்ப்பனர்களே, அவை எல்லாம் இனிமேல் தேவையில்லை. ரிக் வேதத்தில் சொல்லியபடி உடனே சிவப்பு விளக்கு பகுதிக்குப் போங்கள் சொர்க்கத்தை அடையலாம். காலம் தாழ்த்தினால் இடம் கிடைக்காது. எல்லாம் புக் ஆகிவிடும். ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு. 28-7-2012

தமிழ் ஓவியா said...

பெண்கள் பஞ்சம்!
இந்தியாவில் 62 கோடி ஆண்களும் 59 கோடி பெண்களும் இருக்கிறார்கள் என்பது செய்தி.

பெண்கள் என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமை என்று நினைக்கின்ற மோசமான மனுதர்மச் சிந்தனை நிலவும் மட்டும் இதில் மாற்றம் வரப் போவதில்லை.

கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆண் களுக்கு நிகராக 50 விழுக்காடு அளிக் கப்பட்டால் மாற்றம் வர வாய்ப்பு உண்டு. இன்றைய சூழலில் ஒரு பெண்ணைத் திரு மணம் செய்து கொடுப்பதில் பெற்றோர் களுக்குப் பெரும் சுமையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் பெண்கள் தனித் தன்மையினராக, சொந்தக்காலில் வீறு கொண்டு நிற்பவர்களாக மாற்றப்பட வேண்டாமா?

இப்பொழுதுள்ள நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 10 கோடி ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண்களே கிடைக்க மாட்டார்களாம்!

ஆண்களே உங்கள் ஆதிக்கப் புத்தியை மாற்றிக் கொள்வீர்! இல்லையெனின் அவதிப்படப் போவது நீங்கள்தான்.
சமத்துவக் கல்வியும், பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் கல்வி முறையும் தேவை! தேவை!! பூணூலும் - அரைஞாண் கயிறும்!

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாள் ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் அரைஞாண் கயிறுபற்றி எழுதப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பூணூல் என்பது சாதியின் அடையாளம் என்றும் எழுதியுள்ளது. மகிழ்ச்சியே! இதே ஏடுதான் பூணூல் தத்துவம் என்று கூறி அதற்கொரு மகத் துவத்தைக் கற்பித்து எழுதியது என்பதை நினைவில் கொள்க!

இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? தொடக்கத்தில் குரு, சீடர் களுக்குக் கட்டச் சொன்ன அரைஞாண் கயிறுதான் பிற்காலத்தில் பூணூலாகி விட்டது என்கிறார் விவேகானந்தர். இதோ விவேகானந்தர் பேசுகிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங் களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவி னுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல் லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)

தமிழ் ஓவியா said...

புறம்போக்கு ஜெபவீடு இடிப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறை அரசு மருத்துவமனை எதிரில் நீர்வரத்து புறம்போக்கில் அத்துமீறி கட்டியிருந்த ஏசு அலொலியா ஜெப வீடு அரசு அதிகாரிகள் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அன்பழகன், செந்துறை கிராம நிர்வாக அலுவலர்கள், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இடித்துத் தள்ளப்பட்டது. சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எந்த மதத்தின் வழிபாட்டு அமைப்புகளாக இருந்தாலும் அவை இடிபட வேண்டியதே!

உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதி மன்றமும் இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்துவிட்டது. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச் சினையில் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. சட்ட விரோதமாகக் கட்டப் படும் கோயில்களை எதிர்த்து திராவிடர் கழகம் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.

தமிழ் ஓவியா said...

தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்காவிட்டால் இலங்கையில் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!

நார்வே முன்னாள் அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம்


கொழும்பு, ஜூலை 29- இலங்கைத் தமிழர் களுக்கு சம உரிமை களை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நார்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம் எச்சரித்துள்ளார். அவர், நார்வே நாட்டின் "ஆஃப்டன்போஸ்டன்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சினையே காரணமாக இருந்தது. விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப் படாவிட்டால், இலங் கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். நான் கடந்த 2000-ஆவது ஆண்டு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, சிங்கள பயங் கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர். அந்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்கு அவ்வப்போது நம்பக மான தகவல்கள் கிடைத்து வந்தன. கொலை முயற்சி தொடர்பாக நார்வே பாதுகாப்புச் சேவை அமைப்பில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. எங்களுக்கு அந்த அமைப்பு பாது காப்பு வழங்கியது. எனினும் உயர் பாது காப்பு வழங்கப்பட்டா லும் அது உயிரைக் காக்க உத்தரவாதம் தராது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2000-ஆவது ஆண்டில் நடைபெற்ற போர், ராணுவத்துக்கு மிக மோசமாக அமைந் தது. அப்போது யாழ்ப் பாணம் பகுதியில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர் களை பத்திரமாக வெளி யேற்றுவது தொடர்பாக இந்தியாவிடம், நார்வே பேச்சு நடத்தியது. இவை அனைத்துக் கும் நார்வேதான் கார ணம் என்று அப்போது பெரும்பான்மை சிங்க ளர்கள் கருதினர். அந்த, ஆண்டு மே 24-ஆம் தேதி, நான் கொழும்பை விட்டு நார்வே புறப்பட் டேன். அப்போது அங் குள்ள நார்வே தூதரகத் தின் மீது அடையாளம் தெரியாத சிலர் வெடி குண்டை வீசினர். அது குறி தவறி பக்கத்தில் இருந்த, யாரும் குடி யிருக்காத வீட்டின் தோட்டத்தில் விழுந்து வெடித்தது. அந்த குண்டு என்னைக் குறிவைத்து வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை என்று எரிக் சோல்ஹீம் தெரி வித்தார்.

29-7-2012

தமிழ் ஓவியா said...

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் சிறீலங்கா
எழுத்துரு அளவு
ஞாயிறு, 29 ஜூலை 2012 14:01
கொழும்பு, ஜூலை 29- போர்க் குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு அய்ந்து ஆண்டுகள் தேவைப் படலாம் என்ற சிறீலங்கா அரசின் செயல் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் நிராகரித்துள்ளார்.

இது அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை.

அனைத்துலகச் சமூகம் இந்த விவகாரத்தை மறந்து போவதற்காக காலத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே இந்த அய்ந்தாண்டு செயற்திட்டம் வனையப்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே வேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத் துவதற்கான செயற்திட்டம், அனைத்துலக அழுத்தங்களை குறைக்கும் முயற்சியே என்று சிறீலங்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித் துள்ளன. 29-7-2012

தமிழ் ஓவியா said...

தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்ட சபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டி ருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண் டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப் பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டி ருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகு மென்றாவது நாம் நினைக்கமுடியாது. ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலாமினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக் களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமுகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப் பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட் சேபனை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத் திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத் திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின் றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படிச் சொல்லுவதானது, ஆண் சமுகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனை யும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளு கின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

- தந்தை பெரியார்- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927

தமிழ் ஓவியா said...

சக்தியுள்ள கடவுள்கள்?


தமிழ்நாட்டுக் கோயில்களி லிருந்து திருடப்பட்ட ரூபாய் 110 கோடி மதிப்புடைய சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இணைய தளத்தில், வெளியிடப்பட்ட படங்களைப் பார்த்து அதன் அடிப்படையில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்.

நம் நாட்டுக் கோயில்களின் வீர தீரப் பிரதாபங்களை ஆன்மீகச் சிறப்பிதழ் போட்டு விளம்பரப்படுத் தும் அதே இதழ்கள்தான் - தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய்துள்ளதையும் வெளி யிடுகின்றன. இதில் இவர்களுக்கு வெட்கம் சிறிதும் இல்லை. இந்து மதக் கோயில்களுக்குள் வெளி மதக் காரன் நுழைய அனுமதியில்லை - வெளியிலேயே அறிவிப்புப் பல கையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? அமெரிக்காவில் உள்ள கிறித்துவக் காவல்துறை அதிகாரிகள்தான் அந்த இந்துக் கடவுள்களைக் கைப்பற்றுகிறார்கள். கண்டுபிடித்தது கிறித்துவக் கை என்பதால் இந்தியாவுக்குக் கொண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட் டோம் என்று சங்கராச்சாரியார் களும், இந்து முன்னணி வகை யறாக்களும் சொல்வார்களா?

பார்ப்பனர்கள் பலே கெட்டிக் காரர்கள் ஆயிற்றே! அதற்கும் சடங்கு, சாங்கித் தியம், சுத்திகரிப்பு என்று சொல்லி பணம் பறிப்புத் தொழிலைத் தயா ராக வைத்திருக்க மாட்டார்களா?
சுரண்டல் தொழிலில் நட்டக் கணக்குக்கு இடம் ஏது? 29-7-2012