ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரையாடினோம். இதில் எனக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். கங்கையில் நீராடிவிட்டு, உடலில் சட்டையில்லாமலும், தலையில் தொப்பியில்லாமலும் நான் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தலையில் உச்சிக்குடுமியும் உடலில் பூணூலும் இல்லாமல் நான் இருந்ததைக் கண்டு அத்துறவிக்கு மனவேதனையாக ஆகிவிட்டது.
இந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும், உச்சிக் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு இந்துவுக்கும் இவை இருந்தாக வேண்டும் என்று கூறினார்.
பூணூல் அணிவதைக் கைவிட்ட கதை
இந்த இரண்டையும் நான் எவ்வாறு கைவிட்டேன் என்பதே ஒரு தனிக் கதையாகும். நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, பார்ப்பனச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துக்களைக் கோர்த்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவதுண்டு. நானும் அப்படிச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசிய குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல் அணிந்து கொள்வதில்லை. ஆனால் முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணியவேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை கற்பித்துக் கொண்டிருந்த பார்ப்பனர் எங்களுக்கும் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக் கொத்தை அதில்மாட்டிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ஏதோ ஒரு சாவிக் கொத்தைக் கண்டுபிடித்து என் பூணூலில் மாட்டிக் கொண்டேன். பிறகு பூணூல் அறுந்துபோய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்போது நான் வருத்தப்பட்டேனா என்பது பற்றி எனக்கு இன்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பிறகு புதிதாகப் பூணூலைத் தேடி நான் அணிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் நானறிவேன்.
பூணூல் அணிவது தேவையற்ற பழக்கம்
நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆஃப்பிரிக் காவிலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரிலேயே என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றி அடைய வில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத்தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவையற்ற பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்த வரையில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்பட வில்லை.
வைணவன் என்ற முறையில் என் சமூகத்தில் துளசி மாலை அணிந்திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் கருதி வந்தனர். ஆயினும், நான் இங்கிலாந்துக்குப் புறப்படவிருந்த சமயத்தில் எனது உச்சிக் குடுமியை எடுத்துவிட்டேன். எடுக்காதிருந்தால் தலையில் தொப்பி இல்லாதபோது அதை யாராவது பார்த்துவிட்டால் கேலி செய்வார்கள் என்றும், ஆங்கி லேயர்கள் என்னை ஒரு காட்டு மிராண்டி என்று நினைப்பார்கள் என்றும் அப்போது நான் எண்ணி னேன். இந்தக் கோழைத்தனமான உணர்ச்சியின் காரணமாக, தென் னாஃப்பிரிக்காவில் மத நம்பிக்கையுடன் உச்சிக்குடுமி வைத்திருந்த என் அண்ணன் மகனான சகன்லால் காந்தியையும் உச்சிக் குடுமியை எடுத்துவிடுமாறு செய்தேன். ஏனெனில், அவருடைய பொதுத் தொண்டுக்கு அக்குடுமி இடையூறாக இருக்குமென அஞ்சினேன். ஆதலால், அவர் மனத் துக்குச் சங்கடமாக இருக்குமே என் பதைக் கூட எண்ணாதபடி, அவர் குடு மியை எடுக்கும்படி செய்துவிட்டேன்.
பூணூல் அணியும் உரிமை எப்போது?
இவற்றையெல்லாம் மேற்கண்ட துறவியிடம் கூறிவிட்டு நான் மேலும் கூறியதாவது:
கணக்கற்ற இந்துக்கள் பூணூல் அணியாமலேயே இந்துக்களாக இருந்துவர முடிகிறது. பூணூல் அணியவேண்டும் என்பதற்கு எந்த விதமான நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால் அதை நான் அணிந்து கொள்ளப் போவதில்லை. மேலும், பூணூல் என்பது ஆன்மீகப் புனர்வாழ்வுக்குரிய சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல்பவராக இருக்க வேண்டியது முக்கியம். ஆனால், இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய தத்துவத்தோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்து கொள்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டென்று இந்துக்கள் காட்டமுடியுமா என்று அய்யப்படுகிறேன். இந்து சமயத்தி லிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு - தாழ்வு என்ற வேற்றுமைகள் எல்லாம் நீங்கி, அதில் இன்று மலிந்து கிடக்கும் பல்வேறு தீமைகளும் நடிப்புக்களும் நீங்கிய பிறகே இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும்.
பூணூலைப் பற்றி கவலை இல்லை
ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்தது, வெட்கம் என்ற தவறான எண்ணத்தினால் அதை எடுத்துவிட்டேன். ஆகவே, மீண்டும் அதை வளர்த்துவிட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர்களுடன் இதைப் பற்றி விவாதிப்பேன்.
பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைத் துறவியார் ஒப்புக் கொள்ள வில்லை. அதை அணிய வேண்டியது இல்லை என்பதற்கு எனக்கு எவை நியாயங்களாகத் தோன்றினவோ, அவையே அணிய வேண்டும் என்ப தற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின!
இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்னும் என் கருத்தாகும்.
சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப் படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப் படுவதற்கு ஏற்றதாகும்.
ஹிந்து சமயத்தை மேன்மைப்படுத்து வதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குக் கவலையும் இல்லை.
---------------- காந்தியார் சுயசரிதை
2 comments:
ஏ.ஆர். முதலியார்
திரு. இராமசாமி முதலி யார் அவர்கள் திரு. பனகல் அரசரவர்களுக்கு வலக்கை போல் இருந்தவர். திரு. பனகல் அரசரவர்களுக்கு வந்த பெருமை யெல்லாம் அவரைச் சார்ந் தாலும், ஏதாவது சில தப்பாவது, தப்புகளாவது சொல்லக் கூடிய வரிருந்தால் அவ்வளவையும் வாங்கித் தம் தலையில் போட்டுக் கொள்ளக்கூடிய பெரி யவர் நம்முடைய இராமசாமி முதலியார். அவர்களை அறி யாமல் ஒரு காரியமும் நடந் திருக்காது என்றே சொல்லலாம். சாதாரணமாக இந்துக் கோயில் விக்கிரகங்களுக்குச் சொல் லுவதுபோல் திரு. பனகல் அரசரவர்களை மூல விக் கிரகம் என்று சொன்னால், திரு. இராமசாமி முதலியாரை உற்சவ விக்கிரகம் என்று சொல்லலாம். இவ்வளவு தூரம் அவர்கள் இரண்டறக் கலந்து ஒன்றாக நமது நாட்டினுடைய நன்மையைக் குறித்து, நம் முடைய மக்கள் சுயமரி யாதையைக் குறித்து மனமாரப் பாடுபட்டவர்கள். அப்பேர்ப்பட்ட ஒருவர் அப்பெரியாருடைய படத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகிப்பது மிகவும் பொருத்த மானது. அதிலும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்துணையோ அவசரக் காரியங்களினிடையே இக்காரியத்தைச் செங்கற்பட்டு போர்டாரவர்கள் கேட்டுக் கொண்டவுடனே - யாதொரு விதமான ஆட்சேபணையும் சொல்லாமல் உடனே இன்றைய தினம் விஜயம் செய்து, இந்தக் காரியத்தை நடத்தித் தலைமை வகித்ததற்கு, செங்கற்பட்டு போர்டின் சார்பாகவும், காலஞ் சென்ற தலைவர் அபிமானத் தால் நன்றி செலுத்திய மக்கள் சார்பாகவும் என்னுடைய மனமார்ந்த நன்றியறிலைச் செலுத்துகிறேன்.
(திராவிடன் 18.2.1929).
செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.
நீதிக்கட்சியின் குறிப்பிடத் தக்க பெருந்தூண்களுள் ஒரு வர் ஏ.ஆர். முதலியார் அவர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டம் பற்றி சிறந்த அறிக்கையைக் கொடுத்த மேதையும் இவரே!
டாக்டர் டி.எம். நாயரின் மறைவிற்குப்பிறகு ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியராக எட்டு ஆண் டுகள் இருந்து அவர் எழுதிய தலையங்கங்கள் காலத்தை வென்று நிற்கக் கூடியவை.
அவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் கொண்டாடிய போது அவர் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து (ஆசைசடிச டிக வாந லுநயச) என்ற தலைப்பில் வெளி யிட்டது.
சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, வெள்ளுடைவேந்தர் தியாகராயர் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர்.
இரயில் நிலையங்களிலும், வண்டிகளிலும் பிராமணாள் இதராள் என்று இருந்த பேதம் ஒழிக்கப்படுவதற்கு - இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த ஏ.ஆர். முதலியார் காரணமாக இருந்தார் என்பது பெருமிதத் திற்குரியது. அய்க்கிய நாடு களின் பொருளாதார மற்றும் சமூகக் கழகத்தின் முதல் தலை வராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இவர். இலண்டன் வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர்.
சுதந்திர இந்தியாவில் ஆளுநராக இவரை நியமிக்க அரசு முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்தவர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலையை இவர்தான் திறந்து வைத்தார். 89ஆம் வயதில் இந் நாளில் தான் (1976) மறை வுற்றார்.
இரட்டையர்களான இராம சாமி முதலியார், இலட்சுமண சாமி முதலியார் இருவரையும் அடையாளம் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை! - மயிலாடன் 17-7-2012
இந்நாள்... இந்நாள்....
டி.எம்.நாயர் அவர்களின் நினைவுநாள் கருத்தரங்கம்
திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் மதிக்கப் பெற்ற நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர் களுள் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் மறைவு நாள் இந்நாள் (1919) டாக்டர் நாயர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு திருவல்லிக்கேணியில் பார்ப் பனர்கள் கோயில்களுக்கு தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். 17-7-2012
Post a Comment